பேகம் -னா சும்மாவா?
அரசாண்ட ஆறுபேகம்கள்:-
சுதந்திரத்துக்கு முன்புவரை இந்தியாவில் பல முஸ்லிம் பெண்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆட்சி செய்துள்ளார்கள்....
சுதந்திரத்துக்குபின் தான் இந்தியாவில் ஒரு முஸ்லிம் பெண்ணும் ஆட்சி செய்யமுடியவில்லை....
இன்றைய ஆட்சியாளர்கள் முஸ்லிம் பெண்கள் மீது மிகவும் கருசனையாளர்கள் ஆயிற்றே எனவே முஸ்லிம் பெண்களுக்கு தனி இட ஒதுக்கீடும் பிரதமர் பதவியையும் தர இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்....m
1)ரஸியா பேகம் !!!
கி.பி. 1236–1240 வரை டெல்லியை ஆண்ட ஒரு பெண் சுல்தான்.!! (சுல்தான் என்பது ஆண்பால், சுல்தானா என்பதுதான் பெண்பால். நான் ஒரு ஆணுக்கு வீரத்திலும் விவேக்கதிலும் எந்த விதத்திலும் குறைந்தவள் இல்லை – என்னை சுல்தான் என்றே அழையுங்கள் என்று எல்லோருக்கும் ஆணையிட்டு இருந்தாள் ரஸியா பேகம்.) !
இவர் இந்தியாவின் முதல் அரசி என்று அழைக்கப்படுகிறார். இவரது தந்தை பெயர் இல்துமிஷ!் இவர் டெல்லியை ஆண்ட மூன்றாவது சுல்தான் ஆவார். இவர் டெல்லியை கி.பி. 1211 முதல் 1236 வரை ஆட்சி செய்தார். இவருக்கு பல மகள்களும் மகன்களும் இருந்தனர். ஆனால் இவர் ரஸியா பேகத்தையே மிக அதிகமாக நேசித்தார். ஒரு பெண் கற்றுக் கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களையும் அவளுக்குக் கற்றுக் கொடுத்தார். இவர் ஒரு இளவரசியாகவே வளர்க்கப்பட்டார். கூடவே அரசியல் விவகாரங்களையும் நன்கு பழகிக் கொண்டார்.
குதிரை சவாரியிலும், வாள் வித்தையிலும் தனது சகோதரர்களையும் விட மிகச் சிறந்து விளங்கினார். அச்சமயத்தில் இவரது தந்தை ராஜபுத்திரர்களுக்கெதிராக படையெடுத்துச் சென்றார். தான் திரும்பி வர கால தாமதம் ஆகலாம் என கருதிய அவர் தனக்கு பதிலாக தனது மகள் ரஸியா பேகத்தை ஆட்சி அதிகாரத்தில் நியமித்தார். திரும்பி வர சுமார் ஆறு ஆண்டுகள் ஆனது. அக்காலக் கட்டத்தில் ரஸியா பேகம் நன்முறையில் விவேகத்துடனும் ஆட்சிப் புரிந்தார்.
தனது தந்தை திரும்பி வந்ததும் ரஸியா ஆட்சியை தந்தையிடமே ஒப்படைத்தார். கி.பி.1236 - ஆம் ஆண்டு இல்துமிஷ் மரணமடைந்தார். ஏற்கனவே அவர் தனது வாரிசாக ரஸியா பேகத்தையே முடிவு செய்திருந்தார். ஆனால், பிற்போக்கு சிந்தனை கொண்ட அமைச்சர் குழு “பெண்ணாகப் பிறந்தவள் மண்ணாளுவதா?” “அணங்கிற்கு நாங்கள் இணங்கி போவதா?” என்று பஞ்ச் வசனம் பேசி, ரஸியாவின் ஒன்றுவிட்ட சகோதரன் “ருக்னுதீன் பிரோஸ்” என்பவனை ராஜாவாக ஆக்கினார்கள்.
அவனோ “ஒன்றுவிட்ட” மட்டும் இல்லாமல் வெட்கம், மானம், சூடு, சொரணை, வீரம், நிதானம் என்று “பலதையும் விட்ட” சகோதரனாக இருந்தான். அவனது #தாய் ஷா -துர்கான் – பணிப் பெண்ணாக இருந்தவள் மணி மகுடம் சூட்டிக் கொள்ள ஆசைப்பட்டார் தன் மகனை அந்தப்புரத்தில் தள்ளி கதவை தாளிட்டாள்.
பொழுது புலர்ந்தது-சாய்ந்தது, நல்லது-கெட்டது, என்று எதுவும் தெரியாமலேயே அந்தப்புரமே கதியாகக் கிடந்தான் பிரோஸ். இங்கே தாய் பேயாட்டம் போட்டாள். அவள் வைத்ததே சட்டம், மீறியவர்கள் தண்ட்டிக்க பட்டார்கள். முன் ஆட்சியில், படித்தவர்கள், சான்றோர்கள் அமர்ந்த இருக்கையில் இன்று கேள்விக்குரியவர்களும் கேலிக்குரியவர்களும் அமர்ந்தார்கள். நல்லது சொன்னவர்கள் காணாமல் போனார்கள். இத்தனைக்கும் நடுவில் மக்களின் நன்மதிப்பை பெற்ற ரஸியா தனது சரியான நேரத்திற்காக காத்திருந்தார்.
இவர்களின் அராஜக ஆட்சியை எதிர்த்து மக்கள் போர் கொடி பிடித்து பொங்கி எழ, இது தான் சரியான சமயம் என்று குறுநில மன்னர்களும், அமைச்சர்களும் தாய்-மகன் இருவரையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்தவுடன் தான், நிலைமையின் தீவிரம் ஷா துர்க்கானுக்கு உரைத்தது. இது வரையிலும் தன் மகனை ஒரு மாவீரன் என்றே அவள் நம்பியது தான் வேடிக்கை.
அந்தப்புரத்திலிருந்து மகனை தட்டி எழுப்பி “படுத்தது போதும் பொங்கி எழுடா மகனே” என்று ஆணையிட்டாள். சாதாரண உடையே பாரம் என்று நினைத்தவனை போர் உடை பூணச்சொன்னால் என்ன செய்வான்? கேளிக்கைகளால் நலிந்து போன அவன் போருக்கு போன அழகு பலருக்கு எரிச்சலாகவும் சிலருக்கு கேலியாகவும் இருந்தது. அவன் அந்தப்பக்கம் போன உடன் இந்தப்பக்கம் வீரர்கள் ஷா துர்கானை சிறை பிடித்தார்கள். ரஸியா இப்போது ஆட்சி பீடத்தில் !
தாயையும், ஒப்புக்காக போருக்கு போன சேயையும் பிடித்து வந்து சிறையில் அடைத்தார்கள்.
ஆசைதீர சில நாள் சித்ரவதை செய்துவிட்டு, நவம்பர் 9, 1236 சுபயோகம் கூடிய சுப தினத்தில் இருவரையும் பரலோகம் அனுப்பி வைத்தார்கள் வீரர்கள்.
மக்களின் நன் மதிப்பை பெற்று ரஸியா சில காலம் ஆண்டு வந்தாலும், “ஒரு பெண்ணின் கீழ் இருப்பதா? வெட்கம்!!..” என்று ஒரு கூட்டம் சதி ஆலோசனை செய்து கொண்டே தான் இருந்தது.
டில்லியிலிருந்து 150 மைல் தொலைவில் சர்ஹிந்த் என்ற பகுதியை ஆண்டு வந்த இக்தியாருதின் அல்துனியா என்ற அரசனோடு சதியாலோசனை செய்து ரஸியாவின் ஆட்சியை கவிழ்க்க திட்டம் போட்டது அந்தக் குள்ளநரி கூட்டம்.
இதை அறிந்ததும், அவன் இங்கு வருவதற்குள் நாமே அங்கு போய் அவனை ஒரு கை பார்ப்போம் (attack is the best form of defence) என்று படையுடன் புறப்பட்டாள் ரஸியா சுல்தான்
வீரம் விவேகம் இருந்தாலும் விதி ரஸியாவிற்கு எதிராகவே வேலை செய்தது. உடன் வந்த படை தளபதிகள் பலர் பாதி வழியில் காலை வாரிவிட, சொச்ச வீரகளோடும் மிச்சத்திற்கு வீரத்தோடும் போருக்கு போனாள். ஆனால், அந்தப் போரில் அவளுக்கு வெற்றி வேறு விதமாக வந்தது. அவளின் அழகும், அறிவும் சாதுர்யமான பேச்சும் அல்துனியாவை கிறங்க அடித்தது. செய்ய இருந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு ரஸியாவையே மணம் முடித்தார் அல்துனியா.
தவறான தகவல் கொடுத்த கயவர்களை ஒரு கை பாப்போம் என்று கணவனும் மனைவியும் கை கோர்த்துக்கொண்டு, மோத இருந்த இரண்டு படைகளோடும் மறுபடி டில்லி புறப்பட தயாரானார்கள்..
கூட இருந்த வீர்களில் (முக்கியமாக மெய்கப்பாளர்கள்) இந்தப் பெண் மறுபடி டில்லி வந்தால் பெண்ணாட்சி நிலைத்து விடும் என்று அவர்கள் இரவு உறங்கும் நேரம் பார்த்து கூடாரத்திற்குள் புகுந்து கணவன்-மனைவி இருவரையும் தீர்த்து கட்டினார்கள்.
அதுபோல
முகலாய வம்சத்தில் அரியணை ஏறாமலேயே ஆட்சியில் செல்வாக்கு செலுத்திய நூர்ஜஹான், ஷாஜஹானின் மகள் ஜஹனாரா பேகம்!!!
2)
1857 - இல் மாமன்னர் பகதுர்ஷா ஜஃபர் தலைமையில் இந்திய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக ஒருங்கிணைந்த போது, அதில் அரசாண்ட இரண்டு வீரமங்கையர் இருந்தனர். ஒருவர் ஜான்சிராணி லக்குமிபாய், மற்றொருவர் உத்திரப்பிரதேசத்தில் ஒளத் (Outh) என்ற குறுநிலப்பகுதியை ஆண்ட பேகம் ஹஜ்ரத் மஹல் ஆவார்.
பேகம் ஒளத் (Begum of Outh / Oudh / Awadh) என்று இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு சில வரிகளில் எழுதிச் செல்லும் ஹஜ்ரத் மஹலின் வீரம் - தேசாபிமானம் - தியாக அர்ப்பணிப்பு ஆகியன ஒரு வீர வரலாற்றுக்கும் விரிவாகப் பேசப்பட வேண்டிய வரலாற்றுக்கும் உரியதாகும்.
858 மார்ச் 6 ஆம் தேதி 30 ஆயிரம் துருப்புகளுடன் வந்த மேஜர் காலின் படையோடு ஐந்துநாட்கள் தொடர்யுத்தம் நடத்தினார். இப்போரில் மாமன்னர் பகதூர்ஷா அவர்களின் மகன்களின் தலைகளைக் கொய்து அவற்றை தட்டில் வைத்து பக்தூர்ஷாவுக்கு சிறையில் வைத்துக் கொடுத்த கொடியவனான மேஜர் ஹட்ஸன், பேகத்தின் வீரர்களால் கொல்லப்பட்டான்.
ஆயினும், ஆங்கிலப் பெரும்படையின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் தனது ஆதவாளர்களுடன் ஒளத்தை விட்டுவெளியேறினார். பிதாவ்லியில் முகாமிட்டிருந்த பேகத்தை ஆங்கிலப் படை தொடர்ந்து வந்து விரட்டியது. அவர் தன் ஆதரவாளர்களுடன் நேபாளத்திற்குள் சென்று தலைமறைவானார். ஏப்ரல் 7, 1879 காத்மண்டு வில் இறந்தார்.
தாய்நாட்டுக்கான சுதந்திரத்துக்காகப் போராடி அந்நிய மண்ணில் உயிர் துறந்த பேகம் ஹஜரத் மஹலுக்கு லக்னோவின் விக்டோரியா பூங்காவில் 1962 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் நாள் சலவைக் கற்களால் ஆன நினைவுச்சின்னம் ஒன்று நிறுவப்பட்டது. இந்தப் பூங்கா இன்று பேகம் ஹஜரத் மஹல் பூங்கா என்று பெயரிடப்பட்டுள்ளது
3)முஸ்லீம் ராணிகளின் தலைநகரம் போபால்!!!!!!
நாட்டின் முதல் கட்டாயத் இலவசதொடக்கக் கல்வி!!
இந்திய நாட்டின் முதல் Ladies shoping mall
(Ladies sooq)
பெண்களுக்கென்று பிரத்யேகமான ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் !!!
கைகுஸ்ரா jahan!!!!
1819 முதல் 1926 வரை, போபால் நகரம் நான்கு ராணிகளால் ஆளப்படுகிறது. !!!
பெண்கள் ஆட்சி புரிய வாய்ப்பு அளிக்கப்டுவது அபூர்வமான அந்தக் காலகட்டத்தில் நான்கு பெண்கள் போபாலை தொடர்ந்து ஆண்டது, சிறப்பான ஒரு விஷயமாகும்.
குத்சியா பேகம் என்பவர்தான் முதல் மகாராணி.!!!
அவரைத் தொடர்ந்து அவர் மகள் சிக்கந்தர் பேகம் ஆட்சி செய்தார்.
3a) அவரது மகளான
ஷாஜகான் பேகம் !!
எங்கள் பூதலூர் பழைய பள்ளிவாசல் இடத்தில் அழகிய பள்ளி உருவாகிறது அதற்கு இந்த பள்ளிவாசலுக்கும் இந்த பெயரையே சூட்ட எண்ணியுள்ளேன்!!!
1871 ஆம் ஆண்டு தாஜுல் மஸ்ஜிதை கட்டினார்.
தாஜ்மஹால் போல் உலகின் மிகச் சிறந்த கட்டிடங்களில் ஒன்று தாஜுல் மஸ்ஜித். தாஜுல் மஸ்ஜித் ‘நவீன இந்தியாவின் மிகப்பெரிய பள்ளிவாசல் அதில் நூலகம், ஆராய்ச்சி மையம் மற்றும் ஒரு அரபு பாடசாலை மதரஸா ஆகியவற்றை உள்ளடக்கி இருந்தது. தொடர்ந்து பாடசாலைகள், சிராய் (ஓய்வு இல்லங்கள்), நூலகம் மற்றும் பள்ளிவாசல்கள் போன்றவைகளை ஏற்படுத்தினார்.
இறைநம்பிக்கை உள்ளவராகவும் படிப்பார்வம் உள்ளவராகவும் இருந்தார்.
போபாலில் இந்துக்களின் பாதுகாப்பிற்காக சிறப்பு சட்டங்களை இயற்றினார். இந்து சொத்துகளை பாதுகாப்பதற்கான ஒரு இந்து சொத்து அறக்கட்டளை நிறுவினார். போபாலின் வரலாற்றை “தாஜுல் இக்பால்” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தமாக எழுதி ஆவணப்படுத்தினார்.
3b)இவர்
ஆட்சிக்குப் பின் அவரது மகள் சுல்தான் ஜஹான்பேகம் ஆட்சி செய்தார்.
இசுலாமியப் பெண்கள் பர்கா அணியும் கட்டாயம் இருந்ததால், அப்பெண்கள் பர்கா அணியாமல் சுதந்திரமாக கடைவீதிக்குச் சென்று வர வேண்டும் என்பதற்காக, பெண்களுக்கென்று பிரத்யேகமான ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ஒன்றைக் கட்டினார் சுல்தான் ஜஹான் பேகம்.
அவர் பெண்களுக்கென்று நிறுவிய ஒரு அமைப்புதான் போபால் பெண்கள் அமைப்பு (Bhopa; Ladies Club). பெண்களுக்கான பிரத்யேகமான வணிக வளாகத்திற்கு, சுல்தான் ஜஹான் பேகமும், அவ்வப்போது வந்து செல்வதுண்டு.
சுல்தான் ஜஹான் பேகத்தின் மீது, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மிகுந்த மரியாதை வைத்திருந்தனர்.
பிரிட்டிஷ் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் இங்கிலாந்தில் நடைபெற்ற விழாவுக்கு சுல்தான் ஜஹான் பேகத்தை சிறப்பு விருந்தினராக அழைத்ததும், போபால் நகர அரசு விழாவுக்கு , வேல்ஸ் இளவரசர் வருகை தந்ததும், இதற்கு முக்கிய சான்று.
சுல்தான் ஜஹான் பேகத்தின் அரசவைக்கு பெர்சியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து புலவர்களும், அறிஞர்களும் வருகை தருவார்கள். இவரது ஆட்சிக் காலத்தில், மாலை நேரத்தில் முஷைரா எனப்படும் கவி பாடும் அரங்கங்கள் மிகப் பிரசித்தம்.
இந்த நான்கு மகாராணிகளின் ஆட்சிக் காலத்தில் போபால் நகரத்துக்கு குடிநீர் வசதி, தபால் மற்றும் ரயில் வசதித்திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளன.
போபால் உள்ளாட்சி அமைப்பும் இவர்கள் காலத்தில்தான் ஏற்படுத்தப் பட்டுள்ளன.
ஐதராபாத் நிஜாமின் சாம்ராஜ்யத்தை அடுத்து, இந்தியாவில் பெரிய முஸ்லீம் சாம்ராஜ்யமாக விளங்கியது போபால் நகரம்தான்.
Jahan இவர் ‘பேகம்ஸ் ஆஃப் போபால்’ என்று புகழப்படும் போபால் அரசிகளின் வம்சத்தைச் சேர்ந்தவர்.
பெண் கல்வி, நிர்வாகச் சீர்திருத்தம் போன்றவற்றுக்காக இன்றளவும் புகழ்பெற்றுள்ள அவர், மக்களால் ‘சர்க்கார் அம்மா’ என்று அழைக்கப்பட்டார்.
போபால் அரச வம்சத்தின் ஷாஜஹான் பேகம் - முகம்மது கான் பகதூரின் மூத்த மகளாகப் பிறந்து உயிர் பிழைத்த ஒரே வாரிசு கைகுஸ்ரா ஜஹான்.
1867-ல் அவருடைய தந்தை முகம்மது கான் பகதூர் இறக்க, பட்டத்து இளவரசியாக அறிவிக்கப்பட்டார். அப்போது அவருடைய வயது 9. அவருக்கு ஆட்சிப் பொறுப்பாளராக பாட்டி சிகந்தர் பேகம் செயல்பட்டார். சிகந்தர் பேகத்தின் மறைவுக்குப் பிறகு கைகுஸ்ராவின் அம்மா ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். தாயின் இறப்புக்குப் பிறகு கைகுஸ்ரா ஆட்சிக்கு வந்தார்.
கல்விக்கு முன்னுரிமை
தனது பாட்டி, தாயைப் போல தன் ஆட்சிக் காலத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை ஜஹான் மேற்கொண்டார்.
போபாலில் பல முக்கியக் கல்வி நிறுவனங் களைத் தோற்றுவித்தார். 1918-ல் நாட்டிலேயே முதன்முறையாகக் கட்டாயத் தொடக்கக் கல்வி போபால் ஆட்சியின் கீழ் அறிவிக்கப்பட்டது. அவரது அரசால் அது இலவசமாகவும் வழங்கப்பட்டது.
அரசுக் கல்வி, அதிலும் குறிப்பாகப் பெண் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தியவர் கைகுஸ்ரா ஜஹான். அவரது ஆட்சிக் காலத்தில் பல்வேறு தொழில்நுட்பப் பயிலகங்கள், பள்ளிகள் உருவாக்கப்பட்டன. தகுதி பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக் கையையும் அவர் அதிகரித்தார்.
அகில இந்தியக் கல்வி மாநாட்டின் முதல் தலைவராகவும் கைகுஸ்ரா ஜஹான் செயல்பட்டுள்ளார்.
மேம்பட்ட சுகாதாரம்:-
இதற்கெல்லாம் மேலாக 1920-ல் இருந்து அவர் இறக்கும்வரை அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தராக அவர் திகழ்ந்தார். இன்றைய நாள்வரை அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கு வேந்தராகச் செயல்பட்ட ஒரே பெண் என்ற பெருமையைக் கொண்டவர் கைகுஸ்ரா ஜஹான்.
கைகுஸ்ரா ஜஹானின் மற்றொரு முக்கியப் பங்களிப்பு பொது சுகாதாரம். பரவலான தடுப்பூசி மருந்துத் திட்டம், அரசு நீர் விநியோகம், சுகாதாரம்-தூய்மைக்கான தரத்தை மேம்படுத்துதல் என மக்களின் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டினார். சமூக நலனை மேம்படுத்தும் அடிப்படைத் துறைகளான கல்வி, சுகாதாரப் பணிகளுக்கு இப்படிப் பல்வேறு வழிகளில் அவரது ஆட்சியில் மிகப் பெரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
நிகரற்ற நிர்வாகம்
கல்வி, சுகாதாரத் துறைகளைப் போலவே வரி சீர்திருத்தம், ராணுவம், காவல்துறை, நீதித் துறை, சிறைத் துறை, வேளாண்மை விரிவாக்கம், பாசன வசதிகள், பொதுப்பணித் துறை போன்றவற்றிலும் கைகுஸ்ரா ஜஹான் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். 1922-ல் சட்டப்பேரவை கவுன்சில், மேலவை ஆகியவற்றை உருவாக்கியதுடன், நகராட்சிகளுக்குத் தேர்தலையும் நடத்தியுள்ளார்.
1914-ல் அகில இந்திய முஸ்லிம் பெண்கள் சங்கத்தின் தலைவராக இவர் இருந்துள்ளார். கல்வி, சுகாதாரம், மற்ற துறைகள் சார்ந்து பல புத்தகங்களை எழுதியுள்ளார். பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். கைகுஸ்ரா ஜஹான் தனது ஆட்சிக் காலத்தில் உலக நாடுகளுக்குச் சென்றிருக்கிறார். 1911-ல் லண்டனில் நடைபெற்ற பிரிட்டன் அரசர் ஐந்தாம் ஜார்ஜ் பதவியேற்பு நிகழ்வில் அவர் பங்கேற்றிருக்கிறார்.
1901 முதல் 1926 வரை 25 ஆண்டு காலத்துக்கு பல்வேறு சீர்திருத்த நடவடிக் கைகளுடன் கைகுஸ்ரா ஜஹான் ஆட்சியை நடத்தினார். 1926-ல் பதவியைத் துறந்து தனது கடைசி மகன் ஹமிதுல்லா கானிடம் ஆட்சிப் பொறுப்பை அவர் ஒப்படைத்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பின் 71 வயதில் இறந்தார்.