நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

புதன், ஜூலை 29, 2020

நித்ய கல்யாணி என்னும் அருமருந்து,

நித்ய கல்யாணி என்னும் அருமருந்து மூலிகை!!!____________________________________________
பொதுவாக உலகிலுள்ள எல்லா செடிகளும், காய்களும், பூக்களும் ஒரு குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும். எடுத்துக்காட்டாக நாம் அனைவரும் விரும்பும் ரோஜா பூக்கள். இவை ஒரு குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும். உலகிலுள்ள பெரும்பாலான தாவரங்களுக்கு இந்த விதி பொருந்தும். நித்திய கல்யாணி செடியோ எல்லா காலங்களிலும், எல்லா தட்ப வெட்பத்திலும் வளரும். இதன் அழகிய பூக்கள் அனுதினமும் பூத்துக் குலுங்குவதாலேயே இதற்கு நித்ய கல்யாணி என்ற பெயர் ஏற்பட்டது. "நித்ய(ம்) என்றால் தினமும் என்று பொருள், "கல்யாணி" என்றால் மலர்தல் என்ற பொருளைக் குறிக்கும்.

 

நித்தியகல்யாணி என்று அழைக்கப்படும் இந்த மலரைப்பற்றிய உண்மைகளையும், அருமருந்தாகிய இதன் தன்மைகளையும் நாம் இக்கட்டுரையில் காணலாம். உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த நித்ய கல்யாணியின் தாவரவியல் பெயர் காதரென்தஸ் ரோளியஸ்.

வகைகள்

இத்தாவரத்தில் இரண்டு வகைகள் உள்ளதாக பெரிதும் அறியப்படுகின்றது. இத்தாவரவினம் ஒரு மீட்டர் உயரம் வரை வளரும். இதன் இலைகள் நீள்வட்ட வடிவமாகவும் மேல்பகுதி மிகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

வெண்மை மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் காணப்படும் இப்பூக்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. வின்கா ரோஸா என ஸ்பானிய மொழியிலும், பூட்டிகா என வெணிசுலாவிலும், டெரசிடா என மெக்சிகோவிலும் அழைக்கப்படுகின்றது.

மருத்துவ குணங்கள்

பல மருத்துவ குணங்கள் கொண்ட இதனை மலேசியர்கள் போகேக் "ரெம்புட் ஜலாங்" என்றும் "கெகுதிங் சினா" எனவும் பல்வேறு பெயர்களில் அழைப்பர். பிலிப்பைன்ஸ் நாட்டில் இதனை சிட்சிரிக்கா எனவும், வியட்நாம் நாட்டில் ஹவா ஹாய் டாங் எனவும் அழைப்பர். பாரம்பரிய மருத்துவத்தில் தன்னிகரற்ற நாடான சீனாவில் இதனை "ச்சாங் சுன் ஹூவா" என அழைப்பர். பட்டிப்பூ என அழைக்கப்படும் இந்த மூலிகைத் தாவரத்திற்கு சீன மருத்துவத்தில் மிகப்பெரிய இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இம்மலர் அழகுக்காகவும், தோட்டத்திற்காகவும் மட்டுமின்றி இதன் மகத்தான மருத்துவ குணங்களுக்காகவும் பெரிதும் பயிரிடப்படுகின்றது. தேவாமிர்தத்தை ஒத்த தேவமலர் என்று கொண்டாடப்படும் அளவிற்கு பல்வேறு அமிர்தகுணங்களைக் கொண்டது, இரண்டரை சென்டிமீட்டர் விட்டமுள்ள இந்த சின்னஞ்சிறு மலர். இது புற்று நோய்க்கான அருமருந்தாகும். இதன் மருத்துவதன்மை ஆஸ்துமா, குளிர் ஜுரம், இரத்தப்புற்றுநோய், நீரிழிவு நோய் (இது ஒரு நோயே அல்ல) உயர் இரத்த அழுத்தம், பெண்களின் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்கள் நோய்களை விரட்டுவது மட்டுமின்றி பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

பெண்களுக்கு இந்த மூலிகை ஒரு வரம் என்றே கூறவேண்டும், பல பிரச்சினைகளை இது கண்கண்ட மருந்து. மார்பக புற்றுநோயை அடித்து விரட்டும் அமுதம். அதுமட்டுமன்று, இது மூளை சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளையும், மன நோய்களையும் நீக்கும் அமிர்த மருந்தாகும்.

மார்பகப் புற்றுநோய்

பெண்களுக்கு உயிர்கொல்லி பிரச்சினையாக விளங்குவது மார்பகப்புற்று நோய். மார்பக திசுக்கள் மாற்றங்கண்டு கட்டிகளாக மாறி புற்றுநோயாக உருவெடுக்கும். இந்த நோயானது இன்றைக்கு பெரும்பாலான பெண்களின் பிரச்சினையாக இருக்கின்றது. கட்டிகள் பெரிதாக உருவான பின்னரே இவற்றை நம்மால் அடையாளங்காண முடிகின்றது. இவற்றிற்கு ஆங்கில மருத்துவத்தில் பல்வேறு கண்டறியும் முறைகள் உள்ளன. இந்த வகை புற்றுநோயால் அவதிப்படுபவர்கள், நமது நித்தியகல்யாணியைக் கொண்டு நோயைக் கட்டுப்படுத்தலாம். முதலில் இதற்கு நித்தியகல்யாணி சூரணத்தை உபயோகிக்க வேண்டும்.

செய்முறை 

நித்திய கல்யாணிச் செடியை வேருடன் பிடிங்கி நன்கு சுத்தம் செய்து உலர்த்த வேண்டும். அதில் இலை, பூ, தண்டு, வேர் என அத்தனையும் இருக்கலாம். அந்தச் செடி முழுவதுமாக காய்ந்து பொடியாக அரைபடும் பதத்திற்கு வந்த பிறகு அதனை பொடி செய்து பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த பொடியிலிருந்து ஆறு கிராம் முதல் பதினைந்து கிராம் வரை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை 400 மில்லி சுத்தமான நீரிலிட்டு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் 200 மில்லி லிட்டராக சுண்டும் வரை கொதிக்க வைத்து பின் ஆற வைக்க வேண்டும்.

இந்த குடிநீரை கஷாயம் என்று அழைக்கலாம் அல்லது டானிக் என்றும் அழைக்கலாம். தினமும் மூன்று வேளையும் தவறாமல் அருந்த வேண்டும். அவ்வாறு அருந்தினால் மிக விரைவில் புற்று நோய் குணமாகும்.

கருப்பை புற்றுநோய்

கருப்பை புற்றுநோய் தற்காலத்தில் பெண்களின் பெரும்பாலானவர்களுக்கு எளிதில் பற்றும் நோயாக இருக்கின்றது. இவ்வகை புற்று உண்டாவதற்கு பலவகை காரணிகள் கூறப்படுகின்றன. பெரும்பாலும் இவ்வகை புற்று நோய்கள் வந்தால் கருப்பையை அகற்றி விடுவதையே நிரந்தர தீர்வாக மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதனை பாரம்பரிய வைத்தியமான நித்திய கல்யாணியின் துணை கொண்டு முழுபலன் பெற முடியும்.

பதினைந்து கிராம் அளவுள்ள நித்தியகல்யாணிப்பூக்கள் மற்றும் அறுநூறு மில்லி லிட்டர் தண்ணீரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த கஷாயம் பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைத்து பின்னர் ஆற வைக்க வேண்டும். இதனை வடிகட்டி ஒரு வேலைக்கு 100 மில்லி வரை குடிக்க வேண்டும். இதனை தினமும் நாள் தவறாமல் மூன்று வேளையும் நோய் தீரும் வரை குணமாகும் வரை குடிக்க வேண்டும்.

நிலையில்லா மாதவிடாய்

மாதவிடாய் என்று உலகின் எல்லா பெண்களுக்கு நிகழும் ஒரு மாதாந்திர சுழற்சியாகும். இது பொதுவாக மாதமொருமுறை நிகழும். இவ்வாறு காலம் தவறாமல் நிகழ்வது நாம் ஆரோக்கியமாக இருக்கின்றோம் என்பதை உறுதிபடுத்துகின்றது. இவ்வாறு மாதந்தவறாமல் நிகழும் மாதவிடாய் நாட்கள் தவறி நடக்க ஆரம்பிப்பது ஆபத்தின் அறிகுறியாகும். பொதுவாக 28 நாட்களுக்கு ஒரு முறை நிகழும் இந்த சுழற்சி 20 நாட்களோ அல்லது முப்பத்தைந்து முதல் நாற்பத்தைந்து நாட்களோ ஆனால் இது "நிலையற்ற மாதவிடாய்" என்று அழைக்கப்படுகின்றது. இவ்வாறு நிகழும் முறையற்ற மாத விடாய் கோளாறுகளை முழுவதுமாக நீக்க நித்திய கல்யாணி என்னும் பேரமுதத்தை பயன்படுத்தலாம்.

நித்திய கல்யாணியின் வேரை இருபது கிராம் அளவிற்கு எடுத்து சுத்தப்படுத்தி அரை லிட்டர் நீரில் போட்டு கொதிக்க விட வேண்டும். அந்த குடிநீர் 200 மில்லி லிட்டராக சுண்டும் வரை காய்ச்சி பின் ஆற வைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். இதை காலை மாலை இருவேளை 40 மில்லி முதல் 100 மில்லி வரை நோயின் தன்மைக்கேற்ப வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் உங்களது மாதவிடாய் சுழற்சி நேர்த்தியாகிவிடும்.

இரத்த சோகை

இதுவும் பெண்கள் சம்பந்தப்பட்ட வியாதிதான். மற்றவர்களுக்கும் (ஆண்களுக்கும்) வருமென்றாலும் பிரசவித்த தாய்மார்களுக்கே அதிகம் வரும் ஒரு சத்துக்குறைவு நோயாகும். இரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள் அளவில் குறைந்து உடலின் பிற பகுதிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் கொண்டு செல்ல இயலாமல் போய்விடும். இதனால் உடல் சோர்வு மயக்கம், முதலியவை ஏற்படும். பெண்களின் பிரசவத்தினால் ஏற்படும் இரத்த இழப்பினாலும் இந்த நோய் ஏற்படும்.

இந்த நோயை முழுவதுமாக குணப்படுத்த நித்தியகல்யாணியின் நான்கு பூக்களை ஒரு டம்ளர் தண்ணீரில் முக்கி வைக்க வேண்டும். இதனை ஓர் இரவு காற்றோட்டமாக வைத்துவிட வேண்டும். காலையில் இதனை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு ஒரு மாதம் குடித்த பின்னர் இரத்தத்தை பரிசோதனை செய்து பார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள். அதன் பின்னர் தேவைக்கேற்றபடி இதனை தொடரலாம்.

நீரிழிவு

இன்றைய தேதியில் உலகின் மிகப்பெரிய நோயாளிகள் குழாம் என்பது இந்த நீரிழிவு நோயாளிகள் தான். இந்தியாவில் பத்தில் ஒருவருக்கு நீரழிவு நோய் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உண்மையில் சொல்லப்போனால் இது ஒரு நோயே அல்ல, உடலில் ஏற்படும் மாற்றங்களே. இரத்த சர்க்கரையின் அளவு உச்சமாக இருக்க அதனால் உடலில் ஏற்படும் விளைவுகளே நீரிழிவு நோயாகும். கணையத்தின் சுரப்பாகும் இன்சுலின் உடலுக்கு போதுமானதாக இல்லாமல் போவது தான் நீரிழிவு நோயாகும்.

இந்த நீரழிவு நோய்க்கு நித்தியகல்யாணியை சிறந்த மருந்தாக கொள்ளலாம். இது பழுதுபட்ட கணையத்தை சரிசெய்வதோடு, உடல் செல்களின் இயக்கங்களை சரி செய்கிறது.

நித்திய கல்யாணியின் ஆறு இலைகள் மற்றும் 15 பூக்களை 800 மில்லி நீரில் இட்டு கொதிக்க வைக்க வேண்டும். இந்த கஷாயம் பாதியாக சுண்டியவுடன், அதாவது 400 மில்லியானவுடன் ஆறவைத்து வடிகட்டி காலை, மாலை என ஒரு நாளைக்கு இரு முறை இந்த குடிநீரை பருகவேண்டும். இன்னொரு முறையில் இந்த நித்தியகல்யாணியின் 15 அல்லது 16 இலைகளை மட்டுமே கொதிக்க வைத்து, நீர் பாதியாக சுண்டியவுடன் ஆறவைத்து வடிகட்டி காலை, மாலை இருவேளையும் நாள் தவறாமல் பருகவேண்டும்.

இரத்த புற்றுநோய்

இரத்த புற்று நோய் என்பது இரத்தம் அல்லது எலும்பு மஜ்ஜையில் ஒரு சிதை மாற்றமேயாகும். இவை பொதுவாக இரத்த வெள்ளையணுக்களின் அசாதாரண பெருக்கத்தால் அறியப்படுகின்றது.

இந்த புற்று நோயை நித்திய கல்யாணி இலையைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்தால் குணப்படுத்த இயலும். நித்தியகல்யாணியின் இலைகள் ஒரு கைப்பிடி அளவும், மூன்று துண்டுகள் தண்டும், வேர்களும் என அனைத்தையும் நீரிலிட்டு (நானூறு மில்லி) நன்கு கொதிக்க விட வேண்டும். அந்த மருந்து பாதியாக சுண்டி வந்தவுடன் அதனை ஆறவிட வேண்டும். பின்னர் தேவையான சர்க்கரை அல்லது தேனை சேர்த்து இருபது மில்லி லிட்டர் வரை காலை மாலை இருவேளை பருகவேண்டும்.

ஆஸ்துமா

இது நுரையீரலில் ஏற்படும் அழற்சியினால் ஏற்படும் நோயாகும். இதனால் மூச்சுத்திணறல் அடிக்கடி உண்டாகும். சுவாசக் குழாய்களை சுற்றியிருக்கும் தசைகள் தடித்தும், நுரையீரல் தசைகளில் ஏற்படும் வீக்கம் இவைகளே ஆஸ்துமா எனப்படுகின்றது. இந்நோயின் காரணமாக ஆண்டொன்றுக்கு இரண்டரை முதல் மூன்று லட்சம் பேர் வரை இறக்கிறார்கள்.

இந்நோயைக் கட்டுப்படுத்த நித்திய கல்யாணியின் வேரை ஒரு துண்டு எடுத்து நானூறு மில்லி நீரிலிட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். அந்த மருந்து பாதியாக சுண்டி வந்தவுடன் அதனை ஆறவிட வேண்டும். பின்னர் தேவையான சர்க்கரை அல்லது தேனை சேர்த்து இருபது மில்லி லிட்டர் வரை காலை மாலை இருவேளை பருகவேண்டும்.

விஷ ஜுரம்

மிகக் கடுமையான நாட்பட்ட காய்ச்சலை குணமாக்கக்கூடியது இந்த நித்தியகல்யாணி. நித்தியகல்யாணியின் இலைகள் ஒரு கைப்பிடி அளவும், மூன்று துண்டுகள் தண்டும், வேர்களும் என அனைத்தையும் நீரிலிட்டு (நானூறு மில்லி) நன்கு கொதிக்க விட வேண்டும். அந்த மருந்து பாதியாக சுண்டி வந்தவுடன் அதனை ஆறவிட வேண்டும். பின்னர் தேவையான சர்க்கரை அல்லது தேனை சேர்த்து இருபது மில்லி லிட்டர் வரை காலை மாலை இருவேளை பருகவேண்டும்.

மனநோய்கள்

அல்சீமர் என்று அழைக்கப்படுகின்ற நினைவு இழப்பு நோய்களை தீர்க்கும் அருமருந்தாக பயன்படுகின்றது. இந்நோயைக் கட்டுப்படுத்த நித்திய கல்யாணியின் வேரை ஒரு துண்டு எடுத்து நானூறு மில்லி நீரிலிட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். அந்த மருந்து பாதியாக சுண்டி வந்தவுடன் அதனை ஆறவிட வேண்டும். பின்னர் தேவையான சர்க்கரை அல்லது தேனை சேர்த்து இருபது மில்லி லிட்டர் வரை காலை மாலை இருவேளை பருகவேண்டும்.

எச்சரிக்கை 

கருத்தரித்த தாய்மார்கள் நித்தியகல்யாணியின் எந்தவித மருந்துகளையும் பயன்படுத்தக்கூடாது.

பக்ரீத் பெருநாள்,பக்ரீத் பொருளாதாரம்,

பக்ரீத் பொருளாதாரம்*
-----------------------------------
20 கோடி இந்திய முஸ்லிம்கள் பக்ரீத் கொண்டாடுவர்.
10% முஸ்லிம்கள் குறைந்தபட்சம் ரூ.5000/- மதிப்புள்ள ஆடுகளை குர்பானி கொடுப்பார்கள்.

*2 கோடி x ரூ.5000 = ரூ.10000 கோடி*

இந்த அளவிலான பொருளாதாரத்தால் யார் பயனடைவார்கள்...?

இவை சீன தயாரிப்புகளோ
பெருநிறுவன தயாரிப்புகளோ அல்ல,
100% தேசிய கிராமப்புற பொருளாதாரம்.
இதனால் பயன் அடைவது இந்திய விவசாயிகள் மட்டுமே...

ஒரு விவசாயி ஆண்டுக்கு சராசரியாக 10 ஆடுகளை வளர்த்தால்
*2 கோடி ÷ 10 ஆடு = 20 லட்சம் குடும்பங்கள்* வேலைவாய்ப்பு பெறும்.

எனவே பக்ரீத் பண்டிகை, 10000 கோடி ரூபாய் உள்ளூர் வணிக பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்கிறது மற்றும் சுமார் 20 லட்சம் சிறு விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது.

ஒவ்வொரு ஆட்டின் இறைச்சியும் ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட்டு, குறைந்தது 20 பேர் சாப்பிடுகிறார்கள்.
*2 கோடி x 20 பேர் = 40 கோடி மக்களுக்கு* உணவு வழங்குகிறார்கள். (முஸ்லிம் ஏழைகள் மட்டும் அல்ல. பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த ஏழைகளும்  பயனடைகின்றனர்)

*பக்ரித்தின் முக்கிய பொருளாதார நன்மைகள்:*

வணிகம் - ரூ.10000 கோடி
இலவச உணவு - 40 கோடி மக்கள்
வேலைவாய்ப்பு - 20 லட்சம் பேர்.

இது குறைந்தபட்ச மதிப்பீடு, உண்மையானது இரு மடங்காக இருக்கலாம்.

கால்நடைகள் மூலம் கிராமப்புற இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகரிக்க, அதன் வர்த்தகத்தை அரசு ஊக்குவிக்க வேண்டும்.


பெருநாள் தொழுகை (ஹனபி)

ஜும்ஆத் தொழுகை யார் யார் மீது எல்லாம் கடமையாகிறதோ இரு ஈது பெருநாள் தொழுகைகளும் அவர்கள் மீது கடமையாகிறது. ஆனால் ஈது தொழுகை வாஜிபு ஆகும். இம்மாதிரியே ஜும்ஆவில் குத்பா பர்ளு, ஆனால் ஈதில் குத்பா வாஜிபாகும்.

ஜும்ஆவில் குத்பா தொழுகைக்கு முன்னால் ஓதப்படும். ஈதுகளின் குத்பா தொழுகைக்குப் பின்னால் ஓதப்படும்.

பெருநாள் தொழுகையின் நேரமாவது சூரியன் நன்கு உதயமானதிலிருந்து (காலை 7 மணியிலிருந்து) நடுப்பகல் உச்ச நேரத்திற்கு சற்று முன் (11 மணி) வரையிலாகும்.

ஈதுல் பித்ரைவிட ஈதுல் அல்ஹாவைச் சீக்கிரம் தொழுது கொள்வது நல்லது.

தொழுகை முறை:

ஈது பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத் வாஜிபாகும். ஒவ்வொரு ரக்அத்திலும் மும்மூன்று விகிதம் இரண்டு ரக்அத்துகளில் 6 அதிகப்படியான தக்பீர்கள் உண்டு.

முதலில் நிய்யத்து செய்து அல்லா{ஹ அக்பர் சொல்லி இமாமுடன் ரக்அத் கட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஃதனா ஓத வேண்டும். பிறகு இரண்டு முறை 'அல்லா{ஹ அக்பர்' என்று கையை உயர்த்தி கீழே தொங்கவிட்டு விட்டு மூன்றாம் முறை 'அல்லாஹ அக்பர்' சொல்லி (ரக்அத்தில் கை கட்டி கொள்ள வேண்டும்) வழக்கம் போல் இமாம் அல்ஹம்து ஸூராவும் கிராஅத்தும் ஓதுவார். அதைக் கேட்க வேண்டும்.

நோன்புப் பெருநாள் தொழுகை நிய்யத்:

نَوَيْتُ اَنْ اُصَلِّ لِلهِ تَعَااٰى رَكَعَتَيْنِ صَلٰوةَ عِيْدِ الْفِطْرِ اِقْتَدَيْتُ بِهٰذَالْاِمَامِ مُتَوَجِّهًا اِلٰى جِهْةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللهُ اَكْبَرُ

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நிய்யத்:

نَوَيْتُ اَنْ اُصَلِّ لِلهِ تَعَااٰى رَكَعَتَيْنِ صَلٰوةَ عِيْدِ الْاَضْحٰى اِقْتَدَيْتُ بِهٰذَالْاِمَامِ مُتَوَجِّهًا اِلٰى جِهْةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللهُ اَكْبَرُ

இரண்டாவது ரக்அத்தில் ஓத வேண்டியதை ஓதி முடித்து ருகூவுக்கு போகும் முன்னர், முன்போல் 3 தக்பீர் சொல்ல வேண்டும். மூன்று முறை அல்லா{ஹ அக்பர் சொல்லி கையைத் தொங்கவிட்டு விட்டு நாலாவது முறை அல்லா{ஹ சொல்லி ருக்கூவுக்கு போய் வழக்கம் போல் தொழுகையை முடிக்க வேண்டும்.

அதன்பிறகு இமாம் குத்பா ஓதுவார். அதை காது தாழ்த்தி கேட்க வேண்டும். பின்பு துஆ திக்ருகள் ஓதப்படும்.

தக்பீர்:

للهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ لاَ اِلاَهَ اِلَّا اللهُ وَاَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ وَلِلهِ الْحَمْدُ

பெருநாள் தொழுகை (ஷாபிஈ)

பொழுது உதயமானதிலிருந்து ளுஹரின் வக்து வரும் வரை நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகளின் நேரங்களாகும். இவ்விரு பெருநான் தொழுகைகளும் களாவாகிவிட்டால் தொழுவது சுன்னத்துல் முஅக்கதாவாகும்.  உளுஹிய்யாவை அறுக்க வேண்டியிருப்பதால் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை அதன் ஆரம்ப வக்திலும்இ ஃபித்ரு ஜகாத்தை கொடுத்து முடிப்பதற்காக நோன்புப் பெருநாள் தொழுகையை சற்றுக் காலம் தாழ்த்தியும் தொழுவது சுன்னத் ஆகும்.

ஈத் தொழுகையானது தொழுகையின் எல்லாவித ஃபர்ளு, ஷர்த்துகளைக் கொண்ட இரண்டு ரக்அத் தொழுகை ஆகும். எனினும் முதல் ரக்அத்தில் வஜ்ஹத்து ஓதிய பின் ஏழுமுறை  தக்பீர் கூறுவதும், இரண்டாவது ரக்அத்தில் நிலைக்கு வந்த பின்பு ஐந்து முறை தக்பீர் கூறுவதும் சுன்னத்தாகும். ஒவ்வொரு தக்பீர் கூறும்போதும்  இரு கைகளையும் உயர்த்தி பின்பு அவைகளைக் கட்டிக் கொள்வதும் மற்றும் இந்த தக்பீர்களுக்கிடையில் 'ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லா{ஹ வல்லா{ஹ அக்பர்' எனச் சொல்வதும் சுன்னத்துக்களாகும். ஃபாத்திஹா சூராவிற்குப் பின் 'காஃப்'; (50வது) சூரா  அல்லது 'ஸப்பிஹிஸ்ம ரப்பிகல்'; சூராவும் இரண்டாவது ரக்அத்தின் ஆரம்பத்தில் 'ஹல்அதாக' சூராவும் ஓதுவதும் சுன்னத்தாகும்.

நோன்புப் பெருநாள் தொழுகை நிய்யத்:

اُصَلِّى صَلٰةَّ عِيْدِ الْفِطْرِ رَكْعَتَيْنِ لِلهِ تَعَالٰى اَللهُ اَكْبَرْ

`[;[{ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நிய்யத்:

اُصَلِّى صَلٰةَّ عِيْدِ الْاَضْحٰى رَكْعَتَيْنِ لِلهِ تَعَالٰى اَللهُ اَكْبَرْ

இரு பெருநாட்களின் முதல் நாள் மாலை சூரியன் மறைந்தது முதல் பெருநாள் தொழுகை தொழத் தொடங்கும் வரை எல்லாத் தொழுகைகளுக்குப் பின்பும் தெருக்களிலும், வீதிகளிலும், வீடுகுளிலும் நின்ற, அமர்ந்த, படுத்த அமைப்புகளிளெல்லாம் தக்பீர் சொல்லிக் கொண்டே இருப்பது சுன்னத்தாகும். இதற்கு தக்பீர் முர்ஸல் என்று பெயர். ஹஜ்ஜுப் பெருநாளில் அரபா தினத்தின் ஸுப்{ஹத் தொழுகையிலிருந்து அய்யாமுத் தஷ்ரீக் (துல்ஹஜ் பிறை 13) அஸர் வரை எல்லாத் தொழுகைகளுக்கும் பின்பு மட்டும் தக்பீர் சொல்வது சுன்னத்தாகும். இதற்கு தக்பீர் முகய்யத்' என்று பெயர் மேலும் துல்ஹஜ் பிறை 1 முதல் 10 வரை ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய குர்பானிப் பிரயாணிகளைப் பார்க்ககும் போதோ, இவைகளின் சப்தங்களைக் கேட்கும்போதோ தக்பீர் சொல்வது சுன்னத்தாகும்.

தக்பீர்:

اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ لاَ اِلاَهَ اِلَّا اللهُ وَاَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ وَلِلهِ الْحَمْدُ…..۲

اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ كَبِيْرًا وَالْحَمْدُ لِلهِ كَثِيْرًا وَسُبْحَانَ اللهِ بُكْرَةً وَّاَصِيْلًا لاَ اِلٰهَ اِلَاَّ اللهُ وَلَا نَعْبُدُ اِلَّا اِيَّاهُ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ وَلَوْ كَرِهَ الْكَافِرُوْنَ لَااِلٰهَ اِلَاّ اللهُ وَحْدَهْ وَصَدَقَ وَعْدَهْ وَنَصَرَ عَبْدَهْ وَاَعَزَّ جُنْدَهُ وَهَزَمَ الْاَحْزَابَ وَحْدَهْ لَا اِلٰهَ اِلَّا الله وَالله اَكْبَرُ اَللهُ اَكْبَرُ وَلِللهِ الْحَمْدُ .

தொழுகைக்குப் பின்பு குத்பா ஓதுவது சுன்னத்தாகும். ஜும்ஆ குத்பாவின் ஃபர்ளு, ஷர்த்துகளுடன் முதல் குத்பாவை ஒன்பது தக்பீர்களைக் கொண்டும், இரண்டாவது குத்பாவை தொடர்ச்சியான ஏழு தக்பீர்களைக் கொண்டும் தொடங்குவதும் பெருநாள் குத்பாவின் சொற்றொடர்களுக்கு இடையே தக்பீர் கூறுவதும் சுன்னத்தாகும்.

செவ்வாய், ஜூலை 28, 2020

கிஸ்வா துணி,

கிஸ்வா துணி,
அல்ஹம்துலில்லாஹ்_அல்லாஹ்வின் மிகப்பெரிய கிருபையினால் இன்று புனித கஃபா ஷரீஃப் மீது  ஹிஜ்ரி1441(2020) வருட புதிய கிஸ்வா உயர்த்தப்பட்டது, காணொளியில் கொடுக்கப்பட்டுள்ளது:

#கிஸ்வாவை_பற்றிய_தகவல்கள்

கஃபாவின் மீது போர்த்தப்படும் போர்வைக்கு என்ன பெயர் ?
எப்போது அந்த போர்வை மட்ட படும்?
புது போர்வை போர்த்தப்பட்டால் பழைய போர்வையை என்ன செய்வார்கள் ?
இந்த போர்வை செய்ய எவ்வளவு செலவு ஆகிறது ?
அந்த போர்வை கருப்பு நிறம் மட்டும் தானா ?இது போன்ற தகவல்களும்!!!


கஃபாவின் மீது போர்தப்படும் போர்வைக்கு பெயர் :கஃபாவின் மீது போர்த்தப்படும் கருப்பு நிறபோர்வைக்கு " கிஸ்வா " என்று பெயர் சொல்லப்படும்.
தங்க ஜரிகைகலால் ஆனது கஃபாவிற்க்கு போர்வை மாற்றம் வைபவம் என்றே ஆரம்பித்து இன்று வரை தொடர்கிறது

எப்போது மாற்றப்படும்!!!வருடந்தோறும்துல் ஹஜ் பிறை 9 ம் நாள் ஹஜ்ஜோடு சேர்த்து இந்த போர்வையை மாற்றப்படுகிறது,


பழைய போர்வை !!!பழைய போர்வை சின்னஞ்சிறு துண்டுகளாகவெட்டப் பட்டு வெளி நாட்டு நிறுவனங்களுக்கும், பிரமுகர்களுக்கும் வழங்கப்படுகிறது. ஆனால் கலிஃபா உமர்[ ரலியல்லாஹூ அன்ஹூ ] ஆட்சி காலத்தில்அது ஹஜ் பயணிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது.
14 -மீ-நீளமும் 101-செ.மீ அகலமும் கொண்ட 47 துண்டுகள் பயன் படுத்தப்படும்.இந்த போர்வையின் நீளம் -658 ச.மீ ஆகும் 670-கிலோ பட்டு நூலும் 15 கிலோ அசல் தங்க ஜரிகை இழைகள் 
பயன்படுத்தப்படுகிறது 


இதற்காக ஆகும் செலவு சவுதி ரியால் -1கோடியே 70-லட்சம் என்று சொல்லப்படுகிறது.அது இந்தியா ரூபாய் சுமார் 20-கோடியைஆகும்.

போர்வை நெய்யப்பட்ட பிறகு திருக் குர்ஆன் வசனங்கள் ஜரிகை இழைகளால் கலைநயமிக்க எழுத்துக்களால் அதில் பின்னப்படுகின்றன 


கிஸ்வாவின் நிறம் ஒவ்வொரு ஆட்சியாளர் காலங்களில் ,ஒவ்வொரு நிறத்திலும் இருந்திருக்கிறது ஆரம்பகாலங்களில்இந்த போர்வை மாற்றும் வைபவம். முஹர்ரம்-10-ஆம்நாள் நடை பெற்றது,
பிறகுதான் அது துல்ஹஜ் மாதம்.துல்ஹஜ் மாதம் 9ஆம் நாள் அரஃபா நாளன்று பஜ்ர் தொழுகைக்கு பின்பு மாற்றுவார்கள்.....

உயிர்...ரூஹ் (ஆன்மா) என்றால் என்ன.

ரூஹ்..

ரூஹ் (ஆன்மா) என்றால் என்ன...

“ரூஹ் (ஆன்மா) என்றால் என்ன?” என்ற கேள்வி இன்று மட்டுமல்ல நபி (ஸல்) அவர்களது காலத்திலும் இருந்துள்ளது. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் “ஒரு முறை நான் மதீனாவில் நபியவர்களுடன் ஒரு வேளான்மைப் பூமியில் இருந்தேன். அப்போது யூதர்களின் குழு ஒன்றை நாம் கடந்து சென்றோம். அப்போது அவர்களில் ஒருவர் எழுந்து வந்து “அபுல் காஸிமே ரூஹ் என்றால் என்ன என்று எமக்கு அறிவியும்” என்றார். நபியவர்கள் மௌனமானர்கள். அவர்களுக்கு இறைவனிடமிருந்து செய்தி (வஹி) அறிவிக்கப்படுவதை நான் உணர்ந்தேன். (வஹி வரும்போது ஏற்படும் சிறமம் விலகி) அவர்கள் நிதானித்த பின்னர் நபிகளார் பின்வரும் திருமறை வசனத்தை அந்த யூதருக்கு ஓதிக் காண்பித்தார்கள்.

“நபியே உம்மிடம் அவர்கள் ரூஹைப் பற்றிக் கேட்கிறார்கள். ரூஹ் என்பது என் இறைவனுடைய கட்டளையிலிருந்து உள்ளதாகும். அது பற்றி உமக்கு மிகச் சொற்ப அறிவே அன்றி நாம் வழங்கவில்லை என்று நீர் கூறும்” (17:85)

ரூஹ், தமிழில் ஆன்மா அல்லது ஆத்மா என்றும் உயிர் என்றும் மொழிபெயர்க்கப்படுகின்றது. ரூஹ் என்பது உயிரல்ல. நாம் கூட உயிரும் ரூஹும் ஒன்று என்றுதான் நினைத்திருப்போம். ஆனால் உண்மையில் ரூஹ் என்பது வேறு உயிர் என்பது வேறு. அல்குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களோடு ரூஹ் பற்றி அல்லாஹ் எமக்கு அளித்துள்ள சிறு விளக்கத்தோடு சற்று சிந்தித்துப் பார்த்தாலே போதும் ரூஹும் உயிரும் வேறுபட்ட இரண்டு அம்ஷங்கள் என்பதை அறிய முடியும். இங்கு ரூஹ் மற்றும் உயிர் என்பன எவ்வாறு வேறுபடுகின்றன என்பதற்கான சில ஆதாரங்களைப் பார்ப்போம்.

1. “வளர்கின்ற அனைத்திற்கும் உயிர் இருக்கின்றது” என்பதை விஞ்ஞானம் ஏற்றுக்கொள்கின்றது. தாவரங்கள், விலங்குகள், பறவைகள் அனைத்தும் வளர்கின்றன. எனவே அவற்றுக்கு உயிர் உள்ளதென்பதை எம்மால் விளங்க முடியும். அப்படியாயின் ஒரு பெண்ணின் சினை முட்டையும் ஆணின் விந்தனுவும் ஒன்று சேர்ந்ததில் இருந்து 42 ஆம் நாள் ஆகும் வரை அக்கரு வளர்ச்சியடைகின்றது. வளர்ச்சியடைகின்றதென்றால் அதற்கு உயிர் இருக்கின்றது என்று பொருள். நபி (ஸல்) அவர்களது ஹதீஸின் படி 42 ஆம் நாளில் அல்லாஹ் ஒரு வானவரை அழைத்து அவ்வானவரிடம் ஒரு ரூஹைக் கொடுத்து அதனை குறித்த தாயின் கருவறையில் உள்ள சிசுவில் கொண்டு சேர்க்குமாறு கட்டளையிடுகின்றான். தற்போது சற்று சிந்தியுங்கள். கரு 42 ஆம் நாள் ஆகும்வரை வளர்ச்சியடைகின்றது எனவே அதற்கு உயிர் இருக்கின்றது. 42ம் நாளில்தான் ரூஹ் ஊதப்படுகின்றது. அப்படியாயின் உயிரும் ரூஹும் வெவ்வேறு பொருட்கள் என்பது தெளிவாகிறது.

2. நாம் உறக்கத்திற்குச் செல்லும்போது அல்லாஹ் எமது ரூஹை எம்மைவிட்டும் உயர்த்துகின்றான். ஆனாலும் உடலுக்கும் ரூஹிற்கும் இடையில் ஒரு இணைப்பு இருக்கும். யாருடைய அஜல் இன்னும் உள்ளதோ யார் மீண்டும் விழித்து எழவேண்டும் என்று அல்லாஹ் நாடுகின்றானோ அவரது ரூஹை அல்லாஹ் அவ்வுடலுடன் சேர்த்துவிடுவதாகவும் யாரது அஜல் முடிகின்றதோ யார் விழித்து எழக்கூடாதென இறைவன் நாடுகின்றானோ அவரது ரூஹை அப்படியே தன்பால் எடுத்துக்கொள்வதாகவும் அல்லாஹ் பின்வரும் வசனங்களில் 39:42/6:60 கூறுகின்றான். அப்படியாயின் உறக்கத்திலும் எமது இதயம் தொழிற்படுகிறது. நாம் அசைகின்றோம், சுவாசிக்கின்றோம். ஏனெனில் ரூஹ் உயர்த்தப்பட்டாலும் உயிர் இருப்பதால்தான் இவ்வாறு நடைபெறுகின்றது. எனவே ரூஹும் உயிரும் வேறு என்பது விளங்குகளிது.

3. எமது மரணத் தருவாயில் மலக்குல் மௌத் அவர்கள் வருகை தந்து ரூஹைக் கைப்பற்றிக்கொண்டு வானத்தை நோக்கி உயர்ந்து செல்வார்கள். அப்போது அந்த ரூஹ் செல்லும் திசையை எமது பார்வை பின்தொடர்வதாக அல்குர்ஆன் கூறுகின்றது. ரூஹ் பிரிந்தாலும் உடலில் உயிர் இருக்கின்றதென்பதை இதிலிருந்து அறிய முடியும். உடலில் உயிர் இருப்பதால்தான் கண்கள் பார்க்கும் தொழிலைச் செய்கின்றன. ரூஹ் பிரிந்ததும் மரணித்தவரது கண்களை மூடிவிடுவது நபிகளாரின் சுன்னாவாகும்.

4. கண் தானம், இதய தானம், கிட்னி தானம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். இவ்வாறான உருப்புதானங்கள் செய்வது மரணித்ததன் பின்னர்தான். இங்கு மரணித்ததன் பின் என்பது ரூஹ் கைப்பற்றப்பட்ட பின், உயிர் பிரிய முன் என்பதாகும். ரூஹ் பிரிந்தாலும் உடலில் உயிர் இருப்பதால்தான் உறுப்புக்கள் வேறாக்கப்படுகின்றன. உடல் உஷ்னம் தனிய முன்னர் உறுப்புக்களை மாற்றவேண்டும் என்று நாம் கூறுவது இதனைத்தான். ஆக இங்கும் உயிர் வேறு ரூஹ் வேறு என்பது அழகாகத் தெரிகின்றது. உடலில் இருந்து உயிர் படிப்படியாகப் பிரிந்து தொண்டைக் குழியால் வெளியேறும் காட்சியை நவீன மறுத்துவத் தொழில்நுட்பம் Thermal imaging camera மூலம் படம்பிடித்துள்ளனர். 

ரூஹ் பிரிந்தாலும் உடலில் குறிப்பிட்ட சில நேரங்களுக்கு உயிர் இருக்கின்றது. அதனால்தான் அந்த ஜனாஸா வானவர்களால் ரூஹ் சுமந்து செல்லப்படுவதைப் பார்ப்பதாகவும் அவ்வுடலை மண்ணரை நோக்கிக் கொண்டு செல்லும்போது அது நல்ல மனிதனாக இருந்தால் விரைவாகக் கொண்டு செல்லும்படியும் கெட்ட மனிதனாக இருந்தால் மண்ணரைக்குக் கொண்டு செல்ல வேண்டாம் என்றும் உரக்கக் கத்துவதாகவும் நபிகளார் கூறினார்கள். மண்ணரையில் அடக்கம்செய்துவிட்டு நாம் நடந்துவரும் காலடி ஓசைகளைக்கூட அவ்வுடல் கேட்கின்றது என்றார்கள். ஜனாஸாவை வீட்டில் மக்கள் பார்வையிடும் போதும், அதனைக் குளிப்பாட்டும் போதும், கபன் செய்து தொழுகை நடாத்தும் போதெல்லாம் அவ்வுடலில் உயிர் இருப்பதால் அது சுற்றி நடக்கும் விடயங்களை அறிந்துகொள்ளவும் கூடும். அல்லாஹ்தான் அனைத்தையும் அறிந்தவன். இதனோடு தொடர்பாக நபியவர்களது பத்ர் யுத்தத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை இங்கு நினைவு கூர்வது பொருத்தமென நினை;கின்றேன்.

அபூ தல்ஹா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: பத்ர் போரன்று நபி (ஸல்) அவர்கள் 24 குறைஷித் தலைவர்களின் சடலங்களை நாற்றம் படித்த கிணற்றில் வீசி எறியும்படி கட்டளையிட்டார்கள். நபியவர்கள் போரில் வெற்றி பெற்றால் அந்த இடத்தில் மூன்று நாட்கள் தங்குவது வழக்கம். அவ்வாறே பத்ர் போர் முடிந்த பின் அங்கு மூன்று நாட்கள் தங்கினார்கள். மூன்றாவது நாள் தனது வாகனத்தைத் தயார்செய்துகொண்டு தனது தோழர்களுடன் எதிரிகளின் சடலங்கள் போடப்பட்ட கிணற்றுக்கு அருகில் நின்றுகொண்டு அவர்களை அவர்களுடைய தகப்பனாரின் பெரைக் கூறி அழைத்து “இன்னாரின் மகன் இன்னாரே! இன்னாரின் மகன் இன்னாரே! முன்பே அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டிருந்தால் இப்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருந்திருக்கலாமே! நிச்சயமாக எமது இறைவன் எமக்கு வாக்களித்ததை நாம் உண்மையாகக் கண்டுகொண்டோம். உங்களது இறைவன் உங்களுக்கு வாக்களித்ததை நீங்கள் கண்டுகொண்டீரா?” என்று கேட்டார்கள். அப்போது உமர் (ரழி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே ரூஹ்ஹ{கள் அற்ற சடலங்களிடம் நீங்கள் என்ன பேசுகின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் “முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக நான் கூறுவதை அவர்களைவிட நீங்கள் அதிகம் கேட்கும் திறன் உள்ளவர்களாக இல்லை” மற்றுமொரு அறிவிப்பில் “அவர்களைவிட நீங்கள் கேட்கும் ஆற்றல் அதிகமுடையவர்களாக இல்லை. ஆனால் அவர்களால்  பதில் அளிக்க முடியாது” என்றார்கள். ஆதாரம் (புஹாரி, முஸ்லிம், மிஷ்காதுல் மஸாபீஹ் 2/345)

ரூஹ் பிரிந்து குறிப்பிட்ட சில நேரங்கள் வரைதான் உயிர் உடலில் இருக்கும். உயிர் இருக்கும்போது அவற்றால் செவிமடுக்க முடிந்தாலும் உயிர் பிரிந்து மரித்தபின் ஒருபோதும் அவற்றால் செவிமடுக்கவும் முடியாது. யாராலும் செவிமடுக்கச் செய்யவும் முடியாது. அல்லாஹ் கூறுகின்றான்.

“நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும் படிச் செய்ய முடியாது” (27:80)

எமது ரூஹிற்கு ஆரம்பம் ஒன்று உண்டு. ஆனால் முடிவோ அழிவோ இறப்போ கிடையாது. ஆனல் உயிர் என்பது அழியக்கூடியது. அல்லாஹ் எம்மிடம் எதிர்பார்ப்பது அவனுக்காக அவனுடைய தீனை வாழச்செய்வதற்காக எமது உயிரைத் தியாகம் செய்யவேண்டும். உயிரைத் தியாகம் செய்தால் அதற்குப் பகரமாக அல்லாஹ் எமது ரூஹிற்கு சுவனத்தைத் தருவதாக வாக்களித்துவிட்டான். பாருங்கள்:

நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களிடமிருந்து அவர்களின் உயிர்களையும்இ செல்வங்களையும் அவர்களுக்கு சுவனம் நிச்சயமாக உண்டு என்ற ஒப்பந்தத்தில் விலைக்கு வாங்கிவிட்டான். (9:111)

ரூஹைப் படைத்த ஆரம்ப நிலை...

அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை மண்ணால் படைத்துவிட்டு தனது ரூஹில் இருந்து முதலில் அவரது உடலுக்கு ஊதுகின்றான். தனது ரூஹ் செலுத்தப்பட்ட உடல் என்பதற்காக அல்லாஹ் ஆதமை கண்ணியப்படுத்தி அவருக்கு ஸ{ஜுத் செய்யுமாறு மலக்குகளைப் பணிக்கின்றான். இது பற்றி திருமறை இவ்வாறு பகர்கின்றது.

(நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம்; "ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்துஇ மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்" என்றும்இ அவரை நான் செவ்வையாக உருவாக்கிஇ அவரில் என் ரூஹிலிருந்து ஊதியதும்இ "அவருக்கு சிரம் பணியுங்கள்" என்றும் கூறியதை (நினைவு கூர்வீராக)! அவ்வாறே மலக்குகள் - அவர்கள் எல்லோரும் - சிரம் பணிந்தார்கள். (15:30) (38:71) (32:09)

தாயகம் நோக்கிய ரூஹின் 
ஆறு கட்டப் பயணம்...

முதல் கட்டம்...

அல்லாஹ் தனது ரூஹிலிருந்து ஊதி ஆதம் (அலை) அவர்களை எழுப்பியதும் அடுத்த எமது ஆன்மாக்களின் பிறப்பு நிகழ்கின்றது. இதுவரை இவ்வுலகில் வாழ்ந்த அனைவரினதும், வாழ்ந்து கொண்டிருக்கும் 70010 கோடிப்பேரினதும் இனி இவ்வுலகம் அழியும்வரை எத்தனை எத்தனை கோடிக் கணக்கான மனிதர்கள் வாழப்போகிறார்களோ அவர்கள் அத்தனைபேரினதும் ரூஹ்களை அல்லாஹ் அதாம் (அலை) அவர்களிலிருந்து வெளிப்படுத்தி ஆலமுல் அர்வாஹ் (ரூஹ்களின் உலகம்) எனும் இடத்தில் வாழச்செய்கிறான். இதுவே எமது ரூஹ்களின் முதல் பிறப்பும், முதல் வீடுமாகும். இங்குதான் நாம் அல்லாஹ்வை ரப்பாக ஏற்றுக்கொள்வதென சான்று பகர்ந்துள்ளோம்.

“உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கிஇ அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து "நான் உங்களுடைய இறைவன் அல்லவா?" என்று கேட்டதற்குஇ அவர்கள் "ஆம். நாங்கள் சாட்சி கூறுகிறோம்" என்று கூறியதை (அவர்களுக்கு) நினைவூட்டுவீராக.” (7:172)

ஆலமுல் அர்வாஹில் ரூஹ்கள் இருந்த விதம் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
 “ரூஹ்கள் கூட்டம் கூட்டமாக இருந்தன. அங்கு சேர்ந்திருந்தவை இங்கும் சேர்ந்திருக்கும். அங்கு பிரிந்திருந்தவை இங்கும் விலகி இருக்கும்” என்றார்கள்.
 (முஸ்லிம் : 6376) 

சிலபோது நாம் இங்கு யாரையாவது பார்த்தால் இதற்கு முன்பு அவரை எங்கோ சந்தித்தது போன்ற ஞாபகம் இருக்கும். விரைவில் பேசிப் பலகி நண்பர்களாகிவிடுவோம். இன்னும் சிலரோடு இலகுவில் சேர மாட்டோம். இதற்குக் காரணம் நாம் ஆலமுல் அர்வாஹில் ஒன்றிணைந்தும் தூர விலகியும் இருந்ததுதான்.

இரண்டாவது கட்டம்...

 ஆலமுல் அர்வாஹில் இருந்த எமது ரூஹை அல்லாஹ் இரண்டாவது கட்டமாக தாயின் கருவறைக்கு நகர்த்துகின்றான். ஒரு தாயின் வயிற்றில் கரு வளர்ச்சியடைந்து 42 நாட்களாகும்போது வானவர் ஒருவர் ஒரு ரூஹை எடுத்துவந்து அத்தாயின் வயிற்றில் உள்ள கருவில் ஊதிவிடுகின்றார். நபியவர்கள் கூறுகின்றார்கள்.

“முளையத்தில் 42 இரவுகள் கடந்ததன் பின்னர் அதனிடம் அல்லாஹ் ஒரு வானவரை அனுப்புகின்றான். அவர் அதனை வடிவமைக்கின்றார். மேலும் காதுகள், கண்கள், தோல், தசைகள், என்புகள் ஆகியவற்றையும் உருவமைக்கின்றார். பின்பு என் இரட்சகனே! இது ஆணா அல்லது பெண்ணா? என்று வினவுகின்றார். பின் உங்கள் இரட்சகன், தான் விரும்பியதைத் தீர்மானிக்கின்றான். வானவர் அதனைப் பதிவு செய்கின்றார்.” (முஸ்லிம்)

மூன்றாவது கட்டம்...

 தாயின் கருவறையில் இருந்த நாம் இவ்வுலகை வந்தடைகின்றோம். மனிதன் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றோம். எமது ரூஹோடு சேர்த்து உடல் மற்றும் உயிர் என்ற இரண்டு பகுதிகள் வழங்கப்படுகின்றன. உடலும் உயிரும் இவ்வுலகில் ரூஹ் தங்குவதற்கான ஏற்பாடுகளாகும். அவை நிரந்தரமானவை அல்ல. அழியக் கூடியவை. ஆனால் ரூஹிற்கு அழிவே கிடையாது.

இதுவரை ஒரே பாதையில் (ழுநெ றுயல) பயணித்து வந்த நாம் மூன்றாவது கட்டமாகிய இவ்வுலகை அடைந்ததும் இங்கிருந்து இரண்டு பாதைகள் பிரிகின்றன. இவ்வுலகம் ஒரு முற்சந்தி. ஒரு பாதை சுவனத்திற்கு அழைத்துச் செல்கின்றது. மற்றைய பாதை நரகிற்கு இழுத்துச் செலகின்றது. இதுபற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்.

وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ     “நாம் அவனுக்கு இரண்டு பாதைகளைக் காண்பித்துள்ளோம்” (90:10)

இவ் இரண்டு பாதைகளில் எதனையும் தெரிவு செய்வதற்கான சுதந்திரத்தை அல்லாஹ் எமது ரூஹ்களுக்கு வழங்கியுள்ளான். அதேபோன்று இவ்விரண்டு பாதைகளைப் பற்றிய அறிவையும் எமக்குத் தந்துள்ளான். ஆக இவ்வுலகில் தெரிவு, அறிவு என்ற இரண்டையும் நாம் அடுத்த பாதையைத் தெரிவுசெய்வதற்காகப் பயன்படுத்த வேண்டும். அல்லாஹ்வின் படைப்புகள் அனைத்திற்கும் இருப்பது ஐயறிவு. மனிதனுக்கு மட்டும் மேலதிகமாக அதிலும் விசேடமாக ஆறாவது ஒரு அறிவை வழங்கியிருப்பதன் நோக்கம் இப்பாதையைத் தெரிவுசெய்வதற்கே! ஆறாவது அறிவுக்கு பகுத்தறிவு என்று பெயர். சுவனத்தின் பதையையும் நரகத்தின் பாதையையும் பகுத்து அறியும் அறிவே பகுத்தறிவு என்பதுதான் பகுத்தறிவுக்கு வழங்கப்படவேண்டிய சரியான வரைவிலக்கணம் என்று கருதுகின்றேன்.

நான்காம் கட்டம்...

மூன்றாம் கட்டத்தில் வாழும் எமது ரூஹை மலகுல் மௌத் எனும் வானவர் நான்காம் கட்டமாகிய ஆலமும் பர்ஸக் எனும் இடத்திற்கு கொண்டவந்து சேர்க்கின்றார். இப்பிரபஞ்சம் அழிந்து மஹ்ஷர் வெளியை உருவாக்கும் வரை எமது ரூஹ்கள் இங்குதான் வாழப்போகின்றன. இதுவரை மரணித்த அனைவரினது ரூஹ்களும் இங்குதான் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.

ஐந்தாவது கட்டம்:....

 பிரபஞ்சம் அழிந்து மஹ்ஷர் வெளி உருவான பின்னர் எமது ரூஹ்கள் மீண்டும் அங்கு வரவழைக்கப்படுகின்றன. அதுவும் அங்கு அந்த ரூஹ்களுக்கு புதிய இவ்வுலகில் இருந்ததை ஒத்த அதே உடல் போர்த்தப்படுகின்றது. அல்லாஹ் கூறுகின்றான்: “ஆன்மாக்கள் (அவற்றின் உடல்களோடு)ஒன்று சேர்க்கப்பட்டிருக்கும்போது.” (அத்தக்வீர்:07) தற்போது எமது கைவிரல் ரேகைகள் எவ்வாறு இருக்கின்றனவோ அதே வடிவில் எந்த மாற்றமுமின்றிய உடல்களுடன் எமது ரூஹ்களையும் சேர்த்துவிடுவான். (75:4)

ஆறாவது கட்டம்:....

 மஹ்ஷரிலே ஒவ்வொரு ரூஹிற்குமான விசாரணைகள் தனித்தனியே நடைபெற்று அவை சம்பாதித்துக்கொண்டவற்றுக்கு ஏற்ப ஆறாவது கட்டமாகிய சுவனத்திற்கோ அல்லது நரகிற்கோ அவை அனுப்பப்படுகின்றன. இதுதான் இறுதிக்கட்டம். இனி இங்குதான் ரூஹ்கள் நீடூளி காலம் வாழப்போகின்றன. இனி இறப்போ, பிறப்போ இல்லை. சுனத்தில் நுழைந்த ரூஹ்கள் இன்பத்தை அனுபவிக்கும். நரகில் நுழைந்த ரூஹ்கள் கடுமையான வேதனையை அனுபித்துக்கொண்டே இருக்கும்

செவ்வாய், ஜூலை 21, 2020

பிறை பார்த்ததும் ஓத வேண்டிய துஆ,

شَهْرُ‌ رَ‌مَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْ‌آنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَىٰ وَالْفُرْ‌قَانِ ۚ فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ‌ فَلْيَصُمْهُ ۖ وَمَن كَانَ مَرِ‌يضًا أَوْ عَلَىٰ سَفَرٍ‌ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ‌ ۗ يُرِ‌يدُ اللَّـهُ بِكُمُ الْيُسْرَ‌ وَلَا يُرِ‌يدُ بِكُمُ الْعُسْرَ‌ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُ‌وا اللَّـهَ عَلَىٰ مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُ‌ونَ

ரமழான் மாதம் எத்தகைய தென்றால் அதில் தான் மனிதர்களுக்கு முழுமையான வழி காட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, எவர் உங்களில் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் நோன்பு நோற்கட்டும். எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்தில் இருக்கிறாரோ அவர் மற்ற நாட்களில் நோற்கட்டும்;. உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காகக் குறிப்பிட்ட எண்ணிக்கையைப் பூர்த்தி செய்து, அல்லாஹ்வைப் பெருமைப்படுத்துவதற்காக அல்லாஹ் இலகுவை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. (அல்குர்ஆன் 2:185)

   பிறை பார்த்து நோன்பு வையுங்கள்பிறை பார்த்து நோன்பை முடித்துக்கொள்ளுங்கள் (ஹதீஸ்)

اللهم أهله علينا بالأمن و الإيمان و السلامة و الإسلام ربي و ربك الله هلال رشد و خير

                                        

பிறையைக் க‌ண்ட‌தும் ஓதும் தூஆ

அல்லாஹும்ம‌ அஹில்ல‌ஹூ அலைனா பில் ம்னி வ‌ல் ஈமான் வ‌ஸ்ஸ‌லாம‌த்தி வ‌ல் இஸ்லாம் ரப்பி  வ ரப்புக்கல்லாஹ் ஹிலாலு ருஸ்தின் வ ஹைர்.

அல்லாஹ்! இந்த‌ பிறையை அபிவிருத்து உள்ள‌தாக‌வும்ஈமானையும் இஸ்லாமையும் சாந்தியையும் கொண்டு த‌ர‌க் கூடிய‌தாக‌வும் வெளியாக்கி வை! (பிறையே!) என‌து ர‌ப்பும்உன‌து ர‌ப்பும்அல்லாஹ் தான்! நேர்வழிக்கும் நல்லதற்க்கும் வழிவகுக்கும் பிறையாக ஆக்கிவைப்பாயாக. ஆமீன் 

வெள்ளி, ஜூலை 17, 2020

வீடு ஒத்தி (போக்கியம், லீஸ்) விடுவது கூடுமா?

 ஒத்தி (போக்கியம், லீஸ்)

வீட்டை ஒத்திக்கு கொடுப்பவருக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் தண்டனையும்,*

*அதை வாங்குபவருக்கு கிடைக்கும் பத்து வகை தண்டனைகளும்*🔖


✅ *சரிபார்த்தவர்:* *ஹஜ்ரத் ஹபீப் முஹம்மது தாவூதி, நத்வி*

🖋️தொகுத்தவர்:முஃப்தி சைபுதீன் ஹஸனி (மேலப்பாளையம்)

🌿 *======*☘ *======*🍀 *======* 🌱

கட்டுரையின் தலைப்பு பலருக்கு அதிர்ச்சியையும்,மன கஷ்டத்தையும் ஏற்படுத்தலாம். ஆனால் இஸ்லாமிய கண்ணோட்டத்துடன் ஒத்தியை பார்த்தால் தான். எதனால் ஒத்திக்கு பத்து வகையான தண்டனைகளை அல்லாஹ் கொடுக்கிறான் ? என்பதை விளங்க முடியும்.

எனவே அந்த பத்து தண்டனைகளையும் பட்டியலிடுவதற்கு முன் இஸ்லாத்தில் ஒத்தியின் சட்டம் என்ன ? என்பதை சுருக்கமாக தெறிந்துக் கொள்வோம்.

🔮 *இஸ்லாத்தில் ஒத்தியின் சட்டம் என்ன ?*

வீடு ஒத்திக்கு கொடுப்பதும், வாங்குவதும் வட்டியுடைய வகையாகும்.

🔮 *ஒத்தி எவ்வாறு வட்டியாகும் ?*

வீட்டின் உரிமையாளர் தன்னுடைய வீட்டை யாருக்கு ஒத்திக்கு கொடுக்கிறாரோ. அவரிடமிருந்து பெரிய தொகையை பெற்றுக்கொள்வார். ஒத்தி காலம் முடிந்த பின்பு அந்த தொகையை திரும்ப கொடுத்துவிடுவார். வீட்டின் உரிமையாளர் வாங்கிய இந்தத் தொகையை கடன் தொகையாக இஸ்லாம் பார்க்கிறது. ஏனென்றால் இவர் வாங்கிய தொகையை திரும்ப கொடுத்து விடுகிறார்.

வீட்டை ஒத்திக்கு வாங்கியவரோ; தான் கடனாக கொடுத்த பெரிய தொகைக்காக அந்த வீட்டில் குறிப்பிட்ட காலம் வரை எந்த வாடகையும் இல்லாமல் தங்கிக்கொள்கிறார்.

இதுவும் வட்டி தான். ஏனென்றால் ஒருவருக்கு கடனாக பணம் கொடுத்துவிட்டு அவரிடமிருந்து கூடுதல் பணம் பெறுவது மட்டும் தான் வட்டி என்று பலர் கருதிக் கொள்கிறார்கள். ஆனால் அது மட்டும் வட்டி கிடையாது. மாறாக கடன் கொடுத்தவர் கடனாளியிடமிருந்து எந்த வகையில் பிரயோஜனம் அடைந்துக்கொண்டாலும் அந்தப் பிரயோஜனமும் வட்டிதான் என்று இஸ்லாம் தெளிவாகக் கூறிவிட்டது.

இந்த அடிப்படையில் ஒத்திக்கு வீடு வாங்கியவர் வீட்டின் உரிமையாளருக்கு கடனாக கொடுத்த பெரிய தொகையின் காரணமாக அவர் வீட்டை குறிப்பிட்ட காலம் வரை இலவசமாக பயண்படுத்தும் பிரயோஜனத்தை அடைந்து கொள்கிறார். இந்த பிரயோஜனமும் வட்டியின் வகை தான்.

🔮 *சிலர் கையாளும் குறுக்கு வழி முறை:*

ஒத்தி வீட்டில் இலவசமாக தங்கினால் தானே வட்டியாகும். எனவே வாடகை என்ற பெயரில் அந்த வீட்டுக்கு தகுதி இல்லாத ஒரு குறைந்த தொகையை கொடுத்துவிட்டு. நாங்கள் தங்குவதற்கு வாடகை கொடுக்கிறோம். எனவே ஒத்தி வீட்டில் தங்குவது வட்டியாகாது என்பதாக சிலர் குறுக்கு வழி முறை ஒன்றை கையாளுகிறார்கள்.

ஆனால் உண்மையில் இது தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதாகும். இவர்கள் இப்போதும் வட்டியிலிருந்து தப்பிக்கவில்லை; ஏனென்றால் வீட்டின் உரிமையாளர் தன் வீட்டிற்கு தகுதி இல்லாத மிக குறைந்த வாடகை ஏற்றுக்கொள்ள காரணமே அவர் ஒத்திக்காக வாங்கிய (கடன்) தொகையினால் தான்.

அந்தத் தொகையை அவர் வாங்காமல் இருந்தால் தன்னுடைய வீட்டிற்கு தகுதியில்லாத குறைந்த வாடகையை அறவே ஏற்றுக்கொள்ள மாட்டார். என்பது தெளிவான விஷயமாகும்.

எனவே எந்தக் கோணத்தில் பார்த்தாலும் ஒத்திக்கு தங்குபவர். தான் கடனாக கொடுத்த பெரிய தொகையின் மூலம் வீட்டின் உரிமையாளரிடம் இருந்து பிரயோஜனம் அடையவே செய்கிறார். அந்தப் பிரயோஜனம் வீட்டில் இலவசமாக தங்குவதின் மூலமாகவோ அல்லது வாடகை தொகையை மிக அதிகமாக குறைத்துக் கொள்வதின் மூலமாகவோ அடைந்து கொள்கிறார்.

எனவே இந்த குறுக்கு வழி முறையும் வட்டியில் வீழுவதை விட்டும் பாதுகாக்காது.

ஆக ஒத்தியின் மூலமாக வீட்டின் உரிமையாளர். ( தங்கும் பிரயோஜனத்தை) வட்டி(யாக) கொடுப்பவராகவும், ஒத்தி வீட்டில் தங்குபவர் (அந்த பிரயோஜனத்தை அடைவதின் மூலம்) வட்டியை வசூலிப்பவராகவும் ஆகிவிடுகிறார்கள்.

*எனவே வீட்டை ஒத்திக்கு கொடுப்பதும், வாங்குவதும் இரண்டுமே ஹராமாகும்.*

இது சம்பந்தமாக அடியேன் எழுதிய அரபி ஃபத்வா ஒன்று கீழ்வரும் லிங்கின் மூலம் டெலிகிராமில் பெற்றுக்கொள்ள முடியும்.
(ஃபத்வா எண்: 44): 
https://t.me/c/1435149686/51


🔖 *ஒத்தியின் மூலமாக வட்டியின் படுகுழியில் வீழுந்த வீட்டின் உரிமையாளருக்கும், அதில் ஒத்திகையாக தங்குபவருக்கும் அல்லாஹ் கொடுக்கும் தண்டனைகளை இங்கு குர்ஆன் மற்றும் ஹதீஸுடைய ஆதாரத்துடன் பட்டியலிடப்படுகிறது.*🔖

1️⃣ *நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சாபத்திற்கு இரையாகுவார்கள்.* 
📘 (ஆதாரம்: சுனனு அபீ தாவூது: ஹதீஸ் எண்: 3333 )
الحديث: ﻟﻌﻦ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ -ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺁﻛﻞ اﻟﺮﺑﺎ ﻭﻣﻮﻛﻠﻪ ﻭﺷﺎﻫﺪﻩ ﻭﻛﺎﺗﺒﻪ

ஒத்திக்கு வீடு கொடுப்பவருக்கும், வாங்குபவருக்கும் மட்டும் இந்த சாபம் கிடையாது மாறாக *ஒத்தி பத்திரத்தை தயார் செய்பவருக்கும், அதற்கு சாட்சியாக கையெழுத்திடுபவர்களும் நபியுடைய சாபத்தில் அடங்குவார்கள் என்று இந்த ஹதீஸின் மூலம் தெரிகிறது.

ஒருவரின் இம்மை, மறுமை வாழ்வு நாசமாகுவதற்கு நபி (ஸல்) அவர்களின் சாபமே போதுமானது. என்பதை யாராலும் மறுக்க முடியாது.

*குறிப்பு:‌* இங்கே சுட்டிக் காட்டப்பட்டுள்ள குர்ஆன் வசனத்திலும், பின்னால் வரவிருக்கின்ற வசனங்களிலும், ஹதீஸ்களிலும் "வட்டியை சாப்பிடுபவர்" (آكل الربا) என்ற வார்த்தைதான் அரபியில் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் அந்த வார்த்தையின் கருத்து: எந்த வகையில் வட்டியை அனுபவித்தாலும் இந்த தண்டனைகள் அவர்களுக்கு பொருந்தும் என்று குர்ஆனுடைய விரிவுரையாளர்களும், ஹதீஸுடைய விரிவுரையாளர்களும் இந்த வார்த்தைக்கு விளக்கம் அளித்துள்ளார்கள்.

இனி சொல்லப்படும் ஒன்பது தண்டனைகளும் ஒத்தி வீட்டில் தங்குபவருக்கு மட்டுமாகும்

2️⃣ *இந்த பாவத்தினால் அவர் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களையும் எதிர்க்கத் துணிந்து விட்டதாக கருதப்படுவார்*
📘 (ஆதாரம்: சூரத்துல் பகரா: வசனம்: 279)
الآية: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ ◇ فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ

3️⃣ *அவருடைய வாழ்க்கையில் அழிவு ஏற்படுவதற்கு இந்த பாவமே காரணமாக அமைந்துவிடும்.*
📘(ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி: ஹதீஸ் எண்: 2766)
الحديث: اﺟﺘﻨﺒﻮا اﻟﺴﺒﻊ الموبقات - وقال فيها - : ﻭﺃﻛﻞ اﻟﺮﺑﺎ

*இமாம் இப்னு தகீக் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் கூறுகிறார்கள்:* இந்த பாவத்தினால் கெட்ட மரணம் ஏற்படுவதை அனுபவ ரீதியாக அறியப்பட்டுள்ளது. 
(நூல்: ஃபைழுல் கதீர்: பாகம்: 1 பக்கம்: 153)

4️⃣ *இந்த பாவம் மக்களுக்கு மத்தியில் பரவலாகிவிட்டால் அல்லாஹுத்தஆலா அவர்களின் மீது வரட்சியை சாட்டி விடுவான்.*
📘 (ஆதாரம்: முஸ்னத் அஹ்மது: ஹதீஸ் எண்: 17822)
الحديث: ﻣﺎ ﻣﻦ ﻗﻮﻡ ﻳﻈﻬﺮ ﻓﻴﻬﻢ اﻟﺮﺑﺎ، ﺇﻻ ﺃﺧﺬﻭا ﺑﺎﻟﺴﻨﺔ

5️⃣ *அவர் கியாமத் நாளில் இரத்த வெள்ளத்தில் மிதப்பார். அதிலிருந்து அவர் தப்பிக்க முயற்சி செய்யும் போதெல்லாம் அவர் வாயை நோக்கி ஒரு கல் வீசப்படும். இதனால் அந்த இரத்த ஆற்றிலிருந்து அவரால் வெளி வரவே முடியாது.*
📘 (ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி ஹதீஸ் எண்: 2085)
الحديث: ﺭﺃﻳﺖ اﻟﻠﻴﻠﺔ ﺭﺟﻠﻴﻦ ﺃﺗﻴﺎﻧﻲ، ﻓﺄﺧﺮﺟﺎﻧﻲ ﺇﻟﻰ ﺃﺭﺽ ﻣﻘﺪﺳﺔ، ﻓﺎﻧﻄﻠﻘﻨﺎ ﺣﺘﻰ ﺃﺗﻴﻨﺎ ﻋﻠﻰ ﻧﻬﺮ ﻣﻦ ﺩﻡ ﻓﻴﻪ ﺭﺟﻞ ﻗﺎﺋﻢ ﻭﻋﻠﻰ ﻭﺳﻂ اﻟﻨﻬﺮ ﺭﺟﻞ ﺑﻴﻦ ﻳﺪﻳﻪ ﺣﺠﺎﺭﺓ، ﻓﺄﻗﺒﻞ اﻟﺮﺟﻞ اﻟﺬﻱ ﻓﻲ اﻟﻨﻬﺮ، ﻓﺈﺫا ﺃﺭاﺩ اﻟﺮﺟﻞ ﺃﻥ ﻳﺨﺮﺝ ﺭﻣﻰ اﻟﺮﺟﻞ ﺑﺤﺠﺮ ﻓﻲ ﻓﻴﻪ، ﻓﺮﺩﻩ ﺣﻴﺚ ﻛﺎﻥ، ﻓﺠﻌﻞ ﻛﻠﻤﺎ ﺟﺎء ﻟﻴﺨﺮﺝ ﺭﻣﻰ ﻓﻲ ﻓﻴﻪ ﺑﺤﺠﺮ، ﻓﻴﺮﺟﻊ ﻛﻤﺎ ﻛﺎﻥ، ﻓﻘﻠﺖ ﻣﺎ ﻫﺬا؟ ﻓﻘﺎﻝ: اﻟﺬﻱ ﺭﺃﻳﺘﻪ ﻓﻲ اﻟﻨﻬﺮ ﺁﻛﻞ اﻟﺮﺑﺎ

6️⃣ *அவர் கியாமத் நாளில் கப்ரிலிருந்து எழுப்பபடும்போது ஷைத்தான் (ஜின்களால்) தாக்கப்பட்டு பித்து பிடித்த மனிதனை போன்று இருப்பார்*
📘 (ஆதாரம்: சூரத்துல் பகரா: வசனம்: 275)
الآية: الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ

7️⃣ *அவருடைய வயிறு வீட்டை போன்று பெரியதாக விகாரமான தோற்றத்தில் இருக்கும்.*
📘 (ஆதாரம்: சுனனு இப்னு மாஜா: ஹதீஸ் எண்: 2273)
الحديث: ﺃﺗﻴﺖ ﻟﻴﻠﺔ ﺃﺳﺮﻱ ﺑﻲ ﻋﻠﻰ ﻗﻮﻡ ﺑﻄﻮﻧﻬﻢ ﻛﺎﻟﺒﻴﻮﺕ، ﻓﻴﻬﺎ اﻟﺤﻴﺎﺕ ﺗﺮﻯ ﻣﻦ ﺧﺎﺭﺝ ﺑﻄﻮﻧﻬﻢ، ﻓﻘﻠﺖ: ﻣﻦ ﻫﺆﻻء ﻳﺎ ﺟﺒﺮاﺋﻴﻞ؟ ﻗﺎﻝ: ﻫﺆﻻء ﺃﻛﻠﺔ اﻟﺮﺑﺎ

8️⃣ *அவர் வயிற்றில் பாம்புகள் நிரப்பப்படும்.*
📘 (ஆதாரம்: சுனனு இப்னு மாஜா: ஹதீஸ் எண்: 2273)
الحديث السابق نفسه

9️⃣ *அவரை இழிவுபடுத்துவதற்காக அந்தப் பாம்புகளை வெளியிலிருந்து பார்க்க கூடிய வகையில் அமைக்கப்படும்.*
📘 (ஆதாரம்: சுனனு இப்னு மாஜா: ஹதீஸ் எண்: 2273)
الحديث السابق نفسه

1️⃣0️⃣ *அவர் மீது அல்லாஹ்வுடைய தண்டனை இறங்கும்.*
📘 (ஆதாரம்: ஸஹீஹ் இப்னு ஹிப்பான் : ஹதீஸ் எண்: 4410)
الحديث: ﻣﺎ ﻇﻬﺮ ﻓﻲ ﻗﻮﻡ اﻟﺰﻧﻰ ﻭاﻟﺮﺑﺎ ﺇﻻ ﺃﺣﻠﻮا ﺑﺄﻧﻔﺴﻬﻢ ﻋﻘﺎﺏ اﻟﻠﻪ ﺟﻼ ﻭﻋﻼ

எனவே நாம் ஒத்தி விஷயத்தில் அறவே தலையிடாமல் இருக்க வேண்டும். வீடு ஒத்திக்கு கொடுப்பது, வாங்குவது, பத்திரம் தயாரிப்பது, சாட்சி கையெழுத்திடுவது போன்ற எந்த வகையிலும் நாம் ஒத்தியுடன் சம்பந்தப்பட்டுவிடக்கூடாது.

இங்கு சொல்லப்பட்ட அனைத்து விஷயங்களும் வீடு ஒத்திக்கு மட்டும் கிடையாது. மாறாக எந்த பொருளை ஒத்திக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டாலும் இங்கு சொல்லப்பட்ட அனைத்து தண்டனைகளும் பொருந்தும்.

ஒத்தி என்ற கொடூர பாவத்திலிருந்து நம் அனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக... ஆமீன்

✨✨✨✨✨✨

வெள்ளி, ஜூலை 10, 2020

இஸ்லாம் என்றால் என்ன,

*இஸ்லாம் என்றால் என்ன? என்பது பலருக்கும் இன்னும் சரியாகப் புரியவில்லை...*
ஆண்களுக்கு தொப்பியும் தாடியும், பெண்களுக்கு புர்காவும் மாத்திரம் அல்ல முஸ்லிமின் முன்மாதிரிகள்...

▪களவெடுக்கக் கூடாது.
▪பொய் சொல்லக் கூடாது.
▪லஞ்சம், ஊழல் கூடாது.
▪கடத்தல் கூடாது.
▪வட்டி கூடாது.
▪பதுக்கல் வியாபாரம் கூடாது.
▪பிற மதத்தை நிந்தனை செய்யக் கூடாது.
▪நம்பிக்கைத் துரோகம் கூடாது.
▪பிறரை ஏமாற்றக் கூடாது.
▪பிறர் குறை பேசக் கூடாது.
▪பிறரைக் கேலி, கிண்டல் செய்யக் கூடாது.
▪பிறர் சொத்தை அபகரிக்கக் கூடாது.
▪அனாதைகளை விரட்டக் கூடாது.
▪ஒப்பந்தத்துக்கு மாறு செய்யக் கூடாது.
▪பிறரை வம்பிழுக்கக் கூடாது.
▪எவரையும் கொல்லக் கூடாது.
▪எவரையும் தூற்றித் திரியக் கூடாது.
▪எவர் மீதும் தப்பெண்ணம் கூடாது.
▪கடும் வார்த்தைப் பிரயோகம் கூடாது.
▪எவர் மீதும் அபாண்டம் சுமத்தக் கூடாது.
▪எவரையும் துன்புறுத்தக் கூடாது.
▪பெரும் சிரிப்புக் கூடாது.
▪பெருமை கூடாது.
▪பேராசை கூடாது.
▪ஆடம்பரம் கூடாது.
▪ஆணவம், அகம்பாவம் கூடாது.
▪ஆட்டம் போடக் கூடாது.
▪எவரையும் அடிமைப்படுத்தக் கூடாது.
▪பிறர் விடயம் நுழையக் கூடாது.
▪அனுமதியின்றி பிறர் வீடு புகக் கூடாது.
▪எவரையும் கடிந்து கொள்ளக் கூடாது.
▪எவர் மீதும் எரிந்துவிழக் கூடாது.
▪பூமியில் செருக்காக நடக்கக் கூடாது.
▪கோபம் கூடாது.
▪பொறுமை இழக்கக் கூடாது.
▪கஞ்சத்தனம் கூடாது.
▪எவரையும் அலைக்கழிக்கக் கூடாது.
▪அபயமளிக்க மறுக்கக் கூடாது.
▪பிறர் மனம் புண்படக்கூடாது.
▪ஒழுக்கம் தவறக் கூடாது.
▪அசுத்தமாக இருக்கக் கூடாது.
▪உறவுகளை துண்டிக்கக் கூடாது.
▪வீண் குழப்பங்களை உண்டு பண்ணக் கூடாது.
▪போதைப்பொருள் பாவனை, விற்பனை கூடாது.
▪இஸ்லாம் கூறும் இவ்வடிப்படையான விடயங்களைப் புறந்தள்ளிவிட்டு வெறுமனே வெளித் தோற்றங்களுக்கு மாத்திரம் முக்கியத்துவமளிப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.

ரசூலுல்லாஹ்வின் அழைப்புப் பணியில் முதன்மையானது அன்னாரது நற்பண்புகளே!
அதைப் பார்த்த பிறகு தான் மக்கள் அலை,அலையாக இஸ்லாத்தை ஏற்றனர். அதுவே இஸ்லாமிய மார்க்கம் உலகம் முழுவதும் பரவிய காரணமாக அமைந்தது. அதன்பின்னரே ஏனைய அணிகலன்கள்.

எனவே பிறருக்கு முன்மாதிரியான ஒரு நல்ல முஸ்லிமாக மற்றும் சிறந்த மனிதனாக வாழ, அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் வழி காட்டுவானாக!

ஆமீன்! யா ரப்பல் ஆலமீன்!!!

செவ்வாய், ஜூலை 07, 2020

சில நோய்களுக்குசில அடையாளங்கள்

உடலில் நோய் வரப்போகிறது என்பதனை அறிந்துக்கொள்ள உதவும் அறிகுறிகள்.
 
● கைவிரல் நகங்களுக்கு மேல் மெல்லிய கருப்புக்கோடு விழுமானால் இருதயத்தில் பிரச்சினை தொடங்குகிறது என அர்த்தம். 

● தோள்பட்டை, முதுகு, குதிக்கால் இவற்றில் இறுக்கமோ, வலியோ வந்தால் உடலில் காற்றின் அழுத்தம் கூடி வாயு  தேங்கியுள்ளது என அர்த்தம். 
 
● முகத்தில் அரிப்போ நமைச்சலோ இருந்தால் கூந்தல் சுத்தமில்லை என்று அர்த்தம்.
 
● வயிற்றுவலியோ, பேதி போன்றவை ஏற்பட்டால் கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்.
 
● கண்களோ, மூக்கோ தொடர்ந்து அரிக்குமானல், ஜலதோஷம் வரப்போகிறது என அர்த்தம்.
 
● காதில் அதீத குடைச்சலோ, வலியோ வந்தால் காய்ச்சல் வர போகிறது என அர்த்தம்.
 
● உதட்டில் அல்லது மேல்தோலில் வெடிப்பு, பிளவு, தோல், தோல் உரிதல் உண்டாகுமானால் உடலில் நீர்ச்சத்தும்,  எண்ணெய்ப்பசையும் குறைந்துவிட்டது என அர்த்தம்.
 
● தொடர்ந்து முதுகுத்தண்டு அல்லது இடுப்பு பகுதி வலிக்குமானால் அந்த இரு எலும்புகளும் மிருதுவாகி தேய்மானம்  தொடங்குகிறது என அர்த்தம்.
 
● கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால் உடலில் அதிக அழுத்தமும், சூடும் இருக்கிறது என அர்த்தம்.
 
● உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி எடுக்கிறதென்றால் அது நீரழிவின் ஆரம்பம் என அர்த்தம்... 

பிரபல்யமான பதிவுகள்