நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

சனி, ஜூலை 29, 2023

இஸ்லாம் கூறும் குளிப்பின் ஒழுக்கம் முறை,

கடமையான குளிப்பும், நிறைவேற்றும் முறையும்⁉️ தண்ணீர் கிடைக்காது விட்டால் கடமையான குளிப்பை எவ்வாறு நிறைவேற்றுவது⁉️

“நீங்கள் குளிப்பு கடமையானவர்களாக இருந்தால் குளித்து உடல் முழுவதையும் சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
(அல்குர் ஆன் 5:6)

குளிப்புக் கடமையாகக் கூடிய சில காரியங்களை இஸ்லாம் கூறுகின்றது. ஆண், பெண்ணுக்கு அக்காரியங்கள் ஏற்படுமாயின் குளிப்பு கடமையாகிவிடும். அவை பின்வருமாறு:

விந்து வெளிப்படல்:
“இச்சை நீர்வெளிப்பட்டால் வுழூச் செய்ய வேண்டும். விந்து வெளிப்பட்டால் குளிக்க வேண்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் அலி (ரழி), ஆதாரம்: திர்மிதி-114, இப்னுமாஜா-504, அபூதாவூத்-206)

இச்சை நீருக்கும் விந்துக்கும் வித்தியாசம் உண்டு. விந்து (மனீ) கடினமான வெள்ளை நிற திரவப் பொருளாகும். இச்சை நீர் (மதீ, வதீ) வெள்ளை நிறமான கடினமில்லாத சாதாரண திரவப் பொருளாகும். இது சிறுநீர் கழிக்குபோது அல்லது இலேசான உணர்வின்போது வெளியாகும்.

அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உண்மையைக் கூற வெட்கப்படமாட்டான். பெண்ணுக்கு ஸ்கலிதம், ஏற்பட்டால் அவள் குளிப்பது அவசியமா? என்று ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது, ஆம்! ஈரத்தை அவள் (மேனியில், ஆடை யில்) கண்டால் குளிக்க வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப் பவர்: உம்மு ஸுலைம் (ரழி), ஆதாரம்: புகாரி-273, முஸ்லிம்-313, அபூதாவூத்-237)

உடலுறவு கொள்ளல்:
உடலுறவு கொள்ளும்போது விந்து வெளிப்பட்டால்தான் குளிப்பு கடமை என்பது இஸ்லாத்தின் ஆரம்பகால சட்டமாக இருந்தது. பின்பு இச்சட்டம் மாற்றப்பட்டு (ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் இணைந்தால் விந்து வெளிப்படாவிட்டாலும் குளிப்பு அவசியமாக்கப்பட்டு) விட்டது. (ஆதாரம்: முஸ்லிம்-348, இப்னுமாஜா-209, திர்மிதி-108,111, முஅத்தா-76)

ஒருவர் தனது மனைவியின் (இரு கால், இரு கை ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையில் அமர்ந்து, பின்பு (உறவுகொள்ள) முயற்சித்தால் குளிப்பு கடமையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), ஆதாரம்: முஸ்லிம்-348, இப்னுமாஜா-610, நஸாயி-191)

மாதவிடாய் ஏற்படல்:
நபியே! மாதவிடாய்ப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறும் அது (அசுத்தமான) ஓர் உபாதை. எனவே மாத விடாய் காலத்தில் (உடலுறவு கொள்ளாமல்) பெண்களை விட்டு விலகி இருங்கள். அவர்கள் சுத்தமாகும் வரையில் அவர்களை (உடலுறவு கொள்ள) நெருங்காதீர்கள். மாதவிடாயிலிருந்து (குளித்து) அவர்கள் சுத்தமாகி விட்டால் அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள். (அல்குர்ஆன் 2:222)

“மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையை விட்டு விடு. அது நின்றதும் குளித்து விட்டுத் தொழு” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), ஆதாரம்: புகாரி-310, இப்னுமாஜா-621, நஸாயி-202)

மாதவிடாய் காலங்களில் விடுபட்ட தொழுகைகளை திருப்பி (களா) தொழ வேண்டியதில்லை. (புகாரி-310) ஆனால் விடுபட்ட பர்ளான ரமழான் மாத நோன்பை திருப்பி நோற்க வேண்டும்.

தொடர் உதிரப்போக்கு:
மாதவிடாய் குறிப்பிட்ட சில நாட்களுக்கு ஏற்படும். அந்த நாட்களை கடந்த பின், தொடர்ந்தும் இரத்தம் வெளியேறுவதைத் தான் தொடர் உதிரப்போக்கு எனக் கூறப்படும். இத்தொடர் உதிரப்போக்குள்ளவர்கள் மாதவிடாய் ஏற்படும் நாட்களைக் கணக்கிட்டு விட்டு குளித்து சுத்தமாகித் தொழ வேண்டும்.

தொடர் உதிரப்போக்கைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறியபோது ”அது மாத விடாய் அல்ல. அது ஒரு நரம்பு சம்பந்தப்பட்ட நோய். (அதனால்தான் இந்த இரத்தம் தொடர்ந்து வெளியேறுகிறது) என்று கூறினார்கள். (ஆதாரம்: புகாரி-316, இப்னு மாஜா-626, முஸ்லிம்-333)

நான் சுத்தமாகாதவாறு தொடர்ந்து இரத்தப் போக்குடையவளாக இருக்கிறேன். எனவே நான் தொழுகையை விட்டு விடலாமா? என்று ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (இதற்கு முன் வழக்கமாக) உனக்கு மாதவிடாய் ஏற்படும் நாட்களின் அளவுக்கு தொழுகையை விட்டு விடு. பிறகு குளித்து விட்டு துணியை இறுக்கிக் கட்டி விட்டு தொழு என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உம்முஸலமா (ரழி), ஆதாரம்: இப்னுமாஜா-623, அபூதாவூத்-286, நஸாயீ-208)

பாதிமா பின் அபீ ஹுபைஷ் (ரழி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து ”நான் தொடர் இரத்தப் போக்குடையவளாக இருக்கி றேன். எனவே தொழுகையை விட்டுவிடலாமா? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் அது மாதவிடாய் அல்ல! நரம்பு சம்பந்தப்பட்ட நோயாகும். உன் மாதவிடாய் நாட்களில் தொழுகையை தவிர்த்துக் கொள். பிறகு குளித்து விட்டு ஒவ்வொரு தொழுகைக்கும் வுழூ செய்துக் கொள். பாயில் இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தாலும் சரியே என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), ஆதாரம்: இப்னுமாஜா-624, திர்மிதி-125)

பிரசவத் தீட்டு ஏற்படல்:
பிரசவத்தின் காரணமாக இரத்தப் போக்கு ஏற்படும்போது தொழக் கூடாது. அது நின்ற பின் குளித்து விட்டு தொழ வேண்டும். அந்நாட்களில் விடுபட்ட தொழுகைகளைத் திருப்பி (களா) தொழ வேண்டி யதில்லை.

குளிக்கும் முறை:
கடமையான குளிப்பை நிறைவேற்ற முன் இரு கைகளையும் மூன்று முறை கழுவ வேண்டும். அதன் பின், மர்மஸ்தானத்தை கழுவ வேண்டும். பின்பு வுழூச் செய்ய வேண்டும். அதன் பின் தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றி (உடலை சுத்தப்படுத்தி)க் கொள்ள வேண்டும். குளிக்கும்போது வலது பக்கத்திலிருந்து தண்ணீர் ஊற்ற வேண்டும். ஆண், பெண் இவ்வாறு கடமையான குளிப்பை நிறைவேற்ற வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இப்படித்தான் குளிப்பை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது தம் இரு கைகளையும் கழுவி விட்டு தொழுகைக்குச் செய்வது போன்று வுழூ செய்வார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி),மைமூனா (ரழி), ஆதாரம்: புகாரி-241:265, முஸ்லிம்-317, நஸாயீ-247)

நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் எடுத்து வைத்தேன். தமது முன் கைகளின் மீது தண்ணீர் ஊற்றி, இரண்டு அல்லது மூன்று முறை கழுவினார்கள். பின்பு வலக்கரத்தால் சிறிதளவு தண்ணீரை இடக்கரத்தால் ஊற்றித் தமது மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். பின்பு தமது கையைத் தரையில் தேய்த்தார்கள். பின்பு வாய்க் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்து, முகத்தை கழுவினார்கள். இரு கைகளையும் கழுவினார்கள். பின்னர் தலையை மூன்று முறை கழுவி விட்டு தம் மேனியில் தண்ணீரை ஊற்றிக் கொண்டார்கள். பின்பு (குளித்த இடத்திலிருந்து) சற்று விலகி நின்று தம் கால்களைக் கழுவிக் கொண்டார்கள். (அறிவிப்பவர்: மைமூனா (ரழி) (ஆதாரம்: புகாரி-258, முஸ்லிம்-317, நஸாயீ-253, இப்னுமாஜா-573)

நபி (ஸல்) அவர்கள் குளித்த பின் வுழூச் செய்ய மாட்டார்கள் என ஆயிஷா (ரழி) கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி-108, அபூதாவூத்-250, இப்னுமாஜா-579)

அஸ்மா பின்த் ஷகல் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து மாதவிடாய்க் குளிப்பு பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”உங்களில் ஒருவர் (மாதவிடாய் குளிப்பின் போது) தண்ணீரையும் இலந்தை இலைகளையும் எடுத்து நன்கு சுத்தம் செய்து கொள்ளட்டும். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி நன்றாகத் தேய்ந்து தலையின் சருமம் நனையும் வரை கழுவட்டும். பிறகு உடம்புக்குத் தண்ணீர் ஊற்றட்டும். அதன் பின்னர் கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சுத் துண்டு ஒன்றை எடுத்து சுத்தம் செய்து கொள்ளட்டும் என்று சொன்னார்கள்.

அதற்கு அஸ்மா (ரழி) அவர்கள் ‘அதை வைத்து அவள் எவ்வாறு சுத்தம் செய்வாள்? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ஸுப்ஹானல்லாஹ், அதனால் சுத்தம் செய்துகொள்ளட்டும் என்று கூறினார்கள்.

உடனே நான் இரத்தம் படிந்த இடத்தில் தடவிக் கொள் என்று பிறர் காதில் விழாதவாறு அதை இரகசியமாகச் சொன்னேன்.

மேலும் அஸ்மா (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் பெருந்துடக்கிற்காகக் குளிக்கும் முறை பற்றிக் கேட்டார். அதற்கு நபியவர்கள் தண்ணீர் எடுத்து நன்கு சுத்தம் செய்துக் கொள். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி தலையில் சருமம் நனையும் அள வுக்கு நன்கு தேய்த்துக் கொள். பின்னர் உன் (மேனியின்) மீது தண்ணீர் ஊற்று என்றார்கள். (அறிவிப்பர்: ஆயிஷா (ரழி) நூல்: முஸ்லிம்-552)

உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் உடலுறவு கொண்டு, மறு முறையும் உடலுறவு கொள்ள விரும்பினால், வுழூ செய்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர் கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஸயீத், ஆதாரம்: முஸ்லிம்-308, இப்னுமாஜா-587, நஸாயீ-262)

எங்களில் ஒருவர் குளிப்புக் கடமையான நிலையில் தூங்கலாமா? என்று உமர் (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது, ஆம் வுழூச் செய்து விட்டு தூங்கலாம் என்றார்கள். (அறிவிப்பவர்: உமர் (ரழி), ஆதாரம்: புகாரி-280, முஸ்லிம்-306, நஸாயீ-259)

தயம்மும் சட்டங்கள்⁉️

தொழுகை நேரம் வந்து உளூச் செய்வதற்கான தண்ணீர் கிடைக்காவிட்டால் அல்லது தண்ணீர் கிடைத்து அதைப் பயன்படுத்த முடியாத நிலை இருந்தால் அதைக் காரணம் காட்டி தொழாமல் இருக்க முடியாது. மாறாக தூய்மையான மண்ணைப் பயன்படுத்தி உளூவுக்கு மாற்றுப் பரிகாரமான தயம்மும் செய்து அதன் பின்பே தொழ வேண்டும்.

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பயணமாகப் புறப்பட்டோம்.  பைதா  என்ற இடத்தை நாங்கள் அடைந்த போது எனது கழுத்து மாலை அறுந்து விட்டது. அதைத் தேடுவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கே தங்கினார்கள். அவர்களுடன் மக்களும் தங்கினார்கள். அவர்களின் அருகில் தண்ணீர் இருக்கவில்லை. அவர்களிடமும் தண்ணீர் இல்லை. மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து,  (உங்கள் மகள்) ஆயிஷா செய்ததைப் பார்த்தீர்களா? நபிகள் நாயகத்தையும் மக்களையும் தங்க வைத்து விட்டார். அவர்கள் அருகில் தண்ணீர் இல்லை. அவர்களிடமும் தண்ணீர் இல்லை  என்று கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தலையை எனது தொடையில் வைத்து உறங்கிக் கொண்டிருந்த போது அபூபக்ர் (ரலி) வந்தார்கள்.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் மக்களுக்கும் தடங்கலை ஏற்படுத்தி விட்டாய். அவர்களருகிலும் தண்ணீர் இல்லை. அவர்களிடமும் தண்ணீர் இல்லை  என்று கூறி என்னைக் கண்டித்தார்கள். அவர்கள் எதைக் கூற வேண்டும் என்று அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் கூறினார்கள். எனது இடுப்பிலும் தமது கையால் குத்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் தொடை மீது படுத்திருந்ததால் நான் அசையாமல் இருந்தேன். தண்ணீர் கிடைக்காத நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலைப் பொழுதை அடைந்தார்கள். அப்போது தான் தயம்மும் பற்றிய வசனத்தை அல்லாஹ் அருளினான். மக்கள் தயம்மும் செய்தனர். நான் அமர்ந்திருந்த ஒட்டகத்தை எழுப்பிய போது அதன் அடியில் என் கழுத்து மாலை கிடைத்தது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 334, முஸ்லிம் 550

தயம்மும் பற்றிய வசனம் திருக்குர்ஆனில் இரண்டு இடங்களில் உள்ளது. அதைத் தான் ஆயிஷா (ரலி) அவர்கள் இங்கே குறிப்பிடுகின்றார்கள். அந்த வசனங்கள் வருமாறு:

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும்,கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும்,  மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் 4:43

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்பு, கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.
அல்குர்ஆன் 5:6

தயம்மும் செய்யும் முறை⁉️

உள்ளங்கைகளால் தரையில் அடித்து, வாயால் அதில் ஊதி விட்டு அல்லது கைகளை உதறிவிட்டு இரு கைகளால் முகத்தையும், முன் கைகளையும் தடவ வேண்டும்.

ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து,  எனக்குக் குளிப்பு கடமையாகி விட்டது. தண்ணீர் கிடைக்கவில்லை  என்று கூறினார். அங்கே இருந்த அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி,  உங்களுக்கு நினைவிருக்கின்றதா? நானும் நீங்களும் ஒரு பயணத்தில் இருந்தோம். நீங்கள் தொழாமல் இருந்தீர்கள். நானோ மண்ணில் புரண்டு விட்டு தொழுதேன். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கூறிய போது, தமது உள்ளங் கைகளால் தரையில் அடித்து வாயால் அதில் ஊதி விட்டு, இரு கைகளால் முகத்தையும், முன் கைகளையும் தடவிக் காட்டி,இப்படிச் செய்வது உமக்குப் போதுமே!  எனக் கூறினார்கள்  என்று தெரிவித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா (ரலி), நூல்கள்: புகாரீ 338, முஸ்லிம் 552
 

... நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இரு கைகளால் பூமியில் ஒரு அடி அடித்து, பின்னர் இரு கைகளையும் உதறிவிட்டு தமது வலது கரத்தால் இடது புறங்கையைத் தடவினார்கள். அல்லது தமது இடது கரத்தால் வலது புறங்கையைத் தடவினார்கள். பின்னர் இரு கைகளால் தமது முகத்தைத் தடவி விட்டு,  இப்படிச் செய்வது உமக்குப் போதுமானதாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்மார் (ரலி)
நூல்: புகாரீ 347

புகாரீ, முஸ்லிம் உட்பட பல நூல்களில் இடம் பெற்றுள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில்  ஒரு தடவை தான் தரையில் அடிக்க வேண்டும்  என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் வேறு நூல்களில் இடம் பெற்றுள்ள சில அறிவிப்புகளில் இரண்டு தடவை அடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அவை ஆதாரப்பூர்மானவை அல்ல.

அல்லாஹ் மிகவும் அறிந்தவன்..

அரபி புத்தகங்கள்,

https://besturdubooks.net/ahsan-ul-hidaya/

வெள்ளி, ஜூலை 21, 2023

ஹிஜ்ரி 1445 புத்தாண்டு,

ஹிஜ்ரி 1445 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


'நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததும்... நிகழ்வுகளுக்கு தேதி குறிப்பிடும்படி உத்தரவிட்டார்கள்.

"நபியவர்கள் ரபீவுல் அவ்வல் மாதத்தில் மதீனா வந்தார்கள். மக்கள் நபியின் மதீனா வருகையிலிருந்து தேதி குறித்தனர். முதன் முதலாக பதிவுகளில் தேதி குறித்தவர் யமனில் இருந்த யஃலா பின் உமைய்யா-வாகும்'' (முஸ்தத்ரக் ஹாகிம் : 479/3 முர்ஸலான அதாவது அறிவிப்பாளர் வரிசைத்தொடரில் நபித்தோழர் பெயர் கூறப்படாத -- ஹதீஸ் அறிவிப்பாளர் -- அம்ரு பின் தீனார்)

இஸ்லாத்தில் முதன் முதலாக (தபால் மற்றும் அரசு சார்ந்த -- சாராத பதிவுகளுக்கு) தேதி குறிக்க உத்தரவிட்டவர் கலீபா உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களாகும் எனக் கூறப்படுகிறது. (தாரிகுத்தபரி : 3/2)

பிரபலமான இந்தக் கூற்றுப்படி நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் மறைந்து ஆறு வருடம் கழித்து ஹழ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஆட்சிக்காலத்தில் (கி.பி.639) இஸ்லாமிய ஆண்டை ஆரம்பிக்க வேண்டிய அவசியம் உணரப்பட்டது. நிறைவான இஸ்லாமியச் சகாப்தம் மலருவதற்கு முன்பு, அரபிகள் தங்களது ஆண்டுகளைத் தங்கள் பொதுவாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்ச்சியிலிருந்து கணக்கிட்டு வந்தார்கள். அனுமதி ஆண்டு, நில அசைவு ஆண்டு, யானை ஆண்டு என பல ஆண்டுகளை நடைமுறையில் வைத்திருந்தனர்.

பின்னர் இரண்டாம் கலீபா உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் குறிப்பு ஒன்றை தயாரித்து அதில் ஷஃபான் மாதம் என்று குறிப்பிட்டார்கள். 'இதனை பின்னர் தான் பார்ப்பின் எந்த ஆண்டின் ஷஃபான் மாதம் என்று விளங்குவது ?' என தனக்குத்தானே கேள்விக் கேட்டுக் கொண்டார்கள். இந்த நிலையில், கலீபாவிடமிருந்து தங்களுக்கு தேதி குறிப்பிடாமல் கடிதங்கள் வருகிறது என மாநில ஆளுனர்களிடமிருந்து முறையீடுகள் வந்தன. குறிப்பாக அபூ மூஸல் அஷ்அரி (ரலி) அவர்கள் "தேதி குறிப்பிடாத தாங்களின் கடிதம் கிடைத்தது'' என நறுக்கென்று எழுதினார்கள். இதனைத் தொடர்ந்து கலீபா அவர்களின் அவையில் ஆலோசனை நடைபெற்றது. இஸ்லாமிய ஆண்டை ஆரம்பிப்பது என முடிவானது. எதனை அடிப்படையாக வைப்பது என்பதில் பல்வேறு கருத்துக்கள் ஆராயப்பட்டது.

நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் பிறந்தது, நபித்துவம் கிடைத்தது முதலிய பலதையும் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் திரு மக்காஹ்விலிருந்து திரு மதீனாவுக்கு புலம் பெயர்ந்து வந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய ஆண்டை ஆரம்பிப்பது என ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஏனெனில் நபித்துவம் பிறப்பின் மூலம் தொடங்கினாலும், அது துலங்கியது ஹிஜ்ரத்தின் மூலமேயாகும். நபித்துவம் தொடங்கியது மக்காஹ்வில். ஆனால் அது தொடர்ந்தது மதீனாவில். இறைத்தூது வெளிப்பட்டது மக்காஹ்வில். ஆனால் அது வெளிச்சத்தில் வந்ததும், வளர்ச்சி பெற்றதும் மதீனாவில்தான்.

இந்த வகையில் இஸ்லாம் புத்துணர்ச்சியோடு புதுப்பொழிவு பெற்று, உலகமெல்லாம் பரவியதற்கு காரணம் ஹிஜ்ரத். ஏகத்துவம் இந்த ஜெகமெங்கும் ஜொலிக்க காரணமான ஹிஜ்ரத், நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களின் சரித்திரத்தில் திருப்பு முனையாக அமைந்த அழகான அற்புதமான ஒரு நிகழ்வு. இஸ்லாத்தின் குரல் தரையில் கூட ஒலிக்க விடாமல் ஒடுக்கப்பட்டபோது, அது அகிலமெங்கும் ஜெட் வேகத்தில் பறந்து சென்று பரப்ப இறக்கை கட்டிக் கொடுத்தது ஹிஜ்ரத்தாகும்.

ஹிஜ்ரத்திற்கு முன்னர் சொற்பமாக இருந்த முஸ்லிம்கள், ஹிஜ்ரத்திற்குப் பிறகு பல்கிப்பெருகினர். ஹிமுவில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்த முஸ்லிம்கள், ஹிஜ்ரி 6-ல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களோடு உம்ராவுக்கு வந்தவர்கள் 1400 பேராகவும், ஹிஜ்ரி 8-ல் மக்கா வெற்றிக்கு வந்தவர்கள் 12,000 பேராகவும், ஹிஜ்ரி 10-ல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களோடு இறுதி ஹஜ்ஜூ செய்த முஸ்லிம்கள் 1,24,000 ஆகவும் உயர்ந்தார்கள்.

இந்த நபித்தோழர்கள் மூலம் உலகமெங்கும் இஸ்லாம் பரவி இன்று உலக மக்கள் தொகையில் 2.1 BILLION (210-கோடி) முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்றால் இவ்வளவு பெரிய வெற்றிக்கு வித்திட்டது ஹிஜ்ரத் அல்லவா ? அதனால்தான் இன்று உலகில் நடைமுறையில் உள்ள ஆண்டு அடிப்படையில் ஹிஜ்ரத்தைப் போல அழுத்தமான தாக்கத்தை தரக்கூடியது எதுவும்மில்லை என வரலாற்று ஆய்வாளர்கள் வியக்கின்றார்கள்.

ஹிஜ்ரத் என்பது அச்சமுள்ள குஃப்ரு (இறை மறுப்பு) ஸ்தானத்தை விட்டு புலம்பெயர்ந்து, அச்சமற்ற ஆதரவுள்ள தலத்திற்கு சென்று விடுவதற்குப் பெயர். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் நபித்துவத்தின் 13-வது ஆண்டு ரபீவுல் அவ்வல் மாதம் முதல் தேதி வியாழக்கிழமை மக்காஹ்விலிருந்து ஹிஜ்ரத் புறப்பட்டார்கள். ரபீவுல் அவ்வல் 12-ஆம் நாள் (28 ஜூன் கி.பி.622) திங்கட்கிழமை லுஹர் நேரம், தங்களது 53-வது வயதில் மதீனா நகர் வந்து சேர்ந்தார்கள்.

ஸவ்ர் குகையிலிருந்து பெருமானார் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் புறப்பட்டதிலிருந்து 69 நாட்கள் முன்பாயிருந்த முஹர்ரம் மாதம் முதல் நாளே ஹிஜ்ரி ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டது. காரணம் ஹஜ்ஜு முடிந்து வாணிபம் தொடங்கப்பெறும் மாதமாக முஹர்ரம் இருந்தது. இதல்லாமல் முஹர்ரம் மாதம் பல்வேறு சிறப்புகளைப் பெற்று திகழ்கிறது.

(1) 'ஷஹ்ருல்லாஹ்' - அல்லாஹ்வுடைய மாதம்.
(2) ரமலானுக்குப்பிறகு நோன்பு பிடிக்க சிறந்த மாதம் (நபிமொழி- முஸ்லிம் 1163).
(3) முஹர்ரமில் ஒருநாள் நோன்பு பிடித்தால் ஒரு நாளுக்கு முப்பது நாள் (நன்மை) உண்டு (நபிமொழி -- தபரானி மஜ்மவுல் ஹைஸமி --190/3). 
(4) முஹர்ரமில் ஒரு சமூகத்தாருக்கு தௌபா (மன்னிப்பு) வழங்கினான். மற்ற சமூகத்தாருக்கும் (கேட்டால்) இதில் தௌபா வழங்க இருக்கிறான் (திர்மிதி-- 741).
(5) இதில்தான் கஃபாவின் திரைத்துணி மாற்றி புதியது அணிவிக்கப்படும் (தாரிகுத்தபரி -- 4/2).

ஹிஜ்ரத் என்பது இடம் பெயர்வது மட்டுமல்ல. ஷிர்க் (இறைவனுக்கு இணை வைப்பு), குஃப்ரு (இறை நிராகரிப்பு) மற்றும் ஃபிஸ்க் (பாவ காரியங்கள்) அனைத்தையும் விட்டு விலகி விடுவதுதான் உண்மையான ஹிஜ்ரத். 
''அல்லாஹ் விலக்கிய அனைத்தையும் விட்டு விலகி விடுவதே ஹிஜ்ரத்'' என்ற (புகாரி-10) நபிமொழியை ஹிஜ்ரத் சிந்தனையாக உங்களின் உள்ளங்களில் விதைத்து எல்லா மக்களுக்கும் எனது இனிய ஹிஜ்ரா புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். 
அல்லாஹ்வின் பேரருள் நம்மனைவர் மீதும் பொழியட்டுமாக ! ஆமீன் !

வியாழன், ஜூலை 20, 2023

பட்டா நிலங்களில் ,

பட்டா மாறுதல்.. வீட்டிலிருந்தே ஆன்லைனில் பட்டா மாறுதல் செய்ய முடியுமா? இதோ தமிழக அரசு சூப்பர் வசதினை: 

அரசின் சேவைகளை பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில் பல துறைகளின் சேவைகள் ஆன்லைன் முறையில் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்தவகையில் பட்டா மாறுதலும் ஆன்லைனில் ஆரம்பமாகி உள்ளது.


பட்டா என்பது வீடு, நில உரிமையாளர்கள் வைத்திருக்க வேண்டிய முக்கிய ஆவணமாகும். ஒரு நிலத்தின் உரிமையை சுட்டிக்காட்டும் இந்த ஆவணத்தை வருவாய் துறை வழங்குகிறது... இந்த ஆவணத்தில், ஓனரின் பெயர், சர்வே எண், நில வகை, நிலம் அமைந்துள்ள பகுதி குறித்த விவரங்கள் இருக்கும்.



பட்டா மாறுதலும் உடனடியாக செய்யப்படும். இதில் இடைத்தரகர்களுக்கும் வேலையில்லை.. இந்த இணையதளத்தில் எப்படி பட்டா மாறுதல் விண்ணப்பம் செய்வது தெரியுமா?


பட்டா மாறுதலுக்கான ஆவணங்கள் (ஏதாவது ஒன்று):

  • கிரையப் பத்திரம்
  • செட்டில்மெண்ட் பத்திரம்
  • பாகப்பிரிவினை பத்திரம்
  • தானப்பத்திரம்
  • பரிவர்த்தணை பத்திரம்
  • விடுதலை பத்திரம்

ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுனர் உரிமம், ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை குடியிருப்பு ஆவணங்கள் (ஏதாவது ஒன்று) ஆதார் அட்டை, தொலைப்பேசி ரசீது, மின் கட்டணம், சமையல் எரிவாயு ரசீது, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை

Patta change and Do you know how to apply for change of Patta through website

எப்படி பட்டா மாற்றுவது: முதலில் 

www.tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தின் மூலம் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே மனு செய்யலாம். இந்த வெப்சைட்டிற்கு சென்றதுமே, உங்களது பெயர், செல்போன் நம்பர், இ-மெயில் அட்ரஸ் தந்து பதிவு செய்ய வேண்டும். பிறகு, பட்டா மாறுதல் செய்யப்பட வேண்டியது உட்பிரிவற்ற பட்டா மாறுதல் அல்லது உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் என்பதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

ADVERTISEMENTAd

பிறகு, உங்களது சுயவிவரங்களையும், நிலத்தின் விவரங்களையும் பதிவிட வேண்டும். அதாவது, அது எந்த மாவட்டம், தாலுகா, கிராமம், சர்வே நம்பர் மற்றும் சப்-டிவிஷன் நம்பர் என பிழையில்லாமல் பதிவு செய்ய வேண்டும்.

அதற்கு பிறகு, சம்பந்தப்பட்ட நிலம் உங்களுக்கு சொந்தமானதற்கு என்ற சான்றான, கிரைய பத்திரம் உள்பட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியாக, உட்பிரிவற்ற பட்டா மாறுதலுக்கு வரிகள் இல்லாமல் ரூ.60-ம், உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதலுக்கு ரூ.460-ம் கட்டணம் செலுத்த வேண்டும்.

பட்டா மாறுதல்: இப்போது, உங்களது விண்ணப்பம் சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கு அனுப்பப்படும்... அவர் மூலம் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி பட்டா மாறுதல் செய்யப்படும்..!!

வெள்ளி, ஜூலை 14, 2023

இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா? ஒரு எச்சரிக்கை ,

உங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா?
 ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

உடல்நலம் சார்ந்த பொதுநலபதிவு..!!

இப்போதெல்லாம் தமிழகம் முழுவதும் இன்வர்ட்டர்கள் உபயோகிக்காதவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு...

 அடிக்கடி கரண்ட் கட் ஆகும் சமயங்களில் உடனடியாக தானாகவே பேட்டரியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கரண்ட்டிலிருந்து மின்விசிறி, ஒரு சில லைட்டுகள் உள்பட வேலை செய்யக் கூட இன்வர்ட்டர் உபயோகிக்கிறோம்...

அதுவும் கோடைக்காலம் நெருங்க நெருங்க இன்வர்ட்டரின் தேவை மிக அத்தியாசவசியமாகிறது. எல்லா மின் சாதனங்களைப் போலவும் இன்வர்ட்டரிலும் ஒரு சில ஆபத்துகள் உள்ளன...

எல்லா மின் சாதனங்களை விடவும் இதில் மறைமுகமான ஆபத்து ஒன்றும் இருக்கிறது. நித்து என்பவர் இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சம்பவம் அனைவருக்கும் எச்சரிக்கையாக இருக்கும்...

அண்மையில் ஒருநாள்.. வீட்டில் கணவர், இரண்டு வயது மகள், எல்லோரும் அமர்ந்திருக்கையில், பள்ளி முடிந்து வந்தான் மகன். வரும் போதே வீட்டினுள் துர்நாற்றம் அடிப்பதாகப் புகார். “தெருவிலே குப்பைத்தட்டி பக்கத்துலே போகும் போது நாறுகிற மாதிரி இருக்கிறது” என்பது மகனின் கம்ப்ளைண்ட்...

 எங்களுக்கு ஜலதோஷம் இருந்ததால் அப்படி எதுவும் வித்தியாசம் தெரியவில்லை. இரவு தூங்கி எழுந்து காலையிலும் அதே ஆர்ப்பாட்டம் செய்தான். அன்று மாலையும் மீண்டும் அதே ஆர்ப்பாட்டம். அப்போது தான் எனக்கும் அந்த துர்நாற்றம் லேசாக நுகர முடிந்தது...

கணவரிடம் இன்வர்ட்டர் பாட்டரியின் கீழே பல்லி எதுவும் இறந்து கிடக்க வாய்ப்புண்டு. நகர்த்திப் பாருங்கள் என்று கூறினேன். சிறிது நேரத்தில் பாட்டரி அருகில் ஃபேன் ஒன்றை வைத்திருந்தார் கணவர்...

 “பேட்டரி ஓவர் ஹீட் ஆகிவிட்டது போல. அதான் அந்த துர்நாற்றம்” என்றார் அவர். சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்து பார்த்தால்… பேச்சு மூச்சு இல்லாமல் கணவர் மயங்கிக் கிடந்தார்...

 முகத்தில் தண்ணீர் தெளித்தும் பயன் இல்லை. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தோம். என்ன காரணத்தினால் மயங்கி விழுந்தார் என்று மருத்துவர்கள் கேட்டதற்கு சரியான பதில் சொல்ல முடியவில்லை...

திடீரென்று பாடத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. பேட்டரி ஒவர் ஹீட் ஆனால் ‘ஹைடரஜன் சல்ஃபேட்’ வாயு உற்பத்தி ஆகும். அழுகிய முட்டையின் துர்நாற்றத்தை ஒத்திருக்கும் அந்த வாயுவை சுவாசித்தால் கண்ணிலும், மூக்கிலும் எரிச்சலை ஏற்படுத்தும்...

அடுத்து நுரையீரலிலும் பரவும். இருமல் ஆரம்பிக்கும். மயக்கம் ஏற்படும்.. அடுத்த ஓரிரு மணி நேரங்களில் மரணம் என்பதெல்லாம் நான் கூகுளில் தேடிக் கண்டுபிடித்து அதிர்ந்த தகவல்கள். நுரையீரலின் அளவு பெரியவர்களுக்கு அதிகம் என்பதால், குழந்தைகளை விட இது பெரியவர்களை தான் அதிகம் பாதிக்குமாம். மருத்துவரிடம் இதுகுறித்து கூறினேன்...

 மருத்துவரின் தீவிர சிகிச்சையினால் சிறிது நேரத்திலேயே கணவர் நல்லபடியாக கண் விழித்தார். “பேட்டரியை நகர்த்தும் போது ஓவர் ஹீட் இருக்கிறது தெரிந்தது. அதிலேர்ந்து தான் அந்த கெட்ட நாத்தமும் வருதுன்னும் புரிஞ்சிச்சு. எல்லோரும் வெளியிலே போயிடலாமுன்னு யோசிக்கிறதுக்குள்ளே மயக்கம் வந்திடுச்சு” என்றார் கணவர்...

சில மணி நேரங்களுக்குப் பிறகு வீடு திரும்பினோம். வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சுமார் மூன்று நிமிடங்களுக்கு இருமத் தொடங்கினார்...

இப்படிப்பட்ட பாதிப்புகளுக்கு குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்காவது இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கும் என்று கூகுளில் தேடியதில் தகவல் கிடைத்தது. ஆனாலும் மூன்று நாட்களுக்குப் பிறகும் இருமல் தொடர்ந்து கொண்டே இருந்தது. இப்போது அதற்கான மருந்துகளை கணவர் எடுத்துக் கொண்டிருக்கிறார்...

இந்த அதிர்ச்சித் தகவல் குறித்த செய்தியை பகிர்ந்த போது இன்வர்ட்டர் விற்பனையாளர் ஒருவர் கூறிய சிலஅட்வைஸ்கள் : 

எந்தவொரு மின் பொருள் என்றாலும் அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும். இன்வர்ட்டர் வாங்கும் போது அது ஒழுங்கான நிறுவனத்துடையதா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும்...

தரமற்ற சீனத் தயாரிப்புகள் எல்லாம் மார்க்கெட்டில் சல்லிசான விலையில் கிடைக்கின்றன. 
அவற்றையெல்லாம் வாங்கினால் சமயங்களில் ஓவர் ஹீட்டில் பேட்டரி வெடித்துச் சிதறும் வாய்ப்பெல்லாம் கூட உண்டு...

காற்றோட்டமான இடத்தில் இன்வர்ட்டர், பேட்டரிகளை வைக்க வேண்டும். பேட்டரிகளை முழுக்க மூடி வைக்கக் கூடாது... 

மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது இன்வர்ட்டரில் தண்ணீர் இருக்கிறதா, ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதை முறையாக பயிற்ச்சி பெற்ற நபரை வைத்து பார்த்துக் கொள்ள வேண்டும்...
 கோடைக்காலங்களில் தொடர்ந்து எந்நேரமும் இன்வர்ட்டர் பயன்பாட்டிலேயே இருக்கும் சமயங்களில் நடுவில் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது அவ்வப்போது ஆஃப் செய்து வைப்பதும் நல்லது...

பயனென்று நினைத்தால் பகிருங்கள்... 

அடுத்தவர்களும், விழிப்புணர்வுகொள்ளட்டும்...!!!
அன்புடன்:பைஜல் சாக்ளா..

வெள்ளி, ஜூலை 07, 2023

பஜ்ர்(சுப்ஹு) தொழுகை,

இறுதிச் சமுதாயமான நமக்கு பஜ்ர் தொழுகை ஏன் முக்கியம் என்று பலருக்கு தெரியாது.
பஜ்ர்க்கு பின்பு தான் சூரிய உதயம் கிழக்கில் இருந்து....
மறுமையின் அடையாளங்களில் ஒன்று
சூரியன் மேற்கே உதிப்பது. மேற்கே உதித்து விட்டால் தவ்பாவின் வாசல் அடைக்கப்பட்டு விடும்.
சூரிய உதயத்திற்கு முன்பு (மேற்கு )உள்ள தொழுகை பஜ்ர்  ஆகும். அந்த தொழுகையில் பாவ மன்னிப்பு கேட்டு இருந்தால் அல்லாஹ் மன்னிக்க கூடும்.

மேலும் இந்த அதிகாலை தொழுகையான பஜ்ரை  பற்றி......

அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதிகாலை
நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை
நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்; மாறாகஅதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் பெயர் சூட்டுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் இவ்வாறு துஆ கேட்டார்கள்: “யா
அல்லாஹ்!எனது சமூகத்திற்கு அதிகாலை நேரத்தில் அருள்வளத்தை நல்குவாயாக!” (அபூதாவூத்)

அண்ணலார் (ஸல்) அவர்களின் இந்தப் பிரார்த்தனைக்கு எந்தவிதத்
தகுதியும்இல்லாமல் அதிகாலை நேரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் சமூகமாகவே
நம் சமூகம்இருக்கின்றது.

ஃபாத்திமா (ரலி) அறிவிக்கின்றார்: அதிகாலை நேரத்-தில் நான் படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். அந்நேரம் அண்ணலார் (ஸல்) என்னருகே வந்து தங்களது பாதங்களால் என்னை உசுப்பிவிட்டு இவ்வாறு கூறினார்கள்:

“அருமை மகளே! எழு! அல்லாஹ்வின் வாழ்வாதாரங்கள் வழங்கப்படும் நேரத்திற்கு சாட்சியாளராக இரு. அலட்சியப் படுத்துபவராக மாறிவிடாதே. அதிகாலை நேரத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையே இறைவன் (ரிஸ்க் எனும்) வாழ்வாதாரத்தை வழங்குகிறான்.” (பைஹகீ) ஏனெனில், உழைப்பாளர்களும் சோம்பேறிகளும் இந்த நேரத்தில்தான் பிரித்து
அறியப்படுகின்றார்கள்.

உபை இப்னு கஅப் (ரலி)அறிவிக்கின்றார்: ஒரு நாள் அண்ணலார் (ஸல்) அவர்கள் ஸுபுஹ் தொழுகை முடித்தபின் எங்களை நோக்கித் திரும்பியவாறு கேட்டார்கள்:“இன்ன மனிதர் தொழுகைக்கு வந்தாரா?” மக்கள், “இல்லை..” என்று கூறினர். மீண்டும், “இன்னவர் வந்தாரா..?” என்று கேட்க, மக்களும் “இல்லை” என்று கூற, பெருமானார் (ஸல்) அவர்கள் வேதனையுடன் இவ்வாறு கூறினார்கள்:

“நயவஞ்சகர்களுக்கு இந்த இரு தொழுகைகளும் (ஸுபுஹ், இஷா) கடினமானவையாக இருக்கும். இந்த இரு தொழுகைகளில் கிடைக்கும் நன்மைகளை இவர்கள் அறிந்து கொண்டால் தவழ்ந்தேனும் இதற்காக வருவார்கள்.” (புகாரி,முஸ்லிம்)

ஆம். நபித்தோழர்களின் காலத்தில் இறை-நம்பிக்கை-யாளர்களை அளக்கும் அளவுகோலாக இந்த இருவேளைத் தொழுகைகள்தாம் இருந்தன. இப்னு உமர் (ரலி) கூறுகின்றார்: “ஸுபுஹ் தொழுகைக்கும் இஷா தொழுகைக்கும்

யார் வழக்கமாக வருவதில்லையோ அவர்களைக் குறித்து நாங்கள் மோசமாகவேஎண்ணியிருந்தோம்” (அதாவது நயவஞ்சகர்கள் என்று).

மறுமையில் ஸிராதுல் முஸ்தகீம் பாலத்தில் இருளில் ஒளியின்றி நடப்பவர்களுக்கு நற்செய்தியாக நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:

“(பள்ளிவாசலை நோக்கி அதிகாலை) இருளில் நடந்து செல்பவர்களுக்கு மறுமையில் முழுமையான ஒளி கிடைக்கும் எனும் நற்செய்தியைக் கூறுங்கள்” (பைஹகீ)

“சூரிய உதயத்திற்கு முன்புள்ள தொழுகையையும் சூரியன் மறைந்ததற்குப் பின் உள்ள தொழுகையையும் (ஸுபுஹ், இஷா) யார் தொழுகின்றாரோ அவர் நரகில் ஒரு நாளும் நுழைய மாட்டார்” (முஸ்லிம்)

யார் ஸுபுஹ் தொழுகையைத் தொழுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கின்றார்.” (தபரானி)

மாற்றத்தின் நேரம் அதிகாலை உலகில் பெரும் மாற்றங்களை எல்லாம் அதிகாலை நேரத்திலேயேதான் அல்லாஹ்ஏற்படுத்தி உள்ளான். உலகில் அழித்து நாசமாக்கப்பட்ட சமூகங்கள் எல்லாம்அதிகாலை நேரத்தில்தான் அழித்து ஒழிக்கப்பட்டிருக்கின்றன.

ஹூத் (அலை) அவர்களின் ஆத் கூட்டத்தை அழித்ததைக் குறித்து அல்லாஹ்கூறுகின்றான்: “இறுதியில் அவர்களின் நிலைமை என்னவாயிற்று எனில், அவர்கள்வசித்த இல்லங்களைத் தவிர வேறு எதுவும் அதிகாலையில் அங்கு தென்படவில்லை.” (46:25)

ஸாலிஹ் நபி (அலை) அவர்களின் சமூத் கூட்டத்தைக் குறித்து இறைவன்குறிப்பிடுகின்றான் : “திடுக்குறச்செய்கின்ற ஒரு நிலநடுக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அதிகாலையில் அவர்கள் தம் இல்லங்களில் முகங்குப்புற(உயிரற்றவர்களாக) வீழ்ந்து கிடந்தார்கள்” (7:91) (இதே கருத்தை அத்தியாயம் ஹூத் வசனம் 94, அல்ஹிஜ்ர் வசனம் 83 ஆகியவற்றிலும் காணலாம்.)

லூத் (அலை) அவர்களின் சமூகத்தைக் குறித்து மிகத்தெளிவாகவே அல்லாஹ்கூறுகின்றான்: “எந்த வேதனை இம்மக்களைப் பீடிக்கப்போகிறதோ, அந்த வேதனைதிண்ணமாக அவளையும் பீடிக்கப்போகிறது. இவர்களை அழிப்பதற்காகநிர்ணயிக்கப்பட்ட நேரம் அதிகாலையாகும். அதிகாலை வருவதற்கு வெகு நேரமாஇருக்கிறது?” (11: 81)

ஷுஐப் (அலை) அவர்களின் கூட்டத்தைக் குறித்துக் கூறுகின்றான் : “இறுதியில், ஒரு கடும் நிலநடுக்கம் அவர்களைப் பீடித்தது. அவர்கள் தம் வீடுகளிலேயே அதிகாலையில் குப்புற வீழ்ந்து மடிந்தார்கள்” (29:37)

பண்டைய காலத்தில்தான் இவ்வாறு அதிகாலை என்பது அழிவிற்கான நேரமாகஇருந்தது என்று நாம் நிம்மதி அடைய வேண்டாம். இன்றும் அவ்வப்போதுஅல்லாஹ்வின் எச்சரிக்கைகள் அதிகாலை நேரத்திலேயேதான் வருகின்றன.

2004-இல் ஏற்பட்ட சுனாமி அதிகாலை நேரத்தில்தான் ஏற்பட்டது. துருக்கி பூகம்பம், ஈரானின் நிலநடுக்கம் அனைத்தும் அதிகாலை நேரத்திலேயே நடைபெற்றன.

2009 -இல் ஆப்ரிக்கா ஹெய்தியில் 3 லட்சம் பேர் பலியான பூகம்பமும் அதிகாலை நேரத்தில்தான் ஏற்பட்டது.

ஒவ்வொரு தனிமனிதருக்கு வரும் மாரடைப்பு எனும் திடீர் மரணமும் அநேகமாகஅதிகாலை 3 முதல் 6 மணிக்குத்தான் வருகின்றது என்று மருத்துவக் குறிப்புகள்கூறுகின்றன.

இன்னும் இன்னும் ஏராளம் கூறலாம். இவை அனைத்தும் அல்லாஹ்வின் வேதனை என்றோ எச்சரிக்கை என்றோ எப்படி வேண்டுமென்றாலும் நாம் எடுத்துக்கொள்ளலாம்.
#இறுதிச்சமுதாயம்

ஞாயிறு, ஜூலை 02, 2023

ஜின்கள்,

💞 இஸ்லாத்தில் ஜின்கள் மனிதனுள் புகுந்தால் ஓதி பார்க்கும் முறை பற்றி அறிந்து கொள்ளுவோம் 💞

• அல்லாஹ்வின் அற்புத படைப்புகளில் ஜின்களும் ஒன்றாகும் இதை பற்றி அல்குர்ஆனிலும் ஸஹீஹான பல ஹதீஸ்களிலும் நம்மால் காண முடியும்!

• ஜின்கள் மனிதர்களை விட மிகவும் ஆற்றல் மிக்க ஒரு படைப்பு ஆகும் இவர்கள் நம்முடைய கண்களுக்கு புலப்பட மாட்டார்கள் ஆனால் அவர்களின் கண்களுக்கு நாம் தெரிவோம்!

• ஜின்கள் மனிதர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் சில காரணங்களால் தீங்கு ஏற்படுத்தும் அது உள்ளம் உடல் சார்ந்ததாக இருக்கலாம்! இதற்கு பல ஸஹீஹான ஹதீஸ்கள் உள்ளன!

• நம்மில் பலருக்கு இதில் இருந்து குணம் ஆக வழி தெரியாததால் பல மக்கள் சூனியகாரர்கள் காஃபிர்கள் ஜோதிடம் பார்க்க கூடியவர்கள் போன்றவர்களிடம் இதற்கு தீர்வு தேடி செல்லுகிறார்கள்! அவர்களும் சில கண்கட்டி வித்தைகளை காட்டி பல ஆயிரம் ரூபாய் வாங்கி கொள்ளுகிறார்கள்! இது ஷிர்க் ஆனா செயல் ஆகும்!

• நாம் இவர்களிடம் இவ்வாறு செய்ய கூடாது என்று எடுத்து கூறினால் அவர்கள் கேள்வி இதற்க்கு மார்க்கம் கூறும் தீர்வு தான் என்ன? அதற்க்கு வழி தெரியாமல் தான் நாங்கள் இவ்வாறு செல்லுகிறோம் என்று கூறுகிறார்கள்! 

• இது தற்பொழுது மட்டும் அல்ல ஆரம்ப காலத்திலும் இந்த பிரச்சனை இருந்தது இதனால் இமாம் வஹீது இப்னு அப்துல் ஸலாம் பாலீ அவர்கள் ஜின்கள் தீண்டுதல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் எப்படி அதை அணுக வேண்டும் என்று நூலை அல்குர்ஆன் ஸஹீஹான ஹதீஸ்கள் அடிப்படையில் மிக தெளிவாக ஒரு கிதாப் எழுதி உள்ளார்!

• அந்த நூல் பெயர் ஜின்கள் மற்றும் ஷைத்தானின் தீண்டுதலை விட்டு பாதுகாப்பு பெற வழிகள் என்பது ஆகும்! நாங்கள் இந்த நூலை அடிப்படையாக வைத்தே இந்த பதிவை நாங்கள் எழுதி உள்ளோம்! 

• இந்த நூலை இமாம் வஹீது இப்னு அப்துல் ஸலாம் இப்னு பாலி (ரஹ்) என்பவர்கள் எழுதி உள்ளார்கள்!

• இமாம் அவர்கள் எகிப்து நாட்டை சார்ந்த மார்க்க அறிஞர் ஆவார்கள்! ஹிஜ்ரி 1386 (கிபி : 1963) பிறந்தார்கள்! மார்க்க கல்வியில் சிறந்து விளங்கிய அறிஞர்களில் இவரும் ஒருவர் ஆவார்! இது மட்டும் அல்ல குறிப்பாக சூனியம், ஜின், ஷைத்தான் தீண்டுதல் போன்றவற்றை மார்க்கம் கூறிய முறையில் ஓதி பார்ப்பதிலும் சிறந்தது விளங்கினார்!

💟 ஜின்கள் :

• ஜின்கள் மறைவான ஒரு படைப்பு ஆகும் இதை முஹ்மின் பார்க்க வில்லை என்றாலும் அதன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்! இதை நம்ப மறுப்பது ஒருவனை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றி விடும்!

(அல்குர்ஆன் : 2 : 1 & 3)

• ஜின்கள் பற்றி அல்லாஹ் பல இடங்களில் அல்குர்ஆனில் கூறி உள்ளான்!

(அல்குர்ஆன் : 46 : 29 | 6 : 130 | 55 : 33 | 72 : 1 & 6)

• ஜின்கள் பற்றி ஸஹீஹான ஹதீஸ்களிலும் விரிவாக இடம் பெற்று உள்ளது :

(நூல் : ஸஹீஹ் புகாரி : 609 | ஸஹீஹ் முஸ்லீம் : 766 & 767)

💟 ஜின்கள் பற்றிய அறிமுகம் :

1) அல்லாஹ் ஜின்களை நெருப்பினால் படைத்தான்! ஷைத்தானும் ஜின் இனத்தை சேர்ந்தவன் ஆவான்!

(அல்குர்ஆன் : 55 : 15 | 38 : 76)

2) ஜின்களில் மூன்று வகை உண்டு அவை : 1) இறக்கை கொண்டு காற்றில் பறக்கும் ஜின்கள்! 2) பாம்பு அல்லது தேள்கள், கருப்பு நிற நாய்கள் வடிவில் உள்ள ஜின்கள் ஆகும்! 3) பயணம் செய்ய கூடிய - ஓரிடத்தில் தங்கி வாழும் ஜின்கள்!

(நூல் : ஹாகீம் : 3702 | முஸ்லீம் : 882 | ஸஹீஹ் ஜாமிஅ : 3114 - தரம் : ஸஹீஹ் : அல்பானி (ரஹ்))

3) ஜின்கள் பொதுவாக பாலைவனம், மனித நடமாற்றம் இல்லாத இடங்கள் பொந்துகள் போன்ற இடங்களில் தேர்ந்தெடுத்து வாழ்கின்றன! இன்னும் சில ஜின்கள் குப்பைக்கூளம் அசுத்தமான இடங்களிலும் இன்னும் சில ஜின்கள் மனிதர்கள் வசிக்கும் வீடுகளிலும் தேர்ந்தெடுத்து வாழ்கின்றன!

(நூல் : ஸஹீஹா : 1070 : அபூதாவூத் : 29 | முஸ்லீம் : 4502)

4) ஜின்களிலும் மனிதர்களை போன்று ஆண், பெண் உள்ளனர்!

(அல்குர்ஆன் : 72 : 6)

5) ஜின்களும் மனிதனை போன்று உண்ணவும், பருகவும் செய்கின்றன! ஜின்களின் உணவுகள் எலும்புகள், கெட்டியான சாணம் போன்றவைகள் ஆகும்!

• ஜின்கள் மனிதர்களை போன்று வலது கையால் சாப்பிடாது மாறாக இடது கையால் உண்ணவும் பருகவும் செய்யும்!

(நூல் : புகாரி : 762 | இப்னு மாஜா : 3266)

6) ஜின் என்ற பெயருக்கு அர்த்தம் மறைவானது அல்லது கண்ணுக்கு தெரியாது ஒன்று என்பதாகும்! நபி மார்களை தவிர மனிதர்களால் ஜின்களை உண்மையான உருவத்தில் பார்க்க முடியாது!

• ஆனால் ஜின்கள் உருவம் மாறி வந்தால் அப்போது நம்மால் அதை காண முடியும் ஆனால் இவர் அல்லது இந்த விலங்கு ஜின் தான் என்று நம்மால் அறிந்து கொள்ள முடியாது!

(நூல் : புகாரி : 2311)

7) ஜின்களுக்கும் நம்மை போன்று கடமை உண்டு அவர்களையும் அல்லாஹ் தன்னை வணங்கவே படைத்து உள்ளான்! அவர்களுக்கும் மார்க்கத்தை எடுத்து சொல்ல நபி மார்களை அல்லாஹ் அனுப்பி உள்ளான்! ஜின்களுக்கும் மரணம் உண்டு! மறுமை நாளில் கேள்வி கணக்கு உண்டு சொர்க்கம் நரகம் உண்டு!

(அல்குர்ஆன் : 6 : 130 | 51 : 56 | புகாரி : 7383)

8) மனிதர்கள் எப்படி நல்லவர்கள் கெட்டவர்கள்! பல மதங்களை பின் பற்றி கொண்டு பல கொள்கைகளாக உள்ளார்களோ அதே போன்று ஜின்களிலும் நல்லது கெட்டது மார்க்கத்தை முழுமையாக பின் பற்ற கூடியவை ஷிர்க்கில் ஈடுப்பட கூடியவை என பல பிரிவுகள் மத கொள்கைகள் உள்ளன!

(அல்குர்ஆன் : 72 : 11)

9) மனிதர்கள் மூலம் எவ்வாறு கண்ணேறு ஏற்படுகிறதோ அதே போன்று ஜின்கள் மூலமாகவும் கண்ணேறு ஏற்படும்! இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் ஜின்களின் கண்ணேறில் இருந்தும் பாதுகாப்பு தேடி வந்தார்கள்!

(நூல் : திர்மிதி : 2058 | ஸஹீஹ் ஜாமிஅ : 4902)

10) ஜின்கள் - ஷைத்தான்கள் எல்லாம் சூரியன் மறையும் மஹ்ரிப் நேரத்தில் தான் அதிகம் பரவுகின்றன! இதனால் தான் இந்த நேரங்களில் நபி (ஸல்) அவர்கள் வீட்டின் கதவுகளை மூடி வைக்க சொன்னார்கள் மேலும் குழந்தைகளையும் வெளியே விட வேண்டாம் என்றும் கூறினார்கள்!

(நூல் : புகாரி : 3304)

11) மனிதர்களால் ஜின்களை பார்க்க முடியாது என்றாலும் ஜின்களை நாய்கள் மற்றும் கழுதைகள் பார்க்கின்றன இதனால் தான் பல நேரங்களில் குறிப்பாக இரவு நேரங்களில் அவை கத்துகின்றன!

(நூல் : புகாரி : 3303 | அபூதாவூத் : 4439)

12) அல்லாஹ் ஏதேனும் செய்ய நாடினால் அதை மலக்கு மார்களிடம் கூறுவான் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அதை பேசி கடைசி வானம் வரை அந்த செய்தி செல்லும்! நபி (ஸல்) அவர்கள் நபியாக அல்லாஹ் தேர்வு செய்வதற்கு முன்பு வரை ஜின்கள் மூன்றாம் வானம் வரை சென்று மலக்கு மார்கள் பேசுவதை ஓட்டுக்கேட்டு வந்தன! நபி (ஸல்) அவர்கள் நபியாக தேர்வு செய்த பின்பு இருந்து அல்லாஹ் இவ்வாறு நடப்பதை தடுத்து விட்டான்!

• இந்த செய்திகளை ஜின்கள் ரகசியமாக ஓட்டு கேட்டு சூனியகாரர்கள் ஜோதிடம் பார்க்க கூடியவர்களிடம் கூறும் அவர்கள் அது கூறிய செய்தி உடன் பல பொய்களை கலந்து மக்களிடம் கூறுவார்கள் இதனால் தான் சில நேரங்களில் அவர்கள் கூறுவது உண்மையாக இருக்கும்!

• ஆனால் முதலில் நாம் இது போன்ற நபர்கள் கூறுவதை உண்மை என நம்பிக்கை கொள்ள கூடாது ஏன் என்றால் நபி (ஸல்) அவர்கள் இது போன்ற நபர்கள் கூறுவதை உண்மை என்று நம்பிக்கை கொண்டால் அவருடைய 40 நாட்கள் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது என்று கூறி உள்ளார்கள்!

(நூல் : புகாரி : 3210 | முஸ்லீம் : 4487 & 4488)

13) ஜின்கள் உதவி பெற சிலர் ஜின்களை வசியம் செய்வார்கள்.ஜின்களை வசியம் செய்ய வேண்டாம் என்று நபியவர்கள் தடுத்துள்ளார்கள்.முஃமினான பின்னாக இருந்தாலும் கூட அவ்வாறு வசியம் செய்வது மனிதனுக்கு நன்மையல்ல! மாறாக தீமை தான்.

• ஜின்களிடம் உதவி பெற அவற்றிற்கு அறுத்து பலியிடுவார்கள்! அல்லாஹ்வை நிராகரித்து ஜின்களை அல்லாஹ்வின் அளவிற்கு புகழ்வார்கள் இதனால் தான் ஜின்கள் இது போன்ற நபர்களுக்கு உதவி செய்ய முன் வருகின்றன! ஆனால் இது குஃப்ர் (இறை நிரகாரிப்பு) ஆனா செயல் ஆகும்!

• இது மட்டும் அல்லாமல் ஆரம்ப காலத்தில் ஜின்கள் மனிதர்களை பார்த்து பயப்பட கூடியதாக இருந்தன! ஆனால் எப்போது மனிதர்கள் ஜின்களிடம் உதவி தேட ஆரம்பம் செய்தார்களோ அப்போது தான் ஜின்கள் மனிதர்கள் மீது ஆதிக்கம் செய்ய ஆரம்பம் செய்தன!

(அல்குர்ஆன் : 72 : 6 | தப்ஸீர் இப்னு கசிர்  | நூல் : முஸ்லீம் : 1978)

14) மனிதர்களை விட ஜின்கள் அதிகம் ஆற்றல் உள்ளதாக இருந்தாலும் அதற்கு நாம் ஒருபோதும் பயப்பட கூடாது எப்போதும் நாம் பயப்பட தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே!

(அல்குர்ஆன் : 3 : 175)

15) ஜின்களால் மனிதர்கள் செய்ய முடியாத செயல்களை எல்லாம் செய்வார்கள்! ஜின்களால் காற்றை விட வேகமாக செல்ல முடியும்! வானத்தில் பறக்க முடியும்! ஆழ் கடலில் மூழ்கி முத்துகளை கொண்டு வரும் ஆற்றலும் அவைகளுக்கு உண்டு!

(அல்குர்ஆன் : 27 : 39 | 72 : 9 | 38 : 37)

16) ஜின்களுக்கு அதிகம் ஆற்றல் இருந்தாலும் அவைகளால் மறைவான எதையும் அறிந்து கொள்ள முடியாது! அல்லாஹ் மட்டுமே மறைவானதை அறிந்தவன் ஆவான்!

(அல்குர்ஆன் : 72 : 10 | 34 : 14)

💟 ஜின்கள் மனித உடலுக்குல் புகுவதின்  உண்மை நிலை :

• ஜின்கள் ஒரு மனிதனுள் புகுந்து விட்டால் முதலில் அவனின் மூளையை ஆக்கிரமிப்பு செய்கின்றன! இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பைத்தியம் பிடித்தது போன்று அல்லது சாதாரண மனிதர்கள் போன்று இல்லாமல் மன அளவில் சிந்தனை அளவில் பாதிக்கப்பட்டு போல் நடந்து கொள்ளுவார்கள்!

(அல்குர்ஆன் : 2 : 275 | விளக்கம் : இமாம் குர்துபீ (ரஹ்))

• ஜின்கள் இவ்வாறு சிந்தனை மூலம் பாதிப்பு ஏற்படுத்துவதால் பாதிக்கப்பட்ட நபர் மன நோயாளி போன்று நடந்து கொள்ளுவார்கள்! வீட்டார் அருகில் இருந்தும் ஏதேனும் அருகில் பார்த்தது போன்று பயம் கொள்ளுவார்கள் சாதாரண மனிதர்கள் போல் இல்லாமல் பிரம்மை பிடித்தது போல் இருப்பார்கள்!

• நபி (ஸல்) அவர்கள் வாழும் காலத்திலேயே சிலர் ஜின்களின் தீண்டுதலால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் நபி (ஸல்) அவர்கள் அதை அல்லாஹ்வின் உதவினால் குணம் படுத்தியும் உள்ளார்கள்! உதாரணத்திற்கு சில ஹதீஸ்களை இங்கே குறிப்பிடுகிறோம்!

1) நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தின் போது ஒரு பெண்மணி நபியவர்களை கண்டு தன்னுடைய மகனுக்கு அடிக்கடி நோய் ஏற்படுகிறது என்று கூறினார்கள் நபி (ஸல்) அவர்கள் அந்த குழந்தை வாங்கி குழந்தை வாயை திறந்து ‘ அல்லாஹ்வின் பெயரால் நான் அல்லாஹ்வின் அடிமை ஆவேன்! அல்லாஹ்வின் எதிரியே நீ வெளியேறி விடு ’ என்று மூன்று முறை கூறினார்கள்! இதன் பின்பு அந்த குழந்தைக்கு உடல் குணம் ஆகி விட்டது!

(நூல் : முஸன்னஃப் இப்னு அபீஷைபா : 31753)

2) நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி தனது மனநிலை பாதிக்கப்பட்ட பிள்ளையுடன் வந்தால் தனது பிள்ளை நிலையை நபி (ஸல்) அவர்களிடம் அந்த பெண்மணி கூறினால் நபி (ஸல்) அவர்கள் அந்த பிள்ளையிடம் அல்லாஹ்வின் எதிரியே வெளியேறி விடு நான் அல்லாஹ்வின் தூதராவேன்!  என்று கூறியது அந்த பிள்ளை குணம் ஆகி விட்டது!

(நூல் : அஹ்மத் : 17584 | ஸஹீஹா : 485)

3) நபி (ஸல்) அவர்கள் கெட்ட மரணத்தை விட்டு பாதுகாப்பு தேடும் பொழுது ஷைத்தானின் தீண்டுதல் ஏற்படாமல் இருக்கவும் பாதுகாப்பு தேடி உள்ளார்கள்!

اَلَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ

‘ அல்லாஹும்ம இன்னி அஊது பிக்க அய் யத்தகப்பதனியஷ் ஷைத்தானு இன்தல் மவ்த் ’

பொருள் : இறைவா! மரணத்தின் போது ஷைத்தான் என்னை தீண்டுவதை விட்டும்  நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்!

(நூல் : நஸயீ : 5532 | அபூதாவுத் : 1552)

4) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஷைத்தான், மனிதனின் இரத்த நாளங்களில் எல்லாம் ஓடுகிறான்!

(நூல் : முஸ்லிம் : 4386)

💟 ஜின்கள் மனிதனுள் புகுவதற்கு காரணங்கள் :

• மனிதன் ஜின்களால் தீண்டப்பட மிக முக்கிய காரணம் சில நபர்கள் இஸ்லாம் கூறிய முறையில் முதலில் வாழ மாட்டார்கள் பெயர் அளவில் முஸ்லீம் ஆக இருப்பார்கள்! இஸ்லாம் தடுத்த ஹராமான மானக்கேடான செயல்களில் அதிகம் மூழ்கி இருப்பார்கள்!

• வணங்க வழிபாடுகளை விட்டு இவர்கள் தூரம் போகும் பொழுது இவர்களுடைய ஈமான் மிகவும் குறைந்து விடும் இதனால் சிறிய நிகழ்வுகளுக்கு எல்லாம் அதிகம் பயப்படுவார்கள்!

உதாரணமாக : வீட்டில் பால் தீய்ந்து விட்டால் ஏதேனும் நடந்து விடும் வெளியே செல்லும் பொழுது கால் தடுக்கினால் ஏதேனும் ஆகி விடும் இப்படி உள்ளம் மற்றும் செயல் அளவில் அறியாமையினாலும் மூடநம்பிக்கையினாலும் மூழ்கி அதில் செயல் படுத்தி கொண்டும் இருப்பார்கள்! இப்படி பட்ட நபர்கள் எளிதாக ஜின்களால் பாதிப்பு அடைகிறார்கள்!

• இது அல்லாமல் பொதுவாக மூன்று காரணங்களால் ஜின்கள் மனிதர்களை தீண்டுகின்றன அவைகள் ;

1) ஜின்கள் மனிதர்கள் மீது விருப்பம் கொள்ளுதல்

2) மனிதன் அறியாமல் ஜின்னிற்க்கு ஏதேனும் தீங்கு செய்து இருந்தால் அல்லது ஜின் வசிக்கும் இடத்தை ஏதேனும் செய்து இருந்தால்!

3) எந்த காரணமும் இல்லாமல் துன்பம் கொடுக்க மனிதனுள் புகுந்து கொள்ளுதல்!

• குறிப்பாக மனிதன் இருக்கும் மன நிலை பொறுத்து இவை மனிதனுள் புகுகின்றன ;

1) மனிதன் அதிகம் கோவம் கொள்ளும் போது

2) கடுமையாக பயப்படும் பொழுது

3) காம இச்சைகளில் அதிகம் மூழ்கி இருக்கும் பொழுது

💟 ஜின் ஒரு மனிதனுள் புகுந்துள்ளது என்பதற்க்கு அடையாளங்கள் :

• முதலில் நமக்கு உடல் சார்ந்த அல்லது மனம் சார்ந்த பாதிப்புகள் ஏற்பட்டால் மருத்துவம் பார்க்க வேண்டும்! ஏதேனும் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்ட உடன் ஜின்னால் ஏதேனும் தீங்கு ஏற்பட்டு விட்டது என்று இருந்து விட கூடாது!

❤️ கனவின் மூலம் வெளிப்படும் அடையாளம் :

• ஜின்கள் மனிதனை தீண்டி விட்டால் அல்லது உடலில் புகுந்து விட்டால் அதன் வெளிப்பாடாக கனவில் தெரியும் இதை வைத்து நாம் இவர் ஜின்களால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்பதை அறிந்து கொள்ளலாம்!

1) தூக்கமின்மை : ஜின்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியாக உறங்க முடியாமல் கஷ்டப்படுவார்கள்! நீண்ட நேரம் படுக்கையில் புரண்ட பின்பே உறக்கம் ஏற்படும்!

2) பதற்றம் : தூக்கத்தில் அடிக்கடி பதறி விழிப்பு ஏற்படும்!

3) உறங்கும் பொழுது தன்னை யாரோ அழுத்துவது போல் உணர்வு ஏற்படும் ஆனால் அந்த நேரத்தில் உடலை அசைக்க முடியாது யாரையும் உதவிக்கு அழைக்கவும் முடியாது!

4) அடிக்கடி பயமுறுத்தும் கெட்ட கனவுகள் ஏற்படும்!

5) தூக்கத்தில் திடீர் என அழுவது சிரிப்பு அல்லது கத்துவது!

6) நம்மை அறியாமல் உறக்கத்தில் எழுந்து நடமாடுதல்!

7) கனவில் பாலைவனம் அல்லது மனித நடமாற்றம் இல்லாத இடங்களை அல்லது பயத்தை ஏற்படுத்தும் இடங்களில் காணுதல்!

8) உடல் வலி : சாதாரணமாக உள்ள ஒருவருக்கு ஜின் உடைய தாக்கம் அல்லது உடலினுள் புகும் பொழுது உடலில் திடீர் என்று வலி ஏற்படும் மருத்துவம் பார்த்தாலும் உடலில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கும் ஆனால் உடலில் ஏதேனும் ஒரு பாகம் மட்டும் வலி இருந்து கொண்டே இருக்கும்!

❤️ உடல் சார்ந்த பாதிப்புகள் :

• ஜின்கள் மனிதனை தீண்டி விட்டால் அல்லது உடலில் புகுந்து விட்டால் அதன் வெளிப்பாடாக உடல் அளவிலும் தெரியும் இதை வைத்து நாம் இவர் ஜின்களால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்பதை அறிந்து கொள்ளலாம்!

1) எப்போதும் தலைவலி இருக்கும் அல்லது உடலில் குறிப்பிட்ட பகுதியில் வலி இருந்து கொண்டே இருக்கும் ( நாம் முதலில் மருத்துவம் பார்க்க வேண்டும் - உடல் வலி ஏற்பட்ட உடன் ஜின்னின் தாக்கம் என்று இருந்து விட கூடாது)

2) சிந்தனையினால் அதிகம் குழப்பம் ஏற்படும் இதனால் தொழுகை திக்ர் இன்னும் பிற அமல்களில் கவனம் செலுத்த முடியாமல் போகும்!

3) உடல் நிலை ஏதேனும் ஒரு விதத்தில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் (மருத்துவம் பார்த்தும் உடல் நிலை சரி ஆகாது அல்லது உடலை பரிசோதனை செய்தாலும் உடல் எந்த பிரச்சனையும் இருக்காது)

💟 ஜின்னால் தீண்டபட்டவர்களை எவ்வாறு குணம் படுத்துவது :

• ஜின்களால் பாதிக்கப்பட்டவர்களை அனைவரும் குணம் ஆக்கி விட முடியாது! அவருக்கு என்று சில தனிப்பட்ட குணங்கள் இருக்க வேண்டும் அவை ;

1) அவரின் ஈமான் எந்த வித குறையும் இல்லாமல் உறுதியான அகீதாவில் இருக்க வேண்டும்!

2) முஸ்லீம் ஆக பெயர் அளவில் மட்டும் அல்லாமல் இஸ்லாம் கூறியது போன்று சொல்லிலும் செயலிலும் இருக்க வேண்டும்!

3) அல்லாஹ்வினால் குணப்படுத்த முடியும் என்று உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும்!

4) ஜின்களால் ஏற்படும் தாக்கம் அதை எவ்வாறு அணுகுவது என்பதை பற்றி அனுபவம் உள்ள நபராக இருக்க வேண்டும்!

5) தினமும் நேரம் தவறாமல் தொழ கூடியவராக அன்றாட ஓதும் திக்ர்கள் காலை மாலை திக்ர்கள் என அனைத்தும் முறையாக பேணும் நபராக இருக்க வேண்டும்!

6) அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கையும் மன உறுதியும் இருக்க வேண்டும்!

💟 எவ்வாறு ஜின்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது :

❤️ ஓதி பார்க்கும் முன்பு பேன வேண்டியவைகள் :

1) முதலில் நாம் ஓதி பார்க்கும் முன் தொழுது அல்லாஹ்விடம் உதவி தேட வேண்டும்!

2) ஓதி பார்க்கும் இடத்தில் இருந்து உருவப்படம், நாய்கள் இசை கருவிகள் இருந்தால் அதை அகற்ற வேண்டும்!

3) ஷிர்க் வைக்க கூடிய நபர்கள் அந்த இடத்தில் இருக்க கூடாது!

4) ஓதி பார்க்கும் முன் வீட்டாருக்கு அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்!

5) பாதிக்கப்பட்ட நபருக்கு எவ்வாறு உடலில் நிலை (தொடர்ச்சியான உடல் வலி - கெட்ட கனவுகள் ஏற்படுதல்) உள்ளதா? என்று கேட்க வேண்டும்! உறுதியான பின்பே ஓதி பார்க்க வேண்டும்!

6) பாதிக்கப்பட்ட நபர் முதலில் ஒளு செய்து கொள்ள வேண்டும் ஓதி பார்க்கும் நபரும் ஒளு செய்து கொள்ள வேண்டும்!

7) பாதிக்கப்பட்ட நபர் பெண்ணாக இருந்தால் ஆடை விலகாத வாறு நன்கு கட்டி விட வேண்டும்!

8) மஹ்ரமான ஆண் இல்லாமல் பெண்ணிற்கு ஓதி பார்க்க கூடாது!

❤️ ஓதி பார்க்கும் முறை :

• ஓதி பார்க்கும் நபர் அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கை உடன் இருக்க வேண்டும் சில நேரங்களில் ஓதி பார்க்க கூடிய நபரை கூட ஏதேனும் ஒரு வகையில் ஜின்னால் தீண்டப்படலாம்!

• ஓதி பார்க்கும் நபர் பாதிக்கப்பட்ட நபர் ஆணாக இருந்தால் அவரின் தலையில் கை வைத்து அல்லது பெண்ணாக இருந்தால் முன்னால் அமர்ந்து பின்வரும் வசனங்களை ஓத வேண்டும் (பதிவின் விரிவாக்கம் கருதி அல்குர்ஆன் வசனம் எண் மட்டும் இங்கே குறிப்பிடுகிறோம்) :

1) (அல்குர்ஆன் : 1 : 1 - 7)

2) (அல்குர்ஆன் : 2 : 1 - 5)

3) (அல்குர்ஆன் : 2 : 163 - 164)

4) (அல்குர்ஆன் : 2 : 255 - 266)

5) (அல்குர்ஆன் : 2 : 285 - 286)

6) (அல்குர்ஆன் : 3 : 18 - 19)

7) (அல்குர்ஆன் : 7 : 54 - 56)

8) (அல்குர்ஆன் : 23 : 115 - 118)

9) (அல்குர்ஆன் : 37 : 1 - 10)

10) (அல்குர்ஆன் : 46 : 29 - 32)

11) (அல்குர்ஆன் : 55 : 33 - 36)

12) (அல்குர்ஆன் : 59 : 21 - 24)

13) (அல்குர்ஆன் : 72 : 1 - 9)

14) (அல்குர்ஆன் : 112 : 1 - 4)

15) (அல்குர்ஆன் : 113 : 1 - 5)

• நாம் மேலே உள்ள வசனங்களை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து ஓதி வந்தால் நிச்சயமாக மனிதனுள் இருக்கும் ஜின் பாதிப்பு ஏற்படும்! அது ஒன்று ஓடி விடும் அல்லது மிகவும் பலகீனமாக ஆகி விடும்!

• அல்லது கோவத்தில் ஓதி விட கூடிய நபரை ஏதேனும் ஒரு வகையில் பயத்தை ஏற்படுத்தும் அல்லது மிரட்டும் ஆனால் நாம் உறுதியாக இதை பொறுப்படுத்தாமல் ஓத வேண்டும்!

• சில ஜின்கள் ஓதி பார்க்கும் பொழுது மட்டும் வெளியேறி விடுவது அல்லது நம்முடன் பேச முற்ப்படும்! அப்பொழுது அதை நாம் வெளியேறும் படி கூறவேண்டும் சில ஜின்கள் வெளியேறாமல் உறுதியாக இருக்கும் அப்போது நாம் மீண்டும் மீண்டும் அல்குர்ஆனை மேலே உள்ள வசனங்களை ஓத வேண்டும்!

• ஜின் வெளியேறி விட்டால் பாதிக்கப்பட்ட நபர் சாதாரணமான நிலைக்கு வந்து விடுவார்! இதன் பின்பு நாம் முதலில் அல்லாஹ்விற்கு தொழுது நன்றி செலுத்த வேண்டும்!

• பாதிக்கப்பட்ட நபர் வீட்டில் வழமையாக அல்குர்ஆன் ஓதுவது வீட்டில் பெண்கள் தொழுவது ஆண்கள் கடமையான தொழுகை தவிர மற்ற தொழுகை வீட்டில் தொழுவது போன்ற காரியங்களில் ஈடுப்பட வேண்டும்!

❤️ ஓதி பார்த்த பின்பு :

• நாம் ஓதி பார்த்தாலும் ஜின் ஒன்று அப்போது மட்டும் வெளியேறி விடும் அல்லது அமைதியாக ஆகி விடும்! இதனால் அந்த நபர் சில நாட்கள் பின்பு மீண்டும் பாதிக்கப்படலாம்! இவ்வாறு பாதிக்கப்பட்ட நபர் சில ஒழுக்கங்களை பேனி வரவேண்டும் வழமையாக :

1) தினமும் ஐந்து நேர தொழுகையை நேரம் தவறாமல் தொழ வேண்டும்!

2) மார்க்கம் தடுத்த ஹராமான செயல்களை விட்டு விட வேண்டும்!

3) உறங்கும் முன்பு இஸ்லாம் கூறிய முறையில் ஒளு செய்து விட்டு திக்ர் துஆ அல்குர்ஆன் வசனம் எல்லாம் ஓதி கொண்டு உறங்க வேண்டும்!

4) மூன்று நாட்கள் ஒரு முறை வீட்டில் அல் பகரா ஓத வேண்டும்!

5) தினமும் அன்றாடம் ஓதும் திக்ர் துஆக்கள் காலை மாலை திக்ர்கள் மற்றும் அல்குர்ஆன் தினமும் ஓதி வர வேண்டும்!

6) ஒவ்வொரு நாளும் பஜ்ர் தொழுகைக்கு பின்பு 100 முறை ‘ லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து. வஹ்வ அலா குல்லி ஷையின் கதீர் ’ என்ற திக்ரை ஓத வேண்டும்!

7) ஒவ்வொரு செயலின் போதும் பிஸ்மில்லாஹ் கூறி ஆரம்பம் செய்யவேண்டும்!

8) பாதிக்கப்பட்ட நபர் சில நாட்களுக்கு தனியாக உறங்க கூடாது!

• மேலே உள்ளவற்றை எல்லாம் நாம் சில மாதங்கள் தொடர்ச்சியாக செய்து வரவேண்டும்! இவ்வாறு செய்த பின்பு மீண்டும் ஒரு முறை நாம் ஓதி பார்க்க வேண்டும் இவ்வாறு ஓதும் போது அந்த நபருக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்றால் ஜின் அவரை விட்டு முழுமையாக நீங்கி விட்டது என்பதை அறிந்து கொள்ளலாம்!

• ஜின் சென்று விட்டது என்று நாம் அமல்களை விட்டு விட கூடாது அதை தொடர்ந்து செய்து வரவேண்டும்!

@அல்லாஹ் போதுமானவன் 💞

தக்பீர் எத்தனை நாள்கூறவேண்டும்,

தக்பீர் முழக்கம்.
ஹஜ்ஜுக்காக ஹாஜிகள் 40 நாட்கள் பயணம் செய்தாலும் ஹஜ் 5 நாட்களில் நடைபெறுகிற வணக்கமாகும்.

துல் ஹஜ் 8 லிருந்து 12 வரை உண்டான 5 நாட்கள்
எட்டாம் நாளுக்கு தர்வியா என்று பெயர் – தண்ணீர் நிரப்பிக்கொள்ளுதல் என்று பொருள், ஹாஜிகள் மினாவில் அன்றைய தினம் ஹஜ்ஜுக்கா தம்மை தயார்படுத்திக் கொண்டிருப்பர்.

ஒன்பதாம் நாளுக்கு அரபா நாள் என்று பெயர். ஹாஜிகள் அன்றைய தினம் அரபாவில் தங்கியிருப்பார்கள்.

பத்தாம் நாளுக்கு யவ்முன் நஹ்ர் என்று பெயர். குர்பானி கொடுக்கும் நாள் என்று பொருள்.

அதற்கடுத்த மூன்று நாட்களுக்கு அய்யாமுத் தஷ்ரீக் என்று பெயர்.
  - وأيام التشريق هي الأيام الثلاثة التي تلي العيد - الفقه علي المذاهب الأربعة 

கறியை காய வைக்கும் நாள் அல்லது உப்புக்கண்டம் போடும் நாள். பெருள்.
سميت بأيام التشريق لأن الناس كانوا يشرّقون فيها اللحم.
அய்யாமுத் தஷ்ரீக்கின் மூன்று நாட்களும் இஸ்லாமிய சட்டப்பட பெருநாட்களைப் போலவாகும்.

இந்த நாட்களில் நோன்பு வைப்பது கூடாது. கழா நோன்பும் கூடாது.
وروى أبو داود (2418) عَنْ أَبِي مُرَّةَ مَوْلَى أُمِّ هَانِئٍ أَنَّهُ دَخَلَ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَلَى أَبِيهِ عَمْرِو بْنِ الْعَاصِ فَقَرَّبَ إِلَيْهِمَا طَعَامًا ، فَقَالَ : كُلْ . فَقَالَ : إِنِّي صَائِمٌ . فَقَالَ عَمْرٌو : كُلْ فَهَذِهِ الأَيَّامُ الَّتِي كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُنَا بِإِفْطَارِهَا ، وَيَنْهَانَا عَنْ صِيَامِهَا . قَالَ الإمام مَالِكٌ : وَهِيَ أَيَّامُ التَّشْرِيقِ . وصححه الألباني في صحيح أبي داود .
இது உண்டு மகிழ்வதற்குரிய நாட்களாகும்.
இந்த நாட்களில் என்ன செய்யனும்
1.   உண்டு மகிழனும்
2.   அதிகமாக திக்ரு செய்யனும்
وَعَنْ نُبَيْشَةَ الهُذَلِيِّ رَضِيَ اللهُ عَنهُ قالَ: قالَ رَسُولُ الله صلى الله عليه وسلم: «أيَّامُ التَّشْرِيقِ أيَّامُ أكْلٍ وَشُرْبٍ، وَذِكْرٍ؟»أخرجه مسلم.
இஸ்லாத்தின் தொடக்க காலத்தில் குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் வைத்திருக்க கூடாது என்ற சட்டம் இருந்தது. பின்னர் அது மாற்றப்பட்டது.
எனவே குர்பானி இறைச்சியை பத்திரப்படுத்தி சாப்பிடுவது அனுமதிக்கப்பட்டதே!
குர்பானி இறைச்சியை இந்த நாட்களில் அதிகம் சாப்பிட்டு விட்டு தக்பீர் அதிகமாக சொல்ல வேண்டும்.
ஹஜ்ஜின் அமல்களைப் பற்றி பேசிவருகிற இடத்தில் குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள் என குர் ஆன் கூறுகிறது.
(وَاذْكُرُوا اللَّهَ فِي أَيَّامٍ مَعْدُودَاتٍ)(البقرة: من الآية203)
அது இந்த மூன்று நாட்களையே குறிக்கிறது.
அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜை முடித்து விட்டு மினாவில் தங்கியிருக்கிற நாட்களில் ஜாலியாக அரட்டையடித்துக் கொண்டு தமது முன்னோர்களைப் பற்றி பெருமையடித்துக் கொண்டிருந்தனர். அதை மாற்றி அல்லாஹ்வை திக்ரு செய்யுமாறு அல்லாஹ் கூறினான்.
 فَإِذَا قَضَيْتُمْ مَنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللَّهَ كَذِكْرِكُمْ آبَاءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْراً )(البقرة: من الآية200)
இதன் பிறகு மினா தக்பீரால் அதிர ஆரம்பித்தது.
وقد كان عمر يكبر في قبته بمنى فيسمعه أهل المسجد فيكبرون, ويكبر أهل الأسواق حتى ترتج منى تكبيراً.
وكان ابن عمر رضي الله عنهما يكبر بمنى تلك الأيام, وخلف الصلوات , وعلى فراشه, وفي فسطاطه ومجلسه وممشاه تلك الأيام جميعاً
இவ்வாறு அல்லாஹ்வை திக்ரு செய்து கொண்டிருப்பது மினாவில் மட்டுமல்ல் உலகம் முழுவதிலும் முஸ்லிம்கள் கடை பிடிக்க வேண்டிய சுன்னத் என்பதை சஹாபாக்கள் நடை முறைப்படுத்திக் காட்டினார்கள்.

இமாம் புகாரி அவர்கள்

بَاب فَضْلِ الْعَمَلِ فِي أَيَّامِ التَّشْرِيقِ

எனும் பாடத்தில்

وَكَانَ ابْنُ عُمَرَ وَأَبُو هُرَيْرَةَ يَخْرُجَانِ إِلَى السُّوقِ فِي أَيَّامِ الْعَشْرِ يُكَبِّرَانِ وَيُكَبِّرُ النَّاسُ بِتَكْبِيرِهِمَا

என்று கூறுகிறா. அத்தோடு பர்ளு தொழுகைக்குப்பின் தக்பீர் சொல்லும் இருப்பது போல சிலர் நபில் தொழுகைக்குப் பின்னரும் தக்பீர் சொல்லி வந்தனர் என்ற செய்தியையும் குறிப்பிடுகிறார

وَكَبَّرَ مُحَمَّدُ بْنُ عَلِيٍّ خَلْفَ النَّافِلَةِ
பெண்களும் தக்பீர் சொல்லினர்

وكانت ميمونة رضي الله عنها تكبر يوم النحر وكان النساء يكبرن خلف أبان بن عفان وعمر بن عبد العزيز ليالي التشريق مع الرجال في المساجد  - صحيح البخاري 
சஹாபாக்கள் முஸ்லிம் உம்மத்தின் ஏகோபித்த நடைமுறைகளின் படி பர்ளு தொழுகைக்களுக்குப்பின் தக்பீர் சொல்வதை இமாம்கள் சுன்னத் என அறிவித்தனர்.

بل بلغ من أهمية التكبير المقيد بأدبار الصلوات أن العلماء قالوا: يقضيه إذا نسيه, فإذا نسي أن يكبر عقب الصلاة فإنه يكبر إذا ذكر ولو أحدث أو خرج من المسجد ما لم يطل الفصل بين الصلاة والتكبير.
முஸ்லிம் உம்மத்தின் ஏகோபித்த நடை முறை இப்படி இருக்க சமூகத்தில் பேஷன் மார்க்கத்தை கடைபிடிக்கும் ஒரு சாரார் இதை தவிர்ப்பது துரதிஷ்டவசமானது, இமாம்களின் வழியை பின்பற்றுவதா இந்த புதிய குழப்பவாதிகளின் வழிமுறையை பின்பற்றுவதா  எது சிறந்தது என்பதை அறிவுள்ள மக்கள் யோசித்து செயல்பட வேண்டும்.

(ஆலிம்கள் சில நேரத்தில் மார்க்கத்தில் இத்தகைய குழப்பத்தை ஏற்படுத்திய தீய சக்திகளைப் பற்றி பேசுகிற போது இதை ஏன் பேசுறீங்க என்று சிலர் கேட்கின்றனர், சமுதாயத்திற்கு இதை தவிர வேறு பிரச்சினை இல்லையா என்று வாதிடுகின்றனர்.

உண்மையில் அத்தகையோ, தீன் விச்யத்தில் இது ஹதீஸில் இல்லாதது, குர் ஆனில் இல்லாதது என்று சொல்லி குழப்பத்தை முதல் கட்டமாக உண்டு பண்ணியவர்களைப் பார்த்து  “ ஏம்பா நம்ம முன்னாள் வாழ்ந்த அறிஞர்ப் பெருமக்கள் எல்லாம் ஒன்றை செய்திருக்க – உம்மத் ஒரு காரியத்தில் ஒன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கிற போது ஏன் தேவையில்லாம குழப்பத்தை ஏற்படுத்தறீங்க என்று கேட்டிருக்க வேண்டும்.  

குழப்பத்தை தொடங்கி வைத்தவர்களைப் பார்ர்த்து கேள்வி கேடக துப்பில்லாதவர்கள் குழப்பத்திற்கு பதில் கொடுக்க முனைகிறவர்களைப் பார்த்து நக்கலும் நையாண்டியும் பேசி வருகிறார்கள். இது அநீதியாகும்

தக்பீர் முஸ்லிம்களுடைய உள்ளத்தை நிலைப் படுத்தும் ஒரு சொல்லாகும்.

தகீபீரை அல்லாஹ் வலியுறுத்துகிறான்.
وَكَبِّرْهُ تَكْبِيراً } الإسراء111 
يَا أَيُّهَا الْمُدَّثِّرُ{1} قُمْ فَأَنذِرْ{2} وَرَبَّكَ فَكَبِّرْ{3} ﴾ المدثر

இஸ்லாத்தில் தக்பீரின் மகிமை பல வகையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது

பாங்கு, தொழுகை, பெருநாட்கள், மகத்தான் சந்தர்பங்களின் அடையாளமாக தக்பீர் ஆக்கப்பட்டுள்ளது.  

முஸ்லிமுடைய் வாழ்வில் தக்பீர் அதிகம் தொடர்புடைய சொல்லாகும்
நான்கு ரக அத் தொழுகையில் 22 உறை தக்பிர் சொல்லப்படுகிறது. அப்படியானால் ஒரு நாளின் பர்ளு தொழுகைகளில் மட்டும் ஒரு முஸ்லிம் 94 தடவை அல்லாஹ் அக்பர் சொல்கிறார்.

சுன்னத்துக்களையும் நபில்களையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும்.
வழக்கமான சுன்னத்துக்களையும் நபில்களையும் வித்ரையும் தொழுதால் ஒரு நாளில் 342 முறை ஒரு முஸ்லிம் தக்பீர் சொல்கிறார்.

இது தவிர பாங்கிலும் இகாமத்திலும் 50 தக்பீர்கள் இருக்கின்றன. இவற்றிற்கு பதில் சொல்வதிலும் 50 தக்பீர்கள் இருக்கின்றன.

இதை தவிர தக்பீரை தனியாக சொல்லும் சந்தர்ப்பங்களும் நிறைய இருக்கின்றன அந்த வகையில் ஒரு நாளைக்கு ஒரு முஸ்லிம் எத்தனை தக்பீர் சொல்கிறார் என்கிற கணக்கு அல்லாஹ்விற்கே தெரியும்

தொழுகை மட்டுமல்லாது ஹஜ்ஜு குர்பானி போன்ற வணக்கங்கள் தக்பீரினால் நடைபெறுகின்றன,

ஹாஜி சைத்தானை கல்லெறிவது வரை தல்பியா சொல்லுவார் . முதல் கல்லை எறிந்த நிமிடத்திலிருந்து தக்பீருக்கு மாறிவிடுவார்,

தவாபை தொடங்கும் போது, சைத்தானை கல்லெறியும் போது என அவரது அமல்களில் தக்பீர்  முக்கிய இடம்பிடித்திருக்கீறது.

குர்பானியின் முக்கியக் கட்டத்தில் தக்பீர் இடம் பிடித்திருக்கிறது,

இதனால் தான் உமர் ரலி கூறீனார்கள்


عن عمر بن الخطّاب رضي الله عنه أنّه قال: قول العبد: « قول العبد : الله أكبر، خيرٌ من الدنيا وما فيها »
.

பிறையை பார்த்ததும் பெருமானார் தக்பீர் சொல்வார்கள்

كان رسول الله إذا رأى الهلال قال :" الله أكبر ، اللهم أهله علينا بالأمن و الإيمان ، و السلامة و الإسلام ، و التوفيق لما تحب و ترضى ، ربنا و ربك الله"
الراوي: عبدالله بن عمر 

பயணம் புறப்படுகிற போதும் தக்பீர் சொல்வார்கள் பெருமானார்

ففي صحيح مسلم عن ابن عمر رضي الله عنهما أن " رسول الله  صلى الله عليه وسلم كان إذا استوى على بعيره خارجا إلى سفر كبر ثلاثاً ...)) 

மேட்டில் ஏறுகிற போது தக்பீர் சொல்வதும் பள்ளத்தில் இறங்கு கிற போது சுப்ஹானல்லா சொல்வதும் பெருமானாரின் பழக்கம்.

عن ‏ ‏جابر بن عبد الله ‏‏رضي الله عنهما ‏ ‏قال : " ‏كنا إذا صعدنا كبرنا وإذا نزلنا سبحنا"فتح الباري

அதிர்ச்சியளிக்கிற செய்திகளை கேட்கிற போது அல்லாஹ் அக்பர் என்று சொல்கிற பழக்கம் சஹாபாக்கள்டம் இருந்தது.

யஃஜூஜ் மஃஜூஜ் களைப் பற்றி பெருமானார் சொன்ன போது நாங்கள் அல்லாஹு அக்பர் என்று சொன்னோம் என அபூஸஈதில் குதிரி ரலி கூறுகிறார்.

மய்யித்துகளுக்கான தொழுகையாக நான்கு தக்பீர்கள் மட்டுமே ஆக்கப்பட்டிருக்கிறது,

நெருப்பு பற்றிக் கொள்வதைப் பார்த்தால் தக்பீர் சொன்னால் அது நெருப்பை அனைக்கும் என்றார்கள் பெருமானார் (ஸல்)
عن عبدالله بن عمر 
قال النبي صلى الله عليه وسلم :" إذا رأيتم الحريق ، فكبروا ، فإن التكبير يطفئه "


என்னுடைய அனுபவத்தில் தக்பீர் மகத்தான சக்தியாக இருந்ததை ஒரு தடவை உணர்ந்தேன்.

2008 ஹஜ்ஜின் போது 12 ம்நாள் ஜவாலுக்குப்பின் சைத்தானை கல்லெறிந்த போது ஜம்ரா பாலம் மிக சவுகரிமாக கல்லெறிய சிரமமில்லாமல் இருந்தது.  அதற்குப் பிறகு மக்காவில் தங்குமிடத்திற்கு செல்ல திரும்பிக் கொண்டிருந்த போது மக்காவிற்கான தரீக்குல் மஷாத் தின் தொடக்கத்திலிருந்த ஒரு சின்ன சப்வேயில் கூட்டம் அடைத்துக் கொண்டு நின்றது. வழியில் ஒரு மரணம் ஏற்பட்டிருக்கிறது என்று இராணுவ வீரர் சைகை செய்து கொண்டிருந்தார். பின்னால் கூட்டம் வந்து மோதிக் கொண்டிருந்தது, கொஞ்ச நேரத்தில் நெரிசல் அதிகரித்து அதிகரித்து எல்லோர் கண்களிலும் ஒரு அச்சம் பரவத் தொடங்கியது. மெளனம் கோலோட்சிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் மெல்ல ஒருவர் தக்பீர் சொன்னார். தொடர்து அனைவரும் கூறினர். கூட்டத் தின் அழுத்தம் எப்படித்தான் குறைந்ததோ தெரியவில்லை. அனைவரும் அச்சத்திலிருது விலகி ஒரு நிதானத்திற்கு வந்தனர்,  வழி ஏற்பட்ட பிறகு தள்ளு முள்ளூ இல்லாமல் அணியணியாக வெளியேறினர்.

தக்பீரின் மகிமைய அனுபவித்து உணர்ந்த ஒரு வாய்ப்பு அது.

நேற்று மினாவில் சைத்தானை கல்லெறிகிற இடத்திற்கு அருகே மிகப்பெரிய நெரிசல் ஏற்பட்டு பெரும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளது.

இதுவரை 717 பேர் ஷஹீதாகியுள்ளனர், 800 பேருக்கு மேல் காயமடைந்துள்ளனர், இந்திய நாட்டை சார்ந்த 6 பேர் ஷஹீதாகி இருக்க கூடும் என்று தெரிகிறது. தமிழ்நாடு  வடகரையைச் சார்ந்த ஷம்சுத்தீன் என்பவர் ஷஹீதாகி இருப்பதாக முதல் கட்ட செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

முஸ்லிம் உலகம் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி நிற்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் வெள்ளிக்கிழமை ஹரம் ஷரீபில் திடீரென நிகழ்ந்த கிரென் விபத்தில் 107 பேர் ஷஹீதான துக்கத்திலிருந்து இன்னும் மீளாத நிலையில் மாபெரும் அதிர்ச்சியாக இந்த விபத்து நடந்துள்ளது.

கடந்த 2006 லிருந்து ஹஜ் பாதுகாப்பாக நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு நிகழ்ந்த விபத்துக்கள் முஸ்லிம்கள ஆழ்ந்த துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது.

விபத்துக்கான காரணம்   

சைத்தானை கல்லெறியச் செவதற்கு ஒரு வழியும் திரும்புவதற்கு இன்னொரு வழியையும் அரசாங்கம் நிர்ணயித்திருக்கிறது. இதில் இன்று 10 ம் நாள் காலை சைத்தானை சைத்தானை கல்லெறிந்து விட்டு திரும்புவதற்கான வழியை தவிர்த்து விட்டு மக்கள் உள்ளே வரக்கூடிய பாதையில் மக்கள் குறிப்பாக – ஆப்ரிக்காவைச் சார்ந்தவர்கள் சென்று கொண்டிருந்ததே கல்லெறிய உள்ளே வந்த கூட்டம் சேர்ந்து கொள்ள மக்கள் ஒரு குறுகிய பாதையில் அடைத்துக் கொண்டு நின்றதே காரணம் என மினாவில் நிகழ்வை நேரிட்டுப் பார்த்த அல் அரபிய்யா செய்திச் சேனலின் நிருபர் ஒரு வர் கூறுகிறார்;
قالت مصادر "العربية" إن الحادثة سببها بعض الحجاج من الجنسيات الإفريقية.

இறந்தவர்களில் அதிகம் பேர் நைஜீரியர்கள் என பி பி சி உருது செய்தி கூறுகிறது
سعودی حکام نے تاحال ہلاک شدگان کی شناخت ظاہر نہیں کی ہے تاہم منیٰ میں موجود بی بی سی کے نامہ نگار الا اسوفو کا کہنا ہے کہ مرنے والوں میں نائجیریا سے تعلق رکھنے والے حاجیوں کی بڑی تعداد شامل ہے۔

இந்த சாலையில் ஒரு விபரீதம் நடப்பதற்கான அனுமானம் இருந்தது காரணம் அந்தச் சாலையில் கூடிய அளவு கடந்த கூட்டம் என்று ஒருவர் கூறுகிறார்.

இந்தச் சாலையைப் பயன்படுத்த வேண்டாம் அதிகாரிகள் கூறிச் சென்றதாக விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகிறார்.

وروى شاهد عيان لـ"العربية" أنه عند الساعة السابعة صباحاً تواجد رجال الأمن في الشارع الذي وقعت فيه الحادثة وسارعوا في تنبيه الحجاج في عدم دخول هذا الشارع الضيق.

கடுமையான வெப்பத்தின் காரணமாக பலி எண்ணிக்கை உயர்ந்து விட்டதாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சைத்தானை கல்லெறிகிற இடத்தில் எச்சரிக்கையை கையாளுமாறு ஆயிரத்து நானூறு வ்ருடங்களுக்கு முன்பே பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள் (அபூதாவூத்)
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ عَمْرِو بْنِ الْأَحْوَصِ عَنْ أُمِّهِ قَالَتْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْمِي الْجَمْرَةَ مِنْ بَطْنِ الْوَادِي وَهُوَ رَاكِبٌ يُكَبِّرُ مَعَ كُلِّ حَصَاةٍ وَرَجُلٌ مِنْ خَلْفِهِ يَسْتُرُهُ فَسَأَلْتُ عَنْ الرَّجُلِ فَقَالُوا الْفَضْلُ بْنُ الْعَبَّاسِ وَازْدَحَمَ النَّاسُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَيُّهَا النَّاسُ لَا يَقْتُلْ بَعْضُكُمْ بَعْضًا وَإِذَا رَمَيْتُمْ الْجَمْرَةَ فَارْمُوا بِمِثْلِ حَصَى الْخَذْفِ
மக்கள் வழிகாட்டு நெறிகளை கடைபிடிக்காததே இம்மாபெரிய விபத்துக்கு காரணம் என்று முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
விபத்து பற்றி பல தவறான வீடியோக்கள் ஊடகங்களில் பரப்பட்டு வருகின்றன. அவற்றை பரப்புவதை நிறுத்துவோம். காஷ்மீரில் இதன் காரணமாக இணையம் முடக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன  
இத்தனை களோபரத்திற்கு நிகழ்வை பற்றி முழு விசாரனைக்கு சவூதி அரசு உத்தரவிட்டிருக்கிறது. விபத்து நடந்த பகுதியில் போக்கு நிறுத்தி மாற்றுப் பாதையில் ஹஜ்ஜின் பிரதான அமல்கள் வழக்கம் போல நடை பெற அரசு ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது.
இஹ்ராமுடைய ஆடையில் மக்கள் குவியல் குவியலாக சடலங்களாக கிடக்கிற காட்சி அலற வைக்கிறது.
எங்களால் தாங்கிக் கொள்ள முடியாது. இறைவா!
காப்பாற்றுவாயாக! காப்பாறுவாயாக! ஹாஜிகளை பாதுகாப்பாயாக! ஹஜ்ஜை பாதுகாப்பாயாக!
அல்லாஹ் ஷஹீதானவர்களுக்கு உயர்ந்த அந்தஸ்தை வழங்குவான, இஹ்ராமுடைய உடையில் ஷஹீதான அவர்கள் தல்பியா சொன்னவர்களாக எழுப்பப் படுவார்கள்.
அவர்களுடை குடும்பத்தார்களுக்கு ஆறுதல் சொல்ல அல்லாஹ்வே போதுமானவன்.
காயம் பட்டவர்களுக்கு யா அல்லாஹ் விரைவான நிறைவான நிவாரனத்தை கொடு!
யா உன்னுடைய பூமியில் எஞ்சியுள்ள ஹாஜிகளை உன்னுடைய பாதுகாப்பில் வைத்திருந்து பத்திரமாக அவரகளது குடும்பத்தாரிடம் சேர்பாயாக!
யா அல்லாஹ் எங்களுக்கு ஏற்பட்ட இந்தச் சோதனையிலிருந்து உயர்த கூலியையும் தகுந்த படிப்பினையை தந்தருள்வாயாக!

சுவனத்தில்,

சொர்க்க வாசற்படியில் முதல் நிமிடங்கள்


சொர்க்கவாசலில் காலடி வைத்த முதல் நிமிடங்கள் எப்படி இருக்கும் தெரியுமா!

நிச்சயமாக அந்த நிமிடங்கள் திகைப்பூட்டும்  தருணங்களாகவும், தித்திக்க வைக்கும் வேளைகளாகவும், ஆர்ப்பரிக்கும் சமயங்களாகவும்தான் இருக்கப் போகின்றன. 

பூலோகத்தில்...
என்றோ ஒரு நாள் மறைந்து போன அன்பர்கள், நண்பர்கள், உறவினர்களை உடலோடும் உயிரோடும் காணும் போது!!!

மதிப்புக்குரிய பெற்றோரை பாசமுள்ள மகனும் மகளும் காணும் போது!

சிறு வயதில் உயிர் பிரிந்த செல்லக் குழந்தையை, தாய்தந்தை காணும் போது!

அன்புள்ள கணவனை, ஏங்கித் தவித்த மனைவி காணும் போது!

பூலோகத்தில்...

நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட உறவுகள் குணமடைந்து சுகதேகிகளாக காணக் கிடைக்கும் போது!

இங்கே வயோதிபர்களாக இருந்தவர்களை  அங்கே இளம் வாலிபர்களாக காணும் போது!

இங்கே துன்பத்திலும், துயரத்திலும் வாழ்ந்தவர்கள் அங்கே இன்பமாக உலா வருவதை காணும் போது!

இங்கே குருடர்களாக, செவிடர்களாக, உடல் ஊனமுற்றவர்களாக, புத்தி போதலித்தவர்களாக இருந்தவர்கள் அங்கே குறைகள் ஏதுமற்ற புதுப் பிறவிகளாக நடமாடுவதைக் காணும் போது!

நபிமார்களுக்கு, தூதர்களுக்கு கைகுலுக்கி, ஆரத்தழுவி நேருக்கு நேர் சந்திக்க கிடைக்கும் போது!

எங்கள் நபியாம் அண்ணல் நபியை கண்கொண்டு காணக் கிடைக்கும் போது!

வரலாறு படைத்த நபித்தோழர்களை, தியாகிகளை, சீர்திருத்த வாதிகளை, அறிஞர்களை சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கும் போது!

நபி நூஹின் கப்பலில் ஏறி தப்பித்தவர்கள், நபி மூஸாவேடு கடல் கடந்தவர்கள், கிடங்கு வாசிகள், குகை வாசிகள், லுக்மானுல் ஹகீம், துல் கர்னைன், என முன் சென்ற சமுதாயத்தினரை காணக் கிடைக்கும் போது!

தங்கம், வெள்ளி, கஸ்தூரி, முத்து, மரகதம், குங்குமத்தினாலான மாளிகைகளை, தரைகளை, பொடிக்கற்களை காணும் போது!

கண் கவரும் அரண்மனைகளையும், 
கூடாரங்களையும் காணும் போது!

நதிகள் பாய்ந்தோடும் நந்தவனங்களை காணும் போது!

பாலாறும் தேனாறும் பாய்ந்தோடுவதைக் காணும் போது!

கைக்கெட்டும் பழங்களையும் கனிகளையும் பறிக்கும் போது!

தங்கத் தட்டுக்களில் அறுசுவை உணவுகள் பரிமாறப்படும் போது!

கையில் மது பானக் கிண்ணத்தோடு சாய்வு இருக்கையில் சாய்ந்த வண்ணம்  ஒய்யாரமாக இருக்கும் போது!

சண்டைகள், சச்சரவுகள் அற்ற, குரோதங்கள், குழப்பங்கள் அற்ற, வஞ்சகங்கள், வயிராக்கியங்கள் அற்ற சமாதன யுகத்தில் நுழைந்துவிட்டோம் என்று நினைக்கும் போது!

இனி என்றும் கடமைகள், கட்டுப்பாடுகள் இல்லை என்பது தெரிய வரும் போது!

இனி என்றும் நேய் நொடிகள் இல்லை, மருந்து மாத்திரைகள் இல்லை என தெரிய வரும் போது!

இனி என்றும் துக்கம் துயரம், கஷ்டம் கவலை இல்லை என தெரிய வரும் போது!

இனி என்றும் முதுமை வயோதிபம் இல்லை, மரணம் முடிவு இல்லை என்பது தெரிய வரும் போது!

இனி என்றும் அழிவே இல்லாத ராஜ வாழ்கைதான் என்று நினைக்கும் போது!

அரியாசனத்தின் நாயகன் அல்லாஹ் "சுவன வாசிகளே! என்று அழைத்து, "இன்னும் ஏதாவது நான் மேலதிகமாக தர வேண்டுமா? என்ற அவன் ஓசை கேட்கும் போது!

அதற்கு அவர்கள்: நீ எங்கள் முகங்களை வெண்மை ஆக்கினாயே! எங்களை நரகத்திலிருத்து பாதுகாத்தாயே! சுவனத்தில் எங்களை நூழைவித்தாயே! வேறு என்னதான் நாம் உன்னிடம் கேட்க முடியும்? என்று அவர்கள் கூறும் போது!

அந்த நேரத்தில்தான் மகா வல்லவன் அல்லாஹ் இடுதிரை நீக்கி தனது திரு முகத்தை சுவனவாசிகளுக்கு வெளிக்காட்டும் போது!

அந்நேரத்தில் இறை திரு முகம் பார்க்க கிடைப்பதானது சுவனம் கிடைத்ததை விட பெரும் இன்பப் பரிசாக இருக்கப் போகிறது.

பின்னர் அவர்களை நோக்கி அல்லாஹ்: இன்றோடு என் திருப்தியை உங்கள் மீது நான் இறக்கி வைக்கிறேன், இனி என்றும் நான் அதிருப்தி அடையமாட்டேன்.' என்று கூறுவான். 

((சென்று போன நாட்களில் நீங்கள் செய்து வைத்த (நல்லறங்கள்) காரணமாக, இப்போது ஆனந்தமாக உண்ணுங்கள்!பருகுங்கள்! (என கூறப்படும்).

📖 அல்குர்ஆன் : 69:24

அருளாளன் அல்லாஹ் என்னையும் உங்களையும் அவனது பரந்த சுவத்தில் உயர்ந்த இடத்தில் வாழ வைப்பானாக!

பிரபல்யமான பதிவுகள்