роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

роЪெро╡்ро╡ாроп், роЬூрой் 26, 2018

рокாро▓்,родропிро░்,рооோро░்,

பாலுக்கு துக்கம் கொடுத்தால் தயிர் ஆகிறது.

தயிருக்கு துக்கம் கொடுத்தால் வெண்ணெய் ஆகிறது.

வெண்ணெயை கொடுமை செய்தால் நெய் ஆகிறது.

பாலை விட தயிர் உயர்ந்தது, தயிரை விட வெண்ணெய் உயர்ந்தது, வெண்ணெயை விட நெய் உயர்ந்தது.

இதனுடைய அர்த்தம் என்னவென்றால்-- அடிக்கடி துக்கம்- சங்கடங்கள் வந்தாலும் கூட எந்த மனிதனுடைய நிறம் மாறுவதில்லையோ, சமூகத்தில் அவருடைய மதிப்பு அதிகரிக்கிறது.

பால் ஒரு நாளைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும், பின் அது கெட்டுப் போய் விடும்
.
பாலில் ஒரு சொட்டு மோர் விடும் போது அது தயிர் ஆகிறது. அது இன்னும் 2 நாட்களுக்கு இருக்கும்.

தயிரை கடையும் போது வெண்ணெய் வருகிறது. அது இன்னும் 3 நாட்களுக்கு இருக்கும்.

வெண்ணெயை கொதிக்க வைத்தால் நெய் ஆகிறது. அது ஒரு போதும் வீணாவது இல்லை.

ஒரே நாளில் கெட்டுப் போகும் பாலுக்குள் ஒரு போதும் கெட்டுப் போகாத நெய் ஒளிந்து இருக்கிறது.

உங்கள் மனம் கூட அளவற்ற சக்திகளால் நிரம்பியுள்ளது. அதில் கொஞ்சம் நேர்மையான எண்ணங்களைப் போடுங்கள். தனக்குத் தானே சிந்தனை செய்யுங்கள். தன்னுடைய வாழ்க்கையை இன்னும் சரி பாருங்கள். பின் அப்பொழுது பாருங்கள். நீங்கள் ஒருபொழுதும் தோல்வியே காணாத பசுமையான மனிதனாக இருப்பீர்கள்.

роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்