இந்த 5 நிமிட ராகுல் காந்தி பேச்சால்தான்
1998 முதல் 2016 வரையில் குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சி செய்த காலத்தில் அங்கே நடைபெற்ற கலவரங்களின் எண்ணிக்கை 35,568. 2014 -16 காலத்தில் மட்டும் மதவெறித் தாக்குதலில் 305 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இது நேஷனல் கிரைம் ரிகார்ட்ஸ் பீரோ (NCRB) வெளியிட்டிருக்கும் கணக்கு.
மோடி ஆட்சிக்காலத்தில் 2002-ல் நடைபெற்ற படுகொலையின் போது அரசு கணக்கின்படியே 1044 பேர் கொல்லப்பட்டனர். 223 பேர் காணாமல் போயினர். 2500 பேர் படுகாயம் அடைந்தனர். இது மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த கணக்கு. உண்மையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட மிகவும் அதிகம் என்பதே பல்வேறு அமைப்புகளின் மதிப்பீடு.
மத்திய பிரதேசத்தில் 2003 முதல் 2016 வரையிலான பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் NCRB கணக்கீட்டின்படி 32,050 மதவெறித் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. 2014 – 16 காலகட்டத்தில் மட்டும் 138 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
சட்டிஸ்கரில் 2003 – 2016 ஆண்டுகளில் 12,265 மதவெறி தாக்குதல்கள் நடந்திருக்கின்றன.
உத்தர பிரதேசத்தில் 2017-ல் மட்டும் 195 மதவெறித் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. 44 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 542 பேர் காயமடைந்திருக்கின்றனர்.
இவையெல்லாம் ஆதாரப்பூர்வமான அரசாங்க புள்ளி விவரங்கள். எத்தனை ஆதாரங்கள் இருந்தாலும், இடையறாத ஊடகப் பிரச்சாரத்தின் வாயிலாக, பொய்யை மெய்யாக்கிவிட முடியும் என்பது ஆர்.எஸ்.எஸ்.-ன் கணக்கு.
: மத்திய உள்விவகாரத்துறை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர், கடந்த 2017 ஜூலை 25-ம் தேதியன்று பாராளுமன்றத்தில் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார். அதில் கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற வகுப்புவாத மற்றும் இனவாதக் கலவரங்கள் குறித்த புள்ளிவிவரக் கணக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை கிட்டத்தட்ட மோடி அரசின் மூன்றாண்டு ‘சாதனைகளின்’ ஒப்புதல் வாக்குமூலமாக அமைந்துள்ளது.
தேசிய குற்றப் பதிவுத்துறை (NCRB) வெளியிட்டுள்ள தகவல்களின் படியே அந்த அறிக்கை உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதாலும், அதை மத்திய அமைச்சரே பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாலும் அந்தப் புள்ளிவிவரங்களை மோடியின் பக்தாள்கள் யாரும் சந்தேகப்பட முடியாது.
அந்த அறிக்கையின் படி நாடு முழுவதும் நடைபெற்றுள்ள வகுப்புவாத, இனவாத, வன்முறைகள் மற்றும் குற்றங்களின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 41% உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 2014- ம் ஆண்டு நடைபெற்ற இனவாத, வகுப்புவாத வன்முறைகளின் மொத்த எண்ணிக்கை 336. ஆனால் அதுவே கடந்த 2016 -ம் ஆண்டில் 475-ஆக உயர்ந்திருக்கிறது.
கோவையில் இந்து முன்னணி நடத்திய கலவரம் (கோப்புப்படம்)
யூனியன் பிரதேசங்களைத் தவிர்த்து, மாநிலங்களில் மட்டும் பார்த்தால் சுமார் 49% வகுப்புவாத, இனவாத வன்முறைகள் அதிகரித்துள்ளன. மோடி ஆட்சியில் அமர்ந்த பின்னர் உத்தரப் பிரதேசத்தில் 2014 -ம் ஆண்டு நடைபெற்றதை விட 2016 -ம் ஆண்டில் 346% -மும், உத்திரகாண்டில் 450% -மும், மத்தியப் பிரதேசத்தில் 420% -மும், ஹரியானாவில் 433% -மும் அதிகரித்துள்ளன. வகுப்புவாத, இனவாத வன்முறைகள் எதையும் 2014 -ல் சந்தித்திராத பீஹார், 2016 -ம் ஆண்டில் எட்டு வன்முறைச் சம்பவங்களைச் சந்தித்திருக்கிறது.
இந்தப் புள்ளிவிவரக் கணக்கில் இ.பி.கோ 153ஏ, 153பி ஆகிய பிரிவுகளின் படி பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மாட்டுக்கறி மற்றும் மாடுகள் விற்பனை தொடர்பாக நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் புள்ளி விவரங்களையும் இணைத்துப் பார்த்தால், பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலும், வகுப்புவாத வன்முறைகளின் அதிகரிப்பு விகிதம் 1000% -க்கும் மேலானதாகவே இருக்கும்.
роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:
роХро░ுрод்родுро░ைропிроЯுроХ