நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

சனி, மார்ச் 31, 2018

TNTJ நிர்வாகிகள் பாலியல் பழியில் வீழ்வது ஏன்?



தவ்ஹீத் நிர்வாகிகள் பாலியல் பழியில் வீழ்வது ஏன்?
இன்று ஏராளமான இயக்கங்கள், ஜமாத்துகள், அமைப்புகள் அல்லாஹ்வின் பெயரால் முஸ்லிம்களை தங்கள் இயக்கத்தை நோக்கி அழைக்கின்றனர்.
--------------------------
இந்த இயக்கங்களில், தவ்ஹீது பேரில் மக்களை அழைக்கும் ஒரு இயக்கத்தின் தலைமை முன்னோடி மெளலவிகள் மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.
அந்த நபர்களும் இயக்கத்தால் வெளியேற்றப்படுகின்றனர். இறுதியில் இயக்க நிறுவனர் மீதே குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
இது ஒரு தொடர் கதையாக நிகழக்காரணம் என்ன?
--------------------------
வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டு உண்மையா பொய்யா என்பது பற்றி ஆராய்வது நமது நோக்கம் அல்ல. ஒரு தனிப்பட்ட தவ்ஹீது இயக்கத்தின் நிர்வாகிகள் தொடர்ந்து பாலியல் பழியில் வீழ்வது ஏன்? அதற்கான காரணம் என்ன என்று ஆராய்வதே நமது கட்டுரையின் நோக்கம்.
இன்று இந்த இயக்க மெளலவிமார்கள், பாலியல் குற்றச்சாட்டு என்ற படுகுழியில் ஏன் தள்ளப்படுகிறார்கள் என்று சிந்திக்கும்போது ஒரு உண்மை தெளிவாகிறது.
--------------------------
இஸ்லாமிய வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட இயக்கங்கள் இஸ்லாம் கூறும் குர்ஆன், ஹதிஸ் படி செயல்படாமல், வழிகெட்ட கவாரிஜ்கள் வழியில் செல்வதே இதற்கு ஒரே காரணம்.
--------------------------
ஒன்றுபட்ட நபித்தோழர்களிடையே பிரிவினை ஏற்படுத்தி “அஹ்லே தவ்ஹீத்” என்ற தனி ஜமாத்தை முதன் முதலில் உண்டாக்கியவர்கள் கவாரிஜ்கள். இவர்கள் வழியில் சென்று தவ்ஹீத் பெயரில் தனி இயக்கம், தனிப்பள்ளி கட்டியவர் ததஜ மெளலவி. பி. ஜெய்னுல் ஆபிதீன்.
இஸ்லாம் ஆண்களுக்கு ஜிகாத் என்னும் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதை கடமையாக்கியுள்ளது.
அதேசமயம் ஹஜ், செய்வதே பெண்களின் ஜிகாத் என்று தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் வழிகெட்ட கவாரிஜ்கள், ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஜிகாத் கடமையாகும் என்று கூறி பெண்களையும் களத்துக்கு கொண்டு வந்து நிறுத்தினர்.
இவர்களே முதன் முதலில் உதுமான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கிலாபத் ஆட்சிக்கு எதிராக ஆண், பெண்களை திரட்டி போராட்டம் நடத்தியவர்கள்.
--------------------------
இந்த வழிகெட்ட கவாரிஜ்களின் வழிமுறையை பின்பற்றியே தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தும் ஒவ்வொரு ஆர்ப்பாட்டம், போராட்டம், மாநாடு என்று அனைத்து இயக்க நிகழ்வுகளுக்கும் ஆணையும், பெண்ணையும் ஒன்றாக களத்தில் இறக்கி விட்டு ஃபித்னாவுக்கு விதை போட்டனர்.
--------------------------
அடுத்து இவர்கள் பெண்களுக்கு செய்த மாபெரும் துரோகம், இயல்பாக வெட்க உணர்வும் நாணமும் கொண்ட பெண்களின் தங்கள் முகத்தை மூடும் சுய உரிமையை பறித்து, ஆண்களின் மத்தியில் அவர்களது அழகை ஹலாலாக காட்சிப்படுத்தியது. பெண்கள் முகத்தை மறைப்பது ஹராம் என்று தீர்ப்பளித்து ஃபித்னாவின் வாசலைத் திறந்து விட்டனர்.
--------------------------
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சமுதாயத்தில் பல சமுக பெண்கள் கலந்திருந்தனர். குறைஷி என்னும் உயர் கோத்திரப் பெண்கள், நாகரிகம் தெரியாத காட்டரபி பெண்கள், கிராமப்புற பெண்கள், அடிமைப்பெண்கள், அன்றாட கூலி வேலை செய்யும் ஏழைப் பெண்கள்., இந்த அத்துணை பெண்களும் அவரவர்களின் வெட்க உணர்வுக்குத் தக்கவாறு ஹிசாபை பேணினர்.
--------------------------
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைப் போன்ற கண்ணியமான பெண்கள் பிற ஆடவர்களுக்கு முன் முகத்திரை அணிந்திருந்தனர். எந்தளவு என்றால் இஹ்ராம் நிலையில் முகத்தை மறைக்க கூடாத நிலையிலும் தங்கள் முகத்தை மறைத்தே இருந்தனர் என்று கீழ் வரும் ஹதீஸ் மூலம் அறியலாம்.
--------------------------
பெண்களாகிய நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இஹ்ராம் அணிந்த நிலையில் இருந்தபோது, ஒட்டகத்தில் பயணிப்பவர்கள் எங்களை கடந்து சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் எங்கள் அருகில் வரும்போது தலையில் உள்ள முக்காட்டை முகத்தின் மீது போட்டுக் கொள்வோம். அவர்கள் எங்களை கடந்து சென்று விட்டால் முக்காட்டை அகற்றிக்கொள்வோம். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, அபூ தாவூத் 1562)
--------------------------
இதுபோல் இஹ்ராம் நிலையில் கஃபத்துல்லாஹ்வில் தவாபு செய்யும் போது, எதிர் வரும் ஆண்களின் பார்வையிலிருந்து தவிர்க்க தங்கள் கையிலிருக்கும் விசிறியை கொண்டும் முகத்தை மறைத்துக்கொள்வார்கள் என்ற ஹதீசும் உள்ளது.
அதே சமயம் கருப்பின பணிப்பெண்கள், அடிமைப்பெண்கள் கிராமப்புற வாசிகள், போன்றவர்கள் முகத்தை மறைக்காமல் திறந்த நிலையிலேயும் அன்றைய சமுகத்தில் இருந்துள்ளனர்.
--------------------------
"நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கி இருங்கள்; ஜாஹிலியா காலத்தில் தங்கள் அழகை வெளிக்காட்டியது போன்று நீங்கள் வெளிக்காட்டவேண்டாம்." (அல்குர்ஆன் 33 : 33)
--------------------------
தபரூஜ் என்ற சொல்லுக்கு சுற்றிதிரிதல் என்பது பொருளல்ல.. அழகு, அலங்காரத்தை வெளிக்காட்டுவது என்பதாகும்.
--------------------------
பெண்களின் முகம்தான் அழகின் முதல் படி, முக அழகைப் பார்த்தே பெண்களை ஆண்கள் விரும்புகிறார்கள்.
ஆகவே தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், பெண்கள் நான்கு விடயத்திற்காக மண முடிக்கப்படுகிறார்கள்; அவற்றுள் ஒன்று அழகுக்காக.
--------------------------
ஆண்களை ஈர்க்கும் அழகை வசீகரத்தை அல்லாஹ் பெண்களின் முகத்தில் வைத்துள்ளான். அதை தனது நெறி நூலிலும் எடுத்துக் காட்டுகிறான்.
--------------------------
(நபியே!) பிற பெண்களின் அழகு உம்மை எத்துனை ஈர்த்தாலும் உம் மனைவியற்கு பகரமாக அவர்களை மாற்றிக்கொள்வதற்கு உமக்கு அனுமதியில்லை. (அல்குர்ஆன் 33 : 52)
--------------------------
இந்த வசனத்தில் பெண்களின் அழகு ஆண்களை ஈர்க்கும் என்று படைத்த இறைவன் திட்டவட்டமாக கூறுகிறான். ஒரு பெண் பேரழகியாக இருந்தாலும், அவள் தான் முகத்தை மூடிக்கொண்டால் எவரையும் ஈர்க்கமுடியாது. ஒரு பெண் முகத்தை மறைத்துக்கொண்டால் அழகியும், அழகற்றவளும், குமரியும், கிழவியும் ஒன்றுதான்.
--------------------------
பெண்கள் முகத்தை முடிக்கொள்வதால் சமுகத்தில் தவறான நடவடிக்கையில் சில பெண்கள் இறங்குகிறார்களாம். அதற்காக முகத்தை கட்டாயம் திறக்க வேண்டுமாம்!
ஒரு சமுதாயத்தில் பத்து சதவீத பெண்கள் குற்றவாளிகளாகவே எல்லா காலத்திலும் இருப்பார்கள். இவர்கள் செய்யும் கள்ளத்தனம் முகத்தை மூடினாலும் நடக்கும்,
திறந்தாலும் நடக்கும். இந்த பத்து சதம், ஈமானில் சோரம்போன பெண்களை காரணம் காட்டி தொண்ணுறு சதவீத பெண்களின் வெட்கத்தன்மைக்கு விடை கொடுத்து, கண்ணியத்தை காற்றில் விடும் கட்டாய முகம் திறக்கும் கட்டை பஞ்சாயத்து தீர்ப்பு நியாயமா?
--------------------------
முஸ்லிம் பெண்கள் முகத்தை கட்டாயம் மறைக்கத்தான் வேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை. ஆனால் கவாரிஜ் வழி கேடர்களின் நடைமுறையை பின்பற்றும் தவ்ஹீது இயக்கதாரிகள், “பெண்கள் முகத்தை மூடுவது கூடாத காரியம், ஹராமான செயல் முகத்தை திறந்துதான் வைக்கவேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டனர்.
ஆண்கள் தலை திறந்தும், பெண்கள் முகம் திறந்தும் இருக்கவேண்டும் என்பது இவர்களின் எழுதப்படாத சட்டம்.
--------------------------
ஆணும் பெண்ணும் போராட்ட களத்தில் ஒன்று கலப்பதற்காக, முகம் பார்த்து ஒருவரை ஒருவர் அறிந்து இப்லிஸின் ஃபித்னா தூண்டிளில் சிக்க வழி ஏற்படுத்துகிறார்கள்.
--------------------------
இவர்கள் நடத்தும் பெண் மதராசாக்கள், அநாதை இல்லங்கள், புதிதாக இஸ்லாத்தை தழுவிய பெண்கள் பள்ளி போன்றவற்றின் பொறுப்புதாரி ஆண் நிர்வாகிகள், அங்குள்ள பெண் உஸ்தாது, மாணவிகளிடம் சரளமாக கலந்து பழகும் அளவிற்கு சுதந்திரம் இருப்பதால் பாலியல் குற்றச்சாட்டுப் பஞ்சுகள் எரிந்து புகையாக வருவதை பார்க்க முடிகிறது.
--------------------------
அடுத்து இவர்களின் ஃபித்னா, மர்கஸ் பள்ளிகளில் அரங்கேறியது. பெண்களும் வந்து தொழும் அளவிற்கு விஷேசமான இடவசதி செய்து கொடுத்துள்ளார்கள்.
பெண்களை பள்ளிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இடுப்பளவு துப்பட்டா துணியை தடுப்பாக குறுக்கே கட்டி, இருவரும் ஒருவரையொருவர் பார்ப்பதற்கு வசதி செய்துள்ளார்கள்.
--------------------------
பெண்களைப் பார்த்தபடியே பயான் செய்ய, இளவட்ட இமாமுக்கு ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து உணர்ச்சிகரமான பயான் உரையை உறுதி செய்துள்ளார்கள்..
--------------------------
ஸஹீகான ஹதீஸ்களை தூக்கி எறிந்துவிட்டு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாக்களை மர்கஸ்ஸில் உயிர்ப்பிக்கிறார்களாம்.
பெண்கள் பள்ளியில் தொழ அனுமதி கேட்டால் அனுமதியுங்கள்; தடுக்காதீர்கள். என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளது உண்மைதான். அதேசமயம், உம்மு ஹுமைத் ரளியல்லாஹு அன்ஹா என்னும் சஹாபிய பெண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் பள்ளியில் தொழ விரும்பியபோது,
--------------------------
"நீ என்னுடன் தொழ விரும்புகிறாய் என்பதை நான் அறிவேன்; எனினும் உமது அறையில் (பைத்தீ) தொழுவது உமது வீட்டில் (ஹுஜ்ரத்கீ) தொழுவதை விடச் சிறந்ததாகும். மேலும் உமது வீட்டில் தொழுவது நீ வசிக்கும் பகுதியில் (தாரீகி) தொழுவதை விடவும்; நீ வசிக்கும் பகுதியில் தொழுவது உமது கோத்திரப் பள்ளியில் தொழுவதை விடவும், உமது கோத்திரப்பள்ளியில் தொழுவது எனது பள்ளியில் (மஸ்ஜிதுன்னபவி) தொழுவதைவிடவும் சிறந்தது" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர்.
--------------------------
எனவே அப்பெண்மணி தன் உள் வீட்டின் மூலையில் தொழுகையிடத்தை அமைத்து அதிலேயே தனது மரணம் வரை தொழுது வந்தார்கள். (Al banna, -Fath.vol.5,2:1337)
--------------------------
"பெண் வீட்டின் முற்றத்தில் தொழுவதை விட வீட்டினுள் தொழுவது சிறந்தது. வீட்டினுள் அவள் தொழுவதை விட வீட்டின் உள் அறையில் தொழுவது சிறந்ததாகும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர். (அறிவிப்பவர்: –இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு, அபூ தாவூத்.483)
--------------------------
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள், “இன்று பெண்கள் உருவாக்கியுள்ள (அலங்கார உத்திகள் போன்று) வற்றை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பார்த்திருப்பார்களேயானால் பனு இஸ்ராயீல் சமுதாயப் பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லக் கூடாதென தடுக்கப் பட்டதைப் போன்று இவர்களையும் தடுத்திருப்பார்கள். (முஸ்லிம் 76)
--------------------------
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவியரில் ஒருவர் (ஆத்திகா) எனும் ஒருவர் ஸுபுஹ், இஷா ஆகிய தொழுகைகளைப் பள்ளியில் ஜமாத்தில் தொழச் செல்வர் அவரிடம் (உங்கள் கணவர்) உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், இவ்வாறு செல்வதை வெறுக்கிறார்கள்; ரோஷப்படுகிறார்கள் என்று தாங்கள் அறிந்திருந்தும் நீங்கள் ஏன் பள்ளிக்கு செல்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது,
அதற்கு அவர், (என்னை பள்ளிக்கு செல்ல வேண்டாமென்று கூறவிடாமல்) “அவரை எது தடுக்கிறது?” என்று கேட்க, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “பெண்கள் பள்ளிக்கு செல்வதை தடுக்காதீர்கள்!” என்று கூறியதே தடுக்கிறது என்று பதில் வந்தது. (இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, புஹாரி 900)
--------------------------
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆட்சியில் பெண்கள் பள்ளியில் ஜமாஅத்தாக தொழுவதை ஆரம்பத்தில் அனுமதித்தாலும் பிற்பாடு அதை தடை செய்து, பெண்கள் வீட்டினுள் தொழுவதே சிறந்தது என்று சுன்னாவை வலியுறுத்தினார்கள். இதை அன்றிருந்த நபித்தோழர்கள் எவரும் ஆட்சேபிக்கவில்லை. (அல் அயினி – உம்தத்துல்காரீ 3/228)
--------------------------
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபித்தோழர்கள் வாழ்ந்த அந்த சிறந்த சமுதாயத்தின் காலத்திலேயே, பெண்கள் பள்ளிக்கு தொழ வருவதில் உள்ள பிரச்சினைகளை அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும், உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் தெளிவு படுத்துகிறார்கள். இன்றைய நவீன ஃபித்னா உலகின் நிலையை நாம் சொல்ல வேண்டியதில்லை.
--------------------------
பெண்கள் முகத்தை மூடுவது ஹராம் என்று தீர்ப்பளித்து, ஆணையும் பெண்ணையும் நேருக்கு நேர் சந்திக்க, ஆர்பாட்ட, போராட்ட களம் அமைத்து கண்ணியம் சிதைத்தல்.
மர்கஸ் பள்ளியில் முறையான மறைவான தடுப்பு இன்றி ஒருவரை ஒருவர் சந்திக்க வகை செய்து சுன்னாவை சிதைத்து ஃபித்னாவுக்கு கடை விரித்ததின் விளைவே இன்று நிர்வாகிகளின் மீதே பாலியல் குற்றச்சாட்டு தொடர்கதையாகிறது.
எஸ்.ஹலரத் அலி. திருச்சி- 7
http://www.readislam.net/
http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8866

மனித உடம்பில்ஆச்சர்யம்,

மனித உடம்பில் இவ்வளவு விஷயங்களா? ஆச்சர்யம்! ஆச்சர்யம்!!!

1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது.

2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதார ணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்.

3. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள் ஒரே அளவாக இருப்பதில்லை காரணம்கருவில் சிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக வளர்வதில்லை. இந்த மிகச் சிறிய வத்தியாசம் தான் நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது. நம் இடது கால் செருப்பை விட வலதுகாலின் செருப்பு வேகமாக தேய்வது கூட இந்த சிறு வித்தியாசத்தால் தான்.

4. மனிதன் இறந்தபின் அவனது ஜீரண உறுப்புகள் தொடர்ந்து 24 மணி நேரம் வரை செயல்படுகிறது. அவனது எலும்பு தொடர்ந்து 4 நாட்களை வரை செயல் படுகிறது. தோல் தொடர்ந்து 5 நாட்கள் வரை பணி செய்கிறது. கண் மற்றும் காது தொடர்ந்து 6 மணி நேரம் பணி செய்கிறது தசைகள் ஒரு மணி நேரம் செயல்படுகிறது. அவனது சிறுநீரகம் தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படுகிறது. ஆக அவனது உயிர் பிரிந் தாலும் அவனது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் நிறுத்தப்படவில்லை.

5. 50 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு 300 நாட்களில் குழந்தை பிறக்கிறது. 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு 280 நாட்களில் குழந்தை பிறக்கிறது. இது தவிர மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறப்பும் சற்று முன்னாடியே (குறை பிரச வம்) அமைந்து விடுகிறது. பெண்கள் இது விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும்.

6. பகலில் 8 மில்லிமீட்டர் சுருங்கி இரவில் 8 மில்லி மீட்டர் உயர்ந்து விடுகிறோம். காரணம் பகலில் நமது வேலைகள் செய்யும்போது தண்டு வடத்திலுள்ள குறுத்தெலும்பு வட்டுகள் ஈர்ப்பு விசைகாரணமாக அழுத்துகின்றன. இதனால் உயரம் குறைகிறது. இரவில் எவ்வித விறைப்புத் தன்மையும் இல்லாமல் படுத்து உறங்குவதால் நமது உடம்பின் உயரம் கூடுகிறது.

7. நம் இரத்தத்தில் சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 127 நாட்கள் தான் அதன் பிறகு அது மடிந்து விடும். புது சிவப்பணுக்கள் உருவாகும். இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள்.

8. நம் உடலில் சுமார் 20 லட்சம் வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. அவை ஒரு நாளில் சராசரியாக 5 லிட்டர் முதல் 6 லிட்டர் வியர்வையை வெளிப்படுத்துகின்றன.

9. நமது கைகளில் நடுவிரலில் நகம் வேகமாகவும், கட்டை விர லில் நக ம் மெதுவாகவும் வளர்கின்றன. நம்முடைய உடல் பாரத்தால் கை விரல் நகத்தைவிட கால்விரல் நகம் மெதுவாக வளர்கிறது.

10. நாம் இரவில் தூங்கும் போது அசையாமல் தூங்குவதில்லை, சுமார் 40 முறை அந்தப் பக்கம், இந்த ப்பக்கமாகப் புரண்டு படுக்கிறோம்.

11. நம்முடைய உடல்தோலின் பருமன் மிகக் குறைந்தபட்சம் ½ மில்லி மீட்டர் கண்ணிமைகளிலும், அதிகபட்சமாகப் பருமன் 4 முதல் 6 மில்லி மீட்டராக உள்ளங்கைகளிலும், அடிப் பாதங்களிலும் அமைந்திருக்கிறது.

12.மூளை அதிகமாக வேலை வாங்கும் மனித உறுப்பு கட் டை விரல்கள்.

13. மனித உடலில் மிகவும் கடினமான பாகம் தாடை எலும்பு.

14. மனித மூளை 80 முதல் 85 சதவீதம் தண்ணீரைக் கொண்டதாகும்.

15. கல்லீரல் 500 விதமான இயக்கங்களை நிகழ்த்துகிறது.

16. நம் ஒடல் தசைகளின் எண்ணிக்கை 630.

17. நம் உடலின் மொத்த எடையில் 12 சதவீதம் பங்கு ரத்தம் உள்ளது.

18. நம் தலைமுடி 1 லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை உள் ளன. அவை 1 மாதத்திற்குள் 1-1/4 செ.மீ. வளர்கின்றன.

19. மண்டை ஓடு மனிதனின் 80 ஆம் வயது வரை வளர்கிறது.

20. மனித முகங்களை மொத்தம் 520 வகைகளுக்குள் அடக்கி விடலாம்.

21. மனித நாக்கின் நீளம் 10 செ.மீ.

22. நாம் படுத்திருக்கும் போது 1 நிமிடத்திற்கு 9 லிட்டர் மூச்சுக் காற்றும் உட்கார்ந்திருக்கும் போது 18 லிட்டர் மூச்சுக்காற்றும், நடக்கும் போது 1 நிமிடத்திற்கு 27 லிட்டர் மூச்சுக்காற்றும் தேவைப்படுகிறது.

23. நமது சிறு நீரகத்தில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வடிகட்டிகள் இருக்கின்றன. இவைகள் ஊறுகாய், உப்புக்கருவாடு, ஆல்கஹால் போன்றவற்றால் பாதிப்படைகிறது.

24.பெண்களைவிட ஆண்களுக்கு மூளை மிகப்பெரியது. பெண்களை விட சுமார் 4000 உயிரணுக்கள் ஆண்கள் மூளையில் இருக்கிறது.

25. மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல்.

26. நமது தலையின் எடை 3.175 கிலோ கிராம்.

27. மூளையின் 100கோடி நியூரான்கள் நமக்கு 4 வயதுக்குள் கிடைத்து விடும்.

28. நாம் ஒரு பொருளை இறுக்கிப்பிடிக்க நம்கட்டை விரலிலுள்ள 3 தசைகள் தான் பெரும் பங்கு அளிக்கிறது. மனிதனை ஒத்த உருவம் கொண்ட சிம்பன்ஸி குரங்கிற்கு இந்த 3 தசைகள் கிடை யாது.

29. மூளையின் மடிப்புகளே அறிவு கூர்மையை தீர்மானிக்கிறது.

30. மனித உடலில் இருக்கும் இரத்தம் 30 அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும்.

31. பிறந்த குழந்தைக்கு வெள்ளை / கறுப்பு நிறங்களை தவிர வேறு நிற வேறுபாடே தெரியாது.

32. மனித உடலின் தோலின் எடை 27 கிலோ கிராம்.

33. மனித உடலில் 33 முள்ளெலும்புகள் உள்ளன.

34. இதயத்தை, சிறுநீரகத்தை, கல்லீரலை, முழங்காலை மாற்றலாம். ஆனால் மூளையை மட்டும் மாற்றவே முடியாது. காரணம் ஞாபங்கள், நினைவுகள், எதிர்காலத்தில் மாற்ற முடிந்தாலும், மாற்றப்பட்டவன் வேற்று மனிதன் தான் அவன் அந்நியன் தான்.

35. கண்கள் உலர்ந்து போகாமலிருக்க இரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறது. கண் இமைகள் தான் நம் வைப்பர்கள். அவற்றின் விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும் போதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம் அலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும் போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளிலிருந்து கண்ணீர் வினியோகம் ஆகிறது.

36. நமது உடலிலுள்ள செல்கள் பிரிந்து இரண்டாகும் தன்மையு டையது. ஒரு நாளைக்கு நம் உடலில் 60 கோடி செல்கள் இறந்து புது செல்கள் பிறக்கின்றன.

37. தலைமுடி 2 வருஷத்திலி ருந்து 4 வருஷம் வரை வளர்கி றது. அதன்பின் 3 மாதம் வளராமல் இருந்து உதிர்கிறது. பிறகு புது கேசம் வளர்கிறது.

38. ஓர் அடி எடுத்து வைக்க உடலெங்கும் 54 தசைகள் பணிபுரிய வேண்டியுள்ளது.

39. 70 வயது வரை வாழும் ஒரு மனிதனின் இதயம் 250 கோடி தடவை துடிக்கிறது. ஒரு பம்பின் செயல்பாட்டிற்கு ஒப்பிட்டால் இதயம் ஒரு நாளைக்கு 18 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை பம்ப் செய்கிறது. இதயம் சீராக துடிக்க பொறாமை, கெட்ட சிந்தனை இவைகளை விட்டொழித்தால் போது ம், உயிர் வாழும் ஆண்டுகள் அதிகரிக்கும்.

40. நமது நரம்பு மண்டலம் தான் மூளைக்குத் தகவல்களை அனுப்புகிறது. அது ஒரு நிமிடத் திற்கு 6 லட்சம் தகவல்களை அனுப்புகிறது.

41. நமது உடலின் நீளமான எலும்பு தொடை எலும்பு தான்.

42. மனிதன் சிந்திக்கும் வேகம் நிமிடத்திற்கு 500 சொற்கள் என்றும் பேசும் வேகம் நிமிடத்திற்கு 100 சொற்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

43. மூளையில் ஏற்படும் வலியை நம்மால் உணரமுடியாது. ஆனால் மற்ற உறுப்புகளின் வலியை உணர்த்துவது மூளையே.

44. பெண்களைவிட ஆண்களுக்கு 40 சதவீ தம் கூடுதலாக வியர்க்கிறது.

45. உயிர்வாழ உடலுக்குத் தேவை 13 வைட்டமின்கள்.

46. உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி மட்டுமே.

47. நம் வாழ்நாளில் 50 டன் உணவுப் பொருளையும் 11 ஆயிரம் காலன் திரவத்தையும் உட்கொள்கிறோம்.

48. நம் உள்ளங்கைகளில் ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் 3000 வியர்வை சுரப் பிகள் இருக்கின்றன.

49. நம்முடைய தலை ஒரே எலும்பால் உருவானது அல்ல, 22 எலும்புகளில் உருவானதாகும்.

50. மனித உடலில் 50 லட்சம் முடிக்கால்கள் உள்ளதாகவும், பெண்களின் முடியை விட ஆண்களின் முடி வளர்ச்சி விரைவானது என் றும் அறியப்படுகிறது.

51. ஆரோக்கியமான மனிதன் 7 நிமிடங்களில் தூங்கி விடுகின்றான்.

52. மூளையின் கனபரிமாணம் 1500 கன சென்டி மீட்டர்.

53. மனிதன் பயன்படுத்தும் சொல் தொகுதி 5000 முதல் 6000 வார்த்தைகள் தான். சாதாரண மனிதன் முதல் விஞ்ஞானிகள் வரை சராசரியாக இவ்வளவு வார்த்தைகளைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

54. மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள் உள்ளன.

55. நம் நகம் தினமும் 0.1 மில்லி மீட்டர் வீதம் வளர்கிறது.

56. நாள் ஒன்றுக்கு நாம் 23,040 தடவை சுவாசிக்கின்றோம்.

57. மனிதனின் உடலிலுள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை 46 (23 ஜோடி)

58. நாம் பேசக்கூடிய வார்த்தை க்கு 72 தசைகள் வேலை செய்ய வேண்டும். பேச்சை குறைத்தால் சாதனைகளை நிகழ்த்தலாம்.

59. நமது நுரையீரல் 3 லட்சம் துவாரங்களையும் இரத்த குழாய்களையும் கொண்டதாக இருக்கிறது. இவைகளின் நீளம் 2400 கி.மீ. உள்ளது.

60. கண்களில் உள்ள லென்ஸ் ஆயுள் முழுவதும் வளரும்.

61. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன.

62. முளையின் நிறம் பழுப்பான நீலநிறம்.

63. உடலில் பொட்டாசியம் அளவு 70 சதவீதமாக குறைந்துவிட் டால் அசதி, சோர்வு, வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்படும்.

64. ஒரு மனிதன் தினமும் 2 லிட்டர் எச்சிலை ஊறச் செய்கிறான். 1.14லிட்டர் வியர்வை வெளியிடுகிறான்.

65. சிந்தனையின் வேகம் அல்லது ஒரு யோசனையின் தூரம் என்று சொல்லுகிறோம் இந்த தூரம் 150 மைல்களாகும்.

66. ஓர் ஆணின் இதயத்தைவிட பெண்ணின் இதயம் அதிகமாக துடிக்கிறது.

67. மணிக்கட்டிலிருந்து நடுவிரல் நுனிவரை உள்ள நீளமும், மேவாய் கட்டையிலிருந்து நெற்றி உச்சி வரை உள்ள நீளமும் எல்லாருக்கும் சமமாக இருக்கும்.

68. ஒரு முறை வெளியாகும். ஆணின் விந்தில் 30 கோடி உயி ரணுக்கள் வரை இருக்கும்.

69. உடலில் உண்டாகும் உஷ்ணம் வெளியேறிவிடாமல் தடுக்கவே ரோமம் உள்ளது.

70. இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும் இதயத்திற்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும் நேரம் 30 செகண்டு ஆகும்.

71. மண்ணீரலில் சுரக்கும் ஒரு வகை நீர் ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று சிறிய அறைகளைப் பாதிக்கிறது. இதனால் தான் மனிதனுக்கு கோபம் வருகிறது.

72. மனித மூளையில் தாமிரத்தின் அளவு 6 கிராம் ஆகும்.

73. ஆட்ரினல் சுரப்பி அளவுக்கு அதிகமாக நீரை சுரக்கத் தொடங்கிவிட் டால் ஆணுக்கு பெண்குணமும், பெண்ணுக்கு ஆண்குணமும் ஏற்படும்.

74. தானாக மூச்சை அடக்கி தனக்குத்தானே மரணம் ஏற்படும்படி செய்ய எவராலும் முடியாது.

75. நம் மூக்கில் வாசனையை நுகரும் செல்கள் 50 லட்சம் உள்ளன. ஆனால் நாயின் மூக்கில் 22கோடி நுகரும் செல்கள் உள்ளன. அதனால் மோப்ப சக்தி அதிகம். காவல் துறையில் வேலை.

76. நம் இதயத்தின் எடை 10 அவுன்ஸ் தான். அவரவர் கைவிரல் 5 யையும் பொத்திப் பார்த்தால் என்ன அளவு இருக்குமோ அதே அளவு தான் அவரவர் இதயம் இருக்கும்.

77. நம் நுரையீரலில் உட்புறம் அமைந்துள்ள ‘ஆலவியோலி’ என் னும் சிறிய காற்று அறைகளின் எண்ணிக்கை மட்டும் 30 கோடியாகும்.

78. மூளை 65 சதவீதம் கொழுப்பு பொருளால் ஆனது.

79. இரத்தத்தில் 300 கோடி வெள்ளை அணுக்கள் உள்ளன.

80. மனிதனுக்கு 3 வகையான பற்கள் உண்டு.

81. நமது நாக்கில் சுவை உணரும் மொட்டுக்கள் 9000 உள்ளன.

82. நம் ஒவ்வொரு கண்ணிலும் 6 தசைகள் உள்ளன.

83. எலும்புகளின் துணை இன்றி தானே அசையும் தசை நாக்கு.

84. மனித உடலில் அதிக செல்களால் உருவான பகுதி மூளை,மூளையின் வெளிப்பகுதி மட்டுமே 8 பில்லியன் செல்களால் உருவானது.

85. ஒரு மனிதன் தன் தாழ்நாளில் 23 வருஷம் தூங்குகிறான்.

86. ஒரு பெண் பிறக்கும் போதே அவள் சுமார் 3-½ லட்சம் கரு முட் டைகளோடு தான் பிறக்கிறாள். இந்த முட்டைகளை ஒரு டீஸ் பூனில் 10 லட்சம் நிரப்பலாம்.

87. 70 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 5600 மில்லிலிட்டர் ரத்தம் உடம்பிலிருக்கும்.

88. பெண்களுக்கு வாழ்நாளில் மாத விடாய் சுமார் 375 முறை ஏற் படுகிறது.

89. இதயம் ஒரு நாளைக்கு சுமார் 1லட்சம் தடவை லப்டப் செய்கி றது. வருஷத்திற்கு 4 கோடி தடவை.

90. நமது தோலின் பரப்பளவு சுமார் 20 சதுரஅடிகள்.

91. மனித உடலிலுள்ள பாஸ்பரசைக் கொண்டு 20 ஆயிரம் தீக்குச்சிகள் செய்யலாம்.

92. மனித உலின் கார்பனைக் கொண்டு 900 பென்சில்களை உரு வாக்கலாம்.

93. மனித உடலிலுள்ள கொழுப்பைக் கொண்டு 7 பார் சோப்புகளை செய்ய லாம்.

94. மனித உடலின் இரும்பைக் கொண்டு 2 அங்குல ஆணி ஒன்று செய்யலாம்.

95. மனித உடலில் அதிகமாக காணப்படும் தாதுப்பொருள் கால்சியம்.

96. இரத்தம் சுமார் 97,000 கிலோ மீட்டர் நீளமுள்ள இரத்த நாளங்களிலி ருந்து இதயம் வழியே நிமிடத்திற்கு 70 தடவை செல்கிறது.

97. உள் வாங்கும் காற்றில் ஆக்ஸிஜன் குறைவாகி கார்பன்டை ஆக்சைடு அதிகமாகிவிட்டால் உபரியாக காற்றை உள்வாங்க கொட்டாவி விடுகிறோம்.

98. மனிதன் 21 வயது முடிவதோடு உடலின் எல்லா உறுப்புகளின் வளர்ச்சியும் நின்று விடுகிறது. இறுதிவரை தொடர்ந்து வளர்வது காது மட்டும்தான் சின்னதாக.. நம்மால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு வளர்ச்சி.

99. 60 வயது வரை மனிதன் வாழுகின்றான் என்றால் அந்த மனிதன் ஒரு நாளைக்கு 10 நிமிடம் வீணாக்கினால் அவன் ஆயுளில் 5மாதங்கள் வீணாக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அவயத்தின் படைப்பின் நுட்பத்தை நவீன விஞ்ஞானத்தின் மூலம் காணும் போது பெரும் வியப்பில் ஆழ்த்தும் அத்தனை ஆச்சரியங்களையும் எழுதி முடித்துவிட முடியாது.

உதாரணத்திற்கு, நமது மூளையைப் பற்றி நவீன விஞ்ஞானம் அறிந்து கொண்டது மிகமிக சொற்பமானது தான் இன்னும் தெரியாத புரியாத விளங்கிக் கொள்ள முடியாத விநோதங்கள் ஏராளம், ஏராளம்..t

வெள்ளி, மார்ச் 30, 2018

ஏமாறாதே ஏமாற்றாதே,

ஏமாறாதே ஏமாற்றாதே

உலகில் மனிதன் மனிதனிடம் எதிர்பார்ப்பது நம்பகத்தன்மை. நம்பகத் தன்மையின் மூலமே பிறரை நாம் நண்பராக,நெருக்கமுள்ளவராக ஆக்கிக் கொள்ள முடியும். ஆனால் இன்நன்னடத்தை இக்கழி காலத்தில் எடுபட்டுப் போனது மிக வருத்தத்திற்குரிய செய்தியாகும்.

அதனால் தான் என்னவோ தெரியவில்லை. எக்காலமும் அறிந்த ரப்‌பு இறைமறையில் இப்படிக் கூறுகிறான்.  

إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيَاةُ الدُّنْيَا وَلَا يَغُرَّنَّكُمْ بِاللَّهِ الْغَرُورُ

31:33

வருகின்ற *ஏப்ரல் மாதம் 1ம் தேதி* உலகம் முழுக்க அதிர்ச்சி அளிக்கும் செய்திகளை புனைந்து கூறி மக்களை ஏமாற்றி அதிர்ச்சி அடையச் செய்வது இன்று உலகம் காணும் நாகரீகம் என மெச்சுகிறார்கள். பிறரை ஏமாற்றுகின்றோம் என்றறியாமல் உண்மையில் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். ஆண்டியாக இருந்தாலும் சரி அரசனாக இருந்தாலும் சரி பிறரை ஏமாற்றினால் நாளை மறுமையில் சுவனம் அவனுக்கு தடை செய்யப்படும்.

ஏமாற்றியதால் மறுமையின் ஏமாற்றம் 

عَنِ الْحَسَنِ، قَالَ: دَخَلَ عُبَيْدُ اللهِ بْنُ زِيَادٍ، عَلَىمَعْقَلِ بْنِ يَسَارٍ، وَهُوَ وَجِعٌ، فَسَأَلَهُ، فَقَالَ: إِنِّي مُحَدِّثُكَ حَدِيثًا لَمْ أَكُنْ حَدَّثْتُكَهُ إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَسْتَرْعِي اللهُ عَبْدًا رَعِيَّةً، يَمُوتُ حِينَ يَمُوتُ وَهُوَ غَاشٌّ لَهَا، إِلَّا حَرَّمَ اللهُ عَلَيْهِ الْجَنَّةَ»، قَالَ: أَلَّا كُنْتَ حَدَّثْتَنِي هَذَا قَبْلَ الْيَوْمِ؟ قَالَ: «مَا حَدَّثْتُكَ»  (مسلم)

ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மஅகில் பின் யசார் (ரலி) அவர்கள் நோயுற்றிருந்தபோது (உடல்நலம் விசாரிப்பதற்காக) அவர்களிடம் (பஸ்ராவின் ஆளுநர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் சென்றார். அப்போது உபைதுல்லாஹ்விடம் மஅகில் (ரலி) அவர்கள், ”முன்பு நான் உம்மிடம் அறிவித்திராத செய்தி ஒன்றை அறிவிக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”குடிமக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஓர் அடியாருக்கு வழங்கியிருக்க, அவர் அந்த மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையிலேயே இறந்துபோனால், அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடைசெய்யாமல் இருப்பதில்லை” என்று கூறினார்கள்” என்றார்கள். அப்போது உபைதுல்லாஹ், ”இதற்கு முன்பு இதை நீங்கள் எனக்கு அறிவிக்கவில்லையே?” என்று கேட்டார். மஅகில் (ரலி) அவர்கள், ”நான் உமக்கு (காரணத்தோடுதான்) அறிவிக்கவில்லை” என்று பதிலளித்தார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 1.இறைநம்பிக்கை

ஏமாற்றுபவனுக்கு அழிவு தான் மிஞ்சும் 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ أَخَذَ أَمْوَالَ النَّاسِ يُرِيدُ أَدَاءَهَا أَدَّى اللَّهُ عَنْهُ، وَمَنْ أَخَذَ يُرِيدُ

إِتْلاَفَهَا أَتْلَفَهُ اللَّهُ               (البخاري)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 43. கடன்

வியாபாரத்தில் ஏமாற்றுபவன் 

عَنِ الأَعْمَشِ، قَالَ: سَمِعْتُ أَبَا صَالِحٍ، يَقُولُ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " ثَلاَثَةٌ لاَ يَنْظُرُ اللَّهُ إِلَيْهِمْ يَوْمَ القِيَامَةِ، وَلاَ يُزَكِّيهِمْ، وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ، رَجُلٌ كَانَ لَهُ فَضْلُ مَاءٍ بِالطَّرِيقِ، فَمَنَعَهُ[ص:111] مِنَ ابْنِ السَّبِيلِ، وَرَجُلٌ بَايَعَ إِمَامًا لاَ يُبَايِعُهُ إِلَّا لِدُنْيَا، فَإِنْ أَعْطَاهُ مِنْهَا رَضِيَ، وَإِنْ لَمْ يُعْطِهِ مِنْهَا سَخِطَ، وَرَجُلٌ أَقَامَ سِلْعَتَهُ بَعْدَ العَصْرِ، فَقَالَ: وَاللَّهِ الَّذِي لاَ إِلَهَ غَيْرُهُ لَقَدْ أَعْطَيْتُ بِهَا كَذَا وَكَذَا، فَصَدَّقَهُ رَجُلٌ " ثُمَّ قَرَأَ هَذِهِ الآيَةَ: {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا} [آل عمران: 77]

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மூன்று பேரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மேலும், அவர்களுக்குத் துன்பமிக்க வேதனையும் உண்டு. ஒருவன், (மக்களின் பயணப்) பாதையில், தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பெற்றிருந்தும் வழிப்போக்கர்கள் அதைப் பயன்படுத்த விடாமல் தடுத்துவிட்டவன். இன்னொருவன்,தன் (ஆட்சித்) தலைவரிடம் உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிரமாணம் செய்தவன்; அவர் கொடுத்தால் (மட்டுமே) திருப்தியடைந்து, கொடுக்காமல்விட்டால் கோபம் கொள்பவன். மற்றொருவன், அஸர் தொழுகை

க்குப் பிறகு (மக்கள் கடைவீதியில் திரளும் போது) தன் வியாபாரப் பொருளைக் காட்டி, “எவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவனும் இல்லையோ அவன் மீது சத்தியமாக! இந்தப் பொருளுக்காக (இதைக் கொள்முதல் செய்யும்போது) நான் இன்ன (அதிக) விலையைத் தந்தேன். என்று கூறி, அதை ஒருவர் உண்மையென நம்பும்படி செய்தவன் (இப்படி வாடிக்கையாளரிடம் பொய் கூறி அவரை ஏமாற்றி, சொன்ன விலைக்கு அதை விற்றவன்) ஆவான். இதைக் கூறிவிட்டு, “அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகிறவர்கள்...” என்னும் இந்த (திருக்குர்ஆன் 03:77 ஆம்) இறைவசனத்தை ஓதினார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : (42. முஸாக்காத் - நீர்ப்பாசன அடிப்படையில் தோப்புகளைக் குத்தகைக்கு விடுதல்)

பாடம் புகட்டிய நீதிபதி 

ஹக்கம் என்னும் அரசன் ஸ்பெயினை ஆண்டு கொண்டிருந்த காலம்.

ஒருநாள் அவர் நகரை வலம் வந்தபோது ஒரு அழகான நிலத்தைப் பார்த்தார். அதனால் கவரப்பட்ட அவர் அந்த இடத்திலே தமக்கென மாளிகை ஒன்றை கட்டிக் கொள்ள விரும்பினார்

அந்த நிலம் ஒரு கிழவிக்கு உரியது. அதிலே ஒரு குடிசை அமைத்து குடியிருந்தாள். அந்த நிலத்திற்கு நியாமான ஒரு விலையைக் கொடுக்க அரசர் முன்வந்தார் அக்கிழவி விற்க மறுத்துவிட்டாள். 'தன் கணவரோடு வாழ்ந்த குடிசையே தனக்கு அரண்மனை' என்றாள்.

அரசருக்கு ஆத்திரம் வந்தது.

அக்குடிசையைப் பிடுங்கி எறிந்து அவளை அந்த நிலத்திலிருந்து விரட்டினார். அங்கே ஓர் அரச மாளிகையும் அழகிய பூங்காவையும் அமைத்தார்

கிழவி உடனே நீதிபதியிடம் சென்று அரசருக்கு எதிராக முறையிட்டாள்.

சில நாட்கள் சென்றது. அரசர் தனது புதிய மாளிகையை வந்து பார்க்கும்படி நீதிபதிக்கு அழைப்பு விடுத்தார். குறித்த நேரத்தில் ஒரு கழுதையுடனும் வெறும் சாக்குகள் சிலவற்றுடனும் நீதிபதி அரசமாளிகைக்கு வந்து சேர்ந்தார்.

அரசருக்கு ஆச்சரியமாக இருந்தது

கழுதையும் சாக்குப் பையும் ஏன்?'' என்றார்.

''இந்த தோட்டத்திலிருந்து சிறிது மண் வெட்டிக் கொண்டு போவதற்கு அனுமதி தாருங்கள்'' என்றார்

இந்த வினோதமான கோரிக்கை அரசருக்கு வியப்பாக இருந்தது எனினும் அனுமதி வழங்கினார். நீதிபதி மண்ணை வெட்டி அந்த சாக்குகளை நிரப்பினார்.

பின்னர் அவற்றை கழுதையின் மேல் வைப்பதற்கு தமக்கு உதவும்படி கேட்டுக் கொண்டார் அரசருக்கு இன்னும் வியப்பாக இருந்தது. என்றாலும் மகிழ்ச்சியுடன் உதவ அவர் முனவந்தார்

எவ்வளவு முயன்றபோதிலும் ஒரு சாக்கைக் கூட அவரால் தூக்க முடியவில்லை.

நீதிபதி அரசரை நோக்கி கூறினார்:

''அரசே! இன்று உங்களால் ஒரு சாக்கு மண்ணைக் கூட தூக்க முடியவில்லை. மறுமைநாளில் அந்த கிழவியிடமிருந்து நீங்கள் அநீதியாக அபகரித்த இந்த தோட்டம் முழுவதையும் சுமக்கும்படி அல்லாஹ் ஆணையிட்டால் என்ன செய்வீர்கள்?

அரசர் தமது செயலுக்காக வெட்கப்பட்டார். அந்த கிழவியை உடனே வரவழைத்து , தாயே! நான் பெரும் பிழை செய்துவிட்டேன். இன்றிலிருந்து இந்த மாளிகையும் தோட்டமும் உங்களுக்குரியதே!'' என்றார்.

மோசடி செய்பவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நஷ்டம்தான் .

இம்மையில் என்ன நஷ்டம்?

 அந்த சமுதாயத்தில் அச்சமும் பீதியும் நிலவும்

 ஈமான் இழப்பு கூட ஏற்படாலம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

''எந்த சமுதாயத்தில் மோசடி பரவலாக இடம் பெறுகின்றதோ அவர்களுக்கு மத்தியில் அச்ச உணர்வு தோற்றுவிக்கப்படும்"". (முஅத்தா மாலிக் -26)

 ''உங்களில் ஒருவர் மோசடி செய்கையில் அவர் முஃமினாக இருக்க மாட்டார். உங்களை நான் அப்படியான நிலையை விட்டும் கடுமையாக எச்சரிக்கிறேன்"". (முஸ்லிம் - கிதாபுல் ஈமான் - 103)

மறுமையில் என்ன நஷ்டம்?

பொதுச் சொத்தில் மோசடி செய்வோர் அமானிதத்தை வீனாக்குவோர் ஏமாற்றுவோர் யாரும் தப்பிக்க முடியாது. மறுமையில் அவர்கள் மோசடி செய்த அந்த பொருளே அவர்களுக்கு பெரும் சுமையாக மாறி அவர்களை திணறடிக்கும். அப்போது யாரையும் உதவிக்கு அழைக்க முடியாது

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَامَ فِينَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ فَذَكَرَ الْغُلُولَ فَعَظَّمَهُ وَعَظَّمَ أَمْرَهُ ثُمَّ قَالَ ‏ "‏ لاَ أُلْفِيَنَّ أَحَدَكُمْ يَجِيءُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رَقَبَتِهِ بَعِيرٌ لَهُ رُغَاءٌ يَقُولُ يَا رَسُولَ اللَّهِ أَغِثْنِي ‏.‏ فَأَقُولُ لاَ أَمْلِكُ لَكَ شَيْئًا قَدْ أَبْلَغْتُكَ ‏.‏ لاَ أُلْفِيَنَّ أَحَدَكُمْ يَجِيءُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رَقَبَتِهِ فَرَسٌ لَهُ حَمْحَمَةٌ فَيَقُولُ يَا رَسُولَ اللَّهِ أَغِثْنِي ‏.‏ فَأَقُولُ لاَ أَمْلِكُ لَكَ شَيْئًا قَدْ أَبْلَغْتُكَ ‏.‏ لاَ أُلْفِيَنَّ أَحَدَكُمْ يَجِيءُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رَقَبَتِهِ شَاةٌ لَهَا ثُغَاءٌ يَقُولُ يَا رَسُولَ اللَّهِ أَغِثْنِي ‏.‏ فَأَقُولُ لاَ أَمْلِكُ لَكَ شَيْئًا قَدْ أَبْلَغْتُكَ ‏.‏ لاَ أُلْفِيَنَّ أَحَدَكُمْ يَجِيءُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رَقَبَتِهِ نَفْسٌ لَهَا صِيَاحٌ فَيَقُولُ يَا رَسُول

َ اللَّهِ أَغِثْنِي ‏.‏ فَأَقُولُ لاَ أَمْلِكُ لَكَ شَيْئًا قَدْ أَبْلَغْتُكَ ‏.‏ لاَ أُلْفِيَنَّ أَحَدَكُمْ يَجِيءُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رَقَبَتِهِ رِقَاعٌ تَخْفِقُ فَيَقُولُ يَا رَسُولَ اللَّهِ أَغِثْنِي ‏.‏ فَأَقُولُ لاَ أَمْلِكُ لَكَ شَيْئًا قَدْ أَبْلَغْتُكَ ‏.‏ لاَ أُلْفِيَنَّ أَحَدَكُمْ يَجِيءُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رَقَبَتِهِ صَامِتٌ فَيَقُولُ يَا رَسُولَ اللَّهِ أَغِثْنِي فَأَقُولُ لاَ أَمْلِكُ لَكَ شَيْئًا قَدْأَبْلَغْتُكَ.‏

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று (போர்ச் செல்வங்கள் உள்ளிட்ட) பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது குறித்துக் கூறினார்கள். அது கடுங்குற்றம் என்பதையும் அதன் தண்டனை கொடியது என்பதையும் எடுத்துரைத்தார்கள்.

பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்: மறுமை நாளில் கத்திக்கொண்டிருக்கும் ஒட்டகத்தைத் தமது கழுத்தில் சுமந்து கொண்டுவந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்" என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காணவேண்டாம். ஏனெனில், அப்போது நான் "உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய முடியாது. உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகத்திலேயே) சொல்லிவிட்டேன்" என்று கூறிவிடுவேன்.

இவ்வாறே, மறுமை நாளில் கனைத்துக் கொண்டிருக்கும் குதிரையைத் தமது கழுத்தில் சுமந்து வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்" என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காணவேண்டாம். ஏனெனில்,அப்போது நான் "உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய இயலாது. உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகத்திலேயே) சொல்லிவிட்டேன்" என்று கூறிவிடுவேன்.

இவ்வாறே, மறுமை நாளில் கத்திக்கொண்டிருக்கும் ஆட்டைத் தமது கழுத்தில் சுமந்து வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்" என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காணவேண்டாம். ஏனெனில்,அப்போது நான் "உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய முடியாது. உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகிலேயே) சொல்லி விட்டேன்" என்று கூறிவிடுவேன்.

இவ்வாறே, மறுமை நாளில் கத்திக்கொண்டிருக்கும் ஓர் உயிரினத்தைத் தமது கழுத்தில் சுமந்து கொண்டுவந்து "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்" என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காணவேண்டாம். ஏனெனில், அப்போது நான் "உனக்கு எந்த உதவியும் என்னால் செய்யமுடியாது; உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகிலேயே) சொல்லிவிட்டேன்" என்று கூறிவிடுவேன்.

இவ்வாறே, மறுமை நாளில் (காற்றில்) அசையும் துணிகளைத் தமது கழுத்தில் சுமந்து கொண்டுவந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்" என்று கூறி (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காணவேண்டாம்.ஏனெனில், அப்போது நான் "உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய இயலாது. உனக்கு (சொல்ல வேண்டியதை உலகி லேயே) சொல்லிவிட்டேன்" என்று கூறிவிடுவேன்.

இவ்வாறே, மறுமை நாளில் பொன்னையும் வெள்ளியையும் தமது கழுத்தில் சுமந்து கொண்டுவந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்" என்று கூறி (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காணவேண்டாம்.ஏனெனில்,அப்போது நான் "என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகிலேயே) சொல்லிவிட்டேன்" என்று கூறிவிடுவேன்.

 (ஸஹீஹ் முஸ்லிம் 4839)

இவ்வுலகில் அனைத்திலும் மோசடி, ஏமாற்று,பித்தலாட்டம் என பல்கிப் பெருகி இருக்கிறது. கல்வியில், காதல் எனும் கலவியில்,குடும்பத்தில், சொத்து சுகங்களில், நட்பில்,அரசியலில், ஆன்மீகத்தில், மருத்துவத்தில்,உணவகத்தில், வணிகத்தில் இப்படி பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

உதாரணத்திற்கு:

கடவுளின் பெயரில் ஏமாற்றலாமா? எனும் தலைப்பில் லலிதா ஜுவல்லரி என்ற நிறுவனம் முழுப் பக்க விளம்பரம் ஒன்றை ஏடுகளில் கொடுத்துள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகம் வருமாறு:

கிராமுக்கு ரூ.52 தள்ளுபடி!... சவரனுக்கு ரூ.520 தள்ளுபடி!... இலவசப் பரிசு! என்று அட்சய திருதியை நன்னாளை முன்னிட்டு, பல நகைக் கடைகள் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் சலுகைகளை நீங்கள் காணலாம். தீர விசாரிக்கும் பொழுதுதான் இதில் உள்ள தந்திரம் தெரியும்! கிராமுக்கும்,சவரனுக்கும் தள்ளுபடி அளிக்கும் இக்கடைகள், நகைகளின் சேதாரத் தொகையை அளவிற்கு அதிகமாக வசூலித்து இதுபோன்ற தள்ளுபடியில் அதை மறைக்கிறார்கள் என்பதுதான் உண்மை மேலும் பல சலுகைகள் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகவே இருக்கும்.

எனவே, இதுபோன்ற அட்சயதிருதியை ஆஃபர்களைக் கண்டு மயங்காமல்,நீங்கள் கொடுக்கும் தொகை என்ன,அதற்கு உங்களுக்கு எவ்வளவு கிராம் தங்கம் கிடைக்கிறது என்பதைக் கணக் கிடுங்கள் என்று விளம்பரம் செய்துள்ள அந்த நிறுவனம் தனது நிறுவனத்தின் நம்பகத்தன்மை குறித்து விவரிக்கிறது.

பம்படியில் வம்படி என்பார்களே, அது போல வியாபாரத்தில் போட்டி என்

று வந்துவிட்டால் இதுபோன்ற மோசடிகள் வெளி வருகின்றன என்பதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறரை ஏமாற்றிய பொருள் நமக்கு ஆகுமானதல்ல என்பதை விளங்கியிருந்த ஸஹாபாக்கள் 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: " كَانَ لِأَبِي بَكْرٍ غُلاَمٌ يُخْرِجُ لَهُ الخَرَاجَ، وَكَانَ أَبُو بَكْرٍ يَأْكُلُ مِنْ خَرَاجِهِ، فَجَاءَ يَوْمًا بِشَيْءٍ فَأَكَلَ مِنْهُ أَبُو بَكْرٍ، فَقَالَ لَهُ الغُلاَمُ: أَتَدْرِي مَا هَذَا؟ فَقَالَ أَبُو بَكْرٍ: وَمَا هُوَ؟ قَالَ: كُنْتُ تَكَهَّنْتُ لِإِنْسَانٍ فِي الجَاهِلِيَّةِ، وَمَا أُحْسِنُ الكِهَانَةَ، إِلَّا أَنِّي خَدَعْتُهُ، فَلَقِيَنِي فَأَعْطَانِي بِذَلِكَ، فَهَذَا الَّذِي أَكَلْتَ مِنْهُ، فَأَدْخَلَ أَبُو بَكْرٍ يَدَهُ، فَقَاءَ كُلَّ شَيْءٍ فِي بَطْنِهِ "                        (البخاري)

அபூபக்ர்(ரலி) அவர்களுக்கு (ஓர் எஜமானனுக்கு அடிமை செலுத்த வேண்டிய சம்பாத்தியத்தில்) நிர்ணயிக்கப்பட்ட தொகையைச் செலுத்தி வந்த அடிமையொருவன் இருந்தான். அபூ பக்ர்(ரலி) அவன் செலுத்தும் தொகையிலிருந்து உண்டு வந்தார்கள். ஒரு நாள் அவன் ஏதோ ஒரு பொருளைக் கொண்டு வந்தான். அதிலிருந்து அபூ பக்ர்(ரலி) சிறிது உண்டார்கள். அப்போது அந்த அடிமை அவர்களிடம், “இது என்ன என்று உங்களுக்குத் தெரியும்?“ என்று கேட்டான். அபூ பக்ர்(ரலி), “இது என்ன?“என்று கேட்டார்கள். அவன், “நான் அறியாமைக் காலத்தில் ஒரு மனிதருக்குக் குறி சொல்லிவந்தேன்;எனக்கு நன்றாகக் குறி சொல்லத் தெரியாது; ஆயினும் (குறி சொல்லத் தெரிந்தவன் போல் நடித்து) அவரை நான் ஏமாற்றி விட்டேன். அவர் அதற்காக எனக்குக் கூலி கொடுத்தார். நீங்கள் உண்டது (குறி சொன்னதற்காக) எனக்குக் கூலியாகக் கிடைத்த அந்தப் பொருளிலிருந்து தான்” என்று சொன்னான். உடனே அபூ பக்ர்(ரலி) தம் கையை (வாய்க்குள்) நுழைத்துத் தம் வயிற்றிலிருந்து அனைத்தையும் வாந்தியெடுத்துவிட்டார்கள்.

ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 63.அன்சாரிகளின் சிறப்புகள்

இந்த வரலாற்றில் குறி சொல்வது கூடாது என்று ஒருபுறமிருந்தாலும் பிறரை ஏமாற்றி கிடைக்க கூடிய பொருட்களும் நமக்கு கூடாது என்பதை உணர்த்துகிறது...

ஏமாறுவது முஃமினுடைய பண்பல்ல 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «لاَ يُلْدَغُ المُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ» (مسلم)

நபியவர்கள் ஒரு முஃமின் ஒரே பொந்தில்இரண்டு முறை கொட்டு பெறமாட்டான் என்றுகூறினார்கள்.

இந்த ஹதீஸூக்கு நவவீ இமாம் விளக்கம் கூறுகிறார்கள்: 

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أسر أبا غرة الشاعر يوم بدر فمن عليه وعاهده أن لايحرض عليه ولايهجوه وَأَطْلَقَهُ فَلَحِقَ بِقَوْمِهِ ثُمَّ رَجَعَ إِلَى التَّحْرِيضِ وَالْهِجَاءِ ثُمَّ أَسَرَهُ يَوْمَ أُحُدٍ فَسَأَلَهُ الْمَنَّ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤْمِنُ لايلدغ مِنْ جُحْرٍ مَرَّتَيْنِ

(شرح النووي علي مسلم)

  ابوغرة என்பவன் நபி (ஸல்) அவர்களை தவறான கொச்சையான கவிதைகளால் பத்ரு போரில் திட்டி வந்தான். அவனை நபி ஸல் சிறைபிடித்தார்கள். தன்னுடைய ஏழ்மையை எடுத்துக் கூறினான். மாநபி அவனை மன்னித்தார்கள். மீண்டும் உகது போரில் கலந்து கொண்டு தவறாக நபியவர்களை வசைபாடினான். மறுபடியும் அவனை நபி ஸல் சிறைபிடித்தார்கள். இப்போதும் தன் ஏழ்மையை அவன் கூறிய போது நபியவர்கள் ஒரு முஃமின் ஒரே பொந்தில்இரண்டு முறை கொட்டு பெறமாட்டான் என்றுகூறினார்கள்.

எத்தனை நபர்கள் ஏமாற்றப்பட்டாலும் விழிப்புணர்வு பெறாத சமுதாயம் 

ஏமாற்றி விற்கப்படும் பாலிசிகள்!ஏஜென்ட்டுகளுக்கு ஐஆர்டிஏ கிடுக்கிப்பிடிஇரா.ரூபாவதி

இன்றைக்கு இன்ஷூரன்ஸ் துறையில் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தையாக மாறி இருக்கிறது 'மிஸ்செல்லிங்’.  இன்ஷூரன்ஸ் பாலிசிகள் பற்றி தவறான தகவல்களையும்,வாக்குறுதிகளையும் தந்து விற்கப்படுவதுதான் 'மிஸ்செல்லிங்’. கடந்த எட்டு ஆண்டுகளில் தவறான தகவலையும் வாக்குறுதியையும் தந்து, ஏமாற்றி விற்கப்பட்ட பாலிசிகள் ஒன்று, இரண்டு அல்ல. சில உதாரணங்களை மட்டும் பார்ப்போம்.

மனோகரனின் கதை!

திருவள்ளூரைச் சேர்ந்தவர் மனோகரன் (பெயர் மாற்றப்பட் டுள்ளது). அவரது பக்கத்து வீட்டில் பகுதி நேர இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் ஒருவர் இருந்தார். 'எஃப்டி-யைவிட அதிக வருமானம் தரும் இன்ஷூரன்ஸ் திட்டங்கள் உள்ளன. வருடம்  ரூ.10 ஆயிரம் என அடுத்த மூன்றாண்டு களுக்கு முதலீடு செய்தால்,உங்களுக்கு ரூ.75 ஆயிரம் கிடைக்கும்’ என்று சொல்லி, ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசியைத் தந்தார்.  

மனோகரனுக்கு எழுத, படிக்கத் தெரியாது. மேலும், ஏஜென்டை சிறுவயதிலிருந்தே தெரியும் என்பதால் அவர் சொன்னதை அப்படியே நம்பினார். சரியான நேரத்தில் பிரீமியத் தொகையை வசூலித்த ஏஜென்ட்,அதன்பிறகு மனோகரனின் கண்ணில் தென்படவே இல்லை.

இதனிடையே, தனது மகளின் திருமணச் செலவுக்காக இன்ஷூரன்ஸ் பாலிசியிலிருந்த பணத்தை எடுக்க விரும்பினார் மனோ

கரன். ஒருவழியாக ஏஜென்ட்டைத் தேடிப்பிடித்து விஷயத்தைச் சொல்ல,   'நீங்களே சென்று வாங்கிக்கொள்ளுங்கள்’ என்றார்.  ஆனால்,பணத்தை எடுக்கப்போன மனோகரனுக்குத்தான்  அதிர்ச்சி. அவர் செலுத்திய தொகையைவிடக் குறைவான தொகைதான் அவருக்குக் கிடைத்தது. ரூ.75ஆயிரம் கிடைக்கும் என்று போனவருக்கு,வெறும் ரூ.25 ஆயிரம்தான் கிடைத்தது. தன் தலையில் கட்டப்பட்ட பாலிசி யூலிப் வகையைச் சேர்ந்தது. இதில் போட்ட பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும். பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்துக்கேற்பவே இந்த பாலிசியிலிருந்து வருமானம் கிடைக்கும் என்கிற தகவல்கள் மனோகரனுக்கு சொல்லப்படவே இல்லை. ஆனால், தவறான வாக்குறுதிகளை மட்டும் அள்ளிவிட்டிருக்கிறார் அந்த பலே ஏஜென்ட்.

                                                            ( நன்றி : நாணயம் விகடன் (ஜுலை 6, 2014)

164. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்;நம்மை வஞ்சித்தவரும் நம்மைச் சார்ந்தவர் அல்லர். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உணவு(தானிய)க் குவியலைக் கடந்து சென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது. உடனே அவர்கள் ”உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ”இதில் மழைச்சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே!” என்றார். அப்போது அவர்கள், ”ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டுவிட்டு, ”மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 1.இறைநம்பிக்கை

மோசடி என்பதும் ஏமாற்றுவதின் ஒரு வகைதான். மோசடி என்ற இந்த ஏமாற்று குணம் யாரிடம் இருக்குமோ அவர் "என்னைச் சார்ந்தவரல்ல" என்று நபி ஸல் அவர்கள் சொன்ன வார்த்தை இந்த இடத்தில் அவசியம் கவணிக்கத் தக்கதாகும்.

عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ النَّجْشِ»      البخاري

விலையேற்றம் செய்வதை தடை செய்துள்ளார்கள்.

ஆனால் உண்மையாக ஏமாற்றம் இம்மையின் ரப்‌பின் கட்டளைகளை மீறி நடப்பவருக்கு நாள் மறுமையில் மகத்தான வேதனை உண்டு. அல்லாஹ் நம்மை எச்சரிக்கக்கூடிய ஏமாற்றுக்காரனை பற்றி குர்ஆனில் குறிப்பிடும் போது 

 يَعِدُهُمْ وَيُمَنِّيهِمْ وَمَا يَعِدُهُمُ الشَّيْطَانُ إِلَّاغُرُورًا        4:120

மேலும் பார்க்க : 17:64,  33:12,  35:40, 3:185, 31;33,

தீய நடத்தையால்  எண்ணற்ற ஏமாற்றங்கள் நடந்தேறி தான் வருகிறது. இவ்வுலகில் ஏமார்ந்துவிட்டால் சரிகட்டி விடலாம். ஆனால் மறுமையின் ஏமாற்றம் மிகப் பெரிய கைசேதத்தை தரும்.

அல்லாஹ்வின் கட்டளைகளையும் அவன் தூதரின் கட்டளைகளையும் அணுபிசகாது வாழ அருள்பாலிப்பானாக. பிறரை ஏமாற்றி மறுமையில் நாம் ஏமாறாமல் இருக்க வல்லோன் அல்லாஹ் வழிவகை செய்வானாக. இது போன்ற ஏமாற்று குணங்களை விட்டும் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!!! ஆமீன் ஆமீன் யாரப்‌பல் ஆலமீன்  

ஏமாறாதே!!!! ஏமாற்றாதே!!!! ~ WARASATHUL ANBIYa

பிரபல்யமான பதிவுகள்