justice_for_Asifa
காஷ்மீரில் முஹம்மது யூசஃப் என்பவரின் 8 வயது மகளை கடத்தி கோயிலில் பூஜை நடத்தும் அறையில் அடைத்து வைத்து ஒரு வாரம் கற்பழித்து விட்டு, பிறகு ஒரு பாலம் அருகே கொண்டு சென்று தலையில் கல்லைப் போட்டு கொன்றுள்ளார்கள் தேச பக்தர்கள்!!!
காணாமல் போன அன்றே மகளை காணவில்லை என்று தகப்பனார் புகார் கொடுத்துள்ளார்,, ஆனால் காவல்துறையோ குற்றவாளிகளின் தலைவனான ராம் என்பவனிடம் ஒன்றரை லட்சம் பணத்தை லஞ்சமாக பெற்றுக் கொண்டு வழக்கை கிடப்பில் போட்டு விட்டது!!!
பிறகு ஒரு வாரம் கழித்து சடலத்தை மீட்ட பிறகு இந்தப் பிரச்சினை பூதாகரமாகவே வழக்கினை காஷ்மீர் மாநில குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றபட்டுள்ளது,, அவர்கள் விசாரித்து குற்றவாளிகள் ராம், விஷால், காஜூரியா உட்பட 6 பேரையும் மற்றும் அவர்களிடம் லஞ்சம் வாங்கி குற்றத்தை மறைக்க முற்பட்ட 2 போலிசாரையும் கைது செய்துள்ளார்கள்!!!
கொலை செய்வதற்க்கு இறுதி நிமிடங்கள் வரை கற்பழித்து சிதைத்திருக்கிறார்கள் அயோக்கிய மிருகங்கள்!!!
இதில் உச்சகட்ட கொடுமை என்னவென்றால் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய விடாமல் அம் மாநில வழக்கறிஞர்களே தடுத்து போராட்டம் செய்துள்ளார்கள் என்பது தான்!!!
அநீதிக்கு துணைப் போன எவன் வீட்டிலும் பெண் குழந்தைகள் இல்லை போல, அப்படியே இருந்தாலும்??? வேணாம் கோபத்தில் வார்த்தை தடித்து விடும் இதோட முடிச்சிப்போம்!!!
தங்களை பாதுகாத்துக் கொள்ள கல்லெறியும் அம் மக்களுக்கு பெயர் மற்றவர்களின் பார்வையில் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள்,,
ஆனால் அரக்கர்களுக்கோ தேச பக்தர்கள் என்ற மாவீரப் பட்டம்!!!
வரலாற்றின் அனைத்து ஏடுகளிலும் பதியப்பட வேண்டிய மற்றுமொரு ஒடுக்கபட்ட, வஞ்சிக்கப்பட்ட இனம் காஷ்மீரிகள்!!!
#JusticeforAsifa #JusticeForAshifa
#பாவப்பட்ட_காஷ்மீரிகள்..
роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:
роХро░ுрод்родுро░ைропிроЯுроХ