роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

ро╡ிропாро┤рой், рооாро░்роЪ் 28, 2019

рокро│்ро│ிро╡ாроЪро▓்роХро│் рооீродு рокропроЩ்роХро░ро╡ாрод родாроХ்роХுродро▓்

பள்ளிவாசல்கள் மீது பயங்கரவாத தாக்குதல் ; முஸ்லிம் உலகம் புரிந்து கொள்ள வேண்டியது என்ன

وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا ۚ بَلْ أَحْيَاءٌ عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ (169) فَرِحِينَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِن فَضْلِهِ وَيَسْتَبْشِرُونَ بِالَّذِينَ لَمْ يَلْحَقُوا بِهِم مِّنْ خَلْفِهِمْ أَلَّا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (170) ۞ يَسْتَبْشِرُونَ بِنِعْمَةٍ مِّنَ اللَّهِ وَفَضْلٍ وَأَنَّ اللَّهَ لَا يُضِيعُ أَجْرَ الْمُؤْمِنِينَ
கடந்த வாரம் ஜும் ஆ தொழுகையை மகிழ்ச்சியுடன் நிறைவு செய்த உலக முஸ்லிம்களுக்கு அன்றைய தினம் நியூசிலாந்தின் பள்ளிவாசல்களில் ஜும் ஆ தொழுகைக்காக கூடியிருந்த மக்கள் மீது நடைபெற்ற பயங்கர வாத தாக்குதல்கள் மிகப்பெரும் அதிர்ர்ச்சியை அளித்தன.  இன்னாலில்லாஹி… நியூசிலாந்து, சுமார் 48 லட்சம் மக்கள் தொகையை கொண்ட நாடு. உலக அளவில் மக்கள் பாதுகாப்பாக  வாழ்வதற்கேற்ற இரண்டாம் நாடு என குளோபல் பீஸ் இண்டெக்ஸ் எனும் அமைப்பால் பட்டியலிடப்பட்டிருக்கிற நாடு. (the second-safest country in the world, behind Iceland). அங்கே சுமார் 46 ஆயிரம் முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். இது அந்நாட்டின் மக்கள் தொகையில் 1.2 சதவீதமாகும். அந்த நாடு   வடக்கு தீவு, தெற்கு தீவு என இரண்டு மிகப் பெரிய தீவுகளாக பிரிந்துள்ளது. அதில், தெற்கு தீவில் அமைந்துள்ள மிகப் பெரிய நகரம்தான் கிரைஸ்ட்சர்ச் நகரம்.. கிரைஸ்ட்சர்ச் நகரில் மட்டும் சுமார் 150க்கும் மேற்பட்ட மொழிகளை பேசுபவர்கள் மதம், சாதி, நிறம், நாடு உள்ளிட்ட எவ்வித வேறுபாடுமின்றி மிகுந்த நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகின்றனர். அங்கு சுமார் 3000 ஆயிரம் முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். அந்நகரில்  மஸ்ஜிதுன்னூர் என்ற பெயரில் ஒரு பெரிய பள்ளிவாசல் இருக்கிறது, 1977 ல் அடிக்கல் நாட்டப்பட்டு 1985 திறக்கப்பட்ட பள்ளிவாசல் அது. ஆனால் இந்தப்பள்ளிவாசல் கட்டப்படுவதற்கு நூறு வருடங்களுக்கு முன்பிருந்தே இங்கு முஸ்லிம்கள் வசிக்கிறார்கள்.  இந்த பள்ளிவாசலை உலகின் தெற்கு மூலை பள்ளிவாசல் என்று குறிப்பிடப் படுவதுண்டு.  (Al Noor Mosque was the world's southernmost mosque).  இந்தப் பள்ளிவாசலில் இருந்து 5 கீமீ தொலைவில் லின்வுட் இஸ்லாமிய மையயம் என்ற பெயரில் ஒரு பள்ளிவாசல் இருக்கிறது, இது சென்ற வருடம் தான் (2018) திறக்கப் பட்டது. இந்த இரண்டு பள்ளிவாசல்களும் தான் தற்போதைய பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காயின. கடந்த வாரம் மார்ச் 15 ம் தேதி  வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைக்காக மக்கள் அந்தப் பள்ளிவாசலில் கூடத் தொடங்கியிருந்த போது, (ஜும்ஆ பாங்கிற்கான நேரம் 1.43) மதியம் 1.40 மணியளவில் இயந்திரத் துப்பாக்கியோடு அந்தப் பள்ளிவாசலுக்குள் நுழைந்த 28 வயதான கிருத்துவ வெள்ளையின ஆஸ்திரேலிய பயங்கர வாதி Brenton Tarrant பிரண்டன் தன் கண்ணெதிரே பட்டவர்களை எல்லாம் வெறி பிடித்த மிருகம் போல் கொன்று குவித்தான், பெண்கள் சிறுவர்கள் என்று எவர் மீதும் அவன் இரக்கம் காட்டவில்லை. . தாக்குதலின் போது அவன் இங்கிலாந்து இராணுவத்தின் பாரம்பரிய அணிவகுப்புப் பாடலையும்,  செர்பிய தேசியப் பாடலையும் இசைக்கவிட்டிருந்தான். அவன் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது பள்ளிவாசலில் நின்றிருந்த ஒரு தொழுகையாளி  "ஹலோ சகோதரா" என அவனை வரவேற்றார், அவரைத்தான் அவன் முதலில் சுட்டுக் கொன்றான் ( ட்ரோண்டோ சிட்டி நியூஸ் "'Hello brother,' first Christchurch mosque victim said to shooter -  Toronto City News (15 March 2019). அந்நூர் மஸ்ஜிதில் அவன் தொடர்ந்து 42 பேரை சுட்டுக் கொன்றான், இறந்து விட்டார்களா என்று சந்தேகப்பட்டோரை அவன் பல முறை சுட்டான். ஒரு முறை சுட்டபின் வெளியே வந்து மீண்டும் வேறொரு துப்பாக்கியை எடுத்துச் சென்று இரண்டாம் முறையும் சுட்டான். அங்கிருந்து வெளியேறி 5 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள லின்வுட் இஸ்லாமிய மைய்யத்தில் மதியம் 1.55  ஜும் ஆ தொழுகைக்காக கூடியிருந்தவர்கள் மீது அவன் பயங்கரமாக சுட்டான். அங்கு 7 பேர் ஷஹீதாயினர். மருத்துவமனையில் ஒருவர் ஷஹீதானார். லின்வுட் பள்ளிவாசலின் பிரதான கதவு எங்கே இருக்கிறது என்று பயங்கரவாதிக்கு தெரியாமல் போனதே அங்கு பலி எண்ணிக்கை குறைவாக் இருப்பதற்கு காரணம். அங்கு வெளியே இருந்தவர்களை சுட்ட அவன் ஜன்னல் கண்ணாடி வழியே சுட்டான், இதற்குள் அங்கிருந்தவர்கள் சுதாகரித்துக் கொண்டார்கள். அங்கு தொழ வந்திருந்த அப்துல் அஜீஸ் வஹாப்ஜாதா என்பவர் தீரமாக செயல்பட்டு அங்கிருந்த  கிர்டிட் கார்டு மெசின் ஒன்றை அவன் மீது தூக்கி எறிந்து அவனது கவனத்தை திசை திருப்ப முயற்சித்துள்ளார். அவரை நோக்கி அவன் துப்பாக்கியால் சுடவே அங்கிருந்த கார்களுக்கு பின்னால் மறைந்து கொண்ட அவர்,  பயங்கரவாதி கீழே தவற விட்டிருந்த ஒரு துப்பாக்கியை எடுத்து அவன் மீது எறிந்துள்ளார், அதற்குள் பதட்டமடைந்த அந்த பயங்க்ர வாதி காரில் ஏறி தப்பிவிட்டான், இந்த பள்ளிவாசலுக்குத்தான் நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணியிரும் தொழுகைக்காக வந்துள்ளனர். துப்பாக்கி சூடு செய்தி கேட்டு பத்திரமாக  அவர்கள் வெளியேறிவிட்டனர் இதற்குள்ளாக இரண்டு இடங்களிலுமாக சேர்ந்து இதுவரை மொத்தம் ஐம்பது பேர் ஷஹீதாஹியுள்ள்ளனர். சுமர் 50 பேர் கடுமையாக காயமடைந்து மருத்துவ மனையில் சிகிட்சை பெற்று வருகின்றனர். உலக இஸ்லாமிய சகோதரத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக ஜோர்டன், எகிப்து, வங்க தேசம், பாகிஸ்தான், இந்தோனீசியா, ஐக்கிய அரபு அமீரகம், ஆஃப்கானிஸ்தான், சிரியா, குவைத் மற்றும் இந்தியா என பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்த தாக்குதலில் ஷஹீதாகியுள்ளனர். நமது அண்டை மாநிலமான கேரளமாநிலத்தை சார்ந்தவர்களும் ஷஹீதாகியுள்ளனர். இந்த தாக்குதலில் முஸாத் இபுறாகீம் என்ற மூன்று வயது சிறுவர் துப்பாக்கி குண்டு பலியாகி சஹீதானார். அவரது தந்தையோடும் சகோதரரோடும் பள்ளிவாசலுக்கு வந்த அந்த சிறுவர் மட்டும் ஷஹீதானார், மற்றவர்கள் உயிர் பிழைத்தனர். சுறுசுறுப்பான, விளையாட்டுத்தனமான மற்றும் எப்போதும் சிரிர்த்துக் கொண்டிருக்கிற குழந்தை முஸாத் என அவரது சகோதரர் ஆபித் கூறும் போது அவருக்கு தொண்டை அடைத்துக் கொண்டது. நியூசிலாந்தின் புட்சால் கால்பந்தாட்ட அணியின் கோல்கீப்பர் 33 வயது அத்தா இலய்யானும் ஷஹீதான்வர்களில் ஒருவர் இத்தாக்குதலில் முதலில் பலியானவர் 71 வயதுடைய தாவூத் நபி என்ற ஆப்கானிஸ்தான் காரர். பயங்கரவாதி வேறுயாரையும் தாக்கி விடக் கூடாது என்று தடுக்கச் சென்ற போது கொல்லப் பட்டார். எப்போதும் அகதிகளாக வந்த  மக்களை காப்பாற்றுகிற சிந்தனை கொண்ட அவர் இப்போதும் அவ்வழியிலேயே உயிர் நீத்ததாக அவரை அறிந்தவர்கள் கூறிகீறார்கள். செய்யது மில்னே என்ற 14 வயது இளவளும் ஷஹீதானவர்களில் ஒருவர். தனது தாயுடன் பள்ளிவாசலுக்கு வந்தவர் ஷஹீதானார். பாக்கிஸ்தானின் அபோதாபாத் பகுதியை சார்ந்த நயீம் ரஷீத் என்ற  50 வௌது பள்ளிக்கூட ஆசிரியர் பலரையும் காப்பாற்றிய நிலையில் அவருக்கு ஏற்பட்ட காயத்திற்கு சிகிட்சை பெறுகையில் மருத்துவமனையில் ஷஹீதானார். அவரது தீர பணிக்காக பக்கிஸ்தானிய அரசு அவருக்கு ஒரு விருது வழங்கும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். நயீம் ரஷீதின் மகன் தல்ஹா ரஷீத் என்ற 21 வயது இளைஞனும் ஷஹீதானார். குடும்பமே பலி ஷீஷன் ரஜா என்ற மெகானிகல் பட்டதாரி தக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக கிரைஸ்ட்சர்சில் குடியேறினார். தற்போதுதான் அவரது தந்தை குலாம் ஹுசைனையும் தாயார் கரம் பீவியையும் கிரைஸ்ட்சர்சுக்கு வரவழைத்திருந்தார். மூவரும் ஜும் ஆ தொழுகைக்கு சென்ற இடத்தில் ஷஹீதானார்கள். 40 வயதான பயோகெமிஸ்டரியில் பிஹெச்டி பட்டம் பெற்ற ஹாரூன் முஹம்மது ஷஹீதானவர்களில் ஒருவர் . அவரது மனைவியும் இரு குழந்தைகளும் தற்போது நிராதவராக உள்ளனர். அதே போல சுயமாக டியூசன் எடுத்து முன்னேறி பட்டம் பெற்று நியூஜிலாந்தில் குடியேறிய சையத் ஜகந்தாத் அலி ஷஹீதானார், அவரது மனைவியும் மூன்று இளம் குழந்தைகளும் தற்போது நிராதரவாக உள்ளனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த பர்ஹஜ் அஹ்ஸன் எலக்டிரிகல் இன் ஜினியர் . 10 வருடங்களுக்கு முன் நியூஜிலாந்தில் குடியேறியவர்.  மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும் ஆறு மாத ஆண்குழந்தைக்கும் தந்தை  ஷஹீதானார். நியூஜிலாந்தில் இப்படி நடக்கும் என்று நாங்கள் கற்பனை கூட செய்ய வில்லை என இந்தியாவில் உள்ள அவருடைய குடும்பத்தார் தெரிவித்தனர். ஹுஸ்னா அஹ்மது என்ற 44 வயது பெண்மணி தனது கணவர் பரீதுத்தீன் அஹ்மதுவுடன் அந்நூர் பள்ளிவாசலுக்குச் சென்றார், பெண்கள் பகுதியில் இருந்த அவர் துப்பாக்கி சத்தம் கேட்கவே ஆண்கள் பகுதியிலிருந்த தனது கணவனை தேடி வந்தார். அப்போது துப்பாக்கு சூட்டுக்கு பலியானார், அவரது கணவர் பக்கவாத பாதிப்போடு உயிர் பிழைத்தார். தான் கொலைகாரனை மன்னித்து விட்டதாக பரீதுத்தீன் கூறினார். இந்த தம்பதிகளுக்கு 14 வய்தில் ஒரு பெண் மக்ள் இருக்கீறார். ஜகரிய்யா புகாரிய்யா என்ற 33  வயது இளைஞர் – வெல்டர் – தனது பிறந்த நாளை பள்ளிவாசலில் கொண்டாடச் சென்றவர் ஷஹீதானார். 36 வய்து உமர் பாரூக் ஷஹீதானவர்களில் ஒருவர். பங்களாதேஷ் காரர். அவரது மனைவி கர்பமாக இருக்கிறார். அவரால் வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைக்கு வர முடியாது. எப்போதும் அது குறித்து என் கணவர் வருத்தப் படுவார். இந்த வாரம் ஜும் ஆ தொழுகைக்காக விடுமுறை எடுத்திருக்கிறேன் என்று மகிழ்சியோடு சொல்லி விட்டுச் சென்றார் என்று கூறினார் பங்களாதேஷில் இருக்கிற அவருடை மனைவி சன்திஜா ஜமான். என் கணவர் சொர்க்கத்தில் இருப்பார் என்று நான் நம்புகிறேன். நான் இதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அவர்  இறப்பதற்கு முன் கடுமையான வலியை அனுபவித்திருப்பாரே என்பதைதான் என்னால் பொருத்துக் கொள்ள முடியவில்லை என்று அவர் கூறினார் . அப்துஸ் ஸமத் எனும் 66 வயதுக்காரர். பிஹெச்டி பட்டதாரி. அந்நூர் மஸ்ஜிதில் அவ்வப்போது தொழ வைப்பவர், அவரும் ஷஹீதானார். பிஜி நாட்டில் 25 ஆண்டுகள் இமாமாக இருந்த ஹாபிஸ் மூஸா வலி படேல் என்ற 52 வயதுக்காரரும் ஷஹீதானவர்களில் ஒருவர். குஜராத்தை சேர்ந்த இவர் 20 நாட்களுக்கு முன் தான் நியூஜிலாந்திற்கு வந்துள்ளார். தனது குடும்பத்தார் அருகே இருக்கவே இவர் ஷஹீதானார் . இமாமாகவும் ஆசிரியராகவும் வழிகாட்டியாகவும் மிக திருப்திகரமாக பணியாற்றிய மிகுந்த மரியாதைக்குரியவர் என்று இவரைப் பற்றி பிஜி முஸ்லிம் லீக் கூறியுள்ளது. ஷஹீதானவர்களில் ஹம்ஸா முஸ்தபா என்ற இன்னொரு 16 வயது பள்ளிமாணவரும் அடக்கம். அவரது சகோதரர் மருத்துவ மனையில் சிகிட்சை பெற்றுவருகிறார். 50 வயதில் இஸ்லாமை தழுவிய பெண் சஹீதானவர்களில் லிண்டா ஆம்ஸ்ட்ராங் என்ற 65 வயது பெண்மணியும் ஒருவர் நியூஜிலாந்து நாட்டுக்காரரான இவர் தன்னுடைய 50 வது வயதில் இஸ்லாமை தழுவினார். அவர் ஏராளமான குடியேறிகளுக்கும் பயணிகளுக்கும் தனது இதயத்தையும் சமையலறையும் திறந்து விட்டவர் என்பதால் அந்நூர் கம்யூனிட்டியால அதிகம் போற்றப்படுகிறவராக லிண்டா இருந்தார். அம்ஜத் ஹாமித் என்ற 57 வயது இதய அறுவை சிகிட்சை நிபுணர் , பாலஸ்தீனத்தை சார்ந்தவர். எப்போதும் அந்நூர் மஸ்ஜிதுக்கு தொழுகைக்கு செல்பவர். அவரைப் பற்றி இதுவரை எந்த தகவலும் தெரியவில்லை. அவர் ஷஹீதாகி இருக்க கூடும் என்று குடும்பத்தினர் நம்புகீறார்கள். இரண்டு குழந்தைகளோடு அவரது மனைவி எதிர்காலத்தைப் பற்றி அச்சத்தோடு இருக்கிறார். ஹுசைன் அல் உமரீ என்ற 35 வயது இளைஞர் , ஐக்கிய அமீரகத்தை சேர்ந்தவர். புதிதாக வாங்கிய தனது காரில் மகிழ்சியோடு மஸ்ஜிதுக்கு சென்றவர் ஷஹீதானார். எகிப்தைச் சேர்ந்த ஒசாமா அத்னான் என்ற 37 வயது இளைஞர் இன் ஜினியரிங்கில் முதுகலைப் பட்டம் பெற்றவர். எகிப்தில் வேலை எதுவும் அமையாததால் நியூஜிலாந்தில் குடியேறியவர்,  நியூஜிலாந்த் அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. கடந்த வாரம் அவர் தனது மனைவியிடம் நியூஜிலாந்த் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் வாழ்ந்தாலும் மரணித்தாலும் அடக்கம் செய்யப்பட்டாலும் இங்கேயே இருக்க விரும்புகிறேன் என்று கூறினாராம். மஹபூப் கோகர் என்ற 65 வயது குஜராத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரி தன்னுடைய மகனைப் பார்ப்பதற்காக நியூஜிலாந்திற்கு வந்திருக்கிறார். அவரை இறக்கி விட்டு காரை பார்க் செய்வதற்காக மகன் சென்றுள்ளார். அதற்குள்ளாக தந்தை மஹ்பூப் ஷஹீதானார். அடுத்த நாள் சனிக்கிழமை மஹபூபும் அவரது மனைவியும் இந்தியா திரும்ப திட்டமிட்டிருந்தனர். இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் வதோரா பகுதியிலிருந்து தனது மகன் ரமீஸ் வோராவுக்கு பிறக்கப் போகிற குழந்தையை பார்ப்பதற்காக சென்றார் 56 வயது ஆசிப் வோரா. அவரும் அவருடை மகனும் அந்நூர் பள்ளிவாசலுக்கு சென்றிருந்தனர்..  ஜும் ஆ முடிந்த பிறகு அவருடைய மகனுக்கு பிறந்த குழந்தை வீடு வந்து சேருவதாக இருந்தது. அதற்குள் இளம் தந்தையான ரமீஸ் வோராவும் அவருடை தந்தை ஆசிப் வோராவும் ஷஹீதாகி விட்டனர். கேரளாவை சார்ந்த இளம் பெண் ஷஹீதா அன்ஸி அலிபாவா நியூஜிலாந்தில் ஒரு சூப்பர் மார்கெட்டில் வேலை செய்கிறார் கேரளாவை சார்ந்த பொன்னத் அப்துல் நஜீர். அவருடை மனைவி அன்ஸீ பாவா – நியூஜிலாந்தில் வேளான்மை பொறியியல் படிக்க திட்டமிட்டிருந்தார். இருவரும் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தான் கேரளாவிலிருந்து கிறைஸ்ட்சர்ச் நகருக்கு குடிபெயர்ந்திருந்தனர். தனது கணவருடன் பள்ளிவாசலுக்கு சென்றிருந்த அன்ஸி அலிபாவா துப்பாக்கி சூட்டுக்கு பலியாகி ஷஹீதானார். அவர், குடும்பத்தினர்களை மிக அக்கறையோடு கவனித்துக் கொள்பவராக இருந்தார் என கேரளாவில் உள்ள அவருடைய உறவினர்கள் கண்ணீரோடு கூறினர். ஜுனைத் கரா இஸ்மாயில் நியீஜிலாந்தில் பிறந்தவர் , அவருடைய் பெற்றோர் இருவரும் இந்தியர்கள். ஜுனைத் இந்தியாவை அதிகம் நேசிப்பார். அவரது வீட்டில் எப்போதும் இந்தியக் கொடி பறந்துகொண்டிருக்கும். இரட்டைப்பிறவியான அவர் சகோதரருடன் பள்ளிவாசலுக்கு சென்ற போது ஷஹீதானார். அவருடைய சகோதரர் உயிர் தப்பினார். இரட்டைப் பிறவிகளில் தான் குறும்புக்காரர் என்றும் ஜுனைத் நல்லவர் என்றும் அவர் புலம்பிக்கொண்டிருக்கிறார். கிருத்துவ மதத்திலிருந்து 1990 ல் இஸ்லாமை ஏற்றுக் கொண்ட முனீர் சுலைமான் என்ற நியூஜிலாந்த குடிம்கனும் ஷஹீதானவர்களில் ஒருவர் . சவூதி நாட்டவரான முஹ்ஸின் அல் ஹர்பீ தனது மனைவியுடன் பள்ளிவாசலுக்கு சென்றிருந்தார். அவரது மனைவி காயமுற்று விழுந்தார். முஹ்சின் ஷஹீதானார். இன்னும் ஆப்ரிக்கா உள்ளிட்ட  பல நாட்டுக்காரர்கள் ஷஹீதாஹியுள்ளனர். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். ஷஹீதுகளுக்கு அல்லாஹ் சிறப்பான அந்தஸ்தை வழங்குவானாக! யா அல்லாஹ் !  உறவினர்களை இழந்து பரிதவிக்கும் மக்களுக்கு நீ  ஒருவனே தகுந்த ஆறுதலை தரச் சக்தியுடையவன். யா அல்லாஹ் ஷஹீதுகளின் உறவினர்களுக்கு இந்த அதிர்ச்சியையையும் இழப்பையும் தாங்கிக் கொள்ள கூடிய பக்குவத்தையும் ஆறுதலையும் தந்தருள்வாயாக! காயமடைந்தவர்களுக்கு விரைவான பரிபூரண ஷிபாவை தருவாயாக! யா அல்லாஹ் உலகெங்கிலும் முஸ்லிம்களது வாழ்வை பாதுகாப்பானதாகவும் செழிப்பானதாகவும் ஆக்கியருள்வாயாக! இந்நிகழ்ழை leave city அமைதி நகரமான கிரிஸ்ட்சர்ச் நகரத்திற்கும் நியூஜிலாந்த் நாட்டிற்கும் நன்மைக்கும் ஹிதாயத்திற்கும் காரணமாக்குவாயாக! உலகம் முழுவதிலும் பரவி வருகிற கிருத்துவ வெள்ளையின் வெறித்தனத்திற்கு முடிவு கட்டும் நிகழ்வாக இந்நிகழ்வை ஆக்கியருள்வாயாக! யா அல்லாஹ் ! இந்த தாக்குதல் இதில் பலியான மக்களுக்கு எதிரான தாக்குதல் அல்ல. உன்னுடைய தீனுக்கு எதிரான தாக்குதல். யா அல்லாஹ் இவற்றை நீ கவனித்துக் கொள்வாயக! மேலும் மேலும் துன்பங்களை சகிக்க சக்தியற்ற பலவீனர்கள் நாங்கள் , எங்களை உனது சோதனைகளுக்கு களமாக ஆக்கிவிடாதே இறைவா!  முஸ்லிம் உம்மத்தை பாதுகாத்தருள்வாயாக! தீனுல் இஸ்லாமிற்கு எதிராக சிந்திப்பவர்களுக்கு நீ ஹிதாயத்தை தந்தருள்வாயாக! ஜும் ஆ தொழ்கைக்காக பள்ளிவாசலில் கூடியிருந்த போது தீடீர் தாக்குதலில் முஸ்லிம்கள் என்பதற்காக கொல்லப் பட்ட இவர்கள் அனைவரும் ஷஹீதுகள். இவர்கள் மரணித்து விட்டாலும் அல்லாஹ்விடம் அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்கீறது திருக்குர் ஆன். وَلَا تَقُولُوا لِمَن يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ ۚ بَلْ أَحْيَاءٌ وَلَٰكِن لَّا تَشْعُرُونَ (154) وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ (155) الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ (156) أُولَٰئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ ۖ وَأُولَٰئِكَ هُمُ الْمُهْتَدُونَ (157)  நமது வாழ்வில் நாம் சந்தித்த மாபெரும் துயரங்களில் ஒன்றுக்காக நாம் இன்னாலில்லாஹ் சொல்வோம். அல்லாஹ் அமைதியையை நிம்மதியை தருவான். ஆனால் ஷஹீதானவர்களை அல்லாஹ்விடம் உயர் அந்தஸ்தில் இருக்கிறார்கள். அல்லாஹ் அவருகளுக்கு விசேஷ உணவுகளை இருப்பிடங்களை அளித்து கவுரவிக்கிறான்.

роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்