நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

சனி, பிப்ரவரி 08, 2014

பலதார மணம்

=> 1.ஒரு சில திருமணங்களை பெருமானார் (ஸல்) அவர்கள் சமுதாய மற்றும் அரசியல் காரணங்களுக்காக செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் இஸ்லாத்தையே இலக்காகக் கொண்டு வாழ்ந்தார்கள். முஸ்லிம்களுடன் தமது நிலைமையைப் பல்வேறு முயற்சிகளின் மூலம் வலுப்படுத்திட முனைந்தார்கள். இதனால்தான் அவர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களின் சிறிய வயதுடைய மகளை மணந்து கொண்டார்கள். அபூபக்கர் அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு அடுத்தப்படியாகப் பொறுப்பேற்றவர்கள். அதேபோல்தான் அவர்கள் உமர் (ரலி) அவர்களின் மகளை மணந்து கொண்டதும். உமர் (ரலி) அவர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களுக்குப்பின் பொறுப்பேற்றவர்கள். ஜுபைரியா (ரலி) அவர்களை மணந்து கொண்டதன் மூலம் தான் ‘பனீ அல்-முஸ்தலிக்’ என்ற குலத்தவரின் ஆதரவை திரட்ட முடிந்தது. பெருமானார் (ஸல்) அவர்களால் ஸபியா (ரலி) அவர்களை மணமுடித்துத்தான் கடின சித்தமுடன் அரபு நாட்டில் வாழ்ந்த யூதர்களின் எதிர்ப்பை சமாளிக்க முடிந்தது. எகிப்திலிருந்து வந்த மேரி என்ற பெண்மணியை மணந்து கொண்டதன் மூலம் அவர்கள் எகிப்து அரசரருடன் அரசியல் உடன்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது. ஆரம்ப நாட்களில் எதிரிகளால் கொடுமைப்படுத்தப்பட்டு முஸ்லிம்கள் துரத்தப்பட்டபோது அவர்களுக்கு அடைக்கலம்தந்த நாடு அபிசீனியா. இந்த அபிசீனியா நாட்டைச் சார்ந்த ‘நிகஸ்’ அவர்களால் அளிக்கப்பட்ட ’ஜைனப்’ அவர்களை மணந்து கொண்டது, அபிசீனிய மன்னரிடத்திலும் மக்களிடத்திலும் பெருமானார் (ஸல்) அவர்கள் வெளிப்படுத்திய நட்பின், நன்றியின் வெளிப்பாடேயாகும். => 2.இந்தத் திருமணங்களில் சிலவற்றைச் செய்து கொண்டதன் மூலம் பெருமானார் (ஸல்) அவர்கள் குலம், கோத்திரம், ஜாதி, மதமாச்சரியங்கள், தேசியம் என்ற குறுகிய கண்ணோட்டங்களை ஒழித்தார்கள். அவர்கள் திருமணம் செய்து கொண்டவர்களில் சிலர் நிராதரவானவர்கள், ஏழைகள், அவர்கள் எகிப்திலிருந்து வந்த கிறிஸ்துவப் பெண்மணியை மணந்திருந்தார்கள், வேற்றுச் சமயத்தைச் சேர்ந்திருந்த ஒரு யூதப் பெண்மணியை மணந்திருந்தார்கள், அபிசீனியாவிலிருந்து வந்த ஒரு நீக்ரோ பெண்மணியை மணந்திருந்தார்கள். சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும் வாயளவில் பேசிவிட்டு வாளாதிருந்திடுபவர்களல்ல பெருமானார் (ஸல்) அவர்கள், அதனை செயல்படுத்திக் காட்டிடவும் செய்தார்கள். => 3.சில சட்டப் பிரச்சினைகளுள் தெளிவினைத் தருவதற்காக பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு திருமணத்தைச் செய்தார்கள். 1)>அன்றைய நாட்களில் குழந்தைகளைத் தத்தெடுக்கும் பழக்கம் பரவலாக இருந்தது. இந்தப் பழக்கத்திற்கு உட்பட்டுத்தான் பெருமானார் (ஸல்) அவர்கள் ‘ஜைத்’ என்ற அடிமையை தத்தெடுத்து இருந்தார்கள். ஆனால் இஸ்லாம் இந்தப் பழக்கத்தை அனுமதிக்கவில்லை, தடை செய்தது. இந்தப் பழக்கத்திற்கு நடைமுறையில் முதல் மரணஅடி தந்தவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களே ஆவார்கள். ’ஜைத்’ அவர்களால் மணவிலக்கு செய்யப்பட்டிருந்த ஜைனப் அவர்களை பெருமானார் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டார்கள். இதன் மூலம் தான் ஜைத் அவர்களின் உண்மையான ததை ஆகிவிடவில்லை என்பதையும், தத்தெடுக்கும் முறை தத்தெடுப்பவரைத் தந்தையாகவும் தத்தெடுக்கப்பட்டவரை மகனாகவும் ஆக்கி விடுவதில்லை என்பதையும் நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள். 2)>அன்று மணவிலக்குச் செய்யப்பட்ட பெண்களை மறுமணம் செய்வதை அரபு மக்கள் அனுமதிக்கவில்லை. பெருமானார் (ஸல்) அவர்கள் மணவிலக்குச் செய்யப்பட்ட அப்பெண்மணியை மணந்து கொண்டதன் மூலம், அதுபோன்ற பெண்களுக்கு மறுமணம் செய்துகொள்ளும் உரிமையைப் பெற்றுத் தந்தார்கள். வியத்தகு முறையில் இந்த ‘ஜைனப்’ அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களின் முறைப் பெண்ணுமாவார்கள். முதலில் பெருமானார் (ஸல்) அவர்களிடம் ‘ஜைனப்’ அவர்களை மணமுடிக்கும் பேச்சு ஒன்று கொண்டு வரப்பட்டது. ஆனால் பெருமானார் (ஸல்) அவர்கள் அப்போது மறுத்து விட்டார்கள். அதன் பின்னர்தான் ‘ஜைத்’ அவர்களுக்கு மணம் செய்து வைக்கப்பட்டது. ‘ஜைத்’ அவர்களால் விவாகரத்து செய்யப்பட்ட பின்னர் பெருமானார் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டதன் காரணம், விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களை மறுமணம் செய்து மறுவாழ்வளிக்கலாம் என்பதை எடுத்துக் காட்டவேயாகும். இதுகுறித்து திருக்குர்ஆன் பின்வருமாறு விளக்கம் தருகின்றது. அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் யாதொரு விஷயத்தைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர் அவ்விஷயத்தில், (அதற்கு மாறாக வேறு) அபிப்ராயம் கொள்வதற்கு விசுவாசியான எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிமையில்லை. (அதில்) அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் யாரேனும் மாறு செய்தால், நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள். ………..’ஜைத்’ அவளை தலாக்கு கூறிவிட்ட பின்னர், நாம் அவளை உமக்கு திருமணம் செய்து வைத்தோம். ஏனென்றால், விசுவாசிகளால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தங்கள் மனைவிகளைத் தலாக்கு கூறிவிட்டால், (அவர்களை வளர்த்த) விசுவாசிகள் அப்பெண்களைத் திருமணம் செய்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீரவேண்டிய அல்லாஹ்வுடைய கட்டளையாக இருந்தது. உங்களுடைய ஆண்களில் எவருக்கும் முஹம்மது (நபி அவர்கள்) தந்தையாக இருக்கவில்லை. (ஆகவே அவர் ‘ஜைதுக்கு’ எவ்வாறு தந்தையாக ஆகிவிடுவார்?) ஆனால் அவரோ, அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு (க் கடைசி) முத்திரையாகவும் (இறுதி நபியாகவும்) இருக்கிறார். (ஆகவே, அவருக்குப் பின்னர் யாதொரு தூதரையும் அணுப்பவில்லை) அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தோனாக இருக்கின்றான்.(திருக்குர்ஆன்: 33:36,37,40) இந்த உண்மைகளை மனதில் கொண்டே பெருமானார் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட திருமணங்களை அணுகிட வேண்டும். பெருமானார் (ஸல்) அவர்களின் திருமணங்களைப் பொறுத்தவரை முஸ்லிம்களின் மனதில் எந்தத் தடுமாற்றமுமில்லை. முஸ்லிமல்லாதவர்கள் நாம் இங்கே தந்திருக்கின்ற உண்மைகளை அவசியம் ஆராய்ந்து தங்களது முடிவுகளை வரையட்டும் என வேண்டுகிறேன்

பிரபல்யமான பதிவுகள்