நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

சனி, ஆகஸ்ட் 28, 2021

26ஆகஸ்ட் உலக நாய்கள் தினம்,

இன்று உலக நாய்கள் தினமாம்..

நாயிக்கும் (முஸ்லிம்) பாயிக்கும் ஆகாது.

காரணம்.......
     
SYED AHAMED ALI FACEBOOK பதிவிலிருந்து.

கட்டிவைத்த மாளிகை வாசலில் கட்டித்தொங்கும் வாசகம்
"நாய்கள் ஜாக்கிரதை"

இறை நம்பிக்கையாளனுக்கு மார்க்கம் எச்சரிக்கை செய்கிறது "நாய்கள் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருங்கள்" என்று.

நாயின் எச்சில் அசுத்தமட்டுமல்ல கொடிய நோய் கிருமிகளை கொண்டது. அது நம்மீது பட்டுவிட்டால் ஏழுமுறை தண்ணீர் கொண்டு அதில் ஒரு முறை மண் கொண்டு சுத்தம் செய்யவேண்டும் என்று நபிகள்(ஸல்) அவர்கள் அன்று சொன்னதை இன்று விஞ்ஞானம் ஒத்துக்கொள்கிறது. காரணம் நாய் கிருமிக்கு மண்ணில் மருத்துவம் இருக்கிறதாம்.

இன்று நகரங்களில் நாயை "நாய்" என்று சொல்லக்கூடாதாம்
செல்லப்பிராணியாம்..
பாசம் தரும் தாயை தள்ளி வைத்து விட்டு நோய்தரும் நாயை பஞ்சணையில் உறங்கவைக்கும் பைத்தியங்கள் வாழும் காலம் இது..

"கருப்பு நிற நாயின் உருவில் ஷைத்தான் வருவான்" என்றார்கள் நபிகளார் (ஸல்) அவர்கள்..

சரி நாயும் ஒரு உயிரினம்தானே அதையும் படைத்து உணவளிப்பவன் அல்லாஹ்தானே என்போம் உண்மைதான் என்றாலும் "அது (நஜீஸ்)அசுத்தம் விலகிசெல்லுங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் நமக்கு விளக்கிக் சொன்னதால் நாம் விலகிசெல்கிறோம்.
அதற்கும் சில முக்கியத்துவமான காரணங்கள் உண்டு. 
"நாய் எப்போதும் தனக்குக் கிடைத்ததை தன் இனத்திற்கு பகிர்ந்தளிக்க விரும்பாது"
"தன் இடத்திற்கு விருந்தாளியாய் வரும் தன் இனத்தைச் சேர்ந்த நாயை வா என வரவேற்று தன்னோடு அரவணைக்கும் குணம் அதற்கு கிடையாது". அதை விரட்டி விட்டு விட்டுத்தான் ஒரு இடத்தில் உட்காரும். "இரவில் விழித்திருந்து அதிகாலையில் (சுப்ஹூ நேரத்தில்) தூங்கும்." மேற்கூறிய குணங்கள் யாவும் மனிதர்களிடம் இருக்ககூடாத குணங்கள். வளர்ப்புப் பிராணிகளின் குணங்கள் அதை வளர்ப்போரிடமும் தொற்றிக் கொள்ளும். என்கிற நபிமொழியின் கருத்து படி நாய்களின் கெட்ட குணம் மனிதர்களுக்கு வரக்கூடாது என்பதற்காகவே நபி (ஸல்) அவர்கள் நாய் வளர்ப்பதை தடை செய்தார்கள்.

நாய் வளர்க்கலாமா..?
வேட்டை நாய்களை வளர்ப்பதற்கு மார்க்கம் அனுமதி தருகிறது என்றாலும் நஜீஸ் அசுத்த சட்டம் அதிலும் மாறுபடாது.

இதையும் தாண்டி நாய் படாத பாடு
கல்லை கண்டால் நாயை காணோம்
குரைக்கிற நாய் கடிக்காது,
நாய் வாலை நிமிர்த்த முடியாது.
நாயை குளிப்பாட்டி நடுவீட்டுல வச்சாலும்.

இவை நாயை பற்றிய
நடைமுறை பழமொழி...

ஒருவரை உச்சபட்சமாக
கேவலமாக திட்டினாலும் நாய் என்றுதான் திட்டுவார்கள்.

ஆனால் அப்படிப்பட்ட
கேவலம் நிறைந்த நாய்கூட (குகை வாசிகளான) இறை நேசர்களுடன் சேர்ந்ததால், இறை நேசர்களை நேசித்ததால் நல்லோருடன் இணங்கியதால் சுவனத்தில் அது இடம் பெறுகிறது .

ஆனால் நல்லவர்களோடு இறைநேசர்களோடு நாம் தொடர்பில் இருப்பது அது சொர்க்கத்திற்கான தொடர்பு என்பதை நம் சமூகத்தின் சில நாய்கள் ஏனோ புரிந்து கொள்வதில்லை.

மட்டைநாரும் மலரோடு சேர்ந்தால் மணம் தரும் என்பது இதுதானோ....?

நாமும் இறைநேசர்களை நேசிப்போம் இறைநேசர்களோடு தொடர்பில் இருப்போம் சுவனம் வரை.
இன்ஷா அல்லாஹ்...

வெள்ளி, ஆகஸ்ட் 13, 2021

அழகான துஆக்கள்



காதல் திருமணம் இஸ்லாத்தில் கூடுமா?

*இஸ்லாமிய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மாற்றுமதத்தாரோடு திருமணம் செய்யும் அவலம்!*

*உலமாக்கள்,உம்மத்தின் பொறுப்பாளர்கள்,மஸ்ஜித் நிர்வாகிகள், பெற்றோர்களுக்கு வேண்டுகோள்!*

*✍மவ்லானா காலித் சைஃபுல்லாஹ் ரஹ்மானி அவர்களின் கோரிக்கை!*
*ஜெனரல் செக்ரட்ரி ஆல்இந்தியா முஸ்லிம் பெர்ஷனல் லா போர்ட்*

வெளியீடு நாள்:நியூடெல்லி ஆகஸ்ட் 2/2021 

இஸ்லாம் நிகாஹ்வுடைய விஷயத்தில் "ஒரு முஸ்லிமான பெண்ணுடைய திருமணம், முஸ்லிமான ஆணுடன் மட்டுமே அமைய வேண்டுமென" அவசியமாக்கியுள்ளது.
அதேபோன்றுதான் எந்த முஸ்லிமான வாலிபரும் முஷ்ரிகான பெண்ணை திருமணம் செய்ய முடியாது.வெளிரங்களமாக அவ்வாறு திருமணம் என்ற பெயரில் சடங்கு நடைபெற்றாலும் ஷரீஅத் ரீதியாக அது திருமணமாக கருதப்படாது.எனினும் கைசேதம் என்னவெனில்,காலேஜ்கள் போன்ற கற்கும் இடங்களின் மூலம் மற்றும் வேலை செய்யும் இடங்களிலும் ஆண் பெண் இருசாராரும் கலப்பதின் காரணமாக மேலும் சரியான மார்க்க அறிவு இல்லாததின் காரணமாகவும் மற்றும் பெற்றோர்களின் தர்பியத் முறையாக இல்லாதிருப்பதின் காரணமாக இதுபோன்ற நிகழ்வுகள்
அதிகமாக நடைபெற்று வருகின்றன.பல நேரங்களில் இஸ்லாமிய வாலிபப் பெண்கள்  மாற்றுமத ஆண்களுடன் சென்று விடுகின்றனர்.பிறகு சிமத்துடன் வாழ்க்கையை கழிக்கின்றனர்.எந்தளவெனில் தாங்களாகவே தங்களின் வாழ்க்கையை சீரழித்து கொள்கிறார்கள்.

*இதற்கு தீர்வு என்ன?*

*1️⃣உலமாக்கள் பொதுமக்களின் சபைகளில் இந்த தலைப்பைப்பற்றி அதிகமாக பேச வேண்டும்.மேலும் மக்களுக்கு இதனுடைய இம்மை மறுமையின் நஷ்டங்களை உணர்த்த வேண்டும்.*

*2⃣பெண்களுக்கான பயான் கூட்டங்கள் அதிகமாக நடத்தப்பட வேண்டும்.அதில் மற்ற தலைப்புகளுடன் இந்த தலைப்பை பற்றியும் குறிப்பாக பேச வேண்டும்.*

*3️⃣பள்ளிவாசல் இமாம்கள் ஜுமுஆ உரைகளிலும்,குர்ஆன் ஹதீஸ் பாடங்களிலும் இத்தலைப்பை பற்றி பேச வேண்டும்.மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க பெண்பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டுமென மக்களுக்கு சொல்லித்தர வேண்டும்.*

*4️⃣பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு மார்க்க கல்வி கற்க சரியான முறையான ஏற்பாட்டை செய்து கொடுக்க வேண்டும்.தங்களின் பெண்பிள்ளைகளின் மொபைல் போன் போன்றவைகளை நோட்டமிட வேண்டும்.முடிந்தளவு பெண்பிள்ளைகளை பெண்கள் படிக்கும் கல்லூரிகளில் சேர்க்க வேண்டும்.ஸ்கூலைத் தவிர பிற நேரங்களின் பெண்பிள்ளைகளின் நேரங்கள் வெளியில் செலவழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.மேலும் முஸ்லிமான பெண்பிள்ளைக்கு  முஸ்லிமான பையனே துணையாக இருக்க முடியும் என்பதை பெண்பிள்ளைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.*

*5️⃣பொதுவாக எந்த வாலிபர்கள் வாலிபப் பெண்கள் ரஜிஸ்டர் ஆஃபிஸில் திருமணம் செய்கிறார்களோ அவர்களின் பெயர்கள் முனனதாகவே ரிஜிஸ்டரில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.பள்ளிவாசல் இமாம்கள்,மார்க்க சேவையில் உள்ளவர்கள்,பொறுப்பாளர்கள்,முக்கியஸ்தர்கள் அவர்களின் வீட்டிற்கு சென்று அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.அதாவது,இந்த சடங்காக நடைபெற்ற திருமணத்தால் நீ உன் முழு வாழ்க்கையையும் ஹராமில் கழிக்கப் போகிறாய் என்று விளங்கப்படுத்த வேண்டும்.மேலும் அனுபவம் என்னவெனில்,சிறிது நேர சுகத்திற்காக முடிக்கப்படும் இவ்வாறான திருமணங்கள் உலகிலேயே தோல்வியில்தான் முடிகிறது என்பதையும் விளங்கப்படுத்த வேண்டும்.*

*6️⃣வாலிபர்கள் குறிப்பாக வாலிபப் பெண்களின் பெற்றோர்கள், பொறுப்பாளர்கள் திருமணத்தை தயவுசெய்து தள்ளிப் போட வேண்டாம்.ஏனெனில் திருமணத்தை பிற்படுத்துவதும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு பெரிதும் காரணமாக உள்ளன.*

*7️⃣திருமணத்தை சாதாரணமாக முடித்துக் கொள்ள வேண்டும்.அதன்மூலம் பரகத் உள்ளது.அதில் சந்ததிகளின் பாதுகாப்பும், செல்வத்தை அழிப்பதை விட்டும் பாதுகாப்பும் உள்ளது.*

வியாழன், ஆகஸ்ட் 12, 2021

வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு பெண் கொடுக்க சில நிபந்தனைகள்,

வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு பெண் கொடுக்க சில நிபந்தனைகள்* :

1)திருமணம் ஆனதற்கு பின் வெளிநாடு செல்ல கூடாது.

2)திருமணத்திற்கு பின் ஊரில் தொழில்(business) செய்வதற்கு ஏற்ப தங்களுடைய அறிவுத்திறனையும்,பண வளத்தையும் சேமித்து கொள்ள வேண்டும்.

3)மாப்பிள்ளையின் நிலை மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தால் திருமணத்திற்கு பின் ஒரு ஆண்டு மட்டுமே வெளிநாட்டில் பணிபுரிய அனுமதி வழங்கப்படும்

*எதனால் இந்த முடிவு*

1) *31 வயதுடைய ஒரு பெண்ணின் குரல்* திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகி விட்டன,ஆனால் நான் என் கணவருடன் 5 மாதம் மட்டுமே வாழ்ந்துள்ளேன்.

2) *இன்னொரு பெண் சொல்கிறார்* என் தந்தை,என் சகோதரன்,என் கணவர் என அனைவரும் வெளிநாட்டில் உள்ளனர்,தீடிரென மருத்துவம் தொடர்பான பிரச்சினை மற்றும் நல்லது கெட்டது என்றால் தனியாக இருப்பதால் எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தற்கொலை செய்வதற்கும் மனம் துணிந்து விடுமோ என அஞ்சுகிறேன்.

3) *அடுத்து இன்னொரு பெண்* இதற்கு என் பெற்றோர் திருமணம் செய்து வைக்காமலேயே இருந்திருக்கலாம் என பெற்றோர் மீதும்,கணவர் மீதும் வெறுப்பு

4) *அடுத்த பெண்*
என் கணவர் வெளிநாட்டில் இருப்பதால் பிறந்த வீட்டிலும்,புகுந்த வீட்டிலும் என்னை வேலைக்காரியாக பயன்படுத்தி கொள்கிறார்கள்.

5) *இன்னொரு பெண்* என் கணவர் வெளிநாட்டில் இருந்தும் அவருடைய மாத வருமானம் 20,000 மட்டுமே கையில் மிஞ்சுவது 3000 மட்டுமே

6) *இன்னொரு பெண்* நான் நரகத்தில் இருக்கிறது போல் இருக்கிறது 

7) *இன்னொரு பெண்* என் கணவர் ஊரில் இருந்து 8000 ரூபாய் சம்பாதித்தாலே நான் மிகவும் சந்தோஷாமாக  இருப்பேன்.ஆனால் என் கணவர் வெளிநாட்டில் இருப்பது ஒவ்வொரு நொடியும் மிகுந்த தீராத மனவேதனையை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது,

8) *இது என்னுடைய கேள்வி* மனைவியை விட்டுவிட்டு 3 மாதம் ஜமாத் செல்கிறார் என்று தப்லீக் சகோதரர்களை பார்த்து  சொன்ன நாம் 2 ஆண்டுகளுக்கு மேலாக  வெளிநாட்டில் பணத்திற்காக செல்கிறோம் என்று சிந்திக்காதது ஏன்? (ஆனால் இறைவனின் அன்பிற்காக சென்றவர்களை பற்றி அவதூறாக பேசினோம்)

*ஆண்களுக்கு ஆலோசனைகள்*

*படிக்காத சகோதரர்களுக்கு*

1)படித்தால் மட்டும்தான் ஊரில் செட்டில் ஆக முடியும் என்ற அவநம்பிக்கையை கைவிட வேண்டும்.படிக்காதவர்களே நல்ல நிலைமையில் உள்ளார்கள் என்பதற்கு சான்று பாளையங்கோட்டை சகோதரர்கள்.

2)நம் தாய்மண்ணோடு(சொந்த ஊரிலேயே) தினமும் குட்டிகரணம் போட்டு,உரண்டு பிரண்டு சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

3)எந்த வேலை செய்வதற்கும் கூச்சம் கொள்ள கூடாது.உதாரணத்திற்கு விடியகாலையில் பேப்பர் போடுவது,பால் பாக்கெட் போடுவது,காலை முதல் மாலை வரை கம்பெனியில் வேலை செய்வது,இரவு ஹோட்டலில் வேலை செய்வது என பலதொழில்களை செய்ய வேண்டும்.ஞாயிற்று கிழமையை குடும்பத்திற்காக ஒதுக்க வேண்டும். (பிச்சை எடுப்பதும்,பிறரை ஏமாற்றி பிழைப்பதும்தான் தவறு)

4)சொந்த தொழிலை செய்வதுடன் பல சைடு(side) பிசினஸூம் செய்ய வேண்டும் 

5)இறைவன் கொடுத்ததை பொருந்தி வாழும் குணத்தை தனக்கும்,தன் குடும்பத்தினருக்கும் ஏற்படுத்த வேண்டும்.

*படித்தவர்களுக்கு*

1)அரசு வேலையை அடைந்தே ஆக வேண்டும்(இறைவன் கொடுத்த மூளையை பயன்படுத்தியே ஆக வேண்டும்)

*திருமணத்திற்கு முன் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு*

1)குடும்பத்திற்கு அதிக பணத்தை அனுப்பி பண ஆசையை காட்டாதீர்கள்

2)நிச்சயம் செய்த பெண்ணுக்கு அதை அனுப்புகிறேன் இதை அனுப்புகிறேன் என்று அதிக பொருளாதாரத்தை செலவு செய்து ஆரம்பத்திலேயே பண ஆசையை காட்டாதீர்கள்

*இஸ்லாம் கூறுவது*

1)உங்கள் மனைவியரை உங்கள் விலா எலும்பிலிருந்தே படைத்தோம்.(இறைவன் ஆண் மற்றும் பெண் என இரு பாலினமாக படைத்தது இருவரும் இணைந்து வாழ தான் தனித்தனியே பிரிந்து வாழ எதற்கு இரு பாலினம்? )

2)நீங்கள் உங்கள் மனைவிக்கு ஒரு பிடி உணவை ஊட்டினால் அதில் இறைவனின் பொறுத்தத்தை பெற்றுக்கொள்ளலாம்.

3)இம்மையிலும்,மறுமையிலும் நல்ல வாழ்க்கையை கொடு என்று துஆ கேட்க சொல்லும் மார்க்கத்தில் இருந்துவிட்டு வெளிநாட்டில் நமது அனைத்து நேரத்தையும் அடிமையாக தொலைத்துவிட்டு மறுமைக்காகவும் நேரம் ஒதுக்காமல்,இவ்வுலகிலும் மனைவி,பிள்ளைகளுடன் வாழாமல் நாசமாகி கொண்டிருக்கிறோம்

*பொதுவாக*

1)வெளிநாட்டிற்கு சென்று வாழ்க்கையையும் தொலைத்து,நோயுடன் வீடு திரும்பி எவ்வளவு பணம் சம்பாதித்தோமோ அதற்கு பல மடங்கு செலவு செய்து முதலில் இருந்த நிலையை விட மேலான வறுமை நிலையையே அடைந்து கொண்டிருக்கிறோம்

2) வாழதான் பிறந்தோம்,பணத்தில் மூழ்க அல்ல.அதிக பணம் வேண்டும்,பணம் இருந்தால்தான் எல்லாம் செய்யமுடியும் என்பதை மாற்ற வேண்டும்.நிம்மதியாக வாழ்வதற்கு எவ்வளவு வேண்டுமோ அதை நமதூரிலேயே சம்பாதிக்கலாம்.

*குறிப்பு*:

1)பெண்கள் மதிக்கப்பட வேண்டும்.பெண் குழந்தே பிறந்தால் நற்செய்தி என்று கூறும் ஒரே வேதம் திருக்குர்ஆன் தான்.வரதட்சனை ஒழிக்கப்பட வேண்டும்.

2) *மிகவும் குறிப்பாக பெற்றோர்கள் தமது பெண்களை கணவருடன் சேர்ந்து வாழும்படியாக திருமணம் செய்து கொடுக்கவும்,மாப்பிள்ளையை பிரிந்து வாழும் இழிவான வாழ்க்கையை அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டாம்*

3)இந்த பதிவு *வெளிநாட்டுவாழ் சகோதரர்களுக்கு எதிரானது அல்ல* அவர்களும் தங்கள் மனைவி,பிள்ளைகளுடன் சேர்ந்து வழ வேண்டும் என்ற எண்ணத்தில் பதிவு செய்தது.

4)காலத்தை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்

5)அனைத்து மார்க்க அறிஞர்களும் தனது ஜூம்ஆ உரைகளில் திருமணத்திற்கு பின் வெளிநாட்டு வாழ்க்கை வேண்டாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

6)பிரிந்து வாழ்வதே ஒரு சில தவறான பாதைக்கு வழி வகுக்கும்,அவ்வாறு  தவறான வழியில் செல்லாமல் இருக்கவே திருமணம் என்னும் ஹலாலான முறை.ஆனால் திருமணத்திற்கு பின்னும் பிரிவு?

7) *நம் குழந்தைகளை சின்ன ஸ்கூலில் படிக்க வைத்தாலும் அவர்களுக்கு அறிவை நாம் ஊட்டி ஊட்டி வளர்த்தால் மிகப்பெரிய விஞ்ஞானியாக மாற்றலாம்* ஆனால் நாம் அதற்கு *மாற்றமாக வெளிநாட்டுக்கு போனால் குழந்தைகளை பெரிய ஸ்கூலில் படிக்க வைக்கலாம்( கல்வியை பணம் கொடுத்து வாங்கி விடலாம்)    என்று நினைத்ததன் விளைவுதான்* இன்று நம் அனைத்து பிள்ளைகளையும் படிக்க வைத்துவிட்டோம் ஆனால் அவர்கள் வேலை இல்லாமல் நடுரோட்டில் நிற்கிறார்கள்,காரணம் அவர்களுக்கு அறிவு ஊட்டப்படவில்லை.
அன்பு என்பது எப்படி தாயால் காட்டப்படுவதோ அதுபோலதான் *அறிவு என்பது தந்தையால் மட்டுமே ஊட்டப்படகூடியது (மாறாக பள்ளிகளோ,கல்லூரிகளோ அல்ல)*

*இறுதியாக:*

*ஒரு சமூகம் தன்னை தானே மாற்றி கொள்ளாதவரை,இறைவன் அவர்களை மாற்ற மாட்டான்*
       -அல் குர்ஆன்

வியாழன், ஆகஸ்ட் 05, 2021

தாயிபில் நபி ஸல் உட்கார்ந்த இடம்

இந்த மஸ்ஜித் சொல்லும் சேதி என்ன?!
**************************************

அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாயிஃப் நகர் சென்ற போது அங்குள்ள இறைமறுப்பாளர்களால் கடுமையாக தாக்கப்பட்டார்கள்.

அப்போது இந்த இடத்தில் தான் அவர்கள் சோர்வுற்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள்.

அந்த இடத்தில் அடையாளமாக அப்போதே மஸ்ஜிதே ரஸூல் என்ற பெயரில் பள்ளிவாசல் அமைக்கப்பட்டிருந்தது.

தற்போது வரை தாயிஃபில் இந்த மஸ்ஜித் உள்ளது.

பிரபல்யமான பதிவுகள்