நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

புதன், மார்ச் 26, 2014

மாதவிடாய் பெண்களின் கற்பப் பையின் அடியிலிருந்து நோய் ஏதும் இல்லாத நிலையில் குறிப்பிட்ட நாட்களுக்கு வெளியாகும் இரத்தம் மாதவிடாய் எனப்படும். பெண் களுக்கு இறைவன் இயற்கையாகவே ஏற்படுத்தியுள்ளது தான் மாதவிடாயாகும். பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் கற்பத்திலுள்ள குழந்தைக்கு அதை உணவாக இறைவன் ஆக்கியிருக்கிறான். குழந்தை பிறந்த பின்பு அது பாலாக மாறிவிடுகிறது. ஒரு பெண் கற்பமாகவோ பாலூட்டக்கூடியவளாகவோ இல்லாதபோது அது குறிப்பிட்ட நேரத்தில் வெளியே வந்துவிடுகிறது. பெண்கள் தங்கள் உடல் பழக்கத்தை வைத்து அந்த நாள் எது என்பதை அறிந்து கொள்வார்கள். 2. மாதவிடாய்க்கான வயது பொதுவாக ஒன்பது வயதிலிருந்து ஐம்பது வயது வரை மாதவிடாய் வெளியாகும் வயதாகக் கணிக்கப் படுகிறது. ”மேலும் உங்கள் பெண்களில் எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களின் இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால் அப்பெண்களுக்கும் மாத விடாயே ஏற்படாத பெண்களுக்கும் இத்தா(வின் தவணை) மூன்று மாதங்களாகும்.” (அல்குர்ஆன்: 65:4) இந்த வசனத்தில் நிராசையாகிவிட்டவர்கள் என்பது ஐம்பது வயதைத் தாண்டியவர்கள் ஆவர். மாதவிடாய் ஆகாதவர்கள் ஒன்பது வயதிற்குக் கீழ் உள்ளவர்களைக் குறிக்கும் என தீர்மாணித்துக் கொள்ளலாம்.பெண்கள் மாதவிடாயாக இருக்கும்போது அவளுடன் உடலுறவில் ஈடுபடுவது தடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்கூறுகிறான்: ”(நபியே!) அவர்கள் உம்மிடம் மாதவிடாய் பற்றியும் கேட்கிறார்கள். அது ஒரு தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின்போது பெண்களை விட்டும் விலம் யிருங்கள், அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணு காதீர்கள் அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படிக் கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர் களிடம் செல்லுங்கள், என்று நீர் கூறும்! நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை விட்டு மீள்பவர்களை நேசிக்கிறான்; தூய்மை யானவர்களையும் நேசிக்கிறான்.” (அல்குர்ஆன் 2:222) மாதவிடாய் இரத்தம் வெளியாகி முடிந்து குளிக்கும் வரை இந்தத்தடை நீடிக்கும். காரணம் அல்லாஹ்வுடைய சொல்லாகும். ”(மாதவிடாய்) பெண்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள், அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அப்படி அவர்களிடம் செல்லுங்கள். மனைவி மாதவிடாயாக இருக்கும் நிலையில் கணவன் உடலுறவில் ஈடுபடுவது தடுக்கப்பட்டாலும் மர்ம உறுப்புக்கள் சேராதவிதத்தில் மனைவியிடம் இன்பம் அனுபவிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது. ”பெண் மாதவிடாய்க்காரியாக இருக்கும் நிலையில் உடலுறவைத் தவிர (விரும்பிய) மற்றதை செய்து கொள்ளுங்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்கூறினார்கள். (நூல்: முஸ்லிம்) 2. ஒரு பெண் மாதவிடாய்க்காரியாக இருக்கும் நிலையில் தொழுவது, நோன்பு நோற்பது தடுக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் அவள் இந்த வணக்கங்களைச் செய்தாலும் அது அங்கீகரிக்கப்படாது. ”ஒரு பெண் மாதவிடாய்க்காரியாக இருக்கும் நிலையில் தொழாமலும், நோன்பு நோற்காமலும் இருக்க வில்லையா?” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்) ஒரு பெண் மாதவிடாய்க் காலத்தில் விடுபட்டுப் போன தொழுகைகளை அக்காலம் முடிந்தபின் தொழ வேண்டியதில்லை, விடுபட்ட நோன்புகளை மட்டும் நோற்க வேண்டும். ”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் விடுபட்ட நோன்பை நோற்றுக் கொள்ளுமாறு நாங்கள் ஏவப்பட்டோம். விடுபட்ட தொழுகையை நிறைவேற்றுமாறு நாங்கள் ஏவப்பட வில்லை” என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம்) நோன்பிற்கும் தொழுகைக்கும் இடையில் வேறு படுத்தப்பட்டிருப்பதற்குக் காரணம் உண்டு. தொழுகை நாள் ஒன்றிற்கு ஐவேளைகள் நிறைவேற்றியாக வேண்டிய ஒரு கடமையாகும். தகுந்த காரணங்களுக்காக விடுபட்ட தொழுகையை களா செய்ய வேண்டியது கடமையல்ல, ஆனால் நோன்பு அவ்வாறு அல்ல. மாதவிடாய் பெண் குர்ஆனை திரையின்றி தொடுவது தடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகிறான்: ”பரிசுத்தமானவர்களைத் தவிர அதை யாரும் தொடமாட்டார்கள்.” (அல்குர்ஆன் 56:79) ”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அம்ர் இப்னு ஹஸ்கி என்பவருக் கும் எழுதிய கடிதத்தில் தூய்மையானவர்களைத் தவிர யாரும் முஸ்ஹஃபைத் தொடக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.” (நூல்: நஸயீ) இது பிரபலமான, சரியான ஹதீஸாகும். துய்மையா னவர்களைத் தவிர மற்றவர்கள் முஸ்ஹஃபைத் தொடக் கூடாது என்பதே நான்கு இமாம்களின் கருத்தாகும். மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் பெண் குர்ஆனைத் தொடாத நிலையில் அதை ஓதிக்கொள்ளலாம் என்பதில் அறிஞர்களுக்கிடையில் கருத்துவேறுபாடுகள் உள்ளன.

மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஒரு பெண் மக்காவிலுள்ள கஅபாவை வலம் வருவதும் தடுக்கப்பட்டுள்ளது. ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட போது ”ஹாஜிகள் செய்யவேண்டிய எல்லா கிரியை களையும் நீ செய்து கொள்! ஆனால் ‘தவாஃப்’ மட்டும் செய்யாதே! சுத்தமான பின்பே அதைச் செய்துகொள்! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள்.” (நூற்கள்: புகாரி, முஸ்லிம்) 5. மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் ஒரு பெண் பள்ளிவாசலில் தங்குவதும் கூடாது. ”மாதவிடாய்ப் பெண்ணிற்கும், குளிப்பு கடமையான வர்களுக்கும் பள்ளிவாசலில் தங்குவதை நான் அனுமதிக்க வில்லை” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூற்கள்: அபூ தாவூது, இப்னுமாஜா) ”நிச்சயமாக பள்ளிவாசல் மாதவிடாய் பெண் ணிற்கும், குளிப்பு கடமையானவருக்கும் ஆகுமானதல்ல, என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். மேற்கண்ட நபிமொழியில் இடம் பெறுபவர்கள் பள்ளிவாசலில் தங்காது அவசியத்தேவைக்காக அதைக் கடந்து செல்வது மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் தொழுவதற்கான பாயை எடுத்துக் கொண்டு வருமாறு கூறினார்கள், அப்போது நான் மாதவிடாய்க் காரியாக இருக்கிறேனே என அவர்கள் கூறியதற்கு ‘மாதவிடாய் உன்னுடைய கையில் இல்லையே!” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (தெளிவுபடக்) கூறினார்கள். (நூற்கள்: முஸ்லிம், திர்மிதீ மற்றும் நஸயீ) அனுமதிக்கப்பட்ட திக்ருகள், துஆக்களை மாத விடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஒருபெண் ஓதிக் கொள்வதில் தவறில்லை. காலை மாலையில் வழக்கமாக ஓதக்கூடியவற்றை ஒதிவருவதும், தூங்கும்போதும், தூக்கத்திலிருந்து எழுந்ததும் துஆக்கள் ஓதுவதிலும், தஃப்ªர், ஹதீஸ், பிக்ஹ் போன்ற நூல்களைப் படிப்பதிலும் தவறில்லை. மஞ்சள், கலங்கல் நிற இரத்தம் : மஞ்சள் நிறச்சீழ் போன்ற இரத்தமோ, கலங்கலான, ஊத்தைத் தண்¡ர் நிறத்தைப் போன்ற இரத்தமோ மாதவிடாய்க் காலத்தில் வெளியாகுமானால் அது மாதவிடாய் இரத்தமாகவே கருதப்படும். மாதவிடாய்க் கான சட்டம்தான் அதற்கும் பொருந்தும். மாதவிடாய் அல்லாத நாட்களில் அது வெளியாகுமானால், மாதவிடாய் இரத்தமாக அது கருதப்படாது. அவள் தூய்மையானவளாகவே கருதப்படுவாள். ”நாங்கள் மாதவிடாயிலிருந்து தூய்மையான பிறகு வெளியாகும் மஞ்சள் அல்லது கலங்கல் நிற இரத்தத்தை (மாதவிடாய் என) ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை என உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா கூறினார்.” (நூற்கள்: புகாரி, அபூ தாவூது) இந்த விஷயம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் அங்கீகரிக்கப் பட்டுள்ளதால் இந்த ஹதீஸ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நேரடியாக பெறப்படும் ஹதீஸின் சட்டமாகும் என்று ஹதீஸ் கலை அறிஞர்களிடம் கருதப்படுகிறது. மாதவிடாய்க் காலத்தில் மேற்குறிப்பிட்ட இரண்டு விதமான இரத்தமும் வெளியானால் அதுவும் மாதவிடா யாகவே கருதப்படும். மாதவிடாய் முடிவை ஒருபெண் அறிவது? 1. இரத்தம் நின்றுவிடுவதன் மூலம் அதை அவள் அறிந்து கொள்வாள், இதற்கு இரண்டு அடையாளங்கள் உள்ளன. ஒன்று மாதவிடாய் இரத்தம் நின்றபின் தொடரும் தண்¡ர் போன்ற வெள்ளை நிற திரவப்பொருள். சிலசமயம் பெண்களின் உடற்கூறைப் பொறுத்து வௌ;வேறு நிறங்களிலும் வெளியாகும். 2. மர்ம உறுப்பு, திரவங்கள் ஏதும் இன்றி காய்ந்த நிலை யில் காணப்படுவது. அதாவது இரத்தம் வெளியாகும் இடத்தில் பஞ்சு அல்லது துணியை வைத்துவிட்டு வெளியே எடுக்கும்போது அதில் எவ்வித இரத்த முமில்லாமல் காய்ந்த நிலையில் காணப்படுவது. 4. மாதவிடாய் நின்றுவிட்ட பெண் என்ன செய்யவேண்டும். மாதவிடாய் நின்றதும் குளிப்பது கடமையாகும். மாதவிடாய் நின்றதற்கான குளியலை நிறைவேற்றுவதாக நினைத்து (நிய்யத் வைத்து)க் கொள்ளவேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் ”மாதவிடாய் வரும்போது தொழுகையை விட்டுவிடு! அது நின்றதும் குளித்துவிட்டு தொழுது கொள்!” என்று கூறினார்கள். (நூல்: புகாரி) குளிக்கும்போது அசுத்தத்திலிருந்து தூய்மையாகப் போவதாக மனதில் நினைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் பிஸ்மில்லாஹ் சொல்லி தன் உடல் முழுவதும் தண்¡ர் ஊற்ற வேண்டும். தலைமுடியின் அடிப்பாகங் களை நனையும்படிச் செய்யவேண்டும். தலைமுடி அடர்த்தியாக இருந்து, சடை பின்னப்பட்டிருக்குமானால் அதை அவிழ்க்கவேண்டும் என்ற அவசியமில்லை. அந்த நிலையில் தண்¡ரை தலையில் ஊற்றினாலே போது மானது. இலந்த இலை, மற்றும் உடலை சுத்தம் செய்கிற பொருட்களை உபயோ கிப்பது சிறந்தது. குளித்தபின் பஞ்சில் நறுமணத்தை எடுத்து இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு செய்வதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்கள். முக்கிய விஷயம் மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் பெண், அல்லது பிரசவமான பெண் சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்னர் சுத்தமாம் விடுவாளானால் அந்த நாளின் லுஹர், அஸர், தொழுகைகளைத் தொழுவது அவள் மீது கடமையாகும். ஃபஜ்ர் தொழுகைக்கு முன்பு சுத்தமாம்விடும் பெண் அந்த இரவின் மக்ரிப், இஷா தொழுகைகளைத் தொழுவது அவள் மீது கடமையாகும். இதுபோன்ற காரணங்கள் ஏற்படும்போது இரண்டாவது தொழுகையின் நேரம் முதல் தொழுகையின் நேரமாக உள்ளது. இப்னு தைமிய்யா தம் ஃபத்வா தொகுப்பில் 22ழூ ழூ434 ல் கூறுகிறார்கள். மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் பெண் பகலின் கடைசிப் பகுதியில் தூய்மையாகி விடுவாளானால் அன்றைய லுஹர், அஸர் தொழுகைகளை நிறைவேற்ற வேண்டும். இரவின் கடைசியில் தூய்மையாகி விடுவாளா னால், மக்ரிப் மற்றும் இஷாத் தொழுகைகளை சேர்த்துத் தொழவேண்டும். என மாலிக் ஷாஃபியீ, அஹ்மத் போன்ற பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், அப ஹ{ரைரா, இப்னு அப்பாஸ்(ரழி) போன்ற நபித்தோழர்களும் இவ்வாறே கூறியுள்ளனர்.

பிரபல்யமான பதிவுகள்