நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

புதன், டிசம்பர் 30, 2020

சிலிக்கான் ஜெல்லை கீழே தூக்கிப் போடாதீர்கள்,

புதிதாக வாங்கும் பொருட்களுக்குள் இருக்கும் இந்த சிலிக்காபாக்கெட் ஏன் என்று தெரியுமா? தெரியாமகூட தூக்கி கீழ போட்றாதீங்க?

கடைகளில் புதியதாக நாம் செருப்பு, பேக்குகள், புது துணிகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் குறிப்பாக சூட்கேஸ்கள் போன்றவற்றை வாங்குகின்ற பொழுது, இந்த வெள்ளை நிற சிறய பாக்கெட் போடப்பட்டிருக்கும்.

புதிதாக வாங்கி வந்த பொருளை அவருக்குள் இருந்து பிரித்துவிட்டால் போதும் உடனே அந்த பாக்கெட்டை தூக்கி கீழே வீசிவிடுவோம்.

ஆனால் அந்த பாக்கெட்டுக்குள் இருக்கும் சிலிக்கான் ஜெல்லை நாம் கீழே தூக்கிப் போடுவதற்கான நமக்குக் கொடுக்கப்படுவது இல்லை. அது நம்முடைய வீட்டில் வேறு என்னென்ன மாதிரயான விஷயங்களுக்கு எல்லாம் பயன்படுகிறது என்று தெரியுமா? இனியாவது தெரிஞ்சிக்கோங்க… அதை தூக்கி கீழே வீசிடாதங்க.



சமையலறையில்
பொதுவாகவே வீட்டில் சமையலறைதான் எப்போதுமே அதிக ஈரப்பதத்துடன் இருக்கும். அதனால் தான் நாம் வைத்திருக்கிற மசாலாப் பொருட்கள், சர்க்கரை போன்றவை கெட்டியாகிவிடுவது, நமத்துப் போவது போன்ற பிரச்சினைகள் உண்டாகின்றன. அப்படி மசாலாப் பொருட்கள் கெட்டிப்பட்டுவிடாமல் இருக்க இந்த சிலிக்கான் ஜெல்லை பயன்படுத்த முடியும்.

நாம் மசாலாப் பொருட்கள் வைத்திருக்கும் இடத்துக்கு அருகில் சிலிக்கான் ஜெல் பாக்கெட்டை ஒரு ஸ்டிக்கர் மூலம் ஒட்டி வைத்தால் போதும்.

சமையலறையில் இருக்கின்ற ஈரப்பதத்தை இந்த சிலிக்கான் ஜெல் உறிஞ்சிக் கொள்ளும். எப்போதும் சமையலறைப் பொருள்கள் பிரஷ்ஷாகவே இருக்கும்.



மொபைல்_நீரில்விழுந்தால்
செல்போன் வைத்திருக்கும் எல்லோருக்குமே இந்த பிரச்சினை அடிக்கடி நிகழ்வதுதான். அதுதாங்க… செல்போனை தண்ணிக்குள்ள போட்றது.

நாம் எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் போடுகின்ற மொபைல் போனை அதன் பேட்டரி, மெமரி கார்டு போன்றவற்றைக் கழட்டிவிட்டு, ஒரு கிண்ணத்தில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு அதற்குள் ஈரமான புானை போட்டு வைத்தாலே போதும், அதற்குள் இருக்கிற ஈரத்தை உறிஞ்சிவிட்டு, மொபைலை புதுசுபோல் மாற்றிவிடும். ஆனால் ஜார்ஜ் போடுவதற்கு முன்பு அதை காற்றோட்டமாக ஒரு நாள் வைத்திருந்துவிட்டு பின் சார்ஜரில் இணைப்பது நல்லது.



ஆவணங்கள்
வீட்டில் இருக்கின்ற முக்கியமான ஆவணங்கள், பத்திரங்கள், சான்றிதழ்கள், ஆதார் கார்டுகள் போன்றவை வீணாகிப் போய்விடாமல் செல்லரித்து விடாமல் அப்படியே இருக்க வேண்டுமென்றால் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுகளை எடுத்து இந்த ஆவணங்களை வைத்திருக்கும் பெட்டியிலோ பையிலோ போட்டு வைத்திருங்கள்.



துணிகள் காயவைக்க
நாம் துவைத்து முடித்த ஈரமான துண்டோ அல்லது மற்ற துணி வகைகளோ உடனடியாக உலர்த்த வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு இந்த சிலிக்கான் ஜெல் பெரிதும் உதவிசெய்யும்.

ஒரு பக்கெட்டில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு துணிகளைப் போட்டு அதில் ஊறவைத்தால் போதும் துணிகள் உடனடியாக காய்ந்துவிடும்.



கத்தி கூர்மையாக
பொதுவாக நாம் தினமும் பயன்படுத்துகின்ற கத்தி, ரேசகள், பிளேடுகள் ஈரப்பதத்தால் வேகமாகவே மழுங்கிப் போய்விடும். அப்படி மழுங்கிப் போகாமல் கூர்மையாகவே இருக்க வேண்டுமென்றால், கத்தியெல்லாம் போட்டு வைத்திருக்கின்ற டப்பாக்களில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்தால் கத்திகள் மழுங்கிப் போய்விடாமல் இருக்கும்.



துர்நாற்றம்
எப்போதாவது பயன்படுத்துகிற பொருட்கள், உடற்பயிற்சி சம்பந்தப்பட்ட பொருள்கள், விளையாட்டுப் பொருட்கள் போட்டுவைக்கும் கவர்கள் ஆகியவற்றில் எப்போதும் ஒருவித துர்நாற்றம் வீசும். அப்படி துர்நாற்றம் வீசாமல் இருக்க இந்த சிலிக்காள் ஜெல் பாக்கெட்டுக்களை அதற்குள் போட்டு வையுங்கள். துர்நாற்றமும் வீசாது. பொருட்களும் புதுசுபோலவே பளபளக்கும்.



வளர்ப்பு பிராணிகள்
நம்முடைய வீடுகளில் வளர்ப்பு பிராணிகளுக்கு பிஸ்கட்டுகள் மற்றும் வேறு சில உணவுகளை கவர்களில் வைத்திருப்போம். அவற்றை நம்முடைய உணவைப் போல சுகாதாரமாக வைத்திருக்க முயந்சி செய்வதில்லை. அதனால் வேகமாகக் கெட்டுப்போய்விடும். அதை தவிர்க்க வேண்டுமென்றால் அந்த உணவு கவர்களில் சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வையுங்கள்.



நகைகள்
பொதுவாக நாம் வைத்திருக்கும் நகைகளை தினமும் பயன்படுத்துவது கிடையாது. அப்படியே பெட்டிக்குள் பூட்டி வைத்திருப்போம். அது நாளடைவில் மங்கிவிடுவது போன்று தோன்றும். இதுவே அந்த நகைப் பெட்டிக்குள் சில சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்திருந்தால் நகை பதுசு போல் அதே பளபளப்புடன் இருக்கும்.



அலங்காரப் பொருட்கள்
வீட்டில் சில முக்கிய தினங்களன்று மட்டும் தான் அலங்காரங்கள், தோரணங்கள் போன்றவற்றைத் தொங்கவிடுவோம். முடிந்ததும் அந்த பொருட்களில் சிலவற்றை அடுத்த ஆண்டு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அட்டைப் பெட்டிக்குள் போட்டு வைத்திருப்போம். அடுத்த வருடம் எடுத்துப் பார்த்தால் அதன் நிறங்கள் மங்கியிருக்கும். இதுவே சிலிக்காள் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்தால் நிறம் மங்காமல் புதுசுபோலவே இருக்கும்.



ஜன்னல்கள்
நம்முடைய வீட்டின் ஜன்னல்கள், வாயிற்படி போன்ற ஈரத்தை உறிஞ்சும் மர வேலைப்பாடுகள் கொண்ட பகுதிகளில் குழந்தைகளுக்கு எட்டாத வகையில் சிலிக்கான் ஜெல்லை கட்டி வைத்திருந்தால் தேவையில்லாமல் ஜன்னலில் ஈரப்பதம் அடையாமல் காக்க முடியும்.



ஷூ துர்நாற்றம்
பொதுவாக எல்லா வீடுகளிலும் நாம் எல்லோரும் சந்திக்கிற பிரச்சினை இது. என்னதான் துவைத்து பயன்படுத்தினாலும் ஷூக்கள், சாக்ஸ்களில் துர்நாற்றங்கள் ஏற்பட்டு விடுகிறது. அப்படி உண்டாகாமல் இருக்க செருப்புகள் வைக்கும் இடங்களில் இந்த சிலிக்கான் ஜெல்லைப் போட்டு வைத்திருந்தால் அந்த துர்நாற்றங்களில் இருந்து விடுபட முடியும

குறிப்பு
இவ்வாறு பல்வேறு விதங்களில் இந்த சிலிக்கான் ஜெல் பயன்படும். ஆனால் ஒருபோதும் இதை அதனுடைய பாக்கெட்டுகளில் இருந்து பிரித்து வெளியே எடுத்துப் பயன்படுத்திவிடக் கூடாது. பாக்கெட்டுகளை அப்படியே தான் பயன்படுத்த வேண்டும்.

இந்த பாக்கெட்டுகளை ஒரு போதும் ஓபன் செய்து உபயோகித்துவிடாதீர்கள்

ஞாயிறு, டிசம்பர் 27, 2020

புத்தாண்டு வேண்டாமே,new year,

புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் அழிவு நாளின் அறிகுறிகள்
بسم الله الرحمن الرحيم
புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில்
அழிவு நாளின் அறிகுறிகள்
****************************************
وَالَّذِيْنَ لَا يَشْهَدُوْنَ الزُّوْرَۙ وَ اِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّوْا كِرَامًا‏  ٢٥-٧٢
7320- صحيح البخاري عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((لَتَتْبَعُنَّ سَنَنَ مَنْ كَانَ قَبْلَكُمْ شِبْرًا شِبْرًا وَذِرَاعًا بِذِرَاعٍ، حَتَّى لَوْ دَخَلُوا جُحْرَ ضَبٍّ تَبِعْتُمُوهُمْ)). قُلْنَا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودُ وَالنَّصَارَى قَالَ: ((فَمَنْ)).

புது வருடத்தை வரவேற்பதற்காக கிறிஸ்தவ உலகம் தயாராகின்றது, ஏனைய சமூகங்கள் தயாராகின்றன என்றால் அதில் வியப்பேதும் இல்லை. ஆனால் இஸ்லாமிய உலகும் தயாராகின்றது என்றால் அதை விட வேதனை வேறு என்ன இருக்க முடியும்?.

தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதற்காக அதை மகிழச்சியுடன் கொண்டாடுவது என்பது ஒரு விதத்திலும் அறிவுப்பூர்வமான விஷயமாக இருக்க முடியாது. மாறாக தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதே! என்று கவலைப்பட்டு, அதைப் பின்னோக்கிப்பார்த்து தனது கடந்த வருடத்தின் குறை நிறைகளை சரி செய்து அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்ற ஒரு அடியானாக தன்னை எவ்வாறு மாற்றிக்கொள்வது என்பதைப் பற்றி சிந்திப்பவனே உண்மையான புத்திசாலியாக இருக்க முடியும்.

இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பெரிய எழுச்சியையும், புரட்சியையும் ஏற்படுத்திய ஹிஜ்ரத் எனும் வரலாற்று சிறப்பு மிகு பயணத்தை வைத்துத்தான் இஸ்லாமிய காலண்டர் உருவாக்கப்பட்டது. ஆனால் அதன் துவக்கத்தில் ஏற்படாத புத்துணர்வும், எழுச்சியும் ஜனவரி முதல் தேதி இஸ்லாமிய உள்ளங்களுக்கு ஏற்படுகின்றது என்றால் இந்த அறியாமையை எங்கு போய் சொல்வது?.

அல்லாஹ்வின் தூதர் ( ஸல்) அவர்கள் அழிவு நாளின் அறிகுறிகளாக எச்சரித்த ஒரு விஷயத்தை இவர்கள் உண்மைப் படுத்தும் வேதனையான ஒரு நிலையைத் தான் இங்கு பார்க்க முடிகின்றது:

7319- صحيح البخاري عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَأْخُذَ أُمَّتِي بِأَخْذِ الْقُرُونِ قَبْلَهَا، شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ)). فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ كَفَارِسَ وَالرُّومِ. فَقَالَ: ((وَمَنِ النَّاسُ إِلاَّ أُولَئِكَ)).
7319. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தார் தமக்கு முந்தைய சமுதாயங்களின் நடைமுறைகளை சாண் சாணாக, முழம் முழமாக பின்பற்றி நடக்காத வரை மறுமைநாள் வராது“ என்று கூறினார்கள். உடனே, “இறைத்தூதர் அவர்களே! பாரசீகர்கள் மற்றும் ரோமர்கள் போன்றவர்களையா (இந்தச் சமுதாயத்தார் பின்பற்றுவர்)?“ என வினவப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், “அவர்களைத் தவிர (இன்று) மக்களில் வேறு யார் உள்ளனர்?“ என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 96. இறைவேதத்தையும் நபிவழியையும் கடைப்பிடித்தல்

7320- صحيح البخاري عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((لَتَتْبَعُنَّ سَنَنَ مَنْ كَانَ قَبْلَكُمْ شِبْرًا شِبْرًا وَذِرَاعًا بِذِرَاعٍ، حَتَّى لَوْ دَخَلُوا جُحْرَ ضَبٍّ تَبِعْتُمُوهُمْ)). قُلْنَا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودُ وَالنَّصَارَى قَالَ: ((فَمَنْ)).

“நீங்கள் உங்களுக்கு முன் சென்றவர்களின் வழி முறைகளை சானுக்கு சான், முழத்துக்கு முழம் பின்பற்றுவீர்கள் அவர்கள் ஓர் உடும்பு பொந்துக்குல் புகுந்து விட்டால் அவர்களைத் தொடர்ந்து நீங்களும் புகுந்து விடுவீர்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் யூதர்களையும், கிறிஸ்தவர்களையுமா குறிப்பீடுகின்றீர்கள்? என்று நாங்கள் கேட்டபோது, வேறு யாரை? என்று அல்லாஹ்வின் தூதர் திருப்பிக் கேட்டார்கள்”. அறிவிப்பவர்: அபூ ஸஈத் (ரலி) அவர்கள், புஹாரி).

Happy New Year என்று வாழ்த்துக் கூறலாமா?
***************************************
பலர் இந் நாளில் உதயத்துடன் புது வருடம் பிறந்து விட்டது (Happy New Year) என்று வாழ்த்துக்கள் தெரிவிப்பதையும், ஏனையவர்களுக்கு தொடர்பு கொள்வதன் மூலம், குறுஞ் செய்திகள் மூலம் ஈமெயில்கள் மூலம் வாழ்த்து தெரிவிப்பதையும் பரவலாக பார்க்க முடிகின்றது. ஆனால் ஒரு உண்மையான முஸ்லிம் எப்போதும் இந்த அறியாமைகளில், வழிகேடுகளில் வீழ்ந்துவிடாமல் எச்சரிக்கையாகவே இருப்பான். இன்னும் ஒரு உண்மையான முஸ்லிம் எப்போதும் பிற மதத்தவர்களுக்கு ஒப்பாக செயல்பட மாட்டான்.

وَالَّذِيْنَ لَا يَشْهَدُوْنَ الزُّوْرَۙ وَ اِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّوْا كِرَامًا‏ 
அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்.
(அல்குர்ஆன் : 25:72)

ﺣﺴﻦ ﺻﺤﻴﺢ 4031 ﻋﻦ اﺑﻦ ﻋﻤﺮ، ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻣﻦ ﺗﺸﺒﻪ ﺑﻘﻮﻡ ﻓﻬﻮ ﻣﻨﻬﻢ» رواه الترمذ
“எவன் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாகச் செயல்படுகின்றானோ அவனும் அந்தக்கூட்டத்தைச் சேர்ந்தவனே” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (திர்மதி).

இது எவ்வளவு கடும் எச்சரிக்கை, இதில் எவ்வாறு ஒரு முஸ்லிம் அலட்சியமாக இருக்க முடியும்?

ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ، ﻋﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: «ﺇﻥ اﻟﻌﺒﺪ ﻟﻴﺘﻜﻠﻢ ﺑﺎﻟﻜﻠﻤﺔ ﻣﻦ ﺭﺿﻮاﻥ اﻟﻠﻪ، ﻻ ﻳﻠﻘﻲ ﻟﻬﺎ ﺑﺎﻻ، ﻳﺮﻓﻌﻪ اﻟﻠﻪ ﺑﻬﺎ ﺩﺭﺟﺎﺕ، ﻭﺇﻥ اﻟﻌﺒﺪ ﻟﻴﺘﻜﻠﻢ ﺑﺎﻟﻜﻠﻤﺔ ﻣﻦ ﺳﺨﻂ اﻟﻠﻪ، ﻻ ﻳﻠﻘﻲ ﻟﻬﺎ ﺑﺎﻻ، ﻳﻬﻮﻱ ﺑﻬﺎ ﻓﻲ ﺟﻬﻨﻢ صحيح البخاري

6478. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
( நூல்: ஸஹீஹ் புகாரி)

ஒரு சம்பவம்
*****************
ﻋﻦ ثَابِتُ بْنُ الضَّحَّاكِ، قَالَ: نَذَرَ رَجُلٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنِّي نَذَرْتُ أَنْ أَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ كَانَ فِيهَا وَثَنٌ مِنْ أَوْثَانِ الْجَاهِلِيَّةِ يُعْبَدُ؟» قَالُوا: لَا، قَالَ: «هَلْ كَانَ فِيهَا عِيدٌ مِنْ أَعْيَادِهِمْ؟» ، قَالُوا: لَا، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوْفِ بِنَذْرِكَ، فَإِنَّهُ لَا وَفَاءَ لِنَذْرٍ فِي مَعْصِيَةِ اللَّهِ، وَلَا فِيمَا لَا يَمْلِكُ ابْنُ آدَمَ». ﺭﻭاﻩ ﺃﺑﻮ ﺩاﻭﺩ 2881 من المشكاة : 3437 (قال الالباني هذا حديث ﺻﺤﻴﺢ)
“நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் புவானா எனும் இடத்தில் ஓர் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட நேர்ச்சை செய்திருந்தார். அதை நிறைவேற்றுவதற்கு அல்லாஹ்வின் தூதரிடம் வந்து அனுமதி கேட்டபோது நபியவர்கள் அவ்விடத்தில் அறியாமைக் காலத்தில் ஏதும் சிலைகள் வணங்கப்பட்டனவா? அதற்கு இல்லை என்று சொன்னார்கள், அறியாமை கால பெருநாட்கள் ஏதும் அவ்விடத்தில் கொண்டாடப்பட்டனவா? என்று கேட்டார்கள் அதற்கும் இல்லை என்று சொன்னார்கள். அப்படியென்றால் உனது நேர்ச்சையை நிறைவேற்றும்” என்று கூறினார்கள்.
ஏனென்றால் அல்லாஹ்விற்கு மாறு செய்து எந்த நேர்ச்சையையும் நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை அதே போல தனக்கு சொந்தமில்லாத பொருளில் நேர்ச்சையை நிறைவேற்றுவதும் கூடாது.
(நூல் : அபூதாவூத்)

அல்லாஹ்வுக்காக நிறைவேற்றும் ஒரு நேர்ச்சை, அது நிறைவேற்றப்படும் இடத்தில் கூட பிற மதத்தவர்களுக்கு ஒப்பாகி விடக்கூடாது என்பதில் எந்தளவு அல்லாஹ்வின் தூதர் கண்டிப்பாக இருந்தார்கள் என்று பாருங்கள்.

புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் அழிவு நாளின் அறிகுறிகள்.
****************************************
புது வருடம் பிறந்து விட்டது என்று அன்றைய இரவில் எத்தனை எத்தனை அனாச்சாரங்கள், விபச்சாரம், மதுபானம், இசை, ஆடல் பாடல்கள் இவைகள் ஒரு புறம், பட்டாசு வெடிகள் என்று பல கோடிக் கணக்கான ரூபாய்கள் வாரி இறைக்கப்படுவது மறு புறம் இவைகளுக்காக முஸ்லிம் நாடுகளில் சிலவைகள் கூட வாரி இறைக்கும் பணம் பல மில்லியன்கள் என்பது இன்னும் வேதனையான விஷயம். உலகின் பல பாகங்களிலும் கோடிக்கணக்கான மக்கள் உண்ண உணவின்றி, தங்க இடமின்றி வாடி வதங்கிக்கொண்டிருக்கின்றனர், எந்தப் பயனும் இன்றி வீண் விரயம் செய்யப்படும் இந்த கோடிகளை அவைகளுக்கு பயன்படுத்தப் படுமென்றால் அந்த மக்கள் எவ்வளவு நிம்மதி அடைவர்.

5437 - (ﻣﺘﻔﻖ ﻋﻠﻴﻪ) ﻋﻦ ﺃﻧﺲ ﻗﺎﻝ: ﺳﻤﻌﺖ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻘﻮﻝ: «ﺇﻥ ﻣﻦ ﺃﺷﺮاﻁ اﻟﺴﺎﻋﺔ ﺃﻥ ﻳﺮﻓﻊ اﻟﻌﻠﻢ ﻭﻳﻜﺜﺮ اﻟﺠﻬﻞ ﻭﻳﻜﺜﺮ اﻟﺰﻧﺎ ﻭﻳﻜﺜﺮ ﺷﺮﺏ اﻟﺨﻤﺮ ﻭﻳﻘﻞ اﻟﺮﺟﺎﻝ ﻭﺗﻜﺜﺮ اﻟﻨﺴﺎء ﺣﺘﻰ ﻳﻜﻮﻥ ﻟﺨﻤﺴﻴﻦ اﻣﺮﺃﺓ اﻟﻘﻴﻢ اﻟﻮاﺣﺪ» . ﻭﻓﻲ ﺭﻭاﻳﺔ: «ﻳﻘﻞ اﻟﻌﻠﻢ ﻭﻳﻈﻬﺮ اﻟﺠﻬﻞ» . ﻣﺘﻔﻖ ﻋﻠﻴﻪ
கல்வி உயர்த்தப்படுவது. ( கல்விமான்கள் மரணிப்பது) அறியாமை அதிகமாவது.விபச்சாரம் அதிகரிப்பது மதுப்பிரியர்கள் அதிகமாவது.ஆண் இனம் குறைவது பெண் இனம் அதிகமாவது ஐம்பது பெண்களை ஒரு ஆண் நிர்வாகம் செய்யுமளவு அதிகமாகி விடுவது. இவைகள் அழிவு நாளின் அறிகுறிகளாகும்.

80- ِ عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يُرْفَعَ الْعِلْمُ، وَيَثْبُتَ الْجَهْلُ، وَيُشْرَبَ الْخَمْرُ، وَيَظْهَرَ الزِّنَا)).
விபச்சாரம் பகிரங்கமாக நடைபெறுவதும் மறுமை நாளின் அடையாளமாகும்.
عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا اسْتَعْمَلَتْ أُمَّتِي خَمْسًا فَعَلَيْهِمُ الدَّمَارُ، إِذَا ظَهَرَ فِيهِمُ التَّلَاعُنُ، وَلُبْسُ الْحَرِيرِ، وَاتَّخَذُوا الْقَيْنَاتِ، وَشَرِبُوا الْخُمُورَ، وَاكْتَفَى الرِّجَالُ بِالرِّجَالِ، وَالنِّسَاءُ بِالنِّسَاءِ " شعب الإيمان):
என் சமூகம் ஐந்து விஷயங்களை செய்தால் அவர்களுக்கு அழிவு வந்து விடும் 1. ஒருவருக்கொருவர் சாபமிடுவது. 2. பட்டாடைகள் அணிவது 3. பாடகிகளை ஏற்படுத்துவது. 4. மதுபானங்கள் அருந்துவது. 5. ஆண்கள் ஆண்களோடும், பெண்கள் பெண்களோடும் சேர்ந்து இச்சையைத் தீர்த்துக் கொள்வது.
( நூல் : ஷுஅபுல் ஈமான்)

தமிழகத்தில் 2016 புத்தாண்டு தினத்தில் மது விற்பனை ரூ.164 கோடியை எட்டி உள்ளது. இது, கடந்த ஆண்டைவிட ரூ.22 கோடி அதிகம்

புத்தாண்டு தினத்தையொட்டி, டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய 2 நாட்களில், ஆந்திராவில் ரூ. 150 கோடிக்கும், தெலங்கானாவில் ரூ.110 கோடிக்கும் மது விற்பனை நடந்துள்ளது
நம் மாநிலங்கலிலேயே இவ்வாரென்றால் மேலை நாடுகளில் சொல்லவா வேண்டும்.

மதுவை ஒழிப்பதற்காக காந்தி எவ்வளவோ பாடுபட்டார். ஆங்கிலேயர் ஆட்சியில் கள்ளுக்கடை மறியல் என்ற போராட்டத்தை அறிவித்து போதைப் பொருளுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். இந்தப் போராட்டம் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்ச்சியாகவும் இடம் பெற்றுள்ளது.

குடிநோயாளிகள் என்னென்ன பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள் என்பதை, டி.டி.கே. மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் அனிதாராவ் விளக்குகிறார்.
ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடே இல்லாமல் குடிப்பவர்களில் யாருக்கு வேண்டுமானாலும் குடிநோய் வரலாம். குடிப்பவர்களில் 10 முதல் 20 சதவிகிதத்தினர் மதுவுக்கு அடிமையாகிவிடுகின்றனர். ரத்தத்தில் 20 மில்லி கிராம் ஆல்கஹால் கலந்தாலே பார்வைத் திறன் குறையும். 30 மில்லி கிராம் என்ற அளவைத் தொட்டால் தசை தன் கட்டுப்பாட்டை இழக்கும். சிந்திப்பது, புரிந்துகொள்வது, மதிப்பிடும் தன்மை குறைவது என்று சங்கிலித் தொடர்போல் எல்லாம் பாதிக்கப்படும். உடல் அளவிலும் மன அளவிலும் குடிக்கு அடிமையாகி விடுவதால் வாழ்க்கையில் பலவிதமான பிரச்னைகள் ஏற்பட்டாலும்கூட குடிப்பதை அவர்களால் நிறுத்த முடியாது. ஏனெனில், குடியை நிறுத்தும்போது கை நடுக்கம், தூக்கமின்மை, மனச்சோர்வு, சிந்திக்கும் திறனில் பாதிப்பு, பயம், பிரம்மை, நரம்புத் தளர்ச்சி, உணர்ச்சியின்மை என்று பல்வேறு பாதிப்புகள் உருவாகும். கணையத்தில் ரணம், தோல் தொடர்பான வியாதிகள், தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்னை, ஊட்டச்சத்துக் குறைபாடு, வயிற்றுப்புண், ஜீரணசக்தி குறைதல், புற்றுநோய் அபாயம், கல்லீரல் வீக்கம், மஞ்சள்காமாலை, இதயத் துடிப்பில் மாற்றம், ரத்தக் குழாய்கள் பாதிப்பு, இதய தசைகள் பழுதடைதல் என்று உடலின் எந்த உறுப்பையும் இந்தக் குடிநோய் விட்டுவைக்காது. குடித்தவுடன் மூளை செயல்படும் திறனும் உடனடியாகக் குறைவதோடு நிரந்தரப் பாதிப்புகளுக்கும் உள்ளாக்கும்.

எனவேதான் இஸ்லாம் மதுவை மூன்று கட்டங்களாக தடைசெய்துள்ளது
எடுத்த எடுப்பிலேயே மதுவை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று குர்ஆன் கட்டளையிடவில்லை. மதுவை ஒழிப்பதற்காக வேறுபட்ட காலகட்டங்களில் வெவ்வேறு கோணங்களில் மதுவைப் பற்றி குர்ஆன் மக்களுக்கு எச்சரித்தது.

1) முதல்கட்ட நடவடிக்கை
****************************
மது நல்ல பொருள் அல்ல அதன் நன்மைகளைவிட தீமைகளே அதிகம் என்று உபதேசம் செய்தது.

மதுவைத் தடைசெய்யும் இறைவசனம் அருளப்பெறுவதற்கு முன்பு உமர் ( ரலி) அவர்கள். இறைவா! மதுவைப்பற்றி ஒரு தீர்க்கமான முடிவை எங்களுக்கு வழங்குவாயாக! என்று கூறினார்கள் அப்போது பின் வரும் வசனம் அருளப்பெற்றது.

يَسْــٴَــلُوْنَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ‌ قُلْ فِيْهِمَآ اِثْمٌ کَبِيْرٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ وَاِثْمُهُمَآ اَکْبَرُ مِنْ نَّفْعِهِمَا 
(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது”
(அல்குர்ஆன் : 2:219)

2. இரண்டாம் கட்ட நடவடிக்கை
********************************
இதன் பிறகு தொழுகைக்கு வரும் போது போதையுடன் வரக்கூடாது என்று குர்ஆன் கட்டளையிட்டது.ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுவது கடமையாக்கப் பட்டுள்ளது.தொழுகைக்கு போதையில்லாமல் வர வேண்டுமென்றால் குறைந்தது தொழுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாவது மது அருந்தாமல் இருக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு ஐந்து முறை கடைப்பிடிக்கும் போது எப்போதும் போதையில் திளைத்தவர்கள் சிறந்த பயிற்சிக்கு உட்படுத்தப்படுவார்கள். போதையின்றி வாழ்வதற்குப் பழகிக் கொள்வார்கள். எனவேதான் நுட்பமான நுண்ணறிவு படைத்த இறைவன் மதுவை முற்றிலும் தடுத்து விடாமல் தொழுகை நேரத்தில் மட்டும் அருந்த வேண்டாம் என்று உத்தரவு பிரப்பித்தான்.


يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقْرَبُوا الصَّلٰوةَ وَاَنْـتُمْ سُكَارٰى حَتّٰى تَعْلَمُوْا مَا تَقُوْلُوْنَ
நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்;
(அல்குர்ஆன் : 4:43)

இந்த வசனம் இறங்குவதற்கு பின்வரும் சம்பவம் காரணமாக இருந்தது.

3673- حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ سُفْيَانَ حَدَّثَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ عَلَيْهِ السَّلاَمُ أَنَّ رَجُلاً مِنَ الأَنْصَارِ دَعَاهُ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ فَسَقَاهُمَا قَبْلَ أَنْ تُحَرَّمَ الْخَمْرُ فَأَمَّهُمْ عَلِيٌّ فِي الْمَغْرِبِ فَقَرَأَ: {قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ} فَخَلَطَ فِيهَا فَنَزَلَتْ: {لاَ تَقْرَبُوا الصَّلاَةَ وَأَنْتُمْ سُكَارَى حَتَّى تَعْلَمُوا مَا تَقُولُونَ}.
அலீ (ரலி) மற்றும் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்(ரலி) ஆகிய இருவரையும் அன்சாரி குலத்தைச் சார்ந்த ஒருவர் விருந்துக்கு அழைத்திருந்தார். அவ்விருவருக்கும் மதுவைக் குடிக்கக் கொடுத்தார்.(இச்சம்பவம்) மது தடை செய்யப்படுவதற்கு முன்பு (நடந்தது). அலீ(ரலி) அவர்கள் (போதையுடன்) குல் யா அய்யுஹல் காஃபிரூன் என்ற சூராவை ஓதி மக்களுக்கு மஃரிப் தொழ வைத்தார். (போதையின் காரணத்தினால்) தொழுகையில் தவறுதலாக ஓதி விட்டார். அப்போதுதான் (மேற்கூறப்பட்ட) அல்குர்ஆன் 4:43 வசனம் இறங்கியது அறிவிப்பவர்: அலீ(ரலி) நூல்: அபூதாவூத் (3186)

3) மூன்றாம் கட்ட நடவடிக்கையாக மதுவை முற்றிலும் தடை செய்தது.
*******************************
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْاَنْصَابُ وَالْاَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطٰنِ فَاجْتَنِبُوْهُ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏ 
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.
(அல்குர்ஆன் : 5:90)
اِنَّمَا يُرِيْدُ الشَّيْطٰنُ اَنْ يُّوْقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ فِى الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ وَعَنِ الصَّلٰوةِ‌ فَهَلْ اَنْـتُمْ مُّنْتَهُوْنَ‏ 
நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?
(அல்குர்ஆன் : 5:91)

580 -[17] (ﺣﺴﻦ) ﻭﻋﻦ ﺃﺑﻲ اﻟﺪﺭﺩاء ﻗﺎﻝ: ﺃﻭﺻﺎﻧﻲ ﺧﻠﻴﻠﻲ ﻻ ﺗﺸﺮﺏ اﻟﺨﻤﺮ ﻓﺈﻧﻬﺎ ﻣﻔﺘﺎﺡ ﻛﻞ ﺷﺮ. ﺭﻭاﻩ اﺑﻦ ﻣﺎﺟﻪ

என்னுடைய நண்பர் முஹம்மத் ஸல் அவர்கள் எனக்கு உபதேசம் செய்தார்கள் நீங்கள் மது அருந்த வேண்டாம் அது தான் அனைத்து தீமைகளின் திறவு கோளாக இருக்கிறது ( நூல்; இப்னு மாஜஹ் )

2777 -[19] (ﺻﺤﻴﺢ) ﻭﻋﻦ اﺑﻦ ﻋﻤﺮ ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻟﻌﻦ اﻟﻠﻪ اﻟﺨﻤﺮ ﻭﺷﺎﺭﺑﻬﺎ ﻭﺳﺎﻗﻴﻬﺎ ﻭﺑﺎﺋﻌﻬﺎ ﻭﻣﺒﺘﺎﻋﻬﺎ ﻭﻋﺎﺻﺮﻫﺎ ﻭﻣﻌﺘﺼﺮﻫﺎ ﻭﺣﺎﻣﻠﻬﺎ ﻭاﻟﻤﺤﻤﻮﻟﺔ ﺇﻟﻴﻪ» . ﺭﻭاﻩ ﺃﺑﻮ ﺩاﻭﺩ ﻭاﺑﻦ ﻣﺎﺟﻪ
மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்தவருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி صلى الله عليه وسلم அவர்கள் சபித்துள்ளார்கள். (ஆதாரங்கள் : அபூதாவுத்,, இப்னுமாஜா

புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆடல் பாடல் அரை நிர்வாணம் போன்ற அட்டூழியங்கள் அழிவு நாளின் அறிகுறிகளே!
*****************************************
5704- ِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلاَتٌ مَائِلاَتٌ رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ لاَ يَدْخُلْنَ الْجَنَّةَ وَلاَ يَجِدْنَ رِيحَهَا وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا)).
4316. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்,) மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு,மக்களை அடி(த்து இம்சி)ப்பார்கள். (இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை(முடி), கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; (ஏன்) சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக்கொண்டிருக்கும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 37. ஆடையும் அலங்காரமும்)

புத்தாண்டு கொண்டாட்டத்தில் பட்டாசுகளின் வீண் விரயம்
********************************************
407 - ﻭﻋﻦ ﺃﺑﻲ ﺑﺮﺯﺓ - ﺑﺮاء ﺛﻢ ﺯاﻱ - ﻧﻀﻠﺔ ﺑﻦ ﻋﺒﻴﺪ اﻷﺳﻠﻤﻲ - ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ - ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ - ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻻ ﺗﺰﻭﻝ ﻗﺪﻣﺎ ﻋﺒﺪ ﻳﻮﻡ اﻟﻘﻴﺎﻣﺔ ﺣﺘﻰ ﻳﺴﺄﻝ ﻋﻦ ﻋﻤﺮﻩ ﻓﻴﻢ ﺃﻓﻨﺎﻩ؟ ﻭﻋﻦ ﻋﻠﻤﻪ ﻓﻴﻢ ﻓﻌﻞ ﻓﻴﻪ؟ ﻭﻋﻦ ﻣﺎﻟﻪ ﻣﻦ ﺃﻳﻦ اﻛﺘﺴﺒﻪ؟ ﻭﻓﻴﻢ ﺃﻧﻔﻘﻪ؟ ﻭﻋﻦ ﺟﺴﻤﻪ ﻓﻴﻢ ﺃﺑﻼﻩ؟». ﺭﻭاﻩ اﻟﺘﺮﻣﺬﻱ، (2417). 2340 ﻭﻗﺎﻝ: «ﺣﺪﻳﺚ ﺣﺴﻦ ﺻﺤﻴﺢ». )
4 காரியம் பற்றி பதில் சொல்லாத வரை கியாமதில் மனித பாதங்கள் அசைய முடியாது அதில் 1.எவ்வாறு சமபாதித் தாய்? 2. எவ்வாறு செலவழித்தாய்?
3. தன் உடலை ( சக்தியை) எவ்வழியில் பயன்படுத்தினாய். ( நூல் : திர்மிதீ )

புத்தாண்டு காலண்டர்
***************************
ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதற்கு முன்பே புதிய காலண்டர் வாங்குவதும், விற்பதும் அன்பளிப்பாக கூட அச்சிட்டு கொடுப்பதும் முஸ்லிம்களிடையே கூட நடைபெறுகிறது. இந்த நேரத்தில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இஸ்லாமிய மாதங்களும் தொழுகை நேரங்களும் குறிப்பிடப்பட்ட காலண்டர்களை வாங்க வேண்டும். பிற மதத்தினர் வணங்கும் தெய்வங்களின் உருவப்படங்களை அச்சிட்டு விநியோகம் செய்யக்கூடாது.
முஸ்லிம் வியாபாரிகளில் சிலர் தங்களுடைய மாற்று மத நண்பர்களுக்கு அவர்களுடைய தெய்வங்களின் உருவப்படங்களை அச்சிட்டு காலண்டர் அன்பளிப்பாக வழங்குகின்றனர்.இது ஷிர்க்குக்கு துணை போகும் செயலாகும்.அதற்கு பதிலாக இயற்கைக்காட்சிகளை அச்சிட்டு தருவது தவறில்லை. ஏனென்றால் அல்லாஹ் கூறுகின்றான்.

ۘ وَتَعَاوَنُوْا عَلَى الْبِرِّ وَالتَّقْوٰى‌ وَلَا تَعَاوَنُوْا عَلَى الْاِثْمِ وَالْعُدْوَانِ‌ وَاتَّقُوا اللّٰهَ ‌ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‏ 
இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.
(அல்குர்ஆன் : 5:2)


எனவே முஸ்லிம்களாகிய நாம் இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகளில் உறுதியாக இருந்து மாற்றார்களின் கலாச்சாரங்களை தவிர்த்து இறையச்சத்தோடு வாழ்ந்து ஈமானோடு மரணிக்கும் பாக்கியத்தை நம் அனைவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக! ஆமீன்.

ஞாயிறு, டிசம்பர் 20, 2020

நான் ஸூறா முல்க் பேசுகிறேன்

நான் ஸூறா முல்க் பேசுகிறேன்

நான் ஸூறா முல்க். மக்கா தான் என் ஊர். என்னை அறியாதவர்கள் உங்களில் எவரும் இருக்கமாட்டார்கள். எல்லோரும் என்னை ஸூறா முல்க் என்பதற்கு பதிலாக ஸூறா தபாறக்கா என்று அழைப்பார்கள்.

இஷா - மஃரிப் இடையேயான நேரங்களில் தான் அதிகமாக ஓதப்படுவேன். எனக்கு முப்பது வசனங்கள் இருக்கிறது. என்னை ஓத  சில நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால் பலர் என்னை ஓத சோம்பறியாகவே உள்ளனர்.

ஆனால் எவரும் துணைக்கு இல்லாத போது நான் தான் அவர்களின் நண்பன் என்று அவர்களுக்கு தெரியாது.

யாராவது என்னை ஓதினால் அவர்கள் கப்றில் (மண்ணறையில்) வெளிச்சம் பெறுவார்கள். என்னை ஓதக்கூடியவர்கள் சுவனத்தில் நுழையும் வரை நான் அவர்களுக்காக வாதிடுவேன்.

மக்கள் இன்னும் என்னை கண்டுகொள்ளாமல் இருப்பதால் நான் மிகவும் வருத்தமாக இருக்கிறேன்.   உன் சிறந்த நண்பனாக என்னை உனக்கு ஆக்கி கொள்ள முடியாதா?

என்னைப்பற்றி வந்த ஹதீஸ்களின் மூலம் என்னை அதிகம் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.

*ففي الحديث أنه صلى الله عليه وسلم قال: سورة تبارك هي المانعة من عذاب القبر. رواه الحاكم،*

*وعن أبي هريرة ـ رضي الله عنه ـ عن النبي صلى الله عليه وسلم قال: إن سورة في القرآن ثلاثون آية شفعت لرجل حتى غفر له، وهي: تبارك الذي بيده الملك. رواه أبو داود والترمذ[12/08,*

*11 وعن ابن عباس قال: ضرب بعض أصحاب النبي صلى الله عليه و سلم خباءه على قبر ـ وهو لا يحسب أنه قبر ـ فإذا فيه إنسان يقرأ سورة تبارك الذي بيده الملك حتى ختمها، فأتى النبي صلى الله عليه و سلم فقال: يا رسول الله إني ضربت خبائي على قبر ـ وأنا لا أحسب أنه قبر ـ فإذا فيه إنسان يقرأ سورة تبارك الملك حتى ختمها. فقال رسول الله صلى الله عليه وسلم: هي المانعة، هي المنجية تنجيه من عذاب القبر. رواه الترمذي،*

பரிசுத்த குர்ஆனிலே 67-ம் அத்தியாயமான தபாறக்கா என்ற பெயரில் அறியப்படும் ஸூறாவிற்கு சில விஷேசமான சிறப்புகள் உள்ளது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லித் தந்துள்ளார்கள்.

30 வசனங்கள் அடங்கிய இந்த அத்தியாயத்தின் மிகப்பெரிய சிறப்பு கப்ற் வேதனையிலிருந்து விடுதலை பெறுவது என்பதாகும்.
நரக விடுதலையும், ஸிறாத் பாலத்தின் மீது பாதுகாப்பும், நபிகளாரின் ஷஃபாஅத்தும் இதன் மற்ற சிறப்புகளாகும்.

விசுவாசிகளின் மிக இக்கட்டான நிலையில் காப்பாற்ற வருகின்ற ஸூறாவாக இந்த ஸூறாவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிமுகப்படுத்தியதை ஹதீஸ்களில் பார்க்க முடியும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்;

'குர்ஆனில் முப்பது வசனங்கள் அடங்கிய ஒரு ஸூறா இருக்கிறது. அதை ஓதுகிறவர்களுக்கு பாவ மன்னிப்பு கிடைக்கும் வரைக்கும் அது சிபாரிசு செய்து கொண்டிருக்கும். அது தபாறக்கா என்ற ஸூறாவாகும்."

இமாம் குர்துபி  ரஹ்மதுல்லாஹி அலைஹி அறிவிக்கிறார்கள்;

"இந்த ஸூறாவை தினமும் ஓதும் நபருக்கு எந்த ஃபித்னாவும் (குழப்பவும்) அவரை பாதிக்காது."

"குர்ஆனில் முப்பது வசனங்கள் அடங்கிய ஒரு ஸூறா இருக்கிறது. அதை ஓதுபவன் சுவனம் செல்லும் வரைக்கும் அது சிபாரிசு செய்து கொண்டிருக்கும் அது தபாறக்கா என்ற ஸூறாவாகும்."   (கஸீனத்துல் அப்றார்)

தபாறக்கா ஸூறத்தினுடைய பொருள் உட்கொள்ளுவது அந்த ஸூறாவின் முதல் பகுதியிலாகும்.

'யாராவது ஸூறா முல்க் ஓதுவதை வழமையாக்கினால் அதில் விவரிக்கப்பட்ட விஷேச குணங்கள் அனைத்தும் அல்லா நாடினால் அவரில் சங்கமிக்கும். உயர்ந்த மகத்துவங்களும், பதவிகளும் அவருக்கு கிடைக்கும். அதிகாரம், செல்வாக்கு, பணம் கிடைக்கும் மற்றும் மக்களின் அன்பை பெற இந்த ஸூறா ஓதுவதை வழமையாக்கவும்." (கஸீனத்துல் அப்றார்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்;

"தபாறக்கா ஸூறா எல்லா விசுவாசிகளின் இதயங்களிலும் இருக்க வேண்டுமென நான் ஆசைப்படுகிறேன்." (தத்கிறத்துல் குர்த்துபி,ஹாக்கீம்)

கப்றுக்குள் (மண்ணறைக்குள்) கிடக்கும் மனிதனின் பாதத்தின் சுற்றுப்புறத்தில் அல்லாஹ்வின் தண்டனை வரும் போது அவனுடைய பாதங்கள் என்னை நெருங்க வழியில்லை என்று சொல்லும் காரணம் அவர் ஸூறா முல்க் ஓதுபவராக இருந்தார்.

நெஞ்சு, மற்றும் வயிற்றைக்கடந்து அல்லாஹ்வின் தண்டனை வரும் போது நீங்கள் இதை கடந்து வரமுடியாது என்று அவைகள் சொல்லும். ஏனெனில் அவர் ஸூறா முல்க் வழமையாக ஓதி வந்தார் என்று அவைகள் பதில் கூறும்.

பிறகு தலைவழியாக தண்டனை வரும் போது நீங்கள் இதை கடந்து வர இயலாது என அவை பதிலளிக்கும். ஏனெனில் இவர் ஸூறா முல்க் ஓதுபவராக இருந்தார் என்று தலை பதிலளிக்கும். (ஹாக்கீம்)

இந்த ஸூறா கப்ரின் வேதனையை, தண்டனையை தடுக்கும். இதை ஒரே இரவில் ஓதுபவர்களுக்கு நிறைய வெகுமதிகள் கிடைக்கும். தவ்ராத் வேதத்தில் இதன் பெயர் ஸூறா முல்க் என்பதாகும். (ஹாக்கீம்)

இதோ ஸூறா முல்க் பற்றிய மற்றொரு நபிமொழி...

இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அன்னவர்களிடம் ஒரு தோழர் வந்து சொன்னார்;

யா ரஸுலுல்லாஹ்! ஒரு கப்ருக்கு மேலே அது கப்ர் என தெரியாமல் கூடாரம் அமைத்து தங்கினேன் அப்போது கப்ருக்குள்ளே இருந்தவர் ஸுரா முல்க்கை முழுமையாக ஓதினார்.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்; 'அந்த( முல்க்) அத்தியாயம் நரக வேதனையை தடுக்கும். ஈடேற்றத்தை கொடுக்கும்.'   (அறிவிப்பு: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி 2815)

குர்ஆனில் முப்பது வசனங்கள் அடங்கிய ஒரு அத்தியாயம் இருக்கிறது. அதை ஓதுபவன் சுவனத்தில் நுழையும் வரை அது அவனுக்காக சிபாரிசு செய்து கொண்டிருக்கும். அந்த ஸூறாவின் பெயர் தபாறக்கா என்பதாகும். (கஸீனத்துல் அப்றார் 169)

ஸூறா முல்க் முப்பது வசனங்களும், 333 வாக்கியங்களும், 1321 எழுத்துக்களும் அடங்கிய ஒரு ஸூறாவாகும். (கஸீனத்துல் அப்றார்.)

கப்றின் தண்டனையிலிருந்து விடுதலை, பாவமன்னிப்புக்கு வழிவகுத்தல், தினமும் ஓதுபவர் சுவனம் செல்லும் வரைக்கும் சிபாரிசு செய்தல், அல்லாஹ்வுக்கு முன் ஓதுபவருக்காக சிபாரிசு, தினமும் ஓதுபவருக்கு நஷ்டங்கள் வராமலிருத்தல், தபாறக்கா ஸூறாவின் முதல் பகுதியில் கூறப்பட்ட விஷேசங்கள் அதை ஓதுபவரில் சங்கமித்தல், மக்கள் செல்வாக்கும், அதிகாரமும் பெறுதல், பொருளாதார முன்னேற்றம் கிடைத்தல்.

நான் எதிர்பார்த்தது போலவே நீ என்னை புரிந்து கொண்டாய் என்று நான் நம்புகிறேன். அதுப்போன்று உன்னுடைய சிறந்த நண்பனாகவும் நான் இருப்பேன் என்று நம்புகிறேன்.

உங்கள் வாழ்க்கையை அழகாக்க பணத்தை தேடித் தேடி அலைகிறீர்கள். பிறகு பத்திரமாக வங்கியில் பத்திரப்படுத்துகிறீர்கள். அதுப்போன்று கப்ற் என்கிற முதல் வீட்டில் நீங்கள் என்னை வைத்து அழகுப்படுத்துவீர்கள் என நான் நம்புகிறேன்.

நண்பர்களே!

குடும்பத்தினரும், நமக்கு சொந்தம் என்று பெருமையடித்து கொண்டு நடக்கும் நம் சொத்துக்களும், பணவும் எல்லாம் இங்கே தூக்கி வீசிவிட்டு தன்னந்தனியாக கப்ற் என்கிற வீட்டில் செல்ல உள்ளோம்.

அந்த வீட்டில் நாம் நுழையும் போது சில வேளை உங்களுடைய உற்ற நண்பர்களாக வரக்கூடியது பாம்புகளும், புழுக்களும், இருள் சூழ்ந்த கப்றில், நிமிர்ந்து நிம்மதியாக கிடக்க முடியாத சூழ்நிலையில் வெளிச்சமாக நான் உங்கள் முன் நிற்பேன்.

நீ என்னை நினைத்தால்(ஓதினால்) மட்டுமே போதும்.நான் உனக்காக மஹ்ஷரில் காத்து நிற்பேன்

உங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டில்

உங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள இந்த குறியீட்டிற்கு எல்லாம் என்ன அர்த்தம் என்று தெரியுமா..?
_____________________________

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் ஐந்து வகை இருக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா..?


பழைய ரேஷன் கார்டுகளில் முன் பக்கத்தில் எந்த வைகையைச் சேர்ந்த கார்டு இது என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். உதாரணத்திற்கு நீங்கள் பச்சை நிற ரேஷன் கார்டு வைத்திருந்தால் அதில் முன் பக்கம் அரிசி என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். அப்படி என்றால் அது அரிசி பெறுவதற்கு ஏற்ற ரேஷன் கார்டு ஆகும்.

அதே போன்று இப்போது புதிதாக நாம் பெற்று வரும் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குறியீடுகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம் என்று இங்குப் பார்ப்போம்.

TNPDS இணையதளத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வகையை எப்படி வகையைக் கண்டறிவது

www.tnpds.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று பயனர் நுழைவு என்ற தெரிவு இருக்கும். அதனைத் தேர்வு செய்த பிறகு நீங்கள் செல்லும் பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட பயனாளர் என்ற இடத்தில் உங்களது ரேஷன் கார்டுக்கு நீங்கள் அளித்த மொபைல் எண்ணை உள்ளிட்டு கடவுச்சொல்லை அனுப்பு என்ற தெரிவை தேர்வு செய்யவும்.


கடவுச் சொல் பெறுவது எப்படி
உங்களது மொபைல் எண்ணிற்கு ஒரு 7 இலக்க எண் குறுந்தகவலாக வரும் அதனைக் கீழ் இருக்கும் அங்கிகாரம் என்ற இடத்தில் உள்ளிட்டுப் பதிவு செய் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். இதற்கு அதிகபட்ச நேரம் 300 வினாடிகள் வரை எடுக்கும். ஒரு வேலை உங்களுக்குக் கடவுச் சொல் வரவில்லை என்றால் 1967/18004255901 என்ற வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகலாம்.


எங்குச் சென்று இணையதளத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வகையை எப்படி வகையைக் கண்டறிவது
கடவுச்சொல் உள்ளிட்டு உள் சென்ற பிறகு ஸ்மார்ட் கார்டு செயலாக்கம் என்பதைத் தேர்வு செய்த பிறகு உங்களது ஸ்மார்ட் காரின் விவரங்கள் அனைத்தையும் காண முடியும். அதில் வலது பக்கத்தில் என்எப்எஸ்எ அட்டை வகை என்று குறியிடப்பட்டு இருக்கும். அங்கு உங்களது அட்டை வகை என்ன என்பதை நீங்கள் கண்டறிய முடியும். அங்குக் காண்பிக்கப்படும் அட்டை வகைகளின் விளக்கம் என்னவென்று நாம் அடுத்துப் பார்ப்போம்.



PHHRICE குறியீடு
PHHRICE என்ற குறியீடு உங்கள் ஸ்மார்ட் ரேஷன் அட்டைக்கு இருந்தால் அரசி, பருப்பு , எண்ணை உள்ளிட்ட ரேஷன் கடைகளில் அளிக்கப்படும் அனைத்துப் பொருட்களையும் நீங்கள் வாங்க முடியும்.

Advertisement

Advertisement

PHAA குறியீடு
PHAA என்ற குறியீடு உங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் இருந்தால் 35 கிலோ அரிசி மற்றும் அனைத்துப் பொருட்களும் கிடைக்கும்.


NPHH குறியீடு
உங்களது ஸ்மார் ரேஷன் கார்டுகளில் NPHH அல்லது NPHH-L என்று குறிப்பிடபப்ட்டு இருந்தால் அரிசி உட்பட அனைத்துப் பொருட்களும் கிடைக்கும்.


NPHHS குறியீடு
NPHHS என்ற குறியீடு உங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டில் இருந்தால் சர்க்கரை மட்டும் கிடைக்கும்.


NPHHNC குறியீடு
NPHHNC என்ற குறியீடு இருந்தால் உங்களுக்கு எந்தப் பொருட்களும் கிடைக்கப்படாது. இதனை ஒரு அடையாள அட்டையாக மட்டும் பயன்படுத்த முடியும்.


ஸ்மார்ட் ரேஷன் கார்டு வகை எப்படிப் பிரிக்கப்படுகின்றது
ஸ்மார்ட் ரேஷன் கார்டு வகை அனைத்தும் டிஎன்பிடிஎஸ்(TNPDS) அதிகாரிகள் மூலமாக நீங்கள் பெறும் சம்பளத்தை வைத்து முடிவு செய்யப்படுகின்றது.


குறிப்பு
மேலும் இதில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளைத் தொடர்பு கொள்ளலாம். அல்லது அரசு உதவு மையம் எண்கள் 1967/18004255901-ஐ தொடர்புகொள்ளலாம்

வெள்ளி, டிசம்பர் 18, 2020

உளுவும் அறிவியலும்,

பிரான்சில் நடந்த ஒரு சம்பவம்.

ஒரு முஸ்லிம் "உளூ"செய்து கொண்டிருப்பதை
ஒரு 
"மூளை அறுவை சிகிச்சை நிபுணர்" 
நீண்ட
நேரம் பார்த்துக் கொண்டே இருந்தார், அவரிடம் 
நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று அம்மருத்துவர் கேட்டார், நான் பாகிஸ்தானை சேர்ந்தவன் என
அவர் சொன்னார், அதற்கு அவர் நீங்கள் இதைப்போல்
எத்தனைமுறை செய்வீர்கள் எனக் கேட்டார்,
தினமும் 5 வேளைக்கு செய்வோம் என பதிலளித்தார்,
ஆச்சரியம் அடைந்த அவர், உங்கள் நாட்டில் "மனநல மருத்துவமனை " எத்தனை உள்ளது என கேட்க,
இரண்டு, அல்லது மூன்று இருக்கும் என
நினைக்கிறேன் என்று அந்த முஸ்லிம் கூறினார்,

அதற்கு அந்த மருத்துவர், இந்த பிரான்ஸ் 
நாட்டில் எங்கு நோக்கினும் மனநல மருத்துவ மனைகளே அதிகம் என்றார் அதைப்பற்றி 
நாங்கள் ஆராய்ந்தோம்,

இயற்கையிலேயே "மூளை" தான் மனிதனின்
உடல் பகுதிக்கு முழுவதும் உத்தரவு இடுகிறது,
மேலும் நமது "மூளை" அதைச் சுற்றியுள்ள
திரவத்தால் மிதந்து கொண்டிருப்பதால்,
நாம் ஓடுகிறோம்,குதிக்கிறோம்,நடக்கிறோம்,
இதனால் நம் மூளைக்கு எவ்வித பாதிப்பும்
ஏற்படுவதில்லை,இத் திரவம் இல்லாவிட்டால் 
மனிதனின் மூளை வெகுவாக பாதித்துவிடும்,
செயலிழந்தும் விடும், இது கடவுள் மனிதனுக்கு 
கொடுத்த gift,

மூளையிலிருந்து மெல்லிய நரம்பு உண்டாகி
கழுத்து பிடிமானத்து வழியாக முழு உடலுக்கும் செல்கிறது,
தலைமுடி பராமரிப்பின்மையாலும், கழுத்துப்
பகுதி பலநாட்கள் தண்ணீரில் ஈரம் படாவிடாமலும்
அன்நரம்புகள் காய்ந்து அதிலிருந்து பாதிப்பு
ஏற்படுகிறது. எனவே ஒரு நாளைக்கு மூன்று 
தடவையாவது நீங்கள் தடவிய இடத்தில் 
[கழுத்துப் பகுதி. மஸஹ் செய்யுமிடம்] தண்ணீரால்
தடவினால் இந்த நோயை [மனநோய்]
தவிர்கலாம் என்றார்.

இது எங்கள் பல ஆண்டு ஆராய்ச்சி தீர்ப்பு.
நீங்கள் செய்வது போன்று [உளூ] முடிவில்
கழுத்துப் பகுதியில் தடவுவதைப் பார்த்தேன்,
நீங்கள் செய்வது போன்று எல்லோரும்
செய்தால் "கழுத்து பக்கவாதம்" ஏற்படாது
என்று அம் மருத்துவர் கூறினார்,

இஸ்லாம் நமக்கு கட்டளையிட்டிருப்பது
அனைத்தும் மனிதனின் நன்மைக்கே
நாம்தான் அது தமக்கு சுமையாக இருப்பது 
போல் நினைக்கிறோம்.

18/12/2020

வியாழன், டிசம்பர் 17, 2020

கரண்ட் பில் கணக்கு பார்க்க,


http://biogem.org/tool/TNEB/


பெண் காஜியார் உண்டு அவர்களைப் பற்றி செய்தி என்ன?

https://www.google.com/amp/s/www.bbc.com/tamil/india-41170706.amp

புதன், டிசம்பர் 16, 2020

புனித குர்ஆனில் அறிவுரைகள்,

புனித குர்ஆனில் சர்வ வல்லமையுள்ள அல்லாஹ்வின் 100 நேரடி அறிவுறுத்தல்கள் மனிதனுக்காக !!*

அல்லாஹ் சுபனாஹு வ'தஆலா நேரடியாக அல் குர்ஆன் மூலம் 100 வழிமுறைகளை எங்களுக்கு வழங்கியுள்ளான்:

1. பேச்சில் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளாதீர்கள் (3: 159)
2. கோபத்தைத் தடு (3: 134)
3. மற்றவர்களுக்கு நல்லது செய்யுங்கள் (4:36)
4. ஆணவம் கொள்ளாதே (7:13)
5. மற்றவர்கள் செய்த தவறுகளுக்கு மன்னிக்கவும் (7: 199)
6. மக்களிடம் லேசாக பேசுங்கள் (20:44)
7. உங்கள் குரலைக் குறைக்கவும் (31:19)
8. மற்றவர்களை கேலி செய்யாதீர்கள் (49:11)
9. பெற்றோரிடம் கடமையாக இருங்கள் (17:23)
10. பெற்றோருக்கு அவமரியாதை சொல்லாதீர்கள் (17:23)
11. அனுமதி கேட்காமல் பெற்றோரின் தனியார் அறைக்குள் நுழைய வேண்டாம் (24:58)
12. கடனை எழுதுங்கள் (2: 282)
13. யாரையும் கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டாம் (2: 170)
14. கடனாளர் கடினமாக இருந்தால் திருப்பிச் செலுத்த அதிக நேரம் ஒதுக்குங்கள் (2: 280)
15. வட்டி நுகர வேண்டாம் (2: 275)
16. லஞ்சத்தில் ஈடுபட வேண்டாம் (2: 188)
17. வாக்குறுதியை மீறாதீர்கள் (2: 177)
18. நம்பிக்கையை வைத்திருங்கள் (2: 283)
19. உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள் (2:42)
20. மக்களிடையே நீதியுடன் தீர்ப்பளிக்கவும் (4:58)
21. நீதிக்காக உறுதியாக நிற்கவும் (4: 135)
22. இறந்தவர்களின் செல்வம் அவரது குடும்ப உறுப்பினர்களிடையே விநியோகிக்கப்பட வேண்டும் (4: 7)
23. பெண்களுக்கும் பரம்பரை உரிமை உண்டு (4: 7)
24. அனாதைகளின் சொத்தை விழுங்க வேண்டாம் (4:10)
25. அனாதைகளைப் பாதுகாக்கவும் (2: 220)
26. ஒருவருக்கொருவர் செல்வத்தை அநியாயமாக நுகர வேண்டாம் (4:29)
27. மக்களிடையே தீர்வு காண முயற்சிக்கவும் (49: 9)
28. சந்தேகத்தைத் தவிர்க்கவும் (49:12)
29. உளவு பார்க்கவும் முதுகெலும்பாகவும் வேண்டாம் (2: 283)
30. உளவு பார்க்கவோ அல்லது பின்வாங்கவோ கூடாது (49:12)
31. தர்மத்தில் செல்வத்தை செலவிடுங்கள் (57: 7)
32. ஏழைகளுக்கு உணவளிப்பதை ஊக்குவிக்கவும் (107: 3)
33. தேவைப்படுபவர்களுக்கு உதவுங்கள்
அவற்றைக் கண்டுபிடிப்பதன் மூலம் (2: 273)
34. பணத்தை மிகைப்படுத்தாமல் செலவிட வேண்டாம் (17:29)
35. நினைவூட்டல்களுடன் தர்மத்தை செல்லாதது (2: 264)
36. விருந்தினர்களை க or ரவிக்கவும் (51:26)
37. நீங்களே நீங்களே பயிற்சி செய்த பின்னரே மக்களுக்கு நீதியைக் கட்டளையிடுங்கள் (2:44)
38. பூமியில் துஷ்பிரயோகம் செய்யாதீர்கள் (2:60)
39. மக்களை மசூதிகளில் இருந்து தடுக்க வேண்டாம் (2: 114)
40. உங்களுடன் போராடுபவர்களுடன் மட்டுமே போராடுங்கள் (2: 190)
41. போரின் ஆசாரங்களை வைத்திருங்கள் (2: 191)
42. போரில் பின்வாங்க வேண்டாம் (8:15)
43. மதத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை (2: 256)
44. எல்லா தீர்க்கதரிசிகளையும் நம்புங்கள் (2: 285)
45. மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ள வேண்டாம் (2: 222)
46. ​​இரண்டு முழுமையான வருடங்களுக்கு உங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுங்கள் (2: 233)
47. சட்டவிரோத உடலுறவை கூட அணுக வேண்டாம் (17:32)
48. ஆட்சியாளர்களை அவர்களின் தகுதியால் தேர்ந்தெடுங்கள் (2: 247)
49. ஒரு நபரை தனது எல்லைக்கு அப்பால் சுமக்க வேண்டாம் (2: 286)
50. பிளவுபடாதீர்கள் (3: 103)
51. இந்த பிரபஞ்சத்தின் அதிசயங்கள் மற்றும் படைப்பு பற்றி ஆழமாக சிந்தியுங்கள் (3: 191)
52. ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்களின் செயல்களுக்கு சமமான வெகுமதி உண்டு (3: 195)
53. உங்கள் இரத்த உறவில் உள்ளவர்களை திருமணம் செய்யாதீர்கள் (4:23)
54. குடும்பத்தை ஆண்கள் வழிநடத்த வேண்டும் (4:34)
55. மோசமாக இருக்க வேண்டாம் (4:37)
56. பொறாமைப்பட வேண்டாம் (4:54)
57. ஒருவருக்கொருவர் கொல்ல வேண்டாம் (4:92)
58. வஞ்சகத்திற்கு வக்கீலாக இருக்காதீர்கள் (4: 105)
59. பாவத்திலும் ஆக்கிரமிப்பிலும் ஒத்துழைக்காதீர்கள் (5: 2)
60. நீதியுடன் ஒத்துழைக்கவும் (5: 2)
61. ‘பெரும்பான்மை இருப்பது’ என்பது சத்தியத்தின் அளவுகோல் அல்ல (6: 116)
62. நீதியாக இருங்கள் (5: 8)
63. முன்மாதிரியாக குற்றங்களுக்கு தண்டனை (5:38)
64. பாவமான மற்றும் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக பாடுபடுங்கள் (5:63)
65. இறந்த விலங்குகள், இரத்தம், பன்றியின் சதை தடைசெய்யப்பட்டுள்ளன (5: 3)
66. போதை மற்றும் ஆல்கஹால் தவிர்க்கவும் (5:90)
67. சூதாட்ட வேண்டாம் (5:90)
68. மற்றவர்களின் தெய்வங்களை அவமதிக்க வேண்டாம் (6: 108)
69. மக்களை ஏமாற்ற எடை குறைக்கவோ அளவிடவோ வேண்டாம் (6: 152)
70. சாப்பிடுங்கள், குடிக்கலாம், ஆனால் அதிகமாக இருக்காதீர்கள் (7:31)
71. பிரார்த்தனை நேரங்களில் நல்ல துணிகளை அணியுங்கள் (7:31)
72. பாதுகாப்பை நாடுபவர்களைப் பாதுகாத்து உதவுங்கள் (9: 6)
73. தூய்மையைக் காத்துக்கொள்ளுங்கள் (9: 108)
74. அல்லாஹ்வின் கருணையின் நம்பிக்கையை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள் (12:87)
75. அறியாமையால் தவறு செய்தவர்களை அல்லாஹ் மன்னிப்பான் (16: 119)
76. கடவுளை அழைப்பது ஞானத்துடனும் நல்ல போதனையுடனும் இருக்க வேண்டும் (16: 125)
77. மற்றவர்களின் பாவங்களை யாரும் தாங்க மாட்டார்கள் (17:15)
78. வறுமைக்கு பயந்து உங்கள் பிள்ளைகளைக் கொல்ல வேண்டாம் (17:31)
79. உங்களுக்குத் தெரியாததைத் தொடர வேண்டாம் (17:36)
80. வீணானவற்றிலிருந்து விலகி இருங்கள் (23: 3)
81. அனுமதி பெறாமல் மற்றவர்களின் வீடுகளுக்குள் நுழைய வேண்டாம் (24:27)
82. அல்லாஹ்வை மட்டுமே நம்புபவர்களுக்கு அல்லாஹ் பாதுகாப்பு அளிப்பான் (24:55)
83. மனத்தாழ்மையுடன் பூமியில் நடங்கள் (25:63)
84. இந்த உலகத்தின் உங்கள் பகுதியை புறக்கணிக்காதீர்கள் (28:77)
85. அல்லாஹ்வோடு வேறு எந்த கடவுளையும் அழைக்க வேண்டாம் (28:88)
86. ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வேண்டாம் (29:29)
87. சரியாகச் சேருங்கள், தவறைத் தடைசெய்க (31:17)
88. பூமியெங்கும் கொடுமையில் நடக்காதீர்கள் (31:18)
89. பெண்கள் தங்கள் நேர்த்தியைக் காட்டக்கூடாது (33:33)
90. அல்லாஹ் எல்லா பாவங்களையும் மன்னிக்கிறான் (39:53)
91. அல்லாஹ்வின் கருணையை விரக்தியடைய வேண்டாம் (39:53)
92. தீமையை நன்மையால் விரட்டுங்கள் (41:34)
93. ஆலோசனையின் மூலம் விவகாரங்களைத் தீர்மானியுங்கள் (42:38)
94. உங்களில் மிக உயர்ந்தவர்கள் மிகவும் நீதியுள்ளவர்கள் (49:13)
95. மதத்தில் துறவறம் இல்லை (57:27)
96. அறிவு உள்ளவர்களுக்கு அல்லாஹ்வால் உயர் பட்டம் வழங்கப்படும் (58:11)
97. முஸ்லிமல்லாதவர்களை கனிவாகவும் நியாயமாகவும் நடத்துங்கள் (60: 8)
98. பேராசையிலிருந்து உங்களைக் காப்பாற்றுங்கள் (64:16)
99. அல்லாஹ்விடம் மன்னிப்பு கோருங்கள். அவர் மன்னிப்பும் கருணையும் கொண்டவர் (73:20)
100. கேட்பவரை விரட்ட வேண்டாம் (93:10)

_அல்லாஹ் தொடர்ந்து எங்களுக்கு வழிகாட்டவும், எங்களுக்கு விஷயங்களை எளிதாக்கவும். ஆமீன்!_

சனி, டிசம்பர் 12, 2020

முட்டாள்களிடம் எப்படிப் பேசுவது

முட்டாள்களிடம் எப்படிப் பேசுவது

அக்பர் ஒரு நாள் பீர்பாலிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, முட்டாள்களிடம் பேசுவது எப்படி? என்று கேட்டார்.

திடீரென்று இப்படி ஒரு கேள்வியை மன்னர் கேட்பார் என்று எதிர்பார்க்காத பீர்பால், அரசே, இதற்கான பதிலை நாளைக்குக் கூறுகிறேன் என்றார்.

மறுநாள் காலை – பீர்பால் டில்லிக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்திற்குச் சென்று ஒருவனிடம் நான் சொல்வது போல் செய்தால் நூறு வெள்ளிக்காசுகள் தருகிறேன் என்றார்.

அவனும் சரி என்றான். உன்னை நான் இப்போது மன்னரின் அரண்மனைக்கு அழைத்துச் சென்று மன்னரிடம் அறிமுகம் செய்து வைப்பேன். உன்னிடம் மன்னர் சில கேள்விகளைக் கேட்பார். மன்னர் என்ன கேள்விகள் கேட்டாலும் நீ மவுனமாகவே நின்று கொண்டிருக்க வேண்டும் என்றார். இருவரும் மன்னரைப் பார்க்கப் புறப்பட்டனர்.

பீர்பால், மன்னரிடம் அவனை அழைத்து சென்று அரசே, இவன் எனது உறவினன், படித்தவன், உலக அறிவு மிக்கவன். தாங்கள் என்ன கேள்விகள் கேட்டாலும், இவனால் உடனடியாகப் பதில் கூற முடியும்! என்று கூறி அவனை மன்னரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.

முட்டாள்களிடம் சில சமயம் பேச நேரிட்டால் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று அவனிடம் கேட்டார்.

மன்னர் கேட்ட கேள்விக்கு பதில் ஒன்றும் பேசாது, பீர்பால் சொன்னபடி அவன் மவுனமாக நின்றிருந்தான். மன்னர் பலமுறை கேட்டும் அவன் பதில் கூறாது வாய்மூடி மவுனமாகவே இருந்தான்.

பீர்பாலிடம், என்ன உங்கள் உறவினர் நான் பலமுறை கேட்டும் பதில் கூறாது மவுனம் சாதிக்கிறானே! நீங்கள் கூறியபடி இவன் அறிவாளியாக இருப்பான் என்று தெரியவில்லையே! என்றார்.

உடனே பீர்பால், அரசே தாங்கள் கேட்ட கேள்விக்குத்தான் பதில் கூறி விட்டானே என்றார்.

அக்பர், நான் கேட்ட கேள்விக்கு எங்கே பதில் கூறினான். மவுனமாகவே நின்று கொண்டிருக்கிறான் என்றார்.

அதற்கு பீர்பால், சில சமயம் முட்டாள்களிடம் பேச நேரிட்டால் மவுனமாக இருக்க வேண்டும் என்பதைத் தான் பேசாது வாய்மூடி மவுனமாகத் தெரிவிக்கின்றான் என்றார்.

முட்டாள்களுக்கு உதாரணமாக தன்னைப்பற்றி அல்லது எதனைப் பற்றி அவர்களிடம் பேசினாலும் அவர்களால் தக்க பதில் கூற முடியாது. ஆகையினால் அவர்களிடம் பேசாமல் இருப்பதே சிறந்ததாகும் என்பதை உணர்த்திய பீர்பாலின் அறிவைப் புகழ்ந்து பாராட்டினார் அக்பர்

வெள்ளி, டிசம்பர் 11, 2020

கண்ணேறு – (கண் திருஷ்டி) பாதிப்பை உண்டாக்குமா?

கண்ணேறு – (கண் திருஷ்டி) பாதிப்பை உண்டாக்குமா?

கண்ணேறு – (கண் திருஷ்டி) பாதிப்பை உண்டாக்குமா?

ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாத, மறுக்கப்பட வேண்டிய செய்திகளில் கண்ணேறு பற்றிய செய்தியும் ஒன்றாகும்.

(கண்ணேறு, கண்ணூறு, கண்படுதல், கண் திருஷ்டி என்றும் சொல்லப்படும்)

புனித அல்குர்ஆனின் கருத்துக்களுக்கு மாற்றமாக இருப்பதினால் சூனியம் பற்றிய செய்திகள் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் அமைந்திருப்பதைப் போல் கண் திருஷ்டி பற்றிய செய்திகளும் புனித குர்ஆனின் கருத்துக்கு மாற்றமாக அமைந்திருப்பதினால் ஏற்றுக் கொள்ள முடியாத செய்தியாக அமைந்திருக்கின்றது. கண் திருஷ்டி பற்றிய செய்திகளை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

கண் திருஷ்டி உண்மை, அதனால் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்துப்பட பல செய்திகள் இடம் பெற்றுள்ளன. அந்த செய்திகளை மொத்தமாக பார்த்த பின் இதில் உள்ள பிரச்சினை தொடர்பாக ஆராய்வோம்.

صحيح البخاري (7/  132)

5740 – حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «العَيْنُ حَقٌّ» وَنَهَى عَنِ الوَشْمِ

“கண் திருஷ்டி என்பது உண்மையே” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். மேலும் பச்சை குத்துவதைத் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி 5740, 5944

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கண்ணேறு உண்மையாகும். தலைவிதியை ஏதேனும் ஒன்று வெல்ல முடியுமானால், கண்ணேறு அதை வென்றிருக்கும். (கண்ணேறுக்குக் காரணமான) உங்களிடம் குளித்துக் கொள்ளுமாறு கோரப்பட்டால் குளித்துக்கொள்ளுங்கள்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் – 4405

இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கண் திருஷ்டியி(ன் தீயவிளைவி)லிருந்து விடுபட ஓதிப்பார்த்துக் கொள்ளும்படி கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரழி)

நூல் : புஹாரி – 5738

நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் ஒரு சிறுமியைப் பார்த்தார்கள். அவளுடைய முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரை ஒன்று இருந்தது. நபி(ஸல்) அவர்கள், ‘இவளுக்கு ஓதிப்பாருங்கள். ஏனெனில், இவள் மீது கண் திருஷ்டி ஏற்பட்டிருக்கிறது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)

நூல் : புஹாரி – 5739

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பாம்புக்கடிக்கு ஓதிப் பார்த்துக்கொள்ள “ஹஸ்ம்‘ குடும்பத்தாருக்கு அனுமதியளித்தார்கள். மேலும், அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்களிடம், “என் சகோதரர் (ஜஅஃபரின்) மக்களுடைய உடல்களை நான் மெலிந்திருக்கக் காண்கிறேனே ஏன்? அவர்கள் வறுமையில் வாடுகின்றனரா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அஸ்மா (ரலி) அவர்கள், “இல்லை; கண்ணேறு அவர்களை வேகமாகப் பாதிக்கிறது” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்களுக்கு ஓதிப்பார்ப்பீராக” என்று கூறினார்கள். நான் அவர்களிடம் (ஒரு துஆவை) எடுத்துரைத்தேன். நபி (ஸல்) அவர்கள் “(அதையே) அவர்களுக்கு ஓதிப் பார்ப்பீராக‘‘ என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் – 4423

என் தந்தை ஸஹ்ல் பின் ஹுனைப் (ரலி) அவர்கள் கர்ரார் எனும் இடத்தில் குளித்தார்கள். அவர்கள் அணிந்திருந்த ஆடையை கழற்றிய போது ஆமிர் பின் ரபீஆ பார்த்துக் கொண்டிருந்தார். ஸஹ்ல் வெண்மை நிற அழகிய தோல் உள்ள மனிதர் அப்போது ஆமிர் “இன்று நான் பார்த்ததைப் போன்று வேறு எப்போதும் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணின் தோலைக் கூடப் பார்த்ததில்லை என்று கூறினார். உடனே அவ்விடத்தில் ஸஹ்ல் (ரலி) அவர்களுக்கு முடியாமல் போனது. அவருக்கு காய்ச்சல் கடுமையானது. இறைத் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று ஸஹ்ல் அவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர் உங்களுடன் வர முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

உடனே அவரிடம் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தார்கள். ஆமிர் நடந்து கொண்ட விதம் பற்றி ஸஹ்ல் (ரலி) அவர்கள் இறைத் தூதரிடம் தெரிவித்தார்கள். அப்போது இறைத் தூதர் (ஸல்) அவர்கள் உங்களில் ஒருவர் ஏன் தன் சகோதரனை கொல்ல வேண்டும்? நீங்கள் (அவரிடம் விரும்பத்தக்க விஷயத்தைப் பார்க்கும் போது அவருக்காக) பரக்கத்தை வேண்டியிருக்கக் கூடாதா? கண்ணேறு என்பது உண்மையே. (ஆமிரே) நீங்கள் வுழூ செய்து அந்த நீரை ஸஹ்ல் இடம் கொடுங்கள் என்று கூறினார்கள். ஆமிர் (ரலி) அவர்கள் வுழூ செய்து அந்நீரை ஸஹ்ல் (ரலி) அவர்களிடம் கொடுத்தார்கள். இதன் பின் ஸஹ்ல் (ரலி) அவர்கள் எவ்விதப் பிரச்சினைகளும் இன்றி நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டு சென்றார்கள்.

அறிவித்தவர் :  அபூ உமாமா (ரலி) அவர்கள்,

நூல் : முஅத்தா மாலிக்-1471

கண் திருஷ்டி பற்றி மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள செய்திகளில் இருந்து கீழ் வரும் தகவல்களை நாம் புரிந்து கொள்ள முடியும்.

  • இறை நிர்ணயத்தை முந்தக் கூடிய எதுவும் இல்லை. அப்படியிருந்திருந்தால் அது கண் திருஷ்டியாகவே இருக்கும்.
  • கண் திருஷ்டியின் தீமையில் இருந்து விடுபட ஓதிப்பார்க வேண்டும்.
  • ஒரு சிறுமியின் முகத்தில் இருந்த கருஞ்சிவப்பான படர்தாமரைக்கு கண் திருஷ்டி தான் காரணம்.
  • ஜஃபர் அவர்களின் குடும்பத்தாரின் உடல் மெலிவுக்கு கண் திருஷ்டிதான் காரணம் என்று சொல்லப்படுகின்றது.
  • குளித்துக் கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து இன்னொருவர் ஆச்சரியப்பட்டதினால் குளித்த நபர் மயங்கி விழுந்து விட்டார்.

இந்தச் செய்திகள் பற்றி இனி விரிவாக ஆராய்வோம்.

பொதுவாகவே ஒரு பொருளை அல்லாஹ் எதற்காகப் படைத்துள்ளானோ அந்த காரியத்தைத் தான் குறித்த பொருளால் செய்ய முடியுமே தவிர, அதனைத் தவிர்த்த வேறு எந்த ஆற்றலும் அதற்கு இருக்காது.

கண் என்பது பார்ப்பதற்காக படைக்கப்பட்டதே தவிர, மற்றவர்களை வீழ்த்துவதற்காக படைக்கப்பட்ட ஒன்றல்ல. மனித உருப்புகள் ஒவ்வொன்ருக்கும் எப்படி ஒவ்வொரு வேலைகள் தரப்பட்டுள்ளனவோ அதே போல் கண்ணுக்கு பார்த்தல் என்ற வேலை இறைவனினால் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தாண்டி எந்தவொரு ஆற்றலும் கண்ணுக்குக் கிடையாது. ஆனால் மேற்கண்ட செய்திகள் கண் பார்வை மூலம் மற்றவர்களுக்கு நோய் உண்டாக்களாம், வீழ்த்தலாம் என்றெல்லாம் குறிப்பிடுகின்றன.

நாம் வாழும் இவ்வுலகில் கோடான கோடி பொருட்கள் இருக்கின்றன. மனிதக் கண்களினால் அவற்றுக்கு எந்த ஆபத்தும் நடைபெறவில்லை. ஆண்கள் பெண்களைப் பார்க்கின்றார்கள், பெண்கள் ஆண்களைப் பார்கிறார்கள், மலைகள், பூந்தோட்டங்கள், காடுகள், அருவிகள் என்று எத்தனையோ இடங்களையெல்லாம் மனிதர்களாகிய நாம் பார்க்கின்றோம், ரசிக்கின்றோம் ஆனால் அவற்றுக்கு மனித கண்களின் மூலம் எந்தத் தீங்கும் நடைபெறவில்லை.

இணைவைப்பை உண்டாக்கும் கண்ணேறு பற்றிய நம்பிக்கை.

புகாரி, முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் கண்ணேறு பற்றிய செய்திகள் பதிவு செய்யப்பட்டிருப்பதினால் குறித்த செய்திகள் உண்மையானவை தாம் என்ற நம்பிக்கையின் காரணமாகத் தான் பெரும்பாலானவர்கள் கண்ணேறு பற்றிய செய்திகளை நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். கண்ணேறு பற்றிய செய்திகளை நுனுக்கமாக ஆய்வு செய்து பார்த்தால் கண்ணேறு பற்றிய நம்பிக்கை நம்மை ஷிர்க்கின் பக்கம் இட்டுச் செல்கின்றது என்பது தெளிவான விஷயமாகும்.

அனைத்து ஆற்றல் அதிகாரங்களும் அல்லாஹ்வுக்கு மாத்திரமே உரியதாகும். இறைவனுக்குறிய ஆற்றல்கள் மனிதனுக்கு இருப்பதாகவோ, அல்லது அவற்றில் சிலது இருப்பதாகவோ நம்புவது இணைவைப்பை உண்டாக்கும் காரியமாகும்.

அல்லாஹ்வுக்கு ஏராளமாக பண்புகள் உள்ளன. அந்தப் பண்புகளில் ஏதாவது ஒரு பண்பு அல்லாஹ்வுக்கு இருப்பது போல் ஒரு மனிதனுக்கு உள்ளது என்று ஒருவன் நம்பினால் அந்தப் பண்பு விஷயத்தில் அல்லாஹ்வைப் போல் அந்த மனிதனைக் கருதியவர்களாக ஆகிவிடுவான். அதாவது அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவனாகி விடுவான். இதைப் பின்வரும் வசனங்களில் இருந்து நாம் அறிந்து கொள்ள இயலும்.

அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை மறந்து விட்டான். “எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?” என்று கேட்கிறான்.

(திருக்குர்ஆன்:36:78.)

அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.

(திருக்குர்ஆன்:42:11.)

அவனுக்கு நிகராக யாருமில்லை.

(திருக்குர்ஆன்:112:4.)

நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்த காலத்தில் மக்கா காபிர்கள் பல தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு வந்தார்கள். இதே நேரம் அனைத்து ஆற்றலும் அல்லாஹ்வுக்கும் இருப்பதாகவும் நம்பி வந்தார்கள். இவர்களின் நம்பிக்கையை இறைவன் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக அவர்களை இணை கற்பித்தவர்கள், முஷ்ரிகீன்கள் என்றே இறைவன் உலகுக்கு அறிமுகப்படுத்தினான்.

வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்றே கூறுவார்கள். ‘அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்’ என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.

(திருக்குர்ஆன்:29:63.)

‘வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று அவர்கள் கூறுவார்கள். ‘அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்’ என்று கூறுவீராக! எனினும் அவர்களில் அதிமானோர் அறிய மாட்டார்கள்.

(திருக்குர்ஆன்:31:25.)

‘வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று கூறுவார்கள். ‘அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்!’ என்று கேட்பீராக! ‘அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்’ என்று கூறுவீராக!

(திருக்குர்ஆன்:39:38.)

‘வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘மிகைத்தவனாகிய அறிந்தவனே இவற்றைப் படைத்தான்’ எனக் கூறுவார்கள்.

(திருக்குர்ஆன்:43:9.)

அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?

(திருக்குர்ஆன்:43:87.)

‘வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப் புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்?’ என்று கேட்பீராக! ‘அல்லாஹ்’ என்று கூறுவார்கள். ‘அஞ்ச மாட்டீர்களா’ என்று நீர் கேட்பீராக!

(திருக்குர்ஆன்:10:31.)

‘பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)’ என்று (முஹம்மதே!) கேட்பீராக! ‘அல்லாஹ்வுக்கே’ என்று அவர்கள் கூறுவார்கள். ‘சிந்திக்க மாட்டீர்களா?’ என்று கேட்பீராக!

(திருக்குர்ஆன்:23:84,85.)

‘ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?’ எனக் கேட்பீராக! ‘அல்லாஹ்வே’ என்று கூறுவார்கள். ‘அஞ்ச மாட்டீர்களா;?’ என்று கேட்பீராக!

(திருக்குர்ஆன்:23:86,87.)

‘பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)’ என்று கேட்பீராக! ‘அல்லாஹ்வே’ என்று கூறுவார்கள். ‘எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?’ என்று கேட்பீராக!

(திருக்குர்ஆன்:23:88,89.)

‘வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று கூறுவார்கள். அப்படியாயின் ‘எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?

(திருக்குர்ஆன்:29:61.)

மக்கத்துக் காஃபிர்கள் அல்லாஹ்வை நம்பியிருந்தார்கள், அவனது வல்லமையைப் புரிந்து வைத்திருந்தார்கள் என்பதை இந்த வசனங்கள் சந்தேகத்திற்கிடமின்றி அறிவிக்கின்றன.

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். ‘அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்’ என்றும் கூறுகின்றனர். ‘வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்’ என்று கூறுவீராக!

(திருக்குர்ஆன்:10:18.)

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் ‘அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை’ (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

(திருக்குர்ஆன்:39:3.)

இறைவனுக்கு இருக்கும் பண்புகள் முழுமையாக மற்றவர்களுக்கும் இருக்கின்றது என்று நம்புவது மாத்திரம் இணைவைப்பு அல்ல. மாறாக இறைவனுக்கு இருக்கும் ஆற்றல்களில் ஒரு சிறு பகுதியை மற்றவர்களுக்கு இருப்பதாக நம்பினாலும் அது இணைவைப்பாகவே இறைவனால் கருதப்படும் என்பதை மேற்கண்ட வசனங்கள் தெளிவாக நமக்கு உணர்த்துகின்றன.

மேற்கண்ட திருமறைக் குர்ஆன் வசனங்களில் இறைவன் தனக்குறியதாக சுட்டிக்காட்டியுள்ள பண்புகளை மனதில் வைத்துக் கொண்டு கண்ணேறு பற்றிய செய்திகளை நாம் ஆராய்ந்தால் கண்ணேறு பற்றிய நம்பிக்கை எந்த வகையில் இணைவைப்பை உண்டாக்குகின்றது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

அல்லாஹ் ஒருவருக்கு ஒரு கஷ்டத்தை தர நாடினால் அல்லாஹ்வே வந்து அதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. எந்தப் பொருளும் இல்லாமல், எந்தவொரு துணை சாதனமும் இல்லாமல் அதனை இறைவனால் செய்து முடிக்க முடியும். இதே வேலை மனிதன் ஒரு காரியத்தை செய்வதாக இருந்தால் ஏதாவது ஒரு துணை சாதனத்தின் மூலமே அதனை செய்ய முடியும்.

ஆனால் கண்ணேறு பற்றிய செய்திகளை நாம் பார்க்கும் போது இறைவன் மேலே குறிப்பிட்டுள்ள தனக்கே உரிய பண்புகளை மற்றவர்களுக்கும் உரியதாக ஆக்கும் விதமாக அமைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஒருவருக்கு ஏதாவது பாதிப்பை உண்டாக்க வேண்டும் என்றால் கண்ணால் பார்த்தாலே போதும் அவர் பாதிக்கப்பட்டு விடுவார் என்ற கருத்தைத் தான் மேற்கண்ட கண்ணேறு பற்றிய செய்திகள் நமக்கு தெரிவிக்கின்றன.

கண்ணால் பார்த்தாலே பாதிப்பு உண்டாகும் என்பது இஸ்லாத்தின் அடிப்படையை தகர்க்கும் ஒரு நம்பிக்கையாகும். ஒருவருக்கு பாதிப்பை உண்டாக்குவதும், நலவை நாடுவதும் இறைவனின் அதிகாரத்தில் உள்ள விஷயமாகும். அந்த அதிகாரத்தில் மனிதனுக்கும் பங்கு கேட்க்கும் விதமாக கண்களினால் ஒருவருக்கு தீங்கிழைக்க முடியும்  என்று நம்புவதும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிட்டு இணைவைப்புக்கு இட்டுச் செல்லும் காரியமாகும்.

குர்ஆன் கூறும் நிதர்சன உண்மைக்கு மாற்றமானதாகும்

ஒரு பொருளுக்கு இல்லாத ஆற்றல் அப்பொருளுக்கு இருப்பதாக யாராவது கூறினால் அந்த ஆற்றலை அவர் நிரூபித்துக் காட்ட வேண்டும்.

இப்ராஹீம் (அலை) அவர்களின் காலத்தில் ஒரு மன்னன் இறைவனுக்குரிய ஆற்றல் தனக்கு இருப்பதாக வாதிட்டான். இப்ராஹீம் (அலை) அவர்கள் அவன் பொய்யன் என்பதை நிரூபிக்க ஒரே ஒரு கேள்வியை அவனிடம் கேட்டார்கள். என்னுடைய இறைவன் சூரியனை கிழக்கே உதிக்கச் செய்கிறான். மேற்கே மறையச் செய்கிறான். உனக்கு இறைத்தன்மை இருந்தால் கிழக்கே உதிக்கும் சூரியனை மேற்கில் உதிக்குமாறு செய். மேற்கே மறையும் சூரியனை கிழக்கில் மறையுமாறு செய். என்று கேட்டார்கள். அந்த மன்னன் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் வாயடைத்துப்போனான்.

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? “என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்” என்று இப்ராஹீம் கூறிய போது, “நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்” என்று அவன் கூறினான். “அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!” என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

அல்குர்ஆன் (2 : 258)

இப்றாஹீம் நபியவர்கள் எந்த விதத்தில் கேள்வி கேட்டு மன்னன் சொல்வதை அசத்தியம் என்று நிரூபித்தார்களோ அதே விதத்தில் கண் திருஷ்டி பற்றிய செய்திகள் தொடர்பாகவும் கேள்வியெழுகின்றது. குறித்த செய்தி உண்மையானது, சத்தியமானது, புகாரி இமாம் பதிந்து விட்டால் அது அனைத்தும் உண்மை தான் என்றெல்லாம் பேசுபவர்கள் கண் திருஷ்டி பற்றிய செய்திகளுக்கு நிதர்சன ஆதாரங்களை முன் வைத்து நிரூபித்துக் காட்ட வேண்டும்.

இந்தச் செய்தியை சரியான செய்தி என்று வாதிடும் பலரும் இதனை நிரூபித்துக் காட்ட பின்வாங்குவதிலிருந்து, இவர்கள் யாரும் இதனை உளப்பூர்வமாக நம்பவில்லை, நம்மை எதிர்ப்பதற்காக வெற்று வார்த்தைகளை கூறிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை சந்தேகமற அறிந்து கொள்ள முடிகின்றது.

அல்லாஹ்வோ, அவனுடைய தூதரோ நிதர்சனத்திற்கு மாற்றமாக பொய் கூற மாட்டார்கள் என்று திருமறைக் குர்ஆன் தெளிவாக கூறுகின்றது.

அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்?

அல்குர்ஆன் (4 : 87)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கைக்கு)க்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அ(தைக் கூறுவ)தில் நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன். என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் வெறுக்குமானால், இன்னும் உங்களது தோல்களும் முடிகளும் (அதற்குக் கட்டுப்படாமல் அதை விட்டு) விரண்டு ஓடுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு (சாத்தியப்படுவதை விட்டும்) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் மிகத் தூரமானவன்.

அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி)

நூல்: அஹ்மத்-15478

கூர்ந்து பார்த்தவரை தடுக்காத நபியவர்கள்

நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் ஒரு பெண்ணை ஃபழள் பின் அப்பாஸ் என்ற நபித் தோழர் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த போது குறித்த நபித் தோழரின் முகத்தை திருப்பி விட்ட நபியவர்கள் கண்ணேறு தொடர்பில் எந்தவொரு தகவலையும் அந்த இடத்தில் குறிப்பிடவில்லை.

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(“விடைபெறும்’ ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  (என் சகோதரர்) ஃபள்ல் பின் அப்பாஸைத் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்த்திக் கொண்டார்கள். ஃபள்ல் மிகவும் அழகானவராயிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு மார்க்க விளக்கம் அளிப்பதற்காகத் தமது வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள். (அப்போது) “கஸ்அம்’ குலத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்டு வந்தார். அப்போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார். அந்தப் பெண்ணின் அழகு அவருக்கு ஆச்சரியத்தை ஊட்டியது. நபி (ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்தபோது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து பார்ப்பதைக் கண்டார்கள். உடனே ஃபள்லின் முகவாயைத் தமது கரத்தால் பிடித்து அப்பெண்ணைப் பார்க்கவிடாமல் அவரது முகத்தைத் திருப்பி விட்டார்கள்.

நூல் : புகாரி-6228

கண்ணேறு மூலம் ஏதாவது பாதிப்பு ஏற்படும் என்றிருக்குமானால் நபியவர்கள் பழ்ள் பின் அப்பாஸ் (ரலி) அவர்களின் முகத்தைத் திருப்பி விடும் போது இது பற்றி எச்சரித்திருப்பார்களே? ஏன் அந்தப் பெண்ணை அப்படிப் பார்க்கின்றாய்? இப்படிப் பார்த்தால் கண்ணேறு ஏற்பட்டு விடும் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்? ஆனால் மேற்கண்ட செய்தியில் அவ்வாறு எதனையும் நபியவர்கள் குறிப்பிடவில்லை என்பதிலிருந்து கண்ணுக்கு அவ்வாறான எவ்விதமான தாக்கமும் இல்லையென்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

நபியவர்களின் தலைமுடி கண் திருஷ்டியை நீக்குமா?

நபியவர்களின் மனைவி உம்மு சலமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடைய தலை முடியினால் கண் திருஷ்டிக்கு மருத்துவம் செய்ததாக ஒரு செய்தி புகாரி உள்ளிட்ட கிரந்தங்களில் இடம் பெற்றுள்ளது.

உஸ்மான் பின் அப்தில்லாஹ் பின் மவ்ஹப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் என்னை என் குடும்பத்தார் ஒரு தண்ணீர்ப் பாத்திரத்தைக் கொடுத்து அனுப்பிவைத்தார்கள். (உம்மு சலமா ஒரு சிமிழைக் கொண்டுவந்தார்கள்.) அது வெள்ளியால் ஆனதாக இருந்தது. அதில் நபி (ஸல்) அவர்களின் முடிகளில் ஒரு முடி இருந்தது. (பொதுவாக யாரேனும்) ஒருவருக்கு கண்ணேறு அல்லது நோய் ஏற்பட்டு விட்டால், அவர் தமது நீர் பாத்திரத்தை உம்மு சலமா (ரலி) அவர்களிடம் அனுப்பி வைப்பார். (அவர்கள் தம்மிடமிருந்த நபியவர்களின் முடியைத் தண்ணீருக்குள் முக்கி அனுப்புவார்கள். அதை நோயாளி குடிப்பார்.) நான் அந்தச் சிமிழை எட்டிப் பார்த்தேன். (அதில்) சில சிவப்பு முடிகளைக் கண்டேன்.

நூல் : புகாரி – 5896

மேற்கண்ட செய்தியில் நபி (ஸல்) அவர்களின் மனைவி உம்மு சலமா (ரலி) அவர்கள் நபியவர்களின் தலை முடிகளில் சிலதை புனிதமென்று எடுத்து வைத்திருந்ததாகவும், கண் திருஷ்டி அல்லது நோய் ஏற்பட்டவர்களுக்கு அதன் மூலம் மருத்துவம் செய்ததாகவும் மேற்கண்ட செய்தி சொல்கின்றது.

இது இஸ்லாத்தின் அடிப்படையை தகர்க்கும் ஒரு செய்தியாகும்.

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் அவர்கள் கண்டிப்பாக இப்படியானதொரு செயலை செய்திருக்க மாட்டார்கள். இது பொய்யான இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதற்கு அந்தச் செய்தியின் கடைசி பகுதியே போதிய ஆதாரமாக அமைந்துள்ளதை நாம் அவதானிக்கலாம்.

“நான் அந்தச் சிமிழை எட்டிப் பார்த்தேன். (அதில்) சில சிவப்பு முடிகளைக் கண்டேன்”. என்ற இந்த வாசகம் குறித்த செய்தி உண்மையில்லை என்பதை விளக்கும் விதமாகவே அமைந்துள்ளது.

நபி (ஸல்) அவர்களின் தலை முடி தொடர்பாக வந்துள்ள செய்திகளில் நபியவர்களின் தலைமுடி கருப்பாக இருந்தது பற்றியும், சில முடிகள் வெண்மையாக இருந்தமை பற்றியுமான அறிவிப்புக்களே இடம் பெற்றுள்ளது. ஆனால் குறித்த செய்தியில் – “நான் அந்தச் சிமிழை எட்டிப் பார்த்தேன். (அதில்) சில சிவப்பு முடிகளைக் கண்டேன்”.- என்று இடம் பெற்றுள்ளது.

கருப்பு முடிகளை கண்டேன் அல்லது வெள்ளை முடிகளை கண்டேன் என்று இடம் பெற்றிருந்தாலும் ஒரு வாதத்திற்காகவாவது இதனை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இரண்டுக்கும் அப்பால் சென்று சிகப்பு முடிகளை கண்டேன் என்பதே இது பொய்யான செய்தி என்பதற்கு போதுமானதாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை என்பெயரால் யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்.

அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள்

நூல்: முஸ்லிம்-01

இஸ்லாம் கூறும் தூய்மைக்கு மாற்றமானதாகும்

உலகில் உள்ள அத்தனை மதங்களையும் விட தூய்மையை வலியுறுத்தும் மார்க்கமாக இஸ்லாமே திகழ்கின்றது. ஆனால் கண்ணேறு பற்றிய செய்தியோ இஸ்லாம் கூறும் தூய்மையை கேள்விக்குள்ளாக்கும் விதமாக அமைந்துள்ளதை நாம் அவதானிக்க முடிகின்றது.

என் தந்தை ஸஹ்ல் பின் ஹுனைப் (ரலி) அவர்கள் கர்ரார் எனும் இடத்தில் குளித்தார்கள். அவர்கள் அணிந்திருந்த ஆடையை கழற்றிய போது ஆமிர் பின் ரபீஆ பார்த்துக் கொண்டிருந்தார். ஸஹ்ல் வெண்மை நிற அழகிய தோல் உள்ள மனிதர் அப்போது ஆமிர் “இன்று நான் பார்த்ததைப் போன்று வேறு எப்போதும் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணின் தோலைக் கூடப் பார்த்ததில்லை என்று கூறினார். உடனே அவ்விடத்தில் ஸஹ்ல் (ரலி) அவர்களுக்கு முடியாமல் போனது. அவருக்கு காய்ச்சல் கடுமையானது. இறைத் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று ஸஹ்ல் அவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர் உங்களுடன் வர முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

உடனே அவரிடம் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தார்கள். ஆமிர் நடந்து கொண்ட விதம் பற்றி ஸஹ்ல் (ரலி) அவர்கள் இறைத் தூதரிடம் தெரிவித்தார்கள். அப்போது இறைத் தூதர் (ஸல்) அவர்கள் உங்களில் ஒருவர் ஏன் தன் சகோதரனை கொல்ல வேண்டும்? நீங்கள் (அவரிடம் விரும்பத்தக்க விஷயத்தைப் பார்க்கும் போது அவருக்காக) பரக்கத்தை வேண்டியிருக்கக் கூடாதா? கண்ணேறு என்பது உண்மையே. (ஆமிரே) நீங்கள் வுழூ செய்து அந்த நீரை ஸஹ்ல் இடம் கொடுங்கள் என்று கூறினார்கள். ஆமிர் (ரலி) அவர்கள் வுழூ செய்து அந்நீரை ஸஹ்ல் (ரலி) அவர்களிடம் கொடுத்தார்கள். இதன் பின் ஸஹ்ல் (ரலி) அவர்கள் எவ்விதப் பிரச்சினைகளும் இன்றி நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டு சென்றார்கள்.

அறிவித்தவர் :  அபூ உமாமா (ரலி) அவர்கள்,

நூல் : முஅத்தா மாலிக்-1471

கண்ணேறு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நபியவர்கள் சொன்ன மருத்துவமாக இங்கு குறிப்பிடப்படும் செய்தி என்ன?

“(ஆமிரே) நீங்கள் வுழூ செய்து அந்த நீரை ஸஹ்ல் இடம் கொடுங்கள் என்று கூறினார்கள். ஆமிர் (ரலி) அவர்கள் வுழூ செய்து அந்நீரை ஸஹ்ல் (ரலி) அவர்களிடம் கொடுத்தார்கள். இதன் பின் ஸஹ்ல் (ரலி) அவர்கள் எவ்விதப் பிரச்சினைகளும் இன்றி நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டு சென்றார்கள்.”

மேற்கண்ட செய்தியில் இடம் பெற்றுள்ள தகவல் உண்மைக்குப் மாற்றமானதாகும். இதனை கீழ்வரும் செய்தியின் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் உளூச் செய்தால் தமது மூக்கிற்கு நீர் செலுத்தி (மூக்கை அசைத்து)ச் சிந்தட்டும்.  மலஜலம் கழித்துவிட்டு கற்களால் சுத்தம் செய்பவர் ஒற்றைப்படையாகச் செய்யட்டும். உங்களில் ஒருவர் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் அவர் தாம் உளூ செய்யப்போகும் பாத்திரத்திற்குள் கையை நுழைப்பதற்கு முன்னால் கையை கழுவிக்கொள்ளட்டும். ஏனென்றால் உங்களில் எவரும் இரவில் (உறங்கும்போது) தமது கை எங்கே கிடந்தது என்பதை அறியமாட்டார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி-162

தூக்கத்திலிருந்து தொழுகைக்காக எழுந்திருப்பவர் வுழு செய்வதற்கு முன் தமது கைகளை கழுவிக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது. காரணம் இரவில் தூங்கிய நேரத்தில் கை மர்ம உறுப்பிலோ அல்லது வேறு இடங்களிலோ அசுத்தங்களிலோ கூடப் பட்டிருக்கலாம் என்பதினால் தான் இஸ்லாம் மேற்கண்ட சட்டத்தினை நமக்கு சொல்லிக் காட்டுகின்றது.

நாம் தூங்கிய போது நமது கை வேறு எங்காவது பட்டிருக்குமோ என்பதற்காகவே கையை கழுவிய பின் வுழு செய்யுமாறு இஸ்லாம் வலியுறுத்தும் போது இன்னொருவரை வுழு செய்யுமாறு கூறி அவருடைய வுழு செய்த தண்ணீரைக் கொண்டு இன்னொருவருடைய உடலை கழுவுமாறு நபியவர்கள் கட்டளையிடுவார்களா? இது இஸ்லாம் வலியுறுத்தும் தூய்மையை கேள்விக்குள்ளாக்கும் காரியமல்லவா? கண்டிப்பாக நபியவர்கள் இப்படி செய்திருக்க மாட்டார்கள் என்பதே முஃமினான மக்களின் நம்பிக்கையாக இருக்க முடியும்.

கண்ணேறு தான் என்பதை எப்படி கண்டு பிடிப்பது?

ஒருவருக்கு நோய் ஏற்பட்டால் அதற்குக் காரணம் கண்ணேறுதான் என்பதை இன்றுள்ளவர்கள் எப்படி கண்டு பிடிப்பது? இந்தக் கேள்விக்கு கண்ணேறு உண்டு என்று நியாயம் பேசுவர்கள் பதில் தரக் கடமைப் பட்டுள்ளார்கள். ஒருவருக்கு நோய் ஏற்பட்டால் இன்னாரின் பார்வை காரணமாகத் தான் நோய் ஏற்பட்டது என்பதை எப்படி கண்டு பிடிப்பது?

அப்படி கண்டு பிடித்தால் சம்பந்தப்பட்டவரை வுழு செய்யுமாறு கூறி அந்தத் தண்ணீரில் பாதிக்கப்பட்டவர் தனது உடம்பைக் கழுவிக் கொள்ள வேண்டுமா?

இது முஸ்லிம்களுக்கு மாத்திரமா? காபிர்களுக்கும் சேர்த்ததா?

ஒரு காபிருக்கு முஸ்லிமினால் கண்ணேறு ஏற்படுமா?

ஏற்படும் என்றால் அதனை எவ்வாறு கண்டு பிடிப்பது?

ஏற்படாது என்றால், முஸ்லிமுக்கு மாத்திரம் தான் ஏற்படும் என்பதற்கு என்ன ஆதாரம்?

காபிருக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் முஸ்லிம் வுழு செய்து காபிருக்கு கொடுத்தால் சரியாகிவிடுமா?

ஒரு காபிர் மூலம் முஸ்லிமுக்கு கண்ணேறு ஏற்பட்டால், காபிர் வுழு செய்து முஸ்லிமுக்கு கொடுக்க வேண்டுமா?

காபிர் வுழு செய்த தண்ணீர் மூலம் முஸ்லிமுக்கு நோய் இல்லாமல் போகுமா?

வுழு பற்றிய சட்டங்கள் காபிர்களுக்கும் உண்டா?

இது போன்ற இன்னோரன்ன கேள்விகளுக்கு கண்ணேறு ஆதரவாளர்கள் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கின்றார்கள். இந்தக் கேள்விகளைத் தவிர்த்து கண்ணேறு உண்டென்று அவர்களினால் வாதிட முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

நபி தோழியர் வாழ்வினிலே,

நபி தோழியர் வாழ்வினிலே


وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏
மேலும், அவர்கள் இறைஞ்சிய வண்ணம் இருப்பார்கள்: “எங்கள் இறைவனே! எங்கள் மனைவிமார்களையும், எங்கள் குழந்தைகளையும், எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியவர்களாய் விளங்கச் செய்வாயாக! மேலும், எங்களை இறையச்சமுடையோருக்குத் தலைவர்களாய் திகழச் செய்வாயாக!”
(அல்குர்ஆன் : 25:74)

இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சமூகம்தான் கியாமத் நாள் வரை தோன்றும் சமூகங்களிலேயே சிறந்த சமுதாயமாகும்.

இறைத்தூதர் உருவாக்கிய அந்தச் சிறந்த சமுதாயத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் பல்வேறு மார்க்க விஷயங்களில் தலைசிறந்தவர்களாகத் திகழ்ந்துள்ளனர். அப்படிப் பட்ட நபித்தோழியர் வாழ்விலிருந்து சில வரலாற்றுத் துளிகளை இக்கட்டுரையில் நாம் காணவிருக்கின்றோம்.

ஆயிஷா (ரலி) அவர்களின் குர்ஆன் ஞானம்

அல்லாஹ்வின் தூதரின் அருமை மனைவியான அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் திருக்குர்ஆன் ஞானத்தில் மிகவும் தலைசிறந்து விளங்கியுள்ளனர். அவர்களின் திருக்குர்ஆன் ஞானத்திற்கு பின்வரும் சம்பவம் மிகச் சிறந்த உதாரணமாகும்.

மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் ‘‘அன்னையே! முஹம்மது (ஸல்) அவர்கள் தம் இறைவனை (மிஅராஜ்-விண்ணுலகப் பயணத்தின் போது நேரில்) பார்த்தார்களா?’’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நீங்கள் சொன்னதைக் கேட்டு என் ரோமம் சிலிர்த்து விட்டது. மூன்று விஷயங்கள் (பற்றிய உண்மைகள்) உங்களுக்கு எப்படித் தெரியாமல் போயின? அவற்றை உங்களிடம் யார் தெரிவிக்கின்றாரோ அவர் பொய்யுரைத்து விட்டார். ‘முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள்’ என்று உங்களிடம் யார் கூறுகிறாரோ அவர் பொய் சொல்லிவிட்டார்’’ என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) கண் பார்வைகள் அவனை எட்ட முடியாது; அவனோ அனைத்தையும் பார்க்கின்றான். அவன் நுட்பமானவனும், நன்கறிந்தவனும் ஆவான் எனும் (6:103ஆவது) வசனத்தையும், எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும் வஹியின் (வேத அறிவிப்பின்) மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பி வைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகின்றவற்றை அறிவிக்கச் செய்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லை எனும் (42:51ஆவது) வசனத்தையும் ஓதினார்கள். மேலும், ‘‘எவர் உங்களிடம் ‘முஹம்மது (ஸல்) அவர்கள் நாளை நடப்பவற்றையும் அறிவார்கள்’ என்று சொல்கிறாரோ, அவரும் பொய்யே சொன்னார்’’ என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) எந்த மனிதனும் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறான் என்பதை அறிவதில்லை எனும் (31:34ஆவது) வசனத்தை ஓதினார்கள்.

மேலும், ‘‘எவர் உங்களிடம் முஹம்மது (ஸல்) அவர்கள் (மக்களுக்கு எடுத்துரைத்து விடுமாறு பணிக்கப்பட்ட ஒன்றை) மறைத்துவிட்டார்கள் என்று சொன்னாரோ, அவரும் பொய்யே சொன்னார்’’ என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) தூதரே! உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கி வைக்கப்பட்டவற்றை (மக்களுக்கு) எடுத்துரைத்து விடுங்கள்… எனும் (5:67ஆவது) வசனத்தை ஓதினார்கள். மாறாக, முஹம்மது (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களையே அவரது (நிஜத்) தோற்றத்தில் இரண்டு முறை கண்டார்கள் என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி-4855

உம்மு ஹபீபா (ரலி) அவர்களின் பேணுதல்

நபி (ஸல்) அவர்களின் மனைவியாராகிய உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கடமையான தொழுகைகளைப் பேணியதுடன் சொர்க்கத்தில் ஒரு வீட்டைப் பெறுவதற்காக சுன்னத்தான தொழுகைகளில் மிகவும் பேணுதலாக இருந்துள்ளனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுகின்றாரோ அதற்காக அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது.

இதை உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை.

நூல்: முஸ்லிம்-1319

தர்மத்தில் சிறந்து விளங்கிய இப்னு மஸ்வூதின் மனைவி ஸைனப் (ரலி)

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலோ, அல்லது ஹஜ்ஜுப் பெருநாளிலோ முஸல்லா எனும் தொழும் திடலுக்குச் சென்று தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். ‘‘மக்களே! தர்மம் செய்யுங்கள்!’’ என்று மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று, ‘‘பெண்களே! தர்மம் செய்யுங்கள்; ஏனெனில் நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை நான் பார்த்தேன்’’ என்றார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஏன் இந்நிலை?’’ எனப் பெண்கள் கேட்டதும், ‘‘நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; கணவனுக்கு மாறு செய்கிறீர்கள்; கூரிய அறிவுடைய ஆண்மகனின் புத்தியை, அறிவிலும் மார்க்கத்தி(ன் கடமையி)லும் குறைவுடையவர்களாக உள்ள நீங்கள் போக்கிவிடுகிறீர்கள்’’ என்று நபி (ஸல்) கூறிவிட்டு, (வீட்டிற்குச்) சென்றார்கள்.

இப்னு மஸ்வூதின் மனைவி ஸைனப் (ரலி) வந்து வீட்டினுள் வர அனுமதி கோரினர். ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஸைனப் வந்திருக்கிறார்’’ என்று கூறப்பட்டது. எந்த ஸைனப்? என நபி (ஸல்) அவாகள் வினவ, ‘‘இப்னு மஸ்வூதின் மனைவி ஸைனப்’’ என்று கூறப்பட்டது. ‘‘அவருக்கு அனுமதி வழங்குங்கள்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் அனுமதி வழங்கப்பட்டது. அவர் (வந்ததும்) ‘‘அல்லாஹ்வின் தூதரே! தர்மம் செய்யுமாறு இன்று நீங்கள் கட்டளையிட்டீர்கள். என்னிடம் எனக்குச் சொந்தமான ஒரு நகை இருக்கிறது. அதை தர்மம் செய்ய நான் நாடினேன். (என் கணவர்) இப்னு மஸ்வூத், தாமும் தமது குழந்தைகளுமே அதைப் பெறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்கள் எனக் கூறுகிறார். (என்ன செய்வது?)’’ என்று கேட்டார். ‘‘இப்னு மஸ்வூத் கூறுவது உண்மைதான்! உன் கணவரும், உன் குழந்தைகளுமே உனது தர்மத்தைப் பெறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்கள்’’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி-1462

நற்காரியங்களில் கணவனுக்குத் துணை நின்ற ஸஹாபி பெண்மணி

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காகத்) தம் மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், ‘‘எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை’’ என்று பதிலளித்தார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), இவரை (தம்முடன் உணவில்) சேர்த்துக் கொள்பவர் யார்?… அல்லது இவருக்கு விருந்தளிப்பவர் யார்?… என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், நான் (விருந்தளிக்கிறேன்) என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு தம் மனைவியிடம் சென்றார்.

(மனைவியிடம்) ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய விருந்தாளியைக் கண்ணியப்படுத்து’’ என்று சொன்னார். அதற்கு அவருடைய மனைவி, ‘‘நம்மிடம் நம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவுமில்லை’’ என்று சொன்னார்.

அதற்கு அந்த அன்சாரித் தோழர், ‘‘உன் (குடும்பத்திற்கான) உணவைத் தயாராக எடுத்து வைத்து விட்டு விளக்கை ஏற்றி (விடுவதைப் போல் பாவனை செய்து அணைத்து) விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு’’ என்று சொன்னார்.

அவ்வாறே அவருடைய மனைவியும் உணவைத் தயாராக எடுத்து வைத்து, விளக்கை ஏற்றி விட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்து விட்டார். பிறகு விளக்கைச் சரி செய்வது போல் நின்று (பாவனை செய்து கொண்டே) விளக்கை அணைத்து விட்டார். பிறகு அவரும், அவரின் மனைவியும் உண்பது போல் (விருந்தாளியான) அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள்.

பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர். காலையானதும் அந்த அன்சாரி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றார். நபி (ஸல்) அவர்கள், நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு (மகிழ்ச்சியால்) சிரித்துக் கொண்டான்…அல்லது வியப்படைந்தான் என்று சொன்னார்கள். அப்போது அல்லாஹ், ‘தமக்கே தேவை இருந்தும் கூட, தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள். உண்மையில், எவர் தன் உள்ளத்தின் கருமித்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு விட்டார்களோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்’ என்னும் (59:9ஆம்) வசனத்தை அருளினான்.

நூல்: புகாரி-3798

உம்மு சுலைம் (ரலி) அவர்களின் இறைநம்பிக்கை

அனஸ் பின் மாலிக் (ரலி) கூறியதாவது:

அபூதல்ஹாவின் மகன் நோயுற்றிருந்தார். ஒரு நாள் அபூதல்ஹா (ரலி) வெளியே சென்றிருந்த போது குழந்தை இறந்து விட்டது. இதைக் கண்ட அபூ தல்ஹா (ரலி) அவர்களின் மனைவி, உடனே கொஞ்சம் உணவைத் தயாரித்தார். பிறகு மய்யித்தை வீட்டின் மூலையில் வைத்தார்.

வெளியே சென்றிருந்த அபூ தல்ஹா (ரலி) வீடு திரும்பியதும், மகன் எவ்வாறு இருக்கின்றான்? என்று விசாரித்தார். அதற்கு அவரது மனைவி, “அமைதியாகி விட்டான். நிம்மதி பெற்று விட்டிருப்பான் என்பதே என் எதிர்பார்ப்பு’’ என்று பதிலளித்தார். அபூதல்ஹா (ரலி) தம் மனைவி கூறியது உண்மை தான் என்றெண்ணி (நிம்மதியுடன்) தம் மனைவியோடு இரவைக் கழித்தார்.

பொழுது விடிந்து குளித்து விட்டு வெளியே செல்ல நாடிய போது மகன் இறந்து விட்டதை மனைவி கூறினார். அபூ தல்ஹா (ரலி) நபி (ஸல்) அவர்களோடு தொழுது விட்டுத் தம் வீட்டில் நடந்த சம்பவத்தை நபி (ஸல்) அவர்களிடம் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இந்த இரவு நடந்தவற்றில் அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அருள் செய்யக் கூடும்‘’ என்று கூறினார்கள்.

“அந்த இருவருக்கும் ஒன்பது குழந்தைகள் இருப்பதை நான் பார்த்தேன். அவர்கள் அனைவரும் குர்ஆனை ஓதுபவர்களாக இருந்தனர் என்று மதீனாவைச் சேர்ந்த அன்சாரிகளில் ஒருவர் கூறினார்’’ என்று சுஃப்யான் கூறுகின்றார்.

 நூல்: புகாரி-1301

இதே ஹதீஸ் முஸ்லிமில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.

உம்மு சுலைம் மூலமாக அபூ தல்ஹாவுக்குப் பிறந்த குழந்தை இறந்து விடுகின்றது. உடனே உம்மு சுலைம் தம் குடும்பத்தாரை நோக்கி, அவரது மகனின் (இறப்புச்) செய்தியை நான் அவரிடம் தெரிவிக்கும் வரை நீங்கள் தெரிவிக்காதீர்கள் என்று சொன்னார். அவர் வந்ததும் இரவு உணவை வழங்கினார். அவர் சாப்பிட்டு முடித்து நீர் பருகவும் துவங்கினார். பிறகு உம்மு சுலைம் இதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அபூதல்ஹாவிடம் காட்சியளித்தார். அவர் நன்றாகச் சாப்பிட்டு விட்டு இல்லறத்தில் ஈடுபட்டதும், “அபூ தல்ஹாவே! ஒரு கூட்டத்தார் ஒரு பொருளை ஒரு வீட்டாரிடம் இரவலாகக் கொடுக்கின்றனர். பின்னர் தாங்கள் இரவல் கொடுத்த பொருளைத் திருப்பிக் கேட்கும் போது, அவ்வீட்டார் கொடுக்காமல் இருப்பது முறையாகுமா?’’ என்று கேட்கின்றார். அதற்கு அபூ தல்ஹா (ரலி), “கூடாது’’ என்று பதிலளித்தார். “(அது போலத் தான்) உங்கள் மகனின் நிலையைக் கருதிக் கொள்ளுங்கள்’’ என்று சொல்கின்றார்.

அதற்கு அபூ தல்ஹா (ரலி), “என்னை நீ அசுத்தமடைய விட்டு விட்டு இப்போது என்னுடைய மகனைப் பற்றி அறிவிக்கின்றாயே?’’ என்று கோபப்படுகின்றார். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவிக்கின்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “சென்று விட்ட அந்த இரவில் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக’’ என்று துஆச் செய்தார்கள். அது போல் அவர்களுக்குக் குழந்தை பிறக்கின்றது. நபி (ஸல்) அவர்களிடம் அந்தச் செய்தி எடுத்துச் சொல்லப்படுகின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்சம்பழத்தை மென்று கொடுத்து அப்துல்லாஹ் என்று பெயர் வைத்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 4496

பொதுவாக பிள்ளைகளை இழந்த பெண்கள் தங்களைக் கட்டுப்படுத்துவது மிகவும் அரிது! அதனால் அழுது தீர்ப்பதோடு அல்லாஹ்வுக்கு எதிரான வார்த்தைகளைக் கூட அள்ளி வீசுவார்கள். ஆனால் இங்கு உம்மு சுலைம் (ரலி) தமது கணவரிடம், பொய்யைத் தவிர்ப்பதற்காக, “அமைதியடைந்து விட்டான், நிம்மதியடைந்து விட்டான் என்று கருதுகின்றேன்’’ என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றார்கள். மேலும் இரவல் பற்றிய பீடிகையைப் போட்டு நேரமறிந்து, மகன் இறந்த செய்தியை எவ்வளவு பக்குவமாக எடுத்து வைக்கின்றார்கள் என்று நாம் பார்க்க முடிகின்றது. இது போன்ற ஒரு பக்குவத்தையும், அணுகுமுறையையும் தமது கணவனிடம் பெண்கள் மேற்கொள்ள வேண்டும்.

கதீஜா (ரலி)யின் கனிவான ஆறுதல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதன் முதல் மிகப் பாரமான இறை வஹீயைப் பெற்று விட்டு நடுநடுங்கிக் கொண்டு வந்த நேரத்தில் கதீஜா (ரலி) உதிர்த்த வார்த்தைகள் இஸ்லாமிய வரலாற்றில் அழியாத வைர வரிகள் ஆகும்.

(நபி (ஸல்) அவர்களுக்கு முதன் முதல் வஹீ அறிவிக்கப்பட்ட போது) இதயம் படபடத்தவர்களாக – அந்த வசனங்களுடன் (தமது துணைவியார்) குவைலிதின் மகள் கதீஜா (ரலி)யிடம் வந்து, “என்னைப் போர்த்துங்கள். என்னைப் போர்த்துங்கள்’’ என்று கூறினார்கள். கதீஜா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் போர்த்தினார்கள். (நடுக்கம் தீர்ந்ததும்) கதீஜா (ரலி)யிடம், நடந்த செய்தியைத் தெரிவித்து விட்டு, தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என்று தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள். அப்போது கதீஜா (ரலி), “அவ்வாறு கூறாதீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒரு போதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். நீங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கின்றீர்கள். (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கின்றீர்கள். வறியவர்களுக்காக உழைக்கின்றீர்கள். விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள். உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகின்றீர்கள்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி-3

உம்மு ஸலமா (ரலி)யின் உயரிய ஆலோசனை

நபி (ஸல்) அவர்களும், தோழர்களும் உம்ரா செய்ய வந்த போது தடுத்து நிறுத்தப்படுகின்றார்கள். இதைத் தொடர்ந்து ஹுதைபிய்யா உடன்படிக்கை கையெழுத்தாகின்றது. கையெழுத்தான இந்த உடன்படிக்கையின் ஷரத்துக்கள் முஸ்லிம்களுக்குப் பாதிப்பைத் தரும் அம்சங்களாக இருந்தன.

இந்த நேரத்தில் நபித்தோழர்கள் சோகத்தில் மூழ்கிப் போயிருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “எழுந்திருங்கள்! அறுத்துப் பயிடுங்கள்! தலைகளை மழித்துக் கொள்ளுங்கள்!’’ என்று கட்டளையிடுகின்றார்கள். ஆனால் ஒருவரும் எழுந்திருக்கவில்லை. கட்டளைக்கு மாறு செய்ய வேண்டும் என்பது நபித்தோழர்களின் நோக்கமல்ல! ஒப்பந்தத்தில் இருக்கும் பாதகமான அம்சங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பது தான் அவர்களின் எதிர்பார்ப்புகள்! அதனால் தான் அசையாமல் உட்கார்ந்திருந்தார்கள். அப்போது உம்மு ஸலமா (ரலி) யோசனை வழங்குகின்றார்கள்.

“அல்லாஹ்வின் தூதரே! மக்கள் பலிப் பிராணியை அறுத்து விட்டு, தலைமுடி களைந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? புறப்படுங்கள். நீங்கள் குர்பானி ஒட்டகங்களை அறுத்து விட்டு உங்கள் நாவிதரை அழைத்து, அவர் உங்கள் முடியைக் களையும் வரை அவர்களில் எவருடனும் ஒரு வார்த்தையும் பேசாதீர்கள்’’ என்று உம்மு ஸலமா (ரலி) கூறினார்கள்.

உடனே நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு ஒட்டகங்களைக் குர்பானி கொடுத்து விட்டு, தம் நாவிதரை அழைத்துத் தலைமுடியைக் களைந்து கொண்டார்கள். அதுவரை அவர்கள் எவரிடமும் பேசவில்லை. இவற்றைக் கண்டவுடன் மற்ற நபித்தோழர்களும் எழுந்து சென்று பலிப் பிராணிகளை அறுத்து ஒருவர் மற்றவரின் தலை முடியைக் களையத் துவங்கினார்கள். ஒருவர் மற்றவரை நெரிசலால் சாகடித்து விடுவார்களோ எனும் அளவுக்குப் போட்டி போட்டுக் கொண்டு (பலிப் பிராணிகளை அறுக்கவும் முடி களையவும்) சென்றனர்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: புகாரி-2732

இந்த நெருக்கடியான கட்டத்தில் உம்மு ஸலமா (ரலி) அவர்களின் புத்திக் கூர்மைமிக்க யோசனை உண்மையில் சாதாரணமான ஒரு பிரச்சனை அல்ல! போர் தவிர்க்கப்பட்டு சமாதானம் உருவாவதற்கு அடிப்படையாக அமைந்தது.

மனைவிமார்களின் அணுகுமுறை உம்மு ஸலமா (ரலி)யின் அணுகுமுறை போன்று அறிவு ரீதியானதாகவும், கணவன் ஈடுபட்டிருக்கும் துறைக்கு உகந்ததாகவும், அவர் மாட்டியிருக்கும் சிக்கலைத் தீர்ப்பதாகவும் அமைந்திருக்க வேண்டும். கணவன் சந்திக்கும் பிரச்சனைகள் அரசியல் பிரச்சனையாகவும் இருக்கலாம். சாதாரணமான வீட்டுப் பிரச்சனையாகவும் இருக்கலாம்.

வீரப் பெண்மணி உம்மு சுலைம்

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுதுப் போரின் போது நபி (ஸல்) அவர்களை (தனியே) விட்டுவிட்டு மக்கள் தோற்று (ஓடி) விட்டனர். அபூ தல்ஹா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் தம் தோல் கேடயத்தால் மறைத்துக் கொண்டு பாதுகாத்தபடி நின்றார்கள்.

மேலும், அபூதல்ஹா (ரலி) அவர்கள் வில்லின் நாணை நன்கு இழுத்து வேகமாக அம்பெய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். அன்று அவர்கள், இரண்டு அல்லது மூன்று வில்களை உடைத்து விட்டார்கள். எவரேனும் ஒரு மனிதர் அம்புக் கூட்டுடன் செல்வதைக் கண்டால் நபி (ஸல்) அவர்கள், அதை அபூதல்ஹாவிடம் போடு என்று சொல்வார்கள். அந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் மேலேயிருந்து மக்களை (தலையை உயர்த்தி) எட்டிப் பார்க்க, அபூதல்ஹா அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்.

எட்டிப் பார்க்காதீர்கள். எதிரிகளின் அம்புகளில் ஏதேனும் ஒன்று தங்களைத் தாக்கி விடலாம். (தாங்கள் எட்டிப் பார்க்காமலிருந்தால்) என் மார்பு தங்கள் மார்புக்கு முன்னால் (கேடயம் போன்று உங்களுக்குப் பாதுகாப்பாக) இருக்கும் என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷா (ரலி) அவர்களும், (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களும் (காயமுற்றவர்களுக்கு) மும்முரமாக (பணிவிடைகள் செய்து கொண்டு) இருப்பதை நான் கண்டேன்.

அவர்கள் (தண்ணீர் நிரம்பிய) தோல் பைகளைத் தங்கள் முதுகுகளில் சுமந்து கொண்டு எடுத்துச் சென்று (காயமுற்று வீழ்ந்து கிடக்கும்) மக்களின் வாய்களில் ஊற்றிவிட்டு, பிறகு திரும்பிச் சென்று, அவற்றை (மீண்டும்) நிரப்பிக் கொண்டு வந்து, அவர்களுடைய வாய்களில் மீண்டும் ஊற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுடைய கால் கொலுசுகளை நான் கண்டேன். அபூ தல்ஹா (ரலி) அவர்களின் கரத்திலிருந்து இரு முறையோ மும்முறையோ வாள் (கீழே தவறி) விழுந்தது.

நூல்: புகாரி-4064

போர்க்களத்தில் நீர் புகட்டிய உம்மு சலீத் (ரலி)

மதீனாவாசிகளான பெண்களில் சிலரிடையே உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் பட்டாடைகளை (அல்லது கம்பளி ஆடைகளை) பங்கிட்டார்கள். அதில் தரமானதோர் ஆடை எஞ்சிவிட்டது. உமர் (ரலி) அவர்களுக்கு அருகில் இருந்த சிலர், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! இதனைத் தங்களிடமிருக்கும் (தங்களின் துணைவியாரான) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (மகளின்) மகளுக்குக் கொடுத்து விடுங்கள்’’ என்று கூறினர்.

அலீ (ரலி) அவர்களின் மகளான உம்மு குல்ஸூம் (ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டே (இப்படிக்) கூறினர். அப்போது உமர் (ரலி) அவர்கள், “உம்மு குல்ஸூமை விட உம்மு சலீத் அவர்களே இதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர்கள். மேலும், உம்மு சலீத் அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்த அன்சாரிப் பெண்களில் ஒருவராவார்.’’ என்று கூறினார்கள். (மேலும்) “அவர் எங்களுக்காக உஹுதுப் போர் நடந்த நாளில் தோலினால் ஆன தண்ணீர்ப் பைகளைச் சுமந்து கொண்டு வந்து கொண்டிருந்தார்’’ என்றும் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஅலபா பின் அபீ மாலிக்(ரலி)

நூல்: புகாரி-4071

நாயகத்திற்கு மருந்திட்ட அன்னை ஃபாத்திமா

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 

 உஹுதுப் போரின் போது நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட காயத்தைப் பற்றி என்னிடம் கேட்கப்பட்டது.

நபி (ஸல்) அவர்களின் முகம் காயப்படுத்தப்பட்டது. அவர்களுடைய (முன் வாய்ப்பற்களில் கீழ் வரிசையில் வலப்புறப்) பல் உடைக்கப்பட்டது. (அவர்களுடைய) தலைக் கவசம் அவர்களுடைய தலை மீதே (வைத்து) நொறுக்கப்பட்டது. ஃபாத்திமா (ரலி) அவர்கள் (நபியவர்களின் மேனியிலிருந்து வழிந்த) இரத்தத்தைக் கழுவிக் கொண்டிருந்தார்கள். அலீ -ரலியல்லாஹு அன்ஹு- அவர்கள் ரத்தத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்து வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள், இரத்தம் இன்னும் அதிகமாகிக் கொண்டு தான் போகிறது (நிற்கக் காணோம்) என்பதைப் பார்த்த போது ஒரு பாயை எடுத்துச் சாம்பலாகும்வரை அதை எரித்தார்கள். பிறகு, அதைக் காயத்தில் வைத்து அழுத்தினார்கள். உடனே, இரத்தம் (வெளியேறுவது) நின்று விட்டது.

நூல்: புகாரி-2911

அல்லாஹ்வின் வாக்குறுதி

முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்படும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.

(அல்குர்ஆன்:33:35.)

பிரபல்யமான பதிவுகள்