நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

சனி, பிப்ரவரி 22, 2025

சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!

சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!

 

நபிகள் நாயகம் [ஸல்]அவர்கள் தன்னுடைய மகள் பாத்திமா [ரலி] அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் அன்னை பாத்திமா [ரலி] மிகவும் அவலோடு சொர்க்கத்தின் உள்ளே நுழையும் முதல் பெண் யார் என்று கேட்கிறார் பாத்திமா [ரலி] அவர்கள் கேட்டவுடன்.


நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் சிரித்து விட்டு எனது அருமை மகளே சொர்க்கத்தின் தலைவி நீ தான். ஆனால் உனக்கு முன்னால் விறகு வெட்டியின் மனைவி ஒருவர் சொர்க்கத்தின் உள்ளே முதல் ஆளாக நுழைவார் என்று கூறினார்கள்.


சொர்க்கத்தின் உள்ளே நுழைவது விறகு வெட்டியின் மனைவியா..? யார் அவர்
என்று மிகுந்த ஆவலோடு கேட்கிறார். நபிகள் நாயகம் [ஸல்] கூறினார்கள்..
உனது வீட்டுக்கு அருகாமையில் தான் அவருடைய வீடு இருக்கிறது என்று
கூறினார்.

அன்னை பாத்திமா நாயகிக்கு ஆவல் அதிகரித்து அப்படி என்ன கூடுதல் தகுதி
இருக்கிறது என்பதை அறிய அவரைச் சந்திப்பதற்காக தன்னுடைய கணவர் அலி
[ரலி] அவர்களிடம் அனுமதி பெற்றுக்கொண்டு விறகு வெட்டியின் வீட்டுக்கு சொன்று கதவை தட்டுகிறார்.


யார் அது என்று ஒரு பெண்மணின் குரல் கேட்கிறது. நான் தான் நபியின் மகள்
பாத்திமா வந்துள்ளேன் தங்களிடம் பேசுவதற்காக வந்துள்ளேன் என்று
பாத்திமா [ரலி] கூறுகிரார். உலகமே திரும்பி பார்க்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியத்தின் தலைவரான நபிகள் நாயகத்தின் மகள் ஒரு ஏழையின் வீட்டு வாசலில் நின்று கொண்டு நான் தான் பாத்திமா என்று கூறிய அந்த நேரத்திலும் அந்த வீட்டின் கதவு திறக்கவில்லை என்னுடைய கணவர் இல்லாத நேரத்தில் கதவு திறக்க அனுமதி இல்லை என்று விறகு வெட்டியின் மனைவி கூறுகின்றார்.


மேலும் அல்லாஹ்வின் தூதரின் மகளை க் காண்பதற்கு எனக்கும் ஆசைதான்,
ஆனால் என்னுடைய கணவரின் அனுமதி இல்லாமல் கதவு திறப்பதற்கு எனக்கு
அனுமதி இல்லை என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். மேலும் அந்த பெண்மணி கூறுகையில், நாளை நீங்கள் வருவதாக இருந்தால் என்னுடைய கணவரிடம் அனுமதி பெற்று வைக்கிறேன் என்று அந்த பெண்மணி கூறினார்.

அதன் அடிப்படையில் அன்னை பாத்திமா [ரலி] இரண்டவது நாளாக தன்னுடைய புதல்வர்கள் ஹசன்[ரலி] ,ஹுசைன்[ரலி] ஆகியோரை அழைத்து சொல்கிறார்.


முதல் நாளை போன்று கதவை தட்டுகிறார் முதல் நாளைப் போல யாரது என்று
பெண்ணின் குரல் கேட்கிறது. நான் தான் நபியின் மகள் பாத்திமா வந்துள்ளேன் என்னுடன் என்னுடைய புதல்வர்கள் இருவரும் வந்துள்ளனர் என்று பாதிமா [ரலி] கூருகிறார். இரண்டாவது  நாளும் கதவு திறக்கப்படவில்லை நாயகி
என்னை மன்னிக்க வேண்டும் நீங்கள் வருவதற்கு மட்டும்தான் அனுமதி பெற்றேன்., தங்களுடைய புதல்வர்கள் உள்ளே வர அனுமதி இல்லை. நாயகியை மறுத்தமைக்கு என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். நான்
சொல்லும் வார்த்தைகளை தாங்கள் தயவு செய்து சிந்திக்க வேண்டும் என்று
அந்த பெண்மணி கூறுகிறார்.


முன்றாவது நாளாக புதல்வர்களை விட்டு மீண்டும் அதே வீட்டுக்கு அன்னை பாத்திமா [ரலி] செல்கிறார் மூன்றாவது நாளும்  தட்டுகிறார், யார்? என்று அதேபோல குரல் கேட்கிறது. நான் தான் நபியின் மகள் பாத்திமா வந்துள்ளேன் என்று அன்னை கூறியவுடன் கதவு திறக்கபடுகிறது, என்னுடைய கணவரிடம் உங்களுடைய வருகை குறித்து அனுமதி கேட்டேன். பெருமானாரின் குடும்பத்தினர்  யார் வந்தாலும் எவ்வித தடையும் இல்லை என்று கணவர் கூறியதாக அந்த பெண்மணி கூறினார். அதன் பிறகு இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் அஸர் தொழுகை வருகிறது, இருவரும் தொழுகிறார்கள். தொழுகை முடித்து அன்னை பாத்திமா [ரலி] ஓரமாக அமர்ந்து
கொள்கிறார் ஆனால் அந்த பெண்மணியோ யா அல்லாஹ் தன்னுடைய சேவை தன்னுடைய கணவனுக்கு  மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவருக்கு ஆயுள் பலம், தேக நலம் அளித்திட வேண்டும் என்று கணவருக்காக கண்ணீர் மல்க துஆ செய்கிறார்.

அங்கிருந்து ஸலாம் சொல்லிவிட்டு அன்னை பாத்திமா அங்கிருந்து  விடைபெற்று மறுநாள் தன்னுடைய தந்தையிடம் நடந்தவைகளை சொல்லிவிட்டு அல்லாஹ்வை வணங்காமல் வேறு எதுவும்  வணங்க கட்டளை இருந்தால் இனிதான கணவரை வணங்குவதற்கு அனுமதி பெறுவேன் என்று கூறுகிறார்.


கணவனின் உடமைகளை கவனமாக காத்து கொள்பவள், கணவனின் நம்பிக்கைக்கு ப் பாத்திரமாய் நடந்து கொள்பவள், கணவனின் குணமறிந்து கனிவு கொண்டு கடமை செய்பவள், கணவனின் கால் அடியில் காலமெல்லாம் சேவை செய்பவள், கணவனின் ஆணையின்றி வீட்டில் பிறரைச் சேர்த்திடாதவள், கணவனின் எதிரில் கையை  தரக்குறைவாய் நீட்டிடாதவள். நாளை சொர்க்கத்தில் நல்ல இடத்தை பெற்றுக் கொள்வாள் என்றும் நரகத்திலிருந்தும் தப்பி கொள்வாள்.


எனது அருமை மகள் பாத்திமாவே.. ஒட்டகத்தில் நீ வரும்போது விறகு வெட்டியின் மனைவி ஒட்டகத்தின் கயிறை கையிலே பிடித்தவாறு
முதல் ஆளாய் சொர்க்கத்தின் உள்ளே நுழைவார், கண்ணான என் மகளே
அடுத்தபடி நீ நுழைவாய். என்று நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் கூறினார்கள்

மரணம்! அது தரும் பாடங்களும்… படிப்பினைகளும்…

மரணம்! அது தரும் பாடங்களும்… படிப்பினைகளும்…


மரணம்அது தரும் பாடங்களும்… படிப்பினைகளும்




ஒருவருக்கு ஏற்படும் மரணம் என்பது இன்னொருவருக்கோஒரு குடும்பத்திற்கோஒரு சமூகத்திற்கோஒரு சமுதாயத்திற்கோ சொல்கிற செய்தி “வாழ்ந்தால் என்னைப் போல் வாழ்என்றோஅல்லது ஒரு போதும் என்னைப் போல் வாழ்ந்து விடாதேஎன்றோ இவ்விரண்டில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கும்.

நாளை நம்முடைய மரணமும் உலக சமூகத்திற்கு இவ்விரண்டில் ஏதாவது ஒன்றைத் தான் சொல்லவிருக்கின்றது.

மாநபி {ஸல்அவர்கள் ”மரணம் என்பது ஓர் மௌன உபதேசியாகும்” என்று கூறினார்கள்.

எப்படியானவர்களையும் மாற்றவல்ல ஆயுதமான உபதேசத்தை மரணத்தோடு மாநபி {ஸல்அவர்கள் ஒப்பிட்டுக் கூறியதன் அவசியத்தை நாம் சிந்தித்துப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம்!

ஆயிரமாயிரம் வார்த்தைகள்நூல்கள் உண்டு பண்ணாத தாக்கத்தை சில போது ஒரு சில வார்த்தைகளைக் கொண்ட உபதேசம் மனிதனிடம் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தி விடும்.

அது போன்றே ஒரு மனிதனின் மரணம் அது பற்றி பேசுகிற போதோகேள்வி படுகிற போதோஅதைப் பார்க்கிற போதோ ஒரு நொடியில் மனித வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திடும்புரட்டிப் போட்டு விடும் ஆற்றல் உண்டு என்பதைத் தான் மாநபி {ஸல்அவர்களின் அழகிய மொழி நமக்கு உணர்த்துகின்றது.

தமிழகத்தில் ஒரு மௌனம் நிலவிக்கொண்டிருக்கின்றதுஅந்த மௌனத்திற்கு பின்னால் ஒரு ஆளுமையின் மரணம் நிகழ்ந்திருக்கின்றது என்பதை நாம் எல்லாம் அறிவோம்.

ஆம்தமிழகத்தின் முதலமைச்சர் மரணம் அடைந்திருக்கின்றார்குடிமக்கள் ஆட்சியாளர் என்கிற அடிப்படையிலான தொடர்பு நமக்கும்அவருக்கும் இடையே இருக்கின்றது.

உலகிலேயே மிக உயரிய மருத்துவமனையின்மிக உயரிய மருத்துவ உபகரணங்களின் துணை கொண்டுமிக உயரிய மருத்துவ சிகிச்சைப் பிரிவில்மிக உயரிய மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் சுமார் 75 நாட்களாக போராடி இறுதியாக அங்கே மரணம் நிகழ்ந்திருக்கிறது.

கடைசி நிமிடம் வரை மதங்களைக் கடந்துசமயங்களைத் தாண்டி பிரார்த்தனைகள்சடங்குகள்வழிபாடுகள்நேர்த்திக் கடன்கள்லட்சக் கணக்கில்அல்ல கோடிக்கணக்கில் செலவுகள் செய்தும் உயிரை உடலோடு தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.

முதலமைச்சரின் மரணம் மாத்திரமல்லபொதுவாகநம்மைச் சுற்றி யார் மரணம் அடைந்தாலும் அங்கிருந்து இறைநம்பிக்கையாளர்களாகிய நாம் பெற வேண்டிய பாடங்களும்அங்கே குவிந்து கிடக்கிற படிப்பினைகளும் ஏராளம்தாராளம்.

வாருங்கள்மரணம்!! அது தரும் பாடங்களும்… அங்கே குவிந்து கிடக்கிற படிப்பினைகளும் என்னவென்பதை பார்த்து விட்டு நம் மரணமும் நல்லதாக அமைய முயற்சிப்போம்!

பெற வேண்டிய பாடங்கள்….

1. ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும்…

நபி ஸல் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் வலியுறுத்திச் சொன்ன ஓர் அம்சம் இருக்குமானால் அது ஆரோக்கியம் எனும் அருட்கொடை குறித்து தான்.

روى الترمذي في سننه من حديث رفاعة بن رافع قال: قام أبوبكر الصديق على المنبر، ثم بكى فقال: قام رسول الله -صلى الله عليه وسلم- عام الأول على المنبر ثم بكى، فقال: "سلوا الله العفو و العافية ، فإن أحدًا لم يعط بعد اليقين خيرًا من العافية".

நீங்கள் லாஇலாஹ இல்லல்லாஹீ என்று கூறும் வார்த்தைக்குப் பிறகு ஆரோக்கியத்தைத் தவிர வேறு எதனையும் சிறந்த ஒன்றாக உங்களுக்கு வங்கப்பட வில்லை. எனவே நீங்கள் அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தை கேளுங்கள் என்று நபி {ஸல்} அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் என்று அபூபக்கர் சித்தீக் (ர­லி) அவர்கள் கூறினார்கள். நூல்: அஹ்மத் )

மக்களுக்கு கட்டளையிட்டது மட்டும் நின்று விடாமல் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தை கேட்டுள்ளார்கள்.

اللهم إني أسألك العافية من كل بلية ، وأسألك تمام العافية ، وأسألك دوام العافية ، وأسألك الشكر على العافية ،

யாஅல்லாஹ்! உன்னிடம் நான், அனைத்து வகையான சோதனைகளின் போதும் ஆரோக்கியத்தைக் கேட்கிறேன்! நிறைவான ஆரோக்கியத்தைக் கேட்கிறேன்! நீடித்த ஆரோக்கியத்தைக் கேட்கிறேன்! நீ வழங்கிய ஆரோக்கியத்திற்காக உனக்கு நன்றி செலுத்தும் நற்பண்பை உன்னிடம் கேட்கிறேன்!” என்று மாநபி {ஸல்} அவர்கள் ஓதியதாக அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஒர் அறிவிப்பை இமாம் திர்மிதீ (ரஹ்) அவர்கள் தங்களின் நவாதிருல் உஸூலில் பதிவு செய்திருக்கின்றார்கள்.

     اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ، وَفُجَاءَةِ نِقْمَتِكَ، وَجَمِيعِ سَخَطِكَ

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி­) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “யா அல்லாஹ் உன்னுடைய அருள் என்னை விட்டு நீங்குவதில் இருந்தும்நீ எனக்கு கொடுத்த ஆரோக்கியம் என்னிடம் இருந்து விலகுவதை விட்டும்உன்னுடைய தண்டனை திடீரென்று வருவதையும்உன்னுடைய அனைத்து கோபத்தை விட்டும் நான் பாதுகாப்பு தேடுகிறேன் என்று பிரார்த்தனை செய்வார்கள். இது அவர்களின் (வழமையான) பிரார்த்தனைகளில் ஒன்றாகும். நூல்: முஸ்லிம் )


நபி {ஸல்} அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த ஒரு நபித்தோழரை நலம் விசாரிக்கச்சென்றார்கள். அவர் நோயினால் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் நீர் இறைவனிடம் ஆரோக்கியத்தை கேட்டு பிரார்த்தனை செய்யக்கூடாதாஎன்று கேட்டார்கள். அதற்கவர், ”நபிகளாரின் முன்னிலையில் யா அல்லாஹ்! மறுமையில் என்னை நீ தண்டிப்பதாக இருந்தால் இவ்வுலகத்திலேயே அதற்காக தண்டனையை வழங்கிவிடு!” என்று பிரார்த்தனை செய்தார்.

அப்போது, நபி (ஸல்) அவர்கள் ”அல்லாஹ் உமக்கு இவ்வுலகத்திலேயே தண்டனையை வழங்கிவிட்டால் நீர் தாங்கிக் கொள்ள முடியாது. எனவே, யா அல்லாஹ் இவ்வுலத்திலும் எனக்கு நன்மையை வழங்குவாயாக! மறு உலகத்திலும் எனக்கு நன்மையை வழங்குவாயாக என்று கேட்பீராக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: திர்மிதி )

ஆரோக்கியத்தோடு இருக்கிற போது தான் ஒர் இறைநம்பிக்கையாளனாக படைத்த ரப்புக்கு செய்யவேண்டிய கடமைகளையும், சக அடியார்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், தனக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் முழுமையாக செய்ய முடியும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنْ الْمُؤْمِنِ الضَّعِيفِ

மேலும், அளப்பரிய அல்லாஹ்வின் நேசத்தையும் பெற முடியும். ஏனெனில், அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:  “இறைநம்பிக்கையோடு வாழ்கிற பலகீனமான அடியாரை விட சிறந்தவரும், அல்லாஹ்வின் நேசத்திற்குரியவரும் எவர் என்றால் ஆரோக்கியத்தோடு வாழும் இறைநம்பிக்கையாளரே!” என்று மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல் முஸ்லிம் )

2. நோய்வாய்ப்பட்டால் அதில் பொறுமையும், சகிப்புத்தன்மையும் வேண்டும் 

عمران بن حصين
أسلم عام خيبر، وغزا مع رسول الله صلى الله عليه وسلم غزوات، بعثه عمر بن الخطاب إلى البصرة، ليفقه أهلها وكان من فضلاء الصحابة، واستقضاه عبد الله بن عامر على البصرة، فأقام قاضياً يسيراً، ثم استعفي فأعفاه.
قال محمد بن سيرين: لم نر في البصرة أحداً من أصحاب النبي صلى الله عليه وسلم يفضل على عمران بن حصين.
وكان مجاب الدعوة وكان في مرضه تسلم عليه الملائكة، فاكتوى ففقد التسليم، ثم عادت إليه، وكان به استسقاء فطال به سنين كثيرة، وهو صابر عليه، وشق بطنه، وأخذ منه شحم، وثقب له سرير فبقي عليه ثلاثين سنة، ودخل عليه رجل فقال: يا أبا نجيد، والله إنه ليمنعني من عيادتك ما أرى بك! فقال: يا ابن أخي، فلا تجلس، فوالله إن أحب ذلك إليّ أحبه إلى الله عز وجل.
وحقق ايمان عمران بن حصين أعظم نجاح، حين أصابه مرض موجع لبث معه ثلاثين عاما، ما ضجر منه ولا قال: أفّ..
بل كان مثابرا على عبادته قائما، وقاعدا وراقدا..
وكان اذا هوّن عليه اخوانه وعوّاده أمر علته بكلمات مشجعة، ابتسم لها وقال:
" ان أحبّ الأشياء الى نفسي، أحبها الى الله"..!!
وكانت وصيته لأهله واخوانه حين أدركه الموت:
" اذا رجعتم من دفني، فانحروا وأطعموا"..

இம்ரான் இப்னு ஹஸீன் (ரலிஅவர்கள் நபித்தோழர்களில் நபிகளாரின் தனிப் பெரும் பாசத்திற்குரிய ஒருவர்கைபரின் போது இஸ்லாத்தைத் தழுவினார்கள்.

துஆ ஒப்புக்கொள்ளப்படும் தூய நபர்களில் ஒருவராகவும் விளங்கினார்கள்.
கைபருக்குப் பின் நடந்த அனைத்துப் போர்களிலும் நபி {ஸல்அவர்களோடு ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள்.

      அவர்களுக்கு வயிற்றில் ஒரு கட்டி இருந்ததுஅக்கட்டியை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினார்கள்முறையான மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் முடக்கு வாதத்தால் முடங்கிப் போனார்கள்.

      கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அவர்கள் படுத்தப் படுக்கையாய் ஆனார்கள்என்ற போதிலும் இறைவழிபாட்டில் சிறிதேனும் அவர்கள் விலகிட வில்லை.

      ஒரு நாள் அன்னாரை நலம் விசாரிக்க வந்த ஒருவர், “அபா நுஜைதேஉம்மை நலம் விசாரிக்க ஒவ்வொரு நாளும் வரவேண்டும் என நினைப்பேன்ஆனால்மக்கள் உன் நிலை குறித்து என்னிடம் சொன்ன போது இந்த நிலையில் உம்மைப் பார்க்கும் சக்தி எமக்கு வரவில்லைஇப்போது கூட மனதைக் கல்லாக்கிக் கொண்டு தான் உம்மை நலம் விசாரிக்க வந்தேன்” என்று கூறியவாறு அமர்ந்தார்கள்.

      அப்போதுஇம்ரான் பின் ஹஸீன் (ரலிஅவர்கள் “தோழரேநீர் அமரவேண்டாம்அல்லாஹ் நான் எப்படி இருக்க வேண்டும் என விரும்புகின்றானோஅவ்வாறே நானும் இருக்க விரும்புகின்றேன்என்னை இப்படிப் பார்க்க விரும்புகின்றான்நான் அதை மனப்பூர்வமாக பொருந்திக்கொண்டேன்” என்று பதில் கூறினார்கள்.

      فدخل عليه بعض الصحابة فرأوه فبكوا، فنظر إليهم وقال: لم تبكون؟! قالوا: لحالك، وما أنت عليه من هذا الابتلاء؛ فقال عمران بن حصين -رضي الله عنه-: "شيء أحبه الله أحببته، أنتم تبكون، أما أنا فراضٍ، أحب ما أحبه الله، وأرضى بما ارتضاه الله تعالى، وأسعد بما اختاره الله"، ثم قال لهم: "والله أكون على حالي هذا فأحس بتسبيح الملائكة وأحس بزيارة الملائكة، فأعلم هذا الذي بي ليس عقوبة وإنما يختبر رضائي عنه،

       இன்னொரு முறை அவர்களை சந்திக்கச்சென்ற சில ஸஹாபாக்கள் அவர்களின் நிலை கண்டு அழுதபோதுஏன் அழுகிறீர்கள்அல்லாஹ் பிரியப்பட்டதை நான் பிரியப்பட்டுவிட்டேன்அவன் திருப்திபட்டதை நான் திருப்திபட்டு விட்டேன். என்று சொன்னதுடன்நீங்கள் என்னை இந்த நிலையை பரிதாபமாகக் காண்கிறீர்கள்.

அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! இதே நிலையில் இருக்கவே நான் விரும்புகின்றேன். ஏனெனில்நான் மலக்குமார்களின் தஸ்பீஹை கேட்கிறேன்அவர்களை சந்திக்கிறேன்அவர்களின் ஸலாமிற்கு பதில் கூறுகின்றேன்நன்றாக விளங்கிக்கொள்ளுங்கள்! அல்லாஹ் எனக்கு வழங்கிய தண்டனையாக இதை நான் கருத வில்லை, மாறாகஅவனிம் முடிவை நான் திருப்தியோடு ஏற்றுக் கொள்கின்றேனா என்பதை சோதிப்பதற்காக எனக்கு இதை வழங்கியதாக நான் கருதுகின்றேன்” என்றும் கூறினார்கள்.

             ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}...., உஸ்துல் ஃகாபா )

3. இறந்தால் இப்படித்தான் இறக்க வேண்டும் என்று பிறரால் விரும்பப்படுகிற அளவுக்கு நம்முடைய மரணமும் அமைய வேண்டும் ….

وفي ليلة من الليالي نام هو والصحابة، وكانوا في غزوة في سبيل الله، قال ابن مسعود - رضي الله عنه وأرضاه -: قمت آخر الليل فنظرت إلى فراش الرسول - صلى الله عليه وسلم - فلم أجده في فراشه، فوضعت كفي على فراشه فإذا هو بارد، وذهبت إلى فراش أبي بكر فلم أجده على فراشه، فالتفت إلى فراش عمر فما وجدته، قال: وإذا بنور في آخر المخيم، وفي طرف المعسكر، فذهبت إلى ذلك النور ونظرت، فإذا قبر محفور، والرسول عليه الصلاة والسلام - قد نزل في القبر، وإذا جنازة معروضة، وإذا ميت قد سجي في الأكفان، وأبو بكر وعمر حول الجنازة، والرسول - صلى الله عليه وسلم يقول لأبي بكر وعمر: « دليا لي صاحبكما».

فلما أنزلاه نزله - صلى الله عليه وسلم - في القبر، ثم دمعت عيناه - صلى الله عليه وسلم - ثم التفت إلى القبلة ورفع يديه وقال: «اللهم إنّي أمسيت عنه راض فأرض عنه، اللهم إنّي أمسيت عنه راض فارض عنه».
قال: قلت من هذا؟

قالوا: هذا أخوك عبد الله ذو البجادين مات في أول الليل.

قال ابن مسعود: فوددت والله أني أنا الميت


இப்னு மஸ்வூத் (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்:

தபூக் யுத்தத்திற்காக எதிரிகளின் இருப்பிடத்திற்கே நபித்தோழர்களை அண்ணலார் அழைத்துச் சென்றிருந்த தருணம் அது.

முதல் நாள் இரவு திடீரென நான் கண்விழித்தேன்அண்ணலாரின் கூடாரத்தில் அண்ணலாரைப் பார்த்தேன்ஆனால்நபி {ஸல்அவர்கள் அங்கு இல்லை.

உடனடியாக நபி {ஸல்அவர்களைத் தேடியவாறு அபூபக்ர் (ரலிஅவர்களின் கூடாரத்திற்கு வந்தேன்அங்கு அண்ணலாரும் இல்லைஅபூபக்ர் (ரலிஅவர்களும் இல்லை.

அங்கிருந்து நேராக உமர் (ரலிஅவர்களின் கூடாரத்திற்குச் சென்று தேடினால்அங்கு உமர் (ரலிஅவர்களும் இல்லை.

மூவரையும் தேடிக் கொண்டிருக்கும் போது படை வீரர்கள் முகாமிட்டிருந்த பகுதியின் எல்லைப் பகுதியிலிருந்து நெருப்பு மூட்டப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன.

அதன் அருகே விரைவாகச் சென்று பார்த்தேன்அங்கு அண்ணலார் {ஸல்அவர்களும்அபூபக்ர்(ரலிமற்றும் உமர் (ரலிஅவர்களும் நின்று கொண்டிருப்பதைக் கண்டேன்.

அங்கேகப்ர் ஒன்று தோண்டப்பட்டுக் கொண்டிருந்ததுஅதன் அருகே ஒரு ஜனாஸாவும் வைக்கப்பட்டிருந்தது.

அப்போதுநான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்களிடம் இறந்து போன அந்த மனிதர் யார்என்று வினவினேன்.

அதற்கு அண்ணல் நபி {ஸல்அவர்கள் உமது தோழர் அப்துல்லாஹ் துல் பஜாதைன் (ரலிஅவர்கள் தான் என்று கூறினார்கள்.

மாநபி {ஸல்அவர்கள் மண்ணறைக்குள் இறங்கினார்கள்பின்னர் அப்துல்லாஹ் துல் பஜாதைன் அவர்களின் உடலை குழிக்குள் இறக்குமாறு கூறினார்கள்.

பின்னர்மண்ணறைக்குள் நின்றவாறு வானை நோக்கி கையை உயர்த்தி “யாஅல்லாஹ்இன்று மாலை நேரத்தை அடைகிற போது இந்த அப்துல்லாஹ் துல் பஜாதைன் அவர்கள் வாழ்வை  நான் பொருந்திக் கொண்டேன்உன்னுடைய தூதராகிய நான் பொருந்திக் கொள்கிற நிலையில் அவர் இவ்வுலகில் வாழ்ந்தார்எனவே யாஅல்லாஹ் நீயும் அவரைப் பொருந்திக் கொள்வாயாக!” என்று இருமுறை துஆ செய்தார்கள்பின்னர் தாங்களே நல்லடக்கமும் செய்தார்கள்.

அப்போது நான் இறந்து போன அப்துல்லாஹ் துல் பஜாதைனாக இருந்திருக்கக் கூடாதா என ஏங்கினேன்.”

                                   ( நூல்அல் இஸ்தீஆப்உஸ்துல்ஃகாபா )

4. வாழும் போதே புகழோடும், வாழ்ந்து மரணித்த பின்னரும் அப்புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் அளவுக்கான வாழ்க்கை அமைய வேண்டும் என ஆசை வேண்டும்.

இப்ராஹீம் {அலை} அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் போது….

وَاجْعَلْ لِي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ

 “இறைவா! பிற்கால மக்களிடையே எனக்கு உண்மையான புகழை வழங்குவாயக!” என்று பிரார்த்தித்ததை அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

மேலும், மறுமை நாளில் நடைபெறும் நிகழ்வுகளைக் கூறும் போது….

يُنَبَّأُ الْإِنْسَانُ يَوْمَئِذٍ بِمَا قَدَّمَ وَأَخَّرَ

“அந்த நாளில் மனிதனுக்கு அவன் மரணத்திற்கு முன் செய்த, அவன் மரணத்திற்கு பின் தனக்காக செய்து வைத்து விட்டு வந்த அனைத்துச் செயல்களும் எடுத்துக் காட்டப்படும்”

عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ

“ஒவ்வொரு மனிதனும் தான் முன்பும் பின்பும் செய்த செயல்கள் அனைத்தையும் நன்கு அறிந்து கொள்வான்”.

என்று கூறுகின்றான். மேற்கூறிய இறைவசனங்களுக்கு விரிவுரை தருகிற அறிஞர் பெருமக்கள் ஒரு மனிதன் மரணத்திற்கு பின்னரும் அவனுக்காக நாளை மறுமையில் அவனை ஈடேற்றம் பெறச் செய்கிற நல்லறங்களை மேற்கொண்டு, புகழ்மிக்க வாழ்க்கையை வாழவேண்டும் என்று” விளக்கம் தருகிறார்கள்.

5. மரணத்தை எந்த உயரிய உபகரணத்தின் துணை கொண்டும் வெல்ல முடியாது எனும் நம்பிக்கை ஆளமாகவும், எந்நேரத்திலும் நடக்கும் என்கிற நம்பிக்கையோடும் இருக்க வேண்டும்.

நாம் விரும்பினாலும்விரும்பாவிட்டாலும் நம்மை மரணம் வந்து அடைந்தே தீரும்.

இது வரை உலகில் எவரும் மரணத்தில் இருந்து தப்பித்து விட்டதாக செய்தி கிடையாது.

كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ

அல்லஹ் கூறுகின்றான்: “ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்”.                                                    ( அல்குர்ஆன்: 3: 185 )

أَيْنَمَا تَكُونُوا يُدْرِكْكُمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِي بُرُوجٍ مُشَيَّدَةٍ

அல்லாஹ் கூறுகின்றான்: “நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை வந்து அடைந்தே தீரும்நீங்கள் உறுதி மிக்க கோட்டைகளில் இருந்தாலும் சரியே!”

                                                     ( அல்குர்ஆன்: 4: 78 )

قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ ثُمَّ تُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ (8)

நபியே அம்மக்களிடம் நீர் கூறுவீராகநீங்கள் மரணத்தை விட்டும் விரண்டோடிக் கொண்டிருக்கின்றீர்கள்ஆனால்நிச்சயம் அந்த மரணம் உங்களை ஒரு நாள் தழுவியே தீரும்”.                                   ( அல்குர்ஆன்: 62: 8 )

எனவேநாம் ஒவ்வொருவரும் நிச்சயமாக ஒரு நாள் மரணத்தை தழுவ இருக்கின்றோம்இப்போது நாம் அமர்ந்திருக்கிற இதே பள்ளிவாசலிலோஅல்லது இது போன்றதொரு பள்ளிவாசலிலோ நம்முடைய உடலை கஃபன் செய்து இறுதி பிரார்த்தனைக்காக எடுத்து வர இருக்கின்றார்கள்.

6. மாற்றுக் கருத்து கொண்டவர்கள், மாற்றுக் கொள்கை கொண்டவர்கள் மரணத்தை தழுவினால் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
فلما رأى النبي - صلى الله عليه وسلم
 عكرمة وثب إليه ، وما على النبي - صلى الله عليه وسلم ـ رداء ، فرحا بعكرمة
ثم جلس رسول الله - صلى الله عليه وسلم - فوقف بين يديه ، وزوجته منتقبة ، فقال: يا محمد إن هذه أخبرتني أنك أمنتني ، فقال رسول الله - صلى الله عليه وسلم
صدقت
 فأنت آمن
 فقال عكرمة
 فإلى ما تدعو يا محمد ؟
 قال
 ( أدعوك إلى أن تشهد أن لا إله إلا الله وأني رسول الله ، وأن تقيم الصلاة وتؤتي الزكاة ، وتفعل ، وتفعل ـ ، حتى عَدَّ خصال الإسلام..
فقال عكرمة
 والله ما دعوتَ إلا إلى الحق وأمرٍ حسن جميل ، قد كنتَ والله فينا قبل أن تدعو إلى ما دعوت إليه وأنت أصدقنا حديثا وأبرنا برا ..

ثم قال عكرمة
 فإني أشهد أن لا إله إلا الله ، وأشهد أن محمدا عبده ورسوله .. فسُرَّ بذلك رسول الله - صلى الله عليه وسلم -، ثم قال : يا رسول الله علمني خير شيء أقوله ، قال
 ( تقول أشهد أن لا إله إلا الله وأن محمد عبده ورسوله قال عكرمة
 ثم ماذا ؟ ، قال رسول الله - صلى الله عليه وسلم - : ( تقول أُشْهِد الله وأشهد من حضر أني مسلم مهاجر ومجاهد ، فقال عكرمة ذلك ..
فقال رسول الله
 ( لا تسألني اليوم شيئا أعطيه أحدا إلا أعطيتكه
 فقال عكرمة
 فإني أسألك أن تستغفر لي كل عداوة عاديتكها ، أو مسير وضعت فيه ، أو مقام لقيتك فيه ، أو كلام قلته في وجهك أو وأنت غائب عنه ، فقال رسول الله - صلى الله عليه وسلم
 اللهم اغفر له كل عداوة عادانيها ، وكل مسير سار فيه إلى موضع يريد بذلك المسير إطفاء نورك ، فاغفر له ما نال مني من عرض في وجهي أو أنا غائب عنه ) ..
فقال عكرمة
رضيت يا رسول الله ، لا أدع نفقة كنت أنفقها في صدٍ عن سبيل الله إلا أنفقتُ ضعفها في سبيل الله ، ولا قتالا كنت أقاتل في صد عن سبيل الله إلا أبليت ضعفه في سبيل الله .. ثم اجتهد في القتال حتى قتِل شهيدا (أي في يوم اليرموك) .. وبعد أن أسلم رد رسول الله - صلى الله عليه وسلم - امرأته له بذلك النكاح الأول .." .

وقد أخرج ابن عساكر عن عمرو
ابن دينارقال : " .. لما قدم عكرمة بن أبي جهل المدينة ، اجتمع الناس ، فجعلوا يقولون : هذا ابن أبي جهل ، هذا ابن أبي جهل ! ، فقال رسول الله ـ صلى الله عليه وسلم ـ
 لا تؤذوا الأحياء بسبِّ الأموات ) ..
மக்கா வெற்றியின் போது நபி {ஸல்அவர்களின் வருகையையும்,முஸ்லிம்களின் எழுச்சியையும் கண்டு பயந்துபோய் இக்ரிமா எமனுக்குச் சென்று விட்டார்.

இக்ரிமா வேறு யாருமல்லஅபூஜஹ்லின் மகன்இவரும் தந்தையைப் போலவே இஸ்லாத்திற்கெதிராக கடும் பகமை கொண்டிருந்தார்.

இவரின் மனைவி உம்மு ஹக்கீம் பின்த் ஹாரிஸ் {ரலிஅவர்கள் எமனுக்குச் சென்று அழைத்து வந்தார்கள்பின்பு மாநபியின் சபைக்கு அழைத்து வந்தார்கள்தூரத்தில் இக்ரிமா வருவதைக் கண்ட பெருமானார் {ஸல்அவர்கள் வெகு தூரத்திலிருந்து சிரமத்துடன் பயணித்து வரும் பயணியேவாருங்கள்தங்கள் வருகை நல்வரவாகட்டும்!” என்று கூறி தம் அருகே அமர வைத்தார்கள்.

இக்ரிமா கேட்டார் இப்போது நான் என்ன சொல்ல வேண்டும்.?  நபி {ஸல்அவர்கள் கூறினார்கள்ஷஹாதத் சொல்லுங்கள்உடனடியாக ஷஹாதாவை மொழிந்து இக்ரிமா முஸ்லிமானார்கள்பின்னர் நபி {ஸல்அவர்கள் இக்ரிமா.. உமக்கு என்ன வேண்டும் கேளுங்கள். எது கேட்டாலும் தருகிறேன்.” என்றார்கள்.

இக்ரிமா {ரலிஅவர்கள் சொன்னார்கள்:  “அல்லாஹ்வின் தூதரேஆரம்பமாக என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்உங்கள் மீதான பகைமையால் உங்களை நான் கடுமையாக ஏசியிருக்கிறேன்போர்களில் கலந்து கொண்டு கண்மூடித்தனமாக நான் நடந்து கொண்டிருக்கிறேன்இவை அத்தனைக்காகவும் என்னை மன்னித்து விடுங்கள்.” 

அப்போது நபி {ஸல்அவர்கள் தம் இரு கைகளையும் வானை நோக்கி உயர்த்தி யா அல்லாஹ்இந்த இக்ரிமா எனக்கு எதிராக நடத்திய போருக்காகஎன்மேல் கொண்டிருந்த பகைமைக்காகஎன்னை ஏசியதற்காகஇவை அத்தனைக்காகவும் இவரை மன்னித்துவிடு” என்று துஆ செய்தார்கள்         

 இதனைக் கேட்ட இக்ரிமா {ரலிஅவர்கள்:   “ அல்லாஹ்வின் தூதரேஅல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்த மார்க்கத்தை தடுப்பதற்காக எவ்வளவு பொருளாதாரத்தை செலவு செய்தேனோஅதைவிட பன்மடங்கு இந்த மார்க்கத்தின் உயர்விற்காக நான் செலவு செய்வேன்.

இந்த மார்க்கத்திற்கெதிராக எவ்வளவு போர்களில் நான் கலந்து கொண்டேனோஅதைவிட பன்மடங்கு இந்த மார்க்கத்தின் உயர்விற்காக இறைவனின் பாதையில் நான் போர் செய்வேன்.” என முக மலர்ச்சியோடு கூறினார்கள்.  

மாநபி {ஸல்அவர்கள்இக்ரிமா {ரலிஅவர்கள் தம்மை நோக்கி சபைக்குள் நுழைகிற போதே அவரின் நோக்கத்தை அறிந்து கொண்டு அபூஜஹ்லின் மகன் இக்ரிமா நம்பிக்கை கொண்டவராக உங்கள் முன் வருகிறார்அவரைக் கண்டால் அவரின் தந்தையைக் குறித்து குறை கூறி விமர்சனம் செய்யாதீர்கள்இறந்து போன ஒருவரை ஏசினால் அது உயிருடன் இருப்பவருக்கு மனவேதனையையே தரும் என்றார்கள்.

                                                                   (  நூல்இஸ்தீஆப்பாகம்:2, பக்கம்:269,270,271.   )

روى مُحَمَّد بن إسحاق عن نافع وزيد بن أسلم، عن ابن عُمر، وعن سعيد بن أبي المقبري، وابن المنكدر عن أبي هريرة، وعن عَمَّار بن ياسر، قالوا: قد قدمت دُرَّة بِنْت أبي لهب المدينة مهاجرةً، فنزلت في دار رافع بن المعلّي الزرقيّ، فقال لها نسوة جلسْنَ إليها من بني زريق: أنتِ ابِنة أبي لهب الذي يقول الله له: " تبّت يدا أبي لهب وتبّ " فما يغني عنكِ مهاجرتكِ؟ فأتت دُرَّة النَّبِيّ صلّى الله عليه وسلّم فذكرت له ما قلن لها فسكّنها وقال: " اجلسي " . ثم صلى بالناس الظهر، وجلس على المنبر ساعةً ثم قال: " أيها الناس، ما لي أُوذى في أهلي؟ فوالله إن شفاعتي لتنال بقرابتي حتى إن صُداءَ وحكماً وسلهماً لتنالها يوم القيامة وسِلْهَمُ في نسب اليمن " .

அண்ணல் நபிகளாரின் அவைக்கு அழுத வண்ணமாக ஓடோடி வருகின்றார் துர்ரா பின்த் அபூலஹப் (ரலி) என்ற பெண்மணி.

மிகவும் ஆர்வத்தோடு இஸ்லாத்தில் தம்மை இணைத்துக் கொண்ட பெண்மணிகளில் அவரும் ஒருவர்.

ஹிஜ்ரத் எனும் புனிதப் பயணத்தின் பதிவேட்டில் இடம் பெற்றவர்களில் அவரும் ஒருவர்.

அந்தப் பெண்மணியின் அழுகையைப் பார்த்து அண்ணலாரின் திரு முகம் கூட மாறிப் போனது.

காரணம் கேட்கின்றார்கள் நபிகளார். அந்தப் பெண்மணி அன்ஸாரிப் பெண்மணிகளில் பனீ ஸரீக் குடும்பப் பெண்கள் தன்னை சுடு வார்த்தைகளால் காயப் படுத்தி விட்டதாக” அழுது கொண்டே கூறினார்கள்.

அவர்களின் கரம் பற்றிப் பிடித்துஆறுதல் கூறி அமர வைத்தார்கள். அப்போது ளுஹர் தொழுகைக்கான நேரமாக அது இருந்தது.

துர்ரா (ரலி) அவர்கள் வேறு யாருமல்ல. அண்ணலாரின் மிக நெருங்கிய உறவினரான அபூ லஹபின் மகள் தான்.

இப்போது நமக்கு புலப்பட்டிருக்கும் பனூ ஸரீக் பெண்மணிகள் எத்தகைய வார்த்தைகளால் துர்ரா (ரலி) அவர்களைக் காயப் படுத்தியிருப்பார்கள் என்று.

ஆம்! இப்படிச் சொன்னார்களாம்: உமது தந்தை அபூலஹபின் கேட்டினாலும்உமது தாயின் தகாத செயலினாலும்அண்ணலாரின் மீது கொண்டிருந்த தீராத பகமையினாலும் அல்லாஹ் உமது தாயையும்தந்தையையும் சபித்து ஒரு சூராவையே தனது குர்ஆனில் இடம் பெறச் செய்துள்ளான். நீ ஹிஜ்ரத் செய்து எந்த பலனையும் அடையப் போவதில்லை என்று.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்கள் ளுஹர் தொழுகைக்குப் பின்னர்மிம்பரின் மீதேறி “மக்களே! என் குடும்பத்தார்களின் விஷயத்தில் இப்படி இப்படியெல்லாம் பேசி என்னையும் என் குடும்பத்தாரையும் நோவினைப் படுத்தாதீர்கள்.” என்று கூறினார்கள்.

பின்னர்துர்ரா (ரலி) அவர்களை தமதருகே அழைத்து எவர் உம்மை கோபப்படுத்துவாரோஅவர் மீது அல்லாஹ்வும் கோபப்படுவான். நீ என்னைச் சார்ந்தவள். நான் உன்னைச் சார்ந்தவன்.” என்று கூறினார்கள்.

பின்னர்இது பற்றி அறிந்த அப்பெண்மணிகள் தமது தவறை உணர்ந்து மிகவும் வருந்தினார்கள்.

                        ( நூல்: உஸ்துல் ஃகாபாதபகாத் இப்னு ஸஅத்அல் இஸ்தீஆப். )

இஸ்லாத்தோடும், நபி {ஸல்} அவர்களோடும் முஸ்லிம்களோடும் கடுமையான முறையில் விரோதத்தை வெளிப்படுத்தியவர்களின் சந்ததிகளின் முன்னால் அவர்கள் மரணித்து நீண்ட காலங்கள் கழிந்த பின்னரும் கூட அவர்களின் வாழ்க்கை முறை குறித்து, விரோத மனப்பான்மை குறித்து விமர்சிக்க வேண்டாம் என்று கூறி மாநபி {ஸல்} அவர்கள் தடுத்திருக்கின்றார்கள்.

இன்னும் ஒரு படி மேலே சென்று அவர்கள் செய்த நல்லறங்களை நினைவு கூறி வாழ்த்தினார்கள் பெருமானார் {ஸல்} அவர்கள்.
سفانة بنت حاتم الطائي
الكريمة بنت الكريم
كان أبوها مضرب الأمثال في الكرم في الجاهلية، فلما ظهر الإسلام وانتشرت الفتوح، غزت خيلُ رسول اللَّه صلى الله عليه وسلم قبيلتها “طَـيِّئ”، وأخذوها بين مَنْ أخذوا من السبايا. وكانت امرأة بليغة عاقلة، مرّ عليها النبي صلى الله عليه وسلم فقالت له: يا رسول اللَّه! امْـنُنْ عَلَي، مَنَّ اللَّه عليك، فقد هلك الوالد، وغاب الوافد (تَنَصَّرَ أخوها وفرّ حتى كان قريبًا من أرض الروم، وكان ذلك قبل أن يُسلم ويَحْسُنَ إسلامه) ولاتُشَمِّتْ بى أحياء العرب، فإنى بنتُ سيد قومي، كان أبى يفك الأسير ويحمى الضعيف، ويَقْرِى (يكرم) الضيف، ويشبع الجائع، ويفرّج عن المكروب، ويطعم الطعام، ويفشى السلام، ولم يرد طالب حاجة قط، أنا بنت حاتم الطائي.
فقال لها رسول اللَّه صلى الله عليه وسلم: “يا جارية، هذه صفة المؤمن، لو كان أبوك مسلمًا لترحمنا عليه”. ثم قال لأصحابه: “خلوا عنها، فإن أباها كان يحب مكارم الأخلاق”. ثم قال لها: “فلا تعجلي حتى تجدي ثقة يبلغك بلادك، ثم آذنيني” [ابن هشام].
فلما قدم ركب من أهلها، أرادت الخروج معهم، وذهبت إلى رسول اللَّه صلى الله عليه وسلم تستأذنه، فأذن لها وكساها من أحسن ما عنده من الثياب، وجعل لها ما تركبه، وأعطاها نفقة تكفيها مؤنة السفر وزيادة.
ஸஃபானா நஜ்த் தேசத்தின் பெரும் கொடையாளர் ஹாதிம் தாயி அவர்களின் மகளார் இப்போது நபிகளாரின் முன்னால் கைதியாக பிடிக்கப்பட்டு நிறுத்தப்பட்டு இருந்தார்.

ஸஃபானாவோடு, அவர்களின் கோத்திரத்தார் சிலரும் கைதிகளாக பிடிக்கப்பட்டு இருந்தனர். ஸஃபானா வின் சகோதரர் அதீ இப்னு ஹாதிம் முஸ்லிம்களின் படை தமது தேசத்திற்குள் நுழைவதை அறிந்ததும்ஸஃபானா வையும்தமது குடும்பத்தாரையும் விட்டு விட்டு ஓடிவிட்டார்.

அண்ணலார், மஸ்ஜிதுன் நபவீயில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட ஒரு குடிலைத் தாண்டி தமது இல்லத்திலிருந்து மஸ்ஜிதை நோக்கி சென்று கொண்டிருந்த போதுஅல்லாஹ்வின் தூதரே! எனும் ஒரு குரல் அழைத்ததை கேட்கிறார்கள்.குரல் வந்த திசை நோக்கி பார்க்கின்றார்கள் அங்கே ஸஃபானா நின்று கொண்டிருந்தார்கள்.

தொடர்ந்தார் ஸஃபானா தமது பேச்சை, “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை இறந்து விட்டார். எங்களின் தலைவரோ எங்களை விட்டு ஓடிவிட்டார். தாங்கள் தான் என்மீது கருணை காட்ட வேண்டும்! என்று கூறி முடித்தார்.

நபிகளார் மௌனமாக சென்று விடுகின்றார்கள். மறு நாளும் அது போன்றே நடக்கிறது. மூன்றாம் நாளும் ஸஃபானா அழைக்கஅருகே வந்த அண்ணலார் ஆதரவாய் பார்க்கின்றார்கள்.

ஸஃபானா, ”அல்லாஹ்வின் தூதரே! இல்லாதோருக்கு உதவிகள் புரிந்தும்கஷ்டத்தில் சிக்கியவர்களை அதிலிருந்து காப்பாற்றியும்பலகீனமானவர்களை தூக்கிப் பிடித்தும், குடும்ப உறவுகளை பலப்படுத்தியும்பிரயாணிகளுக்கு உணவளித்தும்ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து கொடுத்தும் வந்த ஒருவரான ஹாத்திம் தாயின் மகள் தான் நான். நீங்கள் எனக்கு கருணை காட்ட வேண்டும்” என்று வேண்டி நின்றார்கள்.

ஸஃபானாவின் பேச்சை கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த அண்ணலார் உண்மையில் நீ உம் தந்தை செய்ததாகச் சொன்ன அனைத்து நற்காரியங்களும்இஸ்லாம் உயர்த்திக் கூறுகின்ற நற்காரியங்களே! அவை அனைத்தும் ஒரு முஃமின் செய்ய வேண்டிய காரியங்களே! உம் தந்தை மாத்திரம் முஸ்லிமாக இருந்திருப்பாரேயானால் இன்னும் பேருபகாரம் வழங்கப்பட்டிருப்பார்! உனக்கு எம் கருணையுண்டு! என்று கூறி விட்டு, தோழர்களை நோக்கி “ தோழர்களே! இவரின் தந்தை நற்குணங்களின் பிறப்பிடமாக இருந்து, நற்குணங்களை அதிகம் நேசித்து வாழ்ந்திருக்கின்றார்! ஆகவே, இவரை விடுதலை செய்து விடுங்கள்” என்று கூறினார்கள்.

சிறிது நேரத்தில்ஸஃபானா அல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்களின் வீட்டின் முன் நின்று அண்ணலாரை அழைக்கின்றார்கள்.

வெளியில் வந்த அல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்களிடம் குடிமக்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் என் தந்தை உறங்கவே மாட்டார். அப்படிப் பட்ட நல்ல மனிதர் ஒருவரின் மகளான எனக்கு என்னை மட்டும் நீங்கள் விடுவித்ததில் எனக்கு எப்படி மகிழ்ச்சியாய் இருக்கும்என் நாட்டு மக்களையும் நீங்கள் விடுதலை செய்ய வேண்டும்” என்று ஸஃபானா கூறினார்.

இது கேட்ட அண்ணலார்சிரித்தவாரே ஸஃபானாவின் கோத்திரத்தார் அனைவரையும் விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார்கள்.

மேலும்ஸஃபானா விற்கு அணிய ஆடைகளையும்பயணிக்க வாகனமும், வழிச்செலவுக்கு பணமும் வழங்கி அல்லாஹ்வின் தூதர் {ஸல்அவர்கள் கண்ணியப்படுத்தினார்கள்.

                          ( நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:272 )

இப்படியான, இன்னும் பல பாடங்களும், படிப்பினைகளும் நம் கண் முன்னே மரணம் என்கிற நிகழ்வு தந்து கொண்டிருக்கின்றது.

அல்லாஹ் நாம் பெறுகிற பாடங்களைக் கொண்டும், படிப்பினைகளைக் கொண்டும் வாழ்க்கையில் மாற்றத்தைத் தருவானாக! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!

சனி, பிப்ரவரி 15, 2025

நட்சத்திரம்,

இந்தப் படத்தில் ஒரு ஒளிரும் தொகுதி காணப்படுகிறது. 

இந்தத் தொகுதி "லானியாகியா தொகுதி" (Laniakea Super cluster) என்று அழைக்கப்படுகிறது. 

இதில் 1,00,000 (ஒரு லட்சம்) மகாசக்திகள் (கேலக்ஸிகள்) உள்ளன. 

ஒவ்வொரு மகாசக்தியிலும் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன.

சிறிய சிவப்பு குறிப்பு நம்முடைய "பால்வீதிக் கோளகம்" (Milky Way Galaxy) அமைந்துள்ள இடத்தைக் குறிக்கிறது.

 பால்வீதிக் கோளகத்தில் 300 பில்லியன் (30,000 கோடி) நட்சத்திரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றே நமக்கு ஒளிக்கொடுத்துவரும் சூரியன்.

இவ்வாறான லானியாகியா போன்ற 1 கோடி (10 million) மகாசக்தி தொகுதிகள் விஞ்ஞானிகள் இதுவரை கண்டுபிடித்துள்ளனர். 

ஆனால், இது கண்டுபிடிக்க முடிந்த தொகுதிகள் மட்டுமே. 
அதற்கு அப்பால் இன்னும் மிலியன்கள், கூடுதலாக பில்லியன் கணக்கில் இருக்கும் என நம்பப்படுகிறது.

நட்சத்திரங்கள் பற்றிய அல்லாஹ்வின் (الله) வாக்குகள் திருக்குர்ஆனில்....

திருக்குர்ஆனில் நட்சத்திரங்கள் (النجوم) பற்றி பல்வேறு வசனங்கள் உள்ளன.

 அவை பெரும்பாலும் அல்லாஹ்வின் சக்தி, படைப்பின்அதிசயம்,வழிகாட்டுதல், 
மற்றும் அத்தாட்சிகளாகவும் குறிப்பிடப் -படுகின்றன.

الحمد لله الذي خلق السموات وما فيها من الأفلاك والشمس والنجوم، وسخرها بمشيئته الحكيمة، وجعلها آياتٍ للمتفكرين،
 ودلائلَ للعارفين، ونورًا يهتدي به السائرون. سبحان من أبدع الخلق بقدرته، وأحكم صنعه بحكمته، ورفع السماء بغير عمدٍ ترونها، وأحاط كل شيء بعلمه، وهو على كل شيء قدير.

1. நட்சத்திரங்களை வழிகாட்டியாக படைத்தல்

وَعَلٰمٰتٍ‌ وَبِالنَّجْمِ هُمْ يَهْتَدُوْنَ‏
(வழிகாட்டும்) அடையாளங்களையும் (வழி காட்டுவதற்காக அவன் அமைத்துள்ளான்); 

நட்சத்திரங்களைக் கொண்டும் (பிரயாணிகளாகிய) அவர்கள் வழிகளை அறிந்து கொள்கிறார்கள்.
(அல்குர்ஆன் : 16:16)

அல்லாஹ் (الله) நட்சத்திரங்களை மனிதர்களுக்காக வழிகாட்டிகளாக படைத்துள்ளான்.

 குறிப்பாக கடல், பாலைவனப் பயணங்களில் நட்சத்திரங்களின் மூலம் வழிகாட்ட முடியும்.

2. நட்சத்திரங்கள் அல்லாஹ்வின் ஆற்றலின் அடையாளம்

فَلَاۤ اُقْسِمُ بِمَوٰقِعِ النُّجُوْمِۙ‏‏
நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.
(அல்குர்ஆன் : 56:75)

وَاِنَّهٗ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُوْنَ عَظِيْمٌۙ‏
நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான பிரமாணமாகும்.
(அல்குர்ஆன் : 56:76)

இங்கே, அல்லாஹ் நட்சத்திரங்களின் நிலையில் சத்தியம் செய்கிறான்.

 இதிலுள்ள ஆழ்ந்த அர்த்தம், பிரபஞ்சம் மிகப்பெரிய ரகசியங்களை கொண்டது என்பதைக் குறிப்பிடுகிறது.

3. நட்சத்திரங்கள் அழிந்து விடும்

 فَاِذَا النُّجُوْمُ طُمِسَتْۙ‏
இன்னும், நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது-
(அல்குர்ஆன் : 77:8)
اِذَا الشَّمْسُ كُوِّرَتْۙ‏
சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது-
(அல்குர்ஆன் : 81:1)

وَاِذَا النُّجُوْمُ انْكَدَرَتْۙ‏
நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-
(அல்குர்ஆன் : 81:2)

அல்லாஹ் (الله) நட்சத்திரங்களும் ஒரு நாள் அழிந்து விடும் என்பதை இந்த வசனங்களில் கூறுகிறான். 

இது பிரபஞ்சத்தின் அழிவையும், மறுமையின் ஆரம்பத்தையும் குறிக்கிறது.

4. நட்சத்திரங்கள் அழகிற்கும் பாதுகாப்பிற்கும் படைக்கப்பட்டன

وَلَقَدْ زَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنْيَا بِمَصَٰبِيحَ وَجَعَلْنَٰهَا رُجُومًۭا لِّلشَّيَٰطِينِ
"நாங்கள் இந்த விண்மீன் உலகத்தை (நட்சத்திர) விளக்குகளால் அலங்கரித்தோம். 

மேலும், அவற்றை (இறுதியில்) சைத்தான்களுக்கு எறிகல்லாக (ஆக்கினோம்)."
📖 (அல்-முல்க்: 67:5)

இங்கே, நட்சத்திரங்கள் வானத்தை அலங்கரிக்க படைத்ததாகவும், தீய ஆவிகளை விரட்டும் பாதுகாப்பாகவும் குறிப்பிடப்படுகின்றன.

முடிவுரை

திருக்குர்ஆனில் நட்சத்திரங்கள்:

1. வழிகாட்டியாக (16:16)

2. அல்லாஹ்வின் மகத்துவத்தின் அடையாளமாக (56:75-76)

3. ஒருநாள் அழிந்து விடும் என அறிவுறுத்தும் அடையாளமாக (77:8, 81:1-2)

4. அழகுக்கும் பாதுகாப்பிற்கும் படைக்கப்பட்டதாக (67:5)

இந்த எல்லாம் அல்லாஹ்வின் மகத்துவத்தையும், பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் உணர்த்துகின்றன.

வெள்ளி, பிப்ரவரி 14, 2025

ஈஸால் தவாப்- கப்ரு ஜியாரத்,


ஈஸால் தவாப்- கப்ரு ஜியாரத்


நம்மை விட்டும் பிரிந்த சென்ற நம்முடைய மூதாதையர்களுக்காக நாம் செய்யும் நற்கருமங்கள் இரு வகை
1. அவர்கள் வஸிய்யத்  செய்து விட்டுச் சென்றதால் நாம் கட்டாயம் நாம் செய்ய வேண்டியவை 2. அவர்கள் வஸிய்யத்  செய்யாமல் அவர்களுக்காக நாமே விரும்பிச் செய்யும்  நல்லறங்கள்.  
மற்றொரு கண்ணோட்டத்தில் மவ்த்தாக்களுக்கு நாம் செய்யும் நற்கருமங்களில் இரு பிரிவுகள் உள்ளன. 1. பகரம் இல்லாமல் நேரடியாக அவற்றை அவர்களின் சார்பாக நாம் நிறைவேற்ற முடியும். ஹஜ், உம்ரா, குர்பானி ஆகியவை இதற்கு உதாரணம். 
 இறந்தவர்களுக்காக  நாம் ஹஜ், உம்ரா, குர்பானி போன்றவற்றை நிறைவேற்ற முடியும். 
2. அவர்களின் சார்பாக நாம் நிறைவேற்ற முடியாது ஆனால் அதற்குப் பகரமாக ஃபித்யா கொடுக்க முடியும். தொழுகை, நோன்பு ஆகியவை இதற்கு உதாரணம். இறந்தவருக்காக தொழுகை, நோன்பு ஆகியவை நாம் நிறைவேற்ற முடியாது. ஃபித்யா தரலாம்.
இறந்தவர் வஸிய்யத் செய்திருந்தால் கட்டாயம் செய்ய வேண்டும். அவ்வாறு வசிய்யத் செய்யா விட்டாலும் வாரிசுகள் செய்யலாம். 
மவ்த்தானவர்களின் சார்பில் ஹஜ்ஜை நிறைவேற்றலாம்
عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ حَجَّ عَنْ وَالِدَيْهِ بَعْدَ وَفَاتِهِمَا كُتِبَ لَهُ عِتْقٌ مِنَ النَّارِ، وَكَانَ لِلْمَحْجُوجِ عَنْهُمَا أَجْرُ حَجَّةٍ تَامَّةٍ مِنْ غَيْرِ أَنْ يُنْقَصَ مِنْ أُجُورِهِمَا شَيْئٌ "(بيهقي
இறந்து விட்ட பெற்றோருக்காக ஹஜ் செய்தவருக்கு நரக விடுதலை கிடைக்கும். அந்தப் பெற்றோருக்கும் பரிபூரணமான ஹஜ் நிறைவேறும் 
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ امْرَأَةً مِنْ جُهَيْنَةَ جَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ إِنَّ أُمِّي نَذَرَتْ أَنْ تَحُجَّ فَلَمْ تَحُجَّ حَتَّى مَاتَتْ أَفَأَحُجُّ عَنْهَا قَالَ نَعَمْ حُجِّي عَنْهَا أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ أَكُنْتِ قَاضِيَةً اقْضُوا اللَّهَ فَاللَّهُ أَحَقُّ بِالْوَفَاءِ (مسلم) باب الْحَجِّ وَالنُّذُورِ عَنِ الْمَيِّتِ
ஜுஹைனா என்ற குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெண் நபி ஸல் அவர்களிடம் வந்து  என்னுடைய தாயார்  ஹஜ்ஜை நேர்ச்சை செய்திருந்தார். அவரால் ஹஜ் செய்ய முடியாமல் வஃபாத்தாகி விட்டார். அவருக்காக ஹஜ்ஜை நான் நிறைவேற்றலாமா என்று கேட்டார். அதற்கு நபி ஸல் அவர்கள் ஆம் நீ ஹஜ் செய். உன் தாயாருக்கு கடன் இருந்தால் அந்தக் கடனை நீ நிறைவேற்றுவாய் அல்லவா அவ்வாறே  இது அல்லாஹ்வின் மீது அவருக்குள்ள கடனாகும். நிறைவேற்றுவது மிகவும் தகுதியானதாகும் என்றார்கள். 
படிப்பினை- ஷரீஅத்தின் நான்கு ஆதாரங்களில் ஒன்றான கியாஸ் கூடும் என்பதற்கு மேற்படி ஹதீஸ் முக்கிய சான்று
اَلْحَقَ رسولُ الله عليه السلام الحج في حق الشيخ الفاني بالحقوق المالية وأشار الى علة مؤثرة في الجواز وهي ( القضاء ) وهذا هو القياس (اصول الشاشي) 
மேற்படி ஹதீஸில் அந்தப் பெண் கேட்ட கேள்விக்கு நேரடியாக கூடும் அல்லது கூடாது என்று பதில் கூறாமல் நபி ஸல் அவர்கள் கடனை சுட்டிக்காட்டி கியாஸ் அடிப்படையில் பதில் கூறியுள்ளார்கள். இதுதான் இமாம்களிடம் கியாஸ் ஆகும். நபி ஸல் அவர்களும் கியாஸ் செய்துள்ளார்கள். கியாஸுக்கான முதல் தொடக்கம் நபி ஸல் அவர்களாகும்.
நான்கு மத்ஹப்கள் உருவாகுவதற்குக் காரணமும் நபி ஸல் அவர்களின் வழி காட்டுதல் தான். 
عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَنَا لَمَّا رَجَعَ مِنْ الْأَحْزَابِ لَا يُصَلِّيَنَّ أَحَدٌ الْعَصْرَ إِلَّا فِي بَنِي قُرَيْظَةَ فَأَدْرَكَ بَعْضَهُمْ الْعَصْرُ فِي الطَّرِيقِ فَقَالَ بَعْضُهُمْ لَا نُصَلِّي حَتَّى نَأْتِيَهَا وَقَالَ بَعْضُهُمْ بَلْ نُصَلِّي لَمْ يُرَدْ مِنَّا ذَلِكَ فَذُكِرَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يُعَنِّفْ وَاحِدًا مِنْهُمْ  (بخاري)
நபி ஸல் அவர்கள் ஒரு கூட்டத்தாரை அனுப்பி வைத்த போது நீங்கள் பனூ குரைழா இருக்கும் இடத்திற்குச் சென்றே தவிர அஸர் தொழக்கூடாது என்று கூறி அனுப்பினார்கள். செல்லும் வழியிலேயே அஸர் நேரம் வந்து விட்டதால் நபித்தோழர்களில் சிலர் நாம் இங்கேயே தொழுது விடலாம். நபி ஸல் அவர்கள் சீக்கிரமாக நாம் செல்வதை ஆர்வப் படுத்துவதற்காக அவ்வாறு கூறியிருக்கலாம் என்று எண்ணி அங்கேயே தொழுதனர். மற்றொரு சாரார் என்ன இருந்தாலும் நாம் நபி ஸல் கூறிய இடம் சென்ற பிறகே தொழ வேண்டும் என்று எண்ணி அங்கே சென்ற பின் தொழுதனர். இரண்டையும் நபி ஸல் அவர்களிடம் கூறப்பட்டபோது இரி சாராரில் யாரையும் கண்டிக்கவில்லை. இது தான் மத்ஹபுக்கு ஆதாரமாகும்.                                       
வஃபாத்தானவர்கள் சார்பில் குர்பானியை நிறைவேற்றலாம்
 عَنْ حَنَشٍ قَالَ رَأَيْتُ عَلِيًّا يُضَحِّي بِكَبْشَيْنِ فَقُلْتُ لَهُ مَا هَذَا فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْصَانِي أَنْ أُضَحِّيَ عَنْهُ فَأَنَا أُضَحِّي عَنْه(ابو داود
நபி ஸல் அவர்களின் வஃபாத்துக்குப் பிறகு அலீ ரழி அவர்கள் இரண்டு ஆடுகளை குர்பானி கொடுப்பார்கள். காரணம் கேட்ட போது நபி ஸல் அவர்கள் தனக்காகவும் குர்பானி தரும்படி எனக்கு வஸிய்யத் செய்தார்கள் அதனால் அவர்களுக்கு சேர்த்து நான் தருகிறேன் என்றார்கள்.
இறந்தவர்களுக்காக நன்மைகள் சேர்த்து வைப்பதில் சதக்கத்துல் ஜாரியா மிகவும் சிறந்தது
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ(بخاري)
  ஒரு மனிதர் இறந்து விட்டால் அவராக நற்கருமங்கள் செய்யும் வாசல் தடைப்பட்டு விடுகிறது. ஆனால் மூன்று வழிகளில் நன்மைகள் அவருக்கு சேரும். 1.அவர் வாழும் போது நிரந்தரமான நன்மையை பெற்றுத் தரும் வகையில் செய்த தர்மம். 2. அவர் வாழும்போது போதித்த பயனுள்ள கல்வி. 3. அவருக்காக துவா செய்யும் நல்ல பிள்ளை.------- நூல் முஸ்லிம்           
عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمَّ سَعْدٍ مَاتَتْ فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ قَالَ الْمَاءُ قَالَ فَحَفَرَ بِئْرًا وَقَالَ هَذِهِ لِأُمِّ سَعْدٍ رواه ابوداود
 சஃது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! என் தாய் இறந்து விட்டார். அவருக்கு எப்போதும் நன்மை கிடைத்துக் கொண்டிருக்கும் தர்மம் எது? என்று கேட்டார்கள் “தண்ணீர்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பதில் கூறினார்கள். அப்போது சஃது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு கிணற்றைத் தோண்டி இது உம்மு சஃது அவர்களின் நன்மைக்காக என்று கூறினார்கள்.
عَنْ عَائِشَةَ - رضى الله عنها - . أَنَّ رَجُلاً قَالَ لِلنَّبِىِّ - صلى الله عليه وسلم - إِنَّ أُمِّى افْتُلِتَتْ نَفْسُهَا ، وَأَظُنُّهَا لَوْ تَكَلَّمَتْ تَصَدَّقَتْ ، فَهَلْ لَهَا أَجْرٌ إِنْ تَصَدَّقْتُ عَنْهَا قَالَ « نَعَمْ »(بخاري)
ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து எனது தாய் எந்த வசியத்தும் செய்யாமல் திடீரென்று மரணித்து விட்டார்.அவர் என்னிடம் பேசியிருந்தால் என்னை தர்மம் செய்யச் சொல்லி இருப்பார். எனவே இப்போது நான் அவர்களுக்காக தர்மம் செய்தால் அந்தநன்மை அவர்களுக்கு கிடைக்குமா? என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்“ஆம் கிடைக்கும்” என்றார்கள் 

மற்றொரு ஹதீஸிலே ஒருவர் உபரியான தர்மம் செய்து தாய் தந்தையருக்கு அதனுடைய நன்மை சேர வேண்டும் என்று முயற்சி செய்தால் அந்த நன்மை அவருக்கு கிடைத்து விடும் அதன் காரணமாக சதகா செய்தவரின் நன்மையில் எந்தக் குறையும் வராது என்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي: " إِذَا أَرَدْتَ أَنْ تَتَصَدَّقَ صَدَقَةً فَاجْعَلْهَا عَنْ أَبَوَيْكَ، فَإِنَّهُ يَلْحَقُهُمَا، وَلَا يُنْتَقَصُ مِنْ أَجْرِكَ شَيْئًا "(بيهقي
நீர் எப்போதாவது தர் ம ம் செய்ய நினைத்தால் இறந்து விட்ட உன் பெற்றோருக்காக அதை நீர் செய்தால் அவர்களுக்கும் நன்மை சேரும். உன்னுடைய நன்மையிலும் எவ்வித குறைவும் ஏற்படாது
இறந்து விட்டவர்களுக்கு நன்மைகளைச் சேர்ப்பதில் துஆவும் முக்கியமானது. 
وَالَّذِينَ جَاءُوا مِنْ بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلإخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالإيمَانِ [الحشر:8
 எங்கள் இறைவா! எங்களையும் மன்னிப்பாயாக!எங்களுக்கு முன்னால் ஈமானுடன் யாரெல்லாம் எங்களை விட்டும் சென்று விட்டார்களோ அவர்களையும் மன்னிப்பாயாக! என்று பிற்காலத்தின் நல்லவர்கள் துஆச் செய்வார்கள்.- சூரா ஹஷ்ர் வசனம் 8
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الرَّجُلَ لَتُرْفَعُ دَرَجَتُهُ فِي الْجَنَّةِ فَيَقُولُ أَنَّى هَذَا فَيُقَالُ بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ رواه ابن ماجة
மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்    ஒரு மனிதனுக்கு சுவனத்தில் படித்தரங்கள் உயர்த்தப்படும். இது எப்படி வந்தது என்று கேட்பார். அதற்கு அவரிடம் இது உனது பிள்ளை உனக்குச் செய்த துஆ என்று கூறப்படும். நூல்- இப்னுமாஜா
உயிரோடு இருப்பவர்களின் துஆவை மவ்த்தாக்கள் மிகவும் எதிர் பார்க்கிறார்கள்
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَا الْمَيِّتُ فِي الْقَبْرِ إِلَّا كَالْغَرِيقِ الْمُتَغَوِّثِ، يَنْتَظِرُ دَعْوَةً تَلْحَقُهُ مِنْ أَبٍ أَوْ أُمٍّ أَوْ أَخٍ أَوْ صَدِيقٍ، فَإِذَا لَحِقَتْهُ كَانَتْ أَحَبَّ إِلَيْهِ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا، وَإِنَّ اللهَ عَزَّ وَجَلَّ لَيُدْخِلُ عَلَى أَهْلِ الْقُبُورِ مِنْ دُعَاءِ أَهْلِ الْأَرْضِ أَمْثَالَ الْجِبَالِ، وَإِنَّ هَدِيَّةَ الْأَحْيَاءِ إِلَى الْأَمْوَاتِ الِاسْتِغْفَارُ لَهُمْ "(شعب الايمان
வெள்ளத்தில் சிக்கி அபயம் தேடுபவரைப் போல மவ்த்தானவர்கள் தனது தந்தை, தாய், சகோதரர்,  நண்பன் ஆகியோரிடமிருந்து ஏதேனும் நன்மைகள் வந்து சேருவதை எதிர் பார்க்கிறார்கள். அவ்வாறு ஏதேனும் நன்மைகள் வந்து சேர்ந்து விட்டால் அதை இந்த உலகம் மற்றும் அதிலுள்ளவற்றை விட அதிகமாக அதை விரும்புவார்கள். பூமியில் உள்ளவர்களின் துஆக்களை இறந்தவர்களுக்கு அல்லாஹ் மலைகள் அளவுக்கு பெரிதாக்கி வைப்பான்.  உலகில் வாழும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பளிப்புகள் வழங்குவதை இறந்தவர்களுக்காக நாம் தரும் அன்பளிப்பு அவர்களுக்காக நாம் இஸ்திஃபார் செய்வதாகும் 
عن عُثْمَان بْن سَوْدَةَ، وَكَانَتْ أُمُّهُ مِنَ الْعَابِدَاتِ، وَلِذَلِكَ يُقَالُ لَهَا: رَاهِبَةٌ قَالَ: " فَلَمَّا احْتُضِرَتْ رَفَعَتْ رَأْسَهَا إِلَى السَّمَاءِ فَقَالَتْ: يَا ذُخْرِي ، وَذَخِيرَتِي، وَيَا مَنْ عَلَيْهِ عِمَادِي فِي حَيَاتِي وَبَعْدَ مَوْتِي، لَا تَخْذُلْنِي عِنْدَ الْمَوْتِ، وَلَا تُوحِشْنِي فِي قَبْرِي "، قَالَ: " فَمَاتَتْ، وَكُنْتُ آتِيهَا فِي كُلِّ جُمُعَةٍ فَأَدْعُو لَهَا، وَأَسْتَغْفِرُ لَهَا وَلِأَهْلِ الْقُبُورِ، قَالَ: فَرَأَيْتُهَا لَيْلَةً فِي مَنَامِي، فَقُلْتُ: يَا أُمَّاهُ، كَيْفَ أَنْتِ ؟ فَقَالَتْ: يَا بُنَيَّ، إِنَّ الْمَوْتَ لَشَدِيدٌ كَرْبُهُ، وَأَنَا بِحَمْدِ اللهِ فِي بَرْزَخٍ مَحْمُودٍ، أَفْتَرِشُ فِيهِ الرَّيْحَانَ، وَأَتَوَسَّدُ فِيهِ السُّنْدُسَ، وَالْإِسْتَبْرَقَ إِلَى يَوْمِ النُّشُورِ ، فَقُلْتُ: أَلَكِ حَاجَةٌ ؟ قَالَتْ: نَعَمْ، قُلْتُ: مَا هِيَ ؟ قَالَتْ: " لَا تَدَعْ مَا كُنْتَ تَصْنَعُ مِنْ زِيَارَتِنَا وَالدُّعَاءَ لَنَا، فَإِنِّي آنَسُ بِمَجِيئِكَ يَوْمَ الْجُمُعَةِ، إِذَا أَقْبَلْتَ مِنْ أَهْلِكَ يُقَالَ: يَا رَاهِبَةُ، قَدْ أَقْبَلَ مِنْ أَهْلِكِ زَائِرٌ، قَالَتْ: فَأُبَشَّرُ، وَيُبَشَّرُ بِذَلِكَ مَنْ حَوْلِي مِنَ الْأَمْوَاتِ "(بيهقي
عن الْفَضْل بْن الْمُوَفَّقِ ابْنُ خَالِ سُفْيَانَ بْنِ عُيَيْنَةَ، قَالَ: " لَمَّا مَاتَ أَبِي جَزِعْتُ جَزَعًا شَدِيدًا، فَكُنْتُ آتِي قَبْرَهُ فِي كُلِّ يَوْمٍ، ثُمَّ إِنِّي قَصَّرْتُ عَنْ ذَلِكَ مَا شَاءَ اللهُ، ثُمَّ إِنِّي أَتَيْتُهُ يَوْمًا، فَبَيْنَا أَنَا جَالِسٌ عِنْدَ  الْقَبْرِ غَلَبَتْنِي عَيْنَايَ فَنِمْتُ، فَرَأَيْتُ كَأَنَّ قَبْرَ أَبِي قَدِ انْفَرَجَ، وَكَأَنَّهُ قَاعِدٌ فِي قَبْرِهِ، مُتَوَشِّحًا أَكْفَانَهُ عَلَيْهِ سِحْنَةُ الْمَوْتَى، قَالَ: كَأَنِّي بُلِيتُ لَمَّا رَأَيْتُهُ، فَقَالَ: يَا بُنَيَّ، مَا بَطَّأَ بِكَ عَنِّي ؟ قَالَ: قُلْتُ: وَإِنَّكَ لَتَعْلَمُ بِمَجِيئِي ؟ قَالَ: مَا جِئْتَ مِنْ مَرَّةٍ إِلَّا عَلِمْتُهَا، وَقَدْ كُنْتَ تَأْتِيَنِي فَأُسَرُّ بِكَ، وَيُسَرُّ مَنْ حَوْلِي بِدُعَائِكَ، قَالَ: فَكُنْتُ بَعْدُ آتِيَهِ كَثِيرًا "(بيهقي
قال سفيان  رح  الاموات  احوج  الي الدعاء من الاحياء  الي الطعام والشراب
இமாம் சுஃப்யான் ரஹ் அவர்கள் கூறினார்கள். உயிரோடு இருப்பவர்கள் உணவின் பக்கம் எந்த அளவு தேவையுள்ளவர்களாக இருப்பார்களோ அந்த அளவுக்கு  இறந்தவர்கள் தங்களுக்காக செய்யப்படும் துஆக்களின் பால் தேவையுள்ளவர்களாக இருப்பார்கள்
கப்ருக்குச் சென்று துஆச் செய்வதற்கு ஆதாரம்
عن عائشة رضي الله عنها قالت: فقدت النبي صلى الله عليه وسلم ذات ليلة فخرجتُ أطلبه فإذا هو بالبقيع رافعا رأسه إلى السماء (بيهقي)
ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியுள்ளார்கள்.நான் ஒருநாள் இரவு நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களைக் காணாமல் தேடிச் சென்றேன். அப்போது பகீஃ கப்ருஸ்தானில் இருந்தார்கள். வானத்தை நோக்கியபடி துஆச் செய்து கொண்டிருந்தார்கள். நூல் பைஹகீ 
   عَنِ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا وَنَهَيْتُكُمْ عَنْ لُحُومِ الأَضَاحِىِّ فَوْقَ ثَلاَثٍ فَأَمْسِكُوا مَا بَدَا لَكُمْ وَنَهَيْتُكُمْ عَنِ النَّبِيذِ إِلاَّ فِى سِقَاءٍ فَاشْرَبُوا فِى الأَسْقِيَةِ كُلِّهَا وَلاَ تَشْرَبُوا مُسْكِرًا ».
  நான் உங்களை கப்ருகளை ஜியாரத் செய்வதை விட்டும் தடுத்திருந்தேன். ஆனால் இப்போது நீங்கள் கப்ரு ஜியாரத் செய்யுங்கள். ஏனெனில் அது உலகின் மீது பற்றின்மையையும் மறு உலகம் பற்றிய நினைவையும் உருவாக்கக் கூடியதாக உள்ளது 
عن عثمان بن عفان يقول مرَّ رسول الله صلى الله عليه وسلم بجنازة عند قبر وصاحبه يدفن فقال رسول الله صلى الله عليه وسلم:استغفروا لأخيكم وسلوا الله له التثبيت  فإنه الآن يسأل (رواه الحاكم في المستدرك)
 நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு கப்ரைக் கடந்து சென்றார்கள். அப்போது அந்த கப்ருக்கு உரியவர் அடக்கம் செய்யப் பட்டுக் கொண்டிருந்தார். அப்போது நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உங்களின் சகோதரருக்காக தஸ்பீத்தைக் கேளுங்கள். கப்ரில் வைத்தவுடன் மலக்குகளின் கேள்விக்கு முறையாக பதிலை அவர் கூறுவதற்கு அல்லாஹ்விடம் கேளுங்கள். ஏனென்றால் அவர் இன்னும் சற்று நேரத்தில் விசாரிக்கப் படுவார்.-ஹாகிம்
عن قتادة عن أبي الصديق قال كان أنس إذا وُضِعَ الميت في القبر قال اللهم جَافِي الاَرْضَ عن جنبيه ووَسِّع عليه (بغية الحارث)
அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கப்ரில் மய்யித் வைக்கப்பட்டவுடன் கீழ்காணும் துஆவை ஓதுவார்கள். 
اللهم جَافِي الاَرْضَ عن جنبيه ووَسِّع عليه
    யாஅல்லாஹ்! இவருடைய விலாப் புறங்களை நெருக்குவதை விட்டும் பூமியை தூரமாக்கி வைப்பாயாக! இவருக்கு கப்ரை விசாலமாக ஆக்கி வைப்பாயாக!
أن عمرا بن العاص رضي الله عنه لما حضرته الوفاة قال.... فإذا سويتم علي التراب فاجلسوا عند قبري نحو نحر جزور وتَقْطِيْعِها أَسْتَأْنِسُ بكم    (المستدرك علي الصحيحين للحاكم)
 அம்ருப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மவ்த் நெருங்கிய மகன்களிடம் கூறினார்கள். என் கப்ரு மீது மண்ணைப் போட்டு நீங்கள் மூடிய பின்பு ஒரு ஓட்டகத்தை அறுத்துப் பங்கிடுவதற்கு எவ்வளவு நேரம் ஆகுமோ அந்த அளவு நேரம் என் கப்ரு அருகே அமருங்கள். எனக்காக துஆச் செய்யுங்கள். நான் உங்கள் மூலம் நிம்மதி பெறுவேன்.
இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் உம்மு எனும் நூலில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது
மய்யித்தை கப்ரில் வைப்பவர் இதைக் கூறட்டும்.
بِسْمِ اللَّهِ وَعَلَى مِلَّةِ رسول اللَّهِ صلى اللَّهُ عليه وسلم اللَّهُمَّ أَسْلَمَهُ إلَيْك الإشحاء من وَلَدِهِ وَأَهْلِهِ وَقَرَابَتِهِ وَإِخْوَانِهِ وَفَارَقَ من كان يُحِبُّ قُرْبَهُ وَخَرَجَ من سَعَةِ الدَّارِ وَالْحَيَاةِ إلَى ظُلْمَةِ الْقَبْرِ وَضِيقِهِ وَنَزَلَ بِك وَأَنْتَ خَيْرُ مَنْزُولٍ بِهِ إنْ عَاقَبْته عَاقَبْته بِذَنْبِهِ وَإِنْ عَفَوْت فَأَنْتَ أَهْلُ الْعَفْوِ اللَّهُمَّ أنت غَنِيٌّ عن عَذَابِهِ وهو فَقِيرٌ إلَى رَحْمَتِك اللَّهُمَّ اُشْكُرْ حَسَنَتَهُ وَتَجَاوَزْ عن سَيِّئَتِهِ وَشَفِّعْ جَمَاعَتَنَا فيه وَاغْفِرْ ذَنْبَهُ وَافْسَحْ له في قَبْرِهِ وَأَعِذْهُ من عَذَابِ الْقَبْرِ وَأَدْخِلْ عليه الْأَمَانَ وَالرُّوحَ في قَبْرِهِ  (الام للشافعي)                                  
குர்ஆன் ஓதி இறந்தவர்களுக்கு சேர்த்து வைப்பதற்கும்  நிறைய ஆதாரங்கள் உள்ளன. 
عن علي رضي الله عنه قال قال رسول الله صلي الله عليه وسلم من مَرَّ على المقابر فقرأ فيها إحدى عشرة مرة (قل هو الله أحد) ثم وهب أجره الاموات أعطي من الاجر بعدد الاموات(كنز العمال ,دُرُّ المختار )
 கப்ரைக் கடந்து செல்பவர் அங்கு 11 முறை இக்லாஸ் சூராவை ஓதி மரணித்தவருக்கு சேர்த்து வைத்தால் மரணித்தவர்களின் அளவுக்கு நன்மை வழங்கப்படும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். நூல் கன்ஜுல் உம்மால் 
عن أنس أن رسول الله صلى الله عليه وسلم قال:من دخل المقابر فقرأ سورة يس خفف الله عنهم يومئذ وكان له بعدد حروفها حسنات(القرطبي)
 கப்ருஸ்தானில் நுழைந்து யாஸீன் சூரா ஓதினால் அல்லாஹ் கப்ராளிகளின் வேதனையைக் குறைப்பான். யாசீன் சூராவின் ஒவ்வொரு எழுத்துக்கும் நிறைய நன்மைகள் உண்டு. 
قال الامام أحمد بن حنبل: إذا دخلتم المقابر فاقرأوا بفاتحة الكتاب والاخلاص والمعوذتين واجعلوا ثواب ذلك لاهل المقابر فإنه يصل إليهم فالاختيارأن يقول القارئ بعد فراغه: اللهم أوصل ثواب ما قرأتُه إلى فلان (اعانة الطالبين)
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹிமல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். கப்ருஸ்தானில் நீங்கள் நுழைந்தால் ஃபாத்திஹா சூராவையும் இக்லாஸ் சூராவையும் ஃபலக், நாஸ் சூராவையும் ஓதி அதன் நன்மையை கப்ராளிகளுக்கு சேர்த்து வையுங்கள். அது நிச்சயம் அவர்களுக்குச் சேரும். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையாகிறது இவற்றை ஓதி முடித்த பின்பு 
اللهم أوصل ثواب ما قرأتُه إلى فلان 
யாஅல்லாஹ் நான் ஓதிய இதன் நன்மையை இன்னாருக்கு சேர்த்து வைப்பாயாக என்று கூறுவதாகும்.- நூல் இஆனா
وَفِي شَرْحِ اللُّبَابِ وَيَقْرَأُ مِنْ الْقُرْآنِ مَا تَيَسَّرَ لَهُ مِنْ الْفَاتِحَةِ وَأَوَّلِ الْبَقَرَةِ إلَى الْمُفْلِحُونَ وَآيَةِ الْكُرْسِيِّ وَآمَنَ الرَّسُولُ  وَسُورَةِ يس وَتَبَارَكَ الْمُلْكُ وَسُورَةِ التَّكَاثُرِوَالْإِخْلَاصِ اثْنَيْ عَشَرَ مَرَّةً أَوْ إحْدَى عَشَرَ أَوْ سَبْعًا أَوْ ثَلَاثًا  ثُمَّ يَقُولُ : اللَّهُمَّ أَوْصِلْ ثَوَابَ مَا قَرَأْنَاهُ إلَى فُلَانٍ أَوْ إلَيْهِمْ   (ردالمختار)
ஃபாத்திஹா சூராவையும் பகரா சூராவில் முஃபிலிஹூன் வரை உள்ள ஆரம்ப வசனங்களையும் ஆயத்துல் குர்ஸீ, ஆமனர் ரஸூலு, சூரா யாஸீன், சூரா முல்க், சூரா தகாஸுர் சூரா இக்லாஸ் 12 அல்லது 11 அல்லது 7 அல்லது 3 தடவைகள் ஓத வேண்டும். பிறகு
اللَّهُمَّ أَوْصِلْ ثَوَابَ مَا قَرَأْنَاهُ إلَى فُلَانٍ أَوْ إلَيْهِمْ
என்று ஓதி துஆச் செய்யவும். நூல்- ரத்துல் முக்தார்.  
இறந்தவர்களுக்காக குர்ஆனை ஓதுவது பற்றி ஷாஃபிஈ சட்ட நூல்களில் கூறப்பட்டுள்ள விளக்கமாகிறது.
أما الصدقة والدعاء فبالاجماع : وأما القراءة ففيها خلاف (اعانة)  فقد قال النووي رحمه الله في شرح مسلم : المشهور من مذهب الشافعي أنه لا يصل ثوابها إلى الميت وقال بعض أصحابنا يصل ثوابها للميت بمجرد قصده بها ولو بعدها وعليه الائمة الثلاثة واختاره كثيرون من أئمتنا واعتمده السبكي وغيره فقال:والذي دل عليه الخبر بالاستنباط أن بعض القرآن إذا قصد به نفع الميت نفعه وبين ذلك وحُمِلَ جمع عدم الوصول الذي قاله النووي على ما إذا قرأ لا بحضرة الميت ولم ينو القارئ ثواب قراءته له أو نواه ولم يَدْعُ (فتح المعين)
  இறந்து விட்டவருக்காக தர்மம் செய்வது, துஆச் செய்வது ஆகியவை இறந்தவருக்குச் சேரும் என்பதில் ஏகோபித்த  கருத்து உள்ளது. ஆனால் குர்ஆன் ஓதுவது இறந்தவருக்குச் சேருவதில் கருத்து வேறுபாடு உண்டு. இமாம் நவவீ (ரஹ்)  அவர்கள் முஸ்லிம் ஷரீஃபின் விரிவுரையில் கூறும்போது இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் பிரபலமான கூற்றின்   அடிப்படையில் அது சேராது என்பதாகும். ஆனால் மற்ற இமாம்கள் கூறும்போது குர்ஆன் ஓதுவதன் நன்மை அதை நிய்யத் வைப்பதன் மூலமாக இறந்தவரைச் சேரும் என்று கூறுகின்றனர். மத்ஹபுடைய மூன்று இமாம்களும் அதையே கூறுகின்றனர். பெரும்பாலான இமாம்களின் கருத்து அது தான். இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ள அக் கருத்துக்கு விளக்கமாகிறது இறந்தவருக்கு நிய்யத் செய்யாமல் குர்ஆன் ஓதினால் அது சென்றடையாது  என்பதேயாகும் என்று மற்றவர்கள் விளக்கம் கூறுகின்றனர்.       நூல்- ஃபத்ஹுல் முஈன்                    
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيِّ رضي الله عنه قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا إِلَى سَعْدِ بْنِ مُعَاذٍ حِينَ تُوُفِّيَ قَالَ فَلَمَّا صَلَّى عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَوُضِعَ فِي قَبْرِهِ وَسُوِّيَ عَلَيْهِ سَبَّحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَبَّحْنَا طَوِيلًا ثُمَّ كَبَّرَ فَكَبَّرْنَا فَقِيلَ  يَارَسُولَ اللَّهِ لِمَ سَبَّحْتَ ثُمَّ كَبَّرْتَ قَالَ لَقَدْ تَضَايَقَ عَلَى هَذَا الْعَبْدِ الصَّالِحِ قَبْرُهُ حَتَّى فَرَّجَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ عَنْهُ (احمد)  
ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள் சஃதுப்னு முஆத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இறந்த போது நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் வெளியேறினோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஜனாஸா தொழ வைத்தார்கள்.பிறகு அவரை கப்ரில் வைத்தவுடன் நீண்ட நேரம் தஸ்பீஹ் ஓதினார்கள். நாங்களும் தஸ்பீஹ் ஓதினோம். பிறகு தக்பீர் சொன்னார்கள். நாங்களும் தக்பீர் ஓதினோம். பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இவ்வாறு ஏன் செய்தீர்கள் என்று கேட்கப் பட்டபோது இந்த நல்ல மனிதரை கப்ரு நெருக்கியது. நாம் தஸ்பீஹ் செய்ததன் மூலம் அல்லாஹ் அவருக்கு விடுதலை கொடுத்தான் என்றார்கள்.
 படிப்பினை- இறந்தவருக்காக தஸ்பீஹ் ஓதுவது கூடும் என்றால் குர்ஆன் ஓதுவதும் கூடும்  என இதிலிருந்து விளங்க முடியும்.
ஈஸால் தவாப் செய்த பிறகு தனியாக துஆ அவசியமா?
 நன்மையை சாட்டுவது இரண்டு வகையாகும்.ஒன்று ஒருவர் ஒரு அமலை தனக்காக செய்து பிறகு அதன் நன்மையை மற்றவருக்கு சேர்த்து வைப்பது இந்த வகைக்கு கட்டாயம் துஆ செய்ய வேண்டும். அதாவது இறந்தவருக்கு சேர்த்து வைக்கும் வகையில் துஆச் செய்ய வேண்டும். இரண்டாம் வகை ஒரு அமலை பிறருக்கு சேர்ப்பதற்காக வேண்டியே செய்வது. இதற்காக தனியாக துஆச் செய்ய வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக ஒருவர் குர்ஆனை தனக்காக ஓதியிருப்பார். பிறகு அதை இறந்தவர்களில் யாருக்கேனும் சேர்த்து வைக்க நினைத்தால் யாஅல்லாஹ் இதன் நன்மையை இன்னாருக்கு சேர்த்து வை என துஆ செய்வது கட்டாயம். ஆனால் ஓதும்போதே அவருக்காக ஓதியிருந்தால் அதற்காக தனியாக துஆ ஓதுவது கட்டாயமில்லை. ஆனால் துஆ ஓதினால் நல்லது தான்.                           
இறந்து விட்ட பெற்றோரின் நண்பர்களுக்கு உபகாரம் செய்வதும் பெற்றோருக்கு உபகாரம் செய்வதில் கட்டுப்படும்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « أَبَرُّ الْبِرِّ أَنْ يَصِلَ الرَّجُلُ وُدَّ أَبِيهِ ». (مسلم
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَجُلاً مِنَ الأَعْرَابِ لَقِيَهُ بِطَرِيقِ مَكَّةَ فَسَلَّمَ عَلَيْهِ عَبْدُ اللَّهِ وَحَمَلَهُ عَلَى حِمَارٍ كَانَ يَرْكَبُهُ وَأَعْطَاهُ عِمَامَةً كَانَتْ عَلَى رَأْسِهِ فَقَالَ ابْنُ دِينَارٍ فَقُلْنَا لَهُ أَصْلَحَكَ اللَّهُ إِنَّهُمُ الأَعْرَابُ وَإِنَّهُمْ يَرْضَوْنَ بِالْيَسِيرِ. فَقَالَ عَبْدُ اللَّهِ إِنَّ أَبَا هَذَا كَانَ وُدًّا لِعُمَرَ بْنِ الْخَطَّابِ وَإِنِّى سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ « إِنَّ أَبَرَّ الْبِرِّ صِلَةُ الْوَلَدِ أَهْلَ وُدِّ أَبِيهِ ».(مسلم 
இப்னு உமர் ரழி அவர்கள் மக்கா செல்லும் வழியில் ஒரு கிராமவாசியை சந்தித்து ஸலாம் கூறினார்கள். அவரை தனது வாகனத்தின் மீது ஏற்றி  தன்னுடைய தலைப்பாகையை அவருக்கு அணிவித்து கண்ணியப் படுத்தினார்கள். அப்போது நாங்கள் இப்னு உமர் ரழி அவர்களிடம்  இந்த கிராமவாசிகளுக்கு இவ்வளவு மரியாதை தேவையில்லை. இதை விடக் குறைந்த மரியாதையே போதுமல்லவா என்று கேட்க, அதற்கு இப்னு உமர் ரழி அவர்கள் கூறினார்கள் இவர் எனது தந்தைக்கு மிகவும் பிரியமானவர் என்பதால் இவரை நான் கண்ணியப் படுத்துகிறேன் என்றார்கள்

பிரபல்யமான பதிவுகள்