இஸ்லாமியர்கள் வரலாறுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காததால், இந்து மகா சபை தலைவராக சித்தரிக்கப்படும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா..
(வருத்தத்துடன் எழுதுகிறேன்)
வரலாறுகளை பாதுகாப்பதில் பழங்கால இந்திய முஸ்லிம்கள் முன்னணியில் இருந்துள்ளனர். அதற்கு சான்றாக உருது மொழியில் ஏராளமான வரலாறு நூல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் தற்போது இருக்கக்கூடிய இஸ்லாமியர்களுக்கு வரலாறில் போதிய ஆர்வம் இல்லை. நமது முன்னோர்கள் உயிரை கொடுத்து சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டனர். முஸ்லிம் மன்னர்கள் 800 வருட காலம் சிறப்பான ஆட்சியை தந்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் மத வெறியர்களாகவும், கொள்ளையர்களாகவும் தற்போது சில வரலாற்று ஆசிரியர்களால் சித்தரிக்கப்படுகிறார்கள். சரி அதவாது சுதந்திரத்திற்கு முன்பு நடந்தது என வைத்து கொள்ளலாம். ஆனால் சுதந்திரத்திற்கு பின்னால் நடைபெற்ற நிகழ்வுகளை கூட இஸ்லாமிய சமூகம் படிக்காமல் விட்டதால் தேவர் ஐயா, இந்து மகா சபை தலைவராக இருந்தார் என எழுதிவிட்டார்கள்.
ஆம். "அபிராமத்தில் முஸ்லிம் இளைஞர்கள் சந்தைக்கு வரும் பெண்களிடத்தில் தவறாக நடந்து வருகிறார்கள் என்கிற செய்தி தேவர் ஐயா அவர்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. உடனே இந்து மகா சபையை உருவாக்கி அதன் தலைவராகிறார் தேவர். முஸ்லிம் இளைஞர்களை ஒடுக்குகிறார்" என்று தேவர் வரலாறு புத்தகத்தில் பாலு என்பவர் எழுதியிருக்கிறார். இதை படித்தவுடன் அதிர்ச்சி அடைந்தேன். தேவர் வரலாறு புத்தகங்கள் நிறைய படித்த எனக்கு இது புதிய செய்தியாக இருந்தது. தேவர் சமூகத்தை சேர்ந்த பல்வேறு நபர்களிடம் இதை பற்றி கேட்ட போது, இது பொய்யானது. திட்டமிட்டு பரப்படும் செய்தி என்றனர். என்னை போல எத்தனையோ பேர் அந்த புத்தகத்தை படித்திருப்பார்கள். அப்போது தான் உணர்ந்தேன். இன்று புத்தக வடிவிலும், ஆன்லைன் மூலமும் பொய் கட்டுரைகள் பரப்படுகிறது.
இஸ்லாமியர்களிடம் இது குறித்து கேட்டபோது "தெரியவில்லை" என்பதே பதிலாக இருந்தது. நம்மவர்களுக்கு தேவருக்கு இஸ்லாமிய பெண் பால் கொடுத்தார் என்பதை தவிர எதுவும் தெரியாது என்பதை அப்போது தெரிந்து கொண்டேன். இஸ்லாமியர்களை பற்றிய தவறான சிந்தனையை உருவாக்க வேண்டும் என்பதற்காக சமூக தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை தங்களுக்கு ஏற்றார் போல மாற்றி எழுதி வருகிறார்கள். ஆனால் நமக்கு அதை பற்றி எல்லாம் கவலை இல்லை..
தேவர், மருது பாண்டியர், கட்டபொம்பன், தீரன் சின்னமலை, மராத்திய மன்னன் சிவாஜி, அம்பேத்கர் என சமூக தலைவர்களுடன் இஸ்லாமியர்கள் கொண்ட நட்பு என்பது காலத்தால் அழியாதது. ஆனால் அந்த வரலாறு இஸ்லாமியர்களுக்கு சுத்தமாக தெரியவில்லை. அப்படி தெரியாததை பயன்படுத்தி முஸ்லிம் விரோத சக்திகள் வரலாறுகளை மாற்றி வெற்றி காணுகின்றனர்.
எத்தனயோ தலைவர்களின் பிறந்த நாள் வருகிறது. அப்போது அரசியல் கட்சி தலைவர்கள், தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவிப்பனர். ஏன் பா.ஜ.க வின் கொள்கைகளை எதிர்த்து வந்த தேவர், மருது பாண்டியர், தீரன் சின்னமலை, அம்பேத்கர் போன்ற தலைவர்களின் சிலைக்கு பா.ஜ.க வினர் மாலை போடுவது தான் கொடுமையிலும் கொடுமை. ஆனால் அப்படி மாலை போடுவதால் அச்சமூக இளைஞர்களை குறிவைக்கிறார்கள். இந்த தலைவர்களுடன் பின்னிப்பிணைந்த உறவை கொண்ட இஸ்லாமியர்களோ எதுவும் செய்வதில்லை. இதனால் தற்போதைய இரண்டு சமூகத்தை சேர்ந்த இளைஞர்களுக்குள் புரிதல் இல்லாமல் போய்விட்டது.
தலைவர்களின் பிறந்த நாளைக்கு மாலை போட வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. வெறும் மாலையை மட்டும் போட்டு அவர்களின் கொள்கைகளை பின்பற்றாமல் மக்களை பலர் ஏமாற்றி வருகிறார்கள். இஸ்லாமியர்களுடன் ஒற்றுமையாக இருந்த தலைவர்களின் பிறந்த அல்லது நினைவு நாட்களின் போது, இரண்டு சமூகத்திற்கும் இருந்த ஒற்றுமை குறித்த வரலாறை கருத்தரங்காக நடத்தாலாம். இரண்டு சமூக தலைவர்களையும் அழைத்து பேச வைப்பதன் மூலம், தற்போதைய இளைஞர்களுக்கு வரலாறும் தெரிந்துவிடும். சமூக ஒற்றுமையும் நீடித்த உறவும் ஏற்படும்.
ஆனால் நாம் அதை செய்ய மறுக்கிறோம். நமக்கே ஆயிரம் பிரச்சனையை தருகிறார்கள் அதை எதிர்த்தே போராட வேண்டி இருக்கிறது. இது தேவை தானா என்று பல முஸ்லிம்கள் யோசிக்கின்றனர். உங்களை இது போன்று செய்து விட கூடாது என்பதற்காக தான் பிரச்சனைகளையும் பதற்றத்தையும் திட்டமிட்டு உருவாக்கிறார்கள். உங்களை ஒதுக்கிவைத்து விட்டு, கட்டுகதைகளை எழுதி அவர்கள் பக்கம் அச்சமூக இளைஞர்களை இழுத்து வருகிறார்கள்.
நேற்று (29 ஏப்ரல்) கூட கீழடி குறித்து பதிவு செய்தேன். மத அடையாளங்கள் இல்லாத பொருட்கள் அங்கு கிடைத்து வருகிறது. அது அனைத்தும் கி.மு 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது என தொல்லியல் நிபுணர்கள் கூறி வருகிறார்கள். இதனால் இஸ்லாமியர்கள் வாழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதை அறிந்த பா.ஜ.க வினர் கீழடி ஆய்வை தடுத்து நிறுத்தி, ஆய்வு செய்த தலைவர் அமர்நாத் அவர்களை அஸ்ஸாம் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்து விட்டனர்.
இந்த ஆராய்ச்சி தொடர்ந்து கீழடியில் நடந்தால் இஸ்லாமியர்கள் தான் தமிழ்நாட்டின் பூர்வக்குடி மக்கள் என்கிற உண்மை வெளிவரலாம். ஏனென்றால் இஸ்லாமிய வரலாறுகளில், இறைவன் படைத்த முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்கள் இலங்கையில் தான் இறக்கப்பட்டார் என்கிற செய்தி இருக்கிறது. அப்போது இலங்கையும் தமிழ்நாடும் சேர்ந்திருந்தது. எனவே இந்தியாவின் பூர்வக்குடி மக்களாக இஸ்லாமியர்கள் இருந்திருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. இதை வெளிவராமல் தடுத்து விட்டனர்.
இதை பற்றி நான் எழுதியதை ஒருசிலரை தவிர எவரும் அந்த பதிவிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால் அமெரிக்கா பற்றிய எனது பதிவிற்கு முஸ்லிம்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. காரணம் அமெரிக்காவால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அமெரிக்காவிற்கு முக்கியத்துவம் கிடைக்கிறது. அதை போல தான் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் போன்ற பதிவுக்களுக்கும் கிடைக்கிறது.
ஆனால் இதே ஆதரவு வரலாறு பதிவுக்களுக்கு கிடைப்பதில்லை. இன்றைய இளைஞர்களுக்கு வரலாறு என்பது சுத்தமாக தெரியவில்லை. சிறுபான்மையினர் என்கிற பதற்றத்திலேயே வாழ்கின்றனர். இதை இந்துத்துவா அமைப்பினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர்.
இனி வரும் காலங்களிலாவது தலைவர்களின் பிறந்த அல்லது நினைவு நாட்களில் ஒவ்வொரு இஸ்லாமிய அமைப்புகளும், கட்சிகளும் கருத்தரங்குக்களை நடத்தி இளைஞர்களுக்கு வரலாறை நினைவு படுத்த வேண்டும்.
வரலாறுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் இஸ்லாமிய இளைஞர்களே. பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் திட்டுவது மட்டும் சமுதாய பணி அல்ல.. சமூகத்தின் வரலாறை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். வரலாறையும், அடையாளத்தையும் மறந்த சமூகம் அழிந்து போகும் என்பதே வரலாறு சொல்லும் நியதி.
வருத்தங்களுடன்,
யாசிர்
மதுரை
роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:
роХро░ுрод்родுро░ைропிроЯுроХ