நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

செவ்வாய், ஜூன் 30, 2020

அல்லாஹ்வின் உதவி எப்பொழுது கிடைக்கும்,

கழுத்தில் கத்தியை வைத்து அறுக்கும் வரை இஸ்மாயில் (அலை) அவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை. கத்தியை வைத்த பிறகே உதவி வந்தது. 

மலையளவு நெருப்பில் தூக்கி எறியும் வரை இப்ராஹிம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை. நெருப்பில் தூக்கி எறிந்த பிறகே உதவி வந்தது. 

நைல் நதி வரை எதிரிகள் துரத்தி வந்தபோதும் மூஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை. அதற்கு பிறகு தான் நதி பிளந்து அல்லாஹ்வின் உதவி கிடைத்தது. 

இரண்டு மலைகளுக்கு நடுவே ஏழு முறை ஓடும் வரை அல்லாஹ்வின் உதவி அன்னை ஹாஜிராவிற்கு கிடைக்கவில்லை. அதற்கு பிறகே ஜம் ஜம் கிடைத்தது. 

மீன் விழுங்கும் வரை அல்லாஹ்வின் உதவி யூனுஸ்(அலை) அவர்களுக்கு கிடைக்கவில்லை. மீன் விழுங்கிய பிறகே கிடைத்தது. 

யூசுப்(அலை) அவர்களின் சகோதரர்கள் யூசுப்(அலை) அவர்களை கிணற்றில் வீசும் வரை அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை. வீசிய பிறகே கிடைத்தது. 



அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு நோய்வாய்ப்பட்ட பிறகுதான் ஆரோக்கியம் என்று ஒன்று கிடைத்தது


எந்த மனிதனையும் அவனின் சக்திற்கு மீறி சோதிப்பதில்லை என்பது இறைவனின் வாக்கு. மேலே சொல்லியிருக்கும் எதுவுமே நம்ப முடியாத நடக்குமா என்கிற கேள்வி சிந்திக்கும் எந்த மனிதனுக்கு தோன்றும் நிகழ்வுகள். ஆனாலும் அல்லாஹ்வின் மீது அவர்களுக்கு இருந்த மிகப்பெரிய நம்பிக்கையின் காரணமாக அவர்களுக்கு அவர்களின் வேதனையில் உச்சத்தில் அல்லாஹ் (ﷻ) தன்னுடைய உதவியை அனுப்பினான். 

சோதனை என்பதன் ஆழம் என்ன என்பதை நாம் அறிய மாட்டோம் ஆனால் அல்லாஹ்வின் உதவி மிக மிக அருகில் தான் இருக்கிறது என்பதை அவசியம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

இஸ்லாத்தில் அவநம்பிக்கைக்கு இடமில்லை. நிச்சயமாக துன்பத்திற்கு பிறகு இன்பம் இருக்கிறது. ஆம் துன்பத்திற்கு பிறகு தான் இன்பம் இருக்கிறது

திங்கள், ஜூன் 22, 2020

வைரஸ் நோய்களை பற்றி இஸ்லாம் கூறும் அழகிய வழி முறைகள்,

வைரஸ் நோய்களை பற்றி இஸ்லாம் கூறும் அழகிய வழி முறைகள்


கொரோணா வைரஸ் " தொற்றாமல் இருக்க.
1441 வருடங்களுக்கு முன்பே அழகிய வழிகாட்டலை உலகிற்கு கற்றுத்தந்த இறைதூதர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் !

1) தனிமைப்படுத்தல்.

 நபிகளாரின் ஒரு அறிவுரையாகும்.

"சிங்கத்திடமிருந்து  வெருண்டோடுவது  போன்று  தொற்று  நோயாளிகளிடமிருந்தும்  விலகி  ஓடிவிடுங்கள்."

புகாரி - பாகம் 7, நூல் 71,  எண் 608*

2) சமூக விலகல் 
நபிகளாரின் அறிவுரையாகும்.
  
 "தொற்று நோயால்  பாதிக்கப்பட்டவர்கள் ஆரோக்கியமானவர்களிடமிருந்து  விலக்கி  வைக்கப்பட வேண்டும்.

புகாரி 6771,  முஸ்லிம் 2221

3) பயணத்தடை 
நபிகளாரின் அறிவுரையாகும்.

தொற்று நோய்  பரவியிருக்கும் பகுதிக்குள் செல்லாதீர்கள். அவ்வாறே தொற்று நோய்  பரவியுள்ள பகுதியிலிருந்து  வெளியேறாதீர்கள்.

புகாரி 5739,  முஸ்லிம் 2219

4) பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்தாதீர்கள் 
உங்களிடம் அறிகுறிகள் தென்பட்டால் .

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
கூறியுள்ளார்கள்...
" பிறருக்கு  தீங்கு  விளைவிக்காதீர்கள்".

இப்னு மாஜா 2340*

5) வீட்டில் இருத்தல்.
 நபிகளாரின் அறிவுரையாகும்.

தங்களையும் பிறரையும் பாதுகாப்பதற்காக வீட்டிலேயே தங்கி இருந்தவர்கள் எல்லாம் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருப்பவர்களாவர்.

நூல்:- முஸ்னத் அஹமத்,

6) வீடே பள்ளிவாசல் 
 தேவையான. காலகட்டங்களில்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
கூறினார்கள்...
"முழு  உலகும்  தொழும் இடமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது, கல்லறைகளையும்  கழிவறைகளையும்  தவிர."

திர்மிதி; அஸ்ஸலாஹ்..291

7) நிவாரணம் உண்டு
 பொறுமை அவசியம்.
 
 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்கூறியுள்ளார்கள் - "நிவாரணத்தை ஏற்படுத்தாமல் அல்லாஹ் எந்த ஒரு நோயையும் அனுப்புவதில்லை."

புகாரி பாகம் 7, நூல் 71, எண் 582.

8) சிகிச்சை  செய்வோம்.அல்லாஹ் குணமளிப்பான்*
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
கூறினார்கள்: 
ஒவ்வொரு நோய்க்கும் நிவாரணம் இருக்கின்றது. ஒரு நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது எனில் அது அல்லாஹ்வின் அனுமதி கொண்டே நீங்குகின்றது.

முஸ்லிம் # 2204.

9) முகக் கவசம்
 நபிகளாரின் அறிவுரையாகும்.

"நபியவர்கள் தும்மும் போது தம் கைகளைக் கொண்டோ அல்லது தனது ஆடையைக் கொண்டோ முகத்தை மூடிக் கொள்வார்கள்"

அபுதாவூத்,  திர்மிதி 
(பாகம் 43,  எண் 269),

10) வீட்டிற்குள் நுழைந்ததும் கைகளைக் கழுவுங்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
கூறினார்கள் : 
தூய்மை ஈமானில் பாதியாகும். 

முஸ்லிம் 223.

11) வீட்டில் தனித்திருத்தல்
நபிகளாரின் அறிவுரையாகும்.

தொற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தன் வீட்டிலேயே பொறுமையுடனும் கூலியை எதிர்பார்த்தும்,  அல்லாஹ் தனக்கு விதித்துள்ளதைத் தவிர வேறு எந்த ஒன்றும் தன்னை அணுகாது என்றும் காத்திருந்தால், ஒரு  உயிர்தியாகியின்(ஷஹீத்) கூலியை அவர் அடைந்து கொள்வார்.
 
முஸ்னத் அஹமத்,  ஸஹீஹ், புகாரி 2829,  முஸ்லிம் 1914.

திங்கள், ஜூன் 15, 2020

ஆன்லைனில் படிக்கும் பொழுது, online,

லேப்டாப் மற்றும் மொபைல் சர்வீஸ் இன்ஜினியர் வேண்டுகோள்

*பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு*

இனி நம் குழந்தைகள் அனைவரும்  1,6,9,11  வகுப்பு  புதிய பாடத்திட்டத்தில்  புதிய கற்பித்தல் முறைகளுக்காக *smartphones* *Tab பயன்பாடும், *cam scanner, Diksa, Mx  Videoplayer, Es file manager'*
 போன்ற  *
Android Apps, 'You tube '
யும்* பயன்படுத்த தேவையும் வரலாம். 
 அவ்வாறு  பயன்படுத்தும் போது அடிக்கடி இடையிடையே  சில முகம் சுளிக்கும்  விளம்பரங்களும்  வரலாம்.
 எனவே முன்னெச்சரிக்கையாக *Phone'ல்* செய்ய வேண்டியது :

 * *Play store* சென்று *Settings* ல் *Parent control' option* ஐ ' *on* செய்யவும்.

* அதன் கீழே உள்ள  *Apps and Games* ஐ கிளிக் செய்து *12+'ல்* டிக் செய்யவும்.

* அடுத்ததாக  *Movies*     ஐ கிளிக் செய்து *U* என்பதை    டிக் செய்யவும்.

அதேபோல்
*  *YOU TUBE' settings* ல்  *Restriction mode*        ஐ *On* செய்யவும்.

இப்போது, நம் குழந்தைகளின் smartphone ல், தேவையற்ற  விளம்பரம் மற்றும் *Video* 
குறுக்கிடாமல்   பயன்படுத்துவதற்கு
பாதுகாப்பானதாக இருக்கும்....  *

 *மேற்படி தகவல்களை உங்களின்  அனைத்து உறவினர்கள் நண்பர்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் குரூப்களில் பகிர அன்புடன் கேட்டு கொள்கிறேன்...

ஞாயிறு, ஜூன் 14, 2020

மின்வாரிய கட்டண விவரம்,

மின் கட்டண நிர்ணய முறை*
      *மின் கட்டணம் அதிகமாக கோரப்பட்டுள்ளது என்று நீங்கள் கருதினால் சம்பந்தப்பட்ட அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லும்படி மின கழகம் அறிவித்துள்ளதால் கீழ் காணும் முறையில் மின் கட்டணத்தை சரி பார்க்கவும்:-*

*வீட்டு உபயோக (domestic) கட்டணம்*
************************** *100 யூனிட்டிற்குள்:-*
0 to 100: இல்லை
நிலைக் கட்டணம் (fixed charges): 0
**************************
*0 to 200 யூனிட்டிற்குள்:-*
0 to 100:இல்லை
101 to 200:ரூ.1-50
நிலைக் கட்டணம்:ரூ.20
**************************
*0 to 500யூனிட்டிற்குள்:-*
0 to 100:இல்லை
101 to 200:ரூ2-00
201 to 500:ரூ3-00
நிலைக் கட்டணம்:ரூ.30
**************************
*501க்கு மேற்பட்டால்:-*
0 to 100:இல்லை
101 to 200:3-50
201 to 500:4-60
500க்கு மேல்:6-60
நிலைக் கட்டணம்:ரூ.50
*************************
*வர்த்தகம் (commercial):-*
*0 to 100=5-00 (140kw)*
*100 க்கு மேல்:8-05 (140kw)*
**************************
*தற்காலிக (temporary)*
*யூனிட் ஒன்றுக்கு:12-00 (690kw)*
**************************
          *மேற்காணும் வீதத்தில் பயனீட்டு அளவின் (consumption) பாதிக்கு (half) கட்டணம் நிர்ணயம் செய்து அந்தத் தொகையை  2 ஆல் பெருக்கி (multiple) வரும் தொகையுடன் இரண்டு நிலையான கட்டணத்தை (20 or 30 or 50) சேர்த்துக் கொண்டு ஏப்ரல் மாதத்தில் செலுத்திய தொகையைக் கழித்தால் மீதி வரும் தொகையே இப்போது செலுத்த வேண்டிய மின் கட்டணமாகும்.*

*நிர்ணய முறை உதாரணமாக:-*

*200 யூனிட்டிற்கு:-*
0 to100: இல்லை
101to 200:100×1-50=150 *150+ 20=170*
*************************
*500 யூனிட்டிற்கு:-*
0 to 100 இல்லை
101 to 200:100×2=200
201 to 500:300×3=900
*200+900+30= 1130*
***********************
*510 யூனிட்டிற்கு:-*
0 to 100: இல்லை
101to 200:100×3.50=350
201to500:300×4.60=1380                          
501 to 510:10×6.60=66   *350+1380+66+50=1846*  

*உங்கள் வீட்டு மின் கணக்கெடுப்பில் ஏதாவது புகார்  இருப்பின் அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்தை அணுகவும்

செவ்வாய், ஜூன் 02, 2020

மரணத்திற்குப் பின்பு,

ஒரு அன்சாரித் தோழரின் ஜனாசாவை அடக்கம் செய்வதற்காக நபி(ஸல்)
அவர்களுடன் சென்றோம்.

கப்ரடியில் சென்றபோது உட்குழி 
தோண்டப்படாத நிலையில்  இருந்ததால் நபி (ஸல்)அவர்கள் 
கப்ருக்கு அருகில் அமர்ந்து கொண்டு  ஒரு குச்சியால் கிளறிக் 
கொண்டிருந்தார்கள்.

எங்களின்  தலைகள் மீது பறவைகள் இருப்பது போன்று நாங்களும் அமைதியாக 
கப்ருகளுக்கு அருகில் அமர்ந்தோம்.

திடீரென்று நபி (ஸல்)அவர்கள் தமது தலையை உயர்த்தி நீங்கள் கப்ரின் வேதனையிலிருந்து பாதுகாப்பு தேடுங்கள் என்று  இரண்டு அல்லது மூன்று முறை கூறி பின்வரும் வார்த்தைகளை கூறினார்கள்.

ஒருவன் உலகத் தொடர்பைத்
துண்டித்துக் கொண்டு மறுமையை  எதிர்நோக்கி கொண்டிருக்கும்
(சக்கராத்தின்) நேரத்தில் சூரிய
ஒளிக்கு ஒப்பான பிரகாசம் கொண்ட முகத்துடன் வானிலிருந்து  மலக்குகள் சிலர் அவரிடம் வருவார்கள்.

அவர்கள் சொர்க்கத்தின் கஃபன் துணியிலிருந்து ஒரு கஃபன் துணியையும்... சொர்க்கத்தின் நறுமணங்களிலிருந்து
ஒரு நறுமணத்தையும் வைத்துக்கொண்டு அவருடைய
பார்வைக்கு எட்டும் தூரமளவு
அமர்ந்திருப்பார்கள்.

அப்பொழது உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து வந்து அவரருகில் அமர்வார்.

அவரை நோக்கி நல்ல ஆத்மாவே ஏக இறைவனுடைய மன்னிப்பை 
நோக்கியும் அவனுடைய திருப்தியையும் நோக்கியும் இந்த உடலிலிருந்து வெளியேறிவிடு என கூறுவார்.

தோல்பையிலிருந்த(அதனை வளைத்தால்) நீர் வழிந்து விடுவது  விழுவது போல அந்த (ஆத்மா   உடலிலிலிலிருந்து இலகுவாக) வெளியேரிவிடும்.

அந்த உயிரை எடுத்தவுடன் கொஞ்சநேரம் கூட கையில் வைத்துக் கொள்ளாமல் 
அந்த கபனில் வைத்துக்கொண்டு வந்த நறுமணத்தோடு வைத்து விடுவார்கள்.

(பின்பு அந்த உயிரை) அல்லாஹ்விடம் கொண்டு செல்வார்கள்.

வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்க்கு  அருகாமையில் அந்த அந்த உயிரைக் கொண்டு செல்லும் போதெல்லாம்
இது யாருடைய உயிர்?என்று 
வானவர்கள் கேட்பார்கள். 

அதற்கு இவருக்கு சொல்லப்பட்ட நல்ல பெயரை கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும்.

இவருக்காக முதல் வானத்தை திறக்கும்படி அவ்வானவர் கூறுவார். 

வானம் திறக்கப்படும்.

இவ்வாறு ஏழு வானமும் திறக்கப்படும்.

அப்போது அல்லாஹ் என் அடியானுடைய செயல்களை நல்லவர்களுடைய ஏடான இல்யீனில் பதிவு செய்யுங்கள்.

அந்த அந்த ஆத்மாவை மீண்டும்
பூமிக்கு கொண்டு வந்து அவனுடைய கப்ரில் சேருங்கள் என்று கூறுவான்.

நிராகரிப்பவன் மரண வேளையை நெருங்கிவிட்டால் கருத்த முகத்துடன் சில வானவர்கள் வந்து கண் பார்வை எட்டும் தூரத்தில் அமர்ந்து விடுவார்கள்.

அவர்களிடத்தில் ஒரு கம்பளி இருக்கும்.

உயிரைக் கைப்பற்றக்கூடிய மலக்கு வந்து அவனை நோக்கி கெட்ட ஆத்மாவே அல்லாஹ் கொடுக்க இருக்கும் இழிவை நோக்கியும்... அவனுடைய கோபத்தை நோக்கியும் நீ
வெளியேறி வா என்று கூறுவார்.

அப்பொழுது அவ்வுயிர் ஒளிந்து கொள்வதற்காக உடல் முழுவதும் ஓட ஆரம்பித்துவிடும். 

நனைத்த கம்பளியிலிருந்து முள் கம்பியை பிடுங்கி எடுப்பது போல 
அவனுடைய உடலிளிருந்த உயிர் கைப்பற்றப்படும். 

கொஞ்ச நேரம் கூட (அவ்வானவர்) தன் கையில் வைக்கமாட்டார்.

உடனே கம்பளி துணியில் வைத்து விடுவார்.

பின்பு அந்த உயிர் முதல் வானத்திற்க்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வுலகில் வீசும் துர்நாற்றத்தை விட அதிகமாக துர்நாற்றம் அதிலிருந்து வீசும்.

பின்பு அந்த உயிரை முதல் வானத்திற்க்கு கொண்டு செல்வார்.

வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகில்
கொண்டு செல்கின்ற போது
எவனுடைய கெட்ட உயிர்?
என அங்குள்ள வானவர்கள்
கேட்டார்கள். 

இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும்.

முதல் வானத்தை திறக்கும்படி அவ்வானவர் கேட்பார். 

அவனுக்காக வானம் திறக்கப்படாது என்று கூறினார்கள்.

நூல் : அஹ்மத் 17803

நல் அமல்கள் செய்து ஸாலிஹானவர்களாக மரணிக்க அல்லாஹ் கிருபை செய்வானாக...!

பிரபல்யமான பதிவுகள்