நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வெள்ளி, ஜூன் 30, 2023

பொது சிவில் சட்டம்,

பொது சிவில் சட்டம்
 __________________________




முன்னுரை :
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَّلَا مُؤْمِنَةٍ اِذَا قَضَى اللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَمْرًا اَنْ يَّكُوْنَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ اَمْرِهِمْ  وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ ضَلَّ ضَلٰلًا مُّبِيْنًا‏

மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.(அல்குர்ஆன் : 33:36)

وَمَنْ يَّبْتَغِ غَيْرَ الْاِسْلَامِ دِيْنًا فَلَنْ يُّقْبَلَ مِنْهُ‌  وَهُوَ فِى الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِيْنَ‏

இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.(அல்குர்ஆன் : 3:85)

அல்லாஹ்வின் மார்க்கம் இஸ்லாம்.
அல்லாஹுத்தஆலா அகில உலக மக்கள் மகிழ்ச்சிகரமாக வாழ இஸ்லாம் எனும் நெறிமுறையை வகுத்துத்கொடுத்திருக்கிறான். அதேசமயம் அல்லாஹுத்தஆலா எவரையும் இஸ்லாத்தை ஏற்கும் படி நிர்பந்திக்கவில்லை.

குர்ஆன் கூறும் தெளிவான இரண்டு செய்திகள்.
1 )இம்மை மறுமை இரண்டு வாழ்விற்குமான சிறந்த வாழ்க்கை நெறி இஸ்லாம் மட்டும்தான்.

اِنَّ الدِّيْنَ عِنْدَ اللّٰهِ الْاِسْلَامُ 

நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; (அல்குர்ஆன் : 3:19)

2)மனிதர்களெல்லாம் இஸ்லாத்தை மட்டும் தான் ஏற்க வேண்டுமென்ற எந்த நிர்பந்தமும் இல்லை.

لَاۤ اِكْرَاهَ فِى الدِّيْنِ‌ۙ  

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; (அல்குர்ஆன் : 2:256)

Uniform civil code.
உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடாக திகழக்கூடிய இந்தியாவை தற்பொழுது ஆளும் ஒன்றிய அரசு "Uniform Civil Code" UCC என்கிற  பொது சிவில் சட்டத்தை வருகிற நாடாளுமன்றத் தேர்தல் வருவதற்குள்ளாக இந்திய சட்ட ஆணையத்தின் மூலம் பொதுமக்களிடமிருந்தும்,பதிவு செய்யப்பட்ட மத அமைப்புகளிடமிருந்தும் கருத்து கேட்டு , வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள்ளாக இதனை அமுல் படுத்தி,தனக்கு சாதகமாக்கிக் கொள்ள துரித கதியில் இக்கருத்துகேட்பு நடத்தப்படுகிறது.

பொது சிவில் சட்டம், சிறுபான்மையினராக வாழும் இஸ்லாமியர்,கிருஸ்துவர் ஆகியோர்களுக்கு மட்டும் எதிரான சட்டமல்ல மாறாக இந்தியாவில் வாழும் பல்வேறு மொழிபேசுவோர்,பல்வேறு இனத்தவர்,பிற்படுத்தப்பட்டோர் என அனைவருக்கும் எதிரான சட்டம் என்று சட்ட வல்லுனர்களும், நடுநிலையாளர்களும் எச்சரிக்கின்றனர்.

பொது சிவில் சட்டம்"Uniform Civil Code" UCC என்றால் என்ன?
இந்திய அரசியலமைப்பு சாசன சட்டம் இரண்டு வகைப்படும்.

1)Criminal law குற்றவியல் சட்டம். (எ.க)கொலை,கொள்ளை,திருட்டு இவற்றுக்கான தண்டனை சட்டம்

2)civil law உரிமை சம்பந்தமான சட்டம்.

(எ.க)வியாபாரம்,கடன், வாடகை இவற்றின் லாப நஷ்டத்தில் அரசாங்கம் தலையிட முடியாது.

Criminal law குற்றவியல் சட்டம்.civil law உரிமை சம்பந்தமான சட்டம்.இந்த இரண்டு சட்டங்களுக்கும் வித்தியாசம் உண்டு

Criminal law குற்றவியல் சட்டத்தை பொறுத்தவரை பாதிக்கப்பட்டவர் புகார் கொடுத்தாலும்,கொடுக்க விட்டாலும் அரசாங்கம் அதில் தலையிடும்.

civil law உரிமை சம்பந்தமான சட்டத்தை பொறுத்தவரை பாதிக்கப்பட்டவன் வழக்கு தொடுக்காத வரை அரசாங்கம் தலையிட முடியாது.வழக்குத் தொடுத்தால் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

இந்த இரண்டு சட்டங்களும் இந்திய அரசியலமைப்பு சாசன சட்டத்தில் உள்ளது.

இந்த இரண்டு சட்டங்களில் civil law உரிமை சம்பந்தமான சட்டத்தில் மட்டும் மதங்களைப் பொறுத்து சலுகைகள் வழங்கப்படுகிறது(சில சட்டங்களில் மட்டும்.எல்லா சட்டங்களிலும் அல்ல)

அவரவர் பின்பற்றும் மதத்தின் அடிப்படையில் அரசாங்கத்தால் சில சட்டங்களில் தனி உரிமை,தனி சலுகை வழங்கப்படுகிறது.

அதன்படி இஸ்லாமியர்களுக்கு ஐந்து சட்டங்களில்  (civil law)தனி உரிமை,சலுகை உள்ளது.

1)திருமணம் :யாரை திருமணம் செய்வது,எந்த முறையில் திருமணம் செய்வது என்ற உரிமை

2)திருமணம் முறிவு,தலாக் உரிமை

3)குலா என்கிற மனைவி பிரிவை வேண்டும் உரிமை

4)வாரிசு உரிமை,சொத்துரிமை

5)வக்ஃப் உரிமை,வக்ஃப் சொத்தை பயன்படுத்தும் உரிமை 

இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள்,ஏதோ இந்தியாவிலேயே இஸ்லாமியர்களுக்கு மாத்திரமே தனிச்சட்டம் இருப்பது போல காட்டி இஸ்லாமியர்களின் மீது வெறுப்பை தூண்டி விட பார்க்கின்றனர்.

civil law தனிச்சட்டம் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல,பெரும்பான்மை இந்துக்களுக்கும் தனிச்சட்டம்,தனி சலுகைகள் உண்டு.

இந்துக்களுக்குள்ள தனிச்சட்டம்.
1)கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தால் வருமான வரி விளக்கு உண்டு(இந்த சலுகை சிறுபான்மை இஸ்லாமியர்,கிறிஸ்தவர் இவர்களுக்கு கிடையாது)

2)வளர்ப்பு பிள்ளையை, சொந்தப் பிள்ளையாக ஆக்கிக் கொள்ளலாம் சொத்தில் அவர்களுக்கு பங்கு உண்டு.

3)நிர்வாணமாக காட்சி தருதல்;இந்து ஜைன மதத்தில் மத உரிமைகளில் சாமியார்களுக்கு நிர்வாணமாக இருக்க சலுகை உள்ளது.

சீக்கியர்களுக்கும் civil law சிவிலில் தனி உரிமைகள் உண்டு.
1)குறுவாள் வைத்துக் கொள்ளும் உரிமை(பயங்கர ஆயுதம் வைத்துக்கொள்வது சட்டப்படி குற்றம் ஆனால் சீக்கியர்கள்  குறுவாள் வைத்துக்கொள்ள தனி உரிமை உள்ளது)

2)தாடி வைத்துக் கொள்வது (இந்திய ராணுவத்தில் முதல் நிபந்தனை தாடியை மழித்து Clean Shave இருக்க வேண்டும் ஆனால் சீக்கியர்களுக்கு அதில் விதிவிலக்கு உள்ளது)

இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல இந்துக்கள், ஜைனர்கள்,சீக்கியர்கள்,கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் civil law சிவிலில் தனிச்சட்டம் தனி உரிமை  வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்று பொது சிவில் சட்டத்தைப் பற்றி பேசுவோர் இஸ்லாமியர்களுக்கு மட்டும் தனி சிறப்பு சட்டம் உள்ளது என்ற தோற்றத்தை கொண்டுவர பார்க்கிறார்கள்.

முஸ்லிம்களுக்கு எல்லா விஷயங்களிலும், சட்டம் தனி சலுகைகளை காட்டுவதாக பொதுமக்களிடம் ஒரு சித்தரிப்பை காட்டுகிறார்கள். உண்மை அதுவல்ல என்பதை நம்மை சுற்றிலும் வாழும் பொதுமக்களிடம் புரிய வைக்க வேண்டும்.

திருமண முறை, சொத்துப் பங்கீடு, வழிபாடு, வக்பு சொத்துக்கள் என இந்த நான்கில் மட்டுமே இந்த சலுகைகள்  முஸ்லிம்களுக்கு தரப்பட்டுள்ளது.மற்ற அனைத்திற்கும் எல்லோருக்குமான பொது சட்டமே முஸ்லிம்களுக்கும் பொருந்துகிறது.

ஒரு கொலை குற்றத்துக்கு அனைவருக்கும் ஒரே விதமான வழக்கு தான் பதிவு செய்யப்படுகிறது. ஒரே வகையான தண்டனைத்தான் தரப்படுகிறது.

போக்குவரத்து விதிகளை மீறினால் அன்பழகனுக்கும், ஹஸனுக்கும், ஆண்டணிக்கும் ஒரே தண்டனைதான் விதிக்கப்படுகிறது.இந்த உண்மைகளை பொது மக்களுக்கு விளக்க வேண்டும்.

சிறுபான்மையினருக்கு என்று சில மதம் சார்ந்த விஷயங்களில் தனி சட்டங்கள்  பல நாடுகளில் உள்ளது.பாகிஸ்தானிலும் பங்ளாதேஷிலும் இந்துக்களுக்கும், கிருத்தவர்களுக்கும் இப்படி உள்ளது.நேபாளத்தில் முஸ்லிம்களுக்கும், கிரித்தவர்களுக்கும் உள்ளது.

பெளத்த நாடுகளான மியான்மார் மற்றும் இலங்கையிலும் பிற சிறுபான்மை மதத்தினருக்கு தனி சட்டங்கள் உள்ளது.இந்த உண்மைகளை மக்களுக்கு விளக்க வேண்டும்.

நமது நாட்டில் வட நாட்டு இந்துக்களுக்கும், தென்னாட்டு  இந்துக்களுக்கும் திருமண முறைகளில் மாறுபாடு உண்டு.வட கிழக்கில் வாழும் கிருத்தவர்களுக்கும், கோவாவில் வாழும் கிருத்தவர்களுக்கும் திருமண முறைகளில் மாறுபாடுகள் உள்ளது.சீக்கிய சமூகத்திலும் இப்படி மாறுபாடுகள் உண்டு.

இப்படியுள்ள முரண்பாடுகளை- சமூக கொள்கைகளை ஒரே சட்டத்தின்படி மாற்ற நினைப்பது தவறானது மட்டுமல்ல; சாத்தியமற்றதும் ஆகும்.

ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் Criminal law குற்றவியல் சட்டம் இதில் இந்தியாவில் வாழும் எந்த மதத்தவருக்கும் சலுகை கிடையாது இந்தியா முழுக்க ஒரே சட்டம் தான் ஆனால் இந்த சட்டமே ஒரே முறையில் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா?என்றால் இல்லை என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம்.

இந்த Criminal law குற்றவியல் சட்டத்திலே பல்வேறு மாறுபாடுகள்,திருத்தங்கள் செய்யப்படுகின்றன.இதுவரை பொதுவான ஒரே நிலைக்கு வர முடியவில்லை.

(எ.க)1)விபச்சாரத் தொழில்-விபச்சார விடுதி வைப்பது தமிழ்நாட்டில் தடுக்கப்பட்ட குற்ற செயல்.

ஆனால் மும்பையில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் விபச்சாரத் தொழில்-விபச்சார விடுதி குற்ற செயல் அல்ல

2)மதுபானம் குடிப்பது -மதுக்கடை நடத்துவது-விற்பனை செய்வது-சாலையில் குடித்து திரிவது சில மாநிலங்களில் குற்றம் அல்ல ஆனால் வேறு சில மாநிலங்களில் குற்றகுமாகும்.

3)ஒரு பெண் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக ஆடுவது பொது இடங்களில் தடை ஆனால் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பெண்கள் நிர்வாணமாக நடனம் ஆடலாம் தடையில்லை 

5)சில மாநிலங்களில் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவோர் ஹெல்மெட் அணிவது கட்டாயம்.கார் ஓட்டும்போது சீட் பெல்ட் போடுவது கட்டாயம்.தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் குற்ற நடவடிக்கை அவர் மீது பாயும்.

இதுப்போன்ற பல உதாரணங்களை கூறலாம்.

இப்படி Criminal law குற்றவியல் சட்டத்திலேயே ஒரு பொது நிலைக்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டுவர முடியாத போது,"பொது சிவில் சட்டம்" பற்றி பேசுவது தேர்தலுக்கு தேர்தல் பேசும் வேடிக்கையான செய்தியாக தான் பார்க்க தோன்றுகிறது.

இஸ்லாமிய சமூகம் கொஞ்சம் விட்டுக் கொடுத்து இந்த ஐந்து விஷயங்களில் தேசிய நீரோட்டத்தில் கலந்தால் என்ன?ஒரே நாடு ஒரே தேசம் அதுபோல் ஒரே சட்டம் என்ற ஒற்றுமைக்கு வரலாமே?ஏன் இந்திய முஸ்லிம்கள் ஒரு பாரபட்சமான நிலையை கையாள வேண்டும் என்ற ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது.

நாம் கேட்பது என்னவென்றால் திருமணம்,தலாக்,குலா, வாரிசுரிமை,வக்ஃப் இந்த ஐந்து சட்டங்களும் இஸ்லாமியர்கள் தங்களுக்கு மத்தியில் செய்து கொள்ளும் விஷயங்களாகும் இதனால் நாட்டிற்கும்,நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும்,பிற சமூகத்திற்கும் என்ன பாதிப்பு ஏற்பட்டு விடப்போகிறது? 

இன்னும் சொல்லப்போனால் அவரவரின் மத நெறிப்படி வாழ்வது இந்திய ஜனநாயகம் அனைவருக்கும் வழங்கி உள்ள தார்மீக உரிமையாகும்.

இது இன்று,நேற்று அல்ல இந்தியாவில் கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களுக்கு மேலாக நடைமுறையில் உள்ள ஒன்றாகும்.

இந்தியாவில் 800 வருடங்கள் ஆட்சி செய்த இஸ்லாமிய முகலாய மன்னர்கள்,இங்குள்ள இந்துக்களுக்கு அவர்களின் மதம் முறைப்படி வாழ முழு சுதந்திரம் அளித்தார்கள்.

முகலாயர்களுக்கு பிறகு கிறிஸ்துவ ஆங்கிலேயே 200 வருட அவர்களின் ஆட்சியில் இந்துக்கள்,முஸ்லிம்கள் அவரவரின் மத முறைப்படி வாழ தனி சிவில் சட்ட உரிமை வழங்கினார்கள்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் வந்த ஆட்சியாளர்கள் தனி சிவில் சட்டம் இருக்க எந்தத் தடையும் போடவில்லை.ஆனால் இப்போதுள்ள ஒன்றிய அரசு பொது சிவில் சட்டத்தை புகுத்த நினைப்பது,நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலே அன்றி வேறில்லை.

இது ஒருமைப்பாட்டை வேரோடு அறுக்கும் செயல் என்று சகோதர சமயத்தவர்களே பேசுகிறார்கள் என்பது நாளேடுகளிலும்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் காண முடிகிறது.

அவர்களின் இன்னொரு வாதம்;இந்திய அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டதை தானே கொண்டுவர முயற்சிக்கின்றோம்?  (அரசியல் சாசனத்தில் சட்டத்தின் 44வது பிரிவில் பொது சிவில் சட்டம் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது)

பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக இவர்கள் சொல்வது இது நமது அரசியல் சட்டத்தின் 44 வது பிரிவில் உள்ளது என்பதுதான்.

இதற்கான பதில்;இந்திய அரசியல் சாசனத்தில் ஐந்து தலைப்புகள் உள்ளது.

1)இந்தியாவின் எல்லைகள்

2)குடியுரிமை

3)பொதுவானவை

4)கொள்கை விளக்கம்

5)அடிப்படை கடமைகள்

இதில் நான்காவது தலைப்பாக உள்ள "கொள்கை விளக்கம்" என்பது அரசாங்கங்களுக்கு ஆலோசனைகளாக வழங்கப்பட்ட விஷயமாகும்.கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சொல்லப்பட்ட விஷயம் அல்ல.அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டது;

ஒன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாவிட்டால் அதில் நீதிமன்றம் தலையிட்டு நடைமுறைப்படுத்த முடியும்.ஆனால் இந்த நான்காவது தலைப்பில் நீதிமன்றம் தலையிட்டு நடைமுறைப்படுத்த முடியாது.

இந்தியா ஒரு மிகப் பெரிய நாடு. சரியாகச் சொல்வதானால் மதம், மொழி, இனம் எனப் பலதிறப்பட்ட மக்கள் சமூகங்கள் வாழும்ஒரு துணைக் கண்டம் இது. இதற்குள் எல்லாவற்றிலும் கருத்தொற்றுமை சாத்தியம் இல்லை என்பதாலதான் நமது அரசியல் சட்டம் ‘அடிப்படை உரிமைகள்’ எனவும், ‘வழிகாட்டு நெறிமுறைகள்’ எனவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சில நாடுகளில்தான் இந்த ஏற்பாடு. வழிகாட்டு நெறிமுறைகளாகச் சொல்லப்பட்டவை காலப்போக்கில் அரசியல் சட்ட அடிப்படைகள் ஆக்கப்பட வேண்டும் என்பது பொருள்.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் பொது தனிநபர் சட்டம் மட்டுமின்றி வேறு பலவும் உள்ளன, அடித்தள மக்களுக்கு சட்ட மற்றும் நாடாளுமன்றங்களில்  வழங்கப்பட்டுள்ள இட ஒதுகீட்டை முடிவுக்குக் கொண்டுவருதல் (334ம் பிரிவு), ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தியை ஆட்சி மொழி ஆக்குதல் (343) என்பதெல்லாமும் வழிகாட்டு நெறிமுறைகள்தான். இதை எல்லாம் இன்று நடைமுறையில் சாத்தியமும் இல்லை, நியாயமும் இல்லை.

இரண்டாவது பதில்;அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்ட எத்தனையோ விஷயங்கள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது.

கொள்கை விளக்கத்தில் 25 ஆவது பிரிவு;அவரவர் விருப்பப்படி மதத்தை பின்பற்றலாம்,அவரவர் மதப் பிரசங்கம் செய்யலாம்.

இது முழுமையாக நடைமுறையில் உள்ளதா?

45 வது பிரிவு:இந்திய அரசியல் சாசனம் துவங்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்குள்ளாக அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும்? கட்டாய கல்வி இலவச கல்வி அவசியம்.

60 வருடங்கள் கடந்தும் எத்தனையோ கிராமங்களில் அடிப்படை கல்வி கூட இல்லாமல் 30 வயதை தாண்டியவர்கள் இருக்கிறார்கள்.ஒன்றிய அரசும் இதற்கான எந்த முயற்சியையும் முழுமையாக மேற்கொள்ளவில்லை.

47வது பிரிவு;மது-போதை-நச்சுத்தன்மை உள்ள பொருட்களை இந்தியாவில் முழுமையாக தடை செய்ய வேண்டும்.

48வது பிரிவு;முழுமையான மதுவிலக்கு.மது,போதைப் பொருள்கள்,நச்சுத்தன்மை உள்ள குளிர்பானங்கள்,நச்சுத்தன்மையுள்ள உரங்கள் தடை செய்யப்பட வேண்டும்.

ஆனால் பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது.அதில் நீதிமன்றம் தலையிட்டு மதுவிலக்கை ரத்து செய்கிறது.

இப்படி நகைமுரணான எத்தனையோ விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

பொது சிவில் சட்டம் என்கிற பெயரில் இவர்கள் சொல்ல வருவது எல்லா மதத்தினருக்குமான ‘பொது தனிநபர் சட்டம்’ என்பதுதான்.

இன்னும் சரியாகக் கவனித்தால் இவர்கள் சொல்ல வருவது  ‘பொது தனிநபர் சட்டம்’ கூட அல்ல. இந்துத் தனிநபர் சட்டத்தைப் பிற மதங்களின் மீது திணிப்பதுதான். அதன் மூலம் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் தனித்துவங்களையும் அடையாளங்களையும் அழிப்பதுதான் இவர்களின் நோக்கம்.. சிறுபான்மையினர் இன்று கலவரப் பட்டிருப்பதன் பின்னணியும் இதுதான்.

பொது சிவில் சட்டம்: மத அமைப்புகள், பொது மக்களிடம் கருத்துக் கேட்கும் 22-வது சட்ட ஆணையம்.
நாடு முழுமைக்கும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது தொடர்பாக பொதுமக்கள், மத அமைப்புகள் தம் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று 22வது சட்ட ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களின் போது பாஜக தேர்தல் அறிக்கைகளில் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கம், அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவது மற்றும் பொது சிவில் சட்டம் ஆகியவை இடம்பெற்றன. இவற்றில் பொது சிவில் சட்டம் மட்டுமே தற்போது பாக்கி உள்ளது. இதையும் 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பு அமல்படுத்த அல்லது அதற்கான முயற்சிகளில் மத்தியில் உள்ள பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக கருத்துகளைத் தெரிவிக்க விரும்புபவர்கள் சட்ட ஆணையத்துக்கு அதன் உறுப்பினர் செயலரின் மின்னஞ்சல் முகவரிக்கு தனிப்பட்ட முறையிலோ அல்லது சட்ட ஆணைய இணையதளத்தில் அதற்கென கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிலோ தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து, 30 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை membersecretary--lci@gov.in என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாக தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான 21வது சட்ட ஆணையம் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், நாட்டில் பொது சிவில் சட்டம் அவசியம் இல்லை. தற்போதைய சூழலில் அது விரும்பத்தக்கதும் அல்ல என்று தெரிவித்தது.

185 பக்கங்கள் கொண்ட அந்த ஆலோசனை அறிக்கையில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் நாட்டில் நிலவும் பன்முகத்தன்மைக்கு மதச்சார்பின்மை முரண்பட முடியாது. நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மை என்பதை பொது சிவில் சட்டம் மூலம் சமரசம் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் அது தேசத்தின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஆகிவிடும் என்று தெரிவித்திருந்தது.

நன்றி;இந்து தமிழ் திசை நாளிதழ் 15/06/2023
நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக சட்ட ஆணையம் மீண்டும் கருத்து கேட்பு நடவடிக்கையை தொடங்கி உள்ளது. இந்நிலையில் ஜம்இய்யத் உலமா இ ஹிந்த் இஸ்லாமிய அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘‘பொது சிவில் சட்டம் கொண்டு வருவது, அரசியலமைப்பு சட்டத்தின் 25 மற்றும் 26வது பிரிவுகளில் இந்திய குடிமக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மத சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு முற்றிலும் எதிரானது. இந்தியாவின் அரசியலமைப்பு மதசார்பற்ற அரசியலமைப்பாகும். ஒவ்வொரு குடிமகனுக்கும் முழு மத சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நபரும் அவருக்கு விருப்பமான மதத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்திய அரசுக்கு அதிகாரப்பூர்வ மதம் என்பது கிடையாது. அனைத்து குடிமக்களுக்கும் முழுமையான சுதந்திரத்தை அது வழங்குகிறது. பொது சிவில் சட்டம் அரசியலமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இதனை இஸ்லாமியர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் இது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது” என குறிப்பிட்டுள்ளது.

நம் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை.
ஏன் பொது சிவில் சட்டம்"Uniform Civil Code தேவையில்லை என்பதற்கு கூறிவுள்ள முக்கிய காரணங்களில் சில...

1.) பிரிவு 25 மத நடைமுறைச் சுதந்திரத்திற்கான உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கிறது, எனவே தனிப்பட்ட சட்டங்களைப் பயிற்சி செய்வதில் அரசால் கூட தலையிட முடியாது.

2.) UCC நமது அரசியலமைப்பின் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானது.

3.) இந்திய சட்ட அமைப்பு பன்மைத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் UCC பயன்பாடு அதன் முழுமையான அழிவை விளைவிக்கும்.

4.) இந்தியாவின் நாடாளுமன்ற முறையே வேற்றுமையில் ஒற்றுமை என்ற மாதிரியில் உள்ளது. எனவே, UCC இணையாக இருக்க முடியாது.

5.) UCC மீதான தனிநபர் சட்டங்களின் அரசியலமைப்புச் செல்லுபடியை இந்திய உச்ச நீதிமன்றம் மீண்டும் மீண்டும் உறுதி செய்துள்ளது.

உரிமைகள் பறிக்கப்படும் சமுதாயம்.
நாடு சுதந்திரம் பெற்றது முதல், படிப்படியாக முஸ்லிம்கள் எல்லா வகையிலும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். கல்வி, வேலை வாய்ப்பு, அரசுப் பதவிகள் ஆகிய அனைத்துத் துறைகளிலும் அவர்கள் முற்றாக ஒதுக்கப்பட்டு விட்டனர். கலவரங்களால் அவர்களின் உயிர், உடைமைகள், கற்பு ஆகிய அனைத்தும் பறிக்கப்படுகின்றன. ஆள்வோரின் துணையுடன் இந்து வெறி சக்திகளால் பள்ளிவாசல் இடிக்கப்பட்டது. ஆட்சியாளர்களே ஒரு பள்ளியைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். தடா எனும் பெயரில் ஐம்பதாயிரம் முஸ்லிம்கள் இன்னும் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். சட்டப்படி அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் யாவும் பறிக்கப்பட்டு, அனைத்துச் சலுகைகளும் மறுக்கப்பட்டுள்ளனர். பருந்தின் வாயில் சிக்கிய கோழிக்குஞ்சு போன்ற நிலையில் நொந்து போயிருக்கின்றது முஸ்லிம் சமுதாயம்! எத்தனை உரிமைகள் மறுக்கப்பட்டாலும் முஸ்லிம்களாக வாழும் உரிமையாவது இங்கு இருக்கின்றது என்பது மட்டும் தான் அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல்!

மொகலாய ஆட்சியில் சிவில் சட்டம்.
மொகலாய மன்னர்கள் இந்த நாட்டை ஆண்ட போது இந்துக்கள் தமது மதத்தின் அடிப்படையில் சிவில் சட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனால் நாடு சிதறிப் போகவில்லை. ஆயிரம் நாடுகளாக இருந்த பகுதிகள் ஒரு நாடாகத் தான் மாறின. இது தான் உண்மை.

வெள்ளையர்கள் இந்த நாட்டை ஆண்ட போதும் முஸ்லிம்களும், இந்துக்களும் தத்தம் மதத்தின்படி சில சிவில் சட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனால் நாடு சிதறவில்லை. இத்தகைய அணுகுமுறையினால் தான் பரந்த இந்தியாவே உருவானது. மொகலாயர்களும், வெள்ளையர்களும் மதச் சுதந்திரத்தில் தலையிட்டிருந்தால் இன்றைய இந்தியாவை நாம் பார்க்க முடியாது. இதையும் அறிவுஜீவிகள் உணர வேண்டும்.

 புத்த மதத்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள தாய்லாந்து நாட்டில் முஸ்லிம் தனியார் சட்டம் உள்ளது. புத்த மத நாடு என்று பிரகடனம் செய்து கொண்ட இலங்கையிலும் கூட முஸ்லிம் தனியார் சட்டம் அமலில் உள்ளது. கிரீஸ், எத்தியோப்பியா, உகாண்டா ஆகிய நாடுகளிலும் முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் இத்தகைய சட்டங்கள் உள்ளன. இதன் காரணமாக இந்த நாடுகள் சிதறிப் போகவில்லை.

அறிவுஜீவிகளுக்கு இந்த உண்மை நன்றாகத் தெரிந்திருந்தும் இஸ்லாத்தின் மேல் அவர்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பொது சிவில் சட்டம் எனக் கூப்பாடு போடுகின்றனர்.

உள் நோக்கம் கொண்ட தீர்ப்புகள்.
இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்கிறார். பிறகு மற்றொரு திருமணம் செய்வதற்காக முஸ்லிமாக மாறி, திருமணமும் செய்து கொள்கிறார். முதல் மனைவி இதை எதிர்த்துத் தாக்கல் செய்த வழக்கில், “முஸ்லிம் தனியார் சட்டத்தை அந்தக் கணவர் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்’ என்று முடிவு செய்து அவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. நீதிமன்றம் அத்துடன் நிறுத்திக் கொண்டால் நாம் விமர்சிக்கப் போவதில்லை. ஆனால் இவ்வழக்கில் வாதியாகவோ, பிரதிவாதியாகவோ இல்லாத மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அன்று ஓர் உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

“அனைத்து மதத்தவர்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் ஒன்றை ஒரு வருடத்துக்குள் மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்” என்பதே அந்த உத்தரவு. இதைத் தான் நாம் விமர்சிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

குடிமக்கள் அனைவருக்கும் ஒரே சீரான உரிமையியல் சட்டத்தை இந்தியா முழுவதிலும் அமல் செய்யப்படுவதற்கான முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும்” என்று அரசியல் சாசனத்தின் 44வது பிரிவு கூறுவது தான் இந்தத் தீர்ப்புக்கு அடிப்படடை.

நீதிபதிகளின் நோக்கத்தைச் சந்தேகப்படுவதா? அரசியல் சாசனம் பற்றிய சரியான விளக்கம் அவர்களுக்கு இல்லை என்பதா? என்ற ஐயத்தை ஏற்படுத்தக் கூடியதாகவே இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.

இஸ்லாத்தில் தீண்டாமை இல்லை என்பதற்காக ஒரு தாழ்த்தப்பட்ட இந்து, முஸ்லிமாக மாறினால், அது பற்றிய வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தால், “இனி மேல் இஸ்லாத்திலும் தீண்டாமையைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்று தீர்ப்பு வழங்குவது எவ்வளவு கேலிக்குரியதோ அந்த அளவு கேலிக்குரியதாகவே நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அமைந்துள்ளது.

அரசியல் சாசனத்தில் 44வது பிரிவு இவ்வாறு கூறுவது உண்மை தான். ஆனால் இது எந்தத் தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ளது? அந்தத் தலைப்பின் நிலை என்ன? என்பதையெல்லாம் நீதிமன்றம் கண்டு கொள்ளவில்லை.



பொது சிவில் சட்டத்தின் அபாயம்.
பொது சிவில் சட்டம் என்பது இந்திய மக்களின் ஒட்டு மொத்த உணர்வுகளுக்கும் சமாதி கட்டி விட்டு அந்த சமாதியின் மேல் எழுப்பப் பட முடியுமே தவிர மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஒரு போதும் உருவாக்கப்பட முடியாது.

நாட்டின் பெரும்பான்மையான மக்கள் மாட்டுக்கறி சாப்பிடுகிற போது மாட்டுக்கறிக்கு தடை விதிப்பது போன்ற சட்டங்கள் அடுத்த வீட்டுக்காரரை நமக்கு எதிராகத் தூண்டுமே தவிர இணக்கமாக வாழ்வதற்குரிய வழி அதுவாக இருக்க முடியாது. 

இந்திய அரசியல் சாசணத்தின் வழி காட்டு நெறிகள் முதலில் நாடு முழுக்க  மதுவிலக்கை அமுல் படுத்தக் கூறுகிறது. அனைத்து சாராரும், அனைத்து மதத்தவரும் எதிர்க்கக்கூடிய, சமூக நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் அழித்தொழிக்க விரும்பும் ஒரு விஷயத்தை முதலில் கையில் எடுப்பதை விட்டு விட்டு மக்களின் அடிப்படை உரிமையை பறிக்கிற ஒன்றை தேச நலனாக காட்டுவது சந்தர்ப்பவாத அரசியலின் சதிப் புத்தியாகும் இதில் நீதி மன்றங்களும் சிக்கிக் கொண்டு விட்டன என்பது தான் க்ருட் தேசத்திற்கு நேர்ந்த பெருங்கவலையாகும்.

உண்மையில்  சிவில் சட்டம் என்பதற்கான சாத்தியங்கள் அறவே கிடையாது என்பதை முஸ்லிம் தலைவர்கள் 30 வருடங்களுக்கு முன்னரே தெளிவு படுத்தி விட்டனர்.

அல்லாஹு தஆலா நம் சமுதாய மக்களுக்கு  தன் முழு பாதுகாப்பையும் வழங்கியருள்வானாக! ஆமின்...பொது 
*இந்தியாவின் நலனுக்கு எதிரானது.*
================================

 http://vellimedai.blogspot.com/2023/06/blog-post_15.html?m=1

https://youtu.be/DjQsPCVjBFM
சேலம் அபூதாஹிர் பாகவி ஹழ்ரத்.
பொது சிவில் சட்டம் பொருந்துமா.....!??

https://youtu.be/H2HLkqXrrLQ

சிவிலின் சிக்கல்கள்
https://youtu.be/ohG_rQadrU8

https://fb.watch/lkHZTacjzr/?mibextid=YCRy0i

Https://youtu.be/XqbxwTZDs0A
இஸ்லாத்தை அழிக்கவா பொதுசிவில் சட்டம்?

பொது சிவில் சட்டம் பொருந்தாது .ஏன்?
https://youtu.be/Bw2kBnO2kbo

https://youtu.be/knOIXcvXhPw
பொது சிவில் சட்டம்

https://www.bbc.com/tamil/articles/c88521w6ylno
பொது சிவில் சட்டம் என்றால் என்ன? முஸ்லிம் அமைப்புகள் அதை எதிர்ப்பது ஏன்?

https://www.bbc.com/tamil/articles/c88521w6ylno
இந்தியாவில் முஸ்லிம்களுக்கு மட்டும்தான் தனியாக சட்டம் இருக்கிறதா? - உண்மை என்ன?

https://www.islamkalvi.com/?p=361

https://www.dinamani.com/india/2023/jun/29/general-civil-law-against-constitutional-doctrine-all-india-muslim-personal-law-board-4029093.htm

வெள்ளி, ஜூன் 23, 2023

ஸெய்யிதுனா அபூ ஹனீபா அன்நுஃமான் ரழி,

ஸெய்யிதுனா அபூ ஹனீபா அன்நுஃமான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்  இவர்கள் ஹிஜ்ரீ 699 இல் பிறந்து ஹிஜ்ரீ 767 மரணித்தார்கள் இவர்கள் மரணிக்கும் போது இவர்களின் வயது 68 ஆகும்.

 இவர்கள் நபிகள் நாயகத்தின் மீது அளவு கடந்த நேசம் கொண்டவர்களாவர்  பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் மீது தாங்கள் கொண்ட காதலை வெளிப்படுத்தும் முகமாக ஒரு காதல் பாடல் ஒன்றை இயற்றினார்கள் அதனை அவர்கள் ஒவ்வொரு நாளும் பாடி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களோடு காதல் உரையாடல் செய்வார்கள் அந்த பாடல் வேறு எந்த மனிதருக்கும் தெரியாது அவர்கள் யாரிடமும் அந்த பாடலை பாடிக்காட்டவும் இல்லை இப்படியே சில காலங்கள் உருண்டோடின.

 ஒரு நாள் நபிகள் நாதர் வாழும் மதீன மாநகருக்கு செல்லும் ஒரு வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது இதனை நினைத்து அவர்கள் பெரு மகிழ்ச்சியடைந்து மதீனாவை நோக்கி பயணம் செய்தார்கள் மதீனாவை வந்தடைந்ததன் பின்னர் அங்கே தொழுவதற்காக பாங்கோசையை எதிர்பார்த்து பள்ளிவாயலில் காத்திருந்தார்கள் அப்போது அங்கே பாங்கு சொல்கின்ற இடத்தில் பாங்கு சொல்கின்ற முஅத்தின் தான் யாரிடமும் கூறாமல் இரகசியமாக நாயகத்தை துதித்து வந்த அந்த பாடலை அவர் பாடுவதை கேட்டு ஆச்சரியமடைந்து அதிர்ச்சியானார்கள்.

 நான் யாரிடமும் சொல்லாமல் இயற்றிய எனக்கு மட்டும் தெரிந்த அந்த பாடல் மதீனாவில் இருக்கும் இந்த முஅத்தினுக்கு எப்படி தெரியும் யார் கூறியிருப்பார்? என்ற கேள்விகள் எழ அரம்பித்தன இறுதியில் அவரிடமே சென்று நாம் விசாரிப்போம் என்று அந்த முஅத்தினை எதிர்பார்த்திருந்தார்கள் அப்போது முஅத்தின் வந்தார் அவரை சந்தித்த அபூ ஹனீபா தாங்கள் பாடிய பாடல் யாருக்கு சொந்தமானது? என்று கேட்டார்கள் அப்போது அந்த முஅத்தின் இது இமாம் அபூ ஹனீபா அன்நுஃமான் அவர்களுக்குரியது என்று கூறினார் அவர் யார்? என்று உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டார்கள் இமாம் அபூ ஹனீபா அன்நுஃமான்.

 அதற்கு அந்த முஅத்தின் இல்லை எனக்கு அவரை தெரியாது என்று கூறினார் இந்த பாடலை நீங்கள் யாரிடமிருந்து அறிந்து கொண்டீர்கள்?  என்று கேட்டார்கள் அதற்கு அந்த முகத்தின் என் கனவில் ஒரு முறை பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் தோன்றினார்கள் அவர்களின் திரு சன்நிதானத்தில் வைத்து இந்த பாடல் பாடப்பட்டது அதை நான் அக்கணமே மனனம் செய்து கொண்டேன் அதை நான் இந்த இடத்தில் பாடி பெருமானாரோடு உரையாடுவேன் என்று கூறினார் அந்த முஅத்தின்  இதனை கேட்ட அபூ ஹனீபா அன் நுஃமான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அழுதார்கள் உடனே தான் இயற்றியதும் அந்த முஅத்தின் நாயகத்தின் சன்நிதானத்தில் மனனம் செய்த பாடலுமாகிய அந்த பாடலை பாடினார்கள்.

இதோ அந்த பாடல்:

🌹يَا سَيِّدَ السَّادَاتِ جِئْتُكَ قَاصِدًا​
                  أَرْجُوْ رِضَاكَ وَأَحْتَمِيْ بِحِمَاك​َ
ஸாதாத்துமார்களின் தலைவரே உங்களை நாடிய நிலையில் உங்களிடம் வந்தேன் உங்கள் பொருத்தத்தை ஆதரவு வைக்கிறேன் உங்கள் பாதுகாப்பு கொன்டு நான் பாதுகாப்பு தேடுகிறேன்.

🌹​وَاللّٰهِ يَا خَيْرَ الْخَلَائِقِ إِنَّ لِي​ْ 
                      قَلْبًا مُشَوِّقًا لَا يَرُوْمُ سِوَاك​َ
அல்லாஹ்வின் மீது சத்தியமாக எனக்கு காதல் செய்யும் உள்ளம் இருக்கிறது அது உங்களை தவிர வேறெதையும் நாடாது

🌹​وَبِحَقِّ جَاهِكَ إِنَّنِيْ بِكَ مُغْرِم​ٌ
                           وَاللّٰهُ يَعْلَمُ أَنَّنِيْ أَهْوَاك​َ
உங்களின் உயர் பதவி கொண்டு நிச்சயமாக நான் உங்களை பற்றிப்பிடித்திருக்கிறேன் இன்னும் இறைவன் நான் உங்களை அதிகமாக நேசிப்பவன் என்பதனை அறிந்தவன்

🌹​أَنْتَ الَّذِيْ لَوْلَاكَ مَا خُلِقَ اِمْرُؤ​ٌ
                      ​كَلَّا وَلَا خُلِقَ الْوَرَى لَوْلَاك​َ
நீங்கள் எத்தகையவர்கள் எனின் நீங்கள் இல்லையென்றால் எந்த மனிதனும் ஏன் எந்த படைப்பும் படைக்கப்பட்டிருக்காது
 
🌹​أَنْتَ الَّذِيْ مِنْ نُوْرِكَ الْبَدْرُ اِكْتَسَى​
                    ​وَالشَّمْسُ مُشْرِقَةٌ بِنُوْرِ بَهَاك​َ
நீங்கள் எத்தகையவர்கள் எனின் உங்களுடைய ஒளியிலிருந்தே சந்திரன் அணிந்து கொண்டது இன்னும் சூரியனும் உங்களுடைய பிரகாச ஒளியை கொண்டே ஒளிவீசுகிறது

🌹​أَنْتَ الَّذِيْ لَمَّارَفَعْتَ إِلَى السَّمَاء​ِ
                 بِكَ قَدْ سَمَتْ وَتَزَيَّنَتْ لِسُرَاك​َ
நீங்கள் எத்தகையவர்கள் எனின் நீங்கள் மிஃறாஜுடைய இரவில் வானத்திற்கு சென்ற போது உங்கள் வருகைக்காக அது அழகு படுத்தப்பட்டது இன்னும் அது உயர்ந்து விட்டது

🌹​أَنْتَ الَّذِيْ نَادَاكَ رَبُّكَ مَرْحَبًا​
                       ​وَلَقَدْ دَعَاكَ لِقُرْبِهِ وَحَبَاك​َ
நீங்கள் எத்தகையவர்கள் எனின் உங்களுடைய இறைவன் உங்களை வரவேற்றான் இன்னும் அவனுடைய நெருக்கத்திற்காக உங்களை அழைத்தான் இன்னும் உங்களுக்கு கொடைகளை அருளினான்

🌹​أَنْت الَّذِيْ فِيْنَا سَأَلْتَ شَفَاعَة​ً
                       ​نَادَاكَ رَبُّكَ لَمْ تَكُنْ لِسِوَاك​َ
நீங்கள் எங்களுடைய விடயத்திலே பரிந்துரைசெய்வதை கேட்பீர்கள் உங்களுடைய இறைவன் உங்களை அழைப்பான் அந்த பரிந்துரை உங்களை தவிர வேறு யாருக்கும் சொந்தமல்ல

🌹​أَنْتَ الَّذِيْ لَمَّا تَوَسَّلَ آدَم​ُ
                      ​مِنْ زَلَّةٍ بِكَ فَازَ وَهُوَ أَبَاك​َ
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் செய்த தவறிலிருந்து உங்களை கொண்டே உதவிதேடி வெற்றி பெற்றார்கள் அவர்களுமோ உங்களுடைய உடலின் தந்தையாக இருக்கும் நிலையில்

🌹​وَبِكَ الْخَلِيْلُ دَعَا فَعَادَتٔ نَارُه​ُ
                    ​بَرْدًا وَقَدْ خَمِدَتْ بِنُوْرِ سَنَاك​َ
உங்களை கொண்டே இறைவனின் நண்பர் இப்றாஹீம் அழைத்தார் நெருப்பு குளிர்சியாக மாறியது உங்களின் பிரகாச ஒளியை கொண்டே அது அணைந்து போனது 

🌹​وَبِكَ الْمَسِيْحُ أَتَى بَشِيْرًا مُخْبِرًا​
                   بِصِفَاتِ حُسْنِكَ مَادِحًا لِعُلَاك​َ
உங்களை கொண்டே நபீ ஈஸா சுபச் செய்தி சொல்பவராகவும் உங்களின் அழகிய தன்மைகளை அறிவிக்கக்கூடியவராகவும் உங்களின் உயர்வை பற்றி புகழக்கூடியவராகவும் வந்தார்கள்

🌹​وَكَذَاكَ مُوْسَى لَمْ يَزَلْ مُتَوَسِّلآ​
                  بِكَ فِيْ الْقِيَامَةِ مُحْتَمٍ بِحِمَاك​ِ
அவ்வாறுதான் நபி மூஸாவும் மறுமை நாளில் உங்களை கொண்டு உதவி தேடுவார் உங்களுடைய பாதுகாப்பை கொண்டு பாதுகாப்பு தேடுவார்

🌹​وَالْأَنْبِيَاءُ وَكُلُّ خَلْقٍ فِيْ الْوَرَى​ 
                 وَالرُّسُلُ وَالْأَمْلَاكُ تَحْتَ لِوَاك​َ
எல்லா நபிமார்களும் இன்னும் எல்லா படைப்புக்களும் ரஸுல்மார்களும் அரசாட்சி கொண்டவர்களும் உங்கள் கொடிக்கு கீழேதான் இருப்பார்கள்.

இந்த அருள்மிகு பாடல் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் ரவ்ழா ஷரீபினுல் எழுதப்பட்டிருக்கிறது இந்த பாடலை ஒருவர் தொடர்ந்து பாடி பெருமானாரோடு உரையாடும் பட்சத்தில் நாயகத்தின் நெருக்கமும் காட்சியும் உண்டாகும் ...


புதன், ஜூன் 21, 2023

பட்டாம்பூச்சிக்கும் வெட்டுக்கிளிக்குமான வேறுபாடு,

பட்டாம்பூச்சிக்கும் வெட்டுக்கிளிக்குமான வேறுபாட்டை இறுதிவேதம் அல்குர்ஆன் அழகாக விளக்குகிறது.

பட்டாம்பூச்சி அங்குமிங்குமாக அலைபாயும் நேரத்தில், வெட்டுக்கிளி இலக்கை நோக்கி வரையறுக்கப்பட்ட ஒழுங்குடன் பயணிக்கிறது.

உலக முடிவுநாள் வரும்போது, மனிதர்களின் நிலை பட்டாம்பூச்சி போன்றாகி விடும். 

يَوْمَ يَكُوْنُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوْثِۙ‏ 
"அந்நாளில் மனிதர்கள் சிதறடிக்கப்பட்ட ஈசல்கள் (பட்டாம்பூச்சிகள்) போல் ஆகிவிடுவார்கள்." (அல்குர்ஆன் : 101:4)

மறுமையில் எழுப்பப்படும் போத, ஒன்றுகூடும் மைதானத்தை நோக்கி வெட்டுக்கிளி போல ஒழுங்குடன் செல்வார்கள்.

خُشَّعًا اَبْصَارُهُمْ يَخْرُجُوْنَ مِنَ الْاَجْدَاثِ كَاَنَّهُمْ جَرَادٌ مُّنْتَشِرٌۙ‏ 
"அவர்களின் பார்வைகள் கீழ் நோக்கிய நிலையில் பரவிக்கிடக்கும் வெட்டுக் கிளிகளைப் போல் அவர்கள் புதைகுழிகளிலிருந்து வெளியேறுவர்."
(அல்குர்ஆன் : 54:7)

#அல்குர்ஆன் #உயிரியல்

புதன், ஜூன் 14, 2023

நபி(ஸல) அவர்களின் அறிவுரைகள்,

இஸ்லாத்தில் ஜனாஸா குளிப்பாட்டும் முறை,

இஸ்லாத்தில் ஜனாஸா குளிப்பாட்டும் முறை பற்றி அறிந்து கொள்ளுவோம் 💞

• சுபஹானல்லாஹ் இஸ்லாம் எவ்வளவு அழகிய மார்க்கம் ஒருவர் வாழும் காலங்களிலும் அவர் அசுத்தமாக இருந்தால் அவருக்கு குளிப்பு கடமை முறை சொல்லி கொடுக்கின்றது! அவர் மரணம் அடைந்தாலும் சுபஹானல்லாஹ் அந்த நேரத்திலும் அவரை குளிப்பாட்டி தூய்மையை அடைய செய்ய இஸ்லாம் நமக்கு ஜனாஸா குளிப்பாட்டும் முறை கூறி உள்ளது!

• ஜனாஸா குளிப்பாட்டும் முறை ஒவ்வொரு முஸ்லிமும் நன்கு அறிந்து வைத்து இருக்க வேண்டும்!

• ஆனால் இன்று அல்லாஹ் பாதுகாக்கணும் நம்மில் பலர் உலக கல்வியில் மிக சிறந்து விளங்குகிறோம்! பெயருக்கு பின்னால் பல பட்ட படிப்புகளை போட்டு கொள்ளுகிறோம் ஆனால் மார்க்கத்தை பற்றி ஒன்றும் அறியாமல் இருக்கின்றோம்!

• இன்றும் பல ஊர்களில் தாய் அல்லது வீட்டார் யாரேனும் மரணம் அடைந்து விட்டால் மையத்தை குளிப்பாட்ட நபரை தேடி அழைக்கின்றோம்! நம்மை சிறு வயதில் இருந்து நம்மை பார்த்து வளர்த்த தாய் அல்லது தந்தைக்கு கூட நம்மால் கடைசியில் குளிப்பாட்ட கூட தெரியாமல் அடுத்த நபரை நாடி நிற்கிறோம் எவ்வளவு ஊர்களில் இந்த அவலம் நடக்கின்றது 😥

• அழிந்து போக கூடிய உலக கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இன்று பலர் நிரந்தரமாக இருக்கும் மார்க்க கல்விக்கு கொடுப்பது கிடையாது! நவதுபில்லாஹ்!

• இதனாலேயே இஸ்லாம் என்ற பெயரில் மார்க்கத்தில் அதிகமான மூடநம்பிக்கைகளும் கட்டுக்கதைகளும் உருவாகி விட்டன அல்லாஹ் பாதுகாக்கணும்! 

💟 நல்ல மையத்தின் அடையாளங்கள் :

1) பிளேக் நோயால் இறந்தவர்!

2) வயிற்றுப் போக்கு போன்ற) வியாதிகளால் இறந்தவர்!

3) தண்ணீரில் மூழ்கி இறந்தவர்!

4) வீடு, கட்டிடம் ஆகியவை இடிந்து விழும் போது) இடிபாட்டில் சிக்கி இறந்தவர்!

5) இறைவழியில் (அறப்போரில் ஈடுபட்டு) இறந்தவர்!  மேலே குறிப்பிட்ட முதல் 5 நபர்கள் ஷஹீத் (உயிர்த் தியாகிகள்)  ஆவார்கள்!

(நூல் : புகாரி : 2829)

6) தன் உயிர் மானம் பொருள் காக்க போராடி இறந்தவர்!

7) அசத்தித்திற்கு எதிராக போராடிவர்கள்!

8) மரண சமையத்தில் நெற்றியில் வியர்த்திற்கும்!

(நூல் : அபூதாவூத் | இப்னுமாஜா | நஸயீ  | அஹ்மத்)

💟 எந்த வயதில் மரணம் அடைந்தால் அது நல்ல மரணம்?

• மௌத் பொறுத்த வரை இந்த வயதில் மரணம் அடைந்தால் அது நல்ல மரணம் அல்லது இந்த வயதில் மரணம் அடைந்தால் அது கெட்ட மரணம் என்று எதுவும் கிடையாது இதை பற்றி இஸ்லாம் எதுவும் நமக்கு கூற வில்லை!

ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் (வாழ்வுக்கும், வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு, அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணப் பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்!

(அல்குர்ஆன் : 7 : 34)

• அல்லாஹ் மனிதனை படைக்கும் போதே அவர்களின் மரணத்தையும் குறித்து விடுகிறான்! அவர்களுக்கான நேரம் வந்து விட்டால் அது குழந்தை பருவமோ அல்லது தள்ளாடும் வயதோ நிச்சயமாக மரணம் அடைந்து விடுவார்கள்! நோய் உடல் பலகீனம் இவை எல்லாம் ஒரு காரணி மட்டுமே!

• பொதுவாக மரணம் மூன்று வகையான வயதினருக்கு ஏற்படும் அவை :

1) குழந்தை பருவம்

2) நடுத்தர இளம் வயது

3) தள்ளாடும் வயது 

❤️ குழந்தை பருவம் :

• குழந்தை பருவத்தில் மரணம் ஏற்படுவதும் ஒரு சோதனையே!

இறை நம்பிக்கையுடைய ஆணும், இறை நம்பிக்கையுடைய ‎பெண்ணும் தமது விஷயத்திலும், தமது பிள்ளைகள் ‎விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து ‎துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் ‎சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது ‎என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்!

(நூல் : திர்மிதீ : 2323)

• சில ஊர்களில் இவ்வாறு கூறுவார்கள் பெற்றோர்கள் செய்யும் பாவம் பிள்ளைகளை பாதிக்கும் என்று ஆனால் இது உண்மை கிடையாது அல்லாஹ் நாடினால் தவிர நமக்கு எந்த தீங்கும் ஏற்படாது!

• நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹிம் அவர்கள் கூட சிறு வயதில் தான் மரணம் அடைந்தார்கள்!

(நூல் : புகாரி : 1382)

• பெண் குழந்தை மூன்று அல்லது இரண்டு மரணம் அடைந்து விட்டால் அந்த குழந்தையின் தாயை நரகத்தில் இருந்து காக்கும் திரையாக அமைந்து விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்!

(நூல் : புகாரி : 101)

❤️ நடுத்தர இளம் வயது :

• இளம் வயதில் அல்லது நடுத்தர வயதில் ஒருவர் மரணித்தால் ‎அதற்குக் காரணம் அவரது தீய செயல்கள் கிடையாது! அவர்களுக்கான நேரம் வந்து விட்டது அதனால் அவர்கள் மரணம் அடைந்து விட்டார்கள்!

• நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் நான்கு பெண் பிள்ளைகளை  கொடுத்தான்! அந்த 4 பேரும் மிகவும் இளம் வயதில் ‎தான் மரணித்தார்கள்! 

• மூன்று புதல்விகள் 1) ருகையா (ரலி) 2) ஸைனப் (ரலி) 3) உம்முகுல்தூம் (ரழி) நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்களுக்கு முன்பே மரணித்து விட்டார்கள்! நபி (ஸல்) அவர்கள் மரணித்து 6 மாதங்கள் பின்பு பாத்திமா (ரழி) அவர்களும் மரணம் அடைந்து விட்டார்கள்!

(நூல் : புகாரி : 4241‎)

• நடுத்தர வயதைக் கூட அடையாமல் நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்களின் நான்கு புதல்விகளும் மரணம் அடைந்து உள்ளார்கள்! இளம் ‎வயதில் மரணம் ஏற்படுவது துர்மரணம் கிடையாது! என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்!

❤️ தள்ளாத வயதில் மரணித்தல் :

• சிலர் தள்ளாத வயது வரை வாழ்ந்து பெரும் அவதிக்கு ஆளாகி ‎மரணிப்பார்கள்!  படுக்கையிலேயே மலஜலம் கழித்து, பெற்ற ‎பிள்ளைகளாலேயே ஓரம் கட்டப்பட்டு மரணிப்பார்கள்! நவதுபில்லாஹ்!

• இன்னும் சிலர் சுய ‎நினைவை இழந்த பின்னர் மரணிப்பார்கள்! இப்படியெல்லாம் ‎ஒருவர் மரணிப்பதை வைத்து நாம் ஒருவரின் மரணத்தை தீயது என எண்ணி விட கூடாது!

• ஒருவர் நீண்ட நாள் வாழ்ந்து இன்னல்களை அனுபவித்தால் ‎அதுவும் நன்மை தான் என்பதை கிழே உள்ள ஹதீஸின் மூலம் அறிந்து ‎கொள்ளலாம்!

ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய இறைவன் ‎நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை ‎முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு ‎‎(மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய ‎பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் ‎கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎கூறினார்கள்!

(நூல் : திர்மிதீ  : 2319‎)

கஃபு பின் மாலிக் (ரலி) அவர்கள் தமது முதுமையில் ‎பார்வையிழந்த நிலையில் தான் மரணித்தார்கள்!

(நூல் : புகாரி : 3889)

• நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தள்ளாத வயது வரை ‎வாழ்வதை விட்டும் பாதுகாப்புத் தேடி உள்ளார்கள்!

(நூல்  : புகாரி : 6365)

• தள்ளாத வயது வரை வாழ்ந்து அதனால் மற்றவர்களுக்குச் ‎சிரமம் தரக் கூடாது என்பதற்காகவே நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் தள்ளாத வயதை விட்டும் பாதுகாப்பு தேடி உள்ளார்கள்!

💜 திடீர் மரணம் :

• சிலர் மரணத்தின் எவ்வித அறிகுறியும் இல்லாமல் திடீரென்று ‎மரணித்து விடுவார்கள். வெள்ளம், மழை, சுனாமி, தீ விபத்து, ‎வாகன விபத்து என்று பல வகையிலும் மனிதர்கள் ‎மரணிக்கிறார்கள் இவ்வாறு மரணம் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஏற்பட்டு உள்ளது ஆனால் நபி (ஸல்) அவர்கள் இதை கெட்ட மரணம் என்று எந்த இடத்திலும் கூற வில்லை!

ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள் :

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'என்னுடைய தாய் திடீரென்று மரணித்துவிட்டார். அவர் அப்போது பேச முடிந்திருந்தால் நல்ல (தர்ம) காரியம் செய்திருப்பார். எனவே, அவருக்காக நான் தர்மம் செய்தால் அதற்கான நன்மை அவரைச் சேருமா?' என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் 'ஆம்' என்றனர்!

(நூல் : புகாரி : 1388)

💜 கடுமையான வேதனையுடன் மரணம் :

• சிலர் எவ்வித வேதனையையும் வெளிப்படுத்தாமல் ‎சாதாரணமாக மரணித்து விடுவார்கள்! ஆனால் இன்னும் சிலர் உயிர் போகும் போது கடுமையாக ‎வேதனைப்பட்டு துடிதுடித்து மரணமடைவார்கள் இதை வைத்து நாம் இவர் கெட்டவர் அல்லது கெட்ட மையத் என்று முடிவு செய்ய கூடாது!

• ஏன் என்றால் நபி (ஸல்) அவர்கள் மரணம் அடையும் பொழுது கடுமையாக வேதனைக்கு உள்ளாகினார்கள்!

ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள் :

என் முகவாய்க்கும் என் நெஞ்சுக்குமிடையே சாய்ந்திருந்த நிலையில் நபி(ஸல்) அவர்கள் இறந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு எவருடைய மரணத்தின் வேதனையைக் கண்டும் ஒருபோதும் நான் வருந்துவதில்லை!

(நூல் : புகாரி : 4446)

💟 மையத் அறிவிப்பு :

• முஸ்லீம் யாரேனும் மரணம் அடைந்து விட்டால் அதை நாம் பிறருக்கு அறிவிப்பு செய்ய வேண்டும்! ஊர் பள்ளிகளில் கூறினால் அவர்கள் mic யில் அறிவிப்பு செய்து விடுவார்கள்!

(நூல் : புகாரி : 1245)

💟 மையத்தை குளிப்பாட்ட தகுதியானவர்கள் :

❤️ வீட்டார் குளிப்பாட்டுதல் :

• ஜனாஸா குளிப்பாட்டும் முறை வீட்டார்களுக்கு நன்கு தெரிந்தால் அவர்கள் முன் வந்து குளிப்பாட்டலாம்! அல்லது வேறு நபரை வைத்தும் குளிப்பாட்டலாம்!

(நூல் : பைஹகீ : 6627)

• மரணமானவர் உயிர் உடன் இருந்த காலத்தில் தன்னை இன்ன நபர் தான் குளிப்பாட்ட வேண்டும் என்று வஸியத் செய்து இருந்தால் அந்த நபர் குளிப்பாட்டுவது தான் சிறந்தது ஆகும்!

• ஆண் மையத் என்றால் ஆணும் பெண் மையத் என்றால் பெண்ணும் குளிப்பாட்ட வேண்டும்! ஆணுக்கு பெண்ணோ அல்லது பெண்ணுக்கு ஆணோ குளிப்பாட்ட கூடாது!

❤️ கணவன் மனைவி :

• கணவன் அல்லது மனைவி ஜனாஸா பொறுத்த வரை இவர்களுக்கு மட்டும் விதி விலக்கு உண்டு! கணவனின் ஜனாஸாவை மனைவியும் அல்லது மனைவியின் ஜனாஸாவை கணவனும் குளிப்பாட்டலாம் இதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டு!

(நூல் : முஅத்தா : 304 | பைஹகி : 396 | அபூதாவூத் : 2733)

❤️ குளிப்பு கடமையில் உள்ளவர்கள் :

•  மாதவிடாய் அல்லது நிபாஸ் அல்லது குளிப்பு கடமையில் உள்ள ஆண் போன்றவர்கள் முழுவதும் அசுத்தமானவர்கள் அல்ல! அவர்கள் தாராளமாக ஜனாஸா குளிப்பாட்டலாம்!

• மாதவிடாய் அல்லது நிபாஸ் அல்லது குளிப்பு கடமை என்பது  உடலில் உள்ள ஒரு பகுதி மட்டுமே அசுத்தம் ஆகும் இதனால் அவர்கள் முழுமையாக அசுத்தம் அடைய மாட்டார்கள்!

• நூல் : முஸ்லிம் : 502 யில் வர கூடிய ஹதீஸை அடிப்படியாக வைத்து இமாம்கள் ஜனாஸாவை கூட மாதவிடாய் பெண்கள் அல்லது குளிப்பு கடமையில் உள்ளவர்கள் குளிப்பாட்டலாம் என்று கூறி உள்ளார்கள்!

💟 குளிப்பாட்டும் போது நாம் பேன வேண்டிய சில ஒழுக்கங்கள் :

• பொதுவாக ஆண் அல்லது பெண் மையத்தை குளிப்பாட்டும் முறை ஒன்று தான்! குளிப்பாட்டும் போது நாம் சில ஒழுக்கங்களை பேன வேண்டும் அவைகள் ;

1) ஆணை ஆணும் பெண்ணை பெண்ணும் தான் குளிப்பாட்ட வேண்டும்! 

2) மையத் குளிப்பாட்டும் முன்பு தேவையான பொருட்களை அருகில் எடுத்து வைத்து கொள்ள வேண்டும்!

3) மையத்தை குளிப்பாட்டும் போது மையத்திற்கு நெருக்கியவர்கள் யாரேனும் ஒருவர் அல்லது இருவரை உதவிக்கு உடன் வைத்து கொள்ள வேண்டும்!

4) ஜனாஸா குளிப்பாட்டுவதில் அனுபம் உள்ள நபரை வைத்து குளிப்பாட்ட வேண்டும் அல்லது நல்ல மார்க்கம் விளக்க உள்ளவரை வைத்து குளிப்பாட்ட வேண்டும்!

5)  மையத்தை குளிப்பாட்ட ஏதேனும் மேசை பகுதி அல்லது கட்டில் போன்றவற்றில் வைத்து மையத்தை நாம் குளிப்பாட்ட வேண்டும்!

6) மையத்தை குளிப்பாட்ட கூடியவர்கள்! கைகளில் கை உறை அணிந்து கொள்ள வேண்டும்! நேரடியாக மர்மஸ்தான பகுதிகளை கைகளால் தொட கூடாது!

7) மையத்தின் ஆடைகளை களைத்து விட்டு மறைக்க வேண்டிய பகுதிகளை ஏதேனும் ஆடை வைத்து மறைத்து விட வேண்டும்! அதை ஒரு போதும் வெளிப்படுத்த கூடாது!

8) குளிப்பாட்டும் இடத்தில் சாம்பிராணி புகை போன்று ஏதேனும் வாசனைக்கு நற்மணம் அவசியம் ஏற்பட்டால் போட்டு கொள்ளலாம்! ஏன் என்றால் சில மையத் உடல் நீண்ட நேரம் உடல் தாங்காது சில மணி நேரத்திலேயே உடலில் இருந்து வாசனை வர ஆரம்பித்து விடும் அதனால் நாம் நற்மணம் ஏதேனும் பயன் படுத்தி கொள்ளலாம்!

9)  குளிப்பாட்டும் போது முதல் வலது புறத்தில் ஒளு செய்யும் பகுதிகளில் இருந்து ஆரம்பம் செய்ய வேண்டும்!

(நூல் : புகாரி : 1255)

10) ஒற்றைப்படையாக நீர் ஊற்ற வேண்டும்! குறைந்தது 3 முறை நீர் ஊற்றி மையத்தை குளிப்பாட்ட வேண்டும்!

• மையத் தூய்மை ஆக வில்லை என்றால் நமக்கு வேண்டிய அளவு நீர் ஊற்றி கொள்ளலாம் ஆனால் ஒற்றைப்படையாக தான் குளிப்பாட்ட வேண்டும்! கடைசியாக நீர் ஊற்றும் போது வாசனைக்கு நீரில் சிறிது கற்பூரம் கலந்து ஊற்ற வேண்டும்!

(நூல் : புகாரி : 1254)

#மூடநம்பிக்கை : நீர் தன்மை எப்படி வேண்டும் என்றாலும் இருக்கலாம் சில கட்டுக்கதைகள் உண்டு : மிகவும் குளிர்ச்சியும் இல்லாமல் சூடாகவும் இல்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்ட தன்மையில் இருக்க வேண்டும் இல்லை என்றால் மையத் வேதனை படும் என்று ஆனால் இதற்கு இஸ்லாத்தில் எந்த விதமான ஆதாரமும் கிடையாது இது முழுவதும் அறியாமை ஆகும்!

• இன்னும் சில ஊர்களில் மையத்தை குளிப்பாட்டிய பின்பு ஒரு பாத்திரத்தில் நிறை கொடுத்து அனுப்பி வீட்டாரை அந்த நீரில் கை வைக்க சொல்லுவார்கள்  பின்பு அந்த நிறைய மையத்தின் மீது ஊற்றுவார்கள் இதுவும் மூடநம்பிக்கை செயலாகும் இதற்கு எந்த விதமான ஆதாரமும் இஸ்லாத்தில் கிடையாது!

11) பெண் மையத் ஆக இருந்தால் குளிப்பாட்டும் போது மையத்தின் தலை முடியை பின்னி இருந்தால் அதை களைத்து விட்டு நன்கு கழுவிய பின்பு கடைசியாக மூன்று சடைகள் மட்டும் போட்டு முதுகுக்கு பின்னால் விட வேண்டும்!

(நூல் : புகாரி : 1263)

12) மிக முக்கியமானது : மையத்தை குளிப்பாட்ட கூடியவர்கள் அந்த மையத்தின் உடலில் உள்ள குறைகளை யாரிடமும் ஒரு போதும் கூற கூடாது!

13) மையத்தை குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டிய அவசியம் கிடையாது! கைகளை மட்டும் நன்கு கழுவி கொள்ள வேண்டும் விருப்பம் பட்டால் குளித்து கொள்ளலாம்!

(நூல் : பைஹகீ : 3 / 398 | தாரகுத்னீ : 2 / 72)

14) போரில் மரணம் (ஷஹீத்) ஆகி விட்டால் அவரை குளிப்பாட்ட கூடாது அவரின் காயம் மற்றும் அவர் அணிந்த ஆடைகள் உடன் அவரை கபன் இட்டு தொழுது அடக்கம் செய்ய வேண்டும்!

15) ஹஜ் அல்லது உம்ரா செய்யும் பொழுது இறந்து விட்டால் அவரை குளிப்பாட்டிய பின்பு அவர் அணிந்து இருந்த இஹ்ராம் ஆடையிலேயே கபன் செய்து பின்பு தொழுது அடக்கம் செய்ய வேண்டும்!

(நூல் : புகாரி : 1268)

💟 ஜனாஸா குளிப்பாட்டும் முறை :

❤️ தேவையான பொருட்கள் :

1) இரண்டு கை உறை (gloves)

2) இழந்தை இலை பொடி அல்லது சோப்பு அல்லது சீயக்காய் தூள் 

3) கற்பூரம்

4) மையத்தின் மர்ம பகுதி (அவ்ரத்) மறைக்க தேவையான அளவு ஆடை

5) ஆடையை நீக்க கத்தரி கோல் அல்லது கத்தி

6) பஞ்சு

7) தேவையான அளவிற்கு நீர்

8) மையத்தை குளிப்பாட்டிய பின்பு துடைக்க நல்ல துணி

❤️ மையத் குளிப்பாட்டும் முறை :

• மையத்தை குளிப்பாட்டும் முறையில் இன்று மார்க்கம் கூறாத பல செயல்களை மக்கள் செய்கிறார்கள்! அதில் ஒன்று மையத் ஆன உடன் ‘ கசப் ’ மாற்றுவது என்ற பெயரில் ஒரு தடவை ‎குளிப்பாட்டுகின்றனர்! இவ்வாறு செய்வதற்கு ஸஹீஹான ஒரு ஆதாரம் கிடையாது! இவ்வாறு நாம் செய்யவும் கூடாது!

• மையத்தை முழுமையாக இஸ்லாம் கூறிய முறையில் ஒரு முறை குளிப்பாட்டுவது தான் இஸ்லாம் நமக்கு கூறியது ஆகும்!

• தேவைபட்டால் மையத்தின் உடலில் இருந்து உடலிலிருந்து ‎துர்வாடை வருவது போன்று இருந்தால் நாம் சாதாரணமாக ஒரு முறை குளிப்பாட்டி கொள்ளலாம்!

• ஜனாஸா குளிப்பாட்டும் போது நாம் செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்ய கூடாதாவைகள் பற்றி பார்ப்போம்!

❤️ செய்ய வேண்டியவைகள் :

• ஜனாஸா குளிப்பாட்டும் போது ஓதும் துஆ என்று இஸ்லாம் எதுவும் கூற வில்லை! நாம் பொதுவாக பிஸ்மில்லாஹ் கூறி ஆரம்பம் செய்யலாம்!

1) ஆடைகளை களைத்தல் :

• மரணித்தவர்கள் ஆடை அணித்து இருப்பார்கள் அந்த ஆடைக்கு மேல் ஏதேனும் ஒரு ஆடையை வைத்து மறைக்க வேண்டிய பகுதிகள் (அவ்ரத்) மறைத்து விட வேண்டும்! பின்பு,

• ஆண் ஆக இருந்தால் தொப்புள் முதல் முட்டி வரைyயும்! பெண்ணாக இருந்தால் கழுத்து பகுதி முதல் முட்டி கீழ் பகுதி வரை ஏதேனும் ஒரு ஆடையை வைத்து அவர்கள் அணிந்து இருக்கும் ஆடைகளை முழுமையாக கலைக்க வேண்டும்!

• கத்தரி கோல் அல்லது கத்தி போன்ற பகுதிகளை பக்குவமாக பயன்படுத்தி கவனமாக அவ்ராத் பகுதிகள் வெளிப்படாமல் மையத்தை வலது அல்லது இடது புறமாக பக்குவமாக திருப்பி ஆடைகளை கத்தரித்து அல்லது வெட்டி களைக்க வேண்டும் !

2) அவ்ரத் பகுதிகள் :

• ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மறைக்க வேண்டிய பகுதிகளை வெளிப்படாத அளவுக்கு கவனமாக பார்த்து குளிப்பாட்ட வேண்டும்! மையத் குளிப்பாட்டும் போதும் சரி காஃப்பன் அணியும் போதும் சரியே!

• மையத் அணிந்து இருக்கும் ஆடைகளை நீக்கி விட்டால் மேலே நாம் ஏதேனும் ஆடைகள் வைத்து மையத்தின் மர்ம பகுதிகளை முழுமையாக மறைக்க வேண்டும்! மர்ம பகுதிகள் ஒரு போதும் வெளிப்பட கூடாது!

3) அசுத்தங்களை சுத்தம் செய்தல் :

• மரணம் நெருக்கியவர்கள் அந்த நேரத்தில் ஏற்படும் பயத்தினால் உடலில் இருந்து மலம் ஜலம் வெளி ஆகி விடும்!

• நாம் குளிப்பாட்டுவதற்கு முன்பு இறந்தவரின் உடலை தலையின் பின் பகுதியை பிடித்து அமர்ந்த வாறு உயர்த்தி பின்பு மையத்தின் அடி வயிற்று பகுதியை லேசாக அழுத்தி உடலில் உள்ள அசுத்தங்களை ‎வெளியேற்ற வேண்டும் இவ்வாறு செய்வதால் உடலில் உள்ள அனைத்து அசுத்தமும் வெளி ஆகி விடும்!

4) மர்ம பகுதிகளை கழுவதல் :

• அசுத்தம் வெளி ஆகி விட்டால் இதன் பின்பு நாம் ஒற்றைப்படையாக மூன்று அல்லது அதற்கு மேல் ஒற்றைப்படையாக  நீர் ஊற்றி அசுத்தம் ஏதேனும் வெளி ஆகினால் அதை சுத்தம் செய்ய வேண்டும்!

• கைகளில் கை உறை அணிந்து கொண்டு மர்ம பகுதிகளுக்கு நீர் செலுத்தி அந்த பகுதிகளை தூய்மையாக சுத்தம் செய்ய வேண்டும் மேலே உள்ள ஆடைகள் விளக்காத வாறு செய்ய வேண்டும்!

• பின்பு மீண்டும் தலை முதல் கால் பகுதி வரை ஒற்றைப்படையாக நீர் ஊற்ற வேண்டும் பின்பு,

5) மையத்திற்கு ஒளு செய்து விடுதல் :

• பிஸ்மில்லாஹ் என்று கூறி மையித்தின் வலப் பக்கத்திலிருந்து ஒளு செய்யும் உறுப்புக்களிலிருந்து துவங்க வேண்டும்!

• நாம் எப்படி ஒளு செய்யும் பொழுது ஒவ்வொரு உறுப்பையும் மூன்று முறை (மஸக் தவிர) கழுவுகின்றோமோ அதே போன்று மையத்திற்கு செய்து விட வேண்டும்!

• மணிகட்டு மூன்று முறை கழுவிகின்றோமோ அதே போன்று மையத்திற்கு கழுவி விட வேண்டும்!

• நீரை கையில் நனைத்து கொண்டு வாய் பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்!

• பின்பு கைகளில் தண்ணீரை நனைத்து கொண்டு மூக்கு பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்!

• பின்பு முகத்தை மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும் பின்பு முழக்கை வரை ஒளு செய்ய வேண்டும்! பின்பு

• தலைக்கு மஸஹ் செய்து விட வேண்டும் ஒரு முறை! பின்பு கடைசியாக கரண்டை கால் பகுதிகளை மூன்று முறை முழுமையாக கழுவி விட வேண்டும்!

6) வாய் மற்றும் மூக்கு பகுதியை மூடுதல் :

• குளிப்பாட்டும் போது இழந்த இலை அல்லது சோப்பு பயன் படுத்தும் போது அந்த மையத் உடலுக்குள்ளே சென்று விட கூடாது! அதனால் நாம் சிறிது பஞ்சு எடுத்து அதை மூக்கு பகுதியில் உள்ள துவாரதை அடைக்க வேண்டும்! பின்பு வாய் பகுதியை அடைக்க வேண்டும்!

7) உடலை இழந்தை இலை அல்லது சோப்பு போட்டு தேய்க்க வேண்டும் :

• தலை பகுதியில் சிறிது நீர் ஊற்றி பின்பு இழந்தை இலை அல்லது சோப்பு போட்டு தேய்க்க வேண்டும்! பின்பு முகத்தையும் இழந்தை இலை அல்லது சோப்பு போட்டு தேய்க்க வேண்டும்!

• ஆணுக்கு தாடி இருந்தால் அதை கோதி கழுவ வேண்டும்!

• பெண் மையத் ஆக இருந்தால் குளிப்பாட்டும் போது மையத்தின் தலை முடியை பின்னி இருந்தால் அதை களைத்து விட்டு நன்கு கழுவிய பின்பு கடைசியாக மூன்று சடைகள் மட்டும் போட்டு முதுகுக்கு பின்னால் விட வேண்டும்!

8) மையத்தை வலது புறம் சுத்தம் செய்ய வேண்டும் :

• மையத்தின் வலது கை பகுதி - மார்பு பகுதி - வலது தொடை பகுதி - வலது கால் பகுதி என வலது புறம் அனைத்து பகுதிகளையும் இழந்தை இலை அல்லது சோப்பு போட்டு தேய்த்து கழுவ வேண்டும்! ஒற்றைப்படை எண்ணிக்கையில் நீர் ஊற்ற வேண்டும்!

• பின்பு மையத்தை மெதுவாக வலது புறம் திருப்பி வலது முதுகு பகுதி, வலது இடுப்பு பகுதி, வலது தொடை பகுதி வலது கால் பகுதி இவற்றை இழந்தை இலை அல்லது சோப்பு போட்டு தேய்த்து கழுவ வேண்டும்! ஒற்றைப்படை எண்ணிக்கையில் நீர் ஊற்ற வேண்டும்!

9) மையத்தை இடது புறம் சுத்தம் செய்ய வேண்டும் :

• மையத்தின் இடது கை பகுதி - இடது மார்பு பகுதி - இடது தொடை பகுதி - இடது கால் பகுதி என இடது புறம் அனைத்து பகுதிகளையும் இழந்தை இலை அல்லது சோப்பு போட்டு தேய்த்து கழுவ வேண்டும்! ஒற்றைப்படை எண்ணிக்கையில் நீர் ஊற்ற வேண்டும்!

• பின்பு மையத்தை மெதுவாக இடது புறம் திருப்பி இடது முதுகு பகுதி, இடது இடுப்பு பகுதி, இடது தொடை பகுதி இடது கால் பகுதி இவற்றை இழந்தை இலை அல்லது சோப்பு போட்டு தேய்த்து கழுவ வேண்டும்! ஒற்றைப்படை எண்ணிக்கையில் நீர் ஊற்ற வேண்டும்! பின்பு மையத்தை பழைய நிலையிலேயே நேராக ஆக்க வேண்டும்!

10) மர்மஸ்தானம் பகுதியை கழுவுதல் :

• மையத்தின் கால்களை லேசாக விரித்து  பின்பு மையத்தின் மர்மஸ்தான பகுதியில் உள்ள ஆடையை லேசாக உயர்த்தி பின்பு கையை உள்ளே விட்டு மையத்தின் முன் மற்றும் பின் மர்மஸ்தானம் பகுதியை சிறிது நீர் செலுத்தி பின்பு இழந்தை இலை அல்லது சோப்பு போட்டு இரண்டு முறை சுத்தம் செய்ய வேண்டும்!

• இவ்வாறு நாம் குளிப்பாட்டியும் மையத் தூய்மை ஆக வில்லை என்றால் நாம் மீண்டும் சோப்பு அல்லது இழந்தை இலை அல்லது சீயக்காய் போட்டு குளிப்பாட்டலாம்! ஒற்றைப்படையில் நீர் ஊற்ற வேண்டும்!

11) கடைசியாக கற்பூரம் அல்லது சோப்பு அல்லது சீயக்காய் பயன் படுத்துதல் :

• கற்பூரம் இருந்தால் அதை தூள் ஆக ஆக்கி பின்பு அதை நீரில் கலந்து கொள்ள வேண்டும்! இவ்வாறு செய்வது சுன்னாஹ்! அல்லது மீண்டும் நாம் சோப்பு பயன் படுத்தி கொள்ளலாம்!

• நாம் மேலே செய்தது போன்று தலை பகுதி மற்றும் முகத்தை கழுவதல் பின்பு மையத்தின் வலது கை பகுதி மார்பு பகுதி தொடை பகுதி கால் பகுதி என வலது புறம் அனைத்து பகுதிகளையும் கற்பூரம் கலந்த நீரால் கழுவ வேண்டும்! 

• பின்பு மையத்தை மெதுவாக வலது புறம் திருப்பி வலது முதுகு பகுதி, வலது இடுப்பு பகுதி, வலது தொடை பகுதி வலது கால் பகுதி என அனைத்து பகுதிகளையும் கற்பூரம் கலந்த நீரால் கழுவ வேண்டும்!

• பின்பு நாம் மேலே செய்தது போன்று மையத்தின் இடது கை பகுதி - இடது மார்பு பகுதி - இடது தொடை பகுதி - இடது கால் பகுதி என இடது புறம் என அனைத்து பகுதிகளையும் கற்பூரம் கலந்த நீரால் கழுவ வேண்டும்!

• பின்பு மையத்தை மெதுவாக இடது புறம் திருப்பி இடது முதுகு பகுதி, இடது இடுப்பு பகுதி, இடது தொடை பகுதி இடது கால் பகுதி என அனைத்து பகுதிகளையும் கற்பூரம் கலந்த நீரால் கழுவ வேண்டும்!

• பின்பு மையத்தை நேராக ஆக்கி மையத்தின் கால்களை லேசாக விரித்து  பின்பு மையத்தின் மர்மஸ்தான பகுதியில் உள்ள ஆடையை லேசாக உயர்த்தி பின்பு கற்பூரம் கலந்த நீரை செலுத்தி சுத்தம் செய்ய வேண்டும்!

12) மையத்தை துடைக்க வேண்டும் :

• மையத்தின் உடலில் உள்ள அனைத்து நீரையும் துடைக்க ஏதேனும் ஆடை பயன் படுத்தி நீரை நீக்க வேண்டும்!

• முழுமையாக தலை பகுதி கை கால் பகுதி உடல் பகுதி முதுகு பகுதி என அனைத்து பகுதிகளையும் துடைக்க வேண்டும்!

• பின்பு ஏதேனும் நல்ல ஆடை கொண்டு மையத்தின் மறைக்க வேண்டிய பகுதிகளை மறைத்து விட்டு நாம் முன்பே மறைக்க பயன் படுத்திய ஆடையை நீக்கி விட வேண்டும் !

• அல்ஹம்துலில்லாஹ் ஜனாஸா குளிப்பாட்டும் முறை இத்துடன் முடிந்து விட்டது! இதன் பின்பு நாம் கஃப்பன் இட வேண்டும்!

💟 குளிப்பாட்டுபவர் இரகசியம் பேண வேண்டும் :

• இறந்தவரின் உடலைக் குளிப்பாட்டும் போது அந்த உடலில் பல குறைபாடுகள் ‎இருக்கலாம்! அந்த மனிதர் வாழும் காலங்களில் அதை யாருக்கும் தெரியாமல் மறைத்து வாழ்ந்து இருக்கலாம்!

• ஜனாஸாவை குளிப்பாட்ட கூடியவர்கள் அந்த உடலில் உள்ள குறைகளை காண வேண்டிய சூழ்நிலை ஏற்படும்! இவ்வாறு மையத் உடலில் உள்ள குறைகளை காண கூடியவர் ஒரு போதும் யாரிடமும் எதுவும் கூற கூடாது! 

ஒரு முஸ்லிமைக் குளிப்பாட்டுபவர் அவரிடம் உள்ள குறைகளை ‎மறைத்தால் அவரை அல்லாஹ் நாற்பது தடவை மன்னிக்கிறான் ‎என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்!

(நூல் : பைஹகீ : 6655)

💜 செய்ய கூடாதாவைகள் :

1) கசப் என்று மரணம் அடைந்த உடன் குளிப்பாட்டுவார்கள் இவ்வாறு செய்வதற்கு இஸ்லாத்தில் எந்த ஆதாரமும் கிடையாது!

2) மையத் ஆன பின்பு அவர்களின் உடலில் உள்ள மர்மஸ்தானம் முடி அக்குள் முடி மற்றும் நகங்களை வெட்டுவார்கள் சில ஊர்களில் ஆனால் இவ்வாறு செய்ய கூடாது இதற்கு மார்க்கத்தில் எந்த வித ஆதாரமும் கிடையாது! ஆனால் மர்மஸ்தானம் முடி அக்குள் முடி மற்றும் நகங்கள் பார்க்க மோசமான நிலையில் இருந்தால் மட்டும் நாம் நீக்கலாம்!

‎3) ஜனாஸாவைக் குளிப்பாட்டும் போது சில திக்ருகளை ஓதுவார்கள் ஆனால் இஸ்லாம் நமக்கு இவ்வாறு எந்த திக்ரையும் கற்று தரவில்லை!

• அல்லாஹ் நம்மை நம்முடைய அமல்களையும் பொருந்தி கொள்ளுவனாக ஆமின்....!

@அல்லாஹ் போதுமானவன்

வெள்ளி, ஜூன் 09, 2023

சேத்து, சுருக்கி – ஜம்வு, கஸர் தொழுதல்,

சேத்து, சுருக்கி – ஜம்வு, கஸர் தொழுதல்

செவ்வாய், ஜூன் 06, 2023

யூதர்களும் கிறிஸ்தவர்களும் யார்,

யூதர்களும் கிறிஸ்தவர்களும் யார்?
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்,  அவர்களுக்கு இரு மனைவிமார்கள்.
1: முதலாமவர் ஸாரா அலைஹஸ்ஸலாம்:
அவர்களின் மகன் இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம். 
அவரின் மகன் யஃகூப் அலைஹிஸ்ஸலாம்.
இவரில் இருந்து உருவான சந்ததியினரே பனூ இஸ்ராயில்கள்.
(இஸ்ஹாக் அலை, 
அவர்களின் மகன் யஃகூப் அலைஹிஸ்ஸலாம், 
அவர்களின் மகன் யூஸுப் அலைஹிஸ்ஸலாம்,  
மூஸா அலைஹிஸ்ஸலாம்,  
ஹாரூன் அலைஹிஸ்ஸலாம்,  
ஷுஐப் அலைஹிஸ்ஸலாம்,  
தாவூத் அலைஹிஸ்ஸலாம்,  
சுலைமான் அலைஹிஸ்ஸலாம்,  
ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம், 
யஹ்யா அலைஹிஸ்ஸலாம்,
ஈஸா அலைஹிஸ்ஸலாம்.  
அதிகமான இறைத்தூதர்களை பனூஇஸ்ராயீல்களில் இருந்தே அல்லாஹ் அனுப்பினான்.
2: இரண்டாமவர் ஹாஜர் அலைஹஸ்ஸலாம்
அவர்களின் மகன் இஸ்மாஈல் அலைஹிஸ்ஸலாம்  அவர்களின் சந்ததியில் இறுதித்தூதர் முஹம்மத் ஸல் அவர்களைத் தவிர எந்த நபியும் வரவில்லை. இவர்கள் மக்கா  மதீனாவில் பிரச்சாரம் செய்தார்.
அவர்கள் அனைவரும் இஸ்லாத்தையே சிறந்த வாழ்க்கை நெறியாகப் பிரச்சாரம் செய்தார்கள்.
அல்லாஹ் பல அருட்கொடைகளை அவர்களுக்கு வழங்கி இருந்தான்.
يَا بَنِي إِسْرَائِيلَ اذْكُرُوا نِعْمَتِيَ الَّتِي أَنْعَمْتُ عَلَيْكُمْ
وَأَنِّي فَضَّلْتُكُمْ عَلَى الْعَالَمِينَ
இஸ்ராயீலின் மக்களே! உங்களுக்கு நான் வழங்கியிருந்த அருட்கொடையையும், உலக மக்கள் அனைவரையும் விட உங்களை நான் மேன்மைப்படுத்தியிருந்ததையும் எண்ணிப் பாருங்கள்!
(திருக்குர்ஆன் 2:47)
وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنبِيَاءَ وَجَعَلَكُم مُّلُوكًا وَآتَاكُم مَّا لَمْ يُؤْتِ أَحَدًا مِّنَ الْعَالَمِينَ
என் சமுதாயமே! உங்களில் நபிமார்களை ஏற்படுத்தி, உங்களை ஆட்சியாளர்களாக்கி, உலகத்தில் எவருக்கும் கொடுக்காததை உங்களுக்குக் கொடுத்ததின் மூலம் அல்லாஹ் உங்களுக்குச் செய்திருந்த அருட்கொடையை எண்ணிப் பாருங்கள்!” என்று மூஸா தமது சமுதாயத்திற்குக் கூறியதை நினைவூட்டுவீராக!
(திருக்குர்ஆன் 5:20)
وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ ۖ كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ ۖ وَمَا ظَلَمُونَا وَلَٰكِن كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ
உங்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். மன்னு, ஸல்வா(எனும் உண)வை உங்களுக்கு இறக்கினோம். “
(திருக்குர்ஆன் 2:57)
O.  ஆனால் அவர்களோ வரம்பு மீறி இறைத்தூதர்களையே கொலை செய்தார்ககள்.
O.  ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் கொலை செய்தார்கள்.
O.  நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை விபச்சாரத்தில் பிறந்தவர் எனக் கூறி அவர்களை சிலுவையில் அறைய முயற்சித்தார்கள்.
O.  அல்லாஹ்வுக்குப் பிள்ளை இருப்பதாகக் கூறினார்கள். (யூதர்கள் உஸைர் அவர்களை அல்லாஹ்வின் மகன் என்றார்கள்.
O.  கிறிஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்களை அல்லாஹ்வின் மகன் என்றார்கள்.
O.  அவர்களின் மத குருமார்கள் வேதத்தைத் தங்கள் சுய விருப்பப்படி மாற்றியமைத்து பின்னர் இது அல்லாஹ்விடமிருந்து வந்ததாக இட்டுக்கட்டினார்கள்.
O.  இறைத்தூதர்களில் சிலரை ஏற்று சிலரை மறுத்தார்கள்.
யூதர்கள்:  ஈஸா அலைஹிஸ்ஸலாம், ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம், யஹ்யாஅலைஹிஸ்ஸலாம் , முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  ஆகியோரை இறைத்தூதர்களாக ஏற்றுக் கொள்வதில்லை.
கிறிஸ்தவர்கள்:   முஹம்மத் (ஸல்) அவர்களைத் தவிர மற்ற அனைவரையும் நபியாக ஏற்றுக் கொள்கின்றனர்.
முஸ்லிம்களாகிய நாம்:
لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ ۚ
அல்லாஹ்வின் தூதர்களில் எவருக்கிடையேயும் வேற்றுமை காட்டமாட்டோம். (திருக்குர்ஆன் 2:285)
وَالَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِمَۤا اُنْزِلَ اِلَيْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْاٰخِرَةِ هُمْ يُوْقِنُوْنَ‏
(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் மறுமையை உறுதியாக நம்புவார்கள். (அல்குர்ஆன் : 2:4)
O.   யூத, கிறிஸ்தவர்கள் இஸ்லாத்தை விட்டும் பிரிந்து போனவர்கள்.
அல்லாஹ் கூறுறான்:
وَلَا تَكُونُوا كَالَّذِينَ تَفَرَّقُوا وَاخْتَلَفُوا مِن بَعْدِ مَا جَاءَهُمُ الْبَيِّنَاتُ ۚ وَأُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌ
தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்பும் முரண்பட்டுப் பிரிந்து விட்டோரைப் போல் ஆகாதீர்கள். அவர்களுக்கே கடும் வேதனை உண்டு. (திருக்குர்ஆன் 3:105)
O.  அல்லாஹ் இவர்களுக்கு இஸ்லாத்தைத் தான் மார்க்கமாக வழங்கினான். அவர்கள் ஆரம்பத்தில் இஸ்லாத்தையே பிரச்சாரம் செய்தார்கள். பின்னர் வேதத்தில் கையாடல் செய்தார்கள். இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விட்டார்கள்.
O.  இவர்கள் அல்லாஹ், றஸுலுடைய சாபத்தை பெற்றவர்களே.
لُعِنَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ بَنِىْۤ اِسْرَآءِيْلَ عَلٰى لِسَانِ دَاوٗدَ وَعِيْسَى ابْنِ مَرْيَمَ‌  ذٰ لِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا يَعْتَدُوْنَ‏
இஸ்ராயீலின் சந்ததிகளில் எவர்கள் (இவ்வேதத்தை) நிராகரிக்கின்றார்களோ அவர்கள் தாவூத் மற்றும் மர்யமின் மகன் ஈஸா ஆகிய இவர்கள் நாவாலும் சபிக்கப்பட்டே இருக்கின்றனர். ஏனென்றால், அவர்கள் (அக்காலத்திலும்) வரம்பு கடந்தே பாவம் செய்து வந்தனர். (அல்குர்ஆன் : 5:78)
0.  ஒரு முஸ்லிமுக்கு ஈமான் கொண்ட ஒருவரை விட நேசத்துக்குரியவராக. யூத கிறிஸ்தவர்கள் ஆகிவிட முடியாது.
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الْيَهُوْدَ وَالنَّصٰرٰۤى اَوْلِيَآءَ ‌ؔۘ
முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்.
بَعْضُهُمْ اَوْلِيَآءُ بَعْضٍ‌
(உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்;
وَمَنْ يَّتَوَلَّهُمْ مِّنْكُمْ فَاِنَّهٗ مِنْهُمْ‌
உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்.
اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‏
நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான். (அல்குர்ஆன் : 5:51)
وَمَنْ يَّتَوَلَّ اللّٰهَ وَ رَسُوْلَهٗ وَالَّذِيْنَ اٰمَنُوْا فَاِنَّ حِزْبَ اللّٰهِ هُمُ الْغٰلِبُوْنَ‏
அல்லாஹ்வையும், அவனது தூதரையும், முஃமின்களையும் யார் நேசர்களாக ஆக்குகிறார்களோ, அவர்கள் தான் ஹிஸ்புல்லாஹ் (அல்லாஹ்வின் கூட்டத்தினர்) ஆவார்கள்; நிச்சயமாக இவர்களே மிகைத்து வெற்றியாளர்களாவார்கள்.
(அல்குர்ஆன் : 5:56)
0.  உள்ளத்தில் ஈமானைச் சுமந்து பாவம் செய்து கொண்டுள்ள இறைவிசுவாசி இறை  மறுப்பாளனை விட அல்லாஹ்விடத்தில் மேலானவன்.
0.  இன்று உலகில் பெறும் சமூகமாக உள்ள கிறிஸ்தவர்களினதும். இன்று உலகில் சிறிய சமூகத்தாராக உள்ள யூதர்களினதும் விருப்பம் என்ன தெரியுமா..?
وَلَن تَرْضَىٰ عَنكَ الْيَهُودُ وَلَا النَّصَارَىٰ حَتَّىٰ تَتَّبِعَ مِلَّتَهُمْ ۗ
யூதர்களும், கிறித்தவர்களும் அவர்களின் மார்க்கத்தை நீர் பின்பற்றும் வரை உம்மை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.
قُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَىٰ ۗ
“அல்லாஹ்வின் வழியே (சரியான) வழியாகும்’ எனக் கூறுவீராக!
وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُم بَعْدَ الَّذِي جَاءَكَ مِنَ الْعِلْمِ ۙ مَا لَكَ مِنَ اللَّهِ مِن وَلِيٍّ وَلَا نَصِيرٍ
உமக்கு விளக்கம் வந்த பின் அவர்களின் மனோ இச்சைகளை நீர் பின்பற்றினால், அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றுபவனோ, உதவுபவனோ உமக்கு இல்லை.
(திருக்குர்ஆன் 2:120)
இன்றைக்கு எல்லாத் துறைகளிலும் முழு உலகமக்களும் அவர்களைப் பின்பற்ற வேண்டும். அவர்களின் கலாச்சாரம் உலக அளவில் பரவ வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்படுவோர் இவர்கள்.
0.  இத்தகைய பெறுமை பிடித்த பண்புடைய சபிக்கப்பட்ட சமூகமான யூத,கிறிஸ்தவ சமூகத்துக்கு மாறு செய்வதை இஸ்லாம் மார்க்கமாக்கியுள்ளது.
1)  காலணிகளுடனும், காலுறைகளுடனும் தொழுதல்.
. روى أبو داود (652) 
عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ رضي الله عنه قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( خَالِفُوا الْيَهُودَ ، فَإِنَّهُمْ لَا يُصَلُّونَ فِي نِعَالِهِمْ وَلَا خِفَافِهِمْ ) وصححه الألباني في صحيح أبي داود .
காலணிகளுடன் தொழுது) யூதர்களுக்கு மாறு செய்யுங்கள். ஏனெனில் அவர்கள் காலணிகளுடனும் காலுறைகளுடனும் தொழ மாட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவுத்)
வாழ்வில் ஒருமுறையாவது இந்த சுன்னாவை நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிஞர்கள் சொல்லுகின்றார்கள்.
2) தலை முடிக்குச் சாயமிடுதல்:
عن أبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ( إِنَّ الْيَهُودَ وَالنَّصَارَى لَا يَصْبُغُونَ فَخَالِفُوهُمْ ) رواه البخاري (3462) ومسلم (2103) .
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 
யூதர்களும், கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. எனவே, நீங்கள் (அவற்றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள். 
என அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள். (ஸஹீஹ் புகாரி : 3462)
நபிகளார் யூத கிறிஸ்தவர்களுக்கு மாறு செய்யும்முகமாக தலைமுடிக்குச் சாயமிடச் சொன்னார்கள் இன்று நாம் யாரைப் பின்பற்றிச் சாயமிடுகிறோம்..?
3) மாதவிடாய் காலத்தில் மனைவியுடன் ஒன்றாக இருத்தல்:
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிடமாட்டார்கள்; வீடுகளில் அவர்களுடன் ஒட்டி உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே,நபித்தோழர்கள் (இது குறித்து) நபியவர்களிடம் கேட்டனர்.
அப்போது ,2:222 வசனத்தை அல்லாஹ் அருளினான்.
وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ ۖ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ ۖ وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّىٰ يَطْهُرْنَ ۖ فَإِذَا تَطَهَّرْنَ فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ أَمَرَكُمُ اللَّهُ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ
மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர்.”அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்’ எனக் கூறுவீராக!
 (திருக்குர்ஆன் 2:222)
அதனையடுத்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் தாம்பத்திய உறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்துகொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
இந்தச் செய்தி யூதர்களுக்கு எட்டியபோது, நம்முடைய காரியங்களில் எந்த ஒன்றுக்கும் மாறு செய்யாமல் விடக்கூடாது என்பதே இந்த மனிதரின் விருப்பம் என்று கூறினார்கள்.
உசைத் பின் ஹுளைர் ரளியல்லாஹு அன்ஹு, அப்பாத் பின் பிஷ்ர் ரளியல்லாஹு அன்ஹு  ஆகியோர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் இன்னின்னவாறு கூறுகின்றனர். எனவே, (மாதவிடாய் ஏற்பட்டுள்ள) பெண்களுடன் நாமும் ஒட்டி உறவாடாமல் இருந்தாலென்ன? என்று கேட்டனர்.
(இதைக் கேட்டதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் (கோபத்தால்) நிறம் மாறிவிட்டது...
(ஸஹீஹ் முஸ்லிம் : 507)
இஸ்லாம் தனித்துவமான மார்க்கம் இறைத் திருப்தியைத் தவிர வேறு நோக்கம் இஸ்லாத்தில் இல்லை.
4) ஸஹர் செய்தல்:
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறினார்கள்:
நமது நோன்பிற்கும், வேதக்காரர்களின் நோன்பிற்கும் இடையில் உள்ள வேறுபாடு சஹர் நேரத்தில் உண்பதுதான்.
இதை அம்ர் பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் : 2001)
عن أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةً. رواه البخاري (1923) ، ومسلم (1095).
நீங்கள் ஸஹர் செய்யுங்கள். நிச்சியமாக ஸஹர் செய்வதில் பரக்கத் உள்ளது.
5) ஆஷுரா நோன்பில் யூத,கிறிஸ்தவர்களுக்கு மாறு செய்தல்:
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?” என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள், “இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்” என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் : 2088)
பிறை ஒன்பது பிடிக்கும் தாஸுஆ நோன்பானது யூதர்களுக்கு மாறு செய்வதற்காகப் பிடிக்கின்ற நோன்பாகும். பிறை பத்து பிடிக்கும் ஆஷூரா நோன்பு மூஸா (அலை) அவர்களும், பனூ இஸ்ரவேலர்களும் பிர்அவ்னிடமிருந்து பாதுகாக்கப்பட்டு பிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்பட்டமைக்கு அல்லாஹ்வுக்கு நன்றி கூறுவதற்காகவுமே இந்த நோன்பை மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும், அவர்களின் சமூகமும் நோற்றுள்ளார்கள்.
6) ரோம், பாரசீக மன்னர்களுக்கு முன் மரியாதைக்காக எழுந்து நிற்பதைப்போல் எழுந்து நிற்பதை தடுத்தார்கள்:
ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்தநிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்தநிலையில் அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன் ரோம், பாரசீக மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே அதுபோன்ற செயலைச் செய்யமுற்பட்டு விட்டீர்களே. இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள். அவர்கள் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்றுதொழுங்கள். அவர்கள் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்துதொழுங்கள் என்று கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 701)
இன்று ஆசிரியர் வரும்போது மாணவன் எழுந்து நிற்காவிட்டால் என்னவாகும்…?
(7)  யூதர்கள் பயன்படுத்திய ஒரு வார்த்தைக்கு மாற்றமாக அல்லாஹ் வசனத்தை இறக்கினான்:
யூதர்கள் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களை இரட்டைப் பொருள் கொண்ட “ராஇனா” (எங்களைக் கவனித்து வழி நடத்துங்கள், ஆடுமேய்க்கும் இடையரே ) பொன்ற கருத்துடைய வாசகத்தைப் பயன்படுத்தி வந்த போது அல்லாஹ் 2:104 வது வசனத்தை இறக்கினான்.
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقُوْلُوْا رَاعِنَا
ஈமான் கொண்டோரே! நீங்கள் (நம் ரஸூலைப் பார்த்து இரண்டு அர்த்தம் கொடுக்கும் சொல்லாகிய) “ராஇனா” என்று சொல்லாதீர்கள்.
وَ قُوْلُوا انْظُرْنَا وَاسْمَعُوْا ‌ وَلِلْڪٰفِرِيْنَ عَذَابٌ اَلِيْمٌ‏
(இதற்குப் பதிலாக அன்புடன் நோக்குவீர்களாக என்னும் பொருளைத் தரும் சொல்லாகிய) “உன்ளுர்னா” என்று கூறுங்கள். இன்னும், அவர் சொல்வதைக் கேளுங்கள். மேலும் காஃபிர்களுக்கு நோவினை தரும் வேதனையும் உண்டு. (அல்குர்ஆன் : 2:104)
😎 நபிமார்களின் அடகஸ்தளங்களை வணக்கஸ்தளமாக ஆக்கிக் கொள்வது தொடர்பாக வந்துள்ள எச்சரிக்கை :
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா  அவர்கள் கூறினார்கள்;
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது, தம் முகத்தின் மீது சதுரமான கருப்புத் துணி ஒன்றைப் போட்டுக் கொண்டார்கள். வெப்பத்தை உணரும்போது அதைத் தம் முகத்திலிருந்து அகற்றி விடுவார்கள். அதே நிலையில் அவர்கள் இருந்து கொண்டிருக்க, ‘யூதர்களின் மீதும் கிறிஸ்தவர்களின் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். தம் இறைத்தூதர்களின் அடக்கஸ்தலங்களை அவர்கள் வணக்கஸ்தலங்களாக ஆக்கினார்கள்’ என்று கூறி, அவர்கள் செய்ததைப் போன்று செய்யக் கூடாது என்று (தம் சமுதாயத்தாரை) எச்சரித்தார்கள்.  (ஸஹீஹ் புகாரி : 3453, 3454)
9) மாற்றுமதக் கலாச்சாரத்தை நடைமுறைப்படுத்த நினைப்பது தவறாகும்.
அபூவாகித் அல்லைத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
“நாம் இஸ்லாத்தை ஏற்ற புதிதில் நபி(ஸல்) அவர்களுடன் ஹுனைன் போருக்காகப் போய்க்கொண்டிருந்தோம். (இவர்கள் மக்கா வெற்றியின் போது இஸ்லாத்தில் இணைந்தவர்கள்.)
நாம் ஒரு மரத்தைக் கடந்து சென்றோம். காஃபிர்கள் ஒரு இலந்தை மரத்தைப் புனிதமாகக் கருதி வந்தனர். அதற்குத் “தாது அன்வாத்” என்பது பெயராகும்.
இந்த மரத்திற்குக் கீழே இஃதிகாஃப் இருந்தனர். போருக்குப் போகும் போது இந்த மரத்தில் வாலைக் கொழுகி வைத்து விட்டு எடுத்துச் செல்வார்கள். (அப்படிச் செய்தால் போரில் வெற்றி பெறலாமென்பது அவர்களது நம்பிக்கையாகும்.)
எனவே நாம் நபி(ஸல்) அவர்களிடம், “அவர்களுக்கு “தாது அன்வாத்” என்ற மரம் இருப்பது போல், எமக்கும் ஒரு “தாது அன்வாத்” என்ற மரத்தை ஏற்படுத்துங்கள்!” என நபி(ஸல்) அவர்களிடம் நாம் கேட்டோம்.
இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹு அக்பர்! (அல்லாஹ்வே மிகப் பெரியவன்!) எனக் கூறிப் பின்னர்,
“பனூ இஸ்ராயீலர்கள் மூஸா நபியிடம் கேட்டது போல் நீங்களும் என்னிடம் கேட்டுள்ளீர்கள்.(நாம் அப்படிக் கேட்டது பெரிய தவறு என உணர்த்தினார்கள்.)
மூஸா (அலை) அவர்களும் அவர்களின் சமூகமும் தமது சிலைகளுக்கு வழிபாடு செய்துகொண்டிருக்கும் ஒரு கூட்டத்தாரிடம் வந்தனர். (அவ்வேளை), அவர்கள், “மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போல் எமக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்துவீராக!” என்று கேட்டனர் (7:138) என்ற குர்ஆன் வசனத்தை ஓதிக் காட்டிய பின்னர்.
நபிகளார் சொன்னார்கள் உங்களுக்கு முன்பிருந்தவர்களது வழிமுறைகளை நீங்கள் பின்பற்றுவீர்கள்!” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்கள் கூறினார்கள்.
 (திர்மிதி 2180)
ﺣﺴﻦ ﺻﺤﻴﺢ 4031 ﻋﻦ اﺑﻦ ﻋﻤﺮ، ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻣﻦ ﺗﺸﺒﻪ ﺑﻘﻮﻡ ﻓﻬﻮ ﻣﻨﻬﻢ» ( رواه الترمذي)
“எவன் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாகச் செயல்படுகின்றானோ அவனும் அந்தக்கூட்டத்தைச் சேர்ந்தவனே” என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்கள் கூறினார்கள் (திர்மதி).
இது எவ்வளவு கடும் எச்சரிக்கை, இதில் எவ்வாறு ஒரு முஸ்லிம் அலட்சியமாக இருக்க முடியும்?
صحيح البخاري عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ( لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَأْخُذَ أُمَّتِي بِأَخْذِ الْقُرُونِ قَبْلَهَا، شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ)). فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ كَفَارِسَ وَالرُّومِ. فَقَالَ: ((وَمَنِ النَّاسُ إِلاَّ أُولَئِكَ)).
அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு  அறிவித்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறினார்கள் “என் சமுதாயத்தார் தமக்கு முந்தைய சமுதாயங்களின் நடைமுறைகளை சாண் சாணாக, முழம் முழமாகப் பின்பற்றி நடக்காத வரை மறுமை நாள் வராது“ என்று . உடனே, “இறைத்தூதர் அவர்களே! பாரசீகர்கள் மற்றும் ரோமர்கள் போன்றவர்களையா (இந்தச் சமுதாயத்தார் பின்பற்றுவர்)?“ என வினவப்பட்டது. அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள், “அவர்களைத் தவிர (இன்று) மக்களில் வேறு யார் உள்ளனர்?“ என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
(ஸஹீஹ் புகாரி)
O. கிறிஸ்மஸ் கொண்டாட்டம்:
ஒவ்வொருவருடமும் டிசம்பர் 25 ம் திகதி முதல் ஈஸா (அலை) அவர்களின் பிறந்த தினம் என அத்தினத்தை முன்னிட்டு ஜனவரி ஒன்று வரை கிரிஸ்தவர்கள் அவர்களின் பண்டிகைக்குரிய நாட்களாக கொண்டாடி வருகின்றனர். 
உண்மையில் இத்தினங்களில் தான் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம்  அவர்கள் பிறந்தார்களா..? என கேட்டால் அதற்கான எந்த சான்றுகளும் குர்ஆன் ஹதீஸில் கிடையாது.  கிரிஸ்தவர்களில் அனைவரும் இந்நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ளவுமில்லை என்பதே உண்மை.  
ஒரு முஸ்லிம் இன்னொரு மதம் சார்ந்த நம்பிக்கையை மதிக்கலாம். ஆனால் அதை ஆதரிக்க முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை என்றிருக்க அவர்களின் பண்டிகை தினத்தில் வாழ்துக்களை பரிமாறிக்கொள்வது ஆகுமானதில்லை.  
குறிப்பாக இஸ்லாத்தை விட்டு பிரிந்து சென்ற யூத கிரிஸ்தவர்களுக்கு மாறு செய்ய வேண்டும் என்பதே இஸ்லாத்தின் கொள்கையாகும். நாம் அவர்களுக்கு வாழ்த்துக் கூறுவது அவர்களின் செயலுக்கு நாம் வழங்கும் அங்கிகாரமாக மாறிவிடும்.
இஸ்லாத்தின் தனித்துவத்தைப் பேணி 
பிறமதக் கலாசாரங்களிலிருந்து விலகி நடக்க அல்லாஹ் எமக்கு அருள் புரிவானாக.!
10)  புரிந்து கொள்ள வேண்டிய பகுதி:
மாற்று மதத்தினருடன் சக வாழ்வைப் பேணுதல், கொடுக்கல் வாங்கல் செய்தல், வியாபாரம் செய்தல், அவர்கள் மார்க்கத்துக்கு முரணற்ற விருந்துகளுக்கு அழைத்தால் அதில் கலந்து கொள்ளுதல்’ அவர்களுக்கு ஆபத்தின் போது உதவி செய்தல், போர்களின் போது சமாதானத்தை விரும்புவோருக்கு அடைக்களம் கொடுத்தல் போன்றவை தடை கிடையாது இவை இஸ்லாம் பேணச் சொல்லும் உறவு முறைகலாகும். எமது மார்க்கம் எதை வரம்பாகா சொல்லியுள்ளதோ அவற்றைப் பேணி நடப்பது என்மீது கடமையாகும். 
அல்லாஹ் மிக அறிந்தவன்.
அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் இந்த மார்க்கத்தில் தெளிவைத் தருவானாக.!

நல்ல மனிதனாக வாழ,

நல்ல மனிதனாக வாழ 

ஒரு முஃமின் இன்னொரு முஃமினிடம் ஒரு தவறைக் காணும் போது அவர் அந்தத் தவறிலிருந்து அவரைத் திருத்துவதும் அவரிடம் நன்மையை ஏவுவதும் கடமையாகும்.

நான் ஒருமுறை நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “இஸ்லாத்தைத் தழுவுவதாக தங்களிடம் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வந்திருக்கின்றேன்” என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் நலம் நாட வேண்டும்” என்று எனக்கு நிபந்தனை விதித்தார்கள்.

அறி : ஜரீர் இப்னு அப்தில்லாஹ் (ரலி), நூல் : புகாரி-58 

மென்மையே நன்மை

இந்த ஹதீஸின் அடிப்படையில் நாம் நம்முடைய சக இஸ்லாமிய தோழருக்கு நன்மையைக் கருத வேண்டும். அதையொட்டி அவரிடம் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக் காட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம். இதை ஆதாரமாகக் கொண்டு நாம் ஒரு தவறைச் சுட்டிக் காட்ட முனைகின்ற போது அவரிடம் ஒரே பாய்ச்சலில் பாய்ந்து விடக் கூடாது.

தவறைச் சுட்டிக் காட்டுவதில் ஒரு முரட்டுத்தனம் வந்து விடக் கூடாது. தவறை எப்படிச் சுட்டிக் காட்ட வேண்டும் என்பதை இஸ்லாம் தகவாக சொல்லிக் காட்டுகின்றது. இதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உள்ள முன்னுதாரணத்தை வாழ்க்கையில் நாம் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்கும் போது, ஒரு கிராமவாசி பள்ளிக்குள் நுழைந்து, “யா அல்லாஹ்! எனக்கும் முஹம்மதுக்கும் மன்னிப்பை வழங்குவாயாக! எங்களுடன் சேர்த்து வேறு யாருக்கும் நீ மன்னிப்பளிக்காதே!” என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உடனே சிரித்து விட்டார்கள். “(அல்லாஹ்வின்) விசாலமான தன்மைக்கு நீ தடை விதிக்கின்றாயே!” என்று கூறினார்கள்.

பிறகு அவர் பள்ளியின் ஓரத்தில் ஆடையை அகற்றி சிறுநீர் கழிக்கலானார். (தான் தவறு செய்து விட்டோம் என்று) அவர் உணர்ந்த பின் என்னருகில் வந்து நின்று கொண்டு, “அவர்கள் கடுமையாக எச்சரிக்கவில்லை. ஏசவில்லை” என்று சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இது பள்ளிவாசலாகும். இதனுள் சிறுநீர் கழிக்கப் படலாகாது. இது அல்லாஹ்வை நினைவு கூர்வதற்காகவும் தொழுவதற்காகவுமே கட்டப் பட்டுள்ளது” என்று கூறி ஒரு வாளி தண்ணீர் கொண்டு வர உத்தரவிட்டார்கள். அது அவரது சிறுநீரில் ஊற்றப்பட்டது.

அறி : அபூஹுரைரா (ரலி), நூல் : இப்னுமாஜா-529 (522)

ஒரு கிராமவாசி பள்ளிவாசலில் சிறுநீர் கழித்து விட்டார். உடனே மக்கள் அவரைப் பிடித்தனர். நபி (ஸல்) அவர்கள், “அவரை விட்டு விடுங்கள். அவர் கழித்த சிறுநீர் மீது ஒரு வாளி தண்ணீரை ஊற்றி விடுங்கள். நீங்கள் நளினமாக எடுத்துச் சொல்லக் கூடியவர்களாக அனுப்பப் பட்டுள்ளீர்கள். கடினமாக எடுத்துச் சொல்பவர்களாக நீங்கள் அனுப்பப் படவில்லை” என்று கூறினார்கள்.

அறி : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி-220 

பள்ளிவாசலில் சிறுநீர் கழித்து விட்டதால் தன்னை நபி (ஸல்) அவர்கள் கண்டிப்பார்கள் என்று அந்தக் கிராமவாசி எதிர்பார்க்கின்றார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல் எதுவும் நடக்கவில்லை. அதே சமயம் அந்தக் கிராமவாசியை நோக்கிப் பாயும் மக்களிடம் நபி (ஸல்) அவர்கள் நளினத்தைப் போதிக்கின்றார்கள்.

தவறைச் சுட்டிக் காட்டுவதாகக் கூறி, தவறு செய்தவரை கடித்துக் குதறி விடும் பழக்கம் நம்மில் பலரிடம் உள்ளது. அத்தகையவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த நடைமுறையில் அழகிய படிப்பினை உள்ளது.

பார்வை ஒன்றே போதும்!

ஒருவர் தன் நண்பரிடம் ஒரு பொருளைக் கொடுத்து, வெளியில் யாரிடமும் இதைக் கொடுக்கக் கூடாது என்று சொல்கிறார். இவரோ நண்பரின் வேண்டுகோளை மீறி அடுத்தவரிடம் கொடுத்து விடுகின்றார். அவர் திருப்பித் தர வரும் போது உரிமையாளர் அங்கு இருக்கின்றார். தனது உத்தரவை நண்பர் அப்பட்டமாகவே மீறி விட்டார் என்று தெரிந்த உரிமையாளர் நண்பர் மீது ஒரு பார்வை செலுத்துகின்றார். இந்தப் பார்வையில் மின்னல் பாய்ச்சிய மின்சாரத் தாக்குதல் அந்த நண்பரைப் படாத பாடு படுத்தி விடும். அனலில் பட்ட புளுவாக அவரை நெளிய வைத்து விடும். அந்தப் பார்வை பல கோடி அர்த்தங்களை அந்த நண்பரிடம் சொல்லி முடித்து விடும். இதற்குப் பிறகு வார்த்தைகள் தீயாக, ஏன் தென்றலாகக் கூட வரத் தேவையில்லை. இதிலேயே அந்த நண்பர் உரிய பாடத்தைப் பெற்றுக் கொண்டு விடுவார்.

இது போல் 9 மணிக்கு வரவேண்டிய ஊழியர் ஒருவர் அரை மணி நேரம் தாமதமாக வருகின்றார் என்றால் முதலாளி அவரைக் கடுமையான வார்த்தைகளால் வசை பாட வேண்டியதில்லை. கடிகார முட்களைப் பார்த்தாலே போதும். அது அந்த ஊழியரின் இதயத்தைத் தைத்து விடும். இப்படி ஒரு அணுகுமுறையை நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையிலிருந்து நாம் பெறுகின்றோம்.

நபியின் அனுகுமுறையில் நமக்கு பாடம் இல்லையா?

அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குப் பணியாள் எவரும் இல்லாத நிலையில் மதீனாவுக்கு வந்தார்கள். ஆகவே அபூதல்ஹா (ரலி) அவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! அனஸ் புத்திசாலியான சிறுவன். அவன் தங்களுக்கு ஊழியம் செய்யட்டும்” என்று கூறினார்கள்.

ஆகவே நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பிரயாணத்திலும் ஊரில் இருக்கும் போதும் பணிவிடைகள் செய்து வந்தேன். நான் செய்த எந்தச் செய்கைக்காகவும் “இதை ஏன் இப்படிச் செய்தாய்?’ என்றோ, நான் செய்யாத எந்த விஷயத்திற்காகவும் “இதை ஏன் நீ இப்படிச் செய்யவில்லை’ என்றோ என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டதேயில்லை.

நூல் : புகாரி-2768 

இன்று இந்த அணுகுமுறைகளை முதலாளி தன் தொழிலாளியிடம் அனுசரிப்பதில்லை. நண்பர்கள் தங்களுக்குள் அலங்கரித்துக் கொள்வதில்லை. இப்படியொரு தன்மை இரு தரப்பிலும் நிலவுகின்ற போது அங்கு அமைதி தழுவும். பணி சிறக்கும். இதற்கு மாற்றமாக ஒரு நல்ல நண்பர் அல்லது ஒரு நல்ல ஊழியர் ஏற்கனவே குற்ற உணர்வில் இருக்கும் போது, அவரிடத்தில் சீறிப் பாயும் கடின வார்த்தைகள் அவரை சீர்குலைய வைக்கின்றன. அனஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பத்து ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்கள். இந்தப் பத்தாண்டு காலத்தில் ஏதேனும் பிசகுதல் இல்லாமல் இருந்திருக்க முடியாது. ஆயினும் நபி (ஸல்) அவர்களின் மென்மையான அணுகுமுறையினால் அது சரி செய்யப்பட்டிருக்கும் என்பதை நாம் விளங்க முடிகின்றது.

இன்னொரு விஷயத்தையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். முஹம்மது (ஸல்) அவர்களைப் போன்று முதலாளி மட்டும் இருந்தால் போதாது. ஊழியராக இருப்பவர் அனஸ் (ரலி) அவர்களைப் போன்று முதலாளியின் எதிர்பார்ப்புகளை உள்வாங்கிக் கொண்டு செயல்படும் உண்மை உணர்வுள்ளவராகவும் இருக்க வேண்டும்.

அழகிய ஆசிரியர்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அழகிய நற்பண்புக்கு இன்னோர் எடுத்துக்காட்டு!

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருக்கும் போது கூட்டத்தில் ஒருவர் தும்மினார். உடனே நான், “யர்ஹமுகுமுல்லாஹ் – அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக’ என்று சொன்னேன். உடன் மக்கள் என் மீது தங்கள் பார்வைகளைச் செலுத்தினர். “(உங்கள்) தாய் தொலைந்து போகட்டும்! உங்கள் செய்தி என்ன? என்னையே பார்க்கின்றீர்களே!” என்று நான் கேட்டேன். அதற்கு நபித்தோழர்கள் என்னை (கண்டிக்கும் விதமாக) தங்கள் தொடைகளில் கைகளால் அடித்துக் காட்டினர். அவர்கள் என்னைப் பேசாமல் இருக்கச் சொல்கின்றார்கள் என்று அறிந்து மவுனமாகி விட்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் (கடுமையாகப் பிடிப்பார்கள் என்று நினைத்தேன்) என் தாயும் தந்தையும் அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும். அவர்களை விட அழகிய முறையில் போதிக்கும் ஓர் ஆசிரியரை அவர்களுக்கு முன்னரும் பின்னரும் நான் கண்டதே இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் என்னை அரற்றவில்லை. என்னை அடிக்கவில்லை. என்னை ஏசவுமில்லை. “நிச்சயமாக இது தொழுகை! இதில் மக்கள் பேச்சு எதுவும் பேசுதல் முறையாகாது. நிச்சயமாக தொழுகை என்பது தஸ்பீஹ், தக்பீர், குர்ஆன் ஓதுதல் என்பது மட்டும் அடங்கியதாகும்” என்று கூறினார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

அறி : முஆவியா பின் ஹகம் (ரலி), நூல் : முஸ்லிம்-935 (836)

இந்த ஹதீஸை அறிவிக்கும் முஆவியா பின் ஹகம் (ரலி) தொழுகையில் தான் பேசிய பேச்சுக்காக நபி (ஸல்) அவர்களிடம் சரியாக வாங்கிக் கட்டப் போகின்றோம் என்று கனமான உள்ளத்தோடு காத்திருக்கின்றார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களோ அவர் செய்த செயல்கள் எதையும் கண்டனம் செய்யவில்லை என்பதை இங்கு காண்கிறோம். அதற்காக அந்தச் செயலை நபி (ஸல்) அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்று கூற முடியாது.

சம்பந்தப் பட்ட அவரே தவறு என்று உணர்ந்து குற்ற உணர்வில் கூனி குறுகிப் போயிருக்கும் அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேலும் அவற்றைச் சொல்லி குத்திக் காட்ட விரும்பவில்லை. ஏனெனில் அவர்கள் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள். எதையும் அளவுக்கு மீறி கூறினால் அது அமிர்தமாக இருப்பினும் நஞ்சாகி விடும் என்ற மனித உளவியல் ஓட்டத்தைப் புரிந்த புனிதத் தலைவர் அவர்கள். அதனால் உடன்பாட்டு மறையாக, பாஸிடிவாக எதைச் சொல்ல வேண்டுமோ அதை மட்டும் சொல்லி முடிக்கின்றார்கள்.

இதுபோன்ற இதம், பதம் நம்மை என்றும் ஆட்கொள்ளும் விதத்தில் நமது பயணத்தை அமைத்துக் கொள்ளும் நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!

பிரபல்யமான பதிவுகள்