ஹஜ் பயணத்துக்கு மானியம் ரத்து என்று அரசு அறிவிக்கிறது. கோவில்களின் நிதி உள்ளிட்ட வரி வருவாயிலிருந்து முஸ்லிம் களுக்கு மானியம் கொடுக்க கூடாது என்று இந்துத்வ சக்திகள் கூவுகின்றன.
உண்மையில் பார்த்தால் அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. எனினும் ஹாஜிகளின் பணத்தை திருட்டுத்தனமாக ஆட்டையை போடுகிறது. அதன் விபரம் காணீர்.
:- Imam Hussain &Abumymoona உதவியுடன் பதிவு :-
#இந்திய_அரசின்_ஹஜ்_மானிய_மோசடி
#ஹஜ்_மானிய_கணக்கு
1) ஹஜ் மானியமாக அரசு ஆண்டுக்கு ₹ 691 கோடி கொடுக்கிறது.
2) இந்திய நாட்டின் அரசு ஹஜ் கோட்டா - 1,36,000 சீட்டுகள்.
ஆகவே, ₹ 691 கோடி ÷ 1,36,000 ஹாஜி = ₹ 50,808.
ஆக ஒரு ஹாஜிக்கு ₹ 50,000 மானியமாக வழங்கப்படுகிறது.
#ஹஜ்_செலவுக்_கணக்கு
1) ஒரு ஹாஜியிடமிருந்து
₹ 1,80,000/- கட்டணம் வசூலிக்கபடுகிறது.
2) அதில், ஹாஜியின் கை செலவுக்காக ₹ 34,000/- தை
(சவுதி ரியாலாக மற்றி கையில் கொடுக்கப்படுகிறது.)
₹ 1.80 lac - ₹ 34,000 = ₹ 1,46,000/-
ஆகவே, அசலில் ₹ 1,46,000 தை கட்டணமாக கொள்ளலாம்.
3) பம்பாய் - ஜித்தா போய் வர விமான டிக்கட், 2 மாதத்திற்கு முன் பதிந்தால் அதன் விலை ₹ 25,000 திற்கும் குறைவு, எனினும் 25 ஆயிரம் என்றே வைத்துக் கொள்வோம்.
4) அனால் உணவு, டாக்ஸி, பஸ் கட்டணம், இதர செலவுகள் ஹாஜிகளின் பொறுப்பு.
செலவுகளை ₹ 1.46 லட்சதில் கழித்து பார்போம்...
விமான டிக்கட் -ரூ 25,000 மக்காவில் தங்குதல் (ஹோட்டல்) ரூ 50,000 (25 நாள்)மதினாவில் தங்குதல் (ஹோட்டல்) - ரூ 20,000 (15 நாள்)மற்ற செலவுகள் - 25,000 மொத்த செலவு தொகை - ரூ 1,20,000/-
பெறும் குழப்பம் ஏற்படுகிறதல்லவா...!-
ஆகவே, கட்டணம் ரூ 1,46,000 - செலவு 1,20,000 = மீதம் ₹ 26,000/-
உண்மை என்னவெனில்.... ஒரு ஹாஜி தனது சொந்த பணத்தில் இருந்து ₹ 26,000 ஐ மறைமுகமாக அரசுக்கு செலுத்துகிறார்...
ஆகவே, ஒரு ஹாஜி தான் ஹஜ்ஜுக்கு செல்ல, தானே அனைத்து செலவுகளுக்கும் பணம் செலுத்தியது போக, மேலும் ₹26,000 அதிகமாக அரசால் வசூலிக்கபடுகிறது.
இதனிடையே மானிய தொகை ரூ 50 ஆயிரதை மறந்து விட வேண்டாம்.
நமது பெயரை சொல்லி ரூ 50,000 + நம்மிடமிருந்து மேலும் ரூ 26,000 = ₹ ரூ 76,000/-
ஆக ஒவ்வொரு ஹாஜியிடமிருந்தும், ₹ 76,000 அரசுக்கு கிடைக்கிறது.
₹ 76,000 × 1.36 லட்சம் ஹாஜிகள் =
10,33,60,00,000/- ரூபாய்
தலைசுற்றுகிறதல்லவா...!
ஆக, ஆண்டுக்கு... ஆயிரத்தி முப்பத்தி மூன்று கோடியே அறுபது லட்சம் ரூபாய்...! இந்த பணம் எங்கு செல்கிறது & என்ன ஆகிறது என்ற கணக்கு தெரியவில்லை!
ஆக, நாம் தான் கோவப்பட வேண்டும். ஹிந்து சாகோதரர்கள் அல்ல....!!!!
நம்மிடருந்தே பணத்தை பறித்து கொண்டு... மேலும் முஸ்லிம்களை, மானியம் என்ற பெயரில் கேவலப்படுத்தி வருகிறது இந்திய அரசு!!
மவ்லவி எம்ஒய். முஹம்மது அன்சாரி மன்பயீ. மாநில செயலாளர். தமுமுக உலமா அணி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக