குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்
1) மது அருந்தியவன் பைத்தியக்காரனைப்போல் வாயில் வந்தவற்றையெல்லாம் உளர ஆரம்பித்து விடுவான். இதனால் அறிஞர்கள் அவனை இழித்துரைப்பார்கள். சிறுவர்கள் ஏலனமாக சிரிப்பார்கள்.
2) மது அருந்துவது பொருளை போக்குவதோடு அறிவையும் அழித்துவிடுகிறது. சகோதரர்கள் நண்பர்களிடையே பகை உணர்ச்சியும் வஞ்சகமும் தோன்றும். மது அருந்துவதால் தொழுகை இறை தியானம் போன்ற நற்செயல்கள் தடை பெறுகின்றன.
3) மது அருந்துபவன் விபச்சாரத்தின் பக்கம் எளிதில் சென்றுவிடுவான். ஏனெனில் மது அருந்தியதும் அவனையுமறியாமல் மங்கையர் மீது மையலும் மொகமும் ஏற்பட்டு விடுகிறது.அவனது மிருக உணர்ச்சி தலைதூக்குகிறது.
4) மது அருந்துவது பாவங்களனைத்திற்கும் திறவுகோலாக உள்ளது. மற்றய பாவங்களை செய்வது எளிதாக ஆகிவிடுகிறது.தீமை பயக்கும் மதுக்கடைகளுக்கு செல்வதால் அவனை பாதுகாக்கும் மலக்குகள் நோவினை அடைகின்றனர்.
5) மது அருந்துவது என்பது கசயடி தண்டனை பெறுவதற்கு தகுதியானவனாகச் செய்கிறது. இத் தண்டனை உலகில் கிடைக்காவிட்டால் மறுமையில் கோடானு கோடி மக்கள் முன்னிலையில் நரக நெருப்பால் ஆன சாட்டையில் வன்முறையாக அடிக்கப்படும். அதை அவனது பெற்றொர்களும் உறவினர்களும் காணுவர்.
6) மது அருந்துபனை பொறுத்தவரை வானத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. நாற்பது நாட்களுக்கு அவனது பிராத்தனைகளோ நற் செயல்களோ அங்கிகரிக்கப்படுவதில்லை.
7) அவன் இறக்கும் போது ஈமானுடன் மரணமடைவான் என்று உறுதி கூற முடியாது. ஈமான் அவனை விட்டும் நீங்கி விடலாம் என அஞ்சப்படும். சிந்தனை செம்மல்களே! மது அருந்துவதால் ஏற்படும் தீய விளைவுகள் எவ்வளவு பயங்கரமானவை என்பதை இம் மணி மொழிகள் நமக்கு உணர்த்துகின்றன. மது அருந்துவதை விட்டு நீங்கி கொள்ளுங்கள். ஏனெனில் அதுவே பாவங்களின் தாயாக உள்ளது என்ற நபிமணியின் பொன்மொழி நமது நெஞ்சில் என்றென்றும் ஒலித்துக்கோண்டிருக்கட்டும். மதுவினால் ஏற்படும் தீமைகளை கண்ட நாம் மதியை போக்கும் மதுவே போ....... போ...... என விடைபெறுவோமாக.
தீயோரின் வேதனை அனைவருக்கும்.
நபிகள் நாயகம் அவர்கள் சொல்கிறார்கள்
என் சமுதாயம் கீழ் காணும் பதினைந்து வஷயங்களை செய்தால் சிகப்பு காற்று பூகம்பம், உருமாற்றம், கல்மாரி எனத்தொடர்ச்சியான பல வேதனைகள் நிகழும்.
1)பொது சொத்துக்களை சொந்த பொருளாக பயன் படுத்துதல். 2)அமானிதத்தை பேனாதிருத்தல், 3)ஏழை வரி ஜக்காத்தை நிறைவேற்றாமல் இருத்தல், 4)மார்க்கத்தை பரப்புவதற்காக கல்வி கற்காமலிருத்தல், 5)கணவன் மனைவிக்கு அடிமையாகிவிடுதல், 6)தாயை அவமதித்தல், 7)அன்னிய மனிதனுக்கு உதவி செய்யும் மகன் தன் தந்தைக்கு உதவி செய்யாமலிருத்தல். 8)மஸ்ஜிதில் உலக பேச்சுகள் அதிகமாகி விடுதல். 9)பாவியானவன் கூட்டத்திற்கு தலைவனாக இருத்தல், 10)இழிவுக்குறியவன் ஊர் தலைவனாக் இருத்தல், 11)நாட்டியக்காரிகள் அதிகமாகி விடுதல், 12)இசைக்கருவிகள் அதிகமாதல், 13)பிற்காலத்தவர் முற்காலத்தவரை சபித்தல், 14)ஒருவரின் தீமைக்கு பயந்து அவனுக்கு கண்ணியம் கொடுத்தல், 15)மதுபானங்கள் அருந்துதல்.
நூல் : மிஷ்காத்
இத் தீய காரியங்கள் அனைத்தும் நிகழ்ந்து வருகின்றன. இதை நல்லவர்கள் கண்டுகொள்ளாமலிருந்தால் அதன் தீய விளைவு அனைவரையும் தாக்கும் என்பதில் ஐயமில்லை. 1999 ஆகஸ்ட் மாதம்17 ம் தேதி செவ்வாய் இரவு 3 மணிக்கு மக்கள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கையில் துருக்கியில் பூகம்பம் ஏற்பட்டது. இஸ்தான்புல்லுக்கு கிழக்கே 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இஸ்மித் நகரை மையமாக கொண்டு இது ஏற்பட்டது. இதில் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பரிதாபமாக இறந்தனர்.
குடியிருக்கக்கூடிய ஆயிரமாயிரம் கட்டிடங்கள் உயரத்திலிருந்து விழுந்து நொறுங்கியது. இந்த இறை வேதனையில் ஏற்பட்ட நஸ்டத்தை சரியாக கவனிக்க இயலவில்லை.அந்த அளவுக்கு மிகப்பெரிய நஷ்டம். இதனால் இந்நாட்டின் பொருளாதாரம் உலுக்கப்பட்டு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாவம் செய்பவர்களின் வேதனை யாவருக்கும் வரும் என்பதை இந்த பூகம்பம் உணர்த்துகிறது.நபிகள் நாயகம் (ஸல்) சொல்கின்றார்கள்:- ஒரு சமுதாயத்தில் ஒருவர் பாவம் செய்கிறார். அதை தடுக்க சக்தியிருந்தும் அந்த சமுதாயத்தினர் தடுக்காவிட்டால் அவர்கள் இறப்பதற்கு முன்பே அல்லாஹ் அவர்களுக்கு தண்டனை கொடுப்பான்.
நூல்: அபூ தாவூத்
ஒரு வீட்டில் தீ பிடித்துவிட்டால் அதன் அருகிலுள்ளோர் அனைக்க வேண்டும். இல்லையெனில் சுற்றியுள்ள பற்பல வீட்டையும் நாசமாக்கிவிடும். இதேபோன்று தீச்செயல்களைத் தடுக்க வேண்டும். யார் எக்கேடு கெட்டுபோனால் நமக்கென்ன என்று இருந்தால் வேதனை சுடும். சமுதாயத்தில் பரவியிருக்கும் தீய செயல்களாம் வர தட்சணை. கொலை,கொள்ளை என்பன போன்றவையின் வேதனை, பாதிப்பு அனைத்து மக்களையும் துன்பத்திலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளன. அதேபோல் மது அருந்துவது சர்வ சாதாரணமாக கருதப்படுகிறது
மது அருந்துவோருக்கு எச்சரிக்கை
மனிதனின் அறிவை மாற்றி மிருகத்திற்கு ஒப்பாக்கி வைக்கும் மதுவை அருந்துதல் கொடிய குற்றமாகும்.கள்ளை தவிர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அது கெடுதிகள் அனைத்திற்கும் தாயாகும். அல்லாஹ்வின் மீது பிரமாணமாக உண்மை விசுவாசமும் கள் குடித்தலும் ஒன்று சேராது. இரண்டில் ஒன்று மற்றொன்றை அப்புறப்படுத்திவிடும் என்று நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர் : உதுமான் ( ரலி ) அவ்ர்கள். நூல்: நஸாஈ
மது அருந்துவோர் குற்றவாளியாக இருப்பது போல அவர்களுக்கு உதவியாக இருப்போரும் குற்ரவாளிகளே. நாயகம் (ஸல்) அவர்கள் மது சம்பந்தமாக 10 பேர்களை சபித்துள்ளார்கள். 1) மதுவை காய்ச்சுபவர், 2) அதனை காய்ச்சுவதற்கு உதவுபவர், 3)அதை குடிப்பவர் , 4) அதனை புகட்டுபவர், 5) அதனை சுமந்து செல்பவர், 6) அதனை சுமந்து செல்ல ஏற்பாடு செய்பவர், 7) அதனை விற்பனை செய்பவர், 8) அதை வாங்குபவர், 9) அதனை வெகுமதியாக கொடுப்பவர், 10அத்கை விற்று பிசிப்பவர் ஆகியோர்.
அறிவிப்பவர் : ஹஜ்ரத் அனஸ் (ரலி) நூல்: திர்மிதி
ஹுரைஷ் என்ற பாம்பு யாரைத்தேடுகிறது ?
நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:-
கியாமத்தன்று நரகத்திலிருந்து ஒரு பாம்பு வெளியாகும். அதன் பெயர் ஹுரைஷ். அது தேள் பொன்ற விஷ ஜந்துக்களை உருவாக்கும். அதன் தலை ஏழாவது வானத்திலேயும் அதன் வால் ஏழு பூமிக்கு கீழேயும் இருக்கும். அது வருடத்திற்கு ஆயிரம் முறை சொந்த்த்தை துண்டித்து வாழ்ந்தவன் எங்கே ? மது அருந்தியவன் எங்கே ? என அழைத்துக்கொண்டிருக்கிறது. அதனிடம் ஜிப்ராயில் (அலை) அவர்கள் ஹுரைஷே ! யாரை தேடிக்கொண்டிருக்கிறாய் என கேட்பார்கள். அப்போது ஹுரைஷ் ஐந்து நபர்களை தேடுகிறேன் எனக்கூறும். 1) தொழுகையை விட்டவன், 2) ஜக்காத்து கொடுக்காதவன், 3)மது அருந்தியவன், 4) வட்டி சாப்பிட்டவன், 5) மஸ்ஜிதில் உலகப்பேச்சு பேசியவன்
அல் ஹதீஸ்
மஹ்ஷரில் உதிக்கும் 12 கூட்டம்
மஆதிப்னு ஜபல் (ரலி) அவர்கள் வினாவுக்கு நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அதாவது எனது உம்மத்துக்கள் துக்கமும் , கஷ்டமும் ,கைசேதமிக்க அந்த கியாமத்து நாளில் கப்ருகளிலிருந்து 12 கூட்டமாக எழுப்பப்படுவார்கள். அதில் 11 வது கூட்டத்தாரின் நிலைமை என்ன தெரியுமா?
குருடர்களாகவும், மாட்டின் கொம்பை போன்ற பற்களையுடையவர்களாகவும், உதடு நெஞ்சு அல்லது தொடை வரையிலும் தொங்கியவர்களாகவும் எழுப்பப்படுவார்கள். இவர்கள் மதுபானம் அருந்தியவர்களும், தவ்பா இன்றியே மரணித்தவர்களாகும். இவர்களை நரகத்திற்கு இழுத்துச்செல்லுங்கள் என்று ஒரு சப்தம் வரும். அப்படியே அவர்களை நரகத்திற்கு இழுத்துச்செல்லப்படும் என்று நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்.
எவர் மது பானத்தை ஹலாலாக கருதுவாரோ, நிச்சயமாக அவர் என்னைவிட்டும் நீங்கிவிட்டார். நான் அவரை விட்டும் நீங்கிவிட்டேன். (அல் ஹதீஸ்) மேலும் ஹதீஸ் குத்ஸீயில் எனது வல்லமையின் மீது ஆணையாக, எவர் உலகில் மதுபானம் அருந்துவாரோ அவரின் இருதயத்தை கியாமத்து நாளில் தாகத்தாலும் வரட்சியாலும் காய்ந்ததாகவும் அவனின் நாக்கை வெளியாக்கி நெஞ்சு வரையிலும் தொங்கியவனாக கடினமான தாகம் உள்ளதாகவும் ஆக்கிவைப்பேன். மேலும் எவர் என் உத்தரவிற்காக மதுபானம் அருந்தாமல் இருந்தாரோ அவரை என் அர்ஷுக்கு கீழே குர்ஸீ என்ற இடத்தில் இருக்கச்செய்து சொர்க்கலோகத்தின் பானங்களை புகட்டுவேன் என்று கூறியுள்ளான்.
ஆதார நூல் : ஜவாஜிர்
ஒரு அடியான் ஒரு தடவை முதன் முதலாக மதுபானம் அருந்துவானேயானால் அவனது உள்ளம் கருப்படைந்துவிடும். இரண்டாம் முறை குடிப்பானேயானால் மலக்குல் மௌத்து (அலை) அவர்கள் அவன் மீது வெறுப்படைவார்கள். மூன்றாம் முறை குடிப்பானேயானால் அவனை நாயகம் (ஸல்) வெறுக்கிறார்கள். நான்காம் முறை குடிப்பானேயானால் அவனுக்கு பாதுகாப்புக்காக சாட்டப்பட்டுள்ள மலக்குகள் அவனை வெறுக்கிறார்கள். ஐந்தாம் விடுத்தம் குடிப்பானேயானால் அவனை ஜிப்ராயில் (அலை) அவர்கள் வெறுக்கிறார்கள். ஆறாவது விடுத்தம் குடிப்பானேயானால் மீக்காயீல் (அலை) அவர்கள் வெறுக்கிறார்கள். ஏழாம் முறை குடிப்பானேயானால் அவனை இஸ்ராயீல் (அலை) அவர்கள், எட்டாம் முறை குடிப்பானேயானால் அவனை வானலோகம் வெறுக்கிறது. ஒன்பதாவது விடுத்தம் குடிப்பவர்களை வானலோகத்தில் உள்ளவர்களெல்லாம் வெறுக்கிறார்கள். பத்தாம் விடுத்தம் குடிப்பவர்களுக்கு சொர்கத்தின் கதவுகள் மூடப்படுகின்றன. பதினொன்றாம் முறை குடிப்பவர்களுக்கு நரக வாசல் திறந்து வைக்கப்படுகிறது..பனிரெண்டாம் முறை குடிப்பவர்களை அர்ஷை சுமந்திருப்பவர்கள் வெறுக்கிறார்கள். மதிமூன்றாம் விடுத்தம் குடிப்பவர்களை இறைவனும் வெறுக்கிறான். எவர்களை இறைவனும் அவனது ரசூல் மார்களும்,வாணவர்களும் அர்ஷும்,குர்ஸீயும், மலக்குகளும் வெறுக்கிறார்களோ அவர்கள் நரகத்தில் இருஇருப்பார்கள்.

роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:
роХро░ுрод்родுро░ைропிроЯுроХ