நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

ஞாயிறு, அக்டோபர் 31, 2021

அருமையான கேள்விகளும் அற்புதமான பதிலும்,

https://www.facebook.com/raheem.anvaari

கொசு குர்ஆன் கூறும் விஷயம்ம் என்ன?

https://youtu.be/tgL12ojp0es

(929) குர்ஆனில் கொசு ஓர் அதிசயம்
===========================

கொசு தோற்றத்தில் மிகவும் சிறியது! அற்பமானது! ஆனால் படைப்பில் அது அற்புதமானது விந்தையானது. 

அது அல்லாஹ்வின் அருள் மறையின் அற்புதச்செய்தியை முன்னறிவிப்பதாக உள்ளது. அது என்ன வசனம் தெரியுமா?

إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي أَن يَضْرِبَ مَثَلاً مَّا بَعُوضَةً فَمَا فَوْقَهَا

 நிச்சயமாக அல்லாஹ், கொசுவையோ
அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான் 
(அல்பகரா :2:26)

இந்த இறை வசனம் எப்போது அருளப்பட்டது தெரியுமா?

இணைவைப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக 
அல்லாஹ் 22:73-வது வசனத்தில் ஈயையும், 
29:41-வது வசனத்தில் சிலந்தியையும் உவமையாகக் கூறுகிறான். 

இதைக் கேட்ட இணைவைப்பாளர்கள் ஈயும், சிலந்தியும் அல்லாஹ்வின் வேதத்தில் கூறப்படுகின்றனவா? என்று இளக்காரமாகக் கேட்டனர்.

அப்போது தான் அல்லாஹ் இவ்வசனங்களை அருளி இப்படிக் கூறினான். 
நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான் 
(அல்பகரா :2:26) 

அதாவது சத்தியம் என வந்து விட்டால் அது எவ்வளவு அற்பமானதாக இருந்தாலும்,பெரிதாக இருந்தாலும் அதைக் கூறுவதற்கு அல்லாஹ் தயங்கமாட்டான். எனக்கூறிவிட்டு, 

அறிவியலுக்கு ஒரு சவாலாக கண்ணுக்குப் புலப்படாத ஓர் அற்பமான ஒரு பூச்சியையும் அதன் மேல் படைத்துள்ளான். அது அதன் குழவிக்குஞ்சாகவோ அதை தூய்மைப் படுத்தும் ஒரு அரிய படைப்பாகவோ இருக்கலாம். அதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

தன்னோடு ஒப்பிடும் போது, எதிரி பல மடங்கு பெரிதாய் அமைந்தவன் என்று அறிந்திருந்தும் எந்தவித அச்சமுமின்றி எதிர்கொள்ளும் தைரியத்தை எங்கிருந்து கொசு கற்றுக் கொண்டது?. 

இந்த போராட்டத்தில் சாவு நிச்சயம் என்று தெரிந்திருந்தும் மீண்டும் மீண்டும் எதிர்த்து போராடும் போர்க்குணத்தை எங்கே அது கற்றுக் கொண்டது?.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக மனிதன் கொசுவுக்கு பயந்து வலைக்குள் பதுங்கி கொள்ளும் அச்சத்தை அது ஏற்படுத்தி இருக்கிறதே!

உலகில் உயிர் கொல்லி நோய்கள் என்று அறிவிக்கப்பட்டவைகளில் மிக அதிகமானவை கொசுக்களால் தான் பரப்பப்படுகின்றன. இத்தனை ஆச்சரியங்களை உள்ளடக்கிய கொசுவை அற்பமாக எண்ணிக் கொண்டீர்களா?, 
அதுபற்றி ஆராய வேண்டாமா?. அதை தானே திருக்குர்ஆன் சொல்லிக் கொண்டிருக்கிறது.

நுண்கருவி மூலம் பெரிது படுத்தப்பட்ட அதன் அற்புதத் தோற்றத்தை படத்தில் காணலாம்.

விந்தையான கொசு பற்றிய விபரங்கள் 
1. அது பெண்பால். 
2. அதற்கு அதன் தலையில் 100 கண்கள். 3. அதன் வாயில் 48 பற்கள்.
4. அதன் உடலில் மாறுபட்ட மூன்று இதயங்கள். 
5. அதன் தும்பிக்கை நுனியில் ஆறு அறைகள்.
6. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அலுவல்கள் 
7. ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று இறக்கைகள்.

8. எக்ஸ்ரே கருவி போன்ற நுண்ணிய தர்மோமீட்டர் பொருத்தப்பட்ட சிவப்பு நிறத்தில் ஒரு நுண்ணிய கருவி அதனுள் படைக்கப்பட்டுள்ளது. அதன் வேலை அது மனித உடலில் இருளில் வந்து அமர்ந்து இரத்தத்தை உறிஞ்சும் போது யாரும் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு மனிதனுடைய நிறத்திற்கேற்றவாறு தன் நிறத்தை மாற்றிக்கொள்கிறது..

9. மனித மூளையே வியக்குமளவுக்கு அதனிடமுள்ள கூரிய ஊசி முள்ளால் குத்தி சிறிஞ்சியைப் போல் உறிஞ்சிக் குடிக்கிறது. அது எப்படீ பாய்ந்து உள்ளே செல்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியாது.

10. மனிதனின் இரத்த வாசனையை 60 கி.மீட்டர் தொலைவிற்கு அப்பாலிருந்து நுகர்ந்து தெரிந்து கொள்ளும் அற்புத ஆற்றலை அது பெற்றிருக்கிறது.

11. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அதன் முதுகின் மேல் கண்களால் பார்க்கமுடீயாத அளவுக்கு மிகச்சிறிய ஒரு பூச்சி உள்ளது என இன்றைய அறிவியல் கண்டு பிடித்துள்ளது.

உலகத்தின் ஆதி உயிரினங்களுள் ஒன்று கொசு.

2.5 மில்லி கிராம் எடைகொண்ட கொசுவுக்குப் பற்கள் மட்டும் 47.

மழை கொட்டும்போதும் உடல் நனையாமல் துளிகளின் இடுக்குகளில் பறக்க முடிந்த ஒரே பூச்சியினம் கொசு.

ஒரு விநாடிக்கு 300 முதல் 600 முறை வரை சிறகடிக்கிறது. அதுதான் நீங்கள் கேட்கும் ரீங்காரம்.

சில வாரங்கள் மட்டுமே ஆயுள்கொண்ட கொசுக்கள் ஆண்டுக்கு 10 லட்சம் மனிதர்களைக் கொன்று குவிக்கின்றன.

கொசு வகைகளின் எண்ணிக்கை, 3000ஐத் தாண்டியுள்ளது. இதில், 80 வகை கொசுக்கள் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும்.

ஒரு கொசு, முட்டையிலிருந்து, முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக மாறுவதற்கு தேவைப்படும் காலம்,5 நாட்கள் மட்டுமே

முட்டையிலிருந்து வெளிவந்த சில நிமிடங்களுக்குப் பின், கொசுக்கள் இனப் பெருக்கம் செய்ய முடியும். மேலும், கொசுவுக்கு முள் போன்ற கூரிய முனையுடைய இரத்த உறிஞ்சுக்குழல் உண்டு. கொசுவின் துணையுறுப்புகள் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் அபாயகரமான பூச்சியினம் என்று கின்னஸால் அறிவிக்கப்பட்டதும் கொசுதான்.

ஆண் கொசுவைவிடப் பெண் கொசுவே பெரியது. ஆண் கொசு சைவம். இலை தழைகளிலேயே அது உணவு உட் கொள்ளும். கடிப்பதும் ரத்தம் குடிப்பதும்
பெண் கொசுதான்.

கடிக்கும்போது ஒரு கொசு இரண்டு குழல்களை உடலுக்குள் நுழைக்கிறது. ஒரு குழல் ரத்தம் உறையாதிருக்க நொதிப்பொருளை செலுத்துகிறது. மறு குழல் உறையாத ரத்தத்தை உறிஞ்சுகிறது.
' ஏடிஸ் ' வகை கொசுதான் டெங்கு பரப்புகிறது.

ஒரு தொற்று நோயாளியைக் கடித்த கொசு ஆரோக்கியமானவரையும் கடிக்கும்போது தொற்றுக்கிருமிகளை உட்செலுத்தி டெங்கு பரப்புகிறது.
டெங்குவிற்கு மருந்தில்லை; டெங்குவில் மீண்டாலும் நோய் எதிர்ப்புச் சக்தியை உடல் மீண்டும் அடைவதில்லை.

கொசு/நுளம்பு மனிதக் குருதியை நுண்ணிய ஊசி போன்ற வாயுறுப்பால் அகத்துறிஞ்சி தனது வயிறு அல்லது கண்டப்பைக்குள் செலுத்தும். கண்டப்பைக்குள் செலுத்தப்பட்ட குருதி, சில நொதியங்கள் சேர்க்கப்பட்டு நுளம்புக்கான உணவாக கண்டப்பையுள் சேகரிக்கப்படும். அதேவேளை மனித உடலில் இருந்து கொசு/நுளம்பு குருதியை அகத்துறிஞ்சும் போது தனது உமிழ் நீரை மனித உடலுக்குள் பாய்ச்சும்.நுளம்பு இனங்களில் அனோஃபிலசு (Anopheles) எனப்படும் நுளம்பினத்தின் பெண் நுளம்புகளே, உலகின் சில பாகங்களில் மனித இறப்பை ஏற்படுத்தும், மலேரியா என்னும் அபாயகரமான தொற்றுநோயை ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு கடத்தும் நோய்க்காவியாக இருக்கின்றது

கொசுக்களை விரட்ட பயன்படுத்தும் பொருட்களில் கொசுக்களை அழிக்கும் இரசாயனம் அலெத்ரின்(alletrin) சார்பு பொருட்கள் உள்ளன. இது கொசுக்களை மட்டும் அழிப்பதில்லை மனிதனின் சுவாசப்பையில் நச்சுப்பொருள் கலந்து நாளடைவில் மார்புச்சளி, தும்மல் தலைவலி போன்ற உடல்நலக்கேடுகள் விளைகின்றன.

உடலில் தேங்காய் எண்ணை அல்லது விளக்கெண்னை பூசிக்கொண்டால் இரவில் கொசுக்கள் மட்டுமல்ல வேறு சில் பூச்சிகளும் நம்மை கடிக்காது.

கொசுக்கள் பெண்களைத்தான் அதிகமாக கடிக்கும் காரணம் அவர்கள் உடலிலுள்ள ஈஸ்ஸ்ட்ரோஜென்ஸ் கொசுக்களை கவருகின்றன ஆக பெண் தான் பெண்ணுக்கு எதிரி என்பது கொசுக்கள் விஷயத்திலும் உண்மையே

Vitamin B --- கொசுவின் எதிரி..., 
இந்த வைட்டமின் B அதிகமாக இருப்பவர்களை கொசு அண்டுவதில்லை...

வைட்டமின் B எவ்வளவு நீங்கள் எடுத்துகொள்ளலாம் என்று மருத்துவரின் பரிந்துரைப்படி மாத்திரைகளை வாங்குவது நல்லது.

சுத்தம் கொசுவுக்கு பகை:-

கொசு ..தொல்லை ..பற்றி தொடரே 
எழுதலாம் அவ்வளவு செய்தி இருக்கு 

குறிப்பா கொசு எப்படி உருவாகிறது?

மிகசிறு நீர் தேகத்தில் தான் கொசு லார்வா என்கிற முட்டையை பாதுகாக்கிறது அதாவது கொட்டாங்குச்சி எனப்படும் 
செரட்டை அதில் நாள்பட தண்ணீர் இருக்குமால் அதுவே கொசுவின் வீடு 

அதே போன்று சிறு சிறு டப்பாக்கள் அதில் தண்ணீர் கொசுவுக்கு சொகுசான வீடு.
ஓடும் தண்ணீரில் கொசு ஐயா இருக்க மாட்டார் அவருக்கு நன்னீர் அவசியம் 

எனவே குடிநீர் தேக்கம் அவருக்கு அடைக்கலம் கொடுக்கும் அற்புதமான இல்லம் 

குடிநீர் சேகரிப்பு தொட்டியை யாரும் சரியாக பராமரிப்பதில்லை ..காத்து கொசுவுக்கு பகை சிறு சிறு செடி கொடிகள் தவிர்த்தல் நலம் ... 

கொசு நம் ரத்தத்தை உறிஞ்சும் போது அது உறைந்துவிடக்கூடாது என்பதற்காக தனது எச்சில் போன்ற திரவத்தை வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள ரசாயனம் தோலில் பட்டதும் எரிச்சலையும் அரிப்பையும் ஏற்படுத்துகிறது.

இந்த பதிவை படித்தபின்பு
நீயெல்லாம் எனக்கு கொசுமாதிரி என்று
யாரையாவது சொல்வீர்களா?

ஒரு முஸ்லிம் பாம்பை வளர்ப்பது ஆகுமானதா?,

ஒரு முஸ்லிம் பாம்பை வளர்ப்பது ஆகுமானதா?

பதில் : பாம்பு என்பது தீங்குவிளைவிக்கின்ற, நோவினைப்படுத்துகின்ற ஒரு விளங்காகும். மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதனை எங்கு கண்டாலும் கொன்றுவிடுமாரி ஏவினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள் : “தீங்கழைக்க க்கூடிய ஐந்து (வகை) உயிரினங்கள் புனித (ஹரம்) எல்லைக்குள்ளும் வெளியிலும் கொல்லப்படும். பாம்பு, நீர்க்காகம், எலி, வெறிநாய், பருந்து ஆகியவைதாம் அவை.” (ஆதாரம் : முஸ்லிம்-1198)
“பாம்புகளைக் கொல்லுங்கள்” (என்று) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மின்பர் மேடையில் இருந்து உரைநிகழ்த்துவதை நான் செவிமடுத்தேன் என்று அப்துல்லாஹ் இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.
(எனவே) அப்துல்லாஹ் இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : “கண்ணில் படும் ஒவ்வொரு பாம்பையும் கொன்றுவருபவனாக இருந்தேன்” என்றார்கள். (ஆதாரம் : புஹாரி-3299, முஸ்லிம்-3233)
தொழுகையில் இருக்கின்றபோது பாம்பைக் கொல்லுமாரு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அபூஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : “பாம்பு , தேள் ஆகிய இரண்டையும் தொழுகையில் கொல்லுமாரு றஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏவினார்கள்.”​(ஆதாரம் : திர்மிதி-390) இது ஆதாரபூர்வமானது என இமாம் அல்பானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்.
எனவே, மார்க்கம் அவைகளை கொல்லுமாரு ஏவிஇருக்கின்ற சந்தர்ப்பத்தில் ஒரு முஸ்லிமிற்கு அதனைக்கொண்டு எவ்வாரு பயன்படுத்தமுடியும்?
இமாம் அஸ்zஸர்கஷீ கூறினார்கள் : “தீங்கிழைக்கக் கூடிய ஐந்து உயிரினங்களையும் கையகப்படுத்துவது தடுக்கப்பட்டதாகும்.” (துஹ்பதுல் முஹ்தாஜ் : 9/337) , (அல்மன்ஸுர் பில் கவாஇத் : 3/80)
இமாம் அஸ்ஸுயூதி கூறினார்கள் : “எந்த விடயங்கள் பயன்படுத்துவது தடுக்கப்பட்டதோ அந்த விடயங்களை எடுத்துக்கொள்வதும் தடுக்கப்பட்டதாகும். அந்த அடிப்படையிலேயே கேளிக்கை இயந்திரங்கள், தங்கம்-வெள்ளி பாத்திரங்கள், வேட்டைக்கு பயன்படுத்தப்படாத நாய் மற்றும் பன்றி போன்ற தீங்கிழைக்கக் கூடியவைகள் அனைத்தும் தடைசெய்யப்பட்டதாகும்.” (அல்அஷ்பாஹ் வன் நழாஇர் : பக்கம்- 280)
இப்னு குதாமா கூறினார்கள் : “கொல்வதற்கு கடமையாக்கப்பட்டவைகளை பயன்படுத்துவது (ஹராம்) தடையாகும்.” (அல்முஃனீ : 2/11)
பாம்பை வாங்குவதையோ விற்பனைசெய்வதையோ தடைசெய்யப்பட்டது என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள்.
இமாம் அந்நவவீ கூறினார்கள் : “ (மிருகங்களில்) பயன்பெறமுடியாது என்கின்றவைகளை விற்பனை செய்வது ஆகுமானதல்ல. வண்டு, தேள், பாம்பு, எலி, எறும்பு போன்றவைகளை உதாரணமாகக் கூறலாம்.” (ரௌழதுத் தாலிபீன் : 3/351)
“எந்தவித பயனுமில்லாத பூச்சிக்களை விற்பனைசெய்வது ஆகுமானதல்ல என்பதில் அறிஞர்கள் உடன்படுகின்றார்கள். ஆதலால் விற்பனை செய்யப்படக்கூடிய பொருளில் பயன்பாடு இருக்கவேண்டும் என்ற ஒரு நிபந்தனை இடப்படுகின்றது. எனவே, எலிகளையோ, பாம்புகளையோ, தேள்களையோ, வண்டுகளையோ மற்றும் எறும்புகளையோ விற்பனை செய்வது ஆகுமானதல்ல.” (அல்மவ்ஸுஆ அல்பிக்ஹிய்யா : 17/280)
மேலும், பாம்பை கொலை செய்யுமாரு மார்க்க ஏவுதல்களில் வந்துள்ள பொதுவான ஆதாரங்களின் அடிப்படையில் ; நச்சுத்தன்மை உள்ள பாம்போ அல்லது நச்சுத்தன்மையற்ற பாம்போ எந்த வகையாக இருந்தாலும் பயன்படுத்துவது (ஹராம்) தடைசெய்யப்பட்டதாகும்.
மேலும், எந்தவித பிரயோஜனமுமற்ற இப்படியான பாம்புகளை பயிற்சி கொடுப்பது என்பது ஒரு முஸ்லிமைப் பொருத்தமட்டில் எந்தவித தேவையற்ற காரியமாகும். அத்துடன் இப்படியான மிருகங்களை வளர்ப்பதில் ஆபத்துக்களே அடங்கியுள்ளன.
யாவும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே.

பாம்புகளைக் கொல்லுதல் வேண்டும்.

1441. நபி(ஸல்) அவர்கள் மிம்பரின் மீதிருந்து உரையாற்றியபடி, பாம்புகளைக் கொல்லுங்கள். முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் கொண்ட (‘தாத் துஃப்யத்தைன்’ என்னும்) பாம்பையும் குட்டையான – அல்லது – சிதைந்த வால் கொண்ட (‘அப்தர்’ எனும்) பாம்பையும் கொல்லுங்கள். ஏனெனில், அவையிரண்டும் (கண்) பார்வையை அவித்து விடும்; கருவைக் கலைத்து விடும்” என்று சொல்ல கேட்டேன். அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்: நான் (ஒரு முறை) ஒரு பாம்பைக் கொல்வதற்காக விரட்டிச் சென்று கொண்டிருந்தபோது அபூ லுபாபா (ரலி) என்னைக் கூப்பிட்டு ‘அதைக் கொல்லாதீர்கள்” என்றார்கள். நான், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பாம்புகளைக் கொல்லும்படி உத்திரவிட்டுள்ளார்கள்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘(ஆமாம், உண்மை தான்.) ஆனால், அதன் பிறகு வீடுகளில் வசிக்கும் பாம்புகளை (பார்த்த உடனே) கொல்லவேண்டாமென்று அவர்கள் தடுத்தார்கள். அவை வீட்டில் வசிக்கும் ஜின்களாகும்” என்று பதிலளித்தார்கள்.
புஹாரி : 3297-3298 இப்னு உமர் (ரலி).
1442. நாங்கள் (ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் (மினாவிலுள்ள ஒரு குகையில் தங்கி) இருந்தோம். அப்போது அவர்களுக்கு, ‘வல் முர்சலாத்தி (ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவை மீது சத்தியமாக!)” எனும் (77 வது) அத்தியாயம் அருளப் பட்டது. அதை நாங்கள் நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து (அவர்களே ஓதக்) கேட்டுக் கொண்டிருந்தோம். அப்போது பாம்பு ஒன்று (தன்னுடைய புற்றிலிருந்து) வெளிப்பட்டது. (அதைக் கொல்ல) போட்டியிட்டுக் கொண்டு நாங்கள் விரைந்தோம். அது எங்களை முந்திக் கொண்டு தன்னுடைய புற்றுக்குள் நுழைந்துவிட்டது. அப்போதுஇறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘நீங்கள் அதன் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டு விட்டது” என்று கூறினார்கள்.
புஹாரி : 4930 இப்னு மஸ்ஊது (ரலி

வியாழன், அக்டோபர் 28, 2021

தொழுகை

                       நிய்யத்

(صحيح البخاري (6/1
عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى المِنْبَرِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا، أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ
நிச்சயமாக செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் தான் எண்ணியதுண்டு. ஒருவரது ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும் அவனது தூதருக்காகவும் இருந்தால், அது அல்லாஹ்வுக்காகவும் அவனது தூதருக்காகவுமே இருக்கும். அவனது ஹிஜ்ரத் உலகத்தை அடைவதற்காக அல்லது ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற்காக என்றிருந்தால் அவரது ஹிஜ்ரத் அதற்காகவே அமையும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: உமர் (ரழி) | நூல்: புகாரி, முஸ்லிம்)
இந்த ஹதீஸின் வழிகாட்டல்கள்:
1.நிய்யத்து என்பது ஒரு விடயத்தை நாடுவதும், அதனைச் செய்வதும் என்று உறுதிக் கொள்வதுமாகும். இவை உள்ளங்களின் செயற்பாடுகளுடன் தொடர்பானவையாகும். ஒரு மனிதன் ஒருவிடயத்தை செய்வதாக உறுதிக் கொண்டால், அவர் அந்த விடயத்தில் நிய்யத் வைத்துவிட்டார் என்பதே மார்க்க ரீதியான விளக்கமாகும்.
“வுழூ செய்வதாக உறுதிக் கொண்டால், அவர் வுழூவுக்கான நிய்யத்தை வைத்தவராவார். குறித்த தொழுகையை நிறைவேற்றப் போவதாக உறுதிக் கொண்டால், அவர் அத்தொழுகைக்காக நிய்யத்தை வைத்தவராவார். இவ்வாறே ஒவ்வொரு விடயத்திலும் நிய்யத் கணிக்கப்படுகிறது.
2.”ஒரு முஸ்லிம் தனது ஏதேனும் ஒரு காரியத்தை நிறைவேற்றும்போது அது குறித்து நீய்யத்தை வாயால் மொழிவது என்பது மார்க்கமாக்கப்படவில்லை. இது அல்லாஹ்வுடைய தூதரிடமிருந்தோ ஸஹாபாக்களிடமிருந்தோ தாபியீன்களிடமிருந் தோ வந்ததாக அறியப்படவுமில்லை. எனவே, எவர் சப்தமிட்டு நிய்யத்தை மொழி கிறாரோ அவர் அல்லாஹ்வுடைய தூதரும் ஸஹாபாக்களும் செய்யாத ஒரு காரி யத்தை செய்தவராவார். இதனை பித்அத் என்று கூறப்படும்.
இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறும்போது: “நான் லுஹர் தொழுகையை தொழுவதற்கு  நிய்யத்து வைக்கிறேன்” என்று எவர் சப்தமிட்டு கூறுகிறாரோ அவர், நூஹ் (அலை) அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆயுட்காலத்தின் அளவு உட்கார்ந்து ‘அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்களோ அவர்களது நபித்தோழர்களில் ஒருவரோ இவ்வாறு செய்திருப்பார்களா என்று ஆய்வு செய்து பார்த்தாலும் (அதற்கான ஆதாரத்தை) கண்டு கொள்ள மாட்டார். (எனவே இது) தெளிவான பொய்யைத் தவிர வேறில்லை.
நிய்யத்தை வாயால் மொழிவதில் நன்மை இருக்குமானால்  எங்களை விட ஸஹாபாக்கள் அதில் முந்தியிருப்பார்கள். அவ்வழியையும் எங்களுக்குக் காட்டியிருப்பார்கள்.
நிய்யத்தை வாயால் மொழிவது தான் சரி என்று இருக்குமானால், ஸஹாபாக்கள் அவ்வழியை பின்பற்றுவதில் வழிதவறி விட்டார்கள் என்பதாகிவிடும். ஸஹாபாக்கள் நேர்வழியிலும் சத்தியத்திலும் தான் இருந்திருந்தார்கள் (நிய்யத்தை வாயால் மொழியவில்லை) என்றால் ‘நேர்வழிக்குப்பின் வழிகேட்டைத் தவிர் வேறு என்ன இருக்கிறது.’ (அல்குர்ஆன் 11:32)  (நூல்: இகாஸதுல் லுஹ்பான் 1ஷ138, 139)
3.நிய்யத்தின் அடிப்படையான பயன்கள் ஆறு வகைப்படும்
பயன் ஒன்று: செய்கின்ற செயலின் நோக்கத்தை பிரித்துக் காட்டுவது
அதாவது அல்லாஹ்வின் திருப்திக்காக செயல்படுவது என்ற நோக்கமாக இருந்தால் அதுவே தவ்ஹீதும் இஹ்லாஸும் ஆகும்.
وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ
நேரியவழி நின்று கலப்படமற்றவர்களாக அல்லாஹ்வுக்காகக் கட்டுப்பட்டு அவனை வணங்குமாறும் தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தையும் கொடுத்து வருமாறே தவிர அவர்கள் ஏவப்படவில்லை. இதுதான் நேரிய மார்க்கமாகும். (98:5)
அல்லாஹ்வுக்காக என்ற நோக்கம் இல்லாவிட்டால் அது முகஸ்துதி (‘ரியா’) எனும் சிறிய இணைவைப்பைச் சார்ந்ததாகிவிடும். இபாதத்கள் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக இருக்குமானால் அது பெரிய இணைவைப்பாக ஆகிவிடும்.
உதாரணமாக:
எவர் தனது தொழுகையை நபிகளாரின் ஸுன்னாவை பின்பற்றி சிறப்பாக நிறைவேற்றுகிறார்ரோ எவர் அல்லாஹ்வின் திருப்திக்காக தர்மம் செய்கிறாரோ அவர் கூலி கொடுக்கப்படக் கூடிய இஹ்லாஸ் உடையவராவார்.
மக்களுக்கு காண்பிப்பதற்காக தொழுகிறவரும், மக்கள் தன்னை புகழ வேண்டும் என்பதற்காக தர்மம் செய்கின்றவரும் முகஸ்துதிக்குரியவராகவும் பாவம் புரிகின்றவருமாவார்.
அல்லாஹ் அல்லாதவவைகளுக்காக ஸஜ்தா செய்கின்றவரும், அறுத்துப் பலியிடுபகின்றரும், நேர்ச்சை செய்கின்றவரும் பெரிய இணைவைப்பை செய்தவராவார்.
பயன் இரண்டு: அமலை சரியாகச் செய்தல்
சரியான நிய்யத் இல்லாமல் அமல் சீராகாது. எனவே நிய்யத் என்பது  அமல் சீராகுவதற்கான (ஏற்றுக்கொள்ளப் படு வதற்கான) நிபந்தனையாகும். அதனை பின்வருமாறு குறிப்பிடலாம்.
வுழூவின் காரியங்களை செய்யக் கூடியவர் வுழுவுக்குரிய (சுத்தத்திற்குரிய) நிய்யத்தை மனதில் ஏற்படுத்தவில்லையானால் அவரது வுழூ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
லுஹர் தொழுகின்றவர் அத்தொழுகையை அஸர் தொழுகை என எண்ணுவாராயின் அத்தொழுகை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மஃரிப் தொழுகின்றவருக்கு தான் அஸர் தொழவில்லை என்று நினைவுக்கு வந்து மஃரிப் தொழுகையின் நிய்யத்தை விட்டு விட்டால் அவரது மஃரிப் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அஸர் தொழுகையை மனதில் வைத்துக் கொண்டு மஃரிப் தொழுதால் அஸர் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. நிய்யத்தில் ஏற்பட்ட மாற்றத்தினால் மஃரிப் தொழுகையையும் அவர் பூரணப்படுத்த முடியாது.
தர்மம் செய்வது என்ற நிய்யத்துடன் பணத்தை கொடுக்கின்றவர் (அதன் மூலம்) கடமையாக்கப்பட்ட ஸகாத் கொடுத்த நன்மையை பெறமாட்டார்.
ஒருவர் ஒரு மனிதனுக்கு பணத்தை நன்கொடையாகக் கொடுக்கிறார். அவர் நன்கொடை கேட்கவில்லை. கடனாகக் கேட்டிருக்கிறார் என்று பிறகுதான் அவருக்குத் தெரியவருகிறது. எனவே தான் கொடுத்த நன்கொடையை கடனில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினாலும் அது கடனில் சேரமாட்டாது.
பயன் மூன்று: நற்கூலி பெறுதல்
பிக்ஹு உடைய உலமாக்கள் மேலேயுள்ள ஹதீஸின் மூலம் வகுத்த சட்டங்களில் ஒன்று “நிய்யத்து இல்லாமல் கூலி இல்லை” என்பதாகும். நிய்யத்து இல்லாத எந்த அமலுக்கும் கூலி வழங்கப்படமாட்டாது.
உதாரணமாக:
இஃதிகாபுடைய நிய்யத்துடன் பள்ளியில் தங்கிடும் போது அல்லது கடமையாக்கப்பட்ட தொழுகையை எதிர்பார்த்து பள்ளியில் இருந்திடும் போது அதற்கான கூலி வழங்கப்படும். எவ்வித நிய்யத்தும் இல்லாமல் பள்ளியில் தங்கியிருப்பதற்காக எந்த நன்மையும் கிடைக்கப் பெறமாட்டாது

நிய்யத்தின் ஒழுங்கு

இஃதிகாபுடைய நிய்யத்துடன் பள்ளியில் தங்கிடும் போது அல்லது கடமையாக்கப்பட்ட தொழுகையை எதிர்பார்த்து பள்ளியில் இருந்திடும் போது அதற்கான கூலி வழங்கப்படும். எவ்வித நிய்யத்தும் இல்லாமல் பள்ளியில் தங்கியிருப்பதற்காக எந்த நன்மையும் கிடைக்கப் பெறமாட்டாதுநிய்யத்தின் ஒழுங்கு

தொழுகையின் வரிசையில் (ஸஃப்பில்) நிற்கும் ஒழுங்குகள்

இஸ்லாத்தின் முக்கிய வணக்கங்களில் ஒன்றுதான் தொழுகை, தொழுகையை நிறைவேற்றுவதற்குரிய முக்கிய சட்டங்களில் வரிசையை சீர் செய்வதும் ஒன்றாகும். தொழுகையில் வரிசையை சீர் செய்து கொள்ளும் விஷயத்தில் இன்னும் முஸ்லிம்களில் பலர் அறியாமையில்தான் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இதை நாள்தோறும் பள்ளிவாசல்களில் பார்த்துக் கொண்டும் சீர்திருத்திக் கொண்டுதான் இருக்கின்றோம். அதுபற்றி மக்களிடம் நல்ல ஒரு தெளிவு கிடைக்க வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தொழுகையில் வரிசையில் நிற்பதற்கான ஒழுங்குகளில் பின்னுள்ளவைகளை பேணுதல் அவசியமாகும்.
1. முன் வரிசையின் சிறப்புகள்
2. வரிசையில் நேராக நிற்க வேண்டும்
3. வரிசையில் நெருக்கமாக நிற்க வேண்டும்
4. முதல் வரிசையை முழுமைபடுத்திய பின்புதான் அடுத்த வரிசையை ஆரம்பிக்க வேண்டும்.
5. இமாமின் வலது புறத்திலிருந்து வரிசையை ஆரம்பிக்க வேண்டும்
6. பெண்கள் நிற்கும் வரிசை
1. தொழுகையில் முன் வரிசையின் சிறப்பு
மக்கள் பாங்கிலும், முன் ஸஃப்பிலும் உள்ள சிறப்புகளை அறிந்து, பிறகு அவ்விரண்டும் குலுக்கல் மூலம் தான் பெறமுடியுமென்றிருந்தால் (அவர்கள் அதற்கும் தயாராகி) குலுக்கல் மூலம் அவைகளைப் பெற்றுக் கொள்வர் என நபி (ஸல்) கூறினார்கள்: (புகாரி, முஸ்லிம்)
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். மலக்குகள் தங்கள் இரட்சகனின் சமுகத்தில் அணிவகுப்பது போல், தொழுகையில் நீங்கள் அணிவகுக்கக் கூடாதா? எனக் கூறினார்கள். அப்பொழுது நாங்கள் யாரஸுலுல்லாஹ் மலக்குகள் தங்கள் இரட்சகனின் சமுகத்தில் எவ்வாறு அணிவகுக்குகிறார்கள்? எனக் கேட்டோம். அதற்கவர்கள், அவர்கள் முந்திய ஸஃப்புகளை முழுமைப் படுத்துகிறார்கள், ஸஃப்பில் நெருக்கமாக இருக்கிறார்கள் எனக் கூறினார்கள். (முஸ்லிம்)
விளக்கம்: இவ்விரண்டு ஹதீதின் மூலம் முன் வரிசையில் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ள முடியும். ஆகவே முடிந்த அளவு முன்வரிசையில் தொழ அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
2. வரிசையில் நேராக நிற்க வேண்டும்
நபி(ஸல்) அவர்கள் தொழுகையின் பொழுது (தொழுகைக்காக ஸஃப் நிற்கும் போது) எங்களின் தோள்பட்டைகளில் தடவி விடுவார்கள். பிறகு கூறுவார்கள், நீங்கள் ஸஃப்பில் சீராகவும் நேராகவும் நில்லுங்கள். ஒருவருக்கொருவர் (முன்பின்) முரண்பாடாக நிற்க வேண்டாம். அவ்வாறு நீங்கள் நின்றால் உங்கள் உள்ளங்களும் வேறுபட்டுப் போகும். (ஸஃப்பில்) என்னையடுத்து அறிவிற் சிறந்தோர் நிற்கட்டும். பின்னர், அவர்களுக்கு அடுத்தவர்கள் நிற்கட்டும், பின்னர் அவர்களுக்கு அடுத்தவர்கள் நிற்கட்டும். (முஸ்லிம்)
உங்கள் ஸஃப்பை சீர்படுத்திக் கொள்ளுங்கள், நிச்சயமாக ஸஃப்பை சீர்ப்படுத்திக் கொள்வது தொழுகையை முழுமைப்படுத்தக்கூடிய விஷயங்களில் ஒன்றாகும் என நபி (ஸல்) கூறினார்கள்: (புகாரி, முஸ்லிம்)
புகாரியின் அறிவிப்பில்: ஸஃப்பை சீர் செய்வது தொழுகையை நிலைநாட்டும் விஷயங்களில் ஒன்றாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்களின் ஸஃப்புகளைச் சீராக்குங்கள்! நன்றாக நெருங்கி நில்லுங்கள், நிச்சயமாக நான் என் முதுகுக்கு பின்னால் உங்களைப் பார்க்கிறேன். (இது புகாரியின் வாசகமும், முஸ்லிமின் கருத்துமாகும்)
புகாரியின் மற்றொரு அறிவிப்பில்: (ஸஃப்பில் நிற்கும்பொழுது) எங்களில் ஒருவர் தம் தோள்பட்டையை அருகிலுள்ளவரின் தோள்பட்டையுடனும், தம் பாதத்தை அவரின் பாதத்துடனும் சேர்த்துக் கொள்வோம் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நீங்கள் உங்கள் ஸப்புகளைச் சீராக்கி கொள்ளூங்கள் இல்லையெனில் அல்லாஹுதஆலா உங்கள் முகங்களுக்கிடையில் (உங்களுக்கிடையில்) வேற்றுமையை ஏற்படுத்திவிடுவான் என நபி (ஸல்) கூறினார்கள்:. (புகாரி, முஸ்லிம்)
முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது: நாங்கள் புரிந்து கொண்டு சரியாக நிற்கிறோம் என்பதை பார்க்கும் வரை நபி (ஸல்) அவர்கள் அம்புகளை சீர்படுத்துவது போல் எங்கள் ஸஃப்புகளைச் சீர்படுத்துவார்கள். பின்பு ஒரு நாள் அவர்கள் தொழுகைக்காக வீட்டிலிருந்து வந்தார்கள். (தொழுகையை ஆரம்பிக்க) தக்பீர் சொல்ல நெருங்கிவிட்டார்கள். அப்பொழுது ஒருவர் ஸஃப்பை விட்டு தம் நெஞ்சை வெளிப்படுத்தி (ஸஃப்பை விட்டு சற்று முன்னால்) நிற்பதை அவர்கள் பார்த்துவிட்டார்கள். உடனே, அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் ஸஃப்புகளை சீராக்கிக் கொள்ளுங்கள் அவ்வாறு இல்லையெனில் அல்லாஹ் உங்களுக்கு மத்தியில் பிளவையும், வேறுபாட்டையும் ஏற்படுத்தி விடுவான் என எச்சரித்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் ஸஃப்பின் ஒரு பகுதியிலிருந்து மறு பகுதிக்குப் புகுந்து செல்வார்கள். எங்கள் நெஞ்சுகளையும் தோள்பட்டைகளையும் தடவி விடுவார்கள். அப்பொழுது கூறுவார்கள்: (ஸஃப்பில்) நீங்கள் வேறு படாதீர்கள் அவ்வாறு நீங்கள் வேறுபட்டால் உங்கள் உள்ளங்களும் வேறுபட்டு விடும். மேலும் அவர்கள் கூறுவார்கள், நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய மலக்குகளும் முந்திய ஸப்புகளில் உள்ளவர்கள் மீது ஸலவாத் கூறுகின்றனர். (அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்பதின் பொருள்: அல்லாஹ், அவர்கள் மீது தன் அருள்களைப் பொழிகிறான் என்பதாகும். மலக்குகள் ஸலவாத் கூறுகின்றார்கள் என்பதின் பொருள், மலக்குகள் அவர்களுக்காக துஆச் செய்கின்றனர் என்பதாகும்) (அபூதாவூது)
விளக்கம்: தொழுகையில் வரிசையில் நிற்கும் போது நெருக்கமாகவும் நேராகவும் நிற்க வேண்டும். நெருக்கமாக நிற்பதென்பது, நமது வலது இடது பக்கத்தில் உள்ளவர்களின் தோள்புயத்துடன் நமது தோள்புயமும் கால் பாதத்துடன் கால் பாதமும் சேர்ந்திருக்க வேண்டும். நேராக நிற்பதென்பது, நமது வலது இடது பக்கத்திலுள்ளவர்களின் கணுக்காலுடன் நமது கணுக்கால் சேர்ந்திருக்க வேண்டும். விரல் நுனிகளை வைத்து நேர் பார்க்கக்கூடாது. நமது காலை பக்கத்திலுள்ளவர்களின் காலுடன் சேர்க்கும்போது மிருதுவைக் கடைபிடிக்க வேண்டும். மற்றவர்களுக்கு நோவினை ஏற்படும் அளவிற்கு கடினத்தை கைவிட வேண்டும். பின்வரும் ஹதீது அதை தெளிவுபடுத்துகின்றது.
உங்கள் ஸஃப்புகளை நேராக நிலை நாட்டுங்கள். உங்கள் தோள் பட்டைகளுக்கு நேர் படுங்கள், இடைவெளிகளை நிரப்புங்கள். உங்கள் சகோதரர்களின் கரங்களுடன் மென்மையைக் கடைபிடியுங்கள். ஷைத்தானிற்காக இடைவெளியை விட்டு விடாதீர்கள். யார் ஸஃப்பை (நல்லமுறையில்) சேர்த்துக் கொள்கிறாரோ அவரை அல்லாஹ் சேர்த்துக் கொள்வான். யார் ஸஃப்பை துண்டிக்கிறாரோ அவரை அல்லாஹ் துண்டித்து விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூது)
இந்த ஹதீதில், தொழுகையில் வரிசையில் இடைவெளி விடுவதுபற்றி கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டும் இன்னும் இது விஷயத்தில் மக்கள் அறியாமையில்தான் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இதுபற்றி அறியாமையில் உள்ள மக்களுக்கு பக்கத்தில் தொழும் போது பல சிரமங்களையும் நாம் எதிர் நோக்கின்றோம், அவர்களின் கால் பாதத்துடன் நமது கால் பாதத்தை சேர்க்க முனையும் போது அவர்கள் ஏதோ அது ஒரு பாவகரமான செயல் போன்று நினைத்து, அவர்கள் நம்மை விட்டும் வெகு தூரம் நகர்ந்து விடுகின்றார்கள். அப்படிப்பட்டவர்கள், இச்சுன்னாவை நினைவில் வைத்து இனிமேலாவது இதை செயல் படுத்த முன்வர வேண்டும். யார் ஸஃப்பை (நல்லமுறையில்) சேர்த்துக் கொள்கிறாரோ அவரை அல்லாஹ் சேர்த்துக் கொள்வான். யார் ஸஃப்பை துண்டிக்கிறாரோ அவரை அல்லாஹ் துண்டித்து விடுவான் என்ற நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிகளையும் இப்படிப்பட்டவர்கள் ஞாபகம் வைத்து கொள்ளட்டும்.
3. வரிசையில் நெருக்கமாக நிற்க வேண்டும்
நீங்கள் உங்களின் வரிசைகளை நெருக்கமாகவும் சமீபமாகவும் ஆக்கிக் கொள்ளுங்கள், கழுத்துகளுக்கு நேராக நில்லுங்கள், என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன்மீது ஆணையாக, வரிசையின் இடைவெளிகளில் சிறிய கறுப்பு ஆட்டுக்குட்டியின் தோற்றத்தில் ஷைத்தான் நுழைகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)
விளக்கம்: வரிசையில் இடைவெளி விட்டு நின்றால் அங்கே ஷைத்தான் கருப்பு ஆட்டுகுட்டி உருவத்தில் நுழைந்து நமது உள்ளங்களில் பல எண்ணங்களை உண்டுபண்ணி நமது தொழுகைகளை பாழாக்கிவிடுவான், ஆகவே வரிசைகளில் இடைவெளி விடுவதை முற்றாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.
4. முதல் வரிசையை முழுமைபடுத்திய பின்புதான் அடுத்த வரிசையை ஆரம்பிக்க வேண்டும்
முதல் ஸஃப்பை பூர்த்தி செய்யுங்கள். பிறகு அடுத்த ஸஃப்பை பூர்த்தி செய்யுங்கள். ஸஃப்பில் குறை இருக்குமாயின் அது கடைசி ஸப்பாக இருக்கட்டும். (அபூதாவூது)
விளக்கம்: முன் உள்ள வரிசையில் இடம் இருக்கும் போது அடுத்த வரிசையை ஆரம்பிக்கக் கூடாது, முன்வரிசையை முழுமை படுத்திய பின்பே அடுத்த வரிசையை ஆரம்பிக்க வேண்டும். இன்று சில பள்ளிகளில், தொழுகை முடிந்துதும் பள்ளியை விட்டும் புறப்பட்டு விட வேண்டும் என்பதற்காக அல்லது மின்விசிறிக்குக் கீழ் நிற்க வேண்டும் அல்லது எயர் கண்டிஸனுக்கு நேராக நிற்க வேண்டும் என்பதற்காக அல்லது இதுபோன்ற பல காரணங்களுக்காக முன் வரிசையில் இடமிருந்தும் தன் சுயநலத்திற்கு ஏற்றவாறு ஏதாவது ஓர் இடத்திலிருந்து வரிசையை ஆரம்பிக்கின்றார்கள். இது முற்றிலும் சுன்னாவிற்கு மாற்றமான முறையும் முற்றிலும் தடுக்கப்பட வேண்டியவையுமாகும். இப்படி நடந்து கொள்பவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்.
5. இமாமின் வலது புறத்திலிருந்து வரிசையை ஆரம்பிக்க வேண்டும்
தொழுகையில் இமாமை நடுவில் நிற்கச் செய்யுங்கள். ஸஃப்புகளுக்கு இடையில் இடைவெளியை அடையுங்கள் என நபி(ஸல்) கூறினார்கள். (அபூதாவூது)
இமாமின் வலது புறத்திலிருந்து வரிசையை ஆரம்பிக்க வேண்டும்
ஒரு இரவு நபி(ஸல்) அவர்களுடன் சேர்ந்து இரவு தொழுகை தொழுவதற்காக அவர்களின் இடது பக்கம் எழுந்து நின்றேன். பின்பக்கமாக என் தலையை நபி (ஸல்) அவர்கள் பிடித்து அவர்களின் வலது பக்கத்திலே என்னை நிறுத்தினார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (திர்மிதி)
6. பெண்கள் நிற்கும் வரிசை
நானும் ஒரு அனாதையும் எங்களின் வீட்டிலே நபி(ஸல்) அவர்களுக்கு பின்னால் (இரவுத் தொழுகை) தொழுதோம், என் தாய் உம்மு சுலைம்(ரலி) அவர்கள் எங்களுக்கு பின் நின்றுதொழுதார்கள். (புகாரி)
விளக்கம்: மேல்கூறப்பட்ட ஹதீதுகளிலிருந்து பல சட்டங்களை நாம் விளங்கலாம், இருவர் ஜமாஅத்தாக தொழுதால் மஃமூமாக நிற்பவர் இமாமின் வலது பக்கத்தில் நிற்க வேண்டும். இரண்டாவது நபர் வந்து விட்டால் இவர் இமாமுக்கு பின்பக்கமாக சென்று அவ்விருவரும் இமாமுடைனய வலது இலது பக்கத்தில் நிற்க வேண்டும். அதன் பின் வருபவர்கள் வலது இடது பக்கமாக நிற்க வேண்டும். மஃமூம்கள் இருவராக இருந்து ஒருவர் ஆணாகவும் மற்றொருவர் பெண்ணாக இருந்தால், ஆண் இமாமின் வலது பக்கத்திலும் பெண் பின் வரிசையிலும் தனியாக நிற்க வேண்டும். அந்தப் பெண் தனது தாயாக, மகளாக, மனைவியாக இருந்தாலும் சரியே. பெண்களுக்கு சிறந்த வரிசை பின் வரிசையாகும். பின்வரும் ஹதீது அதை தெளிவு படுத்துகின்றது.
தொழுகையில் ஆண்களின் ஸஃப்புகளில் மிகச் சிறந்தது முதல் ஸஃப்பாகும். அந்த ஸஃப்புகளில் கெட்டது கடைசி ஸஃப்பாகும். பெண்களின் ஸஃப்புகளில் மிகச் சிறந்தது அவற்றில் கடைசி ஸஃப்பாகும். அவைகளில் கெட்டது ஆரம்ப ஸஃப்பாகும் என நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)
ஆகவே, தொழுகையில் வரிசையில் நிற்கும் விஷயத்தில் மேல் கூறப்பட்ட விஷயங்களை முழுமையாக பின்பற்ற அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானக!
நன்றி: சுவனப்பாதை மாதஇதழ்

புதன், அக்டோபர் 27, 2021

அபூதுஜானா (ரலி) அவர்கள் வாழ்வில்,

அபூதுஜானா (ரலி) அவர்கள் வாழ்வில் நடந்த அழகான சரித்திரம் 
இதில் அழகான
 சகோதரத்துவம்! உதவிகரம் வழங்குவது! இறைவனை அஞ்சுவது! போன்ற
படிப்பினைகள் இருக்கிறது

அதிகாலைத் தொழுகையை அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று கூட்டாகத் தொழுவதை வழமையாக் கொண்டவர் அபூதுஜானா (ரலி).

ஆயினும் அதில் சின்ன சிக்கல் என்னவென்றால் தொழுகை முடிந்த உடனேயே பள்ளிவாசலை விட்டு வேகமாக வெளியேறிவிடுவார்.

இதனை நபி (ஸல்) அவர்களும் கவனித்தார்கள். 

ஒருநாள் அவ்வாறு வெளியேறும்போது அபூதுஜானாவை நிறுத்தி நபிகளார் கேட்டார்கள்:
"அபூதுஜானா! உமக்கு அல்லாஹ்விடம் கேட்பதற்கு எதுவுமே இல்லையா?”

அபூதுஜானா (ரலி): "ஏன் இல்லை, அவனிடம் கேட்பதற்கு நிறைய இருக்கிறது அல்லாஹ்வின் தூதரே! ஒரு கண நேரம்கூட அவனுடைய உதவியின்றி என்னால் வாழ முடியாது."

நபிகளார்: "அவ்வாறெனில் தொழுகை முடித்து நாங்கள் வெளியேறும்போது எங்களுடன் ஒன்றாக வெளியேறலாமே. அல்லாஹ்விடம் உமது தேவைகளையும் கேட்கலாமே.”

அபூதுஜானா (ரலி): "அல்லாஹ்வின் தூதரே! காரணம் என்ன தெரியுமா? என்னுடைய அண்டை வீட்டுக்காரர் ஒரு யூதர். அவர் வீட்டு பேரீத்த மரத்தின் கிளைகள் என் வீட்டு முற்றத்தில் உள்ளது. இரவில் காற்றடித்து அம்மரத்தின் பழங்கள் என் வீட்டு  முற்றத்தில் விழுகின்றது. தொழுகை முடிந்தவுடன் பள்ளிவாசலைவிட்டு  நான் ஏன் வேகமாக வெளியேறுகிறேன் தெரியுமா? என் குழந்தைகள் தூக்கத்திலிருந்து எழுவதற்குள் அந்தப் பழங்களை எல்லாம் பொறுக்கி ஒன்று சேர்த்து அதன் உரிமையாளரிடம் கொடுத்துவிட வேண்டும் என்பதற்காகத்தான்!

இல்லையென்றால்.. பசியுடன் இருக்கும் என் குழந்தைகள் நான் செல்வதற்குள் எழுந்து அவற்றைப் பொறுக்கி சாப்பிட்டுவிடுவார்கள்.
இறைத் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஒருநாள் என் பிள்ளைகளில் ஒருவர் நான் செல்வதற்குள் ஒரு பேரீத்தம் பழத்தை எடுத்து சாப்பிடத் துவங்கிவிட்டது. வாயில் விரலை விட்டு அதனை வெளியே எடுத்து தூர வீசினேன் அவன் அழுதான் நான் கூறினேன்: மறுமையில் அல்லாஹ்வுக்கு முன்னால் உனது தந்தை திருடன் என்ற பட்டத்துடன் நிற்பது குறித்து உனக்கு வெட்கமாக இல்லையா?”

அது கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண் கலங்கினார்கள்.

அபூதுஜானா (ரலி) கூறிய இந்தச் செய்தியை அறிந்த அபூபக்கர் (ரலி), நேராக அந்த யூதனிடம் சென்று, அந்தப் பேரீத்த மரத்தை விலைக்கு வாங்கி அதனை அபூதுஜானா (ரலி) மற்றும் அவருடைய குழந்தைகளுக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

அபூபக்கர் (ரலி) அந்த மரத்தை விலைக்கு வாங்கியதன் உண்மையான காரணத்தை அறிந்த அந்த யூதர் என்ன செய்தார் தெரியுமா…?

தமது குடும்பத்தாரை அழைத்துக்கொண்டு வேகமாக நபிகளாரைச் சந்திக்க விரைந்தார். தானும் தமது குடும்பமும் இஸ்லாத்தில் நுழைவதாக அறிவித்தார்.

(அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!)

யூதருடைய பேரீத்தம் பழங்களை தமது பிள்ளைகள் சாப்பிட்டுவிடக் கூடாதே…அது ஹராம் அல்லவா என்று அபூதுஜானா (ரலி) அஞ்சினார். குழந்தையின் வாயில் விரலைவிட்டு சாப்பிட்ட பழத்தை வெளியே எடுத்து தூர வீசினார்.

அது அன்று...

ஆனால் இன்று… 

அடுத்தவர் பொருளை அபகரித்து உண்பதற்கோ அநியாயமாகப் பிடுங்குவதற்கோ ஒருசிலர் துளியும் வெட்கப்படுவதில்லை. அது ஹராம் என்ற எண்ணம்கூட அவர்களுக்கு இருப்பதில்லை.

நபித்தோழர்கள் கொண்டிருந்த ஆழமான இறைநம்பிக்கையின் காரணத்தால் அவர்களது நடத்தையும் செயல்பாடுகளுமே அழைப்புப் பணியின் ஆதாரமாகத் திகழ்ந்தது.

வியாழன், அக்டோபர் 21, 2021

வலிமார்கள் என்றால் யார்,

ஹழ்ரத் உவைஸுல் கர்னீ ரழியல்லாஹு அன்ஹு.🌷

அரேபியாவின் இஸ்லாமிய வசந்த வரலாற்றில் ஒருநாள் !

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாயிப் போர் முடிந்து திரும்பி வந்து கொண்டிருந்தார்கள்.
கூடவே அலீ ( ரலி ) அவர்களும் அண்ணலோடு அணிவகுத்து வந்து கொண்டிருந்தார்கள்.

அன்புக்குரிய மருமகனும் கண்மணி மகள் பாத்திமா(ரலி) அவர்களின் அருமைக் கணவருமான அலீ ( ரலி ) அவர்களை தனியே அழைத்துச் சென்ற பெருமானார் ஆன்மீக ரகசியங்கள் பலவற்றை அலீ (ரலி) அவர்களுக்கு எடுத்துச் சொன்னார்கள்.

அதைக் கண்ட உமர் ( ரலி ) அவர்கள் ...
" யா ரசூலல்லாஹ் ! தாங்கள் அலீ ( ரலி ) அவர்களுக்கு மட்டும் ரகசியமாக ஏதாவது  போதிக்கிறீர்களா ?" என்று கேட்டார்கள்.
" நான் ஒன்றும் போதிக்கவில்லை. 
அல்லாஹ்தான் போதித்தான்  " என்று பதிலுரைத்தார்கள் நபிகள் ( ஸல் ) அவர்கள்.
அதாவது ....
நானாக எதுவும் சொல்லவில்லை. அல்லாஹ்வின் நாட்டம் அலீ அவர்களுக்கு சில ஆன்மீக ரகசியங்களை சொல்ல வேண்டுமேன்பது. அவன் நாட்டப்படியே அது நிகழ்ந்தது என்பது அதன் விளக்கம்.

இப்படி அண்ணலாரிடமிருந்து ஆன்மீக ரகசியங்களை எல்லோரும் பெற்று விடவில்லை. அல்லாஹ் நாடியவர்களுக்கு மட்டுமே அது கிடைத்தது. அதனால்தான் ...
" நான் ஞானத்தின் பட்டணம். அலி அதன் தலைவாசல் " என்றார்கள் அண்ணல் நபிகளார் .

ஞானத்தின் வரிசை அலீ அவர்களிடமிருந்துதான் ஆரம்பமாகிறது.
அதனால்தான் அலீ அவர்கள் இம்மை வாழ்க்கையில் பற்றில்லாமல் வாழ்ந்தார்கள். எல்லோருக்கும் புரியாத பல மறை ஞானங்களை அறிந்திருந்த காரணத்தால் அபூபக்கர் ( ரலி ) அவர்களுக்கும் உமர் ( ரலி ) அவர்களுக்கும் ஆலோசனைக் கூறும் இடத்தில் அலீ (ரலி) இருந்தார்கள்.

ஒருமுறை ஹஜ்ஜை முடித்த கலீபா உமர்(ரலி) அவர்கள் , ஹஸ்ரத் அஸ்வத் கல்லை முத்தமிட்டார். முத்தமிட்ட பிறகு , " ஏ கல்லே ! நீ ஒரு சாதாரணக் கல்தான் . நபிகள் ( ஸல் ) அவர்கள் உன்னை முத்தமிட்டதால்தான் நானும் உன்னை முத்தமிடுகிறேன் " என்று சொன்னார்கள் .

பக்கத்தில் நின்று கொண்டிருந்த அலீ ( ரலி ) அவர்கள் , " உமர் அவர்களே... சற்று நிதானியுங்கள். இதை முத்தமிடுவதால் நன்மையையும் முத்தமிடாததால் இழப்பையும் ஒருவருக்கு வழங்குகிறது " என்று சுட்டிக் காட்டினார்கள்.
அலீ (ரலி) அவர்கள் சொன்னதைக் கேட்டுத் திகைத்த உமர்(ரலி) ,      "கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் " என்றார்கள்.

" ஆன்ம உலகில் அல்லாஹ்விடம் நாம் செய்த சத்தியப் பிரமாணம் இந்தக் கல்லின் வாயினுள் வைக்கப்பட்டுள்ளது. அதனைத்தான் நாம் முத்தமிடுகிறோம். கல்லையல்ல " என்று என்று அலீ(ரலி) அவர்கள் விளக்கம் சொன்னார்கள் .
அதைக்கேட்டு தனது தவறுக்கு மனம் வருந்திய உமர் (ரலி) அவர்கள் , " அலீ இல்லாதிருந்தால் உமர் அழிந்திருப்பான் " என்று சொன்னார்கள்.

நபிகள் ( ஸல் ) அவர்கள் காலத்திலேயே வாழ்ந்த ஒரு முக்கியமான இறைநேசச் செல்வர் உவைசுல் கர்னி(ரலி) அவர்கள்.
கர்னி என்ற இடத்தைச் சேர்ந்த இவர்கள் மிகவும் ஏழை.
ஒட்டகங்களை மேய்த்து அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு தனது தாயாரையும்  பராமரித்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

மதீனாவிலிருந்து வேகுதூரத்தில்  இருந்தது கர்னி.
நபிகளாரை சந்திப்பதற்காக தங்கள் தாயாரிடம் அனுமதி பெற்று உவைஸ் (ரலி) மதீனா வந்தார்கள்.
இவர்கள் வந்த நேரத்தில் நபிகளார் வெளியே போயிருந்ததால் அவர்களை சந்திக்க முடியவில்லை .
வீட்டிலிருந்தவர்கள் தாங்கள் யாரென்று கேட்ட பொது 
" நான் உவைஸ்.  கர்னியிலிருந்து வந்திருக்கிறேன். பெருமானார் வந்ததும் சொல்லி விடுங்கள் " என்று கூறிவிட்டு உடனேயே ஊருக்கு போய் விட்டார்கள்.

நபிகளார் வீட்டுக்கு வந்தவுடன் உவைசுல் கர்னி (ரலி) அவர்கள் தங்களை சந்திக்க வந்த செய்தியை  அறிந்தார்கள்.
நபித்தோழர்கள் ," அவர் யார்?" என்று கேட்டபோது ...

" உவைஸ் ஒரு இறை நேசர். அவரை இந்த உலகத்தில் நான் பார்க்காததுபோல் மறுமையிலும் நான் பார்க்க மாட்டேன். "
என்றார்கள்.
" நான் பார்ப்பேனா " என்று கேட்டார் அபூபக்கர்(ரலி).
" உங்களாலும் பார்க்க முடியாது . ஆனால் அவரை உமரும் அலீயும் பார்ப்பார்கள்." என்றார்கள்.
" அப்போது நாங்கள் அவரிடம் என்ன கேட்க வேண்டும் " என்று கேட்டார் உமர்(ரலி).
" முஸ்லிம்களுக்காக அல்லாஹ்விடம் துஆ கேட்கச் சொல்லுங்கள் . அவருடைய துஆவை ஏற்று அல்லாஹ்...
ராபியா , முளரு ஆகிய இரு கூட்டத்தாரின் ஆடுகளின் உரோமத்தின் எண்ணிக்கை அளவுள்ள முஸ்லிம்களின் பாவங்களை மன்னிப்பான் " என்று பெருமானார் முன்னறிவிப்பு செய்தார்கள்.

உவைஸ்(ரலி) அவர்களை சந்திக்கும்போது தங்களுடைய ஸலாத்தினை அவருக்கு தெரிவிக்கும்படி கூறி அவரிடம் கொடுப்பதற்கு  தங்களின் மேலாடை ஒன்றையும் வழங்கினார்கள். உவைஸ்(ரலி) அவர்களின் உடல் அடையாளங்களையும் கூறினார்கள்.

காலங்கள் கடந்தது.
பெருமானாரின் வபாத்திற்கு பிறகு அபூபக்கர்(ரலி) கலீபாவானார்கள்.
அபூபக்கர்(ரலி) அவர்கள் மரணித்த பிறகு உமர்(ரலி) அவர்கள் கலீபாவானார்கள்.
உவைசுல் கர்னி(ரலி)அவர்களை சந்திக்கும் ஆசை உமர்(ரலி) அவர்களுக்கும் அலீ(ரலி) அவர்களுக்கும் ஏற்பட்டது.

ஒரு நாள் இருவரும் உவைசுல் கர்னி(ரலி) அவர்களை சந்திப்பதற்காக கர்னிக்கு புறப்பட்டார்கள். வெகுதூரம் பயணித்து கர்னியை வந்து சேர்ந்தார்கள். பலரிடம் விசாரித்தபோதும் அப்படி ஒருவரைப்பற்றி தெரியவில்லை.

கடைசியில் ஒருவர் சொன்னார் ..."  உவைஸ் என்ற பெயரில் ஒருவர் இருக்கிறார். அவர் என் பெரிய தந்தை அமரின் மகன்தான். நீங்கள் தேடி வந்து பார்க்கும் அளவுக்கு அவரொன்றும் பெரிய ஆளில்லை. அவர் மிகவும் ஏழை. ஒட்டகம் மேய்ப்பவர். தன் தாயை பராமரிக்கிறார். இரவில் ஒரு வேளை மட்டும் காய்ந்த ரொட்டித் துண்டுகளை உண்ணுகிறார். யாருடனும் பேசுவதில்லை. மக்கள் சிரித்தால்  அவர் அழுவார். அவர்கள் அழுதால் இவர் சிரிப்பார் " என்றார்.

தாங்கள் தேடி வந்த உவைஸ் அவர்தான் என்பதை உமர்(ரலி) அவர்களும் அலீ(ரலி) அவர்களும் புரிந்து கொண்டு அவர் இருக்கும் இடத்தைத் தேடி புறப்பட்டார்கள்.

ஊருக்கு வெகு தொலைவில் ஒருவர் ஒட்டகங்களை மேய விட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.
அவரின் அருகில் சென்று சலாம் சொல்லி தங்களை அறிமுகம் செய்து கொண்டபின் அவரின் பெயரைக் கேட்டார்கள்.
அவர் உவைஸ் என்றார். அவரது உடல் அடையாளங்கள் பெருமானார் சொன்னதுபோல் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டு அப்படியே அவரை ஆரத்தழுவிக் கொண்ட உமர்(ரலி) அவர்கள் ,
" நபிகள் பெருமான் தங்களுக்கு சலாம் சொன்னார்கள்.

அவர்களின் இந்த மேலாடையை உங்களுக்குத் தரச் சொன்னார்கள். மேலும் ... முஸ்லிம்களுக்காக அல்லாஹ்விடம் தாங்கள் பிரார்த்திக்க வேண்டும் என்றும் சொன்னார்கள் " என்றார்கள்.

அதைக் கேட்டு மகிழ்ந்த உவைசுல் கர்னி(ரலி) அவர்கள் சற்று தொலைவுக்குச் சென்று இறைவனை பணிந்து முஸ்லிம்களின் பாவங்களை மன்னிக்க வேண்டுமென அல்லாஹ்விடம் துஆ கேட்டார்கள்.
மீண்டும் மீண்டும் பணிவதும் அழுவதும் துஆ செய்வதுமாக இருந்தார்கள்.

வெகுநேரம் ஆன பின்பும் சுஜூது நிலையிலேயே கிடந்த உவைசுல் கர்னி(ரலி) அவர்களுக்கு என்ன ஆயிற்றோ என்று பயந்து போன உமர்(ரலி)அவர்கள் அவரது அருகில் சென்று அவரை உசுப்பினார்கள்.

தலையை உயர்த்திய உவைஸ்(ரலி) அவர்கள், " அமீருல் மூமினீன் ... அவசரப்பட்டு விட்டீர்களே ... இன்னும் சற்று பொறுத்திருந்தால் உலக முடிவுநாள் வரை உலகில் தோன்றும் முஸ்லிம்களின் பாவங்களை எல்லாம் அல்லாஹ் மன்னித்திருப்பானே " என்று வருத்தப்பட்டார்கள்.

" இப்போது எவ்வளவு முஸ்லிம்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்தான் ?" என்று அலீ (ரலி) அவர்களும் உமர்(ரலி) அவர்களும் கேட்க ...

" ராபியா , முளரு ஆகிய இரு கூட்டத்தாரின் ஆடுகளின் ரோமங்களின் எண்ணிக்கை அளவுள்ள முஸ்லிம்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்தான் " என்றார்கள் உவைஸ் (ரலி).

அதைக் கேட்டதும் உமர்(ரலி)அவர்களும் அலீ(ரலி) அவர்களும் அப்படியே மெய் சிலிர்த்து விட்டார்கள்.
ரசூலுல்லாஹ் சொன்ன அதே எண்ணிக்கையளவுள்ள முஸ்லிம்கள்.

தாங்கள் சந்தித்தது ஒரு சாதாரண மனிதரையல்ல என்று உணர்ந்த உமர்(ரலி) அவர்கள் தங்களுக்காக துஆ செய்யும்படி மிகவும் வற்புறுத்தி கேட்டுக் கொண்டதின் பேரில் அவர்களுக்காகவும் உவைஸ்(ரலி) துஆ செய்தார்.

கலீபா உமர் (ரலி)அவர்கள் என்ன உதவி வேண்டுமானாலும் செய்வதாகக் கூறியும் எதையும் ஏற்க மறுத்து விட்டார் உவைசுல்  கர்னி(ரலி).

பிறகு உமர்(ரலி) கேட்ட சில கேள்விகளுக்கு ஞான விளக்கங்கள் வழங்கி விட்டு " உங்கள் வழியே நீங்கள் செல்லுங்கள் என் வழியே நான் செல்கிறேன் " என்று கூறி விட்டு சென்று விட்டார் உவைஸ்(ரலி).

கலீபா உமர்(ரலி) அலீ (ரலி) அவர்களும் உவைஸ் (ரலி) அவர்களை சந்தித்த செய்தி ஊருக்குள் பரவ அவரின் அந்தஸ்து ஒரே நொடியில் உயர்ந்தது. அவரை சந்திக்க மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதையறிந்து ஒட்டகங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் வழங்கிவிட்டு கண்காணாத இடத்திற்கு சென்று விட்டார் உவைஸ்(ரலி).
அற்புதங்கள் நிறைந்த இவர்களின் வாழ்க்கை ...
உமர் (ரலி) அவர்களுக்காக அஜர்பைஜானில் நடந்த போரில் கலந்து கொண்டு வீர மரணம் அடைந்ததோடு முற்றுப் பெறுகிறது. அவர்களின் உடலை அடக்கம் செய்துவிட்டு பிறகு வந்து பார்க்கும் போது அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தைக் காண முடியவில்லை.

இது ஒரு உண்மை வரலாறு.
இங்கே சொல்லப்பட்டது உவைசுல் கர்னி(ரலி) அவர்களின் வாழ்க்கை என்றாலும் அதன் உள்ளே புதைந்து கிடக்கும் ஞான ரகசியங்கள் ஏராளம்.

" ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா " என்று திருவை அப்துர் ரஹ்மான் எழுதி நாகூர் ஹனிபா அண்ணன் பாடியது போல் ...
ஞானத்தின் பட்டணம் நாயகம் அவர்கள்தான்.
அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட  ஞானத்தின் தலைவாசல்  அலீ அவர்கள்.
இறைநேசச் செல்வர்  உவைசுல்  கர்னி அவர்கள் .

சரி... இந்த கட்டுரைக்கும் இந்த சம்பவங்களுக்கும் என்ன சம்பந்தம் ?
... இருக்கிறது. முக்கியமான சம்பந்தம் இருக்கிறது.

முதலில் ... பெரும்பாலானவர்கள் ஹஜ்ருல் அஸ்வத் கல்லை உமர் (ரலி) அவர்கள் முத்தமிட்ட சம்பவத்தின் போது அவர்கள் ,  " ஏ கல்லே ! நீ ஒரு சாதாரணக் கல்தான் . நபிகள் ( ஸல் ) அவர்கள் உன்னை முத்தமிட்டதால்தான் நானும் உன்னை முத்தமிடுகிறேன் " என்று சொன்னதை மட்டும்தான்  சொல்வார்கள் .
அதற்கு அலீ ( ரலி ) அவர்கள் சொன்ன விளக்கத்தை சொல்ல மாட்டார்கள். உமர் (ரலி) அவர்களுக்கு தெரியாத அந்த ஞான ரகசியம் அலீ ( ரலி ) அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது என்பது ஒரு முக்கியமான விஷயம். உமர் ( ரலி ) அவர்கள் கலீபாவாக இருந்தாலும் ஆன்மீக படித்தரத்தில் அலீ(ரலி) அவர்களே முதன்மையாக இருந்தார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

அதுமட்டுமல்ல...
" அலீ இல்லைஎன்றால் உமர் அழிந்திருப்பான் " என்று உமர்(ரலி) அவர்கள் சொன்னது சாதாரண விஷயமல்ல.
ஆக்கவும் அழிக்கவும் ஆற்றலுள்ளவன் அல்லாஹ் எனும்போது அலீ(ரலி) அவர்களால் உமர்(ரலி) அவர்களை அழிவிலிருந்து எப்படிக் காப்பாற்ற முடியும் ?
எல்லாம் அல்லாஹ்வின் செயல் என்பது நம்மை விட உயர்ந்த ஈமானின் அந்தஸ்திலிருந்த உமர்(ரலி) அவர்களுக்கு தெரியாதா ?
தெரிந்திருந்தும் அவர் அப்படிச் சொல்வாரா ?
அப்படிச் சொன்னாரென்றால் ....
" அலீயைக் கொண்டு அல்லாஹ் தன்னைக் காப்பாற்றினான் " என்று அதற்கு அர்த்தம்.

உவைசுல் கர்னி(ரலி) அவர்களைப் பற்றி நபிகளார் முன்னறிவுப்பு செய்து அவரிடம் துஆ செய்யும்படியும் சொன்னார்கள்.
நபிகளாரைவிட உவைசுல் கர்னி(ரலி) உயர்ந்த அந்தஸ்துள்ளவரா ?

பெருமானார் அவர்கள் அல்லாஹ்வின் தூதர்.
அல்லாஹ்வின் ஹபீப். தோழர்.
பெருமானார் துஆ செய்தால் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டானா ?
உவைசுல் கர்னி(ரலி) துஆ செய்ய வேண்டுமா ?
அதுவும் அவரிடம் துஆ செய்யும்படி நபிகளாரே சிபாரிசு செய்ய வேண்டுமா ?
இதெல்லாம் நமக்கு ஆச்சரியமாக இல்லையா ?

இதில்தான் ஆன்மீக ஞானம் ஒளிந்திருக்கிறது.
நபிகளின் காலத்திலேயே அல்லாஹ் இறைநேசர்களின் சிறப்பை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் 
உவைசுல் கர்னி (ரலி) அவர்களைப் பற்றி நபிகளைக் கொண்டே அறிவிக்கச் செய்தான்.
பெருமானார் சொன்னதுபோலவே ராபியா , முளரு கூட்டத்தாரின் ஆடுகளின் ரோமங்களின் எண்ணிக்கை அளவுள்ள 
முஸ்லிம்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான் என்று உவைசுல் கர்னி(ரலி) அவர்கள் சொன்னார்கள்.
அது எப்படி சாத்தியம் ?
அல்லாஹ் மன்னித்த விஷயம் உவைஸ் (ரலி) அவர்களுக்கு எப்படித் தெரியும் ?
அல்லாஹ் வஹி அறிவித்தானா ?
வஹி அறிவிக்கவில்லை. வஹி அறிவிப்பது நபிகளின் காலத்தோடு முடிந்து போய் விட்டது.
அசரீரி வந்ததா ?
அதுவும் இல்லை.
பிறகு எப்படி அல்லாஹ் மன்னித்தான் என்று உவைசுல் கர்னி(ரலி) அவர்களுக்கு சொல்ல முடிந்தது ?
அதுவும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் கலீபாவிடமும் அண்ணலாரின் மருமகனிடமும் !
உவைசுல் கர்னி (ரலி) சொன்னதை எந்த சந்தேகமும் இல்லாமல் அப்படியே நம்பினார்களே உமர்(ரலி) அவர்களும் அலீ (ரலி) அவர்களும் . எப்படி ?
அதுதான் நபிகள் கற்றுக் கொடுத்த பாடம்.

இல்ஹாம் எனும் உதிப்பை உள்ளத்தில் ஏற்படுத்துவதன்  மூலம் தான் நாடிய  இறைநேசர்களுக்கு அல்லாஹ் சில விஷயங்களை அறியச் செய்கிறான்.
ஒரு இறைநேசர் இறைவனிடம் துஆ கேட்டால் அல்லாஹ் அதை ஏற்றுக் கொள்வான்.
அவர் கேட்கும் உதவியைக் கொடுப்பான்.
அவருக்கு மட்டுமல்ல... அவர் யாருக்கெல்லாம் கேட்கிறாரோ அவர்களுக்கெல்லாம் கொடுப்பான் 
அப்படிக் கொடுப்பதை அந்த இறை நேசர்களுக்கு அவன் அறிவித்துக் கொடுக்கவும் செய்வான்.
என்பதையே உவைசுல் கர்னி(ரலி) அவர்களின் வரலாறு நமக்குக் கற்றுத் தருகிறது.

வலிமார்கள் உண்டு என்பதையும் 
அல்லாஹ்  அந்த வலிமார்களுக்கு உதவி செய்கிறான் என்பதையும் 
அந்த வலிமார்கள் யாருக்கெல்லாம் உதவி கேட்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் 
அல்லாஹ் நாடினால் உதவி செய்வான் என்பதையும் 
இந்த சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன....

பிரபல்யமான பதிவுகள்