நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வெள்ளி, பிப்ரவரி 28, 2020

மஹர் கொடுத்து திருமணம் முடி,

இவ்வசனங்களில் (2:2362:2374:44:24,254:1275:533:5060:10) திருமணம் செய்யும்போது ஆண்கள் தமது மனைவியருக்கு மஹர் எனும் மனக்கொடை வழங்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.

ஒரு பெண் திருமண வாழ்வின் மூலம் தனக்கு ஏற்படும் இழப்புகளைக் கருத்தில் கொண்டு எவ்வளவு வேண்டுமானாலும் மஹர் கேட்பதற்கு உரிமை உள்ளது. அதை அவள் மட்டுமே உடமையாக வைத்துக் கொள்வதற்கும் உரிமை உள்ளது.

இல்லற வாழ்க்கையில் அதிகமான இழப்புக்கு ஆளாவது பெண்கள் தான். தங்களின் அழகையும், இளமையையும் இழந்த பின் அவர்கள் விவாகரத்துச் செய்யப்படக் கூடும். அந்த நிலையை எண்ணிப் பார்த்து மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமையை பெண்களுக்கு இஸ்லாம் வழங்குகின்றது.

மஹர் தொகையை எவ்வளவு வேண்டுமானாலும் பெண்கள் கேட்கலாம். இவ்வளவுதான் கேட்க வேண்டும் என்று வரையறை செய்யும் உரிமை எவருக்கும் இல்லை.

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள இந்த உரிமையைப் பெண்கள் பயன்படுத்தத் தவறிவிட்டதால் அவர்களின் நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. இவர்கள் மஹர் கேட்காததால் ஆண்கள் வரதட்சனை கேட்கும் கொடுமை அதிகமாகி விட்டது.

கொடுக்கக் கடமைப்பட்ட ஆண்கள் கேட்டுப் பெறும் அளவுக்கு மானமிழந்து விட்டனர். வரதட்சணை வாங்காதீர்கள் என்பதை விட நீங்கள் பெண்களுக்குக் கொடுங்கள் என்பது கடுமையான கட்டளையாகும். இதை உணரும் உண்மையான எந்த முஸ்லிமும் வரதட்சணை கேட்கத் துணிய மாட்டான்.

ஆண்கள், பெண்களுக்கு மணக்கொடை கொடுப்பதுதான் அறிவுப்பூர்வமானதும், நேர்மையானதுமாகும். ஏனெனில் இல் வாழ்க்கையில் பெண்களே அதிகமான தியாகத்தைச் செய்கின்றனர். அதிகமான சிரமங்களையும் அவர்களே சுமக்கின்றனர். எனவே பெண்களுக்கு ஆண்கள் கொடுப்பது தான் நீதியாகும்.

ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் நடந்த பின் ஆண் தனது வீட்டிலேயே தனது தாயுடனும், தந்தையுடனும், உறவினருடனும் இருக்கிறான். ஆனால் அவனை விட வயதில் குறைந்த பெண் தனது பெற்றோரையும், சொந்தங்களையும் துறந்து விட்டு கணவன் வீட்டுக்கு வந்து விடுகிறாள். இந்தத் தியாகத்திற்காக பெண்களுக்குத்தான் ஆண்கள் வழங்க வேண்டும்.

திருமணத்திற்குப் பின் மனைவிக்காக கணவன் எந்தச் சேவையும் செய்வதில்லை. அதிகபட்சமாக அவளது வாழ்க்கைச் செலவினங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறான். ஆனால் பெண்கள் கணவனுக்காகச் சமைத்தல், உடைகளைத் துவைத்தல், வீட்டைப் பராமரித்தல், கணவனுக்கு மட்டுமின்றி கணவனின் உறவினர்களுக்கும் சேர்த்து பணிவிடை செய்தல் என ஏராளமான சுமைகளைத் தம் தலையில் சுமந்து கொள்கின்றனர். மாமியார் கொடுமைகளையும் சில பெண்கள் கூடுதலாக தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. இந்தக் காரணத்துக்காகவும் ஆண்களே பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்.

இல்லறத்தில் ஈடுபட்டு ஒரு பெண் கருவுற்றால் ஆணுக்கு இதனால் எந்தச் சிரமமும், சுமையும் இல்லை. பெண்தான் சிரமப்படுகிறாள். அவள் எதையும் உண்ண முடியாத மசக்கை நிலையை அடைகிறாள். இயல்பாக நடக்கவும், படுக்கவும் முடியாத சிரமத்தைத் தாங்கிக் கொள்கிறாள். அத்துடன் மரணத்தின் வாசல் கதவைத் தட்டி விட்டு பிரசவித்து மீள்கிறாள். இந்த ஒரு காரணத்துக்காகவே அவளுக்கு கோடி கொடுத்தாலும் போதாது.

பிரசவித்த பின் குழந்தைக்காக தந்தை எதையும் செய்வதில்லை. பாலூட்டுவதும், சீராட்டுவதும், கண் தூங்காது கவனிப்பதும் என ஏராளமான சுமைகளும் அவள் மீதுதான் சுமத்தப்பட்டுள்ளன. இந்தக் காரணத்திற்காகவும் ஆண்கள் பெண்களுக்கு மஹர் கொடுப்பது தான் நேர்மையானது.

அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்து விட்டால் பெண் தனது எல்லா வசந்தங்களையும் துறந்து விடும் நிலையை அடைகிறாள்.

எனவே பெண்களுக்கு ஆண்கள்தான் கொடுக்க வேண்டும் என்பதை மனிதாபிமானம் உள்ள எந்த மனிதனும் மறுக்க முடியாது.

வரதட்சணை கேட்கும் கொடிய வழக்கம் காரணமாக ஏராளமான தீய விளைவுகள் ஏற்பட்டுள்ளன. வரதட்சணை கேட்போரும், அதை ஆதரிப்போரும் அத்தனை தீய விளைவுகளிலும் பங்காளிகளாகின்றனர்.

வரதட்சணை காரணமாக 15 வயதிலிருந்தே வாழ்க்கைக்கு ஏங்கும் பெண்கள் முப்பது வயது வரை கூட மணவாழ்வு கிடைக்காத நிலையில் உள்ளனர்.

இதன் காரணமாக பெண்களில் சிலர் வீட்டை விட்டே வெளியேறி ஓடி விடுகின்றனர். ஏமாற்றப்படுகின்றனர். விபச்சார விடுதியில் கூட அவர்களில் பலர் தள்ளப்படுகின்றனர். இந்தப் பாவங்கள் அனைத்திலும் வரதட்சணை வாங்கியவர்களுக்கும் ஒரு பங்கு நிச்சயமாக உள்ளது.

சில பெண்கள் இதனால் இஸ்லாத்தையே உதறித் தள்ளிவிட்டு பிற மதத்தவர்களுடன் ஓடிப் போகும் நிலையும் உள்ளது.

மணவாழ்வு கிடைக்காது என்ற நிலையில் தம் உயிரைத் தாமே மாய்த்துக் கொள்ளும் பெண்களும் அதிகரித்து வருகின்றனர். பெண்ணைப் பெற்றவர்களும் கூண்டோடு தற்கொலை செய்கின்றனர். வரதட்சணை கேட்போர் இந்தப் பாவத்திலும் பங்காளிகள் ஆகின்றனர்.

மணவாழ்வு கிடைக்காது என்று கருதி ஒருத்தி ஓடி விட்டால் அவளது குடும்பத்தில் எஞ்சியுள்ள பெண்களுக்கும் வாழ்வு கிடைக்காத நிலை ஏற்படும். இதிலும் வரதட்சணை கேட்பவர்களுக்குப் பங்கு இருக்கிறது.

வரதட்சணை வழக்கத்தையும், அதனால் ஏற்படும் கேடுகளையும் முன்கூட்டியே உணர்பவர்கள் பெண் குழந்தை பிறந்ததும் தமது குழந்தைகளைக் கொன்று விடுகின்றனர். வேறு சிலர் ஸ்கேன் மூலம் கருவில் உள்ள குழந்தை, பெண் என்பதை அறிந்து கருவில் சமாதி கட்டுகின்றனர். இந்த மாபாதகச் செயலிலும் வரதட்சணை கேட்பவர்கள் பங்காளிகளாகின்றனர்.

மானத்துடன் வாழ்ந்த ஒருவனை, பெண்ணைப் பெற்ற காரணத்துக்காக ஊர் ஊராகச் சென்று பிச்சை எடுக்க வைக்கின்றனர். இந்தப் பாவமும் இவர்களைச் சும்மா விடாது.

பருவத்தில் எழுகின்ற உணர்வுகளுக்கு வடிகால் இல்லாத நிலையில் பெண்களில் பலர் மனநோயாளிகளாகி விடுகின்றனர். இந்தக் கொடுமையிலும் இவர்கள் பங்கு பெற்றுக் கொள்கின்றனர்.

இப்படி ஏராளமான தீமைகளின் மொத்த வடிவமாகத் திகழும் வரதட்சணையை வாங்குவோர், இவ்வளவு பாவங்களுக்கான தண்டனைக்காகத் தம்மை முன்பதிவு செய்கிறார்கள். நியாயத் தீர்ப்பு வழங்கும் இறைவன் முன்னால் நாம் நிறுத்தப்படுவோம் என்ற அச்சம் கடுகளவாவது இருந்தால் கூட எவரும் வரதட்சணை கேட்கவே மாட்டார்.

(28:27) திருமண வாழ்க்கையில் பெண்களுக்கு இருக்கின்ற உரிமையைக் கூறுகிறது.

ஒரு பெண்ணை மணமுடித்துத் தருவதற்காக எட்டு ஆண்டுகள் தம்மிடத்தில் கூலி வேலை செய்ய வேண்டும் என்று ஒரு பெரியவர் நிபந்தனை விதிக்க அதை மூஸா நபியவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

மஹர் கொடுக்காமல் பெண்களை ஏமாற்றுவதும், அற்பமான பொருட்களைக் கொடுத்து அவர்களை வஞ்சிப்பதும் இஸ்லாம் காட்டும் வழிமுறை அல்ல என்பதற்கு இந்த நிகழ்ச்சி சான்றாக அமைந்துள்ளது.

பெண்களிடம் வரதட்சணை கேட்கலாகாது என்பதையும், மஹர் கொடுத்தே மணம் செய்ய வேண்டும் 

No BP ,No sugar,. சர்க்கரை வியாதி


சுகர்னு docter கிட்ட போராங்க ..
அவரும் செக் பண்ணிட்டு metformin 500mg tablet கொடுக்கிறார்.

ஒரு வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு metformin  500mg +daonil 5mg tablet கொடுக்கிறார்.

மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு ரெண்டு combination tablet  (gliclazide 40/80mg,sitagliptin 100mg/50mg,linagliptin10mg)கொடுக்கிறார்.

மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு இன்சுலின் போட சொல்றார்.

அப்புறம் சுகர் கூட BP சேர்ந்திடுச்சுனு PRESSURE (losartan potassium ) மாத்திரை போட சொல்றார்.

அப்புறம் கொலஸ்ட்ரால் சேர்ந்திடுச்சுனு அதுக்கு atovastatin  ஒரு மாத்திரை போட சொல்றார்.

அப்புறம் கால்ல புண்ணு வந்திடுச்சுனு காலை வெட்டி எடுக்க சொல்லுறான்.

காலை வெட்டி எடுத்ததும் ஒரு வருஷத்துல உயிர் போய்டுது.

இதுல எந்த இடத்துலயும் அவன் DOCTER ரை திட்டுவதோ, குறை சொல்வதோ இல்லை.

1.
தான் சாப்பிடற டேப்லெட் மேல சந்தேகம் வரல.

2.
மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே போகுதேனு அவன் யோசிக்கல.

3.
ஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆகிடுச்சேனு அவன் சிந்திக்கவில்லை.

4.
வாரம் 300 ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டா போதும்னு நம்புறான்.

TABLET சாப்பிட்டா கிட்னி FAILURE ஆகும்னு அந்த அட்டையில் ஓரமா எழுதி இருக்கிறதை அவன் படிக்கிறது இல்லை. அந்த மாத்திரையோட பக்க விளைவை பத்தி அவன் சிந்திக்கிறதும் இல்லை.

வீட்டுல இருக்கிற வெந்தயத்தை , காய்கறிகள் வெச்சே இதை சரி செய்யலாம்னு ஒருத்தன் சொன்னா, அவனை கிறுக்கன்னு சொல்லுவான்.

உயிர் போகும்  வரைக்கும் 
அக்கு பிரஷர், இயற்கை மருத்துவம், சித்தா, யோகா இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு ஏதோ நிபுணர் மாதிரியே பேசிட்டு, தானும் செத்தது இல்லாம, தன்னோடு மேலும் நாலு பேர கூட்டிட்டு போக ரெடியா இருப்பான்.

👆👆👆இந்த பதிவு நகைசுவையாகவும் , யதார்த்தமான உண்மையை வெளிப்படுத்தியதால் பதிவிடுகிறேன்.

மனம் கெட்டால் உடல் கெடும், உடல் கெட்டால் மனம் கெடும்.

அதனால் மனதுக்கும், உடலுக்குமான,

முறையான மன அமைதிக்கான தியானமும், உடல் நலனுக்கான உடற்பயிற்சியும் தொடர்ந்து செய்து வந்தாலே தன்னை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

சிந்திப்பவர்கள் மட்டுமே அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடுவர்..

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்

ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்.

தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!

அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.❗

1.உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.

2.இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.

3.இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.

4.நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.

5.ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.

6.உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.

7.வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.

அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.

8.உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.

9.மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.

10.அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.

11.நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.

12.சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.

வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.

13 உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.

கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.

அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு.

எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.

உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.

வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது. ☘

உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.

குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.

வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.

இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.

பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?

இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.

இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.

கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?

மூக்கு ஒழுகுதல்,
சளி பிடித்தல்,
இருமல்,
காய்ச்சல்,
இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!

இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!

இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது!

இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!

மருத்துவம்,
உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,
கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,
நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்!

உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!

ஆரோக்யம் அனுபவியுங்கள்.......!.

செவ்வாய், பிப்ரவரி 18, 2020

குர்ஆன் அருளப்பட்ட வரலாறு,

திருக்குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாகத் தயாரிக்கவில்லை; இறைவன் தான் வழங்கினான் என்றால் எந்த வகையில் அவர்களுக்கு வழங்கினான் என்ற கேள்விக்கான விடையையும் அறிந்து கொள்வது அவசியம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் ஏராளமான இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டனர்.

முதல் மனிதராகிய ஆதம் முதல், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை எத்தனை தூதர்கள் வந்துள்ளனர் என்று குர்ஆன் கூறாவிட்டாலும் ஏராளமான தூதர்கள் அனுப்பப்பட்டதாகக் கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் அனுப்பப்பட்ட தூதர்கள் குறிப்பிட்ட மொழியினருக்கோ, குலத்தினருக்கோ, சமுதாயத்தினருக்கோ அனுப்பப்பட்டனர். அவரவர் மொழியில் மக்களை நல்வழிப்படுத்த அவர்களுக்கு இறைவன் வழங்கிய செய்தியே வேதம் எனப்படும்.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு முன் இருந்த எல்லா மொழிகளிலும் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

(பார்க்க: குர்ஆன் 14:4)

இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்களில் இறுதியானவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். அவர்களுக்குப் பின் உலகம் அழியும் காலம் வரை இறைத்தூதர்கள் அனுப்பப்பட மாட்டார்கள்.

(நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபி என்பதற்கான சான்றுகளை 4:794:1707:1589:3310:5710:10814:5221:10722:4925:133:4034:2862:3 ஆகிய வசனங்களில் காணலாம்

மற்ற இறைத்தூதர்கள் குறிப்பிட்ட சமுதாயத்துக்கோ, குறிப்பிட்ட மொழியினருக்கோ அனுப்பப்பட்டது போல் இல்லாமல் அகில உலகுக்கும் இறைத்தூதராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டார்கள்.

அவர்களுக்கு வழங்கப்பட்ட திருக்குர்ஆன் எனும் வேதத்துக்குப்பின் உலகில் வேறு வேதம் அருளப்படாது என்பதால் திருக்குர்ஆன் இறுதி வேதம் எனப்படுகிறது.

அரபு மொழியில் அருளப்பட்டது ஏன்?

உலகம் முழுவதற்கும் வழிகாட்டும் வேதம் அரபுமொழியில் ஏன் அருளப்பட வேண்டும் என்று சிலர் கருதலாம்.

அரபுமொழி தான் தேவமொழி என்பதோ, அதுதான் உலகிலேயே உயர்ந்த மொழி என்பதோ இதற்குக் காரணம் அல்ல. எல்லா மொழிகளும் சமமானவை என்றே இஸ்லாம் கூறுகிறது. மொழியின் அடிப்படையில் எவரும் உயர்வு தாழ்வு கற்பிக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் கொள்கை.

அப்படியானால் அரபு மொழியில் ஏன் இவ்வேதம் அருளப்பட வேண்டும்?

இஸ்லாம் அரபு மக்களுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழி பேசுவோருக்காகவும் அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும்.

பல்வேறு மொழி பேசும் மக்களுக்கு ஒரு வாழ்க்கை நெறியைக் கொடுத்து ஒரு வழிகாட்டியை அனுப்பும்போது ஏதாவது ஒரு மொழியில் தான் கொடுத்தனுப்ப முடியும்.

எந்த மொழியில் அந்த வாழ்க்கை நெறி இருந்தாலும் மற்ற மொழியைப் பேசுவோர் இது போன்ற கேள்வியை எழுப்பாமல் இருக்க மாட்டார்கள்.

யாராலும் எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாதவாறு இதற்கு ஒரு ஏற்பாடு செய்ய முடியாது. அரபுமொழிக்குப் பதிலாக தமிழ்மொழியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டிருந்தால் இதே கேள்வியை மற்ற மொழி பேசும் மக்கள் கேட்காமல் இருக்க மாட்டார்கள்.

எனவே உலக ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு செய்யப்படும் காரியங்களில் மொழி உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து உலக ஒருமைப்பாட்டைச் சிதைத்திடக் கூடாது.

நாம் வாழுகின்ற இந்திய நாட்டில் பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் நமது நாட்டிற்கு ஒரு தேசிய கீதத்தை வங்காள மொழியில் உருவாக்கி அதை அனைத்து மொழியினரும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு ஏற்றுக் கொண்டிருப்பதால் இந்தியாவிலேயே முதன்மையான மொழி வங்காள மொழி தான் என்றோ, மற்ற மொழிகள் தரம் குறைந்தவை என்றோ ஆகாது.

நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக மொழி உணர்வை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு, அந்நிய மொழியை ஏற்றுக் கொள்கிறோம்.

அதுபோல் உலக ஒருமைப்பாட்டுக்காகவும், உலக மக்கள் அனைவரும் ஒரே நல்வழியை நோக்கித் திரும்ப வேண்டும் என்பதற்காகவும் மிகச் சில விஷயங்களில் மொழி உணர்வை ஒதுக்கி வைப்பதால் மனித குலத்துக்கு எந்தக் கேடும் ஏற்படாது. மாறாக உலகளாவிய ஒற்றுமை எனும் மாபெரும் நன்மை தான் ஏற்படும்.

ஏதாவது ஒரு மொழியில் தான் உலகளாவிய ஒரு தலைவரை அனுப்ப முடியும் என்ற அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிந்த அவர்களுடைய தாய்மொழியான அரபுமொழியில் குர்ஆன் அருளப்பட்டது. உலகிலேயே அரபுமொழி தான் சிறந்த மொழி என்பதற்காக அரபுமொழியில் குர்ஆன் அருளப்படவில்லை.

(அரபுமொழி மட்டும் வேதமொழி அல்ல என்பதை அறிந்திட 227வது குறிப்பைப் பார்க்கவும்.)

குர்ஆன் எவ்வாறு அருளப்பட்டது?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்போது எவ்வாறு இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள் என்பதையும், எவ்வாறு குர்ஆன் அருளப்பட்டது என்பதையும் நாம் தெரிந்து கொள்வது அதிகம் பயனளிக்கும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இயற்பெயர் முஹம்மத். இவர்கள் இன்றைய சவூதி அரேபியாவில் உள்ள மக்கா எனும் நகரத்தில் கி.பி. 570 ஆம் ஆண்டு பிறந்தார்கள்.

தாயின் வயிற்றில் இருக்கும்போது தந்தையை இழந்து, சிறு வயதிலேயே தாயையும் இழந்தார்கள். பெற்றோரை இழந்த பின் அவர்களின் தந்தைவழிப் பாட்டனார் அப்துல் முத்தலிப் என்பார் தமது பொறுப்பில் அவர்களை எடுத்து வளர்த்து வந்தார்.

அவரது மரணத்திற்குப் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பெரிய தந்தை அபூதாலிபுடைய பொறுப்பில் வளர்ந்து இளமைப் பருவத்தை அடைந்தார்கள்.

சிறுவராக இருந்தபோது ஆடு மேய்த்திருக்கிறார்கள். ஓரளவு விபரம் தெரிய வந்த பிறகு தமது பெரிய தந்தையோடு சேர்ந்து வியாபாரமும் செய்திருக்கிறார்கள்.

இந்த வியாபாரத்தின் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல வெளியூர்ப் பயணங்களை மேற்கொண்டார்கள்.

25வது வயதில் தம்மைவிட மூத்தவரான கதீஜா என்ற விதவையை மணந்தார்கள்.

அவரும் அன்றைய சமுதாயத்தில் பெரிய வசதி படைத்தவராக இருந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது 25 ஆம் வயதிலேயே மிகவும் வசதி படைத்தவராக மாறினார்கள்.

குர்ஆன் அருளப்பட்ட காலகட்டம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்கள் பலகடவுள் நம்பிக்கையுடையோராக இருந்தார்கள்.

  • ஏராளமான மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்தனர்!
  • கடவுளை நிர்வாணமாக வழிபட்டனர்!
  • பெண் குழந்தைகள் பிறப்பதைக் கேவலமாகக் கருதியதுடன் பெண் குழந்தை பிறந்தால் அதை உயிருடன் புதைப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்!
  • குடம் குடமாக மதுபானங்கள் அருந்தினார்கள்!
  • காமக் களியாட்டத்தில் மூழ்கித் திளைத்தனர்!
  • பெண்களை ஆடு மாடுகளைப் போன்று கருதினார்கள்!
  • தந்தை இறந்து விட்டால் தந்தையின் மனைவியை மகன் பயன்படுத்திக் கொள்வது சர்வசாதாரணமாக இருந்தது!
  • சாதி வேற்றுமையும் தலை விரித்தாடியது!
  • நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் குலத்தில் பிறந்தார்களோ அந்தக் குலம் - குறைஷிக் குலம் - மிகவும் உயர்ந்த குலம் எனவும் மற்றவர்கள் அற்பமானவர்கள் எனவும் விதி செய்திருந்தனர்!
  • அரபுமொழி பேசுவோர் மட்டுமே மனிதர்கள் என்றும், மற்றமொழி பேசுவோர் அஜமிகள் (கால்நடைகள்) என்றும் கூறும் அளவுக்கு அவர்களிடம் மொழிவெறி மிகைத்திருந்தது.
  • மனித உயிர்களைக் கொன்று குவிப்பது மிகச் சிறிய குற்றமாகக் கூட அவர்களுக்குத் தோன்றவில்லை. அற்பமான சண்டைகளுக்காகக் கூட கொலை செய்வார்கள்!
  • தமது குடும்பத்தில் ஒருவர் கொல்லப்பட்டால் கொலையாளியைப் பழி வாங்காமல் விடமாட்டார்கள். அவரைத் தம்மால் பழி வாங்க முடியாவிட்டால் தமது வாரிசுகளுக்கு வலியுறுத்திச் செல்வார்கள். பத்து தலைமுறைக்குப் பிறகாவது கொலையாளியின் குடும்பத்தில் ஒருவனைக் கொன்று கணக்குத் தீர்ப்பார்கள்.

இத்தகைய நிலையைக் கண்டு மனம் வெறுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சமுதாயத்தின் நடவடிக்கைகள் சரியானவை அல்ல என்று திட்டவட்டமாக உணர்ந்தார்கள்.

எனவே தமது நாற்பதாம் வயதில் மக்காவிற்கு வெளியே உள்ள 'ஹிரா' எனும் குகைக்குச் சென்று தனிமையில் சிந்திப்பதை வழக்கமாகக் கொள்ளலானார்கள்.

பல நாட்களுக்குத் தேவையான உணவைத் தயார் செய்து கொண்டு குகையிலேயே தங்கி விடுவார்கள். உணவு முடிந்ததும் வீட்டுக்கு வந்து உணவு தயாரித்துக் கொண்டு மறுபடியும் குகைக்குச் சென்று விடுவார்கள்.

இவ்வாறு குகையில் இருந்தபோது வானத்தையும், பூமியையும் தொட்டுக் கொண்டிருக்கும் அளவுக்கு பிரம்மாண்டமான தோற்றத்தில் ஒருவர் நிற்பதைக் கண்டார்கள். அவர் ஜிப்ரீல் எனும் வானவர் ஆவார்.

அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறுகக் கட்டியணைத்து 'ஓது' எனக் கூறியபோது தமக்கு ஓதத் தெரியாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மீண்டும் அவர் 'ஓது' எனக் கூற அப்போதும் தெரியாது என்று பதிலளித்தார்கள். பின்னர் அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறுகக் கட்டியணைத்து "படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக" என்று தொடங்கும் சில வார்த்தைகளைக் கூறினார்.

(இது 96வது அத்தியாயத்தில் முதல் ஐந்து வசனங்களாக இடம் பெற்றுள்ளது)

இப்படித்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்டு முதல் செய்தியும் அருளப்பட்டது. ஆனாலும் நபிகள் நாயகம் அதிர்ச்சியடைந்து அச்சம் கொண்டார்கள். தமது மனைவியிடம் வந்து இதைக் கூறினார்கள்.

"இறைவன் உங்களைக் கைவிடமாட்டான்; மக்களுக்கு நீங்கள் உதவுகிறீர்கள்; ஏழைகளுக்கு வாரி வழங்குகிறீர்கள்; உறவினர்களை உபசரிக்கிறீர்கள்; எனவே அல்லாஹ் உங்களைக் கைவிடமாட்டான்" என்று அவர்களின் மனைவி கதீஜா அவர்கள் ஆறுதல்படுத்தினார்கள்.

ஆயினும் தமது ஆறுதல் போதிய பயனளிக்காததைக் கண்ட கதீஜா அவர்கள் தமது உறவினர் வரகாவிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்துச் சென்றார்கள். இவர் முந்தைய வேதங்களைக் கற்றறிந்து, கிறித்தவ மார்க்கத்தையும் தழுவியிருந்தார்.

"நீர் இறைவனின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளீர்; உம்மை உமது சமுதாயத்தினர் ஊரை விட்டே வெளியேற்றும் நிலையை அடைவீர்; ஏனெனில் இறைத்தூதர்கள் பிரச்சாரம் செய்யும்போது இது தான் நடந்துள்ளது" என்று அவர் கூறி நம்பிக்கையூட்டினார்.

[நூல்: புகாரி 2]

இப்படி ஆரம்பித்த இறைச்செய்தியின் வருகை சிறிது சிறிதாகச் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப 23 ஆண்டுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.

23 ஆண்டுகளில் சிறிது சிறிதாக அருளப்பட்ட இறைச் செய்தியின் தொகுப்பே திருக்குர்ஆன்.

திருக்குர்ஆன் எவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது 

செவ்வாய், பிப்ரவரி 11, 2020

உடல் நலம் பற்றி இஸ்லாம்,

ஆரோக்கியம் பேணுவோம்


بسم الله الرحمن الرحيم
இந்தப் பதிவு DAWOODI AALIMKAL SANGAMAM தளத்தில் வெளிவந்தது
.
ஆரோக்கியம் பேணுவோம்
புற்றுநோய் காரணிகளை புறக்கணிப்போம்
புற்றுநோய் இல்லா புவி படைப்போம்



وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ - البقرة: 195
عَنْ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا سُئِلَ اللَّهُ شَيْئًا أَحَبَّ إِلَيْهِ مِنَ العَافِيَةِ» -  سنن الترمذي
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

புற்றுநோய் என்ற வார்த்தைநம்மிடையேயும் நம் குடும்பத்தினரிடையேயும் பற்றியெரிய வைக்கும் ஒரு தீப்பந்து. மனிதனின் உடலில் ஒரு பகுதியில் சிறு கட்டியாக தோன்றும் புற்றுநோய்அதை சரிசெய்வதற்குள்மற்ற உடல் உறுப்புகளுக்கும் பரவி மனிதனை கொல்லும் ஆட்கொல்லி நோயாக கருதப்படுகிறது. உலகளவில் இந்த ஆண்டு வரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 12.5 கோடி பேர். அவர்களில் கோடி பேர் இறந்துவிட்டனர். இந்தியாவில் மட்டும் 1.5 கோடி பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் சுமார் 60 லட்சம் பேர் பலியாகி விட்டனர். இந்த எண்ணிக்கை வரும் 2030-ம் ஆண்டில் மேலும் பல மடங்கு உயரும் என்று ஐநா சுகாதார அமைப்பின் புற்றுநோய் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
புற்றுநோய் எதனால் ஏற்படுகிறதுஅதன் காரணிகள் என்னஅவற்றை எவ்வாறு மனஉறுதியோடு எதிர்த்து போராடுவது என்பது குறித்து உலக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகபிப்ரவரி 4-ம் தேதி உலக புற்றுநோய் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறதுhttp://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130174
புற்றுநோய் உள்பட அனைத்து நோய்களுமற்ற ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இஸ்லாம் கூறிய வழிகளைப் பற்றி பேசுவதும் சிந்திப்பதும் மிக அவசியம்.
ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் பற்றிய ஹதீஸ்கள்
6412 - عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ: الصِّحَّةُ وَالفَرَاغُ " صحيح البخاري
                    6412. இறைத்தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள்' 
மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டுஇழப்புக்குள்ளாகி விடுகின்றனர்1. ஆரோக்கியம்2. ஓய்வு என இப்னு அப்பாஸ் (ரலிஅறிவித்தார். ஸஹீஹுல் புஹாரீ.
عَنْ أَبَي هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ أَوَّلَ مَا يُسْأَلُ عَنْهُ يَوْمَ القِيَامَةِ - يَعْنِي العَبْدَ مِنَ النَّعِيمِ - أَنْ يُقَالَ لَهُ: أَلَمْ نُصِحَّ لَكَ جِسْمَكَ، وَنُرْوِيَكَ مِنَ المَاءِ البَارِدِ "- سنن الترمذي
[இறைவனின் அருட்கொடைகளில் அடியானிடம்] மறுமையில் முதல் விசாரணை, உன் உடலை நான் ஆரோக்கியமாக வைக்கவில்லயா? குளிர்ந்த நீரால் உன் தாகத்தை தீர்க்கவில்லையா?” என்று கேட்பதேயாகும். என நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள். ஸுனன் திர்மிதீ
عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَادَ رَجُلًا مِنَ الْمُسْلِمِينَ قَدْ خَفَتَ فَصَارَ مِثْلَ الْفَرْخِ، فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ كُنْتَ تَدْعُو بِشَيْءٍ أَوْ تَسْأَلُهُ إِيَّاهُ؟» قَالَ: نَعَمْ، كُنْتُ أَقُولُ: اللهُمَّ مَا كُنْتَ مُعَاقِبِي بِهِ فِي الْآخِرَةِ، فَعَجِّلْهُ لِي فِي الدُّنْيَا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " سُبْحَانَ اللهِ لَا تُطِيقُهُ - أَوْ لَا تَسْتَطِيعُهُ - أَفَلَا قُلْتَ: اللهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ " قَالَ: فَدَعَا اللهَ لَهُ، فَشَفَاهُ. صحيح مسلم
5216. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களில் ஒருவரை உடல்நலம் விசாரிப்பதற்காகச் சென்றார்கள். அவர் கோழிக் குஞ்சைப் போன்று நலிந்து பலவீனத்துடன் காணப்பட்டார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ ஏதேனும் பிரார்த்தித்து வந்தாயாஅல்லது இறைவனிடம் ஏதேனும் வேண்டிவந்தாயா?" என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர் "ஆம்நான்இறைவா! நீ மறுமையில் அளிக்கவிருக்கும் தண்டனையை முன்கூட்டி இவ்வுலகிலேயே எனக்குத் தந்துவிடு என்று பிரார்த்தித்துவந்தேன்" என்று கூறினார்.
அதைக்கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வியப்புடன்) "அல்லாஹ் தூயவன் (சுப்ஹானல்லாஹ்!) "உன்னால் அதைத் தாங்க முடியாது". அல்லது "உன்னால் அதற்கு இயலாது" என்று கூறிவிட்டுநீ "இறைவா! இம்மையிலும் எமக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எமக்கு நன்மையை வழங்குவாயாக! நரக வேதனையிலிருந்து எம்மைக் காப்பாயாக!" என்று பிரார்த்தித்திருக்கக் கூடாதாஎன்று கேட்டார்கள்.
பிறகு அவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்அவருக்கு அல்லாஹ் நிவாரணத்தை வழங்கினான். ஸஹீஹ் முஸ்லிம்
عَنْ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا سُئِلَ اللَّهُ شَيْئًا أَحَبَّ إِلَيْهِ مِنَ العَافِيَةِ» -  سنن الترمذي
ஆரோக்கியத்தைவிட அல்லாஹ்வுக்கு பிரியமான வேறு எதையும் அவனிடம் வேண்டப்படுவதில்லை என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ஸுனன் திர்மிதீ
[அதாவது அல்லாஹ்விடம் வேண்டப்படுபவைகளில் அல்லாஹ்வுக்கு மிக பிடித்தமானது ஆரோக்கியம்தான்.]                                               
ஆரோக்கியம் பேண இரு வழிகள் உள்ளன
[1வருமுன் காப்பது
மனித உடல்நலனிற்கு கேடு விளைவிக்கும் காரியங்களை ஆரம்பத்திலேயே விலக்கியது இஸ்லாம்.
1-    மலஜலம் அடக்குவது
عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " لَا يُصَلِّيَنَّ أَحَدُكُمْ بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا وَهُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ "مسند أحمد
உணவு தயாராக இருக்கும் சூழ்நிலையிலும் இரு கேடானவைகள் [மலம், சிறுநீர்] முட்டிக்கொண்டிருக்கும் போதும் உங்களில் ஒருவர் தொழவேண்டாம் என்று நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள். அஹ்மத்
மலம் சிறுநீர் அடக்கினால் முழங்கால் வலி தலைவலி உடல் சோர்வு முகசோர்வு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சிறுநீ்ரை அடக்குவதால் ஏற்படும் பாதிப்புகள்
பொதுவாக ஐந்து முதல் பத்து வயதுள்ள சிறுவர்களால் 100-150 மி.லி சிறுநீரை சேமிக்க முடியும். உடல் வளர்ச்சி அதிகமாக,  சிறுநீர்ப்பையில் சிறுநீரின் கொள்ளளவும் அதிகரிக்கும். 22-25 வயதில் சிறுநீர்ப்பையின் வளர்ச்சி நின்றுவிடும். இந்த வயதில் சராசரியாக 350-400 மி.லி சிறுநீரை சிறுநீர்ப்பை தேக்கிவைக்கும். சிறுநீர் கழிக்காமல் அடக்கிவைத்தால்சிறுநீர்ப்பை விரிவடைந்து கொண்டே செல்லும். பல மணி நேரங்கள் அடக்கி வைத்து சிறுநீர் கழிப்பவர்களுக்கு சிறுநீர் முழுவதுமாக வெளியேறாது. விட்டு விட்டுத்தான் வெளியேறும். இதே பழக்கம் தொடர்ந்தால்சிறுநீர்ப் பையின் சுருங்கி விரியும் தன்மை குறைந்துவிடக்கூடும்.
சிறுநீரை அடக்குவதால்சிறுநீரில் உள்ள உப்பு படிமம் சிறு சிறு படிவங்களாக சேர்ந்து கற்களை உருவாக்கும். பிறகுஇந்தக் கற்கள் சிறுநீர்ப் பாதையை அடைத்துக் கொள்ளும்.
பொதுவாகவயதான ஆண்கள்,  சிறுநீரை அடக்குவர். இதனால்ப்ராஸ்டேட் சுரப்பியில் தொற்று காரணமாக வீக்கம் (Prostatitis) ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வீக்கத்தால் இவர்களுக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றினாலும்முழுதாக சிறுநீர் வெளியேறாது. 10 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றும். அரிதாகஇந்த வீக்கம் மலக்குடலையும் பாதிக்க வாய்ப்புள்ளது.
சிறுநீரை அடக்குவதில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் அதிகம்பேர் உள்ளனர். பயணங்களின்போதுபெண்கள் சிறுநீரை வெளியேற்ற கழிப்பறைகள் இல்லாமல் மிகுந்த சிரமத்துக்கு  உள்ளாகின்றனர். இதனால் பெண்களுக்கு சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படுகிறது.
கர்ப்பிணிகள் சிறுநீரை அடக்குவதால்கருவின் தலைப்பகுதி சிறுநீர்ப்பையை அழுத்த வாய்ப்புள்ளது. இதனால் வயிற்று வலிசிறுநீர் போகிற இடங்களில் வலி எனத் தேவையில்லாத பிரச்னைகள் வரக்கூடும். சிறுநீர் வருமோ என்று குறைவாக நீர் அருந்தும்போதுநீர் வறட்சி (Dehydration), சோர்வுதலைவலிசருமப் பிரச்னைகள்உடல் உஷ்ணம் ஆகிய பிரச்னைகள் ஏற்படும்.

மலத்தை அடக்குவதால் ஏற்படும் பாதிப்புகள்
மலத்தை நீண்ட நேரம் அடக்கிவைத்தால்மலம் இறுகி மூலம் அல்லது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். மலம் இறுகிமலக்குடலை பாதிக்கும். இவர்களுக்கு மலம் கழிக்கும்போது ரத்தமும் வெளியேறும்.
மலம் வரும்போது அடக்கும் பழக்கத்தால்சாப்பிட்டவுடன் மலம் கழிக்கும் பிரச்னையான இரிட்டபுள் பௌல் சிண்ட்ரோம் (Irritable bowel syndrome) பிரச்னை வரலாம்.
மலம் கழிக்கத் தோன்றும் எனச் சாப்பிடாமல் இருந்தால் பசிமயக்கம்சோர்வுதலைவலி ஆகியவை உண்டாகி உடலை பலவீனமாக்கி நோய்களுக்கு வாசலாக அமையும். இடுப்புப் பகுதியில் உள்ள பெல்விக் தசைகள் பலவீனமாகும். மலக்குடல்ஆசனவாய்ப் பகுதிகளில் கிருமி வேகமாக வளர்ச்சி அடையும். அதுஉடலில் வேறுவிதமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.
சிறுநீர்மலம் அடக்குதல் அதிகமாக சிறுநீர் அல்லது மலம் அடக்குவதால்செரிமான இயக்கம் கழிவுகளை துளைகளின் வழியாக வெளியேற்ற துவங்கும் என ஓர் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்இவ்வாறு சரும துளை வழியாக வியர்வையாக வெளிவரும் கழிவுகள் அதிக நாற்றம் வீசும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
2-    காலையில் தாமதமாக விழிப்பது
عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «باكِرُوا طَلَبَ الرِّزْقِ وَالْحَوَائِجَ، فَإِنَّ الْغُدُوَّ بَرَكَةٌ وَنَجَاحٌ» - المعجم الأوسط
ரிஜ்கையும் வாழ்க்கைத்தேவைகளையும் தேடி அதிகாலையிலேயே புறப்படுங்கள் ஏனெனில் அதிகாலையில் செல்வது பரக்கத்தாகும் வெற்றியுமாகும் என்று நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள். அல் முஃஜமுல் அவ்ஸத்.
عَنْ صَخْرٍ الْغَامِدِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اللَّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا» . وَكَانَ إِذَا بَعَثَ سَرِيَّةً أَوْ جَيْشًا بَعَثَهُمْ مِنْ أَوَّلِ النَّهَارِ «وَكَانَ صَخْرٌ رَجُلًا تَاجِرًا، وَكَانَ يَبْعَثُ تِجَارَتَهُ مِنْ أَوَّلِ النَّهَارِ فَأَثْرَى وَكَثُرَ مَالُهُ» - سنن أبي داود
இறைவாஎன் உம்மத்துக்கு அதிகாலைப்பொழுதில் அபிவிருத்தி செய்திடுஎன்று என்று நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் மேலும் அதிகைலைப்பொழுதிலே போருக்காக படை அனுப்பி வைப்பார்கள் மேலும் அறிவிப்பாளர் ஸஹ்ர் [ரலி] ஒரு வியாபாரியாக இருந்தார் வியாபாரத்திற்காக தன் சரக்குகளை அதிகாலையிலே அனுப்பி வைப்பார் அதனால் அவர் செல்வம் பெருகி வசதியானார். ஸுனன் அபீதாவூத்
அதிகாலையில் துயில் எழுதல் (Waking up earlyஎன்பது ஒரு சிறந்த பழக்கமாகும். அதிகாலையில் தூக்கத்தில் இருந்து விழித்தால் உடல் நலமும்மன நலமும் கூடும் என்று பல பல்கலைக்கழகங்களின் ஆய்வுகள் காட்டுகின்றன. [1] மேலும் கிரேக்க தத்துவஞானியான அரிஸ்டாட்டில் தன்னுடய கருத்துகளில் "இந்த பழக்கமானது எனக்கு வெற்றிகல்விஆரோக்கியம் போன்றவற்றை தருகிறது" என்று சொல்லியிருக்கிறார்
காலையில்தான் வான்வெளியில் புத்தம்புதிய பிராண வாயு அதிகமாக இருக்கும். இதனால் நுரையீரலுக்கு சுத்தமான காற்றும்இதயத்துக்கு நல்ல ரத்த ஓட்டமும் கிடைக்கும். ரத்த ஓட்டம் சீராக இருந்தாலே ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிடும்’ என்கிறது 2011ம் ஆண்டு வெளியான ஆய்வு ஒன்று. இந்த ஆய்வின் முடிவு ‘Medicines & Science’ இதழில் வெளிவந்துள்ளது. ரத்தத்தில் கொழுப்பு சேர்வது தவிர்க்கப்பட்டால் இதய நோய்களுக்கு உங்களுடைய முகவரி தெரியாது. செல்களுக்கு போதுமான ரத்த ஓட்டம் இருப்பதால் புற்றுநோய்கள் வருவதையும் தவிர்க்க முடியும்.
பிறமத சாஸ்திரங்களிலும் பிரம்ம முகூர்த்தத்தில் விழிப்பது என்று கூறுவர். பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3:00 to 5:00.
காலையில் சீக்கிரம் விழிக்க வேண்டும் என்றால் இரவில் சீக்கிரம் தூங்க வேண்டும். அதனால்தான் இரவில் அனாவசியமாக விழித்திருப்பதை நபி [ஸல்] அவர்கள் தடுத்துள்ளார்கள்.
568 - عَنْ أَبِي بَرْزَةَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَكْرَهُ النَّوْمَ قَبْلَ العِشَاءِ وَالحَدِيثَ بَعْدَهَا» صحيح البخاري
568. அபூ பர்ஸா (ரலி) அறிவித்தார்.
'நபி (ஸல்) அவர்கள் இஷாவுக்கு முன் உறங்குவதையும் இஷாவுக்குப் பின் பேசுவதையும் வெறுப்பவர்களாக இருந்தனர்.ஸஹீஹுல் புஹாரீ.
நாம் சரியாக தூங்காவிட்டால் ரத்தக்கொதிப்புமனச்சோர்வுகண்களை இழுத்து பிடிப்பது போன்ற உணர்வுகண் சிவப்புகோபம்கைகால் நடுக்கம்தூக்கம் இடையில் கலைந்தவுடன் மலம் மற்றும் சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வுகொட்டாவிகண்மூக்கு மற்றும் வாய் பாதையில் ஒரு வறட்சிஉச்சந்தலையில் சூடான சட்டியை கவிழ்த்து வைத்தது போன்ற உணர்வுகண்ணை சுற்றியுள்ள பகுதிகள் வீங்கிகன்னங்கள் ஒட்டிப் போதல்அல்சர்தலைவலி மற்றும் பலவித உடல் உபாதைகளும் சுறுசுறுப்பின்மையும் உண்டாகின்றன.   http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=5269&ncat=11&Print=1
3-    மது அருந்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَا أَكْبَرُ مِنْ نَفْعِهِمَا -  البقرة: 219  
 (நபியே!) மதுபானத்தையும்சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்நீர் கூறும்அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறதுமனிதர்களுக்கு (அவற்றில் சிலபலன்களுமுண்டுஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிதுஅல்-குர்ஆன் 2:219. 
عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ وَائِلٍ الْحَضْرَمِيِّ، أَنَّ طَارِقَ بْنَ سُوَيْدٍ الْجُعْفِيَّ، سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْخَمْرِ، فَنَهَاهُ - أَوْ كَرِهَ - أَنْ يَصْنَعَهَا، فَقَالَ: إِنَّمَا أَصْنَعُهَا لِلدَّوَاءِ، فَقَالَ: «إِنَّهُ لَيْسَ بِدَوَاءٍ، وَلَكِنَّهُ دَاءٌ- صحيح مسلم
4015. வாயில் பின் ஹுஜ்ர் அல்ஹள்ரமீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் தாரிக் பின் சுவைத் அல்ஜுஅஃபீ (ரலி) அவர்கள் மது (தயாரிப்பதைப்) பற்றிக் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அ(வ்வாறு மது தயாரிப்ப)தைத் தடை செய்தார்கள்அல்லது அதை வெறுத்தார்கள். அப்போது தாரிக் (ரலி) அவர்கள், "மருந்துக்காகவே அதைத் தயாரிக்கிறேன்" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "அது மருந்தல்லநோய்" என்றார்கள். ஸஹீஹ் முஸ்லிம்.
4-   வயிறு நிறைய சாப்பிடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது
عَنْ مِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مَلَأَ آدَمِيٌّ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ. بِحَسْبِ ابْنِ آدَمَ أُكُلَاتٌ يُقِمْنَ صُلْبَهُ، فَإِنْ كَانَ لَا مَحَالَةَ فَثُلُثٌ لِطَعَامِهِ وَثُلُثٌ لِشَرَابِهِ وَثُلُثٌ لِنَفَسِهِ» سنن الترمذي
முஹம்மது நபி (ஸல்அவர்கள் கூறநபித்தோழர் மிக்தாம் இப்னு மஃதீ கரிப் (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்ஆதமின் மகன் வயிறை விடக் கெட்ட ஒரு பையை நிரப்புவதில்லைஆதமுடைய மகனின் முதுகெலும்பை நிமிர்த்தும் அளவிற்கு  சில கவளம் உணவே அவனுக்குப் போதுமானதுஅவசியமானால் அவனுடைய வயிற்றில் மூன்றில் ஒரு பகுதி உணவுக்காகவும்மற்றொரு பகுதி தண்ணீருக்காகவும்பிரிதொரு பகுதி மூச்சு விடுவதற்காகவும் (காலியாகஇருக்கட்டும்.
ஸுனன் திர்மிதீ.
ஆரோக்கியம் பேண இரு வழிகள் உள்ளன. அவற்றில் இரண்டாவது
மருத்துவம் செய்வது
நோய் என்ன என்று கண்டறிந்து  ஆரம்ப நிலையிலேயே தகுந்த முறையில் சிகிச்சை எடுப்பதும் மருத்துவம் செய்வதும் நோய் முற்றி விடாமலும் பாதிப்பு ஏற்படாமலும் இருக்க உதவும். வியாதிக்கு மருத்துவம் செய்வதை அனுமதித்து அல்லது வலியுறுத்தி வரும் குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் வருமாறு
وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ (68) ثُمَّ كُلِي مِنْ كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا يَخْرُجُ مِنْ بُطُونِهَا شَرَابٌ مُخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِلنَّاسِ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِقَوْمٍ يَتَفَكَّرُونَ  [النحل: 69
16:69. பின்நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறதுஅதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டுநிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا - النساء: 29
நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான். அல்-குர்ஆன்4:29.
وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ - البقرة: 195
இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; அல்-குர்ஆன் 2:195
5678 - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا أَنْزَلَ اللَّهُ دَاءً إِلَّا أَنْزَلَ لَهُ شِفَاءً» صحيح البخاري
5678. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புஹாரீ.
عَنْ جَابِرٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «لِكُلِّ دَاءٍ دَوَاءٌ، فَإِذَا أُصِيبَ دَوَاءُ الدَّاءِ بَرَأَ بِإِذْنِ اللهِ عَزَّ وَجَلَّ» صحيح مسلم
4432. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு நோய்க்கும் நிவாரணம் ஒன்று உண்டு. நோய்க்குரிய நிவாரணம் சரியாக அமைந்துவிட்டால்வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் அனுமதியால் குணம் ஏற்படும்.- இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸஹீஹ் முஸ்லிம்.

5681 - عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " الشِّفَاءُ فِي ثَلاَثَةٍ: فِي شَرْطَةِ مِحْجَمٍ، أَوْ شَرْبَةِ عَسَلٍ، أَوْ كَيَّةٍ بِنَارٍ، وَأَنَا أَنْهَى أُمَّتِي عَنِ الكَيِّ " صحيح البخاري

5681. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில்) கீறுவதுதேன் அருந்துவதுநெருப்பால் சூடிட்டுக் கொள்வது ஆகியனவே அந்த மூன்றும். (இருப்பினும்,) நான் என் சமுதாயத்தாருக்கு நெருப்பால் சூடிட்டுக் கொள்ள வேண்டாமெனத் தடை விதித்கிறேன். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புஹாரீ.
عَنْ خَالِدِ بْنِ سَعْدٍ، قَالَ: خَرَجْنَا وَمَعَنَا غَالِبُ بْنُ أَبْجَرَ فَمَرِضَ فِي الطَّرِيقِ، فَقَدِمْنَا المَدِينَةَ وَهُوَ مَرِيضٌ، فَعَادَهُ ابْنُ أَبِي عَتِيقٍ، فَقَالَ لَنَا: عَلَيْكُمْ بِهَذِهِ الحُبَيْبَةِ السَّوْدَاءِ، فَخُذُوا مِنْهَا خَمْسًا أَوْ سَبْعًا فَاسْحَقُوهَا، ثُمَّ اقْطُرُوهَا فِي أَنْفِهِ بِقَطَرَاتِ زَيْتٍ، فِي هَذَا الجَانِبِ وَفِي هَذَا الجَانِبِ، فَإِنَّ عَائِشَةَ، حَدَّثَتْنِي: أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ هَذِهِ الحَبَّةَ السَّوْدَاءَ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ، إِلَّا مِنَ السَّامِ» قُلْتُ: وَمَا السَّامُ؟ قَالَ: المَوْتُ- صحيح البخاري

5687. காலித் இப்னு ஸஅத்(ரஹ்கூறினார்
எங்களுடன் ஃகாலிப் இப்னு அப்ஜர்(ரலிஇருக்க நாங்கள் (பயணம்புறப்பட்டோம்வழியில் ஃகாலிப்(ரலிநோய்வாய்ப்பட்டார்கள்அவர்கள் நோயாளியாக இருக்கும் நிலையிலேயே மதீனாவுக்குச் சென்றோம்ஃகாலிப்(ரலிஅவர்களை இப்னு அபீ (த்)தீக்(ரலிஉடல் நலம் விசாரிக்க வந்தார்கள்.
அப்போது அவர்கள் எங்களிடம் (பின்வருமாறுகூறினார்கள்இந்தச் சின்னஞ்சிறு கறுப்பு வித்தை (கருஞ்சீரகத்தைநீங்கள் பயன்படுத்துங்கள்இதிலிருந்து ஐந்து அல்லது ஏழு வித்துகளை எடுத்துத் தூளாக்கி (எண்ணெய் பிழிந்துஅவரின் மூக்கில் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் (அதன்எண்ணெய்ச் சொட்டுகளை விடுங்கள்ஏனெனில்ஆயிஷா(ரலிஎன்னிடம், 'நபி(ஸல்அவர்கள் இந்தக் கருஞ்சீரகம் எல்லா நோய்க்கும் நிவாரணமாகும்; 'சாமை'த் தவிர என்று கூறியதை கேட்டிருக்கிறேன்எனத் தெரிவித்தார்கள்நான், 'சாம் என்றால் என்ன?' என்று அவர்களிடம் கேட்டேன்அதற்கு அவர்கள் 'மரணம்என்று பதிலளித்தார்கள். ஸஹீஹுல் புஹாரீ
عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ، قَالَتْ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " عَلَيْكُمْ بِهَذَا العُودِ الهِنْدِيِّ، فَإِنَّ فِيهِ سَبْعَةَ أَشْفِيَةٍ: يُسْتَعَطُ بِهِ مِنَ العُذْرَةِ، وَيُلَدُّ بِهِ مِنْ ذَاتِ الجَنْبِ " صحيح البخاري
5692. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நீங்கள் இந்த இந்திய (கோஷ்ட)க் குச்சியை அவசியம் பயன்படுத்துங்கள். ஏனெனில்அதில் ஏழு நிவாரணங்கள் உள்ளன. அடிநாக்கு அழற்சிக்காக அதை(த் தூளாக்கி எண்ணெயில் குழைத்து) மூக்கில் சொட்டு மருந்தாக இடப்படும். (மார்புத் தசைவாதத்தால் ஏற்படும்) விலா வலிக்காக அதை வாயின் ஒரு பக்கத்தில் சொட்டு மருந்தாகக் கொடுக்கப்படும்.
என உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன்(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புஹாரீ. ஸஹீஹுல் புஹாரீ.

     

புதன், பிப்ரவரி 05, 2020

இஸ்லாம் பிற மதத்தவரை கொல்லச் சொல்கிறதா?

இஸ்லாம் பிற மதத்தவரை கொல்லச் சொல்கிறதா? (2:190-1932:2162:2443:1213:1954:74,754:844:894:918:398:608:659:59:12-149:299:369:419:739:12322:3947:466:9) போர் செய்யுமாறு முஸ்லிம்களுக்குக் கட்டளையிடுகின்றன.

ஆன்மிக வழிகாட்டும் நூலில் போர் செய்யுமாறு ஏன் கட்டளையிட வேண்டும்? அப்படியானால் வாள்முனையில் தான் இஸ்லாம் பரப்பப்பட்டதா? என்ற சந்தேகம் ஏற்படலாம்.

ஏன் இவ்வாறு கட்டளையிடப்பட்டது? எந்தச் சூழ்நிலையில் இந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது என்பதை அறிந்து கொண்டால் இந்தச் சந்தேகம் விலகி விடும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் தம்முடைய வீடு வாசல், சொத்து, சுகங்கள் அனைத்தையும் எதிரிகளிடம் பறிகொடுத்து மக்காவை விட்டு வெளியேறினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது அவர்களுக்கு மக்களின் பேராதரவு கிடைத்ததால் அங்கே தனி அரசையும் உருவாக்கினார்கள்.

இதன் பிறகு மக்காவாசிகள் படையெடுத்து வந்ததாலும், மக்காவில் இருந்த முஸ்லிம்களைத் துன்புறுத்தியதாலும், சிலரைக் கொன்று குவித்ததாலும் போர் செய்வதை இறைவன் கடமையாக்கினான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதத் தலைவராக மட்டுமின்றி அந்த நாட்டின் அதிபராகவும் இருந்தார்கள். நாட்டின் அதிபராக இருப்பவர் தமது குடிமக்களைக் காக்கும் பொறுப்பில் இருப்பதால் எதிரிகள் போருக்கு வரும்போது அவர்களை எதிர்கொண்டு தான் ஆகவேண்டும். சொந்த ஊரை விட்டு முஸ்லிம்களை விரட்டி அடித்தது மட்டுமின்றி வேறு இடத்தில் நிம்மதியாக வாழும்போது எதிரிகள் போருக்கு வந்தால் அவர்களை எதிர்க்கும் கடமையும், உரிமையும் உண்டு. இதனடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போரிட்டார்கள்.

'கொல்லுங்கள்' 'வெட்டுங்கள்' என்று கூறப்படும் கட்டளைகள் போர்க்களத்தில் நடைமுறைப்படுத்த வேண்டியவை. போர்க்களத்தில் இப்படித்தான் நடக்க வேண்டும். போர்க்களத்தில் போர் வீரர்களுக்கு இடப்பட்ட மேற்கண்ட கட்டளைகளை இஸ்லாத்தின் எதிரிகள் எடுத்துக் காட்டி முஸ்லிமல்லாத மக்களை இஸ்லாம் கொன்று குவிக்கச் சொல்கிறது என்று பிரச்சாரம் செய்வது உள் நோக்கம் கொண்டதாகும்.

இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என்பதைப் பின்வரும் வசனங்களில் இருந்தும் அறிந்து கொள்ளலாம்.

  • வம்புச் சண்டைக்கு வருவோருடன் தான் போர் செய்ய வேண்டும் என்று 2:1909:13 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
  • சொந்த ஊரை விட்டு விரட்டியடித்தவர்களுடன் தான் போர் செய்ய வேண்டும் என்று 2:19122:40 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
  • போரிலிருந்து விலகிக் கொள்வோருடன் போர் செய்யக் கூடாது என்று 2:192 வசனம் கூறுகிறது.
  • அநீதி இழைக்கப்படும் பலவீனமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காகவே போர் செய்ய வேண்டும் என 4:7522:39-40 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
  • சமாதானத்தை விரும்புவோருடன் போர் செய்யக் கூடாது என்று 8:61 வசனம் கூறுகிறது.
  • மதத்தைப் பரப்ப போர் செய்யக் கூடாது என்று 2:2569:6109:6 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

நியாயமான காரணம் இருந்தால் மட்டும் முஸ்லிம் அரசாங்கம் போர் செய்யலாம் என்று தான் இஸ்லாம் கூறுகிறது.

இந்த வசனங்கள் எதற்காக எந்தச் சூழ்நிலையில் அருளப்பட்டன என்பதை விளங்காமல் சில தனி நபர்களும், குழுக்களும் தங்களின் வன்முறைகளுக்கு உரிய சான்றுகளாக இவ்வசனங்களை எடுத்துக் கொண்டால் அது அவர்களின் அறியாமையாகும். இவ்வசனங்களுக்கும், வன்முறைகளுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

தனி நபர்களோ, குழுக்களோ ஜிஹாத் என்ற பெயரில் வன்முறையில் இறங்கினால் அது தவறாகும்.

சொந்த நாட்டை விட்டு விரட்டப்பட்டவர்கள் போரிட்டு, இழந்த உரிமையை மீட்பதை யாரும் குறை கூற முடியாது. அதனடிப்படையில் தான் மக்காவின் மீது போர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போர் தொடுத்தனர்.

போரை முதலில் துவக்கக் கூடாது என்று தெளிவான கட்டளையும் இருக்கிறது. இதை 2:1909:12,13 ஆகிய வசனங்களில் காணலாம்.

போர், பயங்கரவாதம், ஜிஹாத் ஆகியவை குறித்து மேலும் அறிந்திட 54557689197198199203359 ஆகிய குறிப்புகளையும் பார்க்கவும்.

ஞாயிறு, பிப்ரவரி 02, 2020

சீனாவின் கோரோனா வைரஸ்,

*சீனாவில் அழிவு எதனால்...*

*இறையச்சத்துடன் தொடர்க..!*

*சமகால அகதிகள் உய்குர் முஸ்லிம்கள்…*

சீனாவின் தெற்குப் பகுதியான *ஷின்ஜியாங்* கிட்டத்தட்ட நம் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா இவற்றையெல்லாம் ஒன்றாக சேர்த்தால் எவ்வளவு பெரியதாக இருக்குமோ அவ்வளவு பெரிய பரப்பளவு கொண்ட ஒரு பகுதி.

‘ஷின்ஜியாங்’ (Xinjiang) மாகாணத்தில் வசிக்கும் *உய்குர் முஸ்லிம் (Uyghur) என்றால்,* வெள்ளிக்கிழமை எழுந்து தொழுகைக்காக மசூதிக்குச் செல்லும்போது, உலகில் வேறெங்கும் முஸ்லிம்கள் பின்பற்றாத சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

மசூதி வாசலை நெருங்கியவுடன், அங்கு கையில் இயந்திர துப்பாக்கிகளுடன் காத்திருக்கும் சீன பாதுகாப்புப் படையினர் வரவேற்பார்கள்.

முதலில் கருவிழித்திரை ஸ்கேன் செய்யப்படும். பின்பு மொத்த உடலும் சோதனை செய்யப்படும். இவையெல்லாம் முடித்து தொழுகை நடத்துவதற்காக  மசூதிக்குள் நுழையலாம். உள்ளே சென்று தொழுகை நடத்துவதற்கு நிமிர்ந்து பார்த்தால் அங்கு பிரமாண்டமாக சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் (Xi jinping) படம் மாட்டப்பட்டிருக்கும்.

*உய்குர் முஸ்லிம்கள் வாசிக்கும் குர்ஆன் தணிக்கை செய்யப்பட்டிருக்கும்.* அதில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை சொருகப்பட்டிருக்கும்.

ஷின்ஜியாங் பகுதியில் உள்ள பாலைவனங்களில் சீன அரசு கடந்த சில ஆண்டுகளாக,  பிரத்யேகமான *‘பள்ளிகள்’* சிலவற்றை நடத்திவருகிறது. *வெளிஉலகுக்குத் தெரியாமல்* நடத்தப்படும் இப்பள்ளிகளில் பயில்பவர்கள் அனைவரும் 18 வயதைத் தாண்டிய உய்குர் முஸ்லிம்கள்.

*தாடி வளர்த்தால், குர்ஆனின் மூலப் பிரதியை வாசித்தால், இஸ்லாமிய வழக்கப்படி திருமணம் செய்துகொண்டால், ஹலால் உணவை உண்டால், சீன அரசின் தொலைக்காட்சி சேனலைப் பார்க்க மறுத்தால், அதிபர் ஜி ஜின்பிங்கின் படம் வீட்டின் வரவேற்பறையை அலங்கரிக்காவிட்டால், வாட்ஸ் ஆப் பயன்படுத்தினால், இந்த பள்ளிகளுக்கு அனுப்பப்படுவார்கள்.*

*ஆள் அரவமில்லாத பாலைவனத்துக்கு நடுவில் இயங்கும் இந்தப் பள்ளிகளில் பயிலச் செல்பவர்கள், அவர்கள் சொல்லும் ‘பாடத்தை’க் கற்க மறுத்தால், அடித்துத் துன்புறுத்தப்படலாம். மின்சார நாற்காலியில் அமரவைக்கப்படலாம். இல்லை கொன்று தூக்கி எறியப்படலாம்.*

*உய்குர் முஸ்லிம்களை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்றால் அவர்களை ஒன்றிணைக்கும் மதத்தையும், கலாச்சாரத்தையும் முதலில் வேரறுக்க வேண்டும். அவர்களைச் சீனர்களாக மாற்ற வேண்டும். அதற்காக தொடங்கப்பட்டவைதான் இப்பத்தியின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட பள்ளிகள்.*

*இவை பள்ளிகள் அல்ல, மூளைச் சலவை மையங்கள் எனவும், பல அரச பயங்கரவாத குற்றங்கள் நடக்கும் சிறைகள் எனவும் சர்வதேச அளவில் உய்குர் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்களும், பத்திரிகையாளர்களும் தெரிவிக்கின்றனர்.*

பொதுவாகவே தன் நாட்டு மக்களைக் கண்காணிப்பதில் பெரும் பகுதி பணத்தையும், உழைப்பையும் செலவழிக்கும் நாடு சீனா. ஆனால் ஷின்ஜியாங் பகுதியில் இது பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

*உய்குர் முஸ்லிம்கள் பயன்படுத்தும் செல்போன்களில் அவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ‘மொபைல் ஆப்’ ஒன்று அரசால் வலுக்கட்டாயமாக இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொருவருக்கும் நம் ஆதார் அட்டையைப்போல் ஒரு அடையாள அட்டை உள்ளது. இவற்றை உய்குர்கள் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள், அலுவலகங்கள், கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் என அனைத்து இடங்களிலும் காட்ட வேண்டும்.*

*தன் சொந்த வீடாகவே இருந்தாலும், வீட்டுக்குள் நுழையும் நேரம், வீட்டை விட்டு வெளியேறும் நேரம் உள்ளிட்டவற்றை வீட்டு வாசலில் ஒட்டப்பட்டுள்ள ‘கியூஆர் கோடை’ செல்போனில் ஸ்கேன் செய்து பதிவு செய்ய வேண்டும்.*

*குழந்தைகளுக்கு உய்குர் வரலாற்றையோ, இஸ்லாத்தையோ பெற்றோர்கள் போதிக்கக் கூடாது. 18 வயதிற்கு குறைவானவர்கள் மத நிகழ்வுகளில் பங்கு பெறக்கூடாது. எவரும் மக்கா புனிதப் பயணம் செல்லக்கூடாது. ஹலால் உணவை விற்கும் உணவகங்களுக்குத் தடை. இதை எதிர்த்து நிகழும் போராட்டங்களை ராணுவத்தைக் கொண்டு அடக்குவது, மீறுபவர்களை அரசு நடத்தும் பள்ளிகள் என்ற இந்த சிறைகளுக்கு அனுப்புகிறது சீன அரசு.*

*பல அடுக்கு பாதுகாப்பு, சுற்றிலும் உயர் கண்காணிப்பு கோபுரங்கள். மின்சாரம் பாயும் கம்பிகள் நெளியும் மிகப்பெரிய மதில் சுவர்கள் கொண்ட இந்தப் பள்ளிகளில் பயில்பவர்களுக்கு, நாள் முழுவதும் சீன மொழியான மாண்டிரின், சீன அரசின் கொள்கைகள், சட்டங்கள் உள்ளிட்டவை பயிற்றுவிக்கப்படுகின்றன. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை அனைவரும் மனப்பாடம் செய்யவேண்டும். செங்கொடியை வணங்கவேண்டும். உய்குர் முஸ்லிம் கலாச்சாரத்தையும், இஸ்லாத்தையும் விமர்சனம் செய்ய வேண்டும். அதிபர் ஜி ஜின்பிங் எழுதிய பாடல்களை மனப்பாடம் செய்து பாட வேண்டும்.*

முதலில் *இதுபோன்ற இடங்கள் இல்லை என்று மறுத்து வந்த சீனா, மறுக்க முடியாத ஆதாரங்களை சர்வதேச அளவில் செயற்பாட்டாளர்கள் வெளியிட்டவுடன் ஒப்புக்கொண்டது.* ஆனால், அவை சிறைச்சாலை அல்ல. மத அடிப்படைவாதம், தீவிரவாதம் உள்ளிட்டவற்றை நோக்கிச் செல்பவர்கள் மீண்டு வருவதற்காக நடத்தப்படும் பள்ளிகள் என்று மழுப்பியது.

ஆனால் 18 வயதைத் தாண்டிய இளைஞர்கள், மத்திம வயதுக்காரர்கள் அனைவரும் இப்பள்ளிகளில் சீருடைகள் அணிந்து கொண்டு பாடம் பயில்கின்றனர் (இதில் உய்குர் இன பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகளும் அடக்கம்). சிறிய அறைகளில் பத்துக்கும் அதிகமானோர் தங்கிக்கொண்டு ஒரே திறந்த கழிவறையை பகிர்ந்து கொள்கின்றனர்.

*இவர்கள் யாருக்கும் எப்போது வீடு திரும்புவோம் என தெரியாது. இவையெல்லாம் பள்ளியை நினைவுபடுத்துவதுபோல் இருக்கிறதா? அல்லது சிறைச்சாலையை நினைவுபடுத்துகிறதா? என செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.*

*உய்குர் இன முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டு இஸ்லாமிய நாடுகள் அமைதி காக்கின்றன.* அவர்களின் மதத்தை ஒரு மனநோய் என சீன அரசாங்கம் சொன்னாலும் செளதி அரேபியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் அமைதி காப்பதற்கான காரணம் ஒபிஓஆர் திட்டத்தின் கீழ் பல கோடிகளை இந்நாடுகள் சீனாவிடமிருந்து கடனாகப் பெற இருக்கின்றன. 

சீன அரசு இவ்வளவு பணத்தைச் செலவழித்து ஏன் இது போன்ற பள்ளிகளை நடத்தவேண்டும்? அதற்கான பதில் ஷின்ஜியாங் பகுதியில் கொட்டிக்கிடக்கும் இயற்கை வளங்களில் உள்ளது. சீனாவுக்குத் தேவையான 40% நிலக்கரி இங்குதான் உள்ளது. சீனாவின் உற்பத்திக்கு உதவும் காற்றாலை மின்சாரத்தில் 20% இங்கிருந்துதான் செல்கிறது.

ஷின்ஜியாங் பகுதியின் மண்ணுக்கடியில் இயற்கை எரிவாயு, எண்ணெய் வளம் கொட்டிக்கிடக்கிறது. மண்ணுக்கடியில் உள்ள வளம் கொழிக்கும் சுரங்கத்தை ஒப்பிடும்போது, சீன அரசுக்கு அதற்கு மேல் அலையும் உய்குர்கள் பெரிதாக தெரியவில்லை.

*இவை எல்லாவற்றையும் விட சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் கனவுத்திட்டமான ‘ஒன் பெல்ட் ஒன் ரோடு’ திட்டத்தின் உயிர்நாடியாக ஷின்ஜியாங் கருதப்படுகிறது. இந்த ஓபிஓஆர் திட்டத்தின் கீழ் மத்திய ஆசிய நாடுகளை சீனாவுடன் இணைக்கும்  ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள், கேஸ் குழாய்கள் மற்றும் ரயில் பாதைகள் ஷின்ஜியாங்கை ஊடுருவிச்  செல்கின்றன.*

*உலக அளவில் சீனாவின் பொருளாதாரம் மற்றும் அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டும் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட வேண்டும் என்றால் ஷின்ஜியாங் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அதன் விளைவே இப்பள்ளிகள்.*

*ஒரு கோடிக்கும் மேல் வாழ்கிற உய்குர் முஸ்லிம்களில் முக்கால் வாசியினர் இந்த தடுப்பு முகாம்களான சிறப்பு பள்ளிக் கூடத்திலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.*

( நன்றி: https://tamil.asiavillenews.com/article/china-uighur-suppression-and-the-history-behind-it-8107, பிபிஸி. நியூஸ், விகடன்.காம் )

*முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக கொன்று குவித்திட, வெளியேற்றிட துடிக்கும் கொடிய விரோதிகளை அல்லாஹ் என்ன செய்வான்?

*அழித்து விடுவான்….*

*மீண்டும் முதல்வரியை வாசியுங்கள்...!*













தனது நாட்டுமக்கள் கொரோனா வைரசால் மடிகிறார்கள் அதற்க்கு பரிகாரம் அல்லாஹ்விடம்தான் என்று நம்பி பள்ளிவாசல் சென்று தொழுது கொள்ளும் சீன பிரதமர் அவர்கள்.

பிரபல்யமான பதிவுகள்