நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

செவ்வாய், செப்டம்பர் 18, 2018

இந்தியாவின் அசிங்கம்,

இந்தியா இனி மெல்லச் சாகும்

ஆனோடு ஆண் இணைவதும்
பெண்ணோடு பெண் புனைவதும்
தனிப்பட்ட விருப்பமென்ற
தனிச்சிறப்பான தீர்ப்பளித்த மாண்புமிகு நீதியரசர்களுக்கு.,

என் மீது
நம்பிக்கையற்றோர்
நான்
இயற்கை பேசுகிறேன்
என்பதாகக் கூட
வைத்துக் கொள்ளலாம்...

நாளை
உங்கள் மகன்
வந்து நிற்பான்.,
எனக்கு
உங்கள் மருமகளை பிடிக்கவில்லை
நல்ல மருமகனை
பாருங்கள் என்று...

நாளை மறுநாள்
உங்கள்
மகள் வந்து நிற்பாள்.,
எனக்கு உங்கள் மருமகனை
பிடிக்கவில்லை
நல்ல மருமகளை
பாருங்கள் என்று...

அதற்கு
அடுத்த நாள்.,
இவர்களுக்காக
நீங்கள்
எங்கு போய்
நிற்பீர்கள்?...

தலைமை நீதிபதிகளாக
யோசித்தீர்களே!

நல்ல ஒரு தகப்பனாக
யோசித்தீர்களா?...

உங்கள் முன்
வந்து நின்று
நான் வாதிட மாட்டேனென்று
எழுதி விட்டீர்கள்
தீர்ப்பொன்று
இதுதான்
இனி
நியதியென்று...

இதுதான்
"என் நியதி" என்று
ஏதேனில்
நான்
சொல்லியிருந்தால்?.,

ஆதாமிற்கு
ஓர் ஆதாமையும்
ஏவாளுக்கு
ஓர் ஏவாளையும்

இறைவன்
கொடுத்திருந்தால்?..,

திருந்தாத
இந்த கூட்டமேது?
தீர்ப்பு எழுதிய
நீங்களேது?...

உங்கள் தாய் ஏது

இறைவேதத்தில்

சொர்க்கம் போல்
இருந்த தேசம்
ஆகாயத்து
அக்கினியால்
அழிந்த கதை
தெரியுமா?...

பெண்ணோடு
பெண் கூடி
ஆணோடு
ஆண் கூடி
பெரும் பாவம்
செய்ததினால்
அழிந்ததையா
அத்தேசம்...

ஐயோ
என் இந்தியாவே
இனியும் நீ
தாங்குவாயோ?...
ஹார்மோனின் குறைபாடு
கற்பனையின் மாறுபாடு
இவைகளை
கலைத்தெறியும்
கல்வி முறை
காணவில்லையோ
என் தேசத்திலே...

இறையென்னை
மீறி விட்டாய்!
இயற்கையதை
மாற்றி விட்டாய்!.,
இனி வரும் அழிவிற்கு
பெரும் தீர்ப்பு
நீ எழுதி விட்டாய்!...

பண்பாடு
கலாச்சாரம்
பறந்து இனி
விரைந்தோடும்.,
வீட்டிலொரு
பெண்ணிருந்தாள்
இனி பெண் தேடும்
நிலையாகும்...

அடுக்குமோ
மா பாதகம்!
இனி இந்த தேசம்
அழியாமல்
என்ன செய்யும்?!...

எனக்காக வாதிட
யாருமில்லை
என்றுதானே
இப்படியொரு
தீர்ப்பினை
எழுதிவிட்டீர்கள்
என் இந்தியாவிற்கு...

உங்கள்
தேசத்து மலர்களில்
இனி
மகரந்தச் சேர்க்கையில்லை.,

உங்கள்
தேசத்தின் மாண்பைச் சொல்ல
என்னிடம்
வார்த்தையில்லை...

தீர்ப்பை
எழுதிவிட்டீர்கள்.,

இனி
கொஞ்சங்காலம் தான்.,

உங்கள்
மீசைகளை
பிடித்திழுக்க
பேரன்கள்
பிறப்பதில்லை.,

பட்டுப் பாவாடை
சட்டைகளோடு
பேத்திகள்
நடப்பதில்லை...

இனி
எந்திரத்தில்
பொம்மை வாங்கி
எங்கள்
சந்ததியென்று
சொல்லிக் கொள்ளுங்கள்...

இறையாகிய என்னை
மறந்த தேசம்.,

நல்
இயற்கையை
துறந்த தேசம்.,

பாவ
இச்சையில்
மகிழும் தேசம்.,

இந்தியா
இனி
மெல்லச் சாகும்

என்
தேசத்திற்காய்
கண்ணீருடன்..,

வெள்ளி, செப்டம்பர் 14, 2018

இசையும்,இஸ்லாமும்,

சினிமா பாடல்கள் அல்லாத பாடல்களைக் கேட்கலாமா❓ மற்றும் பாடலாமா❓*

சினிமா பாடல்கள் அல்லாத பாடல்களைக் கேட்கலாமா?

*பாட்டுக்கள் இரு வகைகளில் உள்ளன.*

ஒன்று இசைக்கருவிகள் மூலம் இசையை இணைத்து பாடப்படும் பாடல்கள்.

மற்றொன்று இசைக் கருவிகள் மூலம் இசையை இணைக்காமல் ராகமாகப் பாடும் பாடல்கள்.

இசைக் கருவிகள் மூலம் இசைத்தல் கூடுமா என்பதை

இசைக் கருவிகள் கூடுமா

என்ற ஆக்கத்தில் அறிந்து கொள்ளலாம்

பாடல்களைப் பொறுத்த வரை நல்ல கருத்துள்ள பாடல்களாக இருந்தால் அவற்றை இஸ்லாம் அனுமதிக்கின்றது. ஆபாசமான மற்றும் தவறான கருத்துக்கள் அடங்கிய பாடல்களை இஸ்லாம் தடை செய்கின்றது. நற்கருத்துகள் அடங்கிய பாடல்களை இசைக் கருவிகளின்றி பாடுவதற்கு மட்டுமே அனுமதியுள்ளது.

பின்வரும் செய்திகள் இதற்கு ஆதாரங்களாக உள்ளன.

4001حَدَّثَنَا عَلِيٌّ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ حَدَّثَنَا خَالِدُ بْنُ ذَكْوَانَ عَنْ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ قَالَتْ دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَاةَ بُنِيَ عَلَيَّ فَجَلَسَ عَلَى فِرَاشِي كَمَجْلِسِكَ مِنِّي وَجُوَيْرِيَاتٌ يَضْرِبْنَ بِالدُّفِّ يَنْدُبْنَ مَنْ قُتِلَ مِنْ آبَائِهِنَّ يَوْمَ بَدْرٍ حَتَّى قَالَتْ جَارِيَةٌ وَفِينَا نَبِيٌّ يَعْلَمُ مَا فِي غَدٍ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَقُولِي هَكَذَا وَقُولِي مَا كُنْتِ تَقُولِينَ رواه البخاري

ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். -(இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் பின் தக்வான் -ரஹ்- அவர்களிடம்) எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போல நபி (ஸல்) அவர்கள் எனது விரிப்பின் மீது அமர்ந்தார்கள்'' (என்று ருபய்யிஉ கூறினார்கள்)- அங்கு சில (முஸ்லிம்) சிறுமிகள் கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார்'' என்று கூறினாள். உடனே நபி (ஸல்) அவர்கள், இப்படிச் சொல்லாதே. (இதை விடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்'' என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 4001

மறைவான ஞானம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இல்லை. இறைவனுக்கு மட்டுமே இந்த ஞானம் இருக்கின்றது. முஹம்மது (ஸல்) அவர்களால் நாளை நடப்பதை அறிய முடியும் என்ற தவறான கருத்தை சிறுமி பாடிய போது அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்கிறார்கள். இதைத் தவிர்த்து விட்டு மற்றவற்றைப் பாடுமாறு அனுமதி கொடுக்கிறார்கள்.

எனவே தவறான கருத்துள்ள பாடல்களைப் பாடுவது கூடாது. நற்கருத்துள்ள பாடல்களை மட்டுமே பாடலாம்.

இசைக்கருவிகளை இஸ்லாம் தடுத்துள்ளது என்றாலும் திருமணம், பெருநாள் போன்ற சந்தோஷமான நேரங்களில் மட்டும் கஞ்சிராக்களை அடித்து பாடுவது அனுமதிக்கப்பட்டிருக்கின்றது.

صحيح مسلم

2098 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ دَخَلَ عَلَىَّ أَبُو بَكْرٍ وَعِنْدِى جَارِيَتَانِ مِنْ جَوَارِى الأَنْصَارِ تُغَنِّيَانِ بِمَا تَقَاوَلَتْ بِهِ الأَنْصَارُ يَوْمَ بُعَاثٍ قَالَتْ وَلَيْسَتَا بِمُغَنِّيَتَيْنِ. فَقَالَ أَبُو بَكْرٍ أَبِمُزْمُورِ الشَّيْطَانِ فِى بَيْتِ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- وَذَلِكَ فِى يَوْمِ عِيدٍ. فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « يَا أَبَا بَكْرٍ إِنَّ لِكُلِّ قَوْمٍ عِيدًا وَهَذَا عِيدُنَا ».

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

புஆஸ் எனும் போரின் போது அன்சாரிகள் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமிகள் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர். (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் இறைத் தூதரின் இல்லத்திலேயே சைத்தானின் இசைக் கருவிகளா? என்று (கடிந்து) பேசினார்கள். இது ஒரு பெருநாள் தினத்தில் நடந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவ்விருவரையும் விட்டு விடுங்கள்). அபூபக்ரே! ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள் என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 2098

சைத்தானின் இசைக் கருவிகளா? என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய போது நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய கருத்தை மறுக்கவில்லை. மாறாக இன்றைக்குப் பெருநாளாக இருப்பதால் இன்றைக்கு மாத்திரம் விட்டுவிடுமாறு விதிவிலக்குத் தருகிறார்கள். இசைக் கருவிகள் சைத்தானுடையது என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியது தவறு என்றிருந்தால் நீ சொல்வது தவறு. இசைக் கருவிகள் அனுமதியளிக்கப்பட்டவை தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறியிருப்பார்கள். இன்றைக்கு மட்டும் விட்டுவிடு என்று அவர்கள் கூறுவதிலிருந்து மற்ற நாட்களில் இசைக்கருவிகள் கூடாது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பெருநாள் தினத்தில் மட்டும் இதற்கு அனுமதி உள்ளது என்பதால் இவ்வாறு செய்பவர்களைத் தடுக்கக் கூடாது.

பின்வரும் செய்திகளும் நற்கருத்துள்ள பாடல்களைப் பாடலாம் என்று கூறுகின்றது.

5163حَدَّثَنَا الْفَضْلُ بْنُ يَعْقُوبَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَابِقٍ حَدَّثَنَا إِسْرَائِيلُ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ أَنَّهَا زَفَّتْ امْرَأَةً إِلَى رَجُلٍ مِنْ الْأَنْصَارِ فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا عَائِشَةُ مَا كَانَ مَعَكُمْ لَهْوٌ فَإِنَّ الْأَنْصَارَ يُعْجِبُهُمْ اللَّهْوُ رواه البخاري

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நான் ஒரு பெண்ணை அன்சாரிகளில் ஒருவ(ருக்கு மணமுடித்து வைத்து, அவளை அவ)ரிடம் அனுப்பி வைத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ஆயிஷாவே! உங்களுடன் பாடல் (பாடும் சிறுமியர்) இல்லையா? ஏனெனில், அன்சாரிகளுக்குப் பாடலென்றால் மிகவும் பிடிக்குமே'' என்றார்கள்.

நூல் : புகாரி 5162

3841حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَبْدِ الْمَلِكِ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَصْدَقُ كَلِمَةٍ قَالَهَا الشَّاعِرُ كَلِمَةُ لَبِيدٍ أَلَا كُلُّ شَيْءٍ مَا خَلَا اللَّهَ بَاطِلٌ وَكَادَ أُمَيَّةُ بْنُ أَبِي الصَّلْتِ أَنْ يُسْلِمَ رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அறிக! அல்லாஹ்வைத் தவிர உள்ள பொருள்கள் அனைத்துமே அழியக் கூடியவையே'' என்னும் லபீத் எனும் கவிஞனின் சொல் தான், கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிக உண்மையான சொல்லாகும். (கவிஞர்) உமய்யா பின் அபிஸ் ஸல்த் (தன் கவிதையின் கருத்துகளால்) இஸ்லாத்தை ஏற்கும் அளவிற்கு வந்து விட்டார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 3841

4185حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ وَابْنُ أَبِي عُمَرَ كِلَاهُمَا عَنْ ابْنِ عُيَيْنَةَ قَالَ ابْنُ أَبِي عُمَرَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ عَنْ أَبِيهِ قَالَ رَدِفْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فَقَالَ هَلْ مَعَكَ مِنْ شِعْرِ أُمَيَّةَ بْنِ أَبِي الصَّلْتِ شَيْءٌ قُلْتُ نَعَمْ قَالَ هِيهْ فَأَنْشَدْتُهُ بَيْتًا فَقَالَ هِيهْ ثُمَّ أَنْشَدْتُهُ بَيْتًا فَقَالَ هِيهْ حَتَّى أَنْشَدْتُهُ مِائَةَ بَيْتٍ رواه مسلم

ஷரீத் பின் சுவைத் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :

ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களது வாகனத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், உமய்யா பின் அபிஸ் ஸல்த்தின் கவிதைகளில் ஏதேனும் உமக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள். நான் ஆம் (தெரியும்)'' என்றேன். பாடு'' என்றார்கள். உடனே நான் ஒரு பாடலைப் பாடினேன். இன்னும் பாடு'' என்றார்கள். பிறகு இன்னொரு பாடலைப் பாடினேன். இன்னும் பாடு'' என்றார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதருக்காக நூறு பாடல்களைப் பாடிக் காட்டினேன்.

நூல் : முஸ்லிம் 4185

நற்கருத்துள்ள பாடல்களைப் பாடலாம் என்பதற்கு இன்னும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

அல்லாஹூவே மிகவும் அறிந்தவன்

ஞாயிறு, செப்டம்பர் 02, 2018

விநாயகர் சதுரத்தி வரலாறு,

விநாயகர்_சதுர்த்தி வரப் போகுது,,,*

*கோவையில் எல்லாம் இப்பவே  கடை கடையா வசூல ஆரம்பிச்சுட்டாங்க,,,எதுக்கு கொண்டாடறானுகனு அவங்களுக்கும் தெரியாது,,காச கொடுக்கற மக்களுக்கும் தெரியாது,,,*

முதல்ல விநாயகர் சதுர்த்தி உருவான வரலாற்றையும் தெரிந்து கொள்ளலாமே !!!

*1890 களுக்கு முன்பு மகாராஷ்டிராவையே தாண்டாத விநாயகர் என்ற கதாபத்திரத்தை,,பச்சை பார்ப்பான் திலகர் தான் மகாராட்டிராவில்  தனது பார்ப்பன இன நலனுக்காக   பரப்பினான்,,,*

சரி முதலில் இந்த திலகரை பற்றி தெரிந்து கொள்வோம் !!!

*திலகர் என்பவன் ,,,பார்ப்பான்(பிராமணன்) கட்டுப்பாட்டில்  தான் இந்தியா இருக்க வேண்டும்,,, வேதத்தின்படி மற்றவர்கள் எல்லாம் பிராணமனனுக்கு அடிமையாய் இருக்க வேண்டும் என்ற வன்மம் கொண்டவனாக இருந்தான்,,,*

அதற்கு சரியான எடுத்துக்காட்டு ,அதே காலகட்டத்தில் மகாராஷ்டிராவில் ப்ளேக் நோய் பரவி ஆயிரக்கணக்கான மக்களும்,குழந்தைகளும் பரிதாபமாக தங்கள் உயிர்களை இழந்து கொண்டிருக்கையில்,,, ஆங்கிலேய அதிகாரி,,,எலிகளால் தான் ப்ளேக் பரவுகிறது என்பதை கண்டறிந்து,,, எலிகளை ஒழிக்க உத்தரவிடுகிறார்,,,

*அதனடிப்படையில் எலிகளை ஒழிக்குப் பணியில் அன்று பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் வேலைக்கு இருந்து மக்கள்,,,,அக்ரஹாரத்தில் இருக்கும் எலிகளை அழிக்க வருகையில்,,,,அவர்கள் உள்ளே வந்தால் மிகப் பெரிய தீட்டாகிவிடும் எனக் கூறி,மிகப் பெரிய ரகளை செய்தான்,,,*

அடுத்த நாள் இவ்வாறு தனது கேசரி பத்திரிகையில் எழுதுகிறான் *"இந்த மிலேச்சர்கள்(ஆங்கிலேயர்கள்) மக்கள் இறக்கிறார்கள் எனக் கூறி எலிகளை ஒழிக்கிறேன் என் கிளம்பியுள்ளனர்,,அவர்கள் காப்பாற்ற நினைக்கும் பிராமணர் அல்லாத ஜென்மங்கள் பிராமணன் தலையில் இருந்து உதிரும் மயிறுக்கு சமம்"* என எழுதினான்,,,,

பார்ப்பான் உருவாக்கிய பாட வரலாற்றில் திலகர் என்பொன் மிகப் பெரிய விடுதலை போராட்ட வீரன் போலவும்,, விநாயகர் சதுர்த்தியை ஆங்கிலேயருக்கு எதிராக மக்களை திரட்ட பயன்படுத்தினார் எனக் கூறியுள்ளான்,,,

சரி அப்படியானால் விடுதலை அடைந்தவுடன்  கொண்டாட்டத்தை நிறுத்தி இருக்கலாம் தானே? ஏன் செய்யவில்லை??

*18ஆம் நூற்றாண்டில் மராட்டிய மண்ணை ஆண்ட பேஷ்வாக்களின் ஆட்சியில் அவர்களின் அரண்மனையில் கணபதி ரங் மஹாலில் கணபதி உற்சவம் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வில் அலங்காரமும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அரசர் கலைஞர்களுக்கு சன்மானம் கொடுத்து மகிழ்வித்தார்,,, ஓர் அரசவை நிகழ்வாக மத வழிபாட்டின் அடையாளமாக இருந்த கணபதி உற்சவம் #1818ல் ஆங்கிலேயர் பேஷ்வாக்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்ததுடன் முடிந்து போனது,,,*

இக்காலக்கட்டத்தில் மராட்டிய மண்ணில் பார்ப்பனர் அல்லாதோர் இயக்கத்தின் தலைவராகவும் வழிகாட்டியாகவும் இருந்தார் #மகாத்மா_புலே மற்றும் அவருக்குப் பின் #சாகுமகராஜ்.

SATYA_SODHAK_MOVEMENT என்ற புலே ஆரம்பித்த இயக்கத்தின் தாக்கம் சமூகத்தில் இளைஞர்களிடம் ஓர் எழுச்சியை ஏற்படுத்தி இருந்தது,,,

*இந்து மதம் பார்ப்பனர் அல்லாதோரை இரண்டாம்தர மூன்றாம்தர சூத்திரர்களாகவே வைத்திருப்பதை அவர்கள் கேள்விக்குட்படுத்தினார்கள்,,,,*

எனவே கணபதி விழா சர்வஜன கணபதி விழாவாக உருமாற்றியதன் மூலம் பார்ப்பனர் அல்லாதோரை எக்காலத்தும் இந்துத்துவ சாம்ராஜ்யத்தில் சூத்திரர்களாகவும் பஞ்சமர்களாகவும் பத்திரமாகப் பூட்டி வைத்துக் கொள்ளும் அற்புதமான பூட்டும் சாவியுமாக கிடைத்தது கணபதி உற்சவம்,,,

*அதுநாள் வரை இந்துக்களும்,இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக தான் இருந்து வந்தனர்,,, இசுலாமியர்களின் மொகரம் விழாவில் அக்காலத்தில் இந்து மதப் பாடகர்களும் கலைஞர்களும் கலந்து கொள்வது இயல்பாக நடந்துவந்தது,,மக்களை பிரித்தாண்டு வாழும் பார்ப்பனர்கள் கண்களுக்கு உருத்தாதா??*

ஏற்கனவே மகாத்மா பூலேவினால்,,இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களின் இழிவுக்கு காரணம் பார்ப்பனர்களும்,,அவர்கள் உருவாக்கிய போலி இந்து மாதமும் தான் என அம்பலமான நிலையில்,,,,

*ஒட்டுமொத்த மக்களும் தங்களை சூத்திரர்களாக,,பஞ்சமர்களாக வைத்திருப்பது பார்ப்பான் தான் என உணர்ந்து பார்ப்பனர்களுக்கு எதிராக திரள்வதை கண்டு மிரண்டு,,,*

*எதிரி பட்டியலில் இருந்து தன்னை நீக்கி,,,மக்களிடம் வேறொருவரை எதிரியாக செயற்கையாக உருவாக்கி மக்களை மடைமாற்ற வேண்டும் என முடிவு செய்து இந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை இஸ்லாமியர்களுக்கு எதிராக உருவாக்கினான்,,,*

*அதன்படி வம்படியாக ஊர்வலத்தை மசூதிகள் வழியாக எடுத்துச் சென்று, மசூதிகளை தாக்குவதும்,,,இஸ்லாமியர்களுக்கு எதிராக கோசங்கள் எழுப்புவதும் என இந்த நிகழ்வை வன்முறை செய்வதற்கே உருவாக்கினர்,,,*

*1990 களுக்கு முன்பு வரை தமிழ்நாட்டிற்கும்,விநாயகர் சதுர்த்திக்கும் எந்த சம்மந்தமும் இல்லை,,,அதன் பின்னர் தமிழகத்தில் பரவிய இந்து முன்னணி என்ற இந்துக்களுக்கு எதிரான கும்பல்,,,தங்கள் அரசியல் லாபத்திற்காக வடநாட்டு மார்வாடிகளிடம் இருந்து வரும் பெரும் பணத்தை பெற்று,ஊர்வலம் என்ற பெயரில் இஸ்லாமியர்கள் மீது வன்முறையை ஏவ பயன்படுத்திக்  கொண்டது,,,*

அதே போல மக்களின் பக்தியையும்,,மூட நம்பிக்கையையும் பயன்படுத்தி இதை ஒரு மக்கள் திரள் நிகழ்வாக உருவாக்கியது,,,

சரி விநாயகர் சதுர்த்தியை பற்றி தெரிந்து கொண்டோம்,,,,
*விநாயகரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா??*

*#கைபர்_போலன் கணவாய் வழியே இந்த  வந்த பார்ப்பனக் கூட்டம்,,மக்களை சாதிகளாக பிரித்து,,ஏற்றத்தாழ்வுகளை கற்பித்து மூடர் சமூகமாக மாற்றியதை கண்டு,,,#புத்தர் உருவாகி மக்கள் விரோத பார்ப்பன இந்து மதத்தை வீழ்த்தி,,,பெளத்த மதத்தை இந்தியா முழுவதும் பரப்புகிறார்,,,அதன் பின்னர் #பெளத்தத்தை அழித்து மீண்டும் கோலோச்சிய பார்ப்பனர்கள்,,,,நம் புத்தரை கேவலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில்,,,புத்தரின் சிலையில் உள்ள தலையை நீக்கிவிட்டு,,,அசிங்கமான தோற்றத்தை தர வேண்டும் என்பதற்கான யானை தலையை வைத்து மகிழ்ந்தனர்,,,அதையும் நாளடைவில் தங்கள் கட்டுக்கதைகள் மூலம் கடவுளாக்கினர்,,,*

*ஆக மொத்தம் அப்பாவி இஸ்லாமியர்கள் மீது வன்முறையை ஏவப் பயன்படும் இந்த மக்கள் விரோத நிகழ்வில் இருந்து மக்கள் வெளியேறக் கேட்டுக் கொண்டு,,,*

அனைவருக்கும் அட்வான்ஸ்  "விநாயகன் சதுர்த்தி"  வாழ்த்துக்கள் !!

-மனோஜ் குமார்
-தந்தை பெரியார் திராவிடர் கழகம்

பிரபல்யமான பதிவுகள்