роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

рокுродрой், роЬூрой் 12, 2019

ро╕்рокெропிрой் рооுро╕்ро▓ிроо்роХро│் ро╡ெро│ிропேро▒்ро▒рооுроо் роЗро▓роЩ்роХை рооுро╕்ро▓ிроо்роХро│் рокெро▒ ро╡ேрог்роЯிропே рокாроЯрооுроо்,

ஸ்பெயின் முஸ்லிம்கள் வெளியேற்றமும் இலங்கை முஸ்லிம்கள் பெற வேண்டியே பாடமும்.

"ஒவ்வொரு முஸ்லீமும் கட்டாயம் வாசிக்க வேண்டியது."

அது 1609 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் திகதி...
ஸ்பெயினின் கட்டலோன் பகுதியில் அமைச்சரவையை கூட்டுகிறார் மன்னர் மூன்றாவது பிலிப்.

800 வருடங்களுக்கு மேலாக ஸ்பெயினில் வாழ்ந்த முஸ்லிம்கள் வேளியேற வேண்டும் அல்லது அங்கேயே இருக்க வேண்டுமானால் கிருஸ்தவ மதத்துக்கு மாற வேண்டும் என்கிற அரச கட்டளை பிறப்பிக்கப்படுகிறது .
அமைச்சர் அவையில் பலத்த கரகோஷம். மன்னர் நல்ல முடிவை எடுத்துள்ளதாக அங்கிருந்தோர் பேசிக்கொள்ளுகிறார்கள்.

காட்டுத்தீயாக செய்தி அப்போதைய  ஸ்பெய்ன் முழுவதுமே பரவுகிறது.

நேற்றுவரை தேசிய கீதம் பாடி, நமது நாடு
நாம் கட்டலோனியர்கள் என்கிற தேசிய வாத  பெருமை  கொண்டிருந்த முஸ்லிம்கள்,

'நாம் பிறந்த இதே மண்ணிலே இருந்து வெளியேற்றப்பட போகிறோமா ?...'
என  அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்  .

1609 தொடக்கம் 1614 வரை 10 இலட்சத்த்துக்கும் அதிகமான பரம்பரையின்  எண்ணிக்கை தெரியாமலே வாழ்ந்த முஸ்லிம்கள் உடுத்த உடையுடன் முற்றுமுழுதாக அங்கிருந்து துடைத்து எறியப்பட்டனர்.

உள்ளே இஸ்லாத்தை பின்பற்றி வெளியே கிருஸ்தவர்களாக வேடம் போட நினைத்த அப்போதைய ஸ்பெயினில் இருந்த 40 வீதமான முஸ்லிம்கள் ,கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு நிரந்தர கிருஸ்தர்களாக மதம் மாற்றப்பட்டனர்.

அது நடந்தது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அல்ல, சில நூறு ஆண்டுகளுக்கு முன்னரேயே!

இப்போதைய ஸ்பெயின் அப்போது பல பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டிருந்தன. வெலன்சியா பகுதியில் 1502 ஆம் ஆண்டு தொடக்கம் முஸ்லிம்களின் வெளியேற்றம் ஆரம்பமானது என்று வரலாற்று சான்றுகள் கூறுகிற போதும் பொதுவாக நோக்குகின்ற போது லைபீரியா தீபகற்பத்தில் இருந்து கடைசியாக முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 1614 என்றே காண முடிகின்றது.

எது எப்படியோ? 800 வருடங்களுக்கும் மேலாக ஓரு நாட்டில் வாழ்ந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட முடியுமானால் பல நூறு வருடங்கள் வாழ்ந்து வருகிற முஸ்லிம்கள் நிலை என்ன..?

ஸ்பெய்ன் முஸ்லீம்களின் இந்த வெளியேற்றம் ஓரு இரு நாட்களில் தீர்மானிக்கப்பட்டிருக்கவோ திட்டமிட்டோ பட்டிருக்கவில்லை. நீண்ட காலமாக தீட்டப்பட்ட சதித்திட்டத்தை விளைவே அவர்களின் வெளியேற்றம்.
காலத்துக்கு காலம் முஸ்லிம்களுடன் செய்து கொள்ளப்பட்ட பல உடன்படிக்கைகள் மீறப்பட்டன; முஸ்லீம்களுக்கு சொந்தமான  விலைமதிப்பற்ற நூல்கள், நூல்நிலையங்கள் கிரனடா உட்பட பல பகுதிகளில் எரித்துச் சாம்பலைக்கப்பட்டன.

1567 ஆம் ஆண்டில் மன்னர் இரண்டாவது பிலிப் அரபி மொழியை சட்ட விரோதமாக பிரகடனப்படுத்தினார்; இஸ்லாம் மதத்தை தடை செய்தார்; முஸ்லீம் கலாசாரத்துக்கு  மரபுகளுக்கு தடை விதித்தார் ;இஸ்லாமிய பாடசாலைகள் தடை செய்யப்பட்டன ; முஸ்லீம்களின் ஆடைகளை பகிரங்கமாக அணிவது தடை செய்யப்பட்டது.

இவை இடம்பெற்று வெறும் 50
ஆண்டுகளுக்குள் முஸ்லிம்கள் முழு லைபீரிய தீபகற்பத்திலும் இருந்து துடைத்து எறியப்பட்டிருந்தனர்.

முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவது என்பது இன்று நேற்று ஆரம்பமானதல்ல . நபிகள் நாயகம் (ஸல் ) பிறந்த மண்ணிலே இருந்து வெளியேறிய ஹிஜ்ரத்தை யாவரும் அறிந்ததே.

சரி இப்போது சம காலத்துக்கு  வருவோம்
பர்மாவில், பலஸ்தீனத்தில், சிரியாவில், இலங்கையில் இன்று தொடர்கிறது
வெளியேற்ற தொடர்கதை ...

அந்தலூசில் நானூறு வருடங்களுக்கு முன் இடம்பெற்ற வெளியேற்றம்; பலஸ்தீனத்தில் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வெளியேற்றம்; மன்னாரில், யாழ்ப்பாணத்தில் 28 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இதே வெளியேற்றம்; பர்மாவில் பத்து வருடங்களுக்கு முன் இடம்பெற்ற அதே வெளியேற்றம் ஏன் நாளை காத்தான் குடியிலோ அல்லது பேருவலையிலோ அல்லது அக்குரணையிலோ இடம் பெற முடியாது என்பதில் என்ன நிச்சயம் ?

நாம் இந்த உலகில் வாழ வந்தவர்கள் இல்லை, மறுமைக்காக வாழ வந்தவர்கள்.

ஆனால் நமது நோக்கங்கள் தடம் பிறழும் போது மண்ணில், பொன்னில் ஆசைகள்  அதிகரிக்கும் போது சொத்துக்களை குவிக்கிறோம். குவித்த சொத்துக்களை பாதுகாக்கும் பொருட்டு பொறுமை என்கிற பேரில் கோழையான விட்டுக்கொடுப்புகளை செய்கின்றோம். இந்த விட்டுக்கொடுப்புகளுக்கு மார்க்கத்தை மாற்ற மார்க்க அறிஞர்களிடம் பத்வா கேட்டு பயணம் செய்கிறோம். ஆனால் நம்மை சுற்றுயுள்ள மரணத்தையும் சூழவுள்ள அந்நியர்களின் சதிகளையும் மறந்து விடுகிறோம் .

அப்போதைய ஸ்பைனிலும் இதே பத்வாக்கள்  விநியோகிக்கப்பட்டிருந்தன . போராடுங்கள் என்கிற பத்வா  வழங்கப்படாமல் பாதுகாப்பு பெறுவதற்காக பகிரங்கமாக பன்றி இறைச்சியை, மதுபானத்தை, கிறிஸ்தவ உடைகளை
உடுக்கலாம் என மார்க்க அறிஞர்களால் கூறப்பட்டிருந்தது; பத்வாக்களை வழங்கப்பட்டிருந்தன.

சம காலத்தில் ஐரோப்பாவில், வட   அமெரிக்காவில் வாழுகின்ற முஸ்லிம்கள் மட்டுமல்ல தமது தாய் நாடு என்கிற தேசிய வாத வரட்டு பிடிவாதத்துடன் இலங்கை உட்பட முஸ்லிம் அல்லாத நாடுகளில் வாழுகின்ற முஸ்லிம்கள் ஒன்றை மட்டும் உணர வேண்டும் ஸ்பெயினில் வெறும் 400 வருடங்களுக்கு முன் இடம்பெற்ற வெளியேற்றம் ஏன் உங்களுக்கும் இடம்பெற முடியாது?

இலங்கையிலே முஸ்லிம்கள் முதன்முதலில் குடியேறிய யாழ்ப்பாணத்தில் இருந்து அவர்கள் பல தடவைகள் வெளியேற்றப்பட்டனர் . ஒவ்வொரு முறையும் அவர்கள் கடந்த கால வெளியேற்ற நிஜத்தை மறந்தனர். 1990 ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் திகதிக்கு ஓரு நாளுக்கு முன்னர் நீங்கள் நாளை  வெளியற்றப்படுவீர்கள் என அவர்களிடம்  கூறப்பட்டிருந்தாலும் அவர்கள் அதை நம்பி  இருக்க மாட்டார்கள். இதே யதார்த்த  சூழ்நிலையிலேயே இலங்கை முஸ்லிம்கள் உட்பட உலக முஸ்லிம்கள்
இன்று வாழ்ந்து வருகின்றனர்.

நிச்சயம் இல்லாத இந்த உலகிலே ஏதுவும் நடக்கும் சாத்தியம் உள்ளது. விசேடமாக  முஸ்லிம்களான நமக்கு பிற மதத்தவர்களில் நேரடி நண்பர்களாக இருப்பவர்களை விட மறைவில் விரோதிகளாக இருப்பவர்களே அதிகம் . எனவே இன்னொரு கட்டாய வெளியேற்றம் என்பது நம்மை சுற்றி வாழுகின்ற கசப்பான உண்மை.

அதை ஏற்றுக்கொள்ள மனம் மறுத்தாலும்  ஏற்க வேண்டிய சூழ்நிலையில் இலங்கையிலும் சரி இந்தியாவிலும் சரி ஐரோப்பிய நாடுகளிலும் சரி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நம்மை சுற்றி நடக்கிற நிகழ்வுகள் ஸ்பெயின் முஸ்லிம்களின் வெளியேற்றத்துக்கு 50 ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற சம்பவங்களை ஞாபகப்படுத்துகிறது.

அதாவது அன்றைய ஸ்பெயினில் வெளியேற்றதுக்கு 50 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அரபி மொழி தடை, மதரஸா தடை, இஸ்லாமிய ஆடை தடை, இஸ்லாமிய கலாசார தடை போன்றன போன்றே சமகாலத்தில் நுகர்வுப்பொருட்களில் ஹலால் முத்திரை இட தடை, பாங்கு சொல்ல தடை, பகிரங்கமாக பெண்கள் நிக்காப் அணிய தடை, பள்ளிகள் கட்ட தடை, மாடு அறுக்க தடை, உண்ணத் தடை தலாக் மற்றும் இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகளை நிறைவேற்றுவதில் தடை  என  தடை பட்டியல்  தொடர்கின்றன.

இது கதையல்ல கற்பனையான அச்சுறுத்தலும் அல்ல, இது விளித்தெழ வேண்டிய தருணம்.

கட்டாய வெளியேற்றதை கண்ணால் கண்டு அனுபவித்து அதன் பாடங்களை பெற்றவன் என்கிற அடிப்படையில் அவ்வாறான நிலைகள் ஏற்படும் போது அதன் பாதிப்புக்களை தவிர்க்க என்ன நடவடிக்கைகளை முன்கூட்டி எடுக்க முடியும் என்பதை இங்கே தருகிறேன்.

1. இறைவனோடு உள்ள தொடர்பை அதிகரிப்பது .

நமது அமல்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து வருமானங்களை ஹலாலானதாக ஆக்கி பாவங்களில் இருந்து நம்மை தூரமாக்கும் போது நமது பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும். நாம் துன்பத்தில் இருக்கும் போது முதலில் உதவுவது அளவற்ற அருளாலன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வே. எனவே நமது உதவிக்கான முதல் தொடர்பே அல்லாஹ்வே. ஹராமான வருமானங்களை புசிக்கும் போது இக்கட்டான நிலையில் பிரார்த்தனைகள் எப்படி அங்கீகரிக்கப்படும் ?

2 . நமது சந்ததிகளை கற்பிப்பது .

மார்க்க கல்வி இல்லாத அறிஞரும் கடலின் நடுவே பெய்கின்ற மழையும் சமம் .எனவே மார்க்க கல்வியுடன் சேர்த்து உலக கல்வி அறிவை, மொழிகளை கற்பிப்பது காலத்தின் அவசியம் ஆகும். வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை அடுத்து பெரும் பெரும் செல்வந்தர்கள் நடுத்தெருவுக்கு வந்த அதே வேளை,  ஆசிரியர்கள், வைத்தியர்கள் போன்ற கல்வி சார் தொழிலில் இருந்தவர்கள் ஒப்பீட்டளவில் சிரமத்தை எதிர் நோக்கி இருக்கவில்லை
இரண்டாம்  உலக யுத்தத்தில் ஜெர்மனியில் இருந்து வெளியேற்றப்பட யூதர்கள் சொத்துக்களை கொண்டு சென்று முன்னேறவில்லை மாறாக கற்ற கல்வி அறிவை கொண்டு பழைய நிலையை விட செல்வத்திலும் அறிவிலும் மேலான நிலைக்கு திரும்பினர்.

3. ஓரே இடத்தில் அல்லது ஓரே நாட்டுக்குள்    அபரிமிதமாக சொத்துக்களில் முதலீடு செய்வதை முஸ்லீம் செல்வந்தர்கள் தவிர்க்க வேண்டும் .

மலேசியா, துருக்கி, இந்தோனேசியா போன்ற முஸ்லீம் நாடுகளில் மற்றும் அரபு  நாடுகளில் முதலீடுகளை பரவலாக்க வேண்டும். யாழ்ப்பாண முஸ்லீம்களும் ஏன் அந்தலூசியா முஸ்லிம்களும் செய்த மிகப்பெரிய தவறு வெளி இடங்களில் முதலீட்டை தவிர்த்தது. யூதர்கள் இதே தவறை இரண்டாம் உலக யுத்தத்துக்கு  முன்னர் செய்த போதும் அதன் பின்னர் படித்த பாடத்தில் தம்மைத்தாமே திருத்திக்கொண்டுள்ளனர். முதலீடுகளை பன்முகப்படுத்தி சர்வதேச மயப்படுத்தி வருகின்றனர்.

4. வெளியூர் அல்லது வெளிநாட்டு முஸ்லீம் தொடர்புக்களை அதிகரிப்பது .

யாழ்ப்பாண முஸ்லிம்கள் செய்த தவறும் இதுதான். யாழ்பாணத்துக்குள்ளேயே  திருமண பந்தம் வைத்துக்கொள்ளுவதை பெருமையாக கருதினர். வெளியூர்களில் திருமணம் செய்து கொண்டவர்களை சிறுமையான கண்ணோட்டத்தில் 'ஊரில முடித்தவர் ' என்கிற வார்த்தையுடன் நோக்கினார்கள். இரண்டு மணி நேர அவகாசத்தில் வெளியேற்றப்பட்ட
போது வெளியுலக தொடர்புகள் இன்றி நிலைகுலைந்து போயிருந்தார். எனவே அரசியல் எல்லைகள் கடந்து முஸ்லீம்களுக்கு இடையே திருமண பந்தங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். நபிகள் நாயகம் (ஸல் )அவர்கள் கூட வெவ்வேறு கோத்திரத்தவர்களுடன் திருமண பந்தங்களை  ஏற்படுத்திக்
கொண்டார்கள். சம கால சமூகத்தில்  உள்ள வெளிநாடுகளில் திருமணம் செய்கின்ற நேர்  மறையான மனோநிலைமை மாற்றப்பட வேண்டும் .

5. தற்பாதுகாப்பு பயிற்சிகளின் அவசியம் உணர்த்தப்படல் வேண்டும்.

முஸ்லீம்களுக்கு தற்பாதுகாப்பு என்பது முக்கியமான விடயமாக மார்க்கத்தில்  வலியுறுத்தப்பட்டுள்ள போதும் எத்தனை பேர் அதில் பயிற்சி பெறுகிறோம் எத்தனை பேரின் பிள்ளைகளை பயிற்சிக்காக அனுப்புகிறோம்? குதிரை ஓட்டுதல், இலக்கு நோக்கி சுடுதல், நீச்சல் ஆகியன நபிகள் நாயகம் (ஸல் ) அவர்களால் வலியுறுத்தப்பட்டுள்ள விடயங்கள் ஆகும். இவ்வாறான பயிற்சிகள் நம்மை வெளியேற்றத்தின் போதோ அல்லது  எதிரிகளின் தாக்குதல்களில் இருந்தோ  நம்மை பாதுகாக்க உதவுவதுடன் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது.

6. ஒற்றுமையை வலுப்படுத்துதல் அவசியம்.

நமக்கிடையே  உள்ள ஜமாத்து குரூப்பு  பேதங்கள், பிரதேச வாதம், ஈகோக்கள், அரசியல் பிரிவினைகள், தேசியவாதம் ஆகியவற்றை களைந்து முஸ்லிம்கள் என்கிற நோக்கிலே இணைய வேண்டியது காலத்தின் அவசியம். கடந்த காலங்களிலே ஒவ்வொரு முஸ்லிம் நாடுகளும் ஆக்கிரம்பிக்கப்பட்டமைக்கு பின்னால் இருந்த பிரதான காரணம் நமக்குள் ஒற்றுமை இன்மையே. ஸ்பெயினில் இடம்பெற்ற முஸ்லிம்களின் வெளியற்றத்திலும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் வெளியற்றத்திலும் இது முக்கியமான காரணமாக இடம் பெருகிறது.

யாழ்ப்பாண முஸ்லிம்கள் வெளியேற்றதுக்கு சில வருடங்களுக்கு முன்னர் தமக்குள்ளே ஜமாஅத்து குரூப்புகளாக பிரிந்து கை கலப்பில் ஈடுபட்டு காபிர்களான புலிகளிடம் நீதி கேட்ட நிலையே அவர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்கள். இதேபோல அந்தலூசியாவின் முஸ்லிம்கள் பிரதான கிலாபாவில் இருந்து பிரிந்து தமக்குள்ளேயே கிலாபாவை ஏற்படுத்தினார்கள். ஒரே காலத்தில் இரு  கிலாபாக்கள்  இருந்த பிரிவினை நிலை அப்போது காணப்பட்டது.

7. பிற மொழி கற்பித்தலில் அவசியம்.

சர்வதேச மொழியான ஆங்கிலம் உட்பட அரபு மொழியை   நமது சந்ததிகளுக்கு கற்பிப்பதன் மூலம் கட்டாய  வெளியேற்றம் ஒன்றின் பாதிப்பில் இருந்து நம்மை தவிர்ந்து கொள்ள முடியும். இலங்கையின் வடக்கு முஸ்லிம்கள் தனியே தமிழை மற்றும் பேசி வந்தார்கள். 1990 இன் பின்னரான வெளியேற்றதை அடுத்து தெற்கு நோக்கி இடம்பெயர்ந்த அவர்கள் மொழி ரீதியாக பாரிய சிரமங்களை எதிர்நோக்கினர். புத்தளம் நோக்கி பெரும்பாலானோர் இடம்பெயர்ந்தமைக்கும் மொழியே முக்கியமான காரணமாக அமைந்தது. என்வே பிரதான மொழிகளான ஆங்கிலம் அரபு ஆகியவற்றை நமது சந்ததிகளுக்கு கற்பிப்பதில் பொதுநல அமைப்புக்கள் முதலிடு செய்வது அவசியம்.

மேற்கூறியது போல கட்டாய வெளியேற்றம் என்பது கற்பனைக்கதை அல்ல நம்மை சுற்றி வாழுகின்ற கசப்பான உண்மை.
நம்மை நாம் மாற்றாத வரை நமது நிலைமையை அல்லாஹூ தஆலா மாற்ற மாட்டான்.

எனவே வரும் முன் நம்மை காக்க முயற்சி எடுக்க வேண்டியது தற்கால அவசியம் ஆகிறது .

எல்லாம் வல்ல அல்லாஹூ தஆலா நம்மை எதிரிகளின் சூழ்ச்சிகளில் இருந்து பாதுகாப்பானாக

роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்