கழுத்தில் கத்தியை வைத்து அறுக்கும் வரை இஸ்மாயில் (அலை) அவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை. கத்தியை வைத்த பிறகே உதவி வந்தது.
மலையளவு நெருப்பில் தூக்கி எறியும் வரை இப்ராஹிம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை. நெருப்பில் தூக்கி எறிந்த பிறகே உதவி வந்தது.
செங்கடல் வரை எதிரிகள் துரத்தி வந்தபோதும் மூஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை. அதற்கு பிறகு தான் நதி பிளந்து அல்லாஹ்வின் உதவி கிடைத்தது.
இரண்டு மலைகளுக்கு நடுவே ஏழு முறை ஓடும் வரை அல்லாஹ்வின் உதவி அன்னை ஹாஜிராவிற்கு கிடைக்கவில்லை. அதற்கு பிறகே ஜம் ஜம் கிடைத்தது.
மீன் விழுங்கும் வரை அல்லாஹ்வின் உதவி யூனுஸ்(அலை) அவர்களுக்கு கிடைக்கவில்லை. மீன் விழுங்கிய பிறகே கிடைத்தது.
யூசுப்(அலை) அவர்களின் சகோதரர்கள் யூசுப்(அலை) அவர்களை கிணற்றில் வீசும் வரை அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை. வீசிய பிறகே கிடைத்தது.
எந்த மனிதனையும் அவனின் சக்திற்கு மீறி சோதிப்பதில்லை என்பது இறைவனின் வாக்கு. மேலே சொல்லியிருக்கும் எதுவுமே நம்ப முடியாத நடக்குமா என்கிற கேள்வி சிந்திக்கும் எந்த மனிதனுக்கு தோன்றும் நிகழ்வுகள். ஆனாலும் அல்லாஹ்வின் மீது அவர்களுக்கு இருந்த மிகப்பெரிய நம்பிக்கையின் காரணமாக அவர்களுக்கு அவர்களின் வேதனையில் உச்சத்தில் அல்லாஹ் (ﷻ) தன்னுடைய உதவியை அனுப்பினான்.
🌹சோதனை என்பதன் ஆழம் என்ன என்பதை நாம் அறிய மாட்டோம். ஆனால் அல்லாஹ்வின் உதவி மிக மிக அருகில் தான் இருக்கிறது என்பதை அவசியம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
🌹இஸ்லாத்தில் அவநம்பிக்கைக்கு இடமில்லை. நிச்சயமாக துன்பத்திற்கு பிறகு இன்பம் இருக்கிறது. ஆம் துன்பத்திற்கு பிறகு தான் இன்பம் இருக்கிறது.
🌹"நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா?(29:02)
🌹உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.) (02:214)
🌹அல்லாஹ் மிகவும் அறிந்தவன்...🌹
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக