நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

செவ்வாய், மார்ச் 31, 2020

coronavirus,கோரோனாவும்,இந்தியாவில் அலட்சியமும்,

*🎬எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்!*

       சீனாவிலுள்ள வுஹான் மாகாணத்தில் டிசம்பர் 8 ஆம் தேதி முதன் முதலாக கொரோனா ஆட்கொல்லி குறித்த செய்தி வெளியானாலும் ஜனவரி மூன்றாம் வாரத்தில் தான் ‘கொரோனா’ எனும் சொல் ஊடகங்களில் பரவலாக வெளிவரத்தொடங்கின. பிப்ரவரி 1, 2 தேதிகளில் சீனாவின் வுஹான் நகரில் சிக்கியிருந்த 654 இந்தியர்களை இந்திய அரசு விமானங்கள் மூலம் மீட்டுகொண்டு வந்தது. அதாவது இன்றிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்திய அரசு துரிதமான நடவடிக்கையை மேற்கொண்டது. இந்நிலையில் தான் பிப்ரவரி 24, 25 ஆம் தேதி இரண்டு நாட்கள் பயணமாக அமெரிக்க அதிபர் இந்தியா வருகிறார் எனும் செய்தியையும்  இந்திய அரசு அறிவித்தது. மூன்று வாரங்கள் இரவு பகலாக பணியாற்றி அதற்கான சிறப்பு ஏற்பாடுகளை இந்திய அரசு செய்தது.  இலட்சக்கணக்கான மக்களுடன் சேர்ந்து  நம் இந்தியப் பிரதமர் அமெரிக்க அதிபரை வரவேற்று உலகே திரும்பிப்பார்க்கும் படி நிகழ்ச்சிகளை நடத்தினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வரும் முன்பிருந்த  காலக்கட்டங்களில் நூற்றுக்கணக்கில் நாள்தோறும் கொரோனா நோய்க்கு சீனாவிலும் மற்ற நாடுகளிலும் பலியாகிக்கொண்டிருந்தனர். கேரளா போன்ற இன்னும் பிற  மாநிலத்திலும் நோய் பரவத்தொடங்கியிருந்தது. உலகில் பல நாடுகளுக்கும் பரவத்தொடங்கியதில் அத்தனை நாடுகளும் தற்காப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு போராடிக்கொண்டிருந்தன. கொரோனா வைரஸிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ளச்சொல்லி அமெரிக்க அதிபர் எச்சரிக்கைச் செய்தியை அறிவித்தார். சில கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஈரான், இத்தாலி நாடுகளெல்லாம் தாக்குதலுக்குள்ளாகி கதறிக்கொண்டிருந்தபொழுது 130 கோடி மக்களுக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நம் இந்தியாவில் அந்நேரத்தில்  என்ன நடந்து கொண்டிருந்தது  என்பதை அறிய அந்நாட்களில் வெளியான ஊடகச்செய்திகளை  பின் நோக்கிப்பார்த்தால் புரியும்.
      அமெரிக்க அதிபரை வரவேற்கும் ஏற்பாடு, ஜக்கி வாசுதேவ் நடத்தும் பக்தர்கள் வழிபாட்டை குடியரசு துணைத்தலைவர் தொடங்கி வைக்கும் மகா சிவராத்திரி விழா, நடிகர் ரஜினிகாந்த் அறிவிக்கப்போகும் அரசியல் கட்சி பற்றிய செய்திகள், விவாதங்கள் இவைகளில் மட்டுமே அனைவரும் கவனம் செலுத்தி செய்திகளை வெளியிட்டனர். இதனிடையில் அவ்வப்போது வெளிவரும் சின்னச்சின்ன செய்திகளைக்  கண்டு நம் மக்களும் ‘கொரோனா வைரஸ் யாரையோ கொன்று கொண்டிருக்கிறது! நமக்கெல்லாம் அது வரவே வராது’   என நினைத்துக்கொண்டிருந்தனர்.
கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு விமானம் மூலமாகவும் மிகச்சிறிய அளவு கப்பலில் பயணம் செய்தவர்கள் மூலமாகவும்  மட்டுமே பரவியது. சீனாவின் வுஹான் நகரில் சிக்கியிருந்த மக்களை அழைத்து வந்த நாளான பிப்ரவரி 1, 2 ஆம் தேதிகளிலிருந்தே இந்தியாவுக்குள் நுழையும் அனைத்து விமானங்கள் மற்றும் கப்பல்களில் மிகத்தீவிரமான சோதனைக் கட்டுப்பாடுகளை விதித்து அத்தனைப்பேரையும் தனிமைப்படுத்தியிருக்க வேண்டும். 50 நாட்கள் கழித்து இப்பொழுது 130 கோடி மக்களை வீட்டுக்குள் முடக்கிய அரசு, உடனடியாக கொரோனாவை இறக்குமதி செய்த விமான, கப்பல் போக்குவரத்தில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு  தடுத்திருக்க  வேண்டும். அப்படிப்பட்ட நடவடிக்கையைத்தான் அப்பொழுது சீன மேற்கொண்டது. சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் மூலம் வைரஸ் பரவி விடும் என்பதால் அனைத்து போக்குவரத்தையும் தடைசெய்து 90 கோடி மக்களை வளையத்திற்குள் கொண்டு வந்தது. 
இந்திய ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் நாடாளுமன்றம், சட்டமன்றம் நடத்துவதிலும், அவரவர்களுடைய கட்சியை வளர்ப்பதிலும் முனைப்போடு இருந்துவிட்டு இப்பொழுது வந்து ஆளாளுக்கு மக்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறனர். இப்பொழுது 24 மணி நேரமும் மக்களை உறங்க விடாமல் செய்துகொண்டிருக்கும் ஊடகங்கள் இதற்கான விழிப்புணர்வை அப்பொழுது அரசுக்கும், மக்களுக்கும்  ஏற்படுத்தத் தவறி விட்டன!. உலகம் முழுக்க நிகழ்ந்த கொரோனா பலிச்செய்திகளை வெளியிட்டுக்கொண்டே நேரலையில் அமெரிக்க அதிபரையும், இந்திய பிரமதரையும், ரஜினிகாந்தையும் துரத்திக்கொண்டிருந்தார்கள். அமெரிக்க அதிபரின் வரவால் இந்திய நாடு மாபெரும் வளர்ச்சியை அடையப்போகிறது எனவும் செய்தி வெளியிட்டார்கள். 
ஆனால், கொரோனாவை அலட்சியப்படுத்தியவர்களும், ஊடகங்களும் தான் கொரோனாவின் தீவிரத்தை மக்கள்தான் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என இப்பொழுது குறைபட்டுக் கொள்கிறார்கள். 
   இருக்கப்பட்டவர்கள் மூன்று வாரம் என்ன, இன்னும் மூன்று மாதங்கள், மூன்று ஆண்டுகள் ஆனாலும் வீட்டுக்குள் இருந்தே உயிர் வாழ்ந்து விட முடியும். தினம் வெளியில் ஓடி உழைத்தால் மட்டுமே பிழைக்க முடியும் எனும் நிலையில் வெறும் கை கால்களை நம்பியுள்ள 75 கோடி மக்கள் நம்நாட்டில் இருக்கிறார்கள். இம்மக்களுக்கான உயிர் பாதுகாப்பு, மூன்று வேளை உணவு, அடிப்படைத் தேவைகளை எவ்வாறு எங்கிருந்து தரப்போகிறார்கள்?
ஏற்கனவே வேலையில்லாத்திண்டாட்டத்தில் அல்லல்பட்டு குடும்பம் நடத்தி  வயிற்றைக் கழுவி வந்த மக்கள் இப்போது உயிரை எவ்வாறு காப்பாற்றிக்கொள்வது எனும் கூடுதலான மனச்சுமையால் இடிந்துபோய் கிடக்கிறார்கள். இன்னும் எத்தனை நாட்களுக்கு இம்மக்களால் பிழைப்பின்றி வீட்டுக்குள் முடங்கிக்கிடக்க முடியும் என்பது தெரியவில்லை. நிலைமை மீறும்பொழுது தன் உயிர் போனாலும் பரவாயில்லை, பிள்ளைகள், மனைவி, தாய் தந்தையரைக் காப்பாற்ற வேறுவழி தெரியாமல் வீதிக்குள் இறங்குவார்கள். அதற்குள்ளாக அவர்களின் தேவைகள் தீர்க்கப்பட வேண்டும். இதற்காக என்னென்னத் திட்டங்கள் அரசிடம் இருக்கிறது எனத் தெரியவில்லை. ஒருபக்கம் நோய் பரவுதலின் மின்னல் வேகத்தீவிரம்! மற்றொரு பக்கம் மக்களின் உயிர் காப்புப் போராட்டம்! இரண்டையும் அரசுதான் தீர்க்க வேண்டும். அரசு அறித்துள்ள உதவித்தொகையும், உணவுப்பண்டங்களும் கூடிய வரை அவரவர் வீடுகளுக்கே சென்றடைய உடனே ஏற்பாடு செய்ய வேண்டும். 

       மூடியுள்ள மதுபானக்கடைகள் மீண்டும் திறக்கப்படலாம் எனும் செய்தி கசிகின்றது. தயவு செய்து உங்கள் கால்களில்  விழுந்து கேட்கிறேன். அரசாங்கம் நடத்த பணம் போதவில்லை, அதனால்தான் மதுக்கடைகளை திறக்க வேண்டியிருக்கிறது எனும் காரணத்தைக்கூறி மீண்டும் திறந்து விடாதீர்கள். எங்களிடமிருந்து உயிரைத்தவிர எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்! மதுக்கடைகளைத் திறந்தால் ஏற்படும் பாதிப்புகளை கற்பனையில் கூட நினைத்துப்பார்க்காத அளவுக்கு கொண்டு போய் விட்டு விடும். நீங்கள் சொல்கிறபடி இப்பொழுதே சொல்வதை கேட்காத மக்கள் குடித்து நிதானத்தை இழப்பார்கள்! வைரஸ் பரவ மேலும் மேலும் அது  வழி வகுத்து விடும்!
உலகில் மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் அவ்வப்போது இப்படிப்பட்ட கொரோனா போன்ற நோய்களை சந்தித்துதான் மனித இனம் தப்பிப்பிழைத்து வந்திருக்கிறது. நம் நாட்டிலுள்ள வெப்பநிலை மக்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதில் உண்மையில்லாமல் இல்லை. இதுதான் தற்போதைக்கு நமக்கெல்லாம் இருக்கின்ற ஒரே ஒரு சிறிய நம்பிக்கையும் ஆறுதலும்! அமெரிக்க வல்லாதிக்க அரசே ஏப்ரல் மாதத்திற்குள் செயற்கை மூச்சு தந்து உயிர்பிடித்து வைத்திருக்கும் வெண்டிலேட்டர் கருவிகளை 6 ஆயிரம் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என கூறியிருக்கிறது. இத்தனை லட்சம் மக்களுக்கு நாம் எத்தனைக் கருவிகளை வைத்திருக்கிறோம் என்பது யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள்.
நடந்து முடிந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதால் இந்த ஏழை எளிய மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. நீங்கள் கூறுவதையெல்லாம் நாங்கள் கேட்கிறோம்! நாங்கள் எதிர்பார்ப்பதை நீங்கள் ஒரு நொடிகூட தாமதிக்காமல் உடனே மேற்கொள்ளுங்கள். எங்களின் உயிரைக்காப்பாற்றுங்கள்!

 ✍️தங்கர் பச்சான் 
30.03.2020
சென்னை 600032

திங்கள், மார்ச் 30, 2020

coronavirus,Muslims, கோரோனவும்.முஸ்லிம்களும்,


coronavirus,Muslims, கோரோனவும்.முஸ்லிம்களும்,
☝️
உபி மாநிலத்தில் புலந்த்சாகரில் ..

கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்த ரவிசங்கர் பிணத்தை சுமந்து செல்ல உறவினர்கள் பயந்த போது..அவரது முஸ்லீம் நண்பர்கள் ''ராம் நாம்'' ஒலித்தபடி சுமந்துசென்று அடக்கம் செய்தனர்.
செய்தி ஆதாரம்: நவபாரத் டைம்ஸ் 28-3-20

☝️👆
குரோனோ வைரஸின் காரணமாக வேலையில்லாமல் வீட்டுக்குச் செல்லும் மாற்று மத சகோதரர்களுக்கு வழியில் உதவி செய்யும் இஸ்லாமியர்கள்செல்வோருக்கு உதவி புரிவது மட்டும்தான் *புன்னியம்* என்று சிலர் நினைக்கின்றனர்...

*மனிதர்கள் படும் இன்னல்களை போக்குவதும் மகத்தான பணிதானே..?*


என் கண்களிலிருந்து கண்ணீரை வரவழைத்த காட்சி .டெல்லியிலிருந்து UP வரை கால்நடையாக நடந்துசெல்லும் மனிதர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீரும் பிஸ்கட்டுகள் பழங்களும் கொடுக்கிறார்கள் பாதிக்கப்பட்ட ஒரு பெண் எனக்கு காலனி இல்லை என்று கூறியதும் எதைப்பற்றியும் யோசிக்காமல் உடனே தன் காலில் இருந்த காலணியை களத்தி இந்தப் பெண்ணுக்கு வழங்குகிறார் இதுதான் இஸ்லாம் எங்களுக்கு கற்றுத்தந்த பாடம் எங்களை நீங்கள் இந்த நாட்டை விட்டு விரட்ட நினைத்தாலும் உங்களுக்கு என்றும் நாங்கள் பணிவிடை செய்வோம்

ஞாயிறு, மார்ச் 22, 2020

CORONAVIRUS கொரோனா கிருமி,

Message from an ex-MP from Egypt
DONT CURSE THE CORONAVIRUS கொரோனா கிருமியை சபிக்காதீர்கள். எகிப்தின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினரின் செய்தி.:-

It's brought back humanity 
Brought back people to their Creator and to their morals இது மக்களை படைத்தவனின் பக்கம் தார்மீகமாக இழுத்து வந்துள்ளது.

It closed down bars, night clubs, brothels, casinos இது குடி விடுதி, இரவு விடுதி, விபச்சார விடுதி, சூதாட்ட விடுதிகளை இழுத்து மூட வைத்துள்ளது.

It brought down interest rates. வட்டி விகிதத்தை குறைக்க வழி வகை செய்துள்ளது.

Brought families together. குடும்பங்களை ஒன்று சேர்த்துள்ளது.

Stopped lewd behaviour மோசமான நடத்தைகளை தடுத்துள்ளது.

It has stopped people eating dead and forbidden animals இது உண்ண தடுக்கப்பட்ட மற்றும் இறந்த விலங்குகளை புசிக்க விடாமல் தடுத்துள்ளது.

So far it has moved one third of military expenditure to health care. இதுவரை மூன்றில் ஒரு பங்கு ராணுவ செலவுகளை மனித ஆரோக்கிய செலவின் பக்கம் திருப்பியுள்ளது.

Arab countries have banned shisha. ஷீஷா என்னும் புகை பழக்கத்தை அரபு நாடுகள் தடை செய்துள்ளன

Coronavirus is pushing people to make dua கொரோனா கிருமிகள் மக்களை துஆ செய்யும் நிலைக்கு தள்ளியுள்ளது.

It undermines dictators and their powers இது சர்வாதிகாரிகளையும் அவர்களின் அதிகாரங்களையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது

Humans are now worshipping God rather than progress and technology  முன்னேற்றம் மற்றும் தொழில்நுட்பம் தான் எல்லாம் என்று நினைத்த மனித குலத்தை இல்லை இறைவனே சகலமும் என்று வணங்க வைத்துள்ளது.

It is forcing authorities to look at its prisons and prisoners  சிறைகளையும் சிறை கைதிகளையும் செவ்வனே கவனிக்க அதிகாரிகளை அது கட்டாயப்படுத்தியுள்ளது.

It has taught humans how to sneeze, yawn and cough as was taught by our Prophet SAW over 1400 years ago. 1400 வருடங்களுக்கு முன்பே இறை தூதர் முஹம்மதர்ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் சொல்லப்பட்ட  தும்மல் கொட்டாவி இருமலை  சுன்னத்தான முறையில் இன்று அனைவரையும் செய்ய வைத்துள்ளது.

Coronavirus is now making us stay at home, living simple lives and we make shukr to Allah swt for waking us up to reality and to giving us an opportunity to ask Him for His forgiveness and His help. கொரோனா நம்மை வீட்டில் குடும்பத்துடன் இருக்கவும்  எளிமையான வாழ்வு மற்றும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதல்லாமல் படைத்தவனிடம் மன்னிப்புக்கும் உதவிக்கும் மன்றாட ஒரு சந்தர்ப்பமாகவும் அமைந்துள்ளது. 

There is a great lesson in this for those who are wise. ஞானமுள்ளவர்களுக்கு இதில் ஒரு சிறந்த பாடம் இருக்கிறது.






புதன், மார்ச் 18, 2020

modi,மோடி,

😁உண்மை 😁

*மோடியை பற்றி அதிகம் அறியப்படாத சில நல்ல விசயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.!*

*👉🏽 உங்களுக்கு தெரியுமா..??*

👉 மோடி இரண்டு முறை பிறந்தவர்..* 

    A) 29.09.1949 டிகிரி சான்றிதழ் இருப்பது

     B) 17.09.1950 எல்லோரும் அறிவது

 👉 1950 இல் பிறந்த மோடி தனது 6 வயதில் வாட்நகர் ரயில் நிலையத்தில் தேநீர் விற்றார்,*

 ஆனால்...

👉 அந்த காலக்கட்டத்தில் வாட் நகரில் வெறும் ரயில் தடங்கள் மட்டுமே இருந்தன.

  👉உண்மையான ரயில் நிலையம் 1973 இல் கட்டப்பட்டது. அப்போது மோடிக்கு வயது 23.

👉 மோடி எமர்ஜன்சி காலத்தில் மறைந்து வாழ்ந்து வந்தார்*, 

 👉ஆனால் 1978 இல் டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

👉 டெல்லி பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லாமலேயே......*

👉1983 இல் 
குஜராத் பல்கலைக்கழகத்தில் Entire political science முதுகலை பட்டம் படித்தார். 

👉Entire political science இல் முதுகலை பட்டம் பெற்ற ஒரே நபர் மோடி மட்டுமே.😶😶

👉குஜராத் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூட இப்படி ஒரு பாடத்திட்டம் இருப்பதையே 2014 க்குப் பிறகே அறிந்து கொண்டனர்😃😃😃

👉Entire political science பட்டப்படிப்பில் மாஸ்டர்ஸ் தேர்ச்சி பெற்றார், தனியாக தேர்வு எழுதினார், தனியாகவே பட்டமும் பெற்றார்.*

👉இதுவரை மோடியுடன் படித்ததாகக் எந்த மாணவரும் பேராசிரியரும் கண்டுபிடிக்கபடவில்லை. 

👉  இந்தியாவில் கணினிகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே, மோடியின் பட்ட சான்றிதழ் ஒரு கணினியால் அச்சிடப்பட்டது.*

👉1978 ஆம் ஆண்டில் மோடியின் பட்டத்திற்கு முன்பும், அதன்பிறகான 10 ஆண்டுகளுக்கு பின்பும், சான்றிதழ்கள் பல்கலைகழக ஊழியர்களால் கைகளாலேயே எழுதப்பட்டன. 

👉1992 இல் மைக்ரோசாப்ட் காப்புரிமை பெற்ற எழுத்துரு (font) 1978 இல் மோடியின் பட்டத்தை அச்சிட பயன்படுத்தப்பட்டது.*

👉 அலுவலங்கங்கள், கல்லூரிகளின் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையில் மோடியின் சான்றிதழ் அச்சிடப்பட்டுள்ளது.* 

👉 பொய், பித்லாட்ட, பிராடு மோடிஜியின் வாழ்க்கையில் தான் எத்தனை ஆச்சரியங்கள், எத்தனை அதிசயங்கள்..*

*😞 மறந்து விடுவது மக்கள் இயல்பு..*

*😠 நினைவு படுத்துவது எம் கடமை...

வியாழன், மார்ச் 12, 2020

ஒருவரின் சுமையை மற்றவர் சுமக்க முடியுமா?

ஒருவர் மற்றவரின் பாவத்தைச் சுமக்க முடியாது என்று இவ்வசனங்களில் (2:1342:1412:2812:2863:253:1614:1116:316:1647:397:969:829:9510:810:5217:1535:1839:739:2439:4839:5140:1745:2252:2153:3874:38) கூறப்படுகிறது.

இது இஸ்லாத்தின் மிகப்பெரிய அடிப்படைக் கொள்கையாகும். இந்த அடிப்படையில் தான் கிறித்தவ மதத்தில் இருந்து முற்றாக இஸ்லாம் மாறுபடுகிறது.

எல்லோரும் பாவிகளாகப் பிறந்து அந்தப் பாவத்தை ஏசு சுமந்து கொண்டார் எனக் கூறப்படும் சித்தாந்தத்தை இஸ்லாம் மறுக்கிறது.

"ஒருவர் பாவம் செய்தால் அந்தப் பாவம் அவரைத்தான் சாரும். ஆதம் (அலை) பாவம் செய்தால் ஆதமுடைய பிள்ளைகள் யாரும் அந்தப் பாவத்தில் பங்காளிகள் இல்லை. எனவே பிறக்கும் போதே யாரும் பாவியாகப் பிறக்க மாட்டார்கள்'' என இஸ்லாம் கூறுகிறது.

அனைவரது பாவங்களையும் சுமப்பதற்காக ஏசு பலி கொடுக்கப்பட்டார் என்று கிறித்தவர்கள் கூறுவதையும் இஸ்லாம் மறுக்கிறது.

மற்றவர்கள் செய்த பாவங்களுக்காக அந்தப் பாவத்தில் சம்பந்தமில்லாத ஒருவரைப் பலி கொடுப்பது இஸ்லாமிய அடிப்படைக்கு எதிரானது.

இறந்துவிட்ட உறவினர்களுக்காகவோ, மற்றவர்களுக்காகவோ - அல்லாஹ்வும் அவனது தூதரும் விதிவிலக்கு அளித்தவை தவிர - நாம் நன்மைகள் செய்து அவர்களுக்குச் சேர்த்து விட முடியாது என்பதற்கும் இவ்வசனங்கள் சான்றுகளாக உள்ளன.

இயேசு மற்றவர்களின் பாவத்துக்காக பலியிடப்படவில்லை 

இயேசு சிலுவையில் அறையப்படவில்லை என்று இவ்வசனங்கள் (3:554:156) கூறுகின்றன.

ஈஸா நபி எனும் ஏசுவைக் குறித்து இஸ்லாத்தின் நம்பிக்கையும், கிறித்தவர்களின் நம்பிக்கையும் பல விஷயங்களில் வேறுபடுகின்றன.

இயேசுவை யூதர்கள் கொல்ல முயற்சித்ததை இஸ்லாம் ஒப்புக் கொள்கிறது. ஆனால் அவர்கள் இயேசுவுக்குப் பதிலாக வேறொருவரைத்தான் கொலை செய்தார்கள். இயேசு இறைவனால் உயிருடன் உயர்த்தப்பட்டார் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

எந்த மனிதரும் மரணித்தே ஆகவேண்டும்; பூமியில் அடக்கம் செய்யப்பட்டே ஆக வேண்டும் என்ற இறைவனின் விதிக்கு ஏற்ப இயேசு இறுதிக் காலத்தில் பூமிக்கு அனுப்பப்பட்டு மரணிப்பார் என்பது இஸ்லாத்தின் நம்பிக்கையாகும்.

இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டதாகவும், பின்னர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததாகவும் கிறித்தவர்கள் நம்புவதை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை.

பைபிள் ஆதாரத்தின்படி பார்த்தாலும் இஸ்லாம் சொல்லக் கூடிய கருத்துக்குத் தான் வலுவான ஆதாரம் உள்ளது.

இயேசுவின் வரலாற்றை எழுதிய மத்தேயு, மார்க், லூக்கா, யோவான் ஆகிய நால்வரும் இயேசுவின் நேரடிச் சீடர்கள் அல்லர். கேள்விப்பட்டதைத்தான் அவர்கள் எழுதினார்கள். இயேசு சிலுவையில் அறையப்பட்டதாக எழுதிய இவர்கள் அதைக் கண்ணால் கண்டவர்களல்லர்.

இயேசுவின் நேரடிச் சீடராக பர்னபா என்பவர் திகழ்ந்தார். அவர் இயேசு பிடிபடும்போது உடன் இருந்தவர். அவர் எழுதிய சுவிசேஷம் இஸ்லாம் கூறுவது போலவே இந்த நிகழ்வைச் சொல்கிறது. இதன் காரணமாக கிறித்தவ மதகுருமார்கள் பர்னபா சுவிசேஷத்தை நீக்கி விட்டனர்.

பர்னபா பற்றி பைபிளில் காணப்படும் குறிப்புகள் அவரது முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.

பார்க்க: அப்போஸ்தலர் நடபடிகள் 9:27, 11:21-26, 13:1-2, 13:7, 13:43, 13:44-47, 15:37, 15:38-41

மேலும் பார்க்க : கலாத்தியர் 2:1, 2:9-10

பர்னபா என்பவரின் முக்கியத்துவத்தை பவுலடிகளாலும் மறுக்க முடியவில்லை என்பதை மேற்கண்ட வசனங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

பவுலுக்கு நிகராகவும், அவரை விட மேலாகவும் இருந்த பர்னபா எழுதிய சுவிஷேசத்தில் சிலுவை மரணம் குறித்து பின்வருமாறு கூறுகிறார்.

215. When the soldiers with Judas drew near to the place where Jesus was, Jesus heard the approach of many people, wherefore in fear he withdrew into the house. And the eleven were sleeping.

Then God, seeing the danger of his servant, commanded Gabriel, Michael, Rafael, and Uriel, his ministers, to take Jesus out of the world.

The holy angels came and took Jesus out by the window that looketh toward the South. They bare him and placed him in the third heaven in the company of angels blessing God for evermore.

216. Judas entered impetuously before all into the chamber whence Jesus had been taken up. And the disciples were sleeping. Whereupon the wonderful God acted wonderfully, insomuch that Judas was so changed in speech and in face to be like Jesus that we believed him to be Jesus. And he, having awakened us, was seeking where the Master was. Whereupon we marvelled, and answered: 'Thou, Lord, art our master; hast thou now forgotten us?'

And he, smiling, said: 'Now are ye foolish, that know not me to be Judas Iscariot!'

And as he was saying this the soldiery entered, and laid their hands upon Judas, because he was in every way like to Jesus.

We having heard Judas' saying, and seeing the multitude of soldiers, fled as beside ourselves.

And John, who was wrapped in a linen cloth, awoke and fled, and when a soldier seized him by the linen cloth he left the linen cloth and fled naked. For God heard the prayer of Jesus, and saved the eleven from evil.

217. The soldiers took Judas and bound him, not without derision. For he truthfully denied that he was Jesus; and the soldiers, mocking him, said: 'Sir, fear not, for we are come to make thee king of Israel, and we have bound thee because we know that thou dost refuse the kingdom.

Judas answered: 'Now have ye lost your senses! Ye are come to take Jesus of Nazareth, with arms and lanterns as [against] a robber; and ye have bound me that have guided you, to make me king!

215. இயேசு நின்ற இடத்திற்கு அருகே யூதாசும், படையாளிகளும் வந்தடைந்தபோது இயேசு ஜனங்களின் ஆரவாரத்தைக் கேட்டார். வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றார். பயத்தின் காரணமாக அவர் வீட்டிற்குள் பின்வாங்கிச் சென்றார். பதினொரு அப்போஸ்தலர்களும் அப்போது நித்திரையிலிருந்தனர்.

அப்பொழுது கர்த்தர் தன் ஊழியக்காரனுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை அறிந்து, தன்னுடைய மந்திரிகளாகிய கப்ரியேல், மீக்காயேல், ராஃபேல், உரியேல் என்போருக்கு இயேசுவைப் பூலோகத்திலிருந்து புறமே எடுத்து விடும்படிக்குக் கட்டளையிட்டார்.

தெற்குப் பக்கமாக திறந்திருக்கும் சாளரம் வழியாக இயேசுவை தேவ ஊழியர்கள் வெளியே எடுத்தார்கள். அவரையும் கொண்டு அவர்கள் கர்த்தரின் அருள் என்றைக்கும் நிலைத்து நிற்கும் தேவ ஊழியக்காரர்கள் தங்கியிருக்கும் மூன்றாவது வானத்துக்குக் கொண்டு சென்றார்கள்.

216. இயேசு எடுக்கப்பட்ட உடனே யூதாஸ் மற்றவர்கள் முன்னிலையில் அறைக்குள் சாடிச்சென்றான். அப்போது எல்லா அப்போஸ்தலர்களும் நித்திரை கொண்டிருந்தனர். அப்பொழுது அற்புதங்களை உடைய கர்த்தர் அற்புதத்தை நிகழ்த்தினார்! யூதாசின் உரையாடலும் அவனது முகமும் இயேசுவினுடையது போல ஆயிற்று! நாங்கள் அனைவரும் அவன் இயேசுவென்று நினைக்கும் நிலைக்கு ஆகிவிட்டது! எங்களை எழுப்பி அவன் குரு எங்கே என்று தேடினான். அப்பொழுது நாங்கள் வியப்புடன் அவனுக்குப் பதில் கூறினோம் ஆண்டவரே! தாங்கள் தானே எங்களுக்குக் குருவானவர், இப்போது எங்களை மறந்து விட்டீர்களா? அவன் புன்னகைத்துக் கொண்டு கூறினான்: நான்தான் யூதாஸ் இஸ்காரியாத், இதனைப் புரியாத நீங்கள் இப்போது அறிவீனர்களே!"

இப்படிக் கூறிக் கொண்டிருக்கையில் படையாட்கள் உள்ளே நுழைந்தனர். முற்றிலும் இயேசுவைப் போல மாறி விட்டிருந்த யூதாசைப் பிடித்துக் கொண்டார்கள். எங்களைச் சுற்றியிருந்த படையாட்களுக்கு இடையில் நாங்கள் ஓடுகையில் யூதாஸ் கூறிக் கொண்டிருந்ததை நாங்கள் கேட்டோம். நார்ப்பட்டுத் துணியால் தன்னைப் போர்த்தியிருந்த யோவான் எழுந்து ஓடியபோது ஒரு படையாள் நார்ப்பட்டுத் துணியைப் பிடித்தபோது, அவர் அதை விட்டு விட்டு ஆடையின்றித் தப்பி ஓடினார்! இயேசுவின் வேண்டுதலுக்கு கர்த்தர் செவிகொடுத்து, பதினொன்று பேரும் தீமையிலிருந்து காப்பாற்றப்பட்டார்கள்.

217. படையாட்கள் யூதாசைப் பலவந்தமாகப் பிடித்து வைத்திருந்தனர். அவனோ தான் இயேசு அல்ல என்று மறுத்துக் கொண்டிருந்தான். படையாட்கள் அவனைப் பரிகசித்துக் கொண்டு சொன்னார்கள், ஐயா, தாங்கள் பயப்பட வேண்டாம், தங்களை இஸ்ரவேலரின் மன்னராக ஆக்குவதற்கு நாங்கள் வந்திருக்கிறோம். அரசாட்சியை தாங்கள் மறுப்பீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால் தான் உங்களைப் பிடித்து வைத்துள்ளோம்!"

இப்போது நீங்கள் உங்கள் மதியை இழந்து விட்டீர்கள். நீங்கள் ஒரு திருடனைப் (பிடிப்பது) போல் நாஸரேத்துடைய இயேசுவைப் பிடிப்பதற்காக ஆயுதங்கள் மற்றும் விளக்குகளுடன் வந்துள்ளீர்கள். உங்களுக்கு வழிகாட்டிய என்னையே அரசனாக்குவதற்காக நீங்கள் பிடித்து வைத்துள்ளீர்கள் என்று யூதாஸ் பதிலளித்தான்.

சம்பவம் நடக்கும்போது நேரடி சாட்சியாக இருந்த பர்னபா தரும் இந்த வாக்குமூலம் குர்ஆன் கூறும் கருத்துடன் அப்படியே ஒத்துப் போகிறது.

இயேசு பிடிபடுவதற்கு முன்னர் கர்த்தரிடம் அழுது அழுது முறையிட்டுள்ளார்.

அவரது முறையீடு இது தான்:

அப்பொழுது, இயேசு அவர்களோடே கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீஷர்களை நோக்கி: நான் அங்கே போய் ஜெபம் பண்ணுமளவும் நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி; பேதுருவையும், செபெதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக் கொண்டு போய், துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார். அப்பொழுது, அவர் என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடே கூட விழித்திருங்கள் என்று சொல்லி, சற்று அப்புறம் போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னை விட்டு நீங்கக் கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார். பின்பு, அவர் சீஷர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரை பண்ணுகிறதைக் கண்டு, பேதுருவை நோக்கி: நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடே கூட விழித்திருக்கக் கூடாதா? நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளது தான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்;. அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம் பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக் கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார். அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரை பண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரை மயக்கம் அடைந்திருந்தது. அவர் மறுபடியும் அவர்களை விட்டுப் போய், மூன்றாந் தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி, ஜெபம் பண்ணினார்

மத்தேயு 26:36-44

பேதுருவையும் செபெதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக் கொண்டு போய் துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார். அப்பொழுது அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி என்னோடேகூட விழித்திருங்கள் என்று சொல்லி சற்று அப்புறம் போய் முகங்குப்புற விழுந்து: என் பிதாவே இந்தப் பாத்திரம் என்னை விட்டு நீங்கக் கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல உம்முடைய சித்தத்தின்படியே ஆகக் கடவது என்று ஜெபம் பண்ணினார்.

மத்தேயு 26:37-39

மற்ற சுவிசேஷங்களும் கூட இதே போல் கூறுகின்றன.

இயேசு மரண பயத்துடன் தன்னைக் காப்பாற்றுமாறு அழுது அழுது கெஞ்சி மன்றாடி இருக்கும்போது கர்த்தர் அவர் வேண்டுகோளை ஏற்று காப்பாற்றாமல் இருக்க மாட்டார் என்பது தான் பொருத்தமாக உள்ளது.

மேலும் அனைவரின் பாவங்களைச் சுமக்க இயேசு பலியானார் என்பதும் பைபிளுக்கு முரணான கொள்கையாகும்.

பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலை செய்யப்பட வேண்டாம், அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலை செய்யப்பட வேண்டும்"

உபாகமம் : 24:16

பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும். குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை. தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை. நீதிமானுடைய நீதி அவன் மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன் மேல் தான் இருக்கும்"

எசேக்கியேல் 18:20

பிதாக்கள் திராட்சக் காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப் போயின என்று அந்நாட்களில் சொல்ல மாட்டார்கள், அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான். எந்த மனுஷன் திராட்சக் காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப் போகும்"

எரேமியா 31:29-30

ஒவ்வொருவரும் தத்தமது பாவங்களைத் தாமே சுமக்க வேண்டும் என்று பைபிள் கூறும்போது மற்றவர்களின் பாவத்தைச் சுமக்க இயேசு பலியானர் என்பது பைபிளையே மறுப்பதாக உள்ளது. மேலும் இயேசு சாவதற்கு விரும்பவில்லை; தப்பிக்கவே விரும்பினார் என்பது அவரது மேற்கண்ட பிரார்த்தனையில் இருந்து தெரியமுடிகிறது.

மேலும் அவர் தானாகப் பலியாகவில்லை; எப்படியாவது தப்பித்து ஓடவே முயன்றார். இதனால் தான் அவரது சீடனே காட்டிக் கொடுத்தான்.

இயேசுவைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலை செய்யும்படி ஆலோசனை பண்ணினார்கள்.

மத்தேயு 26:5

அப்பொழுது, பரிசேயர் வெளியே போய், அவரைக் கொலை செய்யும்படி அவருக்கு விரோதமாய் ஆலோசனை பண்ணினார்கள்.

மத்தேயு 12:14

இரண்டு நாளைக்குப் பின்பு புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற பஸ்கா பண்டிகை வந்தது. அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும், அவரைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலை செய்யும்படி வகை தேடினார்கள்.

மாற்கு 14:1

அப்பொழுது பிரதான ஆசாரியரும், வேதபாரகரும் அவரைக் கொலை செய்யும்படி யோசித்து, ஜனங்களுக்குப் பயப்பட்டபடியினால், எவ்விதமாய் அப்படிச் செய்யலாமென்று வகை தேடினார்கள்.

லூக்கா 22:2

அவரைக் காட்டிக் கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன் தான் அவனைப் பிடித்துப் பத்திரமாய்க் கொண்டுபோங்கள் என்று அவர்களுக்குக் குறிப்புச் சொல்லியிருந்தான். அவன் வந்தவுடனே அவரண்டையில் சேர்ந்து: ரபீ ரபீ என்று சொல்லி அவரை முத்தஞ்செய்தான். அப்பொழுது அவர்கள் அவர்மேல் கைபோட்டு அவரைப் பிடித்தார்கள்.

மாற்கு 14:44-46

மனிதர்களின் பாவங்களைச் சுமப்பதற்காக இயேசு தன்னைத் தானே பலி கொடுத்தார் என்பது உண்மையாக இருந்தால் அவர் தானாக தன்னைச் சிலுவையில் அறைந்திருக்க வேண்டும். அல்லது அவரது எதிரிகள் அவரைச் சிலுவையில் அறைந்து கொல்ல முடிவு செய்திருப்பதைக் கேள்விப்பட்டு அதை வரவேற்றிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் அவர் ஓடி ஒளிந்திருக்கிறார். இதனால் தான் அவரது சீடர்களில் ஒருவரே அவரைக் காட்டிக் கொடுக்கும் நிலை ஏற்பட்டது. ஓடி ஒளிந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்பவரைத்தான் காட்டிக் கொடுக்கும் அவசியம் ஏற்படும்.

எனவே பைபிளின் கருத்துப்படி இயேசு மற்றவர்களின் பாவத்தைச் சுமக்க விரும்பி தானாகப் பலியாகவில்லை என்பது உறுதியாகத் தெரிகின்றது.

திங்கள், மார்ச் 09, 2020

டெல்லி கலவரம்,

டெல்லியில் வாங்கியது போல் இனி இருக்காதீர்கள் திருப்பி அடி டெல்லியில் நடந்த கொடூரத்தை நேரில் பார்த்த இல்யாஸ் ரியாஜி பேச்சு...

(மேலப்பாளையம் ஷாகின் பாக் – இல் இல்யாஸ் ரியாஜி பேச்சு) 

(6.3.2020 அன்று வெள்ளிக்கிழமை இரவு மேலப்பாளையம் ஷாகின் பாக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சென்னை மந்தைவெளி பள்ளிவாசல் இமாமும் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் துணைப் பொதுச் செயலாளருமான இல்யாஸ் ரியாஜி பேசியதாவது) 

கடந்த மார்ச் 2 ஆம் தேதி வடகிழக்கு டெல்லியில் மத்திய அரசு முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய இனப்படுகொலைகளை நேரில் கண்டோம்.

இது சி.ஐ.ஏ ஆதரவாளர்களுக்கும் – எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதலாக மீடியாக்கள் கூறுகின்றன. பச்சைப் பொய் அது. மேலும் அதனை தீடீரென நடந்த கலவரமாகவும் மீடியாக்கள் சித்தரிக்கின்றன. நிச்சயமாக பச்சைப் பொய் அது.

மாறாக அது கலவரம் அல்ல.. முஸ்லிம்களுக்கு எதிராக மத்திய அரசு நடத்திய இனப்படுகொலை அது.

வடகிழக்கு டெல்லிக்கும்- உத்திரபிரதேசத்திற்கும் இடையே 15 கிலோ மீட்டர் தூரம் தான் இடைவெளி.

அங்கிருந்து சுமார் ஆயிரம் நபர்கள் முழுமையாக ஆயுதப் பயிற்சியளிக்கப்பட்டவர்கள். துப்பாக்கிகளை கையாளும் பயிற்சிப் பெற்றவர்கள் லாரிகளில் ஏற்றி கூட்டி வரப்பட்டார்கள். 

அவர்கள் வருவதற்கு முன்பு லாரிகளில் கற்கள் கொட்டப்பட்டன. அவர்கள் ஒவ்வொருவரும் கத்தி, கிடாரி, வாள் , குறுவாள்,அரிவாள், இரும்பு கம்பிகள், கையெறி குண்டுகள், கள்ள மார்க்கெட்டில் வாங்கிய கைத்துப்பாக்கிகள், சிறிய அளவிலான ராக்கெட் லாஞ்சர்கள் என எல்லா வகையான ஆயுதங்களையும் டெல்லிக்குள் கொண்டு வந்தார்கள்.

உத்தரபிரதேச போலீஸ் செக்போஸ்ட், டெல்லி செக்போஸ்ட் எல்லாவற்றையும் தாண்டித் தான் வந்தார்கள். 

வந்தவர்கள் சுமார் 72 மணிநேரம் மூன்று நாட்கள் வடகிழக்கு டெல்லியில் இருந்தார்கள்.

சிலமணிநேரங்கள் மட்டும் தாக்குதல் நடத்திவிட்டு செல்லவில்லை. மாறாக மூன்று நாட்கள் இருந்தார்கள் என்றால், அவர்கள் மனிதர்கள் தானே, அவர்களுக்கு சாப்பாடு வேண்டுமே.. தூக்கம் வருமே! என்ன செய்தார்கள்? 

அந்த மூன்று நாட்களும் வடகிழக்கு டெல்லியின்  வீதிகளில் அவர்களுக்கு சமையல் செய்யப்பட்டன. அவர்கள் தங்குவதற்கு டெல்லி காவல்துறையும் மாநகராட்சியும் முஸ்லிம் பகுதியில் முஸ்லிம்கள் நடத்திய மூன்று பள்ளிக்கூடங்களை ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.

அங்கு தான் அவர்கள் தங்கியிருந்தார்கள். மூன்று மணி நேரத்திற்கொருமுறை ஒரு லாரி அந்த பள்ளிக்கூடங்களுக்கு உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும். அவர்களிடமிருந்து அவர்கள் கொள்ளையடித்த பொருட்களை வாங்கி இன்னொரு இடத்தில் கொண்டு போய் பாதுகாப்பாக வைப்பார்கள்.

வடகிழக்கு டெல்லியில் உள்ள அசோக்புரி, முர்சிபாத் பகுதிகள் சென்னை சிந்தாதிரிப்பேட்டை போன்று இருப்பவை. மெயின்ரோட்டை ஒட்டி சாக்கடைக் கால்வாய். இடையில் குறுக்காக சின்ன சின்ன தெருக்கள்.. 

பயிற்சி பெற்ற சங்பரிவார் பயங்கரவாதிகள் வீட்டுக்குள் இருந்தவர்கள் வெளியில் கொண்டு வருவதற்காக துப்பாக்கியால் சுட்டார்கள். மூன்றாவது நான்காவது மாடியில் இருந்தவர்கள் எட்டிப்பார்த்தார்கள். எட்டிப் பார்த்த பெண்கள் சுடப்பட்டார்கள். பின்னர் ஆண்கள் வெளியில் வந்தார்கள். வந்தவர்கள் வெட்டி சாய்க்கப்பட்டார்கள். ஒவ்வொரு வீடாக ஓட்டர் லிஸ்ட்டை வைத்துக் கொண்டு இரண்டு பேரை கொன்று விட்டோம். மூன்றாவது நபர் உள்ளாரே என்று தேடி தேடி கொலை செய்தார்கள்.

அசோக்புரியில் மார்க்கெட்டில் இருந்த பள்ளிவாசல்களில் கான்கிரிட் உடையுமளவு ராக்கெட் லாஞ்சர்கள் தகர்த்தார்கள். வீடுகளில் உள்ள சிலிண்டர்களை கொண்டு வந்து வெடிக்க வைத்தார்கள்.

முஸ்லிம் கடைகள், வணிக வளாகங்கள், வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. கொள்ளையடிக்கப்பட்டன. கொள்ளையடித்த பொருட்கள் அனைத்தும் தயாராக தெரு முனையில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளில் ஏற்றப்பட்டன. 

சங்பரிவார்கள் இரவிலும் பகலிலும் ஒரு பிரிவினர் தாக்குதல் நடத்துவார்கள். இன்னொரு பிரிவினர் அந்த பள்ளிக்கூடங்களில் ஓய்வெடுப்பார்கள்.

அவர்களுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் அந்த பகுதி சங்பரிவார் பொறுப்பாளர்கள் காவல்துறை, மாநகராட்சி பொறுப்பாளர்கள் உதவியுடன் செய்து கொடுத்தார்கள்.

பள்ளிக்கூடங்கள் மட்டுமல்ல பள்ளிவாசல்களில் இரவில் தங்கி மது அருந்தி மல ஜலம் கழித்து அசிங்கப்படுத்தினார்கள். பள்ளிவாசல்களில் சுவர்களில் அந்த அடையாளங்கள் இருந்தார்கள். பள்ளிவாசல் முதல் மாடியில் மது பாட்டில்கள் கிடந்தன. மலம் ஜலம் கிடந்தன.

நாங்கள் சென்று பார்ப்பதற்கு முந்திய நாள் போலீசார் அடையாளங்களை வெள்ளை அடித்ததாக அப்பகுதி மக்கள் கூறினார்கள்.
100 எலிகளைத் தின்று பெருச்சாளியைப் போன்று கொழுத்திருக்கும் கொலைகாரன் அமித்சாவின் ஆணைக்கேற்ப காவல்துறை முஸ்லிம்களை கொன்று குவித்தது. சங்பரிவார் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தது.

சாக்கடையில் வீசப்பட்டு மிதந்த பிணங்களை வெளியில் எடுக்க டெல்லி மாநகராட்சி பொக்லைன் இயந்திரங்களை கொண்டு வந்தது. கால்வாயின் இரண்டு பக்கம் அள்ளியவுடன் ஏராளமான பிணங்கள் வந்தன. உடனே வேலை நிறுத்தப்பட்டன.

சங்பரிவார்களுக்கு எல்லா வகையிலும் துணை நின்றார் அரவிந்த் கேஜ்ரிவால். நம்மால் மறக்கவும் முடியாது. மன்னிக்கவும் முடியாது.

அவன் அடிக்க அடிக்க ஒரேயடியாக அடிவாங்கவும், இழப்புகளைத் தாங்கவும் நாம் என்ன கோழைகளா?

அவர்கள் காவல்துறை உதவியுடன் வந்த நமது ஆண்களை வெட்டுவார்கள். நமது பெண்களை கற்பழிப்பார்கள். நமது குழந்தைகளை கொலை செய்வார்கள். நமது வீடுகளை இடிப்பார்கள். கடைசியில் கொல்லப்பட்ட நம்மவர்கள் மீது எஃப் ஐ ஆரையும் போடுவார்கள். இந்த நாடு நம்மைப் பற்றி என்ன நினைக்கின்றது?

உ.பி. யில் கொல்லப்பட்ட அக்லக் என்ற பெரியவரின் மீது எஃப் ஐ ஆர் போடப்பட்டது. கொலையாளிகள் மீது போடப்படவில்லை. ராஜஸ்தானில் தேலுகானின் மீது எஃப் ஐ ஆர் போடப்பட்டது. அவனைக் கொன்ற கொலையாளிகள் மீது போடப்படவில்லை.

கலவரத்தை முன்னின்று நடத்தியதற்கான எல்லா வீடியோ ஆவணங்கள் இருந்தும், அதனை நீதிமன்றத்திலேயே போட்டுக் காட்டியும் மத்திய அரசு வக்கீல் 3 வாரம் அவகாசம் கேட்டார் அவன் மீது எஃப் ஐ ஆர் போடுவதற்கு.

ஆனால் ஐஏஎஸ் அதிகாரி ஹரீஸ் மந்தர் மீது உடனே வழக்கு போடப்பட்டது.

கபில்மிஸ்ராவின் மீது எஃப் ஐ ஆர் போடவில்லை என்பது மட்டுமல்ல அவனுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பும் கொடுத்தார் கொழுத்த அமித்சா.

உலகத்திலேயே கொல்லப்பட்டவனின் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்து கொலையாளிக்கு பாதுகாப்பும் அமைச்சர் பதவியும் கொடுக்கும் மனிதநேயமற்ற மிருகங்கள் வாழும் ஒரே நாடு இந்தியா மட்டும் தான்.

வடகிழக்கு டெல்லியில் ஏழு தொகுதிகளில் கபில் மிஸ்ரா தொகுதி தவிர மற்ற எல்லா தொகுதிகளும் பா.ஜ.க வசம். கபில் மிஸ்ரா மட்டும் தோற்றுப் போனான். என்னைத் தோற்கடித்தீர்களா? என்று வீடு வீடாக கூவி கூவி கொலைகள் செய்தான் கபில் மிஸ்ரா. அவனுக்குத் தான் பாதுகாப்பு.

வடகிழக்கு டெல்லி மக்களிடம் சொல்லி விட்டு வந்தோம். பணக்காரர்கள் கோழைகளாக இருக்கின்றார்கள் என்றார் அர்த்தம் உண்டு. எல்லாவற்றையும் இழந்த நீங்கள் ஏன் கோழைகளாக இருக்கின்றீர்கள்?

நீங்கள் நிமிர்ந்தால், திருப்பி அடித்தால் எதிரி உங்களைக் கண்டு பயப்படுவார்கள். தயாராகுங்கள். அல்லாஹ் உங்களுடன் இருப்பான் என்றோம்.

இவ்வாறு இல்யாஸ் ரியாஜி பேசினார்..

பிரபல்யமான பதிவுகள்