இஸ்லாம் காட்டிச்சென்ற வழியில் சில
யாராவது நித்திரையில் பயந்தால்
, أََََعُوْذُُُ ُ ِبِكَلِمَاتِ اللهِ التََّامََّاتِّ مِنْ غَضَبِِهِِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشََّيَاطِيْنِ وَعَنْ يَحْضُرُوْنَ என்று ஓதிக் கொண்டால் அவருக்கு எத்தீங்கும் ஏற்படமாட்டாதென்று நபீ (ஸல்) அவர்க்ள கூறினார்கள். (ஆதாரம் – அபூ தாஊத்) ♦ இந்த துஆவின் பொருள் ;- அல்லாஹ்வின் கோபத்தை விட்டும், அவனின் தண்டனையை விட்டும், அவனின் அடியார்களின் தீமையை விட்டும், ஷெய்தான்களின் ஊசலாட்டத்தையும், அவர்கள் என்னிடம் வருவதை விட்டும் அல்லாஹ்வின் சம்பூரணமான வார்த்தைகளைக் கொண்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன் ” என்பதாகும் 13)நபி (ஸல) அவர்கள் சொன்னார்கள் உங்களில் ஒருவர் தூக்கத்தினபோது திடுக்கமடைந்தால் அவர்أعُوذُ بِكَلِمَاتِ الله التَّامات مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وشَرِّ عِبَادِهِ، ومِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وأَنْ يَحْضُرُونِஎன்று சொல்லவும் நிச்சயமாக அது எந்த தீங்கையும் ஏற்படுத்தாது. அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தனது பிள்ளைகளில் வயது வந்தவர்களுக்கு இதை கற்றுக்கொடுத்தார்கள். சிறுவர்களுக்கு இதை எழுதி தொங்கவிட்டார்கள். (ஆதாரம் திர்மிதி - ஹதீஸ் இலக்கம் – (3662), ஆதாரம் -அபூதாவூத் - ஹதீஸ் இலக்கம் – (3893) அறிவிப்பு - அம்று இப்னு சுஐப் (ரழியல்லாஹு அன்ஹு) 14) அப்துல்லாஹ் இப்னு அம்று (றழி) அவர்கள் தங்களின் சிறிய மக்களுக்கும், பெரிய மக்களுக்கும் இந்த துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள். அதை ஒரு தோலில் எழுதி தங்களின் கழுத்திலும் கட்டிக் கொண்டார்கள். (ஆதாரம் – நஸயீ) 15)நபி ﷺ அவர்கள் என் வீட்டில் ஒரு சிறுமியைப் பார்த்தார்கள். அவளுடைய முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரை ஒன்று இருந்தது. நபி ﷺ அவர்கள், 'இவளுக்கு ஓதிப்பாருங்கள். ஏனெனில், இவள் மீது கண்ணேறுபட்டிருக்கிறது' என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸுபைதி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களிடமிருந்தும் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாக இதே ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆதாரம் ஸஹீஹூல் புஹாரீ, ஹதீஸ் இலக்கம் – (5739)அறிவிப்பு – உம்மு ஸலமா (ரழியல்லாஹு அன்ஹா) 16) உங்களின் பிள்ளைகளுக்கு “ அஸ்ஹாபுல் கஹ்ப் ” குகைவாசிகளின் பெயர்களைக் கற்றுக் கொடுங்கள். ஏனெனில் அவர்களின் பெயர்கள் ஒரு வீட்டின் வாயலில் எழுதப்பட்டால் அந்த வீடு தீயினால் பாதிக்கப்படாது. ஒரு பொருளில் எழுதினால் அது திருடப்படமாட்டாது. ஒரு வாகனத்தில் எழுதினால் அது விபத்துக்குள்ளாகாது. என்று ஞான மகான்கள் கூறியிருப்பதாக அஷ்ஷெய்கு அஹ்மத் ஸாவீ (றஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் – தப்ஸீர்ஸாவீ) 17)நபி (ஸல) அவர்கள் தாபித் இப்னு கைஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் நோயுற்று இருந்தபோது அவர்களிடம் சென்று «اكْشِفِ الْبَاسَ رَبَّ النَّاسِ மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்குவாயாக! என்று சொன்னார்கள். பின்னர் மண்ணை எடுத்து ஒரு பாத்திரத்தில் இட்டு நீரை அவர் மீது ஊற்றினார்கள்.ஆதாரம் – அபூதாவூத் ,ஹதீஸ் இலக்கம் – (3885) 18) நபீ (ஸல்) அவர்களின் ஸஹாபாக்களில் முப்பது பேர்கள் கொண்ட ஒரு கூட்டம் பிரயாணம் செய்து கொண்டிருந்த சமயம் அவர்களுக்கு ஓர் இடத்தில் தங்கிப் போக வேண்டிய தேவை ஏற்பட்டது. அவ்விடத்தில் ஓர் அரபிக் குலத்தினரிடம் தங்கியிருந்தார்கள் அவர்களிடம் விருந்து கேட்டபோது அவர்களுக்கு விருந்தளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். அப்போது அக்குலத்தாரின் தலைவனை தேள் கொட்டிவிட்டது. அவனுக்காக அவர்கள் எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தனர்; எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அப்போது அவர்களில் சிலர், 'இதோ! இங்கே வந்திருக்கக் கூடிய கூட்டத்தினரிடம் நீங்கள் சென்றால் அவர்களிடம் (இதற்கு) ஏதேனும் மருத்துவம் இருக்கலாம்!" என்று கூறினர். அவ்வாறே அவர்களும் நபித் தோழர்களிடம் வந்து 'கூட்டத்தினரே! எங்கள் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது! அவருக்காக அனைத்து முயற்சிகளையும் செய்தோம்; (எதுவுமே) அவருக்குப் பயன் அளிக்கவில்லை. உங்களில் எவரிடமாவது ஏதேனும் (மருந்து) இருக்கிறதா?' என்று கேட்டனர். அப்போது நபித்தோழர்களில் ஒருவர், 'ஆம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் ஓதிப் பார்க்கிறேன்; என்றாலும் அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உங்களிடம் விருந்து கேட்டு நீங்கள் விருந்து தராததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப் பார்க்க முடியாது!" என்றார். அவர்கள் சில ஆடுகள் தருவதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர். நபித்தோழர் ஒருவர், தேள் கொட்டப்பட்டவர் மீது (இலேசாகத் துப்பி) ஊதி, 'அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.." என்று ஓதலானார். அப்போது உடனே பாதிக்கப்பட்டவர், கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல் நடக்க ஆரம்பித்தார். வேதனையின் அறிகுறியே அவரிடம் தென்படவில்லை! பிறகு, அவர்கள் பேசிய கூலியை முழுமையாகக் கொடுத்தார்கள். 'இதைப் பங்கு வையுங்கள்!" என்று ஒருவர் கேட்டபோது, 'நபி ﷺ அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன கட்டளையிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவ்வாறு செய்யக்கூடாது!" என்று ஓதிப் பார்த்தவர் கூறினார். நபி ﷺ அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபி ﷺ அவர்கள் 'அது (அல்ஹம்து சூரா) ஓதிப் பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்?' என்று கேட்டுவிட்டு, 'நீங்கள் சரியானதையே செய்திருக்கிறீர்கள். அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கு வைத்து கொள்ளுங்கள்! உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்! என்று கூறிவிட்டுச் சிரித்தார்கள். (ஆதாரம் ஸஹீஹூல் புஹாரீ, ஹதீஸ் இலக்கம் – (2242) அறிவிப்பு – அபூ ஸயீத் (ரழியல்லாஹு அன்ஹு) ♦மேலே கண்ட நபீமொழி பல கருத்துக்களைத்தருகின்றது. அவற்றில் சிலதை மட்டும் இங்கு எழுதுகின்றேன். “ றுக்யத் ” என்றால் மந்திரம் என்றும், “ றாகீ ” என்றால் மந்திரிப்பவன் என்றும் பொருள் வரும். நபீ (ஸல்) அவர்கள் மந்திரம் சொல்லி விஷமிறக்கிய ஸஹாபீ ஸயீத் அவர்களைப் பார்த்து وَمَا يُدْرِيْكََ أنَّهَا رقْيَةٌ அது – (ஸூறதுல் பாதிஹா) மந்திரமென்று உனக்கு எவ்வாறு தெரியும் ? என்று கேட்டதிலிருந்து ஸூறதுல்பாதிஹஹ்க்கு மந்திரமென்று சொல்லலாமென்று தெளிவாகிவிட்டது. மந்திரம் சொன்ன ஸஹாபீ தான் செய்த வேலைக்கு முப்பது ஆடுகள் கேட்டதிலிருந்து மந்திரம் சொல்வதற்கு தொகை குறிப்பிட்டுக்கூட கூலி பேசலாம் என்பதும் தெளிவாகி விட்டது. இந்த நபீமொழி விஷக்கடிக்கு ஊதிப்பார்க்கவும், துப்பவும் முடியுமென்றால் விஷக்கடியல்லாத வேறு நோய்க்கு ஏன் ஊதிப் பார்க்கக் கூடாது ? ஏன் துப்பக் கூடாது ? விஷக்கடியோ, காய்ச்சல், வயிற்றுவலி, தலைவலி போன்ற நோயோ எதுவானாலும் அது மனிதனுக்கு வேதனையைத் தருகின்ற ஒன்றேயாகும். அதை நீக்கி வைப்பது ஆகுமென்பது மட்டுமன்றி ♣ இதுவரை நான் எழுதியுள்ள ஆதாரங்கள் மூலம் கண்திருஷ்டி உண்மை என்பதும், அதற்காக ஊதிப்பார்க்க, தண்ணீர் ஓத, தாயத்துக்கட்ட முடியும் என்பதும், முழுத்திருக்குர்ஆனைக் கொண்டும், குறிப்பாக விஷேடமான சில அத்தியாயங்கள் கொண்டும் மந்திரிக்க முடியும் என்பதும் தெளிவாகிவிட்டது. இவை ஆகுமான விடயம் என்பதற்கு இன்னும் பல பலமான ஆதாரங்களும், பகுத்தறிவு ரீதியான தத்துவங்களும்உள்ளன. “ தல்ஸமாத் ” வேலைக்கு எண்ணற்ற ஆதாரங்கள் திருக்குர்ஆனிலும், நபீமொழிகளிலும் தெளிவாக இருக்கும் போது வஹ்ஹாபிகள் இவை ஷிர்க் என்றும் ஹறாம் என்றும் கூச்சலிடுவது ஏனோ? ♦மேலே கூறப்பட்ட ஹதீஸ்களையும் இது போன்ற இங்கு குறிப்பிடப்படாத ஹதீஸ்களையும் ஆதாரமாகக் கொண்டு நோக்கும் போதுநோய்களுக்காக அல்குர்ஆனைக் கொண்டும் அல்லாஹ்வின் திருநாமங்கள் கொண்டும் ஓதி ஊதிப்பார்தல், தண்ணீர் ஓதுதல், தாயத்து கட்டுதல் என்பன இஸ்லாத்தில் ஆகுமாக்கப்பட்டவையாகும். ♦இவை ஷிர்க் ஆன காரியங்கள் அல்ல என்பதையும் நபி ﷺ அவர்கள் அல்குர்ஆனைக் கொண்டும் அல்லாஹ்வின் திருநாமங்கள் கொண்டும் வைத்தியம் செய்துள்ளார்கள் என்பதையும் ஷிர்க் (இணைவைத்தல்) சம்மந்தமான ஓதல்கள் மூலம் வைத்தியம் செய்வதை நபி ﷺ அவர்கள் தடுத்துள்ளார்கள் என்பதையும் தெளிவாக விளங்க முடிகின்றது.عن ان مسعود «إن الرقى والتمائم والتولة شركஓதிப்பார்தலும் தாயத்துகட்டுதலும் ஷிர்க் (இணை வைத்தல்) ஆகும் என்ற கருத்தைத் தரும் (அபூதாவூத் – 3883 ஹதீதும் இப்னு மாஜ்ஹ்- 3612) ஹதீதுகளும் இது போன்றவைகளும் ஜாஹிலிய்யா காலப்பகுதியில் காணப்பட்ட ஷிர்க் (இணைவைத்தல்) சம்பந்தமான தாயத்துகளை குறிப்பிடுகின்றன. மாறாக அல்குர்ஆனை கொண்டும் அல்லாஹ்வின் திருநாமங்களை கொண்டும் ஓதிப்பார்தலையும் தாயத்துகட்டுதலையும் ஷிர்க் என இங்கு குறிப்பிடப்படவில்லை.எனவே மார்க்கத்தை தெளிவாக விளங்கி நடப்போம்
��"மந்திரித்தலும் , தாயத்துக் கட்டுதலும், தண்ணீர் ஓதிக் கொடுத்தல் மார்க்கத்தில் உள்ளவையே?"��
மந்திரித்தலும் , தாயத்துக் கட்டுதலும் மார்க்கத்தில் உள்ளவையே யாருக்காவது நோய் ஏற்பட்டால், அல்லது கண் திருஷ்டி (கண்ணூறு) ஏற்பட்டால், அல்லது யாராவது ஷெய்த்தான், பேய், பிசாசு, ஜின் முதலானவற்றைக் கண்டோ அல்லது இனம் தெரியாத பயங்கர சத்தங்களைக் கேட்டோ பயந்தால் அதற்காக மந்திரித்தல், அல்லது ஊதிப் பார்த்தல், தண்ணீர் ஓதிக் கொடுத்தல், தாயத் – இஸ்ம் கட்டுதல் போன்றவை மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவையா? இல்லையா? என்ற விபரங்களை இத்தலைப்பில் எழுதுகின்றேன். மேற்கண்ட வேலைகள் செய்வதற்கு அறபு மொழியில் “ தல்ஸமாத் ” َطًْْلَََْسَمَاتْ எனப்படும். நான் இத்தலைப்பில் எழுதக் காரணம் வஹ்ஹாபிகளின் நடவடிக்கையே இதற்கு திருக்குர்ஆனிலும். திருநபியின் நிறைமொழியிலும் ஆதாரங்கள் உள்ளன. அவற்றில் சிலதை மட்டும் இங்கு எழுதுகின்றேன்.
1⃣ அல்குர்ஆனில் நாம் விசுவாசிகளுக்கு அருளையும் நோய் நிவாரணத்தையும் இறக்கிவைத்துள்ளோம்) என்று கூறியுள்ளான். (12:82)இது திருமறையில் நோய்களுக்கான மருந்துகள் உள்ளன என்பதை உணர்த்துகின்றது. இந்த வசனத்திற்கு விரிவுரை எழுதும் இமாம் பக்றுத்தீன் றாஸீ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் “அல்குர்ஆன் என்பது உடல் மற்றும் ஆன்மாவுடன் தொடர்புடைய நோய்களுக்கு மருந்தாகும். அதனை ஓதுவதன் மூலம் நோய்களை தடுக்க முடியும்” என்று கூறுகின்றார்கள் (தப்ஸீர் றாஸீ-பகுதி-21,பக்கம்24)
2⃣ அல்குர்ஆனின் வசனம் நபீ யஃகூப் (அலை) அவர்களுக்கு பன்னிரண்டு ஆண்மக்கள் இருந்தனர். அவர்கள் அனைவருமே அழகுமிக்கவர்கள். கடைசி மகன் நபீ யூஸுப் (அலை) அவர்கள் ஏனைய சகோதரர்களைவிட மிக அழகானவர்கள். இவர்கள் அனைவரும் ஒன்றாகச் செல்லும் போது பார்ப்பவர்கள் வியந்து விடுவார்கள். ஒருநாள் நபீ யஃகூப் (அலை) அவர்கள் தமது பன்னிரண்டு மக்களிடமும் பின்வருமாறு கூறினார்கள் நீங்கள் அனைவரும் ஒரே வாயலால் நுழையாமல் பல வாயல்களால் நுழையுங்கள். (அல்குர்ஆன் - 12:67) ஆரம்ப காலத்தில் “ மிஸ்ர் ” நாட்டில் நுழைவதற்கு நான்கு வார்கள் அல்லது வழிகள் இருந்தன. நபீ யஃகூப் (அலை) அவர்களின் மக்கள் மிஸ்ர் நாட்டுக்குச் சென்ற சமயம் மேற்கண்டவாறு நபீ யஃகூப் (அலை) அவர்கள் உபதேசித்து அனுப்பி வைத்தார்கள். தந்தை யஃகூப் (அலை) அவர்கள் இவ்வாறு சொல்லக் காரணம், கண்திருஷ்டி, உண்மையான விடயமாயிருப்பதால் தமது பிள்ளைகளுக்கு அது ஏற்பட்டுவிடும் என்பதை அவர்கள் பயந்ததேயாகும். இவ்வாறு மேற்கண்ட வசனத்திற்கு திருக்குர்ஆன் விரிவுரையாளர்களின் தலைவர் இப்னு அப்பாஸ் (றழி) அவர்களும் இமாம் முஜாஹித், இமாம் கதாதஹ் போன்ற ஏனைய விரிவுரையாளர்களும் கூறியுள்ளார்கள்.கண்திருஷ்டி உண்டு, அது உண்மை என்பதற்கும், அது ஏற்படும் வழியை தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும் என்பதற்கும், மேற்கண்ட மறை வசனம் மறுக்க முடியாத ஆதாரமாகும். கண்திருஷ்டி உண்டு என்பதை உறுதி செய்யக்கூடிய ஆதாரங்களிற் சிலதை இங்கு தருகின்றேன்.
3⃣ நாங்கள் ஜாஹிலிய்யஹ் காலப்பகுதியில் ஓதிப்பார்துக்கொண்டிருந்தோம். இது பற்றி நபி ﷺ அவர்களிடம் கேட்டோம். அதற்கவர்கள் என்னிம் உங்களின் மந்திரத்தை காட்டுங்கள். ஷிர்க் (இணைவைத்தல்) இல்லாத மந்திரத்தில் பிரச்சினை இல்லை என்று கூறினார்கள்.ஆதாரம் – முஸ்லிம், ஹதீஸ் இலக்கம் – 5686அறிவிப்பு – அவ்ப் இப்னு மாலிக் அல் அஷ்ஜஈ (ரழியல்லாஹு அன்ஹு)
4⃣ ஸஹ்ல் இப்னு ஹனீப் எனும் ஸஹாபி மிக அழகானவர்கள். ஒரு நாள் அவர் குளித்துக் கொண்டிருந்த சமயம் ஆமிர் இப்னு றபீஆஹ் என்ற ஸஹாபீ அவரின் உடலைக்கண்டு வியந்து இது என்னே உடல் என்று கூறினார். அக்கணமே குளித்துக் கொண்டிருந்த ஸஹாபீ மயங்கிக் கீழே விழுந்தார். நபீ (ஸல்) அவர்களிடம் இச்செய்தி சொல்லப்பட்ட பொழுது நபீ (ஸல்) அவர்கள் அவரின் விடயத்தில் யாரைச் சந்தேகிக்கின்றீர்கள். என்று சொன்னவர்களிடம் கேட்டார்கள். ஆமிர் இப்னு றபீஆஹ்வைச் சந்தேகிக்கின்றோம் என்று கூறினார்கள். நபீ (ஸல்) அவர்கள் அந்த ஸஹாபியை அழைத்து சற்றுக் கோபப்பட்டவர்களாக உங்களில் ஒருவன் தனது சகோதரனைக் கொலை செய்வதேன் ? என்று கேட்டுவிட்டு அவருக்காக நீ குளிக்க வேண்டும் என்று அவரைப் பணித்தார்கள். அவர் ஒரு பாத்திரத்தில் தனது முகம், கை, முழங்கால், கால் ஓரம், காலின் உட்பகுதி போன்றவற்றைக் கழுவிக் கொடுத்தார். அந்த நீர் மயக்கத்தில் இருந்த ஸஹாபியின் மீது தெளிக்கப்பட்டது. அவர் மயக்கம் நீங்கி எழுந்து சென்றார். (ஆதாரம் – ஷர்ஹுஸ் ஸுன்னத் முவத்தா – மிஷ்காத்)
5⃣ நபிﷺ அவர்கள் ஹஸன் (ரழியல்லாஹு அன்ஹு), (ஹூஸைன் (ரழியல்லாஹு அன்ஹு) ஆகியாருக்கு பாதுகாப்புத் தேடுவார்கள். உங்களின் தந்தை (இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்), இஸ்ஹாக் (அலைஹிஸ்ஸலாம்) ஆகியோருக்கு பின்வரும் வசனம் மூலம் பாதுகாப்புத்தேடுவார்கள் أعوذُ بكلماتِ الله التامَّة، من كلِّ شيطانٍ وهامَّة، ومن كل عين لامَّةٍ (ஆதாரம் ஸஹீஹூல் புஹாரீ-3306)அறிவிப்பு – இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு)
6⃣ உம்மு ஸல்மஹ் (றழி) அவர்களின் வீட்டில் நபீ (ஸல்) அவர்கள் ஓர் அடிமைப் பெண்ணைக் கண்டார்கள். அவளின் முகத்தில் மஞ்சள் நிறம் காணப்பட்டது. நபீ (ஸல்) அவர்கள் இவளுக்கு கண்திருஷ்டி உண்டு. ஆகையால் இவளுக்கு மந்திரம் சொல்லுங்கள் என்று கூறினார்கள். (ஆதாரம் – மிஷ்காத்)
7⃣ நபி ﷺ அவர்கள் தங்களின் மரண வருத்தத்தின்போது முஅவ்விதாத் (குல் அஊது பிறப்பில் பலக், குல் அஊது பிறப்பின் நாஸ்) ஆகிய சூராக்களைக் கொண்டு தமக்கு தாமாகவே ஊதினார்கள். அவர்களுக்கு நோய் கடுமையான போது நான் அவைகளைக் கொண்டு ஊதினேன். அவர்களின் உடலை பரக்கத்துக்காக அவர்களின் கையினால் தடவினேன். (ஆதாரம் ஸஹீஹூல் புஹாரீ-5735)அறிவிப்பு – ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)
8⃣ கண்திருஷ்டிக்காகவும்,விஷக்கடிக்காகவும், பொக்களிப்பானுக்காகவும் மந்திரிக்க வேண்டும் என்று நபீ (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் – முஸ்லிம்) ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நபி ﷺ அவர்களிடம் வந்து முஹம்மதே! தங்களுக்கு நோய் ஏற்பட்டுவிட்டதா என்று கேட்டார்கள். அதற்கு நபி ﷺ அவர்கள் ஆம் என்றார்கள். அப்போது ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் பின்வருமாறு ஓதினார்கள்: بِاسْمِ اللّهِ أَرْقِيكَ . مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ . مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ اللّهُ يَشْفِيكَ. بِاسْمِ اللّهِ أَرْقِيكَ (ஆதாரம் முஸ்லிம் ஹதீஸ் இலக்கம் – 5654, அறிவிப்பு – அபூஸஈத் (ரழியல்லாஹு அன்ஹு)
9⃣ நபீ (ஸல்) அவர்கள் தங்களின் மரண வருத்தத்தின் போது “ முஅவ்விததைன் ” எனப்படும் குல் அஊது பிறப்பில் பலக், குல் அஊது பிறப்பின்னாஸ் என்ற இரு அத்தியாயங்களையும் ஓதி தங்களின் கையில் ஊதி உடலெல்லாம் தடவிக் கொள்வார்கள். நபீ (ஸல்) அவர்கள் மந்திரம் சொல்வதைத் தடை செய்தார்கள். அம்றுப்னு ஹம்ஸ் என்பவரின் சந்ததிகள் நபீ (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் றஸுலே ! எங்களிடம் ஒரு மந்திரம் இருந்தது. தேள் போன்ற விஷ ஜந்துக்கள் கடித்தால் நாங்கள் அது கொண்டு மந்திரிப்போம். எனினும் நாயகமே ! மந்திரிக்க வேண்டாம் என்று நீங்கள் தடை செய்துள்ளீர்கள். நாங்கள் என்ன செய்வது ? என்று கேட்டார்கள். அதற்கு நபீ (ஸல்) அவர்கள் நீங்கள் சொல்லும் மந்திரத்தைச் சொல்லிக் காட்டுங்கள் என்றார்கள். அவர்கள் சொல்லிக் காட்டினார்கள். அதைக் கேட்ட நபீ (ஸல்) அவர்கள் அதில் குற்றமில்லை என்று கூறிவிட்டு உங்களில் யாராவது தனது சகோதரனுக்கு நன்மை செய்ய நாடினால் அவர் செய்யட்டும் என்று கூறினார்கள். (ஆதாரம் – முஸ்லிம்)
10)நானும் சாபித் இப்னு அஸ்லம் அல்புனானீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களும் அனஸ் இப்னு மாலிக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் சென்றோம். தாபித் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் 'அபூ ஹம்ஸாவே! நான் நோய் வாய்ப்பட்டுள்ளேன்' என்று சொல்ல, அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு), 'இறைத்தூதர் ﷺ அவர்கள் எதனால் ஓதிப்பார்த்தார்களோ அதனால் உங்களுக்கும் நான் ஓதிப் பார்க்கட்டுமா?' என்று கேட்டார்கள். தாபித் (ரழியல்லாஹு அன்ஹு), 'சரி (அவ்வாறே ஓதிப்பாருங்கள்)' என்று சொல்ல, அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு), 'அல்லாஹும்ம றப்பன்னாஸ்! முத்ஹிபல் பஃஸி, இஷ்பி அன்த்தஷ் ஷாபீ, லா ஷாபிய இல்லா அன்த்த, ஷிபா அன்லா யுகாதிரு சகமன்' என்று கூறி ஓதிப் பார்த்தார்கள். (பொருள்: இறைவா! மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்குபவனே! குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன்னைத் தவிர குணமளிப்பவர் வேறு எவருமில்லை. அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக. (ஆதாரம் – ஸஹீஹூல் புஹாரீ-5742)அறிவிப்பு – அப்துல் அஸீஸ் இப்னு ஸுஹைப் (ரழியல்லாஹு அன்ஹு)
11)ஹாரிஜா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் சாச்சா அவர்கள் ஒரு கூட்டத்தின் பக்கம் சென்றபோது அந்த கூட்டத்தவர்கள் அவரிடம் திடுக்கமடைந்த ஒரு மனிதனைக் கொண்டு வந்து ஒதிப் பார்க்குமாறு கேட்டுக்கொண்டனர். அந்த மனிதனுக்கு அவர் மூன்று நாட்கள் சூறதுல் பாத்திஹாவைக் கொண்டு காலையும் மாலையும் ஒதிப்பார்த்தார். ஒதி முடிந்ததும் உமிழ் நீரை திரட்டி துப்பினார். அப்போது அந்த மனிதர் கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல் எழுந்தார். அந்த கூட்டத்தினர் அவருக்கு அன்பளிப்பு வழங்கினர். அதை நபி ﷺ அவர்களிடம் வந்து கூறிய போது, "என் ஆயுளின் மீது சத்தியமாக நீ அதை சாப்பிடு. எத்தனையோ பேர் அசத்தியமான ஓதல்கொண்டு சாப்பிடுகின்றனர். நீ சத்தியமான ஓதல்கொண்டு சாப்பிடுகிறாய்" என்று கூறினார்கள்.ஆதாரம் – அபூதாவூத், ஹதீஸ் இலக்கம் – (3421)அறிவிப்பு - ஹாரிஜா இப்னு ஸல்த் (ரழியல்லாஹு அன்ஹு)
12)“ அய்யாமுல் ஜாஹிலிய்யஹ் ” காலத்தில் நாங்கள் மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தோம். அது பற்றி உங்களின் அபிப்பிராயம் என்ன நாயகமே என்று சிலர் கேட்டார்கள். அதற்கு நபீ (ஸல்) அவர்கள் உங்களின் மந்திரத்தைச் சொல்லிக் காட்டுங்கள் என்றார்கள். அவர்கள் சொல்லிக் காட்டியவுடன் சரி நீங்கள் செய்யலாம் என்று கூறிய நபீ (ஸல்) அவர்கள் மந்திரத்தில் “ ஷிர்க் ” ஆன விடயம் ஒன்றும் இல்லா விட்டால் மந்திரம் சொல்வதில் குற்றமில்லை என்று சொன்னார்கள்.