நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வியாழன், ஏப்ரல் 21, 2016

மிஃராஜ்

நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணி ஒருபுறம் வெற்றி, மறுபுறம் கொடுமைகள் .என்ற இரண்டிற்கும் இடையில் உள்ள பாதையை பிளந்து சென்று கொண்டிருந்தது. நம்பிக்கை நட்சத்திரங்கள் வெகு தூரத்தில் மின்னத் துவங்கின. அப்போதுதான் நபி (ஸல்) அவர்களின் வானுலகப் பயணம் நடைபெற்றது. இதையே இஸ்லாமிய வரலாற்றில் ”மிஃராஜ்” என அறியப்படுகிறது.

மிஃராஜின் நிகழ்ச்சி எப்போது நடந்தது என்பதில் பல கருத்துகள் உள்ளன.

1) நபித்துவம் கிடைத்த ஆண்டு நடைபெற்றது. (இதை இமாம் தப்ரி ஆமோதிக்கிறார்கள்)
2) நபித்துவத்தின் ஐந்தாம் ஆண்டு நடைபெற்றது. (இதை இமாம் நவவியும் இமாம் குர்துபீயும் உறுதிப்படுத்துகிறார்கள்)
3) நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ரஜப் மாதம் 27வது இரவில் நடைபெற்றது.
4) ஹிஜ்ராவிற்கு 16 மாதங்களுக்கு முன், அதாவது நபித்துவத்தின் பனிரெண்டாவது வருடம் ரமழான் மாதத்தில் நடைபெற்றது.
5) ஹிஜ்ராவிற்கு ஓர் ஆண்டு, இரண்டரை மாதங்களுக்கு முன் அதாவது நபித்துவத்தின் பதிமூன்றாம் ஆண்டு முஹர்ரம் மாதத்தில் நடைபெற்றது.
6) ஹிஜ்ராவிற்கு ஓர் ஆண்டுக்கு முன் அதாவது நபித்துவத்தின் பதிமூன்றாம் ஆண்டு ரபியுல் அவ்வல் மாதம் நடைபெற்றது.

இந்த கருத்துகளில் முதல் மூன்று கருத்துகள் சரியல்ல. ஏனெனில், அன்னை கதீஜா (ரழி) நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ரமழான் மாதத்தில்தான் இறந்தார்கள். அன்னார் தொழுகை கடமையாக்கப்படுவதற்கு முன் மரணித்து விட்டார்கள். தொழுகை மிஃராஜில்தான் கடமையாக்கப்பட்டது. ஆகவே, மேற்கூறப்பட்ட முதல் மூன்று கருத்துகள் சரியானவையாக இருக்க முடியாது. அடுத்த மூன்று கருத்துகளில் எந்த கருத்து மிக ஏற்றமானது என்பதற்குரிய சரியான சான்றுகள் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அத்தியாயம் ‘இஸ்ரா’வின் கருத்துகளை நன்கு ஆய்வு செய்யும்போது ‘மிஃராஜ்’ சம்பவம் மக்கா வாழ்க்கையின் மிக இறுதியில்தான் நடைபெற்றது என்பது தெரியவருகிறது.

இந்நிகழ்ச்சியின் விளக்கங்களை ஹதீஸ் (நபிமொழி) கலையின் வல்லுனர்கள் விரிவாகக் கூறியிருப்பதை இங்கு நாம் சுருக்கமாகக் குறிப்பிடுகிறோம்:

இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்கு தனது உடலுடன் சென்றார்கள். இப்பயணம் மஸ்ஜிதுல் ஹராமில் தொடங்கி முதலில் பைத்துல் முகத்தஸ் சென்றார்கள். ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களை ‘புராக்’ என்னும் வாகனத்தில் அழைத்துச் சென்றார்கள். ‘புராக்’ எனும் வாகனத்தை மஸ்ஜிதுல் அக்ஸாவுடைய கதவின் வளையத்தில் கட்டிவிட்டு நபிமார்கள் அனைவருக்கும் இமாமாக தொழுகை நடத்தினார்கள்.

பிறகு அதே பைத்துல் முகத்தஸிலிருந்து முதல் வானத்திற்கு ஜிப்ரீல் அழைத்துச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்களுக்காக ஜிப்ரீல் கதவைத் திறக்கக்கோரவே அவர்களுக்காக கதவு  திறக்கப்பட்டது. அங்கு மனிதகுல தந்தை ஆதம் (அலை) அவர்களை சந்தித்தார்கள். ஆதம் (அலை) நபி (ஸல்) அவர்களுக்கு முகமன், ஸலாம் கூறி வரவேற்றார்கள். அல்லாஹ் ஆதமின் வலப்புறத்தில் நல்லோர்களின் உயிர்களை நபி (ஸல்) அவர்களுக்குக் காண்பித்தான். அவ்வாறே கெட்டவர்களின் உயிர்களை அவரது இடப்புறத்தில் காண்பித்தான். பிறகு இரண்டாவது வானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு யஹ்யா, ஈஸா (அலை) ஆகியோரை சந்தித்தார்கள். அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களின் ஸலாமுக்கு பதில் கூறி அவர்களை வரவேற்றார்கள்.

அங்கிருந்து மூன்றாவது வானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு யூஸுஃப் (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூறினார்கள். அவர்கள் ஸலாமுக்குப் பதில் கூறி, நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். பிறகு நான்காவது வானத்திற்குச் சென்று இத்ரீஸ் (அலை) அவர்களை சந்தித்தார்கள். நபி (ஸல்) ஸலாம் கூற அவர்கள் பதில் கூறி நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். பிறகு ஐந்தாவது வானத்திற்குச் சென்று ஹாரூன் (அலை) அவர்களை சந்தித்து ஸலாம் கூற அவர்களும் பதில் கூறி, நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். பிறகு ஆறாவது வானத்திற்குச் சென்று மூஸா (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூற அவர்கள் பதில் கூறி வரவேற்றார்கள். மூஸா (அலை) அவர்களைக் கடந்து நபி (ஸல்) சென்றபோது மூஸா (அலை) அழ ஆரம்பித்தார்கள். ”நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டதற்கு, ”எனக்குப் பிறகு அனுப்பப்பட்டவரின் சமுதாயத்தில் சொர்க்கம் செல்பவர்கள் எனது உம்மத்தில் சொர்க்கம் செல்பவர்களைவிட அதிகமாக இருப்பதால் நான் அழுகிறேன்” என்று கூறினார்கள். பிறகு ஏழாவது வானத்திற்கு சென்றார்கள். அங்கு இப்றாஹ்ீம் (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூற, பதில் கூறி நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். ஏழு வானங்களில் சந்தித்த அனைத்து இறைத்தூதர்களும் முஹ்ம்மது (ஸல்) அவர்களின் நபித்துவத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

பிறகு ‘ஸித்ரதுல் முன்தஹ்ா’விற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அதன் பழங்கள் ஹ்ஜர் நாட்டு பானைகளைப் போன்றும், அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போன்றும் இருந்தன. பிறகு ஸித்ரதுல் முன்தஹாவை தங்கத்தினாலான வண்ணத்துப் பூச்சிகளும், பிரகாசமும், பல நிறங்களும் சூழ்ந்துகொண்டவுடன் அது மாற்றமடைந்தது. அல்லாஹ்வின் படைப்பினங்களில் எவரும் அதன் அழகை வருணிக்க முடியாத அளவுக்கு அது இருந்தது. பிறகு அங்கிருந்து பைத்துல் மஃமூருக்கும்* அழைத்துச் செல்லப்பட்டார்கள். அதில் ஒவ்வொரு நாளும் 70,000 மலக்குகள் நுழைகிறார்கள். ஒருமுறை நுழைந்தவர்கள் மீண்டும் அங்கு வருவதில்லை.

பிறகு சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு முத்து வளையங்கள் இருந்தன. சுவர்க்கத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது. பிறகு அங்கிருந்து அதற்கு மேல் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு எழுதுகோள்களின் சப்தங்களைக் கேட்டார்கள்.

பிறகு அல்லாஹ்விடம் அழைத்து செல்லப்பட்டார்கள். (சேர்ந்த) இரு வில்களைப் போல் அல்லது அதைவிடச் சமீபமாக அல்லாஹ்வை அவர்கள் நெருங்கினார்கள். அல்லாஹ் தனது நபி (ஸல்) அவர்களுக்குப் பல விஷயங்களை அறிவித்துக் கொடுத்தான். ஐம்பது நேரத் தொழுகைகளை அவர்கள் மீது கடமையாக்கினான்.

அவர்கள் திரும்பி வரும்போது மூஸா (அலை) அவர்களை சந்தித்தார்கள். மூஸா (அலை)

”தங்கள் இறைவன் தங்களுக்கு என்ன கடமையாக்கினான்” என்று கேட்க நபி (ஸல்) ”ஐம்பது நேரத் தொழுகைகளைக் கடமையாக்கினான்” என்று கூறினார்கள். மூஸா (அலை) ”நீங்கள் திரும்பிச் சென்று உங்களது இறைவனிடம் இதைக் குறைக்கச் சொல்லுங்கள்” என்று கூறவே நபி (ஸல்) ஆலோசனைக் கேட்பதைப் போன்று ஜிப்ரீலைப் பார்த்தார்கள். ஜிப்ரீல் ”நீங்கள் விரும்பினால் அப்படியே செய்யுங்கள்” என்று கூறவே நபி (ஸல்) அதை ஏற்றுக்கொண்டு அல்லாஹ்விடம் திரும்பச் சென்றார்கள். அல்லாஹ் பத்து நேரத் தொழுகைகளைக் குறைத்தான்.

திரும்பும்போது மூஸா (அலை) அவர்களைச் சந்திக்கவே அவர்கள் மீண்டும் குறைத்து வர ஆலோசனை கூற, நபி (ஸல்), அல்லாஹ்விற்கும் மூஸாவுக்கும் இடையில் திரும்பத் திரும்ப சென்று வந்ததில் அல்லாஹ் ஐம்பதை ஐந்து நேரத் தொழுகைகளாக ஆக்கினான். மூஸா (ஸல்) மீண்டும் சென்று குறைத்து வரும்படி கூறவே, நபி (ஸல்) அவர்களுமோ ”நான் எனது இறைவனிடம் திரும்பச் சென்று இதற்கு மேல் குறைத்துக் கேட்பதற்கு வெட்கப்படுகிறேன். என்றாலும் நான் இதைக் கொண்டு மகிழ்ச்சி அடைகிறேன். முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டார்கள். அதற்குப் பின் நபி (ஸல்) சற்று தூரம் சென்று விடவே, அல்லாஹ் அவர்களை அழைத்து ”நீங்கள் எனது கடமையையும் ஏற்றுக்கொண்டீர்கள். எனது அடியார்களுக்கு இலகுவாகும் ஆக்கிவிட்டீர்கள்” என்று கூறினான். (ஜாதுல் மஆது)

மிஃராஜில் நபி (ஸல்) அல்லாஹ்வை பார்த்தார்களா? என்பதில் சில மாறுபட்ட கருத்துகள் உள்ளன என்று இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறியபிறகு. இது விஷயத்தில் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களின் கருத்துகளையும் மற்ற அறிஞர்களின் கருத்துகளையும் எடுத்துக் கூறியுள்ளார். இப்னுல் கய்யிம் (ரஹ்) இது விஷயத்தில் செய்திருக்கும் ஆய்வின் சுருக்கமாவது:

”நபி (ஸல்) அல்லாஹ்வை கண்கூடாக பார்க்கவில்லை. அவ்வாறு எந்த நபித்தோழரும் கூறவுமில்லை” என்பதாகும். ஆனால், இப்னு அப்பாஸ் (ரழி) மூலம் இரு அறிவிப்புகள் வந்துள்ளன. ஒன்று நபி (ஸல்) அல்லாஹ்வைப் பார்த்தார்கள். இரண்டாவது, நபி (ஸல்) அல்லாஹ்வை உள்ளத்தால் பார்த்தார்கள். எனவே, மற்ற நபித்தோழர்களின் முடிவுக்கும் இப்னு அப்பாஸின் கருத்துக்குமிடையில் முரண்பாடு இல்லை. ஏனெனில், அல்லாஹ்வை நபி (ஸல்) பார்த்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரழி) கூறுவது உள்ளத்தால் பார்த்ததையே குறிப்பிடுகிறார்கள். மற்ற நபித்தோழர்கள் அல்லாஹ்வை நபி (ஸல்) பார்க்கவில்லை என்று கூறுவது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை கண்ணால் பார்க்கவில்லை என்பதைக் குறிப்பிடுவதாகும்.

தொடர்ந்து இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்: அத்தியாயம் நஜ்மில் ‘இறங்கினார், பின்னர் நெருங்கினார்’ என்ற வசனத்தில் கூறப்பட்டுள்ள நெருக்கம் என்பது ஜிப்ரீல் நெருங்கியதையும் அவர் இறங்கியதையும் குறிக்கிறது. இவ்வாறுதான் ஆயிஷா, இப்னு மஸ்வூத் (ரழி) ஆகியோரும் கூறுகிறார்கள். குர்ஆனின் இவ்வசனத்தின் முன் பின் தொடரும் இக்கருத்தையே உறுதிபடுத்துகிறது. ‘மிஃராஜ்’ தொடர்பான ஹதீஸில் வந்துள்ள ‘தனா ஃபததல்லா’ என்பது அல்லாஹ் நெருங்கியதைக் குறிப்பிடுகிறது. அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பற்றி ‘நஜ்ம்’ அத்தியாயத்தில் குறிப்பிடப்படவில்லை. மேலும், ஸித்ரத்துல் முன்தஹ்ாவிற்கு அருகில் அவர் அவரைப் பார்த்தார் என்று ‘நஜ்ம்’ அத்தியாயத்தில் உள்ள வசனம் நபி (ஸல்) வானவர் ஜிப்ரயீலை அங்கு பார்த்ததையே குறிப்பிடுகின்றது. நபி (ஸல்) ஜிப்ரயீலை அவரது முழு உருவத்தில் இருமுறை பார்த்தார்கள். ஒன்று பூமியிலும், மற்றொன்று ஸித்ரத்துல் முன்தஹ்ாவிற்கு அருகிலுமாகும். (இத்துடன் இப்னுல் கய்யிமின் கூற்று முடிகிறது.) (ஜாதுல் மஆது. மேலும் விவரங்களுக்கு பார்க்க, புகாரி 1 : 50, 455, 456, 470, 471, 481, 545, 550. 2 : 284. முஸ்லிம் 1 : 91-96)

நபி (ஸல்) அவர்களின் இருதயம் இப்பயணத்திலும் பிளக்கப்பட்டது என்று சில அறிவிப்புகளில் வந்துள்ளது. மேலும், இப்பயணத்தில் நபி (ஸல்) பலவற்றைக் கண்டார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு பாலும், மதுவும் வழங்கப்பட்டது. நபி (ஸல்) பாலை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அதற்கு ”நீங்கள் இயற்கை நெறிக்கு வழிகாட்டப்பட்டீர்கள். நீங்கள் மதுவை எடுத்திருந்தால் உங்களது சமுதாயத்தினர் வழிகெட்டிருப்பார்கள்” என்று கூறப்பட்டது.

ஸித்ரத்துல் முன்தஹ்ாவின் வேரிஇருந்து நான்கு ஆறுகள் வெளியாகுவதைப் பார்த்தார்கள். இரண்டு ஆறுகள் வெளிரங்கமானது. இரண்டு ஆறுகள் உள்ரங்கமானது, வெளிரங்கமான இரண்டு ஆறுகள் நீல் (நைல்), ஃபுராத் ஆகும். இவ்விரண்டின் பிறப்பிடம் அங்கிருந்துதான் உருவாகிறது. மற்ற உள்ரங்கமான இரண்டு ஆறுகள் சுவர்க்கத்தில் உள்ள ஆறுகளாகும். நீல், ஃபுராத் நதிகளை நபி (ஸல்) பார்த்தது, ‘இவ்விரு பகுதிகளிலும் இஸ்லாம் பரவும்’ என்பதற்கு ஒரு முன்னறிவிப்பாக இருக்கலாம். (இரகசியங்களை அல்லாஹ்வே மிக அறிந்தவனாக இருக்கின்றான்.)

நரகத்தின் காவலாளியைப் பார்த்தார்கள். அவர் சிரிப்பதே இல்லை. முகமலர்ச்சியும் புன்முறுவல் என்பதும் அவரிடம் காணமுடியாத ஒன்று. அவரது பெயர் மாலிக். மேலும், செர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்தார்கள். அனாதைகளின் சொத்துகளை அநியாயமாகப் பயன்படுத்திக் கொண்டவர்களைப் பார்த்தார்கள். அவர்களுடைய உதடுகள் ஒட்டகங்களின் உதடுகளைப் போன்று இருந்தது. அம்மிக் குழவிகளைப் போன்ற நெருப்புக் கங்குகளை அவர்களது வாயில் தூக்கி எறியப்படவே அது அவர்களின் பின் வழியாக வெளியேறிக் கொண்டிருந்தது.

வட்டி வாங்கி வந்தவர்களையும் பார்த்தார்கள். அவர்களது வயிறு மிகப் பெரியதாக இருந்ததால் அவர்கள் தங்களது இடங்களிலிருந்து எந்தப் பக்கமும் திரும்ப சக்தியற்றவர்களாக இருந்தனர். ஃபிர்அவ்னின் குடும்பத்தாரை நரகத்தில் கொண்டு வரப்படும்போது அவர்கள் இவர்களைக் கடந்து செல்வார்கள். அப்போது அவர்கள் இவர்களை மிதித்தவர்களாகச் செல்வார்கள்.

விபசாரம் செய்தவர்களையும் பார்த்தார்கள். அவர்களுக்கு முன் கொழுத்த நல்ல இறைச்சித் துண்டும் இருந்தது. அதற்கருகில் துர்நாற்றம் வீசும் அருவெறுப்பான மெலிந்த இறைச்சித் துண்டும் இருந்தது. அவர்கள் இந்த துர்நாற்றம் வீசும் இறைச்சித் துண்டையே சாப்பிடுகின்றனர். நல்ல கொழுத்த இறைச்சித் துண்டை விட்டுவிடுகின்றனர்.

பிற ஆண்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டு, அதை தங்களது கணவன் மூலம் பெற்ற குழந்தை என்று கூறும் பெண்களையும் பார்த்தார்கள். இத்தகைய பெண்கள் மார்பகங்கள் கட்டப்பட்டு அதில் அவர்கள் தொங்கிக் கொண்டிருந்தார்கள்.

நபி (ஸல்) மிஃராஜ் போகும்போதும் வரும்போதும் மக்காவாசிகளின் வியாபாரக் கூட்டத்தை வழியில் பார்த்தார்கள். அவர்களின் ஓர் ஒட்டகம் தவறி இருந்தது. அவர்களுக்கு நபி (ஸல்) அதை காண்பித்துக் கொடுத்தார்கள். அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர்களின் மூடி வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் இருந்து தண்ணீரை அருந்திவிட்டு மீண்டும் அப்பாத்திரத்தை அவ்வாறே மூடி வைத்து விட்டார்கள். அன்று இரவு விண்வெளிப் பயணம் முடித்து திரும்பிய நபி (ஸல்), காலையில் மக்களுக்கு இப்பிரயானக் கூட்டத்தைப் பற்றிக் கூறியது நபி (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம் உண்மை என்பதற்குரிய மிகப்பெரிய ஆதாரமாக அமைந்தது.

(ஸஹீஹ்ுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்: காலையில் நபி (ஸல்) தங்களது கூட்டத்தாரிடம் அல்லாஹ் தனக்குக் காண்பித்த மாபெரும் அத்தாட்சிகளை அறிவித்தார்கள். இதைக் கேட்ட அம்மக்கள் முன்பைவிட அதிகமாக நபி (ஸல்) அவர்களுக்கு நோவினையும், தொந்தரவும் கொடுத்து அவர்களை ‘பெரும் பொய்யர்’ என்று வருணித்தனர். ”உங்களது பயணம் உண்மையானதாக இருந்தால் எங்களுக்கு பைத்துல் முகத்தஸின் அடையாளங்களைக் கூறுங்கள்” என்று கேட்டனர். அல்லாஹ் நபி (ஸல்) அவர்களின் கண்முன் பைத்துல் முகத்தஸைக் காண்பிக்கவே நபி (ஸல்) அவர்கள் அம்மக்கள் கேட்ட அடையாளங்களை அப்படியே கூறினார்கள். அதில் எதையும் அவர்களால் மறுக்க முடியவில்லை. நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் போகும் வழியில் சந்தித்த வியாபாரக் கூட்டத்தையும், அது எப்போது மக்காவிற்கு வரும் என்பதையும், அவர்களது காணாமல்போன ஒட்டகத்தைப் பற்றியும் மக்காவாசிகளுக்கு அறிவித்தார்கள். நபி (ஸல்) எவ்வாறு கூறினார்களோ அனைத்தும் அவ்வாறே இருந்தன. இருப்பினும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாத அவர்கள் நிராகரிக்கவே செய்தனர். சத்தியத்தை விட்டும் வெகுதூரம் விலகியே சென்றனர். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது)

மக்கள் இந்நிகழ்ச்சியை பொய்யென்று மறுத்துக் கூறியபோது அபூபக்ர் (ரழி) இந்நிகழ்ச்சியை உண்மையென்றும், சத்தியமென்றும் ஏற்றுக் கொண்டதால்தான் அவர்களை ‘சித்தீக்’ (வாய்மையாளர்) என்று அழைக்கப்பட்டது. (இப்னு ஹிஷாம்)

இந்த வானுலகப் பயணம் நடைபெற்றதற்குரிய மகத்தான காரணத்தைப் பற்றிக் கூறும்போது மிக சுருக்கமாக ”நாம் நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே” என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்:

(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் (முஹ்ம்மது (ஸல்) என்னும்) தன் அடியாரை(க் கஅபாவாகிய) சிறப்புற்ற பள்ற்யிலிருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான். (அவ்வாறு அழைத்துச் சென்ற) நாம் அதனைச் சூழவுள்ளவை சிறப்புற்று ஓங்க அபிவிருத்தி அடைய செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அங்கு அழைத்துச் சென்றோம்.) நிச்சயமாக (உங்களது இறைவன்) செவியுறுபவனாகவும், உற்று நோக்கியவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 17:1)

இது நபிமார்கள் விஷயத்தில் அல்லாஹ்வின் நியதியாகும். பல இறைத் தூதர்களுக்கு இவ்வாறு பல அத்தாட்சிகளை அல்லாஹ் காண்பித்திருக்கிறான்.

இப்றாஹீம் உறுதியான நம்பிக்கையுடையவர்களில் ஆவதற்காக வானங்களிலும், பூமியிலுமுள்ள (நம்முடைய) ஆட்சிகளை நாம் அவருக்கு இவ்வாறு காண்பித்து வந்தோம். (அல்குர்ஆன் 6 : 75)

நபி மூஸா (அலை) அவர்களைப் பற்றி,
(இவ்வாறு இன்னும்) நம்முடைய பெரிய அத்தாட்சிகளை உங்களுக்கு நாம் காண்பிப்போம். (அல்குர்ஆன் 20 : 23) என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

நபி இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் ஏன் அத்தாட்சிகளைக் காண்பித்தான் என்பதற்கு ”அவர் நம்மை உறுதிகொண்டவர்களில் ஒருவராக ஆகவேண்டும் என்பதற்காக”

என்ற காரணத்தைக் கூறுகிறான். இறைத் தூதர்களுக்கு இவ்வாறு பல அத்தாட்சிகளை அல்லாஹ் காண்பித்ததால் அவர்களது உள்ளத்திலிருந்த நம்பிக்கை மேன்மேலும் உறுதியடைந்தது. ஆகவே தான், அல்லாஹ்வின் பாதையில் பிறரால் சகித்துக்கொள்ள முடியாததை இறைத்தூதர்களால் சகித்துக்கொள்ள முடிந்தது. உலகத்தின் எவ்வளவு பெரிய சக்தியாயினும் சரி. அது கொசுவின் இறக்கைக்குச் சமமாகவே அவர்களிடம் இருந்தது. சிரமங்களும் துன்பங்களும் எவ்வளவுதான் அவர்களுக்கு ஏற்பட்டாலும், அதை அவர்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.

இப்பயணத்தில் மறைந்திருக்கும் ஞானங்களையும் இரகசியங்களையும் மார்க்க சட்டங்களின் இரகசியங்களை பற்றி விவரிக்கும் நூல்களில் காணலாம். எனினும், இப்பயணத்தில் பல உண்மைகளும் யதார்த்தங்களும் நிறைந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்:

இந்த வானுலக பயண சம்பவத்தைப் பற்றி மேற்கூறப்பட்ட அல்குர்ஆன் 17:1லில் மட்டும்தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

இந்த ஒரு வசனத்தைத் தொடர்ந்து வரும் வசனங்களில் யூதர்களின் கெட்ட செயல்கள் மற்றும் குற்றங்களைப் பற்றி அல்லாஹ் விரிவாகக் கூறுகிறான். அதன் இறுதியில் இந்தக் குர்ஆன்தான் மிகச் சரியான வழிகாட்டுகின்றது என்று கூறுகிறான். இவ்வசனங்களை ஓதுபவர் மிஃராஜ் சம்பவம், யூதர்களின் அநியாயங்கள், குர்ஆனைப் பற்றிய புகழ்ச்சி, இவற்றுக்கிடையில் என்ன தொடர்பிருக்கிறது என யோசிக்கலாம். ஆம்! உண்மையில் ஆழமான தொடர்பிருக்கிறது. அதன் விளக்கமாவது:

முஹம்மது (ஸல்) நபியாக அனுப்பப்படுவதற்கு முன் யூதர்கள்தான் மனித சமுதாயத்தை வழிநடத்தும் பொறுப்பை வகித்தனர். ஆனால், அவர்கள் செய்த அநியாயங்களின் காரணமாக அப்பொறுப்புக்கு தகுதியற்றவர்களாக ஆகிவிட்டனர்.

எனவே, அவர்களிடமிருந்து அந்தத் தகுதியை அல்லாஹ் தனது தூதருக்கு அதிவிரைவில் மாற்றப்போகின்றான். நபி இப்றாஹ்ீம் (அலை) அவர்களுடைய இஸ்லாமிய அழைப்புப் பணியின் இரு மையங்களான மக்காவையும், ஃபலஸ்தீனையும் நபி (ஸல்) அவர்களுக்கு ஒருங்கே அருள இருக்கின்றான்; மோசடி, குற்றம், வரம்பு மீறுதல் ஆகியவற்றையே தங்களது குலத்தொழிலாகக் கொண்ட சமூகத்திடமிருந்து ஆன்மிக வழிகாட்டலின் தலைமைத்துவத்தை பறித்து நன்மைகளையே நோக்கமாகக் கொண்ட சமுதாயத்திற்கு அல்லாஹ் அருள இருக்கின்றான் என்பதை நபி (ஸல்) அவர்களை மக்காவிஇருந்து பைத்துல் முகத்தஸிற்கு அழைத்துச் செல்லப்பட்ட இந்நிகழ்ச்சி உறுதி செய்தது.

மக்காவின் தெருக்களிலும் மலை ஓரங்களிலும் விரட்டியடிக்கப்பட்டு கண்ணியமிழந்து சுற்றி வரும் ஒருவருக்கு இந்தத் தலைமைத்துவம் எப்படிக் கிடைக்கும்? அதாவது, இஸ்லாமிய அழைப்புப் பணியின் முதல் கட்டமான இந்த சிரமமான காலம் வெகு விரைவில் முடிந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய காலக்கட்டம் தொடரப்போகிறது என்பதையே நபி (ஸல்) அவர்களின் இந்நிகழ்ச்சி குறிப்பிடுகிறது. இதையே பின்வரும் வசனங்களும் உறுதி செய்கின்றன. அவ்வசனங்களில் அல்லாஹ் இணைவைப்பவர்களை மிகத் தெளிவாகவும் கடுமையாகவும் எச்சரிக்கை செய்கிறான்.

ஓர் ஊரை (அவ்வூராரின் தீய செயலின் காரணமாக) நாம் அழித்துவிடக் கருதினால், அதில் சுகமாக வாழ்பவர்களை நாம் ஏவுகிறோம். அவர்கள் அதில் விஷமம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். பின்னர், அவர்கள் மீது நம்முடைய வாக்கு ஏற்பட்டு அவ்வூரை நாம் அடியோடு அழித்து விடுகிறோம்.

நூஹுக்குப் பின்னர் நாம் எத்தனையோ வகுப்பாரை (அவர்களின் அநியாயத்தின் காரணமாக) அழித்திருக்கிறோம். தன் அடியார்களின் பாவங்களை அறிந்து கொள்வதற்கு உங்களது இறைவனே போதுமானவன். (மற்றெவரின் உதவியும் தேவையில்லை.) அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 17 : 16, 17)

இது நாள்வரை நிராகரிப்போருக்கு அவகாசம் தரப்பட்டது. அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் செய்த அநீதிகளை அல்லாஹ் பொறுத்து வந்தான். ஆனால், இனியும் அவர்கள் இத்தகைய தவறுகளிலிருந்து விலகாவிட்டால் அல்லாஹ் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பான் என்ற எச்சரிக்கை மேற்கூறிய வசனத்திலிருந்து தெரியவருகின்றது.

இதைத் தொடர்ந்து இஸ்லாமிய சமூகத்திற்கு அடிப்படையான கொள்கைகள், ஒழுக்கங்கள், கலாச்சாரங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதையும் விரிவாக விளக்குகிறான். முஸ்லிம்களுக்கு அல்லாஹ் தனி நாட்டையும் அதிகாரத்தையும் கொடுக்கும்போது அவர்களது சமுதாயம் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட திட்டங்களையெல்லாம் அல்லாஹ் கூறுவது போன்றே இருக்கின்றது. மேலும், வெகு விரைவில் நபி (ஸல்) அவர்களுக்கு பாதுகாப்பான இடத்தையும், உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இஸ்லாமிய அழைப்புப் பணியை விரிவாக்குவதற்கு ஒரு மையத்தையும் அல்லாஹ் தர இருக்கிறான் என்பதை இந்த நிகழ்ச்சி சுட்டிக் காட்டுகிறது.

இந்தக் காரணங்களின் அடிப்படையில்தான் நபி (ஸல்) அவர்களின் வானுலகப் பயண நிகழ்ச்சி மக்கா வாழ்க்கையின் இறுதியில் நடைபெற்றது. இதுவே ஏற்றமான, சரியான சொல் என்று நாம் கூறுகிறோம். அகபாவில் நடைபெற்ற முதல் ஒப்பந்தத்திற்கு முன் அல்லது முதலாவது இரண்டாவது ஒப்பந்தங்களுக்கிடையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது

ஞாயிறு, ஏப்ரல் 03, 2016

மனிதன்,மனிதஉடல்,

மனித உடல் – அல்லாஹ்வின் அற்புதம்! - நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய சிறந்த தகவல்கள் - Puttalam Online

இறைவனின் படைப்புகள் ஒவ்வொன்றும் தனக்கெனத் தனித்தனிச் சிறப்புக் கூறுகளைக் கொண்டுள்ளன. ஊர்ந்து செல்லும் எறும்பு,தனது உடல் எடையைவிடச் சுமார் எட்டு மடங்கு சுமையைச் சுமக்கும். ஒட்டகம், முற்செடியையும் வலியின்றி உட்கொண்டுஜீரணிப்பதோடு ஓரிரு வாரம் நீரின்றி உயிர் வாழும்.ஆந்தை, கும்மிருட்டிலும் தடுமாற்றமின்றிப் பறக்கும். மனிதன் பெற்றிராத உடற்கூறுகளைக் கொண்டுள்ள கோடிக் கணக்கான ஜீவராசிகளை விடவும், “மனிதனை மிகச்சிறந்த படைப்பாகப் படைத்திருக்கிறோம்” என்று அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்.இறைவனைப் புரிந்துகொள்ள நம் உடலின் அற்புத அமைப்புகளை உணர்ந்தாலே போதும்.

மருந்துகளும் மருத்துவச் சோதனைகளுமின்றி நோய் எதிர்ப்புச் சக்தியைத் தானாகவே உருவாக்கிக் கொள்ளும் வல்லமை நம் உடலுக்கு உண்டு. இயற்கையாகவே பெற்றிருக்கும் நோய் எதிர்ப்புச்சக்தி மனித உடலுக்கு இல்லை என்றால் சாதாரண எறும்பு கடித்தால்கூட மிகுந்த வேதனைப்பட நேரிடலாம்!கண்டதற்கெல்லாம் கடையடைப்பு, போராட்டங்கள் நடத்தும் மனிதர்கள், தம் உடல்உறுப்புக்களிடமிருந்து கடமையுணர்வைக் கற்றுக் கொள்ள வேண்டும். ஐம்புலண்களும் உறங்கினாலும்ஜீரண,சுத்திகரிப்பு உறுப்புகள் ஓய்வதில்லை. கண்களுக்கு இணையாகத் தங்களுக்கும் ஓய்வு வேண்டும்என்று குடல் சுரப்பிகளும் போராட்டம் நடத்தினால் வாழ்நாளின் பாதியைக் கழிவறையிலேயே நாம் கழிக்க நேரிடும்!

சமீபத்தில் ”டாக்டர் சன்நியூஸ்” தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழகத்தின் பிரபலமான துறைசார்(Specialist) மருத்துவர்கள் நேயர்களின் கேள்விகளுக்குப் பதில் சொன்னார்கள். அழகு மற்றும்உறுப்புமாற்றுச் சிகிச்சைப் பற்றி ஒரு நேயர், சாலை விபத்தில் அவரது சகோதரரின் உயிர் உறுப்பில்அடிபட்டு ஒருபக்க விறை (Tactical) சேதமடைந்து தற்போது ஒற்றை விறையுடன் உயிர்வாழ்வதாகச் சொன்னார். அதற்குப் பதிலளித்த உடற்கூறு சிறப்பு மருத்துவர், “மனிதன் உயிர்வாழஅவசியமான இரட்டை எண்ணிக்கையில் படைக்கப்பட்ட உறுப்புகளில் ஏதேனும் ஒன்று மட்டும்ஒழுங்காக இயங்கினாலே போதும்” என்றார்.

இறைவன் தன் திருமறையில்,

إِنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ

“ நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியேபடைத்திருக்கிறோம்” (54:49) என்று கூறுகிறான்.

மனிதன் உயிர்வாழ அவசியமான உறுப்புகள் ஒன்று மட்டும் போதும் என்றாலும், உபரிஉள்ளுறுப்புகளுடன் படைத்திருக்கும் இறைவனின் அன்பு அளவற்றதுதானே! மேற்கண்ட பதிலைக்கேட்டதும் ”அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்” என அல்லாஹ்வை புகழ்வதிலுள்ள நியாயத்தை உள்மனம் உணர்ந்தது. இருசிறுநீரகங்களும் பழுது அடைந்ததால் மாற்றுச் சிகிச்சைக்குமுன்/பின் எத்தனை வகையான சோதனைகள் மற்றும் சிரமங்கள்! சிறுநீரகங்களில் ஒன்றை உயிர்காக்கும்உபரியாகப் படைத்து உடலை இயங்க வைத்துக் கொண்டிருக்கும் படைப்பாளர்களிளெல்லாம் மேலானபடைப்பாளன் அல்லாஹ்வின் எல்லையில்லா அன்பை உணரலாம்.

மேலும் இறைவன் தன் திருமறையில்,

وَصَوَّرَكُمْ فَأَحْسَنَ صُوَرَكُمْ وَإِلَيْهِ الْمَصِيرُ

“… அன்றியும் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களையும் அழகாக்கினான்;அவனிடம்தாம் (யாவருக்கும்) மீளுதல் இருக்கிறது“ (064:003) என்கிறான்.

எல்லா மனிதர்களையுமே அழகாகப் படைத்திருப்பதாக படைத்தவனே வாக்குமூலம்கொடுத்திருக்கும்போது, மனிதர்களாகிய நாம்தான் சிலரை அழகானவர்கள் என்றும், வேறு சிலரை அழகற்றவர்கள் என்றும் பிரித்துக் கொண்டுள்ளோம். இந்த மனப்பான்மையால் தேகம் கருத்தவர்,”என்னை கருப்பாகப் படைத்த இறைவன் எப்படி எல்லோருக்கும் அன்புடையவனாக இருக்க முடியும்?” என்று கேட்கக் கூடும் . இன்றைய உலகில் செயற்கை மேக்அப் மற்றும் ஆடைகளே மனிதர்களின் புறஅழகை நிர்ணயிக்கின்றன. வெளிர்நிற தேகத்தை அழகின் அளவு கோளாகக் கருதும் மாயபிம்பம் நம்மில் பலரிடம் பதிக்கப்பட்டு விட்டது. குறிப்பாக ஆசிய நாட்டவரில் இந்தியர்களிடம்இந்த மனப்பான்மை மிகுந்துள்ளது.

மருத்துவ ரீதியில் ஆரோக்கியமான உடலே அழகான உடலாகும். இரத்தத்தில் Melaninஎண்ணிக்கையே தேகநிற வேறுபாட்டிற்குக் காரணம். பொதுவாகச் சூரிய ஒளி மிகுந்துள்ளப்பிரதேசங்களில் தான் கருந் தேகத்தவர்கள் அதிகம் இருப்பர். சூரியனிலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களிலிருந்து (UV Rays) உடம்பைக் காப்பதோடு தோல் புற்று (Skin Cancer) ஏற்படாமல்Melanin காக்கிறது! நியாயமாகப் பார்த்தால் இந்தியா போன்ற சூரிய வெப்பமுள்ள நாடுகளில் வாழும்கருந்தேகத்தவர்கள் சந்தோஷப்பட வேண்டும்!

لَقَدْ خَلَقْنَا الإنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ

“(திடமாக), நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்” என்ற (095:004)திருக்குர்ஆன் வசனங்கள் எத்தனை உண்மை!

இயற்கையாகவே மனித உடல் பெற்றிருக்கும் சில சிறப்புக் கூறுகளை அறிந்தால் மகத்தான இறைவனின் மறைந்திருக்கும் வல்லமைகளை உணரலாம். கட்டுரையின் நீளம் கருதி, சுருக்கமாகச் சில உடலியல்அற்புதங்களை மட்டும் பார்ப்போம்:

உடலமைப்பு:

மனித உடல் பலகோடி உயிரணுக்களின் தொகுப்பால் ஆனது. ஒரு சதுர அங்குல மனிதத்தோலில் 19,000,000 உயிரணுக்கள் உள்ளன. ஒவ்வொரு மணிநேரமும் சுமார் ஒரு பில்லியன் உயிரணுக்கள்தோன்றி மறைகின்றன.ஒவ்வொரு மனித உடலும் சராசரியாக ஒரு நாயைக் கொல்லும் அளவுக்குசல்ஃபர், 900 பென்சில்களை உருவாக்கப் போதுமான கார்பன்,பொம்பைத் துப்பாக்கியை எரிக்கும்அளவுக்கு பொட்டாசியம், ஏழு பார் சோப்பு செய்யும் அளவுக்கு கொழுப்பு, 2,200 தீக்குச்சிகள்செய்யப் போதுமான பாஸ்பரஸ், பத்து குடங்களை (Gallons) நிரப்பும் அளவுக்குத் தண்ணீர்ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நமது உடலிலுள்ள கனிமங்களைக் கொண்டு நமக்குத் தேவையானஅனைத்து வகை மருந்துகளையும் உற்பத்தி செய்து கொள்ளமுடியும்.

இரத்த ஓட்டம்:

மனித உடலில் ஒவ்வொரு விநாடியும் சுமார் பத்து இலட்சம் சிவப்பணுக்குள் செத்து மடிகின்றன.உடம்பு முழுவதும் இரத்த ஓட்டத்தை எடுத்துச் செல்லும் நரம்புகளின் நீளம் ஏறத்தாழ ஒரு இலட்சம்மைல்கள்! ஒவ்வொரு நாளும் சிறுநீரகங்கள் வழியாக சுமார் 400 காலன் அளவுக்கு இரத்தம் சுத்தம்செய்யப்படுகிறது!

எலும்புகள்:

பிறகும்போது சுமார் 300 எலும்புகளுடன் பிறக்கும் மனிதன் முழுவளார்ச்சியடைந்த மனிதனாகும்போது206 எலும்புகளே இருக்கும்! நாளடைவில் ஒன்றோடொன்று இணைவதால் சுமார் 94 எலும்புகள்குறைகின்றன!

மூளை:

வாலிப வயதை அடைந்ததும் சுமார் 35 வயது முதல் நாளொன்றுக்கு ஏழாயிரம் உயிரணுக்கள்மூளையில் சாகின்றன. அவற்றிக்குப் பதிலாக வேறு உயிரணுக்கள் தோன்றுவதில்லை. (வயதாக வயதாகமனிதனின் ஞாபக சக்தி குறைவதற்கு இதுவும் காரணமோ?). மனிதன் சுவாசிக்கும் ஆக்ஸிஜனில்ஐந்தில் ஒருபங்கு மூளைக்குச் செல்கிறது!

குடல்:

இரு வாரங்களுக்கு ஒருமுறை குடற்சுவர் தானகவே புதுப்பிக்கப்படுகின்றது. இல்லாவிட்டால் குடல்தன்னைத்தானே ஜீரணித்துக் கொள்ளும்!

ரேகைகள்:

மனிதனை வேறுபடுத்தி அறிய, அவனது கைரேகை உதவுகிறது. அதேபோல் சருமம், நாக்குஆகியவையும் தனித்தனி ரேகைகளைக் கொண்டுள்ளன. இவை ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியானஅமைப்பைக் கொண்டுள்ளது!

இத்தனை அற்புதங்களுடன் மனித உடலைப் படைத்திருக்கும் அல்லாஹ் நிச்சயமாகபடைப்பாளார்களிலெல்லாம் மிக அழகியப் படைப்பாளன். அவனை அளவற்ற அருளாளன் நிகரற்றஅன்புடையோன் என்றால் மிகையில்லை

அடுத்து நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகளைப் பற்றி பார்ப்போம்

குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.

நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.

நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.

நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும்.

தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.

பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம்,

ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும்.

நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.

நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.

நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.

நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.

நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.

முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.

மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.

ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது.

இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.

மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.

ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.

நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது.

நமது மூளை 80% நீரால் ஆனது.

நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.

நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடிதான்.

மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.

பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.

மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.

மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்

கண்கள் 31 நிமிடங்கள்

மூளை 10 நிமிடங்கள்

கால்கள் 4 மணி நேரம்

தசைகள் 5 நாட்கள்

இதயம் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே …

மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று பொய் விடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்

இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம். உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே. பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறை கண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.

உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள். விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.

நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும் காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன

நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சொப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன.

(நபியே! அவர்களிடம்;) “வானங்களுக்கும் பூமிக்கும் இறைவன் யார்?” என்று நீர் கேளும். அவன் அல்லாஹ்தான் என்று நீரே கூறும்: “(அவ்வாறிருக்க) நீங்கள் அவனையன்றி (வேறு தெய்வங்களை) இரட்சகர்களாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்கள் தங்களுக்கே யாதொரு நன்மையும் தீமையும் செய்து கொள்ளச் சக்தியற்றவர்களாய் இருக்கின்றனர்”; மேலும், கூறும்: “குருடனும் பார்வை உடையவனும் சமமாவார்களா? அல்லது இருள்களும், ஒளியும் சமமாகுமா? அல்லது அவர்கள் இணையாக்கிக் கொண்டிருக்கும் (தெய்வங்கள்) அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதையும் படைத்திருக்கின்றனவா? (அப்படியிருந்தால் இது யார்) படைப்பு என்று அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்!” (அவ்வாறில்லையே எனவே நபியே! நீர் உறுதியாகக்) கூறும்: “அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைக்கிறவன்; அவன் ஒருவனே; (அனைத்தையும்) அடக்கி ஆள்பவன்” என்று….அல் குர் ஆன் – 13:16

manbaiee ....மன்பயீ: மனிதன், விந்துத்துளி,மனித உடல்,

மனித உடல் – அல்லாஹ்வின் அற்புதம்! - நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய சிறந்த தகவல்கள் இறைவனின் படைப்புகள் ஒவ்வொன்றும் தனக்கெனத் தனித்தனிச் சிறப்புக் கூறுகளைக் கொண்டுள்ளன. ஊர்ந்து செல்லும் எறும்பு,தனது உடல் எடையைவிடச் சுமார் எட்டு மடங்கு சுமையைச் சுமக்கும். ஒட்டகம், முற்செடியையும் வலியின்றி உட்கொண்டுஜீரணிப்பதோடு ஓரிரு வாரம் நீரின்றி உயிர் வாழும்.ஆந்தை, கும்மிருட்டிலும் தடுமாற்றமின்றிப் பறக்கும். மனிதன் பெற்றிராத உடற்கூறுகளைக் கொண்டுள்ள கோடிக் கணக்கான ஜீவராசிகளை விடவும், “மனிதனை மிகச்சிறந்த படைப்பாகப் படைத்திருக்கிறோம்” என்று அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்.இறைவனைப் புரிந்துகொள்ள நம் உடலின் அற்புத அமைப்புகளை உணர்ந்தாலே போதும். மருந்துகளும் மருத்துவச் சோதனைகளுமின்றி நோய் எதிர்ப்புச் சக்தியைத் தானாகவே உருவாக்கிக் கொள்ளும் வல்லமை நம் உடலுக்கு உண்டு. இயற்கையாகவே பெற்றிருக்கும் நோய் எதிர்ப்புச்சக்தி மனித உடலுக்கு இல்லை என்றால் சாதாரண எறும்பு கடித்தால்கூட மிகுந்த வேதனைப்பட நேரிடலாம்!கண்டதற்கெல்லாம் கடையடைப்பு, போராட்டங்கள் நடத்தும் மனிதர்கள், தம் உடல்உறுப்புக்களிடமிருந்து கடமையுணர்வைக் கற்றுக் கொள்ள வேண்டும். ஐம்புலண்களும் உறங்கினாலும்ஜீரண,சுத்திகரிப்பு உறுப்புகள் ஓய்வதில்லை. கண்களுக்கு இணையாகத் தங்களுக்கும் ஓய்வு வேண்டும்என்று குடல் சுரப்பிகளும் போராட்டம் நடத்தினால் வாழ்நாளின் பாதியைக் கழிவறையிலேயே நாம் கழிக்க நேரிடும்! சமீபத்தில் ”டாக்டர் சன்நியூஸ்” தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழகத்தின் பிரபலமான துறைசார்(Specialist) மருத்துவர்கள் நேயர்களின் கேள்விகளுக்குப் பதில் சொன்னார்கள். அழகு மற்றும்உறுப்புமாற்றுச் சிகிச்சைப் பற்றி ஒரு நேயர், சாலை விபத்தில் அவரது சகோதரரின் உயிர் உறுப்பில்அடிபட்டு ஒருபக்க விறை (Tactical) சேதமடைந்து தற்போது ஒற்றை விறையுடன் உயிர்வாழ்வதாகச் சொன்னார். அதற்குப் பதிலளித்த உடற்கூறு சிறப்பு மருத்துவர், “மனிதன் உயிர்வாழஅவசியமான இரட்டை எண்ணிக்கையில் படைக்கப்பட்ட உறுப்புகளில் ஏதேனும் ஒன்று மட்டும்ஒழுங்காக இயங்கினாலே போதும்” என்றார். இறைவன் தன் திருமறையில், إِنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ “ நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியேபடைத்திருக்கிறோம்” (54:49) என்று கூறுகிறான். மனிதன் உயிர்வாழ அவசியமான உறுப்புகள் ஒன்று மட்டும் போதும் என்றாலும், உபரிஉள்ளுறுப்புகளுடன் படைத்திருக்கும் இறைவனின் அன்பு அளவற்றதுதானே! மேற்கண்ட பதிலைக்கேட்டதும் ”அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்” என அல்லாஹ்வை புகழ்வதிலுள்ள நியாயத்தை உள்மனம் உணர்ந்தது. இருசிறுநீரகங்களும் பழுது அடைந்ததால் மாற்றுச் சிகிச்சைக்குமுன்/பின் எத்தனை வகையான சோதனைகள் மற்றும் சிரமங்கள்! சிறுநீரகங்களில் ஒன்றை உயிர்காக்கும்உபரியாகப் படைத்து உடலை இயங்க வைத்துக் கொண்டிருக்கும் படைப்பாளர்களிளெல்லாம் மேலானபடைப்பாளன் அல்லாஹ்வின் எல்லையில்லா அன்பை உணரலாம். மேலும் இறைவன் தன் திருமறையில், وَصَوَّرَكُمْ فَأَحْسَنَ صُوَرَكُمْ وَإِلَيْهِ الْمَصِيرُ “… அன்றியும் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களையும் அழகாக்கினான்;அவனிடம்தாம் (யாவருக்கும்) மீளுதல் இருக்கிறது“ (064:003) என்கிறான். எல்லா மனிதர்களையுமே அழகாகப் படைத்திருப்பதாக படைத்தவனே வாக்குமூலம்கொடுத்திருக்கும்போது, மனிதர்களாகிய நாம்தான் சிலரை அழகானவர்கள் என்றும், வேறு சிலரை அழகற்றவர்கள் என்றும் பிரித்துக் கொண்டுள்ளோம். இந்த மனப்பான்மையால் தேகம் கருத்தவர்,”என்னை கருப்பாகப் படைத்த இறைவன் எப்படி எல்லோருக்கும் அன்புடையவனாக இருக்க முடியும்?” என்று கேட்கக் கூடும் . இன்றைய உலகில் செயற்கை மேக்அப் மற்றும் ஆடைகளே மனிதர்களின் புறஅழகை நிர்ணயிக்கின்றன. வெளிர்நிற தேகத்தை அழகின் அளவு கோளாகக் கருதும் மாயபிம்பம் நம்மில் பலரிடம் பதிக்கப்பட்டு விட்டது. குறிப்பாக ஆசிய நாட்டவரில் இந்தியர்களிடம்இந்த மனப்பான்மை மிகுந்துள்ளது. மருத்துவ ரீதியில் ஆரோக்கியமான உடலே அழகான உடலாகும். இரத்தத்தில் Melaninஎண்ணிக்கையே தேகநிற வேறுபாட்டிற்குக் காரணம். பொதுவாகச் சூரிய ஒளி மிகுந்துள்ளப்பிரதேசங்களில் தான் கருந் தேகத்தவர்கள் அதிகம் இருப்பர். சூரியனிலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களிலிருந்து (UV Rays) உடம்பைக் காப்பதோடு தோல் புற்று (Skin Cancer) ஏற்படாமல்Melanin காக்கிறது! நியாயமாகப் பார்த்தால் இந்தியா போன்ற சூரிய வெப்பமுள்ள நாடுகளில் வாழும்கருந்தேகத்தவர்கள் சந்தோஷப்பட வேண்டும்! لَقَدْ خَلَقْنَا الإنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ “(திடமாக), நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்” என்ற (095:004)திருக்குர்ஆன் வசனங்கள் எத்தனை உண்மை! இயற்கையாகவே மனித உடல் பெற்றிருக்கும் சில சிறப்புக் கூறுகளை அறிந்தால் மகத்தான இறைவனின் மறைந்திருக்கும் வல்லமைகளை உணரலாம். கட்டுரையின் நீளம் கருதி, சுருக்கமாகச் சில உடலியல்அற்புதங்களை மட்டும் பார்ப்போம்: உடலமைப்பு: மனித உடல் பலகோடி உயிரணுக்களின் தொகுப்பால் ஆனது. ஒரு சதுர அங்குல மனிதத்தோலில் 19,000,000 உயிரணுக்கள் உள்ளன. ஒவ்வொரு மணிநேரமும் சுமார் ஒரு பில்லியன் உயிரணுக்கள்தோன்றி மறைகின்றன.ஒவ்வொரு மனித உடலும் சராசரியாக ஒரு நாயைக் கொல்லும் அளவுக்குசல்ஃபர், 900 பென்சில்களை உருவாக்கப் போதுமான கார்பன்,பொம்பைத் துப்பாக்கியை எரிக்கும்அளவுக்கு பொட்டாசியம், ஏழு பார் சோப்பு செய்யும் அளவுக்கு கொழுப்பு, 2,200 தீக்குச்சிகள்செய்யப் போதுமான பாஸ்பரஸ், பத்து குடங்களை (Gallons) நிரப்பும் அளவுக்குத் தண்ணீர்ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நமது உடலிலுள்ள கனிமங்களைக் கொண்டு நமக்குத் தேவையானஅனைத்து வகை மருந்துகளையும் உற்பத்தி செய்து கொள்ளமுடியும். இரத்த ஓட்டம்: மனித உடலில் ஒவ்வொரு விநாடியும் சுமார் பத்து இலட்சம் சிவப்பணுக்குள் செத்து மடிகின்றன.உடம்பு முழுவதும் இரத்த ஓட்டத்தை எடுத்துச் செல்லும் நரம்புகளின் நீளம் ஏறத்தாழ ஒரு இலட்சம்மைல்கள்! ஒவ்வொரு நாளும் சிறுநீரகங்கள் வழியாக சுமார் 400 காலன் அளவுக்கு இரத்தம் சுத்தம்செய்யப்படுகிறது! எலும்புகள்: பிறகும்போது சுமார் 300 எலும்புகளுடன் பிறக்கும் மனிதன் முழுவளார்ச்சியடைந்த மனிதனாகும்போது206 எலும்புகளே இருக்கும்! நாளடைவில் ஒன்றோடொன்று இணைவதால் சுமார் 94 எலும்புகள்குறைகின்றன! மூளை: வாலிப வயதை அடைந்ததும் சுமார் 35 வயது முதல் நாளொன்றுக்கு ஏழாயிரம் உயிரணுக்கள்மூளையில் சாகின்றன. அவற்றிக்குப் பதிலாக வேறு உயிரணுக்கள் தோன்றுவதில்லை. (வயதாக வயதாகமனிதனின் ஞாபக சக்தி குறைவதற்கு இதுவும் காரணமோ?). மனிதன் சுவாசிக்கும் ஆக்ஸிஜனில்ஐந்தில் ஒருபங்கு மூளைக்குச் செல்கிறது! குடல்: இரு வாரங்களுக்கு ஒருமுறை குடற்சுவர் தானகவே புதுப்பிக்கப்படுகின்றது. இல்லாவிட்டால் குடல்தன்னைத்தானே ஜீரணித்துக் கொள்ளும்! ரேகைகள்: மனிதனை வேறுபடுத்தி அறிய, அவனது கைரேகை உதவுகிறது. அதேபோல் சருமம், நாக்குஆகியவையும் தனித்தனி ரேகைகளைக் கொண்டுள்ளன. இவை ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியானஅமைப்பைக் கொண்டுள்ளது! இத்தனை அற்புதங்களுடன் மனித உடலைப் படைத்திருக்கும் அல்லாஹ் நிச்சயமாகபடைப்பாளார்களிலெல்லாம் மிக அழகியப் படைப்பாளன். அவனை அளவற்ற அருளாளன் நிகரற்றஅன்புடையோன் என்றால் மிகையில்லை அடுத்து நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகளைப் பற்றி பார்ப்போம் குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும். நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது. நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது. நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது. பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும். நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன. நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம். நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம். நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு. நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு. முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது. மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது. ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது. இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது. மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன. ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன. நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது. நமது மூளை 80% நீரால் ஆனது. நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும். நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடிதான். மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும். பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது. மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது. மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம் கண்கள் 31 நிமிடங்கள் மூளை 10 நிமிடங்கள் கால்கள் 4 மணி நேரம் தசைகள் 5 நாட்கள் இதயம் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே … மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று பொய் விடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும் இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும். ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம். உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே. பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறை கண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம். உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள். விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன. நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும் காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சொப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன. (நபியே! அவர்களிடம்;) “வானங்களுக்கும் பூமிக்கும் இறைவன் யார்?” என்று நீர் கேளும். அவன் அல்லாஹ்தான் என்று நீரே கூறும்: “(அவ்வாறிருக்க) நீங்கள் அவனையன்றி (வேறு தெய்வங்களை) இரட்சகர்களாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்கள் தங்களுக்கே யாதொரு நன்மையும் தீமையும் செய்து கொள்ளச் சக்தியற்றவர்களாய் இருக்கின்றனர்”; மேலும், கூறும்: “குருடனும் பார்வை உடையவனும் சமமாவார்களா? அல்லது இருள்களும், ஒளியும் சமமாகுமா? அல்லது அவர்கள் இணையாக்கிக் கொண்டிருக்கும் (தெய்வங்கள்) அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதையும் படைத்திருக்கின்றனவா? (அப்படியிருந்தால் இது யார்) படைப்பு என்று அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்!” (அவ்வாறில்லையே எனவே நபியே! நீர் உறுதியாகக்) கூறும்: “அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைக்கிறவன்; அவன் ஒருவனே; (அனைத்தையும்) அடக்கி ஆள்பவன்” என்று….அல் குர் ஆன் – 13:16

சனி, ஏப்ரல் 02, 2016

நபி,பச்சை நிற குப்பா,

கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் புனிதமான ரவ்ழாவும் அதன் பச்சை நிற குப்பா கட்டிடமும்"¶

♣ இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு :-

மஸ்ஜிதுன்னபவி (மதீனா பள்ளி)யில் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ரவ்ளாவின் மேல் கட்டப்பட்டு இருக்கும் பச்சை நிறத்திலுள்ள குப்பாவை உடைத்து அகற்ற வேண்டும். அந்த பச்சை நிற குப்பா கட்டிடதுக்கும் இஸ்லாம் மார்க்கத்திற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என வழிகெட்ட வஹ்ஹாபிகள் குர்ஆன், ஹதீஸ்களை ஆய்வு செய்யாமல் சில நபிமொழிகளை மறைத்து இருட்டடிப்பு செய்து கிருக்கு பிடித்தவர்களாக வழிகேட்டில் சென்று கொண்டு இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் பச்சை நிற குப்பா கட்டிடத்தின் முக்கியத்துவம் பற்றி நபிமொழியை ஆதாரமாக காட்டி உலகம் முழுவதும் இன்று நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ரவ்ழாவுக்கு மேல் இருக்கும் பச்சை நிற குப்பா மாபெரும் ஒரு அடையாளச் சின்னமாக, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்பை வெளிப்படுத்தக் கூடிய, முஹப்பத்துக்குறியதாக முஸ்லிம்களுக்கு மத்தியில் அல்லாஹ் ஆக்கிவிட்டான். அல்ஹம்துலில்லாஹ்!

அன்றிலிருந்து இன்று வரையுள்ள மஸ்ஜிதுன்னபவியில் உள்ள பச்சை நிற குப்பா பார்ப்பதற்கு அழகாகவும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கண்ணியத்தையும், மரியாதையையும் உரக்க எடுத்துச் சொல்லக் கூடியதாகவும் இருந்து கொண்டிருக்கிறது அது மட்டுமல்லாமல் பச்சை நிற குப்பா பெருமான் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களோடு இணைக்கப்பட்டு பல நூற்றாண்டுகளை கடந்துவிட்டது இதற்கு பிறகு பச்சை குப்பாவை பற்றி குறைமதியில் கூட பார்க்க கூடாது. காரணம் இன்று உலகளவில் கண்ணியத்தின் சவாலாக இருக்கின்றது.

♣ நபிமார்கள், ஷூஹதாக்கள், வலிமார்கள் அடங்கியுள்ள புனிதமான இடங்களில் குப்பா கட்டுவதற்க்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

இமாம் காளி இயாள் (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் மற்றும்முள்ள மார்க்க அறிஞர்கள் பெரும்பாண்மையோர் '' நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் புனிதமிகு உடலை தாங்கி நிற்கும் புண்ணியமிகு கப்ரு உலகில் உள்ள எல்லா இடங்களைக் காட்டிலும் சிறந்தது என தீர்ப்பளித்துள்ளனர்.
(நூல்: இத்திஹாப் பாகம் 4 : பக்கம் 416,417)

♦சில நல்லோர்கள், உலமாக்கள்,இமாம்கள் மற்றும் 'நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்ரு ஷரீப், கஃபா, பைத்துல் முகத்தஸைக்காட்டிலும் சிறந்தது எனத் தீர்ப்பளித்து விசுவாசத்தின் விளைநிலமான நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை கண்ணியம் செய்வதே ஈமானைத் தக்கவைத்து கொள்ளும் உபாயம் என உபதேசம் செய்துள்ளார்ள். இவர்களில் முக்கியமானவர்கள் ஜர்கஸீ, அபதீ (ரஹ்மதுல்லஹி அலைஹிமா) போன்ற பேரரிஞர்களாவர்.
(நூல்: வஃபாவுல் வஃபா 1: 83)

♦நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்ரு ஷரீப் மிகவும் தரைமட்டமில்லாமலும் மிக உயரமில்லாமலும் கப்ரின் மேல்பகுதி அழகான சிவந்த பொடிக்கற்கலால் பதிக்கப்பட்டிருந்தது. ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் இருந்த அறையிலே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அடக்கப்பட்டார்கள். எனவே ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் அந்த அறையின் குறுக்கே மண்ணினால் ஒரு மதிலை எழுப்பி,நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்ரு ஷரீஃப் ஒரு புறமிருக்க ஆயிஷா (ரலியல்லாஹுஅன்ஹா) மறுபுறம் இருந்து கொண்டார்கள். அடிக்கடி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை ஜியாரத்துக்கு வருவதற்கு அதே மதிலில் ஒரு வாசலை வைத்துக் கொண்டார்கள். அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் வீட்டின் மேற்கூறை பழுதுப்பட்டு இருந்ததால் காலப்போக்கில் இந்த மண்மதில் மழையால் கரைந்துவிட்டது.

இதன் பின் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தங்களது ஆட்சிக்காலத்தில் (ஹிஜ்ரி 23 வரை) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்ரு ஷரீஃபை சுற்றி முக்கோணவடிவில் அழகிய கருங்கற்கலால் மதில் எழுப்பினார்கள். எனினும் ஜியாரத் செய்பவர்களுக்கு தெறியும் அளவே மதில்களின் உயரம் இருந்தன.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்ரின் பரக்கத்தை நாடி கப்ருக்கு அருகில் இருக்கும் மண்ணை எடுச்துச் செல்ல ஆரம்பித்தனர். இவ்வாறு மண்ணை எல்லோரும் எடுத்தால் நாளடைவில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்ரை சுற்றி பெரும் பள்ளம் ஏற்பட்டு, புனிதமிகு ரவ்ளாவுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் எனப்பயந்த ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ரவ்ளாவைச் சுற்றி சிறிது உயரமாக மதில் எழுப்பும்படி சொல்லி அவ்வாறே மதில்கள் கட்டப்பட்டன. இம்மதில்களில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்ரு தெரியும்படி துவாரம் வைக்கப்பட்டது. இந்த ஜன்னல் போன்ற துவாரம் வழியாகவும் மக்கள் பரக்கத்தை வேண்டி மண்ணை எடுக்க ஆரம்பித்தார்கள். இதனால் ஜன்னல் போன்ற துவாரமும் அடைக்கப்பட்டது.
(நூல் :வஃபாவுல் வஃபா 2:544)

♦ பின்னர், அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஆட்சி காலத்தில் மேற்கண்ட மதில்கள் மிகவும் உயரமாக இல்லாததால் அவற்றை நல்ல உயரமாக கட்டினார். அபூபக்கர் (ரழியல்லாஹு அன்ஹு), உமர் (ரழியல்லாஹு அன்ஹு) ஆகியோரின் புனிதமிகு கப்ருகளையும் அதைச்சுற்றி சுவர்கள் எழுப்பும் விஷயத்திலும் எடுத்துக் கொண்டார்கள் என அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்ரு இருந்த இடத்தை சுற்றி முதன் முதலில் சுவர் எழுப்பியவர் உமர் (ரலியல்லாஹு அன்ஹு)அவர்கள் ஆகும். இந்த சுவர்கள் உயரம் குறைவாய் இருந்ததால் அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலியல்லாஹு அன்ஹு) அம்மதில்கைள உயரமாகக் கட்டினார்கள்.
(நூல் : ஐனீ 4:252, வஃபாவுல் வஃபா 2: 544)

♦ உமையாக்கள் ஆட்சிகாலத்தில் உமர் பின் அப்துல் அஜீஜ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் மதீனாவின் கவர்னராக இருந்தார்கள். அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் புனிதமிகு கப்ரு ஷரீஃபை சுற்றியிருந்து மதில்கள் பலமில்லாமல் போகவே அம்மதில்களிலிருந்து சற்று இடைவெளிவிட்டு, சுற்றுச்சுவர் கட்ட ஏற்பாடானது. இவ்வாறு புணருதாரம் செய்ய, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மனைவிமார்களின் வீடுகளை வாங்கி விரிவாக்கம் நடந்தது. இவ்வாறு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மினிதமிகு ரவ்ளா ஷரீஃபின் வெளிச் சுவர்கள் கட்டப்பட்டபின்பு உட்சுவர்கள் இடிக்கப்பட்டன. அப்போது இதன் அதிர்வு தாங்காமல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், அபூபக்கர் (ரழியல்லாஹு அன்ஹு), உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அடக்கப்பட்டிருந்த கப்ருகளின் சுற்றுப்புறத்தின் ஒருபகுதி இடிந்து சரிந்து விட்டது.  இதேபோல் கப்ரின் ஒருபுறமிருந்து மண்திட்டும் சரிந்ததால் கப்ரிலிருந்து முழங்கால் முதல் பாதம் வரை ஒருவரின் கால்பகுதி வெளியே தெரிந்தது. இது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கால்தான் என பதறித்துடித்து ஆச்சரியப்பட்டு துக்கத்துடன் அழுது கூக்குறலிட ஆரம்பித்தனர். கூட்டமும் வெகுவாக கூட ஆரம்பித்தது. அப்போது அங்கிருந்த உர்வா (ரலியல்லாஹு அன்ஹு ) அவர்கள் இது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கால் அல்ல. இது நிச்சயமாக உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் கால்தான் எனத் தெரிவித்து மக்களின் துயரை துடைத்தார். இந்நிகழ்ச்சி உமர் பின் அப்துல் அஜீஜ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் முன்னிலையிலே நடந்தது. மீண்டும் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் புனிதமான கால் கப்ரில் உள்புறம் வைக்கப்பட்டு கப்ருகள் கட்டப்பட்டன.(நூல்கள்:ஐனீ 4:251, பத்ஹுல் பாரி 3:165, ஹயாதுஸ் ஸஹாபா 22-23, தஹ்தீபுத் தஹ்தீப் 7: 475-477)

♦ அப்துல் மலிக்கின் (ஆட்சிக்) காலத்தின்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அடக்கம் செய்யப்பட்ட அறையின் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. அதைப் புனர் நிர்மாணம் செய்வதில் மக்கள் ஈடுபட்டபோது ஒரு பாதம் வெளியில் தெரிந்தது. உடனே மக்கள் பதறிப் போய் அது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பாதமாக இருக்குமோ என நினைத்தனர். இது பற்றித் தெரிந்தவர் யாருமில்லாதிருந்தபோது நான் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பாதமே இல்லை;மாறாக, இது உமர்(ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் பாதகமாகும் என்றேன்" என உர்வா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்.
(நூல் புகாரி:1390)

♦ அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களால் கட்டப்பட்ட மதில்கள் பலமானதாக நிர்மாணிக்கபட்டு,அதன் மேல் தளம் எழுப்பப்பட்டது. கப்ரின் மேற்பகுதி அழகான வேலைப்பாடுகள் உள்ள மரக்கட்டைகள்,பலகைகளைக் கொண்டு வேயப்பட்டது. அதன் பின் கலீஃபா ஹாரூன் ரஷீதின் காலத்தில், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் புனிதமிகு கப்ரின் மேல் மரத்தால் கட்டப்பட்ட பகுதி திறக்கப்பட்டபோது அதில் 193வேலைப்பாடு மிக்க மரக்கட்டைகள் இருந்தன. அவை 70 கட்டைகள், உத்திரங்கள் முறிந்து சிதிலமடைந்திருந்தன. அவைகளுக்கு பதிலாக 70 புதிய கட்டைகள் மாற்றப்பட்டன. புனிதமிகு கப்ரின் அறையின் மதில்கள் அழகான பாலிஷ் செய்யப்பட்ட கற்கலால் கட்டப்பட்டன. பின்னர் ஹிஜ்ரி 232-ல் கலீஃபா முத்தவக்கில் காலத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் புனிதமிகு கப்ரை சுற்றியுள்ள மதில்களின் வெளிப்புறமும், உட்புறமும் வெள்ளை பளிங்கி கற்கள் பதிக்கப்பட்டு மிக நேர்த்தியான வேலைப்பாடுகளால். "அல்ஹுஜரதுஷ் ஷரீஃபா'' அழகுப் படுத்தப்பட்டது.

பின்னர் கலீஃபா முக்தபீ பில்லாஹ் அவர்களின் ஆட்சிகாலத்தில் ஹிஜ்ரி 548-ல் மேலும் பளிங்கிக் கற்கள் பதிக்கப்பட்டு சிதிலம் அடைந்தப் பகுதியை நீக்கப்பட்டு,செப்பனிடப்பட்டு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் புனிதமிகு கப்ரு, அபூபக்கர் (ரழியல்லாஹு அன்ஹு), உமர் (ரழியல்லாஹு அன்ஹு) ஆகியோர்கள் கப்ருகள் இருந்த அறை, அதை ஒட்டியுள்ள பகுதிகள் அனைத்தும் புணர்தானம் செய்யப்பட்டு பளிங்கிக் கற்கள் பதிக்கப்படடுள்ளன.

பின்னர் ஹிஜ்ரி 654-ல் வருடம் ரமலான் மாதம் முதல் நாள் அன்று,நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அடங்கியிருக்கும் மஸ்ஜிதுன் நபவியின் மனாராவில் விளக்கு ஏற்றுவதற்காக சென்ற ஒருவர் தன்னுடன் கொண்டு சென்ற தீவட்டியை மறந்து மனாராவிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டார். அதன் தீ மனாராவில் சுற்றி வடிந்து காலாகாலம் தரையிலும் பரவியிருந்த எண்ணை வடுக்களில் பற்றி தீ பரவியது. புற்றி எறிந்த தீ,பள்ளிவாசல் மேல் தளத்தை இரையாக்கி, எங்கும் பரவிய தீ,மஸ்ஜிதுன் நபவியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு கரித்து துவசம் செய்தது. இத்தீ விபத்தில்,நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது புனிதமிகு கப்ர், அபூபக்கர்-உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) ஆகியோர்கள் கப்ர், உதுமான் (ரலியல்லாஹு அன்ஹு ) ஓதிய குர்ஆன் ஆகியை மட்டும் எரியவில்லை.

ஹிஜ்ரி 650-ஆம் ஆண்டு,எகிப்து மன்னர் நூருத்தீன் ஜன்கீ,யமன் நாட்டு மன்னர் ஷம்சுத்தீன் யூசுஃப் ஆகியோர் கட்டுமான பொருட்களை அனுப்பி ரவ்ளா, மற்றும் மஸ்ஜிதுந் நபவியின் கட்டுமானப் பணியை தொய்வில்லாது நடைபெறும்படி செய்தனர். பின்னர் ஹிஜ்ரி 658-ல் எகிப்தின் மன்னர் ருக்னுத்தீன் பைப்ரஸ் அவர்கள், ரவ்ளா மற்றும் மஸ்ஜிதுன் நபவியின் விடுபட்ட பகுதியின் கட்டுமானத்திற்காக பொருட்கள், 53 கட்டப் பொறியாளர்களையும் ஜமாலுத்தீன் ஸாலிஹ் என்பவரின் தலைமையில் மதீனாவிற்கு அனுப்பி அவைகைள அழகுடன் நிர்மாணிக்கப்பட்டு புதுப்பொழிவுடன் ஆக்கினார்கள்.

ஹிஜ்ரி 706-ல் ரவ்ளா ஷரீப் மற்றும் மஸ்ஜிதுன் நபவியின் மேற்கு, கிழக்குப் பகுதியில் மாடிகள் மேற்கூறைகள் கட்டப்பட்டு உறுதியாக்கப்பட்டது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், அபூபக்கர்-உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) ஆகியோர்களின் கப்ருகளையும் அழகு படுத்துவதிலும் மிக, மிக அக்கறை கொண்ட சுல்தான் கலாவூனும், ருக்னுத்தீன் பைப்ரஸ்,சுல்தான் காய்த்தபாதயீ, மற்றும் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி சரித்திரத்தில் இடம் பிடித்து நபியவர்களின் உள்ளத்திலும் இடம் பிடித்துள்ளனர்.

ஹிஜ்ரி 731-ல், மலிக்குல் அஷ்ரப் பர்ஷ்பாய் என்பவர், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பள்ளிவாசலை மேலும் ஒரு நீண்ட பெரிய மாடியை கட்டினார். இதன் பின்னர், ஹிஜ்ரி 777-ல் சுல்தான் கலாவூன் என்பவர் மஸ்ஜிதுன் நபவியை விரிவு படுத்தி, ரவ்ளா ஷரீபுக்கு செல்ல தனிப்பாதை அமைத்தார். ஹிஜ்ரி 779-ல் சுல்தான் காய்தபாய் என்பவர் பொருப்பேற்று,பள்ளிவாசலின் கிழக்குப் புறச் சுவர் இடிக்கப்பட்டு, மேலும் 27 முழங்கள் அகலப்படுத்தப்பட்டு சுவர் எழுப்பப்பட்டது.

பின்னர் ஹிஜ்ரி 781-ல், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ரவ்ளா புணர் நிர்மாணப் பணிக்கு ஹாஜா ஷம்ஜீ என்பவர் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவரின் மேற்பார்வையில் ரவ்ளா ஷரீபின் மேல்தளமும் அதனுடன் சேர்ந்து நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் புனிதமிகு கப்ரின் மேல் எழுப்பப்பட்ட குப்பாவைச் சுற்றியுள்ள பகுதியும் உயர்த்தப்பட்டு, மின்பரின் கிழக்குபுறமுள்ள மேற்பகுதியில் முறிந்தும், உடைந்தும் போன கட்டைகள்,உத்திரங்கள் பலவற்றை மாற்றி அமைக்கப்பட்டது.

ஹிஜ்ரி 853-ல் சுல்தான் லாஹிர் ஜக்மகின் காலத்தில் மஸ்ஜிதுன் நபவியின் மாடியின் தளத்தில், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அபூபக்கர்-உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) ஆகியோர்களின் புனிதமிகு கப்ருகள் இருக்கும் கட்டிடத்தின் ரவ்ளா ஷரீபின் மேல்தளத்தில் பெரும் கீரல் (விரிசல்) ஏற்பட்டது. மிகுந்த பொருட் செலவில் அக்கறையுடன் அதை செப்பனிட்டு ரவ்ளா புதுப்பிக்கப்பட்டது.

♦ பின்னர், ரவ்ளா ஷரீப் விரிவாக்கப்பட்டு மூன்று வாயில்கள் உள்ள அறையாக கட்டப்பட்டது. அதன் சுற்றுப் புறங்களில் பித்தளைக் கம்பிகளால் ஆன ஜன்னல்கள் வைக்கப்பட்டன. புனிதமிகு கப்ருகளை நெருங்கி மரியாதை இல்லாமல் நடந்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக கப்ருகளைச் சுற்றி வேலி போன்ற இரும்புத் தடுப்பு அமைக்கப்பட்டது. இந்த தடுப்புக்கு பித்தளை முலாம் பூசப்பட்டது. ஜும்ஆ நாளன்று கூட்டம் அதிகமாக இருப்பதால் ரவ்ளா ஷரீபின் பணியாளர்கள் மட்டும் தடுப்புக்கு உள்ளே நின்று தொழ அனுமதிக்கப்பட்டனர். இந்த அறையே; ஹுஜ்ரத் ஷரீபா (கண்ணியமான அறை) என்று அழைக்கப்பட்டது. ஹுஜ்ரத் முபாரக்காவில் நுழைவதற்கும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், அபூபக்கர்-உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அகியோர்கள் அடக்கமாகியுள்ள அறைகளின் வாயில்களில் ஒரு வாயில் மட்டும் திறந்தே இருக்கும்.
(நூல் : வஃபாவுல் வஃபா 2:616)

♦ ஹஜ் உடைய காலங்களில் மட்டும் மக்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பதால்,அக்காலத்தில் மட்டும் ரவ்ளாவின் அறை பூட்டப்பட்டு வந்தது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அறைக்கும் இரும்புத் தடுப்புக்கும் இடைப்பட்ட பகுதி ஹஜ் காலங்களில் பெண்கள் தங்கள் குழந்தையுடன் தங்கும் இடமாகும். சில சமயம் பிள்ளைகள் அப்பகுதியில் அசுத்தம் செய்துவிடும். எனவே,ஹிஜ்ரி 732-ல் சுல்தான் மலிக்கு நாஸிர் ஹஜ்ஜுக்கு வந்து, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் இடத்திற்கு வந்து இவையெல்லாம் பார்த்து, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் புனிதமிகு அறைக்கும் இரும்புத் தடுப்புக்கும் இடைப்பட்ட பகுதியை மட்டும் ஹஜ்ஜுக் காலங்களில் மட்டும் பூட்டிவிட உத்தரவு இட்டார். அதன்பின் ஹஜ்ஜுக்காலங்களில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை ஜியாரத் செய்ய அந்த அறையில் நுழைவதால் பெரும் சிரமம் ஏற்பட்டு கட்டுப்பாடு இல்லாமல் போனது. எனவே, புனித அறையின் எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டன. இவ்வாறு ஹுஜ்ரத் ஷரீபாவை அடைக்கப்பட்டதால் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ஜியாரத் மட்டும் தடைபடவில்லை.

♦ பச்சை குப்பாவை இடிக்க முயற்சி வீண்இன்றைக்கு இருக்க கூடிய சவூதி அரசாங்கம் சுல்த்தான் அப்துல் அஜீஸ் பின் அப்துர்ரஹ்மான் பின் சவூத் என்பவர் முதல் முதலில் 1902ல் ரியாத்தை கைப்பற்றினார் பிறகு 1924ல் மக்காவை கைப்பற்றினார் பிறகு 1925ல் மதீனாவை கைப்பற்றினார் 1936ல் முழு அரபு தேசத்தையும் கைப்பற்றி1939ல் சவூதி அரேபியா என்று பெயர் வைக்கப்பட்டது . 1925 ல் வாஹ்ஹாபியர்களால் மதீனாவின் அனைத்து அடையாளங்களும் அழிக்கப்பட்டன. ரவ்ழாவையும் அதன் அடையாளங்களையும் அழிக்க முற்ப்பட்டனர் அப்போது உலகமெங்கும் உலமாக்களிடத்தில் பெரும் கிளர்ச்சி ஏற்ப்பட்டது.அப்போது இறைவனின் உதவியால் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கப்று ஷரீபினை உடைக்கச் சென்றவர்கள் அழிக்கப்பட்டு மகத்தான வெற்றியே கொண்டு மதீனா நகரமே வஹ்ஹாபிகளிடம் இருந்து பாதுகாக்கப்பட்டது

♣ மதீனாவின் பச்சை நிற குப்பாவில் ஜன்னல் இன்று இருக்க கூடிய டூமில் கூட காணலாம்

ஒரு தடவை மதீனாவில் கடும் பஞ்சம் நிலவியது அப்பொழுது அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடத்தில் மக்களெல்லாம் முறையிட்டார்கள். அதற்கு அன்னையவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்ரின் பக்கம் முன்னோக்குங்கள் அவர்களின் கப்ரி(ருக்கும் அறையி)லிருந்து துவாரத்தை வானத்திற்கும் நபியவர்களின் கப்ருக்கும் மத்தியில் உண்டாக்குங்கள். அதேபோல் செய்யப்பட்டது மழை கொட்டோ கொட்டென்று கொட்டி விட்டது தாவரங்கள் முழைக்க ஆரம்பித்தன கால்நடைகள் அனைத்தும் பெருத்துவிட்டன தேவைக்கு அதிகமாகவே பொழிந்தது அந்த ஆண்டிற்குعام الفتن  என்று பெயர் வைக்க பட்டது.(நூல் : தாரமியூ 5950)

♦இதிலிருந்து நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்ரின் மேலே முகடு அன்றே இருந்திருக்கிறது இன்றைக்கும் இந்த ஹதீஸின் அடிப்படையில் பச்சை குப்பவிலே ஜன்னல் வைத்து மூடப்பட்டிருக்கிறது அப்படி பஞ்சம் வந்தால் குப்பவை உடைக்காமல் ஜன்னலை மட்டும் நாயகத்தின் பச்சைகுப்பாவை இடிக்க வேண்டும் என்று வஹ்ஹாபிகள் உளறிக்கொண்டிருக்கும் நேரத்தில் மார்க்கத்தில் இதன் விஷயத்தில் இமாம்கள் என்ன வழிமுறையை கையாண்டுள்ளார்கள்.....நல்லோர்களுக்கு குப்பா கட்டுகின்ற விஷயத்தில் என்னக் கூறியுள்ளார்கள் என்பதை எடுத்தரைத்ததோடு கடந்த கால வரலாற்றைக் கூறி நபிகளாரின் கண்ணியம் காக்ககப்பட வேண்டும் என்று தக்கதருணத்தில் பிரஸ்தாபித்ததற்கு அல்லாஹ் உங்களுக்கு நற்கூலிகளை வழங்குவானாக. ஆகவே மாமதீனாவின் சிறப்புக்கள், பச்சை நிற குப்பாவின் முக்கியத்துவம் பற்றி பேசி மக்களின் உணர்வை தூண்டி நாயகத்தின் மீதும் அவர்களின் புனித உடலை தாங்கி கொண்டிருக்கும் புனித ரவ்லாவின் மீதும் அந்த புனிதமான மண்ணின் மீதும் பரிபூரண முஹப்பைத்தை ஏற்படுத்துவோமாக! ஆமீன் ஆமீன்

பிரபல்யமான பதிவுகள்