நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

திங்கள், ஜூன் 24, 2019

ஓரினச்சேர்க்கை பற்றி இஸ்லாம்,

🌹 *70 பெரும் பாவங்களின் விளக்கங்கள்*⁉

✒ கட்டுரை :- *ஹாஜி M.A அப்துல் நசீர் சேலம், தமிழ் நாடு*  *93608 97222*

🌹 *தொடர் பதிவுகள்*  *150 - 41*

📢 *11* *ஓரினச் சேர்க்கை* ⁉

லூத் நபியின் கூட்டத்தினர் செய்த கொடிய ஓரினச் சேர்க்கை எனும் பாவத்தைச் செய்பவர்களைக் கண்டால் *இருவரையும் கொலை செய்யுங்கள்* என நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

📗 *அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா*

📗 *ஸூரத்துஷ் ஷூஃரா (கவிஞர்கள்) மக்கீ 26 வது அத்தியாயம்*., கீழ் காணும் வசனங்களில் அல்லாஹ் கூறுகின்றான்.,

*اَتَاْتُوْنَ الذُّكْرَانَ مِنَ الْعٰلَمِيْنَۙ‏*

உங்களுக்குப் படைக்கப்பட்ட பெண்களை விட்டுவிட்டு எல்லா படைப்புகளுக்குமே மாறாக நீங்கள் உங்கள் காம இச்சையைத் தணித்துக்கொள்ள ஆண்களிடமே செல்கின்றீர்கள். *அல்குர்ஆன் : 26:165*

*وَ تَذَرُوْنَ مَا خَلَقَ لَـكُمْ رَبُّكُمْ مِّنْ اَزْوَاجِكُمْ‌ بَلْ اَنْـتُمْ قَوْمٌ عٰدُوْنَ‏*

உங்கள் இறைவன் உங்களுக்காக படைத்த உங்கள் மனைவிகளை நீங்கள் புறக்கணித்து விட்டீர்களே! நீங்கள் அல்லாஹ்வின் இந்த இயற்கை முறையை மீறிய மக்கள் என்று கூறினார். *அல்குர்ஆன் : 26:166*

*قَالُوْا لَٮِٕنْ لَّمْ تَنْتَهِ يٰلُوْطُ لَـتَكُوْنَنَّ مِنَ الْمُخْرَجِيْنَ‏*

அதற்கவர்கள் *லூத்தே*❗ இவ்வாறு கூறுவதை விட்டு நீங்கள் விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாக நீங்கள் நம் ஊரைவிட்டுத் துரத்தப்படுவீர்கள் என்று கூறினார்கள்.
📗 *அல்குர்ஆன் : 26:167*

*قَالَ اِنِّىْ لِعَمَلِكُمْ مِّنَ الْقَالِيْنَ‏*

அதற்கவர் நிச்சயமாக நான் உங்களுடைய இத்தீய செயலை வெறுக்கின்றேன் என்று கூறி,
📗 *அல்குர்ஆன் : 26:168*

*رَبِّ نَجِّنِىْ وَاَهْلِىْ مِمَّا يَعْمَلُوْنَ‏*

*என் இறைவனே*❗ இவர்களின் தீய செயலிலிருந்து என்னையும், என் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்வாயாக❗ என்று பிரார்த்தித்தார்.
📗* அல்குர்ஆன் : 26:169*

*فَنَجَّيْنٰهُ وَ اَهْلَهٗۤ اَجْمَعِيْنَۙ‏*

ஆகவே, அவரையும் அவர் குடும்பத்தினர் அனைவரையும் நாம் பாதுகாத்துக் கொண்டோம். 📗 *அல்குர்ஆன் : 26:170*

*اِلَّا عَجُوْزًا فِى الْغٰبِرِيْنَ‌‏*

எனினும், அவருடைய ஒரு கிழ மனைவியைத் தவிர அவள் லூத்துடன் வராது பின் தங்கியவர்களுடன் தங்கி அழிந்து விட்டாள்.
📗 *அல்குர்ஆன் : 26:171*

*ثُمَّ دَمَّرْنَا الْاٰخَرِيْنَ‌‏*

பின்னர், நாம் மற்ற அனைவரையும் அழித்து விட்டோம். *அல்குர்ஆன் : 26:172*

*وَاَمْطَرْنَا عَلَيْهِمْ مَّطَرًا‌ فَسَآءَ مَطَرُ الْمُنْذَرِيْنَ‏*

அவர்கள் மீது நாம் கல் மழையை பொழியச் செய்தோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட அவர்களின் மீது பொழிந்த கல் மழை மகா கெட்டது. 📗 *அல்குர்ஆன் : 26:173*

*اِنَّ فِىْ ذٰ لِكَ لَاَيَةً‌   وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ‏*

நிச்சயமாக இதிலோர் நல்ல அத்தாட்சியிருந்தது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.
📗 *அல்குர்ஆன் : 26:174*

*كَذَّبَ اَصْحٰبُ لْئَيْكَةِ الْمُرْسَلِيْنَ*
‌‌‏
*மத்யன்* என்னும் ஊரில் சோலையில் வசித்திருந்தவர்களும் நம்முடைய தூதர்களைப் பொய்யாக்கினார்கள். 📗 *அல்குர்ஆன் : 26:176*

*اِذْ قَالَ لَهُمْ شُعَيْبٌ اَلَا تَتَّقُوْنَ‌‏*

ஷுஐப் நபி அவர்களை நோக்கி நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி பாவத்திலிருந்து விலகிக்கொள்ள வேண்டாமா❓
📗 *அல்குர்ஆன் : 26:177*

*فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ‌‏*

அல்லாஹ்வை அஞ்சி எனக்கு கட்டுப்படுங்கள்.
📗 *அல்குர்ஆன் : 26:179*

*وَاتَّقُوا الَّذِىْ خَلَقَكُمْ وَالْجِـبِلَّةَ الْاَوَّلِيْنَ‏*

உங்களையும் உங்களுக்கு முன்னுள்ளோரையும் எவன் படைத்தானோ அவனுக்கு நீங்கள் பயப்படுங்கள் என்றும் கூறினார்.
📗 *அல்குர்ஆன் : 26:184*

*قَالَ رَبِّىْۤ اَعْلَمُ بِمَا تَعْمَلُوْنَ‏*

அதற்கவர் நீங்கள் செய்து கொண்டிருக்கும் மோசகாரியத்தை என் இறைவன் நன்கறிவான் இதற்குரிய தண்டனையை உங்களுக்கு அவசியம் தருவான் என்று கூறினார்.
📗 *அல்குர்ஆன் : 26:188*

*فَكَذَّبُوْهُ فَاَخَذَهُمْ عَذَابُ يَوْمِ الظُّلَّةِ‌ اِنَّهٗ كَانَ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ‏*

எனினும் பின்னரும் அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள். ஆகவே, ஒரு நாள் அவர்களை அடர்ந்த நிழலையுடைய மேகத்தின் வேதனை பிடித்துக் கொண்டது. நிச்சயமாக அது வேதனையுடைய மகத்தான நாளாகவே இருந்தது. 📗 *அல்குர்ஆன் : 26:189*

*اِنَّ فِىْ ذٰ لِكَ لَاَيَةً ‌  وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ‏*

நிச்சயமாக இதிலோர் அத்தாட்சி இருந்தும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. *அல்குர்ஆன் : 26:190*

*وَاِنَّهٗ لَـتَنْزِيْلُ رَبِّ الْعٰلَمِيْنَ‏*

*நபியே*❗நிச்சயமாக குர்ஆன் ஷரீஃப் என்னும் இது அகிலத்தாரின் இறைவனால்தான் அருளப்பட்டது. *அல்குர்ஆன் : 26:192*

*فَقَرَاَهٗ عَلَيْهِمْ مَّا كَانُوْا بِهٖ مُؤْمِنِيْنَ‏*

அவர் இவர்களுக்கு ஓதிக் காண்பித்தால் இதனை அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். *அல்குர்ஆன் : 26:199*

*كَذٰلِكَ سَلَكْنٰهُ فِىْ قُلُوْبِ الْمُجْرِمِيْنَ‏*

அத்தகைய கொடிய நிராகரிப்பையே இக்குற்றவாளிகளின் உள்ளங்களில் நாம் புகுத்தியிருக்கிறோம். *அல்குர்ஆன் : 26:200*

*لَا يُؤْمِنُوْنَ بِهٖ حَتّٰى يَرَوُا الْعَذَابَ الْاَلِيْمَۙ‏*

ஆகவே, துன்புறுத்தும் வேதனையை இவர்கள் தங்கள் கண்ணால் காணும் வரையில் இதனை நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
📗 *அல்குர்ஆன் : 26:201*

*فَيَاْتِيَهُمْ بَغْتَةً وَّهُمْ لَا يَشْعُرُوْنَۙ‏*

அவர்கள் உணர்ந்து கொள்ளாதவாறு திடுகூறாகவே அந்நாள் அவர்களை வந்தடையும். *அல்குர்ஆன் : 26:202*

*فَيَـقُوْلُوْا هَلْ نَحْنُ مُنْظَرُوْنَ‏*

அச்சமயம் அவர்கள் எங்களுக்குச் சிறிது அவகாசம் கொடுக்கப்படுமா❓
📗 *அல்குர்ஆன் : 26:203*

*اَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُوْنَ‏*

எங்களை வேதனை செய்யவா இவர்கள் அவசரப் படுகின்றனர்❓என்று கூறுவார்கள்.
📗 *அல்குர்ஆன் : 26:204*

*اَفَرَءَيْتَ اِنْ مَّتَّعْنٰهُمْ سِنِيْنَۙ‏*

*நபியே*❗நீங்கள் கவனித்தீர்களா❓ நாம் இவர்களை இவர்கள் விரும்புகிறவாறு பல வருடங்கள் சுகமனுபவிக்கவிட்டு வைத்திருந்தபோதிலும், *அல்குர்ஆன் : 26:205*

*ثُمَّ جَآءَهُمْ مَّا كَانُوْا يُوْعَدُوْنَۙ‏*

பின்னர், அவர்களைப் பயமுறுத்தும் வேதனை வந்தடையுமானால் *அல்குர்ஆன் : 26:206*

*مَاۤ اَغْنٰى عَنْهُمْ مَّا كَانُوْا يُمَتَّعُوْنَ‏*

அவர்கள் அனுபவித்த சுகபோகங்கள் ஒன்றுமே அவர்களுக்கு யாதொரு பயனுமளிக்காதே❗
📗 *அல்குர்ஆன் : 26:207*

*وَمَاۤ اَهْلَكْنَا مِنْ قَرْيَةٍ اِلَّا لَهَا مُنْذِرُوْنَ‌‌‌‌‌* ۛ ‌ ‏

உபதேசம் செய்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களை அனுப்பாத வரையில் எவ்வூராரையும் நாம் அழித்துவிடவில்லை.
📗 *அல்குர்ஆன் : 26:208*

*யா அல்லாஹ்*❗ *இக் கொடிய பாவத்தில் ஈடுபடாமல் இருக்க எங்களுக்கு உதவி செய்வாயாக*❗

*யா அல்லாஹ்* ❗ *உனக்கு வழிப்பட்டு நடந்த கூட்டத்தில் எங்களை சேர்த்தருள்வாயாக*❗

ஞாயிறு, ஜூன் 16, 2019

மக்தப் மதரஸா,

முஸ்லிம்கள் உயர, மக்தபு
மதரஸாவும் வேண்டும்
*****************************

"மக்தப் கல்வி பயிலாத குழந்தைகள் கூரையில்லா வீட்டில் வாழ்வதற்கு ஒப்பானவர்கள் " - இஸ்லாமிய பழபொழி

" மக்தப் நடைபெறாத இடத்தில் முர்தத் நடைபெறும் என்றார் இந்திய தாருல் உலூம் நத்வதுல் உலமா கல்வி நிறுவனத்தின் அறிஞரும் இந்திய வரலாற்று ஆய்வாளருமான அபுல்ஹஸன் அலி நத்வி அவர்கள்.

மக்தப் என்றால் என்ன?
----------------------------------------
மக்தப் என்பது வேறொன்றுமல்ல அடிப்படைக்கல்வி பெறும் குழந்தைகளின் பள்ளி (Kinder garden , Nursery and primary School ) என்பது தான். ஒரு மொழியை கற்றுக்கொள்ள நாம் முதன்முதலாக போய் அமரும் திண்ணைப்பள்ளிக்கூடம் தான் மக்தப். அரபுமொழி எழுத்துக்களை படிப்பது முதல் குர்ஆன்- சுன்னாஹ் வழியில் இஸ்லாமிய மார்க்கச்சட்டங்களான ஷரியா -  ஃபிக் வரை நீக்கமற ஆரம்பக்கல்வியில் அங்குலம் அங்குலமாக கற்பித்து விடுவார்கள் அதற்குண்டான உலமாக்கள்.

மக்தப் எதை போதிக்கிறது?
-----------------------------------------------
குர்ஆனோடு தொடர்பு ஏற்படுத்துதல், வணக்க வழிபாடுகளுக்கான பயிற்சியளித்தல், அடிப்படை மார்க்க சட்டங்களை கற்றுத்தருதல்,வாழ்க்கைத் தத்துவங்களையும் நற்குணங்களையும் கற்றுத்தருதல், நபிவழி வாழ்வியலை போதித்தல்,
ஸஹாபாக்கள், இமாம்கள்,இறைநேசர்களின் முன்மாதிரி இஸ்லாமிய வாழ்வியல் முறையை கற்பித்தல் போன்ற இஸ்லாமிய அடிப்படை ஒழுக்கங்களை இளம் வயதிலேயே பயிற்றுவிப்பது. ஏழு வயதினை அடைந்த குழந்தைகளுக்கு தொழுகையை ஏவுங்கள் என்றார்கள் நபிகளார்..அப்போது ஏழு வயதிற்கு முன் அவர்களுக்கு சூராக்களையும் தொழுகை முறைகளையும் கற்பிக்க வேண்டியது பெற்றோரின் கடமை. ஆனால் தனியாக வீட்டில் வைத்து கற்றுத்தருவதை விட ஜமாத்தாக அமர வைத்து உஸ்தாத் ஒருவர் கண்டிப்புடன் கற்றுத்தருவது தான் சிறந்தது எனவே மக்தப் கல்வி அவசியமாகிறது.

இவை தான் இஸ்லாமிய ஆரம்பக்கல்வியான மக்தப் கல்வியின் பாடத்திட்டம். நபிகளாரின் போதனைகள்,தீர்க்கதரிசனங்கள் அனைத்திலும் மனிதகுலத்திற்கான வழிகாட்டுதல் உள்ளது . அவர்கள் மேற்கொண்ட அத்தனை சுன்னாஹ்களிலும் அறிவியலும் விஞ்ஞானமும் ஒளிந்துள்ளது. 1400 வருடங்களுக்கு பிந்தைய ஆங்கிலேய மேற்கத்தியர்களால் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்ட உண்மைகளையும் சுகாதாரம் பொறுந்திய உடலியலையும் கண்முன் வாழ்ந்துகாட்டிய ஒரு மகானின் வாழ்க்கை முறையை கற்று அறிதலே மக்தப் எனப்பட்டது.

வரலாறு
----------------

மக்தப் என்றால் பள்ளி,அலுவலகம் ,நூலகம் அல்லது கல் (learn) என பொருள்படும். குத்தப் என்பதும் அதன் மறுசொல் , குத்தப் என்பது எழுத்தாளர்களையும் குறிக்கும். கிதாப் என்பது புத்தகத்தை குறிக்கும். பத்தாம் நூற்றாண்டின் இணையற்ற இஸ்லாமிய விஞ்ஞானி அல்ஸீனா எனும் அவிசீனா என்பவர் தான் குழந்தைகளுக்கான மக்தப் கல்விச்சாலைகளை முறையாக அமைத்தவர். அவிசீனாவின் இஸ்லாமிய மெய்யியல் புத்தகத்தில் ("The Role of the Teacher in the Training and Upbringing of Children") குழந்தைகளை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான ஒழுங்குமுறைகள் மற்றும் அவர்களின் குணங்களை பற்றி எழுதியுள்ளார். 6வயது முதல் -14 வயது  வரையிலான மக்தப் அடிப்படை கல்வி பெற்ற ஒருவரால் சீரான மனிதராக வாழ முடியும் என அவர் கூறினார்.

அதற்கு பிறகு 14 வயது முதல் குர்ஆனின் கண்டுபிடிப்புகளை அடிப்படையாக கொண்ட கிளை படிப்புகளை அவர் தேர்ந்தெடுத்து படிப்பார்.அது கணிதம், கட்டடக்கலை,மருத்துவம்,விஞ்ஞானம்,வணிகம்,வரலாறு,பொருளாதாரம்,இலக்கியம்,உளவியல் மற்றும் கலை என அவரவரது விருப்ப படிப்புகளாக அமையும் , இந்த இரண்டாம் கட்ட படிப்பு (Secondary Education and Graduations) தான் மதரஸா எனப்பட்டது. மதரஸத்துகளுக்கு செல்வோர் மேற்படிப்பை தொடருபவர் என அர்த்தம்.

ஆரம்பக்கல்வி என்பது உலகில் தோன்றிய எல்லா நாகரீகத்திலும் மேற்தட்டு மக்களுக்காகவும் அரச பரம்பரைக்காகவுமே என இருந்த காலகட்டத்தில் இஸ்லாம் தான் கல்வி கற்பதை கட்டாயமாக்கியது, ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்வி சரிசமமாக கொடுக்கப்பட வேண்டும் என வழிகாட்டிய இஸ்லாமிய வசனங்கள் அனைத்தும்  கல்வியின் முக்கியத்துவத்தினை அழுத்தமாக வலியுறுத்தியது. இந்திய வழி குருகுல கல்வி முறை கூட நாடாளும் வீட்டு பிள்ளைகளுக்கும் அவர்களை வழிநடத்தும் புரோகித குல மக்களுக்கும் மட்டுமே கொடுக்கப்பட்டுக்கொண்டிருந்த்து.

ஆனால் பாரசீக மண்ணில் இப்னு ஹாஜர் அல்'ஹைதமி எனும் 16ம் நூற்றாண்டின் ஒரு பிரபல முஹதீத் (ஹதீஸ் கலை வல்லுனர் )  அவர்களின் முயற்சியால் ஏழை குழந்தைகளும் அடிப்படைக்கல்வி கற்க வேண்டும் என்கிற கட்டாயத்தை உருவாக்கினார். . இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி உருவாக்கப்பட்ட பிறகு தான் மக்தப்களும் மதரஸாக்களும் முதன்முதலாக உருவாக்கப்பட்டன. வட இந்தியர்களுக்கு முன்பாகவே கேரளக்கரைக்கு இஸ்லாம் அரபு வணிகர்கள் மூலம் அறிமுகமாகிவிட்டிருந்த காரணத்தால் அரபுக்கணிதமும், எழுத்துமுறைகளும் மலபாரிகளுக்கு அறிமுகமாகியிருந்த்து. அவ்வகையில் இந்தியாவின் முதல் மக்தப் மலபாரில் தான் தோன்றியது. அங்கு வந்த அரபு வணிகர்கள், வியாபாரம் போக திருமண பந்த்த்திலும் ஈடுபட்டனர். இதன் விளைவாக அரபு வழித்தோன்றல்களுக்கு கற்பிக்கப்பட அங்கே மக்தப்கள் உருவாயின.

வளர்ச்சி
---------------

ரமேஷ் உபாத்யாய எனும் வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான ஆவணங்கள் பாதுக்காக்கும் பணியில் இருக்கும் ஒருவர் எப்போதும் இஸ்லாமிய வெறுப்பு கருத்துக்களை கூறியும் ஆங்கிலேய - இஸ்லாமிய உரசல்களை ஒருபக்கமாக மட்டும் அதாவது பிரிட்டிஷாரை ஞாயப்படுத்தியும், இஸ்லாமியர்களை மத தீவிரம் பேணுபவர்களாகவும் சித்தரித்து எழுதும் பழக்கமுடையவர்,  அவர் கூறிய ஒரு உண்மை...டில்லி சுல்தானேட் காலத்தில் இந்தியாவிற்குள்  மக்தப் கல்வி புகுத்தப்பட்டது என்கிறார். 1206ம் ஆண்டிற்கு பிறகான அடிமை வம்ச மம்லூக்குகளின் ஆட்சியில் தான் முதன்முதலாக மதரஸா கல்வி இந்தியாவிற்குள் வந்தது என்கிறார்.

ஆப்கான், பாகிஸ்தான், சிந்து மாகாணங்களை கடந்து டில்லிக்கும் வந்த அடிமை மம்லூக் வம்சத்தினர் உறுதியான ஓரிடத்தை டில்லியில் அமைத்துக்கொண்ட பிறகு குத்புதீன் ஐபக் அரியணை ஏறினார். அவருக்கு பிறகு அவரது படைத்தளபதி இல்துமிஷ் தன்னை அரசராக பிரகடனப்படுத்திக்கொண்டார். அவரால் முதன்முதலில் டில்லியில் ஒரு மதரஸா அமைக்கப்படுகிறது. நிர்வாக கமிட்டி என அவர் அமைத்த அந்த முதல் மதரஸாவில் பாரசீக நாட்டு கல்வியாளர்கள் ஆட்சிமுறைக்கு தேவையான அத்தனை அம்சத்தையும் வடிவமைத்து தருகின்றனர்.

அது பிறருக்கும் கற்பிக்கும் கலாசாலையாக உருவெடுக்கிறது. சுல்தான்களிடம் பணிக்கு சேர்ந்த அனைவரும் பாராபட்சமின்றி அரபு மொழியை கற்றுக்கொண்டனர். இஸ்லாமிய பொற்காலத்தின் போது மேற்குலக மொழிகளில் இருந்து மொழிப்பெயர்க்கப்பட்ட அத்தனை நாட்டு அறிவுபொக்கிஷங்களையும் அரபு மொழியில் மாற்றி வைத்திருந்த காரணத்தால் அனைத்து பாடங்களும் அரபு்மொழிக்கல்வியாகவே பயிற்றுவிக்கப்பட்டது. எல்லா மொழியையும் போல அரபும் சாதாரணமாக அனைத்து தரப்பு மக்களாலும் பயிலப்பட்டது. சாதி முறைகளால் கல்விச்சாலையின் வாசனையை கூட நுகராத ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் அம்மதரஸாக்கள் இடங்கொடுத்தது .

வடஇந்தியா என்று நாம் கூறும் ஒட்டுமொத்த பிராந்தியமும் பாரசீகத்தையும் அரபையும் கற்க தொடங்கினர். இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் தவிர மற்ற அனைத்து பாடங்களும் அவர்களுக்கு இலவசமாக அரசாங்க செலவில் கிடைத்தது. முஸ்லிம்கள் மட்டுமே கல்விக்கு தகுதியானவர்கள் மற்றவர்கள் படிக்க தகுதியற்றவர்கள் என யாரையும் யாரும் ஒதுக்கி வைக்கவில்லை எனவே மதரஸா கல்வி வட இந்திய மண்ணில் தழைத்தோங்கியது. எப்போது வரை என்றால், ஆங்கிலேயர் கொண்டுவந்து லார்டு மெக்காலே கல்வித்திட்டத்தை திணித்தது வரை.

மம்லூக்குகளால் இந்தியாவிற்குள் வந்த இஸ்லாமிய ஆட்சி, கில்ஜி,துக்ளக்,ஜைதுகள் , லோடி மரபினர் மற்றும் முகலாயர்கள் ஆட்சி வரையிலும் நிரந்தர அடித்தளமிட்டு அமர்ந்த பிறகு இந்தியாவின் வடக்கு-தெற்கு இரண்டிலும் இருந்த அனைத்து சமஸ்த்தானங்களிலும் உருது, அரபு மற்றும் பாரசீக மொழி அறிந்தவர்கள் கட்டாயம் பணியமர்த்தப்பட்டனர். அரச பணிகளில் பெரும்பாலும் ஆதிக்க வர்க்கத்தினரே ஆக்கிரமித்திருந்தாலும் அவர்களுக்கு ஒரு மொழியாக கருதி அரபுவழி பாடங்கள் கற்பது பிரச்சனையில்லாத ஒன்றாகவே இருந்தது. சமூகத்தில் ஏற்றத்தாழ்வு பார்த்து சாதிய அடிப்படையில் சமூகத்தில் இருந்தாலும் சுல்தான்களிடம் நட்பு பாராட்டவோ பதவிகளை ஏற்கவோ அவர்கள் தயங்குவதில்லை.

சூழ்ச்சி
--------------

ஆங்கிலவழிக்கல்வி பயின்றால் தான் கம்பெனிக்கு வேலைக்கு போக முடியும், ஆங்கிலம் படித்தால் தான் மேற்பதவிகளை அடைய முடியும் என தவறான போதனைகளாலும் , இஸ்லாமிய வழியிலான மதரஸா கல்வி என்பது மறைமுக மதப்புகுத்தல் எனவும் ஆங்கிலேயர்களால் விஷமம் பரப்பப்பட்டது. பிரித்தானியர்கள் உள்ளே வராதவரை இந்துஸ்தானிய மக்களிடையே மதச்சண்டை இல்லாமல் தான் இருந்தது நாட்டை கைப்பற்ற அவர்கள் கையாண்ட ஒரு நரித்தனம் தான் இந்து-முஸ்லிம் பிரிவினை. அதுவரையிலும் வேதம் படித்த பண்டிதரும், உபாத்யாயரும் அரபுவழி கல்வி பயில்வதை தடையாகவோ மதபோதகமாகவோ நினைக்கவில்லை. ஆங்கிலேயர் இந்திய மக்களிடம் கல்வியின் மூலமான பிளவினையே முதலில் உண்டாக்கினர். அதற்கு காரணம் 1857 ல் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களான உலமாக்கள் தான் முதன்முதலில் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து இந்தியாவில் புரட்சியில் இறங்கியவர்கள், இதையும் இந்தி எழுத்தாளர் ரமேஷ் உபாத்யாய தான் கூறுகிறார்.

பிராமணர்களை பொறுத்தவரை தங்களது வாழ்க்கை மேம்பாட்டிற்கு எது வசதியோ அதுபடி தங்களை தகவமைத்துக்கொள்ள தயங்கமாட்டார்கள். அதன் காரணமாக அரசர்குல ஆட்சிமுறை முடிவுக்கு வந்து பிரித்தானிய கம்பெனி ஆட்சி நிலைப்பெறப்போகிறது என தெரிந்தவுடன் அவர்களுக்கு அரபுவழிக்கல்வியில் இருந்து ஆங்கிலவழிக்கல்விக்கு எளிதாக மாறிக்கொண்டனர். அரசபதிவிகளில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள எது தேவையோ அதை தேர்ந்தெடுக்க அவர்கள் தயங்குவதில்லை. எனவே ஆங்கிலேயரின் கஷ்டமில்லாத வேலை கவர்ச்சிகரமான சம்பளம் என்பதை கருத்தில் கொண்டு இஸ்லாமிய வழிக்கல்வி நடைபெறும் மதரஸாக்களை ஒழிப்பதில் அவர்களும் ஆங்கிலேயரோடு சேர்ந்து பணியாற்ற தொடங்கினர்.

இந்திய சுதந்திர போராட்ட நிகழ்வுகளின்போது பள்ளிவாசல்களும் மதரஸாக்களும் தான் முஸ்லிம்களின் பிரச்சார மேடைகளாக பயன்படுத்தப்பட்டது என்பது மிகையில்லா உண்மை. முகலாய அரசு சிதறுண்டு நவாபுகளின் ஆட்சி ஏற்பட்ட பிறகு மதரஸாக்கள் சிதற ஆரம்பித்தன. இந்நேரத்தில், இஸ்லாமிய வழிகல்வி சீரழிந்துவிடக்கூடாது என  1866 உத்திரபிரதேச பகுதியை சேர்ந்த தியோபந்திகளும் நத்வியாக்களும் தான்  ஹனபி வழி மதரஸா கல்விச்சாலைகளை தொடர்ந்து நடத்தி வந்தனர். அவர்களுக்கு போட்டியாக பரலேவிகளும் சூபிய கருத்துகளை போதித்து மதரஸாக்களை வளர்த்தனர். ஆனால் அவர்களை நிம்மதியாக ஆங்கிலேய அரசு வாழவிடவில்லை. பல உலமாக்களை கொலை செய்தும் நாடுகடத்தியும் மதரஸா நடத்துபவர்களை திட்டமிட்டு ஒழித்துவந்த்து, பிரித்தானிய காலணி ஆதிக்கத்தை எதிர்த்து முதன்முதலில் களமிறங்கி மௌலானாக்கள் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர். உண்மையில் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட தியாகிகளே நம் உலமா பெருமக்கள் தான் ஐதராபாத்தை சேர்ந்த வரலாற்று ஆசிரியரும் சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் எனும் புத்தகத்தின் ஆசிரியருமான சையது நஸீர் அஹமது அவர்கள் ஆவணப்படுத்தியுள்ளார்கள்..

மெக்காலே கல்வியின் சூழ்ச்சி
------------------------------------------------------
லார்டு மெக்காலே கொண்டு வந்த கல்வித்திட்டம் என்பது உலக சஞ்சாரம் அத்தனையும் ஐரோப்பியர்களால் தான் நிகழ்த்தப்பட்டது என்பது போலவும் உலகில் அறிவாளிகளாக பிறந்தது வெள்ளையர்கள் மாத்திரம் தான் என்பது போலவும் அப்பட்டமான ஒரு பொய்யை அடிப்படையாக கொண்டது. கி.பி.7ம் நூற்றாண்டு முதல் 14ம் நூற்றாண்டு வரையிலான இஸ்லாமிய பொற்கால கண்டுபிடிப்புகளையும் இஸ்லாமிய உலகம் நவீன மென்பொறிகள் வடிவமைத்ததிலும், மருத்துவத்தலும், கணிதத்திலும் செய்த சாதனைகளையும் உலகிற்கு செய்த பங்களிப்புகளையும் மிக லாவகமாக இருட்டடிப்பு செய்தும் , அரபுலக விஞ்ஞானிகளையும் ஆப்பிரிக்க அறிஞர்களையும் பற்றிய ஒரு வார்த்தை கூட இல்லாமல் அறிவியிலானாலும் கலை இலக்கியமானாலும் அது ஐரோப்பியர்களால் வடிவம் பெற்றது என்கிற மாயையை உருவாக்கி... உலகில் இருந்த ஏனைய எகிப்திய,சீனா,இந்திய பங்களிப்புகளையும் அர்ப்பணிப்புகளையும் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டாமல் மறைத்து வைத்ததே..இதற்கு தெரிந்தே துணை போனார்கள் ஆங்கிலேய அடிவருடிகள்.

உலகின் அதிசயங்களை கூட கிரேக்க,ரோம,இங்கிலாந்து பகுதிகளில் இருந்து மட்டுமே எடுத்து நமக்கு அடையாளம் காட்டினார்கள். அரபுலகில் தோன்றிய அறிஞர்களும் ஆப்பிரிக்க நாடுகளில் தோன்றிய அறிஞர்களும் சீனர்களும் ஜப்பானியர்களும் இல்லையெனில் இந்த உலகமே ஐரோப்பியா மட்டும்தான் என்கிற பலகீன மனநிலையை நம் மீது வலுவாக திணித்திருப்பார்கள். இந்த கல்வித்திட்டத்தை ஏற்றதன் விளைவு இன்று முஸ்லிம்களாகிய நமது அடிமனதில் மார்க்கம் மட்டும் படித்தால் பிச்சை தான் எடுக்கணும், ஆங்கிலம் படித்தால் தான் பிழைக்க முடியும் என்கிற உளவியலை நம்முள் புகுத்திவிட்டனர்.

வீழ்ச்சி
-------------
1873ல் சர் சையது அகமது கான் அவர்களால் தொடங்கப்பட்ட அலிகார் இயக்கம், பிறகு இஸ்லாமிய கல்வியை ஆங்கிலத்தில் பயிலும் புதிய பாடத்திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தி பெருமைமிகு அலிகார் முஸ்லிம் பல்கலையை உருவாக்கினார். பின்னாளில் அப்பல்கலை முஹம்மதன் ஆங்கிலோ ஓரியண்டல் காலேஜ் என்றே அறியப்பட்டது. சர் சையது அகமது கான் அவர்களது ஆங்கில மோகமும் நவீன உலகிற்கான கல்விமுறை என்ற பெயரிலும் குர்ஆன் வசனங்களை மனப்பாடம் செய்யும் மனன முறையை ஒழித்தார். 1945 வரையிலும் கூட இந்து,கிறுஸ்தவர் என்கிற பாகுபாடு பாராமல் அனைவரும் இஸ்லாமிய வழி மதரஸா கல்வியை கற்பதில் எந்த தயக்கமும் கூச்சமும் காட்டவில்லை என்பதையும் அப்போதைய வடக்கத்திய பெருந்தலைவர்களும் சமூகத்தில் அந்தஸ்த்து படைத்தவர்களும்  படித்த கல்வி நிறுவனங்களை வைத்தே அறிய முடியும்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நிர்வாக பணிகளில் ஆங்கிலம் படித்தவருக்கே வேலை, விகிதாச்சார அடிப்படையிலான கல்வி மற்றும் வேலைக்கான இட ஒதுக்கீடு போன்றவை மதரஸா கல்வியை கொஞ்சம் கொஞ்சமாக ஒரம்கட்டியது எனலாம். இந்நிலையில் இந்தியா முழுவதிலுமே பல பெரிய வரலாற்று சிறப்புமிக்க அரபு கல்விக்கூடங்களுக்கு மூடுவிழா நடத்தப்பட்டது. இதன் விளைவு ஒட்டுமொத்த இந்திய தேசத்திலும் பள்ளி செல்லும் குழந்தைகளில் வெறும் 3% குழந்தைகள் மட்டுமே மதரஸாவிற்கு செல்கிறார்கள்,  இதன் காரணமாக இஸ்லாமியர்களின் அரசியல், சமூக, பொருளாதார நிலைமை தாழ்ந்து போனது என, இந்திய இஸ்லாமியரின் நிலை பற்றி ஆய்வு செய்ய மத்திய அரசால் 2005ம்  ஆண்டு அமைக்கப்பட்ட நீதிபதி ராஜேந்திர சச்சார் கமிட்டியில் வழங்கப்பட்ட ஆய்வின் முடிவு அறிவித்தது.

இப்போதும் கூட முஸ்லிம் வீட்டு குழந்தைகள் மதரஸா என்றால் அது வெறும் அலிப், பே,தே படிக்கும் இடம் என்று மட்டுமே நினைத்து வைத்துள்ளது. கடந்த 30,40 ஆண்டுகள் வரையிலும் ஒவ்வொரு முஸ்லிம் முஹல்லா பள்ளிவாசல்களிலும் குழந்தைகளுக்கான அரபு பாட வகுப்புகள் நடைபெறும். கட்டாயமாக பஜ்ரு தொழுகையை அடுத்து மதரஸா வகுப்புகள் நடத்தும் ஆலிம்கள் இருந்தனர். அது முடித்த பிறகே பள்ளிக்கூடங்களுக்கு போவோர் இருந்தனர். பிறகு வீட்டிற்கு ஒரு உஸ்தாதை வரவழைத்து, அரபு எழுத்துக்களும் 10,15 எளிய சூராக்களும், சிறிய துஆக்களும் மட்டும் கற்றுத்தரும் வழக்கம் இருந்தது தற்போது இது எதுவும் இல்லாமல் முஸ்லிம் குடும்பத்து பிள்ளைகள் பெரிய, பணம்படைத்தோர் நடத்தும் கான்வென்டிற்கு போகிறார்கள். கல்வி என்பது ஒரு நல்ல வேலையை நிரந்தர சம்பளத்தை தேடித்தரும் ஒரு கருவியாக மட்டுமே அவர்களுக்கு தெரிகிறது. பெற்றோருக்கும் கூட குர்ஆன் ஹிப்ஸை படித்து என் மகன் ஹாபிஸ் ஆவதில் எங்களுக்கு விருப்பமில்லை என்றும்..மார்க்க கல்வி பயில விடுவது கௌரவக்குறைச்சல் எனவும் நினைக்கின்றனர். அரபிக் ஸ்டடீஸிற்கும் இஸ்லாமிக் ஸ்டடீஸிற்கும் வித்தியாசம் தெரியாமல் தான் நாமும் இன்றளவும் அறியாதவர்களாக உள்ளோம்.

மக்தபும் மதரஸாவும் வெறும் மார்க்க போதனைகள் மட்டுமல்லவே, அது ஒட்டுமொத்த மனித வாழ்க்கைக்கும் வழிகாட்டும் மேன்மையான வாழ்க்கை முறை என்பதையும் மதரஸாவில் வரலாறு,புவியியல், அறிவியல்,ரசவாதம்,பௌதீகம்,வீண்ணியல்,கோளங்களின் சஞ்சாரம், பொருளாதாரம், மருத்துவம், குடும்பவியல், குற்றவியல், குழந்தை வளர்ப்பு, வணிகவியல்,விவசாயம்,கட்டிடக்கலை,கணிதம் என சகலமும் அவரவர் விருப்பப்படி எடுத்து படிக்க முடியும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. உலகம் முழுக்கவுள்ள இஸ்லாமிய நாடுகள் மட்டுமல்லாது வளர்ந்த நாடுகளும் கூட இஸ்லாமிய பொற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆராய்ச்சிகளை மையமாக வைத்து இஸ்லாமிக் ஸ்டடீஸ்  பாடத்தை நடத்துகின்றனர். எகிப்திலும் இஸ்ரேல் அல்"அஷ்ராபியா பல்கலையிலும் கூட இன்று இஸ்லாமிய வழிக்கல்வி தான் முதன்மை (Primary) பாடத்திட்டமாக போதிக்கப்படுகிறது. மலேசிய-இந்தோனேசிய நாடுகளில் "செகோலா ஆகமா" ( School of Religious studies) என்கிற பெயரில் இஸ்லாமிய அறிவியல் பாடங்கள் மதரஸாக்களில் போதிக்கப்படுகின்றன. இந்த வகையில் ஆப்பிரிக்கா தான் இஸ்லாமிய வழிக்கல்வி பயிற்றுவிப்பதில் முதலிடத்தில் உள்ளது.

விழிப்புணர்வு வேண்டும்
-------------------------------------------

உலக ஆதாயமும் இம்மை வாழ்வும் பெரிதாக நினைக்கும் முஸ்லிம்கள் அவர்களது குழந்தைகளுக்கு இஸ்லாமிய சுன்னாஹ்வையும் ,ஷரிஆ சட்டங்களையும் கற்பிப்பதை அவமானமாக நினைப்பதாக ரமேஷ் உபாத்யாய கூறுகிறார். மதரஸாவில் படித்த யாருக்கும் அரசாங்க பணிகள் கிடைப்பதில்லை, அரசின் உயர் பதவிகளோ மற்ற நாடுகளின் பல்கலையில் மேற்படிப்பிற்கான அனுமதியோ கிடைப்பதில்லை. அதிக சம்பளத்துடன் கூடிய ஓய்வூதிய திட்டங்களுடைய பணிகள் கிடைக்காது. உலக வாழ்விற்கு இது அத்தனையும் தேவையாக இருக்கும்பட்சத்தில் இவற்றை யார் படிப்பார் என்கிற குறை மதிப்பீட்டினால் முஸ்லிம்களே மதரஸா கல்வியை கைவிட்டனர். வாழ வழியிருக்காது , வருமானம் போதாது , முஸ்லிம் ஆலிம்களும் ஹஜரத்துகளும் பள்ளிவாசல்களில் பணிபுரிந்தும் கஷ்டப்பட்டுக்கொண்டுள்ளதை அவர்கள் உதாரணமாக காண்கிறார்கள்.

இரண்டாவதாக , இந்திய மதரஸாக்களின் தரம். நவீன பள்ளிகளை போல சீருடைகள்,காலுறையுடன் கூடிய காலணிகள், வயதிற்கேற்றார் போல ஒரே வயதுடையவர்களுக்கான தனித்தனி வகுப்புகள், ஒவ்வொரு பாடத்திற்கும் துறை ஆசிரியர்கள் , பள்ளிகளை போல வசதிகள், விளையாட்டு வகுப்புகள் என பலதரப்பட்ட விஷயங்களை மதரஸாக்கள் கையிலெடுப்பதில்லை. இதன் காரணமாக நவீன காலத்திற்கேற்ப கவர்ச்சி மதரஸா கல்வியில் இல்லை என்பதை மனதில் வைத்தே பலரும் மதரஸா போய் படிப்பதை தவிர்த்துவிட்டனர்.

புத்துணர்ச்சி
-----------------------

ஆனாலும் இன்றும் கூட உத்திரபிரதேசம் மற்றும் கேரள மாநிலங்களில் மதரஸாக்கள் சொல்லும் அளவில் தங்களது தரத்தை உயர்த்திக்கொண்டுள்ளனர் என்பது ஆறுதலுக்குறிய விஷயம். கேரளத்திலுள்ள மதரஸாக்கள் அறிவியலையும் விஞ்ஞானத்தையும், பௌதீக வேதியியல் பாடங்களை முன்னிருத்தியும்..நவீன கல்வி நிறுவனங்களுடன் போட்டி போடும் விதமான ராக்கெட் சயின்ஸ், இயந்திரப்பொறிகள் உருவாக்குதல் மற்றும் கணினி பாடங்களையும் தங்களது பாடத்திட்டத்தில் வைத்து மத்திய அரசின் கல்வித்திட்டத்திற்கு சவால் விடும்படியான அளவில் உயர்ந்துள்ளன.

இஸ்லாமிய வழியில் குர்ஆன் மனனம், சுன்னாஹ் வழியில் ஹதீஸ் மனனம் இது தான் மதரஸா கல்வி முறை என்கிற பழைய விஷயங்களை விளக்கிவிட்டு புதுமையை புகுத்தி மாணவர்களை ஈர்த்து வரும் கேரள மதரஸாக்கள் போல இந்தியா முழுவதும் உருவாக வேண்டும். மீண்டும் ஒரு இஸ்லாமிய புரட்சி ஏற்பட குழந்தைகளிடம் நல்ல உந்துசக்தியாக அது அமையும். அமெரிக்க எழுத்தாளர் ஜான் டேவி கூறுவது போல " ஒரு சமுதாயத்தின் மாற்றம் குழந்தையின் கல்வியின் மூலமே மாற்றம் முடியும்" என்பதை கருத்தில் கொண்டு மீண்டும் ஒவ்வொரு ஊரிலும் பள்ளிவாசல்களில் மக்தப் கல்வியும் மதரஸாக்களில் நவீன பாடத்திட்டங்களும் கொண்டு வர முயற்சி எடுக்கலாம்.

கேரள மதரஸாவில் பயின்ற சிறுவர்கள் இருவர் ரோபாடிக் எஞ்சினியரிங் பயிற்சி பெற்று அமெரிக்காவிற்கு செல்கின்றனர். இவ்வாண்டின் ஐஏஎஸ் தேர்வில் ஒரு மதரஸா பள்ளி மாணவர் தேர்வாகியுள்ளார். இப்படி மதரஸாவின் தரத்தை உயர்த்துவதன் மூலம் மீண்டும் அந்த பொற்காலத்தை நம்மால் கொண்டுவர இயலாதா?

படிப்பினை
--------------------
ஸ்பெயின் வீழ்ந்த காரணம் மதரஸா கல்வி இல்லாமல் போனதே - என்றார் மௌலானா ரூமி. இந்தியாவும் வீழ்ந்தது இஸ்லாமிய கல்வியை முஸ்லிம்கள் கைவிட்டதாலே. மதரஸாவை உதறிவிட்டு ஆங்கில வழிக்கல்வி பயின்று கொண்டிருந்த முஸ்லிம் மாணவர்கள், அந்நிய கல்வி நமக்கு வேண்டாம் என காந்தியடிகளும் கண்ணியமிகு காயிதேமில்லத் அவர்களும் அறைகூவல் விட்டதும் படித்த படிப்பினை பாதியிலேயே விட்டு வெளியேறிய தேசபக்த தியாகிகள் முஸ்லிம்கள், இதனாலே வருங்காலத்தை இழந்தவர் பலர்.    கல்வியறிவிலும் பொருளாதாரத்திலும் சூப்பர் பவராக, அடுத்தவர் கண்டு பொறாமைப்படுமளவிற்கு வாழ்வாங்கு வாழ்ந்த இந்திய முஸ்லிம் சமூகம் தற்போது தரைமட்டத்திற்கு இறங்கியது நாம் நமது சுயத்தை மறந்து அடையாளத்தை தொலைத்ததுனாலே தான். இப்போதும் கூட இந்திய அரசு இஸ்லாமிய வழி கல்விக்கூடங்களில் அவர்களுக்கான பாடத்திட்டங்களை அவர்களே வடிவமைத்துக்கொள்ள அனுமதியளித்துள்ளது இதனை பயன்படுத்தி மீண்டும் மதரஸத்துகளுக்கு மாணவர்களை அழைக்க வேண்டும்.

பள்ளிவாசல்களை விட்டு குழந்தைகளை பிரித்து வைப்பதும் அடுத்த தலைமுறைக்கு மார்க்கத்தை கடத்தாமல் இருப்பதும் ஒன்று தான். அக்காலத்தில் மதரஸாக்களும் பள்ளிவாசல்களும் குழந்தைகள் ஓடி விளையாடக்கூடிய அளவிற்கு பிரம்மாண்டமான ஒரு கட்டமைப்பில் அமைக்கப்பட்டதே அவர்களை ஈர்ப்பதற்காகத்தான்.

குர்ஆனின் முதல் வந்திறங்கிய வசனம் கல்வி பற்றியதாகும்

தான் நாடியவர்களுக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கிறான். (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ ,அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயம் ஆகிவிடுகிறார். எனினும், நல்லறிவுடையோர் தவிர வேறுயாரும் இதை சிந்தித்துப்பார்பதில்லை.  
(அல்குர்ஆன் – 2 :269)

பிரபல்யமான பதிவுகள்