அண்ணல்நபி (ஸல்) அவர்களுக்கு அபூஜஹ்ல்செய்த கொடுமைகளும் அவன்பட்ட கேவலங்களும்!*
ஹஜ்ஜுடைய
காலத்தில்அபூலஹப்
*அண்ணல்நபி*
(ஸல்)அவர்கள் பின்னாலேயேசென்று
இவர் சொல்வதை கேட்காதீர்கள் இவர்
பொய்யர்."என்பான்.
மேலும்"இரத்தம்
சொட்டும் வரை
பொடிக்கற்களால்
நபியவர்களின்
பிடரியில் அடிப்பான்.
நூல்:கன்ஜுல்உம்மா
"நபியவர்கள்
தொழுகையில்
ஓதும்திருக்குர்ஆன்
வசனங்களை
ஒழிந்து நின்று
கேட்பான்.!"
ஆனால்"நம்பிக்கை
கொள்ளமாட்டான்.
பிறரையும் ஈமான்
கொள்ளவிடாமல்
தடுப்பான்."
எனவே அல்லாஹ்
அவனைத்திட்டி வசனங்களை இறக்கினான்.
அவன்
அல்லாஹுடைய
வசனங்களைஉண்மை
யாக்கவுமில்லை தொழவுமில்லை
கர்வம் கொண்டு
வீட்டுக்குசென்று விட்டான். (75:31, 33)
*"அண்ணல்நபி*
(ஸல்) அவர்கள்
மிஃராஜுக்கு சென்றுவந்த பின்
தொழுகை கடமையாக்கப்பட்டது!"
எனவே
"அண்ணலார் ஹரம்
ஷரீஃபுக்குள்தொழ
ஆரம்பித்தார்கள்
இதைப் பார்த்த
அபூஜஹ்ல்
கோபத்துடன்..."
"முஹம்மதே!
இனிமேல் இங்கு தொழுவதை நான்
பார்த்தால் உம் கழுத்தைகாலால்
மிதித்துநசுக்கி விடுவேன்.!"என
சத்தமிட்டான்.
(நவூதுபில்லாஹ்)
அல்லாஹுதஆலா
குர்ஆன்வசனத்தை இறக்கினான்.
ارئت الذي ينهى
عبدا اذا صلى
"நபியே!ஓர்அடியார்
தொழும் போது
அதைத்தடுக்கின்ற
ஒருவனைப்பார்த்தீரா?"
(96:9, 10)
மற்றொரு நாள்
*"அண்ணல்நபி*
(ஸல்) அவர்கள்
ஹரம்ஷரீஃபுக்குள்
தொழுவதைப்பார்த்த
அபூஜஹ்ல்
கோபத்துடன்வந்து.."
"முஹம்மதே!
இங்குதொழக்கூடாது என்று சொல்லியும்
மீறிதொழுகிறீரா?"
என சொன்னதும்
*"அண்ணல்நபி*
(ஸல்) அவர்கள்
என்ன திமிறாக
பேசுகிறாய்..?"என
பதிலடி கொடுத்து
அதட்டினார்கள்."
உடனே "அபூலஹப்
மிரண்டு போய்
என்ன..என்னை
மிரட்டுகிறீரா?நான்
யார் தெரியுமா?
எனக்கு பின்னால் ஒருபெரும் கூட்டமே இருக்கிறது.!"என
சொன்னதும்
உடனே அல்லாஹுதஆலா
فليدع ناديه
سندع ازبانية
"அவன்தன்னுடைய (உதவிக்காக தன்) கூட்டத்தை அழைக்கட்டும் விரைவில் நாமும் (நரகத்தின் காவலாளிகளை) அழைப்போம்.
நபியே!
நீங்கள்அவனுக்கு
கீழ்படியாதீர் அல்லாஹுக்கு
சிரம் பணிந்து வணங்குவீராக!
அல்குர்ஆன்(96:17-19)
எனஅபூலஹபைக்
கண்டித்துவசனம்
இறக்கினான்.
"ஒருநாள்
*அண்ணல்நபி*
*ஸல்லல்லாஹு* அலைஹிவஸல்லம் அவர்கள்
"ஹரம் ஷரீஃபில்
தொழுவதைப் பார்த்ததும்
அண்ணலாரை
அடித்து துரத்த
ஓடிவந்தான்.!"
"அடுத்த நொடி
பின்னால்சென்று
தலைதெறிக்க
ஓடிவிட்டான்.!"
"ஏன் ஓடிவந்து
விட்டாய்?" என
எல்லோரும்
கேட்டபோது
"முஹம்மதுக்கு
அருகில் சென்றதும்
ஒரு பயங்கரமான நெருப்பு என்னை துரத்த ஆரம்பித்தது. இறக்கைகளையும்
பார்த்தேன் எனவே
நான் ஓடி வந்து விட்டேன்.!"என்றான்.
*அண்ணல்நபி*
*ஸல்லல்லாஹு* அலைஹிவஸல்லம்
அவர்கள் சொன்னார்கள்:
"அபூஜஹ்ல்
என் பக்கத்தில்
வந்து இருந்தால் மலக்குகள்அவன் மூட்டுஎலும்புகளை
முறித்து தனித்
தனியாக பிய்த்து
எரிந்திருப்பார்கள்..!"
என்றார்கள்.
*நூல்:-*
இப்னுகஸீர்,குர்துபீ
மஆரிஃபுல்குர்ஆன்
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இறுதித் தீர்ப்பு நாளில், அல்லாஹ்விடத்தில், அடியானின் கடமைகளில் முதன் முதலாக அவனுடைய தொழுகை பற்றியே விசாரிக்கப்படும். (தொழுகையை சரியாக நிறைவேற்றி) அவை செவ்வனே அமைந்திருந்தால், அடியான் வெற்றியும் ஜெயமும் பெறுவான். (தொழுகையை சரியாக நிறைவேற்றாது இருந்ததின் காரணமாக) அவைகளில் குறை காணப்பட்டால், அடியான் தோல்வியும், நஷ்டமும் அடைவான். அவனது கடமையான தொழுகையில் ஏதாவது குறையிருப்பின், கட்டாய தொழுகையிலுள்ள பழுதை நீக்கி, அதனை முழுமைபடுத்த, அடியான் உபரி தொழுகைகளை தொழுதுள்ளானா என்று பாருங்கள். என்று அல்லாஹ் கட்டளையிடுவான். பின்னர் (நோன்பு, ஜகாத் போன்ற) அனைத்துக் கடமைகளுக்கும் இதே முறையில் தீர்ப்பளிக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக