நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

புதன், ஆகஸ்ட் 21, 2019

காங்கிரஸ் ஏன் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்

🤔🤔
*மீண்டும் காங்கிரஸ் ஆட்சி ஏன் வேண்டும்???.. துல்லியமான விபரம்*

ஒவ்வொரு முறையும் பிரதான் மந்த்ரி மோடிஜி மேடையில் கடந்த 60 வருடங்களாக காங்கிரஸ் ஒன்றுமே செய்யவில்லை, ஒன்றுமே செய்யவில்லை என்று முழங்குவார்...

இதுதான் அவருக்கு பதில்..... 👇🏻

*இதை எழுதியது ஜூலியஸ் ரெபைரோ, ஓய்வு பெற்ற IPS அதிகாரி, முன்னாள் DGP, மஹாராஷ்டிரா.*

ஒரு சாதாரண இந்திய பிரஜையாகிய நான் சொல்லிய இவைகள் அவர்களுக்கு போய் சேர வேண்டும்.
மோடிஜி, இப்படி சொல்லுவதை நிறுத்தி, 60 வருடங்களில் என்ன சாதித்தோம் என்பதை பாருங்கள்,
இந்திய பிரஜைகள் எல்லாரும் முட்டாள்கள் இல்லை என்பதை முதலில் உணருங்கள்.

நீங்கள் பிரதான் மந்திரியாக இருக்கும் நம் இந்தியாவை 200 வருடங்களுக்கு மேலாக ஆங்கிலேயன் ஆட்சி செய்தான்.
இந்தியர்கள் அனைவரும் அவனுக்கு அடிமைகளாகத்தான் இருந்தார்கள்.
1947ல் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சி ஆரம்பித்தபோது, ஆங்கிலேயன் துடைத்து வைத்துவிட்டுப்போன பூஜ்யமான பொருளாதாரம். ஆங்கிலேயன் விட்டுப்போன குப்பைகளைத்தவிர வேறு ஏதுமில்லை.

ஒரு பின் தயாரிக்கக்கூட எவ்விதமான வசதியையும் அவன் விட்டுப்போகவில்லை.

இந்தியா முழுவதுமாக 20 கிராமத்தில் மட்டுமே மின்சார வசதி.
20 அரசர்களுக்கு மட்டுமே தொலைபேசி.
குடிதண்ணீர் கிடையாது.

நாடு முழுதும் 10 சிறிய அணைக்கட்டுகள்.
ஒரு மருத்துவமனையும் கிடையாது.
ஒரு கல்வி நிறுவனம் கிடையாது, விவசாயத்திற்கு நீர் வசதி, பயிர்களுக்கு பூச்சி மருந்து எதுவுமே கிடையாது.
வேலைகள் கிடையாது.
பசி பஞ்சம்தான் நாட்டில்.
பிஞ்சு குழந்தைகள் கொத்துக்கொத்தாக மரணம்.

எல்லையில் மிக சிறிய அளவில் இராணுவ அதிகாரிகள்,
4 விமானங்கள்,
20 பீரங்கிகள்,
நாட்டின் நான்கு எல்லைகளும் திறந்த நிலை.

குறைவான அளவில் சாலைகள் மற்றும் பாலங்கள்.
காலியான கருவூலங்கள் .

இந்த நிலையில்தான் நேரு பதவியேற்றார்...

60 வருடங்கள் கழித்து இந்தியா?????

உலகில் மிகப்பெரிய இராணுவ சேவை. ஆயிரக்கணக்கில் போர் விமானங்கள், பீரங்கிகள், லட்சக்கணக்கான தொழில்நுட்ப ஸ்தாபனங்கள், அனைத்து கிராமங்களிலும் மின் வசதி, நூற்றுக்கணக்கான மின்சார உற்பத்தி நிலையங்கள், இலட்சக்கணக்கான கிலோ மீட்டர்கள் சாலைகள் மற்றும் பாலங்கள்,
புதிய இரயில் நிலையங்கள், ஸ்டேடியங்கள்,
சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிகள், அனைத்து பிரஜைகள் இல்லங்களில் தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி.

இந்தியாவிலும்,
வெளிநாடுகளிலும் வேலை செய்ய கட்டமைப்பு, வங்கிகள், பல்கலைக்கழகங்கள், AIIMS, IIMS,
அணு ஆயுதங்கள், நீர்மூழ்கி கப்பல்கள்,  அணு ஆயுத ஆராய்ச்சி நிறுவனங்கள், விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி நிலையம், பொதுத்துறை நிறுவனங்கள்.

பல வருடங்களுக்கு முன்பே
இந்திய இராணுவம்
லாஹுர் வரை சென்று, பாகிஸ்தான் நாட்டை இரண்டாக ஆக்கியது,

அப்போது ஒரு லட்சத்திற்கும் மேலான பாகிஸ்தான் நாட்டவர்கள்  நம்மிடம் சரணடைந்தது,

இந்தியாவிலிருந்து உணவுப்பொருட்கள் மற்றும் கனிம வளங்களை ஏற்றுமதி செய்தது,

வங்கிகள் அனைத்தையும் தேசிய உடைமை ஆக்கியது இந்திரா காந்தி.

கணினி அறிமுகம். அதன் மூலம் உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் அதிக வேலை வாய்ப்புகள்.

மோடிஜி நீங்கள் ப்ரதான் மந்திரி ஆனது இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி மூலம்....

நீங்கள் ஆட்சி அமைக்கும்போது இந்தியா பொருளாதார நாடுகளின் உலக அளவில் முதல் 10ல்...

இதை தவிர GSLV, மங்கள்யான்,
மெட்ரோ ரெயில், மோனோ ரயில்,  பன்னாட்டு வானூர்தி நிலையங்கள்,
ப்ரித்வி ஏவுகணை, அக்னி ஏவுகணை,
நாக் ஏவுகணை,
அணு ஆயுதங்கள் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்கள்.....
இவைகள் அனைத்தும் நீங்கள் பிரதமராவதற்கு முன்பே சாதிக்கப்பட்டு விட்டது.

*தயவுசெய்து நீங்கள் மக்களிடம் வந்து 60 வருடங்களில் காங்கிரஸ் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லாதீர்கள்.*

*கடந்த நான்கு ஆண்டுகள், 6 மாதங்களில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சொல்லி வாக்கு கேளுங்கள்.*

பெயர்கள் மாற்றம்,
சிலை அரசியல்,
மாட்டு அரசியல், தோல்வியுற்ற பண மதிப்பு இழப்பு (demonetization), அனுபவில்லாமல் செயல்பட்ட GST, மக்களை வெயிலிலும், மழையிலும் வரிசையில் நிற்க வைத்து அவர்களது பணத்தை எடுக்க முடியாத நிலைக்கு தள்ளியது, பாஜக எதிர்கட்சியாக இருக்கும்போது எதிர்த்த  வெளிநாட்டு நேரடி பண முதலீடுகள்,
இப்போது வெட்கமில்லாமல் ஆதரிப்பது....

நாட்டை அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும் விற்றது,
அம்பானியின் இரண்டு மாத கம்பெனிக்கு ரஃபேல் விமான ஆர்டரை கொடுத்து....
இந்திய நிறுவனம் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் ஐ செயலிழக்க செய்தது, BSNL நிறுவனத்தை மூடுவதற்கு அம்பானியின் ஜியோ மூலமாக செயல்படுவது....

குருட் ஆயில்
(கச்சா எண்ணெய்) மிகக்குறைந்த விலையில் கிடைக்கும்போது, பெட்ரோலும் டீசலும், எரிவாயுவையும்
அதிக விலைக்கு விற்குமளவிற்கு வரிகள்....

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கணக்கு வைத்திருந்த
ஏழை, நடுத்தர மக்களின் பணமான
ரூ 1771 கோடிகளை, மினிமம் பேலன்ஸ் வைக்காமல் இருப்பதாக சொல்லி தண்டத்தொகை...

சப்கே சாத்,
சப்கோ விகாஸ் யாருக்கு என்றால்
அமித்ஷா, அவரின் மகன் சவுரியா தோவல், அம்பானி, அதானி, பாபா ராம்தேவ் பதஞ்சலி குழுமம் மற்றும் பாஜகவின் ஸ்பான்சர்கள்.

கங்கை நதியை தூய்மைப்படுத்த
ரூ 3000 கோடிகள்.... கங்கையில் குளிக்க செல்லும் ஒவ்வொருவருக்கும் தெரியும் இந்த பணம் எங்கே என்று?????

*இது காங்கிரஸ் கட்சிக்கு விளம்பரமல்ல....*
*நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவனுமில்லை.*

நான் விபரங்கள் தெரிந்த சாதாரண இந்திய குடிமகன். ஒவ்வொரு முறையும்
60 ஆண்டுகள் ஒன்றுமே நடக்கவில்லை என்று சொல்லும்போது என்னுடைய பகுத்தறிவு ஏற்க மறுக்கிறது.....

படித்ததில் பிடித்தது...

வெள்ளி, ஆகஸ்ட் 09, 2019

தங்கம்,gold, ஏமாற்றும் கடைக்காரர்கள்,

எதற்கெடுத்தாலும் வழக்கு போடுகிறவர்கள் இதற்கெல்லாம் வழக்கு போடமாட்டார்களா?

ஆண்டுக்கு ஒரு
நகை கடை எப்படி?* திறக்கிறார்கள்

தங்கம் பற்றி விழிப்புணர்வு இல்லை மக்களுக்கு...!

சில விளம்பரங்கள் சேதாரம் இத்தனை % என்றும்,

செய்கூலி இல்லை என்று கூறுகின்றது. உண்மை என்ன ?*
_____________________

💫 ஒரு பவுன் தங்கசெயினுக்கு
1.5 கிராம் செம்பு சேர்த்தால் மட்டும் நகை செய்ய முடியும்...!

💫 இது அனைவருக்கும் தெரிந்தது.
ஆனால்
8 தங்கத்தில் 1.5 கிராம் கழித்தது போக
6.5 கிராம் நகை செய்யப்படுகின்றது...!

💫 ஆனால் சாமானியன் நகை வாங்கும்போது 6.5 தங்கம் + 1.5 செம்பு இரண்டும் சேர்ந்து 8 கிராம் தங்கமாக பில்லில் போடுகின்றார்கள்.

அதுமட்டுமின்றி அதற்கு மேலாக சேதாரம் என்று கூறி மேலும் 1.5 கிராம் செம்பை தங்கம் சேர்க்கப்பட்டதாக கூறி செம்பை தங்க விலைக்கு விற்கின்றார்கள்...!

💫 இதில் நான் சொல்லுவது என்ன 6.5 தங்கம் + 1.5 செம்பு (தங்கமாக) + சேதாரம் செம்பு 1.5 = 9.5 கிராம். ஆக 1 பவுன் நகை வாங்குபவர்கள் வெறும் 6.5 கிராம் தங்கத்தை மட்டும் இல்லாமல் 3 கிராம் செம்பை சேர்த்து விட்டு தங்கத்தின் விலையை போட்டுவிடுகின்றார்கள்...!

💫 ஆக 1 பவுன் 8 கிராம் நகைக்கு 9.5 கிராமுக்கு நாம் பணம் கட்டுகின்றோம்.
யாரை ஏமாற்றுகின்றார்கள் நகைக் கடைகாரர்கள் !

ஏழைகளை ஏமாற்றி ஏழைகளின் இரத்தத்தை ஒட்டுண்ணிகளாக உறிஞ்சி எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்...!

💫 ஒருவர் ஒரு புதிய நகைக்கடை திறக்கின்றார் என்றால் ஒரு சில வருடத்தில் பல மாடிகளும் பல ப்ளாட்டுகளையும் வாங்கி குவிக்கின்றார்கள் என்றால் பணம் எப்படி வந்தது?

நான் மேலே சொன்ன கணக்குதான் உண்மை...!

💫 இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன ?
பவுனுக்கு 3 கிராம் என்று வசூல் செய்யும் போது ஒரு கிராம் செம்பின் விலை என்ன ?
கணக்கு போட்டு பாருங்கள்...!

1 கிராம் தங்கம் ரூ. 2922/-
8 கிராம் தங்கம் ரூ. 23,376/-
1 கிராம்  செம்பு - 4.80
1.5 கிராம் செம்பு - 7.20 or 7/-
6.5 கிராம் தங்கம் - 18,993/-

6.5 கிராம் தங்கம் + 1.5 கிராம் செம்பு அடக்க விலை -18993+7=19000/-

1 பவுனுக்கு தங்கத்தில் லாபம் - 23376-19000= 4376/--

சேதாரம் 1.5 கிராம் = 4383/-

1 பவுனுக்கு மொத்த லாபம்  4376+4383=8759                

💫 என்ன தலை சுத்துதா ? எனக்குள் ஒரு ஆதங்கம்.
ஆனால் இந்த விழிப்புணர்வை மக்கள் எப்போது உணர்கின்றார்களோ அன்று தங்கத்தின் விலை கண்டிப்பாக குறையும்...!

💫 நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசையுள்ள நல்ல உள்ளங்களே !

உங்கள் ஆதங்கத்தை காட்ட அதிகப்படி ஷேர் செய்யவும்.

எதுவும் மக்களால் முடியும்...

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்
https://www.facebook.com/100004121920208/posts/1353857474761637/?app=fbl

புதன், ஆகஸ்ட் 07, 2019

தக்வாவுடைய பெண்மணி,

*இவர்கள் தான் தக்வாவுடைய குடும்பத்தினர்*

_கணவன்_:- (இருபது ஆயிரங்களுடன் வீட்டிற்கு வந்தார். )

வாருங்கள் பெருநாள் துணிமணி எடுத்து வருவோம்

_மனைவி_ :-
அல்ஹம்து லில்லாஹ்
துணிமணி எடுக்க பணம் வைத்துள்ளீர்கள்.  மாஷாஅல்லாஹ் பாரகல்லாஹ்

_மனைவி :-_
*குர்பானி கொடுக்க என்ன செய்யப் போகிறீர்கள் அன்புக் கணவரே*

__கணவன்_ :-

அதற்கு வசதி இல்லையே என்ன செய்வது?

நம்முடைய அத்தியாவசிய தேவைப் போக மீதி ,
ஆடு வாங்கும் அளவிற்கு பணம் இருந்தால் தானே கொடுக்க முடியும்

_மனைவி :- _( 20000)
*இவ்வளவு பணத்தை கொடுத்து ஆடை வாங்கும் தாங்கள் ஆட்டை வாங்கலாமே....*

_கணவன் :-_ புத்தாடைக்கு என்ன செய்வது என் அன்பு மனைவியே

_மனைவி :-_
புத்தாடை
எடுக்கனும்" என்று அவசியம் இல்ல

ஆடைக்கு அந்த அளவிற்கு
நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் வலியுறுத்த வில்லை .
இருப்பதில் நல்லதை அணிந்து கொள்ளலாம்

எனவே நோன்பு பெருநாளில் எடுத்த துணி எனக்கும், பிள்ளைகளுக்கும் (ஒரு இரு தடவை உடுத்தியதோடு)
புதிதாகவே இருக்கிறது"

அதையே உடுத்திக் கொள்கிறேன்
உங்களுக்கு வேண்டும்னா துணி எடுத்துக் கொள்ளுங்கள் அன்பு கணவரே

_கணவன்_ :- மற்றவர்கள் புத்தாடை அணிந்திருக்க நாம் மட்டும் எப்படி. .........

_மனைவி_ :-  அரபு நாட்டை ஆட்சி செய்த ஜனாதிபதி கலீஃபா உமர் ப்னு  அப்துல் அஜீஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களுக்கு பெருநாள் துணிமணி எடுக்க வசதி இல்லையாம் .

எவ்வளவு எளிமையாக வாழ்ந்திருப்பார்கள்.

நாம் ஒன்றும் கிழிந்ததை உடுத்த போவதில்லை ,

இரண்டுமாதங்களுக்கு முன் எடுத்த புதியது தான்.

_கணவன் :-_ *மற்ற பெண்கள் என்ன சொல்வார்கள்? என்ன பதில் சொல்வது?*

_மனைவி :-_ *மற்றவர்களுக்காக நாம்* *வாழவில்லை*
*நாம் அல்லாஹ்க்காக* *வாழ்கிறோம்*

எதை உடுத்தினாலும் அல்லாஹ் பொருந்திக் கொள்வான், பெருநாள் தொழுகையும் தொழ முடியும்

ஆனால் பெருநாள் அன்று நம் ரப்புக்கு மிகவும் பிடித்த அமலை வசதி இருந்தும் எப்படி விட்டுட்டு இருப்பது?

ஒவ்வொரு ரோமத்திற்கும் ஒரு நன்மை கிடைக்குமே'

மூன்று மாதங்கள் நபியவர்களின் வீட்டில் அடுப்பு  எரிந்ததில்லை,

ஏழ்மையாகவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் வாழ்ந்தார்கள்,

ஆனால் மதினாவின் 10 வருட காலமும் குர்பானி கொடுக்காமல் இருந்ததில்லை
என்பதெல்லாம் உங்களுக்கு தெரியாதா?

_கணவன் :-_
ஆம் குர்பானி பிராணியின் ஒவ்வொரு பாகமும் மறுமையில் நம்முடைய நன்மையின் தட்டை கணக்கச் செய்கிறது,
இலகுவாக ஸிராத் பாலத்தை கடக்க  காரணமாகுகிறது .
இப்படிப்பட்ட மனைவியை எனக்களித்த அல்லாஹ்விற்கே புகழனைத்தும்.

இதோ குர்பானி ஆடு வாங்கி வந்து விடுகிறேன்

_பிள்ளைகள்_:- நல்ல கொலுத்த ஆட்டை வாங்குங்க வாப்பா

துல்ஹஜ் மாதம் பத்தாம் நாளன்று அடியார்கள் செய்யும் அமல்களில் குர்பானியை அறுத்து இரத்தத்தை ஓட்டுவதை விட அல்லாஹ்விற்கு மிகப் பிரியமான அமல் வேறொன்றும் இல்லை.நிச்சயமாக அவை கியாம நாளில் தங்களின் கொம்புகளுடனும். உரோமங்களுடனும்.

குழம்புகளுடனும்( நகங்களுடன்) வரும். நிச்சயமாக குர்பானி கொடுக்கப்படும் கால்நடைகளின் இரத்தம் பூமியில் விழுவதற்கு முன்பே அக்குர்பானி. அல்லாஹ்வின் அங்கீகாரத்தை பெற்றுவிடுகிறது. எனவே அதனை மனமுவந்து செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ( ஸல்) அவர்கள் அருளியுள்ளார்கள்.

திருமண விருந்துக்கும்,
வீடு குடிபோகும் விருந்துக்கும் லட்சக்கணக்கில் செலவு அழிக்கும் நாம்,

ஒரு விஷேசத்திற்கு பல சேலைகள் எடுக்கும் தாய்மார்கள் ,

புதிதாகவே பல பட்டு சேலைகளை மடித்து மடித்து பத்திரமாக வைத்திருக்கும் இல்லத்தரசிகள்

நன்மையின் வாக்குறுதி இல்லாத இந்த விஷயத்தில் இவ்வளவு செலவு செய்து விட்டு,

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வலியுறுத்திய குர்பானியை விட்டு விடுவது

நமது நஷ்டமே!
கைசேதமே! இவ்வுலகத்தின் ஆடம்பரத்தையும் ஆசைகளையும் விட்டு அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக

செவ்வாய், ஆகஸ்ட் 06, 2019

ஃபிர்அவ்னின் உடல்,

மூஸா அலைஹி வஸ்ஸலாம் மற்றும் ஃபிர்அவ்ன் பரோவா மன்னர்கள் பயன்படுத்திய பொருள்கள் கெய்ரோவில் உள்ள எகிப்திய அருங்காட்ச்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. நகைகள் தங்கத்திலான கட்டில் நாணயங்கள் உடல்கள் வைக்கப்பட்டிருந்த கூடுகள். டூடுட் அங்க் அமான் என்ற பரோவா மன்னனின் முகமூடி மூஸா அலைஹிவஸ்ஸலாம் அவர்களை தன் சகோதரர் ஹாரூன் அலைஹி வஸ்ஸலாம் அவர்களையும் அழைத்துக் கொண்டு ஃபிர்அவ்னை சந்திக்க செல்லும்படி அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவர்கள் நாங்கள் உலக இரட்சகனான அல்லாஹ்வின் திருத்தூதர்கள் அதனால் அல்லாஹ்வை நீ ஏற்றுக்கொள், இஸ்ராயீலின் சந்ததியினரை எங்களுடன் அனுப்பிவை என்றும் நானே இறைவன் என்று சொல்லிக்கொண்டிருந்த ஃபிர்அவ்னிடம் கூறினார்கள். ஃபிர்அவ்னின் கொடுமையிலிருந்து இஸ்ராயீலர்களை காப்பற்ற மூஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் முடிவு செய்தார்கள். மூஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்களும் ஹாரூன் அலைஹி வஸ்ஸலாம் அவர்களும் இரவோடு இரவாக ஆயிரக்கணக்கான இஸ்ராயீலர்களை ரகசியமாக எகிப்தில் இருந்து அழைத்துச் சென்றனர். இதனை அறிந்த ஃபிர்அவ்ன் ஒரு பெரும்படையுடன் அவர்களை பிடிக்க புறப்பட்டான். செங்கடலின் வடக்கு எல்லையில் உள்ள சூயஸ் வளைகுடாவின் வடக்கு எல்லைக்கு இரண்டு கூட்டத்தாரும் சென்று சேர்ந்தனர் என்று வரலாறு கூறுகிறது. இந்த தருணத்தில் அல்லாஹ் அவர்களுக்கு கட்டளையிட்டான். “உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்” என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது; (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது. அல்குர்ஆன் 26:63 தண்ணீர் இல்லாமல் வறண்டு போன பாதை கால்வாயின் நடுவில் தோன்றியது. அப்பாதையில் இஸ்ராயீலர்கள் மறுகரையில் உள்ள சினாய் பகுதிக்கு தப்பிச் சென்றனர். ஃபிர்அவ்னும் அவனது படையினரும் கடலின் நடுவில் தோன்றிய பாதையில் நுழைந்து இஸ்ராயீலர்களை பிடிப்பதற்க்கு ஓடிச்சென்றனர். ஆனால் அவர்கள் பாதையின் நடுவே சென்று கொண்டிருக்கும் போது அந்த பாதையை அல்லாஹ் மீண்டும் கடலாக மாற்றினான். ஃபிர்;அவ்னும் அவனது படையினரும் தண்ணீரில் முழ்கி இறந்தனர். ஃபிர்அவ்னுடைய பிரேதத்தை ஒரு அத்தாட்சியாக்கி நிலைநிறுத்துவதாக அல்லாஹ் கூறுகிறான். மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்: இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான். “இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்)? சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய். எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது). அல்குர்ஆன் 10:90-92 அல்குர்ஆனில் கூறப்பட்டது உண்மையாகிவிட்டது. 1898ம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட ஃபிர்அவ்னின் இந்த உடல் எகிப்து அருங்காட்சியகத்தில் ராயல் மம்மி ஹாலில் ஒரு கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வுடல் 202 சென்டிமீட்டர் நீளமுள்ளது. கி.மு. 1235ல் தண்ணீரில் முழ்கடிக்கப்பட்டு இறந்துபோன ஃபிர்அவ்னின் உடல் பல ஆண்டுகளுக்கு மேலாகியும் கெட்டுப்போகமல் அல்லாஹ் கூறியது போல பாதுகாக்கப்பட்டிருப்பது அல்குர்ஆன் ஒரு இறைவேதம் என்பதற்க்கு மாபெரும் சான்றாகும். ஃபிர்அவ்ன் இதே அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஏனைய பரோவா மன்னர்களின் உடல்கள் குடல்கள் எடுக்கப்பட்டு மருந்தால் நனைக்கப்பட்டு, துணிகளால் சுற்றப்பட்டு பாதுகாக்கப்பட்ட மம்மிகளாக வைக்கப்பட்டுள்ளன. ஆனால் குர்ஆனில் கூறப்பட்ட இரண்டாவது ராம்ஸஸ் என்றழைக்கப்படும் ஃபிர்அவ்னின் உடல் மம்மி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஃபிர்அவ்னின் பிடியில் இருந்து தப்பித்த இஸ்ராயீலர்கள் மூஸா அலைஹி வஸ்ஸலாம் மற்றும் ஹாரூன் அலைஹி வஸ்ஸலாம் ஆகியோருடன் சினாயில் தங்கியிருந்த இடத்திற்க்கு பெயர் உயூன் மூஸா என்பதாகும். உயூன் மூஸா என்ற அரபி சொல்லுக்கு மூஸாவின் ஊற்றுக்கள் என்று பெயர். இஸ்ராயீலர்கள் 12 கோத்திரங்களாக இருந்தனர். அவர் தண்ணீர் பிடித்துக்கொள்வதற்கு தனித்தனி இடங்கள் இருந்தன. அதில் ஒன்றுதான் இந்த கிணறு. யாருமற்ற சினாயில் இஸ்ராயீலர்கள் பயன்படுத்திய மற்றொரு ஊற்றுதான் இது. ஊற்றின் இடத்தில் சமீப காலத்தில் சிறிய இருவழிக்குழாய் பொருத்தபட்டிருக்கிறது. தெற்க்கு சினாய்க்கு சென்ற இஸ்ராயீலர்களை அழைத்து மீண்டும் துவா பள்ளத்தாக்கிற்க்கு அருகிலிலுள்ள வாதியராஹ் என்ற இடத்தில் தங்கவைத்தார்கள். அந்த காலத்தில் இஸ்ராயீலர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்ப்பட்டபோது அவர்கள் மூஸா அலைஹிவஸ்ஸலாம் அவர்களிடம் முறையிட்டனர். அதற்க்குபிறகு நடைபெற்ற நிகழ்ச்சியை குர்ஆன் விவரிக்கிறது. மூஸாவின் கூட்டத்தாரைத் (தனித்தனியாகப்) பன்னிரண்டு கூட்டங்களாக பிரித்தோம்; மூஸாவிடம் அவர்கள் குடி தண்ணீர் கேட்டபோது, நாம் அவருக்கு: “உம்முடைய கைத்தடியால் அக்கல்லை அடிப்பீராக!” என்று வஹீ அறிவித்தோம், (அவர் அவ்வாறு அடித்ததும்) அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுக்கள் பொங்கி வந்தன; அவர்களில் ஒவ்வொரு வகுப்பாரும் தாம்(நீர்) அருந்தும் ஊற்றைக் குறிப்பறிந்து கொண்டார்கள்; மேலும், அவர்கள் மீது மேகம் நிழலிடும்படிச் செய்தோம், அவர்களுக்கு மன்னு. ஸல்வாவையும் (மேலான உணவாக) இறக்கிவைத்து: “நாம் உங்களுக்கு அளித்துள்ள தூயவற்றிலிருந்து புசியுங்கள்” (என்று சொன்னோம்; அவ்வாறு இருந்தும் அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்தார்கள்), அவர்கள் நமக்கு ஒன்றும் தீங்கிழைக்கவில்லை; தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள். 7:160 வாதிஅர்பையின் என்று அறியப்படும் இந்த பள்ளத்தாக்கில் இந்த கல்லில்தான் மூஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் அடித்தார்கள். அந்த ஊற்றுக்களில் நீர் வடிந்த அடையாளங்கள் இன்றும் உள்ளன. ஃபிர்அவ்னின் உடல்! சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி! ! ! ! பாதுகாக்கப்படும ஃபிர்அவ்னின் உடல்! சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாடசி1898 ல் எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட அதிசய மம்மி 3000 ஆண்டு பழமை மிக்க அன்றைய எகிப்தை ஆண்டு வந்த இரண்டாம் ரம்சீஸ் என்ற ஃபிர்அவ்னின் உடல் என்று அடையாளம் காணப்பட்டது. தொல் பொருள் ஆராய்ச்சிக்கு தனி முக்கியத்துவம் அளித்து வந்த ஃப்ரான்சு நாடு அந்த உடலை ஆராய்ச்சி செய்வதற்காக எகிப்திடம் கேட்டு வாங்கியது. மருத்துவ அறிவியல் துறை ஆய்வாளரான டாக்டர் மோரிஸ் புகைல் தலைமையிலான குழு அவ்வுடலை ஆய்வுக்கு உட்படுத்தியது. உடலில் படிந்திருந்த உப்பின் துணிக்கைகளை வைத்து இது கடலில் மூழ்கி இறந்தது என்ற முடிவுக்கு வந்தனர். ஆய்வின் முடிவில் அவ்வுடல் மூவாயிரம் ஆண்டு பழமையான எகிப்தை ஆண்ட மன்னனின் உடல் என்று கண்டறியப்பட்டது ! அந்நேரம் பாதுகாக்கப்படுவதாக இறைவன் வாக்களித்திருக்கும் ஃபிர்அவ்னின் உடல் பற்றிய பேச்சு சிந்தனையாளர்கள் மத்தியில் எழ ஆரம்பித்தது. இது பற்றிய செய்தி மோரிஸ் புகையின் கவனத்துக்கும் வந்தது.  1898 ல் கண்டெடுக்கப்பட்ட மம்மியைக் குறித்து 1400 வருடங்களுக்கு முன்பே கூறப்பட்டதா? இது எப்படி சாத்தியமாகும்? என்று சிந்தனை செய்தார் மோரிஸ் புகைல். சிந்தனையில் மோரிஸ் புகைல்! திருக்குர்ஆன் கடலில் மூழ்கி இறந்த பின்னர் ஃபிர்அவ்னின் உடல் பாதுகாக்கப்படும் என்று பிரகடனம் செய்கிறது. தோரா மற்றும் பைபிளின் பழய ஏற்பாடும் மோசேயின் காலத்தில் இஸ்ரவேலர்களைக் கொடுமைப் படுத்திய பர்வோன் மன்னனைப் பற்றியும் இறுதியில் அவன் கடலில் மூழ்கி இறந்தான் என்றும் கூறுகிறது. இதோ என் முன்னாலிருப்பது அக்காலத்தில் இறந்து விட்ட உடல் அல்லவா? என் ஆராய்ச்சியின் மூலம் நான் அறிந்திருக்கும் முடிவை 1400 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது (ஸல்) எவ்வாறு அறிந்து கொண்டார்கள்? பைபிளில் தேடினார்மோரிஸ் புகைல். பர்வோன் மன்னனின் முடிவைப் பற்றி யாத்திராகமம் இவ்வாறு கூறுகிறது. ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும் அவர்கள் பின்னாக சமுத்திரத்தில்பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை. (யாத்திராகமம் 14 :28) இவ்வுடல் பாதுகாக்கப்படும் என்பதற்கான எந்தக் குறிப்பையும் பைபிள் வழங்கவில்லை.  ஆய்வுக்குப் பின்னர் பர்வோன் மன்னனின் உடல் விலை உயர்ந்த கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டு தனி மரியாதையுடன் எகிப்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மோரிஸ் புகைல் சிந்தனையில் ஆழந்தார்! இவ்வுடல் பாதுகாக்கப்படும  என்றகுர்ஆனின் செய்தி அவரை சிந்திக்கத் தூண்டியது. இதே வேளையில் தான் சவூதி அரேபியாவில் மருத்துவ அறிவியல் சம்மந்தமான ஒரு மாநாடு நடை பெற்றது. மோரிஸ் புகைல் அதில் கலந்து கொண்ட போது தான் கண்டு பிடித்த உண்மையையும் தண்ணீரில் மூழ்கி இறந்த பின்னர் பாதுகாக்கப்பட்ட உடலைக் குறித்தும் இஸ்லாமிய அறிஞர்களிடம் கலந்துரையாடினார .அப்போது அங்கிருந்த அறிஞர்களில்ஒருவர் திருக்குர்ஆனைத் திறந்துகடலைக் கடந்து செல்லும் இஸ்ரவேலர்களைப் பின் தொடர்ந்து விரட்டிச் சென்ற ஃபிர்அவ்ன் மன்னன் மூழ்கடிக்கப்பட் டதையும் அவனது உடல் பின்வரும் தலைமுறைக்கு ஓர் அத்தாட்சி என்ற நிலையில் பாதுகாக்கப்படும  என்றஇறைவனின் பிரகடனத்தை வாசித்துக்காட்டினார்.  அவ்வசனம் எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உன் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள "(அல்-குர்ஆன் 10: 92) இவ்வசனம் மோரிஸ் புகைல் அவர்களிடம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அங்கு கூடியிருந்தவார் களுக்கு முன்னால் அவர் அறிக்கையிட்டார் ! அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லாஹ்! வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்! கெய்ரோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட மம்மிகளில் ஃபிர்அவ்னின் உடல் மட்டும் வித்தியாசமானதாக உள்ளது. மற்றவை ரசாயன திரவங்களைக் கொண்டும் துணிகளில் பொதிந்தும் வைக்கப்பட்டிருக் கும் போது ஃபிர்அவ்னின் உடல் மட்டும் அப்படியே பாதுகாக்கப்படுகிறது!  திருக்குர்ஆனின் அறைகூவலை உண்மைப் படுத்திக் கொண்டிருக்கும் இந்த சாட்சியைக்கண்கூடாகக் கண்ட பின்னரும் மக்களில் பெரும்பாலோர் இன்னும் உறங்கிக் கொண்டுதான் உள்ளனர். திருக்குர்ஆனின் கூற்று எவ்வளவுஉண்மை! "நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்ப ற்றி அலட்சியமாக இருக்கின்றார்கல் " (அல்-குர்ஆன் 10:92)

சனி, ஆகஸ்ட் 03, 2019

மூன்று தலாக் சொல்லிவிட்டவர்,

 அலைநபி ஸல்லல்லாஹுஹி வஸல்லம்* அவர்கள் அறிவித்தார்கள்.,

மூன்று தலாக் சொல்லிவிட்டவர் குறித்து இப்னு உமர் ரலியல்லாஹு அன்று அவர்களிடம் வினவப்பட்டால், ஒரு தலாக், அல்லது இரண்டு தலாக் சொல்லியிருந்தால் *திரும்ப அழைத்துக்கொள்ளலாமே*❗ ஏனெனில், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறுதான் எனக்குக் கட்டளையிட்டார்கள். ஆனால், அவளை நீ மூன்று தலாக் சொல்லிவிட்டால் வேறொரு கணவரை அவள் மணக்கும் வரை உனக்கு அவள் விலக்கப்பட்டவளாக ஆகி விடுவாள் என்று பதிலளிப்பார்கள்.

*எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ்* தனது திருமறையில் கீழ் கண்ட வசனங்கள் மூலம் மனிதர்களுக்கு எச்சரிக்கை செய்கின்றான்.,

ஆனால், அவர்கள் தவணைக்குள் சேராமல் திருமண முறிவை உறுதிப்படுத்திக் கொண்டால், அத்தவணைக்குப் பின் *தலாக்* விவாகரத்து ஏற்பட்டுவிடும். நிச்சயமாக அல்லாஹ் அவர்களுடைய சத்தியத்தை செவியுறுபவனாகவும், அவர்கள் கருதிய *தலாக்கை* நன்கறிபவனாகவும் இருக்கின்றான். 📗 *அல்குர்ஆன் : 2:227*

*தலாக்* கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் வரும் வரையில் எதிர்பார்த்திருக்கவும். அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் உறுதி கொண்டவர்களாக இருந்தால்   அல்லாஹ் அவர்களுடைய கர்ப்பப் பையில் சிசுவை படைத்திருந்தால் அதனை மறைப்பது அவர்களுக்கு ஆகுமானது அல்ல. தவிர *ரஜயி* யான தலாக்குக் கூறப்பட்ட பெண்களின் கணவர்கள் பின்னும் சேர்ந்து வாழக்கருதி, தவணைக்குள் சமாதானத்தை விரும்பினால் அவர்களை மனைவிகளாகத் திருப்பிக்கொள்ள கணவர்கள் மிகவும் உரிமையுடையவர்கள். ஆகவே, மறுவிவாகமின்றியே மனைவியாக்கிக் கொள்ளலாம். ஆண்களுக்கு முறைப்படி பெண்களின் மீதுள்ள உரிமைகள் போன்றதே ஆண்கள் மீது பெண்களுக்கும் உண்டு.    ஆயினும், ஆண்களுக்குப் பெண்கள் மீது ஓர் உயர்பதவி உண்டு. அல்லாஹ் மிகைத்தவனும், நுண்ணறிவு உடையவனுமாக இருக்கின்றான்.
📗 *அல்குர்ஆன் : 2:228*

*ரஜயியாகிய இந்தத் தலாக்கை இருமுறைதான்* கூறலாம். பின்னும் தவணைக்குள் முறைப்படி தடுத்து மனைவிகளாக வைத்துக் கொள்ளலாம். அல்லது அவர்கள் மீது யாதொரு குற்றமும் சுமத்தாமல் நன்றியுடன் விட்டுவிடலாம். தவிர, நீங்கள் அவர்களுக்கு வெகுமதியாகவோ, மஹராகவோ கொடுத்தவைகளிலிருந்து யாதொன்றையும் எடுத்துக் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல. அன்றி இருவரும் சேர்ந்து வாழ்க்கை நடத்த முற்பட்டபோதிலும் அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புக்குள் நிலைத்திருக்க முடியாதென்று இருவருமே பயப்படும் சமயத்தில் இதற்குப் பஞ்சாயத்தாக இருக்கும் நீங்களும் அவ்வாறு மெய்யாக பயந்தால் அவள் கணவனிடமிருந்து பெற்றுக் கொண்டதிலிருந்து எதையும் விவாகரத்து நிகழ பிரதியாகக் கொடுப்பதிலும் அவன் அதைப் பெற்றுக் கொள்வதிலும் அவ்விருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளாகும். ஆதலால் நீங்கள் இவற்றை மீறாதீர்கள். எவரேனும் அல்லாஹ்வுடைய வரம்புகளை மீறினால் நிச்சயமாக அவர்கள்தான் அநியாயக்காரர்கள்.
📗 *அல்குர்ஆன் : 2:229*

*இரண்டு தலாக்குச் சொல்லிய பின்னர் மூன்றாவதாகவும்* அவளை அவன் தலாக்குச் சொல்லிவிட்டால் அவனல்லாத வேறு கணவனை அவள் மணந்துகொள்ளும் வரையில் அவள் அவனுக்கு ஆகுமானவளல்ல. ஆனால், அவனல்லாத வேறொருவன் அவளை திருமணம் செய்து அவனும் அவளைத் தலாக்குக் கூறிவிட்டால், அதன்பின் அவளும் முதல் கணவனும் ஆகிய இருவரும் சேர்ந்து அல்லாஹ் ஏற்படுத்திய வரம்பை நிலை நிறுத்திவிடலாம் என்று எண்ணினால் அவர்கள் இருவரும் திரும்பவும் திருமணம் செய்து கொண்டு மணவாழ்வில் மீண்டுகொள்வதில் அவர்கள் மீது குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளாகும். அறிந்து கொள்ளும் மக்களுக்காக இவற்றை அவன் விவரிக்கின்றான்.📗 *அல்குர்ஆன் : 2:230*

நீங்கள் தலாக்குக் கூறிய பெண்கள், தங்களுடைய இத்தாவின் தவணையை முழுமைப்படுத்திவிட்ட பின்னர் அவர்கள் தாங்கள் விரும்பிய ஆண்களுடன் ஒழுங்கான முறையில் திருமணம் செய்துகொள்வதை நீங்கள் தடுக்காதீர்கள். உங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டிருக்கிறாரோ அவர் இதனைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறார். இது உங்களை மிக தூய்மைப்படுத்துவதாகவும், மிக பரிசுத்தமாக்குவதாகவும் இருக்கிறது. இதிலுள்ள நன்மைகளை அல்லாஹ்வே அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.
📗 *அல்குர்ஆன் : 2:232*

பெண்களின் மஹரைக் குறிப்பிடாமல் திருமணம் செய்து அவர்களுடன் நீங்கள் வீடு கூடாமல் தலாக்குக் கூறிவிட்டாலும் உங்கள்மீது குற்றமில்லை. ஆயினும் அவர்களுக்கு ஏதும் கொடுத்துப் பயனடையச் செய்யவும். பணக்காரன் தன் தகுதிக்கேற்பவும், ஏழை தன் சக்திக்கேற்பவும் கண்ணியத்தோடு அவர்களுக்குக் கொடுத்து பயனடையச் செய்ய வேண்டியது நல்லோர்கள் மீது கடமையாகும்.
📗 *அல்குர்ஆன் : 2:236*

தவிர, தலாக்குக் கூறப்பட்ட பெண்களுக்கு, அவர்களுடைய இத்தாவின் தவணை வரையிலும் முறைப்படி கணவனுடைய சொத்திலிருந்தே பராமரிப்பு பெறத்தகுதியுண்டு. அவ்வாறு அவர்களை பராமரிப்பது இறை  அச்சமுடையவர்கள் மீது கடமையாகும்.
📗 *அல்குர்ஆன் : 2:241*

நபியே! உங்களுடைய மனைவிகளை நோக்கி நீங்கள் கூறுங்கள்., நீங்கள் *இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் மட்டுமே விரும்புவீர்களாயின் வாருங்கள்*❗உங்களுக்கு ஏதும் கொடுத்து நல்ல முறையில் தலாக் கொடுத்து உங்களை நீக்கி விடுகிறேன்.
📗 *அல்குர்ஆன் : 33:28*

*நபியே*❗அல்லாஹ்வும், நீங்களும் எவருக்கு அருள் புரிந்திருந்தீர்களோ அவரை நோக்கி நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து உங்களுடைய மனைவியை நீக்காது உங்களிடமே நிறுத்திக் கொள்ளுங்கள் என்று கூறிய சமயத்தில், நீங்கள் மனிதர்களுக்குப் பயந்து அல்லாஹ் வெளியாக்க இருப்பதை உங்கள் மனத்தில் மறைத்தீர்கள். நீங்கள் பயப்படத் தகுதி உடையவன் அல்லாஹ்தான் மனிதர்கள் அல்ல. *ஜைது* என்பவர் மனம் மாறி, தன் மனைவியைத் தலாக்கு கூறிவிட்ட பின்னர் நாம் அப்பெண்ணை உங்களுக்கு திருமணம் செய்து வைத்தோம். ஏனென்றால், நம்பிக்கை யாளர்களால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டவர்கள் தங்கள் மனைவிகளைத் தலாக்குக் கூறிவிட்டால், அவர்களை வளர்த்தவர்கள் அப்பெண்களை திருமணம் செய்துகொள்வதில் யாதொரு தடையிருக்கக்கூடாது என்பதற்காக இது நடைபெற்றே தீரவேண்டிய அல்லாஹ்வுடைய கட்டளை ஆகும்.📗 *அல்குர்ஆன் : 33:37*

நபி உங்களை *தலாக்* கூறி விலக்கிவிட்டால், உங்களைவிட மேலான பெண்கள் பலரை அவருடைய இறைவன் அவருக்கு மனைவியாக்கி வைக்க முடியும். மனைவியாக வரக்கூடிய அப்பெண்களோ முஸ்லிமானவர்களாகவும், நம்பிக்கைக் கொண்டவர்களாகவும், இறைவனுக்குப் பயந்து நமது நபிக்கு கட்டுப்பட்டு நடக்கக் கூடியவர்களாகவும், பாவத்தைவிட்டு விலகியவர்களாகவும், இறைவனை வணங்குபவர்களாகவும், நோன்பு நோற்பவர்களாகவும், கன்னியர்களாகவும், கன்னியர் அல்லாதவர்களாகவும் இருப்பார்கள். இதனால் உங்களுக்குத்தான் நஷ்டம்.
📗 *அல்குர்ஆன் : 66:5*

🌹 *யா அல்லாஹ்*  *உனக்கு வழிப்பட்டு நடந்த கூட்டத்தில் எங்களை சேர்த்தருள்வாயாக*❗

🌹 *நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை நடை முறையை பின்பற்றி வாழ நல்லருள் புரிவாயாக

தலாக் தலாக் தலாக்,

தலாக் தலாக் தலாக்...

மிகச்சிறந்த விளக்கம் தினமணியில்...!

எதிலும் அழகிய இஸ்லாம்..

இஸ்லாம் தவிர மற்ற மதங்களுக்கென தனிச் சட்டம் ஆரம்ப காலங்களில் இருந்ததாக அறியப்படவில்லை. சட்டங்கள் உருவாக்கப்பட்டு காலத்திற்குத் தக்கவாறு மாற்றி அமைக்கப்படுகின்றன. ஒரு மதத்தவர் அச்சட்டத்தை பின்பற்ற வேண்டியது கட்டாயம் என சொல்லபடவில்லை. ஆனால் இஸ்லாமிய ஷரீஅத் (சட்டம்) 1430 வருடங்களுக்கு முன்பு அருளப்பட்டு இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது. முஸ்லிம்கள் ஷரீஅத்தை பின்பற்றிதான் ஆக வேண்டும் என்பது கட்டாயம்.
1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்துரிமை, கணவனை விவாகரத்து செய்கின்ற உரிமை, மணமகனைத் தேர்வு செய்கின்ற உரிமை, சாட்சி சொல்கின்ற உரிமை உள்ளிட்ட பல உரிமைகளை வழங்கிய ஒரே மதம் இஸ்லாம் மட்டுமே.
இஸ்லாத்தில் திருமணம் என்பது ஒப்பந்தமாக கருதப்படுகிறது. வேறு வழியில்லாமல் ஆகிவிட்ட நிலையில்தான் கணவனும், மனைவியும் பிரியும் பாதையை தேர்ந்தெடுக்க வேண்டுமென்பது இஸ்லாமிய வழிமுறையாகும்.
விவாகரத்து முறை: கணவன், மனைவி பிரிவு குறித்து திருக்குர்ஆனில் இறைவன் ""நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்துவிட்ட நிலையில் எப்படி அதை பிடுங்கி கொள்ள முடியும்?'' (4:21) என்று இறைவனே கேட்க கூடிய அளவிற்கு அதன் முக்கியத்துவத்தை திருக்குர்ஆன் உணர்த்துகிறது.
"மனைவி விஷயத்தில் பிணக்கு (பிரச்னை) ஏற்படும் என்று அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கையில் அவர்களிடம் விளக்குங்கள்! அவர்களைக் கண்டியுங்கள், அவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு விட்டால் அவருக்கு எதிராக வேறு வழி தேடாதீர்கள்' என்று திருக்குர்ஆன் கணவனுக்கு அறிவுறுத்துகிறது.
பிளவு ஏற்படும் எனத் தெரிந்தால், மேற்கூறிய நடவடிக்கைகளால் பிரச்னை கைமீறி, பிளவு வருமென்று அஞ்சினால் கணவன் குடும்பத்திலிருந்து ஒருவரையும், மனைவி குடும்பத்திலிருந்து ஒருவரையும் நடுவர்களாக கொண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள் என்று கணவன், மனைவி இருவரின் குடும்பத்தார்களுக்கும், மத்தியஸ்தர்களுக்கும் திருக்குர்ஆன் கட்டளை இடுகிறது.
விவாகரத்து மிக சிறந்த முறை (அஹ்சன்): மேற்கண்ட முயற்சிகளுக்கு பிறகும் வாழ முடியாத நிலை ஏற்பட்டால், இரண்டு சாட்சிகள் முன்னிலையில் கணவன் மனைவியிடம் "உன்னை தலாக் (விவாகரத்து) செய்கிறேன்' என்று கூற வேண்டும். இதனை ஒரு முறை கூறினாலே போதும். இந்த தலாக் சொல்லும்பொழுது கண்டிப்பாக மனைவி மாதவிடாய் இல்லாத காலத்தில் (சுத்தமான காலத்தில்) இருத்தல் வேண்டும்.
தலாக் சொன்னதிலிருந்து மூன்று மாதவிடாய் காலம் (சுமார் மூன்றரை மாதம்) மனைவி கணவன் வீட்டிலேயே கணவனின் செலவிலேயே இத்தா (காத்திருப்பு காலம்) இருக்க வேண்டும். இக்காலத்தில் இருவரும் தாம்பத்திய உறவு கொண்டால், கணவன் விரும்பினால் இந்த மூன்றரை மாதத்திற்குள் மனைவியை மீட்டு கொள்ளலாம்.
இந்த இத்தா காலத்தில் மனைவி மறுமணம் செய்யக் கூடாது. இந்தக் காத்திருப்பு காலத்தில் (இத்தா) கணவன் மனைவியை மீட்காமலும் அல்லது தாம்பத்திய உறவு கொள்ளாமலும் இருந்தால் தலாக் (விவாகரத்து) நிறைவேறிவிட்டதாகக் கருதப்படுகிறது.
இதன் பின் கணவன் மீண்டும் அப்பெண்ணை மனைவியாக கொள்ள விரும்பினால், மஹர் கொடுத்து மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதற்கு மனைவியின் சம்மதமும் வேண்டும். ஒருவேளை அந்த பெண் வேறொருவரை திருமணம் செய்து கொள்ள விரும்பினால் அது அவளுடைய விருப்பம்.
ஒருகால் இந்த இத்தா காலத்தில் விவாகரத்தை முறித்து மனைவியைக் கணவன் சேர்த்துக் கொண்டபின், மீண்டும் அவர்களுக்குள் பிணக்கு ஏற்பட்டு பிளவு ஏற்படுமேயானால் இரண்டாவது முறையாக அவன் மேற்கண்டவாறு தலாக் செய்து இத்தா (காத்திருப்பு காலம்) இருக்க வைக்கலாம். மேற்கண்ட சட்டத்திட்டங்கள் தான் இரண்டாவது தலாக்கிற்கும்.
ஒருகால் கணவன் இரண்டாவது இத்தா காலத்திலும் விவாகரத்தை முறித்து மனைவியை சேர்த்துக் கொண்ட பின்னர் அவர்களுக்குள் மீண்டும் பிளவு ஏற்படுமேயானால் மூன்றாவது முறையாக அவன் தலாக் செய்து இத்தா (காத்திருப்பு காலம்) இருக்க வைக்கலாம்.
மேற்கண்ட சட்டதிட்டங்கள் தான் மூன்றாவது தலாக்கிற்கும் (விவாகரத்து). ஆனால் மூன்றாவது முறை தலாக் சொன்ன பிறகு அப்பெண்ணை கணவனால் இத்தா காலத்தில் மீட்டுக் கொள்ள இயலாது. அவ்வுரிமையை அவன் இழக்கிறான். அவள் வேறொருவருக்கு திருமணம் ஆகி விவாகரத்து பெற்றிருந்தால் தவிர, மீண்டும் அவளை திருமணம் செய்து கொள்ளவும் முடியாது.
மேலும், "மனைவியாக வாழ்ந்த காலத்தில் நீங்கள் அவளுக்கு கொடுத்தவற்றில் எதையும் திரும்ப பெறக் கூடாது' என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது. இதுதான் திருக்குர்ஆன் கூறும் விவாகரத்து முறையாகும்.
தலாக்குல் முபாரா (பரஸ்பர ஒப்புதல்)ட: கணவன், மனைவி இருவரும் தமக்குள் சேர்ந்து வாழ்வது ஒத்து வராது என கருதி இருவரும் சேர்ந்து பிரிந்து செல்வதாக முடிவு எடுத்தால் அழகிய முறையில் பிரிந்து செல்லலாம்.
தலாக்குல் குலா (பெண் விவாகரத்து கேட்டு பெறுதல்): மனைவி தலாக் கேட்டு பெறும் உரிமையை இஸ்லாம் வழங்கி இருக்கிறது. அதன்படி ஒரு பெண் தன் கணவனுடன் வாழ பிடிக்கவில்லை என்றாலோ அல்லது கணவன் முறைப்படி நடந்து கொள்ளவில்லை என்பதாலோ அவள் பிரிந்து செல்வதென முடிவு எடுத்தால் குலா முறையில் விவாகரத்து கோரலாம். ஜமாஅத் எனும் நிர்வாகத்தை அல்லது காஜியை அணுகி குலா மூலம் தன் கணவரிடம் தலாக் பெற்றுத் தர கோரலாம். அவர்கள் கணவனிடம் பேசி விவாகரத்து பெற்றுக் கொடுக்கலாம்.
கணவன் விவாகரத்து தர மறுத்தால் அந்த நிர்வாகமே திருமண பந்தத்தை முறித்து விவாகரத்தை உறுதி செய்வதாக அறிவிக்கலாம். இதற்கும் இத்தா என்கிற காத்திருப்பு காலம் உண்டு. மனைவி கணவனிடம் பெற்ற மஹரை திருப்பி கொடுக்கக் கடமைப்பட்டவளாகிறாள்.
ஆணுக்கு மட்டும் தலாக் கொடுக்கும் அதிகாரமும், பெண்ணுக்கு தலாக் கேட்கும் உரிமையும் எப்படி சமமாகும்? இது அநீதி அல்லவா? பெண்களுக்கு மட்டும் குறைந்த உரிமையை கொடுத்து ஆண் அடிமைத்தனத்தை உறுதி செய்வதுபோல அல்லவா இருக்கிறது என்று சிலர் கேட்கக்கூடும்.
உலகம் இன்றுவரை ஆண் ஆதிக்கத்திலேயே இருந்து வருகிறது. ஆண் படைப்பால் பலசாலியாக உள்ளான். அவனது ஆதிக்கத்திடமிருந்து ஒரு பெண் (மனைவி) அவனை விவாகரத்து கூறி தள்ளுவது மிக மிக கடினமாகும். தன்னை, தன் மனைவி வெறுக்கிறாளே என்ற கோபத்தில் அவனுக்கு எதையும் செய்ய தோன்றும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மனைவிக்கு மிக பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதையெல்லாம் கருத்தில் கொண்டே இஸ்லாம் பெண்ணுக்கு மிக பெரிய சமுதாய பங்களிப்புகளோடு கூடிய பாதுகாப்புடன் தலாக் கோரி பெறும் உரிமையை வழங்கி இருக்கிறது.
ஜமாஅத் மூலம் விவாகரத்து செயல்படுத்தப்படுவதால் ஜமாஅத்தின் பலமும் மனைவியோடு சேர்ந்து கொள்கிறது.
கணவன் விவாகரத்து செய்ய விரும்பினால் நடுவர்களை அழைத்து பிறகு தலாக் கூறி மூன்று மாதம் காத்திருக்க வேண்டும். ஆனால் பெண்ணுக்கு கேட்ட மாத்திரத்தில் விவாகரத்து கிடைக்கும். இதனால் ஆணைவிட பெண்ணிற்கு கூடுதலான உரிமை உண்டு என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
ஃபஸ்ஹ் (திருமண ஒப்பந்தத்தை முறித்தல் அல்லது ரத்து செய்தல்: கணவன் காணாமல் போனாலோ அல்லது சித்த பிரமை ஏற்பட்டாலோ அல்லது ஒழுங்கின, குற்றச் செயல்களில் ஈடுபட்டாலோ, அதுபோல் மனைவி ஒழுக்கம் தவறினாலோ அது குறித்து ஜமாஅத் என்கிற நிர்வாகத்திடம் தெரிவித்து திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்வது அல்லது பிரித்து கொள்வது ஃபஸ்ஹ் முறையாகும்.
உதாரணமாக, கணவன் காணாமல் போய் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக எங்கு இருக்கிறார் என்று அறிய முடியவில்லையென்றால், மனைவி இது குறித்து ஜமாஅத்திடம் தெரிவித்து திருமண பந்தத்தை ரத்து செய்ய கோரலாம். ஜமாஅத் நிர்வாகிகள் திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்து விடலாம்.
அதுபோல் ஒரு பெண் நடத்தை தவறினால் அதை கணவன் அறியும் பட்சத்தில் அவன் நான்கு சாட்சிகளைக் கொண்டு நிரூபிக்க வேண்டும். சாட்சிகள் இல்லையென்றால் இருவரும் அல்லாஹ்வின் பெயரால் நான்கு முறை சத்தியம் செய்து "இதனால் ஏற்படும் கேடு என்னையே சேரும்' என்று கூற வேண்டும். அதன் பிறகு நிர்வாகம் இருவரின் திருமண ஒப்பந்தத்தையும் ரத்து செய்து பிரித்து விடலாம்.
தலாக்குள் பித்அத் (நூதன தலாக்): தலாக் தலாக் தலாக் அல்லது முத்தலாக். இந்த முறை முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்திலோ அல்லது அவர்கள் பிறகு வந்த முதல் கலீபா காலத்திலோ இல்லை. பிற்காலத்தில் வந்த விவாகரத்து முறை. ஆதலால் இது நூதன தலாக் என்று பெயர் பெற்றுள்ளது.
இந்த முறையின் படி மூன்று முறை தலாக் கூறிவிட்டாலே விவாகரத்து நிறைவேற்றியதாக கூறுவர். இப்படி ஒரே நேரத்தில் மூன்று முறை கூறினாலும், அது ஒரே தலாக் ஆகத்தான் கருதப்படும் என சொல்லும் அறிஞர்களும் உள்ளனர். எல்லா திருமண முறிவிற்கும் இம்முறையைப் பின்பற்றுவது இல்லை.
தனது மனைவி சோரம் போவதைக் கண்ணால் கண்டுவிட்ட எந்த கணவனும் மனைவியைத் திரும்ப சேர்த்துக்கொள்ள சம்மதிக்க மாட்டான். இதுபோன்ற அசாதாரண சூழ்நிலையில் மட்டும் இதுபோன்ற தலாக் பயன்படுத்தப்படுகிறது.
சிலர் தீர்க்க கூடிய வாய்ப்புள்ள பிரச்னைகளுக்கும் இந்த முத்தலாக் முறையை தவறாகப் பயன்படுத்துவது சரியல்ல. அது பாவமும் ஆகும். இதை பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்கள் கண்டிக்கிறார்கள். ஒரு சட்டத்தை ஒருவர் தவறாக பயன்படுத்தினால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர சட்டத்தையே நீக்குவது அல்லது குறை கூறுவது எப்படி முறையாகும்?
ஷரீஅத்தை, உலகில் எவராலும் குற்றம் காண முடியாது என்பது உலக முஸ்லிம்களின் கருத்து மாத்திரமல்ல; உளமார்ந்த நம்பிக்கையும்கூட.
முத்தலாக்கை முன்னிறுத்தி இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என சூளுரைப்பது வேடிக்கையாக இருக்கின்றது.
பொது குளத்தில் எல்லோரும் குளிக்க அனுமதி இல்லாதபோது, சாதிக்கொரு மயானம் இருக்கின்றபோது, சாதி பெயரை சொல்லி மனிதர்களைக் கொல்லும் நிலை இருக்கும்பொழுது சட்டத்தில் மட்டும் சமத்துவம் எங்கிருந்து வருகிறது என்பது தெரியவில்லை!

கட்டுரையாளர்:
வழக்குரைஞர்.
எம்.ஜி.கே. நிஜாமுதீன்

நன்றி தினமணி

பிரபல்யமான பதிவுகள்