நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வெள்ளி, டிசம்பர் 30, 2022

புத்தாண்டும், இஸ்லாமும்,

01_01_2023. ஆங்கில புத்தாண்டு யார் கொண்டாடுவது

1-முஸ்லிமா 
2-இந்துவா 
3_கிறிஸ்டினா


சொல்வது எங்கள் கடமை அதை செய்வது
(தீமை) 
மற்றும் செய்யாமல் இருப்பது உங்கள் கடமை
(நன்மை)

وَعَلَيْكُمْ السَّلاَمُ وَرَحْمَةُ الله
 *وَبَرَكَاتُهُ*

*வ அலைக்கும் ஸலாம்*
*வ ரஹ்மத்துல்லாஹி*
*வ பரக்காத்துஹூ*

"""""""""""""""""""""""""""""""""""""

இறைவனின் சாந்தியும்
சமாதானமும் உங்கள்  மீதும்

உங்கள்  குடும்பத்தார்  மீதும்
என்றென்றும்  நிலவட்டுமாக
ஆமீன்
➖➖➖➖🍃🌸

*புத்தாண்டு வாழ்த்து*
*சொல்லாதீர்கள். (?)* 

அன்பிற்கினிய என் இஸ்லாமிய சொந்தங்களே.! 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை.

அறிவிப்பவர் : 
             இப்னு உமர் (ரலி)
              .நூல் : அபூதாவுத் (3512)

மேலும் புத்தாண்டு
கொண்டாட்டம் அறிவுக்கு
மாற்றமான செயலாகவும்
உள்ளது. 

புதிய ஆண்டு துவங்குவதால்
இனிப்பு வழங்கி கொண்டாடும்
அளவிற்கு அதில் என்ன மகிழ்ச்சி அடங்கியிருக்கின்றது?

புதிய ஆண்டு துவங்குவதால் மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டிருக்கின்றது?

ஆண்டின் துவக்கம்
சந்தோஷமாக இருந்தால் அந்த
ஆண்டு முழுவதும்
சந்தோஷமாக இருக்கலாம்
என்ற மூட நம்பிக்கையே இந்த கொண்டாட்டத்திற்கு அடிப்படை.

இஸ்லாம் நமக்கு இரண்டு
நாட்களையே கொண்டாட்டத்திற்குரிய
நாட்களாக ஆக்கியுள்ளது.

தேவையற்ற
கொண்டாட்டங்களை
தடைசெய்கின்றது.

மதீனாவாசிகள் எந்த ஒரு
அடிப்படையும் இன்றி இரண்டு
நாட்களை கொண்டாட்டத்திற்குரிய
நாட்களாக கருதிவந்தனர்.
இதை கைவிட்டுவிட்டு 
நோன்புப் பெருநாள் 
ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய
இரண்டை மட்டுமே பெருநாளாக
ஆக்கிக்கொள்ளுமாறு 
நபி (ஸல்) அவர்கள்
உத்தரவிட்டார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள்
கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் மதினாவிற்கு
வந்தார்கள். 

(மதீனத்து) மக்களுக்கு இரண்டு
நாட்கள் (பெருநாட்களாக)
இருந்தன. அதில் அவர்கள்
விளையாடுவார்கள். 

இந்த இரண்டு நாட்களும்
என்ன? என்று நபி (ஸல்)
கேட்டார்கள். 

அறியாமைக் காலத்தில்
நாங்கள் அந்த இரண்டு
நாட்களிலும் விளையாடுவோம்
என்று மக்கள் கூறினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் "அல்லாஹ்,
அவ்விரண்டையும் விட
சிறந்ததை அவ்விரண்டிற்கும்
பதிலாக உங்களுக்குத்
தந்திருக்கின்றான். 

அவை ஹஜ்ஜுப் பெருநாளும்
நோன்புப் பெருநாளுமாகும்''
என்று கூறினார்கள்.
                 நூல் : அபூதாவுத் (959)

இந்த இரண்டு நாட்களை மட்டும்
முஸ்லிம்களுடைய
கொண்டாட்மான நாட்களாக
ஏற்று நடப்போம்.  

*நம் அனைவரையும் சத்திய*
*இஸ்லாத்தை* *பின்பற்றி நடக்கும்*
*நல்லவர்களுடன்* *அல்லாஹ்*
*சேர்ப்பானாக.* விசாரனையின் அவசியம்

*நாம் புது வருடத்தில் நுழைய இருக்கிறோம்.நம்முடைய ஆயுளில் ஒரு வருடம் முடிந்து விட்டது.இது சந்தோஷமான விஷயமல்ல.மாறாக நாம் கவலை கொள்ள வேண்டிய தருணமாகும்.நாம் எவ்வளவு செலவழித்தாலும் ஒரு வினாடியைக் கூட விலைக்கு வாங்க முடியாது.திரும்ப சம்பாதிக்க முடிகிற பணத்தை இழந்தால் கவலை கொள்ளும் மனிதன் கோடி செலவு செய்தாலும் திரும்ப சம்பாதிக்க முடியாத காலம் கழிந்தவுடன் அதைக் கொண்டாடுகிறான் எனில் இது எவ்வளவு அறிவற்ற செயலாக இருக்க முடியும்.*

*இத்தருணத்தில் ஒரு முஸ்லிமுடைய நிலை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை குர்ஆன்,ஹதீஸ் வழிகாட்டலில் பார்க்கலாம்.*

*அல்லாஹுதஆலா கூறுகிறான்:*

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اتَّقُوا اللّٰهَ وَلْتَـنْظُرْ نَـفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ‌ ۚ وَاتَّقُوا اللّٰهَ‌ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ‏

*ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும்; இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்.*
(அல்குர்ஆன் : 59:18)

*இமாம் இப்னு கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:"ஒவ்வொரும் தன்னை சுய விசாரனை செய்து கொள்வது அவசியமாகும்" என இவ்வசனம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது.*
*அல்லாஹுதஆலா கூறுகிறான்:*
*உங்களில் ஒவ்வொருவரும் நாளை மறுமை நாளுக்காக எதை தயார் செய்து வைத்துள்ளீர்கள்?உங்களை காப்பாற்றும் நல்லறங்களை தயார் செய்துள்ளீர்களா? அல்லது உங்களை அழிக்கும் தீய அமல்களை தயார் செய்துள்ளீர்களா?*
(إغاثة اللهفان 1/152)

*நாம் பல வருடங்களை இவ்வுலகில் கழித்து விட்டோம்!அதிகமான செல்வங்களை சம்பாதித்து விட்டோம்!பல உழைப்புகளை செய்து விட்டோம்!இதில் மறுமைக்காக நாம் எதை தயார் செய்துள்ளோம்?*
*எந்த நாள் வருவதைப் பற்றி அல்குர்ஆனில் பல இடங்களில் எச்சரிக்கை செய்கிறானோ அந்நாளுக்காக நாம் எதை தயார் செய்துள்ளோம்?*

*1)அந்நாளில் நம்முடைய செல்வங்களும் பயனளிக்காது;பிள்ளைகளும் பயனளிக்க மாட்டார்கள்,*

يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَّلَا بَنُوْنَۙ‏
“அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா.”
(அல்குர்ஆன் : 26:88)


*2)அந்நாளில் நம்முடைய பெற்றோரும்,நண்பர்களும் உதவி செய்ய மாட்டார்கள்,*

يُّبَصَّرُوْنَهُمْ‌ؕ يَوَدُّ الْمُجْرِمُ لَوْ يَفْتَدِىْ مِنْ عَذَابِ يَوْمِٮِٕذٍۢ بِبَنِيْهِۙ‏
அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்; தன் மக்களையும்-
(அல்குர்ஆன் : 70:11)

وَ صَاحِبَتِهٖ وَاَخِيْهِۙ‏
தன் மனைவியையும், தன் சகோதரனையும்-
(அல்குர்ஆன் : 70:12)

وَفَصِيْلَتِهِ الَّتِىْ تُــْٔوِيْهِۙ‏
அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்-
(அல்குர்ஆன் : 70:13)

وَمَنْ فِى الْاَرْضِ جَمِيْعًا ۙ ثُمَّ يُنْجِيْهِۙ‏
இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிரியப்படுவான்).
(அல்குர்ஆன் : 70:14)

كَلَّا ؕ اِنَّهَا لَظٰىۙ‏
அவ்வாறு (ஆவது) இல்லை; ஏனெனில் நிச்சயமாக அ(ந்நரகமாவ)து கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகும்.
(அல்குர்ஆன் : 70:15)

*3)அந்நாளில் நாம் இவ்வுலகில் செய்த நல்அமல்கள் மட்டுமே பயனளிக்கும்.அந்த நல்லறங்களைக் கொண்டு மறுமை நாளுக்காக தயாராகி விட்டடோமா என்று ஒவ்வொருவரும் தங்களை விசாரனை செய்து கொள்ள வேண்டும்.*

يَوْمَٮِٕذٍ يَّصْدُرُ النَّاسُ اَشْتَاتًا  ۙ لِّيُرَوْا اَعْمَالَهُمْؕ‏

அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.
(அல்குர்ஆன் : 99:6)

فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗ ؕ‏

எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.
(அல்குர்ஆன் : 99:7)

وَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ

அன்றியும், எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.
(அல்குர்ஆன் : 99:8)

*புத்திசாலியான மனிதர் யார்?*

“எவர் தன்னைக் கொண்டு மரணத்திற்குப் பிறகு உள்ள வாழ்விற்காக அமல் செய்கிறாரோ அவர் தான் புத்திசாலி - எவர் தன் மன இச்சைப்படி வாழ்ந்து, (அல்லாஹ் என்னை மன்னித்து விடுவான் என்று) அல்லாஹ் வின் மீது மேலெண்ணம் கொள்கிறாரோ அவர் அறிவற்றவர்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஷத்தாதிப்னு அவ்ஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதி)

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: பத்து நபர்கள் கொண்ட ஒரு ஜமாஅத்துடன் நான் நபி (ஸல்) அவர்களின் சமூகத்திற்குச் சென்றேன். அன்ஸாரிகளில் ஒருவர் எழுந்து நின்று “அல்லாஹ்வின் தூதரே! மனிதர்களில் மிகவும் அறிவுள்ளவர், பேணுதல் மிக்கவர் யார்?’’ என்று வினவினார். “மரணத்தை மிக அதிகமாக நினைப்பவர், மரணத்திற்கு முன் அதற்குரிய தயாரிப்பை மிக அதிகமாகச் செய்து கொண்டவர், (இவ்வாறு செய்பவர்களே அறிவுடையோர்) இவர்கள் தாம் உலகத்தின் சிறப்பையும் மறுமையின் கண்ணியத்தையும் பெற்றுக் கொண்டவர்கள்’’ என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள்.
(தப்ரானீ, மஜ்மஉஸ் ஸவாயித்)

قال أبو الحسن علي بن أبي طالب - رضي الله عنه – في تعريف التقوى: "هي الخوف من الجليل، والعمل بالتنزيل، والرضا بالقليل، والاستعداد ليوم الرحيل"

(الكلم الطيب)

*அல்லாஹ்வை அஞ்சி நடப்பது,குர்ஆனின் படி அமல் செய்வது,குறைவானதை பொருந்திக் கொள்வது,மறுமை நாளுக்கான தயாரிப்பை செய்து கொள்வதுதான் இறையச்சம் என்று* *ஹஜ்ரத்* 
*அலி இப்னு அபீ தாலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்* *கூறுகிறார்கள்.*

*இப்ராஹீம் இப்னு அத்ஹம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்:*

*கவலைகள் இரண்டு வகை உள்ளது.ஒன்று சாதகமானது,மற்றொன்று பாதகமானது ஆகும்.*

*மறுமையின் மீதுள்ள கவலை சாதகமான கவலையாகும்.*

*உலகத்தின் மீதும் அதனுடைய அலங்காரத்தின் மீதுள்ள கவலை பாதகமானதாகும்.*

(நூல்:அல்பிதாயா வந்நிஹாயா 10/141)

அறிவாளிகளுக்கான சில வழிகாட்டுதல்களை சுஹ்பு இபுறாகீமிலிருந்து  மேற்கோள் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு ஹிப்பான்)

 عَلَى الْعَاقِلِ مَا لَمْ يَكُنْ مَغْلُوبًا عَلَى عَقْلِهِ أَنْ تَكُونَ لَهُ سَاعَاتٌ :
سَاعَةٌ يُنَاجِي فِيهَا رَبَّهُ عَزَّ وَجَلَّ ،
وَسَاعَةً يُحَاسِبُ فِيهَا نَفْسَهُ ،
وَسَاعَةً يُفَكِّرُ فِيهَا فِي صُنْعِ اللَّهِ عَزَّ وَجَلَّ ،
وَسَاعَةً يَخْلُو فِيهَا بِحَاجَتِهِ مِنَ الْمَطْعَمِ وَالْمَشْرَبِ ،
وَعَلَى الْعَاقِلِ أَنْ لا يَكُونَ ظَاعِنًا إِلا لِثَلاثٍ : تَزَوُّدٍ لِمَعَادٍ ، أَوْ مَرَمَّةٍ لِمَعَاشٍ ، أَوْ لَذَّةٍ فِي غَيْرِ مُحَرَّمٍ ،
 وَعَلَى الْعَاقِلِ أَنْ يَكُونَ بَصِيرًا بِزَمَانِهِ مُقْبِلا عَلَى شَأْنِهِ ، حَافِظًا لِلِسَانِهِ ، وَمَنْ حَسَبَ كَلامَهُ مِنْ عَمَلِهِ قَلَّ كَلامُهُ إِلا فِيمَا يَعْنِيهِ "

புத்திசாலி என்பவன் தன் நேரங்களை நான்கு காரியங்களில் மட்டும் செலவு செய்வான்:

ஒன்று:தன் இறைவனுடன் வணக்கங்களைக் கொண்டு உரையாடிக் கொண்டிருப்பான்.

இரண்டாவது:தன்னை சுய விசாரனையில் உட்படுத்திக் கொண்டிருப்பான்.

மூன்றாவது:தன் ரப்புடைய படைப்பினங்களை சிந்திப்பதில் தன் நேரத்தை செலவழிப்பான்.

நான்காவது:தன் சுய தேவைகளில் ஈடுபட்டிருப்பான்.

மறுமைக்கான தயாரிப்பு,வாழ்வாதாரத்திற்காக,ஹராமாக்கப்படாத ஆகுமாக்கப்பட்ட காரியங்கள் ஆகிய மூன்று விஷயங்களுக்காக தன் நேரங்களை செலவு செய்பவனே அறிவாளி ஆவான்.

மேலும் அறிவாளி என்பவன் சமகால அறிவை கொண்டிருப்பான்.தன் நாவை பேணிப் பாதுகாப்பான்.எவர் தன் நாவை வீண் விஷயங்களை பேசுவதை விட்டும் தடுத்து கொள்கிறாரோ அவருக்கு கற்றதின் படி செயலாற்றுவது எளிதாகி விடுகிறது.

*சுய விசாரனையின் அவசியத்தைப் பற்றி நம் முன்னோர்களின் முத்தான சொற்கள்*

*ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கூற்று:*

*மறுமையில் விசாரனை செய்யப்படுவதற்கு முன்பாக உங்களை நீங்களே இவ்வுலகில் சுயவிசாரனை செய்து கொள்ளுங்கள்.மறுமையில் அமல்களை எடை போடப்படுவதற்கு முன்பாக இவ்வுலகில் நீங்களே உங்கள் அமல்களை எடை போட்டுக் கொள்ளுங்கள்.இவ்வுலகில் நீங்கள் செய்யும் சுய விசாரனை நிச்சயமாக அது நாளை உங்களின் மறுமை விசாரனையை எளிதாக்கும்.*
(اغاثة اللهفان 1/145)

*இமாம் ஹஸன் பஸரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:*

*முஃமினான மனிதன் தன்னை சுய விசாரனையில் உட்படுத்தி கொண்டே இருப்பான்.அதாவது,கற்றதின் படி எதை செயல்படுத்தியுள்ளேனா?உணவிலும்,குடிப்பலும் ஹராமை விட்டும்,வீண் விரயத்தை விட்டும் தவிர்ந்துள்ளேனா?என தன்னை விசாரனை செய்து கொண்டே இருப்பார்.பாவியான மனிதன் எதையும் பொருட்படுத்தாமல் நாட்களை கடந்து கொண்டிருப்பான்!*
(اغاثة الهفان 1/145)

*இமாம் மாவுரிதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:சுய விசாரனை என்பது, மனிதன் பகலில் தான் செய்த காரியங்களை அன்றைய இரவில் தனக்குள் ஆய்வு செய்வதாகும்.அவ்வாறு செய்த காரியங்கள் நல்லதாக இருந்தால் அதை தொடர்ந்து செயலாற்ற வேண்டும்.அதே சமயம் தீமையாக இருந்தால்  அதை தவிர்ந்து கொள்ள வேண்டும்.வரும் காலங்களில் அவ்வாறு செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும்.*
(ادب الدين والدنيا 360-361)

*இப்ராஹீமுத் தைமி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:நான் என்னுடைய மனதை சுவர்க்கத்தில் இருப்பது போல காட்சிப் படுத்தினேன்.சுவர்க்கத்தின் கனிகளிலிருந்து உண்பது போலவும்,சுவர்க்க ஆறுகளிலிருந்து தண்ணீர் அருந்துவது போலவும்,சுவர்க்க கன்னிகளுடன் முஆனகா செய்வது போலவும் காட்சி படுத்தினேன்.பின்பு நரகத்தில் இருப்பது போல என்னுடைய மனதை காட்சிப் படுத்தினேன்.ஜக்கூம் என்னும் கள்ளி மரத்திலிருந்து சாப்பிடுவது போலவும்,துர்நாற்றமுள்ள சீழ் நீரை குடிப்பது போலவும்,நரகத்தின் சங்கிலிகளையும்,அரிகண்டங்களையும் கொண்டு விலங்கிடப்பட்டுள்ளதாகவும் காட்சிப் படுத்தினேன்.பின்பு என் மனதுக்குள் இவ்வாறு கூறிக் கொண்டேன்:மனமே இவ்விரண்டில் நீ எதை விரும்புகிறாய்?அம்மனம் உலகத்திற்கு சென்று நல்அமல் செய்ய வேண்டும் என விரும்பியது.அப்பொழுது நான் என் மனதிற்கு இவ்வாறு அறிவுரை கூறினேன்.அவ்வாறெனில் நீ ஆசைப்படும் உலகத்தில் இப்பொழுது இருக்கிறாய்,எனவே நல்அமல்களில் உன்னை ஈடுபடுத்திக் கொள்.*
(محاسبة النفس لابن ابي الدنيا ص:26)

இமாம் கஜ்ஜாலி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:
அடியார்களில் அகப்பார்வையுடையோர் தன்னை அனைத்து நேரங்களிலும் இறைவன் கண்காணிக்கிறான் என்பதை அறிந்திருப்பார்கள்.தங்களிடம் ஏற்பட்ட தவறுகளை சுய விசாரனையைக் கொண்டு சரிசெய்வார்கள்.மறுமையில் விசாரனை செய்யப்படுவதற்கு முன்பாக எவர் இவ்வுலகில் தன்னை சுய விசாரனையில் உட்படுத்திக் கொண்டாரோ அவரின் கேள்வி கணக்கு எளிதாக்கப்படும்.மறுமையின் கேள்விகளுக்கு பதில்கள் தயாராகிவிடும்.எவர் சுய விசாரனை செய்து கொள்ள
வில்லையோ அவருக்கு நிரந்தரமான நஷ்டம் உண்டாகி விடும்.
(احياء علوم الدين للغزالي 4/418)

*வாழ்க்ககையில் ஒவ்வொரு வினாடிகளும் விலை மதிக்க முடியாதவை.காலத்தை எவ்வளவு விலை கொடுத்தும் வாங்க முடியாது.இந்த வினாடிகளை வீணடிப்பது அல்லது வீணான காரியங்களில் ஈடுபடுத்துவது பெரும் அழிவிற்கு காரணமாகி விடும்.இதனை மக்களில் அறிவற்றவர்கள்,மடையர்கள் தவிர மற்ற அனைவரும் விளங்கிக் கொள்வார்கள்.இந்த உண்மையை மனிதன் இங்கு விளங்கமாட்டான்.அமல்கள் எடுத்துக் காட்டப்படும் மறுமை நாளில் உலகத்தினுடைய ஒவ்வொரு வினாடியின் அருமை மனிதனுக்கு விளங்கும்.*

*மரணித்தப் பின் மறுமையில் மனிதன் எதையெல்லாம் ஆசை கொள்வான் என அல்குர்ஆன் நமக்கு பட்டியலிடுகிறது.*

*மரணத்திற்குப் பின் மனிதனின் ஆசைகள்*

*1)அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!*

اِنَّاۤ اَنْذَرْنٰـكُمْ عَذَابًا قَرِيْبًا ۖۚ  يَّوْمَ يَنْظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدٰهُ وَيَقُوْلُ الْـكٰفِرُ يٰلَيْتَنِىْ كُنْتُ تُرٰبًا

நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இரு கைகளும் செய்து முற்படுத்தியவற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் “அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!” என்று (பிரலாபித்துக்) கூறுவான்.
(அல்குர்ஆன் : 78:40)

*2)நல்அமல்கள் செய்திருக்கலாமே!*

يَقُوْلُ يٰلَيْتَنِىْ قَدَّمْتُ لِحَـيَاتِى‌ۚ‏

“என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!” என்று அப்போது மனிதன் கூறுவான்.
(அல்குர்ஆன் : 89:24)

*3)என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!*

وَاَمَّا مَنْ اُوْتِىَ كِتٰبَهٗ بِشِمَالِهٖ  ۙ فَيَقُوْلُ يٰلَيْتَنِىْ لَمْ اُوْتَ كِتٰبِيَهْ‌ۚ‏

ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்: “என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!
(அல்குர்ஆன் : 69:25)

*4)தீய நட்பை தவிர்ந்து இருக்கலாமே!*

يٰوَيْلَتٰى لَيْتَنِىْ لَمْ اَتَّخِذْ فُلَانًا خَلِيْلًا‏

“எனக்கு வந்த கேடே! (என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக் கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா?”
(அல்குர்ஆன் : 25:28)

*5)அல்லாஹ்,ரஸுலுக்கு கட்டுப்பட்டு நடந்நிருக்கலாமே!*

يَوْمَ تُقَلَّبُ وُجُوْهُهُمْ فِى النَّارِ يَقُوْلُوْنَ يٰلَيْتَـنَاۤ اَطَعْنَا اللّٰهَ وَاَطَعْنَا الرَّسُوْلَا‏

நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் கட்டுப்பட்டிருக்க வேண்டுமே!” என்று கூறுவார்கள்.
(அல்குர்ஆன் : 33:66)

*6)நல்வழியை தேர்ந்தெடுத்து இருக்கலாமே!*

وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلٰى يَدَيْهِ يَقُوْلُ يٰلَيْتَنِى اتَّخَذْتُ مَعَ الرَّسُوْلِ سَبِيْلًا‏

அந்நாளில் அநியாயக்காரன் தன்னிருகைகளையும் கடித்துக்கொண்டு: “அத்தூதருடன் நானும் - (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா?” எனக் கூறுவான்.
(அல்குர்ஆன் : 25:27)

*7)முஃமீன்களாக இருந்திருக்கலாமே!*

وَلَوْ تَرٰٓى اِذْ وُقِفُوْا عَلَى النَّارِ فَقَالُوْا يٰلَيْتَنَا نُرَدُّ وَلَا نُكَذِّبَ بِاٰيٰتِ رَبِّنَا وَنَكُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ‏

நரக நெருப்பின்முன் அவர்கள் நிறுத்தப்படும்போது (நபியே!) நீர் அவர்களைப் பார்ப்பீராயின், “எங்கள் கேடே! நாங்கள் திரும்ப (உலகத்திற்கு) அனுப்பட்டால் (நலமாக இருக்குமே) அப்பொழுது நாங்கள் எங்களின் இறைவனின்  அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க மாட்டோம்; நாங்கள் முஃமின்களாக இருப்போம்” எனக் கூறுவதைக் காண்பீர்.
(அல்குர்ஆன் : 6:27)

*எனவே காலத்தின் அருமையை உணர்ந்து தன்னை சுய விசாரனைக்கு உட்படுத்தி நல்அமல்கள் புரிய  அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக!*

*இரண்டு வகையான சுய விசாரனைகள்:*

*1)செய்வதற்கு முன்பாக..*
*2)செய்த பின்பாக..*

*1)செய்வதற்கு முன்பாக..*

*இதில் மூன்று விஷயங்களை கவனிக்க வேண்டும்.*

*1)ஒரு செயலை செய்வதற்கு முன்பாக இச்செயல் ஷரீஅத்திற்கு உட்பட்டதா அல்லது ஷரீஅத்திற்கு அப்பாற்பட்டதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.பின்பு அச்செயல் ஷரீஅத்திற்கு உட்பட்டதாக இருந்தால் செய்ய வேண்டும்.இல்லையெனில் விட்டு விட வேண்டும்.*

*அல்குர்ஆன் இதைப் பற்றி இவ்வாறு இயம்புகிறது:*

இன்னும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏதேனும் ஒரு காரியத்தை முடிவு செய்துவிட்டால், நம்பிக்கையாளனான எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுயவிருப்பம் கொள்வதற்கு உரிமையில்லை; எவர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவர் திட்டமாக பகிரங்கமான வழிகேடாக வழிகெட்டு விட்டார்.
(அல்அஹ்ஸாப்:36)

*2)செய்வது சிறந்ததா?அல்லது விடுவது சிறந்ததா? என்பதை பார்க்க வேண்டும்.இது கால சூழல்கள் மற்றும் மனிதர்களை கவனித்து மாறுபடும்.எனவே எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும்,எதை விட வேண்டும் என்பது காலத்தையும்,மனிதர்களையும் பொருத்ததாகும்.*

*3)ஒரு செயலை அல்லாஹ்விற்காக செய்வதாக இருந்தால் செயல்பட வேண்டும்.எனினும் அதில் பெயரும்,புகழும்,பொருளும் நோக்கமாக இருந்தால் விட்டு விட வேண்டும்.*

*செயல்களில் மனத்தூய்மையை வலியுறுத்தி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இவ்வாறு கூறினார்கள்:*

அனைத்து அமல்களுடைய கூலிகளும் எண்ணத்தின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படும், மனிதன் எதை எண்ணுகிறானோ அது தான் அவனுக்குக் கிடைக்கும். எனவே, எவர் அல்லாஹுதஆலாவுக்காகவும், அவனது ரஸூலுக்காகவும் ஹிஜ்ரத் (குடிபெயர்ந்தாரோ) செய்தாரோ, அல்லாஹுதஆலா, அவனது ரஸூலின் திருப்தியைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லாமல் (குடிபெயர்ந்தாரோ) ஹிஜ்ரத் செய்தாரோ, அந்த ஹிஜ்ரத்தின் நன்மை அவருக்குக் கிடைக்கும். எவர் உலக நோக்கத்திற்காகவோ, பெண்ணை மணமுடிக்கவோ, ஹிஜ்ரத் செய்தாரோ, (அவரது ஹிஜ்ரத் அல்லாஹுதஆலா, அவனது ரஸூலுக்காக இருக்காது, மேலும்) வேறு எந்த நோக்கத்திற்காக ஹிஜ்ரத் செய்தாரோ (அல்லாஹுதஆலாவிடத்திலும்) அவரது ஹிஜ்ரத் அந்த நோக்கத்திற்கே என்று முடிவு செய்யப்படும்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உமரிப்னு கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)

*2)ஒரு செயலை செய்த பின் சுய விசாரனையை மேற்கொள்வது.*

*தான் செய்த அமல் அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட்டதா?இல்லையா என சுய விசாரனை செய்து கொள்வதாகும்.பொதுவாக அமல்கள் ஏற்கப்பட்ட நான்கு விஷயங்கள் முக்கியமானவையாகும்.*

*ஒன்று:மனத்தூய்மையுடன் அந்த அமலை நிறைவேற்றியிருக்க வேண்டும்.*

செயல்களில், அல்லாஹ்வுக்காக வேண்டி மட்டும் செய்யப்பட்ட செயலையும் அல்லாஹுதஆலாவை திருப்திபடுத்த செய்யப்படும் செயலை மட்டுமே அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா பாஹிலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நஸாயி)

*இரண்டாவது:நபியவர்கள் காட்டித்தந்த வழிமுறைப் படி அந்த அமலை நிறைவேற்றியிருக்க வேண்டும்.*

(மேலும் நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதனை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்; எதனை விட்டும் உங்களை அவர் தடுத்தாரோ (அதனை விட்டும்) விலகிக் கொள்ளுங்கள்.
(அல்ஹஷ்ர்:7)

*மூன்றாவது:இஹ்ஸான் என்ற அழகிய முறையில் அந்த அமலை நிறைவேற்றியிருக்க வேண்டும்.*

مَا الْإِحْسَانُ؟ قَالَ : (( أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ )

இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்கா விட்டாலும் நிச்சயமாக அவன் உம்மைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான்.
(புகாரி)

*நான்காவது:அமல் செய்த பின் அதில் ஏதும் குறை ஏற்பட்டு ஏற்கப்படாமல் போய்விடுமோ என்று பயப்பட வேண்டும்.*

ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், நான் நபி (ஸல்) அவர்களிடம், (وَالَّذِيْنَ يُؤْتُوْنَ مآ آتَوْا وَقُلُوْبُهُمْ وَجِلَةٌ) தானம் கொடுத்ததின் பேரில் அவர்களின் உள்ளம் அஞ்சிக்கொண்டிருக்கும் நிலையில் கொடுப்பவர்கள் என்ற இந்த ஆயத்தின் கருத்து, மது அருந்துபவர்கள், திருடுபவர்களா?'' (பாவங்களில் ஈடுபட்டதால் அவர்கள் பயப்படுகிறார்களா?) என நான் கேட்டேன். சித்தீக்கின் மகளே, இதுவல்ல கருத்து, ஆயத்தின் கருத்து, அவர்கள் நோன்புவைத்து, தொழுது, தானதர்மங்கள் செய்பவர்கள். ஆனால், அவர்கள் (ஏதேனுமொரு தீவினையின் காரணமாக) தங்களது நல்ல அமல்கள் ஏற்கப்படாமல் போய்விடுமோ என்பதை பயப்படக் கூடியவர்கள், இவர்கள் தாம் விரைவாக நன்மைகளைச் சேர்க்கின்றவர்கள், இவர்கள் தாம் அந்த நன்மைகளின் பக்கம் முன்னேறுபவர்கள்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
(திர்மிதி)

*எவ்விஷயங்களை தனக்குள் சுய விசாரனை செய்வது அவசியமாகும்?*

*முதலாவது:நாவைப் பேணும் விஷயத்தில் ஒவ்வொருவரும் தன்னை சுய விசாரனை செய்வது அவசியமாகும்.*

*நாம் சொல்லும் சொல்லுக்கு மிகப் பெரிய பிரதிபலிப்பு இருப்பது போன்று அதன் மூலம் பெரும் ஆபத்தும் உள்ளது.நம்முடைய பல சொற்கள் இம்மை,மறுமை வெற்றிக்கு காரணமாக ஆகிவிடுகிறது.அதேபோன்று,நம்முடைய பல சொற்கள் இம்மை,மறுமையின் நஷ்டத்திற்கும் காரணமாகி விடுகிறது.*

*எனவேதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:*

ஓர் அடியான் அல்லாஹுதஆலாவின் திருப்திக்குக் காரணமான ஒரு வார்த்தையைப் பேசிவிடுகிறான், அதை அவன் பெரிதாகக் கருதுவதில்லை. ஆனால், அதன் காரணமாக அல்லாஹுதஆலா அவருடைய பதவியை உயர்த்திவிடுகிறான். மேலும், ஓர் அடியான் அல்லாஹுதஆலாவின் அதிருப்திக்குரிய ஒரு சொல்லைச், சொல்லிவிடுகிறான், அதை அவன் பொருட்படுத்துவதும் இல்லை. ஆனால், இதன் காரணமாக நரகத்தில் விழுந்துவிடுகிறான்.
(புகாரி)

*இந்த உம்மத்தின் முன்னோடிகள் தங்களின் சொற்களின் மீது எப்பொழுதும் முன்னெச்சரிக்கையுடன் இருந்து வந்தார்கள்.நாம் சொல்லும் ஒவ்வொரு சொற்களும் மலக்குமார்களால் எழுதப்படுகிறது என்பதை எப்பொழுதும் நினைவில் கொண்டிருந்தார்கள்.*

اِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيٰنِ عَنِ الْيَمِيْنِ وَعَنِ الشِّمَالِ قَعِيْدٌ‏

(மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது-
(அல்குர்ஆன் : 50:17)

مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَيْهِ رَقِيْبٌ عَتِيْدٌ‏

கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை.
(அல்குர்ஆன் : 50:18)

*ரபீஃ இப்னு ஹுஸைம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை தான் பேசிய அனைத்து விஷயங்களையும் எழுதிக் கொள்வார்கள்.அதில் நன்மையான விஷயங்கள் இருந்தால் அல்லாஹ்வை புகழ்வார்கள்.தீமை இருந்தால் பாவமன்னிப்புத் தேடுவார்கள்.*

*அப்துல்லாஹ் இப்னு அபூ ஜகரிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:*

*மௌனத்தை கடைபிடிக்க இருபது வருடமாக பயிற்சி எடுக்கிறேன்.நாளை மறுமையில் பேசும் வார்த்தைக்கு பதில் கூற வேண்டும் எனக் கூறியவனாக பயிற்சி எடுக்கிறேன்.எனினும் போதிய அளவு மௌனத்தை என்னால் கடைபிடிக்க முடியவில்லை.*

*மேலும் தங்கள் சகோதரர்களிடம் அபூ ஜகரிய்யா இவ்வாறு கூறுவார்கள்:நீங்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் உங்களுக்கு நான் உதவியாக இருப்பேன்.மக்களைப் பற்றி பேசுவதாக இருந்தால் என்னை நீங்கள் விட்டு விடுங்கள்.*

*அப்துல்லாஹ் இப்னு வஹப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:நான் ஒரு மனிதரைப் பற்றி புறம் பேசினால் ஒரு நாள் நோன்பிருப்பதாக நேர்ச்சை செய்து கொண்டேன்.இவ்வாறு செய்வது எனக்கு பழக்கமாகிவிட்டது.எனினும் என்னால் புறம் பேசுவதை நிறுத்த முடியவில்லை.பின்பு நான் ஒரு மனிதரைப் பற்றி புறம் பேசினால் ஒரு திர்ஹம் சதகா செய்து வந்தேன்.திர்ஹத்தின் மீதுள்ள அன்பால் புறம்பேசுவதை விட்டு விட்டேன்.*

*இரண்டாவதாக, தொழுகையைப் பற்றி ஒவ்வொருவரும் சுய விசாரனை செய்து கொள்வது அவசியமாகும்.*

*இன்று தொழுகை விஷயத்தில் அதிகமானோர் பொடுபோக்காக உள்ளனர்.அதை வீணடிக்கிறார்கள்.அல்லாஹு தஆலா தொழுகையை அதனுடைய நேரங்களில் நிறைவேற்றுமாறு நமக்கு உத்தரவிடுகிறான்.*

*(ஐந்து நேரத்) தொழுகைகளையும் (குறிப்பாக அஸர் தொழுகையாகிய) நடுத்தொழுகையையும் (விடாமல் தொழுது) பேணிக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவர்களாக நில்லுங்கள்.*
(அல்பகரா:238)

*தொழுகையை விடுவது, மனிதனை குப்ரு (இறை நிராகரிப்பு), ஷிர்க் (இறைவனுக்கு இணை வைத்தல்) வரை சேர்த்துவிடுகிறது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஜாபிரிப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.*
(முஸ்லிம்)

*இந்த உம்மத்தின் முன்னோடிகள் தொழுகையை மிகப் பேணுதலாக கடைபிடித்துள்ளார்கள்.ஜமாஅத்துடைய தொழுகையை அவர்கள் தவற விட மாட்டார்கள்.தொழுைகையைப் பற்றி தங்களுகமகுள் சுய விசாரனையில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்கள்.*

*உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஒரு முறை அஸர் தொழுகையின் ஜமாஅத் தவறி விட்டது.அதற்கு பரிகாரமாக பன்மதிப்புள்ள ஒரு பூமியை சதகா செய்து விட்டார்கள்.*

*ஹஜ்ரத் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இஷாவுடைய ஜமாஅத் தவறி விட்டால் அதற்கு பரிகாரமாக  அந்த முழு இரவையும் வணக்கத்தில் கழிப்பார்கள்.*

*ஹாதமுல் அஸம் ரஹிமஹுல்லாஹ் அவர்களுக்கு ஒரு நாள் அஸர் தொழுகையின் ஜமாஅத் தவறிப்போய் விட்டது.அதை வீட்டில் நி றவேற்றி விட்டு ஜமாஅத் தவறியதை நினைத்து அழுது கொண்டிருந்தார்கள்.அவரின் தோழர்கள் அவரை ஆறுதல் படுத்தினார்கள்.மேலும் இவ்வாறு கூறினார்கள்:என் பிள்ளைகளில் ஒருவர் மரணமாகியிருந்தால் ஊரில் உள்ள அனைவரும் ஆறுதல் கூற வந்திருப்பார்கள்.எனினும் தொழுகை தவறிப் போனதிற்கு ஆறுதல்  கூற சிலர் மட்டும் வந்துள்ளீர்கள்.அல்லாஹ்வின் மீது ஆணையாக!என் பிள்ளைகள் அனைவரும் மரணமடைவது தொழுகையின் ஜமாஅத் தவறுவதை விட இலேசானதாகும்.*

*ஒருவருக்கு ஒரு நேரத் தொழுகை தவறிவிடுவது, அவரது வீட்டார், பொருட்கள், செல்வங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டது போலாகும்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் நவ்ஃபல் இப்னு முஆவியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.*
(இப்னு ஹிப்பான்)


*3)மூன்றாவதாக நேரத்தைப் பற்றிய சுய விசாரனை அவசியமாகும்.*

இன்று நேரங்களை வீணடிப்பது சர்வ சாதரணமாகி விட்டது.பொருள் விரயத்தை விட நேர விரயம் மிக மோசமானது.ஆனால் அதை இன்று எவரும் உணருவதில்லை.

நாம் வணக்கங்களில் கழிக்க வேண்டிய பல நேரங்களை இன்று வீண்விஷயங்களில் கழித்து கொண்டிருக்கிறோம்.

இரண்டு அருட்கொடைகளை மக்கள் முழுமையாக பயன்படுத்துவதில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். அவற்றில் ஒன்று ஓய்வு நேரம், மற்றது ஆரோக்கியம்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி), (நூல்: புகாரி.)

இறுதித்தீர்ப்பு நாளில் ஐந்து கேள்விகளுக்கு விடை தராதவரை மனிதன் இறைவனின் நீதிமன்றத்திலிருந்து அகன்று செல்லவே முடியாது. அதில் இரண்டு நேரத்தைப் பற்றியது அவை: 1) உன் ஆயுளை எவ்வாறு செலவிட்டாய், 2) உன் இளமையை எவ்வாறு கழித்தாய். என்பதாகும். (ஆதாரம்: திர்மிதி)

இந்த உம்மத்தின் முன்னோடிகள் நேரத்தின் அருமையை உணர்ந்தார்கள்.தங்கத்தை விட நேரத்தை வில மதிப்புடையதாக கருதினார்கள்.எனவே தான் வணக்க வழிபாடுகளில் தங்களின் ஒவ்வொரு நேரத்தையும் செலவழித்தார்கள்.அவ்வாறு வணக்கத்தில் ஈடுபடாத நேரங்களை பற்றி தங்களுக்குள் சுய விசாரனையையும் மேற்கொண்டார்கள்.

ஹஜ்ரத் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இவ்வாறு கூறுவார்கள்:என்னுடைய ஆயுள் நெருங்கிக் கொண்டு இருக்கிறது.எனினும் என்னுடைய அமலில் முன்னேற்றம் இல்லையே!நான் இவ்விஷயத்தில் மிக அதிகமாக கைசேதம் கொள்கிறேன்.

இமாம் ஷாஃபியி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுவார்கள்:
நேரத்தை நீ சரியான வழியில் செலவு செய்யவில்லையானால் அது உன்னை தவறான வழியில் பயன்படுத்திக் கொள்ளும்.

நாம் நம்முடைய நேரங்களை வணக்கங்களில் ஈடுபடுத்த வில்லையானால் தானாக அந்நேரங்கள் பாவங்களிலும்,வீணான காரியங்களிலும் செலவாகி விடும்.

இமாம் கஜ்ஜாலி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுவார்கள்:

உன்னுடைய நேரங்கள் தான் உன்னுடைய வாழ்க்கையாகும்.உன்னுடைய நேரங்கள்தான் உன்னுடைய முதலீடாகும்.அதுதான் உன் வியாபாரமாகும்.அந்த நேரங்களைக் கொண்டு நீ சுவர்க்கத்தைப் பெற முடியும்.உன்னுடைய ஒவ்வொரு வினாடியும் விலை மதிக்க முடியாத ரத்தினம் ஆகும்.காலத்திற்கு  எதையும் பகரம் எனக் கூற இயலாது.அது தவறினால் திரும்ப வரவும் செய்யாது.
(قيمة الزمن عند العلماء)

*காலத்தின் அருமை*

ஒரு வருடத்தின் அருமையை தெரிய வேண்டுமெனில்  தேர்வில் தோல்வியுற்றவனை கேட்டுப் பாருங்கள்.

ஒரு மாதத்தின் அருமை தெரியவேண்டுமெனில் சம்பளம் கிடைக்காதவனிடம் கேட்டுப் பாருங்கள்.

ஒரு வாரத்தின் அருமையை தெரிய வேண்டுமெனில் மருத்துமனையில் நுழைந்தவரிடம் கேட்டுப் பாருங்கள்.

ஒரு நாளின் அருமையை தெரிய வேண்டுமெனில் நோன்பு வைத்திருப்பவரிடம் கேட்டுப் பாருங்கள்.

ஒரு நிமிடத்தின் அருமையை தெரிய வேண்டுமெனில்  பிறரை எதிர்பார்த்து இருப்பவரிடம் கேட்டுப் பாருங்கள்.

ஒரு வினாடியின் அருமையை தெரிய வேண்டுமெனில் இரயிலை தவற விட்டவரிடம் கேட்டுப் பாருங்கள்.

புதன், டிசம்பர் 28, 2022

நிக்காஹ் துஆ ,

بارك الله لك وبارك عليك وجمع بينكما في خير

பாரகல்லாஹு ல(க்)க வபாரக அலை(க்)க வஜமஅ பைன(க்)குமா ஃபீ கைர். நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத்

பொருள்: அல்லாஹ் உமக்கு அகத்திலும் புறத்திலும் அருள்புரிவானாக! உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக!

ஞாயிறு, டிசம்பர் 25, 2022

செயற்க்கை கர்பப்பை,

*👁️‍🗨️செயற்க்கை கர்பப்பை மூலம் குழந்தைகள் என பரவும் வீடியோ*


*👁️‍🗨️உண்மையா*👇


http://www.adminmedia.in/2022/12/is-ectolife-artificial-womb-real.html

சனி, டிசம்பர் 24, 2022

நபி (ஸல்)அவர்களுக்கு விஷம்கொடுத்த யூதப்பெண்

அண்ணல்நபி (ஸல்)அவர்களுக்கு விஷம்கொடுத்த யூதப்பெண்

அகிலத்தின்பேரொளி
*அண்ணல்நபி* 
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு

"ஒரு யூதப்பெண்
விஷம் கலந்த
ஒரு ஆட்டை 
அன்பளிப்பாக
கொடுத்தாள்."

"அண்ணல்
நபியவர்கள்
அந்த ஆட்டின்
இறைச்சியைசிறிது 
சாப்பிட்டார்கள்."

"அதில் விஷம்
கலக்கப்பட்டு
இருப்பதைதெரிந்து கொண்டார்கள்."

உடனே "ஸஹாபாக்களைப் பார்த்து இதைச் சாப்பிடாதீர்கள்"
என தடுத்தார்கள். 

ஆனால்
*"பிஷ்ர்இப்னுபர்ரா* 
(ரலி) அவர்கள்
என்ற ஸஹாபி
இறைச்சியை முழுமையாக சாப்பிட்டதால்
இறந்துபோய் விட்டார்கள்.!"

பின்பு "அந்த 
யூதப்பெண்ணை அழைத்து
ஏன் இவ்வாறு
செய்தாய்.?"எனக்
கேட்டார்கள். 

"நான் உங்களை கொல்வதற்கு 
விரும்பினேன்."
என்று திமிராக பதில்சொன்னாள். 

உடனே
கொதித்து போன
ஸஹாபாக்கள்
அவளைக் கொல்வதற்கு
அனுமதி கேட்டார்கள்."

*"கருணைநபி* 
(ஸல்) அவர்கள்
வேண்டாம் என
தடுத்து அவளுக்கு மன்னிப்பு அளித்து விட்டார்கள்.!"

(ஆனால் பிஷ்ர்இப்னு
பர்ரா (ரலி) அவர்களின் குடும்பத்தினர் அவளை மன்னிக்க மாட்டோம் அவளுக்கு தண்டனை தந்தேஆகவேண்டும்
என்றுசொன்னதால்
அவளுக்குமரணதண்
டனைவிதிக்கப்பட்டது.) 

*அண்ணல்நபி* 
(ஸல்) அவர்கள்
விஷம்கலக்கப்பட்ட
இறைச்சியை 
சாப்பிட்டதினால்.."

"அவர்களின் 
உள்நாக்கின் 
சதையில் 
விஷத்தின் அடையாளத்தை பார்த்தேன். என
அனஸ் இப்னு மாலிக்
(ரலி)கூறுகிறார்கள். 
நூல்:முஸ்லிம்=4408

*அண்ணல்நபி*
*ஸல்லல்லாஹு* அலைஹிவஸல்லம்
அவர்களின்
இறுதிநேரம்... 

ஆயிஷாவே! 
கைபரில் போரில் 
ஒரு யூதப்பெண் 
விஷம் கலந்த 
இறைச்சியை 
கொடுத்தாள்
அல்லவா..."

"அதை 
சாப்பிட்டதால்
தொடர்ந்துஅந்த 
வேதனையை அனுபவித்து வருகிறேன்."

"அந்தவிஷத்தின்
காரணத்தால் 
எனது இதய 
இரத்தக்குழாய் அறுந்துபோவதை
நான்உணர்கிறேன்.!"
என்றார்கள். 
நூல்:புகாரி-4428

வியாழன், டிசம்பர் 22, 2022

நபி ஸல் அவர்களை கேவலப்படுத்தினால்,

அண்ணல்நபி (ஸல்) அவர்களுக்கு அபூஜஹ்ல்செய்த கொடுமைகளும் அவன்பட்ட கேவலங்களும்!* 

ஹஜ்ஜுடைய
காலத்தில்அபூலஹப்
*அண்ணல்நபி*
(ஸல்)அவர்கள் பின்னாலேயேசென்று
இவர் சொல்வதை கேட்காதீர்கள் இவர்
பொய்யர்."என்பான். 

மேலும்"இரத்தம் 
சொட்டும் வரை 
பொடிக்கற்களால்
நபியவர்களின்
பிடரியில்  அடிப்பான்.
நூல்:கன்ஜுல்உம்மா

"நபியவர்கள்
தொழுகையில் 
ஓதும்திருக்குர்ஆன் 
வசனங்களை
ஒழிந்து நின்று
கேட்பான்.!"

ஆனால்"நம்பிக்கை
கொள்ளமாட்டான்.
பிறரையும் ஈமான்
கொள்ளவிடாமல்
தடுப்பான்."

எனவே அல்லாஹ்
அவனைத்திட்டி வசனங்களை இறக்கினான். 

அவன் 
அல்லாஹுடைய
வசனங்களைஉண்மை
யாக்கவுமில்லை தொழவுமில்லை
கர்வம் கொண்டு
வீட்டுக்குசென்று விட்டான். (75:31, 33) 

*"அண்ணல்நபி* 
(ஸல்) அவர்கள்
மிஃராஜுக்கு சென்றுவந்த பின்
தொழுகை கடமையாக்கப்பட்டது!"

எனவே
"அண்ணலார் ஹரம்
ஷரீஃபுக்குள்தொழ
ஆரம்பித்தார்கள்
இதைப் பார்த்த
அபூஜஹ்ல்
கோபத்துடன்..."

"முஹம்மதே! 
இனிமேல் இங்கு தொழுவதை நான் 
பார்த்தால் உம் கழுத்தைகாலால்
மிதித்துநசுக்கி விடுவேன்.!"என 
சத்தமிட்டான்.
(நவூதுபில்லாஹ்) 

அல்லாஹுதஆலா
குர்ஆன்வசனத்தை இறக்கினான். 
ارئت الذي ينهى 
عبدا اذا صلى

"நபியே!ஓர்அடியார் 
தொழும் போது
அதைத்தடுக்கின்ற
ஒருவனைப்பார்த்தீரா?"
(96:9, 10)

மற்றொரு நாள்
*"அண்ணல்நபி*
(ஸல்) அவர்கள்
ஹரம்ஷரீஃபுக்குள்
தொழுவதைப்பார்த்த
அபூஜஹ்ல்
கோபத்துடன்வந்து.."

"முஹம்மதே! 
இங்குதொழக்கூடாது என்று சொல்லியும்
மீறிதொழுகிறீரா?" 
என சொன்னதும்

*"அண்ணல்நபி* 
(ஸல்) அவர்கள்
என்ன திமிறாக
பேசுகிறாய்..?"என
பதிலடி கொடுத்து
அதட்டினார்கள்."

உடனே "அபூலஹப்
மிரண்டு போய்
என்ன..என்னை 
மிரட்டுகிறீரா?நான்
யார் தெரியுமா? 
எனக்கு பின்னால் ஒருபெரும் கூட்டமே இருக்கிறது.!"என
சொன்னதும்

உடனே அல்லாஹுதஆலா

فليدع ناديه
سندع ازبانية
"அவன்தன்னுடைய (உதவிக்காக தன்) கூட்டத்தை அழைக்கட்டும் விரைவில் நாமும் (நரகத்தின் காவலாளிகளை) அழைப்போம். 

நபியே!
நீங்கள்அவனுக்கு 
கீழ்படியாதீர் அல்லாஹுக்கு 
சிரம் பணிந்து வணங்குவீராக!
அல்குர்ஆன்(96:17-19) 
எனஅபூலஹபைக்
கண்டித்துவசனம்
இறக்கினான். 

"ஒருநாள்
*அண்ணல்நபி* 
*ஸல்லல்லாஹு* அலைஹிவஸல்லம் அவர்கள்

"ஹரம் ஷரீஃபில்
தொழுவதைப் பார்த்ததும்
அண்ணலாரை
அடித்து துரத்த
ஓடிவந்தான்.!"

"அடுத்த நொடி
பின்னால்சென்று
தலைதெறிக்க
ஓடிவிட்டான்.!"

"ஏன் ஓடிவந்து 
விட்டாய்?" என
எல்லோரும்
கேட்டபோது

"முஹம்மதுக்கு
அருகில் சென்றதும்
ஒரு பயங்கரமான நெருப்பு என்னை துரத்த ஆரம்பித்தது. இறக்கைகளையும்
பார்த்தேன் எனவே
நான் ஓடி வந்து விட்டேன்.!"என்றான். 

*அண்ணல்நபி* 
*ஸல்லல்லாஹு* அலைஹிவஸல்லம்
அவர்கள் சொன்னார்கள்:

"அபூஜஹ்ல்
என் பக்கத்தில் 
வந்து இருந்தால் மலக்குகள்அவன் மூட்டுஎலும்புகளை
முறித்து தனித்
தனியாக பிய்த்து
எரிந்திருப்பார்கள்..!"
என்றார்கள்.
*நூல்:-*
இப்னுகஸீர்,குர்துபீ
மஆரிஃபுல்குர்ஆன்


அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


இறுதித் தீர்ப்பு நாளில், அல்லாஹ்விடத்தில், அடியானின் கடமைகளில் முதன் முதலாக அவனுடைய தொழுகை பற்றியே விசாரிக்கப்படும். (தொழுகையை சரியாக நிறைவேற்றி) அவை செவ்வனே அமைந்திருந்தால், அடியான் வெற்றியும் ஜெயமும் பெறுவான். (தொழுகையை சரியாக நிறைவேற்றாது இருந்ததின் காரணமாக) அவைகளில் குறை காணப்பட்டால், அடியான் தோல்வியும், நஷ்டமும் அடைவான். அவனது கடமையான தொழுகையில் ஏதாவது குறையிருப்பின், கட்டாய தொழுகையிலுள்ள பழுதை நீக்கி, அதனை முழுமைபடுத்த, அடியான் உபரி தொழுகைகளை தொழுதுள்ளானா என்று பாருங்கள். என்று அல்லாஹ் கட்டளையிடுவான். பின்னர் (நோன்பு, ஜகாத் போன்ற) அனைத்துக் கடமைகளுக்கும் இதே முறையில் தீர்ப்பளிக்கப்படும்.

ஈஸா நபியை பற்றி,

ஈஸா (அலை) செய்த அற்புதங்களும் நாம்பெறவேண்டிய படிப்பினைகளும்

 


23-12-2022

 

بسم الله الرحمن الرحيم

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

 

   






 ஈஸா (அலை) செய்த அற்புதங்களும்நாம்பெறவேண்டிய படிப்பினைகளும்


    நபி ஈஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அற்புதப் படைப்பாக இருக்கிறார்கள். இந்த உலகில் ஆண், பெண் இருவரும் இணைந்தால் மட்டுமே ஒரு மனிதப் படைப்பு உருவாகும் என்பது நியதியாக இருக்கும்போது இருவரில் ஒருவர் கூட அசலாக இல்லாமல் ஒரு படைப்பை அல்லாஹ் படைத்தான். அதுதான் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம். அதேபோல் ஆண் மட்டுமே அசலாக வைத்து பெண் என்ற அசல் இல்லாமல் ஒரு படைப்பை அல்லாஹ் படைத்தான். அதுதான் ஹவ்வா அலைஹஸ்ஸலாம். ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் விலா எலும்பிலிருந்து ஹவ்வா அலைஹஸ்ஸலாம் படைக்கப்பட்டார்கள்.   

அதேபோல் அல்லாஹ்வின் வல்லமையை எடுத்துக் கூறும் அத்தாட்சிகளில் ஈஸா (அலை) அவர்களின் பிறப்பும் ஒன்று. பெண்ணை மட்டுமே அசலாக வைத்து ஆண் என்ற அசல் இல்லாமல் ஈஸா (அலை)  அவர்களை அல்லாஹ் படைத்தான். ஈஸா (அலை) அவர்களை முஸ்லிம்களும் மதிக்கிறார்கள். கிறிஸ்வர்களும் மதிக்கிறார்கள். ஆனால் இறுதி வேதமாகிய குர்ஆன் சொல்லும் முறையில் ஈஸா நபியை கிறிஸ்தவர்கள் நம்பவுமில்லை. ஏற்கவுமில்லை.

 ஈஸா நபியின் அற்புதப் பிறப்பு:-

إِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِنْهُ اسْمُهُ الْمَسِيحُ عِيسَى ابْنُ مَرْيَمَ وَجِيهًا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِينَ (ال عمران 45

  மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன் வார்த்தையின் மூலம் உமக்கு (ஒரு குழந்தையை அளிக்க) நற்செய்தி கூறுகிறான். அவர்பெயர் மர்யமின் மகன் ஈஸா அல்மஸீஹ். அவர் இவ்வுலகிலும் மறுமையிலும் உயர்ந்த அந்தஸ்துடையவராகவும் இருப்பார். அல்லாஹ்வுக்கு நெருக்கமானவராகவும் இருப்பார் என வானவர்கள் கூறியதை (எண்ணிப் பார்ப்பீராக.)

 

ஈஸா (அலை) மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்களா?

ஈஸா அலைஹிஸ்ஸலாம் மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததாக பின்வரும் பைபிள் வாசகங்களில் உள்ளது. கிறிஸ்தவர்களும் அதை நம்புகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல.                        

  மரியாள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சமயத்தில் பாலஸ்தீனத்தை ஆட்சி செய்த ரோமப்பேரரசன் அகுஸ்துஸ் மக்கள் தொகை கணிப்பீட்டுக்குக் கட்டளையிட்டார். அவர் கட்டளைப்படி யோசேப்பும் மரியாளும் தங்களை பதிவு செய்ய யோசேப்பின் முன்னோரான தாவீதின் நகரமான பெத்லகேமுக்குச் சென்றனர். அங்கு தங்குவதற்கு அறைகள் கிடைக்காத போது மாட்டுத் தொழுவமொன்றில் தங்கினர். அம் மாட்டுத் தொழுவத்தில் மரியாள் இயேசுவைப் பெற்றார். -கிறிஸ்தவ நூல்

 

ஆனால் குர்ஆன் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறப்பைப் பற்றிச் சொல்லும்போது பேரீத்தமரத்தின் அடியில் பெற்றெடுத்ததாகக் கூறுகிறது.

 

فَاَجَآءَهَا الۡمَخَاضُ اِلٰى جِذۡعِ النَّخۡلَةِ‌ۚ قَالَتۡ يٰلَيۡتَنِىۡ مِتُّ قَبۡلَ هٰذَا وَكُنۡتُ نَسۡيًا مَّنۡسِيًّا‏ ﴿۲۳

 

 மர்யம் (அலை) அவர்களுக்கு ஏற்பட்ட பிரசவ வேதனை அவர்களை ஒரு பேரீத்த மரத்தின் பால் கொண்டு வந்தது. அப்போது மர்யம்(அலை) நான்இதற்கு முன்பே இறந்துமுற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா?"" என்று கூறினார்கள். 19:23.

  கணவன் இல்லாமல் குழந்தையைப் பெற்றெடுத்ததால் ஊர் மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரிப் பேசுவார்கள் என்பதால் மர்யம் (அலை) அவ்வாறு கூறினார்கள். ஆனால் அல்லாஹ் அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களின் கவலை நீங்க வழி வகை செய்தான்.

ஈஸா (அலை) அவர்களின் பிறப்பை கிறிஸ்துமஸ் என்ற பெயரில்

ஆரம்ப காலத்தில் கொண்டாடப்படவில்லை

 தொடக்க காலத்தின் கிறிஸ்தவ அவையில் இயேசுவின் பிறந்த நாள் திருநாளாகக் கொண்டாடப் படவில்லை. கி.பி. 245-ல் ஒரிஜென் என்ற ஆரம்பகால கிறிஸ்தவ குரு இயேசு உட்பட அனைவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை எதிர்த்தார். பார்வோனரசரைப் (ஃபிர்அவ்னைப்) போல இயேசுவின் பிறப்பைக் கொண்டாடக் கூடாது.  அவ்வாறு செய்பவர்கள் பாவிகள் தானே தவிர புனிதர்கள் அல்ல எனக் குறிப்பிட்டார். ஒரிஜெனின் கருத்து கிறித்தவ திருச் சபையால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

 

ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் இயேசுவை கடவுளாகவும் நம்பியிருக்கவில்லை

குகைவாசிகளின் இருப்பிடம் ஜோர்டானில் இன்றைக்கு உள்ளது. பல வருடங்களுக்கு முன்பு அங்கு சில பழங்காலச் சுவடிகள் கண்டு பிடிக்கப்பட்டது. அது அந்த குகைவாசிகளான இளைஞர்கள் வைத்திருந்த இன்ஜீலுடைய பாகங்களாகும். அதில் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் போதித்த உண்மையான ஏகத்துவக் கொள்கைகள் இடம் பெற்றிருந்தன. அந்தச் சுவடிகள் அப்பகுதியில் ஆடு மேய்க்கும் சிறுவன் மூலம் கண்டு பிடிக்கப்பட்டு அது எங்கெங்கோ கைமாறி கடைசியில் பாதிரிமார்கள் கையில் சென்றடைந்தது. அவர்கள் அதை வெளி உலகுக்குத் தெரியப்படுத்தாமல் மூடி மறைத்து விட்டார்கள். ஜோர்டானை ஆட்சி செய்த மன்னர் ஹுசைன், "அந்தச் சாசனச் சுருள்கள் முஸ்லிம்யூதகிறிஸ்தவர்கள் அடங்கிய ஒரு குழுவிடம்பொதுவாக ஒப்படைக்கப்பட்டு ஆராயப்பட வேண்டும்" என்றார்.  கிறிஸ்தவப் பாதிரிமார்கள் "அது தனியார் சொத்து" என்று வாதிட்டு அதை மறுத்து விட்டனர்.

"சாவுக்கடல் சாசனச் சுருள்கள்" என்ற தலைப்பில் 1998ல் பி.பி.சி. தொலைக் காட்சியில் இச்செய்தி பல தடவை ஒளி பரப்பப்பட்டது. இது சம்பந்தமான நீண்ட விபரங்கள் கடந்த வருடங்களில் தரப்பட்டுள்ளது.

 ஈஸா (அலை) கடவுளாக ஆக்கப்பட்டதன் பின்னணி

  பைபிளின் பல வசனங்களில் நல்லடியார்களை குறிப்பாக நபிமார்களை இறைமகன்கள் என்று கூறப்பட்டுள்ளது. உதாரணமாக இஸ்ராயீல் அதாவது யஃகூப்(அலை), தாவீது என்ற தாவூது (அலை), சாலமன் என்ற சுலைமான் (அலை), ஆகியோரை கர்த்தரின் பிள்ளைகள் என்று கூறும் பல்வேறு வசனங்கள் பைபிளில் நிறைய இடம் பெற்றுள்ளன. மக்கள் அனைவரையும்கூட இவ்வாறு கூறும் வசனங்கள் பைபிளில் உள்ளன. அதனால் அனைவருமே கடவுளின் வாரிசாக ஆகி விட முடியாது. 

நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள். (உபாகமம் 14:1)

  ஈஸா (அலை) விஷயத்தில் அன்றியும்  வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: 'இவர் என்னுடைய நேச குமாரன்இவரில் பிரியமாயிருக்கிறேன்என்று உரைத்தது. (மத்தேயு 3:17)

 பைபிளில் உள்ள இதுபோன்ற பல வசனங்கள் அனைத்தும் இறைநேசர் என்ற அர்த்தத்தில்தான் கூறப்பட்டுள்ளதே தவிர இறைமகன் என்ற அர்த்தத்தில் கூறப்படவில்லைஇதையே கிறிஸ்தவ மக்கள் தவறாகப் புரிந்து இயேசுவைக் கடவுள் என்கிறார்கள்.

 ஈஸா(அலை) செய்து காட்டிய அற்புதங்கள்

இறந்தவர்களையும் உயிராக்குதல் போன்ற பல அற்புதங்களை நபி ஈஸா (அலை) செய்து காட்டியதை வைத்தே கிறிஸ்தவர்கள் அவர்களை கடவுள் என்றும் கூறத் துவங்கினர். ஆனால் வார்த்தைக்கு வார்த்தை அல்லாஹ்வின் அனுமதி கொண்டே இதை நான் செய்கிறேன் என்று கூறியதை சிந்திக்க மறந்து விட்டனர்.

وَرَسُولًا إِلَى بَنِي إِسْرَائِيلَ أَنِّي قَدْ جِئْتُكُمْ بِآيَةٍ مِنْ رَبِّكُمْ أَنِّي أَخْلُقُ لَكُمْ مِنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ فَأَنْفُخُ فِيهِ فَيَكُونُ طَيْرًا بِإِذْنِ اللَّهِ وَأُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ وَأُحْيِي الْمَوْتَى بِإِذْنِ اللَّهِ وَأُنَبِّئُكُمْ بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ (49)

 ஒவ்வொரு நபிக்கும் அல்லாஹ் அந்தந்த காலத்திற்குத் தோதுவான அற்புதங்களை வழங்கினான். மூஸா (அலை) அவர்களின் காலம் சூனியக்காரர்கள் நிறைந்தது என்பதால் அவர்களுக்குத் தோதுவான அற்புதங்களை அல்லாஹ் தந்து அந்த அற்புதங்கள் இறைவன் புறத்தில் இருந்தே அல்லாமல் வேறு யாராலும் நிகழ்த்த முடியாது என்று உணர்த்தினான். அதேபோல் நபி (ஸல்) அவர்களின் காலம் அரபிப் புலமை வாய்ந்தவர்கள் நிறைந்த காலம் என்பதால் அல்லாஹ் அந்தப் புலமைகள் அனைத்தையும் தோற்கடிக்கும் விதமாக குர்ஆனை வழங்கி இதுபோல் ஒரு ஆயத்தைக் கொண்டு வாருங்கள் என அறைகூவல் விடுத்தான்                                        .                     

அதுபோல் ஈஸா (அலை) உடைய காலம் மருத்துவர்கள் நிறைந்த காலம் என்பதால் அல்லாஹ் அதற்குத் தோதுவான அற்புதங்களை வழங்கி அந்த அற்புதங்கள் உண்மையான இறைவன் புறத்தில் இருந்தே அல்லாமல் வேறு யாராலும் நிகழ்த்த முடியாது என்பதை அல்லாஹ் உணர்த்தினான்.               

{فَأَنْفُخُ فِيهِ} قال وهب: كان يطير ما دام الناس ينظرون إليه فإذا غاب عن أعينهم سقط ميتا ليتميز فعل الخلق من فعل الله تعالى. وقيل: لم يخلق غير الخفاش لأنه أكمل الطير خلقا ليكون أبلغ في القدرة لأن لها ثديا وأسنانا وأذنا، وهي تحيض وتطهر وتلد. ويقال: إنما طلبوا خلق خفاش لأنه أعجب من سائر الخلق؛ ومن عجائبه أنه لحم ودم يطير بغير ريش ويلد كما يلد الحيوان ولا يبيض كما يبيض سائر الطيور، فيكون له الضرع يخرج منه اللبن، ولا يبصر في ضوء النهار ولا في ظلمة الليل، وإنما يرى في ساعتين: بعد غروب الشمس ساعة وبعد طلوع الفجر ساعة قبل أن يُسفر جدا، ويضحك كما يضحك الإنسان، ويحيض كما تحيض المرأة. ويقال: إن سؤالهم كان له على وجه التعنت فقالوا: أخلق لنا خفاشا واجعل فيه روحا إن كنت صادقا في مقالتك؛ فأخذ طينا وجعل منه خفاشا ثم نفخ فيه فإذا هو يطير بين السماء والأرض؛ (قرطبي

 கருத்து- களி மண் மூலமாக வவ்வால் மாதிரி உருவத்தைச் செய்து அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு நீ உயிராகு! என்பார்கள். அதற்கு உயிர் வரும். மனிதர்களின் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தான் அது பறக்கும். அதன் பின் அது மய்யித்தாக விழுந்து விடும். அல்லாஹ் மனிதர்கள் மூலம் உருவாக்கித்தரும் படைப்புக்கும் அல்லாஹ்வின் நேரடியான படைப்புக்கும் வித்தியாசம் காட்டவே இந்த ஏற்பாடு.      

 வவ்வால் என்பது மற்ற பறவைகளைவிட பல வகையிலும் வித்தியாசமானது என்பதால் அதைச் செய்து காட்டினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. வவ்வாலுக்கு பற்கள், மார்புகள், காதுகள் இருக்கும். பெண்களைப் போல் ஹைளு, நிஃபாஸ், பாலூட்டுதல் ஆகியவை வவ்வாலுக்கு உண்டு. வவ்வால் மனிதனைப் போல சிரிக்கும். மற்ற பறவைகளைப் போல் முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்காமல் மனிதனைப் போல் குழந்தை பெற்றெடுக்கும்.வவ்வாலுக்கு இரண்டு நேரங்களில் மட்டும் கண் தெரியும். சூரிய உதயத்திற்குப் பின்பு சிறிது நேரம். சூரியன் மறைவுக்குப் பின் சிறிது நேரம். இத்தகைய அதிசயமான பறவையை ஈஸா நபி உருவாக்க முடியாது என்று எண்ணி அந்த மக்கள் கேட்டனர்.ஆனால் அல்லாஹ் தந்த ஆற்றல் மூலம் அனைத்தும் முடியும் என்பதை ஈஸா (அலை) நிரூபித்துக் காட்டினார்கள்.                       

பிறவிக் குருடருக்கும் பார்வை வந்த அதிசயம்

وَأُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ

 நபி ஈஸா(அலை)செய்து காட்டிய மற்றொரு அதிசயம் பிறவிக் குருடர்களுக்கும் அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு பார்வையை வரவழைத்ததாகும். முதலில் பார்வை இருந்து பார்வை பறி போயிருந்தால் அந்தப் பார்வையை மீண்டும் கொண்டு வருவது அதிசயம் அல்ல. இன்றும் அது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் நபி ஈஸா (அலை) செய்து காட்டியது அவ்வாறல்ல. பிறவியிலேயே குருடராகப் பிறந்தவருக்கு பார்வையை வரவழைத்தார்கள். கண்களுக்கு பதிலாக அந்த இடத்தில் நெற்றி போன்ற அமைப்பு உள்ள மனிதர்களுக்கும் பார்வையை வரவழைத்தார்கள். இது மற்றவர்களால் செய்து காட்ட முடியாத அற்புதம்

இறந்தவர்களை உயிராக்கிய அதிசயம்

{وَأُحْيِي الْمَوْتَى بِإِذْنِ اللَّهِ} قيل: أحيا أربعة أنفس: العاذر: وكان صديقا له، وابن العجوز  وابنة العاشر وسام بن نوح؛ فالله أعلم. فأما العاذر فإنه كان قد توفى قبل ذلك بأيام فدعا الله فقام بإذن الله وودكه يقطر فعاش وولد له، وأما ابن العجوز فإنه مر به يُحمل على سريره فدعا الله فقام ولبس ثيابه وحمل السرير على عنقه ورجع إلى أهله. وأما بنت العاشر فكان أتى عليها ليلة فدعا الله فعاشت بعد ذلك وولد لها؛ فلما رأوا ذلك قالوا: إنك تحيي من كان موته قريبا فلعلهم لم يموتوا فأصابتهم سكتة فأحيي لنا سام بن نوح. فقال لهم: دلوني على قبره، فخرج وخرج القوم معه، حتى انتهى إلى قبره فدعا الله فخرج من قبره وقد شاب رأسه. فقال له عيسى: كيف شاب رأسك ولم يكن في زمانكم شيب؟ فقال: يا روح الله، إنك دعوتني فسمعت صوتا يقول: أجب روح الله، فظننت أن القيامة قد قامت، فمن هول ذلك شاب رأسي. فسأله عن النزع فقال: يا روح الله إن مرارة النزع لم تذهب عن حنجرتي؛ وقد كان من وقت موته أكثر من أربعة آلاف سنة، فقال للقوم: صدقوه فإنه نبي؛ فآمن به بعضهم وكذبه بعضهم وقالوا: هذا سحر. (قرطبي

 இறந்தவர்களில் நான்கு நபர்களை உயிராக்கியுள்ளார்கள். 1. ஈஸா (அலை)அவர்களின் நண்பர் ஆதிர். அவர் இறந்து சில தினங்களுக்குப் பின் உயிராக்கினார்கள். அதன் பின்னர் அவர் பிள்ளைகளையும் பெற்றார்.2.ஒரு மூதாட்டியின் மகன் இவரை இறந்த நிலையில் கஃபனிட்டு கட்டிலில் தூக்கிச் சென்றனர். அவரை உயிராக்கும்படி அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள். அவர் உயிர் பெற்று எழுந்து தனது இயல்பான ஆடையை அணிந்ததுடன் அந்தக் கட்டிலை அவரே வீடு வரை சுமந்து சென்றார்.      

                             

 3. ஒரு பெண். இறந்த விட்ட இந்தப் பெண்ணின் வீட்டுக்கு வந்த ஈஸா(அலை) அவரை உயிராக்கிட அல்லாஹ்விடம் துஆச் செய்தார்கள். அந்தப் பெண் உயிர் பெற்று எழுந்தார். அவருக்கும் குழந்தைகள் பிறந்தன.4. நூஹ் (அலை)  அவர்களின் சாம் என்ற மகனை உயிராக்கினார்கள். இதன் பின்னணியாகிறது அந்த மக்கள் ஈஸா(அலை) அவர்களிடம் நீங்கள் சமீபத்தில் இறந்தவர்களை மட்டும் தான் உயிர் பெற வைக்கிறீர்கள். ஒருவேளை மயக்கத்தில் இருந்த அவர்களை இறந்ததாக கருதப்பட்டிருக்கலாம். அவர்களின் மயக்கத்தை நீங்கள் தெளிய வைத்ததாகவும் நாம் கருதுகிறோம். எனவே இறந்து நீண்ட காலம் ஆனவர்களை உயிராக்க முடியுமா? குறிப்பாக 4000 வருடங்களுக்கு முன் இறந்த நூஹ் (அலை) அவர்களின் சாம் என்ற மகனை உயிராக்க முடியுமா? என்று கேட்க, அதற்கு ஈஸா (அலை) சாமின் கப்ரைக் காட்டுங்கள் என்றார்கள்.அவ்வாறே காட்டப்பட்டது. அவரை உயிராக்கும் படி அல்லாஹ்விடம் துஆ செய்ய அவர் உயிர் பெற்று எழுந்தார்.ஆனால் தலைமுடி நரைத்த நிலையில் எழுந்தார். அவரிடம் ஈஸா (அலை) அவர்கள் உங்களின் காலத்தில் நரை என்பதே இல்லையே? என்று கேட்க, நீங்கள் என்னை அழைத்தவுடன் கியாமத் வந்து விட்டதோ என்ற பயத்தில் எழுந்தேன். அதனால் நரைத்து விட்டது என்றார். அவரிடம் அவருடைய சகராத் பற்றி ஈஸா (அலை) அவர்கள் கேட்க, இத்தனை வருடங்கள் ஆகியும் அதன் வலியை இன்றும் உணருகிறேன் என்றார். மேலும் அவர் அந்த மக்களிடம் ஈஸா (அலை) அவர்களை தூதர் என நம்புங்கள் என்றார். சிலர் மட்டும் அப்போதே இஸ்லாத்தை ஏற்றனர். வேறு சிலர் இதை சூனியம் என்றார்கள். வேறு சில அறிவிப்பில் அந்த சாம் சற்று நேரத்தில் மீண்டும் அந்த கப்ருக்குள் மய்யித்தாக ஆக்கப்பட்டார். ஆனால் அவர் ஈஸா (அலை) அவர்களிடம் ஒரு கோரிக்கை வைத்தார். என்னை நீங்கள் மீண்டும் மவ்த்தாக்கும் போது ஏற்கெனவே சகராத்தை நான் அனுபவித்து விட்டதால் மீண்டும் சகராத் வராமல் இருக்க துஆ செய்யுங்கள் என்றார். அவ்வாறே ஈஸா (அலை)  துஆ செய்தார்கள்.                                                         

படிப்பினை -சகராத்தின் வேதனை என்பது அனைவருக்கும் பொதுவானது என்றாலும் முஃமின்களுக்கு சகராத் வேதனை இலகுவாக ஆக்கப்படும். மலக்குல் மவ்த் அவர்களை ஒரு தடவை நபி(ஸல்)அவர்கள் சந்தித்து முஃமின்களின் உயிரை இலகுவாக கைப்பற்றுங்கள் என்று கோரிக்கை வைத்தபோது அதற்கு மலக்குல் மவ்த் நான் எப்போதும் முஃமினின் உயிரை இலகுவாகவே கைப்பற்றுகிறேன் என்றார்கள்.   

படிப்பினை 2- நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான் முதலில் நரையைப் பார்த்தவர்கள் அதற்கு முன்பு எத்தனை வயதை ஒருவர் அடைந்தாலும் முடி கருப்பாகவே இருக்கும். நரை என்பது அப்போது இருந்திருக்கவில்லை. நரைக்கு கறுப்புச் சாயம் பூசி கறுப்பாக்கக் கூடாது.            

மற்றொரு அற்புதம்

وَأُنَبِّئُكُمْ بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ-  وذلك أنهم لما أحيا لهم الموتى طلبوا منه آية أخرى وقالوا: أخبرنا بما نأكل في بيوتنا وما ندخر للغد، فأخبرهم فقال: يا فلان أنت أكلت كذا وكذا، وأنت أكلت كذا وكذا وادخرت كذا وكذا (قرطبي)

  பல்வேறு அற்புதங்களை செய்து காட்டியும் அந்த மக்கள் திருப்தியடையாமல் நாங்கள் எங்களுடைய வீடுகளில் என்ன உணவு சாப்பிட்டோம். நாளை என்ன உணவு சாப்பிடுவதற்கு தயார் செய்து வைத்துள்ளோம்என்று இங்கிருந்து கொண்டே சொல்லும்படி ஈஸா(அலை) அவர்களிடம் கேட்க, அதையும் ஈஸா (அலை) அவர்கள் அறிவித்தார்கள். (குர்துபீ)                                      

 

நபி (ஸல்) அவர்களைப் பற்றி பைபிளின் முன்னறிவிப்புகள்

  நபி (ஸல்) அவர்களைப் பற்றி நபி ஈஸா (அலை) கூறிய முன்னறிவிப்புகள் பைபிளில் இருந்தாலும் அவைகளின் அர்த்தத்தை மாற்றி மொழி பெயர்ப்பு செய்துள்ளனர்.                          

பைபிளில் இடம் பெற்றுள்ள வாசகம் பின்வருமாறு.

 நான் பிதாவை வேண்டிக் கொள்வேன். அப்போது அவர் என்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும்படிக்கு சத்திய ஆவியாக தேற்றரவாளரை உங்களுக்குத் தந்தருள்வார். (யோவான் 14:16)   

  

 மற்றொரு இடத்தில் இடம் பெற்றுள்ள வரிகள். 'பிதாவிடத்திலிருந்து உங்களுக்கு அனுப்பப் படுபவரும், பிதாவிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்தியஆவியான தேற்றரவாளர் வரும்போதுஎன்னைக் குறித்து அவர் சாட்சி கொடுப்பார்'(யோவான் 15:26)                      

 'அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி,. உன்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்கு அவர்களுடையசகோதரர்களிடமிருந்து எழும்பப்பண்ணி,என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன். நான் அவருக்குக் கற்பிப்பதை யெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். என் நாமத்திலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகேடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்'(உபாகமம் 18:17-19) மேற்காணும் பைபிளின் வாசகங்கள் குர்ஆனில் பல்வேறு இடங்களில் கூறப்பட்டுள்ளது.           

لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِنْ أَنْفُسِهِمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ (164) ال عمران

  நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு இறைத்தூதரை அனுப்பியதன் மூலம் அருள் புரிந்தான். அவர் அந்த முஃமின்களுக்கு அல்லாஹ்வின் வசனங்களை ஓதிக் காட்டுவார்.     

- ஆல இம்ரான் 164

وَإِذْ قَالَ عِيسَى بْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ (الصف:6

 நபி ஈஸா(அலை) பனீஇஸ்ராயீல் சமூகத்தை நோக்கி நான் உங்களின் இறைத் தூதராக இருக்கிறேன். முந்தைய தவ்ராத் வேதத்தை உண்மைப் படுத்துபவராகவும் எனக்கு அடுத்து வரப்போகும் இறைத் தூதரைப் பற்றிய சுபச் செய்தியைச் சொல்பவராகவும் அனுப்பப்பட்டுள்ளேன். அவரின் பெயர் அஹ்மத் என்பதாகும்.- சூரா ஸஃப் 6                                                           

 அஹ்மத் என்ற நபி (ஸல்) அவர்களின் பெயரைத் திரித்து தேற்றரவாளர் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த தேற்றரவாளர் யார் என்பதற்கு கிறிஸ்தவ அறிஞர்கள் இது இயேசுவைப் பற்றி அவருக்கு முன்பிருந்த மோஸஸ் (மூஸா நபி) கூறியது என்பார்கள்.

 

திங்கள், டிசம்பர் 19, 2022

சிரிப்பின் ஒழுங்குகள்,

நூல்கள்: இஸ்லாமிய ஒழுக்கங்கள்

சிரிப்பின் ஒழுங்குகள்

சிரிப்பு என்பதும்  இறைவனின் அருட்கொடைதான் 

وَاَنَّهٗ هُوَ اَضْحَكَ وَاَبْكٰىۙ‏

அவனே சிரிக்க வைக்கிறான். அழவும் வைக்கிறான்.

அல்குர்ஆன் : 53 : 43

وُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ مُّسْفِرَةٌ ۙ‏
ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ ۚ‏

அந்நாளில் சில முகங்கள் ஒளி வீசும். மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டிருக்கும்.

அல்குர்ஆன் : 80 : 38

பிறரைச்  சந்திக்கும் போது சிரித்த முகத்துடன் 

சந்திக்க வேண்டும் 

நபி (ஸல்) அவர்கள் சிரித்த முகத்துடனே வாழ்க்கையை கழித்திருக்கிறார்கள்

6518 – وَحَدَّثَنِى عَبْدُ الْحَمِيدِ بْنُ بَيَانٍ حَدَّثَنَا خَالِدٌ عَنْ بَيَانٍ قَالَ سَمِعْتُ قَيْسَ بْنَ أَبِى حَازِمٍ يَقُولُ قَالَ جَرِيرُ بْنُ عَبْدِ اللَّهِ
مَا حَجَبَنِى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- مُنْذُ أَسْلَمْتُ وَلاَ رَآنِى إِلاَّ ضَحِكَ

நான் இஸ்லாத்தைத் தழுவிய நாளிலிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை விட்டு மறைந்து (மறுபடியும்) என்னைக் கண்டால் அவர்கள் சிரிக்காமல் இருந்ததில்லை.

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)

முஸ்லிம்-4880 (4522)

நபியை சிரிக்க வைக்க ஒருவர் 

عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ
أَنَّ رَجُلاً عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم كَانَ اسْمُهُ عَبْدَ اللهِ ، وَكَانَ يُلَقَّبُ حِمَارًا ، وَكَانَ يُضْحِكُ رَسُولَ اللهِ : وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் என்றொருவர் இருந்தார். அவர் கழுதை என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை சிரிக்கவைப்பார்.

அறிவிப்பவர் : உமர் (ரலி)

புகாரி-6780

அறியாமைக் கால பேச்சை (மூட நம்பிக்கைகளை)  

பேசி சிரித்தக் கொள்ளலாம் 

عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ قَالَ
قُلْتُ لِجَابِرِ بْنِ سَمُرَةَ أَكُنْتَ تُجَالِسُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ نَعَمْ كَثِيرًا كَانَ لاَ يَقُومُ مِنْ مُصَلاَّهُ الَّذِى يُصَلِّى فِيهِ الصُّبْحَ أَوِ الْغَدَاةَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ فَإِذَا طَلَعَتِ الشَّمْسُ قَامَ وَكَانُوا يَتَحَدَّثُونَ فَيَأْخُذُونَ فِى أَمْرِ الْجَاهِلِيَّةِ فَيَضْحَكُونَ وَيَتَبَسَّمُ

சிமாக் பின் ஹர்ப் அவர்கள் கூறியதாவது : நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம் நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்திருக்கிறீர்களா? என்று கேட்டேன். அதற்க அவர்கள் ஆம் அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உதயமாகாத வரை (சுப்ஹுத் தொழுத இடத்திலிருந்து) எழமாட்டார்கள். சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக்காலம் குறித்து பேசிச் சிரித்துக்கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள்.

அறிவிப்பவர் : சிமாக் பின் ஹர்ப் (ரஹ்)

முஸ்லிம்-1188

அளவோடு சிரியுங்கள் 

عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ
لاَ تُكْثِرُوا الضَّحِكَ ، فَإِنَّ كَثْرَةَ الضَّحِكِ تُمِيتُ الْقَلْبَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அதிகமாக சிரிக்காதீர்கள் ஏனென்றால் அதிகமாக சிரிப்பது உள்ளத்தை மரணிக்கச் செய்துவிடும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : இப்னு மாஜா-4193 (4183)

உண்மையை சொல்லித்தான் சிரிக்க வைக்க வேண்டும் 

عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ
قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ تُدَاعِبُنَا. قَالَ « إِنِّى لاَ أَقُولُ إِلاَّ حَقًّا

(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில்) மக்கள் அல்லாஹ்வின் தூதரே நீங்கள் எங்களிடத்தில் தமாஷ் செய்கிறீர்களே? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நான் உண்மையைத் தவிர வேறெதையும் சொல்லவில்லையே என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : திர்மிதீ-1990 (1913)

சிரிக்க வைப்பதற்காக பொய் சொல்லக் கூடாது 

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ حَدَّثَنَا بَهْزُ بْنُ حَكِيمٍ حَدَّثَنِى أَبِى عَنْ جَدِّى قَالَ سَمِعْتُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- يَقُولُ
وَيْلٌ لِلَّذِى يُحَدِّثُ بِالْحَدِيثِ لِيُضْحِكَ بِهِ الْقَوْمَ فَيَكْذِبُ وَيْلٌ لَهُ وَيْلٌ لَهُ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எவன் (பிற) கூட்டத்தினரை சிரிக்க வைப்பதற்காக பொய்யான செய்தியைக் கூறுகிறானோ அவனுக்கு கேடு தான். அவனுக்கு கேடு தான்.

அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி)

நூல் : திர்மிதீ-2315 (2237)

பிறரை  பயமுறுத்தி சிரிப்பது கூடாது 

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى قَالَ
حَدَّثَنَا أَصْحَابُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، أَنَّهُمْ كَانُوا يَسِيرُونَ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَسِيرٍ ، فَنَامَ رَجُلٌ مِنْهُمْ ، فَانْطَلَقَ بَعْضُهُمْ إِلَى نَبْلٍ مَعَهُ فَأَخَذَهَا ، فَلَمَّا اسْتَيْقَظَ الرَّجُلُ فَزِعَ ، فَضَحِكَ الْقَوْمُ ، فَقَالَ : مَا يُضْحِكُكُمْ ؟ فَقَالُوا : لاَ ، إِلاَّ أَنَّا أَخَذْنَا نَبْلَ هَذَا فَفَزِعَ ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يُرَوِّعَ مُسْلِمًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அவர்களின் தோழர்கள் ஒரு பயணத்தில் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது அவர்களில் ஒருவர் உறங்கிவிட்டார். வேறு சிலர் (உறங்கிக்கொண்டிருந்தவருடன்) இருந்த அம்புகளுக்கு அருகில் சென்று அதை எடுத்துவைத்துக் கொண்டார்கள். அம்மனிதர் உறங்கி எழுந்தவுடன் (அம்பு காணாமல் போனதைக் கண்டு) திடுக்குற்றார். (இதைப் பார்த்த) கூட்டம் சிரித்துவிட்டது. நபி (ஸல்) அவர்கள் ஏன் நீங்கள் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள் இவரது அம்புக்களை நாங்கள் எடுத்து (மறைத்து) வைத்துக் கொண்டோம். அவர் விழித்தவுடன் திடுக்குற்றார் என்று கூறினார்கள். ஒரு முஸ்லிமை திடுக்குறச் செய்வது எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் பின் அபீ லைலா

நூல் : அஹ்மத்-23064 (21986)

அழிவுகள் ஏற்படும் செய்திகள் கிடைத்தால் 

சிரிக்கக் கூடாது 

4829- قَالَتْ
وَكَانَ إِذَا رَأَى غَيْمًا ، أَوْ رِيحًا عُرِفَ فِي وَجْهِهِ قَالَتْ يَا رَسُولَ اللهِ إِنَّ النَّاسَ إِذَا رَأَوُا الْغَيْمَ فَرِحُوا رَجَاءَ أَنْ يَكُونَ فِيهِ الْمَطَرُ وَأَرَاكَ إِذَا رَأَيْتَهُ عُرِفَ فِي وَجْهِكَ الْكَرَاهِيَةُ فَقَالَ يَا عَائِشَةُ مَا يُؤْمِنِّي أَنْ يَكُونَ فِيهِ عَذَابٌ عُذِّبَ قَوْمٌ بِالرِّيحِ وَقَدْ رَأَى قَوْمٌ الْعَذَابَ فَقَالُوا {هَذَا عَارِضٌ مُمْطِرُنَا

மேகத்தையோ அல்லது (சூராவளிக்) காற்றையோ கண்டால் நபி (ஸல்) அவர்களின் முகத்தில் (ஒருவிதமான கலக்கத்தின்) ரேகை தென்படும். (ஒரு நாள்) நான் அல்லாஹ்வின் தூதரே மக்கள் மேகத்தைக் காணும் போது அது மழை மேகமாக இருக்கலாம் என்றெண்ணி மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால் தாங்கள் மேகத்தை காணும் போது ஒருவிதமான கலக்கம் தங்கள் முகத்தில் தென்படக்காணுகின்றேனே (ஏன்?) என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் ஆயிஷாவே அதில் (அல்லாஹ்வின்) வேதனை இருக்கலாம் என்பதால் என்னால் கலக்கமடையாமல் இருக்க இயலவில்லை. (ஆத் எனும்) ஒரு சமூகத்தார் (சூறாவளிக்) காற்றினால் வேதனை செய்யப்பட்டனர். (அந்தச்) சமூகத்தார் (மேகமாக வந்த) அந்த வேதனையைப் பார்த்து விட்டு இது நமக்கு மழையை பொழிவிக்கும் மேகம் என்றே கூறினர் என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி-4829 

மஹ்ஷரில் மனிதனின் நிலை,

ஒவ்வொரு முஸ்லிமும் மறுமையைக் கண்டிப்பாக நம்பிக்கை கொள்ள வேண்டும். மறுமை வாழ்க்கை என்று நாம் பொதுவாகக் குறிப்பிட்டாலும் அதற்கு பல படித்தரங்கள் இருக்கின்றன என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

மண்ணறை வாழ்க்கை, உலகம் அழிக்கப்படுதல், மீண்டும் எழுப்பப்படுதல், விசாரிக்கப்படுதல், கூலி வழங்கப்படுதல் என்று பல படித்தரங்கள் மறுமைக்கு இருக்கின்றன. ஒருநாள் ஒட்டுமொத்த உலகமும் அழிக்கப்பட்டு மனிதர்கள் அனைவரும் விசாரணைக்காக எழுப்பப்பட்டு மஹ்ஷர் எனும் வெட்டவெளி மைதானத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் தருணத்தில், மனிதர்கள் பல நிலைகளில் இருப்பார்கள். அப்போது அனைவருக்கும் பொதுவான நிலைகளும் இருக்கின்றன.

அடுத்ததாக, நல்லவர்களும் கெட்டவர்களும் இம்மை வாழ்க்கையில் தாங்கள் பெற்றிருந்த எண்ணங்கள் மற்றும் செயல்களுக்கு ஏற்றவாறு சில வகையான தோற்றங்கள், நிலைகள் கொண்டவர்களாக இருப்பார்கள். இவ்வாறு அந்நாளில் மக்கள் பல நிலைகளைப் பெற்று பல பிரிவுகளாகப் பிரிந்து இருப்பார்கள். இதைப் பின்வரும் செய்திகள் மூலம் அறியலாம்.

எண்ணங்களுக்கு தகுந்தவாறு

يَوْمَٮِٕذٍ يَّصْدُرُ النَّاسُ اَشْتَات ۙ لِّيُرَوْا اَعْمَالَهُمْؕ‏
فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗ ؕ‏
وَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ

அந்நாளில் மக்கள் தமது செயல்களைக் காண்பதற்காக பல பிரிவினர்களாக ஆவார்கள். அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார்.

(அல்குர்ஆன் 99:6-8)

7413 – وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعُثْمَانُ بْنُ أَبِى شَيْبَةَ قَالاَ حَدَّثَنَا جَرِيرٌ عَنِ الأَعْمَشِ عَنْ أَبِى سُفْيَانَ عَنْ جَابِرٍ قَالَ سَمِعْتُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- يَقُولُ
« يُبْعَثُ كُلُّ عَبْدٍ عَلَى مَا مَاتَ عَلَيْهِ ».

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “ஒவ்வோர் அடியாரும், தாம் இறக்கும்போதிருந்த (மன) நிலையிலேயே எழுப்பப்படுவார்” என்று கூறியதை நான் கேட்டேன்.

நூல்: முஸ்லிம்-5518 

7415 – وَحَدَّثَنِى حَرْمَلَةُ بْنُ يَحْيَى التُّجِيبِىُّ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِى يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ أَخْبَرَنِى حَمْزَةُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ
« إِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ عَذَابًا أَصَابَ الْعَذَابُ مَنْ كَانَ فِيهِمْ ثُمَّ بُعِثُوا عَلَى أَعْمَالِهِمْ ».

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு சமுதாயத்தின் மீது வேதனையை இறக்க அல்லாஹ் நாடிவிட்டால், அதிலுள்ளவர்கள் அனைவரையும் அந்த வேதனை தாக்கும். பிறகு அவர்கள் தம் செயல்களுக்கு ஏற்ப (மறுமையில்) எழுப்பப்படுவார்கள்” என்று கூறியதை நான் கேட்டேன்.

நூல்: முஸ்லிம்-5519 

கேள்விக் கணக்கை எதிர்நோக்கியபடி மஹ்ஷரில் நின்று கொண்டிருக்கும் மக்களின் நிலைகள் மற்றும் அடையாளங்கள் பற்றி அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் அறிவித்திருக்கும் செய்திகளை வரிசையாகத் தெரிந்து கொள்வோம், வாருங்கள்.

மனிதர்களின் பொதுவான நிலை

இந்த உலகத்தில் பிறக்கும் போது மனிதர்கள் எவ்வாறான நிலையில் இருக்கிறார்களோ அவ்வாறே அன்றைய நாளில் அனைவரும் இருப்பார்கள். ஆடை அணியாதவர்களாக, செருப்பு போடாதவர்களாக, விருத்தசேதனம் செய்யாதவர்களாக பரந்து விரிந்த நிலப்பரப்பில், பரிதவித்த நிலையில் நின்று கொண்டிருப்பார்கள். நம்பிக்கையாளர்கள், மறுப்பாளர்கள், இணை வைப்பவர்கள், நூதனவாதிகள், சிறியவர்கள், பெரியவர்கள் என எல்லோரும் இந்த நிலையில் தான் இருப்பார்கள். இவ்வாறு எந்தவொரு பாரபட்சமும் இல்லாமல் எல்லா மக்களும் ஒன்று திரட்டப்பட்டிருப்பார்கள். இதற்குரிய ஆதாரங்களை இப்போது காண்போம்.

يَوْمَ نَـطْوِىْ السَّمَآءَ كَطَـىِّ السِّجِلِّ لِلْكُتُبِ‌ ؕ كَمَا بَدَاْنَاۤ اَوَّلَ خَلْقٍ نُّعِيْدُهٗ‌ ؕ وَعْدًا عَلَيْنَا‌ ؕ اِنَّا كُنَّا فٰعِلِيْنَ

எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்.

(அல்குர்ஆன் 21:104)

7380 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ ح وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ حَدَّثَنَا أَبِى كِلاَهُمَا عَنْ شُعْبَةَ ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ – وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى – قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنِ الْمُغِيرَةِ بْنِ النُّعْمَانِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَامَ فِينَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- خَطِيبًا بِمَوْعِظَةٍ فَقَالَ

« يَا أَيُّهَا النَّاسُ إِنَّكُمْ تُحْشَرُونَ إِلَى اللَّهِ حُفَاةً عُرَاةً غُرْلاً ( كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ وَعْدًا عَلَيْنَا إِنَّا كُنَّا فَاعِلِينَ) أَلاَ وَإِنَّ أَوَّلَ الْخَلاَئِقِ يُكْسَى يَوْمَ الْقِيَامَةِ إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلاَمُ أَلاَ وَإِنَّهُ سَيُجَاءُ بِرِجَالٍ مِنْ أُمَّتِى فَيُؤْخَذُ بِهِمْ ذَاتَ الشِّمَالِ فَأَقُولُ يَا رَبِّ أَصْحَابِى. فَيُقَالُ إِنَّكَ لاَ تَدْرِى مَا أَحْدَثُوا بَعْدَكَ. فَأَقُولُ كَمَا قَالَ الْعَبْدُ الصَّالِحُ ( وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِى كُنْتَ أَنْتَ الرَّقِيبَ عَلَيْهِمْ وَأَنْتَ عَلَى كُلِّ شَىْءٍ شَهِيدٌ إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ) قَالَ فَيُقَالُ لِى إِنَّهُمْ لَمْ يَزَالُوا مُرْتَدِّينَ عَلَى أَعْقَابِهِمْ مُنْذُ فَارَقْتَهُمْ ». وَفِى حَدِيثِ وَكِيعٍ وَمُعَاذٍ « فَيُقَالُ إِنَّكَ لاَ تَدْرِى مَا أَحْدَثُوا بَعْدَكَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள். (அதில்), “மக்களே! நீங்கள் (மறுமையில்) செருப்பணியாதவர்களாகவும், நிர்வாணமானவர்களாகவும், விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாகவும் அல்லாஹ்விடம் கொண்டுவரப்படுவீர்கள்” என்று கூறிவிட்டுப் பிறகு “எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம்” எனும் (21:104ஆவது) இறைவசனத்தை இறுதிவரை ஓதினார்கள். பிறகு, “அறிந்துகொள்ளுங்கள்: மறுமை நாüல் (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படும் முதல் நபர் (இறைத்தூதர்) இப்ராஹீம் அவர்கள்தாம் என்று கூறினார்கள்.

அறி: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம்-5493 (5102)

கெட்ட மனிதர்களின் நிலை

பூமியில் வாழும் காலத்தில் நாமெல்லாம் ஓரிறைவனை ஏற்றுக் கொண்டு நல்ல காரியங்கள் செய்கிறோமா? தீய காரியங்கள் செய்கிறோமா? என்று சோதிப்பதற்காகவே அல்லாஹ் நம்மைப் படைத்திருக்கிறான். இதைத் தெரிந்தும் தெரியாமலும் பலர் தமக்கும் சமுதாயத்துக்கும் தீங்கு தரும் காரியங்களை தாராளமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். பிறர் நலம் மறந்து, மறுத்து சுயநலத்தோடு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

தங்களின் தவறான குணத்தாலும் காரியத்தாலும் ஏற்படும் மோசமான விளைவுகள் பற்றியெல்லாம் கடுகளவும் கவலைப்படாமல் கண்மூடித்தனமாக காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான மக்கள், இவ்வுலகில் தாங்கள் செய்த குற்றங்களுக்கு, பாவங்களுக்குத் தோதுவாக மறுமையில் சில வகையான நிலைகளில் நிறுத்தப்படுவார்கள். அவற்றைத் தெரிந்து கொள்வோம்.

இறைமறுப்பாளர்களின் நிலை

இறைவன் கொடுத்த பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தாமல் அவனை மறுத்துக் கொண்டு வாழும் மக்கள் இருக்கிறார்கள். இதுபோன்று, இறைவன் இருப்பதாக நம்பினாலும் அவனைச் சரியான முறையில் நம்பிக்கை கொள்ளாமல் அவனுக்குரிய ஈடு இணையற்ற இடத்தில் மற்ற படைப்பினங்களை வைத்து அல்லது அவை இருக்கும் இழிவான நிலைக்கு இறைவனை தரம் தாழ்த்தி மகிழும் மக்கள் பலர் இருக்கிறார்கள்.

மறுமை நாளில் மஹ்ஷரில் இவர்களுக்கென்றே குறிப்பிட்ட சில வகையான நிலைகள் இருக்கின்றன. எங்கும் தப்பித்துச் செல்ல முடியாத அந்த நாளில் இவர்களின் முகமெல்லாம் கருத்து, புழுதிப் படிந்து, சோகமாக இருக்கும். என்ன நடக்கப் போகிறதோ? என்ற பீதியில் பதறியவர்களாக இவர்கள் இருப்பார்கள். தங்களது முகம் கவிழ்ந்த நிலையில் இறைவனிடம் இழுத்துச் செல்லப்படுவார்கள். இதற்குரிய ஆதாரங்களைக் காண்போம்.

وَوُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ عَلَيْهَا غَبَرَةٌ ۙ‏

تَرْهَقُهَا قَتَرَةٌ ؕ‏
اُولٰٓٮِٕكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ

அந்நாளில் சில முகங்கள் மீது புழுதி படிந்திருக்கும். அதைக் கருமை மூடியிருக்கும். அவர்களே (ஏக இறைவனை) மறுப்போரான பாவிகள்.

(அல்குர்ஆன் 80:40-42)

يَّوْمَ تَبْيَضُّ وُجُوْهٌ وَّتَسْوَدُّ وُجُوْهٌ  ؕ فَاَمَّا الَّذِيْنَ اسْوَدَّتْ وُجُوْهُهُمْ اَكَفَرْتُمْ بَعْدَ اِيْمَانِكُمْ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ‏
وَاَمَّا الَّذِيْنَ ابْيَـضَّتْ وُجُوْهُهُمْ فَفِىْ رَحْمَةِ اللّٰهِ ؕ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏

அந்நாளில் சில முகங்கள் வெண்மையாகத் திகழும். வேறு சில முகங்கள் கறுத்திருக்கும். “நம்பிக்கை கொண்ட பின் (ஏக இறைவனை) மறுத்து விட்டீர்களா? நீங்கள் மறுத்துக் கொண்டிருந்ததால் இவ்வேதனையை அனுபவியுங்கள்!” என்று முகங்கள் கறுத்தவர்களிடம் (கூறப்படும்).

(அல்குர்ஆன் 3:106, 107)

وَوُجُوْهٌ يَّوْمَٮِٕذٍۢ بَاسِرَةٌ ۙ
ظُنُّ اَنْ يُّفْعَلَ بِهَا فَاقِرَةٌ ؕ‏
كَلَّاۤ اِذَا بَلَغَتِ التَّرَاقِىَۙ‏
وَقِيْلَ مَنْ رَاقٍۙ‏
وَّظَنَّ اَنَّهُ الْفِرَاقُۙ‏
وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِۙ‏
اِلٰى رَبِّكَ يَوْمَٮِٕذِ اۨلْمَسَاقُؕ
فَلَا صَدَّقَ وَلَا صَلّٰىۙ‏
وَلٰڪِنْ كَذَّبَ وَتَوَلّٰىۙ‏
ثُمَّ ذَهَبَ اِلٰٓى اَهْلِهٖ يَتَمَطّٰىؕ‏

சில முகங்கள் அந்நாளில் சோக மயமாக இருக்கும். தமக்குப் பேராபத்து ஏற்படும் என அவை நினைக்கும். அவ்வாறில்லை! உயிர் தொண்டைக் குழியை அடைந்து விடும் போது “மந்திரிப்பவன் யார்?” எனக் கூறப்படும். “அதுவே பிரிவு” என்று அவன் விளங்கிக் கொள்வான். காலோடு கால் பின்னிக் கொள்ளும். அந்நாளில் இழுத்துச் செல்லப்படுவது உமது இறைவனிடமே. அவன் நம்பவுமில்லை. தொழவுமில்லை. மாறாக பொய்யெனக் கருதிப் புறக்கணித்தான். பின்னர் தனது குடும்பத்தினருடன் கர்வமாகச் சென்றான்.

(அல்குர்ஆன் 75:24-33)

اَلَّذِيْنَ يُحْشَرُوْنَ عَلٰى وُجُوْهِهِمْ اِلٰى جَهَـنَّمَۙ اُولٰٓٮِٕكَ شَرٌّ مَّكَانًا وَّاَضَلُّ سَبِيْلًا

முகம் கவிழச் செய்து நரகத்தை நோக்கிக் கொண்டு செல்லப்படுவோர் கெட்ட இடத்தில் தங்குவோராகவும், வழி கெட்டோராகவும் இருப்பார்கள்.

(அல்குர்ஆன் 25:34)

4760- حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ الْبَغْدَادِيُّ ، حَدَّثَنَا شَيْبَانُ ، عَنْ قَتَادَةَ ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ
، أَنَّ رَجُلاً قَالَ يَا نَبِيَّ اللهِ يُحْشَرُ الْكَافِرُ عَلَى وَجْهِهِ يَوْمَ الْقِيَامَةِ قَالَ أَلَيْسَ الَّذِي أَمْشَاهُ عَلَى الرِّجْلَيْنِ فِي الدُّنْيَا قَادِرًا عَلَى أَنْ يُمْشِيَهُ عَلَى وَجْهِهِ يَوْمَ الْقِيَامَةِ قَالَ قَتَادَةُ بَلَى وَعِزَّةِ رَبِّنَا.

ஒருமனிதர் “அல்லாஹ்வின் தூதரே! இறைமறுப்பாளன் மறுமை நாளில் தன் முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவானா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “இந்த உலகில் அவனை இரு கால்களினால் நடக்கச் செய்தவனுக்கு, மறுமை நாளில் அவனைத் தன் முகத்தால் நடக்கச் செய்திட முடியாதா?” என்று (பதிலுக்குக்) கேட்டார்கள்.

அறி: அனஸ் (ரலி), நூல்: புகாரி-4760 

போதனையை புறக்கணித்தவர்களின் நிலை

ஒவ்வொரு முஸ்லிமும், தம்மிடம் மார்க்கம் சம்பந்தமாக ஒரு செய்தி சொல்லப்படும் போது அந்தச் செய்தி சரியா? தவறா? என்று ஆராய்ந்து பார்க்கும் பழக்கம் கொண்டவராகத் திகழ வேண்டும்.

பெரும்பாலான முஸ்லிம்கள் இவ்வாறு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கம்; இந்த இரண்டுக்கு உட்பட்டே நமது அமல்கள் இருக்க வேண்டும் என்று மார்க்கச் செய்திகளை நாம் எடுத்துரைக்கும் போது காது கொடுத்துக் கேட்கவே மறுக்கும் மக்களைப் பார்க்கிறோம். அவர்கள் செய்து வரும் பித்அத்கள், அனாச்சாரங்களுக்கு எதிராக எடுத்துக் காட்டப்படும் மார்க்க ஆதாரங்களை ஏறெடுத்துப் பார்க்கவே தயங்குவதைப் பார்க்கிறோம்.

தாங்கள் செய்து கொண்டும் பிறருக்குப் போதித்துக் கொண்டும் இருக்கின்ற காரியங்கள் தவறானவை என்று தெரிந்த பிறகும் அத்தவறுகளை ஒப்புக் கொண்டு திருந்துவதற்கு முன்வராத பிடிவாதக்காரர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு, அல்லாஹ்வும் அவனது தூதரும் போதித்திருக்கும் செய்திகளை பொடும்போக்குத்தனமாகப் புறந்தள்ளும் மக்கள் மறுமையில் செவிடர்களாக குருடர்களாக ஊமைகளாக நிறுத்தப்படுவார்கள். இவ்வாறு இறைமறையில் ஏக இறைவன் எச்சரிக்கிறான்.

وَمَنْ يَّهْدِ اللّٰهُ فَهُوَ الْمُهْتَدِ‌ ۚ وَمَنْ يُّضْلِلْ فَلَنْ تَجِدَ لَهُمْ اَوْلِيَآءَ مِنْ دُوْنِهٖ‌ ؕ وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيٰمَةِ عَلٰى وُجُوْهِهِمْ عُمْيًا وَّبُكْمًا وَّصُمًّا‌ ؕ مَاْوٰٮهُمْ جَهَـنَّمُ‌ ؕ كُلَّمَا خَبَتْ زِدْنٰهُمْ سَعِيْرًا‏
ذٰلِكَ جَزَآؤُهُمْ بِاَنَّهُمْ كَفَرُوْا بِاٰيٰتِنَا وَقَالُوْۤا ءَاِذَا كُنَّا عِظَامًا وَّرُفَاتًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ خَلْقًا جَدِيْدًا‏

அல்லாஹ் யாருக்கு நேர் வழி காட்டினானோ அவரே நேர்வழி பெற்றவர். அவன் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு அவனன்றி வேறு பாதுகாவலர்களை நீர் காணமாட்டீர். அவர்களை முகம் கவிழச் செய்து குருடர்களாக, ஊமைகளாக, செவிடர்களாக கியாமத்நாளில் எழுப்புவோம். அவர்களின் தங்குமிடம் நரகம். அது தணியும் போதெல்லாம் தீயை அதிகமாக்குவோம். நமது வசனங்களை அவர்கள் மறுத்ததாலும், “நாங்கள் எலும்பாகி மக்கிப்போகும் போது புதுப்படைப்பாக மீண்டும் உயிர்ப்பிக்கப் படுவோமா?” என்று கூறியதாலும் இதுவே அவர்களுக்குரிய தண்டனை.

(அல்குர்ஆன் 17:97, 98)

وَمَنْ اَعْرَضَ عَنْ ذِكْرِىْ فَاِنَّ لَـهٗ مَعِيْشَةً ضَنْكًا وَّنَحْشُرُهٗ يَوْمَ الْقِيٰمَةِ اَعْمٰى‏
قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِىْۤ اَعْمٰى وَقَدْ كُنْتُ بَصِيْرًا‏
قَالَ كَذٰلِكَ اَتَـتْكَ اٰيٰتُنَا فَنَسِيْتَهَا‌ۚ وَكَذٰلِكَ الْيَوْمَ تُنْسٰى‏

எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத்நாளில் குருடனாக எழுப்புவோம். “என் இறைவா! நான் பார்வையுடையவனாக இருந்தேனே? ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்?” என்று அவன் கேட்பான். “அப்படித்தான். நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அதை நீ மறந்தவாறே இன்று மறக்கப்படுகிறாய்” என்று (இறைவன்) கூறுவான்.

(அல்குர்ஆன் 20:124-126)

கொலையாளிகளின் நிலை

தினமும் செய்தித் தாள்களில் கொலை பற்றிய நிகழ்வுகள் இடம் பிடித்துக் கொண்டே இருக்கின்றன. காசு, போட்டி, பொறாமை, கள்ளத்தனம் என்று பல்வேறு காரணங்களுக்காகக் கொலைகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. கொலையெனும் பாதகச் செயலில் பங்கெடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். பல சம்பவங்களில் கொலையாளி யாரென்றே தெரிவதில்லை. இதற்காகப் பிடிபடும் சிலரும் பெயரளவுக்கு மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள். கொல்லப்பட்டவருடைய குடும்பத்தினருக்கும் போதிய உரிமை, நியாயம் கிடைப்பதில்லை.

ஆனால், மறுமை நாளில் கொலையாளிகள் தப்பிக்க இயலாது. கொல்லப்பட்டவருக்குச் சரியான நியாயம் வழங்கப்படும். கொலையாளிகள் இனம் காட்டப்படுவார்கள். எல்லா மக்களுக்கும் முன்னிலையில் கொலையாளிகள் தங்களால் கொல்லப்பட்டவர்கள் மூலம் மறுமை நாளில் முடியைப் பிடித்து இழுத்து வரப்படுவார்கள்.

3029- حَدَّثَنَا الحَسَنُ بْنُ مُحَمَّدٍ الزَّعْفَرَانِيُّ ، قَالَ : حَدَّثَنَا شَبَابَةُ ، قَالَ : حَدَّثَنَا وَرْقَاءُ بْنُ عُمَرَ ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ :
يَجِيءُ الْمَقْتُولُ بِالقَاتِلِ يَوْمَ القِيَامَةِ نَاصِيَتُهُ وَرَأْسُهُ بِيَدِهِ وَأَوْدَاجُهُ تَشْخَبُ دَمًا ، يَقُولُ : يَا رَبِّ ، قَتَلَنِي هَذَا ، حَتَّى يُدْنِيَهُ مِنَ العَرْشِ قَالَ : فَذَكَرُوا لاِبْنِ عَبَّاسٍ ، التَّوْبَةَ ، فَتَلاَ هَذِهِ الآيَةَ : {وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا} ، قَالَ : مَا نُسِخَتْ هَذِهِ الآيَةُ ، وَلاَ بُدِّلَتْ ، وَأَنَّى لَهُ التَّوْبَةُ.

(இந்த உலகத்தில்) கொல்லப்பட்டவர் மறுமை நாளில் தம்மைக் கொலை செய்தவனை அவனது முடியைப் பிடித்து இரத்தம் வடியும் நிலையில் இழுத்து வருவார். அவனை அல்லாஹ்வின் அர்ஷின் கீழே போட்டு, “என் இறைவா! இவன் தான் என்னைக் கொலை செய்தவன்’ என்று கூறுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி: அனஸ் (ரலி), நூல்: திர்மிதீ-3029 (2955)

நீதம் செலுத்தாதவர்களின் நிலை

ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்தவர்களில் பலர் தங்களது மனைவிமார்களிடத்தில் நீதமாக நடக்காமல் இருக்கிறார்கள். ஒரு மனைவியின் பக்கம் மட்டும் சாய்ந்து விட்டு, மற்ற மனைவிக்கும் அவள் மூலம் பெற்றெடுத்த குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுக்காமல் சரியாகக் கவனிக்காமல் ஓர வஞ்சனையாக நடந்து கொள்கிறார்கள்.

மறுமையில் இந்த நீதமற்றவர்கள் தங்களது நிலையை வெளிச்சம் போடும் விதத்தில் ஒரு தோள் புஜம் சாய்ந்தவர்களாக நடந்து வருவார்கள். இவர்கள் பூமியில் இருக்கும் போது நல்ல தோற்றத்துடன் கம்பீரமாக நடைபோட்டிருக்கலாம். ஆனால் மறுமை நாளில் மக்கள் மத்தியில் கேவலப்படும் விதத்தில் இவ்வாறு ஒரு பக்கம் சாய்ந்து சப்பாணிகளாக வருவார்கள். இதையறிந்த பிறகாவது இத்தகையவர்கள் தங்களைத் திருத்திக் கொள்வார்களா?

3881 – أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ قَالَ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ قَتَادَةَ عَنْ النَّضْرِ بْنِ أَنَسٍ عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
مَنْ كَانَ لَهُ امْرَأَتَانِ يَمِيلُ لِإِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى جَاءَ يَوْمَ الْقِيَامَةِ أَحَدُ شِقَّيْهِ مَائِلٌ

“எவருக்கு இரு மனைவிகள் இருந்து (இருவரில்) ஒருவரை விட மற்றொருவரின் பக்கம் சார்பாக (ஒரு தலைப்பட்சமாக) செயல்படுகிறாரோ அவர் மறுமை நாளில் தமது இரு தோள் புஜங்களில் ஒன்று சாய்ந்தவராக வருவார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி: அபூஹுரைரா (ரலி), நூல்: நஸாயீ-3942 (3881)

வட்டிக்காரர்களின் நிலை

வட்டி என்பது ஒரு தனி மனிதனுக்கு மட்டும் தீமை தரக்கூடியதல்ல. ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் தீங்கைத் தரும் பெரும்பாவமே வட்டியாகும். வட்டியினால் பலபேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்திருக்கின்றன. சமுதாயத்தில் ஏராளமான தீமைகள், பிரச்சனைகள் உருவெடுக்கின்றன.

இப்படிப்பட்ட வட்டியினால் மற்றவர்கள் என்ன ஆனாலும் பரவாயில்லை; எனக்கு உலக ஆதாயமே முக்கியம் என்று சுயநலத்தோடு பொதுநலத்தை மறந்து பல மனிதர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் இழிவு என்ன தெரியுமா? பூமியில் வாழ்ந்த முதல் மனிதரிலிருந்து கடைசி மனிதர்கள் வரை எல்லோரும் நிற்கும் மாபெரும் சபையில் பைத்தியமாக உளறிக் கொண்டிருப்பார்கள்; புலம்பிக் கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்ட கேவலம் வேண்டுமா? என்பதை வட்டி வாங்குபவர்கள் யோசிக்க வேண்டும்.

اَلَّذِيْنَ يَاْكُلُوْنَ الرِّبٰوا لَا يَقُوْمُوْنَ اِلَّا كَمَا يَقُوْمُ الَّذِىْ يَتَخَبَّطُهُ الشَّيْطٰنُ مِنَ الْمَسِّ‌ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ قَالُوْۤا اِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبٰوا‌ ۘ‌ وَاَحَلَّ اللّٰهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبٰوا‌ ؕ فَمَنْ جَآءَهٗ مَوْعِظَةٌ مِّنْ رَّبِّهٖ فَانْتَهٰى فَلَهٗ مَا سَلَفَؕ وَاَمْرُهٗۤ اِلَى اللّٰهِ‌ؕ وَمَنْ عَادَ فَاُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். “வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து அறிவுரை தமக்கு வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

(அல்குர்ஆன் 2:275)

யாசகம் கேட்பவர்களின் நிலை

குறித்த நேரத்திற்கு வேலைக்குச் செல்ல வேண்டும்; மற்றவரிடம் கைநீட்டி சம்பளம் வாங்க வேண்டும் என்பதற்குச் சோம்பல்படும் சிலர், பிறரிம் யாசகம் கேட்பதையே தொழிலாகக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். ஆரோக்கியமான கை கால்கள் இருந்தும் உழைக்காமல் யாசகம் கேட்டு ஊரெங்கும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி மற்றவர்களுக்கு மத்தியில் சுயமரியாதை இழந்து குறுக்கு வழியில் கஷ்டப்படாமல் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக பிச்சையெடுப்பவர்கள், மறுமையில் மிகவும் மோசமான நிலையைச் சந்திப்பார்கள். நல்ல விதமாக இருந்தும் பிச்சையெடுக்கிறோமே? நாலுபேர் நம்மை ஏளனமாகப் பார்ப்பார்களே? என்ற நாணமில்லாதவர்கள், மறுமையில் முகத்தில் சிறிதளவும் சதையின்றி அருவருப்பான தோற்றத்தில் மக்களுக்கு மத்தியில் இருப்பார்கள். உடலெங்கும் சதை இருந்து, முகத்தில் மட்டும் கொஞ்சம் கூட சதையில்லாமல் வெறும் எலும்பாக இருந்தால் எந்தளவிற்கு சகிக்க முடியாத தோற்றமாக இருக்கும் என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

1474- حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ ، حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي جَعْفَرٍ قَالَ : سَمِعْتُ حَمْزَةَ بْنَ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ قَالَ : سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ :قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم
مَا يَزَالُ الرَّجُلُ يَسْأَلُ النَّاسَ حَتَّى يَأْتِيَ يَوْمَ الْقِيَامَةِ لَيْسَ فِي وَجْهِهِ مُزْعَةُ لَحْمٍ.

(தம் தேவைக்கு அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவு கூடச் சதை இல்லாதவனாக மறுமை நாளன்று வருவான்.

அறி: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி-1474 , 1475

மேசாடி செய்பவர்களின் நிலை

இறையச்சம் இல்லாமல் பிறருக்குரிய பொருளாதாரத்தை, பொருட்களை மோசடி செய்து சுகபோக வாழ்க்கை வாழும் மக்கள் பலர் இருக்கிறார்கள். அடுத்தவர்களுக்குச் சொந்தமானதை அபகரிக்கும் மோசடிக்காரர்கள் சமுதாய மக்களிடத்தில் இருந்து மறைந்து கொள்ளலாம்; தங்களது மோசடியை மறைத்துக் கொள்ளலாம். ஆனால் மறுமை நாளில் இவ்வாறு தப்பிக்க இயலாது. இவர்களின் முகத்திரையை மற்றவர்களின் முன்னிலையில் வல்ல இறைவன் கிழித்தெறிவான்.

இத்தகைய மோசடி மன்னர்களுக்கு பல இழிவான நிலைகளைக் கொடுத்து கேவலப்படுத்துவான். மோசடிக்காரர்கள் தாங்கள் செய்த மோசடிப் பொருட்களைச் சுமந்து கொண்டிருப்பார்கள். அவர்களை இனம் காட்டும் விதமாக அவர்களுக்கு அசிங்கமான முறையில் கொடி ஒன்று குத்தப்பட்டிருக்கும். இவ்வாறான வெட்கக்கேடான நிலையில் வெட்டவெளி மைதானத்தில் மற்றவர்களுக்கு மத்தியில் உலாவந்து கொண்டிருப்பார்கள். இந்த அவலத்தை அறிந்து கொண்டால் நிச்சயமாக யாரும் மோசடி செய்வதற்குக் கடுகளவும் நெருங்க மாட்டார்கள் என்பதே உண்மை.

وَمَا كَانَ لِنَبِىٍّ اَنْ يَّغُلَّ‌ؕ وَمَنْ يَّغْلُلْ يَاْتِ بِمَا غَلَّ يَوْمَ الْقِيٰمَةِ‌ ۚ ثُمَّ تُوَفّٰى كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ

மோசடி செய்வது எந்த நபிக்கும் தகாது. மோசடி செய்தவர் மோசடி செய்த பொருளை கியாமத் நாளில் கொண்டு வருவார். பின்னர் ஒவ்வொருவருக்கும் அவர் செய்தது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 3:161)

4848 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعُ بْنُ الْجَرَّاحِ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِى خَالِدٍ عَنْ قَيْسِ بْنِ أَبِى حَازِمٍ عَنْ عَدِىِّ بْنِ عَمِيرَةَ الْكِنْدِىِّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ

« مَنِ اسْتَعْمَلْنَاهُ مِنْكُمْ عَلَى عَمَلٍ فَكَتَمَنَا مِخْيَطًا فَمَا فَوْقَهُ كَانَ غُلُولاً يَأْتِى بِهِ يَوْمَ الْقِيَامَةِ ». قَالَ فَقَامَ إِلَيْهِ رَجُلٌ أَسْوَدُ مِنَ الأَنْصَارِ كَأَنِّى أَنْظُرُ إِلَيْهِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ اقْبَلْ عَنِّى عَمَلَكَ قَالَ « وَمَا لَكَ ». قَالَ سَمِعْتُكَ تَقُولُ كَذَا وَكَذَا. قَالَ « وَأَنَا أَقُولُهُ الآنَ مَنِ اسْتَعْمَلْنَاهُ مِنْكُمْ عَلَى عَمَلٍ فَلْيَجِئْ بِقَلِيلِهِ وَكَثِيرِهِ فَمَا أُوتِىَ مِنْهُ أَخَذَ وَمَا نُهِىَ عَنْهُ انْتَهَى ».

அதீ பின் அமீரா அல்கிந்தீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நாம் உங்களில் எவரையேனும் ஒரு பணிக்கு அதிகாரியாக நியமித்திருந்து, பின்னர் அவர் ஓர் ஊசியையோ அதை விடச் சிறியதையோ நம்மிடம் (கணக்குக் காட்டாமல்) மறைத்துவிட்டால் அது மோசடியாகவே அமையும். அவர் மறுமை நாளில் அந்தப் பொருளுடன் வருவார்” என்று கூறியதை நான் கேட்டேன். அப்போது அன்சாரிகளில் ஒரு கறுப்பு நிற மனிதர் எழுந்து, -அவரை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது – “அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் தாங்கள் ஒப்படைத்திருந்த பணியை நீங்கள் (திரும்ப) ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். அவர், “தாங்கள் இன்னின்னவாறு கூறியதை நான் கேட்டேன்” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் இப்போதும் அவ்வாறே கூறுகிறேன். நாம் உங்களில் எவரையேனும் ஒரு பணிக்கு அதிகாரியாக நியமித்தால், அவர் அதில் கிடைக்கும் சிறியதையும் அதிகத்தையும் (நம்மிடம்) கொண்டுவந்து சேர்க்கட்டும். பிறகு எது அவருக்கு வழங்கப்படுகிறதோ அதை அவர் பெற்றுக்கொள்ளட்டும். எது அவருக்கு மறுக்கப்படுகிறதோ அதிலிருந்து அவர் விலகிக்கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம்-3743 , 3266

6178- حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ ، عَنْ مَالِكٍ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ ، عَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ:
إِنَّ الْغَادِرَ يُنْصَبُ لَهُ لِوَاءٌ يَوْمَ الْقِيَامَةِ فَيُقَالُ هَذِهِ غَدْرَةُ فُلاَنِ بْنِ فُلاَنٍ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மோசடி செய்பவனுக்கு மறுமை நாüல் (அவனுடைய மோசடியை வெüச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நட்டப்படும். அப்போது “இது இன்னார் மகன் இன்னாரின் மோசடி(யைக் குறிக்கும் கொடி)” என்று கூறப்படும்.

அறி: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி-6178 , 6177

3073- حَدَّثَنَا مُسَدَّدٌ ، حَدَّثَنَا يَحْيَى ، عَنْ أَبِي حَيَّانَ ، قَالَ : حَدَّثَنِي أَبُو زُرْعَةَ ، قَالَ : حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ
قَامَ فِينَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَذَكَرَ الْغُلُولَ فَعَظَّمَهُ وَعَظَّمَ أَمْرَهُ قَالَ : لاََ أُلْفِيَنَّ أَحَدَكُمْ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رَقَبَتِهِ شَاةٌ لَهَا ثُغَاءٌ عَلَى رَقَبَتِهِ فَرَسٌ لَهُ حَمْحَمَةٌ يَقُولُ يَا رَسُولَ اللهِ أَغِثْنِي فَأَقُولُ لاَ أَمْلِكُ لَكَ شَيْئًا قَدْ أَبْلَغْتُكَ ، وَعَلَى رَقَبَتِهِ بَعِيرٌ لَهُ رُغَاءٌ يَقُولُ يَا رَسُولَ اللهِ أَغِثْنِي فَأَقُولُ لاَ أَمْلِكُ لَكَ شَيْئًا قَدْ أَبْلَغْتُكَ ، وَعَلَى رَقَبَتِهِ صَامِتٌ فَيَقُولُ يَا رَسُولَ اللهِ أَغِثْنِي فَأَقُولُ لاَ أَمْلِكُ لَكَ شَيْئًا قَدْ أَبْلَغْتُكَ ، أَوْ عَلَى رَقَبَتِهِ رِقَاعٌ تَخْفِقُ فَيَقُولُ يَا رَسُولَ اللهِ أَغِثْنِي فَأَقُولُ لاَ أَمْلِكُ لَكَ شَيْئًا قَدْ أَبْلَغْتُكَ وَقَالَ أَيُّوبُ ، عَنْ أَبِي حَيَّانَ فَرَسٌ لَهُ حَمْحَمَةٌ

நபி (ஸல்) அவர்கள் எங்கüடையே எழுந்து நின்று போர்ச் செல்வங்களை மோசடி செய்வது குறித்துக் கூறினார்கள். அது கடுங்குற்றம் என்பதையும் அதன் பாவம் பெரியது என்பதையும் எடுத்துரைத்தார்கள். அப்போது, “மறுமை நாüல் தன் கழுத்தில், கத்திக் கொண்டிருக்கும் ஆட்டையும், கனைத்துக் கொண்டிருக்கும் குதிரையையும் சுமந்து கொண்டு வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்கüல் எவரையும் நான் காண வேண்டாம்.

(ஏனெனில்) அப்போது நான், “உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய முடியாது. உனக்கு நான் (இறைச் சட்டத்தை) எடுத்துரைத்து விட்டேன்’ என்று கூறி விடுவேன். இவ்வாறே, (மறுமை நாüல்) தன் கழுத்தில் கத்திக் கொண்டிருக்கும் ஒட்டகத்தைச் சுமந்து வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்கüல் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்,) அப்போது நான், “என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு (இறைச் சட்டத்தை) நான் எடுத்துரைத்து விட்டேன்’ என்று கூறி விடுவேன்.

இவ்வாறே (அந்நாளில்) தன் கழுத்தில் வெள்üயும் தங்கமும் சுமந்து கொண்டு வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்’’என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்கüல் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்,) அப்போது நான், “என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது.

உனக்கு (இறைச் சட்டத்தை) நான் எடுத்துரைத்து விட்டேன்’ என்று கூறி விடுவேன். அல்லது அசைகின்ற எந்தப் பொருளையாவது தன் கழுத்தில் சுமந்து கொண்டு வந்து “அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று (அபயம் தேடி) அலறிய நிலையில் உங்கüல் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்,) அப்போது நான், “என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. (இறைச் சட்டத்தை) உனக்கு நான் எடுத்துரைத்து விட்டேன்’ என்று கூறி விடுவேன்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறி: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி-3073 

2452- حَدَّثَنَا أَبُو الْيَمَانِ ، أَخْبَرَنَا شُعَيْبٌ ، عَنِ الزُّهْرِيِّ ، قَالَ : حَدَّثَنِي طَلْحَةُ بْنُ عَبْدِ اللهِ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَمْرِو بْنِ سَهْلٍ أَخْبَرَهُ أَنَّ سَعِيدَ بْنَ زَيْدٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ :
سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ : مَنْ ظَلَمَ مِنَ الأَرْضِ شَيْئًا طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் பிறரது நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்துக் கொண்டாரோ அவர் ஏழு நிலங்களை (மறுமையில்) கழுத்தில் மாலையாகக் கட்டித் தொங்க விடப்படுவார்.

அறி: சயீத் பின் ஸைத் (ரலி), நூல்: புகாரி-2452 

ஜகாத் கொடுக்காதவர்களின் நிலை

மார்க்கம் கூறும் கடமைகளுள் முக்கியமான ஒன்று ஜகாத் ஆகும். முஸ்லிம்களாக இருப்பவர்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக இருக்கும்பட்சத்தில் தங்களது செல்வத்தில் இருந்து சிறு பகுதியை பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும். இந்தப் பொதுநலத்தைப் போதிக்கும் ஒப்பற்ற திட்டமே ஜகாத். ஆனால் பெரும்பான்மையான முஸ்லிம்கள் இந்தக் கடமையை நிறைவேற்றுவதில் பெரும் பொடும்போக்காக இருக்கிறார்கள்.

ஜகாத் எனும் கடமையை மனம் போன போக்கில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு ஜகாத் விஷயத்தில் கடமையை புறக்கணித்தவர்கள், தூதரின் போதனைக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் மறுமையில் மோசமான நிலையில் இருப்பார்கள். இத்தகையவர்களை மஹ்ஷரிலேயே அல்லாஹ் அடையாளம் காட்டுவான்.

எதற்கெல்லாம் இவர்கள் ஜகாத் கொடுக்கவில்லையோ அவற்றை சுமந்து கொண்டிருப்பார்கள். ஜகாத் கொடுக்கப்படாத செல்வங்களால் சூடுபோடப்படுவார்கள். முறையாக ஜகாத் கொடுக்கப்படாத செல்வம் உருமாற்றப்பட்டு அதனால் வேதனைப் செய்யப்படுவார்கள். இதை முஃமினாக செல்வந்தர்கள் கவனத்தில் கொள்வார்களா? தங்களை மாற்றிக் கொள்வார்களா?

1402- حَدَّثَنَا الْحَكَمُ بْنُ نَافِعٍ ، أَخْبَرَنَا شُعَيْبٌ ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ هُرْمُزَ الأَعْرَجَ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، يَقُولُ :
قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم تَأْتِي الإِبِلُ عَلَى صَاحِبِهَا عَلَى خَيْرِ مَا كَانَتْ إِذَا هُوَ لَمْ يُعْطِ فِيهَا حَقَّهَا تَطَؤُهُ بِأَخْفَافِهَا وَتَأْتِي الْغَنَمُ عَلَى صَاحِبِهَا عَلَى خَيْرِ مَا كَانَتْ إِذَا لَمْ يُعْطِ فِيهَا حَقَّهَا تَطَؤُهُ بِأَظْلاَفِهَا وَتَنْطَحُهُ بِقُرُونِهَا وَقَالَ وَمِنْ حَقِّهَا أَنْ تُحْلَبَ عَلَى الْمَاءِ قَالَ ، وَلاَ يَأْتِي أَحَدُكُمْ يَوْمَ الْقِيَامَةِ بِشَاةٍ يَحْمِلُهَا عَلَى رَقَبَتِهِ لَهَا يُعَارٌ فَيَقُولُ يَا مُحَمَّدُ فَأَقُولُ لاَ أَمْلِكُ لَكَ شَيْئًا قَدْ بَلَّغْتُ ، وَلاَ يَأْتِي بِبَعِيرٍ يَحْمِلُهُ عَلَى رَقَبَتِهِ لَهُ رُغَاءٌ فَيَقُولُ يَا مُحَمَّدُ فَأَقُولُ لاَ أَمْلِكُ لَكَ شَيْئًا قَدْ بَلَّغْتُ.

உலகில் ஒட்டகம் வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்ற வில்லையாயின் அது கியாமத் நாளில் முன்பிருந்ததை விட நல்ல நிலையில் வந்து, தனது கால்களால் அவனை மிதிக்கும். மேலும் அது போலவே உலகில் ஆடு வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்றவில்லை என்றால் அது கியாமத் நாளில் முன்பிருந்ததை விட நல்ல நிலையில் வந்து தனது குளம்புகளால் அவனை மிதித்துத் தனது கொம்புகளால் அவனை முட்டும்.

மேலும் உங்களில் யாரும் கியாமத் நாளில் கத்திக் கொண்டிருக்கும் ஆட்டைத் தமது பிடரியில் சுமந்து கொண்டு வந்து, (அபயம் தேடிய வண்ணம்) முஹம்மதே என்று கூற, நான் “அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரம் இல்லை” என்று கூறும் படியான நிலை ஏற்பட வேண்டாம். நிச்சயமாக நான் அறிவித்து விட்டேன். மேலும் யாரும் (கியாமத் நாளில்) குரலெழுப்பிக் கொண்டிருக்கும் ஒட்டகத்தைத் தமது பிடரியில் சுமந்து கொண்டு வந்து, முஹம்மதே என்று கூற, நான் “அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரம் இல்லை” என்று கூறும் படியான நிலை ஏற்பட வேண்டாம். நிச்சயமாக நான் அறிவித்து விட்டேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி: அஹுரைரா (ரலி), நூல்: புகாரி-1402 

1460- حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ ، حَدَّثَنَا أَبِي ، حَدَّثَنَا الأَعْمَشُ ، عَنِ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ ، عَنْ أَبِي ذَرٍّ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ انْتَهَيْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ :
وَالَّذِي نَفْسِي بِيَدِهِ ، أَوْ وَالَّذِي لاَ إِلَهَ غَيْرُهُ ، أَوْ كَمَا حَلَفَ – مَا مِنْ رَجُلٍ تَكُونُ لَهُ إِبِلٌ ، أَوْ بَقَرٌ ، أَوْ غَنَمٌ لاَ يُؤَدِّي حَقَّهَا إِلاَّ أُتِيَ بِهَا يَوْمَ الْقِيَامَةِ أَعْظَمَ مَا تَكُونُ وَأَسْمَنَهُ تَطَؤُهُ بِأَخْفَافِهَا وَتَنْطَحُهُ بِقُرُونِهَا كُلَّمَا جَازَتْ أُخْرَاهَا رُدَّتْ عَلَيْهِ أُولاَهَا حَتَّى يُقْضَى بَيْنَ النَّاسِ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எனது உயிர் எவன் கையிலுள்ளதோ’ அல்லது “எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ’ அவன் மீது ஆணையாக! ஒருவனுக்கு ஒட்டகமோ, மாடோ, ஆடோ இருந்து அவற்றிற்கான ஸகாத்தை அவன் நிறைவேற்றவில்லையாயின் மறுமை நாளில் அவை ஏற்கெனவே இருந்ததைவிடப் பெரிதாகவும் கொழுத்ததாகவும் வந்து அவனைக் (கால்) குளம்புகளால் மிதித்துக் கொம்புகளால் முட்டும். அவற்றில் கடைசிப் பிராணி அவனைத் தாக்கிவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் பிராணி அவன் மீது தாக்குதல் நடத்துவதற்காக அனுப்பப்படும். இந்நிலை மக்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை நீடிக்கும்.

அறி: அபூதர் (ரலி), நூல்: புகாரி-1403 , 4659, 1403, 1460

1403- حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم :
مَنْ آتَاهُ اللَّهُ مَالاً فَلَمْ يُؤَدِّ زَكَاتَهُ مُثِّلَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ شُجَاعًا أَقْرَعَ لَهُ زَبِيبَتَانِ يُطَوَّقُهُ يَوْمَ الْقِيَامَةِ ثُمَّ يَأْخُذُ بِلِهْزِمَتَيْهِ ، يَعْنِي شِدْقَيْهِ ، ثُمَّ يَقُولُ أَنَا مَالُكَ أَنَا كَنْزُكَ ثُمَّ تَلاَ {لاَ يَحْسِبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ} الآيَةَ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தையளித்து அதற்கான ஸகாத்தை அவர் செலுத்தவில்லையாயின் (மறுமையில்) அவரது செல்வம் (தலை வழுக்கையான) கொடிய நஞ்சுடைய (கிழட்டுப்) பாம்பாக அவருக்கு காட்சி தரும். அதற்கு (அதன் நெற்றியில்) இரு கருப்புப் புள்ளிகள் இருக்கும்.

மறுமை நாளில் அது (அவரது கழுத்தில் மாலையாக) சுற்றிக்கொள்ளும். பிறகு அந்தப் பாம்பு அவரது முகவாய்க் கட்டையை – அதாவது அவரது தாடைகளைப் பிடித்துக்கொண்டு, “நான் தான் உனது செல்வம்; நான்தான் உனது கருவூலம்’ என்று சொல்லும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பிறகு, “அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத்தனம் செய்வோர், “அது தங்களுக்கு நல்லது’ என்று எண்ண வேண்டாம்.

மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்” எனும் (3:180ஆவது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

அறி: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி-1403 , திர்மிதீ (2938)

4659- حَدَّثَنَا الْحَكَمُ بْنُ نَافِعٍ ، أَخْبَرَنَا شُعَيْبٌ ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ الأَعْرَجَ حَدَّثَهُ أَنَّهُ قَالَ : حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ
يَكُونُ كَنْزُ أَحَدِكُمْ يَوْمَ الْقِيَامَةِ شُجَاعًا أَقْرَعَ.

உங்களது கருவூலம் மறுமைநாüல் கொடிய நஞ்சுடைய பாம்பாக மாறிவிடும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி-4659 

2337 – وَحَدَّثَنِى سُوَيْدُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا حَفْصٌ – يَعْنِى ابْنَ مَيْسَرَةَ الصَّنْعَانِىَّ – عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ أَنَّ أَبَا صَالِحٍ ذَكْوَانَ أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-
« مَا مِنْ صَاحِبِ ذَهَبٍ وَلاَ فِضَّةٍ لاَ يُؤَدِّى مِنْهَا حَقَّهَا إِلاَّ إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ صُفِّحَتْ لَهُ صَفَائِحَ مِنْ نَارٍ فَأُحْمِىَ عَلَيْهَا فِى نَارِ جَهَنَّمَ فَيُكْوَى بِهَا جَنْبُهُ وَجَبِينُهُ وَظَهْرُهُ كُلَّمَا بَرَدَتْ أُعِيدَتْ لَهُ فِى يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ حَتَّى يُقْضَى بَيْنَ الْعِبَادِ فَيُرَى سَبِيلُهُ إِمَّا إِلَى الْجَنَّةِ وَإِمَّا إِلَى النَّارِ ». قِيلَ يَا رَسُولَ اللَّهِ فَالإِبِلُ قَالَ « وَلاَ صَاحِبُ إِبِلٍ لاَ يُؤَدِّى مِنْهَا حَقَّهَا وَمِنْ حَقِّهَا حَلَبُهَا يَوْمَ وِرْدِهَا إِلاَّ إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ بُطِحَ لَهَا بِقَاعٍ قَرْقَرٍ أَوْفَرَ مَا كَانَتْ لاَ يَفْقِدُ مِنَهَا فَصِيلاً وَاحِدًا تَطَؤُهُ بِأَخْفَافِهَا وَتَعَضُّهُ بِأَفْوَاهِهَا كُلَّمَا مَرَّ عَلَيْهِ أُولاَهَا رُدَّ عَلَيْهِ أُخْرَاهَا فِى يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ حَتَّى يُقْضَى بَيْنَ الْعِبَادِ فَيُرَى سَبِيلُهُ إِمَّا إِلَى الْجَنَّةِ وَإِمَّا إِلَى النَّارِ ». قِيلَ يَا رَسُولَ اللَّهِ فَالْبَقَرُ وَالْغَنَمُ قَالَ « وَلاَ صَاحِبُ بَقَرٍ وَلاَ غَنَمٍ لاَ يُؤَدِّى مِنْهَا حَقَّهَا إِلاَّ إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ بُطِحَ لَهَا بِقَاعٍ قَرْقَرٍ لاَ يَفْقِدُ مِنْهَا شَيْئًا لَيْسَ فِيهَا عَقْصَاءُ وَلاَ جَلْحَاءُ وَلاَ عَضْبَاءُ تَنْطِحُهُ بِقُرُونِهَا وَتَطَؤُهُ بِأَظْلاَفِهَا كُلَّمَا مَرَّ عَلَيْهِ أُولاَهَا رُدَّ عَلَيْهِ أُخْرَاهَا فِى يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ حَتَّى يُقْضَى بَيْنَ الْعِبَادِ فَيُرَى سَبِيلُهُ إِمَّا إِلَى الْجَنَّةِ وَإِمَّا إِلَى النَّارِ ». قِيلَ يَا رَسُولَ اللَّهِ فَالْخَيْلُ قَالَ « الْخَيْلُ ثَلاَثَةٌ هِىَ لِرَجُلٍ وِزْرٌ وَهِىَ لِرَجُلٍ سِتْرٌ وَهِىَ لِرَجُلٍ أَجْرٌ فَأَمَّا الَّتِى هِىَ لَهُ وِزْرٌ فَرَجُلٌ رَبَطَهَا رِيَاءً وَفَخْرًا وَنِوَاءً عَلَى أَهْلِ الإِسْلاَمِ فَهِىَ لَهُ وِزْرٌ وَأَمَّا الَّتِى هِىَ لَهُ سِتْرٌ فَرَجُلٌ رَبَطَهَا فِى سَبِيلِ اللَّهِ ثُمَّ لَمْ يَنْسَ حَقَّ اللَّهِ فِى ظُهُورِهَا وَلاَ رِقَابِهَا فَهِىَ لَهُ سِتْرٌ وَأَمَّا الَّتِى هِىَ لَهُ أَجْرٌ فَرَجُلٌ رَبَطَهَا فِى سَبِيلِ اللَّهِ لأَهْلِ الإِسْلاَمِ فِى مَرْجٍ وَرَوْضَةٍ فَمَا أَكَلَتْ مِنْ ذَلِكَ الْمَرْجِ أَوِ الرَّوْضَةِ مِنْ شَىْءٍ إِلاَّ كُتِبَ لَهُ عَدَدَ مَا أَكَلَتْ حَسَنَاتٌ وَكُتِبَ لَهُ عَدَدَ أَرْوَاثِهَا وَأَبْوَالِهَا حَسَنَاتٌ وَلاَ تَقْطَعُ طِوَلَهَا فَاسْتَنَّتْ شَرَفًا أَوْ شَرَفَيْنِ إِلاَّ كَتَبَ اللَّهُ لَهُ عَدَدَ آثَارِهَا وَأَرْوَاثِهَا حَسَنَاتٍ وَلاَ مَرَّ بِهَا صَاحِبُهَا عَلَى نَهْرٍ فَشَرِبَتْ مِنْهُ وَلاَ يُرِيدُ أَنْ يَسْقِيَهَا إِلاَّ كَتَبَ اللَّهُ لَهُ عَدَدَ مَا شَرِبَتْ حَسَنَاتٍ ». قِيلَ يَا رَسُولَ اللَّهِ فَالْحُمُرُ قَالَ « مَا أُنْزِلَ عَلَىَّ فِى الْحُمُرِ شَىْءٌ إِلاَّ هَذِهِ الآيَةُ الْفَاذَّةُ الْجَامِعَةُ (فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ) ».

“பொன், வெள்ளி ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றாமல் இருப்பவருக்கு, மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, உலோகப் பாளமாக மாற்றி, அவருடைய விலாப் புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும். அவை குளிர்ந்து விடும்போதெல்லாம் மீண்டும் அவ்வாறே (பழுக்கக் காய்ந்த பாளமாக) மாறிவிடும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்-1803 

மறுமையில் வெற்றிபெறும் விதத்தில் நமது பயணத்தை அமைத்துக் கொள்ளும் நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!

 

 Categories

பிரபல்யமான பதிவுகள்