роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

ро╡ெро│்ро│ி, роЬройро╡ро░ி 13, 2017

роЕроГро▓ா ро╣ро┤ро░род்,рокாроХ்роХிропாрод் роородро░ро╕ா,

மாணவர்களால் அஃலா ஹஜ்ரத் பெரியஹஜ்ரத் என்று அழைக்கப்பட்டார்கள்.இப்போது தென்னிந்தியாவைப்பொருத்த வரை அஃலா ஹஜ்ரத் என்றபெயரே அன்னாருக்கு அடையாளப்பெயராக நிலைத்து விட்டது.

அன்னாரின் மகத்தான வாழ்க்கையைஎப்படி புரிந்து கொள்வது என்றுகேட்டீர்கள் என்றால் ஒரு செய்தியைசொன்னால் போதும்.

·         தமிழகத்தில் இன்றைய சூழ்நிலையில்ஏராளமான பள்ளிவாசல்கள்இருக்கிறதென்றால் அதற்கு காரணம்அண்ணல் அஃலா ஹஜ்ரத்

·         ஏராளமான மதரஸாக்கள்இருக்கிறதென்றால் அதற்கு காரணம்அண்ணல் அஃலா ஹஜ்ரத்.

·         திருக்குர் ஆனும் ஹதீஸ் நூல்களும்தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதுஎன்றால் அதற்கு காரத்ணம் அண்ணல்அஃலா ஹஜ்ரத்.

·         மார்க்கச் சொற்பொழிவாளர்களாகஇன்று நாட்டில் ஏராளமானோர்இருக்கீறார்கள் என்றால் அதற்குகாரணம் அண்ணல் அஃலா ஹஜ்ரத் .

ஒரு தனிநபர் தென்னிந்தியாவில்ஒட்டுமொத்த மார்க்கத்தின் வளர்ச்சிக்குகாரணமாகி தீனோடு சம்பந்தப் பட்டஅனைத்து துறைகளிலும் தனதுசமூகத்தை உருவாக்கிச்சென்றிருக்கீறார் என்றால் அவரதுமகத்துவம் எத்தகையது என்பதைஎண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அன்றைய வட ஆற்காடு மாவட்டம்வேலூரில் அப்துல் காதிர் பாத்திமாதம்பதியரின் மகனாக ஹிஜ்ரி 1246ஜமாதுல் அவ்வல் பிறை 1 – கீபி 1830 ல்பிறந்தார்கள், அவரது தந்தையின்பூர்வீகம் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டிக்குஅருகில் இருக்கும் ஆத்தூர் ஆகும்

நான்கு வயதில் தந்தையையும் 11 வதுவயதில் தாயாரையும் இழந்தார்கள்.

அவரது தாயார் உயிருடன் இருக்கிறபோதே தன் மகனுக்கு நல்லஆசிரியர்களிடம் தொடர்பைஏற்படுத்தியிருந்தார்கள், அதனால் மிகச்சிற்பான மனிதர்களிடம் கல்வி கற்கிறவாய்ப்பு அன்னாருக்கு கிடைத்தது.நாட்டின் பல பாகங்களிலும் சென்றும்மக்காவிற்கு சென்றும் கல்விகற்றார்கள்..

Ø  ஹக்கீம் ஜைனுல் ஆபிதீன்,

Ø  முப்தீ மெளலானா குலாம் காதிர்,

Ø  ரஹ்மத்துல்லாஹ் கீரானவி, 

Ø  செய்யத் ஹுசைன் முஹத்திஸ்பெஷாவரீ.,

Ø  சையத் ஷாஹ் அப்துல் லத்தீப் சாஹிப்

போன்ற அன்றைய தலை சிறந்தஅறிஞர்களிடம் கல்வி பயின்றார்கள்.ரஹ்மத்துல்லாஹ் கீரானவியுடன் அஃலாஹஜ்ரத்தின் தொடர்பு நெருக்கமாகஇருந்தது.

அப்போது வேலூர், ஹைதராபாத் நிஜாம்அப்ஜலுத் தவ்லாவின் கட்டுப்பாட்டில்இருந்தது அதனால் மார்க்க கல்விபடித்தவர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்புக்கள் கிடைத்தன. அஃலாஹஜ்ரத் அவர்ஜள் பல இடங்களிலும்சென்று கல்வி படித்து திரும்பியவுடன்ஹைதரபாத் நிஜாமின் சார்பில் டெபுடிகலக்டருக்கான பதவி கிடைத்தது.

ஆனால் மார்க்க கல்வியை பரப்புவதின்மீதான ஆர்வம் அஃலா ஹஜ்ரத்தின்உள்ளத்தில் சுடர்விட்டுக்கொண்டிருந்தது. அதனால் அந்தப்பொறுப்பை ஏற்க வில்லை.

அன்றைய காலச் சூழலில் மக்கள்மார்க்க கல்வியில் மிகவும் பின்தங்கியிருந்தது ஹஜ்ரத்திற்கு பெரும்கவலை அளித்தது. தமிழகத்தின் பலஇடங்களிலும் பள்ளிவாசல்களில்ஷியாக்களின் கலாச்சார தாக்கத்தால்முஹர்ரம் 10 நாட்களில் மட்டுமே மக்கள்கூடினர். பளிளிவாசல் இயங்கியது. ஒருமுறை நாகூருக்கு அருகில் உள்ளதிட்டச்சேரி கிராமத்திற்கு சென்ற போதுஅங்கு மக்கள் முஹர்ரம் 10 நாளில் பஞ்சாஎடுத்து ஊர்வலம் போவதை அறிந்துமிகவும் மனம் வருந்தி அந்த மக்களுக்குமார்க்கத்தை எடுத்துச் சொல்லிதிருத்தினார். அப்போது அங்கிருந்த கனிதம்பி என்பவர் ஹஜ்ரத் இந்த ஊரூக்குநீங்க வந்தீங்க மக்களை திருத்தீட்டீங்க!நாடு முழுவது சென்று உங்களைப் போலசீர் திருத்தம் செய்கிறவர்களைஉருவாக்க முயற்சி செய்யுங்கள் என்றுகேட்டார்.

ஹஜ்ரத்தின் மனதில் அது நீரூபூத்தநெருப்பக கனன்று கொண்டிருந்தது.

இதற்கிடையே ஒரு தோட்ட்த்திலிருந்து கனிகளைப் பறித்துக் கொடுத்துக் கொண்டிருப்பது  போல அவர்கள் கனவு கண்டார்கள். இதற்கான விளக்கத்தை மக்கா சவ்லத்திய்யா மதரஸாவின் நிறுவனர் ரஹ்மதுல்லா கிரானவி (ரஹ்) அவர்களிடம் கேட்டப்போது மார்க்க கல்விப் பண்யில் கவனம் செலுத்துமாறு அன்னார் கூறினார்கள்.

அதற்குப்பின் அஃலா ஹஜ்ரத்  அவர்களின் முழுக்கவனமும் மார்க்க கல்வியின் பால் திரும்பியது,

மார்க்கக் கல்வியை பரப்புவது தான் வாழ்க்கையின் இலட்சியம்  என்று முடிவான பிறகு தன்னுடைய 27 வயதில் தனது வீட்டிலேயே ஒரு மதரஸாவை அஃலாஹ் ஹஜ்ரத் தொடங்கினார்கள்.

ஒரு இலட்சிய வேட்கை கொண்டவர்கள் அதிக நேரம் காலத்தின் வசதிகளுக்காகவும் தேவைகள் நிறைவேறும் வாய்ப்புக்காகவும் காத்திருக்க மாட்டார்கள் அல்லவா?

ஹிஜ்ரீ 1286 – கீபி 1857  ல்

Ø  தன்னுடைய சொந்த இடத்தில்

Ø  சொந்த செலவில்

Ø  சொந்தக் காரகளில் இருக்கிற சிறுவர்களை தேர்ந்தெடுத்து

அவர்களை ஆர்வப்படுத்தி மாணவர்களாக்கி கல்வி பயிற்று வித்தார்கள்.

அவ்வாறு சேர்க்கப்பட்டவர்களில் ஒருவர் தான் பின்னாட்களில் புகழ் பெற்ற குலாம் முஹ்யித்தீன் ஹஜ்ரத் அவர்கள். அவர் அஃலா ஹஜ்ரத்தின் தந்தைக்கு முதல் மனைவியின் மூலம் பிறந்த ஷரபுத்தீன் அவர்களின் மகனார் ஆவார்,  சகோதரர் ஷரபுத்தீன் இளம் வயதிலேயே வபாத்தாக்விட்ட நிலையில் அவரை ஜியாரத் செய்யச் சென்ற போது அவரது மகன் குலாம் முஹித்தீனைப் பார்த்து இவர் தனக்கு மாணவராக இருக்கப் பொருத்தமானவர் எனக் கண்டு அவரை வேலூருக்கு அழைத்து வந்து மதரஸாவில் சேர்த்துக் கொண்டார்கள். அவர் தான் பிற்காலத்தில் மிகவும் பிரபல மடைந்து வேலூர் சின்ன ஹழரத் என்று அழைக்கப்பட்டார்.

6 வருடங்கள் வீட்டிலேயே மதரஸா நடந்தது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

இதற்கிடையே ஹஜ்ரத் அவர்களின் முதல் மனைவி ரழிய்யா அமீர் பீபீ அம்மா வபாத்தாகிவிட்டார். ஹழரத்திற்கு முதல் மனைவி மூலம் இரண்டு ஆண் குழந்தைகள் பிற்ந்தன. அவற்றுள் மூத்தவர் ஜியாவுத்தீன் ஹழரத் இளையவர் பால்குடிப் பருவத்திலேயே மரணமடைந்து விட்டார்

.

ஹழரத் அவர்கள் இரண்டாவதாக பட்டேல் தாதாமியான் சாஹிபின் அருந்தவப் புதல்வியை ரஹ்மத் பீபியை 1287 ல் திருமணம் செய்து கொண்டார்கள்,

அதன் பிறகு ஹிஜிரி 1292 – ல்  வேலூர் பெரிய பள்ளிவாசலின் திண்ணைக்கு மதரஸாவை பள்ளிவாசலின் தின்னைக்கு இடம் மாற்றினார்கள். ஆறு வருட காலம் பள்ளிவாசல் திண்ணையில் மத்ரஸா நடைபெற்றது. இத்திண்ணை மதரஸாவில் கல்வி கற்றோர் பின்னாட்களில் சன்மார்க்க அறிவுலகின் நட்சத்திரங்களாக ஜொலித்தார்கள்,

Ø  சின்ன ஹழரத் குலாம் முஹ்யித்தீன்

Ø  அஃலா ஹழரத்தின் ஒரே அருந்தவப் புதல்வர் ஜியாவுத்தீன்

Ø  அஃலா ஹழ்ரத் அவர்களால் ரஹ்மத் பாலா மக்தபிலிருந்து கைப்பிடித்து அழைத்து வரப்பட்ட தென்னாடு கண்ட மாபெரும் சட்ட மேதை ஷேக் ஆதம் ஹஜ்ரத்

Ø  ஷம்சுல் உலமா அப்துல் ஜப்பார் மஃகூலி ஹழரத்

Ø  சுல்தானுல் வாயிழீன் முஹம்மது கமாலுத்தீன் ஹழரத்

ஒரு புதிய கல்வி நிலையத்திலிருந்து வெளிப்பட்ட இந்த மாமணிகளின் அபாரமான அறிவாற்றல் உலகின் கவனத்தை ஈர்க்கத்  தொடங்கியது.

நாட்டின்  பல இடங்களிலிருந்து மாணவர்கள் வேலூரின் அந்தப் பள்ளிவாசலின் திண்ணையை தேடி வர ஆரம்பித்தனர்.

மதரஸாவிற்கென்று ஒரு தனி இடமும் கட்டிடமும் தேவை என்ற அவசியம் உணரப்பட்டது.

ஹிஜ்ரீ 1299 ம் ஆண்டு (1875) ல் பள்ளிவாசலுக்கு அருகே இருந்த வீடுகள் விலைக்கு வாங்கப்பட்டு அங்கு மதரஸா இடம் பெயர்ந்தது.  

அப்போது ஹாஜி பாபா மியான் சாஹிப், ஆலஞ்சி முஹம்மது உஸ்மான் சாஹிப், செளகார் ஷம்சுத்தீன் சாஹிப் ஆகியோர் அஃலா ஹஜ்ரத் அவர்களுக்கு உற்ற துணையாக இருந்தனர். உதவிகள் புரிந்தனர். (அல்லாஹ் இப்பெருந்தகைகளை பெருந்திக் கொள்வானாக!)

அத்தோடு இப்படி ஒரு மதரஸா தொடங்கப்பட்டுள்ளது இதற்கு உதவி புரிவீர் என ஒரு விளம்பரம் தயாரிக்கப்பட்டது ” ஒரு துண்டு பேரீத்தம் பழத்தை கொண்டாவது நரகத்திற்கு அஞ்சி விலகுங்கள்” தலைப்பில் இடம் பெற்ற அந்த விளம்பரம் ஹஜ்ரத் அவர்கள் பயான் செய்கிற கூட்டங்களில் விநியோகிப்பட்டது, மக்கள் கூடும் நிகழ்ச்சிகளில் வாசிக்கப்பட்டது தமிழ் உருது பத்ரிகைகளில் விளம்பரமாக வெளியிடப்பட்டது. மக்கள் தாரளமாக உதவி செய்தனர். மதரஸாவிற்கான கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்தக் கட்டத்தில் தான்  மதரஸாவிற்கு ஒரு பெயர் வைக்க வேண்டும் என்ற தேவை உணரப்பட்டது. மக்கள் ஹஜ்ரத்தின் மீது கொண்ட மரியாதையினால் உங்களுடைய பெயர்ச் சார்ந்து ஒரு பெயர் சூட்டுங்கள் என்றார்கள், அதை மறுத்த ஹஜ்ரத் அவர்கள் தன்னுடைய ஷைகுமார்களில் ஒருவரிடம் ஆலோசனை கலந்த போது, குர்ஆனை திறந்த பார்த்து முதலில் கண்ணில் படுகிற வாசகத்தை பெயராக வைக்குமாறு அவர் கூறினார், அதனடிப்படையில் அஃலா ஹஜ்ரத் அவர்களின் கண்ணில் கஹ்பு அத்தியாயத்தின் வல்பாக்கியாதுஸ்ஸாலிஹாத்து கைருன் என்ற வசனம் பட்ட்து அதையே பெயராக வைத்தார்கள்.

பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் என்றால் நீடித்து நிற்கிற நற்செயல்கள் என்று பொருள்

கவனியுங்கள்! இன்று மிகப்பெரிய இரு நிறுவனமாக வளர்ந்து நிற்கிற மதரஸா பெயர் புகழுக்கான ஆசைகளில் அமைந்ததல்ல என்ற அற்புதமான பாடம் இதில்  நமக்கு கிடைக்கிறது

роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்