முத்தலாக் மசோதா எப்படி நிறைவேறியது.. யாரெல்லாம் ஆதரவு, எதிர்ப்பு..
முத்தலாக் மசோதா எப்படி நிறைவேறியது.. யாரெல்லாம் ஆதரவு, எதிர்ப்பு..
முத்தலாக் தடை சட்ட மசோதா தற்போது ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
இந்த மசோதாவிற்கு 99 எம்பிக்கள் ஆதரவு அளித்தனர். 84 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மக்களைவை மற்றும் மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் முத்தலாக் தடை சட்டம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.
மசோதா நிறைவேற வேண்டும் என்றால் 121 எம்பிக்கள் பலம் வேண்டும். பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 110 எம்பிக்கள் பலம் இருக்கிறது. ஆனாலும் மசோதா நிறைவேறியது
இந்த மசோதாவிற்கு
திமுக,
காங்கிரஸ்,
திரிணாமுல் காங்கிரஸ்,
தெலுங்கு தேசம் கட்சி,
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி,
பகுஜன் சமாஜ்,
சமாஜ்வாதி,
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி,
அதிமுக
ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்த கட்சிகள்:
பாஜக
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள
ஐக்கிய ஜனதா தளம் மற்றும் அதிமுக தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் ஆதரவு.
மசோதா நிறைவேற முக்கிய காரணம்
மசோதாவை எதிர்ப்பு தெரிவித்து பேசிய சில கட்சிகள் வாக்களிப்பின் போது எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்துவிட்டது
எதிர்ப்பு தெரிவித்துவிட்டு வாக்களிக்காத கட்சிகள்:
தெலுங்கு தேசம் கட்சி
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி
பகுஜன் சமாஜ்
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி
அதிமுக
ஐக்கிய ஜனதா தளம்
மொத்தம் வெளிநடப்பு 30
இதனால் இந்த மசோதாவிற்கு ஆதரவாக 99 வாக்குகள், எதிராக 84 வாக்குகள், வெளிநடப்பு 30 பேர் என்பதால் மசோதா நிறைவேறியது.
`மேலும் இந்த மசோதா பின்வரும் அம்சங்களை கொண்டுள்ளது.`
ஒரே நேரத்தில் தலாக், தலாக், தலாக் என மூன்று முறை வாய்மொழியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ, எஸ்எம்எஸ், வாட்ஸ்ஆப் போன்ற குறுந்தகவல் மூலமாகவோ கூறுவது சட்ட விரோதமாகும்.
முத்தலாக் சொல்லி விவாகரத்து கோரும் ஆண்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.
இந்த முத்தலாக் தடை சட்டம் மூலம் மனைவி தனது கணவன் மீது புகார் கொடுக்கலாம்.
அல்லது அந்த பெண்ணின் ரத்த உறவினர்கள், திருமணம் மூலம் உண்டான உறவினர்கள் புகார்கள் கொடுக்கலாம்.
இந்த சட்டம் மூலம் குற்றம் நிருபிக்கப்பட்ட ஆண் 3 ஆண்டு சிறையில் அடைக்கப்படுவார்.
இந்த சட்டம் மூலம் பெயில் பெற முடியும். ஆனால் குற்றம்சாட்டிய பெண்ணின் அனுமதியுடன் மட்டுமே நீதிமன்றம் பெயில் வழங்க முடியும்.
இந்த சட்டம் மூலம் கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் பேசி, தங்களுக்குள் சுமூகமான தீர்வை கொண்டு வந்து வழக்கை வாபஸ் செய்ய விரும்பினாலும் செய்யலாம்.
விவாகரத்து செய்த கணவனுடன் மீண்டும் பெண் சேர வேண்டும் என்றால் அந்த பெண் வேறு ஒருவரை மணமுடித்து பின் விவாகரத்து செய்திருக்க வேண்டும் என்று முறை ஒழிக்கப்படும்.
அதற்கு பதிலாக இந்த சட்டம் மூலம் சமாதானம் செய்து கணவனும் மனைவியும் ஒன்று சேரலாம்.
முத்தலாக் பெற்ற பெண் இந்த சட்டம் மூலம் கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் பெற முடியும். அதனை நீதிமன்றம் நிர்ணயம் செய்யும்
மைனர் குழந்தைகளை பாதுகாக்கும் உரிமை இந்த சட்டம் மூலம் மனைவிக்கு வழங்கப்படும்.
குழந்தைக்கு உரிமை கோரும் உரிமை பெண்ணுக்கே வழங்கப்படும்.
роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:
роХро░ுрод்родுро░ைропிроЯுроХ