நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

திங்கள், செப்டம்பர் 27, 2021

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) என்றால் என்ன?

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) என்றால் என்ன?*

1982ஆம் ஆண்டு பர்மா அரசாங்கம் குடியுரிமை சட்டத்தைக் கொண்டு வந்தது. யாரேனும் பர்மாவில் குடியுரிமை பெறவேண்டுமென்றால் அவர்கள் 1824ஆம் ஆண்டிலிருந்து பர்மாவில் குடியிருக்க வேண்டும் என்ற விதியை அதில் கொண்டு வந்த்து இதுதான் 2017-ல் பல இலட்சக்கணக்கான ரோஹிங்கிய முஸ்லிம்களை பர்மாவை விட்டு விரட்டியடிக்கக் காரணமானது. 
ஜெர்மனியில் ஹிட்லர் 1935ஆம் ஆண்டு குடியுரிமை சட்டத்தைக் கொண்டு வந்தார். லட்சக்கணக்கான யூதர்களை அந்நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கும், அவர்களைக் கொன்றொழிப்பதற்கும் அதுதான் காரணமாக அமைந்தது.
வரலாற்றில் இன அழிப்புக்கான ஒரு வலிமையான ஆயுதம் தான் குடியுரிமை சட்டம். அதைத்தான் இன்று சங்கப்பரிவாரங்கள் கையில் எடுத்திருக்கின்றனர் என்பதைக் கவனத்தில் கொண்டு, பின்வரும் செய்தியை கவனமாகப் படிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் 
அண்மையில் நாடாளுமன்றத்தில் CAB (Citizenship Amendment Bill) குடியுரிமை திருத்த மசோதா, ஆளும் பாசிக பாஜக அரசாங்கத்தால் கடந்த 09.12.2019 திங்கட்கிழமை அன்று தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தில் பாஜக பெரும்பான்மையாக இருப்பதால் 12 மணி நேர விவாதத்திற்குப் பிறகு 311:80 என்ற வாக்கு விகிதத்தில் சட்டம் நிறைவேறியது.
அதைத் தொடர்ந்து கடந்த 11.12.2019 புதன்கிழமை அன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு 6 மணி நேர விவாதத்திற்குப் பிறகு 125:105 விகிதத்தில் நிறைவேறியது. மாநிலங்களவையில் பாஜக பெரும்பான்மையாக இல்லாவிட்டாலும் அதிமுக என்ற அடிமைக் கட்சியின் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

https://chat.whatsapp.com/DEIF8AHE7ii8BsqyL22AvS

இவ்வாறு இரு அவைகளிலும் இந்தச் சட்டம் நிறைவேறிய பிறகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பின் அது சட்டமாக ஆகி விட்டது. அதனால் அது இனி மசோதா என்று அழைக்கப்படாது. Citizenship Amendment Act (CAA) குடியுரிமை திருத்தச் சட்டம் என்றே அழைக்கப்படும். 
என்ன திருத்தம்? 
1955ஆம் ஆண்டுக்கான இந்திய குடியுரிமைச் சட்டம் இரண்டு விஷயங்களைக் குறிப்பிடுகின்றது. 
1. இந்தியாவில் குடியுரிமை கோரும் வெளிநாட்டினர் இந்தியாவில் 11 வருடங்கள் தங்கியிருக்க வேண்டும்.
2. அவர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் குடியேறியிருக்க வேண்டும். 
இதில்தான் மத்திய அரசு திருத்தம் கொண்டு வருகின்றது. 
இந்தியாவில் குடியேறிய வெளிநாட்டினர் இனி 11 வருடங்கள் தங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் 2014 டிசம்பர் 31க்கு முன்பு, 5 ஆண்டுகள் தங்கியிருந்தால் போதும். அவர்கள் சட்டவிரோதக் குடியேறிகளாக இருந்தாலும் இனி சட்டப்பூர்வமான குடியேறிகள் ஆகிவிடுவார்கள். அதனால் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும். 
ஆனால் இந்தத் திருத்தத்தின் கீழ் குடியுரிமை பெறத் தகுதியுடையோர், 1. இந்துக்கள், 2. கிறிஸ்துவர்கள், 3. பௌத்தர்கள், 4. பார்சிகள், 5. சீக்கியர்கள்,  6. ஜைனர்கள் ஆகிய 6 மதங்களைச் சார்ந்தவர்கள் மட்டும் தான். முஸ்லிம்களுக்குக் குடியுரிமை வழங்கப்படாது என்பது தான் அந்தச் சட்டத்திருத்தம்.
இந்திய அரசியல் சாசனத்தின் 14வது விதி, சமத்துவத்துக்கான உரிமையை அளிக்கின்றது. இந்தச் சட்டத்தின்படி அனைவருக்கும் சம அளவிலான பாதுகாப்பு உரிமை உண்டு என்று தெளிவாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குடிமக்கள் மற்றும் குடிமக்கள் அல்லாத அனைவருக்கும் இது பொருந்தும்.
அதேபோன்று, அரசியல் சாசனத்தின் 15வது விதியும் சாதி, மதம், இனம், பாலினம், பிறப்பு இவற்றின் அடிப்படையில் யாருக்குமிடையே பாகுபாடு காட்டக்கூடாது என்று கூறுகின்றது.
இவையெல்லாம் இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை விதிகள். இவற்றுக்கு மாற்றமாக எந்தச் சட்டத்தையும் யாரும் நிறைவேற்ற முடியாது. அவர்கள் நாடாளுமன்றத்தில் மிருக பலம் கொண்டிருந்தாலும் சரி! அசுர பலம் கொண்டிருந்தாலும் சரி!
ஆனால் அரசியல் சாசனம் வழங்கியுள்ள இந்த அடிப்படை உரிமைகளுக்கு எதிராகத் தான் பாசிச பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. அதாவது, முஸ்லிம்களைத் தவிர பிற மக்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இந்தச் சட்டத்தை எதிர்த்து நாடே எரிமலையாகப் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது. முஸ்லிம்கள் மட்டுமின்றி அவர்களுக்கு ஆதரவாக முஸ்லிமல்லாத பிற மதத்தவர்களும் சேர்ந்து இந்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர்.
இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்கையில், “இது முஸ்லிம்களுக்கு எதிரான சட்டமல்ல! ஓரிடத்தில் கூட இது முஸ்லிம்களைப் பற்றி குறிப்பிடவில்லை” என்று குறிப்பிடுகின்றார். இங்குள்ள அடிமை ஓப்பி, ஈப்பிகளும் அதையே வாந்தியெடுக்கின்றனர்.
மதரீதியாக இந்தியர்களைப் பிளவுபடுத்துகின்றது என்ற ஒற்றைக் காரணத்திற்காகவே இந்தச் சட்டத்தை எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்க வேண்டும். ஆனாலும் CAA முஸ்லிம்களைப் பற்றி குறிப்பிடவில்லை என்று அமீத்ஷா சொல்வதை ஒரு வாதத்திற்கு ஏற்றுக் கொள்வோம். ஆனால் அமீத்ஷா இத்துடன் நின்றால் பரவாயில்லை. அவர் NRC என்ற சட்டத்தையும் சேர்த்து அமல்படுத்துவோம் என்று அன்றும் இன்றும் அழுத்தம் திருத்தமாக அடித்துச் சொல்கின்றார். இதில்தான் முஸ்லிம்களுக்கு ஆபத்து ஒளிந்திருக்கின்றது. அதைத் தெரிந்து கொள்வதற்கு இங்கு நாம் NRC அல்லது NRIC என்ற சட்டத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்திலும் அவசரத்திலும் இருக்கிறோம். 
தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) என்றால் என்ன?
National Register of Citizens அல்லது National Register of Indian Citizens தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது தான் NRC என்று அழைக்கப்படுகின்றது.
CAA என்பதற்கும் NRC என்பதற்கும் இடையிலுள்ள வித்தியாசத்தையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 
என்ன வித்தியாசம்? 
CAA எனும்  குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பற்றிய விளக்கத்தை மேலே நாம் பார்த்தோம். CAA என்றால் சுருக்கமாக இந்தியக் குடிமக்களாக ஒரு தரப்பு மக்களைச் சேர்த்தல் என்றும், NRC என்றால் இந்தியக் குடிமகன் என்ற தகுதியிலிருந்து ஒரு தரப்பு மக்களை நீக்குதல் என்றும் நாம் எளிதாக விளங்கிக் கொள்ளலாம்.
இப்போது நாடு முழுமைக்கும் அமித்ஷா குறிப்பிட்டது போன்று NRC அமலுக்கு வருகின்றது என்று வைத்துக் கொள்வோம்.
இந்த NRC திட்டப்படி இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும், தான் இந்தியர் தான் என்று அரசிடம் நிரூபிக்க வேண்டும். அதற்கு ஆதார் கொடுத்தால் மட்டும் போதாது. ஏனென்றால் ஆதார் அட்டையிலேயே, “இது அடையாளத்திற்கான சான்று மட்டுமே! குடியுரிமைக்கான சான்று அல்ல!” என்று அச்சிட்டுத்தான் தருகிறார்கள். எனவே ஆதாரை வைத்து எதுவும் செய்ய முடியாது. 
நீங்கள் இந்த ஊரில் தான் பிறந்தீர்கள், இன்ன நபருக்குத்தான் பிறந்தீர்கள், உங்கள் தந்தையும் இங்கே தான் பிறந்தார் என்று நிரூபிக்க வேண்டும். எல்லா அலுவலகத்திலும் லஞ்சம் கொடுத்து ஆவணங்களைத் திரட்ட வேண்டும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்வோர் வேலையை விட்டு விட்டுத் தங்கள் ஊருக்கு வந்து, இவற்றைச் செய்ய வேண்டும். அப்படியும் திருப்திகரமாக ஆவணங்களைக் காட்ட இயலாவிட்டால், அல்லது எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தாலும் சங் பரிவாரச் சிந்தனை கொண்ட அரசு அதிகாரிகள் அவற்றை ஏற்றுக் கொள்ள மறுத்தால், இந்த நாட்டின் பூர்வக் குடிமக்களாக இருந்தாலும் அவர்கள் இந்தியரல்லர் என்று அறிவிக்கப்படுவார்கள். 
 அப்படிக் காட்ட இயலாமல் போவதில் இந்துக்களும் இருப்பார்கள் அல்லவா? அப்படியானால் இது முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது என்று எப்படிச் சொல்ல முடியும்? என்று கேள்வி எழுப்பலாம்.
இங்குதான் CAAயின் தேவை வருகிறது. இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தியராக இல்லாவிட்டாலும் CAA சட்டத்தின்படி குடியுரிமை பெறுவார். அதாவது, இந்துக்கள், கிறிஸ்துவர்கள், பௌத்தர்கள், பார்சிகள், ஜைனர்கள், சீக்கியர்கள் ஆகிய ஆறு பிரிவினரும் CAAவுக்குள் வந்து விடுவார்கள். அவர்கள் தமது வாழ்நாளை அப்படியே தொடரலாம். 
ஆனால் இந்தியாவிலேயே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த ஒரு முஸ்லிமுக்கு CAAயின் பாதுகாப்பு இல்லாததால் வந்தேறி என்ற முத்திரை குத்தப்படுவார். இந்த இரண்டு சட்டங்களையும் வைத்து இந்தியாவில் வசிக்கும் பாதிக்கும் மேற்பட்ட முஸ்லிம்களை சுலபமாக வந்தேறிகள் என்று அறிவித்து விடலாம். அவர்களது குடியுரிமையை பறித்து விடலாம்.  ரேஷன் கார்டு, வாக்குரிமை போன்றவை பறிக்கப்பட்டு, Detention Camp என்ற தடுப்பு முகாம்களில் அவர்களை அடைத்து விடலாம்.
NRC அமுலுக்கு வந்ததும் நாடு முழுவதிலும் சரியாக ஆவணங்கள் இல்லாத முஸ்லிம்களும், அதுபோல் மேலே குறிப்பிட்ட ஆறு மதத்தினர்களும் தங்கள் குடியுரிமைக்காக விண்ணப்பிப்பார்கள். இப்போது அரசாங்கத்திற்கு முன்னுள்ள வேலை மிகவும் எளிது. CAA அடிப்படையில் குடியுரிமைக்குத் தகுதியான ஆறு மதத்தவர்களை மட்டும் சேர்த்து விட்டு NRC அடிப்படையில் முஸ்லிம்களைக் கழித்து விடுவார்கள். இதன்பின்னர் முஸ்லிம்கள் கைதிகளாகவோ அல்லது அகதிகளாகவோ இருக்க வேண்டும். அல்லாஹ் காப்பாற்றுவானாக! 
CAA என்பது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகளிலிருந்து மதரீதியில் துன்புறுத்தலுக்காகி இந்தியாவுக்குள் வருகின்ற ஆறு மதங்களைச் சார்ந்தவர்களுக்கு என்று சொன்னாலும் அமித்ஷாவின் NRC அறிவிப்பு அதைத் தவிடுபொடியாக்கி விடுகின்றது. எனவே, முஸ்லிம்களுக்குப் பாதிப்பில்லை என்று கூறும் அமித்ஷாவின் பொய்யான வாக்குறுதியை முஸ்லிம்கள் மட்டுமல்ல! இந்த நாட்டில் வசிக்கும் நடுநிலையான எந்தக் குடிமகனும் நம்புவதற்குத் தயாரில்லை.
அஸ்ஸாமில் உள்ள முஸ்லிம்களை வெளியேற்றுவதற்காக அங்கு NRC அமுல்படுத்தப்பட்டது. 1600 கோடி ரூபாய் செலவு செய்து, ஆறாண்டு கால கடுமையான உழைப்புக்குப் பிறகு NRC மூலம் 19 லட்சம் அஸ்ஸாம் குடிமக்கள் இந்தக் குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் விடுபட்டவர்களில் 12 லட்சம் பேர் வங்க மொழி பேசும் இந்துக்கள்! மற்ற 7 லட்சம் பேர் முஸ்லிம்கள்! இது அஸ்ஸாம் மக்களிடம் பாஜகவுக்குப் பெரும் அவப்பெயரை வாங்கிக் கொடுத்து விட்டது. 
அந்தத் தவறை மறைப்பதற்காகவும், விடுபட்ட 12 லட்சம் இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்கிவிட்டு, ஏழு லட்சம் முஸ்லிம்களை அகதிகளாக நாடு கடத்த வேண்டும் என்பதற்காகவும் CAA கொண்டு வரப்பட்டுள்ளது.
அதே பாணியில்  நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்களை அகதிகளாக்குவதற்காகத்  தான்  NRC-யை இந்தியா முழுமைக்கும் அமுல்படுத்த அமித்ஷா துடிக்கின்றார் என்பதை இஸ்லாமிய சமுதாயம் நன்றாக விளங்கி வைத்திருக்கின்றது.
இப்போது மோடி - அமித்ஷா கூட்டணியிடம் நாம் முன்வைக்கும் கோரிக்கை இதுதான்.
1. CAA எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும். 
2. NRC எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமுல்படுத்த மாட்டோம் என்று பகிரங்கமாக நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டும். 
இந்த இரண்டு கோரிக்கைளையும் நிறைவேற்றும் வரையில் சமுதாயம் போராடிக் கொண்டிருக்க வேண்டும்.
*நீங்கள் படித்து விட்டு மற்றவர்களுக்கும் அனுப்புங்கள்*

*உங்கள் வாயிலாக அல்லாஹ் ஒருவரை நேர்வழியில் செலுத்துவது சிகப்பு ஒட்டகங்களை (தருமம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்*

மத்ரஸா நிஸ்வானுஸ் ஸாலிஹாத் ,பழவேற்காடு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
மத்ரஸா நிஸ்வானுஸ் ஸாலிஹாத்
பழவேற்காடு


 *இன்ஷாஅல்லாஹ்*

*வரும் 2.10.2021 ஹிஜ்ரி 1443 ஸஃபர் பிறை 24 அன்று நமது மத்ரஸா நிஸ்வானுஸ் ஸாலிஹாத் திறக்கப் பட உள்ளது*

*பழைய மாணவிகள் மற்றும் புதிய மாணவிகள் சேர்க்கை நடைபெறும்*

*மத்ரஸா நிஸ்வானுஸ் ஸாலிஹாதில் கல்வி கற்க விரும்பும் மாணவிகள் மத்ரஸாவின் நாளிர் ஹலரத் மற்றும் துணை நாளிர் ஹலரத் அவர்களை தொடர்பு கொண்டு வருவதை உறுதி செய்வதுடன் அனுமதி பெறுவது அவசியம்*

புதிய மாணவிகள் சேர்க்கை க்கு *
1_ஆதார் அட்டை ஜெராக்ஸ்,

 2_ஸ்கூல் சர்டிபிகேட் ஜெராக்ஸ், 

3_ஸ்மார்ட் கார்டு ஜெராக்ஸ், 

4_மாணவியின் புர்கா அணிந்து முகம் தெறிந்த புகைப்படம் 2* 

5_அட்மிஷன் ஃபீஸ், 

6_புத்தகம் ஃபீஸ் 

7_உணவு கட்டணம்

அவசியம் கொண்டு வரவேண்டும்,

மேலும் தகவல் பெறுவதற்கு
*நாளிர் மௌலானா முஹம்மது அலி மன்பயீ ஹலரத் அவர்கள்*

*9941130016,7338809412*


*துணை நாளிர் மௌலானா ஹாஸ் மிஸ்பாஹ் ரஷீதி ஹலரத்*
*
9894046788,8681028171*

வெள்ளி, செப்டம்பர் 24, 2021

பரக்கத் உள்ள விஷயங்கள் எது?,

அல்லாஹ் படைபத்தவைகளில் எதில் பரக்கத் அதிகம் உள்ளது ❓

1️⃣பெயர்களில் பரக்கத்தானது ❓
அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

2️⃣ஊர்களில் பரகத்தானவை ❓
மக்கா -மதினா- சிரியா

3️⃣தண்ணீரில் பரக்கத்தானது :❓
*ஜம் ஜம் நீர்*
*மழை நீர்*

4️⃣ஆயில்களில் பரகத்தானது :❓
*ஜைத்தூன் (ஆலிவ்) ஆயில்*

5️⃣குழந்தைகளில் பரக்கத்தானது ❓
*பெண் குழந்தை*

6️⃣வார்த்தைகளில் பரக்தானது ❓
*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு* என்ற வார்த்தையாகும் 

7️⃣வீடுகளில் பரகத்தானது ❓
*👉🏽குர்ஆன் ஓதப்படும் வீடு*
*👉🏽ஸுரத்துல் பகரா ஓதப்படும் வீடு*
*👉🏽தந்தை இல்லாத அனாதை பிள்ளைகள் அரவ ணைக்கப்படும் வீடு*
*👉🏽முதியோர்கள் இருக்கும் வீடு*
*👉🏽ஸலாம் சொல்லி நுழைந்ததும் சலவாத்தும் குல்ஹுவல்லாஹு அஹத் சூராவும் ஓதப்படும் வீடு*

8️⃣உணவுகளில் பரகத்தானது ❓
*👉🏽பிஸ்மில்லாஹ் சொல்லி சாப்பிடும் உணவு*
*👉🏽சேர்ந்து சாப்பிடும் உணவு*
*👉🏽கீழே விழுந்த உணவை எடுத்து
 👉🏽சுத்தம் செய்து சாப்பிடும் உணவு*
*👉🏽சாப்பிட்ட பின் விரல்களை சூப்பி தட்டை வழித்து சாப்பிடும் உணவு*
*👉🏽விருந்தினர்களோடு சாப்பிடும் உணவு*

9️⃣நேரங்களில் பரகத்தானது ❓
*அதிகாலை பஜ்ருடைய நேரம்*
*சஹருடைய நேரம்*

🔟நாட்களில் பரகத்தானது ❓
*சுப்ஹு தொழுகை தொழுத நாள்* 
*மார்க்க விஷயங்களை கற்ற நாள்*
*தர்மம் செய்த நாள்* 
*பெற்றோரின் துஆவை பெற்ற நாள்* 

பழங்களில் பரகத்தானது :❓
*பேரித்தம் பழம்*- dates
*அத்திப்பழம்* - FIG
*மாதுளை பழம்

👉🏽இந்த அமல்களில்* *அனைத்தையும்* *செய்ய முயல்வோம் அல்லது முடிந்தவரை கடைபிடித்து* *பரக்கத்தான வாழ்க்கை வாழ்வோம்* *அல்லாஹ் அமல் செய்திட அருள்* 
*புரிவானாக பரகத்தான வாழ்வை* *எல்லா நிலையிலும் அருள்வானாக* *ஆமீன்

வியாழன், செப்டம்பர் 23, 2021

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்,

நபிமருத்துவம் வெந்தயம்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

o  பாலியல் உந்து சக்தியை அளிக்கக் கூடிய வெந்தயம்

o  உடல் மினுமினுப்புக்கு

வெந்தயத்தைச் சாப்பிட்டு உங்கள் வியாதிகளைக் குணமாக்கிக் கொள்ளுங்கள் என்று எம்பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹதீஸ் திப்ப நபவியில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

வெந்தயம் ஒரு மா மருந்து என்று சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். பேரிச்சம்பழம், பார்லி, அரிசி, வெந்தயம் ஆகியவற்றைத் தண்ணீரில் வேகவைத்து அதைத் தேனில் கலந்து லேசான சூடு இருக்கும்போது நோயாளிகளுக்கு அக்காலத்தில் அரபு நாட்டில் கொடுப்பார்கள்.

முஸ்லிம்களின் பிடித்தமான சமையல்களில் ஆட்டுக்கறி, வெந்தயக்கீரை, உருளைக்கிழங்கு கூட்டும் ஒன்றாகும். பொதுவாக சமையல் பொருளாக அனைவரின் பழக்கத்திலிருக்கும் வெந்தயத்தின் மருத்துவ குணங்களைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரியாமல் இருக்கின்றது.

நம் நாட்டில் அனைத்துப் பாகங்களிலும் வெந்தயச் செடியைப் பயிரிடுவார்கள். இதன் இலைகளைக் கீரையாகக் சமையலில் பயன்படுத்துவார்கள்.

மழைக்காலங்களில் அதிகமாக விளையும் வெந்தயச் செடியில் பூக்கள் பூத்தபிறகு சுமார் இரண்டு செண்டி மீட்டர் நீளமான காய்கள் காய்க்கும். உலர்ந்த காய்களில் மஞ்சள் நிற விதைகள் இருக்கும். இதைத்தான் வெந்தய விதைகள் என்று கூறுவார்கள்.

மருத்துவ விஞ்ஞானிகள் வெந்தயத்தை ஆய்வு செய்து பார்த்தனர். அதில் மீன் எண்ணெய்க்கு சமமாக எண்ணெய்ச் சத்து இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தவிர, பாஸ்பேட், லெசித்தின் மற்றும் நியூக்லோ அல்பூமிக் ஆகியவை அதிகளவில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. எனவே ஊட்டச்சத்துக்காக மீன் எண்ணெய்க்கு மாற்றாக வெந்தயத்தைப் பயன்படுத்தலாம் என்றும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் நரம்புத் தளர்ச்சி, நாள்பட்ட வியாதிகளுக்குப் பிறகு ஏற்படும் பலவீனம், நரம்பு வலி, தொண்டை வலி, கழலைக் கட்டிகள், வீக்கங்கள், மார்புச் சளி, நிமோனியா ஆகியவற்றுக்கும் வெந்தயத்தைப் பயன்படுத்தலாம்.

மாதவிலக்கில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கைத் தடுப்பதற்கு 3 கிராம் வெந்தயத்தைத் தேனில் கலந்து இரண்டு வேளை தரலாம். வெட்டை நோயால் தொடை மடிப்புகளில் வரும் அரையாப்புக்கட்டி, கழலைக் கட்டிகள், பொதுவான வீக்கம் ஆகியவற்றைக் குணமாக்க வெந்தயத்தைத் தண்ணீரில் அரைத்துப் பற்றுப்போடலாம்.

5 கிராம் வெந்தயத்தைப் பவுடராக்கிச் சிறிது சமையல் உப்புடன் கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி, அஜீரணம், வாயுத்தொந்தரவு, இரைப்பை பலவீனம் ஆகியவை குணமாகும். 6கிராம் வெந்தயம், சர்க்கரை ஆகிய இரண்டையும் பாலில் கொதிக்க வைத்துப் பாயசமாகக் குடித்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். 9 கிராம் வெந்தயத்தைத் தண்ணீரில் அரைத்துத் தினசரி ஒரு வேளை சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும்.

ஹைதராபாத்தில் ராஷ்டிரிய போசன் அனுசந்தான் ஆராய்ச்சி நிலையத்தில் பல ஆண்டுகள் சர்க்கரை வியாதியைப் பற்றிய ஆராய்ச்சி நடத்தப்பட்டது. சர்க்கரை நோயாளிகளுக்கும் இருதய நோயாளிகளுக்கும் தினசரி 20 கிராம் வெந்தயத்தை அரைத்து 10 நாட்கள் கொடுக்கப்பட்டது. இதன் பலனாக இரத்தத்தில் உள்ள ஆல்கஹால் குறைந்திருப்பதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சாப்பிடுவதால் உடலுக்கு எந்தவிதத் தீங்கும் ஏற்படவில்லை என்றும், தினசரி 20 கிராம் முதல் 100 கிராம்வரை தேவைக்கேற்றபடி சாப்பிடலாம் என்றும் அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சர்க்கரை வியாதியைக் குணமாக்க சில யுனானி வைத்தியர்கள் வெந்தயத்தை மட்டும் தனியாகப் பயன்படுத்துவார்கள். பலர் பாகற்காய், நாகப்பழக் கொட்டை, வெந்தயம் அகியவைகளைச் சமஅளவில் கலந்து பவுடராக்கி ஒரு டீஸ்பூன் அளவில் தினசரி இரண்டு வேளை சாப்பிடுவார்கள். கிராமத்தில் சில யுனானி வைத்தியர்கள் பாகற்காய், நாகப்பழக் கொட்டை, வேப்பிலை, பிரிஞ்சி இலை, வெந்தயம் ஆகிய 5 பொருட்களையும் பவுடராக்கி வேளைக்கு ஒரு டீஸ்பூன் வீதம் இரண்டு வேளைதருவார்கள்.

டாக்டர் காலித் கஜனவி என்பவர் கருஞ்சீரகம் 12 கிராம், காசினி விதை 6 கிராம், வெந்தய விதை 6 கிராம் அளவில் சேர்த்துப் பவுடராக்கி மூன்று கிராம் வீதம் காலை- மாலை இரண்டு வேளை தருகின்றார். தொடர்ந்து 6 மாதங்கள் சாப்பிட்டால் சர்க்கரை வியாதி குணமாகும் என்றும் அவர் கூறுகின்றார். நம் நாட்டில்; வெந்தயத்தை மூலப் பொருளாக கொண்ட பல யுனானி மருந்துகள் கடைகளில் கிடைக்கின்றன.

வெந்தயத்தின் மற்ற மருத்துவ குணங்கள் 

உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும், வெந்தயத்தால் குணமாகும் நோய்களையும் பார்ப்போம்.

இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.

காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.

வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.

தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம். ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.

வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.

மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.

வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு் குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம் - பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.

மூட்டுவலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால், வெந்தயப் பொடியை சிறிய வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.

எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும், வெந்தயப் பொடியையும், பெருங்காயப் பொடியையும் சேர்க்க, சுவை கூடுவதுடன், உடல் உபாதைகளையும் போக்கும்.

இட்லி அரிசியுடன் உளுந்துக்குப் பதில், வெந்தயம் சேர்த்து அரைத்து சிறிது நேரம் ஊறிய பின் தோசையாக ஊற்றி சாப்பிட்டால், சுவை கூடுவதுடன் உடலுக்கும் ஏற்றதாக அமையும்.

மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால், நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.

வெந்தயக்களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்து சாப்பிடலாம்.

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.

பாலியல் உந்து சக்தியை அளிக்கக் கூடிய வெந்தயம் 

நாம் அன்றாடம் சமையலில் பாவிக்கும் ஒரு திரவியம் வெந்தயம். வாச னைக்காகவும், சுவைக்காகவும் இதை பொதுவாகப் பயன்படுத்துவதுண்டு. இது நிறைய மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்ட ஒருவகை மூலிகை.

தெற்காசிய நாட்டவர்களே இதை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால் விஞ்ஞானிகள் இதைப் பற்றிய இன்னொரு முக்கியத் தகவலை கண்டுபிடித்து வெளியிட்டுள்ளனர். இது பாலி யல் உந்து சக்தியை அளிக்கக் கூடியது என்பதுதான் அந்தப் புதிய கண்டுபிடிப்பு.

ஆண்கள் இதை அதிகம் எடுத்துக் கொள்வதால் தமது இயல்பான பாலியல் சக்தியை குறைந்த பட்சம் இன்னும் கால்வாசியால் அதிகரித்துக் கொள்ள முடியும். 25 வயதுக்கும் 52 வயதுக்கும் இடைப்பட்ட அறுபது ஆரோக்கியமான நபர்கள் மத்தியில் இது சம்பந்தமான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இவர்களுக்கு ஆறு வார ங்களுக்கு தொடர்ந்து தினசரி இரு தடவை வெந்தயம் வழங்கப்பட்டது. மூன்று வாரங்களுக்குப் பின்னர் ஆறு வாரம் வரையான காலப் பகுதியில் இவர்களின் பாலியல் உணர்வுகள் பரிசோதிக்கப்பட்டன.

அப்போது இவர்களில் 28 வீதமானவர்களிடையே 16.1வீதம் முதல் 20.6 வீதம்வரை வீரிய உணர்வு மேலோங்கி இருந்தது அவதானிக்கப்பட்டது. இதே காலப் பகுதியில் இன்னொரு பிரிவினருக்கு பாலியல் சம்பந்தமான மாத்திரைகளும் வழங்கி அவர்களும் அவதானிக்கப்பட்டனர்.

அனால் அவர்களில் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை. வெந்தய விதை மற்றும் கீரை ஆகிய இரண்டுமே மிகச் சிறந்தவை. இந்திய உணவுகளில் இவை பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன. வெந்தயத்தில் saponins என ப்படும் மூலப்பொருள் கலந்துள்ளது.

இது ஆண்களின் விந்து உற்பத்தி உட்பட பாலியல் ஹோர்மோன்களைப் பலப்படுத்தக் கூடியது. படுக்கை அறையை சூடாக்க வெந்தயம் பெரிதும் கை கொடுக்கும் என்று இந்த ஆய்வை நடத்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் பிரி ஸ்பேன் நகர மருத்துவ பீட ஆய்வாளர்களே இந்த முடிவை அறிவித்துள்ளனர். பாலியல் குறைபாடு உள்ளவர்களுக்கு வெந்தயம் மூலம் தாங்கள் அளித்த சிகிச்சை சிறந்த பெறுபேறைத் தந்துள்ள தாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடல் மினுமினுப்புக்கு 

உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம். ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்துடன் கொழுந்தாக இருக்கும் கறிவேப்பிலையை தயிரில் துளி கல் உப்பு கலந்து ஊறவைத்து சாப்பிட தோலில் மினுமினுப்பு வரும்.

இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.

வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.

நன்றி: இணையம்

புதன், செப்டம்பர் 22, 2021

ஆணுறுப்பின் மேல‌திக‌ தோலை பற்றி,

ஆண்குறி
https://youtu.be/e3YkfyeM6FA
ஆணுறுப்பின் மேல‌திக‌ தோலை வைக்காம‌லேயே இறைவ‌ன் ம‌னித‌னை ப‌டைத்திருக்க‌லாமே என‌ ஒரு மாற்றுமத ச‌கோத‌ர‌ர் கேட்டார்...

அன்ப‌ரே!
இறைவ‌ன் உங்க‌ளை ப‌டைத்த‌ போது நிர்வாண‌மாக‌த்தானே ப‌டைத்தான். அப்ப‌டியென்றால் ஏன் உட‌லை ம‌றைத்து ஆடை அணிகிறீர்க‌ள்?  உங்க‌ளுக்கு அந்த‌ அறிவை கொடுத்த‌து யார். அது போன்றே த‌லை, அக்குள் மீசை, ம‌ர்ம‌ முடி என்ப‌து வ‌ள‌ரும் த‌ன்மை கொண்ட‌து. அத‌னை ஏன் வெட்டுகிறீர்க‌ள். அதை வ‌ள‌ராம‌ல் இறைவ‌ன் விட்டு விட‌லாமே என‌ நீங்க‌ள் ஏன் கேட்ப‌தில்லை.

இறைவ‌ன் ஆணுறுப்பிலும் பெண்ணுறுப்பிலும் மேல‌திக‌ தோலொன்றை வைத்து ப‌டைத்த‌மைக்குரிய‌ கார‌ண‌ காரிய‌த்தை ம‌னித‌ அறிவால் அறிந்து கொள்ள‌ முடியாது. இறைவ‌ன் ம‌கா ப‌டைப்பாள‌ன். 

ம‌னித‌ன‌து இத‌ய‌த்தில் ஏற்ப‌டும் அடைப்புக்கு பைபாஸ் செய்வ‌த‌ற்குரிய‌ மேல‌திக‌ ந‌ர‌ம்பை ந‌ம‌து காலில் இருந்தே வைத்திய‌ர்க‌ள் பெறுகிறார்க‌ள். ப‌ல‌ கால‌த்தின் முன்பு இவ்வெலும்பு அனாவ‌சிய‌மான‌தாக‌வே ம‌னித‌னுக்கு தெரிந்த‌து.

ஆக‌வே இறைவ‌ன் ப‌டைப்பில் எதுவும் வீண் இல்லை. ஆனாலும் அவ‌ற்றிலும் சில‌ க‌ட்ட‌த்துக்கு ந‌ன்மையை வைத்துள்ளான்.
 
ஆண் உறுப்பின் மேல‌திக‌ தோலை வைத்து இறைவ‌ன் ப‌டைத்த‌மைக்கு நாம் சில‌ கார‌ண‌ங்க‌ளை கூற‌ முடியும். 

ம‌னித‌ உட‌லில் வெளியே உள்ள‌ மிக‌வும் மெல்லிய‌ ப‌குதி அதுவாகும். குழ‌ந்தையாக‌ இருக்கும் போது அக்குழ‌ந்தை தாயின் க‌ருவ‌றையில் பாதுகாப்பாக‌ இருப்ப‌த‌ற்காக‌ அத‌ன் உறுப்புக்க‌ளை மூடி வைத்துள்ளான். க‌ண்ணுக்கு இமை கொடுத்து க‌ண்க‌ளை மூட‌வைத்தான். குழ‌ந்தை பிற‌ந்த‌ பின்தான் க‌ண் திற‌க்கிற‌து. க‌ண்ணை திற‌ந்து கொண்டே பிற‌ந்தால் என்ன‌ ந‌ட‌க்கும்? அழுக்குக‌ள் க‌ண்க‌ளுக்குள் செல்லும் என்ப‌தால் குழ‌ந்தையின் க‌ண்ணை மூடிய‌ப‌டி பிற‌க்க‌ வைத்த‌ இறைவ‌ன் மிக‌ப்பெரும் அறிவுடைய‌வ‌ன்.

வாய்க்குள் எதுவும் செல்ல‌ முடியாம‌ல் வாயையும் மூடிய‌வாறு ப‌டைத்தான். அடுத்த‌தாக‌ ம‌னித‌ உட‌லுக்குள் ஏதும் செல்லும் வ‌ழி ஆணுறுப்பாகும். அத‌னை தோலைக்கொண்டு மூட‌ வைத்தான். 

அந்த‌ தோல் இன்றி ப‌டைக்க‌ப்ப‌ட்டிருந்தால் இன்றைய‌ அவ‌ச‌ர‌ யுக‌த்தில் வைத்திய‌ர் தாயின் வ‌யிற்றை கீறி குழ‌ந்தையை எடுக்கும் போது வைத்திய‌ரின் அல்ல‌து ந‌ர்சின் ந‌க‌ம் அதில் கீறினால் அக்குழ‌ந்தையின் ஆணுறுப்பின் நிலை என்ன‌? இத‌னால்த்தான் அத‌னை மூடி வைத்து பிற‌க்க‌ வைத்தான்.

அத்துட‌ன் வைத்திய‌ர் ஒருவ‌ரின் க‌ருத்துப்ப‌டி 
கருப்பை உள்ளே குழந்தைக்குப் பாதுகாப்பாக இருக்கும் Amniotic fluid என்ற திரவம் காரமானது. அது சிசுவின் மிகவும் மென்மையான ஆண்குறியின் முற்பாகத்தைக் காயப்படுத்தி விடும். ஆகவே தான் அந்தப் பகுதி தோலினால் மூடப்பட்டு உள்ளது. குழந்தை பிறந்த பின்னர் அந்த முன்தோல் தேவைப்படுவதில்லை. ஆகவே அது அகற்றப்படுகின்றது.

குழ‌ந்தை பிற‌ந்த‌தும் அத‌ற்குரிய‌ ஆப‌த்துக்க‌ள் நீங்கி அக்குழ‌ந்தை இல‌குவாக‌ சிறு நீர் க‌ழித்து சுத்த‌மாக‌ இருக்கும் வ‌கையில் ஆணுறுப்பின் மெல்லிய‌ மூடு தோலை நீக்கும்ப‌டி இறைவ‌ன் வ‌ழி காட்டியுள்ளான். 

இறைவ‌னும் அவ‌ன் தூத‌ரும் சொன்ன‌த‌ற்காக‌ ஏன் எத‌ற்கு என்ற‌ கேள்வி கேட்காம‌ல் நாம் அத‌னை செய்கின்றோம். கார‌ண‌ம் இறைவ‌ன் சொன்ன‌தில் 100 வீத‌ம் உண்மை இருக்கும் என்ப‌தை ந‌ம்புப‌வ‌ன்தான் முஸ்லிம்.

மேற்ப‌டி தோலை நீக்குவ‌த‌ன் மூல‌ம் சிறு நீர் பிர‌ச்சினை வ‌ராம‌ல் இருப்ப‌தாக‌ வைத்திய‌ர்க‌ள் சொல்கின்ற‌ன‌ர்.
ஒருவ‌னின் ஆணுறுப்பின் மேல் தோல் நீக்க‌ப்ப‌ட்டால் அவ‌ன் சிறுநீர் க‌ழிக்கும் போது மிக‌ இல‌குவாக‌ க‌ழித்து விடுவான். அத்துட‌ன் சிறு நீர் அங்கு தேங்கி நிற்காது.

ஆனால் தோல் நீக்காத‌ ஆணுறுப்பினால் சிறு நீர் க‌ழிப்ப‌தாயின் அத‌னை இழுத்து மேலே  சுருட்டி சிறு நீர் க‌ழிக்க‌ வேண்டும். சிறு நீர் க‌ழித்து முடிந்த‌தும் அது தானாக‌ மூடிக்கொள்ளும். உள்ளே மிஞ்சிய‌ அசுத்த‌  சிறு நீர் உள்ளே இருந்து கொண்டிருக்கும். வ‌ய‌து வ‌ந்த‌ ஒருவ‌ரால் அத‌னை மேலே உருவி ஓர‌ள‌வு சுத்த‌ம் செய்ய‌ முடியும். ஆனால் குழ‌ந்தையால் சிறுவ‌ர்க‌ளால் முடியாது. இத‌னால்த்தான் குழ‌ந்தை ப‌ருவ‌த்திலேயே அத‌னை எடுத்து விடுகிறோம். 

இத்த‌கைய‌ ப‌ல‌ சிர‌ம‌ங்க‌ளையும் அசுத்த‌த்தையும் க‌ருத்திற்கொண்டு இறைவ‌ன் சுன்ன‌த்து செய்து கொள்ளும்ப‌டி சொல்லியுள்ளான்.

சுன்ன‌த்து செய்யாத‌ பெரிய‌வ‌ர்க‌ள் ப‌ல‌ர் சிறுநீர் பிர‌ச்சினை கார‌ண‌மாக‌ வைத்திய‌சாலைக்கு சென்றால் முத‌லில் அந்த‌ மேல‌திக‌ தோலை வெட்டும்ப‌டியே வைத்திய‌ர்க‌ள் சொல்கிறார்க‌ள். ப‌ல‌ருக்கு இது ந‌ட‌ந்துள்ள‌து.
இன்னும் சில‌ருக்கு சிறு நீர் வெளியேற‌ பைப் போடுவ‌தாயின் தோலை நீக்காம‌ல் அத‌னை போடுவ‌து க‌ஷ்ட‌ம். வைத்திய‌சாலைக‌ளுக்கு சென்று பார்த்தால் இந்த‌ உண்மை புரியும்.

ஆக‌வே ப‌ல‌ ந‌ன்மைக‌ள் உள்ள‌ சுன்ன‌த்து செய்துகொள்வ‌தை ம‌னித‌னுக்கு வ‌ழி காட்டிய‌ ஒரேயொரு மார்க்கம் இஸ்லாமாகும்.

பன்றி இறைச்சி,

பன்றி இறைச்சி ஏன் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது. அதன் அறிவியல் என்ன?

அனேகர் பன்றி இறைச்சியை இஸ்லாம் மாத்திரம்தான் குர்ஆனின் ஊடாக தடுத்திருக்கிறது என்று எண்ணுகின்றனர் . அவ்வாறல்ல பைபிலும் தடுத்திருக்கிறது ஆனால் சில கிறிஸ்த்தவர்கள் தான் பைபிலை புறந்தள்ளி பன்றி மாமிசத்தை சாப்பிடுகின்றனர். 

குர்ஆனில் சுமார் 4 இடங்களில் பன்றி இறைச்சி தடுக்கப்பட்ட கருத்தை வலியுறுத்தி வசனங்கள் உள்ளன. 

اِنَّمَا حَرَّمَ عَلَيْکُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيْرِ وَمَآ اُهِلَّ بِهٖ لِغَيْرِ اللّٰهِ‌ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَلَاۤ اِثْمَ عَلَيْهِ‌ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏ 
தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது தடுக்கப்பட்டதாக ஆக்கியிருக்கிறான்;  
(அல்குர்ஆன் : 2:173) 

மேலும் குர்ஆனில் 5:3,6:145,16:115 போன்ற வசனங்களிலும் பன்றி இறைச்சி தடுக்கப்பட்டிருக்கிறது.

அத்தோடு பைபிலில்

 பன்றியும் புசிக்கத்தகாது, அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும், அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக, இவைகளின் மாமிசத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத் தொடாமலும் இருப்பீர்களாக. 
உபாகமம் 14:8

பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாக பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது, அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். 
லேவியராகமம் 11:7

இவைகளின் மாமிசத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம், இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது. 
லேவியராகமம் 11:8
  
இப்படியாக பைபிலில் மிக கட்டாயமாக தடுக்கப்பட்டது பன்றியின் மாமிசம். 

பைபில் மற்றும் இறுதிவேதமான குர்ஆனில் தடைசெய்யப்பட்ட பன்றி மாமிசத்தில் என்ன கேடு இருக்கிறது என்று அறிவியலை கொண்டு தெளிவுபடுத்தவே இப்பதிவு

பன்றி இறைச்சி உண்பதால் 70 விதமான சிறிய மற்றும் பெரிய நோய்கள் உண்டாகின்றன என்கிறது ஆய்வுகள்.   அதில் சில முக்கிய தகவலை தொகுத்திருக்கிறேன் .

மனித உடலினுல் சில புழு இனங்கள் பல நாட்களுக்கு வாழ்கின்றன.அதில் சிலவை உணவு சமிபாட்டுக்கு உதவுபவையும் உண்டு.

"டோனியா சோலியம் Taenia solium (pork tapeworm)  " என்ற புழு, பன்றி இறைச்சியில் இருந்து மனித உடலில் உருவாகிறது. இது உணவுக்குழாயின் அடிப்பாகத்தில் தங்கி வாழும்.

"Taenia solium (pork tapeworm). The adult lives in the small intestine of man that is the definitive host. 
Segments of the worm pass through the anus and release large numbers of eggs that can survive for long 
periods outside of the body. When ingested by pigs, the eggs hatch and each releases an oncosphere that 
migrates through the intestinal wall and blood vessels to reach striated muscle where encystment occurs. 
Even when well adequately cooked pig meat is eaten by man, excystment occurs in the small intestine and 
an adult cestode (worm) develops. If the eggs are released into the upper intestine of man (e.g. through 
regurgitation) they can invade the host setting up a potentially dangerous larval infection known as 
cysticercosis in muscle and other sites."

அதாவது டேனியா சோலியம் , வைற்றை சூழவுள்ள பகுதிகளில் (ova) முட்டையிடுகிறது. இந்த முட்டைகள்தான் மிக ஆபத்தானவை. இவை மனித இரத்த நாளங்களில் பயணிப்பதால் உடலின் எல்லா பாகங்களுக்கும் சென்றுவிடுகின்றன. இந்த முட்டை பரவும் எல்லா இடங்களிலும் நிச்சயம் பாதிப்பை உருவாக்கும்.  அதிலும் இதயம், மூளை, கண், நுரையீரல் என்பன முக்கியமானவை.

பன்றி இறைச்சியில் டோனியா சோலியம் என்ற புழு மாத்ரமல்ல " ட்ரிசுரா ட்ரிசுராஸிஸ் ( Trichura Tichurasis)" என்ற புழுவும் மனித உடலில் பரவும். இரு புழுக்களும் ஒரே மாதிரியான குணமுடையவை.

இப் புழுக்களின் முட்டைகள் பன்றி இறைச்சியை நன்கு வேகவைப்பதால் இறந்து விடுகின்றன என்ற கருத்தும் தவறான ஒன்றாகும். ஏன் எனில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் , ட்ரிசுராஸிஸ் முட்டைகளால் பாதிக்கப்பட்ட 24 பேர் பரிசோதனைக்குற்படுத்தப்பட்டனர். இதில் 22 பேர் பன்றி மாமிசத்தை சமைத்து உண்டவர்கள்தான்.  

இவ் புழுக்களில் முட்டைகள் சாதாரண நீரின் கொதி நிலையில் இறப்பதில்லை .

மேலும் பன்றி மாமிசத்தில் உள்ள மித மிஞ்சிய கொழுப்பு,ஹார்ட் அடக்,ஹைபர் டென்ஷன் " பேன்ற நோய்களை இலகுவாக உருவாக்கிவிடும்.

பன்றியை சாப்பிடும் அமெரிக்க மற்றும் ஐரோப்பியர்களில் பாதி போர் ஹைபர்டென்சன் நோயால் பாதிப்படைந்தவர்களே.

நோய்களை ஏற்படுத்துவது மற்றுமன்றி அது சுகாதாரமற்ற ஒரு விலங்கும் கூட. பண்டைய காலங்களிலும் நாகரீக வளர்ச்சியற்ற காலங்கள் மற்றும் இடங்களில் பன்றிகளை மனித கழிவை சுத்தம் செய்வதற்காகவே பயன்படுத்தினர்.
இன்று நாகரிக வளர்ச்சியடைந்துவிட்டதால் மனித கழிவு அகற்ற பன்றிகளை பயன்படுத்துவதில்லை என்பது உண்மையானாலும், இவ் நாடுகளில் இவை ஒரே இடத்தில் வளர்க்கப்படுவதால் அதன் கழிவுகளையே அது உண்டு வாழ்கிறது . 

எப்படி பார்த்தாலும் பன்றி ஒரு சுகாதாரமற்ற விலங்கு என்பதில் சந்தேகமில்லை.

செவ்வாய், செப்டம்பர் 14, 2021

மஸ்ஜிதுல் ஹராம்,காபா,

5000 ஆண்டுகளுக்கு முன்பே உலகில் முதன் முதலில்  கட்டப்பட்ட ஒரிறை பள்ளியான #புனித_கஃபாவைப்_பற்றி தெரிந்து கொள்வோம்.!

இது-சதுரவடிவ கட்டிடம்,
கஃபாவின் மொத்த உயரம் 53 அடி[14 மீட்டர்]ஆகும்,
நீளம் ,மேற்கில் 45 அடி, கிழக்கில் 49 அடி, 
வடக்கிலும் தெற்கிலும் 31 அடி,

இதன் தென் கிழக்கு மூலைக்கு ருக்னுல் ஹிந்த்
[இந்திய மூலை] என்றும்,வடகிழக்கு மூலைக்கு
ருக்னே இராக்கி[ஈராக்கிய மூலை]என்றும்,
தென்மேற்கு மூலைக்கு ருக்னே யமானி[யமனிய மூலை] எனவும் கூறப்படுகிறது,

இதன் தென் கிழக்கு மூலைக்கு தவாப் செய்யும் 
இடத்திலிருந்து 1.10 மீட்டர் உயரத்தில் வெள்ளி
வளையத்திற்குள் "ஹஜ்ருல் அஸ்வத்"கல் பதிக்கப்
பட்டுள்ளது,இங்கிருந்து தவாபை ஆரம்பித்து,முடிக்கும்
இடமும் இதுவே,

ஒரே கல்லாக இருந்த"ஹஜ்ருல் அஸ்வத்"ஹிஜ்ரி
319 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தில் உடைந்து 
போய் தற்போது சிறியதும்,பெரிதுமாக எட்டு துண்டுகளாக காட்சி அளிக்கிறது,

ஹஜ்ருல் அஸ்வத்-அருகில் தரையிலிருந்து 2.25 மீட்டர் 
உயரத்தில் "கஃபாவின்"உள்ளே செல்ல வாயில்
அமைக்கப்பட்டுள்ளது இதன் அகலம் 1.90 மீட்டர் நீளம்,
3.10 மீட்டர் இதன் கதவு அளவு, இக்கதவு முழுக்க முழுக்க
தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது,

13.420.000 சவூதி ரியால் செலவில் 280 கிலோ தங்கத்தால் இக்கதவு தயாரிக்கப்பட்டுள்ளது,
வருடத்திற்கு மூன்று முறை இக்கதவு திறக்கப்பட்டு
உள்பகுதி "ஜம்ஜம்"நீரால் கழுவி சுத்தம் செய்யப்படும்,
"ஹஜ்ருல் அஸ்வத்"வாயிலுக்கு இடையிலுள்ள 4 அடி
அகலமுள்ள சுவற்றிக்கு"முஸ்தஜம்"என்று பெயர்,

ருக்னே இராக்கி, மற்றும் ருக்னே ஷாமீ ஆகிய
கஃபாவின் இரு மூலைகளுக்கும் எதிரில் அரைவட்ட
வடிவம் 1.30 மீட்டர் உயரத்தில் உள்ள சுவருக்கு"ஹதீம்"
என்று பெயர்,இதற்கு "ஹிஜ்ரே இஸ்மாயீல்"என்றும் 
ஒரு பெயருண்டு, இச்சுவரின் சுற்றளவு 21.57 மீட்டர்
நீளமாகும்,

ஆரம்பத்தில் இதுவும் "கஃபாவின்"உட்பகுதியாகத்
தான் இருந்தது, குரைஷிகள் இதைக்கட்டியபோது
போதிய பணவசதியில்லாததால் முன்பு இருந்த
அளவைவிட அகலத்தில் ஆறரை முழத்தைக் குறைத்து
விட்டார்கள்,குறைக்கப்பட்ட அப்பகுதியும்"கஃபா"வில்
சேர்ந்ததே என்பதை தெரிவிப்பதற்காகவே அரை வட்ட
வடிவில் சிறிய மதில் சுவரை எழுப்பி விட்டனர்,

இந்த"ஹதீமுக்கு"நேர் மேலே"கஃபாவின்"மீது விழும்
மழைநீர் வடிவதற்காக ஒரு வடிகுழாய் பொருத்தப்
பட்டுள்ளது,முன்பு வெள்ளியால் செய்யப்பட்டிருந்த
இக்குழாய் இப்போது தங்கத்தால் தயாரிக்கப்
பட்டுள்ளது,,இதற்கு "மீஜாபுர் ரஹ்மத்"என்று பெயர்,

"கஃபாவை"சுற்றியுள்ள பள்ளிவாசலுக்கு "ஹரம்
ஷரீப்"என்று பெயர்,
தற்போது இதன் உட்புற,வெளிப்புற,தொழுகை இடங்கள் உள்ளடக்கி,இதன் பரப்பளவு 88.2 ஏக்கராகும்,

இப்பள்ளியில் தலா 89 மீட்டர் உயரம் கொண்ட 9 மினராக்களும்,வெளியிலிருந்து உள்ளே வருவதற்காக
95 வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன,

தரைத்தளத்தில் வழவழப்பான சலவைகற்கள் பதிக்கப்
பட்டுள்ளது, "கஃபாவை"சுற்றியுள்ள தவாப் செய்யும் 
இடத்திற்கு "மதாஃப்"என்று பெயர்,

இதில் ஒரு மணி நேரத்திற்கு 1.30.000 பேர்வரை
தவாப் செய்யமுடியும்,
ஒரே சமயத்தில் 8.20.000 பேர் தொழும் அளவிற்கு 
வசதி செய்யப்பட்டுள்ளது,

60.000 காவலர்கள் கண்காணிப்பு பணியில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்,10.000 த்திற்கு  மேற்பட்ட CCTV கேமராக்கள் பாதுகாப்பிற்கு  பயன் படுத்தப்பட்டுள்ளன.

திங்கள், செப்டம்பர் 13, 2021

நேரு, இந்திராகாந்தி இவர்களின் குடும்பம்,

*மயக்கம் அடையாமல் இருக்க ஆண்டவன் அருளட்டும்*🙏.

*ஆண்டு இறுதியில்  நடத்தப்படும் பாடபுத்தக சோதனையில் 8ம் வகுப்பு மாணவனிடம் அவனது வரலாற்று அறிவை சோதிக்க வந்த வரலாற்று அதிகாரி  கேட்ட கேள்விகளும் அவனது துல்லிய பதில்களும் இங்கே...*

கேள்வி-1.
*ஜெவஹர்லால் நேருவின்* அம்மா பெயர்  தெரியுமா?
தெரியும் சார் *துசு ரஹ்மான் பாய்.*

கேள்வி-2
ஜெவஹர்லால் நேருவின் அப்பா  பெயர் மோதிலால் நெஹ்ரு தானே?
இல்லை சார் *முபாரக் அலி.*

கேள்வி-3
அப்படியானால் மோதிலால் நெஹ்ரு  என்பவர் யார் ? 
*துசு ரஹ்மான் பாயின்* இரண்டாவது  கணவர் சார்.

கேள்வி-4
அப்படியானால் மோதிலால் நெஹ்ரு துசு ரஹ்மான் பாயின் கணவரானது எப்படி?
அதுவா சார் *முபாரக் அலியின் வீட்டில் பணிபுரிந்த ஒரு பணியாளர் சார்.* முபாரக் அலி இறந்தவுடன்  *சொத்துக்காக துசு ரஹ்மானின் இரண்டாவது கணவரனார் சார்.*

கேள்வி-5
ஜெவஹர்லால் நேரு பிறப்பால் காஷ்மீர் பண்டிட்தானே?
இல்ல சார்... *அப்பா அம்மா இருவருமே முஸ்லிம் சமூகத்தினர்* என்று மேலே நான் தெளிவாக சொல்லியபிறகும் என்னை சோதிக்கத்தானே சார்  இந்த கேள்வியை கேட்டீங்க என்ற புத்திசாலி மாணவனை பார்த்து....
ஆம் உனது வரலாற்று நினைவுகளை சோதிக்கவே இப்படி கேட்டேன் என்று அடுத்த கேள்விக்கு தாவினார் அதிகாரி.

கேள்வி-6
மோதிலால் நெஹ்ருவின் அப்பாவின் பெயர் என்ன?
*ஜியாசுதீன் கஜனி.*

கேள்வி-7
அப்படியானால் இவரது வரலாறும் உனக்குத் தெரியும் தானே ?
ஆம் சார்.இவர் *டெல்லி யமுனா நதிக்கரையோரம் வாழ்ந்த குடிசைவாசி சார்.* 1857 ம் வருட யமுனா நதியின் அதிக வெள்ளத்தால் இவரது குடிசையும் அடித்துபோச்சி சார்.  *பிழைக்க கஷ்மீர் சென்ற சில முஸ்லிம் குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்னு சார்...*
அங்கே பண்டிட்கள் மத்தியில் தான் ஒரு *முஸ்லிம் என்று தெரிந்தால் வேலை கிடைக்காது என்று ஜியாசுதீன் கஜனி என்ற தனது பெயரையே கங்காதர நெக்ரி என்று மாற்றி வாழ்ந்தவர் சார்..*

கேள்வி-8
அப்படியானால் இவர் காஷ்மீரிலே தானே வாழ்ந்து இறந்தார்?
இல்ல சார். *ஓரளவு பணம் சேர்ந்தவுடன் காஷ்மீர் பண்டிட் என்ற அடையாளமாக கஷ்மீரி தொப்பியுடன் அலகாபாத் நகருக்கு இடம் பெயர்ந்தார் சார். அங்குதான் ஜெவஹர்லால் நேரு சட்டம் பயின்று அங்கேயே வழக்கறிஞர் தொழிலையும் தொடங்கினார்.*

கேள்வி-9
இந்திராவின் பெற்றோர்கள் யார்?
அப்பா ஜெவஹர்லால் நேரு என்ற *பர்ஷிய முஸ்லிம்*
அம்மா 
*கமலா கௌர்*🙏🕉️🔯 என்ற கஷ்மீர் பண்டிட் சார்.

கேள்வி-10
ராஜீவ் காந்தியின் பெற்றோர்கள் பெயர்?
அப்பா *ஜெஹாங்கீர் பெரோஸ் கான்.*
அம்மா *மைமுனா பேகம் என்ற இந்திரா பிரியதர்சினி சார்.*

கேள்வி-11
ஜெவஹர்லால் நேருவின் மகளான இந்திரா தானே? 
ஆம் சார்  தனது வீட்டு பணியாளரான  காதலன் பெரோஸ்கானை மணக்கவேண்டுமானால் முஸ்லிமாக மாறச் சொன்னார்கள் அவரது பெற்றோர். அப்பாவிற்குத்(நேருவுக்கு) தெரியாமல் மதம் மாறி  பெயரையும் மாற்றி நடந்த திருமணம் சார்.

கேள்வி-12
அப்படியானால் இந்திரா காந்தி என்ற பெயர் எப்படி வந்தது?
மோகனதாஸ் கரம்சந்த் காந்தி நேருவின் வற்புறுத்தலால் இந்திராவின் பின்னால் *பிரியதர்சினி என்பது இந்துவை நினைவூட்டுவதால்* வேறு பெயரை வேக கச் சொன்னார் அதன்படி தனது பெயரின் பின்னால் உள்ள காந்தியை சேர்த்து இந்திரா காந்தி என்று மாற்றி வைத்தார்.

கேள்வி-13 
இந்திராவுக்கு எத்தனை பிள்ளைகள்?
என்ன சார் இவ்வளவு ஈசியான கேள்வியா கேட்கறீங்க...
*ராஜீவ் கான் சஞ்சய் கான்னு*  2 பேர் சார்.

*இவனை எப்படியாவது மடக்கனுமென்ற ஆசிரியர்* 

கேள்வி-14
*இருவருக்கும் ஒரே அப்பா தானே என்று கேட்டார்?*
*இல்லவே இல்ல சார்.*

கேள்வி-15
அப்படியானால் அவர்கள் பெயர் தெரியுமா?
*ராஜீவின் அப்பா  பெரோஸ்கான் தான் சார்.*
ஆனால் சஞ்சயின் அப்பா பெரோஸ்கான் இல்ல சார்...

கேள்வி-16
அவர் பெயர் என்ன?
*தெரியும் சார் ஆனால்  சொல்லமாட்டேன் சார்...*

அதிகாரி ஏன்?
 வேணாம் சார் அப்பறம் *சஞ்சயை இந்திரா அனுப்பிய இடத்திற்கு என்னயும்  இப்ப உள்ளவர்கள் அனுப்பிவிடுவார்கள்* சார் அதனால் சொல்லவே மாட்டேன் சார்...
பொடிபய அநியாயத்திற்கு புத்திசாலியாக இருக்கறானே என்று நினைத்த அதிகாரி மிகவும் சிக்கலான ஒரு கேள்வியை  பயல க்ளீன் போல்ட் ஆக்கனுமென்று கேட்டார்

கேள்வி-17
*ஜெவஹர்லால் நேரு( முன்னாள் இந்திய பிரதமர்)*
*முகம்மது அலி ஜின்னா(முன்னாள் பாக்கிஸ்தான் பிரதமர்)*
*ஷேக் அப்துல்லா (முன்னாள் காஷ்மீர் முதல்வர்)*
*இந்த மூவருக்கும் உள்ள ஒற்றுமையை சொல்ல முடியுமா?*
பையன் முடியும் சார்...
*மூவருக்கும் ஒரே அப்பா சார்.*

ஆஹா பய புள்ள தப்பிச்சுடுச்சே  என்று நினைத்த அதிகாரி எப்படி எப்படி சொல்லு என்றார் ஆச்சர்யத்தோடு...

அதுவா சார்
ஜெவஹர்லால் நேருவின் அம்மாவின் 2 வது கணவர் மோதிலால் நேரு.

முகம்மது அலி ஜின்னாவின் அம்மா மோதிலாலுக்கு 4 வது மனைவி

ஷேக் அப்துல்லாவின் அம்மா மோதிலாலுக்கு 5வது மனைவி...

என்றாலும் ஷேக் அப்துல்லா மட்டுமே மோதிலால் நேருவிற்கு பிறந்தவர்...
மற்ற இருவரது அம்மாக்களும் இவருக்கு மனைவி அவ்வளவே தான் சார்...

போதுமா சார்.. இன்னும் வேணுமா சார்.

ஐயோ போதும்டா இனி உன்னை எந்த கேள்வியும் கேட்கமாட்டேன்...

ஒரே ஒரு சந்தேகம்டா பயலே..?
என்ன சார் கேள்வி கேக்கற எடத்துல இருந்து கொண்டு சந்தேகம்னு இறங்கி வறீங்க...பரவாயில்லை கேளுங்க என்றான் மாணவன்.

கடைசி கேள்வி-18
*இந்த தகவல்களை எல்லாம் நமது சுதந்திர இந்திய அரசு மறைத்து தானே வரலாறு புத்தகங்களை பொய்யாக எழுதியது இதை எல்லாம் எங்கிருந்து தெரிந்து கொண்டாய் என்ற கேள்விக்கு ... சார் இந்த லிங்க்ல இருந்து தான் என்று ஒரு லிங்கை கொடுத்தான் பாருங்க*
அதாங்க  ஹைலைட்.
*https://g.co/kgs/SNSQGo*

*இந்த தகவலை பகிற்ந்த அந்த நல்ல உள்ளத்திற்க்கு எனது அன்பு வாழ்த்துக்களை தெறிவித்துக்கொள்கிறேன்.*

இப்படிக்கு
INDIAN.

ஞாயிறு, செப்டம்பர் 12, 2021

ஆதார் கார்டு அய்யோ என்ன ஆச்சு?,

ஆதார் கார்டு அய்யோ என்ன ஆச்சு?,

🔗 https://bit.ly/2VAqe2V

🔴 *ஆதாரில் மொபைல் எண் மாற்ற, புகைப்படம் மாற்ற என்ன செய்யவேண்டும் முழு விவரம்...*

🔗 https://bit.ly/3C1br0M

🔴 *ஆதாரில் முகவரி மாற்றம் செய்ய பயன்படும் 45 ஆவணங்களின் பட்டியல் முழு விவரம்....*

🔗 https://bit.ly/3hqlfJU

🔴 *ஆதாரில் மொபைல் எண்ணை அப்டேட் செய்ய எளிய வழிமுறைகள் – ஆன்லைன் & ஆஃப்லைன்!*

🔗 https://bit.ly/397aNlP

🔴 *எம் ஆதார் ஆப் பற்றி தெரியுமா? அதன்பயன்கள் பற்றிய முழு விவரம்*

🔗 https://bit.ly/3lkjizK

🔴 *குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுப்பது எப்படி..  முழு விவரம்*

🔗 https://bit.ly/3lnjrTk

🔴 *இத்தனை நாளா இது தெரியாதே! ஆதார் கார்டை லாக் செய்ய முடியுமா? முழு விவரங்கள் இங்கே!*

🔗 https://bit.ly/2Xitm4f

🔴 *புத்தம் புதிய கைக்கு அடக்க புதிய கலரில்  PVC ஆதார் கார்டு!!   மொபைல் மூலம் விண்ணப்பிக்கலாம்*

🔗 https://bit.ly/3tHKWe0

வெள்ளி, செப்டம்பர் 10, 2021

ஸலாத்துன் நாரிய்யா, اَلصَّلٰوةُ النَّارِيَّةُ

ஸலாத்துன் நாரிய்யா

 اَلصَّلٰوةُ النَّارِيَّةُ
اَللّٰهُمَّ صَلِّ صَلٰوةً كَامِلَةً وَّسَلِّمْ سَلَامًا تَامًّا، عَلٰى سَيِّدِنَا مُحَمَّدِنِ الَّذِيْ تَنْحَلُّ بِهِ الْعُقَدُ، وَتَنْفَرِجُ بِهِ الْكُرَبُ، وَتُقْضٰى بِهِ الْحَوَآئِجُ، وَتُنَالُ بِهِ الرَّغَآئِبُ، وَحُسْنُ الْخَوَاتِمِ، وَيُسْتَسْقَى الْغَمَامُ بِوَجْهِهِ الْكَرِيْمِ، وَعَلٰى اٰلِهِ وَصَحْبِهِ فِيْ كُلِّ لَمْحَةٍ وَّنَفَسٍ بِعَدَدِ كُلِّ مَعْلُوْمٍ لَّكَ.


ஸலாத்துன் நாரியா

அல்லாஹும்ம ஸல்லி ஸலாத்தன் காமிலத்தன் வஸல்லிம் ஸலாமன் தாம்மன் அலா ஸய்யிதினா முஹம்மதின் அல்லதி தன்ஹல்லு பிஹில் உகத். வதன்ஃபரிஜு பிஹில் குரப் வதுக்லா பிஹில் ஹவாயிஜ். வதுனாலு பிஹிர் ரகாயிபு வஹுஸ்னுல் ஹவாதிம். வயுஸ்தஸ்கல் கமாமு பிவஜ்ஹிஹில் கரீம். வஅலா ஆலிஹி வஸஹ்பிஹி ஃபீ குல்லி லம்ஹத்தின் வ நஃப்சின் பி அததி குல்லி மஃலூமின் லக்க.


 தரூத் எ நாரியா மாபெரும் ஆற்றலாகும். தினமும் ஓதப்படும் பட்சத்தில் உலகில் ஒருவராலும் ஒரு தீங்கும் ஏற்படாத வலிமையும் ஆற்றலும் பெற்றுத் தரக்கூடியதாகும். உலகில் ஒருவர் ஆற்றக்கூடிய அனைத்து காரியங்களிலும் மாபெரும் வெற்றியை நல்கக்கூடியதாகும். சோதனை காலங்களில் இத் தரூது ஓதப்பட்டால், அல்லாஹு தஆலா மனிதர்களுக்கு அவர்கள் அறியாத புறத்தில் இருந்து அனைத்து உதவிகளையும் செய்வான். ஓதுபவர் ஒவ்வொரு தங்கடங்களில்  இருந்தும் தப்பிப்பார், சோதனைகள் சாதனைகளாகும், நற்பலன்கள் நாடிவரும், நல்வாழ்வு தேடிவரும்.*
 பொருள்: அல்லாஹ்வே! எங்களுடைய தலைவரான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் ஸஹாபிகள் மீதும் ஒவ்வொரு கண் சிமிட்டும் மற்றும் சுவாசிக்கும் நேரமும் உன்னால் அறியப்பட்ட அனைத்து எண்ணிக்கை அளவிற்கு பரிபூரண அருளையும் முழுமையான சாந்தியையும் பொழிவாயாக! 

அந்த முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படிப்பட்டவரென்றால் அவர்களின் மூலமாகத் தான் சிக்கல்கள் அவிழ்கின்றன. அவர்களின் மூலம்தான் துன்பங்கள் நீங்குகின்றன. அவர்களின் மூலம்தான் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. அவர்களின் மூலம்தான் நாட்டங்களும் அழகிய இறுதி முடிவும் பெற்றுக் கொள்ளப்படுகிறது. அவர்களுடைய திருமுகத்தின் மூலம்தான் மேகத்திலிருந்து மழை பெறப்படுகிறது.
[09/09, 9:28 PM] +91 97916 80838: DUROOD-E-NAARIYA

ALLAHUMMA SALLI  SALAATHAN KAMILATAN, 
WA SALLIM SALAAMAN TAAAMAN, 
ALA SAYYIDINA MUHAMMADINIL LAZEE, 
TANHALLU BIHIL UQADU, 
WA TANFARIJU BIHIL KURABU,
WA TUQZA BIHIL HAWA IJU,
WA TUNAALU BIHIR RAGHAAA’IBU, WAHUSNUL KHAWATIMI,
WA YSTASQAL GHAMAMU BI WAJHIHIL KAREEM,
WA ALA A’LIHI WASAHBIHI
FI KULLI LAMHATIN WA NAFSIN BI ADADADI KULLI MA’LUMIL LAK.

புதன், செப்டம்பர் 08, 2021

கனவின்,மனைவி,புரிதலும், விட்டுக்கொடுத்தலுமே வாழ்க்கை,

மனைவி

தண்ணீரை கொண்டுவர சென்றுவிட்டாள் மனைவி...

"நீண்ட தொலைவில்இருந்து இரண்டுகுடம் தண்ணீர் எடுத்துவந்து, வீட்டின் கதவை லேசாக திறந்து முன்னாடியே இரண்டு குடத்தையும் வைத்துவிட்டு, அடுத்த இரண்டுகுடம் தண்ணீரை கொண்டுவர சென்றுவிட்டாள் மனைவி........

"அந்தநேரம் அவளின் கணவன் மதிய சாப்பாட்டிற்காக வீட்டுக்கு வருகிறான். நல்ல வெயில். பசிவேறு அவனுக்கு.

"வெயிலில் வந்த்தால் உள்ளே இருந்த குடத்தை கவனிக்காமல் தட்டிவிட்டு விழுந்துவிடுகிறான். இரண்டுகுடம் தண்ணீரும் கொட்டிவிடுகிறது.

அவனுக்கு கடுமையான கோபம் வந்துவிடுகிறது. கொஞ்சமாவது அறிவுவேனாம்? இப்படியா முன்னாடியே தண்ணீர் குடத்தை வைப்பது? வரட்டும் பேசிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே இன்னும் இரண்டு குடத்தோடு வருகிறாள் மனைவி.

" தூக்கிவந்த குடத்தைக்கூட இறக்கவிடாமல் அவளைத்திட்டுகிறான். "உன்னையெல்லாம் உங்கவீட்டில எப்படித்தான் பெத்து, வளர்த்தாங்களோ! உனக்கெல்லாம் மூளையே இல்லையா? என்றபடி கண்டபடி திட்டுகிறான்.

இதைக்கேட்ட அவளுக்கு கோபம் தலைக்கேறுகிறது. " நான் எவ்வளவு கஷ்டப்பட்டு எவ்வளவு தூரத்திலிருந்து இந்த தண்ணிய கொண்டு வற்றேன் தெரியுமா?

கண்ணை எங்க வச்சுக்கிட்டு போனிங்க என்று அவள் கேட்க, இப்படியே ஒருவருக்கொருவர் பேசி வார்த்தை பெரிதாகி, அவன் அவளை அறைந்துவிடுகிறான்.

"உடனே அவள் 'இனி ஒரு நிமிஷம்கூட உன்கூட வாழமாட்டேன் என்று சொல்லிவிட்டு அவளின் அம்மாவீட்டுக்கு சென்றுவிடுகிறாள்......

இது கணவன், மனைவிக்குள் ஒருசின்ன பிரட்சனை எவ்வளவு பெரிய முடிவைஎடுக்கவைத்துவிட்டது என்பதைக்கூறும் கதை.

இந்தக்கதையின் முடிவு இப்படிஇருத்தால் எப்படி இருக்கும்? வாருங்கள் பார்ப்போம்.........

அவன் குடம்தடுக்கி விழுந்து, தண்ணீரை கொட்டிவிட்டான். உடனே அவனுக்கு தோன்றியது " அடடா இப்படி கவனிக்காமல் இரண்டுகுட தண்ணீரையும் கொட்டிவிட்டோமே!

"சே! பாவம் அவள். தண்ணீர் எவ்வளவு தூரத்தில்இருந்து கொண்டுவருகிறாள்? முதல்வேலையா அவள்வந்தவுடன் மன்னிப்புகேட்டுவிட்டு நாமேபோய் இரண்டுகுடம் தண்ணீர் எடுத்து கொடுக்கவேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கும்போது அவள் தண்ணீரோடு வருகிறாள்.

இவன் ஓடிப்போய் அந்தக்குடங்களை இறக்கியவாறு நடந்ததைச்சொல்லி, "நான் கவனிக்காமல் குடத்தின்மேல் விழுந்து தண்ணீரை கொட்டிவிட்டேன். நீ எவ்வளவுதூரத்தில்இருந்து இந்த தண்ணீரை கொண்டுவருகிறாய் என்னை மன்னித்துவிடு. கொடு நான்போய் தண்ணீர் கொண்டுவருகிறேன் என்கிறான்.

உடனே அவள் பதறுகிறாள். " ஐயையோ விழுந்துட்டீங்களா? உங்களுக்கு ஒன்றும் ஆகலையே? தண்ணீர்போனா போகட்டுங்க. நீங்க என்ன வேனும்னா கொட்டிவிட்டீங்க! தெரியாமத்தானே! அங்க தண்ணியவச்சது என்தப்பு. நான் போய் எடுத்துக்கொள்கிறேன்.

நீங்க வாங்க சாப்பிட. நல்ல பசியோடு வந்திருப்பீங்க பாவம் என்கிறாள்.(அவள் திட்டியிருந்தால்கூட இவ்வளவு தண்டனை கிடைத்திருக்காது அவனுக்கு).

அவன் அப்படியே நெகிழ்ந்துபோகிறான். அவள்மேல் அவனுக்கு இன்னும் அளவுகடந்த பாசம் உண்டாகிறது உள்ளுக்குள்.

இவ்வளவுதான் நம் வாழ்க்கையும்!கணவனோ, மனைவியோ தெரிந்து யாரும் தப்பு செய்வதில்லை. இருவரில் ஒருவர் ஒருபடி இறங்கினால், மற்றவர் கண்டிப்பாக பத்துப்படி இறங்கிவருவார்.

நம்மைப்பார்த்துதான் நம்பிள்ளைகள் வளர வேண்டும்.........

*புரிதலும், விட்டுக்கொடுத்தலுமே வாழ்க்கை*

வாழ்க வளமுடன்.....

பிரபல்யமான பதிவுகள்