நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

புதன், ஜூலை 27, 2016

நபி வழித் திருமணம்.

நபி வழித் திருமணம்.
قوله تعالي:  فانكحوا ما طاب لكم من النسآء مثني وثلاث ورباع....
وآتيتم احديهن قنطارت فلا تأخذوا منه شيأ...(سورة النساء)
قوله عليه الصلوة والسلام:  النكاح  سنتي فمن رغب عن سنتي فليس مني...(ابن ماجه)
திருமணம் செய்வது நபி வழி.
وعن أبي أيوب مرفوعا : { أربع من سنن المرسلين } ، فذكر منها النكاح ، رواه الترمذي
நான்கு விஷயங்கள் நபிமார்களின் வழிமுறையாகும். என்று அதில் திருமணத்தையும் நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.( நூல் திர்மிதி)
وعن الحسن ، عن سمرة : { أن النبي صلى الله عليه وسلم نهى عن التبتل }. رواه الترمذي ،
நபி ஸல் அவர்கள் துறவறத்தை தடை செய்தார்கள். (நூல் திர்மிதி)
وعن أنس رفعه : { من رزقه الله امرأة صالحة فقد أعانه على شطر دينه ، فليتق الله في الشطر الثاني }. رواه الحاكم
யாருக்கு அல்லாஹ் ஸாலிஹான மனைவியை அமைத்துத் தருகிறானோ
அவருடைய மார்க்கத்தில் பாதியை பரிபூரணமாக்க உதவி செய்கிறான் மீதிப் பாதியில் அவர் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். (நூல் ஹாகிம்)
திருமணம் என்பது இஸ்லாமின் அடையாளச் சின்னம் அதைத் தவிர்ப்பதை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் விரும்பவில்லை. எனவே தான் " திருமணம் எனது வழிமுறை யார் அதைப் புறக்கணிப்பாரோ அவர் என்னைச் சார்ந்தவல்ல" என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
இஸ்லாத்தில் திருமணம் என்பது மிக எளிமையானது.
" إن أعظم النكاح بركة أيسره مؤونة" (رواه أحمد والحاكم وقال : صحيح على شرط مسلم)
" அபிவிருத்தியால் நிரம்பிய திருமணம் என்பது செலவுகள் குறைந்த திருமணமாகும்"( நூல்: அஹ்மத்) 
இஸ்லாமிய திருமணம் என்பது பத்திரிக்கை, பந்தல், ஊர் விருந்து, ஊர்வலம்' போன்ற ஆர்ப்பாட்டம்' ஆடம்பரம், ஏதுமால்லாத அமைதியான எளிமையான நிகழ்வாகும்.
இன்னும் சொல்வதானால் இஸ்லாமிய பார்வையில் திருமணம் ஒரு வணக்கமாகும்.
இஸ்லாமிய திருமணத்திற்கு தேவை  1.
மணமக்களின் பூரண சம்மதம்.
2. இரண்டு சாட்சிகள்.
3. மஹர் தொகை.
4. இறைக் கட்டளையை நினைவூட்டும்
குத்பா" எனும் மணமக்களுக்கான உபதேசம்.
இவ்வளவு தான். இங்கு பந்தல்களும், பந்திகளும் தேவையில்லை.
ஆனால் இன்றைய நிலை திருமணம் என்ற பெயரில் எவ்வளவு மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் அரங்கேறுகின்றன.
இன்று தனது பொருளாதார பலத்தை நிரூபிக்கவும், தனது பதவி அதிகாரத்தை வெளிப்படுத்துவும்,
தனது செல்வாக்கை பிரபல்யப் படுத்தபடுத்தவும்,  பிறருக்காக பகட்டுக்காக என்று திருமணத்தின் நோக்கங்கள் தடம்புரண்டு போய் விட்டது.
திருமணத்தில் நமது நிலையை நபி ஸல் அவர்களின் இந்த ஹதீஸ் தெளிவு படுத்துகிறது.
تنكح المرأة لاربع لمالها ولحسبها ولجمالها ولدينها  فاظفر بذات الدين تربت يداك (متفق عليه)
பொருளாதாரம், அழகு, மார்க்கப் பற்று, குடும்பப் பாரம்பரியம், உள்ளிட்ட நான்கு காரணங்களுக்காக ஒரு பெண் திருமணம் முடிக்கப்படுகிறாள். மார்க்கப் பற்றுள்ள பெண்ணை தேர்ந்தெடுத்து நீ வெற்றியடைந்து கொள் உன் இரு கரங்களும் மண்ணாகட்டும்"(தூற்றும் நோக்கில்லாமல் சொல்லப்படும் அரபு வழக்கில் உள்ள வாழ்த்துச் சொல் "تربت يداك" என்பது) என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் உபதேசித்தார்கள்.
ஆனால் இன்று பெரும் பாலும் இந்த உபதேசம் புறக்கணிக்கப் பட்டு வருகிறது.  அதற்கான விளைவையும் நாம் அனுபவித்து வருகின்றோம்.
பருவ வயதை அடைந்த பெண்களுக்கு
உடனடி திருமண ஏற்பாடு.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பருவ வயதை எட்டிய பெண்களுக்கு தகுந்த வரண் அமைந்து விட்டால் திருமணம் செய்ய தாமதிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்கள்.
روى الترمذي (1084) ، وابن ماجة (1967) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ( إِذَا خَطَبَ إِلَيْكُمْ مَنْ تَرْضَوْنَ دِينَهُ وَخُلُقَهُ فَزَوِّجُوهُ، إِلَّا تَفْعَلُوا تَكُنْ فِتْنَةٌ فِي الأَرْضِ ، وَفَسَادٌ عَرِيضٌ ) وحسنه الألباني في "صحيح الترمذي" .
قال القاري رحمه الله :
" (إِذَا خَطَبَ إِلَيْكُمْ) أَيْ: طَلَبَ مِنْكُمْ أَنْ تُزَوِّجُوهُ امْرَأَةً مِنْ أَوْلَادِكُمْ وَأَقَارِبِكُمْ (مَنْ تَرْضَوْنَ) أَيْ : تَسْتَحْسِنُونَ ( دِينَهُ ) أَيْ : دِيَانَتُهُ ( وَخُلُقَهُ) أَيْ: مُعَاشَرَتُهُ (فَزَوِّجُوهُ) أَيْ: إِيَّاهَا ( إِنْ لَا تَفْعَلُوهُ ) أَيْ: لَا تُزَوِّجُوهُ (تَكُنْ) أَيْ: تَقَعُ (فِتْنَةٌ فِي الْأَرْضِ وَفَسَادٌ عَرِيضٌ) أَيْ: ذُو عَرْضٍ أَيْ كَثِيرٍ، لِأَنَّكُمْ إِنْ لَمْ تُزَوِّجُوهَا إِلَّا مِنْ ذِي مَالٍ أَوْ جَاهٍ ، رُبَّمَا يَبْقَى أَكْثَرُ نِسَائِكُمْ بِلَا أَزْوَاجٍ ، وَأَكْثَرُ رِجَالِكُمْ بِلَا نِسَاءٍ ، فَيَكْثُرُ الِافْتِتَانُ بِالزِّنَا، وَرُبَّمَا يَلْحَقُ الْأَوْلِيَاءَ عَارٌ ، فَتَهِيجُ الْفِتَنُ وَالْفَسَادُ ، وَيَتَرَتَّبُ عَلَيْهِ قَطْعُ النَّسَبِ ، وَقِلَّةُ الصَّلَاحِ وَالْعِفَّةِ .
நீங்கள் யாருடைய மார்க்கப் பற்றையும், குணநலன்களையும், பொருந்திக் கொள்வீர்களோ அப்படிப்பட்ட மனிதர் உங்கள் குடும்பப் பெண்களை மணமுடித்து வைக்கும் படி கேட்டால் அவருக்கு திருமணம் முடித்துக் கொடுங்கள். இல்லையானால் பூமியில் பெரும் குழப்பங்களூம், பிரச்சனைகளும் ஏற்படும்" என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹூரைரா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல் திர்மிதீ)
وقال رجل للحسن: " قد خطب ابنتي جماعة فمن أُزَوِّجُهَا؟ قَالَ: مِمَّنْ يَتَّقِي اللَّهَ ، فَإِنْ أَحَبَّهَا أكرمها، وإن أبغضها لم يظلمها " انتهى من "إحياء علوم الدين" (2/ 41) .
அவ்வாறு நாம் தகுதியான வரண் அமைந்த பிறகும் தாமதிப்பது உணர்வுகளை தவறாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை
ஏற்படுத்தி விடும்.
அல்லாமா ஹஸன் பஸரீ ரஹ் அவர்களிடம் ஒரு மனிதர் என் மகளை பலர் பெண் கேட்கிறார்கள் நான் யாருக்கு திருமணம் முடித்துக் கொடுக்க என கேட்க ஹஸன் பஸரீ ரஹ் அவர்கள் யார் அல்லாஹ்வை அஞ்சி நடப்பாரோ அவருக்கு திருமணம் முடித்துத் தாருங்கள் ஏனென்றால் அவர் அந்தப் பெண்ணை விரும்பினால் அவளை சங்கைப் படுத்தி வைத்துக் கொள்வார்,
விரும்பவில்லையானாலும் அநீதி இழைக்க மாட்டார் எனக் கூறினார்கள்.
605 - عن علي رضي الله عنه ، أن النبي صلى الله عليه وسلم قال : " يا علي ! ثلاث لا تؤخرها : الصلاة إذا أتت ، والجنازة إذا حضرت ، والأيم إذا وجدت لها كفؤا . (رواه الترمذي)
மூன்று காரியங்கள் பிற்படுத்தப் படாது
என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அலீ ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
1.தொழுகை அதற்கான நேரம் வந்து விட்டால். (தொழுவதற்கும்)
2.ஜனாஸா ஆஜராகி விட்டால்.  (தொழுது அடக்கம் செய்யவும்)
3.பருவ வயதை அடைந்த பெண்ணுக்குத் தகுந்த வரண் கிடைத்து விட்டால். (திருமணம் முடித்து வைப்பதற்கும்)  ( நூல் திர்மிதீ)
திருமணத்தினால் (நபி வழி) ஏற்படும்
பயன்கள்.
1. பொருளாதாரப் பயன்.
   : { تزوجوا النساء فإنهن يأتينكم بالمال }. رواه الحاكم موصولا من طريق سالم بن جنادة ، وقال : إنه تفرد بوصله ، وأخرجه أبو داود في المراسيل في ذكر عائشة ، ورجحه الدارقطني على الموصول .
                           
"பெண்களை திருமணம் முடித்துக் கொள்ளுங்கள் அவர்கள் பொருளாதாரத்தை கொணருகிறார்கள்"
(நூல்: ஹாகிம்)

2. நல்லொழுக்கப் பயன்.
وعن أبي هريرة رفعه : { ثلاثة حق على الله إعانتهم : المجاهد في سبيل الله ، والناكح يريد أن يستعف ، والمكاتب يريد الأداء }. رواه النسائي ، والترمذي ، [ ص: 251 ] والدارقطني ، وصححه الحاكم
மூன்று நபர்களுக்கு உதவி செய்வது அல்லாஹ்விற்கு கட்டாயமாகும் அதில் பத்தினித்தனத்தை நாடி திருமணம் செய்பவரும் ஒருவர்.
3. மார்க்கத்தில் மேன்மை அடைவது.
وعن أنس رفعه : { من رزقه الله امرأة صالحة فقد أعانه على شطر دينه ، فليتق الله في الشطر الثاني }. رواه الحاكم
நல்லொழுக்கமுள்ள மனைவியை யார் அடைந்து கொள்கிறாரோ அவர் மார்க்கத்தில் பாதியை பூர்த்தி செய்து விட்டார்.
4. நல்ல துணை.
وعن ابن عباس رفعه : { ألا أخبركم بخير ما يكنز : المرأة الصالحة إذا نظر إليها سرته ، وإذا غاب عنها حفظته ، وإذا أمرها أطاعته }رواه أبو داود ، والحاكم
"உங்களுக்கு சிறந்த பொக்கிஷத்தை நான் அறிவிக்கட்டுமா? நல்லொழுக்கமுள்ள மனைவி அவளைப் பார்த்தால் அவனுக்கு சந்தோஷமளிப்பாள்.
அவளை விட்டு வெளியே சென்று விட்டால் அவனுக்காக (கற்பையும், பிள்ளைகளையும், பொருட்களையும்)
பாதுகாத்துக் கொள்வாள்.
எதையாவது செய்யச் சொன்னால் அவனுக்கு வழிப்படுவாள்" என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல்: அபூ தாவூத்)
5. இணை பிரியா உறவு.
وعن ابن عباس رفعه : { لم ير للمتحابين مثل التزويج }. رواه ابن ماجه ، والحاكم ،
"திருமணத்தைப் போல பிரியத்தை ஏற்படுத்தும் உறவை அவர்கள் காணமுடியாது" நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.( நூல்: ஹாகிம்)
6. ஈருலகிலும் மக்கட்பேறு.
عن أبي أمامة أخرجه البيهقي بلفظ : { تزوجوا فإني مكاثر بكم الأمم ، ولا تكونوا كرهبانية النصارى }. وفيه محمد بن ثابت وهو ضعيف . وعن أنس صححه ابن حبان بلفظ         : { تزوجوا الولود الودود ، فإني مكاثر بكم الأنبياء يوم القيامة }
"திருமணம் முடித்துக் கொள்ளுங்கள் நான் மற்ற நபிமார்களின் சமூக மக்களுக்கு முன்னால் உங்களை வைத்து பெருமை பேசுவேன்" என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியதாக அபூஉமாமா ரலி அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்: பைஹகீ)
7. இவ்வுலக இன்பங்களில் மிகச்சிறந்தது.
وعن عمرو بن العاص مرفوعا : { الدنيا متاع وخير متاعها المرأة الصالحة }. رواه مسلم
"இவ்வுலக வாழ்க்கை ஓர் அற்ப சுகம் அந்த அற்ப சுகங்களில் மிகச்சிறந்தது நல்லொழுக்கமுள்ள பெண்ணாகும்" என நபி ஸல் அவர்கள் கூறியதாக அம்ர் இப்னு ஆஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம்)
இன்னும் திருமணத்தின் மூலம் விளையும் பயன்களை நாம் நிறைய கூறலாம்.....
இரத்தினச் சுருக்கமாக சொல்வதானால்
திருமணம் ஓர் நபி வழி. மேலும் நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
وعنه رفعه : { لا صرورة ، في الإسلام }. رواه أحمد ، وأبو داود ، والحاكم
"இஸ்லாத்தில் துறவறம் என்பது கிடையாது" (நூல்: அஹ்மத்)
திருமணமத்தில் தவிர்க்கப் பட வேண்டிய விஷயங்கள்.
நிறைய சீர்திருத்தங்களும், மாற்றங்களும், திருமணத்தில் செய்ய வேண்டியதிருந்தாலூம் ஒரு சில மிக முக்கியமான விஷயங்களை கவனிப்பது திருமணத்தின்  உண்மையான நோக்கங்களை நாம் அடைய வழி வகை செய்யும்.
முதலாவது : ஆண் தனது ஆண்மையை நிரூபிப்பது. அதாவது வரதட்சணை பெறாமல் மஹர் கொடுத்து திருமணம் செய்வது. ஏனெனில் குர்ஆனில் இறைவன்
" الرجال قوامون علي النساء بما فضل الله بعضهم علي بعض وبما انفقوا من اموالهم......
" ஆண்கள் பெண்களின் மீது ஆதிக்கம் செலுத்துபவர்கள் அல்லாஹ் சிலர்களை விட சிலர்களுக்கு உயர்வை வழங்கியிருக்கிறான். மேலும் ஆண்கள் பெண்களுக்கு தங்களது பொருட்களிலிருந்து செலவு செய்கிறார்கள்."
" உங்களில் ஒருவர் அந்தப் பெண்களுக்கு ஒரு பொருட் குவியலையே  (மஹராக) தந்திருந்தாலும் அதிலிருந்து எதையும் திரும்பப் பெறாதீர்கள்"
என்று கூறியிருப்பது சம்பாதித்து கொடுப்பதும், மஹர் கொடுத்து (வரதட்சணை பெறாமல்) திருமணம் முடிப்பதுமே ஆண்மைக்கான இலக்கணமாகத் தெரிகிறது.
இரண்டாவது: சமூகத்தில் திருமணம் இலகுவாகுவது. அதாவது இதற்கு பல பரிமாணங்கள் உண்டு.
1. செலவு குறைவாக இருப்பது.
2. சக்தி படைத்த ஆண்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்ய அனுமதிப்பது.
இந்த விஷயத்தில் நமது சமூகம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில் திருமணம் சிரமமானால் விபச்சாரம் சுலபமாகி விடும், விபச்சாரம் பெருகி விட்டால் கொலை அதிகமாகும், கொலை அதிகமானால் குழப்பங்களூம் பிரச்சினைகளும், நம்மை ஆட்கொள்ளும், இது உலக அழிவிற்கு இட்டுச் செல்லும்.
முடிவுரை :
நிறைய செலவழித்து திருமணம் செய்யும் பழக்கம் மக்களிடம் பரவுவதால் வசதியற்ற குமருகள் தேங்கியும், ஏங்கியும் போகிறார்கள்.
"நீங்கள் விரும்பும் பெண்களில் இரண்டையோ, மூன்றையோ, நான்கையோ திருமணம் முடித்துக் கொள்ளுங்கள்"
என்ற இறைவனின் தெளிவான கட்டளையை மீறி ஒருவனுக்கு ஒருத்தி என்ற நடைமுறைக்கு ஒத்துவராத, என் புருஷன் எனக்கு மட்டும் தான்,  போன்ற கோஷங்கள் நிறைய கணவன் மார்களை விபச்சாரர்களாக  மாற்றி விட்டது. எனவே இறைக் கட்டளைக்கு பயந்து நாம் நம்மை சீர்திருத்திக் கொண்டால் திருமணத்தின் மூலம் விளையும் எல்லா நன்மைகளையும், பயன்களையும் நாம் முழுமையாக அடைந்து கொள்ளலாம் வல்ல ரஹ்மான் நல்லுதவி புரிவானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
http://vellimedaiplus.blogspot.com/2019/10/2_24.html?m=1







கருத்துகள் இல்லை:

பிரபல்யமான பதிவுகள்