பெருநாள் தொழுகை (ஹனபி)
பெருநாள் தொழுகையின் நேரமாவது சூரியன் நன்கு உதயமானதிலிருந்து (காலை 7 மணியிலிருந்து) நடுப்பகல் உச்ச நேரத்திற்கு சற்று முன் (11 மணி) வரையிலாகும்.
ஈதுல் பித்ரைவிட ஈதுல் அல்ஹாவைச் சீக்கிரம் தொழுது கொள்வது நல்லது
*பெருநாள் தொழுகை நிய்யத்:*
اُصَلِّى صَلٰةَّ عِيْدِ الْفِطْرِ رَكْعَتَيْنِ لِلهِ تَعَالٰى اَللهُ اَكْبَرْ
ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகை வாஜிபான இரண்டு ரக்அத்தை இமாமை பின்பற்றி அல்லாஹ்விற்க்காக தொழுகிறேன்.
*தொழுகை முறை:*
முதலில் நிய்யத்து செய்து அல்லாஹ் அக்பர் சொல்லி இமாமுடன் தக்பீர் கட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஃதனா ஓத வேண்டும். பிறகு இரண்டு முறை 'அல்லாஹ் அக்பர்' என்று கையை உயர்த்தி கீழே தொங்கவிட்டு விட்டு மூன்றாம் முறை 'அல்லாஹ அக்பர்' சொல்லி ( கையை வழமைபோல் கட்டி கொள்ள வேண்டும்) வழக்கம் போல் இமாம் அல்ஹம்து ஸூராவும் துணை சூராவும் ஓதி ரூகூவு ஸஜ்தா செய்து முதல் ரக்அத்தை நிறைவு செய்வார்.
இரண்டாவது ரக்அத்தில் இமாம் அல்ஹம்து ஸூராவும் துணை சூராவும் ஓதி முடித்து ருகூவுக்கு போகும் முன்னர், முன்புபோல் 3 தக்பீர் சொல்வார்கள் மூன்று முறை அல்லாஹ் அக்பர் சொல்லி கையைத் தொங்கவிட்டு விட்டு நாலாவது முறை அல்லாஹ் சொல்லி ருக்கூவுக்கு போய் வழக்கம் போல் தொழுகையை முடிப்பார்கள்
அதன்பிறகு இமாம் குத்பா ஓதுவார். அதை காது தாழ்த்தி கேட்க வேண்டும். பின்பு துஆ திக்ருகள் ஓதப்படும்.
தக்பீர்:
اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَر لاَ اِلاَهَ اِلَّا اللهُ وَاَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ وَلِلهِ الْحَمْد.
اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ كَبِيْرًا وَالْحَمْدُ لِلهِ كَثِيْرًا وَسُبْحَانَ اللهِ بُكْرَةً وَّاَصِيْلًا لاَ اِلٰهَ اِلَاَّ اللهُ وَاَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ وَلِلهِ الْحَمْد.
اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ كَبِيْرًا وَالْحَمْدُ لِلهِ كَثِيْرًا وَسُبْحَانَ اللهِ بُكْرَةً وَّاَصِيْلًا لاَ اِلٰهَ اِلَاَّ اللهُ وَلَا نَعْبُدُ اِلَّا اِيَّاهُ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ وَلَوْ كَرِهَ الْكَافِرُوْنَ لَااِلٰهَ اِلَاّ اللهُ وَحْدَهْ وَصَدَقَ وَعْدَهْ وَنَصَرَ عَبْدَهْ وَاَعَزَّ جُنْدَهُ وَهَزَمَ الْاَحْزَابَ وَحْدَهْ لَا اِلٰهَ اِلَّا الله وَالله اَكْبَرُ اَللهُ اَكْبَرُ وَلِللهِ الْحَمْدُ .
அல்லாஹ் எல்லா விதமான நோய் நொடிகளை விட்டு நம் அனைவரையும் பாதுகாத்து நிம்மதியான வாழ்வையும் வளமான ரிஜ்க்கையும் நிறைவான பரகத்தையும் நமக்கும் நம் குடும்பத்திற்கும் நம் சந்ததிகளுக்கும் தந்தருள் புரிவானாக ஆமீன்
1 கருத்து:
ஈதுல் பித்ர் பெருநாள்
கருத்துரையிடுக