40 ahaadeees
اِنّما الاَعْمَالُ بِالنّیَّات
செயல்கள் அனைத்தும் எண்ணங்களைக்கொண்டே கூலி வழங்கப்படும்.
اَلصّلٰوة نُورُ المُومِن
தொழுகை விசுவாசியின் ஒளி.
اَلصّیَامُ جُنّةٌ
நோன்பு பாதுகாகககும் கேடயமாகும்.
اِنّ الدِّینَ یُسْر
நிச்சயமாக (இஸ்லாமிய)மார்க்கம் இலேசானதாகும்.
اَلدِّینُ النَّصِيحَة
(இஸ்லாமிய) மார்க்கம் ஓர் உபதேசமாகும்.
اَلعَینُ حَقٌّ
கண் திருஷ்ட்டி உண்மையாகும்.
طَلَبُ العِلمِ فَرِيضَةٌ علیٰ کُلِّ مُسلِمٍ
கல்வியை கற்பது எல்லா முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமை.
خَیرُ الحَدِیثِ کِتَابُ اللّٰہِ
பேச்சில் சிறந்தது குர்ஆன் ஆகும்.
وَ خَیرُ الھَدیِ ھَدیُ مُحَّمدٍ صلی اللّٰہ علیہ وسلم
வழிகளில் சிறந்தது நபி வழியாகும்.
اَلحَیَاءُ مِنَ الاِیمانِ
வெட்க்கம் ஈமானில் ஒரு பகுதி.
اَلعَجلَةُ مِنَ الشَّيطَان
அவசரம் ஷைத்தானின் குணம்.
اَلبِرُّ حُسنُ الخُلقِ
நன்மை என்பது நற்குணத்தின் மறு பெயர்
اَلطّھور شَطرُ الاِیمَانِ
சுத்தம் ஈமானில் ஒரு பகுதி.
مَن صَمَتَ نَجَا
மௌனம் காத்தவன் வெற்றி பெறுவான்.
لا تَسُبُّوا الاموَات
இறந்தவர்களை ஏசாதீர்கள்.
لاَ تَسئَلُونَ النَّاسَ شَیئاً
மனிதர்களிடம் யாசிக்காதீர்கள்.
سَمِّ اللّٰہ وَ کُل بِیَمِینِك
பிஸ்மில்லாஹ் கூறி வலது கையினால் சாப்பிடு!
کُل مِمَّا یَلِی
பாத்திரத்தில் உனக்கு நெருக்கத்தில் உள்ள உணவை சாப்பிடு!
لاَ یَشرِبَنَّ اَحَدٌ مِنکُم قَائِماً
நின்று கொண்டு நீர் அருந்தாதே!
اَلسِّوَاکُ مَطهَرةٌ لِلفَم وِ مَرضَاةٌ لِلرّبِّ
பல் தேய்ப்பது வாயை சுத்தப்படுத்தும், வல்ல அல்லாஹ்வை திருப்தி படுத்தும்.
اَلسَّلامُ قَبلَ الکَلامِ
பேசுவதற்கு ஸலாம் கூற வேண்டும்.
اَفشُوا السَلامَ بَینَکُم
உங்களுக்கிடையே ஸலாமைப் பரப்புங்கள்!
كُلُّ مَعرُوفٍ صَدقَة
ஒவ்வொரு நற்செயலும் தர்மமாகும்.
اِنَّ اللّٰہ رَفِیقٌ یُحِبُّ الرَّفِق
அல்லாஹ் மென்மையானவன்,மென்மையான அனுகுமுறையையே அவன் விரும்புகிறான்.
لا تُقبَلُ صَلوٰةٌ بِغَيرِطهُور
தூய்மையின்றி தொழுகை இல்லை.
اَحَبُّ البِلادِ اِلیٰ اللّٰہ مَسَاجِدُھَا
ஊரிலேயே அல்லாஹ்வுக்கு உகப்பான இடம் பள்ளிவாசல்களாகும்.
اَبغَضُ البِلادِ اِلی اللّٰہ اَسوَاقُھَا
ஊரிலேயே அல்லாஹ்வுக்கு வெறுப்பான இடம் கடைத்தெருக்களாகும்.
تُحفَةُ المُومِنِ المَوت
மரணம் முஃமினுக்கு அருளாகும்.
اَنزَلُوا النَّاسَ مَنَازِلَھُم
மனிதர்களுக்கு அவரவர்களின் அந்தஸ்துகளை கொடுங்கள்!
لا یَرحَم اللّٰہُ مَن لا یَرحَم النَّاس
மனிதர்களுக்கு இரக்கம் காட்டாதவன் மீது அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான்.
لا يَدخُلُ الجَنَّة قاطِعٌ
உறவை துண்டித்தவன் சுவனம் போக மாட்டான்.
لا یَحِلُّ لِمُسلِمٍ اَن یُرَوِّعَ مُسلِماُ
எந்த முஸ்லிமையும் மிரட்டக்கூடாது.
لا تَحقِرَنَّ شَیئاً مِّنَ المَعرُوف
எந்த நன்மையையும் சாதாரணமாக எண்ணக்கூடாது.
بَلِّغُوا عَنِّی وَلَوآیه
என் மூலம் ஒரு உபதேசம் கிடைத்தாலும் அதனை பிறருக்கு கூறிவிடுங்கள்!
لا اِیمَانَ لِمَن لا اَمَانَةَ لَه
அமானிதம் காக்கும் தன்மை இல்லையெனில் அவனிடம் ஈமான் இல்லை(என அர்த்தம்).
وَلا دِینَ لِمَن لا عَھدَ لَہ
வாக்கு மீறல் இருந்தால் மார்க்கமே இல்லை.
اَلتّائِبُ مِنَ الذّنبِ کَمَن لا ذنبَ لَہ
பாவங்களை விட்டும்(மீண்டு) தவ்பா செய்தவன் பாவங்களே இல்லாதவனைப் போல,(பரிசுத்தமாகி விடுவான்).
مَن لَم یَشکُرِ النَّاسَ لَم یَشکُر اللّٰه
மனிதர்களுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த மாட்டான்.
زیِّنُوا القُرآنَ بِاَصوَاتِکُم
உங்கள் குரல்கள் மூலம் குர்ஆனை அலங்காரப் படுத்துங்கள்!.
خَیرُکُم مَن تَعَلَّمَ القُرآن و عَلَّمَہ
உங்களில் மிகச்சிறந்தவர் குர்ஆனை கற்று பிறருக்கும் கற்றுக்கொடுப்பவர்தான்.
роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:
роХро░ுрод்родுро░ைропிроЯுроХ