அலைநபி ஸல்லல்லாஹுஹி வஸல்லம்* அவர்கள் அறிவித்தார்கள்.,
மூன்று தலாக் சொல்லிவிட்டவர் குறித்து இப்னு உமர் ரலியல்லாஹு அன்று அவர்களிடம் வினவப்பட்டால், ஒரு தலாக், அல்லது இரண்டு தலாக் சொல்லியிருந்தால் *திரும்ப அழைத்துக்கொள்ளலாமே*❗ ஏனெனில், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறுதான் எனக்குக் கட்டளையிட்டார்கள். ஆனால், அவளை நீ மூன்று தலாக் சொல்லிவிட்டால் வேறொரு கணவரை அவள் மணக்கும் வரை உனக்கு அவள் விலக்கப்பட்டவளாக ஆகி விடுவாள் என்று பதிலளிப்பார்கள்.
*எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ்* தனது திருமறையில் கீழ் கண்ட வசனங்கள் மூலம் மனிதர்களுக்கு எச்சரிக்கை செய்கின்றான்.,
ஆனால், அவர்கள் தவணைக்குள் சேராமல் திருமண முறிவை உறுதிப்படுத்திக் கொண்டால், அத்தவணைக்குப் பின் *தலாக்* விவாகரத்து ஏற்பட்டுவிடும். நிச்சயமாக அல்லாஹ் அவர்களுடைய சத்தியத்தை செவியுறுபவனாகவும், அவர்கள் கருதிய *தலாக்கை* நன்கறிபவனாகவும் இருக்கின்றான். 📗 *அல்குர்ஆன் : 2:227*
*தலாக்* கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் வரும் வரையில் எதிர்பார்த்திருக்கவும். அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் உறுதி கொண்டவர்களாக இருந்தால் அல்லாஹ் அவர்களுடைய கர்ப்பப் பையில் சிசுவை படைத்திருந்தால் அதனை மறைப்பது அவர்களுக்கு ஆகுமானது அல்ல. தவிர *ரஜயி* யான தலாக்குக் கூறப்பட்ட பெண்களின் கணவர்கள் பின்னும் சேர்ந்து வாழக்கருதி, தவணைக்குள் சமாதானத்தை விரும்பினால் அவர்களை மனைவிகளாகத் திருப்பிக்கொள்ள கணவர்கள் மிகவும் உரிமையுடையவர்கள். ஆகவே, மறுவிவாகமின்றியே மனைவியாக்கிக் கொள்ளலாம். ஆண்களுக்கு முறைப்படி பெண்களின் மீதுள்ள உரிமைகள் போன்றதே ஆண்கள் மீது பெண்களுக்கும் உண்டு. ஆயினும், ஆண்களுக்குப் பெண்கள் மீது ஓர் உயர்பதவி உண்டு. அல்லாஹ் மிகைத்தவனும், நுண்ணறிவு உடையவனுமாக இருக்கின்றான்.
📗 *அல்குர்ஆன் : 2:228*
*ரஜயியாகிய இந்தத் தலாக்கை இருமுறைதான்* கூறலாம். பின்னும் தவணைக்குள் முறைப்படி தடுத்து மனைவிகளாக வைத்துக் கொள்ளலாம். அல்லது அவர்கள் மீது யாதொரு குற்றமும் சுமத்தாமல் நன்றியுடன் விட்டுவிடலாம். தவிர, நீங்கள் அவர்களுக்கு வெகுமதியாகவோ, மஹராகவோ கொடுத்தவைகளிலிருந்து யாதொன்றையும் எடுத்துக் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல. அன்றி இருவரும் சேர்ந்து வாழ்க்கை நடத்த முற்பட்டபோதிலும் அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புக்குள் நிலைத்திருக்க முடியாதென்று இருவருமே பயப்படும் சமயத்தில் இதற்குப் பஞ்சாயத்தாக இருக்கும் நீங்களும் அவ்வாறு மெய்யாக பயந்தால் அவள் கணவனிடமிருந்து பெற்றுக் கொண்டதிலிருந்து எதையும் விவாகரத்து நிகழ பிரதியாகக் கொடுப்பதிலும் அவன் அதைப் பெற்றுக் கொள்வதிலும் அவ்விருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளாகும். ஆதலால் நீங்கள் இவற்றை மீறாதீர்கள். எவரேனும் அல்லாஹ்வுடைய வரம்புகளை மீறினால் நிச்சயமாக அவர்கள்தான் அநியாயக்காரர்கள்.
📗 *அல்குர்ஆன் : 2:229*
*இரண்டு தலாக்குச் சொல்லிய பின்னர் மூன்றாவதாகவும்* அவளை அவன் தலாக்குச் சொல்லிவிட்டால் அவனல்லாத வேறு கணவனை அவள் மணந்துகொள்ளும் வரையில் அவள் அவனுக்கு ஆகுமானவளல்ல. ஆனால், அவனல்லாத வேறொருவன் அவளை திருமணம் செய்து அவனும் அவளைத் தலாக்குக் கூறிவிட்டால், அதன்பின் அவளும் முதல் கணவனும் ஆகிய இருவரும் சேர்ந்து அல்லாஹ் ஏற்படுத்திய வரம்பை நிலை நிறுத்திவிடலாம் என்று எண்ணினால் அவர்கள் இருவரும் திரும்பவும் திருமணம் செய்து கொண்டு மணவாழ்வில் மீண்டுகொள்வதில் அவர்கள் மீது குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளாகும். அறிந்து கொள்ளும் மக்களுக்காக இவற்றை அவன் விவரிக்கின்றான்.📗 *அல்குர்ஆன் : 2:230*
நீங்கள் தலாக்குக் கூறிய பெண்கள், தங்களுடைய இத்தாவின் தவணையை முழுமைப்படுத்திவிட்ட பின்னர் அவர்கள் தாங்கள் விரும்பிய ஆண்களுடன் ஒழுங்கான முறையில் திருமணம் செய்துகொள்வதை நீங்கள் தடுக்காதீர்கள். உங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டிருக்கிறாரோ அவர் இதனைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறார். இது உங்களை மிக தூய்மைப்படுத்துவதாகவும், மிக பரிசுத்தமாக்குவதாகவும் இருக்கிறது. இதிலுள்ள நன்மைகளை அல்லாஹ்வே அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.
📗 *அல்குர்ஆன் : 2:232*
பெண்களின் மஹரைக் குறிப்பிடாமல் திருமணம் செய்து அவர்களுடன் நீங்கள் வீடு கூடாமல் தலாக்குக் கூறிவிட்டாலும் உங்கள்மீது குற்றமில்லை. ஆயினும் அவர்களுக்கு ஏதும் கொடுத்துப் பயனடையச் செய்யவும். பணக்காரன் தன் தகுதிக்கேற்பவும், ஏழை தன் சக்திக்கேற்பவும் கண்ணியத்தோடு அவர்களுக்குக் கொடுத்து பயனடையச் செய்ய வேண்டியது நல்லோர்கள் மீது கடமையாகும்.
📗 *அல்குர்ஆன் : 2:236*
தவிர, தலாக்குக் கூறப்பட்ட பெண்களுக்கு, அவர்களுடைய இத்தாவின் தவணை வரையிலும் முறைப்படி கணவனுடைய சொத்திலிருந்தே பராமரிப்பு பெறத்தகுதியுண்டு. அவ்வாறு அவர்களை பராமரிப்பது இறை அச்சமுடையவர்கள் மீது கடமையாகும்.
📗 *அல்குர்ஆன் : 2:241*
நபியே! உங்களுடைய மனைவிகளை நோக்கி நீங்கள் கூறுங்கள்., நீங்கள் *இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் மட்டுமே விரும்புவீர்களாயின் வாருங்கள்*❗உங்களுக்கு ஏதும் கொடுத்து நல்ல முறையில் தலாக் கொடுத்து உங்களை நீக்கி விடுகிறேன்.
📗 *அல்குர்ஆன் : 33:28*
*நபியே*❗அல்லாஹ்வும், நீங்களும் எவருக்கு அருள் புரிந்திருந்தீர்களோ அவரை நோக்கி நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து உங்களுடைய மனைவியை நீக்காது உங்களிடமே நிறுத்திக் கொள்ளுங்கள் என்று கூறிய சமயத்தில், நீங்கள் மனிதர்களுக்குப் பயந்து அல்லாஹ் வெளியாக்க இருப்பதை உங்கள் மனத்தில் மறைத்தீர்கள். நீங்கள் பயப்படத் தகுதி உடையவன் அல்லாஹ்தான் மனிதர்கள் அல்ல. *ஜைது* என்பவர் மனம் மாறி, தன் மனைவியைத் தலாக்கு கூறிவிட்ட பின்னர் நாம் அப்பெண்ணை உங்களுக்கு திருமணம் செய்து வைத்தோம். ஏனென்றால், நம்பிக்கை யாளர்களால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டவர்கள் தங்கள் மனைவிகளைத் தலாக்குக் கூறிவிட்டால், அவர்களை வளர்த்தவர்கள் அப்பெண்களை திருமணம் செய்துகொள்வதில் யாதொரு தடையிருக்கக்கூடாது என்பதற்காக இது நடைபெற்றே தீரவேண்டிய அல்லாஹ்வுடைய கட்டளை ஆகும்.📗 *அல்குர்ஆன் : 33:37*
நபி உங்களை *தலாக்* கூறி விலக்கிவிட்டால், உங்களைவிட மேலான பெண்கள் பலரை அவருடைய இறைவன் அவருக்கு மனைவியாக்கி வைக்க முடியும். மனைவியாக வரக்கூடிய அப்பெண்களோ முஸ்லிமானவர்களாகவும், நம்பிக்கைக் கொண்டவர்களாகவும், இறைவனுக்குப் பயந்து நமது நபிக்கு கட்டுப்பட்டு நடக்கக் கூடியவர்களாகவும், பாவத்தைவிட்டு விலகியவர்களாகவும், இறைவனை வணங்குபவர்களாகவும், நோன்பு நோற்பவர்களாகவும், கன்னியர்களாகவும், கன்னியர் அல்லாதவர்களாகவும் இருப்பார்கள். இதனால் உங்களுக்குத்தான் நஷ்டம்.
📗 *அல்குர்ஆன் : 66:5*
🌹 *யா அல்லாஹ்* *உனக்கு வழிப்பட்டு நடந்த கூட்டத்தில் எங்களை சேர்த்தருள்வாயாக*❗
🌹 *நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை நடை முறையை பின்பற்றி வாழ நல்லருள் புரிவாயாக
நம்முடன் இணைந்து இருப்பவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபல்யமான பதிவுகள்
-
பத்ரு ஸஹாபாக்கள ் இரவு நமக்கு ரமலான் பிறை 17 அல்லாஹ்வின் கிருபையால் இஸ்லாத்தினb் முதல் போர் நடந்த நாள்.. பத்ரு போர் 313 ஸஹாபாக்கள் ...
-
இஸ்லாமிய கேள்விகளும் அதற்கான பதில்களும் ஸஹாபாக்களில் இரண்டு சிறகுடையவர் என்ற சிறப்பு பெற்ற நபித்தோழர் யார்? விடை: ஜஃபர் பின் அபீதாலிப்(ரலி)...
-
இஸ்லாமிய கேள்வி பதில்* 1. நாம் யார்? *நாம் முஸ்லிம்கள்.* 2. நம் மார்க்கம் எது? *நம் மார்க்கம் இஸ்லாம்.* 3. இஸ்லாம் என்றால் என்ன? *அல்...
-
https://youtu.be/CuQi6wXI9uo நோக்கங்களில் ஒன்று, ஒருவர் தன் பாலியல் தேவைகளை அனுமதிக்கப்பட்ட வழிகளில் நிறைவு செய்துகொள்ள வேண்டும் என்பதாகும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக