உலகின் எந்த நாட்டிலும் உள்ள கட்சியின் தலைவர் இறந்து விட்டால் கட்சியையும், கொள்கையையும் காப்பாற்ற இன்னொரு தலைவரை தேர்வு செய்வார்கள்.
தலைவரை தேர்வு செய்வதற்கும் பலவிதமான போட்டிகள் நிகழும், இதை தான் உலகம் பார்த்து வருகிறது.
1400 ஆண்டுகளுக்கு முன்பு மக்காவிலும், மதீனாவிலும் ஓர் தலைவர் வாழ்ந்தார். அவர் மரணித்து 1400 ஆண்டுகள் ஆகி விட்டது.
ஆனால் அவர் விட்டு சென்ற கொள்கை அழிந்து விடவில்லை, மாறாக பிரம்மாண்டமாக வளர்ந்து உலகம் முழுவதும் பரவி உலகின் 200 கோடி மக்களை வென்றெடுத்துள்ளது.
தலைவரும் உயிரோடு இல்லை, தலைவரின் முகத்தை அன்றைய மக்களை தவிர யாரும் பார்த்தது இல்லை, தலைவரின் படங்கள் இல்லை, சிலைகள் இல்லை, தலைவரின் இடத்தில் வேறு தலைவரும் இல்லை,
ஆனால் கொள்கை மட்டும் தார்மாறாக வளர்ந்துள்ளது. 14 நூற்றாண்டில் உலகின் கால்வாசி மக்களை ஈர்த்துள்ளது. அவருடைய கொள்கை நுழையாத நாடே உலகில் இல்லை.
200 கோடி மக்களின் உள்ளங்களை ஈர்த்தது மட்டுமல்ல, அவருக்காக 200 கோடி மக்களும் உயிரையும் கொடுப்பார்கள். 200 கோடி மக்களும் தங்களை விட அவரையே அளவுக்கு அதிகமாக நேசிக்கிறார்கள்.
200 கோடி மக்கள் தங்களுடைய வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சினைகளுக்கும் அவரிடமே தீர்வை எதிர்பார்க்கின்றனர்.
இஸ்லாமியர்கள் அதிகம் தர்மம் செய்பவர்கள் என்று பிரிட்டன் கூறுகிறது. உலகின் எந்த பகுதியில் சுனாமி, வெள்ளம், புயல், நிலநடுக்கம் என்று யார் பாதிக்கப்பட்டாலும் இஸ்லாமியர்களின் மனிதநேய பணி மகத்தானது என்று ஐநாவின் அறிக்கை கூறுகிறது.
இஸ்லாமியர்கள் இந்த பெயரையும், பெருமையையும் பெற அவரே உண்மையான சொந்தக்காரர். அவர் தான் இஸ்லாமியர்களுக்கு மனிதநேயத்தை ஊட்டினார்.
பொருளாதாரம், குடும்பவியல், வாழ்வியல், நீதித்துறை என்று அவர் வகுத்த கொள்கையே உலகின் பெரும்பாலான நாடுகள் பின்பற்றி கொண்டிருக்கிறது.
அவருடைய பெயர் இந்த உலகத்தில் ஒவ்வொரு நொடியும் ஏதேனும் ஒரு பகுதியில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
யார் அவர் ?
எம் பெருமானார் முஹம்மது நபி(ஸல்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக