நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

ஞாயிறு, ஆகஸ்ட் 30, 2020

காஷ்மீர் காணாமலாக்கப்பட்டவர்களின் தினம் ஆகஸ்ட் 30, 31

காஷ்மீர் காணாமலாக்கப்பட்டவர்களின் தினம் ஆகஸ்ட் 30, 31

காஷ்மீர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினம், பாதி விதவைகள்

உலகில் திட்டமிட்டு காணாமாலக்கப் பட்ட நபர்களுக்காக ஒரு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது என்றால் அது காஷ்மீர் மக்களுக்காக மட்டும் தான். தன் நாட்டு குடிமக்கள் ஆயிரக்கணக்கில் காணாமற் செய்யப்பட்டார்கள் என்று இந்த அரசாங்கத்திடம் அழுவதா! அல்லது எங்கள் பிள்ளைகளை, கணவர்களை கடத்தி வைத்திருக்கிறீர்களே உங்களுக்கு மனசாட்சி இல்லையா என இந்திய அரசை நோக்கி கேள்வி எழுப்புவதா! என்று அத்தனையும் முயற்சித்து தோற்று ஒவ்வொரு வருடமும் காஷ்மீரில் தங்கள் வலியை ஆகத்து மாதம் 30ம் தேதி பாதிக்கப்பட்டவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இதுவரை 10,000க்கும் மேற்பட்ட நபர்கள் இவ்வாறு காணாமற் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். உன் மகனை, உன் கணவரை இராணுவத்தினர் அழைத்து சென்றார்கள் என்று கூறுவதை மட்டும் தான் அந்த தாய்மார்களால் கேட்க முடிந்தது. அதன் பிறகு அவர்கள் என்ன ஆனார்கள் என்ற எந்த தகவலும் அவர்களுக்கு தெரியாது.

1990ல் காஷ்மீரை சேர்ந்த பர்வீனாவின் மகன் யாசீரை இராணுவத்தினர் அழைத்து சென்றார்கள். தன் 16 வயது மகன் தவறாக அழைத்து செல்லப்பட்டிருப்பான் மீட்டுவிடலாம் என்று கருதிய பர்வீனா ஒவ்வொரு காவல்நிலையங்களாக அழைந்தார். இராணுவ சித்ரவதை முகாம்களுக்காக சென்றார். ஆனால், சென்ற இடத்தில் பதில் அனைத்தும், உன் மகன் திரும்ப வந்து விடுவான் நீ செல் என்பதாகவே இருந்தது.

அதன் பிறகு தான் பர்வீனாவுக்கு தெரிய வந்தது. இது காஷ்மீருக்கு புதிதல்ல. தன் துணைக்கு இதுபோல் பிள்ளைகளை இழந்த, கணவர்களை இழந்த காஷ்மீர் பெண்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள் என தெரிந்து கொண்டார். அதன் பிறகே அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி “ காணாமல் போனோர்கான பெற்றோர்களின் சங்கம்(APDP) ஒன்றை உருவாக்கினார்.

இவர்கள் ஒவ்வொரு மாதமும் 10ம் தேதி கூடி தங்கள் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்வார்கள். ஆகத்து மாதம் 30ம் தேதி மொத்தமாக ஒன்று கூடி அரசாங்கத்திடம் முறையீட்டும் மக்களுக்கு முன் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பற்றியும் எடுத்துரைப்பார்கள்.

காஷ்மீர் முழுச்சிறைச்சாலை

APDP அமைப்பின் தலைவராக இருக்கக்கூடிய 66  வயதான பர்வீனா கடந்த வருடம் (2019) Gaurdian பத்திரிக்கைக்கு பேட்டியளிக்கும் போது, 1990ல் எனது மகன் கொண்டு செல்லப்பட்ட போது எப்படி ஒரு நிலை காஷ்மீரில் நிலவியதோ அதே போலொரு நிலை தான் இன்று இருக்கிறது.

இந்திய அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. காஷ்மீர் தினம் தினம் அடக்குமுறைகளுக்குள் தான் இருக்கிறது. எங்களுக்கு ஒரு நீதியும் கிடைத்ததில்லை.

1997 முதல் இன்று வரை ஆயிரக்கணக்கில் இராணுவத்தினரால் அழைத்து செல்லப்பட்ட பிள்ளைகளும், கணவர்களும் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை!.. அவர்கள் எங்கே?.. அவர்கள் இறந்து விட்டார்கள் என்றால் அவர்களது உடல்களையாவது எங்களிடம் கொடுத்து விடுங்கள் என்று தான் கேட்கிறோம். அவர்களுக்கு என்ன ஆனது என்று கூட எங்களுக்கு தெரியவில்லை.
எங்கள் அமைப்பில் இருக்கும் பலர் ஏழ்மையானவர்கள். இந்தியா எங்களை முழுமையாக சிறைப்படுத்தி வைத்திருக்கிறது. யாருக்கு என்ன உதவி வேண்டும்?.. ஒருவர் இறந்து விட்டால் கூட மற்றவர்களுக்கு தெரியாத அளவில் நாங்கள் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறோம்.

நான் இந்த அமைப்பின் தலைவர் எல்லாம் கிடையாது. நான் பாதிப்பட்டவள். நாங்கள் புரட்சிக்காக அமைப்பை உருவாக்கவில்லை. எங்கள் வலிகளையும், துயரங்களையும் வெளிப்படுத்துக்கிறோம். (Guardian 12.09.2019)

காஷ்மீரின் பாதி விதவைகள்

பாதி விதவைகள்(HALF WIDOWS) உலகில் எங்குமே அறியப்படாத வார்த்தை காஷ்மீரில் இருக்கும் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு சொந்தமானது.  ஒரு பெண்ணின் கணவர் இறந்து விட்டால் அவரை விதவை என்று கூறலாம். ஆனால், தன் கணவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்று தெரியாத காஷ்மீர் பெண்களை தான் பாதி விதவைகள் என்று அழைக்கிறார்கள்.

பாதி விதவைகளில் ஒருவரான ஆசியா சொல்கிறார், “ என் கணவர் வீட்டில் சிகரெட் குடித்து கொண்டிருக்கும் போது இழுத்து சென்றார்கள். பாதி எரிந்து கிடந்த சிகரெட் போல் என் வாழ்க்கை மாறும் என்று நான் நினைக்கவில்லை. என் கணவர் காணாமற் போய் 20 வருடங்கள் கடந்து விட்டது. இன்றும் ஒவ்வொரு முறை வீட்டின் கதவு தட்டப்படும் போதெல்லாம் என் கணவராக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டே இருக்கிறேன்.

நான் போகாத காவல்நிலையங்கள் இல்லை. நான் போகாத இராணுவ முகாம்கள் இல்லை. நான் செய்யாத சட்ட போராட்டங்கள் இல்லை. ஆனால், அனைத்திலும் தோல்வியடைந்து நிற்கிறேன்.

இன்றும் என் கணவருக்காக அவர் விட்டு சென்ற பாதி சிகரெட்டுடனும், அவரது துணிகளுடனும் காத்திருக்கிறேன்.” (Aljazeera 27.01.2019)

காலண்டர்களில் காணாமற் போனவர்கள்

காணாமற் போனவர்களுக்கான பெற்றோர்கள் சங்கம் (APDP) சார்பாக வருட காலண்டர்கள் அச்சிடப்பட்டது. அந்த காலண்டர்களில் 12 மாதத்திற்கு ஒருவர் என காணாமற் போனவர்களின் விவரங்களை பதிவிட்டு அரசிடம் நீதி கேட்கும் முறையில் போராட்டங்களை தொடங்கினர்.

காஷ்மீர் மக்கள் கேலண்டர்களில் கூட அவர்கள் தங்கள் துயரங்களை மட்டும் தான் தினம் தினம் பார்த்து வாழ்கிறார்கள்.

இந்த வருட கேலண்டர்களை இந்தியாவில் இருக்கும் முக்கிய பல்கலைக்கழங்களுக்கும், நீதிக்காக போராடும் சமூக ஆர்வலர்களுக்கும் அனுப்பி வைக்கிறார்கள். இது ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் இந்த வருடம் (2020) காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடக்கி வைக்கப்பட்டிருப்பதால் செயல்படுத்தப்படவில்லை.
(Aljazeera 27.01.2019)

கொத்துக்கொத்தாக பிணக்குவியல்கள்
காஷ்மீரில் கொத்துக்கொத்தாக பிணங்கள் கண்டறியப்பட்ட புதைக்குழிகள் பல கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு புதைக்குழியிலும் மூன்று முதல் 17 பிணங்கள் புதைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை எதும் அடையாளமற்ற பிணங்களாகவே இருந்தது. இதுவரை இப்படி புதைகுழிகளில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்ட பிணங்களின் எண்ணிக்கை 7000.
இந்த 7000 பிணங்களும் காஷ்மீரிகள் உடையது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அது யாருடையது என்ற கேள்விக்கு தான் விடையில்லை.

தன் தந்தை காணாமல் ஆக்கப்பட்ட பிறகு அவரை தேட தொடங்கிய ராசியா என்ற காஷ்மீரக பெண் இப்படியான நிறைய புதைகுழிகளை கண்டெடுப்பதற்கு காரணமாக அமைந்தவர். 2005ல் காஷ்மீரில் நிலநடுக்கம் உருவான காரணத்தால் அதன் மூலம் நிறைய புதைகுழிகள் வெளியே தெரிந்தன. இப்படி கண்டெடுக்கப்பட்ட பிணங்கள் அனைத்தையும் DNA சோதனை செய்து அடையாளம் காணப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருக்கிறது. இதனை செய்வதாக கூறி ஆட்சியில் அமர்ந்த காஷ்மீர் அரசியல்வாதிகளும் ஏமாற்றத்தையே காஷ்மீர் மக்களுக்கு கொடுத்தனர்.

ராசியா தன் தந்தை இதுபோல் ஒரு புதைக்குழிக்குள் தான் தனது தந்தையும் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறார். அவரின் இறுதிச்சடங்கையாவது நாங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று அந்த பிணங்களுக்கு DNA சோதனை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறார்.

2020ல் காஷ்மீர்
காஷ்மீர் மக்களின் நிலை வருடங்கள் கடக்க கடக்க இயல்பானதாக மாறுவதற்கு பதிலாக மிக மோசமான சூழலுக்குள் தான் சென்றிருக்கிறது. 2020ல் அந்த நிலை மிகவும் தீவிரமான அடக்குமுறைக்குள் காஷ்மீரை ஆழ்த்தியிருக்கிறது.

இன்று ஒட்டுமொத்த காஷ்மீரிகளும் தங்கள் வீடுகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்திய அரசை நம்பி அதன் வழி தேர்தலில் நின்று வென்ற காஷ்மீரக ஆட்சியாளர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தினந்தோறும் காஷ்மீரில் அப்பாவிகள் கொலை செய்யப்படும் செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன.

காஷ்மீர் மக்களுக்கு அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் கொடுக்கப்பட்டிருந்த அத்துனை அதிகாரமும் 2020ல் பிடுங்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் அம்மக்கள் தங்கள் உரிமைக்காக் போராடிக் கொண்டே இருக்கிறார்கள்.
தீர்வு
காஷ்மீரிகளுக்கு இதுவரை நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கான நியாயத்தை வழங்கிட வேண்டும். இந்தியாவின் ஏனைய மாநிலங்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தை காஷ்மீரகத்திற்கும் உறுதிப் படுத்த வேண்டும். காஷ்மீருக்கென்று இருக்கும் சிறப்பு அந்தஸ்து பிரிவுகள் மீண்டும் அமலாக்கப்பட வேண்டும்.

இது அனைத்தையும் மீறி நாம் காஷ்மீர் மக்களை மதித்து அவர்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து நம்மோடு இணைத்துக்கொள்ள முயல வேண்டும்.அவர்களை சிறைப்படுத்தி அவர்களின் நிலங்களை மட்டும் இந்தியாவுக்கு உரியதாக ஆக்கிக்கொள்வது தீர்வாக என்றும் அமையாது.

By..
VaigaraiVelichamonline

https://m.facebook.com/story.php?story_fbid=2368805276599376&id=100004097796380&sfnsn=wiwspwa&extid=ejY9AIf3A1pM8qyq

வியாழன், ஆகஸ்ட் 27, 2020

இரவில் செல்போன் பார்ப்பவரா உஷார்,

இரவில் செல்போன் பார்ப்பவரா உஷார் ‌

செல்போன் பார்த்து இரவு தூக்கத்தை வீணடிக்காதே

இரவு தூக்கம் என்பது இறைவனுடைய ரஹ்மத்

உறக்கம் என்பது ஒவ்வொரு மனிதர்களுக்கும் மிகவும் இன்றியமையாதது. 

உறக்கம் இளைப்பாறுதலை தருவதாக அல்லாஹ் கூறுகின்றான்


وَّجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا ۙ‏


மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக  (அதாவது சோர்வு தணித்து, விடாய் நீங்கி, மனநிறைவு தருவதாக)  ஆக்கினோம்.


(அல்குர்ஆன் : 78:9)


ஆரோக்கியத்துக்கு உணவு எப்படி முக்கியமோ, அப்படித்தான் தூக்கமும்.

நிம்மதியான தூக்கம் இல்லையென்றால், நோய் எதிர்ப்பு சக்தி, உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு முதல் இதய குறைபாடுகள் வரை அதன் விளைவுகள் அதிகம்.

இத்தகைய ஆரோக்கியத்தை , இளைப்பாறுதலை அல்லாஹ் தான் கொடுக்கின்றான்



وَهُوَ الَّذِىْ جَعَلَ لَـكُمُ الَّيْلَ لِبَاسًا وَّالنَّوْمَ سُبَاتًا وَّجَعَلَ النَّهَارَ نُشُوْرًا‏


மேலும், அவனே உங்களுக்கு இரவை ஆடையாகவும், உறக்கத்தை அமைதியாகவும் பகலை உயிர்த்தெழும் வேளையாகவும் ஆக்கினான்.


(அல்குர்ஆன் : 25:47)




எனவே தூக்கம் என்பது வாழ்வின் எந்த அளவுக்கு இன்றியமையாத தேவை என்பதை நாம் அறிவோம்

ஒரு முஸ்லிம் தூக்கத்தை அல்லாஹ் தன் அடியாருக்கு வழங்கிய அருட்கொடையாகவே கருத வேண்டும்


وَمِنْ رَّحْمَتِهٖ جَعَلَ لَـكُمُ الَّيْلَ وَالنَّهَارَ لِتَسْكُنُوْا فِيْهِ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏


(அவ்வாறின்றி) நீங்கள் இளைப்பாறுவதற்கு இரவையும் (பல இடங்களுக்குச் சென்று வாழ்க்கைக்குத் தேவையான) அவனுடைய அருளை நீங்கள் தேடிக்கொள்ளும் பொருட்டுப் பகலையும் உங்களுக்கு அவன் உற்பத்தி செய்திருப்பதற்கு 

அவனது கிருபை தான் காரணம். 

இதற்கு நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாக!


(அல்குர்ஆன் : 28:73)


இறைவன் நமக்கு அழிக்கக்கூடிய அருட்கொடைகள் ஒவ்வொன்றிர்க்கும் நாம்  நபியவர்களின் வாழ்வு முறையை பின்பற்றி நன்றி செலுத்தக்கூடியவர்களாக இருக்க வேண்டும்

அந்த அடிப்படையில் ஒரு முஸ்லிம் தான் தூங்கும் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த ஒழுக்கங்களைப் பேணி உறங்குவது இந்த அட்ருட்கொடைக்கு நன்றி செலுத்துவதாக அமையும்

செவ்வாய், ஆகஸ்ட் 25, 2020

இஸ்லாமிய கேள்விகளும் அதற்கான பதில்களும்,

இஸ்லாமிய கேள்விகளும் அதற்கான பதில்களும்


ஸஹாபாக்களில்
 இரண்டு சிறகுடையவர் என்ற சிறப்பு பெற்ற நபித்தோழர் யார்?

விடை: ஜஃபர் பின் அபீதாலிப்(ரலி)

இறைவனின் வாள் என்று அழைக்கப் பட்ட நபித்தோழர் யார்?

விடை :காலித் பின் வலீத் (ரலி)

 முதலில் இஸ்லாத்தை ஏற்ற பெண்மணி யார்?

விடை: கதீஜா(ரலி)

பிலால்(ரலி)அவர்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டவர் யார்?

அபூ பக்கர் (ரலி)

ஹுதைபிய்யா உடன்படிக்கை சமயத்தில் குறைஷிகளிடமிருந்து வந்தகுதிரைப் படைக்குத் தலைமை வகித்தவர் யார்?

விடை: காலித் பின் வலீத்(ரலி)

இறை வசனங்கள் அருளப்படும்போது அதை எழுத அமைக்கப்பட்டகுழுவில் தலைமை வகித்தவர் யார்?

விடை : ஸைது (ரலி)

அகழ்ப் போரில் அகழ் வெட்டும் யோசனையளித்த நபித் தோழர் யார்?

விடை : ஸல்மானுல் ஃபாரிஸீ (ரலி)

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்தபோது உடன் சென்ற தோழர் யார்?

விடை : அபூபக்ரு(ரலி)

தொழுகைக்கு முதல் முதலாக பாங்கு சொன்ன நபித்தோழர் யார்?

விடை : பிலால்(ரலி)

முஹர்ரம் பத்து அன்று உயிர் நீத்த நபி (ஸல்) அவர்களின் உறவினர்யார்?

விடை : ஹுஸைன்(ரலி)

இஸ்லாத்தை ஏற்பதை மஹராக வழங்க சம்மதித்த நபித்தோழர் யார்?

விடை : அபூதல்ஹா(ரலி)

தனக்கு மிகவும் விருப்பமான தோட்டத்தை தர்மமாக வழங்கியவர் யார்?

விடை : அபூதல்ஹா(ரலி)

நபி (ஸல்) அவர்கள் மரணத்திற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த முதல்கலீஃபா யார்?
விடை : அபூபக்ரு (ரலி)

 நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத்துக்குமுன் மதீனாவுக்கு இஸ்லாத்தைஎத்திவைக்க அனுப்பப்பட்ட நபித்தோழர் யார்?

விடை : முஸ்அப் இப்னு உமைர்(ரலி)

 நபி (ஸல்) காலத்தில், இஸ்லாத்தை முதலில் ஏற்ற சிறுவர் யார்?

விடை : அலீ (ரலி)

 நபி(ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த இறுதிவேளையில் தொழவைத்தநபித்தோழர் யார்?

விடை : அபூபக்ரு(ரலி)

உஹதுப் போரில் முஸ்லிம்களையும், முஅத்தாப் போரில் எதிரிகளையும்கதிகலங்கச்செய்தவர் யார்?

விடை : காலித் பின் வலீத் (ரலி)

ஓர் ஆட்டையாவது வலிமாவாக வழங்குமாறு நபி (ஸல்) அவர்கள்கூறிய நபித்தோழர் யார்?

விடை : அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்(ரலி)

இதில் எந்த நபித்தோழரைக் கஃபனிட முழுமையான ஆடைஇருக்கவில்லை?

விடை : முஸ்அப் (ரலி)

நபி (ஸல்) அவர்கள் சுவர்க்கத்தில் யாருடைய காலடியோசையைக்கேட்டார்கள்?

விடை : பிலால் (ரலி)

நபி(ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தைப் போதிக்கநபித்தோழர்களோடு ஒன்றுகூடிய இடம் எது?

விடை : தாருல் அர்கம்

எந்தக் கலீஃபாவின் ஆட்சியில் ஸ்பெயினில் இஸ்லாம் பரவியது?

விடை: உஸ்மான்(ரலி)

ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்கு வந்த நபி(ஸல்) முதலில் தங்கியிருந்தவீட்டின் அன்சாரி தோழர் பெயர் என்ன?

அபூ அய்யூப்(ரலி)

 நபி(ஸல்) அவர்களின் இறுதி நாட்களில், அவர்களை கைத் தாங்கலாகஅழைத்துச் சென்ற இரு நபித் தோழர்கள் யாவர்?

ஃபழ்ல் இப்னு அப்பாஸ் & அலீ(ரலி)

ஆயிஷா(ரலி) அவர்கள் விலைக்கு வாங்கி விடுதலை செய்தஅடிமைப்பெண்ணின் பெயர்?

விடை: பரீரா(ரலி)

அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களின் தாயார் பெயர் என்ன?

விடை : ஸுமைய்யா(ரலி)

 நூறு ஒட்டகங்களுக்காக நபி(ஸல்) அவர்களைக் கொலை செய்யநினைத்தவர் யார்?

விடை : ஸுராக்கா(ரலி) 

 நபிப்பள்ளிவாயில் தூணில் கட்டி வைக்கப்பட்டு, பின்னர்இஸ்லாத்தைத் தழுவியவரின் பெயர் என்ன?

விடை : துமாமா(ரலி)

 நபி (ஸல்) காலத்தில், இஸ்லாத்தை முதலில் ஏற்ற சிறுவர் யார்?

விடை : அலீ (ரலி)

மிகச் சிறந்த ஆட்சியாளராகத் திகழ்ந்த இரண்டாவது கலீஃபா அவர்கள்பெயர் என்ன?
விடை : உமர் (ரலி)

வட்டி தடை செய்யப்பட்ட போது நபி (ஸல்) அதைத் தள்ளுபடி செய்துதுவக்கிய அவகளின் உறவினர் பெயர்?

விடை : அப்பாஸ் (ரலி)

முஸைலமாவினால் கைது செய்யப்பட்டு, அவர் அவையில்கொல்லப்பட்ட நபித்தோழர் யார்?

விடை : ஹபீப் (ரலி)

அபூஜஹலின் மகன் பெயர் என்ன?

விடை : இக்ரிமா (ரலி)

 முஸைலமா எனும் பொய்யன் யாரால் கொல்லப் பட்டான்?
விடை : வஹ்ஷி(ரலி)

 தொழுகைக்கும் ஜகாத்துக்கும் இடையில் வேறுபாடுகாண்பவர்களோடு போராடுவேன்"என்றவர் யார்?
விடை : அபூபக்கரு(ரலி)

 இதில் எந்த நபித்தோழரைக் கஃபனிட முழுமையான ஆடைஇருக்கவில்லை?
விடை : முஸ்அப் (ரலி)

 முதன் முதலாக இஸ்லாத்தை ஏற்ற ஆண் யார்?
ஹழ்ரத் ஆபூபக்கர் ஸித்தீக் (ரலி)

 முதன்முதலாக இஸ்லாத்தை ஏற்ற அடிமை யார்?
ஹழ்ரத் ஸைத் (ரலி)

 முதன் முதலாக இஸ்லாத்திலே ஷஹுதான பெண் யார்?
ஹழ்ரத் சுமையா (ரலி)

 முதன்முதலாக இஸ்லாத்திற்காக உயிர் துறந்த ஆண் தியாகி யார்?
ஹழ்ரத் அம்மார் பின் யாஸிர்(ரலி)

 600 பேரீத்த மரங்களைக் கொண்ட மிகப்பெரிய தமது தோட்டத்தையேஅல்லாஹ்வுக்கு கடனாக (கர்ளாக) வழங்கியவர் யார்?
அபுத்தஹ்தாஹ் (ரலி).

 பத்ருப் போர்களக் கைதியான தனது தந்தை அல்லாஹ்வின் தூதரைபுண்படுத்திய சுடுசொற்களைக் கேட்டு அவரை ஒரே வெட்டில் சாய்த்தார்ஒரு நபித் தோழர். அந்த வீரத் தோழர் யார்?

அபூ உபைதா ஆமிர் இப்னுல் ஜர்ராஹ் (ரலி).

ஸாஹிபு ஸிர்ரு ரஸூலில்லாஹ் (இறைதூதரின் அரகசியக் காப்பாளர்)எனக்கூறப்படுபவர் யார்?

ஹுதைபத்து இப்னுல் யமான் (ரலி).

ஸைய்யிதுஷ்ஷுஹதா ( தியாகிகள் தலைவர்) எனப் போற்றப்படுபவர்யார்?

ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலிப் (ரலி).

மக்கத்துக் குரைஷியர் கொடுமைப்படுத்தி வாட்டி வதக்கி தண்ணீர் கூடகுடிக்கவிடாது ஒரு பெண்ணைத் தடுத்தனர். அப்போது அல்லாஹ்விண்ணிலிருந்து தண்ணீரை இறக்கினான்.அந்த மாண்புக்குரியபெண்மணி யார்?

உம்மு ஷரீக் அல் அஸதிய்யத்துல் அன்ஸாரிய்யா (ரலி). இவரேபெண்களிடையே

மக்கத்துக் குரைஷியர் கொடுமைப்படுத்தி வாட்டி வதக்கி தண்ணீர் கூடகுடிக்கவிடாது ஒரு பெண்ணைத் தடுத்தனர். அப்போது அல்லாஹ்விண்ணிலிருந்து தண்ணீரை இறக்கினான்.அந்த மாண்புக்குரியபெண்மணி யார்?

உம்மு ஷரீக் அல் அஸதிய்யத்துல் அன்ஸாரிய்யா (ரலி). இவரேபெண்களிடையே இரகசியமாக இஸலாமியப்பிரச்சாரம் செய்தவர்.

தமது இனிய குரலால் குர்ஆன் ஓதும்போது வானவர்கள்ஒளிவிளக்குகளாகப் பிரகாசித்து காது குளிரக்கேட்டு மகிழ்ந்தனர்.அந்த நபித் தோழர் யார்?
உஸைத் இப்னு குளைர் (ரலி) என்னும் அன்ஸாரித் தோழர்.

 ஹலால்,ஹராம் பற்றிய சட்டங்களை அதிகம் அறிந்த அறிஞர் யார்?
முஆத் இப்னு ஜபல் (ரலி).

வெளிப்டையாகவே மக்கத்துக் குரைஷிகளிடம் தாம் ஹிஜ்ரத்போவதாக உரத்துக் கூறிவிட்டு வெளியேறினார் ஒரு தோழர். அவரைத்தடுத்து நிறுத்த எவருக்கும் திராணி இருக்கவில்லை.அந்த மாபெரும்நபித் தோழர் யார்?

அரபு உலகத்தையே நடுங்க வைத்த மாவீரர் உமர் இப்னுல் கத்தாப் (ரலி)அவர்கள்.

ஸைபுல்லாஹ் (அல்லாஹ்வின் வாள்) என முஃத்தா போரின் போதுஅறிவிக்கப்பட்ட மாபெரும் தளபதி யார்?
காலித் இப்னுல் வலீத் (ரலி).

ஹுதைபிய்யாவில் நபி(ஸல்) அவர்களிடம் இருமுறை பைஅத்(உறுதிப்பிரமாணம் செய்தவர் யார்?
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).

அமீனுல் உம்மத் ( சமுதாயத்தில் நம்பிக்கைக்குரியவர்) எனப் புகழாரம்சூட்டப்பட்ட நபித் தோழர் யார்?
அபூ உபைதத்துல் ஜர்ராஹ் (ரலி).

நீண்ட ஆயுளும், செல்வப் பேறும், மக்கள் பாக்கியமும் அருள ஒருநாயகத்தோழருக்காக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.ஆவ்வாறே அடையவும் செய்தவர் யார்?
அனஸ் இப்னு மாலிக் (ரலி).

 ஒரு நாயகத் தோழரின் சாட்சி இருவர் சாட்சிகளுக்கு சமம் எனபெருமைப்படுத்தப்பட்டவர் யார்?
குஸைமத் இப்னு தாபித் (ரலி).

கைபர் போரின் போது அல்லாஹ்வும் பொருந்திக் கொண்ட ஒருவரிடம்போர்க்கொடி வழங்கப்பட்டது. அந்தத் தளபதி யார்?
அலீ இப்னு அபீ தாலிப் (ரலி)

சுவர்க்கத்தின் எல்லா வாசல் வழியாகவும் செல்பவர் எனபெருமானாரால் நற்செய்தி கூறப்பட்ட நபித் தோழர் யார்?
அபூ பக்ர் இப்னு அபீ குஹாஃபா (ரலி).

குர்ஆனில் பெயர் கூறப்பட்ட ஒரே நபித் தோழர் பெயர் என்ன?
ஸைத் ( இன்னு ஹாரிதா) (ரலி) அல் குர்ஆன்

கஸீலுல் மலாயிக்கத் ( வானவர்களால் குளிப்பாட்டப்பெற்றவர்) எனஅழைக்கப்படுபவர் யார்?
ஹன்ளலா இப்னு அபீ ஆமிர் (ரலி).

உஹதுப்போரில் பெருமானாரது பாதுகாப்பிற்காகப் போராடியநாயத்தோழரின் கைகள் சல்லடையாக்கப்பட்டன. அவர் யார்?

தல்ஹத்து இப்னு உபைதுல்லாஹ் (ரலி)

‘ரஜ்லுன் ஸாலிஹ்’ (நல்ல மனிதர்) எனப் புகழப்பட்ட நபித் தோழர் யார்?

அப்துல்லாஹ் இப்;னு உமர் (ரலி).

‘உம்முஹாத்துல் முஃமினீன்’(இறைநம்பிக்கையாளர்களின்அன்னையர்)களில் ஒருவர் ‘ஸவ்வாமா- கவ்வாமா’ (மிக அதிகமாகநோன்பு நோற்பவர், நின்று தொழுபவர்) எனச் சிறப்பிக்கப்பட்டார். அவர்யார்?ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி)

யாருடைய மரணத்திற்காக அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்கியது ?ஸஃதுஇப்னு மஆத் (ரலி)

அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி) அவர்களின் கணவர் யார்?அஸ்ஸுபைர்இப்னுல்; அவ்வாம் (ரலி)

கிஸ்ரா மன்னரின் முத்துப் பதித்த காப்புகளை அணியும் பேறுபெற்றவர் யார்?
ஸுராகத் இப்னு மாலிக் (ரலி). ( இவரே நூறு சிவப்பு ஒட்டகங்களைப்பரிசாக்பெறும் ஆசையில் ஹிஜ்ரத்தின் போது நபிகளைத் துரத்திவந்தவர். அவர்களை எதிரிகளிடம் காட்டிக் கொடுக்கமாட்டேன் எனவாக்குறுதி அளித்ததற்குப் பரிசாக பாரசீகத்தை வெல்லும் போது அந்தமன்னரின் காப்புகள் பரிசாக அணிவிக்கப்;படும் என முன்னறிவிப்புச்செய்யப்பட்டார். அவை பிறகாலத்தில அந்நாட்டை வென்றபோதுவழங்கப்பட்டன.)

நாயகத்தின் ‘ஹவாரிய்யூன்கள்’ என்னும் தோழர்களில் ஒருவர் எனந்கூறப்பட்டவர் யார்?அஸ்ஸுபைர் இப்னுல்; அவ்வாம் (ரலி)

பெருமானார் (ஸல்) காலத்தில் இருபதிற்கும் குறைவான இளைஞர்ஒருவர் படைத்தளபதியாக நியமிக்கப்பட்டார்? அவர் யார்?உஸாமாஇப்னு ஸைத் ரலி)

உத்மான் இப்னு மள்வூன் (ரலி) யார்?நபி (ஸல்) அவர்களின் பால் குடிசகோதரர். உமர் (ரலி) மாமா மகன், மனைவி ஸைனப் (ரலி) யின்கணவர். முஹாஜிர்களில் மதீனாவில் முதன் முதலாக மரணித்தவர்.

”அபஸ வத்தவல்லா அன் ஜாஅஹுல் அஃமா” என்னும் 80-வதுஅத்தியாயம் யார் விசயமாக அருளப்பட்டது? அந்தகரான அப்துல்லாஹ்இப்னு உம்மி மக்தூம் (ரலி) விசயமாக.

உஹதுப் போர்களத்தில் பெருமானார் (ஸல்) அவர்களை அரணாகக்காத்து நின்றோரில் ஒரு பெண்மணியும் இருந்தார். அவர் யார்?
உம்மு உமாரா’ என்னும் நுஸைபா பின்த் கஃபில் மாஸினிய்யா (ரலி)

‘தாத்துந் நிதாகைன்’ (இரு அரைக்கச்சையுடையவர்) என நபியால்போற்றப்பட்டவர் யார்?
அஸ்மா பின’த் அபீ பக்ர் (ரலி)

தன் கணவர் விசயமாக நபிகளாரிடம் முறையிட்ட பெண்மணி யார்?
கவ்லா பின்த் தஃலபா (ரலி) (அல் குர்ஆன் 58:1)

‘உம்முல் மஸாகீன்’ ( ஏழைகளின் அன்னை) என அழைக்கப்பட்டவர்யார்?
உம்முல் முஃமினீன் ஸைனப் பின்த் ஜஹ்ஷ; (ரலி) ஆவார்.

பெருமானாரின் முஅத்தின் (முதல் முஅத்தின்) யார்?
பிலால் இப்னு ரபாஹ் (ரலி)

நபி(ஸல்) மதீனா சென்றதும் யாருடைய வீட்டில் தங்கினார்கள்?
ஆபூ அய்யூபில் அன்ஸாரி (ரலி) வீட்டில்.

''முஸ்தஜாபுத்தஃவா’ ‘துஆ (பிரார்த்தனைகள்) அங்கீகரிக்கப்படுபவர்’என சிறப்பிக்கப்பட்ட நபித் தோழர் யார்?
ஸஃது இப்னு அபீ வக்காஸ் (ரலி)

ஹிஜ்ரத்தின் போது வழியில் எந்த பெண்மணியின் இல்லத்தில் பால்அருந்தி களைப்பாறிச் சென்றார்கள்?
உம்மு மஃபத் (ரலி)அவர்கள்,
(‘ஷமாயிலுந்நபி)’ பெருமானார் தோற்றத்தைப்பற்றி தம் கணவரிடம்மிக அற்புதமாக வர்ணித்துக் கூறியவர். அவர்களின் சொல்லழகு அரபுஇலக்கத்தில் தனி இடம் பெற்றவளங்குகிறது.

பெருமானாரின் எந்த மனைவியர் “தம் சமூகத்தரிடம் தனி மதிப்பும்மரியாதையும் பெற்றவர்”? 
உம்முல் முஃமினீன் ஜுவைரிய்யா பின்த் ஹாரித் (ரலி)

ஜின்னால் கொலை செயயப்பட்ட நபித் தோழர் யார்?

ஸஃது இப்னு உப்பாதா (ரலி)

 எந்த நபித்தோழரைப் பார்த்து வானவர்களும் நாணமுறுவார்கள்?

உத்மான் இப்னு அஃப்பான் (ரலி)

‘ஸைய்யிதுல் குர்ராஃ’ காரிகளின் தலைவர் என சிறப்பிக் கப்படுபவர்யார்?

உபை இப்னு கஃபு (ரலி)

யாரிடம் குர்ஆனின் முதல் பிரதி (அல் முஸஹஃபுல் அவ்வல்)ஒப்படைக்கப்பட்டது?

ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி)

 யாரிடம் குர்ஆனை ஒன்று திரட்டும் பணியை முதற் கலீஃபா அபூபக்கர்(ரலி) ஒப்படைத்தார்கள்?
ஸைத் இப்னு தாபித் (ரலி) . (இவரே பல மொழிகளைத் தெரிந்துமொழிபெயர்ப்பும் செய்தவர்)

அன்னை ஆயிஷா(ரலி) விசயத்தில் (இஃப்கு )அவதூறாகப் பேசப்பட்டநபித் தொழர் யார்?

ஸஃப்வான் இப்னுல் முஅத்தல் (ரலி). (பின்னர் இவர்கள் நிரபராதிகள்என இறைச்செய்தி வந்து அவதூறு கூறியோருக்கு கசையடிவழங்கப்படது)

துந்நூரைன் ( இரு ஒளிகளைப் பெற்றவர்) எனப் புகழப்பட்டவர் யார்?
உத்மான் இப்னு அஃப்பான் (ரலி). பெருமானாரின் பெண்மக்கள்ருகைய்யா(ரலி), உம்மு குல்தூம்(ரலி) ஆகிய இருவரை (ஒருவர்மரணத்திற்குப்பின் மற்றொருவரை) மணந்தவர்.

 'துந்நூரைன்’ ஒளிச்சுடரைப் பெற்றவர் என்னும் பேறு பெற்றவர் யார்?
அத்துபைல் இப்னு அம்ர் (ரலி)

 நபி(ஸல்) அவர்களின் அவைக் கவிஞர் யார்?
ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலி)

குர்ஆனின் பல கிராஅத் முறைகளை ஒரே கிராஅத் முறையாக ஆக்கியவா யார்?
மூன்றாவது கலீபா உத்மான் இப்னு அஃப்பான் (ரலி)

அதிகமான நபி மொழிகளை அறிவித்தவர் யார்? 
அபூ ஹுரைரா (ரலி) .

கந்தக் போரில் அகழ் வெட்டுவதற்கு பரிந்துரைத்தவர் யார்?
ஸல்மானுல் பார்ஸி (ரலி)

ஏழுவானத்திற்கு மேலிருந்து குற்றமற்றவர் என இறைவனால் தீர்ப்பு வழங்கப்பட்டவர் யார்?
உம்முல் முஃமினீன் அன்னை ஆயிஷா ஸித்தீகா (ரலி)

இந்த சமுதாயத்தின் அறிவுக்கடல் ‘ ஹிப்ருல் உம்மத்’ எனச் சிறப்பிக்கப்பட்டவர் யார்?
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி)

அர்ஷின் மேலிருந்து அல்லாஹ்வால் திருமணம் செய்விக்கப்பட்டவர் என தம் சக்களத்திகளிடம் பெருமைப்படும் பெருமானார் மனைவி யார்?
உம்முல் முஃமினீன் அன்னை ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி)

இறைவனுக்கு ஒரு ஸுஜூது கூட செய்யாமல் ஷஹீதான ஸஹாபி யார்?
அம்ரு இப்னு தாபித் இப்னு கைஸ் (ரலி)

நபி பெருமானாரிடம் பெண்களின் தூதுவராகச் சென்ற நபித் தோழியர் யார்?
அஸ்மா பின்த் யஸீது இப்னு ஸகன் (ரலி)

நஜ்ஜாஷ் மன்னரால் நபி (ஸல்) அவர்களுக்கு திருமணம் செய்வித்த பெண்மணி யார்?
உம்மு ஹபீபா, ரம்லா பின்த் அபீ ஸுஃப்யான் (ரலி)

நாயகத் தோழர்களில் இறுதியாக மரணமடைந்தவர் யார்?
அபுத் துபைல் ஆமிர் இப்னு வாதிலா (ரலி)

ஷஹீதத்துல் பஹ்ர் ( கடற்போரில் மரணமடைந்த) நாயகத் தோழியர் யார்?
உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி).இவர் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களின் சகோதரியாவார்.

கொடுங்கோலன் ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுபால் மக்காவில் கொலை செய்யப்பட்டு கழுகு மரத்தில் தொங்கவிடப்பட்ட நபித் தோழர் யார்?
அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி). இவர் அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி) அவர்களின் மகன்.

தமது நொண்டிக்காலால் சுவர்க்கம் புகுவார் என நபியால் கூறப்பட்ட நபித் தொழர் யார்?
உஹதுப் பொரில் ஷஹீதான அம்ருப்னுல் ஜமூஹ் (ரலி).

நபி யூஸுஃ ப் (அலை) அவர்களின் சந்ததியில் தோன்றிய நபித் தோழர் யார்?
அறிஞர் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி)

மஸீஹுத் தஜ்ஜாலை பார்த்ததாக நபி மொழி கூறும் நபித் தோழர் யார்?
தமீம் இப்னு அவ்ஸ் அத்தாரமீ (ரலி)

வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் எந்த நாயகத் தோழரின் தோற்றத்தில் வருவார்கள்.?
திஹ்யத் இப்னு கலீஃபத்துல் கலபீ( ரலி) அவர்களின் தோற்றத்தில்

அய்யாமுல் ஜாஹிலிய்யா என்னும் அறியாமைக் காலத்தில் குழந்தைகளை உயிரோடு புதைத்தவர் யார்?
ஸஃது இப்னு நாஜியா (ரலி)

எந்த முஷ்ரிக்கும் (இணைவைப்பாளரும்) தன்னைத் தொடக்கூடாது. தானும் தொடமாட்டேன் என நேர்ச்சை செய்த நாயகத் தோழர் யார்?
ஆஸிம் இப்னு தாபித் (ரலி)

தமது சட்டையால் கபனிட்டு நபிகளால் அடக்கம் செய்யப்பட்ட பெண்மணி யார்?
அபூதாலிபின் மனைவி ஃபாத்திமா பின்த் அஸத் (ரலி). இவர் அலி (ரலி) அவர்களின் தாயார்.

அபூ பக்ர் (ரலி) அவர்களின் இயற் பெயரென்ன?
அப்துல்லாஹ் இப்னு அபீ குஹாஃபா (ரலி)

பத்ருப் போரில் தமது வாள் உடைந்தபோது நபி (ஸல்) ஒரு பேரீத்தர மரக்குச்சியைக் கொடுத்து நபித் தோழர் ஒருவரிடம் போராடச்சொன்னார்கள். உடனே அது ஒரு வாளாக மாறியது. போராடிய அந்தத் தோழர் யார்?
உக்காஷ் இப்னு முஹ்ஸின் (ரலி)

தபூக் போரில் கலந்து கொள்ளாது பின் தங்கிய மூன்று நாயத் தோழர்கள் யார்?
1.கஃபு இப்னு மாலிக் அஸ்ஸல்மீ அல் அனஸாரீ (ரலி), 2.மிராரத் இப்னு ரபீஃ அல்ஆமிரீ அல்அன்ஸாரீ ரலி), 3.ஹிலால் இப்னு உமய்யத் இப்னு ரபீஆ அல்-அன்ஸாரீ (ரலி). (பின்தங்கியவர்களை அல்லாஹ் மன்னித்துவிட்டதாகக்கூறுகிறான் (அல்குர்ஆன்-9:118)

வியாழன், ஆகஸ்ட் 13, 2020

நாட்டு மருந்து,

*நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?

*பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!*

*அருகம்புல் பொடி*

அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பொடி*

பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

*கடுக்காய் பொடி*

குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பொடி*

அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கரா பொடி*

தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பொடி*

சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பொடி*

சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பொடி*

நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பொடி*

நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பொடி*

மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பொடி*

இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பொடி*

மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பொடி*

இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பொடி*

ஆண்மை குறைபாடு,
மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளை படுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா.

*ஜாதிக்காய் பொடி*

நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பொடி*

உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பொடி*

வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பொடி*

மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பொடி*

உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பொடி*

கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.ரத்தம் முழுவதும் சுத்தமாகும்.இரிம்புச் சத்து உண்டு.

*வேப்பிலை பொடி*

குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பொடி*

வயிற்று புண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பொடி*

தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பொடி*

உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பொடி*

அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பொடி*

காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியா நங்கை பொடி*

அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பொடி,*

மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பொடி*

மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது

*கோரைகிழங்கு பொடி*

தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பொடி*

சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பொடி*

உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பொடி*

ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பொடி*

கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பொடி*

பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர்*

குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பொடி*

சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பொடி*

குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பொடி*

சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பொடி*

பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பொடி*

ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பொடி*

சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பொடி*

சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பொடி*

நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பொடி*

இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பொடி*

உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பொடி*

சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பொடி*

பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பொடி*

தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பொடி*

குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பொடி*

பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாழை பொடி*

உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பொடி*

கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பொடி*

பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

ஒரு ஸ்பூன் போட்டு தண்ணீரில் கலக்கி காலை,இரவு சாப்பாட்டுக்கு பின் சாப்பிடவும்.

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

பிரபல்யமான பதிவுகள்