நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வியாழன், டிசம்பர் 18, 2014

ஜனாஸாவை குளிப்பாட்ட வேண்டிய ஒழுங்குகள

ஜனாஸாவை குளிப்பாட்ட
வேண்டிய ஒழுங்குகள் 1
மரணமானவர்,
தன்னை இன்ன நபர்தான்
குளிப்பாட்;ட வேண்டும்
என்று வசிய்யத்
செய்திருந்தால் குறித்த
அந்நபர்
குளிப்பாட்டுவதுதான்
சிறந்தது. 2 வசிய்யத்
செய்திராத பட்சத்தில்
தந்தை, அல்லது தந்தையின்
தந்தை அல்லது மகன்
அல்லது மகனின் மகன்
போன்ற நெருக்கமான
உறவினர்கள்
குளிப்பாட்டுவதே
சிறந்தது. அதே போல்
பெண் ஜனாஸாவாக
இருந்தால் அவர் இன்ன
நபர்தான்
தன்னை குளிப்பாட்ட
வேண்டும் என்று வசிய்யத்
செய்திருந்தால் குறித்த
அந்நபர்
குளிப்பாட்டுவதுதான்
சிறந்தது.
அவ்வாறு வசிய்யத்
செய்திராத பட்சத்தில்
ஜனாஸாவின் தாய்
அல்லது தாயின் தாய்
அல்லது மகள், மகளின் மகள்
போன்ற நெருங்கிய
உறவினர்கள்
குளிப்பாட்டுவதே
சிறந்தது. 3 ஆண்
ஜனாஸா ஆண்களாலும்
பெண்
ஜனாஸா பெண்களாலும்
குளிப்பாட்டப்படல்
வேண்டும். 4
குளிப்பாட்டுபவர்கள்
அது பற்றி நன்கு
அறிந்தவர்களாகவும்
நன்நடத்தை
உடையவர்களாகவும்
இருப்பது சாலச்சிறந்தது. 5
மனைவியைக் கணவனும்,
கணவனை மனைவியும்
குளிப்பாட்டலாம். 6
குளிப்பாட்டுவதற்கு
ஒருவரும் அவருக்கு
உதவியாளர்களாக
ஜனாஸாவின்
குடும்பத்தவர்களில்
இருவரும்
இருப்பது விரும்பத்தக்கது.
7 ஏழு வயதிலும்
குறைவான சிறுவர்களின்
ஜனாஸா இரு
தரப்பினராலும்
குளிப்பாட்டாப்படலாம். 8
குளிப்பாட்டுபவர் கை,
கால், மூக்கு, வாய்
போன்றவற்றிற்கு
பாதுகாப்பு உறை
அணிந்து கொள்வது
நல்லது. 9 ஜனாஸாவை
குளிப்பாட்டுகின்ற
போது ஒரு துண்டை
கையில் சுற்றிக் கொள்ள
வேண்டும். 10
வயிற்றை மிருதுவாக
மூன்று முறை அழுத்தி
அழுக்குகள்
வெளியேறும்
இடங்களை கழுவிச் சுத்தம்
செய்ய வேண்டும்.
அத்தோடு பல்,
மூக்கு போன்றவற்றை
சுத்தம் செய்வதையும்
கவனத்தில் கொள்ள
வேண்டும். 11 முன், பின்
துவாரங்களைக்
கழுவி சுத்தம் செய்த பின்
ஒழுவின்
உறுப்புகளை முதலில்
கழுவி ஜனாஸாவின்
வலது பக்கங்களை
முற்படுத்தி
குளிப்பாட்டுதலை
ஆரம்பிக்க வேண்டும். 12
மூன்று முறை அல்லது
ஐந்து முறை அல்லது ஏழு
முறை என ஒற்றைப்
படையாக தேவைக்கேற்ப
குளிப்பாட்டலாம்.
குளிப்பாட்டும்
போது சோப்பு, இலந்த
இலை போன்றவற்றையும்
பயன் படுத்தலாம். 13
இறுதியாக கற்பூரம்
போன்ற வாசனை கலந்த
நீரால்
கழுவுவது சிறப்பானது.
முஹ்ரிமாக (இஹ்ராம்
கட்டிய நிலையில்
மரணித்தவர்) இருந்தால்
நீரில்
வாசனை கலக்கக்கூடாது .
14 நீர் குளிராக இருப்பின்
இளம் சூடான நீரில்
குளிப்பாட்டலாம். 15
குளிப்பாட்டிய பின்
தூய்மையான துணியால்
உடலை நன்கு துடைக்க
வேண்டும். 16 தலை,
நெற்றி, மூக்கு, கண், கை,
முழங்கால், கக்கம் போன்ற
இடங்களுக்கு அத்தர் போன்ற
வாசனைப் பொருட்களை
பூசுவதோடு முன் பின்
துவாரங்களுக்கு
வாசனை பூசிய
பஞ்சை வைக்க வேண்டும்.
17 குளிப்பாட்டுபவர்
குளி;ப்பாட்டுவதற்கு
முன்னால் ஒழுச்
செய்து கொள்ளவதும்.
குளிப்பாட்டிய பின்னர்
தான் குளித்துக்
கொள்வதும்
சுன்னத்தாகும். 18
ஜனாஸாவின் அங்கங்கள்
வெளியே தெரியாமல்
பார்த்துக் கொள்ள
வேண்டும். 19 ஷஹீதாக
மரணித்தவர்
குளிப்பாட்டப்படுவதில்ல
ை. அவர் ஜனாபத்
குளிப்புக் கடமையான
நிலையில் இருந்தாலும்
சரியே. 20
நான்கு மாதங்களுக்கும்
குறைவான
சதைக்கட்டியாக இருந்தால்
அதைக் குளிப்பாட்டவோ,
கபனிடவோ
தேவையில்லை. சிலர்
ஜனாஸாவைக்
குளிப்பாட்டும் போது '
அஷ்ஹது அன் லாயிலாஹ
இல்லல்லாஹ்..." எனும்
கலிமாவைச்
சொல்லியவாறு
குளிப்பாட்டுகிறார்கள்.
இதுவோ அல்லது வேறு
ஏதாவது வார்த்தைகளோ
கூறியவாறு
குளிப்பாட்டுவதற்கு
எவ்வித ஆதாரமும்
கிடையாது

கனவு பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?

கனவிற்கும்
அர்த்தமுண்டு
எல்லோருக்குமே சகஜமாக
கனவு வரத்தானே
செய்கிறது என்று கனவை
நாம் சாதாரணமாக
எடுத்துக் கொள்ள
முடியாது. கனவிற்கும்
பலவிதமான அர்த்தங்கள்
உண்டு. இஸ்லாத்தின் மிக
முக்கிய அடையாளமான
பாங்கு சொல்லும்
முறைஸஹாபாக்களுக்கு
கனவின் மூலம்தான்
அறிவிக்கப்பட்டது. பல
முக்கிய நபர்கள்
இஸ்லாத்தில்
நுழைவதற்கும்
கனவு காரணமாக
அமைந்துள்ளது.
காலித் இப்னு ஸஈத் (ரலி)
ஹள்ரத் முஹம்மது இப்னு
அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள்
கூறுகிறார்கள். “ஹள்ரத்
காலித் இப்னு ஸஈத் (ரலி)
அவர்கள் இஸ்லாத்தில்
நுழைவதற்கு அவர்கள்
கண்ட
ஒரு கனவே காரணமாக
அமைந்தது. அவர்கள் கண்ட
கனவு இதுதான்... அவர்
நரகத்தின் விளிம்பில்
நின்று
கொண்டிருக்கிறார்.
அவரது தந்தை அவரை
நரகில் தள்ள
முயற்சிக்கிறார். அதைக்
கண்ட நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள்
அவர் நரகில்
விழாதவாறு அவரின்
இடுப்பை பிடித்துக்
கொள்கிறார்கள்.
இதற்குப்
பிறகு திடுக்கிட்டு
விழித்த ஹள்ரத் காலித்
இப்னு ஸஈத் (ரலி) அவர்கள்
‘அல்லாஹ்வின்
மீது சத்தியமாக! இந்த
கனவு
உண்மையானதுதான்’
என்று கூறிக்
கொண்டு ஹள்ரத் அபூபக்ர்
(ரலி) அவர்களை சந்தித்து
நடந்ததைக் கூறினார்கள்.
அதற்கு ‘உனக்கு நல்லதே
நடக்கட்டுமாக! இதோ,
நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள்
அமர்ந்துள்ளார்கள்.
அவர்களை நீ
பின்பற்றி அவர்களுடன்
புனித இஸ்லாத்தில்
இணைந்து விடு! நீ நரகில்
விழாமல் அவர்கள்
உன்னை பாதுகாப்பார்கள்.
ஆனால்
உனது தந்தையோ நரகில்
விழுந்து விட்டார்’
என்று பதில் கூறினார்கள்.
அதன் பிறகு அவர்கள்
நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்
அவர்களை சந்தித்து
இஸ்லாத்தை ஏற்றுக்
கொண்டார்கள்.
( நூல் : முஸ்தத்ரக் ஹாகிம்)
இது போன்று சான்றுள்ள
எத்தனையோ பல சம்பவங்கள்
நடந்துள்ளன.
எனவே கனவிற்கு
முக்கியத்துவம்
கொடுத்து கனவுகண்டால்
என்னென்ன செய்ய
வேண்டும் என்று இஸ்லாம்
கூறுகிறது என்பதை நாம்
தெரிந்து கொள்ள
வேண்டும்.
கனவு என்பது என்ன...?
இன்றைய விஞ்ஞானம்
கனவைப் பற்றி அது நம்
நினைவுகள் மற்றும்
சிந்தனைகளின் பிம்பங்கள்
என்றும் நாம் தூங்கும்
சமயம் நமது மூளை மிகக்
குறைந்த அளவில்
வேலை செய்யும்
போது அதில் தோன்றும்
சில படக்காட்சிகள் என்றும்
பல விதமான கருத்துக்கள்
கூறுகின்றது.
அல்குர்ஆன் தலைமை
விரிவுரையாளர் மற்றும்
நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்
அவர்களின் அன்பு தோழர்
ஹள்ரத் இப்னு அப்பாஸ்
(ரலி) அவர்கள் குர்ஆனின்
39:42
ஆவது வசனத்திற்கு கீழ்
கண்டவாறு விளக்கம்
தருகிறார்கள்.
‘ஒவ்வொரு மனிதனுக்கும்
நஃப்ஸ் (ஆத்மா) -வும் ரூஹ்
(உயிர்) - ம் உள்ளன. நஃப்ஸில்
உணரும் தன்மையும்
அறிவும் உள்ளன. ரூஹில்
அசையும் தன்மையும்
மூச்சு வாங்கும்
தன்மையும் உள்ளன.
மனிதன் தூங்கும்
போது அல்லாஹ்
நஃப்ஸை மட்டுமே
கைப்பற்றுகிறான்.
ரூஹை
கைப்பற்றுவதில்லை.
ரூஹ் தனது அசையும்
தன்மையால் அந்நேரத்தில்
சுற்றித் திரிகிறது.
அப்பொழுது அந்த
ரூஹிற்கு மற்ற
ரூஹ்களுடன் நடைபெறும்
சம்பாஷனைகள் மற்றும்
நிகழ்ச்சிகளே
கனவுகளாகும். (நூல் :
குர்துபி)
இவ்வாறு கனவு ஏன்
வருகிறது என்பதற்கு
பலவிதமான விளக்கங்கள்
கூறப்படுகின்றன.
கனவின் வகைகள்
மூன்று
1. நல்ல கனவு.
நமக்கு நல்லது நடப்பதைப்
போன்ற நிகழ்வுகள்
மற்றும் நாம் விரும்பும்
நிகழ்வுகளைகனவுகளாக
காணுவது.
2. கெட்ட கனவு.
நமக்கு கெட்டது நடப்பதைப்
போன்ற நிகழ்வுகள்
மற்றும் நாம் வெறுக்கும்
நிகழ்வுகளைகனவுகளாக
காணுவது.
3. குழப்பமான
தெளிவில்லாத கனவுகள்.
கனவைப் பற்றிய
ஹதீஸ்கள்
1. நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறியதாக ஹள்ரத்
அபூ ஸஈதினில் குத்ரீ
(ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.
“உங்களில் எவரேனும்
தனக்கு பிடித்தமானதை
கனவில் கண்டால்
நிச்சயமாக
அது அல்லாஹ்வின்
புறத்திலிருந்து
வந்ததாகும். எனவே அவர்
அல்லாஹ்வைப் புகழட்டும்.
மேலும் அதை அவர்
யாரிடமேனும் கூறட்டும்”
என்றும்
வேறு அறிவிப்பில் “அவர்
அந்த
கனவை தன்னை விரும்பக்
கூடிய,
(தனக்கு நல்லதையே
நாடக்கூடிய) அறிஞரான
(இறையச்சமுடையவர்களில்
) ஒருவரிடம் கூறட்டும்’
என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
(நூல் : புகாரி)
2. நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறியதாக ஹள்ரத்
அபூ கதாதா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள். “நல்ல
கனவு அல்லாஹ்வின்
புறத்திலிருந்து
வருவதாகும். கெட்ட
கனவு ஷைத்தான்
புறத்திலிருந்து
வருவதாகும்.
எனவே உங்களில் ஒருவர்
தனக்கு பிடிக்காத கெட்ட
கனவு கண்டால் அவர்
தனது இடது புறமாக
(எச்சில் வராதவாறு)
மூன்று முறை துப்பிக்
கொள்ளட்டும். மேலும்
ஷைத்தானிடமிருந்து
அல்லாஹ்விடம்
பாதுகாப்பு
தேடிக்கொள்ளட்டும்.
(அப்படி செய்தால்) அந்த
கனவால் அவருக்கு எந்த
இடைஞ்சலும் ஏற்படாது.”
( நூல் : புகாரி)
3. நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறியதாக ஹள்ரத்
அபூ ஜாபிர் (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள். ‘கெட்ட
கனவு கண்டவர் தான்
படுத்திருக்கும்
முறையை மாற்றிக்
கொள்ளட்டும்’
(நூல் : முஸ்லிம்)
4. நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறியதாக ஹள்ரத்
அபூ ஹுரைரா (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்.
‘கெட்ட கனவு கண்டவர்
அதை யாரிடமும் கூற
வேண்டாம். அவர்
எழுந்து தொழுது
கொள்ளட்டும்.’
            (நூல் : திர்மிதி)
மேற்கூறப்பட்ட ஹதீஸ்களின்
அடிப்படையில் நாம் செய்ய
வேண்டியதை
கீழ்கண்டவாறு
வகைப்படுத்தலாம்.
1. நல்ல கனவு கண்டால்......
நல்ல கனவு கண்டால்
மூன்று விஷயங்கள்
செய்ய வேண்டும்.
1. இது அல்லாஹ்வின்
புறத்திலிருந்து வந்தது
என்பதை உறுதியாக நம்ப
வேண்டும்.
2.. அல்லாஹ்வைப் புகழ
வேண்டும்.
3. நமக்கு நன்மையை
விரும்பும் நல்ல அமல்கள்
செய்யும் சிறந்த அறிஞர்
ஒருவரிடம் அதைக் கூற
வேண்டும்.
2. கெட்ட
கனவு கண்டால்......
கெட்ட கனவு கண்டால்
எட்டு விஷயங்கள் செய்ய
வேண்டும்.
1. இந்த கனவின்
தீங்கிலிருந்து
அல்லாஹ்விடம்
பாதுகாவல் தேட
வேண்டும்.
2. ஷைத்தனை விட்டும்
அல்லாஹ்விடம்
பாதுகாவல் தேட
வேண்டும்.
3. நமது இடது புறமாக
எச்சில்
வராதவாறு மூன்று
முறை துப்ப வேண்டும்.
4. தான் படுத்திருக்கும்
முறையை மாற்றிக்
கொள்ள வேண்டும்.
5. ஷைத்தானின் தீண்டுதல்
ஏற்படாமல் இருக்க ஆயத்துல்
குர்ஸீ ஓதிக்கொள்ள
வேண்டும்.
6. இந்த கனவால் நமக்கு எந்த
தீங்கும் வராது என்பதை
உறுதியாக நம்ப
வேண்டும்.
7. (வேறொரு அறிவிப்பின்
படி) எழுந்து 2 ரக்அத் தொழ
வேண்டும்.
8. முக்கியமாக இந்த
கனவைப் பற்றி யாரிடமும்
பிரஸ்தாபிக்கக் கூடாது.
கெட்ட
கனவு கண்டு இடையில்
எழுந்தால் இந்த
அனைத்து விஷயங்
களையும் செய்ய
வேண்டும்.
பலருக்கு காலையில்
எழுந்து சில
மணி நேரங்கள் கழித்த
பிறகே கனவுகள்
ஞாபகத்திற்கு வரும்.
அப்பொழுதும் அவர்கள்
மேற்கூறப் பட்டதில்
4ஆவது செயலைத் தவிர
மற்ற விஷயங்களை செய்து
கொள்ள வேண்டும்.
யாரிடமும்
கூறக்கூடாது
நம்மில் பலர் தாம் காணும்
கெட்ட
கனவுகளை மற்றவர்களிடம்
கூறும்
வழமை கொண்டுள்ளனர்.
நமக்கு எவ்வளவு
நெருக்கமான இரத்த பந்த
உறவினராக இருந்தாலும்
கெட்ட கனவை யாரிடமும்
கூற வேண்டாம்
என்று இஸ்லாம்
எச்சரிப்பதை கவனத்தில்
கொள்ள வேண்டும்.
ஏனெனில் ஹள்ரத்
நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறியதாக ஹள்ரத்
அபூ ரஜீன் (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.
‘கனவு என்பது அதற்கு
விளக்கம் கூறப்படாத
வரை ஒரு பறவையின்
காலில் கட்டப்பட்டதைப்
போன்றிருக்கிறது.
(அதாவது உறுதியாக
தறிபடாததாக உள்ளது).
யாரேனும் விளக்கம்
கூறினால்
அது நிகழ்ந்து விடும்.
(நூல் : திர்மிதி)
எனவே அவர்கள் தங்களின்
அறிவிற்குட்பட்டு
ஏதேனும் தவறான
விளக்கம் கூறினால்
அது அப்படியே நடந்து விட
வாய்ப்புள்ளதால் கெட்ட
கனவை நாம் யாரிடமும்
கூறக் கூடாது. மேலும்
மேற்கூறப்பட்டபடி நாம்
நடந்து கொண்டால் அந்த
கனவையே நினைத்து
பயப்படவும்
தேவையில்லை.
3. குழப்பமான
தெளிவில்லாத கனவு
நாம் என்ன கனவு கண்டோம்
என்பதே தெரியாத
குழப்பமான கனவுகள்.
இதை நாம்
பொருட்படுத்தாமல்
அப்படியே விட்டு விட
வேண்டும்.
கனவிற்கு விளக்கம்
ஹள்ரத் நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள்
ஸஹாபாக்களிடம் நீங்கள்
யாரேனும்
கனவு கண்டீர்களா?
என்று கேட்டு அதற்கு
விளக்கம் கூறுபவர்களாக
இருந்தார்கள். ஹள்ரத்
யூஸுஃப் (அலை) அவர்கள்
கனவிற்கு விளக்கம்
கூறிய நிகழ்ச்சிகள்
குர்ஆனிலும்
இடம்பெற்றுள்ளன.
இதனடிப்படையில்
கனவிற்கு விளக்கங்கள்
உண்டு. ஆனால் விளக்கம்
கூறுவதற்கு அதைப்
பற்றிய ஆழ்ந்த
கல்வி ஞானமும் மாசற்ற
இறையச்சமும் அதிகம்
தேவை. எனவேதான்
இன்று கனவிற்கு சரியான
விளக்கம்
கூறக்கூடியவர்கள்
யாருமில்லை என்றே
கூறலாம். கனவின்
விளக்கங்கள் என்று
கூறப்பட்டிருப்பதெல்லாம்
வெறும்
அனுமானம்தானே தவிர
அதுதான் உண்மையான
விளக்கம்
என்று அறுதியிட்டுக்
கூற முடியாது.
நம்மிடம் ஒருவர் கனவைக்
கூறினால்....
ஹள்ரத் நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறியதாக ஹள்ரத்
அபூ மூஸா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.
‘யாரிடம் கனவைக்
கூறப்படுகிறதோ அதற்கு
அவர் நீ
நல்லதையே பார்த்தாய்.
நல்லதே நடக்கட்டும்
என்று கூறட்டும். (நூல் :
அமலுல் யவ்மி வல்லைலா)
எனவே நாம் சுயமாக
அதற்கு எந்த விளக்கமும்
கூறாமல் நீர்
நல்லதையே பார்த்தீர்.
நல்லதே நடக்கட்டும்.
அல்லாஹ்
அதை உனக்கு நன்மையாக
ஆக்கட்டும் என்று அழகான
வார்த்தைகளை கூறிக்
கொள்ள வேண்டும்.
கனவு கண்டதாக பொய்
கூறுவது
நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறியதாக ஹள்ரத்
இப்னு அப்பாஸ் (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்.
“யார் கனவை பொய்யாக
கூறுவாரோ கியாமத்
நாளில்
அல்லாஹு தஆலா இரண்டு
கோதுமைகளை அவரிடம்
கொடுத்து (இரண்டு
கயிறுகளுக்கு மத்தியில்
முடிச்சு போடுவதைப்
போன்று)
ஒரு கோதுமையை
மற்றொன்றில்
முடிச்சு போடச்
சொல்லி நிர்ப்பந்திப்பான்.
(நூல் : இப்னு ஹிப்பான்)
இல்லாத ஒரு விஷயத்தை
பொய்யாக கூறியதால்
செய்ய முடியாத
விஷயத்தை செய்யச்
சொல்லி தொடர்ந்து
தண்டிக்கப்படுவான்.
எனவே நான் இன்ன
கனவு கண்டேன்
என்று ஒரு கனவை
பொய்யாகக்
கூறுவதோ அல்லது கண்ட
கனவை கூறும்போது
நடுவில்
இல்லாததை சேர்த்துக்
கூறுவதோ மிகவும்
கண்டிக் கத்தக்கதாகும்.
பகல் கனவு
பகல் கனவு பலிக்காது ;
இரவு கனவுதான்
பலிக்கும் என்று சிலர்
கூறுவது சரியல்ல. நாம்
எந்நேரத்தில்
தூங்கினாலும்
தூக்கத்தில் நாம்
காணுவது கனவாகும்.
அதை பகல் கனவு -
இரவு கனவு என்று நாம்
பிரித்துப் பார்க்கத்
தேவையில்லை.
அனைத்து
கனவுகளுக்கும்
மேற்கூறிய
சட்டங்கள்படி தான் செயல்பட
வேண்டும்.
ஆனாலும் ஹள்ரத்
நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறியதாக ஹள்ரத்
அபூ ஸஈதினில் குத்ரீ
(ரலி) அவர்கள் அறிவிக்கும்
கீழ்காணும் ஹதீஸ்
குறிப்பிடத்தக்கது.
‘கனவுகளில் மிக
உண்மையானது ஸஹர்
நேரங்களில் காணப்படும்
கனவுகளாகும்.’ (நூல் :
திர்மிதி)

புதன், டிசம்பர் 03, 2014

இஸ்லாம் என்றால் என்ன? ஈமான் என்றால் என்ன? இவற்றிக்கிடையே உள்ள வேறுபாடு என்ன?

இறைத்தூதர்(ஸல்) அவர்கள்
ஒருநாள் மக்கள்
முன்வந்திருந்தார்கள்.
அப்போது ஒருவர்
(வாகனமேதுமின்றி) நடந்துவந்து,
‘இறைத்தூதர் அவர்களே! ‘ஈமான்’
எனும் இறைநம்பிக்கை என்றால்
என்ன?’ என்று கேட்டார்.
அவர்கள், ‘ஈமான்’ எனும்
இறைநம்பிக்கை என்பது,
அல்லாஹ்வையும், அவனுடைய
வானவர்களையும், அவனுடைய
தூதர்களையும், அவனுடைய சந்திப்பையும்
நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப்
பின்) இறுதியாக (அனைவரும்)
உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும்
ஆகும்’ என்று பதிலளித்தார்கள்.
‘இறைத்தூதர் அவர்களே!’
‘இஸ்லாம்’ (அடிபணிதல்)
என்றால் என்ன?’ என்று அவர்
கேட்டார். நபி(ஸல்) அவர்கள்,
‘இஸ்லாம்
என்பது அல்லாஹ்வை நீங்கள்
வணங்குவதும், அவனுக்கு நீங்கள்
எதையும் இணைவைக்காமலிருப்பதும்,
தொழுகையை நிலைநிறுத்துவதும்,
கடமையான ‘ஸக்காத்’
தை வழங்கிவருவதும், ரமளான்
மாதத்தில் நோன்பு நோற்பதும்
ஆகும்’ என்றார்கள்.
அம்மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே!
‘இஹ்ஸான்’ (நன்மை புரிதல்
என்றால் என்ன?’ என்று கேட்டார்.
நபி(ஸல்) அவர்கள், ‘இஹ்ஸான்
என்பது அல்லாஹ்வை நீங்கள்
பார்த்துக்கொண்டிருப்பது பே
ான்ற உணர்வுடன்
வணங்குவதாகும். நீங்கள்
அவனைப்
பார்க்கவில்லை என்றாலும், அவன்
உங்களைப் பார்க்கிறான் (எனும்
உணர்வுடன்
அவனை வணங்குவதாகும்.)’
என்று பதிலளித்தார்கள்.
அம்மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே!
மறுமை (நாள்) எப்போது வரும்?’
என்று கேட்கஇ நபி(ஸல்) அவர்கள்,
‘கேள்வி கேட்கப்படுபவர்
(அதாவது நான்,) கேட்பவரைவிட
(அதாவது உங்களைவிட) அதிகம்
அறிந்தவர் அல்லர். ஆயினும்,
நான் உங்களுக்க மறுமை நாளின்
அடையாளங்கள் சிலவற்றை எடுத்துக்
கூறுகிறேன்:
ஒரு (அடிமைப்) பெண் தன்
எஜமானியைப்
பெற்றெடுப்பாளாயின்
அது மறுமையின் அடையாளங்களில்
ஒன்றாகும்.காலில்
செருப்பணியாத,
நிர்வாணமானவர்கள் மக்களின்
தலைவர்களாக இருந்தால் அதுவும்
அதன் அடையாளங்களில்
ஒன்றாகும். (மறுமை நாள்
எப்போது வரவிருக்கிறது எனும்
அறிவானது) அல்லாஹ்வைத் தவிர
வேறெவரும் அறியாத
ஐந்து விஷயங்களில் அடங்கும்.
‘நிச்சயமாக, மறுமை (நாள்
எப்போது சம்பவிக்கும் என்பது)
பற்றிய
அறிவு அல்லாஹ்விடமே உள்ளது.
அவனே மழையை இறக்கிவைக்கிறான்.
இன்னும், அவன் கர்ப்பங்களில்
உள்ளவற்றையும் (தீர்க்கமாக)
அறிகிறான். தாம் நாளை என்ன
சம்பாதிப்போம் என்பதை (அவனைத்
தவிர வேறு) யாரும் (உறுதியாக)
அறிவதில்லை. எந்த இடத்தில் தாம்
இறக்கப்போகிறோம் என்பதையும்
எவரும் அறிவதில்லை.
அல்லாஹ்தான்
(இவற்றையெல்லாம்)
நன்கறிந்தவன்;
நுணுக்கமானவன்’ (எனும் 31:34
வது வசனத்தை நபியவர்கள்
ஓதினார்கள்.) பிறகு அந்த மனிதர்
திரும்பிச் சென்றார்.
நபி(ஸல்) அவர்கள் ‘அந்த மனிதரைத்
திரும்ப என்னிடம்
அழைத்து வாருங்கள்!’
என்று கூறினார்கள். மக்கள்
அம்மனிதரைத் திரும்ப அழைத்து வரச்
சென்றார்கள். எங்கேயும்
காணவில்லை. பின்னர், நபி(ஸல்)
அவர்கள் ‘இ(ப்போது வந்து போன)
வர், (வானவர்) ஜிப்ரீல் (அலை)
அவர்கள் தாம்.
மக்களுக்கு அவர்களின்
மார்க்கத்தைக்
கற்றுத்தருவதற்காக அவர்
வந்திருந்தார்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி),
ஆதாரம் : புகாரி
ஈமான் என்றால் என்ன?
1) அல்லாஹ் (இறைவன்)
ஒருவனே என்றும்
அவனே அல்லாஹ்
ஸூப்ஹானத்த்ஆலா
2) அல்லாஹ்வின்
படைப்பினங்களான மலக்குள் மீதும்
3) அல்லாஹ்வின் தூதர்கள் மீதும்
4) அந்த தூதர்களுக்கு இறைவன்
வேதங்களை அருளினான் என்றும்
5)மறுமையை நம்புவதும்
(அதாவது நியயத்தீர்ப்பு நாள்,
சுவர்க்கம் மற்றும் நரகம்
இவற்றை நம்புதல்)
6) இறைவன் விதித்திருக்கின்ற விதியின்
மீதும்
ஆகியவைகளை நம்பிக்கைக்
கொள்வதற்கு ‘ஈமான்’
என்று பெயர்.
மேலே குறிப்பிடப்பற்றுள்ளவைகளில்
எதில் ஒன்றிலாவது யாருக்கேனும்
சந்தேகம் ஏற்பட்டால் அவர்
முழுமையாக ஈமான்
கொண்டவராக
மாட்டார்.
இஸ்லாம் என்றால் என்ன?
இஸ்லாம் என்ற
வார்த்தைக்கு ‘ஒருவர் தன்னுடைய
விருப்பு வெறுப்புகளை முழுமையாக
இறைவனுக்கு அர்பணித்தல்’ மற்றும்
அமைதி என்று பொருளாகும்.
இஸ்லாம் என்பது பின்வரும்
அடிப்படை விஷயங்களில்
அமைந்ததாகும்.
1) வணங்கப்படுவதற்கு தகுதியுடைய
இறைவன் அல்லாஹ்
ஒருவனைத்தவிர
வேறு யாருமில்லை என்றும்
முஸம்மது (ஸல்) அவர்கள்
அல்லாஹ்வின் இறுதி தூதரும்
உண்மை அடியாரும் ஆவார்கள்
என்றும் மனதால் நம்பிக்கைக்
கொண்டு வாயால்
உறுதி மொழிவதாகும்.
2) குறிப்பிட்ட நேரங்களில் ஐங்காலத்
தொழுகைகளை நிறைவேற்றுதல்
3)ரமலானில் நோன்பு நோற்பது
4) வருடாந்திர ஜக்காத்
செலுத்துவுது
5) வசதியுள்ளவர்கள் தம்
வாழ்நாளில் ஒருமுறை ஹஜ்
செய்வது
எனவே,
ஈமான் என்பது: - ஒருவர்
உள்ளத்தால் மேலே குறிப்படப்பட்ட
ஆறு விஷயங்களில் நம்பிக்கைக்
கொள்வதும்
இஸ்லாம் என்பது: - அந்த
நம்பிக்கையின் வெளிப்பாடாக
ஒருவரின் சொல்
செயல்கள்
அமைந்து அதன்படி ஐந்து கடமைகளை நிறை
வேற்றுதலாகும்.

செவ்வாய், ஏப்ரல் 29, 2014

நபியின் மனைவியர்கள்

1. கதீஜா நபி (ஸல்) அவர்களின் முதல் மனைவி. அவர் அந்த சமுதாயத்தில் நல்ல செல்வாக்கும், செல்வச் செழிப்பும் உடைய ஒரு பெண்மணி. இன்றைய மதிப்பில் சுமார்800கோடி அமெரிக்க டாலர்மதிப்புடைய சொத்திற்கு அதிபதியாக இருந்தார் என்றுஃபாத்திமா(ரலி) வாழ்வில் நடந்த படிப்பினை சம்பவங்கள்(பாகம்-1)என்ற நூலில் பன்னூலாசிரியர் மௌலானா மௌலவிS.S.முஹம்மது ஷைகு அப்துல்லாஹ் மன்பயீ காதிரிஎன்ற அறிஞர் கூறுகின்றார். (இந்திய மதிப்பின்படி சுமார் 36,800 கோடி ரூபாய் நம்ப முடிகிறதா? ) கதீஜா அவர்களது உறவினர் குழைமா என்ற பெண், வேலை தேடிக் கொண்டிருந்த நபி (ஸல்) அவர்களை, இவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். நபி (ஸல்) பரம ஏழையான ஒரு இளைஞர். நபி (ஸல்) அவர்களின் அழகினால் கதீஜா கவரப்பட்டார். திருமண பேச்சை முதலில் துவங்கியவரும் இவரே. இவர் ஏற்கெனவே இருமுறை விதவையானவர் முந்தைய கணவர்களுக்குப் பிறந்த மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். தன்னைவிட பதினைந்துவயது இளையவரான நபி (ஸல்) மீது மையல் கொண்டார். தன்னுடைய நாற்பதாம் வயதில் இருபத்தி ஐந்து வயதான நபி (ஸல்) அவர்களை, சில எதிர்ப்புகளை மீறி மூன்றாவதாக திருமணம் செய்தார். பொருளாதார நெருக்கடியிலிருந்த நபி (ஸல்) இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. தன்னை மணந்து கொள்ளுமாறு முஹம்மதிற்கு செய்தியை அனுப்பிவிட்டு, அதே சமயத்தில் தனது தந்தையார் குவைலித்-தை வீட்டிற்கு வரவழைத்து, வேண்டிய அளவிற்கு மதுவைப் பருகவைத்து, நல்ல அங்கியை அணிவித்து, வாசனை திரவயங்கள் தடவி உட்கார வைத்தார். ஒரு மாட்டை அறுத்து விருந்திற்கு ஏற்பாடுகளைச் செய்து, முஹம்மதின் பெரிய தகப்பனார்களுக்கும் அழைப்பு கொடுத்தார். அவர்கள் வந்த பிறகு, குடிபோதையிலிருந்த கதீஜாவின் தகப்பனார் குவைலித் (என்ன நிகழ்கிறதென்றே தெரியாமல்), கதீஜாவை முஹம்மதிற்கு திருமணம் செய்து வைத்தார். போதை நீங்கியதும் அவர் கேட்ட முதல் கேள்வி, “இந்த மாட்டிறைச்சி, வாசனை திரவயங்கள் கோடுபோட்ட புதிய அங்கி இவைகள் இங்கு வந்ததெப்படி?” என்றார். அதற்கு கதீஜா, “நீங்கள் தானே என்னை முஹம்மது பின் அப்துல்லாவிற்கு திருமணம் முடித்து வைத்தீர்களே தெரியவில்லையா?” என்றார். “நான் அப்படி ஒன்றும் செய்யவில்லை, செய்யவும் மாட்டேன். மெக்காவிலேயே சிறந்த ஆண்கள் இருக்கையில், வேறொருவருக்கு மணம் முடித்து வைக்க என்னால் முடியாது. என் அருமை மகளை முஹம்மதுவைப் போன்ற ஊர்சுற்றி, வெறும் பயலுக்கு எப்படி மணம் செய்து வைத்திருக்க முடியும்?” என்றார். முஹம்மதின் பெரிய தகப்பன்மார்கள் கோபமடைந்து, இந்த உறவை ஏற்படுத்தியதே உங்கள் மகள் கதீஜாதான் என்றனர். கதீஜாவின் தந்தை வாளை உறுவினார். இருதரப்பும் சண்டைக்குத் தயாரானார்கள் . நிலைமை வீபரீதமாவதை உணர்ந்த கதீஜா நடந்தவைகளைக் கூறி தன்னுடைய திட்டத்தை ஒப்புக் கொண்டவுடன், அவரது தப்பனாரால் எதுவும் பேச முடியாமல் போனது. பின், இருதரப்பும் சமாதான பேச்சுவார்த்தைகளைத் துவங்கின. இவர்களின் திருமணம் கிபி 595 ல் நிகழ்ந்தது. கதீஜா அம்மையாரின் பெரும் செல்வமும் முஹம்மது நபியின் நிர்வாகத்தின் கீழ்வந்தது. கதீஜா அம்மையாரின் வயது ஏறக்குறைய நபி (ஸல்) அவர்களின் தாய்க்கு சமமான வயது. இவர்களுக்கு காசிம், தைய்யிப், தாஹிர் என்ற ஆண் குழந்தைகளும், ஜைனப், ருக்கையா, உம்மு குல்தும் மற்றும் ஃபாத்திமா என்ற பெண் குழந்தைகளும் இருந்தனர், ஆண் மக்கள் குழந்தைப் பருவத்திலேயே இறந்ததால் நான்கு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தனர். பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர். கதீஜா அவர்களுடனான திருமண வாழ்க்கையில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பெரும்பாலும் தனிமையை நாடி ஹீரா குகையில் இருப்பதையே விரும்பினார். குடும்பத்தையும், கதீஜா அவர்கள் திறம்பட நிர்வகித்து வந்த வியாபாரத்தையும் முஹம்மது நபி (ஸல்) சரியாக கவனிக்கவில்லை. அவர் தனது குடும்பத்திற்காக எவ்விதமான வியாபாரத்திலோ அல்லது தொழிலிலும் ஈடுபடவில்லை. குழந்தைகளையும், பொறுப்பின்றி இருக்கும் கணவனையும் வியாபாரத்தையும் ஒருசேர கதீஜாவால் கவனிக்க முடியவில்லை. இதன் காரணத்தால் கதீஜாவின் வியாபரம் நொடிந்து, சுமார்36,800கோடிரூபாய் மதிப்புடைய செல்வங்கள் அனைத்தும் கரைந்து குடும்பம் தரித்திர நிலையைடைந்தது. இவ்வளவு செல்வத்தையும் ஒன்றுமில்லாமல் செய்தது முஹம்மது நபியின் மகத்தான சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். இறுதிக் காலத்தில் அணிவதற்குக் கூட நல்ல ஆடைகளின்றி, மிகவும் வறுமையில் வாழந்தாகவும் ஹதீஸ்கள் கூறுகிறது. இன்றைய நிலவரப்படி இந்திய மதிப்பில் சுமார்264,000 கோடிருபாய்களை இஸ்லாமின் வளர்ச்சிக்காக செலவு செய்துள்ளார் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். பதிமுன்று ஆண்டுகள் பிரச்சாரத்தில்,264,000 கோடிசெலவு செய்தும் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் என்பதிற்கும் குறைவான அவர்களையே இஸ்லாமில் இணைக்க முடிந்துள்ளது. இஸ்லாமிய வரலாற்றில் நிறைந்திருக்கும் முரண்பாடுகளுக்கு இதுவும் ஒரு உதாரணம். அன்றைய மெக்கா நகரத்தில் ஆயிரம் குடும்பங்கள் இருந்ததாகக் கொண்டாலும் முஹம்மது நபி தனது பிரச்சாரத்திற்காக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும்264கோடிரூபாய்களை செலவு செய்ததாகவே பொருள் தருகிறது. ஒரு கோடி ரூபாய் என்பது இன்றைய காலத்திலும் மிகப்பெரிய செல்வம்தான் அப்படியானால், ஆயிரக் கணக்கானவர்கள் மிகப்பெரும் செல்வத்தில் திளைத்திருக்க வேண்டும், பெரும் பணக்காரர்கள் நிறைந்த நகரமாக மெக்கா மாறியிருக்க வேண்டுமே? இப்படியொரு மாற்றம் நிகழ்ந்ததா? உங்களால் இந்தச் செய்தியை நம்பமுடிகிறதா? கதீஜா கிபி619அல்லது623-ல் மரணமடைந்தார் குறிப்பிடப்படுகிறது. கதீஜா அவர்களின் மரணத்திற்கு பிறகு ஒரு சில மாதங்கள் தனிமையில் வாழ்ந்தார். நபி (ஸல்) அவர்களுக்கு, நாற்பது ஆண்களுக்கு சமமான பாலியல் பலம் கதீஜா அம்மையாரின் மரணத்திற்கு பிறகே வழங்கப்பட்டிருக்க வேண்டும் ஏனென்றால், கதீஜாஅவர்கள் உயிருடன் இருந்தவரை வேறு எந்த பெண்ணையும் அவர் நாடிச் சென்றதாக ஆதாரங்கள் எதுவுமில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பிரபல்யமான பதிவுகள்