http://shafiwahidhi.blogspot.com/p/blog-page_343.html?m=1
நம்முடன் இணைந்து இருப்பவர்கள்
புதன், ஏப்ரல் 24, 2019
ஞாயிறு, ஏப்ரல் 21, 2019
பராஅத் இரவு,
ليلة النصف من شعبان قوموا ليلها وصوموا نهاره* http://madeena.org/vb/t55979
*பராஅத்தே வருக*! *பரக்கத்தைத் தருக* WARASATHUL ANBIYA http://warasathulanbiya.blogspot.com/2015/05/nisfu-shaban.html?m=1
பராஅத் இரவு அதன் மாண்பும், மகத்துவமும்….!!! http://vellimedaiplus.blogspot.com/2017/05/blog-post_10.html?m=1
இன்றியமையாத இனிய மூன்று அருட்கொடைகள்!! http://vellimedaiplus.blogspot.com/2015/05/blog-post_37.html?m=1
வெள்ளி அரங்கம்: புனிதமிக்க பராஅத் இரவு http://velliarangam.blogspot.com/2018/04/blog-post_26.html?m=1
http://usmanihalonline.blogspot.com/2013/06/blog-post_9750.html?m=0
http://vellimedai.blogspot.com/2012/07/normal-0-false-false-false-en-us-x-none.html?m=1
http://vellimedai.blogspot.com/2011/07/blog-post_14.html?m=1 http://manbayee-alim.blogspot.com/2014/06/blog-post_13.html?m=1 http://mohamedibrahimajmal.blogspot.com/2015/05/blog-post_4.html?m=1 maslahi: *பராஅத்: வினாக்களும் விடைகளும்* http://sadhak-maslahi.blogspot.com/2012/07/blog-post.html?m=1 *பாக்கிய மிகு பராஅத்தின் மகிமை* https://m.facebook.com/official.fassiyanews/posts/469098946513441 maslahi: பராஅத் சிறப்புக் கட்டுரை http://sadhak-maslahi.blogspot.com/2013/06/blog-post_20.html?m=1 வெள்ளிமேடை منبر الجمعة: பராஅத் இரவு http://vellimedai.blogspot.com/2013/06/blog-post_23.html?m=1 *பாக்கியமான பராஅத்* உரை *மௌலவி காஜாமுயீனுத்தீன் பாகவி ஹஜ்ரத் அவர்கள்* https://youtu.be/0tOi1p-D8p8 பராஅத் இரவின் சிறப்பு மௌலவி சதீதுத்தீன் பாகவி ஹஜ்ரத் அவர்கள் https://youtu.be/-1P2iA-isKo https://youtu.be/1H5tAKqZ_Tk அருள் நிறைந்த பராஅத் மௌலவி அபூபக்கர் உஸ்மானி ஹஜ்ரத் அவர்கள் https://youtu.be/LVqCBH7LvSA பராஅத் இரவின் சிறப்புகள் மௌலவி நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்கள் லால்பேட்டை https://youtu.be/beNWXgvpADY https://youtu.be/ZYYJpTN5by8 https://youtu.be/2_qlxn9LYRI
ஞாயிறு, ஏப்ரல் 14, 2019
லிபியா போல இந்தியா வரவேண்டும்,
மறைந்த கடாபியின் மறுபக்கம்!
1. லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம்.
2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது.
3. வீடு மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது , லிபியாவில் வாழும் அனைத்து மக்களும் வீடுகள் பெறுகின்ற வரை தனக்கோ, தனது பெற்றோருக்கோ வீடு கட்டமாட்டேன் என்று கடாபி சபதம் பூண்டிருந்ததால், அவரது பெற்றோர்கள் இறக்கும் போது அவர்கள் வீடுகள் இல்லாமல் கூடாரங்களிலேயே இறந்தனர் .
4. அந்த நாட்டில் மணம் முடிக்கும் ஒவ்வொரு புதுமணத் தம்பதியினர்களுக்கும் அந்நாட்டின் அரசு 60,000 தினார், அதாவது அமெரிக்க பணம் 50,000 டாலர் அதாவது இந்திய பணம் சுமார் 28,00,000 ரூபாய் பணத்தை இலவசமாக வழங்கியது.
5. லிபியாவில் கல்வி மற்றும் மருத்துவம் முற்றிலும் இலவசம், கடாபி அதிகாரத்தை கைப்பற்றும் பொழுது லிப்ய மக்களில் எழுத படிக்கத் தெரிந்தோர் வெறும் 25% மட்டுமே , ஆனால் அவர் ஆட்சிக்கு வந்ததன் பின் அது 83% உயர்ந்தது.
6. எந்த ஒரு லிபியனும் விவசாயம் செய்ய விரும்பினால் அவன் விவசாயம் செய்யும் இடத்தில் வாழ்வதற்கு அவசியமான ஒரு வீடும், விவசாயம் செய்வதற்கு தேவையான காணி நிலமும் விவசாய உபகரணங்களும், விதைகளும் பசளைகளும் இன்னும் இதற்கு அவசியமான அனைத்தும் முற்றிலும் இலவசம்.
7. லிபியர்களுக்கு லிபியாவில் மருதுவ வசதி பெறுவதற்கோ அல்லது வெளிநாட்டில் மேற்படிப்பு தொடர்வதற்கோ வசதி இல்லை எனில் அந்த நாட்டு அரசு இலவசமாக அவர்களுக்கு உதவிகள் வழங்கும்.
8. எந்த ஒரு லிபியனும் ஒரு வாகனம் வாங்கும் போதும் அதன் மதிப்பில் அரைவாசித் தொகையை அந்நாட்டின் அரசு இலவசமாக வழங்கும்.
9. அந்த நாட்டில் ஒரு லிட்டர் பெற்றோலின் விலை வெறும் $0.13 மட்டுமே.
10. லிபியா உலக வங்கிகளிடம் இருந்து இதுவரை கடன் வாங்கியது கிடையாது.
11. உயர் கல்வி கற்று பட்டதாரி ஆகும் மாணவர்கள் தமக்குரிய வேலை வாய்ப்பு கிடைக்காது போகும் பட்சத்தில், அவர்களுக்குரிய தகுந்த தொழில் கிடைக்கும் வரை அந்தத் தொழிலுக்குரிய சம்பளத்தை அந்த அரசு மாத மாதம் வழங்கி வந்தது.
12. அந்த நாட்டிற்கு கிடைக்கும் எண்ணெய் வருமானத்தில் ஒரு தொகையை அந்த நாட்டு மக்களின் வங்கிக் கணக்கில் சேமிப்பில் இடும் அந்த அரசு.
13. ஒவ்வொரு குழந்தை பிரசவத்தின் போதும் அந்தத் தாயிற்கு அந்த நாட்டு அரசு 5500 அமெரிக்க டாலர் நாணயத்துக்கு பெறுமதியான லிபிய தினாரை வழங்கும் அதாவது இந்திய பணம் மூன்று லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய்.
14. 40 ரொட்டிகள் வெறும் $ 0.15 தினார் மட்டுமே.
15. 25% லிபியர்கள் பல்கலைக்கழக பட்டதாரிகளாவர்.
16. உலகிலேயே மிகப்பெரிய செயற்கை ஆறை உருவாக்கி லிபியாவின் பாலை நிலத்தை பசுமையாக்கியவர் என்ற பெருமை கடாபிக்கு உண்டு.
புதன், ஏப்ரல் 10, 2019
ஷபே பராத்இஸ்லாத்தின் பார்வையில் ஷஃபான் மாதம் ,
*_புதுக்கோட்டை மாவட்ட அரசு காஜி ..._* 🌹 *வருகின்ற 9ம் தேதி வியாழன் மாலை வெள்ளி இரவு பராஅத் உடைய இரவாகும்*
🌹மறக்காமல் அன்று மஃரிப் பிறகு ஒவ்வொரு வரும் மூன்று யாஸீன்கள் ஓதி துஆ செய்யவும்
அன்று ஸஹர் செய்து வெள்ளிக்கிழமை பகல் நோன்பு நோற்கவும்.
ஷஃபான் மாதம் பிறை *
*15 ம் (பராஅத்) நாளென்று சூரா யாஸீன் ஓதுவதன் அவசியம்*
🌹ஷஃபான் மாதம் பிறை 15 ம் இரவில் மஃரிப் தொழுகையின் பிறகு மூன்று தடவைகள் சூரா யாஸீனை : 1️⃣முதலாவது தடவை ஓதும் போது 'பாவமன்னிப்புத் (பிழை பொறுக்கத்) தேடியும், 2️⃣இரண்டாவது தடவை ஓதும் போது ரிஸ்க் எனும் உணவு விஸ்தீரனம் பெறவும், 3️⃣மூன்றாவது தடவை ஓதும் போது சரீர சுகத்தையும் ஆரோக்கியத்தையும் வேண்டி ஸாலிஹான அமல்கள் செய்வதற்கு நீண்ட ஆயுளை கேட்டு பிராத்தனை செய்து ஓத வேண்டும்'.
🌹அல்லாஹ் ஷஃபான் 15வது இரவில் சூரிய அஸத்தமனத்தின் போது முதல் வானத்திற்கு இறங்கி *என்னிடத்தில் பாவமன்னிப்புத் தேடுபவர் யார்? அருள் வேண்டுபவர் யார்? துயர் நீங்கக் கேட்பவர் யார்? மன்னிப்பதற்கும் அருள் வழங்கவும் ஆரோக்கியம் வழங்கவும் நான் தயாராக இருக்கிறேன்.* என்று விடியும் வரையில் கூறிக் கொண்டே இருப்பான். எனவே *அவ்விரவில் எழுந்து வணங்குங்கள். பகலில் நோன்பு வையுங்கள்.* என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்; ஹழ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு
நூல் : இப்னுமாஜஹ்:1388
🌹கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: ஒவ்வொன்றுக்கும் ஒரு இதயம் இருக்கிறது. குர்ஆனுடைய இதயம் (சூரா) யாஸீனாகும். யார் யாஸீன் (சூராவை) ஓதுகிறாரோ அதை ஓதியதற்காக அவர் பத்து தடவை குர்ஆனை ஓதிய நன்மையை அல்லாஹ் பதிவு செய்கிறான்.
நூல் திர்மிதீ 2812, தாரமி 3282
🌹கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: யார் இறைவனின் திருப்பொருத்தம் நாடி யாசீன் (சூராவை) ஒதுகிறாறோ அவர் மன்னிக்கப்பட்டவர் ஆவார்.
அறிவிப்பவர்: ஹழ்ரத் ஜுன்துப் ரலியல்லாஹு அன்ஹு.
நூல் தாரமி 3322, இப்னு ஹிப்பான் 2639
🌹கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:யார் அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி யாஸீன் ஓதுகிறாரோ அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. ஆகவே அதை உங்களில் இறந்தவர்களின் சமூகத்தில் ஓதுங்கள்.
அறிவிப்பவர்: ஹழ்ரத் மஃகில் ரலியல்லாஹு அன்ஹு,
நூல்கள் முஸ்னத் அஹ்மத், பைஹகி 2458, மிஷ்காத் 2178
🌹“எவர் முற்பகலில் யாஸீன் ஓதுவாரோ அவருடைய தேவை நிறைவேற்றப்படும்” (நூல் தாரமி: 3418. மிஷ்காத்: 2171), “யாஸீனை காலையில் ஓதினால் மாலை வரை, மாலையில் ஓதினால் காலை வரை அன்றைய தினத்தின் காரியங்கள் கைகூடும்” என்று இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவிக்கின்றார்கள் (நூல் தாரமி)
🌹ஆகவே தான் யாஸீன் ஓதி பராஅத் அன்று (மக்ரிப்) நேரத்தில் துஆவை நாம் கேட்டு வருகிறோம். (நூல் மிஷ்காத் ஹதீஸ் எண் 1308 விரிவுரையில், அல்லாமா முல்லா அலி காரி ரஹ்மதுல்லஹி அலைஹி அவர்கள் தனது மிர்காதில் எழுதுவதாவது., ஹழ்ரத் உமர் இப்னு கத்தாப், ஹழ்ரத் இப்னு மஸ்ஊத் முதலான நாயகத் தோழர்கள் மற்றும் முன்னோர்களான நாதாக்கள் (ரலியல்லாஹு அன்ஹும்) அதிகமானோரும் பின்வரும் துஆவை ஓதி வந்தார்கள்) 'யா அல்லாஹ்! நீ எங்களை அபாக்கியவான்களாக பதிவு செய்து இருந்தால் அதை அழித்து எங்களை பாக்கியவான்களாக எழுது. நீ எங்களைப் பாக்கியவான்களாக எழுதி இருந்தால் அதை அப்படியே உறுதிப்படுத்து ஏனெனில் நீ நாடுவதை அழிப்பாய், நாடுவதை உருதிப்படுத்துவாய் உன்னிடம் மூலநூல் உள்ளது'. இந்த துஆவை ஷாஅபான் 15ஆவது (பராஅத்) இரவில் ஓதியதாக ஹதீஸில் வந்துள்ளது. (நூல் மிர்காத்)
🌹பராஅத் இரவில் நாமும் சஹாபாக்களைப் பின்பற்றி இந்த ஹதீஸில் வந்த துஆவைத் தான் ஓதி வருகிறோம் ஒவ்வொன்றுக்கும் தவணை குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. எனினும் அல்லாஹ் அவன் நாடியதை அதில் அழித்து விடுவான். அவன் நாடியதை உறுதியாக்கிவிடுவான் அவனிடத்தில் அசல் பதிவு இருக்கிறது”
(அல் குர்ஆன்.13:38, 39)
🌹எவர் தனது ரிஸ்க் (வாழ்வாதாரம்) விரிவடைய வேண்டும் தனது ஆயுள் நீளமாக வேண்டும் என்று விரும்புவாரோ அவர் தனது உறவுகளை சேர்த்துக்கொள்ளட்டும்.
நூல் புகாரி: 5986, முஸ்லிம்: 1982
🌹மேலே கூறப்பட்ட குர்ஆன் வசனம், ஹதீஸில் ஒரு மனிதனின் ஆயுள் காலம், அவனது ரிஸ்க் கூடவும் குறையவும் செய்யும் என்று தெரிகிறது.“அல்லாஹ்வுடைய விதியான ஆயுள் காலம் எப்படி அதிகரிக்கப்படும்” என்று, இந்த நபிமொழித் தொடரில்., இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள்., அல்லாஹ் குர்ஆனில், “அவன் தான் உங்களைக் களிமண்ணால் படைத்து உங்களுக்குரிய தவணையை வாழ்நாளைக் குறிப்பிட்டு நிர்ணயம் செய்தவன். அவனிடத்தில் ஒரு குறிப்பிட்ட தவணையும் உண்டு” என்று (அல்குர்ஆன் 6: 2-ல்) கூறுகின்றான். இந்த வசனத்தில் இரண்டு அஜலை தவணையை குறிப்பிடுகிறான் முதல் தவணை என்பது பிறப்பிலிருந்து இறப்புவரை உள்ள இவ்வுலக ஆயுள் காலம் ஆகும். இரண்டாவது தவணை என்பது இறந்த பிறகு இறைவனை மறுமையில் சந்திக்கும் வரையில் உள்ள கபுறுடைய ஆயுள் காலம் ஆகும்.
🌹ஒருவன் அல்லாஹ்வுக்குப் பயந்து தனது பெற்றோர்களை ஆதரித்து, உறவினர்களை சேர்த்துக்கொண்டால் அவனுடைய கபுருடைய ஆயுள் காலத்திலிருந்து அவன் நாடுமளவு எடுத்து இவ்வுலக ஆயுள் காலத்தை நீட்டுவான். இதன்படி கபுறுடைய ஆயுள் காலம் அவன் எடுத்த அளவு குறையும். அல்லாஹ்வுக்கு மாறு செய்து உறவுகளைத் துண்டித்து வாழ்ந்தால் இவ்வுலக ஆயுளைக் குறைத்து கபுறுடைய ஆயுளைக் கூட்டிவிடுவான். ஆக, மொத்தத்தில் மாற்றம் நிகழாமல், இவ்வுலக ஆயுள் காலம் கூடவும் குறையவும் செய்யும், என்று அற்புதமான விளக்கத்தை இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) வழங்கினார்கள்.
நூல் தப்ஸீர் குர்துபி .
புதன், ஏப்ரல் 03, 2019
பிஜேபி ஆட்சியில் என்ன நடந்தது,
இந்த 5 நிமிட ராகுல் காந்தி பேச்சால்தான்
1998 முதல் 2016 வரையில் குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சி செய்த காலத்தில் அங்கே நடைபெற்ற கலவரங்களின் எண்ணிக்கை 35,568. 2014 -16 காலத்தில் மட்டும் மதவெறித் தாக்குதலில் 305 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இது நேஷனல் கிரைம் ரிகார்ட்ஸ் பீரோ (NCRB) வெளியிட்டிருக்கும் கணக்கு.
மோடி ஆட்சிக்காலத்தில் 2002-ல் நடைபெற்ற படுகொலையின் போது அரசு கணக்கின்படியே 1044 பேர் கொல்லப்பட்டனர். 223 பேர் காணாமல் போயினர். 2500 பேர் படுகாயம் அடைந்தனர். இது மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த கணக்கு. உண்மையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட மிகவும் அதிகம் என்பதே பல்வேறு அமைப்புகளின் மதிப்பீடு.
மத்திய பிரதேசத்தில் 2003 முதல் 2016 வரையிலான பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் NCRB கணக்கீட்டின்படி 32,050 மதவெறித் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. 2014 – 16 காலகட்டத்தில் மட்டும் 138 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
சட்டிஸ்கரில் 2003 – 2016 ஆண்டுகளில் 12,265 மதவெறி தாக்குதல்கள் நடந்திருக்கின்றன.
உத்தர பிரதேசத்தில் 2017-ல் மட்டும் 195 மதவெறித் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. 44 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 542 பேர் காயமடைந்திருக்கின்றனர்.
இவையெல்லாம் ஆதாரப்பூர்வமான அரசாங்க புள்ளி விவரங்கள். எத்தனை ஆதாரங்கள் இருந்தாலும், இடையறாத ஊடகப் பிரச்சாரத்தின் வாயிலாக, பொய்யை மெய்யாக்கிவிட முடியும் என்பது ஆர்.எஸ்.எஸ்.-ன் கணக்கு.
: மத்திய உள்விவகாரத்துறை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர், கடந்த 2017 ஜூலை 25-ம் தேதியன்று பாராளுமன்றத்தில் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார். அதில் கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற வகுப்புவாத மற்றும் இனவாதக் கலவரங்கள் குறித்த புள்ளிவிவரக் கணக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை கிட்டத்தட்ட மோடி அரசின் மூன்றாண்டு ‘சாதனைகளின்’ ஒப்புதல் வாக்குமூலமாக அமைந்துள்ளது.
தேசிய குற்றப் பதிவுத்துறை (NCRB) வெளியிட்டுள்ள தகவல்களின் படியே அந்த அறிக்கை உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதாலும், அதை மத்திய அமைச்சரே பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாலும் அந்தப் புள்ளிவிவரங்களை மோடியின் பக்தாள்கள் யாரும் சந்தேகப்பட முடியாது.
அந்த அறிக்கையின் படி நாடு முழுவதும் நடைபெற்றுள்ள வகுப்புவாத, இனவாத, வன்முறைகள் மற்றும் குற்றங்களின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 41% உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 2014- ம் ஆண்டு நடைபெற்ற இனவாத, வகுப்புவாத வன்முறைகளின் மொத்த எண்ணிக்கை 336. ஆனால் அதுவே கடந்த 2016 -ம் ஆண்டில் 475-ஆக உயர்ந்திருக்கிறது.
கோவையில் இந்து முன்னணி நடத்திய கலவரம் (கோப்புப்படம்)
யூனியன் பிரதேசங்களைத் தவிர்த்து, மாநிலங்களில் மட்டும் பார்த்தால் சுமார் 49% வகுப்புவாத, இனவாத வன்முறைகள் அதிகரித்துள்ளன. மோடி ஆட்சியில் அமர்ந்த பின்னர் உத்தரப் பிரதேசத்தில் 2014 -ம் ஆண்டு நடைபெற்றதை விட 2016 -ம் ஆண்டில் 346% -மும், உத்திரகாண்டில் 450% -மும், மத்தியப் பிரதேசத்தில் 420% -மும், ஹரியானாவில் 433% -மும் அதிகரித்துள்ளன. வகுப்புவாத, இனவாத வன்முறைகள் எதையும் 2014 -ல் சந்தித்திராத பீஹார், 2016 -ம் ஆண்டில் எட்டு வன்முறைச் சம்பவங்களைச் சந்தித்திருக்கிறது.
இந்தப் புள்ளிவிவரக் கணக்கில் இ.பி.கோ 153ஏ, 153பி ஆகிய பிரிவுகளின் படி பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மாட்டுக்கறி மற்றும் மாடுகள் விற்பனை தொடர்பாக நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் புள்ளி விவரங்களையும் இணைத்துப் பார்த்தால், பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலும், வகுப்புவாத வன்முறைகளின் அதிகரிப்பு விகிதம் 1000% -க்கும் மேலானதாகவே இருக்கும்.
பிரபல்யமான பதிவுகள்
-
பத்ரு ஸஹாபாக்கள ் இரவு நமக்கு ரமலான் பிறை 17 அல்லாஹ்வின் கிருபையால் இஸ்லாத்தினb் முதல் போர் நடந்த நாள்.. பத்ரு போர் 313 ஸஹாபாக்கள் ...
-
இஸ்லாமிய கேள்விகளும் அதற்கான பதில்களும் ஸஹாபாக்களில் இரண்டு சிறகுடையவர் என்ற சிறப்பு பெற்ற நபித்தோழர் யார்? விடை: ஜஃபர் பின் அபீதாலிப்(ரலி)...
-
இஸ்லாமிய கேள்வி பதில்* 1. நாம் யார்? *நாம் முஸ்லிம்கள்.* 2. நம் மார்க்கம் எது? *நம் மார்க்கம் இஸ்லாம்.* 3. இஸ்லாம் என்றால் என்ன? *அல்...
-
https://youtu.be/CuQi6wXI9uo நோக்கங்களில் ஒன்று, ஒருவர் தன் பாலியல் தேவைகளை அனுமதிக்கப்பட்ட வழிகளில் நிறைவு செய்துகொள்ள வேண்டும் என்பதாகும்...