நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

புதன், மார்ச் 19, 2025

அவசரப்படுவது மனிதனின் ஆதி காலத்து குணம்,

அவசரப்படுவது மனிதனின் ஆதி காலத்து குணம்

خُلِقَ الْإِنْسَانُ مِنْ عَجَلٍ  (37) الانبياء
-----------_
وعن السدي لما نفخ فيه الروح فدخل في رأسه عطس ، فقالت له الملائكة : قل الحمد لله ، فقال ذلك : فقال الله له : يرحمك ربك. فلما دخل الروح في عينيه نظر إلى ثمار الجنة ، ولما دخل الروح في جوفه اشتهى الطعام ، فوثب قبل أن تبلغ الروح رجليه إلى ثمار الجنة. وهذا هو الذي أورث أولاده العجلة.  (الرازي
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் படைத்து ரூஹ் ஊதப்படும் போது மேலிருந்து துவங்கப்பட்டது. ரூஹ் தலையை அடைந்தவுடன் தும்மினார்கள். அப்போது அல்ஹம்து லில்லாஹ் சொல்லும்படி கற்றுத் தரப்பட்டது அவ்வாறே அல்ஹம்து லில்லாஹ் சொன்னார்கள். உடனே அல்லாஹ் பதிலுக்கு  யர்ஹமுக ரப்புக என்றான். அன்று முதல் இன்று வரை நடைமுறை உள்ளது. பின்பு  ரூஹ் ஊதப்பட்டது. ரூஹ் கண்ணை  அடைந்தவுடன் தன் கண்களால் சுவனத்துக் கனிகளைக் கண்டார்கள். பின்பு ரூஹ் வயிற்றை  அடைந்தவுடன் அந்தப் பழங்களை உண்ணும் ஆசை ஏற்பட்டது. ரூஹ் கால் வரை சென்று அடையும் முன்பே உடனே எழ ஆசைப்பட்டார்கள். அப்போதிருந்து அவசரப்படும் குணம் மனிதனுக்கு உருவாகி விட்டது.        
சில காரியங்களில் அவசரப்படுவது அவசியம். சில காரியங்களில் நிதானம் அவசியம்.
துன்யாவுடைய காரியங்களில் நிதானம் அவசியம். 
ஒரு தொழில் தொடங்க வேண்டுமானால் ஒரு திருமணம் நடத்த வேண்டுமானால் அதற்கு மாப்பிள்ளை அல்லது மணப்பெண் பார்க்க வேண்டுமானால் நிதானம் மிக அவசியம். 
எந்தக் காரியத்திலும் அதன் பின் விளைவுகளைப் பற்றி நன்கு சிந்தித்து அக்காரியத்தில் இறங்க வேண்டும்
துன்யாவின் காரியங்களில் எடுத்தோம், கவிழ்த்தோம் என்றில்லாமல் நிதானமும், நடுநிலையும் மிகச் சிறந்தது
عَنْ أَنَسٍ ، أَنَّ رَجُلا قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَوْصِنِي ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : خُذِ الأَمْرَ بِالتَّدْبِيرِ ، فَإِنْ رَأَيْتَ فِي عَاقِبَتِهِ خَيْرًا ، فَأَمْضِهِ ، وَإِنْ خِفْتَ غَيًّا ، فَأَمْسِكْ "(شرح السنة- مشكاة- باب الحذر والتأني- باب السلام
ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் வந்து எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். அதற்கு நபி ஸல் அவர்கள் எந்த ஒரு உலக காரியத்தையும் திட்டமிட்டு, யோசித்துச் செய்யுங்கள். அதன் பின் விளைவு நல்லதாக இருந்தால் அதைச் செயல்படுத்துங்கள். அதன் பின் விளைவு கெட்டதாக இருந்தால் அதைச் செய்யாமல் விட்டு விடுங்கள்.  
قال النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إذا أردت أن تفعل أمرا فتدبر عاقبته فإن كان خيرا فأمضه و إن كان شرا فانته (فيض القدير)  فتدبر عاقبته) بأن تتفكر وتتأمل ما يصلحه ويفسده وتدقق النظر في عواقبه مع الاستخارة ومشاروة ذوي العقول فالهجوم على الأمور من غير نظر في العواقب موقع في المعاطب فلذا قيل : ومن ترك العواقب مهملات
عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ عَنْ أَبِيهِ  عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ التُّؤَدَةُ فِي كُلِّ شَيْءٍ إِلَّا فِي عَمَلِ الْآخِرَةِ (ابوداود) بَاب فِي الرِّفْقِ- كِتَاب الْأَدَبِ
ஒவ்வொரு விஷயத்திலும் நிதானம் நல்லது மறுமையின் காரியங்களில் தவிர.. அதாவது மறுமை சம்பந்தப்பட்ட ஒரு உபரியான அமலை செய்ய நினைத்தால் உடனே செய்ய வேண்டும். யோசித்துக் கொண்டிருப்பது கூடாது 
عن الزهري عن رجل من بَلِىٍّ قال  أتيت رسول الله صلى الله عليه وسلم مع أبي فنَاجى أبي دُوني قال فقلتُ لأبي ما قال لك قال إذا أردتَ أمرا فعليك بالتؤدة حتى يُريَك الله منه المخرج أو حتى يجعل الله لك مخرجا رواه البخاري في الأدب المفرد
என் தந்தையுடன் நபி ஸல் அவர்கள் ரகசியம் பேசினார்கள். நான் என் தந்தையிடம் என்ன பேசினீர்கள் என்று கேட்ட போது ஒரு காரியத்தைச் செய்ய நாடினால் அதில் அல்லாஹ் உனக்கு ஏதேனும் வழியை ஏற்படுத்தும் வரை நிதானத்தை கடை பிடித்துக் கொள்ளுங்கள் என நபி ஸல் கூறியதாக என் தந்தை கூறினார்கள்.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ الْمُزَنِيِّ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ السَّمْتُ الْحَسَنُ وَالتُّؤَدَةُ وَالِاقْتِصَادُ جُزْءٌ مِنْ أَرْبَعَةٍ وَعِشْرِينَ جُزْءًا مِنْ النُّبُوَّةِ (ترمذي)
அழகிய மவுனமும் உலக காரியங்களில் நிதானமும் நடுநிலையும் நுபுவ்வத்தின் 24 பங்குகளில் ஒன்றாகும். 
விளக்கம்- நுபுவ்வத் என்பது பல பாகங்களாகப் பிரிவது கிடையாது. இருப்பினும் மேற்காணும் தன்மைகள் நபிமார்களின் தன்மைகளைப் போன்றதாகும். நூல் மிர்காத் நபிமார்கள் யோசித்தே முடிவெடுப்பார்கள்.  
நிதானம் அல்லாஹ்வைச் சார்ந்தது. அவசரம் ஷைத்தானைச் சார்ந்தது
عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال : الأَنَاةُ مِنَ اللَّهِ وَالْعَجَلَةُ مِنَ الشَّيْطَانِ (ترمذي)  عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِأَشَجِّ عَبْدِ الْقَيْسِ إِنَّ فِيكَ خَصْلَتَيْنِ يُحِبُّهُمَا اللَّهُ الْحِلْمُ وَالْأَنَاةُ (ترمذي) بَاب مَا جَاءَ فِي التَّأَنِّي وَالْعَجَلَةِ-بَاب مَا جَاءَ فِي بِرِّ الْوَالِدَيْنِ
துன்யாவின் ஒரு காரியத்தைப் பற்றிய தெளிவு இல்லாமல்,அவசரப்பட்டுச் செய்தால் அக்காரியம் கெட்டு விடும்
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِىَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ النَّبِىُّ صلى الله عليه وسلم : إِذَا تَأَنَّيْتَ. وَفِى رِوَايَةِ الْمُعَاذِىِّ وَالشُّعَيْبِىِّ وَالْهَرَوِىِّ :« إِذَا تَبَيَّنْتَ أَصَبْتَ أَوْ كِدْتَ تُصِيبُ وَإِذَا اسْتَعْجَلْتَ أَخْطَأْتَ أَوْ كِدْتَ تُخْطِئُ ».(سنن الكبري)
நன்கு யோசித்து அதைச் செய்ய முடிவெடுத்தாலும் அதற்காக இஸ்திகாரா தொழுவது சுன்னத். ஏதேனும் முக்கியமான (உலக) காரியத்தை தொடங்கும் முன்போ அல்லது அதை தொடங்குவதில் குழப்பம் ஏற்படும்போதோ நல்ல முறையில் உளூச் செய்து, மன ஓர்மையுடன் இஸ்திகாரா தொழுகை இரண்டு ரக்அத் தொழுது பின்வரும் துஆவை ஓதினால் 
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا الِاسْتِخَارَةَ فِي الْأُمُورِ كُلِّهَا كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنْ الْقُرْآنِ يَقُولُ إِذَا هَمَّ أَحَدُكُمْ بِالْأَمْرِ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ مِنْ غَيْرِ الْفَرِيضَةِ ثُمَّ لِيَقُلْ اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ وَأَنْتَ عَلَّامُ الْغُيُوبِ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِي قَالَ وَيُسَمِّي حَاجَتَهُ. (بخاري) باب الدُّعَاءِ عِنْدَ الاِسْتِخَارَةِ .- الدعوات
பொருள்- யாஅல்லாஹ் உன்னுடைய ஞானத்தின் பொருட்டால் நான் தொடங்கும் இக்காரியத்தில் நலம் உண்டாகுவதை உன்னிடம் கேட்கிறேன். உன்னுடைய ஆற்றலின் பொருட்டால் இக்காரியத்தை நான் துணிவுடன் செய்வதையும் உன்னிடம் கேட்கிறேன். உன்னுடைய அருளையும் நான் வேண்டுகிறேன். என்னிடம் எவ்வித ஆற்றலும் இல்லை. நீ தான் ஆற்றல் உடையவன். (எந்தக் காரியத்திலும் அதன் பின் விளைவு பற்றி) நான் எதையும் அறியாதவன். நீ அனைத்தையும் அறிந்தவன். நீ மறைவானவைகளை அறியும் ஞானமுள்ளவன். ஆகவே (நான் தொடங்கும்  அல்லது நான் செல்லும்)இக்காரியம்  என் இம்மைக்கும், மறுமைக்கும், என் இறுதி முடிவுக்கும் நன்மையாக அமையும் என்று நீ அறிந்தால் இதை செய்வதற்குரிய ஆற்றலை எனக்கு தருவாயாக ! இதை எனக்கு எளிதாக்குவாயாக! இதில் எனக்கு பரக்கத்தையும் தருவாயாக ! அதற்கு மாறாக  (நான் தொடங்கும்  அல்லது நான் செல்லும்) இக்காரியம்  என்னுடைய இம்மைக்கும், மறுமைக்கும், என் இறுதி முடிவுக்கும் தீமையாக அமையும் என்று நீ அறிந்தால் இக்காரியத்தையும் விட்டும் என்னையும் திருப்புவாயாக ! என்னை விட்டு இக்காரியமும் திரும்பிச் செல்ல வைப்பாயாக ! இதை விட நன்மை எங்கே, எதில் இருக்குமோ அதை எனக்கு ஏற்படுத்துவாயாக ! அதை எனக்கு பிடித்தமானதாகவும் ஆக்கி வைப்பாயாக !  நூல்- புஹாரீ-5382
துன்யாவின் எத்தனையோ காரியங்களில் சின்னச் சின்ன விஷயங்களில் கூட ரெண்டுங்கெட்டான் நிலையில் இருக்கக்கூடாது என கற்றுத் தரப்பட்டுள்ளது உதாரணம்..... பாதி நிழலிலும், பாதி வெயிலிலும் உட்காரக் கூடாது 
عن أَبي هُرَيْرَةَ يَقُولُ قَالَ رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ أَحَدُكُمْ فِي الشَّمْسِ فَقَلَصَ عَنْهُ الظِّلُّ وَصَارَ بَعْضُهُ فِي الشَّمْسِ وَبَعْضُهُ فِي الظِّلِّ فَلْيَقُمْ (ابوداود) بَاب فِي الْجُلُوسِ بَيْنَ الظِّلِّ وَالشَّمْسِ- كِتَاب الْأَدَبِ
உங்களில் ஒருவர் வெயிலில் அமர்ந்திருக்கும்போது வெயில் அந்த இடத்தை விட்டும் நீங்கி நிழல் வந்து விட்டால் பாதி வெயிலிலும் பாதி நிழலிலும் அவர் அமர வேண்டாம். அந்த இடத்தை விட்டும் எழுந்து விடட்டும்.
செருப்பணிந்தால் இரண்டு காலிலும் அணிவது அல்லது இரண்டையும் கழட்டி விடுவது. ஒரு காலில் மட்டும் அணியக்கூடாது
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَمْشِي أَحَدُكُمْ فِي نَعْلٍ وَاحِدَةٍ لِيُحْفِهِمَا جَمِيعًا أَوْ لِيُنْعِلْهُمَا جَمِيعًا (بخاري) - اللباس
பாதி மொட்டை பாதி முடி – இதுவும் கூடாது
عَنْ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ الْقَزَعِ (بخاري) باب الْقَزَعِ- كتاب اللباس- القزع : هو أن يحلق رأس الصبى فيترك بعض شعره
மறுமையின் நன்மையான காரியத்தைச் செய்வதற்கு யோசிக்கக்கூடாது.
عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَصْرَ فَلَمَّا سَلَّمَ قَامَ سَرِيعًا دَخَلَ عَلَى بَعْضِ نِسَائِهِ ثُمَّ خَرَجَ وَرَأَى مَا فِي وُجُوهِ الْقَوْمِ مِنْ تَعَجُّبِهِمْ لِسُرْعَتِهِ فَقَالَ ذَكَرْتُ وَأَنَا فِي الصَّلَاةِ تِبْرًا4 عِنْدَنَا فَكَرِهْتُ أَنْ يُمْسِيَ أَوْ يَبِيتَ عِنْدَنَا فَأَمَرْتُ بِقِسْمَتِهِ (بخاري) وَقَالَ عُمَرُ رضى الله عنه إِنِّى لأُجَهِّزُ جَيْشِى وَأَنَا فِى الصَّلاَةِ (بخاري) باب تَفَكُّرِ الرَّجُلِ الشَّىْءَ فِى الصَّلاَةِ-كتاب العمل في الصلاة
அசர் தொழுது முடித்து சலாம் கொடுத்தவுடன் வேகமாக நபி ஸல் அவர்கள் தன் மனைவிமார்களில் ஒருவரின் வீட்டுக்கு விரைந்து சென்றார்கள். பிறகு திரும்பி வந்தார்கள், அவர்களின் இந்த விரைவுக்கு காரணம் தெரியாமல் தோழர்கள் விழித்த போது நான் எங்களிடம் இருந்த ஒரு தங்க கட்டியை உரியவருக்குக் கொடுத்த எண்ணியிருந்தேன் அது இப்போது தான் நினைவுக்கு வந்தது. அது மாலை வரை அல்லது இரவு வரை என் வீட்டில் இருப்பதை நான் விரும்பவில்லை அதனால் அதை உரியவர்களுக்குப் பங்கிட்டுத் தரும்படி என் வீட்டாரிடம் சொல்லி விட்டு வந்தேன் என்றார்கள்.                               
இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்களிடம் சிலர் வருகை தந்து மஸ்ஜிதுக்காக அன்பளிப்புக் கேட்டபோது யோசிக்காமல் உடனே இடது கை அருகில் இருந்த ஒரு பண முடிப்பை எடுத்து அப்படியே தந்து விட்டார்கள். வந்தவர்களுக்கு ஒருபுறம் சந்தோஷம் என்றாலும் இடது கையால் எடுத்துக் கொடுத்ததில் கவலையும் இருந்தது. அதற்கு இமாம் அபூஹனீஃபா ரஹ் விளக்கம் கூறினார்கள். என்னுடைய இடது கையில் இருந்து வலது கைக்கு மாறுவதற்குள் என்னுடைய மனம் மாறி விட்டால் என்ன செய்வது அதனால் தான் இடது கையால் தந்தேன் என்றார்கள். 
மறுமையின் நன்மையான காரியத்தை துவங்குவதில் அவசரம் வேண்டும். ஆனால் அதைச் செய்ய ஆரம்பித்த பின்பு நிதானம் வேண்டும் . தொழுகையை நிதானமாக தொழுவதைப் போல... 
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ الْمَسْجِدَ فَدَخَلَ رَجُلٌ فَصَلَّى فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَدَّ وَقَالَ ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ فَرَجَعَ يُصَلِّي كَمَا صَلَّى ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ ثَلَاثًا فَقَالَ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا أُحْسِنُ غَيْرَهُ فَعَلِّمْنِي فَقَالَ إِذَا قُمْتَ إِلَى الصَّلَاةِ فَكَبِّرْ ثُمَّ اقْرَأْ مَا تَيَسَّرَ مَعَكَ مِنْ الْقُرْآنِ ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْتَدِلَ قَائِمًا ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا ثُمَّ ارْفَعْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا وَافْعَلْ ذَلِكَ فِي صَلَاتِكَ كُلِّهَا  (بخاري

கருத்துகள் இல்லை:

பிரபல்யமான பதிவுகள்