நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

புதன், ஜூன் 30, 2021

TNPSC-இல் எத்தனை குரூப் உள்ளது? உங்களுக்கு தெரியுமா,

TNPSC-இல் எத்தனை குரூப் உள்ளது? உங்களுக்கு தெரியுமா? குரூப் 7, 8 பற்றி தெரியுமா?*

*TNPSC-தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் சேவைத் தேர்வுகள்/பதவிகள் அது என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா? தெரியவில்லை என்றால் அதன் முழுவிவரங்கள் பின்வருமாறு?*

*How Many Groups in TNPSC ?*

குரூப் – 1, குரூப் – 2, குரூப் – 3, குரூப் – 4, குரூப் – 5, குரூப் – 6, குரூப் – 7, குரூப் – 8

*குரூப் – 1 சேவைகள்* (Group-I) 
1)துணை கலெக்டர் 
(Deputy Collector) 
2)துணை போலீஸ் சூப்பிரண்டு (வகை – I) (Deputy Superintendent of Police) 
3)மாவட்ட பதிவாளர், பதிவுத் துறை 
(District Registrar, Registration Department) 
ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் (பஞ்சாயத்து) /4)கலெக்டருக்கு தனிப்பட்ட உதவியாளர் (மேம்பாடு) (Assistant Director of RD Dept (Panchayat) /Personal Assistant (Development) to Collector) 
5)மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (District Employment Officer) 
6)தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளில் பிரதேச அலுவலர் 
(Div. Officer in Fire and Rescue Services) 
7)உதவி ஆணையர் (சி.டி.) (Asst Commissioner) 
8)கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் (Deputy Registrar of Co-operative Societies)

*குரூப் – 1A சேவைகள்* (Group-I A) 
1)உதவி காடுகளின் பாதுகாவலர் (Assistant Conservator of Forests)

*குரூப் – 1B சேவைகள்*
 (Group-I B) 
1)உதவி ஆணையர் H.R & C.E (Assistant Commissioner, H.R. & C.E)

*குரூப் – 1C சேவைகள்* (Group-I C)
1)மாவட்ட கல்வி அலுவலர் DEO 
(District Educational Officer)
2)ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு -2 
-----------------------------
*குரூப் – 2 சேவைகள்* (நேர்முகத்தேர்வு பதவிகள்)
(Group-II) 
1)துணை வணிக வரி அதிகாரி 
2)நகராட்சி ஆணையர், தரம் -2 
3)இளைய வேலைவாய்ப்பு அதிகாரி (வித்தியாசமாக இல்லாதவர்) 
4)இளைய வேலைவாய்ப்பு அதிகாரி (வித்தியாசமாக திறமையானவர்) 
5)துணை பதிவாளர், 
தரம் -2 
6)தொழிலாளர் உதவி ஆய்வாளர் 
7)உதவி பிரிவு அதிகாரி (சட்டம் மற்றும் நிதி தவிர துறை) 
8)உதவி பிரிவு அதிகாரி (சட்டத்துறை) 
9)உதவி பிரிவு அதிகாரி (நிதித்துறை) 
10)தமிழ்நாடு பொது சேவையில் உதவி பிரிவு அதிகாரி ஆணைக்குழு 
உதவி பிரிவு அதிகாரி-கம்-புரோகிராமர் 
11)உதவி பிரிவு அதிகாரி, தமிழ்நாடு சட்டமன்றம் செயலக சேவை 
12)நன்னடத்தை அலுவலர், சமூக பாதுகாப்பு 
நன்னடத்தை அலுவலர், 13)சிறைத் துறை 
தொழில்துறை கூட்டுறவு அதிகாரி, கைத்தொழில் ஆணையர் மற்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக இயக்குநர் 
14)பெண்கள் நல அலுவலர், சமூக பாதுகாப்பு 
15)சர்வே இயக்குநர் மற்றும் தீர்வுகளுக்கான Reg.Co-op Society இல் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர் 
16)வரவேற்பாளர், தமிழகம் விருந்தினர் மாளிகை, 17)உதகமண்டலம் தொழில்துறை கூட்டுறவு தொழில்துறை மேற்பார்வையாளர் 18)கமிஷனர் மற்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக இயக்குநர் துறை 
19)திட்ட உதவியாளர் ஆதி-திராவிதர் மற்றும் ....
 பழங்குடியினர் நலத்துறை 
தணிக்கை பிரிவில் உள்ள தணிக்கை ஆய்வாளர் 
இந்து மத மற்றும் அறக்கட்டளை நிர்வாகத் துறை 
உள்ளூர் நிதி தணிக்கைத் துறையின் உதவி ஆய்வாளர் மற்றும் உள் தணிக்கைத் துறை
மேற்பார்வையாளர் / மூத்த எழுத்தர் / தலைமை கணக்காளர் / ஜூனியர்தமிழ்நாடு வேளாண் சந்தைப்படுத்தல் கண்காணிப்பாளர் துணை சேவை 
உதவி ஜெயிலர், சிறைத்துறை 
வருவாய் துறையில் உதவியாளர் டவுன் பஞ்சாயத்துத் துறையில் 
நிர்வாக அதிகாரி, 
தரம் -2 டி.வி.ஐ.சியில் 
சிறப்பு உதவியாளர் 
கைத்தறி ஆய்வாளர் பொலிஸ் திணைக்களத்தின் புலனாய்வு பிரிவில் 
சிறப்பு கிளை உதவியாளர். 
பால் உற்பத்தியில் கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர் மற்றும் பால் மேம்பாடு 
தொழிலாளர் உதவி ஆய்வாளர் 
தணிக்கை உதவியாளர் நெடுஞ்சாலைத் துறையில் கணக்கு கிளையில்.
*குரூப் – 2A சேவைகள்* (நேர்முகத்தேர்வு இல்லாத பதவிகள்) (Group-II A) 

கருவூல மற்றும் கணக்குத் துறையில் கணக்காளர் 
ஜூனியர் கூட்டுறவு கணக்காய்வாளர் செயலகத்தில் 
உதவியாளர் (சட்டம் மற்றும் நிதி தவிர) 
இளைய தொழில்நுட்ப உதவியாளர், சிவில் சப்ளைஸ் துறை 
தனிப்பட்ட எழுத்தர் (சட்டம் மற்றும் நிதித் துறை தவிர) 
தனிப்பட்ட எழுத்தர் (சட்டத்துறை) 
தனிப்பட்ட எழுத்தர் (நிதித்துறை) 
தமிழ்நாடு பொது சேவையில் தனிப்பட்ட எழுத்தர் ஆணைக்குழு 
தனிப்பட்ட எழுத்தர், தமிழ்நாடு மாநில திட்டமிடல் ஆணையம் 
தமிழக சட்டசபையில் ஸ்டெனோ-டைப்பிஸ்ட் செயலக சேவை 
உதவியாளர் பல்வேறு துறைகள் 
செயலகத் துறையில் உதவி (நிதித்துறை) 
தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தில் உதவியாளர் 
தமிழக சட்டசபையில் கீழ் பிரிவு எழுத்தர், செயலகம் 
திட்டமிடல் இளைய உதவியாளர் 
வரவேற்பாளர் (சிறு சேமிப்புத் துறை) 
சட்டத்துறையில் உதவியாளர் 
தமிழ்நாடு சட்டமன்ற சட்டசபை சேவையில் உதவியாளர்
ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு – 3

*குரூப் – 3 சேவைகள்* (Group-III)

தீயணைப்பு நிலைய அதிகாரி
*குரூப் – 3A சேவைகள்* (Group-III A) 
கூட்டுறவு சங்கங்களின் ஜூனியர் இன்ஸ்பெக்டர் 
தொழில்துறை கூட்டுறவு சங்கங்களின் உதவி மேற்பார்வையாளர் 
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி (பயிற்சி பிரிவு) துறையில் கடை வைத்திருப்பவர் கைத்தொழில் மற்றும் வணிகத் துறையில் ஸ்டோர்-கீப்பர், கிரேடு -2
*குரூப் – 4 சேவைகள்* (Group-IV) 
ஜூனியர் உதவியாளர் (பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அல்லாத) 
பில் கலெக்டர் 
தட்டச்சு செய்பவர் 
ஸ்டெனோ-டைப்பிஸ்ட், கிரேடு -3 
கள ஆய்வாளர் 6. வரைவாளர்
*குரூப் – 5A சேவைகள்* (Group-V A)

செயலகத்தில் உதவியாளர் (இடமாற்றம் மூலம் ஆட்சேர்ப்பு) (சட்டம் மற்றும் நிதித் துறை தவிர)
*குரூப் – 6 சேவைகள்* (Group-VI)

வன பயிற்சியாளர்
*குரூப் – 7A சேவைகள்* (Group-VII A) 
நிர்வாக அதிகாரி, 
தரம் -1
*குரூப் – 7B சேவைகள்* (Group-VII B) 
நிர்வாக அதிகாரி, 
தரம் – 3
*குரூப் – 8 சேவைகள்* (Group-VIII) 
நிர்வாக அதிகாரி, 
தரம் – 4

திங்கள், ஜூன் 21, 2021

சவூதி அரேபியாவை பற்றி,0

❣️உலகமே உற்று நோக்கும் சவூதி அரேபியாவை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 12 முக்கியமான விஷயங்கள் 

1- திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் தனிமையில் காரில் எங்கும் பயணம் செய்ய முடியாது கணவன் மனைவிக்கு என்று லைசென்ஸ் இக்காமா உள்ளது அது இல்லாமல் எங்கும் செல்ல முடியாது

2- கணவன் மனைவி என்ற இக்காமா கார்ட் இல்லாமல் எந்த ஹோட்டலிலும் ஆணும் பெண்ணும் தங்க இயலாது 

3- கணவன் மனைவியாக இருந்தாலும் கூட நம் ஊரில் உள்ள ( நாய் காதல் போல் )பார்க்கிலும் பீச்சிலும் வரம்பு மீற அனுமதி கிடையாது -பொது இடங்களில் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் இல்லை என்றால் உடனே கைது செய்யபட்டு ஒரு வாரம் ஒழுக்கம் பற்றி #இஸ்லாமிய_பாடம் எடுக்க படும் 

4 - சவூதி அரேபியா நாட்டை சேர்ந்த அனைவரும் இஸ்லாமியர்களே மாற்று மதத்தை சேர்ந்த ஒருவர் கூட இல்லை

5 - அல்லாஹ்வை பற்றியோ இஸ்லாத்தின் சட்டத்தை பட்டறிவோ விமர்சனம் செய்தால் சவூதி நாட்டு பிரஜையாக இருந்தாலும் கூட உடனே எந்த கேள்வி கணக்கு இன்றி மரண தண்டனை கொடுக்க படும்

6- பெட்ரோல் பேங்க் நடத்த லைசன்ஸ் வேண்டும் என்றால்

பெட்ரோல் பங்க்கில் முக்கியமாக 100 பேர் தொழுகும் அளவிற்கு பள்ளிவாசல் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் பெட்ரோல் பேங்க் நடத்த லைசன்ஸ் வழங்க படும் (சிட்டி அவுட்டரை தாண்டி திறக்கப்படும் பெட்ரோல் பங்குகள் பயணிகள் தொழுவதற்காக)

7- பொதுவெளியில் சிறுநீர் கழிக்க அனுமதி இல்லை எல்லா பெட்ரோல் பங்கிலும் பாத்ரூமை களையும் பயன்படுத்தி கொள்ளாம் வாசலில் சேர் போட்டு ஒண்ணுக்கு ரெண்டுக்குனு வசூல் செய்ய ஆட்கள் இருக்க மாட்டார்கள் 

அப்படி இல்லை என்றால் பள்ளிவாசளிலும் உள்ள பாத்ரூமை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்

8- பேங்க் அக்கவுண்டில் எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும்
வைத்து கொள்ளலாம் வீட்டில் எவ்வளவு தங்கம் வேண்டும் என்றாலும் வைத்து கொள்ளலாம் வருமான வரித்துறை ரைட் என்று ஒன்றும் சவூதி அரேபியாவில் கிடையாது

9 - குற்றம் நிரூபிக்க பட்டால் மன்னர் குடும்பமாக இருந்தாலும் மரண தண்டனை கொடுக்க படும் அதற்க்கு சான்று சமீபத்தில் மன்னர் சல்மான் அவர்களின் பேரன் துப்பாக்கியால் ஒருவரை சுட்டு கொலை செய்தார் அதற்க்கு இஸ்லாத்தின் சட்டப்படி கொலைக்கு கொலை என மன்னர் சல்மான் பேரன் தலை வெட்டப்பட்டது

10 - புனித தனமான மக்காவில் வேலை செய்யும் எந்த தலைமை இமாமுக்கும் சம்பள நிர்ணயம் கிடையாது பிளாங்க் செக் வழங்க படும் அவர்கள் அவர்களின் தேவைக்கேற்ட்டாற்போல் பூர்த்தி செய்து எடுத்துக்கொள்வார் மக்காவில் தோழ வைப்பதே பெரும் பாக்கியம் யாரவது பணத்தின் மீது பணத்தின் மீது ஆசை படுவார்களா

11 - படித்த பட்டதாரிகளை விட அலுவலகங்களில் வேலை செய்பவர்களை விட பள்ளிவாசலில் வேலை செய்யும் இமாம்களுக்கு அதிக சம்பளம் வழங்க படும் சவூதி அரேபியாவில் இமாம்களுக்கு இராஜமரியாதை கொடுக்க படும் முதவ்வா என அழைக்க படுவார்கள்

12 - பெண்கள் மீது கைவைத்தாலோ கற்பழிக்க முயற்சி செய்தாலோ உடனே தலை வெட்டப்படும்.......!

நன்றி..!

ஞாயிறு, ஜூன் 20, 2021

காரூனைப்பற்றி குர்ஆன் ,

மூஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் இஸ்ராயீல் சந்ததியினரில் ஒரு மாபெரும் செல்வந்தன் வாழ்ந்து வந்தான். அவனைப்பற்றி அல்குர்ஆன் கூறுகிறது.

நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் - நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன; அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்: “நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்” என்று கூறினார்கள்.

“மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே; நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (என்றும் கூறினார்கள்).

(அதற்கு அவன்) கூறினான்: “எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்!”. இவனுக்கு முன் இவனை விட மிக்க வலிமையுடையவர்களும், இவனை விட அதிகப் பொருள் சேகரித்து வைத்திருந்தவர்களுமான (எத்தனையோ) தலைமுறையினர்களை அல்லாஹ் அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறியவில்லையா? ஆனால் குற்றவாளிகள் அவர்கள் செய்த பாவங்கள் பற்றி (உடனுக்குடன்) கேள்வி கணக்குக் கேட்கப்பட மாட்டார்கள்.

அப்பால், அவன் (கர்வத்துடனும், உலக) அலங்காரத்துடன் தன் சமூகத்தாரிடையே சென்றான்; (அப்போது) இவ்வுலக வாழ்க்கையை எவர் விரும்புகிறார்களோ அவர்கள்: “ஆ! காரூனுக்கு கொடுக்கப்பட்டதைப் போன்று நமக்கும் இருக்கக்கூடாதா? நிச்சயமாக, அவன் மகத்தான பாக்கியமுடையவன்” என்று கூறினார்கள்.

கல்வி ஞானம் பெற்றவர்களே “உங்களுக்கென்ன கேடு! ஈமான் கொண்டு, நல்ல அமல்களை செய்பவர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வெகுமதி இதைவிட மேன்மையானது; எனினும், அதைப் பொறுமையாளரைத் தவிர, (வேறு) எவரும் அடைய மாட்டார்கள்” என்று கூறினார்கள்.

ஆகவே, நாம் காரூனையும் அவன் வீட்டையும் பூமியில் அழுந்தச் செய்தோம்; அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்கிற கூட்டத்தார் எவருமில்லை; இன்னும் அவன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை.

முன் தினம் அவனுடைய (செல்வ) நிலையை விரும்பியவர்களெல்லாம், “ஆச்சரியம் தான்! அல்லாஹ் தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு ஆகார வசதிகளைப் பெருக்குகிறான், சுருக்கியும் விடுகிறான்; அல்லாஹ் நமக்கு கிருபை செய்யவில்லையாயின் அவன் நம்மையும் (பூமியில்) அழுந்தச் செய்திருப்பான்; ஆச்சரியம் தான்! நிச்சயமாக காஃபிர்கள் சித்தியடைய மாட்டார்கள்” என்று கூறினார்கள். அல்குர்ஆன் 28:76-82


கெய்ரோவிலிருந்து 150 கிலோமீட்டர் தென்மேற்க்கில் கஸர காரூன் என்ற இடத்தில் தான் அவனுடைய ஆலயம் உள்ளது.

                                                                            காரூனின் ஆலயம்


                                                                               காரூனின் கிணறு


                                         காரூனின் ஏரி என இப்பொழுதும் அழைக்கபடுகின்ற ஏரி. 


                                   காரூனும் அவனுடைய சுற்றத்தார்களும் புதைந்துபோன இடம்.



https://www.google.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81&oq=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A9&aqs=chrome.3.69i57j0l3.5921j0j7&client=ms-android-xiaomi-rev1&sourceid=chrome-mobile&ie=UTF-8#

மனிதன் இவ்வுலகில் வாழும் போது தன்னை அனைத்திலும் முன்நிருர்த்திக் கொள்கிறான். தான் என்கிற அகம்பாவம் கொண்டவனாக பெருமையோடு வாழ்ந்துக் கொண்டு இருக்கிறான். தன்னிடம் உள்ளதை வைத்துக்கொண்டு ஆணவத்தை வெளிப்படுத்துகிறான்.அல்லாஹ் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் ஆணவத்தால் அழிந்துபோனவர்களைப் பற்றி கூறுகிறான்.அவற்றைப் இந்த உரையில் கான்போம்.

கடுகளவும் இருக்கக் கூடாது

‘தமது உள்ளத்தில் கடுகளவு இறை நம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு ஆணவம் உள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத் (ரலி)

நூல்: முஸ்லிம் (148)

பெருமை இறைவனுக்கு மட்டுமே உரியது

وَلَهُ الْكِبْرِيَاءُ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
வானங்களிலும்,507 பூமியிலும் பெருமை அவனுக்கே உரியது. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

(திருக்குர்ஆன்:45:37.)

பெருமை என்பது இறைவனுக்கு மட்டுமே உரியது. அதற்குத் தகுதியுள்ளவன் இறைவன் மட்டுமே! இறைவனுக்கு மட்டுமே உரித்தான பண்பை எவரும் செய்யத் துணிந்தால் அவர் இறைவனால் வேதனை செய்யப்படுவார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியம் அ(ந்த இறை)வனுடைய கீழாடையாகும். பெருமை அவனுடைய மேலாடையாகும். (அல்லாஹ் கூறுகிறான்:) ஆகவே (அவற்றில்) யார் என்னோடு போட்டியிடுகிறானோ அவனை நான் வேதனை செய்வேன்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

நூல்: முஸ்லிம் (5114)

அல்லாஹ் நேசிக்க மாட்டான் 

وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِى الْاَرْضِ مَرَحًا ‌ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرٍ
(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

(அல்குர்ஆன்: 31:18.)

ஆனவக்கரர்களுக்கு இறைவன் விடும் சவால்

 وَلَا تَمْشِ فِى الْاَرْضِ مَرَحًا‌ ۚ اِنَّكَ لَنْ تَخْرِقَ الْاَرْضَ وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طُوْل
மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது.

(அல்குர்ஆன்:17:37.)

ஆணவத்தால் அழிக்கப்பட்ட காரூன்

إِنَّ قَارُونَ كَانَ مِنْ قَوْمِ مُوسَى فَبَغَى عَلَيْهِمْ وَآتَيْنَاهُ مِنَ الْكُنُوزِ مَا إِنَّ مَفَاتِحَهُ لَتَنُوءُ بِالْعُصْبَةِ أُولِي الْقُوَّةِ إِذْ قَالَ لَهُ قَوْمُهُ لَا تَفْرَحْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْفَرِحِينَ (76) وَابْتَغِ فِيمَا آتَاكَ اللَّهُ الدَّارَ الْآخِرَةَ وَلَا تَنْسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا وَأَحْسِنْ كَمَا أَحْسَنَ اللَّهُ إِلَيْكَ وَلَا تَبْغِ الْفَسَادَ فِي الْأَرْضِ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ (77) قَالَ إِنَّمَا أُوتِيتُهُ عَلَى عِلْمٍ عِنْدِي أَوَلَمْ يَعْلَمْ أَنَّ اللَّهَ قَدْ أَهْلَكَ مِنْ قَبْلِهِ مِنَ الْقُرُونِ مَنْ هُوَ أَشَدُّ مِنْهُ قُوَّةً وَأَكْثَرُ جَمْعًا وَلَا يُسْأَلُ عَنْ ذُنُوبِهِمُ الْمُجْرِمُونَ
காரூன், மூஸாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். அவர்களுக்கு அநீதி இழைத்தான். அவனுக்குக் கருவூலங்களை வழங்கினோம். அவற்றின் சாவிகளைச் சுமப்பது வலிமைமிக்க கூட்டத்தினருக்குச் சிரமமாக இருக்கும். “மமதை கொள்ளாதே! மமதை கொள்வோரை அல்லாஹ் விரும்பமாட்டான்” என்று அவனிடம் அவனது சமுதாயத்தினர் கூறியதை நினைவூட்டுவீராக!

அல்லாஹ் உனக்குத் தந்தவற்றில் மறுமை வாழ்வைத் தேடு! இவ்வுலகில் உன் கடமையை மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லுதவி செய்தது போல் நீயும் நல்லுதவி செய்! பூமியில் குழப்பத்தைத் தேடாதே! குழப்பம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான் (என்றும் கூறினர்). என்னிடம் உள்ள அறிவின் காரணமாகவே இது எனக்குத் தரப்பட்டுள்ளது” என்று அவன் கூறினான். “இவனை விட அதிக வலிமையும், ஆள் பலமும் கொண்ட பல தலைமுறையினரை இவனுக்கு முன்பு அல்லாஹ் அழித்திருக்கிறான்” என்பதை இவன் அறியவில்லையா? அவர்களின் பாவங்கள் பற்றி இக்குற்றவாளிகள் விசாரிக்கப்பட மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 28:76-78)

خَسَفْنَا بِهِ وَبِدَارِهِ الْأَرْضَ فَمَا كَانَ لَهُ مِنْ فِئَةٍ يَنْصُرُونَهُ مِنْ دُونِ اللَّهِ وَمَا كَانَ مِنَ الْمُنْتَصِرِينَ
அவனை அவனது வீட்டோடு சேர்த்து பூமிக்குள் புதையச் செய்தோம். அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யும் ஒரு கூட்டத்தினரும் இருக்கவில்லை. அவன் உதவி பெறுபவனாகவும் இல்லை.

(அல்குர்ஆன்:28:81.)

ஆணவத்தால் அழிக்கப்பட்ட ஆது சமூதாயம் 

فَاَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوْا فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوْا مَنْ اَشَدُّ مِنَّا قُوَّةً  ‌ؕ اَوَلَمْ يَرَوْا اَنَّ اللّٰهَ الَّذِىْ خَلَقَهُمْ هُوَ اَشَدُّ مِنْهُمْ قُوَّةً  ؕ وَكَانُوْا بِاٰيٰتِنَا يَجْحَدُوْنَ
அன்றியும் ஆது(க் கூட்டத்தார்) பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டு, “எங்களை விட வலிமையில் மிக்கவர்கள் யார்?” என்று கூறினார்கள் – அவர்களைப் படைத்த அல்லாஹ் நிச்சயமாக அவர்களை விட வலிமையில் மிக்கவன் என்பதை அவர்கள் கவனித்திருக்க வில்லையா? இன்னும் அவர்கள் நம் அத்தாட்சிகளை மறுத்தவாறே இருந்தார்கள்.

(அல்குர்ஆன்:41:15.)

தாங்களின் வலிமையின் மூலம் அவர்கள் ஆணவம் கொண்டார்கள். அல்லாஹ் அவர்களின் அழிவை எப்படி ஆக்கினான்.என்பதை பின்வருமாறு குறிப்பிடுகிறான்.

سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَّثَمٰنِيَةَ اَيَّامٍۙ حُسُوْمًا ۙ فَتَرَى الْقَوْمَ فِيْهَا صَرْعٰىۙ كَاَنَّهُمْ اَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ‌ ۚ‏
 அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான்; எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.
(அல்குர்ஆன்:69:7.)
فَهَلْ تَرٰى لَهُمْ مِّنْۢ بَاقِيَةٍ‏
ஆகவே, அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா? (அல்குர்ஆன்:69:8.)
                                                                                                                                                                     ஃபிர்அவ்னின் அழிவு 
وَاسْتَكْبَرَ هُوَ وَجُنُوْدُهٗ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَـقِّ وَظَنُّوْۤا اَنَّهُمْ اِلَـيْنَا لَا يُرْجَعُوْنَ
அவனும், அவனது படையினரும் நியாயமின்றி பூமியில் பெருமையடித்தனர். நம்மிடம் அவர்கள் திரும்பக் கொண்டு வரப்பட மாட்டார்கள் எனவும் நினைத்தனர்.

   فَاَخَذْنٰهُ وَجُنُوْدَهٗ فَنَبَذْنٰهُمْ فِى الْيَمِّ‌ۚ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الظّٰلِمِيْنَ‏
எனவே அவனையும், அவனது படையினரையும் தண்டித்தோம். அவர்களைக் கடலில் எறிந்தோம். “அநீதி இழைத்தோரின் முடிவு எப்படி இருந்தது?” என்று கவனிப்பீராக!

(அல்குர்ஆன்:28:39,40.)

ஆணவம் கொண்டவர்கள் எங்கே?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عُمَرَ بْنِ حَمْزَةَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ، أَخْبَرَنِي عَبْدُ اللهِ بْنُ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
يَطْوِي اللهُ عَزَّ وَجَلَّ السَّمَاوَاتِ يَوْمَ الْقِيَامَةِ، ثُمَّ يَأْخُذُهُنَّ بِيَدِهِ الْيُمْنَى، ثُمَّ يَقُولُ: أَنَا الْمَلِكُ، أَيْنَ الْجَبَّارُونَ؟ أَيْنَ الْمُتَكَبِّرُونَ. ثُمَّ يَطْوِي الْأَرَضِينَ بِشِمَالِهِ، ثُمَّ يَقُولُ: أَنَا الْمَلِكُ أَيْنَ الْجَبَّارُونَ؟ أَيْنَ الْمُتَكَبِّرُونَ؟
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமைநாளில் வானங்களைச் சுருட்டுவான். பிறகு அவற்றைத் தனது வலக் கரத்தில் எடுத்துக்கொள்வான். பிறகு “நானே அரசன். அடக்குமுறையாளர்கள் எங்கே? ஆணவம் கொண்டவர்கள் எங்கே?” என்று கேட்பான். பிறகு பூமிகளைத் தனது இடக் கரத்தில் சுருட்டிக்கொள்வான். பிறகு “நானே அரசன். அடக்கு முறையாளர்கள் எங்கே? ஆணவம் கொண்டவர்கள் எங்கே?” என்று கேட்பான்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் (5376) 

ஆணவக்காரரின் இருப்பிடம் நரகமே.!

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
احْتَجَّتِ النَّارُ، وَالْجَنَّةُ، فَقَالَتْ: هَذِهِ يَدْخُلُنِي الْجَبَّارُونَ، وَالْمُتَكَبِّرُونَ، وَقَالَتْ: هَذِهِ يَدْخُلُنِي الضُّعَفَاءُ، وَالْمَسَاكِينُ، فَقَالَ اللهُ عَزَّ وَجَلَّ لِهَذِهِ: أَنْتِ عَذَابِي أُعَذِّبُ بِكِ مَنْ أَشَاءُ – وَرُبَّمَا قَالَ: أُصِيبُ بِكِ مَنْ أَشَاءُ – وَقَالَ لِهَذِهِ: أَنْتِ رَحْمَتِي أَرْحَمُ بِكِ مَنْ أَشَاءُ وَلِكُلِّ وَاحِدَةٍ مِنْكُمَا مِلْؤُهَا
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நரகமும் சொர்க்கமும் வாக்குவாதம் செய்துகொண்டன. நரகம், “அக்கிரமக்காரர்களும் ஆணவம் கொண்டவர்களுமே எனக்குள் நுழைவார்கள்” என்று சொன்னது. சொர்க்கம், “பலவீனர்களும் ஏழைகளுமே எனக்குள் நுழைவார்கள்” என்று சொன்னது. அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் நரகத்திடம், “நீ எனது வேதனை. உன் மூலம் நான் நாடியவர்களுக்கு வேதனை கொடுக்கிறேன்” என்றும், சொர்க்கத்திடம், “நீ எனது பேரருள். உன் மூலம் நான் நாடியவர்களுக்கு அருள் புரிகிறேன்” என்றும் கூறினான். பிறகு (இரண்டையும் நோக்கி), “உங்களில் ஒவ்வொன்றையும் நிரப்புபவர்கள் (மக்களிடையே) உள்ளனர்” என்று சொன்னான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) 

நூல்: முஸ்லிம் (5469


வியாழன், ஜூன் 17, 2021

இஸ்லாமியர்கள் டாக்டர் (MBBS) படிக்க மருத்துவக் கல்லூரிகளின் (Medical College

*டாக்டர் (MBBS) படிக்க இஸ்லாமியர்களால் நிர்வகிக்கப்படும் மருத்துவக் கல்லூரிகளின் (Medical College) பட்டியலைப் பலர் கேட்டு வருகின்றனர்.*

குறிப்பாகப் பெண் பிள்ளைகளை MBBS படிக்க வைக்க முஸ்லீம்களால் நிர்வகிக்கப்படும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப் பல பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களுக்காக அதன் விபரங்களை இப்போது பார்ப்போம்.

*தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களால் நிர்வகிக்கப்படும் ஒரு மருத்துவக் கல்லூரி கூட கிடையாது*. எனவே கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவில் தான் படிக்க வைக்க வேண்டும்.

*கேரளாவில் உள்ள இஸ்லாமியர்களால் நிர்வகிக்கப்படும் மருத்துவக் கல்லூரிகள் :*

1. Azeezia Institute of Medical Sciences and Research, கொல்லம்
2. KMCT Medical College, கோழிக்கோடு
3. Karuna Medical College, பாலக்காடு
4. MES Academy of Medical Sciences, மலப்புரம்
5. DM WAYANAD INSTITUTE OF MEDICAL SCIENCE, வயநாடு
6. Al-Azhar Medical College and Super Specialty Hospital, தொடுப்புழா (இடுக்கி மாவட்டம்)
7. Kannur Medical College, கண்ணூர்

*கர்நாடகாவில் உள்ள இஸ்லாமியர்களால் நிர்வகிக்கப்படும் மருத்துவக் கல்லூரிகள் :*

1. Al-Ameen Medical College, பிஜாபூர்
2. Khaja Bandanawaz University, குல்பர்கா
3. Kanachur Institute of Medical Sciences, மங்களூர்
4. Yenepoya Medical College, மங்களூர்

*இது போக ஆந்திராவில் 2 மருத்துவக் கல்லூரியும், தெலுங்கானாவில் 4 மருத்துவக் கல்லூரியும் இஸ்லாமியர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.*

மருத்துவ கல்வி பற்றி தமிழக முஸ்லீம்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே இங்கு ஒரு மருத்துவக் கல்லூரி கூட முஸ்லீம்களால் துவக்கப்பட வில்லை.
*மருத்துவ கல்வி மட்டும் இல்லை, IAS/IPS/IFS/IES போன்ற உயர் அரசு பதவி, IIT/NIT/IIM/IISc போன்ற உயர் கல்வி நிலையங்களில் படிப்பது என உயர் கல்வியைப் பற்றிய விழிப்புணர்வு தமிழக முஸ்லீம்களிடம் போதிய அளவு இல்லை.*

மாணவ மாணவிகள் படிக்க, படிக்க வைக்க இந்த விபரங்களைத் தீர்க்கமான முயற்சியுடன் ஈடுபடுங்கள்.

இன்று குற்றம் கண்டு தூற்றும் செயலில் உள்ளவர்களின் குடும்பத்தினர் உதவிக்கு மருத்துவம் கற்றவர்கள் பின் நாளை வரப்போவது வருவது தெரிந்த கதைதான்.

*தமிழகத்தில் வசதி படைத்தவர்கள் கூட்டுச் சேர்ந்து ஒரு மருத்துவக் கல்லூரியை நிறுவ முன் வந்து முயற்சி செய்யுங்கள்.*

மக்களுக்காக, சமுதாயத்திற்காக, நமக்காக, நம் எதிர்காலத்திற்காக ஊக்கம் உள்ள உள்ளங்களை எதிர் பார்க்கிறோம்.

செவ்வாய், ஜூன் 15, 2021

இறைத்தூதர் இளைப்பாறிய மரம்,

*இறைத்தூதர் இளைப்பாறிய மரம்!*

கீழே படத்திலுள்ள மரம் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. எம்பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இளைப்பாறிய மரம்.

இந்த மரத்தைச் சுற்றிலும் பல மைல்களுக்கு அப்பாலும் ஒரு மரமும் இல்லை. ஆனால் இந்த மரம் இன்று வரை நின்று நிலைத்திருப்பது அதிசயமன்றோ...!

இந்த மரம் ஜோர்தானில் உள்ளது. ஜோர்தான் தலைநகரம் அம்மான் நகருக்கு வெளியே இரண்டு மணி நேர தூரத்தில் இந்த மரம் அமைந்துள்ளது. மக்காவுக்கும் ஷாமுக்கும் இடையே இருந்த சாலை இந்த மரத்திற்கு அருகில் சென்றிருக்கிறது. இந்த மரத்தைச் சுற்றி ஓர் அதிசய வரலாறு இருக்கிறது.

மக்காவிலிருந்து ஷாமுக்குச் சென்ற வணிகக் குழுவில் பெரிய தந்தை அபூதாலிபுடன் சிறுவராக இருந்த நபிகளாரும் சென்றார்கள். அவர்கள் வழியில் இளைப்பாறுவதற்குத் தங்கிய ‘புஸ்ரா’ என்ற இடத்தில்தான் இந்த மரம் இருந்துள்ளது. இன்றும் இருக்கிறது.

இறைத்தூதர் ஒருவர் கூடிய விரைவில் அரபுப் பகுதியிலிருந்த வருவார் என்று தங்கள் வேதம் மூலம் அறிந்து எதிர்பார்த்திருந்த ஷாம் நாட்டுக் கிறித்தவப் பாதிரிகள் இந்த அரபு வணிகப் பாதையில் தங்கள் மடங்களை அமைத்து வருவோர் போவோரைக் கவனித்து வந்தனர். பழைய ஏற்பாட்டை மட்டும் பின்பற்றி வாழ்ந்த இவர்கள் தவ்ராத்திலும் இன்ஜீலிலும் கூறப்பட்ட இறுதி நபி வருகை பற்றிய தகவல்களில் முழு நம்பிக்கை வைத்திருந்தனர்.

ஒவ்வொரு கூட்டத்தினரையும் உற்றுக் கவனித்துக்கொண்டிருந்த பாதிரி பஹீரா, அபூதாலிபின் வணிகக் குழு வந்தபொழுது அவர்களையும் கவனித்தார்.

அவர்கள் இளைப்பாறிய மரத்துக்கு மேல் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்த அற்புதத்தைக் கண்டார் பஹீரா. உடனே அவர்களில் ஒவ்வொருவர் பற்றியும் அறிந்துகொள்ள அவர்களை மனமுவந்து விருந்துக்கு அழைத்தார். விருந்துக்கு வந்த மக்கத்து வணிகர்களை வரவேற்று, “அனைவரும் வந்துவிட்டீர்களா?” என்று கேட்டார்.

தாங்கள் அனைவரும் வந்துவிட்டதாகவும் தங்கள் பொருட்களையும் வாகனப் பிராணிகளையும் கவனித்துக்கொள்வதற்காக சிறுவர் ஒருவரை மட்டும் மரத்தடியில் விட்டு வந்ததாகவும் கூறினர் மக்காவாசிகள். “அவரையும் அழைத்து வாருங்கள்” என்றார் பாதிரியார்.

சிறுவர் முஹம்மத் வந்தவுடன் அவரையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார் பஹீரா. “மகனே! நான் சில கேள்விகள் கேட்பேன். லாத்து, உஸ்ஸாவின் மேல் ஆணையாக, நீ அவற்றுக்கு மறுமொழி கூறவேண்டும்” என்றார்.

பஹீரா இப்படிப் பேசி முடிப்பதற்குள் சிறுவர் முஹம்மதின் முகம் சிவந்தது. “லாத்து, உஸ்ஸாவின் மேல் ஆணையிட்டு என்னிடம் கேட்காதீர்கள். எனக்குச் சினமூட்டுபவை இவற்றைவிட வேறு ஒன்றுமில்லை” என்று உறுதிபடக் கூறினார் உத்தம நபி சிறுவர்.

பதிலில் திருப்தியடைந்த பஹீரா, “அப்படியானால் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கேட்கிறேன். மறுமொழி கூறுவீரா?” என்றார். “கேளுங்கள்” என்றார் சிறுவர் முஹம்மத்.

அதன்படி, சிறுவரின் நடையுடைகள், ஊணுறக்கம் பற்றியெல்லாம் கேள்விகள் கேட்டார் பாதிரி. பின்னர் சிறுவரின் மேலாடையை நீக்கிக் காட்டுமாறு கூறினார். சிறுவரது இரு தோள் புஜங்களுக்கிடையில் புறா முட்டை அளவுக்கு ஒரு தடித்த பகுதியைக் கண்டார். உடன் தன்னிடமிருந்த ஏடுகளைப் புரட்டிப் பார்த்து, அது இறுதி நபித்துவ முத்திரைதான் என்று உறுதி செய்தார். 

உணவுண்ட மகிழ்ச்சியில் உரையாடிக்கொண்டிருந்த மக்காவாசிளைப் பார்த்து பஹீரா கேட்டார்: “இச்சிறுவர் யாருடைய கண்காணிப்பில் இருக்கிறார்?”

அபூதாலிப் தன் கண்காணிப்பில் உள்ளார் என்று கூறியவுடன், “இச்சிறுவர் உமக்கு என்ன உறவுமுறையானவர்?” என்று கேட்டார் பஹீரா. “என் மகன்” என்றார் அபூதாலிப். “மகனா? கண்டிப்பாக இருக்க முடியாது. இவர் பிறப்பதற்கு முன்பே இவருடைய தந்தை இறந்திருக்கவேண்டுமே!” என்றார் பஹீரா.

“உண்மைதான். நான் இவருடைய தந்தையின் உடன்பிறப்பாவேன். நான்தான் இவரை வளர்த்து வருகிறேன்” என்றார் அபூதாலிப். உடனே பஹீரா அபூதாலிபிடம் கூறினார்: “உம்முடைய சகோதரர் மகனை உடனே மக்காவுக்குத் திருப்பியனுப்பி விடுங்கள். இவர்தான் வேதங்களில் கூறப்பட்ட இறுதித்தூதர் என்பதை ஷாமில் உள்ள யூதர்கள் அறிந்தால், இவருக்கு அவர்கள் மூலம் ஏதேனும்  தீங்கு நேரிடும்!”

பஹீராவின் அறிவுரையைக் கேட்டபின், தக்க துணையுடன் சிறுவர் முஹம்மதை மக்காவுக்குத் திருப்பியனுப்பினார் அபூதாலிப்.

ஆதாரம்: அதிரை அஹ்மத் அவர்களின் “நபி (ஸல்) வரலாறு” (இலக்கியச்சோலை வெளியீடு)

திங்கள், ஜூன் 14, 2021

உலமாக்கள் மற்றும் பிற பணியாளர்கள் நல வாரியம்,

*உலமாக்கள் மற்றும் பிற பணியாளர்கள் நல வாரியம்*


உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்
உலமா ஓய்வூதிய (தமிழ்நாடு) திட்டம் , 1981
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் உலமாக்கள் மற்றும் பிற பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சமூக, பொருளாதார கல்வி ஆகியவற்றில் முன்னேற்றமடைய தமிழக அரசால் 2009-ஆம் ஆண்டு “உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்” துவங்கப்பட்டது.

இந்த வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் யார்?

மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் வக்பு அமைச்சர் அவர்கள் இதன் தலைவர் ஆவார்.
10 அரசு அலுவல் சார் உறுப்பினர்களும் மற்றும் 

15 அரசு அலுவல் சாரா உறுப்பினர்களும் இவ்வாரியத்தில் உள்ளனர்.

இவ்வாரியத்தில் உறுப்பினராவதற்கான தகுதிகள் என்ன?

*18 வயது (பூர்த்தி செய்த) முதல் 60 வயதிற்கு உட்பட்ட*

*பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்களில் பணிபுரியும் பேஷ் இமாம்கள், மோதினார்கள், பிலால்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள்/ ஆசிரியைகள் மற்றும் பிற பணியாளர்கள்.*

*தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷீர்கானாக்கள், மற்றும் அனாதை இல்லங்களில் பணி செய்யும் முஜாவர் மற்றும் பிற பணியாளர்கள். இவ்வாரியத்தில் உறுப்பினராக சேர்வதற்கு தகுதி உடையவர்கள் ஆவர்.*

உறுப்பினராவதற்கு யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்?

விண்ணப்பப் படிவத்தினை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடமிருந்து பெற்று பூர்த்தி செய்து குறிப்பிடப்பட்ட ஆவணங்களை இணைத்து அவரிடமே சமர்ப்பிக்க வேண்டும்.

*உறுப்பினர் படிவத்துடன் என்னென்ன ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்?*

1) மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்

2) பணியாற்றும் நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட பணிச்சான்றிதழ்

3) வயதுச் சான்றிதழ்
 (பிற ஆவணங்கள் இல்லையெனில் மருத்துவரிடமிருந்து வயதுச் சான்றிதழை பெறலாம்)


*உறுப்பினர் அடையாள அட்டை என்றால் என்ன?*

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (பி.ப.) மற்றும் சிறுபான்மை நல அலுவலர் பெறப்பட்ட விண்ணப்பத்தினை வக்பு  கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைப்பார். 
அவர் விசாரணை, மேற்கொண்டு விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தகவல்கள் சரியாக இருப்பின் இ பி.ப. மற்றும் சிறுபான்மை நல அலுவலருக்கு பரிந்துரை செய்வார். பி.ப. மற்றும் சிறுபான்மை நல அலுவலர் கூர்ந்தாய்வு செய்து விண்ணப்பதாரரை உறுப்பினராகப் பதிவு செய்து அதற்கான அடையாள அட்டையை வழங்குவார்.

*உறுப்பினர் அடையாள அட்டை தவறினால் / தொலைந்தால் திரும்பப் பெற முடியுமா?*

முடியும். மாவட்ட பி.ப. மற்றும் சிறுபான்மை நல அலுவலரிடம் ரூ. 20 கட்டணம் செலுத்தி நகல் அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்.

*உறுப்பினர்களுக்கான சலுகைகள் யாவை?*

1) பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படிக்கும் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு அவர்கள் கற்கும் வகுப்பிற்குத் தகுந்தவாறு ரூ 1000 முதல் ரூ  6000 வரை ஆண்டு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகின்றது.

2) மகள் / மகன் (படித்திருக்காவிடினும்) திருமணச் செலவிற்கு திருமண உதவித் தொகையாக ரூ. 2000 வழங்கப்படுகின்றது.

3) பெண் உறுப்பினர்களுக்கு மகப்பேறு கால உதவித் தொகை ரூ. 6000 மற்றும் கருக்கலைப்பு / கருச்சிதைவு ஏற்படின் உதவித் தொகை ரூ. 3000 வழங்கப்படுகின்றது.

4) கண் கண்ணாடி வாங்கினால் அதற்கான செலவை ஈடு கட்டுவதற்காக ரூ. 500 ஒருமுறை மட்டும் வழங்கப்படும். இதற்கு கண் பரிசோதனை செய்த மருத்துவ சீட்டையும், கண்ணாடி வாங்கியதற்கான இரசீதையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

5) குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி செய்து 60 வயது பூர்த்தி அடைந்தோருக்கு மாதம் ரூ. 800 ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது.

6) ஈமச்சடங்கிற்காக, உறுப்பினர் வாரிசாக நியமித்தவருக்கு இறுதிச்சடங்கு செலவிற்கு ரூ. 2000 வழங்கப்படுகின்றது.


7) உறுப்பினர் இயற்கை மரணம் எய்தால் அவர் வாரிசாக நியமித்தவரிடம் ரூ. 15000 நிவாரணத் தொகை வழங்கப்படுகின்றது.

8) உறுப்பினர் விபத்தால் இறப்பின் ரூ.1 இலட்சம் மற்றும் உடல் உறுப்புகளை இழப்பின் (இழப்பிற்குத் தகுந்தவாறு) ரூ. 25000 முதல் ரூ.1 இலட்சம் வரை நிவாரணத் தொகை வழங்கப்படுகின்றது.


*நலத்திட்ட உதவிகளைப் பெற எவ்வாறு விண்ணப்பிப்பது?*

உறுப்பினர், நலத்திட்ட உதவிகளைப் பெற உரிய படிவத்தை பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் அவர் பணிபுரியும் அமைப்பின் நிர்வாகியிடம் “உண்மைச் சான்றிதழ்” கையொப்பம் பெற்று மாவட்ட பி.ப. மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

*உறுப்பினர் பதிவை எவ்வாறு புதுப்பிப்பது?*

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர் அவரது பதிவை புதுப்பிக்க வேண்டும். 3 ஆண்டுகள் முடிவடைவதற்கு சற்று முன்னரே உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உறுப்பினர் பதிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

*உறுப்பினர் பதிவை புதுப்பிப்பதற்கு கட்டணம் ஏதும் உண்டா?*

உறுப்பினர் பதிவை புதுப்பிக்க கட்டணம் ஏதும் கிடையாது.

உலமா ஓய்வூதிய (தமிழ்நாடு) திட்டம் , 1981
திருப்திகரமான வாழ்க்கை ஆதாரம் இல்லாத இசுலாமிய சமுதாயத்தைச் சேர்ந்த உலமாக்களுக்கு (மார்க்க அறிஞர்கள்) உதவுவதற்காக இத்திட்டம் தமிழக அரசால் 1981 - ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

இத்திட்டம் எந்த அமைப்பால் செயலாக்கப்படுகின்றது ?

மாநில பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, 27.07.2011 முதல் இத்திட்டத்தின் கீழ் ஒப்புதல் (sanction) அளிக்கும் அதிகாரத்தினை தமிழ்நாடு வக்/பு வாரியத்தின் முதன்மைச் செயல் அலுவலருக்கு அளித்தது. 2006 ஆம் ஆண்டில் உலமா ஓய்வூதிய ஒப்புதல் கமிட்டி மறு நியமனம் செய்யப்பட்டது. இக்கமிட்டியின் தலைவராக மாண்புமிகு சுற்றுச் சூழல் மற்றும் வக்,பு அமைச்சர் செயல்படுகின்றார். இசுலாமிய சமுதாயத்தைச் சேர்ந்த 6 நபர்கள் உறுப்பினர்களாக இதில் நியமிக்கப்பட்டுள்ளனர். வக்பு வாரியத்தின் முதன்மைச் செயல் அலுவலர் இக்கமிட்டியின் கன்வீனர் (converner) மற்றும் உறுப்பினர் செயலராகச் செயல்படுகின்றார்.

இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவதற்குரிய தகுதிகள் என்ன ?

உலமாவாக இருக்க வேண்டும் (மற்றும்)
தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட (அல்லது) வாரியத்தால் சர்வே மேற்கொள்ளப்பட்டு அறிவிப்புச் செய்யப்பட்ட (notified) பள்ளிவாசல்/ தர்கா போன்ற வக்புகளில் பேஷ் இமாம்
அரபி ஆசிரியர் (அ) முஜாவர் ஆக 20 ஆண்டு காலம் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் (மற்றும்)
60 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும் (மற்றும்)
வேறெந்த திருப்திகரமான வாழ்க்கைத் தொழில் ஆதாரம் இல்லாதவராக இருத்தல் வேண்டும்.
உடல் ஊனமுற்றவர்களுக்கு ஏதேனும் விதி விலக்கு உண்டா?

விதி விலக்கு உண்டு. உடல் ஊனமுற்றவர்கள் 10 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தாலே போதுமானது. அவர்களுக்கு வயதிலும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 50 வயது பூர்த்தி அடைந்தாலே ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர்கள் ஆகின்றனர்.

மாத ஓய்வூதியம் எவ்வளவு வழங்கப்படும் ?

இத்திட்ட பயனாளிக்கு மாதந்தோறும் ரூ.800 மாத ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது.

விண்ணப்ப படிவத்துடன் என்னென்ன ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்?

பணிச்சான்றிதழ்
வயதுச் சான்றிதழ்
ஊனமுற்றவர் எனில் அதற்கான சான்றிதழ்
எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் ?

விண்ணப்பப் படிவத்தை தமிழ்நாடு வக்பு வாரியத்தின் முதன்மைச் செயல் அலுவலரிடம் எழுதிக் கேட்டுப் பெறலாம். மேற்கண்ட சான்றிதழ்களை இணைத்து முதன்மை செயல் அலுவலர் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

செவ்வாய், ஜூன் 08, 2021

ஹழ்ரத் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி அஜ்மீரி ரழியல்லாஹு அன்ஹு,

ஹழ்ரத் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி அஜ்மீரி ரழியல்லாஹு அன்ஹு.🌹
 
அப்பாஸியக் கலீபாக்கள் நாயகம் ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்களின் வழித்தோன்றல்கள் மீது தாங்க இயலாத கொடுமைகளை செய்து வந்தனர். பக்தாத்தில் வாழ்ந்து வந்த அவர்களின் வழித்தோன்றல்களில் சிலர் இஸ்ஃபஹானில் வந்து குடியேறி வாழ்ந்து வரலாயினர்.

அந்நகரில் வாழ்ந்து வந்த அந்த குடும்பத்தைச் சார்ந்த காஜா செய்யிது அப்துல் அஜீஸ் அவர்களின் மகனார் செசெய்யிது கியாஸுத்தீன் அவர்கள் ஹழ்ரத் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வமிசாவழியில் தோன்றிய செய்யிது தாவூது என்ற பெரியாரின் அருமைத் திருமகள் உம்முல் வரா என்ற செய்யிதா மாஹினூரை மணமுடித்திருந்தனர். அவர்களுக்கு ஹிஜ்ரி 530 ஆம் ஆண்டு ரஜப் பிறை 14 (கி.பி.1116 ஏப்ரல் மாதம் 28 ஆம் நாள்) வெள்ளிக்கிழமை ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு முயீனுத்தீன் (இஸ்லாத்தை வலுப் பெறச் செய்தவர்) என்று பெயரிட்டு அருமைபெருமையாக வளர்த்து வந்தனர்.

ஹாஜா முயீனுத்தீன் ஜிஷ்தி அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்களின் வழித் தோன்றல்களில் ஒருவராவார்கள்.

“மீர்ஆதுல் அஸ்றார்” என்ற நூலில் கூறப்பட்டபடி அவர்களின் வம்சவழி பின்வருமாறு’

ஹாஜா முயீனுத்தீன் ஜிஷ்தி (ரலியல்லாஹு அன்ஹு)

ஹாஜா கியாதுத்தீன் (ரலியல்லாஹு அன்ஹு)

ஹாஜா நஜ்முத்தீன் (ரலியல்லாஹு அன்ஹு)

செய்யிது அப்துல் அஸீஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

செய்யிது இப்றாஹீம் (ரலியல்லாஹு அன்ஹு)

செய்யிது இமாம் மூஸல் காழிம் (ரலியல்லாஹு அன்ஹு)

செய்யிது இமாம் ஜஃபர் சாதிக் (ரலியல்லாஹு அன்ஹு)

செய்யிது இமாம் முஹம்மது பாகர் (ரலியல்லாஹு அன்ஹு)

செய்யிது இமாம் ஜெய்னு லாப்தீன் (ரலியல்லாஹு அன்ஹு)

செய்யிது இமாம் ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு)

செய்யிது இமாம் அலி (ரலியல்லாஹு அன்ஹு)

இச்சமயத்தில் தார்த்தாரியர் இஸ்ஃபஹான் மீது கடுமையான தாக்குதல் நடத்தி, அதனை நாசப்படுத்தி வந்தனர். எனவே செய்யிது கியாஸுத்தீன் ஹஸன் தம் குடும்பத்தினர்களுடன் அந்நகர் விட்டு நீங்கி குராஸானில் குடியேறினார். அவரின் அருமை மைந்தர் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி(ரஹ்)  அவர்கள் இளமையிலேயே மற்றச் சிறுவர்களை விட்டும்  மாறுபட்டவர்களாக விளங்கினர். சின்னஞ்சிறு வயதிலேயே அவர்கள் அன்பு, இரக்கம், தயவு ஆகிய அரும்பெரும் குணங்கள் வாய்க்கப் பெற்றவர்களாக திகழ்ந்தனர். இளமையில் மற்றச் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடச் செல்வதில்லை. மாறாக பள்ளி சென்று கல்வி பயின்றனர். ஒன்பது வயதிற்குள் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து விட்ட அவர்கள், பின்னர் ஃபிக்ஹ் நூல்களையும், ஹதீது நூல்களையும் பயின்று தேர்ச்சியுற்றனர்.

அன்னனாரின் சிறுவயதிலேயே அவர்களின் அன்னை மறைந்து விட்டார்கள். அவர்கள் 15 வயதை எய்தியபோது அன்னாரின் தந்தையும் மறைந்து விட்டார்கள். அவர்களுக்கு தந்தை வழியாகத் தண்ணீர்  இறைக்கும் காற்றாடியுடன் கூடிய பழத்தோட்டம் ஒன்று வாரிசு பாத்தியமாக கிடைத்தது. அதிலிருந்து கிடைத்த வருவாயைக் கொண்டு; எளிய முறையில் இனிதே வாழ்க்கை நடத்தி கொண்டிருந்தார்கள்.

தமக்கு சொந்தமான தோட்டத்தை விற்றுவிட்டு கல்வி தேடி சமர்கந்த், புகாரா நோக்கி பயணமாகி அங்கு மௌலானா ஹிஸ்ஸாமுத்தீனிடமும், ஷைகுல் இஸ்லாம் மௌலானா ஷர்ஃபுத்தீனிடமும் மார்க்கக் கல்விகளை கற்றனர். பின்னர் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரழியல்லாஹு அன்ஹு அவர்களை சந்திப்பதற்காக பகுதாது சென்றார்கள். கௌதுல் அஃலம் அவர்கள் முயீனுத்தீன் சிஷ்தி நாயகத்திற்கு தாய்வழியில் ஒன்றுவிட்ட மாமாவாக இருந்தார்கள்.

தம்மைக் காணவந்த அவர்களை தம் சீடர்களிடம் புகழ்ந்துரைத்தார்கள். பிற்காலத்தில் இவர்கள் மாபெரும் மகானாக வருவார்கள் என்று வாழ்த்துரைத்தார்கள். அதன்பின் ஹாரூன் என்ற ஊரை அடைந்து அங்கிருந்த ஷைகு உதுமான் ஹாரூனி ரழியல்லாஹு அன்ஹு அவர்களை சந்தித்து தமக்கு தீட்சை தருமாறு வேண்டினர். அவர்களும் அவர்களுக்கு பயிற்சிகள் கொடுத்து சிஷ்தியா தரீகாவில் தீட்சை வழங்கினர். தம் குருவுடன் இரண்டரை ஆண்டுகள் தங்கியிருந்தபின், தம் குரு ஆணையின்படி பகுதாது வந்து கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை இரண்டாவது முறையும்> ஷைகு அபூநஜீப் சுஹ்ரவர்தீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் சந்தித்து அவர்களின் ஆசியைப் பெற்றனர்.

இதன்பின் இந்தியாவிற்கு ஹிஜ்ரி 561 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் (கி.பி. 11-11-1165) அவாக்ள் இந்தியாவிலுள்ள மூல்த்தானுக்கு முதன்முதலாக வந்து சேர்ந்தார்கள்.  அதன்பின் லாகூர் சென்று பின் தம் குருநாதர் உதுமான் ஹாரூனி நாயகம் அவர்களை ரேயில் வைத்து சந்தித்து சிலமாதங்கள் கழிந்தபின் ஹிஜ்ரி 562 ஆம் ஆண்டில் ஹஜ்ஜுசெய்வதற்காக மக்கா புறப்பட்டனர். அங்கிருந்து மதீனா சென்று அண்ணலாரின் திருக்கபுர் சரீபை தரிசித்தனர். பின்னர் அவர்கள் இருபது ஆண்டுகள் பற்பல நாடு நகரங்களிலும் சுற்றித் திரிந்து பகுதாது மீண்டனர். அங்கு வைத்து, காஜா நாயகம் அவர்களுக்கு கிலாஃபத் வழங்கிய உதுமான் ஹாரூனி நாயகம் அவர்கள் ‘முயீனுத்தீனே! நான் உம்மை இறைவனளவில் ஒப்படைத்து விட்டேன்’ என்று கூறி அவர்களின் நெற்றியிலும் கண்களிலும் முத்தமிட்டனர்.

தமது 52 ஆம் வயதில் சிஷ்திய்யா தரீகாவில் கிலாஃபத் பதவியைப் பெற்ற காஜா முயீனுத்தீன் சிஷ்தி நாயகம் அவர்கள்> சில நாட்கள் பகுதாதில் தங்கியிருந்து பின்பு ஊஷ் என்ற ஊருக்கு சென்று குத்புத்தீன் பக்தியார் என்பவர்களுக்கு தீட்சை நல்கினர். இருவரும் மக்கா சென்று ஹஜ்ஜு செய்து விட்டு மதீனா நகர் சென்று பெருமானாரின் தரிசனத்தை பெற்றுக் கொண்டனர். பல்வேறு காடு, மலைகளை சுற்றித் திரிந்து பல்வேறு இறைநேசர்களை பல்வேறு நிலைகளில் கண்டு அவர்களின் துஆப் பேற்றினைப் பெற்றுக் கொண்டார்கள்.

ஆப்கானிஸ்தானிலுள்ள ஸப்ஸவார் என்ற ஊருக்கு வந்து சேர்ந்த அவர்கள் அங்கு சுன்னத் ஜமாஅத்தினர்களை கொடுமைப் படுத்திக் கொண்டிருந்த ஷியா மதத்தைப் பின்பற்றும் முஹம்மது யாத்கார் என்பவரை திருத்தி சுன்னத் வல் ஜமாஅத்தைப் பின்பற்றச் செய்தார்கள். அவரும் நாயகம் அவர்களின் சீடரானார். பின் அவர்களுடன் புறப்பட தயாரானார். ஷத்மான் கோட்டையை அடைந்ததும் புது மனிதராக காட்சியளித்த முஹம்மது யாத்கார் அவர்களை அங்கு ஆட்சி செய்யுமாறு பணித்து விட்டு இந்தியா புறப்பட்டுச் சென்றார்கள். பின்பு பல்க் சென்று அங்கிருந்து புறப்பட்டு து கஜ்னீ வந்து சேர்ந்து லாகூரை அடைந்து தாதா கன்ஞ் பக்ஷ் ஹுஜ்வீரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் அடக்கவிடத்தில் பல நாட்கள் கல்வத் இருந்தார்கள். அங்கிருந்து மூல்தான் வந்து அங்கு தங்கி சமஸ்கிருதம், பாலி ஆகிய மொழிகளைக் கற்றுக் கொண்டார்கள்.

பின்னர் டில்லி வந்து, அங்கிருந்த மக்களுக்கு இஸ்லாமிய அருள் நெறியைப் போதித்துவிட்டு 700 பேர்களை இஸ்லாத்தில் இணைத்து விட்டு கர்னூல் மாவட்டத்திலுள்ள சூனிபத் என்ற ஊருக்கு வந்து அங்கு அடங்கப்பட்டிருக்கும் ஷைகு நாஸிருத்தீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அடக்கவிடத்தில் சில நாட்கள் தங்கி கல்வத்தில் இருந்தார்கள். அவர்கள் கல்வத் இருந்த இடம் இப்போதும் சில்லயே முபாரக் ஹழ்ரத் ஹாஜா கரீப் நவாஸ் என்ற பெயருடன், மரியாதையுடன் அழைக்கப்படுகிறது.

அடுத்து அவர்கள் பாட்டியாலாவிலுள்ள நாரனோஸ் என்ற ஊருக்குச் சென்று அங்கு சில நாட்கள் தங்கி இஸ்லாமியப் பிரச்சாரம் செய்தனர். பின்பு அவர்கள் ஸமானா வழியாக அஜ்மீரை நோக்கிப் பயணமாயினர். ஹிஸ்ரி 588 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம் 10 ஆம் நாள் (கி.பி.1192) அவர்களின் புனிதப் பாதங்கள்> அஜ்மீர் மண்ணிலே மிதித்தன. அப்பொழுது காஜா நாயகம் அவர்களுக்கு வயது 57.

இந்நகரமும், அதன் சூழலுமத் பிருதிவிராஜ் என்ற ராஜபுத்திர அரசனின் ஆட்சியில் இருந்தது. அவனுடைய அரண்மனை> அதன் அருகிலுள்ள தாராகட் என்ற குன்றின் மீது இருந்தது. அதன் அடிவாரத்திலேயே மக்கள் வாழ்ந்து வந்தனர். அங்கேயே அவனுடைய குதிரை> ஒட்டகை ஆகியவற்றின் தொழுவங்கள் இருந்தன.

அங்கு வந்த காஜா நாயகம் தம் சீடர்களுடன் வெட்ட வெளியில் இளைப்பாற அமர்ந்தனர். அரசரின் ஆட்கள் வந்து நீங்கள் இங்கு தங்க கூடாது. இது அரசரின் ஒட்டகை அடைக்கும் இடம் என்று சொன்னார்கள். அதுகேட்ட காஜா நாயகம் அவர்கள் அரசரின் ஒட்டகை இங்கேயே அடைபட்டுக் கிடக்கட்டும் என்று சொல்லி விட்டு தம் சீடர்களுடன் அருகிலுள்ள அன்னாசாகர் என்ற ஏரிக் கரையில் போய் தங்கினர்.

காலையில் ஒட்டகம் மேய்ப்பவர்கள் வந்து ஒட்டகையை எழுப்ப முற்பட்ட போது அவைகளால் எழும்ப முடியவில்லை. உடனே அவர்களுக்கு நேற்று நடந்த சம்பவம் நினைவுக்கு வரவே காஜா நாயகத்திடம் வந்து மன்னிப்புக் கேட்டனர்.

அவர்களும் மன்னித்து, இது எந்த எசமானுடைய ஆணைக்காக அமர்ந்திருந்ததோ அந்த எசமானுடைய ஆணை மீது அவை எழுந்து நடக்கும் என்று கூறினர். அவ்விதமே ஆயிற்று. அதுகண்டு ஒட்டகம் மேய்ப்பவர்கள் வியந்து அரசனிம் இச்சம்பவம் பற்றி சொன்னார்கள்.

இதைக் கேட்ட அரசன் அதிர்ந்தான். ஏனெனில் மன்னனின் அன்னை வாசவதத்தா சோதிடத்தில் மிகவும் புலமை பெற்று விளங்கினாள். அவள் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பே இன்ன இன்ன அடையாளமுள்ள ஒருவர் இங்கு வவருவார். அவரின் வரவால் உன் ஆட்சி வீழும் என்று தன் மகனிடம் முன்னறிவிப்பு செய்திருந்தாள். அதைக் கேட்ட மன்னன் அப்போது அவர்களின் படத்தை தம்அன்னையிடமே வரைந்து கேட்டு அதன்படிப் பல பிரதிகள் எடுத்து இத்தகு உருவமுடையவர் எவரேனும் தம் நாட்டு எல்லைக்குள் நுழைந்தால் அவரைப் பிடித்து என் முன் கொண்டு வர வேண்டும் என்று ஆணையிட்டிருந்தான்.

எனவே இச்செய்தியைக் கேட்டவுடன் அந்த நபர் இவர்களாகத்தான் இருக்குமோ என்று எண்ணி அவர்களை அங்கிருந்து விரட்ட ஆட்களை அனுப்பினான். அரசரின் ஆணையை சிரமேற்றோங்கிச் செயலாற்ற அவனின் பணியாளர்கள் முயன்ற போது நாயகம் அவர்கள் ஒருபிடி மண்ணை அள்ளி, அதில் ஆயத்துல் குர்ஸீயை ஓதி ஊதி, அவர்கள் மீது வீசி எறிந்தார்கள். அவர்கள் அதனைத் தாங்க இயலாது, பெரும் கூச்சலிட்டுக் கொண்டு வெருண்டோடினர்.

இதனை அறிந்த அரசன் காஜா நாயகம் அவர்களைப் பெரிய மந்திரவாதி என்று எண்ணிக் கொண்டு, மந்திரத்தை மந்திரத்தால் தான் வெற்றி கொள்ள வேண்டுமென்று எண்ணி, சாதுராம் என்ற மாபெரும் மந்திரவாதியைக் காஜா நாயகம் அவர்களிடம் அனுப்பி வைத்தான். அவர் காஜா நாயகத்தைப் பார்த்ததும் திடுக்கம் ஏற்பட்டு அவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு அன்னாரின் கரம் பிடித்து இஸ்லாத்தைத் தழுவி அவர்களின் ஊழியத்தில் இருந்து கொண்டார். அவருக்கு ஷாதிதேவ்(மகிழ்ச்சியாளர்) என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்.

இதன்பின் காஜா நாயகம் அவர்களை எதிர்த்து, மந்திர ஆற்றலினால் போராடி, அவர்களை அங்கிருந்து விரட்டிவிட> ஜெய்ப்பால் என்ற மற்றொரு மந்திரவாதியை அனுப்பி வைத்தான் அரசன். அவர் தம்முடைய 1500 சீடர்களுடன் தம்மை எதிர்க்க வருகிறார் என்பதை அறிந்த காஜா நாயகம் அவர்கள் தம்முடைய கைக்கோலை கொடுத்து, நம்முடைய ஜமாஅத்தினரைச் சுற்றி பூமியில் ஒரு கோடு கிழியும். அதற்குள் நாம் இருக்கும் வரையில், அவர்களால் நமக்கு யாதொரு தீங்கும் செய்ய இயலாது என்று கூறினார்கள். அவ்விதமே அவரும் செய்தார்.

சற்று நேரத்தில் ஜெய்ப்பாலும்,அவரின் சீடர்களும் அங்கு வந்து, அக்கோட்டிற்குள் தம் கால்களை வைத்ததும், அவர்கள் மயங்கிக் கீழே விழுந்தனர். மயக்கம் தெளிந்து எழுந்த அவர்கள், தள்ளாடித் தள்ளாடி அன்னாசாகர் ஏரிக்கரையின் ஒரு புறத்தில் சென்றமர்ந்து, அன்னாசாகரின் தண்ணீரைக் காஜா நாயகம் அவர்கள் இருக்கும் பக்கம் செல்லவிடாது தடுக்கும் முயற்சியில் ஈடுபடலாயினர்.

இதனைக் கண்ட காஜா நாயகம் அவர்கள் ஷாதிதேவை அழைத்து, அவரின் கரத்தில் ஒரு பாத்திரத்தை கொடுத்து ‘நீர் அன்னாசாகரின் நீரை இந்தப் பாத்திரத்தில் எடுத்;து வாரும்’ என்று கூறினர். அவர் சென்று அவ்வாறே நீர் எடுத்து வந்ததும், அந்த ஏரியிலுள்ள அனைத்துத் தண்ணீரும் அப்பாத்திரத்துக்குள் வந்து அந்த ஏரி மட்டுமில்லாது, அதனைச் சூழ இருந்த எல்லாக் கிணறுகளும் வற்றி வரண்டு விட்டன. மக்களும், மாக்களும் நீரின்றி செத்து மடிய வேண்டிய அவலநிலை ஏற்பட்டு விட்டது.

ஜெய்ப்பால் திடுக்கிற்று காஜா நாயகம் அவர்களிடம் இரங்கி வேண்ட, பாத்திரத்தில் எடுத்த நீரை ஏரியிலேயே கொட்டும்படி பணித்தனர். அவ்வாறே செய்ய ஏரி தண்ணீரால் நிரம்பி தளும்பியது. இதன்பின்னரும் அறிவு பெறாது, ஜெய்ப்பாலும், அவருடைய சீடர்களும் மந்திங்களை ஜெபிக்கலாயினர். உடனே ஆயிரக்கணக்கான பாம்புகள் காடுகளிலிருந்து படையெடுத்து வந்து நாயகம் இருக்கும் கோட்டு வளையத்திற்குள் தலையை விட்டதும் வெருண்டு பின்வாங்கி ஓடத் துவங்கின. அப்பொழுது அவர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு அளவேயில்லை.

ஜெய்ப்பால் முன் வந்து, வானத்தை அண்ணாந்து பார்த்து ஒரு மந்திரத்தை உச்சரிக்க, உடனே வானிலிருந்து நெருப்பு மழை பெய்து, சுற்றிலும் இருந்த மரங்களையெல்லாம் எரித்துச் சாம்பலாக்கியது. எனினும், ஒரு நெருப்புப் பொறிகூட நாயகம் அவர்களும், அவர்களின் சீடர்களும் இருந்து கோட்டு வளையத்திற்குள் வந்து விழவில்லை.

இதுகண்டு பெரிதும் விரக்தியுற்ற ஜெய்ப்பால் மான் தோல் ஒன்றை எடுத்து, அதனை விண்ணை நோக்கி எறிந்து, அதில் பாய்ந்தேறி விண்ணிலே பறந்து, மக்களின் கண்களுக்கு தெரியாமல் மறைந்து விட்டான்.

அப்பொழுது காஜா நாயகம் அவர்களின் சீடர்கள் தியானத்திலிருந்த காஜா நாயகம் அவர்களை அணுகி, ஜெய்ப்பாலின் இந்த நடவடிக்கைகளைப் பற்றி கூறவும், நாயகம் அவர்கள் தங்கள் காலணியை எடுத்து விண்ணை நோக்கி எறிந்தனர்.

அது விண்ணிலே பறந்து சென்று ஜெய்ப்பாலைக் கண்டுபிடித்து அவரின் தலையில் ஓங்கி, ஓங்கி அடித்தவண்ணம், அவரை பூமிக்கு இறக்கி வந்து, காஜா நாயகம் அவர்களின் திருமுன் கொண்டு வந்து விட்டது. அவர் அழுது சலித்து நாயகம் அவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக்கேட்டு இஸ்லாத்தை தழுவினார். அவருக்கு அப்துல்லாஹ் என்று பெயர் சூட்டி அரவணைத்தார்கள் காஜா நாயகம் அவர்கள்.

இதனால் யாது செய்வதென்று அறியாது திகைத்துக் கொண்டிருந்தான். இனியும் பொது இடத்தில் தங்க வேண்டாம் என்று காஜா நாயகம் அவர்களை ஷாதிதேவும், அப்துல்லாஹ்வும் கூறி ஷாதி தேவ்விற்கு சொந்தமான இந்திரகோட்டின் அருகில் உள்ள நிலத்தில் போய் தங்கினர். அவ்விடத்திலேயே அவர்களின் தர்கா இப்பொழுது உள்ளது.

அங்கு காஜா நாயகம் சென்று அமர்ந்ததும், அங்கு தாங்களும், தங்களின் சீடர்களும் தங்குவதற்கான வீட்டு வசதிகளைச் செய்து கொண்டனர். அங்கு ஒரு சமையல் விடுதியும் நிர்மாணிக்கப்பட்டது. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தவமடத்தில் அமர்ந்து காஜா நாயகம் அவர்கள் இஸ்லாமியப் பிரச்சாரத்தை தொடங்கினர். அவர்களின் மாண்பினைக் கேள்வியுற்ற  மக்கள், நாட்டின் நாலா பக்கங்களிலிருந்தும் வந்து, அவர்களின் கரம்பிடித்து இஸ்லாத்தைத் தழுவினர். நாயகம் அவர்களும் பல்வேறு பகுதிகளில் வாழும் பிரமுகர்களுக்கும், அரசனுக்கும் இஸ்லாத்தில் இணைய அழைப்பு விடுத்தனர்.

பிருதிவிராஜன் பல்வேறு முயற்சிகள் செய்தும் காஜா நாயகம் அவர்களை அடிபணிய வைக்க முடியவில்லை. அஜ்மீரை விட்டு 3 நாளில் விலகுமாறு அரசன் பிருதிவிராஜன் காஜா நாயகத்திற்கு கடிதம் ஒன்று கொடுத்திருந்தான்.

அச்சமயத்தில் ஷிஹாபுத்தீன் கோரியின் கனவில் காஜா நாயகம் அவர்கள் இந்தியாவுக்கு படைஎடுக்குமாறு சொன்னார்கள். அவரும் இரண்டாவது தடவையாக தாரவாடியில் பாளையம் இறங்கி பிருத்விராஜனுக்கு கடிதம் எழுதி எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் யுத்தத்திற்கு தயார் என்று அரசன் பிருத்விராஜன் சொன்னதால் தாரவாடியில் போர் மூண்டது. பிருத்விராஜனுக்கு துணையாக வந்த சிற்றரசர்கள், மன்னர்களும் போரில் உயிர் நீத்தனர். பிருத்விராஜன் ஓடிப்போனார். அவனை ஸர்ஸுரி என்ற இடத்தில் கைது செய்தார் ஷிஹாபுத்தீன் கோரி.

வெற்றி பெற்ற பின் கோரி அஜ்மீர் சென்று நாயகத்தை சென்று சந்தித்து காணிக்கைகள் வழங்கினார்.

தம்மைக் காண வந்த பிருத்விராஜனின் தாய், மனைவி மற்றும் மகன்களை அன்போடு வரவேற்ற கோரி அன்னையாரின் வேண்டுகோளுக்கிணங்க ஆட்சிப் பொறுப்பை பிருத்விராஜனின் மகன் கோலாவிடம் கொடுத்து விட்டு டில்லியில் குத்புதீன் ஐபக் என்பவரிடம் ஆட்சியை ஒப்படைத்து அஜ்மீர் நகரை நிர்வாகிக்க ஸையித் ஹஸன் மஷ்ஹரீ என்பவரை நியமித்து விட்டு கஜ்னி நகர் நோக்கி வெற்றி வீரராக சென்றார்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கனவில் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஒரு சிற்றரசரின் மகளை இஸ்லாத்திலாக்கி அவருக்கு பீபி அமதுல்லாஹ் என்று பெயரும் சூட்டி திருமணம் முடித்துக் கொண்ட நாயகம் அவர்கள் அதன்மூலம் பக்ருத்தீன், ஹிஸாமுத்தீன் என்ற இரண்டு ஆண்மக்களையும், பீபி ஹாபிஸ் ஜமால் என்ற பெண்மகளையும் பெற்றெடுத்தனர்.

டில்லியில் வசித்து வந்த ஆன்மீக சீடர் குத்புத்தீன் பக்தியாரி (ரஹ்) அவர்களை  சந்திப்பதற்காக டில்லி அய்னுத்தீன் பள்ளிவாசலுக்கு வருகை தந்தபோது அதைக் கேள்விபட்ட மக்கள் அப்பள்ளிவாசலுக்கு அலைஅலையாய் ஓடிவந்து அவர்களை சந்தித்தனர்.

இதன்பின் மற்றொரு நிகழ்ச்சி டில்லியில் ஏற்பட்டது. ஹிஜ்ரி 611 ஆம் ஆண்டு துல்ஹஜ் பிறை (கி.பி.1215 ஏப்ரல் 2 அன்று) காஜா நாயகம் அவர்களின் ஆன்மீக ஆசான் உதுமான் ஹாரூனி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் மாணவரைக் காண்பதற்காக அங்கு வருகை தந்தனர். ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் தம் ஆசானின் ஆசானின் ஆசானையும் காண்பதற்கு தங்களுக்கு இறைவன் தந்த இரு கண்கள் பற்றாது மூன்றாவது கண்ணும் வேண்டுமென்று டில்லி மாநகர மக்கள் பேசிக் கொண்டார்கள்.

சுல்தான் அல்தமிஷும், தம் அமைச்சர் பெருமக்களுடன் உதுமான் ஹாரூனி நாயகம்  அவர்களிடம் பைஅத் பெற்றுக் கொண்டனர். பின்னர் அவர்கள் நாயகம் அவர்களை நோக்கி ஆன்மீகப் பாதையில் வழிகாட்டும் ஒரு நூலை ஆக்கிக் கொடுக்குமாறு ஆணையிட்டனர்.

அவ்விதமே அவர்கள் ‘கன்ஸுல் அஸ்ரார்’ என்ற பெயருடன் 25 பகுதிகளடங்கிய ஒரு நூலை எழுதி, சுல்தானுக்கு அன்பளிப்புச் செய்தனர்.

ஹிஜ்ரி 615 ல் உதுமான் ஹாரூனி நாயகம் அவர்கள் டில்லியை விட்டு மக்கா நகர் நோக்கி சென்றனர். அதன்பின் சிலகாலம் நாயகம் அவர்கள் டில்லியில் தங்கியிருந்து மன்னருக்கும், மற்றவர்களுக்கும் ஆன்மீக பயிற்சி அளித்துவிட்டு அஜ்மீர் திரும்பி அதையே தங்கள் இருப்பிடமாக்கிக் கொண்டனர்.

சிறிது காலத்தில் நாயகம் அவர்களின் அன்பு மனைவி பீபி அமதுல்லாஹ் மறுமை வாழ்வை எய்தப் பெற்றனர்.

தமது 90ஆவது வயதில் ஷியாப் பிரிவைச் சார்ந்த பீபி இஸ்மத்துல்லாஹ்வை இரண்டாவதாக மணமுடித்துக் கொண்டனர். இதன் காரணமாக ஏராளமான ஷீயாக்கள் சுன்னத் வல் ஜமாஅத்திற்கு வந்தனர். இந்த திருமணத்தின் மூலம் காஜா நாயகம் அவர்களுக்கு ஜியாவுத்தீன் அபூஸயீத் என்ற மகன் பிறந்தார்.

இரவெல்லாம் கடும் வணக்கம் புரிந்து வந்தனர். சுமார் 70 ஆண்டுகள் தலையணையில் தலைவைத்து படுத்ததில்லை. ஒவ்வோர் இரவும் அவர்கள் மக்கா சென்று வணக்கம் நிகழ்த்தி விட்டு, வைகறைத் தொழுகையில் கலந்து கொள்வதற்காக அஜ்மீர் திரும்பி விடுவர் என்றும், இந்தியாவிலிருந்து சென்ற யாத்ரிகர்கள் அவர்களைப் பலதடவை கஃபாவை இடம் சுற்றி வரக்கண்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

திருக்குர்ஆனை ஓதிவருவதில் மிகவும் இன்புற்றிருப்பார்கள். நான் அவர்களின் ஊழியத்தில் இருபதாண்டுகள் இருந்துள்ளேன். அதில் அவர்கள் ஒருநாள் கூட தமக்கு உடல் நலத்தை வழங்குமாறு கேட்கவில்லை என்று குத்புத்தீன் பக்தியாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அளவற்ற அன்பு வைத்திருந்தனர். அன்னாரின் அருளுரைகளைக் கூறும் போதெல்லாம் உளம் உருகிக் கண்ணீர் சொரிவார்கள். ஒரு தடவை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருளுரைகளைக் கூறிய அவர்கள்> ‘நியாயத் தீர்ப்பு நாளின்போது, அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்; அவர்களின்திருவதனத்தைப் பார்க்க நாணமுறுபவனைப் போன்ற கொடிய பாவி எவனுமில்லை. அப்பொழுது நாணமுறுபவன், வேறு எங்கு போய்த்தான் ஒளிந்து கொள்வான்? அவனுக்குப் புகலிடம் தான் ஏது?’ என்று கூறித் தேம்பித் தேம்பி அழுதார்கள்.

இறையச்சம் அவர்கள் உள்ளத்தை எப்பொழுதும் ஆட்கொண்டிருந்தது. சிலபொழுது இறையச்சத்தால் நடுங்கவும், தேம்பித் தேம்பி அழவும் செய்வர்.

தம்மைக் கொல்ல வந்தவனை தன் உள்ளுணர்வால் தெரிந்து கொண்ட அவர்கள் அதை அவனிடம் சொல்லியதும் அதிர்ந்த அவர் நாயகம் அவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக்கேட்டு இஸ்லாத்தை தழுவினார். 14 தடவை மக்காவிற்கு நடந்து சென்று ஹஜ்ஜு செய்து அங்கேயே இறப்பெய்தி ஜன்னத்துல் முஅல்லாவில் அடங்கப் பெற்றார்.

தாழ்மையின் உருவாக விளங்கிய அவர்கள் எவருக்கும் அவர்களே முதலில் ஸலாம் கூறுவர். வயோதிகர் எவரும் தம்மைக் காணவரின் அவரைக் கண்டதும் எழுந்து நின்று அவருக்கு முதலில் ஸலாம் உரைத்து> வரவேற்று அமரச் செய்வார்கள். தேவையுடையோரின் தேவைகளை ஒவ்வொரு நாளும் காலையில் சென்று விசாரித்து அவற்றை நிறைவேற்றி வைப்பார்கள்.

அவர்களின் உணவும், உடையும் மிக எளிமையாக இருந்தன.நோன்பு நோற்க விலக்கப்பட்ட நாட்களைத் தவிர்த்து மீதி நாட்களில் நோன்பு நோற்றார்கள். எப்பொழுதும் பகீர்களின் உடையை அணிந்து வந்த அவர்கள், அது கிழிந்துவிடின் அதில் ஒட்டுப் போட்டு தைத்து அணிந்து கொள்வார்கள்.

நாயகம் அவர்கள் பேரின்ப இசை நிகழ்ச்சிகளிலும் அதிக ஈடுபாடுடையவர்களாக இருந்தனர். அதில் கலந்து கொண்டு அவர்கள் சொக்கி மகிழ்ந்து தம்மையே மறந்த நிலையிலாகிவிடுவார்கள்.  அவர்களுடன் ஷைகு ஷிஹாபுத்தீன் சுஹ்ரவர்தீ, ஷைகு முஹம்மது கிர்மானீ> ஷைகு முஹம்மது இஸ்பஹானீ (ரஹ்) போன்ற இறைநேசச் செல்வர்களெல்லாம் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று அவர்களின் மாணவர் குத்புத்தீன் பக்தியாரி காக்கி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

ஆன்மீக செங்கோல் செலுத்தி சுமார் 90 இலட்சம் பேர்களை இஸ்லாத்தில் இணைத்த நாயகம்அவர்கள் 97 வயதானபோது தமக்கு இறப்பு அண்மி விட்டதை அறிந்து தம் மாணவர் குத்புத்தீன் பக்தியாரி (ரஹ்) அவர்களை அஜ்மீர் வருமாறு அழைத்து ‘இன்னும் சின்னாட்களில் நான் மறைவேன்’ என்று சொல்லி தமது பிரதிநியை நியமிக்கும் கிலாஃபத் நாமாவை ஷைகு அலீ சஞ்சரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களை எழுத்ச் செய்து அவர்களிடம் ஒப்படைத்து, அவர்களை டில்லிக்கு அனுப்பி வைத்து விட்டுத் தாங்கள்  உலகிற்கு வந்த பணி நிறைவுற்றதென மனநிறைவுற்றார்கள்.

இதன்பின் சில நாட்கள் உருண்டோடிசர்ன. ஹிஜ்ரி 627 ஆம் ஆண்டு ரஜப் மாதம், ஆறாம் நாள் (கி.பி. 1226 மே 21) திங்கட்கிழமை இரவு இஷா தொழுதபின் ததம் அறையின் கதவைத் தாளிட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தனர். வைகறையில் கதவு தட்டப்பட்டபோது அது திறக்கப்படவில்லை. பிறகு ஒருவாறு கதவை திறந்து சென்று பார்த்தபோது, அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்திருந்தார்கள். அவர்களின் நெற்றியில் ‘ஹாதா ஹபீபுல்லாஹ் – மாத்த பி ஹுப்பில்லாஹ் (இவர் அல்லாஹ்வின் நேசர், அல்லாஹ்வின் நட்பிலேயே உயிர் நீத்தார்) என்று பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டதும், அவர்களின் வியப்புப் பன்மடங்கு அதிகமாகியது.

விடிந்ததும் அவர்களின் மூத்த மகன் காஜா பக்ருத்தீன(ரஹ்) தந்தையின் ஜனாஸா தொழுகையை முன்னின்று நடத்த பின்னர் அவர்களின் பொன்னுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நாயகம் அவர்கள் மறைந்த செய்தி டில்லியிலிருந்த அவர்களின் கலீபா குத்புத்தீன் பக்தியாரி காக்கி அவர்களுக்குப் பல நாட்களுக்குப் பின்னர்தான் தெரிய வந்தது.

நாயகம் அவர்களின் அடக்கவிடத்தை ஷைகு ஹமீதுத்தீன் நாகூரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வழியில் தோன்றிய ஷெய்கு ஹுஸைன் நாகூரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பராமரித்து வந்தார்கள். அப்பொழுது காஜா நாயகம் அவர்களின் அடக்கவிடத்தின் மீது யாதொரு கட்டிடமும் எழுப்பப்படவில்லை.

அரசர் மஹ்மூது கில்ஜி அன்னாரின் மகிமையை உணர்ந்து அவர்களை பல்முறை டில்லிக்கு வருமாறு அழைத்தும் அவர்கள் செல்லவில்லை. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடியைக் காண வருமாறு அழைத்ததுமே அதைக் காண அங்கு சென்றார்கள். சுல்தான் ஷெய்கு ஹுஸைன் நாகூரிக்கு பணமுடிப்பு அளித்தும் அதை அவர்கள் ஏற்கவில்லை. தம் மகனாரின் வேண்டுகோளை ஏற்று காஜா நாயகத்தின் அடக்கவிடத்தின் மீது கட்டிடம் கட்டும் எண்ணத்தோடு அப்பணத்தைப் பெற்று அதைக் கொண்டு அவர்களின் கட்டிடம் நிர்ணமானிக்கப்பட்டது.

பின்னர் சுல்தான் மஹ்மூது கில்ஜி தர்காவின் அண்மையில் இறைவனைத் தொழுவதற்காக ஒரு பள்ளிவாயிலை நிர்மாணித்தார். அதுவே இப்பொழுது ‘ஸந்தல் மஸ்ஜித்’ என்ற பெயருடன் திகழ்கிறது. அவரே ‘புலந்து தர்வாஸா'(உயரமான வாசல்) என்ற பெயருடன் விளங்கம் வாயிலையும் நிர்மாணித்தார்.

மால்டாவின் மன்னர், மால்தேவை வென்றபின் டில்லி மன்னர் ஷெர்ஷா சூரியும் அஜ்மீர் வந்து காஜா நாயகத்தை தரிசித்து அங்கு நிலவிய தண்ணீர்ப் பஞ்சத்தை அறிந்து அங்கு தம் பெயரால் ஓர் ஏரியை வெட்ட ஏற்பாடு செய்தார்.

பின்னர் டில்லியை ஆண்ட பேரரசர் அக்பரும் பலதடவை நாயகத்தின் தர்பாருக்கு வருகை தந்துள்ளார். சித்தூரில் வெற்றி கிடைத்தால் கால்நடையாகவே அஜ்மீர் வருவதாக நிய்யத்து செய்து வெற்றி கிடைத்ததும் அதன்படியே செய்து தமது நேர்ச்சையை நிறைவேற்றிக் கொண்டார். அவருக்கு மகன்கள் பிறந்த பின்னரும் பலமுறை அஜ்மீர் வருகை தந்துள்ளார். சிவப்பு நிறக்கற்களால் ஒரு பள்ளிவாயிலும், காஜா அவர்கள் வாழ்ந்து மறைந்த குளிப்பாட்டப்பட்ட இடத்தில்> தர்வேஷ்கள் தங்குவதற்கு ஒரு தங்குமிடமும் ‘ஸஹன் சிராஹ்’ என்ற விளக்கு மண்டபமும் நிர்மாணித்ததோடு, 125 மணங்கு (தபர்ருக்) சோறு சமைக்கக் கூடிய பெரிய செம்பு சட்டி  ஒன்றையும் செய்து கொடுத்தார். மேலும் அஜ்மீரைச் சுற்றி பாதுகாப்புச் சுவரும் எழுப்பினார்.

அக்பரின் மகன் சலீம் என்ற ஜஹாங்கீர் பலமுறை அஜ்மீர் தர்காவிற்கு வருகை தந்துள்ளார். அங்குள்ள சிறிய செம்பு சட்டி அவர் காணிக்கையாக நல்கியதேயாகும். அதில் ஒரு வேளைக்கு 60 மணங்கு சோறு சமைக்கலாம். இதை காணிக்கையாக வழங்கிய அன்று இதில் சோறு சமைத்து 5000 ஏழைகளுக்கு வழங்கினார் அவர்.

அவரின் மகன் ஷாஜஹானும் இங்கு 5 தடவை வந்து அடக்கவிடத்தை தரிசித்தார். இங்கு வெள்ளை சலவைக் கற்களாலான ஒரு பள்ளிவாயிலையும், நகார்கானாவையும் நிர்மாணித்தார்.

ஷாஜஹான் மகள் ஜஹானரா ஹிஜ்ரி 1503 ஷஃபான் மாதம் 18 ஆம் தேதி காஜா நாயகத்தை தரிசிக்க சென்று ரமலான் மாதம் 7 ஆம் நாள் அஜ்மீர் சென்று அன்னாரின் அடக்கவிடத்தை தரிசித்ததை மிகவும் பாக்கியமாக கருதி தம்முடைய ‘முனிஸுல் அர்வாஹ்’ என்ற நூலில் வரைந்துள்ளார். மேலும் தமக்கு ஊழியம் செய்ய வந்த ஊழியர்கள் அனைவரையும் அங்கேயே விட்டு விட்டு> டில்லி மீண்டார். அந்த ஊழியர்களின் வழித்தோன்றல்களே இன்றும் அங்கு ஊழியம் செய்து வருகிறார்கள்.

ஷாஜஹானுக்குப் பின் அரியணை ஏறிய அவ்ரங்கசீபும் காஜா நாயகம் அவர்களின் தர்பாருக்கு பலமுறை வந்துள்ளார். அஜ்மீருக்கு வரும் ஒவ்வொரு தடவையும் தம் தங்குமித்திலேயே ஆயுதங்களை வதை;துவிட்டு> கால்நடையாகவே காஜா நாயகம் அவர்களின் அடக்கவிடத்திற்கு வந்து தரிசித்து வந்தார். அப்பொழு ஐயாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் காணிக்கை செலுத்தி வந்தார்.

பிற்காலத்தில் காஜா நாயகம் அவர்களின் அடக்கவிடத்திற்கு ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் மனைவி மேரி ராணி அம்மையார்> ஆப்கான் அமீர் ஹபீபுல்லாஹ் கான்> ராம்பூர் நவாப் ஹாமித் அலீகான்> ஹைதராபாத் நிஜாம் மீர் உஸ்மான் அலீகான்> தீதா சமஸ்தான மன்னர் மகாராஜா கோபதிசிங்> தோல்பூர் மகாராஜா ராஜா உதயபான் சிங்> மகாத்மா காந்தி> ஜவஹர்லால் நேரு> மௌலானா முஹம்மது அலீ ஜவ்ஹர் ஆகியோரும் வந்து தரிசித்து சென்றுள்ளனர்.

மலேசிய தேர்தலில் வெற்றி பெற்ற துங்கு அப்துர் ரஹ்மான் அமைச்சராக பொறுப்பேற்றதும் அஜ்மீர் வந்து காணிக்கை செலுத்தி சென்றார்.

முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய், தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆகியோரும் இந்த இடத்தை வந்து தரிசித்து சென்றுள்ளனர். பராக் ஒபாமா நாயகம் அவர்களின் அடக்கவிடத்திற்கு அழகிய போர்வையை அன்பளிப்பாக அனுப்பியுள்ளார்.

ஜாதி> மத பேதமின்றி அனைவரையும் மாட்சிமையுடன் ஆட்சி செய்யும் அஜ்மீர் நாயகம் அவர்களின் மாண்பினைக் கண்டேன் என்று கி.பி. 1902 ஆம் ஆண்டில் அங்கு வருகை தந்த இந்திய வைஸ்ராய் கர்ஸன் பிரபு தர்காவின் நிகழ்ச்சிக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளி, ஜூன் 04, 2021

மொபைல் மூலம் அனைத்து இ பாஸ்களும் விண்ணப்பிப்பது எப்படி?

மொபைல் மூலம் அனைத்து இ பாஸ்களும் விண்ணப்பிப்பது எப்படி? வாங்க தெரிந்துகொள்ளலாம்

மொபைல் மூலம் அனைத்து இ பாஸ்களும் விண்ணப்பிப்பது எப்படி? வாங்க தெரிந்துகொள்ளலாம்

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்நிலையில் மாவட்டங்களுக்குள்ளும் மாவட்டத்திற்கு வெளியேவும் செல்ல, இ- பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 




மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பதிவு பெற


வெளிநாட்டில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் இ பதிவு பெற




விண்ணப்பிப்பது எப்படி?

நீங்கள் மாவட்டங்களுக்குள் பயணம் செய்ய நினைத்தால், மற்றவை/ others என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

முதலில் மேற்கண்ட லின்ங்கில் உள் நுழைந்து மொபைல் எண்ணை பதிவு செய்து கேப்சாவை பதிவிட்டு  சம்பிட் கொடுங்கள் 

அடுத்து உங்கள் மொபைலுக்கு வரும் ஓடிபி எண்ணை பதிவிட்டு கேப்ட்சாவை உள்ளிட வேண்டும். 

அடுத்து வரும் விண்ணப்பத்தில் நீங்கள் பயணிக்கும் தேர்வை கிளிக் செய்து கொள்ளுங்கள் 

அடுத்து அதில்  மொபைல் எண் மற்றும் ரகசிய எண் கொடுக்கப்பட்டிருக்கும். அதை பதிவு செய்யவும்.

அடுத்து சாலை வழியாக பயணம் செய்ய விரும்புகிறீர்களா அல்லது விமானம்/ அல்லது ரயில் மார்கமாக பயணம் செய்ய விரும்புகிறீர்களா என்று கேட்கப்படும். தேவையானவற்றை தேர்ந்தெடுக்கவும்

அடுத்து அதில் ஏதேனும் ஒரு காரணத்தை பதிவு செய்ய வேண்டும். கொடுக்கப்பட்ட காரணங்களுக்கான ஆதாரத்தையும் பதிவேற்ற வேண்டும்.திருமண நிகழ்வு என்றால் திருமண அழைப்பிதழ் போன்றவற்றை சமர்பிக்க வேண்டும். மருத்துவ அவசர நிலை என்றால் மருத்த சான்று அல்லது அது சம்பந்தப்பட்ட ஆவணம், 

அடுத்து பயணிக்கும் வாகனம் எது என்பதை குறிப்பிடவும் அந்த வாகனத்தின் பதிவு எண்ணை குறிப்பிட வேண்டும்.

அடுத்ததாக எங்கிருந்து எங்கு செல்ல வேண்டும் என்பதை பதிவு செய்ய வேண்டும்.அதற்க்கான முழு முகவரியையும் பதிவிடுங்கள்

நமது விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டதும், உடனடியாக இபாஸ் குறிப்பு எண்ணுடன் (SMS) மற்றும் (Email) மின்னஞ்சல் அனுப்பப்படும் .

மேலும்  உங்கள் சந்தேகங்களுக்கு அணுக வேண்டிய உதவி எண்கள்
 
1100
 
1800 425 1333 


இந்த அவசரகால போக்குரவரத்து அனுமதிச் சீட்டு தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு மையத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. 

எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றிய வீடியோ 

நன்றி சன் நியூஸ் 

Post a Comment

0 Comments

பிரபல்யமான பதிவுகள்