இந்த உலகம் ஒரு வித்தியாசமான கால் பந்து உலக கோப்பையை காண்கிறது.
இங்கே விபச்சாரம் கொடி கட்டி பறக்கவில்லை...
ஆண் உறைகளை வழங்க ஏடிஎம் திறக்கவில்லை..
மதுபானம் ஆறாக ஓடவில்லை...
ஆபாச ஆடல் பாடல் இல்லை....
இந்த செய்திகள் உலக விளையாட்டு வரலாற்றிலே இதுவரை இல்லாத ஒன்று....
கத்தார் என்ற ஒரு சிறிய நாடு உலகநாடுகளை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது... தனது சாதுர்யமான அரசியல் காய் நகர்தல்கள் அதனை சாதித்தும் காட்டியுள்ளது.
உலக கோப்பை கால்பந்து விளையாட்டை நடத்த கத்தார் தேர்வு செய்யப்பட நாள்முதல் இன்றுவரை சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை.
அமெரிக்காவுடன் போட்டி போட்டு கத்தார் இந்த உலக கோப்பை விளையாட்டை கைப்பற்றியது.
Fifa தேர்வு கமிட்டி உறுப்பினர்களுக்கு கத்தார் லஞ்சம் கொடுத்ததாக ஒரு புகார்.
கட்டுமான பணிகளுக்காக பணியாளர்களை அடிமையாக நடத்துவதாக ஒரு புகார்.
கட்டுமான பணிகளில் பலர் இறந்ததாக ஒரு புகார்.
ஆடை கட்டுப்பாடு, மது தடை, தன்பால் இணையர்களுக்கு தடை என கத்தாரை உலகின் பல நாடுகளும் மீடியாக்களும் விமர்சித்துக் கொண்டே இருக்கிறது.
இவைகள் அனைத்தையும் கடந்து சுமார் 25 லட்சம் டிக்கெட்களை விற்பனை செய்து fifa வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு சாதனையை கத்தார் நிகழ்த்தியுள்ளது....
25 லட்சம் கோடியை இந்த ஒரு மாத நிகழ்வுக்காக கத்தார் செலவழித்துள்ளது..
இன்னும் 20 வருடங்களுக்கு தேவையான கட்டமைப்பை கத்தார் உருவாக்கியுள்ளது.
கத்தார் எடுத்த சில அதிரடி முடிவுகள் உலக மீடியாக்களை தூங்கவிடவில்லை ....
கடைசிவரை மது தடை பற்றி பேசவே இல்லை ... இரண்டு நாட்களுக்கு முன்பாக மது தடை என கத்தார் அறிவித்தது.. ஐரோப்பிய மீடியாக்கள் ஆடித்தான் போனது...
இஸ்ரேல் என்ற வாசகமே இருக்க கூடாது என கத்தார் அறிவித்தது ... யூதர்களின் தூக்கத்தை கலைத்தது ...
சர்ச்சைக்குரிய நபர் என்று ஓரம் கட்ட நினைத்த யூத கைக்கூலிகலுக்கு சம்மட்டி அடியாக ஜாஹிர் நாயக் துவக்க விழாவில் சிறப்பு அழைப்பாளர் அளைக்கப்பட்டுள்ளார் ...
குர்ஆன் வசனங்களால் ஆரம்பமானது விழா .... அதற்கு அவர்கள் தேர்வு செய்த வசனமும் அடடா....
يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.
(அல்குர்ஆன் : 49:13)
ஏதோ ஒரு மூலையில் இருந்த ஒரு நாடு .... உலக நாடுகள் அனைத்தையும் அழைத்து தனது கொள்கையில் ஒரு போதும் சமரசமில்லை ... என அடித்து கூற ஒரு தைரியம் வேண்டும்.... அது கத்தாருக்கு நிறையவே உள்ளது....
கத்தார் நாட்டிர்க்கு இறைவன் அருள் புரிவானாக ஆமீன் …
https://youtu.be/SbXp-RX6UMQ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக