நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வியாழன், நவம்பர் 26, 2020

வரலாற்றில் ஓர் ஒட்டகம்! அதன் பெயர்: 'கஸ்வா(ஹ்)'

🐪வரலாற்றில் ஓர் ஒட்டகம்! அதன் பெயர்:  'கஸ்வா(ஹ்)'

🐪அரபு தீபகற்பத்தில் குறைஷிகுலத்தினரின் தொழுவத்தில் தான் அதன் பிறப்பு. 

🐪அது நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒட்டகம் எனும் அடைமொழியோடு வாழ்ந்தது. 

🐪முன்பு அது அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர் களிடம் இருந்தது, அதை அவர்கள் மிக விருப்புடனும் வாஞ்சை
யோடும் வளர்த்து வந்தார்கள், அதை நபியவர்கள் நானூறு தங்கக் காசுகளுக்குப் பதிலாக வாங்கினார்கள். 

🐪அதன் நிறமோ கருப்பும்  வெள்ளையும் கலந்ததாகவும் வெள்ளை நிறம் சற்று தூக்கலாக வும் இருந்தது. 

🐪'அல் ஜத்ஆஃ- الجدعاء',                                

'அல் கள்பாஃ-القضباء'،                  

'அல்அஸ்பாஃ-العصباء' 
ஆகியவை அதன் 
பட்டப் பெயர்களாகும். 

🐪அதன் இயற்பெயர் 'அல் கஸ்வாஃ-القصواء'ஆகும்,
காது பகுதி அறிந்தது என்பது அதன் சொற் பொருளாகும், 
ஆனால் அதன் காதின் சிலபகுதி அறுபட்டிருக்கவில்லை, 
அது விரைந்து செல்லக்கூடியது என்பதாலேயே அதற்கு அப்பெயர் வயலாயிற்று.

🐪அது நான்கு வயதாக இருக்கும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதை வாங்கினார்கள்,அவர்களிடம் வந்தபின் 11 ஆண்டுகள் வாழ்ந்தது, அதன் 15ஆவது வயதில் அது இறப்பை எய்தியது.

🐪அது நபி பள்ளிவாசலின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பகீவு பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் வசித்து, அதை நபியவர்கள் கட்டிப்போடால் அவிழ்த்தேவிட்டிருந்தார்கள். 

🐪பகீவுவில் விளையும் புற்பூண்டுகளே அதன் உணவாகும்.

🐪அது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ் தன்பால் அழைத்துக்கொண்ட பின் கடின துக்கத்திற்குள்ளாகி உணவு உண்ணாமல் நீர் பருகாமல்  கண்பார்வை போய் அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிகாலத்தின் துவக்கத்தில் இறந்துபோனது. 

🐪கஸ்வாவின் சிறப்புகள்:
1) நபிகளார் மக்காவிலிருந்து மதீனாவுக்குப் புலம்பெயரும் போதே அதுவும் அவர்களுடன் புலம் பெயர்ந்து சென்றது.
2) பனுன் நஜ்ஜார் வீதியில் உள்ள நபவீபள்ளியிலேயே அதுவும் கட்டுண்டு இருந்தது. 
3) வஹீயின் சுமை மிகவும் பலமிக்கது , அதை அது பலமுறை சுமந்துள்ளது,வஹீ இறங்கும் நேரத்தில் சுமை தாங்கமுடியால் அமர்ந்ததில்லை,அது ஒன்று மட்டுமே இத்தகைய சக்தியைக் கொண்டிருந்தது. 
4) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கஅபாவை வலம் வரும்பொழுது அதுவே வாகனமாகப் பயன்பட்டது. 

5) 🐪அது அல்லாஹ் வின் படைப்பின் அழகால் நபியவர்களை தன்பால் ஈர்த்தது.
அது ஒட்டகப் போட்டிகளில் அதுவே வென்று வந்தது, ஒருமுறை தோற்றும் இருக்கிறது, அப்போது இஸ்லாமியர்கள் மிகவும் கவலையுற்றனர். 

6) அதற்குச் சிறப்புச் சேர்ப்பதற்காக 
அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களை 'கஸ்வாஃ எனும் ஒட்டகத்திற்குச் சொந்தக்காரர்-ஸாஹிபுன் நாகதில்  கஸ்வாஃ'என்று அழைப்பதுண்டு. 

7) நபியவர்கள் அதில் ஏறி பயணிக்கும்போது பெரிய நபித்தோழர்கள் உள்பட பின்தொடர்ந்துவருவார்கள், முக்கியமான நேரங்களில் அந்த ஒட்டகத்தை பெரிய நபித்தோழர் களுடன் அனுப்பிவைப்பார்கள். 
எ. கா. விடைபெறும் ஹஜ்ஜுக்கு முன் மினாவுக்கு அலீ பின் அபுதாலிப் ரளியல்லாஹு அவர்களை அனுப்பிவைத்தார்கள்

🐪கஸ்வா வின் முன்னெடுப்புகள்:
அது ஐந்து முக்கியமான நிகழ்வுகளில் கலந்துள்ளது. 

1) பத்ருப் போர்
2) மக்கா வெற்றியின் போது
3)நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கை நாளன்று அதில் ஏறியே பயனித்தார்கள். 
4) உம்ரதுல் களாவை நிறைவேற்ற நபியவர்கள் அதில் அமர்ந்தே பயனித்தார்கள். 
5) விடைபெறும் ஹஜ்ஜுக்கு அதில் தான் பயணித்தார்கள். 
🐪ஆக அது அல்லாஹ்வின் தூதர் பயன்படுத்திய ஒட்டகம். 

அல்லாஹும்ம ஸல்லி வ ஸல்லிம் வபாரிக் அலா சய்யிதினா முஹம்மதின் வ அலா ஆலிஹி வ ஸஹ்பிஹி வ ஸல்லிம் தஸ்லீமன் கஸீரா இலா யவ்மித்தீன்

கருத்துகள் இல்லை:

பிரபல்யமான பதிவுகள்