நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

செவ்வாய், நவம்பர் 30, 2021

விதவைகளுக்கான பென்ஷன் ஆன்லைனில் அப்ளை செய்து பெறுவது எப்படி?

விதவைகளுக்கான பென்ஷன் ஆன்லைனில் அப்ளை செய்து பெறுவது எப்படி?
என்று தெரிந்துக்கொள்ளலாம். விதவை பென்ஷன் வாங்குவதற்கு யாரெல்லாம் தகுதியானவர்கள், தேவையான ஆவணங்கள் என்னெல்லாம் என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளுவோம். தமிழகத்தில் ஏராளமான பென்ஷன் திட்டங்கள் உள்ளன. அதில் விதவை பெண்களுக்காக இப்போது பென்ஷன் ஆன்லைன் மூலம் எளிமையாக எப்படி அப்ளை செய்து பெறலாம் என்பதை படித்தறியலாம் வாங்க..!

திட்டத்திற்கு தகுதியானவர்கள்:

ஆதரவற்றோராக இருக்க வேண்டும்

கணவரால் கைவிடப்பட்ட விதவையாக இருக்க வேண்டும்.

20 வயதிற்கு மேல் உள்ள ஆண் மகன்கள் அவர்களுக்கு இருத்தல் கூடாது. 

அவர்களுக்கு சொந்தமாக வீடு / நிலங்கள் எதுவும் இருக்க கூடாது.

தேவையான ஆவணம்:

விண்ணப்பதாரரின் புகைப்படம் (Photo)

குடும்ப அட்டை (Ration Card)

ஆதார் அட்டை (Aadhar Card)

இறப்பு சான்றிதழ் (Death Certificate)

விதவைக்கான சான்றிதழ் (Widow Certificate)

பேங்க் புத்தகம் (Bank PassBook)

விண்ணப்பங்கள் சென்றடையும் நபர்கள்:

VAO 

RI 

SSS (தாசில்தார்)

இவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்த பிறகு Approved செய்வார்கள். உங்களுக்கு தேவையான Order copy-யை ஆன்லைன் மூலமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

அடுத்த மாதத்தில் இருந்து உங்களுடைய வங்கி கணக்கிற்கு விதவை பென்ஷன் தொகையானது ரூ. 1000/- வந்தடையும்.

விதவை உதவித்தொகை ஆன்லைனில் அப்ளை செய்து பெறுவது எப்படி?

Widow Pension Apply Online Tamil
ஸ்டேப் 1:

முதலில் tnega என்று டைப் செய்யவும்.

ஸ்டேப் 2:

அவற்றில் “Citizen Login” என்பதை க்ளிக் செய்யவும்.
 

புதிதாக Account ஓபன் செய்யவும். அதில் new user? sign up என்ற ஆப்ஷனில் புதிதாக அக்கௌன்ட் ஓபன் செய்யலாம். ஏற்கனவே account இருப்பவர்கள் user name password கொடுத்து Login செய்யவும்.

Captcha Code என்பதில் சரியானவற்றை கொடுத்து லாகின் செய்யவும்.

ஸ்டேப் 3:

அவற்றில் Revenue Department என்பதை க்ளிக் செய்யவும். அவற்றில் நிறைய திட்டங்கள் இருக்கும். நீங்கள் தேர்வு செய்ய வேண்டியது Destitute Widow Pension scheme என்பதை தேர்வு செய்யவும். அடுத்ததாக Proceed என்பதை க்ளிக் செய்யவும்.

ஸ்டேப் 4:

இப்போது Register can என்பதை க்ளிக் செய்யவும்.

அவற்றில் Document Type-ல் திரு/ திருமதி என்பதில் சரியானவற்றை கொடுத்து விண்ணப்பதாரரின் பெயர், பாலினம், திருமண நிலை, பிறந்த தேதி, உறவு முறை, தந்தை/ தாய் பெயர், மதம், கல்வி தகுதி, சாதி, வட்டம், மாவட்டம், கிராமம், நிரந்தர வீட்டு முகவரி, மொபைல் எண் கொடுத்து Generate OTP என்பதை கொடுத்த பிறகு மொபைல் எண்ணிற்கு OTP எண்ணானது வரும்.

ஸ்டேப் 5:

அந்த OTP எண்னை கொடுத்து ரெஜிஸ்டர் என்பதை க்ளிக் செய்யவேண்டும். இப்போது can நம்பர்/ ரெஜிஸ்டர் செய்த மொபைல் எண்ணை கொடுத்து விவரங்களை குறிப்பிட்ட பிறகு search ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

இப்போது உங்களுடைய பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி அனைத்தும் வந்துவிடும். அவற்றை க்ளிக் செய்யவேண்டும்.

ஸ்டேப் 6:

அடுத்து உங்களுடைய மொபைல் எண் வரும். அருகில் இருக்கும் generate otp என்பதை கொடுத்த பிறகு மொபைல் எண்ணிற்கு OTP எண்ணானது வரும். அவற்றை கொடுத்து Confirm OTP என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

அடுத்து கீழே proceed என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும். இப்போது படிவமானது ஓபன் ஆகும்.

ஸ்டேப் 7:

அடுத்து mode of disbursement என்பதில் bank / postal மூலம் தேர்வு செய்யவும். அதன் பிறகு bank details என்பதில் சரியானவற்றை கொடுக்க வேண்டும்.

ஸ்டேப் 8:

படிவத்தில் கேட்டுள்ள இதர விவரங்களை சரியாக குறிப்பிட வேண்டும். மேலும் வருமானம், குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கை விவரத்தினை சரியாக கொடுக்க வேண்டும்.

ஸ்டேப் 9:

அதன் பிறகு Property Details என்பதில் select ஆப்ஷனில் விண்ணப்பதாரர் பெயரை செலக்ட் செய்து கொள்ளவும். அவற்றில் கேட்டுள்ள விவரங்களுக்கு சரியானவற்றை நிரப்ப வேண்டும்.

சரியானவற்றை படிவத்தில் நிரப்பிய பிறகு submit ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

ஸ்டேப் 10:

அடுத்து உங்களுடைய ஆவணங்களை அப்லோட் செய்யவும். உங்களுடைய புகைப்படம் (Photo) 50 KB அளவுடனும், மீதமுள்ள அனைத்து ஆவணங்களும் 200 KB என்ற அளவுடன் ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ளவும்.

Scan செய்து வைத்துள்ளதை படிவத்தில் Upload செய்யவும்.

ஸ்டேப் 11:

அடுத்து Self Declaration Form , Download Aadhar Consent Form டவுன்லோடு செய்வதற்கு Download Self Declaration Form என்பதை க்ளிக் செய்யவும்.
 
இது போன்ற படிவமானது டவுன்லோடு ஆகும். அவற்றில் உங்களுடைய கையெழுத்து போட வேண்டும்.

ஸ்டேப் 12:

அடுத்து Download Aadhar Consent Form டவுன்லோடு செய்வதற்கு Download Aadhar Consent Form என்பதை க்ளிக் செய்யவும்.

இது போன்ற படிவமானது டவுன்லோடு ஆகும். அவற்றில் உங்களுடைய கையெழுத்தினை என்டர் செய்யவும்.

Aadhar Consent Form-ஐ பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும். இல்லையெனில்  இ சேவை மையம் மூலம் பயன்படுத்தி கையெழுத்து இடவும். இந்த படிவத்தினை upload செய்யவும்.

ஸ்டேப் 13:

அப்லோட் செய்த பிறகு Make payment என்பதை கொடுக்க வேண்டும். அவற்றில் service charges என்பதில் ரூ.10/- இருக்கும்.

அவற்றின் I agree என்ற கட்டத்தில் டிக் செய்த பிறகு make paymentஐ கொடுக்க வேண்டும்.

ஸ்டேப் 14:

இவற்றில் ஏதேனும் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் பணத்தினை  செலுத்த வேண்டும்.

பணம் செலுத்திய பிறகு ஒப்புகை சீட்டு வரும். அவற்றில் உங்களுக்கான எண் இருக்கும். அந்த எண்ணினை கொடுத்து உங்களுடைய status-ஐ உறுதி செய்து கொள்ளலாம்.

சனி, நவம்பர் 27, 2021

அல்சர் எவ்வாறு உண்டாகிறது,


அல்சர் எவ்வாறு உண்டாகிறது

https://youtu.be/ZgfGtJ8VBXM


அல்சர் என்றால் புண், காயம் என்று அர்த்தம். உடலில் எங்கு புண் இருந்தாலும் அது அல்சர் என்று தான் அழைக்கப்படும். வயிற்றில் ஏற்படும் புண்ணிற்கு  கேஸ்ட்ரிக்  அல்சர் அல்லது பெப்டிக் அல்சர் என்று பெயர்.

சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பதால் தான் அல்சர் ஏற்படுகிறது என்று மக்களிடத்தில் ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. இது தவறான கருத்தாகும்.

வறுமை கோட்டிற்கு கீழே  இருக்கும் கோடிக் கணக்கானவர்கள் சரியான நேரத்தில் சாப்பிட முடிவதில்லை.  நேரத்துக்கு சாப்பிடாமல் இருப்பதால் தான் அல்சர் வருகிறது என்பது உண்மையானால்  இவர்கள் அனைவருக்கும் அல்சர் வந்திருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அவ்வாறு இல்லை. எனவே அதில் உண்மையில்லை.

அல்சர் எவ்வாறு ஏற்படுகிறது?

நாம் உண்ணும் உணவு சரியாகவும், முறையாகவும் ஜீரணிக்கப்பட வேண்டும்.
அவ்வாறு ஜீரணமாகாமல் அதிக நேரம் வயிற்றில் தங்கும் உணவுகளால் செரிமான கோளாறு  ஏற்படுகிறது. ஜீரணக் கோளாரின் ஆரம்ப நிலையில் ஏப்பம், வாயு தொல்லை, பசிக் குறைவு, உணவு எதுகளித்தல், வயிற்று உப்புசம், வயிற்று பொருமல் போன்ற உபாதைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன.

அப்போது Gelusil, Digene போன்ற மருந்துகளையும், Soda, Cola போன்ற பானங்களையும் கொண்டு நாம் உண்ட உணவை ஜீரணிக்க வைக்க முயற்சிக்கின்றோம். இது மிகவும் பாதகமான செயலாகும். காரணம் ஏற்கனவே செரிமான சக்தியை இழந்து பலவீனமாக இருக்கும் வயிற்றை, மருந்துகளை கொண்டு மேலும் அடித்து துன்புறுத்தி வேலை வாங்குவது போன்றதாகும்.  இவை அனைத்தும் ஆரம்ப காலத்தில் சற்று நன்றாக இருப்பதாக தெரியும்.

இவ்வாறு மருந்துகளை தொடர்சியாக உட்கொள்ளும் போது நாளடைவில் அது அல்சர் அல்லது கேன்ஸராக மாறக்கூடும்.

காரம் சாப்பிடுவதால் தான் அல்சர் வரும் என்று மக்களிடத்தில் பொதுவாக ஒரு கருத்து நிலவுகிறது. அது முற்றிலும் தவறானது.  அல்சர் உண்டாவதற்கு 
காரம் காரணமல்ல.

செரிமான சக்தி குறைவின் காரணமாக,  நாம் சாப்பிட்ட உணவுகள் அதிக நேரம் வயிற்றில் தங்கும் போது அது கெட்டுப்போய் நொதித்தல் ஏற்பட்டு  புளிக்க ஆரம்பிக்கிறது.  

பொதுவாக புளிப்பு அரிக்கும் தன்மையை கொண்டது.  உணவில் சேர்ந்துள்ள  புளிப்பு வயிற்றின் உட்புறச் சுவரில் படிந்திருக்கும் ஜவ்வு போன்ற படலத்தை (Mucus membrane) அரிக்க ஆரம்பிக்கிறது. பிறகு  அது புண்ணாக மாறுகிறது. எனவே அல்சர் ஏற்பட  'காரம்' காரணமல்ல. புளிப்பு (Acid) உணவுகள் தான் காரணம்.

அடிக்கடி தலைவலி, ஜுரம், உடல் வலி என்று மாத்திரைகள் எடுத்துக்கொள்வது, டீ, காபி, குளிர் பானங்கள் குடித்தல்,  எண்ணெயில் முக்கி பொறித்த வடை, பஜ்ஜி, முறுக்கு,  அப்பளம், ஊறுகாய் போன்றவைகளை  சாப்பிடுதல்,  மற்றும் புளிப்பு தன்மையான இட்லி, தோசைகளை சாப்பிடுவது அல்சரை அதிகப்படுத்தும்.

மது அருந்துதல், புகை பிடித்தல், இரசாயனம் கலந்த பாஸ்ட் புட், ஜங்க் புட், பாக்கெட், டின்களில் அடைக்கப்பட்ட ரெடிமேட்  உணவுகள் போன்றவைகளை சாப்பிடுவது  அல்சரை கேன்ஸ்ராக மாற்றக் கூடும்.

அல்சர் உள்ளவர்கள்
காரம் சாப்பிட்டால் வயிற்றில் வலி ஏற்படுகிறது என்று சொல்வார்கள். 

உதாரணமாக நீங்கள் கீழே விழுந்து கை, கால்கள் தேய்ந்து சிராய்ப்பு ஏற்பட்டால் எப்படி இருக்குமோ அதுபோலதான் அல்சர் நோயாளிகளுக்கும் வயிற்றில் புண் இருக்கும். அவர்கள் சாப்பிடும் உணவில் உள்ள காரம் ஏற்கனவே உருவான அல்சர்  புண்ணில் படும்போது சற்று எரிச்சலையும், வலியையும் ஏற்படுத்தும். 

மேலும் பால், தயிர் சாப்பிட்டால் அல்சருக்கு நல்லது என்றும் மக்களிடத்தில் பொதுவான கருத்துக்கள் நிலவுகின்றது. இதுவும் தவறானது. பாலும் தயிரும் புளிப்பு தன்மையை கொண்டது. பால் வயிற்றுக்கு சென்றவுடன் புளிக்க ஆரம்பித்துவிடும்.  பால் அதன் தன்மையிலிருந்து மாறி புளித்து கெட்டுப் போகும்போது தான் அது  தயிராக மாறுகிறது. மேலும் இவைகளில் அதிகமாக கால்ஷியம்  உள்ளது. கால்ஷியம் என்றால் சுண்ணாம்பு சத்து. காயத்தில் சுண்ணாம்பு படும்போது ஏற்கனவே உள்ள அல்சரில் மேலும் அது புண்ணை ஏற்படுத்தும்.

எனவே அல்சர் உள்ளவர்கள் பால், தயிர் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மேலும் புளிப்பான பழ வகைகள், இனிப்பில்லாத இளநீர், வாழைப்பழம் போன்றவைகளையும் தவிர்க்க வேண்டும்.

வயிற்றுக்கு இரண்டு விதமான செயல்பாடுகள் உள்ளன. ஒன்று உணவுகளை செரிக்க வைத்தல். இரண்டாவது மன அமைதியை ஏற்படுத்துதல். 

பரபரப்பான வேலை சூழ்நிலையில் உள்ளவர்கள், நீண்ட நேரம் கண் விழித்து வேலை செய்பவர்கள்,  தூக்கம் குறைவு,  Day - Night   என மாறிமாறி வேலை செய்பவர்கள் ஆகியவர்களுக்கு பசி வந்தவுடன் உணவு உண்ணக்கூடிய சூழ்நிலை இல்லையென்றால் கைக்கால்கள் நடுங்கும், படபடப்பு அதிகமாகும், மயக்கம் ஏற்படும், எளிதில் எரிச்சலடைவார்கள். அவர்கள் உணவை கண்டவுடன்  பரபரப்பின் காரணமாக அவசர அவசரமாக சாப்பிடுவார்கள். இந்நிலையில் சாப்பிடும் உணவு அரைகுறையாக ஜீரணிக்கப்படுவதால் பல வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது.

பசி இல்லாமலும்,மன அமைதி இல்லாத போதும் உண்ணப்படும் அனைத்து உணவுகளும் வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். இதுவும் அல்சர் ஏற்பட முக்கிய காரணமாகும். எனவே உணவு உண்ணும் போது அமைதியும், நிதானமும் தேவை. 

அல்சர் நோயாளிகள் எப்போதும் வயிறு முட்ட உணவை உண்ணக் கூடாது.
அரை வயிறு உணவாக 3 வேலைக்கு பதிலாக 4, 5 வேலையாக பிரித்து  உண்ணலாம்.  அப்பளம், முறுக்கு, பிஸ்கட் போன்ற மொறு மொறுப்பான உணவுகளையும் தவிர்க்க வேண்டும். 

நீர் நிறைந்த காய்களை சாப்பிட வேண்டும்.

இனிப்பான பழவகைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது. இனிப்பு சுவை வயிற்றை குணப்படுத்தும்.

கொஞ்சம் மனதக்காளி கீரையை விதையுடன் எடுத்து, அத்துடன் சிறிது கசகசாவையும், ஒரு துண்டு தேங்காவும் சேர்த்து மிக்ஸியில்  அரைத்து அந்த ஜூசை காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் 15, 20 நாட்களில் அல்சர் புண் ஆறிவிடும். 

உணவுடன் தினமும் அகத்தி கீரையை சேர்த்துக் கொள்வது  நல்லது. இதற்கு     புண்களை ஆற்றும் தன்மை உள்ளது.

வயிற்றில் வலி ஏற்பட்டால் கொஞ்சம் சர்க்கரையையோ அல்லது உப்பையோ வாயில் போட்டு சுவைத்தால் சிறிது நேரத்தில் வலி மறைந்து விடும்.

பசிக்கும் போது  உங்கள் செரிமான சக்திக்கு ஏற்றாவாறு உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடும் போது அல்சர் கொஞ்சம் கொஞ்சமாக முற்றிலும் குணமாகும்.

எந்த இயற்கை முறை மருத்துவத்தில் மருந்து எடுத்து கொண்டாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் மருந்தை நிறுத்தி உங்கள் வாழ்க்கை முறையில் பின்பற்றப்படும் உணவுகளை சரியாக தேர்ந்தெடுத்து பின்பற்றினால் பல நோய்களுக்கு அடிப்படை காரணமாக இருக்கும் அல்சர் எனப்படும் குன்மம் முற்றிலும் குணமாகும் இன்ஷாஅல்லாஹ்.

மேலும் ஆலோசனை பெற 
New life nature health centre
Dr abdul jaleel 
📞8807224995

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை ,

https://scholarships.gov.in/fresh/newstdRegfrmInstruction

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது

மாநிலத்தில் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு மத்திய அரசின் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுவது வழக்கம். இதில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மாநில, மத்திய அரசால் அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிலையங்களில் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும், 11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உள்பட) பயில்வோருக்கு பள்ளி மேற்படிப்பிற்கான உதவித்தொகையும் வழங்கப்படும். அதேப் போன்று, தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்வோருக்குத் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியான மாணவ, மாணவிகள் 15.10.2019 வரையிலும், பள்ளி மேற்படிப்பு மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்திற்குத் தகுதியானவர்கள் 31.10.2019 வரையிலும் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய அரசின் www.scholarships.gov.in என்னும் தேசிய கல்வி உதவித் தொகைக்கான இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் கல்வி உதவித்தொகை திட்டத்தின் சார்பில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 127 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பதாரர்கள் இணைய தளத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் தங்களது புகைப்படம் மற்றும் தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்தந்த கல்வி நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆவண நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து தங்களது கல்வி நிலையத்திற்கு அனுப்பாத மாணவ, மாணவிகளின் இணையதள விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.

பதிவு செய்த விண்ணப்பங்களின் விவரங்களை எந்த நிலையிலும் மாற்றவோ, திருத்தவோ இயலாது. எனவே, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை மிகவும் கவனத்துடன் பதிவு செய்ய வேண்டும்.

இக்கல்வி உதவித்தொகை மாணவ, மாணவிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசால் நேரடியாக விடுவிக்கப்படும்.

இத்திட்டம் தொடர்பாக மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி முறைகள் 

http:www.minorityaffairs.in/schemes

 என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

வியாழன், நவம்பர் 18, 2021

மத்திய அரசின் மாநில அரசின் உதவித் திட்டம்,

40 ஆயிரம் மதிப்புள்ள  இம்போர்ட்ட‌ட் வீல்சேர் மற்றும் ட்ரை (மூன்று சக்கர) சைக்கிள்... மத்திய அரசு இல‌வ‌ச‌மா குடுக்குது. தேவை இருக்கிறவ‌ங்க நேர்ல‌போய்... வ‌ருமான‌ சான்றித‌ழ், ரேஷ‌ன் கார்ட், மாற்றுதிறனாளி அடையாள‌ அட்டை குடுத்து வாங்கிக்க‌லாம். 

இட‌ம் : National institute 
for empowerment of persons with multiple disabilities, muttukadu, Chennai.
http://niepmd.tn.nic.in/schemes.php

படித்தவர்கள் பிறருக்கு எடுத்து கூறுங்கள்

புதன், நவம்பர் 17, 2021

மனிதனின் உடல் நிலைகள்

#மனித_உடல்:

1: எலும்புகளின் எண்ணிக்கை: 206
2: தசைகளின் எண்ணிக்கை: 639
3: சிறுநீரகங்களின் எண்ணிக்கை: 2
4: பால் பற்களின் எண்ணிக்கை: 20
5: விலா எலும்புகளின் எண்ணிக்கை: 24 (12 ஜோடி)
6: இதய அறை எண்: 4
7: மிகப்பெரிய தமனி: பெருநாடி
8: சாதாரண இரத்த அழுத்தம்: 120/80 Mmhg
9: இரத்தம் Ph: 7.4
10: முதுகெலும்பில் உள்ள முதுகெலும்புகளின் எண்ணிக்கை: 33
11: கழுத்தில் உள்ள முதுகெலும்புகளின் எண்ணிக்கை: 7
12: நடுத்தர காதில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 6
13: முகத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 14
14: மண்டையில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 22
15: மார்பில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 25
16: கைகளில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 6
17: மனித கையில் உள்ள தசைகளின் எண்ணிக்கை: 72
18: இதயத்தில் உள்ள பம்புகளின் எண்ணிக்கை: 2
19: மிகப்பெரிய உறுப்பு: தோல்
20: மிகப்பெரிய சுரப்பி: கல்லீரல்
21: மிகப்பெரிய செல்: பெண் கருமுட்டை
22: மிகச்சிறிய செல்: விந்து
23: மிகச்சிறிய எலும்பு: நடுத்தர காது குத்துகிறது
24: முதல் மாற்று உறுப்பு: சிறுநீரகம்
25: சிறுகுடலின் சராசரி நீளம்: 7 மீ
26: பெரிய குடலின் சராசரி நீளம்: 1.5 மீ
27: பிறந்த குழந்தையின் சராசரி எடை: 3 கிலோ
28: ஒரு நிமிடத்தில் துடிப்பு விகிதம்: 72 முறை
29: சாதாரண உடல் வெப்பநிலை: 37 C ° (98.4 f °)
30: சராசரி இரத்த அளவு: 4 முதல் 5 லிட்டர்
31: வாழ்நாள் சிவப்பு ரத்த அணுக்கள்: 120 நாட்கள்
32: வாழ்நாள் வெள்ளை இரத்த அணுக்கள்: 10 முதல் 15 நாட்கள்
33: கர்ப்ப காலம்: 280 நாட்கள் (40 வாரங்கள்)
34: மனித பாதத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 33
35: ஒவ்வொரு மணிக்கட்டில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 8
36: கையில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 27
37: மிகப்பெரிய நாளமில்லா சுரப்பி: தைராய்டு
38: மிகப்பெரிய நிணநீர் உறுப்பு: மண்ணீரல்
40: மிகப்பெரிய மற்றும் வலிமையான எலும்பு: Femur
41: மிகச்சிறிய தசை: ஸ்டேபிடியஸ் (நடுத்தர காது)
41: குரோமோசோம் எண்: 46 (23 ஜோடி)
42: பிறந்த குழந்தை எலும்புகளின் எண்ணிக்கை: 306
43: இரத்த பாகுத்தன்மை: 4.5 முதல் 5.5
44: உலகளாவிய நன்கொடையாளர் இரத்தக் குழு: ஓ
45: உலகளாவிய பெறுநர் இரத்தக் குழு: ஏபி
46: மிகப்பெரிய வெள்ளை இரத்த அணு: மோனோசைட்
47: மிகச்சிறிய வெள்ளை இரத்த அணு: லிம்போசைட்
48: அதிகரித்த சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை: பாலிசித்தீமியா
49: உடலில் உள்ள இரத்த வங்கி: மண்ணீரல்
50: வாழ்க்கை நதி என்று அழைக்கப்படுகிறது: இரத்தம்
51: சாதாரண இரத்தக் கொழுப்பு அளவு: 100 மிகி / டிஎல்
52: இரத்தத்தின் திரவப் பகுதி: பிளாஸ்மா

வாழ்க்கை என்று அழைக்கப்படும் இந்த சாகசத்தை அனுபவிக்க உங்களை அனுமதிக்கும் ஒரு முழுமையான வடிவமைக்கப்பட்ட இயந்திரம். அதை கவனித்துக் கொள்ளுங்கள். தீமைகள் மற்றும் அதிகப்படியானவற்றால் அதை சேதப்படுத்தாதீர்கள்.

நன்றி: எழுத்தாயுதம்


சனி, நவம்பர் 13, 2021

ஷைகுல் ஹதீஸ் அல்லாமா A.E.M.அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் மரணம்,

அஸ்ஸலாமு அலைக்கும வரஹ் ..

    *ஷைகுல் ஹதீஸ்  அல்லாமா A.E.M.அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் கிப்லா அவர்களின் மரணச் செய்தி

 தமிழக முஸ்லிம்களுக்கும் மற்றும்  உலமாக்கள் அனைவருக்கும் மிகுந்த வருத்தத்தையும் மன வேதனையும் அளிக்கிறது.*  

*தமிழகத்திலுள்ள முஸ்லிம்களுக்கும் உலமாக்களுக்கும் அவர்கள் ஆற்றிய சேவை மகத்தானது.*

    *ஹஜரத்   மாநில ஜமாத்துல் உலமா சபையின் தலைவர் பொறுப்பில் இருந்த போது அடியேன் மூன்று ஆண்டுகள் சென்னை மாவட்ட செயலாளரக இருந்து அவர்களின் கீழ் பணியாற்றும் வாய்ப்ப்பை பெற்றேன்.*

   *கம்பீரமான தோற்றம், வசீகரமான பார்வை குழந்தை போன்ற உள்ளம் புன் சிரிப்புடன் அணுகுமுறை போன்ற நற் குணங்களைக் கொண்ட ஹஜ்ரத் பெருந்தகை ஜமாத்துல் உலமா சபைக்கு யார் நிதி வழங்கினாலும் வாங்கி அப்படியே பொருளாளர் அல்லது  பொறுப்பாளர்களிடத்தில் வழங்கும் தன்மை கொண்டவர்கள்.* 

    *சென்னை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை நிகழ்ச்சிகளுக்கு  அவர்களை அழைக்கும் போதெல்லாம் தவறாமல் கலந்துக் கொள்ளக் கூடியவர்கள்.*

*சென்னை மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் செயல்பாடுகளை குறிப்பாக வெள்ள நேரத்தின் செயல்பாடுகளை அலைபேசியில் அழைத்து பாராட்டியதுடன் ஜமாத்துல் உலமா சபையின் கூட்டங்களிலும் மனதார பாராட்டியவர்கள்.*

  *மன்பயிக்களின் சிறப்பான கல்வி ஞானத்திற்கு,  ஹஜ்ரத் போன்றவர்களின் அறிவு ஞானம் பெரிதும் உதவியது.*

 *ஷைகுல் ஹதீஸ் என்னும் பெயருக்கு ஏற்றார் போல அவர்களின்  வகுப்புகளும் இருக்குமென அவர்களின் மாணவர்களின் மூலமாக அறிய முடிகிறது. தன்னுடைய நீண்ட கால அனுபவங்களையும் மாணவர்களுடன் பகிர்ந்து பொது அறிவையும் மாணவர்கள் பெறுவதற்கு வழி வகுத்தவர்கள்.*


 *மறைந்த பெங்களுர் ஷபீலுர் ரஷாத் அரபிக் கல்லூரியின் முதல்வர் அஷ்ஷெய்கு அஸரஃப் அலி ஹஜ்ரத் கிப்லா அவர்களுக்கு சென்னை மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து  ஹஜ்ரத் அவர்களை  அழைத்துப் பேச வைத்தோம்.  நாங்கள் அவர்களுக்கு போக்கு வரத்து செலவுக்காக  ஹத்யா வழங்க முன்வந்த போது அவற்றை  ஏற்க மறுத்து என்னுடைய கடமையை ஆற்ற இங்கே வந்தேன்.*

 *இதைக் கூட செய்யா விட்டாமல் எப்படி என்றுக் கூறி புறப்பட்டார்கள்.* 

 *ஹஜ்ரத்   அவர்களின் சேவைகள் தமிழக வரலாற்றில் எப்போதும் இடம் பெற்றிருக்கும் எனபதில் எவ்வித  சந்தேகமில்லை.* 

    *ஹஜ்ரத் அவர்களின் சேவைகளை வல்ல ரஹ்மான் கபூல் செய்து ஜன்னத்துல் பிர்தவுஸை வழங்கிய அருள்வானாக.*


https://youtu.be/5ZPlgPMBwSg



மௌலானா
அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் கிப்லா அவர்களின் வாழ்க்கை வரலாறு



https://youtu.be/-CpWQLyzKls

வியாழன், நவம்பர் 11, 2021

ஜும்மா மேடை


மழை செய்த பிழையா?

مصابيح المحراب : மழை செய்த பிழையா?


http://vellimedaiplus.blogspot.com/2015/11/blog-post_18.html?m=1

*மழை அல்லாஹ்வின் அருள்* ~ WARASATHUL ANBIYA


http://warasathulanbiya.blogspot.com/2015/11/blog-post.html?m=1

வெள்ளிமேடை منبر الجمعة: *மழையோ மழை*
http://vellimedai.blogspot.com/2015/11/blog-post_20.html?m=1

தாவூதி ஆலிம்கள் சங்கமம் : *பேரிடர்கள் தரும் பாடம்*
http://dawoodiaalimkalsangamam.blogspot.com/2018/08/blog-post_23.html?m=1

ஞாயிறு, நவம்பர் 07, 2021

சிசுவிற்கு ஜனாஸா தொழுகை உண்டா?

 கேள்வி :ஸலாத்தில் கரு கலைப்பு கூடுமா?*


சிசுவிற்கு ஜனாஸா  தொழுகை உண்டா?*



*الجواب بعون الله الملك الوهاب 👇*



فالجنين بعد نفخ الروح فيه 

لا يجوزإجهاضه بلا خلاف، 


أما قبل ذلك ففيه خلاف، 


فجمهور أهل العلم على تحريمه 


ومنهم من قال بالتحريم , وهو المعتمد عند المالكية. 


ومنهم من قال بالكراهة، 


ومنهم من قال بالجواز لعذر، 


من قال بالإباحة لعذر فقط , وهو حقيقة مذهب الحنفية


ومنهم من قال بالجواز مطلقا ، 


ولعل القول بالجواز في الأربعين الأولى إذا كان هناك عذر ومصلحة هو الراجح،


واختلف في الكفارة والأحوط فعلها، 


وهي عتق رقبة، 


أو صيام شهرين متتابعين، 


ودية الجنين إن سقط ميتا 


مقدارها عشر دية المرأة، 


وقدّرها بعضهم بمائتين وثلاثة عشر جراما من الذهب تقريبا


وَكَذَلِكَ الْمَرْأَةُ يَسَعُهَا أَنْ تُعَالَجَ لِإِسْقَاطِ الْحَبَلِ مَا لَمْ يَسْتَبِنْ شَيْءٌ مِنْ خَلْقِهِ وَذَلِكَ مَا لَمْ يَتِمَّ لَهُ مِائَةٌ وَعِشْرُونَ يَوْمًا ثُمَّ إذَا عَزَلَ وَظَهَرَ بِهَا حَبَلٌ هَلْ يَجُوزُ نَفْيُهُ؟ 


قَالُوا إنْ لَمْ يَعُدْ إلَى وَطْئِهَا أَوْ عَادَ بَعْدَ الْبَوْلِ وَلَمْ يُنْزِلْ جَازَ لَهُ نَفْيُهُ وَإِلَّا فَلَا كَذَا فِي التَّبْيِينِ


إِنْ أَسْقَطَتْ بَعْدَ مَا اسْتَبَانَ خَلْقُهُ وَجَبَتْ الْغُرَّةُ كَذَا فِي فَتَاوَى قَاضِي خَانْ.


الْعِلَاجُ لِإِسْقَاطِ الْوَلَدِ إذَا اسْتَبَانَ خَلْقُهُ كَالشَّعْرِ وَالظُّفْرِ وَنَحْوِهِمَا لَا يَجُوزُ وَإِنْ كَانَ غَيْرَ مُسْتَبِينِ الْخَلْقِ يَجُوزُ وَأَمَّا فِي زَمَانِنَا يَجُوزُ عَلَى كُلِّ حَالٍ وَعَلَيْهِ الْفَتْوَى كَذَا فِي جَوَاهِرِ الْأَخْلَاطِيِّ.


وَفِي الْيَتِيمَةِ سَأَلْت عَلِيَّ بْنَ أَحْمَدَ عَنْ إسْقَاطِ الْوَلَدِ قَبْلَ أَنْ يُصَوَّرَ فَقَالَ أَمَّا فِي الْحُرَّةِ فَلَا يَجُوزُ قَوْلًا وَاحِدًا وَأَمَّا فِي الْأَمَةِ فَقَدْ اخْتَلَفُوا فِيهِ وَالصَّحِيحُ هُوَ الْمَنْعُ كَذَا فِي التَّتَارْخَانِيَّة



وذهب الحنفیة إلی إباحة إسقاط العلقة حیث أنهم یقولون بإباحة إسقاط الحمل ما لم یتخلق منه شيء ولم یتم التخلق إلا بعد مائة وعشرین یوماً، 


قال ابن عابدین: وإطلاقهم یفید عدم توقف جواز إسقاطها قبل المدة المذکورة علی إذن الزوج، 


وکان الفقیه علي بن موسی الحنفي یقول: إنه یکره فإن الماء بعد ما وقع في الرحم مآله الحیاة، 


فیکون له حکم الحیاة کما في بیضة صید الحرم، 


قال ابن وهبان: فإباحة الإسقاط محمولة علی حالة العذر أو أنها لا تأثم إثم القتل



حمل کو چار ماہ یعنی 120 دن گزرنے کے بعد چوں کہ اللہ رب العزت اس میں روح ڈال دیتا ہے؛ جس کی وجہ سے ایسے حمل کا اسقاط حرام ہے، اور یہ ایسے ہی ہے جیسے زندہ بچے کو درگور کردیا جائے۔



نیز الٹرا ساؤنڈ میں بچے کی کسی بیماری کا علم یقینی نہیں، 


بلکہ گمان کے درجے میں ہوتا ہے، 


اور اگر یقینی بھی ہو تو خالقِ کائنات بقیہ مدت میں اس مرض سے نجات دینے پر قدرت رکھتا ہے 


اور بالفرض آخر وقت تک بھی بچہ مذکورہ مرض میں مبتلا رہے، 


پھر بھی اس کا اسقاط جائز نہیں؛ 


کیوں کہ بیمار انسان کو مارنا جائز نہیں، 


اگر اب اسقاط کیا گیا تو یہ قتلِ جنین ہے، جس کی وجہ سے ماں باپ پر عُقل (بطورِ تاوان پانچ سو درہم) لازم ہوگا۔ 


لہذا آپ اللہ رب العزت سےصحت یابی کی دعا کریں اور اس سے اچھی امید رکھیں۔





(abortion) கருக்கலைப்பின் யதார்த்தத்தையும் ஷரீஅத்தின் விதிமுறையையும் முதலில் நாம் விளங்கி கொள்ள வேண்டும் 


மொழியியல் ரீதியான பொருளின்படி கருக்கலைப்பு abortion என்பது கருவை கருப்பையிலிருந்து வெளியேற்றுவது ஆகும். 



இஸ்லாமிய ஃபிக்ஹ் அறிஞர்கள்  பிரசவ காலம் பூர்த்தியாவதற்கு முன்பு கருவை கருப்பையிலிருந்து வெளியேற்றுவதே கருக்கலைப்பு என்பதாக வரையறுக்கின்றனர்.



பிரத்தியோகமான மருந்து சாப்பிடுதல், சுமை தூக்குதல்,மருத்துவரை அணுகி கருக்கலைப்பு செய்யக் கோருதல்,போன்ற முறைகளில் கருவைக் கலைக்கலாம். 


சிலவேளைகளில் தானாகவோ அல்லது பலவந்த தாக்குதல் மூலமாகவோ கரு கலைந்து விடுவதுமுண்டு.


abortion கருக்கலைப்பு என்பது கருவிற்கு ரூஹ் கொடுக்கப்படுவதற்கு முன்போ அல்லது பின்போ நடக்கலாம்.


முஸ்லிம் அறிஞர்களின் ஒருமித்த கருத்தின்படி ரூஹ் கொடுக்கப்பட்ட பின்பு கருவைக் கலைப்பது ஹராமாகும்.



ஏனெனில் இது மனித உயிருக்கு எதிரான தாக்குதலாகும். 


இதற்கு இரத்த ஈட்டுதொகையாக  - غرة  குர்ரா (ஆண் அல்லது பெண் அடிமை) கொடுக்கவேண்டும். 


இது பிறந்துவிட்ட முழு மனிதனுக்கு பகரமாக கொடுக்கப்படவேண்டிய திய்யாவில் (الدية) பத்தில் ஒரு பங்காகும்.


அல்லாஹ் கூறுகிறான்:-



وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ



(கொலையை) அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றி கொலைசெய்து விடாதீர்கள்..



(அல் இஸ்ரா : 33)




قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَنِينِ امْرَأَةٍ مِنْ بَنِي لَحْيَانَ سَقَطَ مَيِّتًا بِغُرَّةٍ، عَبْدٍ أَوْ أَمَةٍ



‘பனூ லிஹ்யான்’ குலத்தைச் சேர்ந்த (கர்ப்பிணி) பெண் ஒருத்தியின் (வயிற்றிலிருந்த) சிசு, (மற்றொரு பெண் அடித்ததால்) இறந்து பிறந்தது. 


அதற்கு நஷ்ட ஈடாக ஓர் ஆண் அடிமையை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை வழங்கிட வேண்டுமென இறைத்தூதர்  صلى الله عليه وسلم  அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.       


பார்க்க 👇                                                      (அபூஹுரைரா(ரலி), புஹாரி,முஸ்லிம்)



இதனடிப்பையில் கருவுக்கு ரூஹ் கொடுக்கப்பட்ட பின்பு அதைக் கலைப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்று முஸ்லிம் சட்ட அறிஞர்கள் ஒருமித்து கூறியுள்ளனர்.



கருவிற்கு ரூஹ் கொடுக்கப்படுவதற்கு முன்னர் கருக்கலைப்பு செய்வது குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளது.


கருத்தரித்த பின்புள்ள படிநிலைகளைப் பொறுத்து சிலர் அதை அனுமதிக்கவும், 

சிலர் அதை தடை செய்யவும் செய்கின்றனர். 


சிலர் கருத்தரித்து 40 அல்லது 42 நாட்களுக்கு பிறகு கருக்கலைப்பு abortion செய்வது ஹராமாகும். என்கின்றனர், 



கரு முதிர்கருவாக வளர்ச்சியடைய ஆரம்பிக்கும்போது கை,கால், கண், நகம் போன்றவை வளர ஆரம்பிக்கின்றன.


எனவே  முன்பு கூறிய ஹதீஸ் அடிப்படையில் 


அதற்கு திய்யா(الدية) என்னும் இரத்த ஈட்டுத்தொகை வழங்குவதும் கட்டாயமாகும்.



நபி ஸல் அவர்கள் கூறியுள்ளதாக இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;-




إِذَا مَرَّ بِالنُّطْفَةِ ثِنْتَانِ وَأَرْبَعُونَ لَيْلَةً، بَعَثَ اللهُ إِلَيْهَا مَلَكًا، فَصَوَّرَهَا وَخَلَقَ سَمْعَهَا وَبَصَرَهَا وَجِلْدَهَا وَلَحْمَهَا وَعِظَامَهَا، ثُمَّ قَالَ: يَا رَبِّ أَذَكَرٌ أَمْ أُنْثَى؟ 


فَيَقْضِي رَبُّكَ مَا شَاءَ، وَيَكْتُبُ الْمَلَكُ، ثُمَّ يَقُولُ: يَا رَبِّ أَجَلُهُ، فَيَقُولُ رَبُّكَ مَا شَاءَ، وَيَكْتُبُ الْمَلَكُ، ثُمَّ يَقُولُ: يَا رَبِّ رِزْقُهُ، فَيَقْضِي رَبُّكَ مَا شَاءَ، وَيَكْتُبُ الْمَلَكُ، ثُمَّ يَخْرُجُ الْمَلَكُ بِالصَّحِيفَةِ فِي يَدِهِ، فَلَا يَزِيدُ عَلَى مَا أُمِرَ وَلَا يَنْقُصُ



நுத்ஃபாவின் மீது நாற்பத்து இரண்டு இரவுகள் கடந்துவிட்ட நிலையில் அல்லாஹ்سبحانه وتعالى வானவர் ஒருவரை அனுப்புகிறான். 


பிறகு (மூன்றாவது நாற்பது கழிந்தபின்) அதற்கு உருவமளித்து,அதற்குச் செவிப்புலனையும் பார்வையையும் தோலையும் சதையையும் எலும்பையும் படைக்கிறான்.



பிறகு (நாற்பத்து இரண்டு நாட்கள் கழிந்ததும் அனுப்பப்பட்ட) அந்த வானவர், 



“இறைவா! இது ஆணா, பெண்ணா?” என்று கேட்கிறார். 


அப்போது உம்முடைய இறைவன் தான் நாடியதைத் தீர்ப்பளிக்கிறான்.


(அவ்வாறே) அந்த வானவரும் எழுதிப் பதிவு செய்கிறார். 


பிறகு அவர், “இறைவா! இதன் வாழ்நாள் (எவ்வளவு?)” என்று கேட்கிறார். 


அப்போது உம்முடைய இறைவன் தான் நாடியதைச் சொல்கிறான்.


(அதன்படி) அந்த வானவரும் எழுதிப் பதிவு செய்கிறார்.


பிறகு அவர், “இறைவா! இதன் வாழ்வாதாரம் (எவ்வளவு)?” என்று கேட்கிறார். 


அப்போது உம்முடைய இறைவன் தான் நாடியதைத் தீர்ப்பளிக்கிறான். 


(அதன்படி) அந்த வானவரும் எழுதி பதிவு செய்துவிட்டு பிறகு தமது கையில் அந்த ஏட்டை எடுத்துக்கொண்டு வெளியேறிவிடுகிறார். 


(தமக்கு) ஆணையிடப்பட்டதைவிட அவர் கூட்டுவதுமில்லை; குறைப்பதுமில்லை



(அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி), 


நூல் :முஸ்லிம்)



மற்றொரு அறிவிப்பில் நாற்பத்திரண்டு இரவுகள் என்பதற்கு பதிலாக أَرْبَعِينَ لَيْلَةً  நாற்பது இரவுகள் என்று வந்துள்ளது.



அல்லாஹ்سبحانه وتعالى  கூறுகிறான்-



وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ * بِأَيِّ ذَنْبٍ قُتِلَتْ



உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது – “எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?” என்று. 



(அத்தக்வீர் : 8,9)



ஆகவே கருவைக் கலைப்பது தடை செய்யப்பட்டுள்ளதால், கருவின் மீதான தாக்குதலான  கருக்கலைப்பிற்கு காரணமாக இருக்கும் தாயோ, தந்தையோ, கணவரோ, மருத்துவரோ, அல்லது வேறு யாராக இருந்தாலும் அவர்கள் குற்றவாளிகளாவர்.



எனவே இந்த குற்றத்தை இழைத்தவர்கள் இரத்த ஈட்டுத்தொகை என்னும் திய்யா செலுத்தவேண்டியது கட்டாயமாகும்.



அதற்கான கஃப்பாரா👇 



وَمَا كَانَ لِمُؤْمِنٍ اَنْ يَّقْتُلَ مُؤْمِنًا اِلَّا خَطَـــٴًــا‌  وَمَنْ قَتَلَ مُؤْمِنًا خَطَـــٴًــا فَتَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ وَّدِيَةٌ مُّسَلَّمَةٌ اِلٰٓى اَهْلِهٖۤ اِلَّاۤ اَنْ يَّصَّدَّقُوْا‌  


فَاِنْ كَانَ مِنْ قَوْمٍ عَدُوٍّ لَّـكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَتَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ‌  وَاِنْ كَانَ مِنْ قَوْمٍ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِّيْثَاقٌ فَدِيَةٌ مُّسَلَّمَةٌ اِلٰٓى اَهْلِهٖ وَ تَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ‌  


فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ تَوْبَةً مِّنَ اللّٰهِ‌  وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا


‏ 

தவறாக அன்றி, ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்வது ஆகுமானதல்ல; 


உங்களில் எவரேனும் ஒரு முஃமினை தவறாக கொலை செய்துவிட்டால், 


அதற்குப் பரிகாரமாக முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; 


அவனுடைய குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் - 


அவனுடைய குடும்பத்தார் (நஷ்ட ஈட்டுத் தொகையை மன்னித்து) அதை தர்மமாக விட்டாலொழிய; 


கொல்லப்பட்ட அவன் உங்கள் பகை இனத்தைச் சார்ந்தவனாக (ஆனால்) முஃமினாக இருந்தால், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும் (நஷ்ட ஈடில்லை; இறந்த) அவன் உங்களுடன் சமாதான (உடன்படிக்கை) செய்து கொண்ட வகுப்பாரைச் சேர்ந்தவனாக இருந்தால் அவன் சொந்தக்காரருக்கு நஷ்ட ஈடு கொடுப்பதுடன், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும்; 


இவ்வாறு (பரிகாரம்) செய்வதற்கு சக்தியில்லாதவனாக இருந்தால், 


அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறுவதற்காகத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு வைக்க வேண்டும் - 


அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும், பூரண ஞானமுடையவனாகவும் இருக்கிறான்.



(அல்குர்ஆன் : 4:92)




அடிமையை உரிமையிடுவது


தொடர்ந்து இரு மாதம் நோன்பு நோற்பது 


அல்லது அதற்கான ஈட்டுத்தொகை 213 கிராம் தங்கம் என்றும் ,


அல்லது ஒன்றரை கிலோ வெள்ளி என்றும் கூறப்படுகிறது 



கருத்தரித்து நாற்பது நாட்களுக்கு முன்னர் செய்யப்படும் கருக்கலைப்பை பொறுத்தவரை அது அனுமதிக்கப்பட்டதாகும்



கருவின் மீதான தாக்குதலாக இது கருதப்படமாட்டாது என்பதால் செய்தால் இதற்கு தண்டனை கிடையாது.



فأجمع أهل العلم على حرمة الإجهاض إذا أتم الجنين مائة وعشرين 


لأنه بعد الطور الثالث ‏وهو تمام المائة وعشرين يوماً يكون قد نفخ فيه الروح وفي إجهاضه قتل للنفس التي حرم ‏الله إلا بالحق، 



ஆக ஒரு மண்டலம் 40 நாள் 

3மண்டலத்தில் அதாவது 120நாளில் ஒரு சிசு பூரணமாக உருவாகி விடுகிறது 


அதற்கு பிறகு எந்த ஒரு நிலையிலும் கருகலைப்பு ஹராமாகும்.. 



குழந்தை கருவிலேயே இறந்து விட்டது எனில் அதை வெட்டி எடுப்பது கூடும் 


அதே சமயம் அந்தக் குழந்தை உயிருடன் இருக்கிறது எனில் அவ்வாறு செய்வது கூடாது 


குழந்தையின் உயிரை எடுப்பதற்கு எவ்வகையிலும் அனுமதி இல்லை


கருவில் குழந்தைக்கு ஏதேனும் குறைபாடு இருக்கிறது என ஸ்கேன் வழியாக தெரிந்தாலும் 


120 நாட்கள் கழிந்த பின்னர் கலைப்பதற்கு அனுமதி கிடையாது 


ஏனெனில் நோயாளியான ஒருவரை கொலை செய்வதற்கும் மார்க்கத்தில் அனுமதி இல்லை



அவ்வாறு தெரியாமல் கலைத்து விட்டால்  அது ஒரு உயிரை கொலை செய்ததினுடைய குற்றமாகும் 


எனவே அதற்கு பரிகாரமாக 500 திர்ஹம் அதாவது ஒரு கிலோ 531 கிராம் கிராம் வெள்ளி அளவில் காஃப்பாரா  கடமையாகிவிடும்



பார்க்க 👇



فتاوی رحیمیہ (2/240)


الموسوعة الفقهیة الکویتیة۳۰/ ۲۸۵)


الفتاوى الهندية (5/ 356)


فتاوی شامی (3 / 176)


الدرالمختار مع الشامية، کتاب الحظر والإباحة، باب الاستبراء وغیره، ، کراچی ( ۶/ ۴۲۹)


ابن الهمام، فتح القدير، 3: 274


(ہدایہ: ۲/۳۱۱، کتاب النکاح، ط: اشرفی دیوبند)


نہایۃ المحتاج" (8/443)


حاشیہ قليوبی "(4/160) 


مرداوی رحمہ اللہ "الإنصاف" (1/386)


"الشرح الكبیر" (2/266)


"الفتاوى الجامعہ" (3/1055)


(غایۃ الا وطار ۴/۲۴۹، باب الا ستبراء)



مذاهب الفقهاء في الصلاة على السقط



abortion ஆகி இறந்து விட்ட குறை மாதக் குழந்தைக்கு ஜனாஸா தொழுகை நடத்தும் விஷயத்தில் இமாம்களின் பார்வையானது மூன்று வகைப்படும்



قال الامام احمد يصلي علي السقط اذا كان له اربعة اشهر وعشر في البطن ونفخ فيه الروح وان لم يستهل 



*ஒன்று ஹம்பலி மத்ஹபின் ஆய்வாகும்*



அதாவது வயிற்றில் நான்கு மாதம் பத்து நாட்கள் உள்ளேயிருந்து அதற்கு உயிர் கொடுக்கப்பட்டு விட்டால் அது தானாக பிறக்கா விட்டாலும், அசையாவிட்டாலும்  அந்த குறைமாத குழந்தைக்கு தொழுகை நடத்தப் படவேண்டும்




பார்க்க 👇



المرقات( 4/56)



واستدل بقوله صلى الله عليه وسلم : 


( والسقط يصلى عليه ، ويدعى لوالديه بالمغفرة والرحمة )  


குறை மாதக் குழந்தைக்கு தொழுகை நடத்தப் படவேண்டும் என்றும் அது தனது பெற்றோர்களுக்காக பாவமன்னிப்பையும் கிருபையையும் வேண்டி நிற்கும் என்றும் நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்



ஆதாரம் 👇

رواه أبو داوود صححه الألباني في صحيح الجامع/3525)

ولحديث المغيرة بن شعبة قال قال النبي صلى الله عليه وسلم 

السقط يصلي عليه 

رواه ابوداؤد 

والطفل يصلي عليه 

رواه الترمذي 

قال الامام مالك لا يصلي علي الطفل الا ان يختلج ويتحرك بعد الولادة 

*இரண்டாவது மாலிக்கீ மத்ஹபின் ஆய்வாகும்*

பொதுவாக குழந்தை வெளியே பிறந்து அதற்குள் அசைவு  ஏற்பட்டு விட்டால் 

அவ்வகையான குழந்தைக்கு தொழுகை நடத்தப் படவேண்டும்

பார்க்க 👇

العيني (4/196) 

قال الامام ابو حنيفة والشافعي لا يصلي علي الطفل حتي يستهل 


 *மூன்றாவது ஹனஃபீ மற்றும் ஷாஃபியீ  மத்ஹபின் ஆய்வாகும்*

والاستهلال ما يدل علي الحياة من حركة عضو او رفع صوت


 குறைமாதக் குழந்தை உயிரோடு தான் இருந்தது என்பதற்கான அறிகுறி இருக்க வேண்டும் 


அதாவது உடலசைவின் மூலமோ அல்லது சப்தத்தை வெளியே உயர்த்துவது மூலமாகவோ அறிந்து கொள்ளலாம்

والمعتبر فيه خروج اكثره حيا حتي لو خرج اكثره وهو يتحرك صلي  عليه ، وفي الاقل لا 

அதாவது குறை மாத குழந்தைக்கு உறுப்பில் அதிகமான பகுதியில் தோற்றம் ஏற்பட்டு அதற்குள் அசைவு ஏற்பட்டால் அப்போது தொழுகை நடத்தப்படும் 

இல்லையானால் தொழுகை நடத்தப்படாது

 பார்க்க👇

المرقات (4/56 )

عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم الطفل لايصلي عليه ولايرث ولا يورث حتي يستهل 


குறை மாத குழந்தைக்கு உயிர் உள்ளது என்பதற்கான அறிகுறி தென்படாத வரை அதற்கு தொழுகையும் நடத்தப்படாது பாகக்காரனாகவும் ஆகாது  ஆக்கவும் படாது


ஆதாரம் 👇

رواه الترمذي والنسائي وابن ماجه 

وعن جابر اذا استهل الصبي صلي عليه وورث 

உயிரோடு பிறந்ததற்கான அறிகுறி தென்பட்டால் அவ்வகை குழந்தைக்கு தொழுகையும் நடத்தப்படும் வாரிசுரிமையும் தரப்படும்

ஆதாரம் 

رواه النسائي

வியாழன், நவம்பர் 04, 2021

தாடியின் நன்மைகள். அறிவியல் சான்றுகள்,

தாடியின் நன்மைகள். அறிவியல் சான்றுகள்.

-டாக்டர் த முஹம்மது கிஸார்

தாடி பற்றி பிறமத அறிஞர்களின் ஆய்வுகள், கருத்துகள்:-

அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின்  சமூக உளவியல் துறையைச்  சேர்ந்த டாக்டர் டேனியல் G பிரீட்மான் (Daniel G. Freeman) என்பவர்  தாடி வளர்ப்பதால் உண்டாகும் இனப்பெருக்க மதிப்பு (reproductive value) பற்றி ஓர்  ஆய்வு மேற்கொண்டார்.

இதை நிரூபிக்க, அவரும் அவரின் மாணவர்களும் ஒரு குறிப்பிட்ட  சில இளங்கலை மாணவர்களிடம், தாடி வைப்பதால் அவர்களுக்கு என்னென்ன உணர்வுகள் ஏற்படுகிறது என்பதைப் பற்றி பிரிண்ட் செய்யப்பட்ட கேள்வி மூலமாகவும் மற்றும் நேர்காணல் மூலமாகவும் ஆய்வு செய்தனர்.

ஆய்வு செய்யும் ஒரு மாணவர், பல மாணவிகளிடம்  "தாடி வைத்த ஆண்களைப்பற்றி என்ன உணருகிறீர்கள்" என்று நேர்காணல் எடுத்தார். அனேகமாக எல்லா மாணவிகளும், தாடியுடன் உள்ள  ஆண்களின் முகம் , முழுவதுமாக சவரம் செய்யப்பட்ட ஆண்களின் முகத்தைக் காட்டிலும் அதிக ஆண்மைத்தனம், முதிர்ச்சித்தன்மை, சுதந்திர உணர்வு கொண்டதாக இருப்பதாக தெரிவித்து இருந்தனர்.

இறுதியாக இந்த ஆய்வு "தாடி, ஒரு பாலியல் காந்த விசையாகவும், ஆண்களை அதிகம் கவர்ச்சியாகவும், பெண்களுக்கு ஓர் ஈர்க்கின்ற விதமாகவும் " இருப்பதாகத் தீர்மானிக்கிறது.(they concluded from their studies that beard increases "sexual magnetism" and attractiveness and makes men more appealing to women.)

(பெண்களின் கூந்தல் பாலியல் உறவுக்கு எந்த வகையிலும் சம்மந்தமில்லாமல் இருந்த போதும் எப்படி ஆண்களை ஈர்ப்பதாக உள்ளதோ அது போல் தாடி பெண்களை ஈர்க்கிறது என்பது இதன் கருத்தாகும்.)

கலிபோர்னியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தின்  உளவியலாளர் ராபர்ட் J பெல்லிக்ரிணி என்பவர் 1973 ஆம் ஆண்டு உளவியல் பத்திரிகையில் ஒரு ஆராய்ச்சி முடிவை வெளியிட்டார். இந்த ஆய்வுக்காக அவர், 22 வயது முதல் 25 வயது வரையிலான தங்கள் தாடியை முழுவதுமாக சவரம் செய்ய விருப்பமுள்ள எட்டுப் பேரை தேர்ந்து எடுத்தார். அவர்கள் அனைவரும் கீழ்க்கண்ட நான்கு நிலைகளில் புகைப்படம் எடுக்கப்பட்டனர்.

1. முழு தாடியுடன் 

2. குறுந்தாடியுடன் 

3. மீசையுடன்

4. முழுவதும் சவரம் செய்யப்பட்ட முகத்துடன்.

இந்தப் புகைப்படங்கள் எடுத்து முடித்த உடன், மொத்தம் 32 போட்டோக்களில் ஓவ்வொரு படமும் இரண்டு ஆண்கள் இரண்டு பெண்களிடம் கொடுக்கப்பட்டன. இப்படி 64 ஆண்களிடமும் 64 கொடுக்கப்பட்டன. அந்த ஆண்களிடமும், பெண்களிடமும், அந்த  போட்டோவில் உள்ளவர்களின் ஆளுமைப்பண்பு கூறுகள் (personality trait) அடிப்படையில் முதன் முதலில் போட்டோவைப்  பார்த்தவுடன் ஏற்பட்ட உணர்வு, அபிப்பிராயத்தை, (first  impression) மதிப்பிடுமாறு கூறப்பட்டது.

அந்த ஆய்வின் முடிவு இப்படி தீர்மானிக்கிறது." அந்த ஆண்களின் ஆண்மைத் தன்மை, நல்ல தோற்றம், ஆதிக்க உணர்வு, முதிர்ந்த தன்மை, தைரிய தோற்றம், தாராளவாத இயல்பு, ஆரோக்கியத் தன்மை, கவர்ச்சித்  தோற்றம் ஆகிய பண்புகளும் அவர்களின் முகத்தில் உள்ள முடிகளின் எண்ணிக்கையுடன் நேரடி தொடர்பு உள்ளதாக நிருபித்துள்ளது"

(The result of this study by Pelligrini indicated a generally positive correlation between the amount of hair on the person's face and his being perceived as masculine, good looking, dominant, mature, courageous, liberal, non-confirming, older healthy and attractive.)

அமெரிக்க மருத்துவர் Dr சார்லஸ் ஹோமேஸ் (charles holmes)  என்பவர் இப்படிக் கூறுகிறார்,:

"மக்கள் தாடி வளர்க்க ஏன் கஷ்டப்படுகிறார்கள் என்று தெரியவில்லை? தலையில் முடி வளர்க்கும் போது, அதே முடியை முகத்தில் வளர்ப்பதில் என்ன பிரச்சினை உள்ளது என்று தெரிய வில்லை? என்கிறார்.

தலையின் முடி கொட்டிவிட்டால், மிக கஷ்டப்பட்டு வெட்கப்படும் அதே மக்கள், சந்தோசமாக தாடியை ஏன் சவரம் செய்கிறார்கள் என்பது ஆச்சிரியமாக உள்ளது.

நீண்ட தாடி  ஒரு மனிதனின் தடுமல்  சளி கழுத்தை நெருங்குவதை விட்டும்  தடுக்கிறது

 தாடி மார்க்க கட்டளை மட்டுமின்றி, மனிதனுக்கு பயன் அளிக்கக்கூடியதும் ஆகும். முந்தைய அறிவு ஜீவிகள், மருத்துவர்கள் எல்லோரும் தாடி வளர்ப்பவர்களாக இருந்தார்கள். உதாரணம் லூயிஸ் பாஸ்டர், ஆபிரகாம் லின்கன்  உட்பட பலர்.

மேற்சொன்ன முன் நிகழ்வுகள், ஆய்வுகள், அறிக்கைகள் எதுவும் முஸ்லிம்களால் சொல்லப்பட்டதோ அல்லது செய்யப்பட்டதோ அல்ல.

 ஒரு முஸ்லிம் இளைஞன் தாடிவுடன் ஒரு கிறிஸ்தவ நிருவனத்திற்கு  ஒரு நேர்காணலுக்குச் சென்றான். அவன் தாடியை  மழித்தால் வேலை தருவதாக அந்த நிறுவனம் கூறியது. அவன் அதை மறுத்து விட்டு வெளியில் வந்து, அங்கு இருந்த jesus கிறிஸ்து போட்டோவை எடுத்துச் சென்று "இந்த jesus நேர்காணலுக்கு வந்து இருந்தால், அவரிடம் இதே நிபந்தைனையைச் சொல்வீர்களா?" என்று கேட்டு, அவர்களை வாயடைக்க செய்தான். ஒவ்வொரு முஸ்லிமின் மனப்பாங்கும் இப்படித் தான் இருக்க வேண்டும்.

மூட நம்பிக்கை -மருத்துவ உண்மை

"தாடியில் வளரும் பக்டீரியா போன்ற நுண்கிருமிகள் சுகாதாரத்தைக் கெடுக்கும்" என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால் இது மூட  நம்பிக்கை.

உண்மை என்னவென்றால் "தாடியை மழிப்பதால், முகத்தில் உள்ள இயற்கையான செல்கள் நீக்கப்படுவதால், முகப் புற்றுநோய் வரலாம்" என்று அஞ்சப்படுகிறது.

ஒரு  நாளைக்கு குறைந்தது ஐந்து முறை ஒழு செய்யும் போது முகத்தைக் கழுவினால், எங்கிருந்து நுண்கிருமிகள் வரும்? என்பதே அறிவியல் பூர்வமான கேள்வி.

நேர விரயம்

 போஸ்டன் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஹெர்பெர்ட் மேஷ்கோன் (Herbert Mescon) இப்படி கணக்கிடுகிறார்.." ஒரு இளவயதினர் தனது 15 வயதில் முகச்சவரம் செய்ய ஆரம்பித்து தொடர்ந்து சராசரியாக 55 வயது வரை செய்தால், அவர் சராசரியாக 3350 மணிநேரம்  அதாவது 139 நாட்களை சவரம் செய்வதில் செலவழிக்கிறார்."

தாடியின் நன்மைகளில் சில

தாடி மனிதனின் முகத்தை, தீங்குதரும்  இரசாயணம், காற்றில் உள்ள மாசுக்களிடம் இருந்து பாதுகாக்கிறது. இந்த மாசு, மற்றும் இராசயனத்தால், முகத்தின் செல்கள் பாதிக்கப்பட்டு, சுருங்கி, அசிங்கமான தோளாக நாளைடைவில் ஆகிறது.

இதனால் முகச்சுருக்கம், மோசமான தோல், தோல் வயோதிகம் ஆகியவற்றில் இருந்து தாடி பாதுகாக்கிறது.

தாடி  முகத்தில் உள்ள சரும மெழுகு சுரப்பிகள் என்னும் sebaceous gland ஐ பாதுகாத்து, அதில் நோய் தொற்றி, பருக்கள், சலம், புள்ளிகள் வருவதை விட்டும் தடுக்கிறது.

 தாடி முகத்தைச் சற்று வெதுவெதுப்பக வைத்து, கன்னத்தை ஆபத்தில் இருந்து பாதுகாக்கிறது.

 தாடி தொண்டை மற்றும் பல் ஈறுகளின் நோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

 தாடி வைப்பதால் அநேக சுவாச பிரச்சினைகள் தடுக்கப்படுகிறது.

 தாடி ஓரு ஆணின் அடையாளம். தனித்துவம்

ஆய்வுகள் இப்படி கூறுகின்றன :"தடியின் நீளம் மற்றும் அடர்த்திக்கும், அந்த மனிதனின் புதிசாலித்தனதுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது"

தாடி வைப்பதால், மனிதனின் பொன்னான நேரம் மிச்சப்படுகிறது. (மேற்சொன்ன டாக்டர் ஹெர்பெர்ட் மேஷ்கோன் (Herbert Mescon) கணக்குப்படி.

தாடி வைப்பதால், மனிதனின் செலவு மிச்சப்படுகிறது.( சவர blade , ஷேவிங் gel , after save lotion விலை)

இந்தக் கூற்றுக்கள் எல்லாம், இஸ்லாத்தின் சுன்னத்தை நியயபடுத்திட நானோ அல்லது வேறு முஸ்லிமோ கூறியது அல்ல. பெரும்பாலும் கிருஸ்துவ அறிஞர்களாலும், மற்ற மதத்தைச் சார்ந்தவர்கள் நடத்தும் இணைய தளங்களும் கூறுகின்றன.

பிரபல்யமான பதிவுகள்