குர்பானியின் பின்னனி...
இப்ராஹீம் (அலை) அவர்கள் 85 வருடங்களுக்கு பிறகு இஸ்மாயில் (அலை) அவர்களை பெற்றடுக்
கிறார்கள். வாழ்விலே பல சோதனையைக்கண்ட இப்ராஹீம் (அலை) அவர்கள் மிகப் பெரிய சோதனையாக தன் மகனை அறுத்து பலியிடுவதாக கனவுக் காண்கிறார்கள். இது மிகப் பெரிய சோதனை என அல்லாஹ் திருமறையில் கூறுகிறான். கண்ட கனவை தன் மகனிடம் சொல்கிறார்கள். கண்ட கனவு உண்மையென்றால் அதை அப்படியே நிறை வேற்றுவீராக! என மகன் உணர்வுபூர்வமாக சொல்ல, அதை நிறைவேற்ற தந்தை இப்ராஹீம் (அலை) அவர்கள் முனைந்த போது தான், நபியே நீர் கண்ட கனவை உண்மை படுத்தி விட்டீர், எனவே உன் மகனுக்கு பகரமாக இந்த ஆட்டை குர்பானி கொடு என வானில் இருந்து ஜீப்ரயில் (அலை) அல்லாஹ்வின் கட்டளையைக் கொண்டு வந்தார்கள். 5000 வருடங்களுக்கு முன் ஒரு குடும்பம் செய்த தியாகம் தான் இன்று நமக்கு ஹஜ்ஜூப் பெருநாளாக, தியாக திருநாளாக, குர்பானியை நிறைவேற்றும் நன்னாளாக அமைந்திருக்கிறது.
குர்பானியின் சிறப்பு ...
குர்பானி இப்ராஹீம் (அலை) அவர்களின் சுன்னத்தாகும். குர்பானி பிராணியின் ஒவ்வொரு ரோமத்திற்கும் ஒரு நண்மையுண்டு.
குர்பானி கொடுக்கும் நாளில் சிறந்த அமல் குர்பானி கொடுப்பது தான்.
துல்ஹஜ் பிறை 10-ல் மனிதன் செய்யும் குர்பானியை விட வேறெந்த செயலும் அல்லாஹ்விடம் விருப்பமுடையதாக இருக்காது.
குர்பானி கொடுக்கப்பட்ட ஆடு தனது கொம்புடனும், குளம்புடனும், முடியுடனும், கியாமத் நாளில் வரும். அதன் இரத்தம் பூமியில் விழுவதற்கு முன்பே அது அல்லாஹ்விடம் ஒப்புக் கொள்ளப்பட்டு விடுகிறது. சிராத்துல் முஸ்தகீம் பாலத்தை கடக்க அதுவே வாகனமாக அமையும்.எனவே பரிபூரணமான மகிழ்வுடன் குர்பானியை நிறைவேற்றுங்கள் என நபி(ஸல்) கூறியுள்ளார்கள். நூல் திர்மிதி.
குர்பானி பிராணிகள்...
1) செம்மறி ஆடு,ஒரு வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அல்லது கொழுத்த தாக இருந்தால் 6 மாதமே உள்ள ஆடு போதும்.
2) வெள்ளாடு, 1 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
3) மாடு., 2 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
4) ஒட்டகம்., 5 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
கோழி, வாத்து, மீன் போன்ற அன்றாடம் சாப்பிடும் பிரானிகளை குர்பானி கொடுப்பது கூடாது.
யார் மீது கடமை?
ஹஜ், ஜகாத், பித்ரா செய்ய கடமைப்பட்டவர்கள் மீது குர்பானி செய்வது வாஜிபாகும்.
குர்பானி செய்ய வசதி பெற்றிருந்தும் எவர் குர்பானி கொடுக்கவில்லையோ அவர்கள் நமது தொழுமிடத்திற்கு வர வேண்டாம் என நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.
குர்பானி நாளில் அதற்கு பகரமாக வேறு சதகா செய்வது கூடாது.
தனது மனைவி , குழந்தைகளுக்காக குர்பானி கொடுப்பது கணவன், தந்தை மீது கடமையல்ல.
எதுவரை கொடுக்கலாம்?...
துல்ஹஜ் பிறை 10, 11, 12, ஆகிய மூன்று நாட்கள் வரை கொடுக்கலாம்.
ஷாஃபியீ பிறை 13 வரை கொடுக்கலாம்.
குறை கூடாது...
1) மூக்கு அறுப்பட்டது.
2) புற்பூண்டு சாப்பிட முடியாத அளவு நாக்கு அறுப்பட்டது.
3) ஒரு மடியில் பால் வராமல் இருத்தல். (ஆடு)
4) மாடு, ஒட்டகம் போன்றதில் இரு மடியில் பால் வராமல் இருத்தல்.
5) மடியில் காயம், மடி துண்டிக்கப்பட்டு .கன்று பால் குடிக்க முடியாத நிலை.
6) கண்கூடாக தெரியும் நோய்.
7) அரவாணி, ஷாஃபியிடம் கூடும்.
8) குருடாக இருத்தல்,ஒற்றைக் கண் உள்ளதாக இருத்தல், ஒரு கண்ணின் பார்வையில் 3-ல் ஒரு பாகம் அளவு அல்லது அதைவிட அதிகமாக பார்வை குறைப்பட்டிருத்தல் .
9) 3-ல் ஒரு பகுதி அல்லது அதைவிட அதிகமாக வால் துண்டித்திருப்பது.
10) கால் ஊனமான பிரானி, 3 கால்களில் மட்டுமே நடக்கிறது என்றால் கூடாது.
ஊனமுற்ற காலில் நடந்தால் கூடும்.
11) அறுக்கும் இடம் வரமுடியாத அளவு நோய் இருத்தல்.
12) அனைத்து பல்லும் இல்லாமல் இருத்தல், அல்லது தீனியை மெல்ல முடியாத அளவு இருத்தல்.
13) பிராணிக்கு கொம்பு இல்லாவிட்டாலும் கொடுக்கலாம். மூளைக்கு அதனால் பாதிப்பு இருந்தால் கூடாது.
14) மாறுகண், பைத்தியம், சொறி கூடும்.
15) மலட்டு பிராணி கூடும்.
எது கொடுப்பது சிறப்பு ..
1) காயடிக்கப்பட்ட பிராணி, இறைச்சி நன்றாக இருக்கும்.
2) விலை உயர்ந்த பிராணி.
3) வெள்ளாடு, ஒட்டகம், மாடு, பெண் சிறந்தது.
கர்ப்பம் .....
இது குறையல்ல, கொடுக்கலாம். எனினும் பேறு காலத்திற்கு நெருக்கமான பிராணியை அறுப்பது மக்ருஹ்.
குட்டி வெளியே வந்தால் அதை அறுத்து சாப்பிடலாம்.
அறுப்பதின் சட்டம்...
1) அறுப்பவர் முஸ்லிமாக இருக்க வேண்டும்.
2) குர்பானி கொடுப்பதை நிய்யத் செய்வது.
3) பிஸ்மில்லாஹ் சொல்லி அறுப்பது. இன்னீ வஜ்ஜஃத்தும் ஒதிக் கொள்ளலாம்.
4) தொண்டை குழிக்கு மத்தியில் உள்ள இரண்டு இரத்தக் குழாய், மூச்சுக்குழாய், உணவுக்குழாய், ஆகிய 4 குழாய்களை துண்டிக்க வேண்டும்.
குர்பானியின் ஒழுக்கம் ....
1) கத்தியை முன்பே தீட்டி வைக்க வேண்டும்.பிராணிகள் முன் தீட்டக் கூடாது.
2) அறுக்கும் சமயம் வேறு பிராணிகள் முன்னால் இருப்பது கூடாது.
3) அறுத்த பிறகு பிராணியின் சூடு ஆறுவதற்கு முன் தோலை உரிப்பதோ, கறியை துண்டுப் போடுவதோ கூடாது.
குர்பானி இறைச்சி .....
3 பங்காக ஆக்க வேண்டும்.
1) ஒரு பங்கு தனக்கும் .
2) ஒரு பங்கு ஏழைகளுக்கும்,
3) உறவினர்களுக்கு ஒரு பங்கும் கொடுக்க வேண்டும்.
பிற மதத்தவர்களுக்கு கொடுப்பது குற்றமல்ல. ஆனால் கறியாக கொடுப்பதை விட சமைத்து கொடுப்பது சிறப்பு.
குர்பானி தோல்... .
1) விரிப்பு போன்றதற்கு தனக்காக பயன்படுத்தலாம்.
2) ஏழைகளுக்கு தர்மம் செய்யலாம் .
3) விற்பனை செய்தால் அதை ஸதகா செய்து விட வேண்டும்.
4) மதரஸா மாணவர்களுக்கு கொடுக்கலாம்.
5) குர்பானி தோலை யோ, அதன் கிரயத்தையோ, எவ்வகையான கூலியாகவோ, அறுப்புக் கூலியாகவோ கொடுப்பது கூடாது.
6) மஸ்ஜித், மதரஸா, கட்டிடத்திற்கு செலவிடக் கூடாது.
7) டேக்ஸ், வரி போன்றதற்கு கொடுப்பது கூடாது.
சாப்பிடக்கூடாதவை...
1) ஆண்குறி
2) பெண்குறி
3) விறைகள்
4)கழலைக் கட்டி
5) மூத்திரப்பை
6) பித்தப்பை
7) இரத்தம்.
இவைகள் பங்கிடுவதிலும் சேராது.
கூட்டுக் குர்பானி.....
1) மாடு, ஒட்டகத்தில் 7 பேர் கூட்டு சேரலாம். ஆட்டில் கூடாது.
2)குர்பானியல் கூட்டு சேர்பவர்களின் நிய்யத் குர்பானியின் நிய்யத் இருக்க வேண்டிய அவசியமில்லை. இபாதத் உடைய நிய்யத் இருந்தாலே போதும், எனவே ஒருவர் அகீகா, மற்றொருவர் குர்பானியை நாடியிருந்தால் கூடி விடும்.
ஆனால் இறைச்சிக்காக கூட்டு சேர்வது கூடாது.
3) பிராணியை வாங்கும் முன், அல்லது நடுவில் , கடைசியில் எப்போது வேண்டுமானால் கூட்டு சேரலாம். ஆனால் அறுத்த பின் கூட்டு சேர்வது கூடாது.
4)யாராவது கூட்டில் இறந்து விட்டால் வாரிசுதாரர் அனுமதியளித்தால் கொடுக்கலாம்.
5)கூட்டுக் குர்பானி கறியை எடைப் போட்டுத்தான் பிரிக்க வேண்டும். தோராயமாக பிரிப்பது கூடாது.
ஆனால் கூட்டை விட தனியாக குர்பானி கொடுப்பது தான் சிறந்தது.
சில சட்டங்கள் ...
1) குர்பானி கடமையல்லாதவர் கடன் வாங்கி கொடுத்தாலும் கூடும். கடனை திருப்பிக் கொடுப்பது சிரமம் என்றால் கூடாது.
2) குர்பானி பிராணி காணாமல் போனால், திருடப்பட்டால், மரணித்துவிட்டால், வேறு பிராணியை வாங்கி அறுப்பது கடமையாகும்.
3) பிராணியை குர்பானி கொடுக்காமல் விட்டு விட்டால் "களா" செய்ய வேண்டும். அதாவது பிராணியின் விலை மதிப்பில் தர்மம் செய்ய வேண்டும்.
4) இரவு நேரங்களிலும் குர்பானி கொடுக்கலாம்.
5) பிறை 9 ஆம் நாள் ஃபஜ்ர் தொழுகையிலிருந்து பிறை 13 அஸர் வரை தொழுகைக்குப் பின் தக்பீர் கூறுவது வாஜி பாகும்.
நாம் கொடுக்கும் குர்பானியின் கறியையோ, இரத்தத்தையோ அல்லாஹ் நாடுவதில்லை. மாறாக இறையச்சத்தை மட்டும் தான் அல்லாஹ் பார்க்கிறான்
5 கருத்துகள்:
கேள்வி :
*குர்பானி பிராணியை அறுக்கும்போது அதன் வாயில் தண்ணீர் ஊற்ற வேண்டுமா..??*
ஆம்
அது பலியிடப்படும் பிராணியின் மீது நாம் காட்டும் ஈவின் அடையாளம் ஆகும்
عن " أبى يعلى شداد بن أوس " رضى الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال :
{ إن الله كتب الإحسان على كل شىء ،
فإذا قتلتم فأحسنوا القتلة ،
وإذا ذبحتم فأحسنوا الذبحة ، وليحد أحدكم شفرته
وليرح ذبيحته }
*رواه مسلم .*
وشداد بن أوس بن ثابت ، وكنيته " أبا يعلى "
من فضلاء الصحابة وعلمائهم ،
وكان ممن أوتى العلم والحِلم ، وقال عنه أبى الدرداء :
إن لكل أمة فقيهاً ، وإن فقيه هذه الأمة " شداد بن أوس .
பிராணியை அறுக்கும் முன் கவனிக்க வேண்டிய சிலது உண்டு
பிராணியை அறுக்கும் முன் அதன் வாயில் சிறிது நீரை ஊற்றுவது இதனால் அப்பிராணிக்கு வேதனை குறையும்
அதே போல் கத்தியைக் கூர்மையாக வைத்துக் கொள்வது அவசியம்.
கூர்மையற்ற கத்தியினால் பிராணியை அறுத்து சித்திரவதை செய்யக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
எம்முறை பிராணிக்குச் சிரமத்தைக் குறைக்குமோ அதன் அடிப்படையில் செயல்பட வேண்டும்.
எல்லாப் பொருட்களின் மீதும் நல்ல முறையில் நடந்து கொள்வதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான்.
நீங்கள் (கிஸாஸ் பழிக்குப் பழி வாங்கும் போது) கொலை செய்தால் அழகிய முறையில் கொலை செய்யுங்கள்.
நீங்கள் பிராணிகளை அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள்.
உங்கள் கத்தியை நீங்கள் கூர்மையாக்கிக் கொள்ளுங்கள்!
(விரைவாக) அறுப்பதன் மூலம் அதற்கு நிம்மதியைக் கொடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஷிதாத் இப்னு அவ்ஸ்(ரலி)
நூற்கள் : முஸ்லிம் (3615),
திர்மிதி(1329)
நஸயீ(4329),
அபூதாவூத் (2432)
இப்னுமாஜா (3161),
அஹ்மது(16490)
ஆயிஷாவே! கத்தியைக் கொண்டு வா!
அதைக் கல்லில் கூர்மையாக்கு என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)
நூற்கள் : முஸ்லிம் (3615)
وقد أجمع غالبية علماء الفقه والدين الإسلامى فى تفسير هذا الحديث ،
أنه من الإحسان عند الذبح إراحة الذبيحة ،
*وإراحتها تكون بعرض الماء عليها قبل الذبح لتشرب ،*
மேற்கண்ட ஹதீஸ் உடைய விளக்கத்தில் தான் அறுப்பதற்கு முன்னர் தண்ணீர் புகட்ட வேண்டும்
என்ற விளக்கமும் தரப்பட்டு இருக்கிறது
*والله اعلم بالصواب✍*
கேள்வி :
*இறந்தவர்கள் சார்பாக குர்பானி கொடுக்கலாமா?*
فالأضحية سنة مؤكدة في حق الحي القادر،
ஷாஃபிஈ மத்ஹபின் படி குர்பானி கொடுக்க வசதி உள்ளவர்களின் மீது குர்பானி கொடுப்பது சுன்னதே முஅக்கதா வாகும் .
وتجزئ عنه وعن أهل بيته،
وقيل: واجبة،
ஹனஃபி மத்ஹபின் படி அது வாஜிபாகும்...
وأما الميت فلا تجب عنه عند أحد من أهل العلم ما لم يوص بها أو ينذرها قبل وفاته،
واختلفوا في صحتها لو ذبحت عنه بغير وصية
ஆனால் மரணித்தவர்களுக்காக குர்பானி கொடுத்தால் அது நிறைவேறுமா?
هل تصح أم لا؟ على ثلاثة أقوال:
மூன்று கருத்துக்கள் நிலவுகிறது...
الأول: تصح وهو مذهب الجمهور ويصله ثوابها،
1-தாராளமாக கொடுக்கலாம் அதன் நன்மை அவர்களுக்கு போய் சேரும்..
இதுவே ஹனஃபி, ஹம்பளீ மத்ஹபின் ஆய்வாகும்...
அதற்கான ஆதாரம்
👇👇👇
ويؤيده ما رواه أبو داود والترمذي في سننهما
وأحمد في المسند
والبيهقي
والحاكم وصححه،
أن عليا رضي الله عنه كان يضحي عن النبي صلى الله عليه وسلم بكبشين،
وقال: إنه صلى الله عليه وسلم أمره بذلك.
الثاني: لا تصح إلا إذا أوصى بها الميت وهو مذهب الشافعية،
2-மரணித்தவர் வஸிய்யத் செய்திருந்தால் அது நிறைவேறும் இல்லையானால் கூடாது
இது ஷாஃபிஈ மத்ஹபின் ஆய்வாகும்...
قال الإمام النووي رحمه الله في المنهاج:
ولا تضحية عن الغير بغير إذنه، ولا عن ميت إن لم يوص بها.
الثالث: تكره وهو مذهب المالكية،
3- மரணித்தவர்களுக்காக குர்பானி கொடுப்பது விரும்பத்தகாத வெறுக்கத்தக்கச்செயலாகும்..
இது மாலிகீ மத்ஹபின் ஆய்வாகும்..
قال الإمام خليل رحمه الله في مختصره في ذكر المكروهات في الأضحية:
وكره جز صوفها... وفعلها عن ميت.
وقال في التوضيح:
وقال مالك في الموازية:
ولا يعجبني أن يضحي عن أبويه الميتين،
قال: وإنما كره أن يضحى عن الميت لأنه لم يرد عن النبي صلى الله عليه وسلم
ولا عن أحد من السلف، وأيضا
فإن المقصود بذلك غالبا المباهاة والمفاخرة. ا
இறுதியாக
*ஃபதாவா ரஹீமிய்யா (2/86) வில்*
குர்பானி நாட்களில் மய்யித்திற்காக ஸதகா செய்வதை விட அவர்கள் சார்பாக குர்பானி கொடுப்பது மிக ஏற்றமான செயலாகும்...
*والله اعلم بالصواب✍*
ஒரு குடும்பத்திற்கு ஓர் ஆடு போதுமா?
*******************************************
ஷாஃபிஈ மத்ஹபில் ஒரு ஆட்டை ஒருவர் தமக்காகவும், தம் குடும்பத்தினர்களுக்காகவும் குர்பானியாக வழங்கலாம்.
1587- حَدَّثَنِي يَحْيَى بْنُ مُوسَى حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ حَدَّثَنِي عُمَارَةُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: سَمِعْتُ عَطَاءَ بْنَ يَسَارٍ يَقُولُ سَأَلْتُ أَبَا أَيُّوبَ الأَنْصَارِيَّ كَيْفَ كَانَتِ الضَّحَايَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: كَانَ الرَّجُلُ يُضَحِّي بِالشَّاةِ عَنْهُ وَعَنْ أَهْلِ بَيْتِهِ فَيَأْكُلُونَ وَيُطْعِمُونَ حَتَّى تَبَاهَى النَّاسُ فَصَارَتْ كَمَا تَرَى.
قَالَ أَبُو عِيسَى: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَعُمَارَةُ بْنُ عَبْدِ اللَّهِ هُوَ مَدَنِيٌّ وَقَدْ رَوَى عَنْهُ مَالِكُ بْنُ أَنَسٍ. وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ وَاحْتَجَّا بِحَدِيثِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ ضَحَّى بِكَبْشٍ فَقَالَ: ((هَذَا عَمَّنْ لَمْ يُضَحِّ مِنْ أُمَّتِي)). وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ لاَ تُجْزِئُ الشَّاةُ إِلاَّ عَنْ نَفْسٍ وَاحِدَةٍ وَهُوَ قَوْلُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ وَغَيْرِهِ مِنْ أَهْلِ الْعِلْمِ.
ஏனெனில் நபி (ஸல்) அவர்களின்காலத்தில் ஒருவர் ஒரு ஆட்டை தமக்கும், தமது குடும்பத்தாருக்கும் குர்பானியாக கொடுப்பார். பின்னர் (அதனை) அவரும்உண்ணுவார்.மற்றவர்களுக்கும் உண்ணக் கொடுப்பார் என்று அபூஅய்யூப் அல்அன்ஸாரி (ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னுமாஜா,திர்மிதி)
கேள்வி :
*சினை வைத்த பிராணியை குர்பானி கொடுக்கலாமா?*
فلا حرج على من ذبح بهيمة حاملاً سواء كان يعلم بذلك أو لا يعلم،
சினையாக உள்ள பிராணியை தாராளமாக குர்பானி கொடுக்கலாம்
ويجوز أكل جنينها سواء أشعر أم لم يشعر
அதனுடைய குட்டியையும் அறுத்து சாப்பிடலாம்
إلا إذا خرج وفيه حياة مستقرة يمكن أن يذكى فلم يذكه حتى مات فهو حرام،
அறுப்பதற்கு முன்னரே அது வயிற்றுக்குள் இறந்துவிட்டால் அதைப் புசிப்பது ஹராம் ஆகும்..
وفي سنن أبي داود عن أبي سعيد الخدري:
அபூ ஸயீத் குத்ரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்
قلنا: يا رسول الله، ننحر الناقة ونذبح البقرة والشاة
فنجد في بطنها الجنين أنلقيه أم نأكله؟
யா ரசூலல்லாஹ் நாங்கள் அறுக்கும் பிராணியில் அதனுடைய வயிற்றில் குட்டியை பெற்றுக்கொண்டால் நாங்கள் என்ன செய்வது?
قال كلوه إن شئتم، فإن ذكاته ذكاة أمه.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் நீங்கள் நாடினால் அதை சாப்பிட்டுக்கொள்ளலாம்
அதனை அறுப்பது அதன் தாயை அறுப்பதாகவே இருக்கிறது
ஆதாரம் : அபூதாவூத்..
ஆக சினையாக உள்ள பிராணியை அறுப்பதற்கு முன்பே அது குட்டி போட்டு விட்டால் அதனையும் தாயோடு சேர்த்து குர்பானி கொடுத்து விடவேண்டும்
அல்லது உயிரோடு அதனை சதகா செய்துவிட வேண்டும்
*ஃபதாவா ரஹீமிய்யா (9/324)*
கேள்வி :
*குர்பானி யாரின் மீது கடமையாகும்?*
*கருவில் இருக்கும் குழந்தைக்காக குர்பானி கொடுக்கலாமா?*
: شروط وجوب الأضحية
குர்பானி கடமையாவதற்கான நிபந்தனைகள் நான்காகும்
أولا : الإسلام ،
ஒன்று அவர் முஸ்லிமாயிருத்தல்
وهذا الشرط متفق عليه بين القائلين إن الأضحية واجبة ، والقائلين إنها سنة مؤكدة ،
ثانيا : الإقامة :
இரண்டு அவர் உள்ளூர் வாசியாய் இருத்தல்
وهذا الشرط ليس متفقا عليه ، وإنما هو محل خلاف بين أهل العلم ،
فقد اشترطها الحنفية فقالوا لا تجب الأضحية إلا على من كان مقيما .
أما المسافر فلا تجب عليه
ஹனஃபி மத்ஹபின் படி பிரயாணியின் மீது குர்பானி கடமை கிடையாது
ثالثا : الغنى ،
மூன்று அவர் குர்பானி கொடுப்பதற்கான வசதி வாய்ப்பை பெற்றிருத்தல்
وهذا الشرط متفق عليه بين العلماء أنه لا بد أن يكون المضحي قادرا على الأضحية ،
فلا تطلب من غير القادر لقوله تعالى :لاَ يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلا وُسْعَهَا
எனவே ஏகோபித்த முடிவின்படி வசதியில்லாதவர்கள் மீது கடமை கிடையாது
ولكنهم اختلفوا في معنى الغنى أو القدرة .
فقال الحنفية : الغني
رابعا : التكليف ،
நான்கு புத்திசுவாதீனத்தோடு வயதிற்கு வந்தவராகவும் இருத்தல்
ويقصد به البلوغ والعقل ، وقد اختلف العلماء في اشتراطهما في وجوب الأضحية أو سنيتها ،
فقال محمد بن الحسن وزفر من الحنفية :
إنهما يشترطان في إيجاب الأضحية على المضحي ،
وقال أبو حنيفة وأبو يوسف : بعدم اشتراطهما على الصبي والمجنون لكونهما غير مكلفين .
وثمرة هذا الخلاف عند الحنفية أنه إذا ضحى وليهما أو وصيهما عنهما من مالهما فإنه لا يضمن عند أبي حنيفة وأبي يوسف ، ويضمن عند محمد وزفر .
والراجح من القولين في المذهب ما ذهب إليه أبو حنيفة وأبو يوسف
எனவே இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) இமாம் அபூ யூஸுஃப் ( ரஹ்) இவ்விருவர்களின் கருத்தின் படி சிறியவர்கள் மீதும் பைத்தியகாரர்கள் மீதும் குர்பானி கடமை கிடையாது
எனவே அவ்விருவர்கள் சார்பாக அவர்களினுடைய வலி குர்பானி கொடுத்தாலும் நிறைவேறாது
فذهب المالكية والحنفية أنه لا يعق عنه قال الإمام النفراوي المالكي في الفواكه الدواني :
(وَلَمَّا كَانَ يُشْتَرَطُ كَمَالُ السَّبْعَةِ أَيَّامٍ قَالَ: ( وَلَا يُحْسَبُ فِي السَّبْعَةِ أَيَّامِ الْيَوْمُ الَّذِي وُلِدَ فِيهِ ) حَيْثُ سُبِقَ بِطُلُوعِ الْفَجْرِ .
قَالَ خَلِيلٌ : وَأَلْغَى يَوْمَهَا إنْ سُبِقَ بِالْفَجْرِ ، وَأَمَّا لَوْ وُلِدَ قَبْلَ طُلُوعِ الْفَجْرِ حُسِبَ مِنْ غَيْرِ خِلَافٍ ،
وَيُشْتَرَطُ حَيَاةُ الْوَلَدِ فِي السَّابِعِ لَا إنْ مَاتَ يَوْمَ السَّابِعِ قَبْلَ فِعْلِهَا)اي العقيقة.
واستدلوا بحديث سمرة رضي الله عنه قال: "كل غلام مرتهن بعقيقته تذبح عنه يوم سابعه، ويحلق رأسه ويسمى"
رواه أحمد والأربعة وصححه الترمذي.
واستدلوا بقوله في الحديث(يوم سابعه)
وذهب الشافعية والحنابلة إلى أنه يعق عنه من تمام انفصاله
ولو مات قبل قبل السابع أو خرج ميتا
قال ابن حجر الهيتمي رحمه الله: (العقيقة إنما تسن عن سقط نفخت فيه الروح ..
وأما ما لم تنفخ فيه الروح فهو جماد لا يبعث ولا ينتفع به في الآخرة فلا تسن له عقيقة
இப்படி இருக்க கருவில் இருக்கும் இன்னும் பிறக்காத குழந்தைக்காக குர்பானி கொடுப்பது அதிக பிரசங்கித்தனமாகும்
குழந்தைக்காக கொடுக்கப்படும் சுன்னத்தான அனுமதிக்கப்பட்ட அகீகா கூட பிறப்பதற்கு முன்பே கொடுக்க கூடாது என்பதே ஹனஃபி மஸ்லகின் ஆய்வாகும்...
*والله اعلم بالصواب
கருத்துரையிடுக