நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

செவ்வாய், செப்டம்பர் 10, 2019

ஆஷுராவும் துஆவும்

*ஆஷூரா துஆ பொருளுடன்.*
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِؕ
اَللّٰهُمَّ يَاقَابِلَ تَوْبَةِ اٰدَمَ يَوْمَ عَاشُوْرَاء ،
ஆஷூரா நாளன்று ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய தவ்பாவை ஏற்று அங்கீகரித்த நாயனே!
وَياَرَافِعَ اِدْرِيْسَ اِلَى السَّمَاءِ يَوْمَ عَاشُوْرَاءَ ،
ஆஷூரா நாளன்று இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை வானத்தளவில் உயர்த்திய நாயனே!
وَيَامُسَكِّنَ سَفِيْنَةَ نُوْحٍ عَلَى الْجُوْدِيِّ يَوْمَ عَاشُوْرَاءَ ،
ஆஷூரா நாளன்று நபி நூஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய கப்பலை பாதுகாவலுடன் ஜூதி மலைக்கு மேல் நிம்மதியுடன் தரிபடுத்தி வைத்த நாயனே!
وَيَامُنَجِّيَ اِبْرَاهِيْمَ مِنْ نَارِ نَمْرُوْدَ يَوْمَ عَاشُوْرَاءَ ،
ஆஷூரா நாளன்று நம்ரூதுடைய நெருப்பை விட்டும் இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஈடேற்றமாக்கி வைத்த நாயனே!
وَيَاجَامِعَ شَمْلِ يَعْقُوْبَ يَوْمَ عَاشُوْرَاءَ ،
ஆஷூரா நாளன்று யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அவர்கள் கூட்டம், குடும்பத்தினருடன் ஓன்று சேர்த்த நாயனே!
وَيَاكَاشِفَ الضُّرِّ اَيُّوْبَ يَوْمَ عَاشُوْرَاءَ ،
ஆஷூரா நாளன்று ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பிணி நோய்களை முற்றாக நீக்கிய நாயனே!
وَيَا فَارِجَ كُرْبَةِ ذِى النُّوْنِ يُوْنُسَ يَوْمَ عَاشُوْرَاءَ ،
ஆஷூரா நாளன்று யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நூன் என்ற மீனுடைய வயிற்றிலிருந்து வெளிப்படுத்தி சங்கடங்களையெல்லாம் நீக்கி சந்தோஷ வாழ்வை கொடுத்த நாயனே!
وَيَاغَافِرَ ذَنْبِ دَأُوْدَ يَوْمَ عَاشُوْرَاءَ ،
ஆஷூரா நாளன்று தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்களது பாவங்களை பொறுத்தருளிய நாயனே!
وَيَاسَامِعَ دَعْوَةِ مُوْسٰى وَهَارُوْنَ يَوْمَ عَاشُوْرَاءَ ،
ஆஷூரா நாளன்று மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய துஆவையும் நபி ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய துஆவையும் அங்கீகரித்து அருள் புரிந்த நாயனே!
وَيَازَائِدَ الْخِضْرِ فِي عِلْمِ يَوْمَ عَاشُوْرَاءَ ،
ஆஷூரா நாளன்று நபி கிலுரு அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அகமிய மெஞ்ஞான அறிவுகளை அதிகமாக அளித்து அருள் புரிந்த நாயனே!
وَيَارَافِعَ عِيْسَى بْنِ مَرْيَمَ اِلٰى السَّمَاءِ يَوْمَ عَاشُوْرَاءَ ،
ஆஷூரா நாளன்று மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது குமாரர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை வானத்தளவில் உயர்த்திய நாயனே!
وَيَانَاصِرَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُوْرَاءَ ،
ஆஷூரா நாளன்று எம்பெருமானார் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மிகச் சிறப்புடன் உதவிகள் அளித்த நாயனே!
وَيَاخَالِقَ الْجَنَّةِ وَالنَّارِ يَوْمَ عَاشُوْرَاءَ ،
ஆஷூரா நாளன்று சுவர்க்கத்தையும், நரகத்தையும் படைத்த நாயனே!
وَيَامُنَزِّلَ التَّوْرٰلةِ وَالزَّبُوْرِ وَالْاِنْجِيْلِ وَالْفُرْقَانِ الْعَظِيْمِ يَوْمَ عَاشُوْرَاءَ ،
ஆஷூரா நாளன்று தவ்ராத், ஜபூர், இன்ஜீல், மகத்துவமிக்க புர்கான் வேதங்களை இறக்கியருளிய நாயனே!
وَيَاخَالِقَ جِبْرِيْلَ وَمِيْكَائِيْلَ وَاِسْرَافِيْلَ وَعِزْرَائِيْلَ يَوْمَ عَاشُوْرَاءَ ،
ஆஷூரா நாளன்று ஜிப்ரயீல், மீகாயீல், இஸ்ராயீல், இஸ்ராபீல் அலைஹிஸ்ஸலாம் ஆகியோர்களை படைத்த நாயனே!
وَيَاخَالِقَ الْعَرْشِ وَالْكُرْسِيِّ وَالَّوْحِ وَالْقَلَمِ يَوْمَ عَاشُوْرَاءَ ،
ஆஷூரா நாளன்று அர்ஷையும், குர்ஸியையும், லவ்ஹையும்,கலமையும் படைத்த நாயனே!
وَيَاخَالِقَ الشَمْسِ وَالْقَمَرِ وَالنُّجُوْمِ يَوْمَ عَاشُوْرَاءَ ،
ஆஷூரா நாளன்று சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் படைத்த நாயனே
وَيَاخَالِقَ السَّمٰوٰتِ السَّبْعِ وَالْاَرْضِيْنَ السَّبْعِ يَوْمَ عَاشُوْرَاءَ ،
ஆஷூரா நாளன்று ஏழு வானம், ஏழு பூமிகளை படைத்த நாயனே!
اِقْضِ لَنَا الْحَاجَاتِ يَاقَاضِيَ الْحَاجَاتِ وَادْفَعْ عَنَّا السَّيِّأٰتِ وَالْبَلِيَّاتِ وَسَلِّمْنَا مِنْ اٰفَاتِ الدُّنْيَا وَفِتْنَيِهَا وَبَلَائِهَا وَوَبَائِهَا وَمُصِيْبَاتِهَا وَاَسْقَامِهَا وَشِدَّتِهَا وَفَقْرِهَا وَمِنْ اٰفَاتِ الْاٰخِرَةِ وَعَذَابِهَا وَاَهْوَالِهَا بِحُرْمَةِ سَيِّدِ التَّقَلَيْنِ وَرَسُوْلِ الْكَوْنَيْنِ مُحَمَّدِنِ الْمُصْطَفٰى خَاتَمِ النَّبِيِّيْنَ يَاحَيُّ يَاقَيُّوْمُ يَاذَالْجَلَالِ وَالْاِكْرَامِ يَامَالِكَ يَوْمَ الدِّيْنِ اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُ وَبِحُرْمَةِ السَّيِّدَيْنِ الشَّهِيْدَيْنِ اَبِى مُحَمَّدِنِ الْحَسَنِ وَاَبِى عَبْدِاللهِ الْحُسَيْنِ اَللّٰهُمَّ زٍدْهُمَا تَعْظِيْمًا وَتَكْرِيْمًا . وَصَلَّى اللهُ وَسَلَّمَ وَبَارَكَ عَلَى خَيْرِ خَلْقِهِ سَيِّدِنَا مُحَمَّدٍ وَاٰلِهِ وَصَحْبِهِ اَجْمَعِيْنَ وَالْحَمْدُ لِلهِ رَبِّ الْعَالَمِيْنَ .
நாட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றித் தரக்கூடிய வல்லமை மிக்க நாயனே! கிருபையுள்ள அல்லாஹ்வே! எங்களுடைய நாட்ட தேட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவாயாக! தீமைகள்,பொல்லாங்குகள் அனைத்தையும் அகற்றி நிவர்த்தி செய்கின்ற நாயனே! எங்கள் தீமைகளையும், பொல்லாங்குகளையும் நிவர்த்தி செய்தருள் புரிவாயாக! மேலும் இவ்வுலகத்தின் ஆபத்து, தீங்குகளை விட்டும், பயங்கரச் சோதனைகளை விட்டும், பலாய் முஸீபத்துகளை விட்டும், பீடை, பிணி, வியாதிகளை விட்டும் எங்களை காப்பாற்றியருள்வாயாக! மேலும் மறு உலக வாழ்வின் பயங்கரங்களை, அபாயங்களை, தண்டனைகளை, அமளிகளை விட்டும் எங்களை பாதுகாத்து கொள்வாயாக! என்றென்றும் நிலைத்திருப்பவனே! மகத்துவம் மிக்கவனே! சங்கைமிக்க தயாபரனே! தீர்ப்பு நாளின் அதிபதியே! உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவிதேடுகிறோம். எங்கள் இந்த துஆக்கள் அனைத்தையும் இரு லோகத்திற்கும் சர்தாரும், ஈருலக இரட்சகரும், அனைத்துலகுக்கும் அருட்கொடையாக வந்துதித்த ரஸூல்மார்களுக்கெல்லாம் தலைவரும்,நபிமார்களுக்கெல்லாம் அதிபதியும், நபிமார்களில் முத்திராங்கமாகத் தோன்றிய எம்பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொருட்டினாலும், அவர்களுடைய அருந்திருப்பேரர்கள், ஷஹீதுக்கெல்லாம் தலைவராகிய இமாம் ஹுஸைன், இமாம் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்களின் பொருட்டினாலும் நீ கிருபையுடன் கபூல் செய்து ஏற்றுக் கொள்வாயாக!அங்கீகரிப்பாயாக! இறைவா! எங்கள் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இரு கண்மணிகளான அவ்விரு பேரர்களையும் மேலும் சிறப்பாக்கி , கண்ணியப்படுத்தி வைப்பாயாக! ஆமீன்...
ஸல்லல்லாஹூ அலா முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்

மேலும் தகவலுக்கு

http://vellimedai.blogspot.com/2019/08/blog-post_29.html?m=1

1 கருத்து:

MOULAVI KADARBASHA MANBAYEE சொன்னது…

ஒரு சமயம் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் தங்கள் பேரக் குழந்தைகளோடு விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.

அப்போது பேரர் ஹசன் (ரலி) அவர்களுக்கு உதட்டிலும் , பேரர் ஹுசைன் (ரலி) அவர்களுக்கு கழுத்திலும் முத்தமிட்டார்கள். இந்த விஷயத்தை ஹசன் (ரலி) அவர்கள் தாயார் பாத்திமா (ரலி) அவர்களிடம் தெரிவித்தார்கள் .

பாத்திமா ரலி அவர்கள், நபிகள் நாயகம் ஸல் அவர்களிடம் வந்து “நாயகமே பேரர்கள் மத்தியில் முத்த விஷயத்தில் ஏன் பாகுபாடு செய்தீர்கள் ” என்று வினவினார்கள்.

அருமை மகளே!இவர்கள் பெரியவர்களான பின்னர் ஹசன் (ரலி ) நஞ்சு ஊட்டப்பட்டு இறப்பார்கள் அதனால்தான் உதட்டில் முத்தம் கொடுத்தேன், இளயவர் ஹுசைன் கழுத்து வெட்டப்பட்டு இறப்பார்கள் அதனால்தான் கழுத்தில் முத்தமிட்டேன் என்று விளக்கமளித்தார்கள்.

இச் செய்தியை செவியுற்ற அன்னை பாத்திமா அவர்கள் அழுதுக் கொண்டே கேட்கிறார்கள் நாயகமே! ஒவ்வொரு இறைத் தூதருக்கும் ஒரு விஷேசமான பிரார்த்தனையை அல்லாஹ் வழங்கியுள்ளானே, அது போன்று அல்லாஹ் உங்களுக்கும் வழங்கியுள்ளானே அதைக்கொண்டு உங்களுடைய பேரர்களை நீங்கள் காப்பாற்ற வேண்டும் ” என்று கெஞ்சுகிறார்கள் .



அப்போது அண்ணலார் பெருமானார் அவர்கள் கண் கழங்கியவர்களாக மகளே அதை மறுமையில் எனது சமுதாயத்தாரின் நலனுக்கு வேண்டி மாற்றி வைத்து விட்டேன் என்று கண்ணீர் மழ்க கூறினார்கள் . எனவே அதனை எனது பேரக் குழந்தைகளுக்காக இங்கு பயன் படுத்த முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்ர்கள் .
அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒவ்வொரு இறைத்தூதருக்கும் தம் சமுதாயத்தாருக்கு சிறப்பு பிரார்த்தனை செய்ய உரிமை உண்டு, நான் எனது பிரார்த்தனையை மறுமை நாளில் எனது சமுதாயத்தாருக்கு வேண்டி பரிந்துரை செய்ய பத்திரப்படுத்திவிட்டேன் ”

(ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) .
முஸ்லிம்.)

தன் குடும்பத்தினர் ஏதேனும் பிரட்சனையில் சிக்கிக் கொண்டால், உடனே தன்னிடம் உள்ள பணப் பலம், படைப்பலம், ஆட்சி அதிகாரப் பலம் போன்றவற்றை பயன் படுத்தி அதில் இருந்து விடுவிப்பதற்கு வழி தேடுவோரைத்தான் இவ்வுலகம் கண்டிருக்கும்.

ஆனால் தமக்குரிய விஷேச உரிமைகளைக் கூட தனது சமுதாயத்தாருக்காக பயன்படுத்துவேன் , இங்கு எனது குடும்பத்தாருக்கு பயன்படுத்த மாட்டேன், என்றுரைத்த அண்ணலம் பெருமானார் அவர்கள் போன்று தங்கள் சமுதாயத்தாரின் மீது அக்கரை உள்ள தலைவரை இவ்வுலகம் இதுவரை கண்டதில்லை , இனிமேல் காணப்போவதும் இல்லை , சிறந்த தலைவருக்கு இதுவே முன்னுதாரணம்

பிரபல்யமான பதிவுகள்