நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

ஞாயிறு, ஜனவரி 31, 2021

TNTJ, தவ்ஹீத் ஜமாஅத் மோசடி, வெறுத்து ஒதுக்கும் மக்கள்,

அன்புள்ள கொள்கைச் சகோதாரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள நாங்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கையில் (குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில்)  ஈர்க்கப்பட்டு அதன் நேர்மையில் நம்பிக்கை வைத்து அந்த இயக்கத்தில் நீண்ட காலமாக அங்கம் வகித்து வந்தோம். ஆனால் கடந்த மூன்று வருடங்களாக அந்த இயக்கத்தின் செய்ல்பாடுகளும்,  புதுவை மாநிலம், சுல்தான் பேட்டை, ARR  நகர் கிளை தற்போதைய நிர்வாகிகளின் நடவடிக்கைகளும் அந்த நம்பிக்கையை சிதைக்கும் வகையில் தலைகீழாக மாறிவிட்டதை அறிந்து அந்த இயக்கத்தில் இருந்து எங்களை முழுமையாக விலகிக் கொள்கிறோம். அதை விரிவாக கொள்கைச் சகோதாரர்களுக்குத் தெரிவிப்பதை எங்கள் கடமையாகக் கருதி அதை தெளிவுபடுத்துகிறோம்.

TNTJ புதுவை மாநிலம், சுல்தான் பேட்டை, ARR  நகர் கிளையில் இருந்து விலகுபவர்கள்  (1st  List):-

ரசூல் மாலிமார்  (முன்னாள் புதுவை மாவட்ட செயலாளர் & துணைத்தலைவர்)
சபியுதீன் KSF (முன்னாள் புதுவை மாவட்ட பொருலாளர் & முன்னாள் சுல்தான்பேட்டை கிளை தலைவர்  )
யூனுஸ் (முன்னாள் சுல்தான்பேட்டை கிளை தலைவர் & முன்னாள்  தாயீ ) 
அஹமதுல்லாஹ் (முன்னாள் சுல்தான்பேட்டை கிளை தலைவர் & முன்னாள் மாவட்ட தாயீ  ) 
ஜெகபர் சாதிக் (முன்னாள் சுல்தான்பேட்டை கிளை பொருலாளர் & முன்னாள் மாவட்ட நிர்வாகி)
ரஹமத்துல்லாஹ் AJ  (முன்னாள் சுல்தான்பேட்டை கிளை பொருலாளர்)
இல்யாஸ் (முன்னாள் சுல்தான்பேட்டை கிளை செயலாளர்)
கமாலுதீன் (முன்னாள் சுல்தான்பேட்டை கிளை தலைவர்)
ரியாஸுதீன் (முன்னாள் சுல்தான்பேட்டை கிளை துணை தலைவர்)
அபுபக்கர் சித்திக் AJ (TNTJ ஆதரவாளர், அன்னை ஆசியா மதராசாவிற்காக நிதி வசூலித்தவர்)
பஷீர் (முன்னாள் சுல்தான்பேட்டை கிளை தலைவர்)
ஜாகீர் உசைன் (முன்னாள் சுல்தான்பேட்டை கிளை செயலாளர்)
அஷ்ரப் KSF (TNTJ ஆதரவாளர்)
சம்சுல் ஆலம் (TNTJ ஆதரவாளர்)
அப்துல் அஜிஸ் (முன்னாள் TNTJ மருத்துவரணி)
முஹம்மது நாசர் (TNTJ ஆதரவாளர்)
முஹம்மது சலீம் (TNTJ ஆதரவாளர்)
முஜிபுர் ரஹ்மான் (TNTJ ஆதரவாளர்)
அப்துல் ரஹ்மான் (TNTJ ஆதரவாளர்)
உபைதுர் ரஹ்மான் (TNTJ ஆதரவாளர்)
கனிமத்துல்லாஹ் (TNTJ ஆதரவாளர்)
பாபர்  (TNTJ ஆதரவாளர்)
இம்தியாஸ் (TNTJ ஆதரவாளர்)
யாசர் (TNTJ ஆதரவாளர்)
உமர் (TNTJ ஆதரவாளர்)
சித்திக் (TNTJ ஆதரவாளர்)
முஹம்மது தாஹா (TNTJ ஆதரவாளர்)
ஹாஜா மொய்தீன் (TNTJ ஆதரவாளர்)
தமீமுல் அன்சாரி (TNTJ ஆதரவாளர்)
சலீம் (TNTJ ஆதரவாளர்)
அக்பர் (TNTJ ஆதரவாளர்)
ஜமாலுதீன் (TNTJ ஆதரவாளர்)
காசீம் (TNTJ ஆதரவாளர்)
சதக்கத்துல்லாஹ் (TNTJ ஆதரவாளர்)
முஹம்மது யூசுப் (TNTJ ஆதரவாளர்)
நஜிமுதீன் (TNTJ ஆதரவாளர்)
யாக்கூப் (TNTJ ஆதரவாளர்)
ஜாபர் அலி (TNTJ ஆதரவாளர்)
பரக்கத் அலி (TNTJ ஆதரவாளர்)
முஹம்மது ஆசிப் (TNTJ ஆதரவாளர்)
சிராஜுதீன் (TNTJ ஆதரவாளர்)
ஜலாலுதீன் (TNTJ ஆதரவாளர்)

கடந்த காலங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மீது எதிர்முகாமில் உள்ளவர்கள் பொருளாதாரக் குற்றச்சாட்டு சுமத்திய போது அன்றைய ஜமாஅத் அதை மிக நேர்த்தியாக கையாண்டு எந்த மோசடியும் இல்லை என்பதை உலகறியச் செய்து வந்தது, ஆனால் இன்று பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் தவ்ஹீத் ஜமாஅத் மீது வைக்கப்பட்டு வருகிறது. அவற்றுக்கு தவ்ஹீத் ஜமாஅத் பதில் சொல்ல முடியாமல் ஓடி ஒளியும் நிலையையும்  மாநில நிர்வாகிகள் ஆளுக்கு  ஒரு விளக்கம் கொடுத்ததை நம்மால் காண முடிந்தது.  உதாரணத்திற்க்கு ...

1. சிறுவர் இல்லக் கணக்கில் மோசடி :- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிறுவர் இல்லக் கனக்குகளை பொதுக்குழுவில் வாசித்தார்கள். அதில்  மொத்த வரவு  8,05,10,876.00(எட்டு கோடியே ஐந்து இலட்சத்து பத்தாயிரத்து எண்ணூற்று எழுபத்து ஆறு ரூபாய்).  செலவு மற்றும் சொத்து ரூ.6,67,99,927.00(ஆறு கோடியே அறுபத்து ஏழு இலட்சத்து தொன்னூற்று ஒன்பது ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபத்து ஏழு ரூபாய்) அதாவது 67 லட்சம் வருட செலவு என்றும் ஆறு கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கியுள்ளோம் என்றும் தெரிவித்தார்கள்.
ஆனால் சிறுவர் இல்லத்துக்காக ஆறு கோடி ரூபாய்க்கு எந்த சொத்தும் வாங்கப்படவில்லை. ஒரு கோடிக்கு கூட சொத்து வாங்கவில்லை.  அந்த சொத்து எது என்ற கேள்விக்கு இன்று வரை பதில் சொல்லாமல் கேள்வி கேட்பவரை திட்டி வருகிறார்கள்.

2. முதியோர் இல்லம் மோசடி :- மொத்த வரவு  : ரூ.3,61,19,859.00 (மூன்று கோடியே அறுபத்து ஒரு இலட்சத்து பத்தொன்பதாயிரத்து எண்ணூற்று ஐம்பத்து ஒன்பது ரூபாய்).  ஓராண்டில் முதியோர் இல்லத்திற்கான சொத்து, செலவு வகை: ரூ.1,84,06,245.00 ( ஒரு கோடியே எண்பத்து நான்கு இலட்சத்து ஆறாயிரத்து இருநூற்று நாற்பத்தைந்து ரூபாய்). அதாவது ஒரு கோடி ரூபாய்க்கு மேல்  சொத்து வாங்கியதாக கணக்கு காட்டினார்கள். ஆனால் முதியோர் இல்லத்துக்காக ஒரு பைசவுக்கும் சொத்து வாங்கவில்லை.  வாங்காத சொத்தை வாங்கியதாக சொல்லி பணத்தைக் கையாடல் பண்ணிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு இது நாள் வரைஉரிய பதில்  சொல்லவில்லை.

3. கஜா புயல் கணக்கு :- கஜா புயலைக் காரணம் காட்டி தவ்ஹீத் ஜமாஅத் பெரிய அளவில் மக்களிடம் நிதி திரட்டியது, அதன் கணக்கு விபரத்தை உணர்வு எனும் வார இதழில் வெளியிட்டனர். அந்தக் கணக்கில் இருந்து பல ஊழல் நடந்துள்ளது தெரியவந்ததால் இது குறித்து பலரும் ஒவ்வொன்றாக சுட்டிக்காட்டி ஊழல் நடந்துள்ளதை தட்டிக் கேட்டார்கள். இதற்கு விளக்கம் சொல்ல வேண்டிய தவ்ஹீத் ஜமாஅத் அதே உணர்வு இதழில் சில கணக்குகள் தவறுதலாக அச்சாகி விட்ட்து. அதை திருத்தி வெளியிடுகிறோம் என்று அறிவித்தார்கள். அவ்வாறு அறிவித்து சுமார் இரு ஆண்டுகள் மேல் ஆகப்போகிறது, இன்று வரை திருத்திய கணக்கை வெளியிடவில்லை.  இதில் இருந்து கஜாபுயல் பெயரால் பல லட்சம் ரூபாய்களைக் களவாடி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பதில் இல்லாமல் தவ்ஹீத் ஜமாஅத் கேவலப்பட்டு நிற்கிறது.

4. மதரஸா கட்டியது :-  திருச்சியில் ஒரு கோடி ரூபாய் செலவில் மதரஸா ஒன்றை கட்டியுள்ளனர். மதரஸாவுக்கு எந்த நிதியும் கையில் இல்லாமல் இருந்தும் அனாதைகள் பெயரால் வசூலித்த பணத்தில் இருந்து தான் கட்டியுள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளனர். அனாதைகள் பெயரால் வசூலித்த பணத்தை  வேறு பணிகளுக்குச் செலவிடுவது மார்க்கத்தில் (கூடுமா?) தடுக்கப்பட்டதாகும்.

5. மதுரை சிறுவர் இல்லம் :-  மதுரையில் ஒரு ட்ரஸ்ட்டுக்கு சொந்தமான ஒரு கட்ட்டம் இருந்தது, இது தவ்ஹீத் ஜமாஅத் ஆரம்பிக்கும் முன் மக்களிடம் நிதி திரட்டி வாங்கப்பட்டது. அதை அந்த ட்ரஸ்ட், தவ்ஹீத் ஜமாஅத்துக்கு அன்பளிப்பாக கொடுத்தார்கள். ஆனால் அந்த கட்டடத்தை தாங்கள் கட்டியதாக செலவு கணக்கு காட்டியுள்ளனர்.

6. இருமேனி சிறுமியர் இல்லம் :- இராமநாதபுரம் மாவட்டம் இருமேனியில், மாலிக் எனும் சகோதரர் சிறுமியர் இல்லம் நடத்த தனது இடத்தை பயன்படுத்த கொடுத்தார். சிறுமியர் இல்லம் மூடப்பட்டதால் அந்த இடம் அவரிடமே திருப்பிக் கொடுக்கப்பட்டு விட்டது.  ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தினர் இருமேனியில் சிறுமியர் இல்லத்துக்கு சொத்து வாங்கியதாக கணக்கு காட்டியுள்ளனர். அங்கே எந்தச் சொத்தும் சிறுமியர் இல்லத்துக்கு இல்லை.

7. நிர்வாக வருட செலவு மூன்றரை கோடி :-  பொதுக்குழுவில் நிர்வாகச் செலவு வருடத்துக்கு இரண்டு கோடி ரூபாய்கள் என்றும், இதர செலவு ஒன்றரைக் கோடி ரூபாய்கள் என்றும் கணக்கு வாசித்தார்கள். அதாவது மாதம் முப்பது லட்சம் ரூபாய் செலவு ஆகிறது என்று ..  சொந்தக் கட்ட்டடத்தில் தவ்ஹீத் ஜமாஅத் இயங்குவதால் வாடகை செலவு கூட இல்லை. இப்படி இருக்கும் போது, மாதம் முப்பது லட்சம் ரூபாய்க்கு என்ன செலவு என்ற கேள்விக்கு இதுவரை சரியான பதில் இல்லை. மாநில நிர்வாகத்தில் உள்ளவர்களில் அதிகமானவர்களுக்கு  கார்ப்பரேட் சம்பளம் கொடுத்து சொகுசாக வாழ்வதற்குத் தான் இவ்வாறு செலவு செய்துள்ளனர்.

8. மாநில தலைவருக்கு 23 லட்சம்  :-  மாநில தலைவரான சம்சுல்லுஹாவின் மனைவிக்கான மருத்துவச் செலவுக்கு 23 லட்சம் ரூபாய் கொடுத்தார்கள். இதை காரைக்கால் பொதுக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் ஒப்புக் கொண்டார்கள். ஜமாஅத் நிர்வாக வகையில் பணம் இல்லாமல் இருந்தும், ஜகாத் நிதியில் பணம் இல்லை என்று அறிவித்த நிலையில் அனாதைகள் பெயரால் வசூலித்த பணத்தில் இருந்து 23 லட்சம் ரூபாய்கள் ஜகாத்தாக கொடுத்துள்ளார்கள்.  மருத்துவ உதவியாக ஐயாயிரம் அல்லது  பத்தாயிரம் தான் கொடுப்பது வழக்கம். மிக முக்கியமான மருத்துவ உதவி என்றால் 25 ஆயிரம் கொடுப்பது தான் வழக்கம். 23 லட்சம் யாருக்கும் கொடுப்பதில்லை. இப்படி பாரபட்சமாக நடப்பது ஒரு புறம். அனாதைகள் பணத்தில் இருந்து கொடுத்த்து அதை விட பெரும்பாவம். இந்த பாவத்தையும் செய்துள்ளார்கள்.

9. எனிமி சொத்து வாடகை  :- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமை அலுவலகம் மத்திய அரசின் மேற்பார்வையில் (எனிமி சொத்து) உள்ள  சொத்தாகும். அதற்கு வாடகையாக வருடம் 16,800 ரூபாய்கள் தான் கொடுத்து வந்தார்கள். கடைசியாக 22 ஆயிரம் ரூபாய் வருட வாடகை கொடுக்கிறார்கள். ஆனால் வருடம் மூன்று லட்சம் ரூபாய்கள் வாடகை கொடுப்பதாக நேரடி லைவில் சென்ற வாரம் தெரிவித்தார்கள். இந்த வகையில் வருடம் இரண்டே முக்கால் லட்சம் ரூபாய்கள் களவாடியுள்ளார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.

எல்லையற்ற அநியாயங்கள்

துளசியா பட்டிணம் பள்ளிவாசல்  :- நாகை மாவட்டம் துளசியா பட்டிணத்தில், அந்த ஊர் சகோதர்ர் ஒருவர் பெயரில் உள்ள பள்ளிவாசலில் தவ்ஹீத் ஜமாஅத் செயல்பட அனுமதி அளித்தார்கள். தவ்ஹீத் ஜமாஅத்தின் செல்பாடுகள் பிடிக்காமல் தனித்து செயல்பட முடிவு செய்தார்கள். தனக்கு சொந்தமில்லாத இட்த்தில் ஜும்மாவில் அடியாட்களுடன் வந்த தவ்ஹீத் ஜமாஅத்தினர் பள்ளிவாசலில் அடிதடி நிகழ்த்தி பள்ளிவாசலுக்கு சீல் வைக்கும் வேலையை செய்தார்கள், கீழிருந்து மேலே வரை பிறர் சொத்தை களவாடும் போக்கும் பள்ளிவாசல் பூட்டும் போக்கும் இவர்களிடம் மிகைத்துள்ளது என்பதற்கு இது ஆதாரம்.   17 மாதங்கள் பள்ளிவாசல் பூட்டப்பட்டு கிடந்தது. அந்த ஊர்மக்கள் நீதிமன்றத்தில் வழக்காடி வென்று பள்ளிவாசலை திறந்து உள்ளூர் மக்கள் தற்போது நிர்வகித்து வருகின்றனர்.   பொதுமக்களாகிய நீங்கள் வழங்கும் நிதியை பள்ளிவாசலைப் பூட்டியதை நியாயப்படுத்தி வழக்கு தொடுக்க செலவிட்டனர்.

பொறையார் மர்கஸ்  :-  பொறையார் நகரில் சம்சுதீன் என்பவர் தனது வீட்டை பள்ளிவாசலாக பயன்படுத்திக் கொள்ள தவஹீத் ஜமாஅதுக்கு அனுமதித்து இருந்தார். இதற்காக அவர் வாடகை எதுவும் பெறவில்லை. அவரும் அவரது குடும்பத்தினரும் குடிசை வீட்டுக்கு வாடகை கொடுத்து குடியேறினார்கள்.  தவ்ஹீத் ஜமாஅத்தின் மார்க்க முரண், சமுதாய துரோகம், பொருளாதார களவு ஆகியவற்றில் அதிருப்தி அடைந்த சம்சு அவர்கள் காலி பண்ணி இட்த்தை ஒப்படைக்க கேட்டார்கள். அங்கேயும் அடியாட்களை இறக்கி மாநில நிர்வாகிகள் ரவுடித்தனம் செய்தார்கள். காவல் நிலையத்தில் சில நாட்கள் அவகாசம் கேட்டு உடனே நீதி மன்றத்துக்கு போனார்கள். அதாவது மாதாமாதம் வாடகை கொடுத்து வருவது போல் போலி ரசீது தயாரித்து வாடகைதாரரை உடனே காலி செய்ய முடியாது என்று உத்தரவு வாங்கினார்கள்.  பல மாதங்கள் இப்படி அராஜமாக தனியார் இட்த்தைக் கையகப்ப்டுத்தியதால் மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டவுடன் வேறு இடம் பார்த்துக் கொண்டு போனார்கள். போகும் போது அனைத்தையும் தகர்த்து விட்டு காலி இடமாக ஆக்கி சம்சுவிடம் ஒப்படைத்தார்கள். அவர் குடியிருக்கத்தக வகையில் வீடாக தான் கொடுத்தார். இவர்கள் அவ்வாறு திருப்பிக் கொடுக்கவில்லை.  தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகம் மட்டுமின்றி அனைத்து மட்ட நிர்வாகிகளும் இதற்கு ஒத்துழைப்பாக உள்ளனர். இபடிப்பட்ட ஜமாஅத்தில் பயணிப்பது இதற்கெல்லாம மறுமையில் பதில் சொல்லும் நிலையை நமக்கும் ஏற்படுத்தாதா?

பின்னத்தூர் பள்ளிவாசல்  :-  சிதம்பரம் பின்னத்தூரில் தவ்ஹீத் பள்ளி கட்ட சிரமப்பட்ட போது அன்றைய நிர்வாகம் பற்றாக்குறையாக இருந்த தொகைக்காக தனியாரிடம் 17 லட்சம் கடனாக வாங்கி கட்டடத்தைக் கட்டினார்கள். ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தில் பயணித்தால் நாமும் பாவத்தை சுமப்போம் என்று அஞ்சிய அந்த ஊர் தவ்ஹீத் சகோதார்கள் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். ஒரே ஒரு குடுமபம் தவிர மற்றவர்கள் விலகி விட்ட நிலையில் பள்ளிவாசலை பூட்டினார்கள்.  பள்ளிவாசலுக்காக தனியாரிடம் கடனாக வாங்கிய தொகையை கொடுத்து விட்டு பள்ளியை எடுத்துக் கொள்ளுங்கள் என்ற நியாயமான கோரிக்கையை ஏற்கவில்லை. வாங்கிய கடனை கொடுக்க மறுக்கிறார்கள்.  இவர்களுடன் நாம் பயணித்தால் இந்த பாவத்தில் நமக்கும் பங்கு வருமா வராதா?

கோவில்பட்டி பள்ளிவாசல் :-  கோவில் பட்டியில் ஒரு சகோதாரி இலவசமாக இடம் கொடுத்தார். வெளியூரில் வசூல் செய்யாமல் உள்ளூர் மக்களிடம் மட்டும் நிதி திரட்டி பள்ளியைக் கட்டினார்கள்.  இவர்களுடன் இனி பயணித்தால் பாவமூட்டையை சுமக்க வேண்டிவரும் என்று கருதி அனைவரும் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து விலகினார்கள்.  ஊரில் யாரும் இல்லை என்பதால் பள்ளிவாசலை பூட்ட வந்தார்கள். ஊர் மக்கள் எதிர்ப்பால் பூட்டாமல் திரும்பிப் போனார்கள்.  இது பள்ளிவாசல் அல்ல எங்கள் அலுவலகம் என பொய் வழக்கு போட்டு நீதிமன்ற உத்தரவுடன் பள்ளிவாசலைப் பூட்டி விட்டனர். இரண்டு வருடங்களாக அந்த ஊர் தவ்ஹீத் சகோதரர்கள் வெட்ட வெளியில் ஜும்மா தொழுது வருகின்றனர்.  தமிழகத்தில் உள்ள இயக்கங்களில் இவர்களைப் போன்ற அநியாயம் செய்யும் வேறு இயக்கம் இருக்கிறதா? சிந்தியுங்கள்.

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் :-  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆரம்பிப்பதற்கு முன்பே கொடிக்கால் பாளையம் தவ்ஹீத் சகோதரர்கள் "கொடிக்கால் பாளையம் தவ்ஹீத் முஸ்லிம் ஜமாஅத்" என்ற சங்கம் அமைத்து அதன் பெயரில் இடம் வாங்கி பள்ளிவாசல் கட்டி நிர்வகித்து வந்தனர். தவ்ஹீத் ஜமாஅதுடன் சேர்ந்து பணி செய்ய விரும்பினார்கள். தவ்ஹீத் ஜமாஅதுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.  அதாவது சொத்து உள்ளூருக்கு உரியது. தவ்ஹீத் ஜம்மாஅத் பெயரில் செயல்படுவது எனவும் பிரச்சனை ஏற்பட்டால் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து விலகி சொத்தை நிர்வாகம் செய்யலாம் என்பது தான் அந்த ஒப்பந்தம். அல்தாபி தலைவராக இருக்கும் போது பீஜேயின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது.  தவ்ஹீத் ஜமாஅத்தின் அராஜகம் பொருளாதார மோசடியின் காரணமாக அதில் இருந்து விலகுவதாக சென்ற வாரம் அறிவித்து எழுத்து மூலம் தெரிவித்தார்கள்.  இதை சகிக்க முடியாத தவ்ஹீத் ஜமாஅதினர் வெளியூரில் இருந்து கிளை நிர்வாகிகளை அடியாட்களாக அழைத்து வந்து பள்ளிவாசலை ஆக்ரமித்தார்கள். புது நிர்வாகம் அமைத்து விட்டோம் எனக்க்கூறி பள்ளிவாச்ல முழுவதும் டிஎண்டிஜே என்னும் ஸ்டிக்கரை ஒட்டினார்கள்.  தொழுகை நடத்த ஒரு இமாமையும் அழைத்து வந்து தொழுகை நடத்தினார்கள்.  உள்ளூரில் ஆதரவு இல்லாமல் இருந்தும் வெளியூர் ரவுடிகளை அழைத்து வந்து மூன்று நாட்கள் தர்பியா நடக்கும் என்று அறிவித்தனர்.  இந்த பள்ளியின் உண்மை நிலையை அறிந்த உள்ளூர் சுன்னத் ஜமாஅத்தினரும், தமுமுக, எஸ்டிபிஐ சகோதார்ர்களும் நியாயம் கேட்டு திரண்டார்கள். உங்கள் பெயரில் இல்லாத சொத்தை வெளியூர் ஆட்களை திரட்டி வந்து கைப்பற்றுவதை அனுமதிக்க மாட்டோம் என்று எச்சரிக்கை செய்தனர். பள்ளிவாசலில் சங்கு ஊதி ஊரைக் கூட்டுவோம் என்று சுன்னத் ஜமாஅத்தினர் விடுத்த எச்சரிக்கையால் வெளியூர் ஆட்கள் ஓட்டம் பிடித்தனர்.    அல்ஹம்துலில்லாஹ்

இப்படி கூட்டத்தை வைத்து பிறர் சொத்தை அபகரிக்கும் இவர்களின் அராஜகம் வெட்ட வெளிச்சமாகிய பின்னர் இவர்களுடன் பயனித்து நாமும் பாவிகளாக ஆக்க் கூடாது என்பதால் தான் விலகுகிறோம்.

மார்க்கத்தில் தவறான பத்வாக்கள்

குர்ஆன் ஹதீசுக்கு மாற்றமான பதவாக்கள் வழங்கி மக்களை வழிகெடுத்து வருவதும் அதிகமாகி வருகிறது.

• பிறைபார்த்த தகவல் இரவில் கிடைத்த பின்னர் பெருநாள் என்று அறிவிக்காமல் மறுநாளைக்கு பெருநாளை தள்ளிவைத்தார்கள்.

• அதே விஷயத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மட்டும் பெருநாள் கொண்டாடலாம் எனவும் விசித்திரமான பத்வா கொடுத்தனர்.

• மக்களைக் கூட்ட முடியாவிட்டால் மறுநாள் பெருநாளை தள்ளி வைக்கலாம் என்று நபிகள் சொன்னதாக எழுதினார்கள். இப்படி நபிகள் நாயகம் சொல்லவே இல்லை. பொய்யாக ஹதீஸை இட்டுக்கட்டி மக்களை பாவத்தில் தள்ளினார்கள்.

• பெருநாள் தொழுகை கட்டாயம் அல்ல. சுன்னதான தொழுகை தான். தொழாவிட்டால் குற்றம் இல்லை என்ற விசித்திரமான பதவா கொடுத்தார்கள்.

• சஹாபாக்கள் இஸ்லாத்தை ஏற்றபின் எந்த தவறும் செய்யவில்லை என்று மாநில நிர்வாகிகள் பொதுக்கூட்ட்த்தில் உரை நிகழ்த்தி இஸ்லாத்தின் அடைப்படைக்கு மாற்றமான வழியில் மக்களை அழைத்தார்கள்.

• எருமை மாட்டை குர்பானி கொடுக்க கூடாது என்று விசித்திரமான பத்வாவை கொடுத்தார்கள்.

• இருவருக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைக்கு அதில் சம்மந்தமில்லாதவர்கள் முபாஹலா செய்யலாம் என்று தவறான பதவா கொடுத்தார்கள்.

• இந்த ஜமாஅத் அல்லாஹ்வின் நேரடி கண்ட்ரோலில்  இயங்குகிறது என்று கூறி தரீக்காக்களின் கொள்கைக்கு மாறினார்கள்.

• அதிகாரம் உள்ளவர்களுக்கு கட்டுப்படுங்கள் என்ற வசனம் ஆட்சி அதிகாரத்தைக் குறிக்கும் ஆதாரத்துடன் முன்னர் சொல்லியதற்கு மாற்றமாக மாநில தலைமயாகிய எங்களுக்கு கட்டுப்படுவது அல்லாஹின் கட்டளை என்று பகிரங்கமாக அறிவித்தார்கள்.

• பெருநாள் தொழுகையை மக்ரிப் இஷா நேரத்திலும் தொழலாம் என்று விசித்திரமான பத்வா கொடுத்தார்கள்

• இவ்வள்வு அநியாயம் செய்யும் ஜமாஅத் தலைவர் இந்த ஜமாஅத்தின் அடிமட்ட தொண்டனின் இறையச்சம் எவனுக்கும் இல்லை என்று மார்க்கத்துக்கு விரோதமாக பேசியது.

இப்படி இன்னும் அனேக மார்க்க முரண்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் மலிந்துள்ளன.  எனவே இந்த ஜமாஅத்தில் பயணிப்பதும் அதற்கு ஆதரவு கொடுப்பதும் அதற்கு துணை செய்வதும் அவர்களின் அராஜகத்தை தடுக்காமல் இருப்பதும் பெரும்பாவம் என்பதால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து கூண்டோடு  விலகுகிறோம் என்பதை மனவேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறோம் .   தவ்ஹீத் கொள்கை என்பது TNTJ / NTF / JAQH / YMJ  இன்னும் பிற இயக்கத்தினருக்கு  சொந்தமானது இல்லை. அது தான் இஸ்லாத்தின் அடிப்படை. இன்ஷா அல்லாஹ் இறுதி வரை குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் வாழ்வதற்கும், மரணிப்பதற்கும்  எங்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக . நாங்கள் பயணிப்பதற்கு எந்த இயக்கமோ அல்லது ஜமாஅத்தோ தற்போதைக்கு தேவையில்லை என்பதை  தெரிவித்துக்கொள்கிறோம். 

மேலே நாம் சொன்னவைகளுக்கு ஆதாரங்கள் தேவை என்று கருதுவோர் எதற்கு ஆதாரம் தேவை என்று இந்த 9443705512,9677760756, 9047006056, 9367606572 எண்களில் தெரிவித்தால் உரிய ஆதாரம் அனுப்பி வைக்கப்படும். இன்ஷா அல்லாஹ்

சனி, ஜனவரி 30, 2021

அஸ்ஹாபுல் கஹ்ப் குகை தோழர்களுடைய கிறிஸ்துவப் பெயர்கள் ,

அஸ்ஹாபுல் கஹ்ப் குகை தோழர்களுடைய கிறிஸ்துவப் பெயர்கள் 

1) மக்ஸல் மீனா
2) தம்லீகா
3) மர்தூனஸ் 
4) நைனூனஸ் 
5) ஸாரபூனஸ் 
6) தூநவானஸ்
7) பல்யஸ்தத யூனஸ்

அவர்கள் வாழ்ந்த காலத்தில் ரோமை ஆட்சி புரிந்த கொடிய அரசனின் பெயர்  தக்யானூஸ்

உணவு வாங்க பட்டினம் சென்றார்"
பெயர் :- தம்லீகா

பட்டிணம் சென்ற தம்லீகாவை விசாரித்த அதிகாரிகளின் பெயர்கள் 
1) அர்யூஸ்
2) தன்தியூஸ்"

இக்குகை அமைந்துள்ள இடம் : -

ஜோர்டான் அதன் தலைநகரம் அம்மானுக்கு அருகில் ரக்கீம் என்ற இடத்தில் அமைந்துள்ளது"

குகை தோழர்களின் கப்ருகளுக்கு மேல் அடையாளமாக கோபுரமும் கப்ருகளுக்கு அருகில் மஸ்ஜித் பள்ளிவாசலை அமைத்த முஃமின்கள் பற்றி திர்குர்ஆன்

وَكَذٰلِكَ اَعْثَرْنَا عَلَيْهِمْ لِيَـعْلَمُوْۤا اَنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّاَنَّ السَّاعَةَ لَا رَيْبَ فِيْهَا ‌ اِذْ يَتَـنَازَعُوْنَ بَيْنَهُمْ اَمْرَهُمْ‌ فَقَالُوا ابْنُوْا عَلَيْهِمْ بُنْيَانًـا ‌  رَبُّهُمْ اَعْلَمُ بِهِمْ‌ قَالَ الَّذِيْنَ غَلَبُوْا عَلٰٓى اَمْرِهِمْ لَـنَـتَّخِذَنَّ عَلَيْهِمْ مَّسْجِدًا‏

குர்ஆன் கூறுகிறது (மரணித்தவர்களை உயிர்ப்பிப்பவனாகிய) அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது என்றும், மறுமை வருவதில் யாதொரு சந்தேகமுமில்லை என்றும், (இதன் மூலம் அப்பட்டினவாசிகளான) அவர்கள் உறுதியாக அறிந்து கொள்ளும் பொருட்டு இவ்வாறு (உணவு தேடி அங்கு செல்லும்படி செய்து) அவர்களுக்கு (இவர்களைக்) காட்டிக் கொடுத்தோம். (அந்நகரவாசிகள் இவர்கள் இருந்த குகைக்கு வந்து) "இவர்கள் யார் என்பதைப் பற்றித் (தங்களுக்குள்) தர்க்கித்துக் கொண்டு, இவர்களை இறைவன்தான் நன்கறிவான் என்றும், இவர்கள் இருக்கும் இடத்தில் (உயர்ந்த) ஒரு கோபுரத்தை (ஞாபகார்த்தமாக) எழுப்புங்கள்" என்றும் கூறினார்கள். (இந்தத் தர்க்கத்தில்) எவர்களுடைய அபிப்பிராயம்  மேலோங்கியதோ அவர்கள் "இவர்கள் இருக்கும் இடத்தில் ஒரு பள்ளியை நிச்சயமாக நாம் அமைத்து விடுவோம்" என்றார்கள்.
(அல்குர்ஆன் : 18:21)

ذَٰلِكَ وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ

இறைவன் கூறுகிறான். எவர் அல்லாஹ்வின் அடையாள (ஞாபகச்) சின்னங்களை கண்ணியப்படுத்துகிறாறோ அது அவருடைய உள்ளத்தின் இறை அச்சத்தை அறிவிக்கிறது.
(அல்குர்ஆன் : 22:32)

வெள்ளி, ஜனவரி 29, 2021

நோய் பற்றி இஸ்லாம்,

அல்லாஹ் [ﷻ]  திருமறையில் கூறுகின்றான்:- قال الله تعالى ♣

اِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ اذْكُرْ نِعْمَتِىْ عَلَيْكَ وَعَلٰى وَالِدَتِكَ‌ ۘ اِذْ اَيَّدْتُّكَ بِرُوْحِ الْقُدُسِ تُكَلِّمُ النَّاسَ فِىْ الْمَهْدِ وَكَهْلًا ۚوَاِذْ عَلَّمْتُكَ الْـكِتٰبَ وَالْحِكْمَةَ وَالتَّوْرٰٮةَ وَالْاِنْجِيْلَ‌ ۚ وَاِذْ تَخْلُقُ مِنَ الطِّيْنِ كَهَيْـــٴَــةِ ‏ الطَّيْرِ بِاِذْنِىْ فَتَـنْفُخُ فِيْهَا فَتَكُوْنُ طَيْرًۢا بِاِذْنِىْ‌ وَ تُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ بِاِذْنِىْ‌ ۚ وَاِذْ تُخْرِجُ الْمَوْتٰى بِاِذْنِىْ‌ ۚ وَاِذْ كَفَفْتُ بَنِىْۤ اِسْرَآءِيْلَ عَنْكَ اِذْ جِئْتَهُمْ بِالْبَيِّنٰتِ فَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْهُمْ اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ‏

அல்லாஹ் கூறுவான்: “மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையயை) நினைவு கூறும்; [1] பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து [2] நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்), வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும், [3] இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்); [4] இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், [5] இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் upகுருடனையும், [தொழுநோயுடையவரை] வெண் குஷ்டக்காரனையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்); [6] இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்); அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், “இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை” என்று கூறிய வேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும்.. [அல்குர்ஆன் 5:110, 3:49]

♣ நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:-  كما قال النبي صلى الله عليه وسلم ♣

 أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “” لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ وَلاَ هَامَةَ وَلاَ صَفَرَ، وَفِرَّ مِنَ الْمَجْذُومِ كَمَا تَفِرُّ مِنَ الأَسَدِ 

“தொற்றுநோய் என்பது கிடையாது. பறவைகளைக்கொண்டு சகுனம் பார்ப்பதும் ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது. ‘ஸஃபர்’ மாதம் பீடை என்பதும் கிடையாது. சிங்கத்திடமிருந்து நீ எப்படி வெருண்டோடுவாயோ அப்படி தொழுநோயாளியிடமிருந்து வெருண்டோடு” (புகாரி 5707 )

மேற்கண்ட  அல்குர்ஆனின் ஆயத்துகளில்:- அல்லாஹ் ஈஸா (عَلَيْهِ السَّلاَمُ) அவர்களுக்கு முக்ஸிசாவாக தொழுநோயாளியை குணமாக்கும் பாக்கிய‌த்தை கொடுத்துள்ளான். 

மேற்கண்ட  – அல்ஹதீஸில்:- தொழுநோய் ஓர் கடினமான நோய் என்பது தெரியவருகிறது.

அன்புள்ளவர்களே!  இன்ஷா அல்லாஹ் நாளைய தினம் ஜனவரி 30 – ஆம் திகதி உலக தொழுநோய் ஒழிப்பு தினமாக ஆண்டு தோறும் அனுஷ்டிக்கப்படுகிறது.

பொதுமக்கள் மத்தியில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், இந்நோயால் பாதிப்புக்குள்ளாகி அவதிப்படுவோர் இடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதும்,  இந்த நாள் கடைபிடிக்கப்படுவதின் முக்கிய நோக்கமாகும்.

உலக அளவில், தென்கிழக்காசிய நாடுகளில்தான் தொழுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. இங்கு போதிய சுகாதார விழிப்புணர்வு இல்லாததே, முதன்மைக் காரணமாகும். 

பொதுமக்கள் மத்தியில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும், இந்நோயால் பாதிப்புக்குள்ளாகி அவதிப்படுவோர் இடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதும், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் சமுதாயத்தில் மரியாதையுடன் வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்துவதும் நம் மீது தலையாய கடமையாக உள்ளது. இதனைப்பற்றி நம் மார்க்கம் என்ன செல்கிறது என்பதனை பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம் வாருங்கள்

 தொழுநோய் எனும் கொடிய நோய் பற்றி அல்குர்ஆனும்்

【மூன்று விதமான‌ நோய்கள்】

அன்புள்ளவர்களே! அல்லாஹுத்தஆலா  நமக்கு மூன்று விதமான நோய்களை ‌    தந்துள்ளான்.

  1. நன்மை தரும் நோய்கள்.
  2. அச்சத்தை தரும் நோய்கள்.
  3. அழிவைத் தரும் நோய்கள்.

கைர்… இவைகளைப் பற்றி விரிவாக பார்ப்போம் வாருங்கள்…

【1. நன்மை தரும் நோய்கள்】

அதாவது ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் காய்சல், தலைவலி, களைப்பு, கவலை, துக்கம், சோர்வு, முள் தைத்தல், சோதனை,   போன்ற‌  நோய்களாகும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَايُصِيبُ الْمُسْلِمُ مِنْ نَصَبٍ وَلاَ وَصَبٍ وَلاَ هَمٍّ وَلاَ حَزَنٍ وَلاَ أَذًي وَلاَ غَمٍّ حَتَّي الشَّوْكَةِ يُشَاكُهَا إِلاَّ كَفَّرَ اللهُ بِهَا مِنْ خَطَايَاهُ. رواه البخاري باب ماجاء في كفارة المرض

ஒரு முஸ்லிமுக்கு களைப்போ, நோயோ, கவலையோ, துக்கமோ, சோர்வோ ஏற்படுமேயானால் அவருக்கு ஏதேனும் முள் தைத்து விட்டாலும் கூட, அதன் காரணமாக அல்லாஹுதஆலா அவரது பாவங்களை மன்னித்துவிடுவான்”  (புகாரி 5641, 5642 )

عَنْ عَائِشَةَ ؓ قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ قَالَ: مَامِنْ مُسْلِمٍ يُشَاكُ شَوْكَةً فَمَا فَوْقَهَا، إِلاَّ كُتِبَتْ لَهُ بِهَا دَرَجَةٌ، وَمُحِيَتْ عَنْهُ بِهَا خَطِيئَةٌ. رواه مسلم باب ثواب المؤمن فيما يصيبه من مرض..

எவரேனும் ஒரு முஸ்லிமுக்கு முள் தைத்துவிட்டால் அல்லது அதைவிட குறைந்த நோவினை ஏற்பட்டாலோ அதற்குப் பகரமாக அல்லாஹுதஆலாவிடம் அவருக்கு ஒரு பதவி எழுதப்படுகிறது. அவரது ஒரு பாவம் மன்னிக்கப்படுகிறது  (முஸ்லிம் 2572 )

عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَا يَزَالُ الْبَلاَءُ بِالْمُؤْمِنِ وَالْمُؤْمِنَةِ فِي نَفْسِهِ وَوَلَدِهِ وَمَالِهِ حَتَّي يَلْقَي اللهَ وَمَا عَلَيْهِ خَطِيئَةٌ. رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح باب ماجاء في الصبر علي البلاء

உண்மை விசுவாசிகளான ஆண், பெண்களில் சிலர் மீது அல்லாஹுதஆலாவின் புறத்திலிருந்து சோதனைகளும் நோய்களும் வந்து கொண்டே இருக்கும். சில சமயம் உயிர் மீது, சில சமயம் பிள்ளைகள் மீது, சில சமயம் செல்வத்தின் மீதும் சோதனைகள் வந்து கொண்டே இருக்கும் அதன் காரணமாக அவருடைய பாவங்கள் உதிர்ந்து கொண்டே இருக்கும் இறுதியில் அவர் மரணித்த பிறகு ஒரு பாவம் கூட இல்லாத நிலையில் அல்லாஹுதஆலாவைச் சந்திப்பார் (திர்மிதீ 2399)

 عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ ؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: إِنَّ اللهَ يَقُولُ: إِذَا ابْتَلَيْتُ عَبْداً مِنْ عِبَادِي مُؤْمِناً، فَحَمِدَنِي عَلَي مَاابْتَلَيْتُهُ فَأَجْرُوا لَهُ كَمَا كُنْتُمْ تُجْرُونَ لَهُ وَهُوَ صَحِيحٌ. رواه احمد والطبراني في الكبير 

ஒரு முஃமினான  என் அடியார்களில் எவரையேனும் (ஏதேனும் சிரமம், நோய் முதலியவைகளைக் கொண்டு) நான் சோதிக்கும் பொழுது, அவன் என் புறத்திலிருந்து அனுப்பப்பட்ட சிரமத்தைக் கண்டு (பொறுமையுடன்) என்னைப் புகழ்ந்தால், இவர் ஆரோக்கியமாக இருந்தபோது செய்து வந்த செயல்களுக்குரிய கூலியை நீங்கள் எழுதி வந்ததைப்போல அனைத்து அமல்களின் நன்மையையும் அப்படியே எழுதிவிடுங்கள்” (என நான் மலக்குகளுக்கு கட்டளையிடுகிறேன்) என்று அல்லாஹுதஆலா கூறுவதாக நபி  அவர்கள் சொன்ன ஹதீஸ் குத்ஸியை ஹஜ்ரத் ஷத்தாதுப்னு அவ்ஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (முஸ்னத் அஹ்மத்)

عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ ؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: إِذَا أَحَبَّ اللهُ قَوْماً اِبْتَلاَهُمْ، فَمَنْ صَبَرَ فَلَهُ الصَّبْرُ وَمَنْ جَزِعَ فَلَهُ الْجَزَعُ. رواه احمد 

ஏதேனும் ஒரு கூட்டத்தாரை அல்லாஹுதஆலா நேசிக்க நாடினால் அவர்களைச் சிரமங்களில் ஆழ்த்திச் சோதிப்பான், எவர் பொறுமை கொள்வாரோ அவருக்குப் பொறுமை (யின் கூலி) எழுதப்படுகிறது; எவர் பொறுமை கொள்ள வில்லையோ அவருக்குப் பொறுமையின்மை எழுதப்படுகிறது” (பிறகு அவர் அழுது புலம்பிக் கொண்டிருப்பார்) என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் மஹ்மூதுப்னு லபீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்னத் அஹ்மத்)

【2. அச்சத்தை தரும் நோய்கள்】

அதாவது காலரா, பிளேக், கொரோனா வைரஸ் போன்ற‌ கொள்ளை நோய்களாகும்.

عَنْ عَائِشَةَؓ زَوْجِ النَّبِيِّؐ قَالَتْ:سَاَلْتُ رَسُولُ اللّٰهِؐ عَنِ الطَّاعُونِ فَأَخْبَرَنِي أَنَّهُ عَذَابٌ يَبْعَثُهُ اللّٰهُ عَلَي مَنْ يَّشَاءُ، وَأَنَّ اللّٰهَ جَعَلَهُ رَحْمَةً لِّلْمُؤْمِنِينَ، لَيْسَ مِنْ أَحَدٍ يَقَعُ الطَّاعُونُ فَيَمْكُثُ فِي بَلَدِهِ صَابِرًا مُحْتَسِباً يَعْلَمُ أَنَّهُ لاَ يُصِيبُهُ إِلاَّ مَاكَتَبَ اللّٰهُ لَهُ إِلاَّكَانَ لَهُ مِثْلُ أَجْرِ شَهِيدٍ. رواه البخاري 3474

“நான் ரஸூலுல்லாஹி  அவர்களிடம், “கொள்ளை நோயைப் பற்றி வினவினேன், “இது ஒரு வேதனையாகும். அல்லாஹ், தான் நாடியவர்களின் மீது இதனை இறக்குகின்றான். எனினும், அல்லாஹ் இதனை முஃமின்களுக்கு அருளாகவே ஆக்கிவைத்துள்ளான். எவருடைய ஊரிலாவது இந்நோய் பரவி, அப்பகுதியில் வசிக்கும் அவர், பொறுமையுடன் “அல்லாஹ் அவருக்கென எதை எழுதி (முடிவு செய்து) வைத்து விட்டானோ அதைத் தவிர வேறு எதுவும் அவரை வந்தடையாது’ என்று நம்பிக்கை வைத்து நன்மையை ஆதரவு வைத்தவராக தன் பகுதியில் தங்கிவிட்டால் (பிறகு அல்லாஹ் வின் ஏற்பாட்டின் படி கொள்ளை நோயால் அவர் பீடிக்கப்பட்டு இறந்துவிட்டால்) அவருக்கு (அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்த) ஷஹீதுக்குச் சமமான நன்மை கிடைக்கும்’’  (தக்மிலா )

தெளிவுரை! தாஊன் என்பது கொடிய கொள்ளை நோயாகும், தொடை, அக்குல், அல்லது கழுத்து போன்ற பகுதியில் ஒரு வகையான புண் உண்டாகும். அது கடுமையான வருத்தத்தை உண்டு பண்ணும், மிகுதமானோர் இந்த நோய் வந்த இரண்டு அல்லது மூன்றாவது நாளன்று இறந்து விடுவர். தாஊன் என்பது எல்லாக் கொள்ளை நோய்க்கும் சொல்லப்படும். கொள்ளை நோய் ஏற்பட்டுள்ள பகுதியில் இருந்து யாரும் வெளியேறிச் செல்லக் கூடாது. என்பதே மார்க்கச் சட்டமாகும். இதனால் தான் ஹதீஸில் நன்மையை ஆதரவு வைத்து அந்த ஊரிலேயே தங்கிவிடும்படி சொல்லப்பட்டுள்ளது.

 عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَهُ يَسْأَلُ، أُسَامَةَ بْنَ زَيْدٍ مَاذَا سَمِعْتَ مِنْ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الطَّاعُونِ فَقَالَ أُسَامَةُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “” الطَّاعُونُ رِجْسٌ أُرْسِلَ عَلَى طَائِفَةٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ أَوْ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ، فَإِذَا سَمِعْتُمْ بِهِ بِأَرْضٍ فَلاَ تَقْدَمُوا عَلَيْهِ، وَإِذَا وَقَعَ بِأَرْضٍ وَأَنْتُمْ بِهَا فَلاَ تَخْرُجُوا فِرَارًا مِنْهُ “”. قَالَ أَبُو النَّضْرِ “” لاَ يُخْرِجُكُمْ إِلاَّ فِرَارًا مِنْهُ “”.

(என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்களிடம், ‘இறைத்தூதர்  அவர்களிடமிருந்து (பிளேக் போன்ற) கொள்ளை நோயைப் பற்றி நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு உஸாமா (ரலி), ‘இறைத்தூதர்  அவர்கள், ‘கொள்ளை நோய் என்பது பனூ இஸ்ராயீல்களின் ஒரு கூட்டத்தார் மீது. அல்லது உங்களுக்கு முன்னிருந்தவர்களின் மீது…. (அவர்களின் அட்டூழியங்கள் அதிகரித்துவிட்டபோது) அனுப்பப்பட்ட ஒரு(வகை) வேதனையாகும். அது ஒரு பிரதேசத்தில் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கே நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கிற ஒரு பூமியில் அது பரவிவிட்டால், அதிலிருந்து தப்பியோட முனைந்தவர்களாக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்’ என்று கூறினார்கள்’ என்று பதிலளித்தார்கள்.  நீங்கள் இருக்கிற ஒரு பூமியில் அது பரவிவிட்டால், அதிலிருந்து தப்பியோட முனைந்தவர்களாக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்’ என்று கூறினார்கள்’ என்று பதிலளித்தார்கள். (புகாரி 3473)   

மக்களின் நலனுக்காக சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்படும் ஆலோசனைகளை கடைபிடிப்பதுடன் இவ்வாறான சந்தர்ப்பங்களில் நோய் இருக்கின்ற இடங்களுக்கு செல்வதை தவிர்ந்து கொள்ளுமாறு இஸ்லாம் ந‌மக்கு வழிகாட்டியுள்ளது.

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் [رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ‎ ] அவர்கள் கூறுகிறார்கள் இறைத்தூதர்  அவர்கள் ‘ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து (அவ்வூரைவிட்டு) வெளியேறாதீர்கள்” என்று சொல்ல கேட்டேன் என கூறினார்கள். (புகாரி 5729 ) 

【3. அழிவைத் தரும் நோய்கள்】

அதாவது வெண்குஷ்டம், பைத்தியம், தொழுநோய் போன்ற‌ மோசமான நோய்களாகும். இந்நோய்களை விட்டும் நபி  அவர்கள் பாதுகாவல் தேடியுள்ளார்கள். இத் துஆவை நாம் அதிகமாக ஓதி வரவேண்டும்.

عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ ‏ “‏ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ ‏”‏ ‏.‏. (أبو داود 1554)

யா அல்லாஹ்! வெண்குஷ்டம், பைத்தியம், தொழுநோய் மற்றும் மோசமான நோய்களில் இருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன் (அபூதாவூத் 1554 ) 

عن عثمان بن عفان رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ عَبْدٍ يَقُولُ فِي صَبَاحِ كُلِّ يَوْمٍ وَمَسَاءِ كُلِّ لَيْلَةٍ بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ ثَلَاثَ مَرَّاتٍ لَمْ يَضُرَّهُ شَيْءٌ

உஸ்மான் [رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ‎ ] அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி  அவர்கள் கூறினார்கள். காலையிலும் மாலையிலும் மூன்று முறை ‘‘பிஸ்மில்லாஹில்லதீ லா யளுர்ரு மஅஸ்மிஹி ஷைஉன் ஃபில் அர்ளி வலா ஃபிஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அலீம்‘‘ என ஒதி வருவாரோ அவருக்கு எந்தத் தீங்கும் ஏற்படமாட்டாது. (அபூதாவூத் 5088 , திர்மிதி 3388  ) 

【தொழுநோய்】

அன்புள்ளவர்களே! தொழுநோய் என்றால் என்ன?

தொழுநோயானது காற்றின் மூலம் மைக்ரோ பாக்டீரியம் லெப்ரே என்ற பாக்டீரியா கிருமியால் பரவுகிறது. இந்த நோய்  ஏற்பட்டால் முதலில் தேமல், படை போன்ற தோல் நோய்கள் ஏற்படும். தேமல், படை ஏற்பட்ட இடங்களில் உணர்ச்சியற்ற நிலை ஏற்படும். இந்த நோயினால் பாதிக்கப்பட்டு மேற்கண்ட அறிகுறிகள் உடல்பகுதிகளில் தென்பட்டால் உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். இந்த  தொழுநோய் இல்லாத இந்தியாவாக‌ உருவாக்க நம் அனைவரும் இணைந்து செயலாற்றுவோமாக!.

【தொழுநோயாளிகளிடம் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?】

அன்புள்ளவர்களே! கீழ்காணும் ஹதீஸ்களின் மூலம் நபிகளார் ﷺ நமக்கு அழகிய வழிகளை  கற்றுத்தந்துள்ளார்கள்.

 أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “” لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ وَلاَ هَامَةَ وَلاَ صَفَرَ، وَفِرَّ مِنَ الْمَجْذُومِ كَمَا تَفِرُّ مِنَ الأَسَدِ 

“தொற்றுநோய் என்பது கிடையாது. பறவைகளைக்கொண்டு சகுனம் பார்ப்பதும் ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது. ‘ஸஃபர்’ மாதம் பீடை என்பதும் கிடையாது. சிங்கத்திடமிருந்து நீ எப்படி வெருண்டோடுவாயோ அப்படி தொழுநோயாளியிடமிருந்து வெருண்டோடு” (புகாரி 5707 )

ஸகீஃப் தூதுக்குழுவில் தொழுநோயாளி ஒருவர் இருந்தார். அவரிடம் நபி  அவர்களிடம் உறுதிமொழி [பைஅத்] பெறுவதற்க்கு வந்தார் அவரிடம் , நபி  “நாம் உம்மிடம் உறுதிமொழி பெற்றுவிட்டோம். நீர் திரும்பிச் செல்லலாம்” என்று கூறியனுப்பினார்கள்.(முஸ்லிம் 4489)

தொழுநோயாளிகளைத் தொடர்ந்து (முறைத்துப் ) பார்க்காதீர்கள் . (இப்னுமாஜா 3533)

தொழுநோயாளிடம் ,ஒரிரண்டு ஈட்டியின் அளவு (இடைவெளி ) உனக்கும் அவருக்கும் நிலையில் பேசு ” என்று நபி  அவர்கள் கூறினார்கள் . (அபூநுஐம் , தபரானீ)

காரணம் ….. காற்றின் மூலமே அதிகம் பரவும் இந்நோய் நோயுற்றவருடன் ஏற்படும் நேரடித்தொடர்பின் மூலமும் நோய்யுயிரி சுவாசக் குழாய் வழியாக உட்செல்வதின் மூலமும் இவை பரவுகிறது. நோய்த்தொற்று உள்ள நபர் தும்பும் போதும் இரும்பும் போதும் கோடிக்கணக்கான தொழுநோய் நுண்ணுயிர்கள் காற்றில் பரவுகிறது. இது நாசி வழியாக உள் சென்று நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவரைத் தாக்குகிறது. மேலும் இவை நோயுற்றவரின் உடலில் வழியும் சீழ்களில் தொடர்பு ஏற்படுவதாலும் இவை பரவுகிறது.

18 ஆம் நூற்றாண்டின் கடைசியிலேதான் (1873-ம் ஆண்டில்) தொழுநோய் கண்டுபிடிக்கப்பட்டது. அதெப்படி 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நபியவர்களால் துள்ளியமாக கண்டுபிடிக்கப்பட்டது என்றால்? அல்லாஹ்தான் ﷻ அறிவித்துக் கொடுத்தான். 

【தொழு நோயாளியிடம் சோதிக்கும் அல்லாஹ் ﷻ】

، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ “” إِنَّ ثَلاَثَةً فِي بَنِي إِسْرَائِيلَ أَبْرَصَ وَأَقْرَعَ وَأَعْمَى بَدَا لِلَّهِ أَنْ يَبْتَلِيَهُمْ، فَبَعَثَ إِلَيْهِمْ مَلَكًا، فَأَتَى الأَبْرَصَ. فَقَالَ أَىُّ شَىْءٍ أَحَبُّ إِلَيْكَ قَالَ لَوْنٌ حَسَنٌ وَجِلْدٌ حَسَنٌ، قَدْ قَذِرَنِي النَّاسُ. قَالَ فَمَسَحَهُ، فَذَهَبَ عَنْهُ، فَأُعْطِيَ لَوْنًا حَسَنًا وَجِلْدًا حَسَنًا. فَقَالَ أَىُّ الْمَالِ أَحَبُّ إِلَيْكَ قَالَ الإِبِلُ ـ أَوْ قَالَ الْبَقَرُ هُوَ شَكَّ فِي ذَلِكَ، إِنَّ الأَبْرَصَ وَالأَقْرَعَ، قَالَ أَحَدُهُمَا الإِبِلُ، وَقَالَ الآخَرُ الْبَقَرُ ـ فَأُعْطِيَ نَاقَةً عُشَرَاءَ. فَقَالَ يُبَارَكُ لَكَ فِيهَا. وَأَتَى الأَقْرَعَ فَقَالَ أَىُّ شَىْءٍ أَحَبُّ إِلَيْكَ قَالَ شَعَرٌ حَسَنٌ، وَيَذْهَبُ عَنِّي هَذَا، قَدْ قَذِرَنِي النَّاسُ. قَالَ فَمَسَحَهُ فَذَهَبَ، وَأُعْطِيَ شَعَرًا حَسَنًا. قَالَ فَأَىُّ الْمَالِ أَحَبُّ إِلَيْكَ قَالَ الْبَقَرُ. قَالَ فَأَعْطَاهُ بَقَرَةً حَامِلاً، وَقَالَ يُبَارَكُ لَكَ فِيهَا. وَأَتَى الأَعْمَى فَقَالَ أَىُّ شَىْءٍ أَحَبُّ إِلَيْكَ قَالَ يَرُدُّ اللَّهُ إِلَىَّ بَصَرِي، فَأُبْصِرُ بِهِ النَّاسَ. قَالَ فَمَسَحَهُ، فَرَدَّ اللَّهُ إِلَيْهِ بَصَرَهُ. قَالَ فَأَىُّ الْمَالِ أَحَبُّ إِلَيْكَ قَالَ الْغَنَمُ. فَأَعْطَاهُ شَاةً وَالِدًا، فَأُنْتِجَ هَذَانِ، وَوَلَّدَ هَذَا، فَكَانَ لِهَذَا وَادٍ مِنْ إِبِلٍ، وَلِهَذَا وَادٍ مِنْ بَقَرٍ، وَلِهَذَا وَادٍ مِنَ الْغَنَمِ. ثُمَّ إِنَّهُ أَتَى الأَبْرَصَ فِي صُورَتِهِ وَهَيْئَتِهِ فَقَالَ رَجُلٌ مِسْكِينٌ، تَقَطَّعَتْ بِيَ الْحِبَالُ فِي سَفَرِي، فَلاَ بَلاَغَ الْيَوْمَ إِلاَّ بِاللَّهِ ثُمَّ بِكَ، أَسْأَلُكَ بِالَّذِي أَعْطَاكَ اللَّوْنَ الْحَسَنَ وَالْجِلْدَ الْحَسَنَ وَالْمَالَ بَعِيرًا أَتَبَلَّغُ عَلَيْهِ فِي سَفَرِي. فَقَالَ لَهُ إِنَّ الْحُقُوقَ كَثِيرَةٌ. فَقَالَ لَهُ كَأَنِّي أَعْرِفُكَ، أَلَمْ تَكُنْ أَبْرَصَ يَقْذَرُكَ النَّاسُ فَقِيرًا فَأَعْطَاكَ اللَّهُ فَقَالَ لَقَدْ وَرِثْتُ لِكَابِرٍ عَنْ كَابِرٍ. فَقَالَ إِنْ كُنْتَ كَاذِبًا فَصَيَّرَكَ اللَّهُ إِلَى مَا كُنْتَ، وَأَتَى الأَقْرَعَ فِي صُورَتِهِ وَهَيْئَتِهِ، فَقَالَ لَهُ مِثْلَ مَا قَالَ لِهَذَا، فَرَدَّ عَلَيْهِ مِثْلَ مَا رَدَّ عَلَيْهِ هَذَا فَقَالَ إِنْ كُنْتَ كَاذِبًا فَصَيَّرَكَ اللَّهُ إِلَى مَا كُنْتَ. وَأَتَى الأَعْمَى فِي صُورَتِهِ فَقَالَ رَجُلٌ مِسْكِينٌ وَابْنُ سَبِيلٍ وَتَقَطَّعَتْ بِيَ الْحِبَالُ فِي سَفَرِي، فَلاَ بَلاَغَ الْيَوْمَ إِلاَّ بِاللَّهِ، ثُمَّ بِكَ أَسْأَلُكَ بِالَّذِي رَدَّ عَلَيْكَ بَصَرَكَ شَاةً أَتَبَلَّغُ بِهَا فِي سَفَرِي. فَقَالَ قَدْ كُنْتُ أَعْمَى فَرَدَّ اللَّهُ بَصَرِي، وَفَقِيرًا فَقَدْ أَغْنَانِي، فَخُذْ مَا شِئْتَ، فَوَاللَّهِ لاَ أَجْهَدُكَ الْيَوْمَ بِشَىْءٍ أَخَذْتَهُ لِلَّهِ. فَقَالَ أَمْسِكْ مَالَكَ، فَإِنَّمَا ابْتُلِيتُمْ، فَقَدْ رَضِيَ اللَّهُ عَنْكَ وَسَخِطَ عَلَى صَاحِبَيْكَ “”

பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழு நோய் பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் ﷻ அவர்களை சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான்.

அவர் தொழு நோயாளியிடம் வந்து, ‘உனக்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று கேட்க அவர், ‘நல்ல நிறம், நல்ல தோல் (தான் எனக்கு மிகவும் விருப்பமானவை.) மக்கள் (என் வியாதியின் காரணத்தால்) என்னை அருவருக்கிறார்கள்’ என்று கூறினார். உடனே அவ்வானவர் அவரை (தம் கரங்களால்) தடவ அந்த வியாதி அவரை (தம் கரங்களால்) தடவ அந்த வியாதி அவரைவிட்டுச் சென்றுவிட்டுது. அவருக்கு அழகிய நிறமும் அழகிய தோலும் தரப்பட்டன. பிறகு அவ்வானவர், ‘எச்செல்வம் உங்களுக்கு மிகவும் விருப்பமானது?’ என்று கேட்க அவர், ‘ஒட்டகம் தான்… (என்றோ) அல்லது மாடு தான்… (எனக்கு மிகவும் விருப்பமானதாகும்)’ என்று பதிலளித்தார். கருத்தரித்த ஒட்டகம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அவ்வானவர், ‘இதில் உனக்கு பரக்கத் (வளர்ச்சி) வழங்கப்படும்’ என்று கூறினார்.

பிறகு அவ்வானவர் வழுக்கைத் தலையரிடம் சென்றார். ‘உனக்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று கேட்டார். அவர், ‘அழகான முடியும் இந்த வழுக்கை என்னைவிட்டுப் போய் விடுவதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது.) மக்கள் என்னை அருவருத்து (ஒதுக்கி வைத்து)விட்டார்கள்’ என்று கூறினார். உடனே அவ்வானவர், அவரின் தலையைத் தடவிக் கொடுக்க, அவருக்கு அழகான முடி வழங்கப்பட்டது. அவ்வானவர், ‘எச்செல்வம் உனக்கு விருப்பமானது?’ என்று கேட்டார். அவர், ‘மாடு தான் எனக்கு மிக விருப்பமான செல்வம்’ என்று கூறினார். உடனே வானவர் அந்த வழுக்கைத் தலையருக்கு கர்ப்பமான மாடு ஒன்றைக் கொடுத்து, ‘இதில் உனக்கு வளர்ச்சி வழங்கப்படும்’ என்று கூறினார்.

பிறகு, அவ்வானவர் குருடரிடம் சென்று, ‘உனக்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று கேட்டார். அவர், ‘அல்லாஹ் ﷻ என் பார்வையை எனக்குத் திரும்பச் செய்வதும் அதைக் கொண்டு மக்களை நான் பார்ப்பதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)’ என்று பதிலளித்தார். அவ்வானவர் அவரைத் தடவி விட, அல்லாஹ் அவருக்கு அவரின் பார்வையைத் திருப்பித் தந்தான். அவ்வானவர், ‘உனக்கு எச்செல்வம் விருப்பமானது?’ என்று கேட்க அவர், ‘ஆடு தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)’ என்று பதில் அளித்தார். உடனே, அவ்வானவர் அவருக்குக் கருவுற்ற ஆடு ஒன்றைக் கொடுத்தார். அந்த இருவரும் (-ஒட்டகம் வழங்கப்பட்டவரும் மாடு வழங்கப்பட்டவரும்-) நிறைய குட்டிகள் ஈன்றிட பெற்றனர். இவர் (-ஆடு வழங்கப்பட்டவர்-) நிறையக் குட்டிகள் பெற்றார். தொழு நோயாளியாய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஒட்டகங்களும் வழுக்கைத் தலையராய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப மாடுகளும், குருடராக இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஆடுகளும் (பெருமளவில்) கிடைத்தன.

பிறகு அவ்வானவர் தொழு நோயாளியாய் இருந்தவரிடம் தம் பழைய தோற்றத்திலும் அமைப்பிலும் சென்று, ‘நான் ஓர் ஏழை மனிதன். என் பயணத்தில் என் வாழ்வாதாரம் அறுபட்டுவிட்டது. (செலவுக்குப் பணம் தீர்ந்து போய்விட்டது) இன்று உதவிக்கான வழி வகை (எனக்கு) அல்லாஹ்வையும் பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. உனக்கு அழகிய நிறத்தையும் அழகிய தோலையும் செல்வத்தையும் கொடுத்த (இறை) வனின் பெயரால் உன்னிடம் ஓர் ஒட்டகத்தைக் கேட்கிறேன். அதன் வாயிலாகப் பயணத்தில் நான் போக வேண்டிய இடத்தைச் சென்றடைவேன்’ என்று கூறினார். அதற்கு அந்த மனிதர், ‘(எனக்குக்) கடமைகள் நிறைய இருக்கின்றன. (எனவே, என்னால் நீ கேட்டதைத் தர முடியாது)’ என்றார். உடனே அவ்வானவர், ‘உன்னை எனக்குத் தெரியும் போலுள்ளதே. மக்கள் அருவருக்கிற தொழு நோயாளியாக நீ இருக்கவில்லையா? நீ ஏழையாக இருக்கவில்லையா? பிறகு அல்லாஹ் உனக்கு (செல்வத்தைக்) கொடுத்தான் அல்லவா?’ என்று கேட்டதற்கு அவன், ‘(இல்லையே; நான் இந்த அழகான நிறத்தையும் தோலையும் மற்றும் திரண்ட இச்செல்வத்தையும்) வாழையடி வாழையாக (என் முன்னோர்களிடமிருந்து) வாரிசாகப் பெற்றேன்’ என்று பதிலளித்தான். உடனே அவ்வானவர், ‘நீ (இக்கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படி இருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் ﷻ மாற்றி விடட்டும்’ என்று கூறினார்.

பிறகு வழுக்கைத் தலையரிடம் தம் (பழைய) தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து முன்பு இவரிடம் (தொழு நோயாளியிடம்) சொன்னதைப் போன்றே கூறினார். அவனும் முதலாமவன் அவருக்கு பதிலளித்தைப் போன்றே பதிலளித்தான். வானவரும், ‘நீ (உன் கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படியிருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ்  மாற்றி விடட்டும்’ என்று கூறினார்.

பிறகு (இறுதியாக), குருடரிடம் தம் தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து, ‘நான் ஓர் ஏழை மனிதன்; வழிப்போக்கன். என் வாழ்வாதாரம் (வழிச் செலவுக்கான பணம்) தீர்ந்து போய்விட்டது. இன்று உதவிக்கான வழிவகை (எனக்கு) அல்லாஹ்வையும், பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. என் பயணத்தில் என் தேவையைத் தீர்த்துக் கொள்ள உதவும் ஆடு ஒன்றைத் தரும்படி உனக்குப் பார்வையைத் திரும்பத் தந்தவன் பெயரால் கேட்கிறேன்’ என்று சொன்னார். (குருடராயிருந்து பார்வை பெற்ற) அந்த மனிதர் வானவரிடம், ‘நான் குருடனாகத் தான் இருந்தேன். அல்லாஹ் ﷻ என் பார்வையைத் திருப்பித் தந்தான். நான் ஏழையாக இருந்தேன்; என்னைச் சொல்வந்தனாக்கினான். எனவே, நீ விரும்புவதை எடுத்துக்கொள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்று நீ எடுக்கிற எந்தப் பொருளையும் திருப்பித் தரும்படி அல்லாஹ்விற்காக சிரமப்படுத்த மாட்டேன்’ என்று கூறினார். உடனே அவ்வானவர், ‘உன் செல்வத்தை நீயே வைத்துக் கொள். இது உங்களைச் சோதிப்பதற்காகத் தான். அல்லாஹ் உன்னைக் குறித்து திருப்தியடைந்தான். உன் இரண்டு தோழர்கள் (தொழு நோயாளி) மற்றும் வழுக்கைத் தலையன்) மீது கோபமுற்றான்’ என்று கூறினார். (புஹாரி : 3464, (முஸ்லிம் 5672)

அன்புள்ளவர்களே! மேற்கண்ட ஹதிஸில் பல படிப்பினை சம்பவங்கள் நிரம்பியுள்ளன. மேற்கண்ட ஹதிஸின் மூலம்:-

  1. அல்லாஹ் ﷻ நமக்கு கொடுக்கும் அருட்கொடைகளில் பழைய நிலைகளை நம் மறக்க/ மறுக்க‌ கூடாது. என்பது நமக்கு தெரிய வருகிறது.
  2. அல்லாஹ் ﷻ நம் வாழ்வில் முன்னேற்ற வழி கொடுத்தால் பிற்காலத்தில் சோதிப்பான். அச்சோதனையில் தோல்வியுற்றால் நம் அருட்கொடைகள் அனைத்தும் வீணாகிவிடும். என்பது நமக்கு தெரிய வருகிறது.
  3. மேற்கண்ட மூவரில் (தொழு நோயாளி) மற்றும் வழுக்கைத் தலையன்) மீது அல்லாஹ் ﷻ கோபமுற்றது போல வாழாமல், குருடரைப் போல நேர்மையாக நன்றியுள்ள அடியாராக வாழ்திட வேண்டுமென‌  நமக்கு தெரிய வருகிறது.

【தொழு நோயாளியின் துஆ மிகவும் சக்திவாய்ந்தது】

(ஒரு முறை) கூஃபாவாசிகளின் தூதுக்குழு ஒன்று (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் வந்தது. அவர்களிடையே உவைஸ் அவர்களைப் பழித்துப் பேசிவந்த மனிதர் ஒருவரும் இருந்தார்.

உமர் (ரலி) அவர்கள், “இங்கு (உங்களில்) “கரன்” குலத்தைச் சேர்ந்தவர்களில் யாரேனும் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அப்போது அந்த மனிதர் வந்தார். அப்போது உமர் [رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ‎ ] அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர்  அவர்கள், “உங்களிடம் யமன் நாட்டிலிருந்து ஒரு மனிதர் வருவார். அவர் “உவைஸ்” எனப்படுவார். அவர் யமன் நாட்டில் தம் தாயார் ஒருவரை மட்டுமே விட்டுவருவார். அந்த மனிதருடைய மேனியில் [தொழுநோய்] வெண்குஷ்டம் ஏற்பட்டிருந்தது. ஆகவே, அவர் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார். அதையடுத்து ஒரு தீனார் அல்லது ஒரு திர்ஹம் அளவு இடத்தைத் தவிர (மற்ற இடங்களிலிருந்து) அதை அல்லாஹ் குணப்படுத்தினான். ஆகவே, உங்களில் யாரேனும் அவரைச் சந்தித்தால் அவர் உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரட்டும் (அவரிடம் உங்கள் பாவமன்னிப்புக்காகப் பிரார்த்திக்கச் சொல்லவும்)” என்று கூறினார்கள். (முஸ்லிம் 4969)

மேற்கண்ட ஹதிஸில்:- தொழுநோய் உடைய உவைஸுல் கரன் என்பவருடைய துஆவை அல்லாஹ் ﷻ அங்கிகரித்ததுமட்டுமல்லாமல்; அவரை யாரேனும் சந்தித்தால் அவரிடம் உங்கள் பாவமன்னிப்புக்காகப் பிரார்த்திக்கச் சொல்லவும் என்று உமர் [رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ‎ ] அவர்கள் கூறினார்கள்.

【தொழு நோயும்.. ஈஸா (عَلَيْهِ السَّلاَمُ) மும்…】

நபி மூஸா (عَلَيْهِ السَّلاَمُ) அவர்களின் காலத்தில் எப்படி சூனியக்காரர்கள் நிறைந்திருந்து, மக்கள் திசை மாறியதை மூஸா ((عَلَيْهِ السَّلاَمُ) அல்லாஹ்வின் அருளைக் கொண்டு முறியடித்தார்களோ, அதுபோல மருத்துவர்கள் நிறைந்திருந்து, குணமாக்க முடியாத நோய்களை [தொழுநோயுடையவரை] ஈஸா (عَلَيْهِ السَّلاَمُ) அல்லாஹ்வின் அனுமதி பெற்று குணப்படுத்திக் காட்டினார்கள். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் சுகமாக்கினார்கள், சக்தி படைத்த அல்லாஹ்வின் அருளைப் பெற்று இறந்தோரையும் ஈஸா (عَلَيْهِ السَّلاَمُ) உயிர்ப்பித்தார்கள்.

اِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ اذْكُرْ نِعْمَتِىْ عَلَيْكَ وَعَلٰى وَالِدَتِكَ‌ ۘ اِذْ اَيَّدْتُّكَ بِرُوْحِ الْقُدُسِ تُكَلِّمُ النَّاسَ فِىْ الْمَهْدِ وَكَهْلًا ۚوَاِذْ عَلَّمْتُكَ الْـكِتٰبَ وَالْحِكْمَةَ وَالتَّوْرٰٮةَ وَالْاِنْجِيْلَ‌ ۚ وَاِذْ تَخْلُقُ مِنَ الطِّيْنِ كَهَيْـــٴَــةِ ‏ الطَّيْرِ بِاِذْنِىْ فَتَـنْفُخُ فِيْهَا فَتَكُوْنُ طَيْرًۢا بِاِذْنِىْ‌ وَ تُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ بِاِذْنِىْ‌ ۚ وَاِذْ تُخْرِجُ الْمَوْتٰى بِاِذْنِىْ‌ ۚ وَاِذْ كَفَفْتُ بَنِىْۤ اِسْرَآءِيْلَ عَنْكَ اِذْ جِئْتَهُمْ بِالْبَيِّنٰتِ فَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْهُمْ اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ‏

அல்லாஹ் ﷻ கூறுவான்:“மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையயை) நினைவு கூறும்; [1] பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து [2] நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்), வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும், [3] இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்); [4] இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், [5] இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், [தொழுநோயுடையவரை] வெண் குஷ்டக்காரனையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்); [6] இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்); அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், “இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை” என்று கூறிய வேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும்.. [அல்குர்ஆன் 5:110, 3:49]

【தொழு நோயும்.. மூஸா (عَلَيْهِ السَّلاَمُ) மும்…】

، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “” إِنَّ مُوسَى كَانَ رَجُلاً حَيِيًّا سِتِّيرًا، لاَ يُرَى مِنْ جِلْدِهِ شَىْءٌ، اسْتِحْيَاءً مِنْهُ، فَآذَاهُ مَنْ آذَاهُ مِنْ بَنِي إِسْرَائِيلَ، فَقَالُوا مَا يَسْتَتِرُ هَذَا التَّسَتُّرَ إِلاَّ مِنْ عَيْبٍ بِجِلْدِهِ، إِمَّا بَرَصٌ وَإِمَّا أُدْرَةٌ وَإِمَّا آفَةٌ. وَإِنَّ اللَّهَ أَرَادَ أَنْ يُبَرِّئَهُ مِمَّا قَالُوا لِمُوسَى فَخَلاَ يَوْمًا وَحْدَهُ فَوَضَعَ ثِيَابَهُ عَلَى الْحَجَرِ ثُمَّ اغْتَسَلَ، فَلَمَّا فَرَغَ أَقْبَلَ إِلَى ثِيَابِهِ لِيَأْخُذَهَا، وَإِنَّ الْحَجَرَ عَدَا بِثَوْبِهِ، فَأَخَذَ مُوسَى عَصَاهُ وَطَلَبَ الْحَجَرَ، فَجَعَلَ يَقُولُ ثَوْبِي حَجَرُ، ثَوْبِي حَجَرُ، حَتَّى انْتَهَى إِلَى مَلإٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ، فَرَأَوْهُ عُرْيَانًا أَحْسَنَ مَا خَلَقَ اللَّهُ، وَأَبْرَأَهُ مِمَّا يَقُولُونَ، وَقَامَ الْحَجَرُ فَأَخَذَ ثَوْبَهُ فَلَبِسَهُ، وَطَفِقَ بِالْحَجَرِ ضَرْبًا بِعَصَاهُ، فَوَاللَّهِ إِنَّ بِالْحَجَرِ لَنَدَبًا مِنْ أَثَرِ ضَرْبِهِ ثَلاَثًا أَوْ أَرْبَعًا أَوْ خَمْسًا، فَذَلِكَ قَوْلُهُ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَكُونُوا كَالَّذِينَ آذَوْا مُوسَى فَبَرَّأَهُ اللَّهُ مِمَّا قَالُوا وَكَانَ عِنْدَ اللَّهِ وَجِيهًا}.””

மூஸா (அலை) அவர்கள் மிகவும் வெட்கப்படுபவர்களாகவும் அதிகமாக (தம் உடலை) மறைத்துக் கொள்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் மேனியிலிருந்து சிறிதளவு கூட வெளியே தெரியாது. அவர்கள் (அதிகமாக) வெட்கப்பட்ட காரணத்தால் தான் இப்படி தம் உடலை அவர்கள் மறைத்துக் கொண்டார்கள். அப்போது, பனூ இஸ்ராயீல்களில் அவர்களுக்கு மனவேதனை தர விரும்பியவர்கள் அவர்களுக்குத் துன்பம் தந்தனர்; ‘இவருடைய சருமத்தில் ஏதோ குறைபாடு இருப்பதால் தான் இந்த அளவிற்கு இவர் (தன் மேனியை) மறைத்துக் கொள்கிறார். (இவருக்குக்) தொழு நோய் இருக்கவேண்டும்; அல்லது குடலிறக்க நோய் இருக்க வேண்டும்’ என்று கூறினார்கள். மூஸா (அலை) அவர்களைப் பற்றி அவர்கள் சொன்ன குறைகளிலிருந்து அவர் தூய்மையானவர் என்று நிரூபித்திட அல்லாஹ் விரும்பினான். எனவே, (இறைவனின் திட்டப்படி) ஒரு நாள் மூஸா (அலை) அவர்கள் மட்டும் (குளிக்குமிடத்திற்குத்) தனியாகச் சென்று, தம் ஆடைகளை (கழற்றிக்) கல்லின் மீது வைத்துவிட்டுப் பிறகு குளித்தார்கள். குளித்து முடித்தவுடன் தம் துணிகளை எடுத்துக் கொள்வதற்காக அவற்றை நோக்கிச் சென்றார்கள். அப்போது அந்தக் கல் அவர்களின் துணியுடன் ஓடலாயிற்று. மூஸா(அலை) அவர்கள், தம் தடியை எடுத்துக் கொண்டு கல்லை விரட்டிப்பிடிக்க முனைந்தார்கள். ‘கல்லே என் துணி! கல்லே என் துணி!’ என்று குரல் எழுப்பலானார்கள். (அதை விரட்டிச் சென்றபடி) இறுதியில் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாரின் தலைவர்களிருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது பனூ இஸ்ராயீல் சமுதாயத்தினர், மூஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வின் படைப்புகளிலேயே அழகானவர்களாகவும் தாம் சொன்ன குறைபாடுகளிலிருந்து தூய்மையானவர்களாகவும் இருப்பதை, அவர்களை ஆடையில்லாத கோலத்தில் கண்டதன் மூலம் பார்த்துக் கொண்டார்கள். கல் (ஓடாமல்) நின்றது. உடனே, மூஸா(அலை) அவர்கள், தம் துணியை எடுத்துக் கொண்டு தம் கைத்தடியால் அந்தக் கல்லை அடிக்கலானார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! அந்தக் கல்லின் மீது அவர்கள் (தடியால்) அடித்த காரணத்தால் மூன்று அல்லது நான்கு அல்லது ஐந்து தழும்புகள் (இன்னும்) உள்ளன. இந்த நிகழ்ச்சியைத் தான், ‘இறை நம்பிக்கையாளர்களே! மூஸாவுக்குத் துன்பம் தந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் (இட்டுக் கட்டிக்) கூறியவற்றிலிருந்து மூஸா தூய்மையானவர் என்று அல்லாஹ் நிரூபித்துவிட்டான். மேலும், அவர் அல்லாஹ்விடம் கண்ணியத்திற்குரியவராக இருந்தார்’ என்றும் (திருக்குர்ஆன் 33:69)  இறைவசனம் குறிக்கிறது. (புகாரி 3404 )

【நோய் தொற்று என்பது நாம் சுன்னத்தை விடுதலிலயே! 】

، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ “” الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ،

இஸ்லாத்தை பொறுத்த வரை ஒரு முஸ்லிம் தன்னுடைய கை மற்றும் நாவின் மூலம் (ஏற்படும் தீங்குகளை விட்டும்) சக முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்றால்தான் அவர் உண்மை முஸ்லிமாக இருக்க‌ முடியும், (புஹாரி : 9)

இந்த நபி மொழியிலிருந்து ஏராளமான சட்டங்களை மார்க்க வல்லுணர்கள் கூறியுள்ளனர். எந்த ஒரு தனி நபரும் மற்றவர்களுடைய ஆரோக்கியத்திற்கு எந்தப் பங்கமும் ஏற்படுத்தக்கூடாது. நோயாளியின் கிருமி மற்றவர்களுக்கு தொற்றும் விதமாக நடந்து கொள்ளக்கூடாது. அப்படிப்பட்ட நபர், ரொட்டி மாஸ்டராகவோ பொது சந்தையில் விற்பனையாளராகவோ இருக்கக்கூடாது. இது போன்ற விதிமுறைகளை இந்த நபி மொழி நமக்கு சொல்லித்தருகிறது. நபி  அவர்களே தும்மினால் கூட உம்மத்தின் படிப்பினைக்காக கையையோ அல்லது துணியையோ வாயருகில் வைத்துக்கொள்வார்கள். தும்மலின் சப்தத்தை தாழ்த்திக் கொள்வார்கள். (அபூதாவூத் 4374)

இந்த நபி மொழி, ஒரு நோயாளி மற்றவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக எப்படி நடந்து கொள்ளவேண்டும், என்பது பற்றியும் மற்றவர்கள் எப்படி தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும், என்பது பற்றியும் அழகான வழிகாட்டுதலை கொடுக்கிறது.

சாப்பாட்டுக்கு முன்பு கை கழுவிக்கொள்ள வேண்டுமென்பதும் இஸ்லாம் போதிக்கும் சுகாதாரக் கொள்கைகளில் ஒன்று. உணவருந்தும் முன்பும் பின்பும் கைகழுவிக் கொள்வது சாப்பாட்டில் அபிவிருத்தியை உண்டாக்கும் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். (அபூதாவூத் – 3763)

நக இடுக்குகளில் அழுக்கு படிவதால் அது உணவருந்தும் போது அழுக்கும் உடலுக்குள் சென்று உடல்நலத்ததைக் கெடுக்கக் கூடும். கூட்டாக சாப்பிடும் போது இத்தொற்று இலகுவாக பரவ வாய்புள்ளது. எனவே, இது போன்ற காரியங்களிலும் இஸ்லாம் கவனம் செலுத்தியிருக்கிறது. நகத்தை வெட்டுவதையும் இடுக்குகளில் உள்ள முடிகளைக் கலைவைதையும் மனிதனுடைய இயல்பான காரியங்களில் உள்ளவை என்று கூறி நபியவர்கள் உடல் சுத்தத்தின் முக்கியத்துவத்தை உலகுக்கு உணர்த்தியுள்ளார்கள். நாற்பது நாட்களுக்கு அதிகமாக அவற்றை அகற்றாமல் விட்டு வைக்கக்கூடாது, என்று காலக்கெடுவையும் கண்டிப்புடன் கூறியுள்ளார்கள். (திர்மிதி – 2758)

ஒருவர் தண்ணீர் குடித்து விட்டு மற்றொருவர் தண்ணீரை மூடி வைக்க வில்லையென்றால் அதன் மூலம் பிறருக்கு நோய் தொற்று வர வழி செய்கிறோம். தண்ணீர் பாத்திரத்தை மூடி வையுங்கள். தண்ணீர்ப் பையைக் கட்டி வையுங்கள். தூங்கிவிழித்தால் தண்ணீர்ப் பாத்திரத்திற்குள் கைகளை நுழைப்பதற்கு முன் மூன்று முறை கைகளைக் கழுவிக்கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் அவனுயை கரங்கள் (அசூசையான இடங்களில்) உலாவிஇருப்பதை அவன் அறியமாட்டான் என்று கூறி தண்ணீரின் தூய்மையைப் பேணுவதில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள், நபியவர்கள். நாகரிகம் தெரியாத அந்தக் காலத்திலேயே அதிகமாக செருப்பணியுங்கள், என்று நபி  அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். (ஸஹிஹ் முஸ்லிம்)

செருப்பின் மூலம் கிருமிகளின் தாக்கத்தை விட்டும் பாதுகாப்புப் பெற முடியும். தண்ணீரில் நாய் வாய் வைத்துவிட்டால் அந்த பாத்திரத்தை ஏழுமுறை கழுவுங்கள். ஒரு முறை மண்ணால் தேய்த்து கழுவுங்கள். இவையனைத்தும் இறைத்தூதர் போதிக்கும் சுக ஆதாரங்களாகும்.

எனவே, இவ்வாறான நோய்கள், சோதனைகளில் இருந்து அல்லாஹுதஆலா ﷻ நம் அனைவரையும் பாதுகாப்பானாக! ஆமீன்.

【 சபதம் எடுங்கள்】

அன்புள்ளவர்களே! இன்ஷா அல்லாஹ் இன்றிலிருந்து. எனது மவ்த் ஆகும் வரைக்கும் தொழு நோயாளிகளிடம் கனிவுடன் நடந்து கொள்வேன். தொழுநோயாளியாக நான் ஆகுவதை விட்டும் அல்லாஹ்விடம் அதிகமாக பாதுகாவல் தேடுவேன். என்று உறுதி மொழியேற்போமாக!

சனி, ஜனவரி 23, 2021

வேலூர்_பாக்கியத்துஸ்_ஸாலிஹாத்_அரபிக்கல்லூரியின்_ஃபத்வா,

வேலூர்_பாக்கியத்துஸ்_ஸாலிஹாத்_அரபிக்கல்லூரியின்_ஃபத்வா...
(#மார்க்க_தீர்ப்பு)

 அன்பான  சகோதர , சகோதரிகளே .... !
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ... )

💚 நல்லோர்களின் கப்ருகளில் மார்க்கத்தின் பெயரால் நடைபெறும் மார்க்க விரோத செயல்கள் ஏராளம்...

💚 அவற்றைச் சுட்டிக்காட்டினால், வழிகெட்டவர்கள் என எண்ணி பட்டப்பெயர் வைத்து பிரித்து ஒதுக்கிவிடுகிறார்கள்...

💚 கப்ரு அனாச்சாரங்களில் ஈடுபடுபவர்கள் , 
மார்க்க அறிஞர்களும் தங்களின் செயல்பாடுகளை ஆதரிப்பதாக நினைக்கிறார்கள்...

💚 ஆனால் அவர்கள் மதிக்கும் மார்க்க அறிஞர்களும் அவர்களின் கப்ரு அனாச்சாரங்களை கண்டிக்கிறார்கள்...

💚 இதனை சம்மந்தப்பட்டவர்களும் , மற்றவர்களும் அறிந்து கொள்வதற்காக...
வேலூர் பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியின் ஒரு ஃபத்வாவை ( #மார்க்க_தீர்ப்பை ) கீழே தருகிறோம்...

💟 (#வினா) : 

கீழ்கண்ட காரியங்கள் ஷரீஅத்துச் சட்டப்படி #கூடுமா..? அல்லது #கூடாதா..?

💎 அவ்லியாக்களின் தர்காவில் கொடியேற்றுதல்...
💎 அதை தெருக்களில் தூக்கிக் கொண்டு வலம்வருதல்...
💎 சந்தனக்கூடு எடுத்து உரூஸ் நடத்துதல்...
💎 அந்த விழாவில் கொட்டு மேளம் போன்ற கேளிக்கை நடத்துதல்...
💎 நாட்டங்கள் நிறைவேற பெரியார்கள் பெயரால் நேர்ச்சை செய்தல்...

💎 இக்காரியங்களுக்கு முக்கியத்துவம் அளித்து இவற்றை மஸ்ஜிது முத்தவல்வி மற்றும் நிர்வாகிகள் முன் நின்று நடத்த வேண்டும் என்று சொல்வது...

💎 நேர்ச்சைகள் மூலம் கிடைக்கும் வருவாயை மஸ்ஜிது முத்தவல்லி மற்றும் நிர்வாகிகளிடம் கொடுத்து மஸ்ஜிதின் வரவு செலவில் சேர்த்தல்...

💟 (#விடை) :

மேற்கண்ட செயல்கள் #பித்அத் - களில் சேரும்... அவற்றில் சில #ஹராம் ஆகும்...

⭐ உதாரணமாக , நோக்கங்கள் நிறைவேற பெரியவர்கள் பெயரால் நேர்ச்சை செய்வதைச் சொல்லலாம்...

⭐ பெரியார்கள் , வலிமார்கள் , கூப்பிடுவோரின் அழைப்பைக் கேட்கிறார்கள் என்றும் , ஆஜராகிறார்கள் என்றும் , நம்பி அவர்கள் பெயரால் நேர்ச்சை செய்வது #குஃப்ரின் சாயலைக் கொண்டதாகும்...

⭐ பெரும்பாலான பொதுமக்கள் இறந்தவர்களுக்காக செய்யும் நேர்ச்சையும்... 
⭐ அவ்லியாக்களின் நெருக்கத்தைப் பெறுவதற்காக அவ்லியாக்களுக்கு காணிக்கை செலுத்துவதும்...
⭐ மெழுகுவர்த்தி ஏற்றி வைப்பதும்... 
⭐ எண்ணெய் வார்ப்பதும்...
ஹராம் ஆகும் என #துர்ருல்_முக்தார் எனும் நூலில் கூறப்பட்டுள்ளது...

⭐ இந்நூலின் விரிவுரையான #ரத்துல்_முஹ்தாரில் இவை ஹராம் என்பதற்கான காரணங்களை பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது...

⭐ நேர்த்திக்கடன் என்பது ஒரு வழிபாடு (இபாதத்) ஆகும்...
⭐ வழிபாட்டை அல்லாஹ் அல்லாதவர்களுக்கு செய்யக்கூடாது...
⭐ எனவே படைப்புகளுக்கு நேர்ச்சை செய்வது கூடாது... 
⭐ மேலும் இப்படி நேர்ச்சை செய்பவன் தன் விவகாரங்களை அல்லாஹ்வை அன்றி இறந்து போனவர் கவனிக்கிறார் என எண்ணுகிறான்...
⭐இப்படி நம்பிக்கை கொள்வது #குஃப்ர்  ஆகும்.

⭐ #பதாவா_பஸாஸிய்யா எனும் நூலில்  மஷாயிகுமார்களின் ஆன்மா (ரூஹ்) ஆஜராகிறது... விஷயங்களைப் புரிகிறது என்று எவர் நம்புகின்றாரோ , அவர் காஃபிராகிவிட்டார் என எழுதப்பட்டிருக்கிறது...

⭐ அந்த பெரியவர்களும் அவ்லியாக்களும் சின்னஞ்சிறு பாவங்களிலிருந்தும் சுத்தமாகி அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்பட்ட நல்லடியார்களாக விளங்கியவர்கள்...

⭐ அவர்களின் அடக்க ஸ்தலங்களிலும் அவர்கள் பெயரால் தெருக்களிலும் சுற்றித் திரிவதால் அவர்கள் வெறுப்பே அடைவார்கள்... 

⭐ இந்தக் கெட்ட காரியங்களுக்கு முக்கியத்துவம் அளித்து , அவற்றை மஸ்ஜிது முத்தவல்லிகளே ஏற்று நடத்த வேண்டும் என்று சொல்வது பாவமாகும்...

⭐ இந்த நேர்த்திக்கடன்கள் எப்போது ஹராமாகிவிட்டதோ... அவற்றின் மூலம்வசூலாகும் காசை மஸ்ஜிதுக்கு செலவழிப்பதும் கூடாது... 

⭐ இந்த மார்க்கத் தீர்ப்பு வழங்கி கையெழுத்திட்டிருக்கும் வேலூர் பாகியாத்துஸ்ஸாலிஹாத்தின் அறிஞர்கள்...

( #முன்னால்_ஆசிரியர்கள் )
1) ஜியாவுதீன் முஹம்மது , 
2) முஹம்மது அப்துல் ஜப்பார் , 
3) ஷைகு ஆதம் , 
4) அப்துர் ரஹீம்

 💙 மேற்கண்ட ஃபத்வாவில் கப்ராளிகளுக்காக நடைபெறும் நேர்ச்சையை 
#குஃப்ரு_இறைநிராகரிப்பு - என்ற அளவிற்கு கடுமையாக சொல்லப்பட்டிருப்பதைக் கவனியுங்கள்... 
இதைச் சொல்வது...
#அஹ்லுஸ்_ஸுன்னத்_வல்ஜமாஅத்தைச்_சேர்ந்த_உலமாக்கள்_தான்...

💙 இந்த ஃபத்வாவில் தடை செய்யப்பட்டுள்ளவற்றை செய்யக் கூடியவர்கள் இந்த உலமாக்களை மதிக்கத்தான் செய்கிறார்கள்...

💙 தங்களை அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்லிக் கொள்வோர் தங்களின் உலமாக்களின் மார்க்க தீர்ப்பை ஏற்று ஃபத்வாவில் கண்டுள்ள தடை செய்யப்பட்ட அனாச்சாரங்களை விட்டொழிக்க வேண்டும்...

💙 #மேற்கண்ட_ஃபத்வா...
பாகிய்யாத்துஸ் ஸாலிஹாத் ஃபத்வாத் தொகுப்பு ஓர் அறிமுகம் " எனும் சிறு நூலில் (பக்கம் 57. 58 - ல்) இடம் பெற்றுள்ளது...

💙 இந்நூலை தொகுத்தது...
சென்னை காஷிஃபுல் ஹுதா அரபிக் கல்லூரி முதல்வர் 
முஹம்மது யாகூப் (அவர்கள்) .

💙 பாகியாத் பேராசிரியர் ரஈசுல் இஸ்லாம் (அவர்கள்) 
மதிப்புரை வழங்கி கையெழுத்திட்டுள்ளார்கள் .
தேதி : 07.07.1987

வெள்ளி, ஜனவரி 22, 2021

குடியரசு தினம்,

குடியரசு தினம்


قَالَ رَبِّ اغْفِرْ لِىْ وَهَبْ لِىْ مُلْكًا لَّا يَنْبَغِىْ لِاَحَدٍ مِّنْ بَعْدِىْ‌ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ‏ 
“என் இறைவனே! என்னை மன்னித்தருள்வாயாக! அன்றியும், பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ நன்கொடையளிப்பாயாக! நிச்சயமாக நீயே மிகப்பெருங் கொடையாளியாவாய்” எனக் கூறினார்.
(அல்குர்ஆன் : 38:35)


لَا يَنْهٰٮكُمُ اللّٰهُ عَنِ الَّذِيْنَ لَمْ يُقَاتِلُوْكُمْ فِى الدِّيْنِ وَلَمْ يُخْرِجُوْكُمْ مِّنْ دِيَارِكُمْ اَنْ تَبَرُّوْهُمْ وَ تُقْسِطُوْۤا اِلَيْهِمْ‌ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْن
َ‏ 
மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.
(அல்குர்ஆன் : 60:8)

குடியரசு என்றால்

குடியரசு என்றால் குடிமக்களின் அரசு என்று பொருள். அதாவது மக்களாட்சி என்று அர்த்தம். மக்கள் தங்கள் விருப்பப்படி தேர்தல் மூலம் தங்களுடைய தலைவரைத் தேர்ந்தெடுக்கலாம். இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசு நாடு. இப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்துதான் இந்தியாவும் குடியரசு நாடானது.
ஜனவரி 26-ம் தேதி இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது என்று பாடப் புத்தங்களில் படித்திருப்பீர்கள் அல்லவா? அரசியல் அமைப்புச் சட்டம் என்றால் என்ன தெரியுமா? நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுப்பவர்கள் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிப்பதுதான் அரசியல் அமைப்புச் சட்டம்.
டாக்டர் அம்பேத்கர் தலைமையில் சட்ட மேதைகள் பலர் சேர்ந்து இதை உருவாக்கினார்கள். இந்த அரசியலமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனால்தான் அன்றைய தினத்தைக் குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம். அதனால்தான் விடுமுறையும் கிடைக்கிறது.

அடிமை நாடாக எவ்வாறு மாறியது

இந்தியா அடிமை நாடாக எவ்வாறு மாறியது
ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு இந்தியாவை சிறிய அரசர்கள், பெரிய அரசர்கள், பேரரசர்கள் எனத் தங்கள் எல்லையைப் பொறுத்து ஆட்சி செய்தார்கள். இந்த அரசர்களிடம் ஒற்றுமை இல்லை. இப்படிப் பிரிந்து சிதறி கிடந்ததாலும், ஒற்றுமை இல்லாததாலும் ஆங்கிலேயர்கள் இதைப் பயன்படுத்திக்கொண்டார்கள். தந்திரமாக மன்னர்களிடம் பேசி நம் நாட்டுக்குள்ளே நுழைந்து பின்னர் நம்மை அடிமைப்படுத்தினார்கள்.

குடியரசு தினம் ஏன்


ஆங்கிலேயர்கள் படிப்படியாக இந்தியாவை அடிமைப்படுத்தியபோது சுதந்திரம் பற்றி மக்களுக்கு எந்த விழிப்புணர்வும் வரவில்லை. மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்று இருந்தார்கள்.
அது மட்டுமல்ல, மன்னர்கள் ஆட்சியில் அவர்கள் வைத்ததே சட்டம். மக்கள் சுயமாகச் சிந்திக்க முடியாது; சுதந்திரம் பற்றி நினைக்கவும் முடியாது. மன்னர் இறந்துபோனால், உடனே அவருடைய மகன் மன்னராகிவிடுவார். இதைத்தான் முடியாட்சி அல்லது மன்னராட்சி என்று சொல்லுவார்கள்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இதுபோன்ற ஒரு நிலை மீண்டும் வரக் கூடாது என்று சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தலைவர்கள் நினைத்தார்கள். வாரிசு உரிமை உள்ள மன்னராட்சி முறை கூடாது என்று நினைத்தார்கள்.
மக்கள் பங்கு கொள்ளும் மக்களாட்சி உள்ள நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அதற்கு நாடு குடியரசாக இருப்பது அவசியம் என்றும் முடிவு செய்தார்கள்.

குடியரசு என்பதன் விளக்கம்

குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத்தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது.குடியரசு என்பதற்கு, மறைந்தஅமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம்லிங்கன் தான் மிகச்சரியாக இலக்கணம் வகுத்தார். அவரது புகழ்பெற்ற உரையின் இறுதியில் “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு‘ என்று அவர் ரத்தினச் சுருக்கமாக விளக்கம் அளித்தார். இந்த விளக்கத்துக்கு பொருள் தரும்படியாக இந்தியா விளங்கி வருகிறது.

அத்தகையமக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம்பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்தியஅரசியல் அமைப்புச் சட்டம்.

அரசியல் சட்ட சாசனம்

1947 ம் ஆண்டிலேயே சுந்திரம் கிடைத்தாலும் அரசியல் சட்ட சாசனத்தை உருவாக்க நான்கு வருடங்கள்

உண்மையில் இந்தியா சுதந்திரம் அடையப் போகிறது என்ற உறுதி எப்போது ஏற்பட்டதோ அப்போதே அரசியல் சாசன சட்டத்தை நம் தலைவர்கள் உருவாக்கத் துவங்கி விட்டனர். எனினும் இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களையும் அனுசரித்து சட்டம் அமைப்பதில் தான் அவ்வளவு தாமதம் ஏற்பட்டது.1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்தியஅரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்தசின்கா என்பவரை நியமித்தது.பிறகு ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல்அமைப்பு சாசனம் எழுதப்பட்டது. பல சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாகஎழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால்ஏற்றுக்கொள்ளப்பட்டு,, 1950 ஜனவரி 26 ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது. அதனால், அந்த நாளை நினைவுகூறும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசியகுடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.


கானல்நீரான பொது சிவில் சட்டம்

சுதந்திரம் பெற்றபின் அம்பேத்கர் தலைமையில் அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணயசபையில் பொது சிவில் சட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.அப்போது அரசியல் நிர்ணய சபைஉறுப்பினர்களாக இருந்த முகமது இஸ்மாயில் சாகேப், நசிருத்தீன் அகமது, மகபூப் அலிபெய்க் மற்றும் பாக்கர் சாகேப் பகதூர் போன்றவர்கள் இச்சட்டம் வந்தால் தாங்கள் பின்பற்றும் ஷரியத்சட்டம் ஆபத்துக்குள்ளாகும் என்று கருதி, அதில்திருத்தங்கள் கொண்டுவந்து, தங்கள் தனிநபர் சட்டங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென கோரினர். அதற்குஅவர்கள் யூகோஸ்லாவியா, செர்பிய, குரேஷியா மற்றும் ஸ்லோவினிய நாடுகளில்சிறுபான்மை இனத்தவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை சுட்டிக்காட்டி, அதேபோன்றதொரு பாதுகாப்பை இங்கேயும் கோரினர்.இது குறித்து கருத்து தெரிவித்தஅம்பேத்கர் ஒரு சில ஆட்சேபங்களை தெரிவித்தாலும் பிறகு அவர் கூறும்போது ஒரு பொது சிவில் சட்டம் இயற்ற அரசுகள் முற்படும்போது நாட்டில் வாழும் பிற சமய மக்களை குறிப்பாக முஸ்லிம்சமூகத்தினரின் கருத்தொற்றுமையுடன் செயல்படவில்லையென்றால் குழப்பமேஏற்படும் என்பதையும் கூறி எச்சரித்தார்.

பொது சிவில் சட்டம் இந்துக்களுக்கும் எதிரானது என்பதால் அப்போதைய இந்துக்கள் பலரும் அதை எதிர்த்தனர்

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, நாடு முழுவதும் இந்துக்களுக்குஒரு பொதுவான சிவில் சட்டத்தைக் கொண்டுவர இந்து தனிநபர் சட்டங்களை தொகுக்கஅம்பேத்கர் தலைமையில் ஒரு குழு அமைத்தார். பெண்களுக்கு சம உரிமை, சொத்துரிமை, விவாகரத்து உரிமை வழங்க வேண்டுமென்பதில் அம்பேத்கருடன் நேருவும்ஒத்த கருத்து கொண்டிருந்தார். அத்தகைய கருத்துகளையொட்டி அம்பேத்கர் முயன்றுஉருவாக்கிய மசோதா இந்து பழமைவாதிகளிடமும், இந்து மகா சபையினரிடமும் (இன்றைய பிஜேபியின் முன்னோடி) கடுமையான கண்டனத்தை சந்தித்தது. அன்றையகுடியரசுத் தலைவராக இருந்த இராஜேந்திர பிரசாத் இந்த மசோதா இந்துபாரம்பரியத்துக்கு எதிரானது என்றும், ஒவ்வொரு இந்து குடும்பத்தையும்பாதிக்கும் என்று கூறியதோடு, மசோதா நிறைவேறினாலும் சட்ட அங்கீகாரம் பெறதன்னுடைய கையெழுத்து கிடைக்காது என்பதையும் உணர்த்திவிட்டார். பெண்களைத்தவிர பெரும்பாலான காங்கிரஸ்உறுப்பினர்களும், எதிர்ப்பாக இருந்தனர். எனவேஎவ்வித விளக்கமுமின்றி மசோதா கைவிடப் பட்டது.

டாக்டர் அம்பேத்கர் அவர்களுடன் முஸ்லிம்களின் நட்புறவு

நாட்டின் சுதந்திரத்திற்கு முன் அம்பேத்கர் அவர்களுக்கு ஆசை வார்த்தை காட்டி தேர்தலில் நிறுத்தி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து கை கொட்டிச் சிரித்தார்கள் ஓர் அறிவாளி நயவஞ்சகமாக தோற்கடிக்கப்பட்டதை உணர்ந்த முஹம்மதலி ஜின்னா அவர்கள் கிழக்கு வங்காளத்தில் வெற்றி வாகை சூடிய முஸ்லிம் லீக் வேட்பாளரை ராஜினாமா செய்ய வைத்து அந்த இடத்தில் அம்பேத்கர் அவர்களை முஸ்லிம் லீக் டிக்கெட்டில் நிறுத்தி வெற்றி பெறச் செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பிய பெருமை முஹம்மது அலி ஜின்னா அவர்களையே சாரும்.

குடியரசு அமைக்கப்பட்டதன் நோக்கம்

குடிமக்கள் அனைவருக்கும்போதுமான வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். மக்கள் வாழ்க்கை தரத்தினை உயர்த்த வேண்டும்.பொது சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.குழந்தைகளுக்கு இலவச, கட்டாய கல்வி தர வேண்டும்.ஒரு சிலரின் கைகளிலேயே நாட்டின் செல்வ வளம் குவியா வண்ணம் தடுக்க வேண்டும்.ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி வழங்க வேண்டும். நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்.பன்னாட்டு அமைதியையும், பாதுகாப்பையும் மேம்படுத்த வேண்டும்.

மேற்காணும் அத்தனை அம்சங்களும் இஸ்லாம் கற்றுத் தந்த அரசியல் பாடமாகும். இஸ்லாமிய அரசில் அத்தகைய அம்சங்கள் முழுமையாக இருந்தன ஆனால் இன்று பெயரளவில் தான் குடியரசு ஆட்சி என்று கூறப்படுகிறது

மாற்று மதத்தவர்கள் தெய்வங்களை திட்டக் கூடாது


وَلَاتَسُبُّواالَّذِينَيَدْعُونَمِنْدُونِاللَّهِفَيَسُبُّوااللَّهَعَدْوًابِغَيْرِعِلْمٍ (الانعام108)حكمهاباقفيهذهالأمةعلىكلحالفمتىكانالكافرفيمنعةوخيفأنيسبالإسلامأوالنبيعليهالسلامأواللهعزوجلفلايحللمسلمأن يسبصلبانهمولادينهمولا كنائسهم ولايتعرضإلىمايؤديإلىذلكلأنهبمنزلةالبعثعلىالمعصية(قرطبي

ஜெரூசலம் வெற்றி கொள்ளபட்ட போதும் அங்குள்ள கிறிஸ்தவர்களுக்கும், அவர்களின் ஆலயங்களும் முழுமையான பாதுகாப்பு உண்டு. என்று எழுதிக் கொடுத்த உமர் ரழி.. அவர்கள்

لَمَّا دَخَلَ عمرُ رض الجَابِية جاء رؤساء بيت المقدس الي عمررض فوقع الصلح بينه وبينهم علي جزية معلومة وكتب باالصلح وثيقتين وثيقةظلت عند العرب ووثيقة ظَلَّتْ عند الروم خلاصةُ هذه الوثيقة اطلاقُ حُرِّية الدين للمسيحيين واِبْقاؤهم علي ما كانوا عليه من امر دينهموطُقٌوْسِهِمْ وكَنَا ئِسِهم وفي رواية لاتُسَكَّنكنائسُهمولاتُهْدَمُولايُنقَضُمنهاولامنصلبانهمولاشيءمنأموالهمولايُكْرَهونعلىدينهمولايُضَارّأحدمنهم(دروس التاريخ


சிறுபான்மை இந்துக்களை நல்ல விதமாக நடத்துங்கள்-காயிதே மில்லத்

இந்தியா பாகிஸ்தான் பிரிந்த போது முஸ்லிம் லீக் கட்சியும் பிரிய நேரிட்டது. இந்தியாவில் காயிதே மில்லத் அவர்களின் தலைமையிலும், பாகிஸ்தானில் முஹம்மது அலி ஜின்னா அவர்களின் தலைமையிலும் செயல்படத் துவங்கிய நேரத்தில் கட்சிப் பணத்தை பிரிப்பது பற்றிய பேச்சு வந்தது. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் காயிதே மில்லத் அவர்களிடம் அது பற்றிப் பேச அழைப்பு விடுத்த போது கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்கள் கூறினார்கள் கட்சிப்பணத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் அதை நாங்கள் எப்படியோ சமாளித்துக் கொள்வோம் ஆனால் அதற்குப் பதிலாக நீங்கள் முக்கியமான ஒரு காரியம் செய்ய வேண்டும். உங்கள் நாட்டில் (பாகிஸ்தானில்) வாழும் சிறுபான்மை இந்து மக்களை நீங்கள் நல்ல விதமாக நடத்துங்கள் அவர்களின் உரிமைகளை மதித்து நடந்து கொள்ளுங்கள். அவர்களின் மத உரிமைகளில் தலையிடாதீர்கள் அவ்வாறு செய்தால் அதுவே எங்களுக்குப் போதும். நீங்கள் பணம் தரா விட்டாலும் பரவாயில்லை.

குடியரசு தலைவர்

குடியரசுத் தலைவர் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவார். சில குடியரசுகளில் தலைவர் நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்படுவார். ஐக்கிய அமெரிக்கா, இலங்கை ஆகிய நாடுகளில் இந்த முறை உள்ளது. சில நாடுகளில் குடியரசுத் தலைவர் நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்படாமல், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அவைகளால் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இந்தியாவில்இந்த முறை பின்பற்றப்படுகிறது. இத்தகைய முறைகள் உள்ள குடியரசுகளில் குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள்.

1. டாக்டர் ராஜேந்திர பிரசாத் (26.-1.-1950 – 13.-5.-1962)

சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவ ரானார் ராஜேந்திர பிரசாத். 1950 ஜனவரி 21ஆம் தேதி முதல் 1962ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக பதவி வகித்தார். சுதந்திரப் போராட்ட வீரராகவும் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய குழுவில் ஒருவராகவும் பணியாற்றினார்.

2. டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (13.-5.19-62 – -13.-5.19-67)

இந்தியாவின் முதல் துணை குடியரசுத் தலைவ ராகவும் இரண்டாவது குடியசுத் தலைவராகவும் பணியாற்றியவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தமிழ் நாட்டின் திருத்தணி நகரில் பிறந்தவர். தத்துவத்தில் பல்வேறு பட்டங்களைப் பெற்றவர். ஹிந்து கலாசாரத்தின் முக்கியப் பரப்புரையாளராய் திகழ்ந்தவர்.

3. டாக்டர் ஜாகீர் ஹுசைன் (13.5.67 — 13.5.69)

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சிறந்த கல்வியாளர். 13.5.67இல் இருந்து 13.5.69 வரை மட்டுமே குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர். பதவிக் காலத்தை முடிக்கும் முன்னரே மரணம் அடைந்துவிட்டார். அலிகார் முஸ்லிம் பல்கலை கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பு வகித்தவர். டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக் கழகம் டெல்லி பல்கலைக்கழகம் பெர்லின் பல்கலைக்கழகம் உள்ளிட்டவைகளில் உயர்கல்வி கற்றவர் டாக்டர் ஜாகிர் ஹுசைன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை தனது வாழ்நாளில் பெற்றார்.

4. வரகிரி வேங்கட கிரி என்ற வி.வி.கிரி (24.8.69 – 24.8.74)

முன்னாள் மதராஸ் மாகாணத்தில் இன்றைய ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சிந்தால பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வி.வி.கிரி. ஐரோப்பாவில் சட்டம் பயின்ற இவர் பிரபல தொழிற்சங்க வாதியாகப் பெயரெடுத்தார். மதராஸ் மாகாணத்தில் ராஜாஜி தலைமையில் அமைந்த அமைச்சரவையில் தொழிலாளர் நல அமைச்சராகப் பணியாற்றினார். ஜாகிர் ஹுசைன் மறைவை அடுத்து தற்காலிக குடியரசுத் தலைவராக பணியாற்றிய விவிகிரி முறைப்படி குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

5. பக்ருதீன் அலி அஹ்மது (24.8.74 – 11.2.77)

அஸ்ஸாமில் பிறந்தவர். லண்டனில் மேற்படிப்பு படித்தபோது நேருவை நேரில் சந்தித்து காங்கிரசில் இணைந்து விடுதலைக்காக பாடுபட்டார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்று மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார். விடுதலைக்குப் பின்னர் நேருவின் அமைச்சரவையில் உணவு, வேளாண்மை, கல்வி, தொழில் உள்ளிட்ட துறைகளில் அமைச்சராக பணியாற்றினார். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது காங்கிரஸ் சார்பில் குடியரசுத் தலைவர் பதவிக்கு முன் நிறுத்தப்பட்டார். 1974 ஆகஸ்ட் 20ம் தேதி முதல் 1977 பிப்ரவரி 11ம் தேதி வரை குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தார்.இவரது ஆட்சி காலத்தில் இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய சோதனை ஏற்பட்டது.

இந்திரா காந்தியால் கொண்டு வரப்பட்ட அவசரநிலை பிரகடனம் என அழைக்கப்பட்ட எமர்ஜென்சி இக்காலக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இந்திரா அரசு செய்த இமாலய தவறாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு விட்டது. எழுத்துரிமை பேச்சுரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் பாதிக்கப்பட்டன.இது பிரதமர் இந்திரா காந்தியின் விருப்பத்தின் பேரில் நடந்தது எனினும் இந்த சட்ட அறிவிப்பில் பக்ருதீன் அலி அஹ்மது எவ்வாறு கையொப்பமிட்டார் என்ற வினா இன்று வரை எழுந்து கொண்டே இருக்கிறது. இவர் கொசவாவின் பிரிஸ்டினா பல்கலைக் கழகத்தினால் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு கவுரவப்படுத்தப்பட்டார். இவர் இந்தியாவின் குடியரசுத் தலைவர்களில் இரண்டாவது முஸ்லிம் குடியரசுத் தலைவராவார். அவ்வாறே பதவியில் இருக்குபோதே மரணம் அடைந்தோரில் இரண்டாமவராவார். பதவிக் காலத்தில் மரணம் அடைந்தவர்களில் டாக்டர் ஜாகிர் ஹுசைன் முதலாமவர் என்பது குறிப்பிடத்தக்கது.

6. நீலம் சஞ்சீவ ரெட்டி (25.7.77 – 25.7.82)

மதராஸ் மாகாணத்தில் இருந்து முதன்முதலாக ஆந்திரப் பிரதேசம் உருவான பின்பு முதலாவதாக முதல் அமைச்சராக பதவி வகித்தவர். காங்கிரஸ் அல்லாத கட்சியால் முன் நிறுத்தப்பட்டு வெற்றிபெற்ற முதல் வேட்பாளர் நீலம் சஞ்சீவரெட்டி மட்டுமே. 1977ல் இந்திரா காந்தி ஆட்சியினை வீழ்த்தி அசுரபலத்துடன் ஆட்சியில் அமர்ந்த ஜனதா கட்சியின் செல்வாக்கினை நிரூபிக்கும் விதமாக நீலம் சஞ்சீவ ரெட்டியின் தேர்வு அமைந்திருந்தது.

7. கியானி ஜெயில்சிங் (25.7.82 – 25.7.88)

இந்திராவின் ஆட்சியில் மத்திய உள்துறை அமைச்ச ராக இருந்தவர். இந்திராகாந்தி ஆணையிட்டால் அவர் வீட்டை பெருக்கி சுத்தம் செய்யவும் தயார் என பகிரங்கமாக அறிவித்தவர். இந்திராவின் ஆட்சிக் காலத்தில் பஞ்சாபில் தொடர்ந்து நடைபெற்றுவந்த சீக்கிய கிளர்ச்சியாளர்களின் இயக்கமான காலிஸ்தான் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டது. அதனால் பஞ்சாபில் மனித மீறல்கள் அதிகரித்தன. அதனைத் தொடர்ந்து பஞ்சாபில் காங்கிரசுக்கு எதிரான அதிரலைகள் ஏற்பட்டதை தொடர்ந்து சீக்கியர்களின் கோபத்தைத் தணிப்பதற்காக ஜெயில் சிங்கை குடியசுத் தலைவராக காங்கிரஸ் தெரிவு செய்ததாக அப்போது அரசியல் அரங்கில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இருப்பினும் பஞ்சாப் பிரச்னை சூடுபிடித்ததே யொழிய குறையவில்லை. ‘ஆப்பரேசன் ப்ளு ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நீல நட்சத்திர நடவடிக்கை 1984ம் ஆண்டு ஜூன் 3ம் தேதியில் இருந்து 6ம் தேதி வரை நீடித்தது. சீக்கியர்களின் புனித தலமாகக் கருதப்படும் அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குள் இந்திய ராணுவம் நுழைந்தது. பொற்கோயிலுக்குள் ராணுவத்துக்கும் காலிஸ்தான் அமைப்பினருக்கும் சண்டை நடந்தது. இதில் இந்திய ராணுவத்தின் கவச வாகனங்கள், பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் இத்தாக்குதலில் இடம் பெற்றன. இதில் இந்திய ராணுவத் தரப்பில் 83 பேர் கொல்லப்பட்டனர். 220 பேர் கொடுங்காயம் அடைந்தனர்.

இந்த அதிரடித் தாக்குதலில் 1500 பேர் பலியாகி விட்டதாக மற்றொரு தகவல் கூறுகிறது. சீக்கியர்களின் பாரம்பரியமிக்க மிகப்பெரிய நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. அகாலிதளப் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே இதில் கொல்லப்பட்டார்.

பொற்கோயிலில் நடத்தப்பட்ட நீல நட்சத்திர நடவடிக்கைக்கு எதிர்நடவடிக்கையாக இந்திரா காந்தியை அவரின் சீக்கிய மெய்காப்பாளர்கள் படுகொலை செய்தனர். அதனைத் தொடர்ந்து தலைநகர் டெல்லி உட்பட வடமாநிலங்களில் பெரும் சீக்கிய எதிர்ப்பு கலவரங்கள் நிகழ்ந்தன. பல்லாயிரம் சீக்கியர்கள் வன்முறைக்கு பலியாயினர். பெருஆலமரம் சாயும்போது சருகுகள் உதிர்வது வாடிக்கைதான் என இந்திராவுக்குப் பிறகு பதவி ஏற்ற ராஜீவ்காந்தி இந்த சீக்கியர் இனப்படுகொலைக்கு புதிய வியாக்கினம் கொடுத்தார். அது அப்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கோபத்தைத் தணிப்பதற்காக அந்த சமூகத்தைச் சேர்ந்த பிரபலத்தை உயர்பதவியில் அமர்த்துவதால் மட்டுமே பிரச்னை தீர்ந்துவிடாது. மாறாக அதிகரிக்குமே ஒழிய குறையப்போவதில்லை என்பதும் நிரூபணம் ஆனது.

8. ராமஸ்வாமி வெங்கட்ராமன் (25.7.87 – 25.7.92)

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டவர். காமராஜ் அமைச்சரவையில் இடம்பெற்று சிறந்த முறையில் பங்காற்றியவர். மத்திய அமைச்சரவையில் நிதி, ராணுவம் மற்றும் தொழில்துறை அமைச்சராக செயல்பட்டவர். 1989ம் ஆண்டு திமுக அரசை கலைத்ததிலும் 91ல் நரசிம்மராவை பிரதமராக்கியதிலும் இவருக்கு மறைமுகப் பங்குண்டு. ஒரே காலகட்டத்தில் தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பிரதமர், குடியரசுத் தலைவர் என நாட்டின் முக்கியப் பதவிகளில் கோலோச்சியது வரலாற்றின் வித்தியாசமான காட்சியாக அமைந்தது.

9. சங்கர் தயாள் சர்மா (25.7.92 – 25.7.97)

-மத்தியப்பிரதேச முதல் அமைச்சராகவும் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சராகவும் ஆந்திர ஆளுநராகவும் பதவிகளை வகித்த டாக்டர் சங்கர் தயாள் சர்மா மூன்று பிரதமர்களைப் பார்த்தவர். தேசிய அவமானமாக கருதப்பட்ட, பாசிச வெறியர்களால் நடத்தப்பட்ட பாபர் மஸ்ஜித் இடிப்பு இவர் குடியரசுத் தலைவராக இருக்கும்போது நடந்தது. பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட அவமானகரமான நிகழ்வைக் கண்டு மனம் கொதித்தார். பாசிசவாதிகளின் இந்த செயலால் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு அவமானம் நேருமே பெயர் கெட்டுவிடுமே என செய்தியாளர்களின் கூட்டத்தில் கிட்டத்தட்ட கண்ணீர்விட்டே கதறினார். உலக அளவில் பி.பி.சி.யும், சி.என்.என்.னும், மஸ்ஜித் இடிப்பை முழுவதுமாகப் படம்பிடித்து காட்டிய போதும் மஸ்ஜிதின் ஒரே ஒரு கும்பம்தான் இடிக்கப்பட்டது என மத்திய அரசும் இந்திய ஊடகங்கள் பலவும் புருடா விட்டபோது மஸ்ஜித் இடிப்பை வன்மையாக கண்டித்தார். தனது அறிக்கையில் தரைமட்டமாக்கப்பட்ட மஸ்ஜித் என்றே குறிப்பிட்டு பூசி முழுகியவர்களின் மூக்கை பதம் பார்த்தார்.

மகாகவி இக்பாலின் கவிதைகளை சிலநேரங்களில் மேற்கோள் காட்டும் ஜவஹர்லால் நேருவைப் போலன்றி இக்பாலின் கவிதைகளை சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் குறிப்பிடும் வி.பி.சிங் போன்றோ, மிர்சா காலிப், அமீர் குஸ்ரு கவிகளை அவ்வப்போது குறிப்பிடும் அடல்பிகாரி வாஜ்பாய் போலவோ பகவத் கீதையை சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் மேற்கோள் காட்டும் அப்துல் கலாம் போலவோ அல்லாமல் உரையாற்றும் போதேல்லாம் திருக்குர்ஆனின் வரிகளை மேற்கோள் காட்டும் சங்கர் தயாள் சர்மா அனைத்து மக்களையும் நேசித்தவர். திருக்குர்ஆன் உலகமக்கள் அனைவருக்கும் பொதுவான மறை என்றார். பலவேதங்கள் தங்களது இனத்தைப் பற்றி, பிரிவைப் பற்றி மட்டுமே பேசுகின்றன. கடவுள் கொள்கையைக்கூட அவைகள் பொதுமைப்படுத்துவதில்லை என்று குறிப்பிடும் சங்கர் தயாள் சர்மா திருமறைக் குர்ஆன் பிற வேதங்களில் இருந்து எவ்வாறு வேறுபட்டு விளங்குகிறது என்பதை அழகுற விவரிக்கிறார்.

திருக்குர்ஆன் இறைவனை ரப்புல் ஆலமீன் என்று கூறுவதை சிலாகித்த சங்கர் தயாள் சர்மா, உலகம் அனைத்திற்கும் அவன்தான் இறைவன் என்று குர்ஆன் கூறுகிறது ரப்புல் முஸ்லிமீன் என்று குறிப்பிடவில்லையே என்று அவர் குறிப்பிடுகிறார். பல்கலைக்கழகங்களில் அவர் ஆற்றிய பட்டமளிப்பு உரைகள் இன்றளவும் கல்வியாளர்களால் பாராட்டப்படுகிறது.

10. கே.ஆர்.நாராயணன் (25.7.1997 – 25.7.2002)

கோச்செரில்ராமன் நாராயணன் என்ற கே.ஆர். நாராயணன் இந்தியாவின் பத்தாவது குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றார். இந்த தேசத்தின் முதல் தலித் குடியசுத் தலைவரான இவர் கேரளாவைச் சேர்ந்தவர். இவர் தாய்லாந்து, துருக்கி, சீனா, மற்றும் அமெரிக்காவில் இந்திய தூதராகப் பணியாற்றினார்.

சட்டம் மற்றும் அறிவியல் துறைகளில் முனைவர் பட்டம் வாங்கியவர். இவர் இந்தியாவின் குடியரசு துணைத் தலைவராக இருந்தபோது பாப்ரி மஸ்ஜித் இடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. அப்போது ராஜ்யசபா தலைவராகவும் இருந்ததால் தனது கண்டனங்களை கூர்மையாகப் பதிவு செய்தார். தேசத்தந்தை காந்தியாரின் படுகொலைக்குப் பிறகு நாட்டை மிகவும் துயரத்தில் ஆழ்த்திய நிகழ்வு பாப்ரி மஸ்ஜித் இடிப்பு நிகழ்வு என்றார். இவரது பதவியின் கடைசிக் காலத்தில் உலகையே உலுக்கிய குஜராத் இனப்படுகொலை நடந்தது. குஜராத் இனப்படுகொலையைத் தடுக்க உடனடியாக ராணுவத்தினை அங்கு அனுப்பி வைக்கவேண்டும் என அன்றைய பிரதமர் வாஜ்பாயிடம் வேண்டுகோள் விடுத்தார். அது வாஜ்பாயினால் புறக்கணிக்கப்பட்டது. இதில் கே.ஆர்.நாராயணனின் சான்றாண்மை வெளிப்பட்டது எனலாம்.

11. அவுல் பக்கிர் ஜெயினுல் ஆப்தீன் அப்துல் கலாம் (25.7.2002 – 25.7.2007)

இவர் இந்தியாவின் 12வது குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றார். குடியரசுத் தலைவர்களில் இவர் போல் பிரபலம் பெற்றவர் யாரும் இல்லை எனும் அளவுக்குப் புகழ் அடைந்தவர். இவர் குடியரசுத் தலைவர் பதவிக்கு தெலுங்கு தேசம் கட்சி சந்திரபாபு நாயுடுவால் பரிந்துரைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கூட்டணி மீண்டும் கே.ஆர்.நாராயணனை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன் நிறுத்துவதாக யூகங்கள் புறப்பட்டதால் செல்வாக்குமிக்க கே.ஆர். நாராயணனை எதிர்ப்பதற்கு மற்றொரு செல்வாக்கு மிக்க ஆளுமை தேவைப்பட்டது. சந்திரபாபு நாயுடு கலாம் பெயரை முன்மொழிந்த போது கலாம் இதற்கு சம்மதிப்பாரா? என சந்தேகம் தெரிவித்தவர்கள் தான் பாஜக தலைவர்கள்.

நான் சம்மதம் வாங்கித் தருகிறேன் என தைரியம் ஊட்டி கலாமை தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக்கினார். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு. பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலாமை ஏற்றுக் கொண்டனர். ஆனால் அதன் பின்னர் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் ஒரு முஸ்லிமை நாங்கள் தான் குடியரசுத் தலைவராக்கினோம் என பெருமை பீற்றிக் கொண்டார்கள்.

பாஜகவைப் பிடிக்காதவர்களும் கலாமை விமரிசிக்கும் சிலரும் கலாம் பாஜகவின் வேட்பாளர் என்றே இன்றளவும் கூறி வருகின்றனர். இது உண்மையன்று. கலாம் முன்னிறுத்தப்படாவிட்டால் கே.ஆர்.நாராயணன் முன்னிறுத்தப்பட்டு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கக்கூடும் பாஜகவின் வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டு இருக்கலாம் அந்தவகையில் பாஜகவின் மானத்தைக் காப்பாற்றியவர் அப்துல் கலாம் என்று வேண்டுமானால் கூறலாம். இந்திய ஏவுகணை இயலின் தந்தை இந்திய ஆற்றலின் பிதாமகன் என குறிப்பிடப்படும் அப்துல்கலாம் தமிழர்களின் நலத்தினை குறித்தோ முஸ்லிம்களின் அவலநிலை குறித்தோ பேசப்படும் அளவுக்கு அவர் கடமை ஆற்றவில்லை என பொதுவாகக் குற்றம்சாட்டப்படுகிறது. ஒரு குடியரசுத் தலைவர் பணி என்பது வரையறுக்கப்பட்ட பணி அதில் அதிகார முறைகேடு செய்யாமல் இருந்ததே மிகப்பெரும் விஷயம் என பாராட்டுவோரும் உண்டு. அதனை நிரூபிக்கும் விதமாக இவருக்கு அடுத்து பொறுப்புக்கு வந்த குடியரசுத் தலைவரின் பணிகள் அமைந்தன.

12. பிரதிபா தேவிசிங் பாட்டீல் (25.7.-2007- – 25.7.2012)

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் எனும் பெருமைக் குரிய பிரதிபா பாட்டீல் சுற்றுப்பயணம் செய்யாத நாடுகள் உலகில் இன்னும் கண்டுபிடிக்காமல் மட்டுமே இருக்கமுடியும்.

சோனியாகாந்தி குடும்பத் திற்கு நெருக்கமானவர் என்ற ஒரே தகுதியைத் தவிர அவருக்கு சிறப்பியல்புகள் எதுவும் இல்லை எனலாம். பிரதிபா பாட்டீலை நினைத்து இந்திய பெண் குலம் ஒன்றும் பெரிதாக பெருமைபட்டுக் கொள்ள முடியாது என்பதுதான் நிஜம்.

13. பிரணாப் முகர்ஜி (25.7.2012 – 2017)

நீண்ட காங்கிரசு பாரம்பரியம் கொண்டவர் இந்திரா காலத்தில் இருந்தே பிரதமர் பதவியின் மீது இரண்டு கண்களையும் வைத்து வந்தவர். அவருக்கு ஆறுதல் பரிசாக இந்தப் பதவியை காங்கிரஸ் தலைமை வழங்கியுள்ளது.

ஜனாதிபதி என்பது
ஆளுமையாக கருதப்பட்ட பதவியாக இருப்பினும் நாட்டின் முதல் குடிமகன் என கவுரவமாக அழைக்கப்பட்டாலும் முப்படைகளின் தலைவரே அவர் என சொல்லப்பட்டாலும் அப்பதவியை ரப்பர் ஸ்டாம்ப் என்றும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை என்றும் சில வேளைகளில் அழைக்கப்பட்டு வருவதையும் நாம் மறுப்பதில்லை.

1950ல் இருந்து இன்றுவரை பதிமூன்று பேர் இந்தியாவின் குடியரசுத் தலைவர்களாக பதவி வகித்துள்ளனர். இந்திய குடியரசுத் தலைவர்கள் வரலாற்றில் இரண்டுமுறை அப்பதவியை அலங்கரித்தவர் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

குடியரசுத் தலைவர் பதவியில் இருந்த போதே மரணமடைந்தவர்கள் இருவர் ஒருவர் டாக்டர் ஜாகிர் ஹுசைன், மற்றொருவர் பக்ருதீன் அலி அஹ்மது ஆவார்.

இஸ்லாமிய அரசு முறையும் குடியாட்சியே!  

கலீபா(பிரதிநிதி) எனும்சொல்லே குடியாட்சியை பிரதிபலிக்கக் கூடியது

அபூபக்கர் (ரலி) மக்களின் தேர்வு

عن جرير قال لي ذو عمرو يا جرير إن بك علي كرامة وإني مخبرك خبرا إنكم معشر العرب لن تزالوا بخير ما كنتم إذا هلك أمير تأمرتم في آخر فإذا كانت بالسيف كانوا ملوكا يغضبون غضب الملوك ويرضون رضا الملوك - بخاري

மக்கள் விரும்பாதவர் இமாமத்செய்ய முடியாது.

இன்றைய குடியரசு முறையும் இஸ்லாமிய குடியரசு முறைக்கும்இரண்டு பிரதான வித்தியாசங்கள்–

 முதலாவது
ஆட்சியாளர் தேர்வுமுறை.

1. இன்றைய குடியரசு– தேர்தல் election

2. இஸ்லாமியகுடியரசு- தேர்வு selection

(உதாரணம்; அபூபக்கர் (ரலி) தேர்வுசெய்யப் பட்டார்கள். பிறகுமக்களின் அங்கீகாரத்தைபெற்றார்கள், அவ்வாறே உமர் (ரலி)உஸ்மான் (ரலி) ஆகியவர்கள்களும்

இரண்டாவது வித்தியாசம், இஸ்லாமிய ஆட்சியாளர் மக்களால் தேர்ந்தெடுக்கப் படும்அல்லாஹ்வின் பிரதிநிதி. அல்லாஹ்வின் அதிகாரத்தை பூமியில் நிலைநாட்டுபவர்.

தேர்தல் முறைக்கு மாறிய முஸ்லீம்கள்

ஆட்சியாளர்களிடம் தக்வாவும் மக்களிடம் பொருப்புணர்வும் அவசியம், அது குறைந்து போகிற கட்டத்தில் இதுவே மன்னரட்சிக்கு வழிவகுக்கும் . முஸ்லிம்களின் அரசியல் அப்படித்தான் தடம் புரண்டது.

இதிலிருந்து விடுபட விரும்பிய முஸ்லிம்கள் தேர்தல் பாணி அரசியலுக்கு மறினர்.

 19 ம் நூற்றாண்டிலிருந்து சந்தர்ப்ப சுழ்நிலைகள் காரணமாக முஸ்லிம் உலகத்திலும் தோ்தல் அரசியல் வௌிப்படத் தொடங்கியது.

இப்போது துருக்கி, இரான் ,எகிப்து ,ஜோடான் ,லெபனான் , மெராக்கோ, குவைத் ,எமன் ,பாகிஸ்தான் பங்களாதேஷ் ,மலேஷியா, செனகல் நைஜீயா, போன்ற நாடுகளில் தோ்தல் பானி ஜனநாக நடைமுறை வழக்கில் இருக்கிறது. இந்தியா தொன்னாப்க்கா ஐரோப்பா வடஅமொக்கா ஆஸ்திரேலியா போன்ற முஸ்லிம்கள் பெரும் சிறுபான்மையினராக வாழ்கிற தேசங்களிலும் தோ்தல் அரசியலில் முஸ்லிம்கள் பங்கேற்று வருகிறாகள.

பன்மை சமூகதில் முஸ்லிம்கள்

வணக்கம் இறை நம்பிக்கை கொள்கை அல்லாத பிற காரியங்களுக்காக நாமும் அவர்களுடன் தோள் கொடுக்கலாம் .ஒரு மதத்தவர் பிற மதத்வருக்கு உதவ வேண்டும் என்ற நிகரில்லா ஒரு ஐக்கியத்தை குர்ஆன் போதிக்கின்றது

اۨلَّذِيْنَ اُخْرِجُوْا مِنْ دِيَارِهِمْ بِغَيْرِ حَقٍّ اِلَّاۤ اَنْ يَّقُوْلُوْا رَبُّنَا اللّٰهُ‌ وَلَوْلَا دَ فْعُ اللّٰهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَـعْضٍ لَّهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعٌ وَّصَلَوٰتٌ وَّمَسٰجِدُ يُذْكَرُ فِيْهَا اسْمُ اللّٰهِ كَثِيْرًا‌ وَلَيَنْصُرَنَّ اللّٰهُ مَنْ يَّنْصُرُه اِنَّ اللّٰهَ لَقَوِىٌّ عَزِيْزٌ‏ 
இவர்கள் (எத்தகையவரென்றால்,) தங்களுடைய இறைவன் அல்லாஹ்தான் என்று கூறியதற்காக நியாயமின்றி தங்கள் வீடுகளிலிருந்து எதிரிகளால் துரத்தப்பட்டார்கள். மனிதர்களில் (அநியாயம் செய்யும்) சிலரை, சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காத வரையில் கிறிஸ்தவர்களின் ஆலயங்களும், அவர்களுடைய மடங்களும், யூதர்களுடைய ஆலயங்களும், அல்லாஹ்வுடைய திருப்பெயர் அதிகமாக நினைவு செய்யப்படும் பள்ளிவாசல்களும் அழிக்கப்பட்டே போயிருக்கும். அல்லாஹ்வுக்கு யார் உதவி செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக அல்லாஹ்வும் உதவி செய்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் மிகப் பலவானும், அனைவரையும் மிகைத்தவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 22:40)

வரலாற்றில் இரு சரித்திரம்

1. உமர் (ரலி)அவர்கள் இறை தூதர்களின் உறைவிடமான பைத்துல் முகத்தஸை முஸ்லிம் களின் ஆளுமையில் மீட்டி எடுத்து பின்பு அங்கு இருந்த கிரிஸ்தவர்களின் / யூதர்களின் கோவிலை இடிக்க வில்லை. முன்பு போல் அதில் தொடர்ந்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கினார்கள் .

2. கையை விட்டும் நழுவிய பைத்துல் முகத்தஸை சலாஹுதீன் அய்யூப்பி (ரஹ்) கி.பி.1187 அக்டோபர் முஸ்லிம்களின் ஆளுமையில் மீட்டி எடுத்தர்கள் . அப்போது அந்த கோவிலை இடிக்க நினைத்த போது இடிக்க கூடாது . ஏனெனில் உங்களுக்கு முன்பு உமர் (ரலி)அவர்கள் இதை வெற்றி கொண்ட போது இடிக்கவில்லை .என சக முஸ்லிம் கூறி தடுத்தார்கள் . எனவே அது அவ்வாறே பாதுகாப்புடன் அவர்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கினார்கள் .

لَا يَنْهٰٮكُمُ اللّٰهُ عَنِ الَّذِيْنَ لَمْ يُقَاتِلُوْكُمْ فِى الدِّيْنِ وَلَمْ يُخْرِجُوْكُمْ مِّنْ دِيَارِكُمْ اَنْ تَبَرُّوْهُمْ وَ تُقْسِطُوْۤا اِلَيْهِمْ‌ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ‏ 
(நம்பிக்கையாளர்களே!) மார்க்க விஷயத்தில் உங்களுடன் எதிர்த்து போர் புரியாதவர்களுக்கும், உங்கள் இல்லத்திலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுக்கும், நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுடன் நீங்கள் நீதமாக நடந்து கொள்வதையும் அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதிவான்களை நேசிப்பவனாகவே இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 60:8)

சிலை வணங்கிகளான மக்கவாசிகளுடன்

ஹுதைபியா உடன்படிக்கை செய்திருந்தார்கள்

அநீதத்திற்கு எதிரான் “ஹில்புல் புலூல்” என்ற நற்பணி இயக்கத்தில் நபியாகும் முன்பே உருப்பினராக இருந்து களம் கண்டார்கள் .

(வேதக்காரர்களான) யூதர்களுடன் ஒப்பந்தம்

மதீனாவில் அரசியல்
அமைப்புகள்

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் அரசியல் அமைப்பு, சட்ட ஒழுங்கு ஆகிய அனைத்திலும் முதன் முதலாக முஸ்லிம்களுக்கு மத்தியில் நிலைத் தன்மையையும் ஒருமைப்பாட்டையும் நிறுவினார்கள். அதன் மூலம் மதீனாவில் புதிய இஸ்லாமிய சமுதாயத்திற்கும், சமூகத்திற்குமான அடித்தளத்தை மிக ஆழமாக உறுதிப்படுத்தினார்கள்.

இரண்டாம் கட்டமாக, முஸ்லிம் அல்லாதவர்களுடன் தங்களது சமூகத் தொடர்புகளை முறைப்படுத்தத் துவங்கினார்கள். அதற்குக் காரணம், முழு மனித சமுதாயமும் நிம்மதி, பாதுகாப்பு, நற்பயன்கள், நல்லுறவுகள் கிடைக்கப்பெற வேண்டும். ஒரே ஒருமைப்பாட்டுக்குக் கீழ் நாட்டு மக்களை கொண்டுவர வேண்டும் என்பதுதான். ஆகவே சுயநோக்கங்களும், இனவெறியும் நிரம்பி இருந்த அக்காலத்தில் எங்கும் காணப்படாத மன்னித்தல்,
பெருந்தன்மையுடன் நடத்தல், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சட்டங்களை நபி (ஸல்) அமைத்தார்கள்.

மதீனாவிற்கு அருகில் யூதர்கள்தான் முஸ்லிமல்லாதவர்களாக இருந்தார்கள். இவர்கள் முஸ்லிம்களின் மீது உள்ளத்தில் பகைமையை மறைத்து வைத்திருந்தாலும் வெளிப்படையாக
முஸ்லிம்களை எதிர்க்கவுமில்லை அவர்களிடத்தில் சண்டை, சச்சரவு செய்யவுமில்லை. எனவே நபி (ஸல்) யூதர்களுடன் நன்மையான நல்ல உடன்படிக்கையை ஏற்படுத்திக்
கொண்டார்கள்.

” யூதர்களுக்கு அவர்களது செல்வத்திலும், மதத்திலும் முழு சுதந்திரம் அளித்தார்கள்.”

அவர்களை மதீனாவை விட்டு விரட்ட வேண்டுமென்றோ அல்லது அவர்களுடைய சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டுமென்றோ அவர்கள் நாடவுமில்லை
அதைச் செய்யவுமில்லை.

உடன்படிக்கையின் அம்சங்கள்

நபி (ஸல்) அவர்கள் யூதர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் அம்சங்களை இப்போது நாம் பார்ப்போம்:

1) அவ்ஃப் கிளையினரைச் சேர்ந்த யூதர்கள், முஃமின்களுடன் இணைந்த ஒரே சமுதாயத்தினராக கருதப்படுவர். இந்த யூதர்களுக்கு அவர்களது மார்க்கத்தில் முழு உரிமை
உண்டு. முஸ்லிம்களுக்கும் அவர்களுடன் நட்பு கொண்டவர்களுக்கும் அவர்களின் மார்க்கத்தில் முழு சுதந்திரம் உண்டு. இவ்வாறே அவ்ஃப் கிளையினரை சாராத மற்ற
யூதர்களுக்கும் அவர்களது மார்க்கத்தில் முழு சுதந்திரம் உண்டு.

2) யூதர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலுள்ள தொடர்பு - நலம் நாடுதல், ஒருவருக்கொருவர் நல்லுபதேசம் செய்தல், உபகாரம் புரிதல் - என்ற அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். குற்றம் புரிவதில் துணை போவது கூடாது.

3) அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

4- وإن بينهم النصر على من دَهَم يثرب . . على كل أناس حصتهم من جابنهم الذي قبلهم .
யாராவது மதீனாவின் மீது முற்றுகையிட்டால் அவர்களுக்கெதிராக அனைவரும் போர் புரிய வேண்டும். தங்களுக்குள் உதவி செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் இருக்கும் பகுதியைப் பாதுகாகக வேண்டும்.

இந்த உடன்படிக்கையும், ஒப்பந்தமும் உறுதிபெற்றதால் மதீனாவும், மதீனாவைச் சுற்றியுள்ள பகுதிகளும் ஒற்றுமை மிக்க நாடாக மாறி அதற்குத் தலைநகரம் மதீனாவாக விளங்கியது. ( ரஹீகுல் மக்தூம்;பக்கம் 193)

எனவே நாமும் நம் நாட்டிலும் மாநிலத்திலும் நம்ஊர்களிலும் இதை கடை பிடித்தால் இலகுவாக தாவா செய்ய வழி கிட்டும். பாதுகாப்பு கிட்டும்.

உரிமை பறிக்கப் பட்டால் அநியாயம் நடந்தால் மதம் கடந்து போராட வேண்டும் .

2480 عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ»
2480. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடும்போது கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்.
என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 46. அநீதிகளும் அபகரித்தலும்

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، أَرَأَيْتَ إِنْ جَاءَ رَجُلٌ يُرِيدُ أَخْذَ مَالِي؟ قَالَ: «فَلَا تُعْطِهِ مَالَكَ» قَالَ: أَرَأَيْتَ إِنْ قَاتَلَنِي؟ قَالَ: «قَاتِلْهُ» قَالَ: أَرَأَيْتَ إِنْ قَتَلَنِي؟ قَالَ: «فَأَنْتَ شَهِيدٌ»، قَالَ: أَرَأَيْتَ إِنْ قَتَلْتُهُ؟ قَالَ: «هُوَ فِي النَّارِ»

ஒரு நபித் தோழர் கேட்டார் நபியே (ஸல்) ஒருவன் என் உடமையை பறிக்கிறான் . நபி (ஸல்) நீ கொடுக்க கூடாது.
அவர்: என்னோடு சண்டையிட்டால்?. நீயும் சண்டையிடு
உன்னை கொன்றுவிட்டால் நீ உயிர் தியாகி. நீ அவனை கொன்றுவிட்டால் அவன் பாவி நரகம் செல்வான்.. ஹதீஸ்:முஸ்லிம்.

عصر الخلافة الراشدة - (1 / 126)
كما كان يحقق في شكاوى الرعية ضدهم، ولما ضرب ابن لعمرو بن
العاص أحد الأقباط وبلغ عمر شكواه، أراد أن يقتص للقبطي وخاطب عمراً بعبارته
المشهورة: " متى استعبدتم الناس وقد ولدتهم أمهاتهم أحرارا "

அம்ருபின்ஆஸ் அவர்களின் மகன் கிப்தி கூட்டத்தைச்சார்ந்த ஒருவரை (அனியாயமாக) அடித்து விட்டபொழுது உமர் ரலி அவர்களிடம் கிப்தி முறையிட்டார் பலிவாங்க விரும்பினார்.உமர் ரலி அவர்கள் அதை நிறைவேற்றினார்கள்.

ஆட்சி/ஆட்சியாளர்களின் இலக்கணம்.

عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كُلُّكُمْ رَاعٍ فَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَالأَمِيرُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ وَهُوَ مَسْئُولٌ عَنْهُمْ، وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُمْ، وَالمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ بَعْلِهَا وَوَلَدِهِ وَهِيَ مَسْئُولَةٌ عَنْهُمْ، وَالعَبْدُ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُ، أَلاَ فَكُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ»

ஸஹீஹ் புகாரி 2554. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்களின் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

65 - (1855) عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «خِيَارُ أَئِمَّتِكُمُ الَّذِينَ تُحِبُّونَهُمْ وَيُحِبُّونَكُمْ، وَيُصَلُّونَ عَلَيْكُمْ وَتُصَلُّونَ عَلَيْهِمْ، وَشِرَارُ أَئِمَّتِكُمُ الَّذِينَ تُبْغِضُونَهُمْ وَيُبْغِضُونَكُمْ، وَتَلْعَنُونَهُمْ وَيَلْعَنُونَكُمْ»، قِيلَ: يَا رَسُولَ اللهِ، أَفَلَا نُنَابِذُهُمْ بِالسَّيْفِ؟ فَقَالَ: «لَا، مَا أَقَامُوا فِيكُمُ الصَّلَاةَ، وَإِذَا رَأَيْتُمْ مِنْ وُلَاتِكُمْ شَيْئًا تَكْرَهُونَهُ، فَاكْرَهُوا عَمَلَهُ، وَلَا تَنْزِعُوا يَدًا مِنْ طَاعَةٍ»

3778. அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்கள் தலைவர்களில் நல்லவர்கள் யாரெனில், அவர்களை நீங்கள் நேசிப்பீர்கள். உங்களை அவர்கள் நேசிப்பார்கள். உங்களுக்காக அவர்கள் பிரார்த்திப்பார்கள். அவர்களுக்காக நீங்கள் பிரார்த்திப்பீர்கள். உங்கள் தலைவர்களில் தீயவர்கள் யாரெனில், நீங்கள் அவர்களை வெறுப்பீர்கள்: உங்களை அவர்கள் வெறுப்பார்கள். நீங்கள் அவர்களைச் சபிப்பீர்கள். அவர்கள் உங்களைச் சபிப்பார்கள்" என்று கூறினார்கள்.
அப்போது, "அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கெதிராக நாங்கள் வாள் ஏந்தலாமா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேண்டாம்; உங்களிடையே அவர்கள் தொழுகையை நிலைநாட்டும்வரை (வேண்டாம்). உங்கள் ஆட்சியாளர்களிடம் நீங்கள் வெறுக்கும் (மார்க்கத்திற்கு முரணாண செயல்கள்) எதையேனும் கண்டால், அந்த ஆட்சியாளரின் செயல்பாட்டை வெறுப்பீர்களாக! கட்டுப்படுதலில் இருந்து உங்கள் கையை விலக்கிவிடாதீர்கள்" என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 33. ஆட்சியதிகாரம்

ஆட்சி/ தலைமை பொறுப்பு தானாக வந்தால் அது மதிப்பை உயர்த்தும்.

قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا عَبْدَ الرَّحْمَنِ بْنَ سَمُرَةَ، لاَ تَسْأَلِ الإِمَارَةَ، فَإِنَّكَ إِنْ أُوتِيتَهَا عَنْ مَسْأَلَةٍ وُكِلْتَ إِلَيْهَا، وَإِنْ أُوتِيتَهَا مِنْ غَيْرِ مَسْأَلَةٍ أُعِنْتَ عَلَيْهَا -[128]-، وَإِذَا حَلَفْتَ عَلَى يَمِينٍ، فَرَأَيْتَ غَيْرَهَا خَيْرًا مِنْهَا، فَكَفِّرْ عَنْ يَمِينِكَ وَأْتِ الَّذِي هُوَ خَيْرٌ»

6622. அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்), 'அப்துர் ரஹ்மான் இப்னு சமுராவே! ஆட்சிப் பொறுப்பை நீயாக (ஆசைப்பட்டு)க் கேட்காதே! ஏனெனில், (நீ) கேட்டதால் அது உனக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீ (தனிமையில்) விடப்படுவாய். (இறைவின் உதவி கிட்டாது.) கேட்காமல் அது உனக்கு அளிக்கப்பட்டால் அது தொடர்பாக உனக்கு (இறைவனின்) உதவி அளிக்கப்படும். நீ ஒரு சத்தியம் செய்து, அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக நீ கருதினால் உன்னுடைய சத்தியத்(தை முறித்துவிட்டு முறித்த)துக்கான பரிகாரத்தைச் செய்துவிடு. சிறந்தது எதுவோ அதைச் செயல்படுத்து' என்றார்கள். 3
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 83. சத்தியங்களும் நேர்த்திக்கடன்களும்

பதவி மோகம் பிடித்து அதை தேடி பிச்சைக்காரன் போல் அலைந்து பொருக்கினால் இப்படி தான் கேவளம் அடைய நேரிடும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّكُمْ سَتَحْرِصُونَ عَلَى الإِمَارَةِ، وَسَتَكُونُ نَدَامَةً يَوْمَ القِيَامَةِ، فَنِعْمَ المُرْضِعَةُ وَبِئْسَتِ الفَاطِمَةُ»

7148. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை (தாம் சுகங்)களிலேயே பதவி(ப் பால்) தான் இன்பமானது. பாலை மறக்க வைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது)தான் மோசமானது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 93. நீதியும் நிர்வாகமும்


ஆட்சியாளன் எவ்வளவு அநியாயம் செய்கிறான்.தட்டிக் கேட்க ஆளே இல்லையா . ?

அநியாயக்காரன் தனக்கு தானே குழி பறிக்கிறான்.

وَكَذٰلِكَ جَعَلْنَا فِىْ كُلِّ قَرْيَةٍ اَكٰبِرَ مُجْرِمِيْهَا لِيَمْكُرُوْا فِيْهَا‌ وَمَا يَمْكُرُوْنَ اِلَّا بِاَنْفُسِهِمْ وَمَا يَشْعُرُوْنَ‏ 
அன்றி, இவ்வாறே ஒவ்வொரு ஊரிலும் ஆங்காங்குள்ள பாவிகளை நாம் தலைவர்களாக்கி இருக்கின்றோம். அங்கு அவர்கள் விஷமம் (செய்ய சதி) செய்து கொண்டிருப்பார்கள். எனினும், அவர்கள் தங்களுக்கேயன்றி (மற்றெவருக்கும்) சதி செய்துவிட முடியாது. (இதனை) அவர்கள் உணர்ந்து கொள்ளமாட்டார்கள். (அல்குர்ஆன் : 6:123)

நவினாலோ கையினாலோ உரிய தண்டனை உங்களால் கொடுக்க முடியாது.. அல்லாஹ்விடமே விட்டு விடுவோமே.

قُلْ لِّلَّذِيْنَ اٰمَنُوْا يَغْفِرُوْا لِلَّذِيْنَ لَا يَرْجُوْنَ اَيَّامَ اللّٰهِ لِيَجْزِىَ قَوْمًا بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‏ 
(நபியே!) இறைநம்பிக்கையாளர்களிடம் நீர் கூறிவிடும்: “யார் அல்லாஹ்விடமிருந்து தண்டனைகுறிய கெட்ட நாள் வருவது பற்றி எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவர்களின் நடவடிக் கைகளைக் கண்டுகொள்ளாது விட்டுவிடுங்கள் மக்களுக்கு அவர்கள் செய்யும் செயலுக்குத் தக்க பலனை அல்லாஹ்வே நேரடியாக கொடுப்பான். (அல்குர்ஆன் : 45:14)

وَلَا تَحْسَبَنَّ اللّٰهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظّٰلِمُوْنَ‌ اِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيْهِ الْاَبْصَارُ ۙ‏ 

(நபியே!) இவ்வக்கிரமக்காரர்களின் செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாய் இருக்கிறான் என நீங்கள் எண்ண வேண்டாம். அவர்களை (வேதனையைக் கொண்டு உடனுக்குடன் பிடிக்காது) தாமதப்படுத்தி வருவதெல்லாம், திறந்த கண் திறந்தவாறே இருந்து விடக்கூடிய (கொடியதொரு மறுமை) நாள் வரும் வரையில்தான்!(அல்குர்ஆன் : 14:42)

مُهْطِعِيْنَ مُقْنِعِىْ رُءُوْسِهِمْ لَا يَرْتَدُّ اِلَيْهِمْ طَرْفُهُمْ‌ وَاَفْـِٕدَتُهُمْ هَوَآءٌ ‏ 
(அந்நாளில்) இவர்களுடைய நிமிர்ந்த தலை குனிய முடியாது (தட்டுக்கெட்டுப் பல கோணல்களிலும்) விரைந்தோடுவார்கள். (திடுக்கிடும் சம்பவங்களைக் கண்ட) இவர்களுடைய பார்வை மாறாது, (அதனையே நோக்கிக் கொண்டிருக்கும்.) இவர்களுடைய உள்ளங்கள் (பயத்தால்) செயலற்று விடும். (அல்குர்ஆன் : 14:43)



            வஸ்ஸலாம்

தொகுப்பு :
மௌலவி அல்ஹாபிழ்
அ.முகம்மது வலியுல்லா அல்தாபி

பிரபல்யமான பதிவுகள்