நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வெள்ளி, அக்டோபர் 21, 2022

இயன்றவரை உபகாரம் செய்வோம் இடையூறு செய்வதைத் தவிர்ப்போம்,

இயன்றவரை   உபகாரம் செய்வோம்

 இடையூறு செய்வதைத் தவிர்ப்போம்


ஜும்ஆ பயான் தர்தீப்

1. யாருக்கும் தீங்கு செய்யாதிருப்பதும் ஒருவகை தர்மம் என்ற ஹதீஸ்


2. நிறைய அமல் செய்தும் கூட அண்டை  வீட்டாரை நோவினை செய்த பெண் நரகவாதி என்ற ஹதீஸ்


3. நடைபாதையில்  இடையூறு செய்வதை எச்சரிக்கும் ஹதீஸ்


4. நடைபாதையில் இடையூறுகளை  அகற்றுவது  மாபெரும் நன்மை


5. நடைபாதையில் இடையூறுகளை அகற்றுபவரின் சேவை நபிகளாருக்கு  எடுத்துக் காட்டப்படும்


6. நன்மையான காரியமாக இருந்தாலும் பிறருக்கு இடையூறு செய்து அதை நிறைவேற்றினால் ஏற்கப்படாது. ஆயிஷா நாயகியின் பணிப் பெண் சம்பவம்


7. பிடரிகளைத்  தாண்டிச் சென்று முன்னால் அமருபவருக்கு ஜும்ஆவின் நன்மை கிடையாது


8. அமர்ந்திருப்பவரை எழுப்பி அந்த இடத்தில் அமரக் கூடாது

இப்னு உமர் ரழி உடைய சம்பவம்


9. பிறருக்குத் தொந்தரவு செய்தவன் மறுமையில் தன்னுடைய எல்லா நன்மைகளையும் இழப்பான்   (நீண்ட ஹதீஸ்



10. பட்டாசுகளால் பிறருக்கு ஏற்படும் தொந்தரவுகள்


முடிந்த வரை பிறருக்கு நன்மை செய்ய வேண்டுமே தவிர, நோவினை தரக்கூடாது என்ற தலைப்பிலும்

 பேசலாம்

நடுநிலை சிந்தனை,கொண்ட ஒரு மனிதன் எதை நல்லது என நினைக்கிறானோ அது இஸ்லாத்தில் வரவேற்கப்பட்டிருக்கும். அதே நேரத்தில் நடுநிலை சிந்தனை,கொண்ட ஒரு மனிதன் எதை கெட்டது என நினைக்கிறானோ அது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டிருக்கும். உதாரணமாக இறந்து விட்ட ஒரு மனிதனை எரிப்பது நல்லதா அல்லது புதைப்பது நல்லதா என்று வரும்போது இன்றைய அறிவியல் ஆய்வாளர்கள் முஸ்லிம்களைப் போன்று புதைப்பது தான் சுற்றுச் சூழலை பாதிக்காது.  எரிப்பதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் என்கின்றனர். அதுபோன்று பட்டாசு விஷயத்திலும் நடுநிலை சிந்தனை கொண்ட பலர் இதை எதிர்க்கின்றனர்.

 

நம்மால் முடிந்த வரை  பிறரை  சந்தோஷத்தப் படுத்த வேண்டுமே தவிர

தன்னுடைய சந்தோஷத்திற்காக பிறரை சங்கடப்படுத்துவதை நம்முடைய மார்க்கம் தடுக்கிறது

عَن أَبِي مُوسَى عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ عَلَى كُلِّ مُسْلِمٍ صَدَقَةٌ قَالُوا فَإِنْ لَمْ يَجِدْ قَالَ يَعْتَمِلُ بِيَدَيْهِ فَيَنْفَعُ نَفْسَهُ وَيَتَصَدَّقُ قَالُوا فَإِنْ لَمْ يَفْعَلْ أَوْ يَسْتَطِعْ قَالَ يُعِينُ ذَا الْحَاجَةِ الْمَلْهُوفَ قَالَ فَإِنْ لَمْ يَسْتَطِعْ أَوْ لَمْ يَفْعَلْ قَالَ يَأْمُرُ بِالْخَيْرِ قَالُوا فَإِنْ لَمْ يَسْتَطِعْ أَوْ يَفْعَلْ قَالَ يُمْسِكُ عَنْ الشَّرِّ فَإِنَّهُ صَدَقَةٌ (مسلم) بَاب بَيَانِ أَنَّ اسْمَ الصَّدَقَةِ يَقَعُ عَلَى كُلِّ نَوْعٍ - كِتَاب الزَّكَاةِ

ஒவ்வொரு முஸ்லிமும் தர்மம் செய்ய  வேண்டும் என நபி ஸல் அவர்கள் கூறிய போது  அதற்கு இயலாதவர் என்ன செய்வார் என தோழர்கள் கேட்டதற்கு, தம்மால் இயன்ற வரை உழைத்து அதில் தனக்கும் பயன்படுத்தி பிறருக்கும் தர் ம ம் செய்வார் என நபி ஸல் கூறினார்கள். அதற்கும் இயலாதவர் என்ன செய்வார் என தோழர்கள் கேட்டதற்கு,  பொருளுதவி இல்லா விட்டாலும் துன்பத்தில் சிக்கியவருக்கு உடலால் ஒத்துழைப்புச் செய்வார் என்று கூறியவுடன் அதற்கும் இயலாதவர் என்ன செய்வார் என தோழர்கள் கேட்டதற்கு, நன்மையை ஏவுவார் என நபி ஸல் கூறியவுடன் அதற்கும் இயலாதவர் என்ன செய்வார் என தோழர்கள் கேட்டதற்கு, பிறருக்கு தீங்கு செய்யாமல் தடுத்துக் கொள்வதே ஒருவகை தர்மம் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.                              

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو  رضى الله عنهما  عَنِ النَّبِىِّ  صلى الله عليه وسلم  قَالَ الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ (بخاري)  عن أبي هريرة قال : (قال رجل: يا رسول الله إن فلانة يذكر من كثرة صلاتها وصيامها وصدقتها غير أنها تؤذي جيرانها بلسانها. قال : هي في النار. قال : يا رسول الله فإن فلانة يذكر من قلة صيامها وصلاتها وصدقتها وأنها تصدق بالأثوار من الأقط ولا تؤذي جيرانها بلسانها. قال: هي في الجنة). أخرجه أحمد.

தன்னுடைய கரத்தாலும் நாவாலும் பிறருக்குத் தொந்தரவு தராமல் இருப்பவரே உண்மை முஸ்லிம்.

ஒரு பெண் அதிகம் நோன்பு வைக்கிறாள். அதிகம் தொழுகிறாள். அதிகம் தர்மமும் செய்கிறாள். ஆனால் தனது நாவால் அண்டை வீட்டாருக்குத் தீங்கு செய்கிறாள். அவளது நிலை என்ன என்று கேட்டதற்கு, அவள் நரகவாதி என நபி ஸல் அவர்கள் பதில் கூறினார்கள்.                                                   

ஜனங்கள் நடந்து செல்லும் பாதையில் அவர்களுக்கு இடையூறு செய்வது மாபெரும் குற்றம்

عن أبي سعيد الخدري قال: قال رسول الله صلى الله عليه وسلم : إياكم والجلوس في الطرقات فقالوا : يا رسول الله مالنا بد من مجالسنا نتحدث فيها فقال: فإذا أبيتم إلا المجلس فأعطوا الطريق حقه قالوا  وما حقه قال : غض البصر وكف الأذى ورد السلام والأمر بالمعروف والنهي عن المنكر. متفق عليه

பாதையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை நபி ஸல்  அவர்கள் கண்டித்த போது அல்லாஹ்வின் தூதரே அதற்கான நிர்பந்தம் ஏற்பட்டால் நாங்கள் என்ன செய்வது என தோழர்கள் கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் அதற்கான நிர்பந்தம் ஏற்பட்டால் பாதையின் உரிமைகளைப் பேணுங்கள் என்றார்கள். அது என்ன என்று நபித் தோழர்கள் கேட்டதற்கு, பாதையில் நடப்பவருக்குத்  தீங்கு செய்யாமல் இருப்பது, தவறான பார்வைகளை விட்டும் தற்காத்துக் கொள்வது, ஸலாமுக்கு பதில் சொல்வது, நன்மையை ஏவி, தீமையை விட்டும் தடுப்பது என நபி ஸல் அவர்கள் பதில் கூறினார்கள்.                                                                   

பாதையில் உள்ள இடையூறுகளை நீக்குவது மாபெரும் நன்மைக்குரிய செயல்

قال رسول الله صلى الله عليه وسلم (بينما رجل يمشي بطريق وجد غصن شوك على الطريق فأخره فشكر الله له فغفر له) رواه مسلم.:

ஒருவர் நடந்து சென்று கொண்டிருக்கும்போது பாதையில் ஒரு முள்செடியைப் பார்த்தார். மக்களுக்கு இடையூறாக இருக்குமே என்று அதை அப்புறப்படுத்தினார். அதற்காக அல்லாஹ் அவருடைய அனைத்துப் பாவங்களையும் மன்னித்து நன்றி பாராட்டினான்.

 قال رسول الله صلى الله عليه وسلم: الايمان بضع وسبعون شعبة، افضلها قول: لا اله الا الله وادناها اماطة الاذى عن الطريق) رواه مسلم.

 

பாதையில் உள்ள இடையூறுகளை நீக்குவது நபி ஸல் அவர்களுக்கு எடுத்துக் காட்டப்படுகிறது.

عَنْ أَبِى ذَرٍّ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « عُرِضَتْ عَلَىَّ أَعْمَالُ أُمَّتِى حَسَنُهَا وَسَيِّئُهَا فَوَجَدْتُ فِى مَحَاسِنِ أَعْمَالِهَا الأَذَى يُمَاطُ عَنِ الطَّرِيقِ وَوَجَدْتُ فِى مَسَاوِى أَعْمَالِهَا النُّخَاعَةَ تَكُونُ فِى الْمَسْجِدِ لاَ تُدْفَنُ ». (مسلم

என் உம்மத்தின் நற்செயல்கள், தீய செயல்கள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டன. அவற்றில் மிகச் சிறந்த நற்காரியமாக பாதையில் கிடக்கும் இடையூறுகளை அகற்றுவதை நான் பெற்றுக் கொண்டேன். அவற்றில் மிகக்கெட்ட காரியமாக நான் கண்டது மஸ்ஜிதை ஒருவர்  எச்சில் துப்பி அசிங்கப்படுத்தி விட்டு அதை புதைக்காமல் (சுத்தம் செய்யாமல்) விடுவதாகும்.

நன்மையான காரியமாக இருப்பினும் பிறருக்கு தொந்தரவு கொடுத்து நிறைவேற்றப்பட்டால் நன்மை இல்லை

عن سَلْمَانُ الْفَارِسِيُّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ وَتَطَهَّرَ بِمَا اسْتَطَاعَ مِنْ طُهْرٍ ثُمَّ ادَّهَنَ أَوْ مَسَّ مِنْ طِيبٍ ثُمَّ رَاحَ فَلَمْ يُفَرِّقْ بَيْنَ اثْنَيْنِ فَصَلَّى مَا كُتِبَ لَهُ ثُمَّ إِذَا خَرَجَ الْإِمَامُ أَنْصَتَ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الْأُخْرَى (بخاري

யார் ஜும்ஆ நாளில் குளித்து தம்மிடம் உள்ள நறுமணத்தைப் பூசி பின்பு மஸ்ஜிதுக்கு வந்து அங்கு அமர்ந்திருக்கும் இருவரைப் பிரிக்காத நிலையில் அதாவது அவ்விருவரையும் தாண்டிச் செல்லாத நிலையில் உபரியான தொழுகை தொழுது பிறகு இமாம் அறையில் இருந்து குத்பாவுக்காக வெளியேறிய பின் அமைதியாக அவரது உரையைக் கேட்பாரோ அவருடைய அடுத்த ஜும்ஆ வரையிலான பாவங்கள் மன்னிக்கப்படும்      

படிப்பினை- ஆனால் இருவரின் பிடரிகளைத் தாண்டிச் சென்றால் ஜும்ஆவின் நன்மை இல்லை

عن ابْن عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا  نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُقِيمَ الرَّجُلُ أَخَاهُ مِنْ مَقْعَدِهِ وَيَجْلِسَ فِيهِ قُلْتُ لِنَافِعٍ الْجُمُعَةَ قَالَ الْجُمُعَةَ وَغَيْرَهَا (بخاري

ஜும்ஆவிலோ மற்ற நாட்களிலோ ஒருவர் தான் அமருவதற்காக மற்றொருவரை எழுப்பி

அந்த இடத்தில் அமர வேண்டாம்.

عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُقِمْ أَحَدُكُمْ أَخَاهُ مِنْ مَجْلِسِهِ ثُمَّ يَجْلِسُ فِيهِ  قَالَ وَكَانَ الرَّجُلُ يَقُومُ لِابْنِ عُمَرَ فَلَا يَجْلِسُ فِيهِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ (ترمذي

இப்னு உமர் ரழி அவர்கள் மஸ்ஜிதுக்கு வந்த போது அவர்களுக்காக ஒருவர் எழுந்து தம்முடைய இருப்பிடத்தை விட்டுக் கொடுத்தார். அந்த இடத்தில் இப்னு உமர் ரழி அமர மறுத்து விட்டார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ ، وَأَبِي سَعِيدٍ ، قَالاَ :سَمِعْنَا رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ وَاسْتَنَّ وَمَسَّ مِنَ الطِّيبِ إِنْ كَانَ عِنْدَهُ , وَلَبِسَ مِنْ أَحْسَنِ ثِيَابِهِ , ثُمَّ جَاءَ إِلَى الْمَسْجِدِ , وَلَمْ يَتَخَطَّ رِقَابَ النَّاسِ , ثُمَّ رَكَعَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَرْكَعَ , ثُمَّ أَنْصَتَ إِذَا خَرَجَ إِمَامُهُ حَتَّى يُصَلِّيَ كَانَتْ كَفَّارَةً لِمَا بَيْنَهَا وَبَيْنَ الْجُمُعَةِ الَّتِي كَانَتْ قَبْلَهَا (صحيح ابن حبان)

ஆயிஷா ரழி அவர்களிடம் அவர்களின் பணிப்பெண் வந்து அன்னையே! நான் என்னுடைய தவாஃபின் ஏழு சுற்றில் இரண்டு மூன்று தடவை ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டேன் என்று பெருமையுடன் வந்து கூறினார். உடனே ஆயிஷா ரழி அவர்கள் கோபத்துடன் ஆண்களின் கூட்ட நெரிசலுக்கு மத்தியில் அவர்களை இடித்துக் கொண்டு நீ இவ்வாறு செய்தாயல்லவா அல்லாஹ் உனக்கு நற்கூலி தராமல் போகட்டுமாக! கூட்ட நெரிசலாக இருந்தால் ஹஜருல் அஸ்வதை நோக்கி தக்பீர் மட்டும் சொல்லி அந்த இடத்தை விட்டும் நீ கடந்து போயிருக்க வேண்டாமா? என்றார்கள்- நூல் பைஹகீ                       

மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுப்பவன் மறுமையில் தான் செய்த நன்மைகளை இழப்பான்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ قَالُوا الْمُفْلِسُ فِينَا مَنْ لَا دِرْهَمَ لَهُ وَلَا مَتَاعَ فَقَالَ إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلَاةٍ وَصِيَامٍ وَزَكَاةٍ وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا وَقَذَفَ هَذَا وَأَكَلَ مَالَ هَذَا وَسَفَكَ دَمَ هَذَا وَضَرَبَ هَذَا فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ وَهَذَا مِنْ حَسَنَاتِهِ فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ ثُمَّ طُرِحَ فِي النَّارِ (مسلم) بَاب تَحْرِيمِ الظُّلْمِ- كِتَاب الْبِرِّ وَالصِّلَةِ وَالْآدَابِ

பரிதாபமான ஏழை யார் தெரியுமா என்று நபி ஸல் அவர்கள் கேட்ட போது யாரிடம் பணம் காசுகள் பொருட்கள் எதுவும் இல்லையோ அவர் தான் என்று நாங்கள் கூறினோம் அதற்கு நபி ஸல் அவர்கள் என்னுடைய உம்மத்தில் பரிதாபமான ஏழை யாரென்றால் மறுமை நாளில் ஒருவர் தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகிய அனைத்தையும் சரியாக நிறைவேற்றியவராக வருவார். ஆனால் அவர் இன்னாரைத் திட்டியிருப்பார். இன்னார் மீது அவதூறுபேசி இருப்பார் 

 இன்னாருடைய பொருளை அபகரித்திருப்பார். இன்னாரின் உயிரைப் பறித்திருப்பார். இன்னாரை அடித்திருப்பார். எனவே இவருடைய நன்மைகளைப் பிடுங்கி அவர்களுக்குக் கொடுக்கப்படும். இறுதியில் இவரின் நன்மைகள் தீர்ந்து விடும். இவரால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் மிச்சமிருப்பார்கள். தீர்ப்புகள் முடியும் முன்பே இவரின் நன்மைகள் தீர்ந்து விட்டதால் அவர்களின் பாவங்களை இவர்

 சுமத்தப்பட்டு நரகில் வீசப்படுவார் மீது   

வியாழன், அக்டோபர் 13, 2022

நாட்டு மருத்துவம், ஆயிரம் மருத்து,

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் , 
இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும், 

இப்பாடல் 
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
    தமிழ் மருத்துவ அறிவுரைப்பா
 
மூளைக்கு வல்லாரை
  முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
   எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
  பசிக்குசீ  ரகமிஞ்சி
கல்லீரலுக்கு  கரிசாலை
  காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
  காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
  தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
  நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு  முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய் 
  மூட்டுக்கு முடக்கறுத்தான் 
அகத்திற்கு  மருதம்பட்டை
  அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு  எள்ளெண்ணை
  உணர்ச்சிக்கு  நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
  களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
  வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு  தாமரைப்பூ
  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

 கக்குவானுக்கு வசம்புத்தூள்
  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                           
விக்கலுக்கு மயிலிறகு
   வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ  
   வெட்டைக்கு சிறுசெருப்படையே 

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
  சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
   நஞ்செதிர்க்க அவரிஎட்டி 

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
  பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்
  கழிச்சலுக்கு தயிர்சுண்டை 
அக்கிக்கு வெண்பூசனை
  ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
   விதைநோயா கழற்சிவிதை 
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
  கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
  கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
   உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
   உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
  அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
  அறிந்தவரை உரைத்தேனே!!

தலாக் எப்படி)விவாகரத்து செய்வதன ஷரீஅத் முறை,

(தலாக்  எப்படி)
விவாகரத்து செய்வதன் (சரியான) ஷரீஅத் முறை என்ன?*



*الجواب بعون الله الملك الوهاب 👇*

لا يَصِحُّ الطَّلاقُ إلَّا مِن زَوجٍ  ، وذلك باتِّفاقِ المَذاهِبِ الفِقهيَّةِ الأربَعةِ: الحَنَفيَّةِ  ، والمالِكيَّةِ  ، والشَّافِعيَّةِ ، والحَنابِلةِ

يُكرَهُ الطَّلاقُ مِن غيرِ حاجةٍ
إذا طلَّق الرَّجُلُ امرأتَه المدخولَ بها دونَ ثَلاثِ طَلَقاتٍ، فهو طَلاقٌ رَجعيٌّ..
أنَّ اللهَ تعالى أخبَرَ أنَّ مَن طَلَّق طَلقتَينِ فله الإمساكُ، وهو الرَّجعةُ، وله التَّسريحُ، وهي الثَّالثةُ

تحرُمُ المرأةُ المُطلَّقةُ ثَلاثًا على مُطَلِّقِها حتى تَنكِحَ زَوجًا آخرَ غَيرَه  ويَطأَها، ثمَّ يُفارِقَها هذا الآخَرُ وتنقضيَ عِدَّتُها منه...

أمَّا البائِنةُ بالثَّلاثِ: فإنَّ العُلَماءَ كُلَّهم على أنَّ المطلَّقةَ ثلاثًا لا تحِلُّ لِزَوجِها الأوَّلِ إلَّا بعد الوطءِ

ایک طلاق سے ایک طلاق اور دوسری طلاق سے ”دو طلاق“ مراد ہوتی ہے، اگر کوئی شخص صریح لفظوں (مثلاً میں نے تمھیں طلاق دی، یا میں نے تمہیں چھوڑدیا) میں اپنی بیوی کو ایک یا دو طلاق دیدے تو بیوی پر ایک یا دو طلاق رجعی پڑتی ہے، اس کے بعد عدت کے اندر اندر رجعت کی گنجائش ہے، 

اگر عدت گزرجائے تو باہم رضامندی سے تجدید نکاح کرکے زوجین ایک ساتھ ازدوزاجی زندگی گزارسکتے ہیں، ”حلالہ“ کی ضرورت نہیں ہوتی۔

”ٹرپل طلاق“ کا مطلب تین طلاق، اگر کوئی شخص اپنی بیوی کو تین طلاق دیدے تو بیوی شوہر پر حرمتِ غلیظہ کے ساتھ حرام ہوجاتی ہے، 
اس وقت نہ رجعت کافی ہوتی ہے اور نہ تجدید نکاح؛ بلکہ ”حلالہ“ کی ضرورت ہوتی ہے 
یعنی جب اس عورت کا بعد عدت کسی سے نکاح ہوجائے اور وہ شوہر ثانی کے ساتھ ازدواجی زندگی گزارے اور ہمبستری بھی کرے بعد میں کسی وقت طلاق دیدے یا بہ قضائے الٰہی وفات پاجائے تو اس عورت کے لیے اپنے سابق شوہر کے ساتھ نکاح کرنا جائز ہوجاتا ہے۔ 

ایک ساتھ تین طلاق دینا شرعاً جائز نہیں ہے، گناہ ہے۔ اگر کبھی زوجین کے درمیان نزاع کی ایسی صورت بن جائے کہ آئندہ حدود اللہ کو قائم رکھتے ہوئے ان کے لیے ازدواجی زندگی گزارنا دشوار ہوجائے اور بیوی کو بالکلیہ نکاح سے خارج کرنا چاہے تو اس کا شرعی طریقہ یہ ہے کہ جب بیوی طہر کی حالت میں ہو اور اس میں اس کے ساتھ صحبت نہ کی کئی ہو اس وقت ایک طلاق دیدے پھر جب ایک ماہواری گزرجائے تو دوسری طلاق دے پھر جب تیسری ماہواری گزرجائے اس وقت تیسری طلاق دیدے؛ 
لیکن اگر ضرورت نہ ہو تو صرف ایک طلاق پر اکتفاء کرے، اس کو طلاق احسن، متفرقا تین ماہواری میں تین طلاق دینے کو ”طلاق حسن“ اور ایک ساتھ تین طلاق دینے کو طلاقِ بدعت کہتے ہیں، یہ شرعاً جائز نہیں ہے؛ لیکن اگر کوئی دیدے تو تینوں طلاق شرعاً واقع ہوجاتی ہیں

مفتی عبدالرحیم لاجپوری رحمہ اللہ لکھتے ہیں:''
" بلاوجہ شرعی طلاق دیناسخت گناہ ہے،اللہ تعالیٰ کوناراض کرنااور شیطان کوخوش کرناہے،
البتہ اگروجہ سے شوہراور بیوی میں ایسی رنجش ہوگئی ہوکہ ایک دوسرے کے حقوق پامال ہورہے ہوں،اورطلاق کے بغیرچارہ ہی نہ ہوتوطلاق دینے کاسب سے بہترطریقہ یہ ہے کہ شوہرایسے طہر میں جس میں صحبت نہ کی ہو صرف ایک طلاق دے،غصہ اور جوش میں آکرتین طلاق دینے کاجورواج چل پڑاہے،بلکہ بہت سے لوگ یہی سمجھتے ہیں کہ تین طلاق کے بغیرطلاق ہی نہیں ہوتی یہ بالکل غلط ہے،ایک طلاق دینے سے بھی طلاق ہوجاتی ہے،اورشوہرعدت میں رجوع نہ کرے تو عدت پوری ہونے کے بعد عورت بائنہ(یعنی نکاح سے جدا)ہوجاتی ہے،اور جہاں چاہے نکاح کرسکتی ہے،جوش اورغصہ میں آکرتین طلاق دے دیتے ہیں ،جب جوش اور غصہ ختم ہوتاہے توپچھتانے اور پریشانی وپشیمانی کے سوا کچھ حاصل نہیں ہوتا، اگرایک طلاق دی ہوتی اور اس کے بعد شوہرکاارادہ بیوی کواپنے پاس رکھنے کاہوتوبہت آسان ہے، صرف قولاً یاعملاً رجوع کرلیناکافی ہے،عورت اس کے نکاح میں رہے گی،رجوع پرگواہ بنالینابہترہے،
اوراگرعدت پوری ہوگئی اوراس کے بعد دونوں کاارادہ ساتھ رہنے کاہوجائے تودونوں کی رضامندی سے تجدیدنکاح (دوبارہ نکاح کرنا)کافی ہوگا،البتہ اس کے بعد شوہردوطلاق کامالک ہوگا"۔

நிச்சயமாக கணவன் மனைவியின் பிரிவானது ஷைத்தானிய குணத்திற்கு வழிவகை செய்வதாகும் இது குறித்து திருக்குர்ஆனில் இறைவன் பேசுகின்ற பொழுது 

وَ كَيْفَ تَاْخُذُوْنَهٗ وَقَدْ اَفْضٰى بَعْضُكُمْ اِلٰى بَعْضٍ وَّاَخَذْنَ مِنْكُمْ مِّيْثَاقًا غَلِيْظًا‏

சந்தேகமின்றி நீங்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து இன்பம் துய்த்திருக்கின்றீர்களே! 
மேலும் அந்த மனைவியர் உங்களிடமிருந்து உறுதியான ஒப்பந்தத்தையும் பெற்றிருக்கின்றார்களே! 
(அவ்வாறிருக்க) அப்பொருளை அவர்களிடமிருந்து எவ்வாறு திரும்பப் பெற முடியும்?
(அல்குர்ஆன் : 4:21)

நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்துவிட்ட நிலையில் எப்படி அதை பிடுங்கி கொள்ள முடியும்?
என்று இறைவனே கேட்க கூடிய அளவிற்கு அதன் முக்கியத்துவத்தை திருக்குர்ஆன் உணர்த்துகிறது.

وَالّٰتِىْ تَخَافُوْنَ نُشُوْزَهُنَّ فَعِظُوْهُنَّ وَاهْجُرُوْهُنَّ فِى الْمَضَاجِعِ وَاضْرِبُوْهُنَّ‌  فَاِنْ اَطَعْنَكُمْ فَلَا تَبْغُوْا عَلَيْهِنَّ سَبِيْلًا‌ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيًّا كَبِيْرًا‏

எவளும் கணவனுக்கு மாறு செய்வாளென்று நீங்கள் அஞ்சினால் அவளுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். 
(அவள் திருந்தாவிடில்) படுக்கையில் இருந்து அவளை அப்புறப்படுத்தி வையுங்கள். (அதிலும் அவள் சீர்திருந்தாவிடில்) அவளை (இலேசாக) அடியுங்கள். 
அதனால் அவள் உங்களுக்கு கட்டுப்பட்டு விட்டால் அவள் மீது (வேறு குற்றங்களைச் சுமத்த) யாதொரு வழியையும் தேடாதீர்கள். 
நிச்சயமாக அல்லாஹ் மிக மேன்மையானவனும் மிகப் பெரியவனுமாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:34)

என்றும் திருக்குர்ஆன் கணவனுக்கு அறிவுறுத்துகிறது.

وَاِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوْا حَكَمًا مِّنْ اَهْلِهٖ وَحَكَمًا مِّنْ اَهْلِهَا‌  اِنْ يُّرِيْدَاۤ اِصْلَاحًا يُّوَفِّـقِ اللّٰهُ بَيْنَهُمَا‌  اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا خَبِيْرًا‏

(கணவன் மனைவியாகிய) இருவருக்குள் (பிணக்கு ஏற்பட்டு)  பிரிவினை ஏற்பட்டுவிடுமோ என்று நீங்கள் அஞ்சினால் அவன் உறவினர்களில் ஒருவரையும், அவள் உறவினர்களில் ஒருவரையும் நடுவர்களாக நீங்கள் ஏற்படுத்துங்கள். 

(நடுவர்களாகிய) அவ்விருவரும் சமாதானம் ஏற்படுத்த விரும்பினால் கணவன் மனைவி இவ்விருவரையும் அல்லாஹ் ஒற்றுமையாக்கி விடுவான். 
நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) நன்கறிந்தவனும், கவனிப்பவனுமாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:35)

பிளவு ஏற்படும் எனத் தெரிந்தால், மேற்கூறிய நடவடிக்கைகளால் பிரச்னை கைமீறி, பிளவு வருமென்று அஞ்சினால் கணவன் குடும்பத்திலிருந்து ஒருவரையும், மனைவி குடும்பத்திலிருந்து ஒருவரையும் நடுவர்களாக கொண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள் என்று 
கணவன், மனைவி இருவரின் குடும்பத்தார்களுக்கும், மத்தியஸ்தர்களுக்கும் திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது.

மேற்கண்ட முயற்சிகளுக்கு பிறகும் வாழ முடியாத நிலை ஏற்பட்டால், இரண்டு சாட்சிகள் முன்னிலையில் கணவன் மனைவியிடம் "உன்னை தலாக் (விவாகரத்து) செய்கிறேன்' என்று கூற வேண்டும். 
இதனை ஒரு முறை கூறினாலே போதும். இந்த தலாக் சொல்லும்பொழுது கண்டிப்பாக மனைவி மாதவிடாய் இல்லாத காலத்தில் (சுத்தமான காலத்தில்) இருத்தல் வேண்டும்.தலாக் சொன்னதிலிருந்து மூன்று மாதவிடாய் காலம் (சுமார் மூன்றரை மாதம்) மனைவி கணவன் வீட்டிலேயே கணவனின் செலவிலேயே இத்தா (காத்திருப்பு காலம்) இருக்க வேண்டும். 

இக்காலத்தில் இருவரும் தாம்பத்திய உறவு கொண்டால், கணவன் விரும்பினால் இந்த மூன்றரை மாதத்திற்குள் மனைவியை மீட்டிக் கொள்ளலாம்.இந்த இத்தா காலத்தில் மனைவி மறுமணம் செய்யக் கூடாது. 
இந்த (இத்தா) காத்திருப்பு காலத்தில் கணவன் மனைவியை மீட்காமலும் அல்லது தாம்பத்திய உறவு கொள்ளாமலும் இருந்தால் தலாக் (விவாகரத்து) நிறைவேறிவிட்டதாகக் கருதப்படுகிறது.

இதன் பின் கணவன் மீண்டும் அப்பெண்ணை மனைவியாக ஆக்கிக்கொள்ள விரும்பினால், மஹர் கொடுத்து மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதற்கு மனைவியின் சம்மதமும் வேண்டும். ஒருவேளை அந்த பெண் வேறொருவரை திருமணம் செய்து கொள்ள விரும்பினால் அது அவளுடைய விருப்பமாக இருக்கும்,

ஒருகால் இந்த இத்தா காலத்தில் விவாகரத்தை முறித்து மனைவியைக் கணவன் சேர்த்துக் கொண்டபின், மீண்டும் அவர்களுக்குள் பிணக்கு ஏற்பட்டு பிளவு ஏற்படுமேயானால் இரண்டாவது முறையாக அவன் மேற்கண்டவாறு தலாக் செய்து இத்தா (காத்திருப்பு காலம்) இருக்க வைக்கலாம். மேற்கண்ட சட்டத்திட்டங்கள் தான் இரண்டாவது தலாக்கிற்கும் உண்டு,

ஒருகால் கணவன் இரண்டாவது இத்தா காலத்திலும் விவாகரத்தை முறித்து மனைவியை சேர்த்துக் கொண்ட பின்னர் அவர்களுக்குள் மீண்டும் பிளவு ஏற்படுமேயானால் 
மூன்றாவது முறையாக அவன் தலாக் செய்து இத்தா (காத்திருப்பு காலம்) இருக்க வைக்கலாம்.மேற்கண்ட சட்டதிட்டங்கள் தான் மூன்றாவது தலாக்கிற்கும் (விவாகரத்தும் ) பொருந்தும்,

ஆனால் மூன்றாவது முறை தலாக் சொன்ன பிறகு அப்பெண்ணை கணவனால் இத்தா காலத்தில் மீட்டுக் கொள்ள இயலாது. 
அவ்வுரிமையை அவன் இழக்கிறான். அவள் வேறொருவருக்கு திருமணம் ஆகி விவாகரத்து பெற்றிருந்தால் தவிர, மீண்டும் அவளை திருமணம் செய்து கொள்ளவும் முடியாது.

மேலும், "மனைவியாக வாழ்ந்த காலத்தில் நீங்கள் அவளுக்கு கொடுத்தவற்றில் எதையும் திரும்ப பெறக் கூடாது' என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது. இதுதான் திருக்குர்ஆன் கூறும் விவாகரத்து முறையாகும்.

ஆக எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மூன்று தலாக் கொடுப்பதை மார்க்கம் அறவே தடுக்கிறது 

எனவே ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்வது தான் சரியான தீர்வு என்று முடிவு எடுக்கின்ற பொழுது 
அந்தப் பெண்மணி சுத்தபத்தமாக இருக்கின்ற காலத்தில் உறவுகொள்வதற்கு முன்பாக ஒரு தலாக் கொடுத்து போதுமாக்கிக் கொள்வது, இதற்கு (தலாக் அஹ்ஸன் ) மிகச் சிறந்த விவாகரத்து முறை என்று சொல்லப்படும் ,
இந்த தலாகிற்கான இத்தா காலத்தை அவள் நிறைவு படுத்தியதற்கு பின்னர் கணவனை விட்டு பிரிந்து சென்று விடலாம் பிறகு அவ்விருவரும் தான்  நாடியவர்களை திருமணம் முடித்துக் கொள்ளலாம் ,

அதேசமயம் மூன்று தலாக் கொடுத்தாக வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் 
அப்போது அதற்கான வழியையும் மார்க்கம் சொல்லித்தருகிறது 

அதாவது அவள் சுத்தமாக இருக்கின்ற காலத்தில் அவளோடு உறவு கொள்வதற்கு முன்பாக முதல் தலாக் கொடுப்பது ,
பிறகு அவளது காத்திருப்பு காலம் முடிந்த பிறகு அதே மாதிரியாக இரண்டாவது தலாக் கொடுப்பது 
பிறகு அதற்கான காத்திருப்பு காலம் முடிந்த பின்னர் 
மூன்றாவது தலாக் கொடுப்பது ,இவ்வாறு மூன்று தடவைகள் பிரித்து பிரித்து கொடுக்கும் தலாகிற்கு  தலாக் ஹசன் (அழகிய முறை விவாகரத்து செய்தல் ) என்று சொல்லப்படும், 

இது அல்லாமல் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஒரே தடவையில் மூன்று தலாக் கூறி விடக் கூடாது 
அது மாபெரும் பாவமான குற்றமான செயலாகும்,
அவ்வாறு கூறி விட்டால் மூன்று தலாக்'கும் நிகழ்ந்து விடும்,ஆயினும் இந்த தலாகிற்கு (தலாக் பித்அத்) மார்க்கத்தில் இல்லாத புதுவகை விவாகரத்து முறை என்று சொல்லப்படும், 
இது பெரும் குற்றச் செயலாகும் 

ஆகவே மனைவியை விட்டுப் பிரிவதாக இருந்தால் ஒரே ஒரு தலாக் கொடுத்து போதுமாக்கிக் கொள்ளும் முறையை மிகச் சிறந்த விவாகரத்து முறையாகும்......



ஆதாரங்கள் : 👇

(("فتاویٰ شامی،3/230،ط:ایچ ایم سعید))

(("فتاویٰ رحیمیہ،جلدہشتم،ص:290،ط:دارالاشاعت کراچی))

(("الہدایہ ۱۹۵/۲))

(("سبل السلام)) (2/248))

(("الدراري المضية)) (2/221))

(("مختصر القدوري)) (ص: 155))

(("الهداية)) للمرغيناني (1/224))

(("مختصر خليل)) (ص: 114))

(("الشرح الكبير)) للدردير (2/365))

(("روضة الطالبين)) للنووي (8/22))

(("الغرر البهية)) لزكريا الأنصاري (4/246))
 
(("الكافي في فقه أهل المدينة)) لابن عبد البر (2/533))

(("شرح منتهى الإرادات)) للبهوتي (2/668))(3/74))

(("مطالب أولي النهى)) للرحيباني (5/321))

(("أحكام القرآن)) للجصاص (1/472))

(("حاشية ابن عابدين)) (3/228))

(("بداية المجتهد)) (3/106))

(("مجموع الفتاوى)) (33/81))

(("شرح النووي على مسلم)) (10/62)) 

(("تفسير الطبري)) (4/588))

(("فتح الباري)) لابن حجر (9/346)) 

(("مغني المحتاج)) للشربيني (3/307)) 

(("حاشية الشرواني على تحفة المحتاج)) (8/76))

(("الإنصاف)) للمرداوي (8/317))

(("كشاف القناع)) للبهوتي (5/232))

(("المختصر الفقهي)) لابن عرفة (4/89))
 
(("مواهب الجليل)) للحطاب (5/268))
 
(("حاشية الصاوي على الشرح الصغير)) (2/535))

(("أسهل المدارك)) للكشناوي (2/137))

(("المجموع شرح المهذب - تكملة المطيعي)) (17/264))

(("الإشراف على مذاهب العلماء)) (5/378))

(("الوسيط)) (5/457))

(("الفتاوى الكبرى)) (3/278))

(("ماخذ :دار الافتاء الاخلاص کراچی
فتوی نمبر :1953))




*والله اعلم بالصواب 

அழகான போட்டோ,

ஞாயிறு, அக்டோபர் 09, 2022

அண்ணல்நபிமீது அழகியகாதல்,

அண்ணல்நபிமீது அழகியகாதல்!*

*அண்ணல்நபி(ஸல்) அவர்கள்சொன்ன அருமையானதுஆ அதைஓதியதால
ஒருநாள் 

*அண்ணல்நபி* 
ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம்
அவர்கள் பயான்
செய்தார்கள்.

"பயான் முடிந்து
வீட்டுக்கு வந்த
*ஹஜ்ரத்அபூசலமா* 
அன்ஹூ அவர்கள்"

"தங்கள் மனைவி
*உம்முசல்மா* 
ரலியல்லாஹு
அன்ஹா அவர்களிடம்"

*"நபிஸல்லல்லாஹூ* அலைஹி வஸல்லம் அவர்கள்இன்றுபயானில்
ஓர் அருமையான 
துஆவைச் சொல்லிக்
கொடுத்தார்கள்.!"

"நம்முடைய 
வாழ்க்கையில்
என்ன பிரச்சனை
ஏற்பட்டாலும்
இந்தத் துஆவை
ஓதிவந்தால்..
அந்தப் பிரச்சினை
தீர்ந்து விடும்..!"

ஆகவே
நீ இந்தத்துஆவை 
எழுதி வைத்துக்கொள்...

"ஒருவேளைநான்
இறந்து விட்டால்
அந்தத் துஆவை
நீ ஓதிவா உன்கவலை
தீர்ந்துவிடும்..!"
என்றார்கள்.

"சில மாதங்களில்
*ஹஜ்ரத்அபூசலமா* 
(ரலி) அவர்கள் 
இறந்து விட்டார்கள்..!"

"கணவரை இழந்த
துக்கம் தாங்காமல்
*உம்முசலமா(ரலி)*
அவர்கள் துடித்துப் 
போய்விட்டார்கள்..!"

ஏனென்றால்
*"ஹஜ்ரத்அபூசலமா* 
(ரலி) அவர்கள் ஊர் 
மக்கள் வியந்து
பாராட்டும் அளவுக்கு
மனைவியை
அவ்வளவு அன்பாக
வைத்திருந்தார்கள்.!"

காலங்கள் கடந்தன... 

"ஒருநாள்
*உம்முசல்மா(ரலி)* 
அவர்களுக்கு 
நபியவர்கள் சொன்ன 
அந்தத்துஆ ஞாபகம் வந்ததும்."
انا لله وانا اليه راجعون 
اللهم أجرني في مصيبتي واخلف لي خيرا منها 

*"இன்னா லில்லாஹ் வ இன்னா இலைஹி ராஜிவூன்.... அல்லாஹூம் மஃஜுர்னீ ஃபீமுஸீபத்தி வஹ்லுஃப்லீ கைரம்மின்ஹா"* 

பொருள்:
யா அல்லாஹ்!
என் கஷ்டத்தை
நீக்கி.. எனக்கு
சிறந்த நலவை
கொடுப்பாயாக!

 *"உம்முசல்மா* 
ரலியல்லாஹு 
அன்ஹா அவர்கள்
துஆவைதினமும் 
ஓதிவந்தார்கள்!"

இந்தத் துஆவை 
ஓதும்போதெல்லாம்..

"நிச்சயமாக! 
எனது அன்புகணவர் 
*அபூசலமா (ரலி)* 
அவர்களைப் போல்
இந்த உலகத்தில்
சிறந்த கணவர் 
கிடைக்கமாட்டார்..!"

*"அண்ணல் நபி* 
*ஸல்லல்லாஹூ* 
அலைஹி வஸல்லம் அவர்கள்சொன்ன துஆ
என்பதால்..."

"நான் இந்தத் துஆவை 
ஓதிவருகிறேன்..!"
என ஓதிவந்தார்கள்.

*"அல்லாஹுஅக்பர்* 
*என்னஒர்ஆச்சரியம்.!* 
அன்னைஉம்முசல்மா
ரலியல்லாஹு அன்ஹாஅவர்களுக்கு.."

"அகிலத்தின்பேரொளி
*அண்ணல்*
*பெருமானார்* 
*ஸல்லல்லாஹூ* 
அலைஹி வஸல்லம்
அவர்களே கணவராக வந்தார்கள்..!"
நூல்: முஸ்லிம்


*அண்ணல்நபிமீது அழகியகாதல்!*

*பூமான்நபியை  பார்த்தால்.......  தொட்டால்....... பேசினால்........ எழுதினால்..... புகழ்பாடினால்.. மீலாதுநடத்தினால்.. மவ்லிதுஓதினால்... ஹந்தூரிசெய்தால்... எல்லாம்பரக்கத்..!* 

*முதன்முதலில்* 
*மாநபியைதொட்ட* 
*பெண்மணிக்கு* 
*கிடைத்தபரக்கத்..!*
!!!!*!!!!!*!!!!!*!!!!!*!!!!!*!!!!*
அன்னைஆமினாஅம்மா
(ரலி) அவர்களுக்கு
பிரசவம் பார்த்த
உம்முஷ் ஷிஃபா(ரலி) 
சொல்கிறார்கள். 

"உலகத்தில் யாருக்கும்
கிடைக்காத பெரும்
பாக்கியத்தை 
அல்லாஹ் எனக்கு கொடுத்தான்.!"

*"அண்ணல்நபி*
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்குழந்தையாக
பிறந்தபோது
முதன்முதலில்
என் கையில் தான்
விழுந்தார்கள்.!"

*"அண்ணல்நபி* 
*(ஸல்)அவர்களை* 
முதன் முதலில் தொட்டபரக்கத்தினால்
அல்லாஹ் எனக்கு
கொடுத்த பாக்கியம் என்ன தெரியுமா?"

"சுவர்க்கவாதியும், 
உலகத்திலேயே
மாபெரும்
செல்வந்தருமான...
*அப்துர்ரஹ்மான்* 
*இப்னு அவ்ப்* 
(ரலி) அவர்களை

"அல்லாஹுதஆலா
எனக்கு மகனாக
கொடுத்தான்.!"
என்றார்கள். 

*அண்ணல்நபி அவர்களைத்தொட்ட பரக்கத்தினால் விடுதலை..!* 
(*(*(*(*(*(*(*(*(*(*("(*(*(*(*
 
"அன்னைஆமீனாஅம்மா
(ரலி) அவர்களுக்கு
உம்முஷ் ஷிஃபா
அவர்கள்பிரசவம்
பார்த்தபின்.."

"தனக்குஉதவிக்காக
பக்கத்தில்இருந்த
சுவைபிய்யாவிடம்
குழந்தையான
கோமான்நபியவர்களை கொடுத்தார்கள்." 

"உலகிலேயே
இரண்டாவதாக
*அண்ணல்நபி* 
*ஸல்லல்லாஹு*
அலைஹிவஸல்லம்
அவர்களைத்தொட்ட.."

"அபூலஹபுடைய
அடிமைப் பெண்
சுவைபபிய்யாவுக்கு
அல்லாஹ்கொடுத்த
பாக்கியம் என்ன தெரியுமா..?"

பூமான்நபி(ஸல்) 
அவர்கள் பிறந்த
செய்தியை
அபூலஹபிடம்சென்று.."

"உங்கள்சகோதரர்
அப்துல்லாவுக்கு
ஆண் குழந்தை பிறந்திருக்கிறது
என சொன்னதும்.."

அடுத்த நொடி

"கல்நெஞ்சன்அபூலஹப் மனம்மாறிசுவைபா
உன்னை விடுதலை செய்கிறேன்."என
சுட்டுவிரலைநீட்டி
சொன்னான்.

-மௌலானா மௌலவி
*அபூபக்கர்உஸ்மானி*
ஹஜ்ரத் அவர்களின்
பயானிலிருந்து... 

*அண்ணல்நபிக்காக* 
*அடிமையை விடுதலைசெய்த* 
*அபூலஹபுக்கு* 
*கிடைத்தபரக்கத்..!*
!!!!!!*!!!!!!!*!!!!!!!*!!!!!!*!!!!!!*
"அண்ணல்நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்கள் பிறந்த 
செய்தியை
சொன்னதால்..."

"சுவைபியாவை
விடுதலை செய்ததால் 
அல்லாஹுதஆலா
அபூலஹபுக்கு கொடுத்தபரக்கத்
என்ன தெரியுமா..?"

"ஒருமனிதர் கனவில்
அபூலஹப்நரகத்தில்
இருப்பதைபார்த்தார்.!"

அபூலஹப் சொன்னார்:

*"முஹம்மத் (ஸல்)* 
அவர்கள் பிறந்த செய்தியைஎன்னுடைய
அடிமைசுவைபிய்ய
சொன்னதும்.."

"நான் சந்தோஷத்தில் சுட்டுவிரலைநீட்டி
நீ விடுதலை.!"என 
சொன்னேன்

அதன் காரணத்தால்
"நான் நரகத்தில்
இருந்தாலும்
அல்லாஹுதஆலா
என்சுட்டுவிரலில் பால்சுரக்கவைக்கிறான்
அதைநான்குடித்து வருகிறேன்!"என்றார்

அகிலத்தின்அருள் அண்ணல்நபி(ஸல்) அவர்களின் அழகுதிருமுகம்..

*பேரழகுமுகம்..!*
"""""""""""""""""""""""""""""""""""""""
அஜ்மலு மின்க லம் தரக்த்து அய்னா

*நாயகமே! உங்களைப்போன்ற ஓர்அழகுமுகத்தை எந்தக்கண்ணும் பார்த்ததில்லை..!* 
-ஹஸ்ஸான்இப்னு
ஸாபித் (ரலி)

*வெண்மைமுகம்..!*
"""""""""""""""""""""""""""""""""""""""
"நபி(ஸல்)அவர்கள்
மிகவெண்மையான
அழகிய முகம்
உடையவர்களாக
இருந்தார்கள்.!"
-இப்னு துஃபைல்(ரலி) 
நூல்:-திர்மிதீ

*பௌர்ணமிமுகம்.!*
""""""""""""""""""""""""""""""""""""""
வஜ்ஹுல் முபாரக்
மித்லஷ்ஷம்ஸி
வல் கமரீ முஸ்ததீரா

*"அருள்நபியின் அழகுமுகம் பௌர்ணமிபோல் வட்டவடிவமாக பிரகாசித்துக் கொண்டிருக்கும்.!"* 
-ஜாபிர்பின்சமூரா(ரலி)
நூல்:-பைஹகீ

*சஹாபாக்கள் சொல்வார்கள்:-*
"""""""""""""""""""""""""""""""""""""""
"நாங்கள்வெயிலில் 
வேலை செய்து கொண்டிருப்போம்

"எங்களுக்கு
களைப்புஏற்பட்டால்...
உடனேபள்ளிவாசல்
பக்கமாக சென்று..."

*"அண்ணல்நபி* 
(ஸல்)அவர்களின் அழகுதிருமுகத்தைப் பார்ப்போம்..உடனே
எங்களுடையகளைப்பு
நீங்கி சுறுசுறுப்பாக
ஆகிவிடுவோம்.!"

*நபிமூஸா(அலை) அவர்களின்ஆசை..!*
"மிஃராஜில்
*அண்ணல்நபி* 
*ஸல்லல்லாஹு* 
அலைஹிவஸல்லம் 
அவர்களிடம்

*"நபிமூஸா* அலைஹிஸ்ஸலாம்
அவர்கள் 50 வக்த் 
தொழுகையை
5 வக்த்வரை
திரும்பத்திரும்ப
குறைத்துவிட்டு வரசொன்னதின்
ரகசியம் என்ன தெரியுமா?"

*"அண்ணலநபி*
(ஸல்) அவர்களின்
அழகு திருமுகத்தை
திரும்பத் திரும்ப
பார்க்க வேண்டும்.!" என்றஆசையினால். 
      -சூஃபியாக்கள்

*மிஃராஜின் ரகசியம்?*
""""""""""""""""""""""""“"""""""""""""""""
ربي ارنى انظر اليك
"யா அல்லாஹ்! 
நான் உன்னை
பார்க்க வேண்டும்" என

*"ஹஜ்ரத்நபிமூஸா* 
(அலை)அவர்கள்
அல்லாஹ்வை பார்க்க ஆசைப்பட்டார்கள்.!"

ஆனால்
*"அண்ணல்நபி*
(ஸல்)அவர்களின்
அழகுதிருமுகத்தைப் 
அல்லாஹ்பார்க்க ஆசைப்பட்டான் மிஃராஜுக்குஅழைத்து
கொண்டான்..!"

*பூமான்நபியை நினைத்தால் பார்த்தால் மனதுக்குஅமைதி.!

*அண்ணல்நபி(ஸல்)*
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் 
அவர்கள் 

"உஹதுப்போரில் விட்டார்கள் என வதந்திபரவியதும்..."

"மதீனாவைச்சேர்ந்த
ஒரு பெண்மணி
உஹது போர்களத்தை
நோக்கிசென்றார்..!"

"போகும் வழியில்
உங்கள் தந்தை
உங்கள் கணவர்
உங்கள் பிள்ளை
இறந்து விட்டார்கள்
என்ற செய்தி கேட்டபோது

"முஹம்மத்(ஸல்) 
அவர்கள் எப்படி இருக்கிறார்கள்?" 
என்றுதான் கேட்டார். 

"உஹதுகளம்சென்று
அண்ணல்நபிகளின்
நூரானமுகத்தைப்
பார்த்ததும்..."

كل مصيبة بعدك جلل يارسول الله
"யா ரசூலுல்லாஹ்! 
உங்கள்திருமுகத்தை
பார்த்த பின்.."

"என் தந்தை கணவர் பிள்ளை இறந்த
எல்லாகவலையும்
மறைந்து போய்விட்டது யாரசூலுல்லாஹ்!"
என்றார்.உலகின்பேரருள் உத்தமநபி(ஸல்) அவர்களின் உதடுகள்..!* 

*இறுதிநபியின் இறுதிநேரம்..!* 

*அன்னைஆயிஷா* 
ரலியல்லாஹு 
அன்ஹாஅவர்கள் சொல்கிறார்கள்:-

*அண்ணல்நபி* 
(ஸல்) அவர்களின்
இறுதி நேரம்.....

"நபியவர்களை
நான் நெஞ்சோடு அணைத்துக் கொண்டேன்."

பின்பு "மிஸ்வாக் குச்சியை கடித்து மிருதுவாக்கி கொடுத்தேன்
நபியவர்கள் 
மிஸ்வாக் 
செய்தார்கள்."

"நபியவர்கள்
மேல்நோக்கி பார்த்தவர்களாக தங்கள் விரலை மேல்நோக்கி உயர்த்தினார்கள்."

அப்போது
"பெருமானாரின்
*உதடுகள்* 
அசைந்தன என்ன
சொல்கிறார்கள்?" 
என காதுதாழ்த்தி நான்கேட்டேன். 

"யா அல்லாஹ்! 
உண்மையாளர்கள்
வீரத்தியாகிகள்
நல்லடியார்கள்
ஆகிய நீ அருள் 
புரிந்த இவர்களுடன் 
சேர்த்துவைப்பாயாக!"

"என்னை நீ மன்னிப்பாயாக! 
என்மீது கருணை காட்டுவாயாக! 
உயர்ந்த நண்பருடன் என்னை சேர்த்து வைப்பாயாக!"
என்றார்கள். 

கடைசி வாசகத்தை மூன்று தடவை சொன்னார்கள். 

"இறுதியாக
உயர்த்திய கை
கீழே சாய்ந்தது
உயர்ந்த நண்பனாகிய
அல்லாஹ்விடம் சென்று விட்டார்கள்.!"

இன்னாலில்லாஹி.. 

ஹிஜ்ரி 11
ரபிவுல்அவ்வல்12
திங்கட்கிழமை
முற்பகல் நேரம்
63 வயது 4 நாட்கள் 
இப்பூவுலகை விட்டு மறைந்தார்கள்
(நூல்:-புகாரி ஷரீஃப்)

*பூமான்நபிமீது பாத்திமாநாயகிக்கு என்னஒருபாசம்..?*
__________***___________

*அண்ணல்நபி*
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அவர்களின்
இறுதி நேரம்... 

*"அன்பு மகளார் அன்னைபாத்திமா* ரலியல்லாஹு 
அன்ஹாஅவர்களை
அருகில்அழைத்து
ஏதோசொன்னார்கள்"

*"அன்னைபாத்திமா* 
(ரலி) அவர்கள் அழுதார்கள்
நபியவர்கள்
மீண்டும் ஏதோ சொன்னார்கள்
சிரித்தார்கள்.!?"

மாநபியவர்களின்
மறைவுக்குப் பின்... 

*அன்னைபாத்திமா* 
(ரலி) அவர்களிடம்
*அன்னைஆயிஷா* 
(ரலி) அவர்கள்

"நபியவர்கள் 
உங்களிடம் என்ன சொன்னார்கள்?
"நீங்கள் ஏன் 
அழுதீர்கள் பிறகு 
ஏன் சிரித்தீர்கள்?"
எனக் கேட்டதும்

*அன்னைபாத்திமா* 
(ரலி)அவர்கள் சொன்னார்கள்:

*நபி(ஸல்)அவர்கள்* 
என்னுடையகாதில்.. 

"பாத்திமா! 
எனக்கு ஏற்பட்ட இதே வலியினால் நான் இறந்து விடுவேன் என்றார்கள் நான்
அழுதேன்..!"

"நமது குடும்பத்தில் நீங்கள் தான் என்னை முதலில் சந்திப்பீர்கள் என்றார்கள்
நான் சிரித்தேன்.!"
என்றார்கள். 

அல்லாஹு அக்பர்
என்ன ஒரு பாசம்! 

*"நபிஸல்லல்லாஹு* அலைஹி வஸல்லம்
அவர்கள் நான் 
இறக்கப்போகிறேன்.!"
என சொன்னபோது

"பெருமானார்
(ஸல்) அவர்களை
பிரியப்போகிறோமே.!"
எனபாத்திமாநாயகி
அழுதார்கள். 

"நீங்கள் என்னை முதலில் சந்திப்பீர்கள்
அதாவது நீங்கள் இறந்து விடுவீர்கள் என்றபோதுஎன்றபோது... நாம்
மௌத்தாகப்போகிறோமே என அழவில்லை..!"

*"அண்ணல்நபி* ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அவர்களை சீக்கிரம் சத்திக்கப்
போகிறோமே என்ற 
சந்தோஷத்தில் 
சிரித்தார்கள்.!"

சனி, அக்டோபர் 08, 2022

ஹாஜி.நாகூர் ஈ.எம்.ஹனிபா பாடல்,

  1. எங்களின் இளமை காலங்களில் இஸ்லாமிய பாடல்களை பாடிய 
    இசை முரசு இ.எம்.நாகூர் அனிபா
    அவர்கள் எங்கள் நெஞ்சங்களில்
    நீங்காத இடம் பெற்றவர் ஆவார். பல
    அன்னாரின் பாடல்களை இன்றய
    தலை முறையினர் அவசியம் கேட்க
    வேண்டும்.மற்ற சமூகத்தினரும் விரும்பி கேட்கும் அளவிற்கு இருந்தன. அவரின் பாடல்கள் 
    இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளை இஸ்லாமியர்கள்
    புரிந்து கொள்ள,அதன்படி நடந்து
    கொள்ள வலியுறுத்துவனாக இருந்தன. 
    அன்னார் மறைந்து விட்டபோதிலும்
    அவர் பாடல்கள் என்றென்றும் ஒலித்து
    கொண்டு இருக்கும். எல்லாம் வல்ல இறைவன் அவர் செய்த பாவங்களை
    மன்னித்து சுவர்க்கத்தில் இடம் கொடுத்து அருள் புரிய துவா செய்வோம்.
    அன்னார் பாடிய பாடல்களின் பாடல்
    வரிகளை தொகுத்து கொடுத்து உள்ளேன் படித்து, பாடி பலன் பெறவும். 
    மேலும் இதை அனைவருக்கும்

    பகிரவும்.

    1.எல்லா புகழும் இறைவனுக்கு
    2.சொன்னால் முடிந்திடுமோ
    3.அல்லா அல்ஹம்து லில்லா
    4.ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் 
    5.ஞனத்தின் திறவுகோல் நாயகம் 
    6.கன்னியரே அன்னையரே கொஞ்சம்
    7.அல்லாவை நாம் தொழுதால்
    8.ஐந்து கடமைகளில் எத்தனை
    9.உலகம் இறைவனின் சந்தை மடம்
    10.ஃபாத்திமா வாழ்ந்த முறை
    11.தீனோரே நியாயமா மாறலாமா
    12.ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழை
    13.மௌத்தையே நீ மறந்து
    14.ஒருநாள் மதீனா நகர் தனிலே
    15.இறைவனிடம் கையேந்துங்கள்

    இஸ்லாமிய பாடல்கள்
    ——————————————————————————————

    1.எல்லா புகழும் இறைவனுக்கு

    எல்லா புகழும் இறைவனுக்கு
    எல்லா புகழும் இறைவனுக்கு
    அல்லா ஒருவனே துணை நமக்கு
    துணை நமக்கு…
    ஆற்றல் எல்லாம் கொண்டவனாம் அன்பு
    அருள் மழை எங்கும் பொழிபவனாம் (இசை)
    மாற்றம் எல்லாம் செய்பவனாம் நல்ல
    மான் புகழ் தந்து காப்பவனாம்
    காற்றும் மழையும் கதிரவனும்
    காற்றும் மழையும் கதிரவனும்
    ஆற்றும் பணிகள் எல்லாம்
    அவன் செயலாம்
    அந்த வல்லோன் இறைவனை நாம்
    வணங்கிடுவோம் அவன்
    வான் மறை வழி உணர்ந்து வாழ்ந்திடுவோம்

    எல்லா புகழும் இறைவனுக்கு…

    பார்க்கும் பார்வை அவனாகும் அந்த
    பார்வைக்கு ஒளியும் அவனாகும்
    தீர்ப்பு நாளின் பதியாகும் அவன்
    தீர்ப்பே நமக்கு கதியாகும்
    கேட்க்கும் கடமை நம்மிடத்தில்
    கேட்க்கும் கடமை நம்மிடத்தில்
    கொடுக்கும் உரிமையோ அவனிடத்தில்
    அந்த தூயோன் ரஹ்மானை
    தொழுதிடுவோம் அவன்
    திருக் குறுஆன் வழியில் நடந்திடுவோம்

    எல்லா புகழும் இறைவனுக்கு
    எல்லா புகழும் இறைவனுக்கு
    அல்லா ஒருவனே துணை நமக்கு
    துணை நமக்கு…

    எல்லா புகழும் இறைவனுக்கு…

    ——————————————————————————————

    2.சொன்னால் முடிந்திடுமோ..

    சொன்னால் முடிந்திடுமோ சொல்வதென்றால் இயன்றிடுமோ
    சொன்னால் முடிந்திடுமோ சொல்வதென்றால் இயன்றிடுமோ
    அண்ணல் நபி பேரழகை ஆற்றல் மிகும் சொல்லழகை
    அண்ணல் நபி பேரழகை ஆற்றல் மிகும் சொல்லழகை

    வெண்ணிலவும் வியப்படையும் வேந்தர் முகம் கண்டு விட்டு…
    வெண்ணிலவும் வியப்படையும் வேந்தர் முகம் கண்டு விட்டு
    விண்ணகத்துத் தாரகையும் வெட்க்கப்படும் பார்த்து விட்டு
    என்னவென்பேன் என்னவென்பேன் ஏந்தலர் பேரழகை

    அண்ணலிடம் அறிவு வந்து ஆயிரம் பாடம் பெறும்…
    அண்ணலிடம் அறிவு வந்து ஆயிரம் பாடம் பெறும்
    பண்பு வந்து நபியிடத்தில் பணிவைக் கேட்டுச் செல்லும்
    என்னவென்பேன் என்னவென்பேன் ஏந்தலர் சொல்லழகை

    திரும்பும் திசை எல்லாம் திருநபி செயல் மணக்கும்…
    திரும்பும் திசை எல்லாம் திருநபி செயல் மணக்கும்
    அருள் மறை வேதத்திலே அவர் புகழ் நிறைந்திருக்கும்
    என்னவென்பேன் என்னவென்பேன் ஏந்தலர் பெருமைதனை

    சொன்னால்…முடிந்திடுமோ சொல்வதென்றால் இயன்றிடுமோ
    அண்ணல் நபி பேரழகை ஆற்றல் மிகும் சொல்லழகை
    அண்ணல் நபி பேரழகை ஆற்றல் மிகும் சொல்லழகை

    சொன்னால் முடிந்திடுமோ சொல்வதென்றால் இயன்றிடுமோ…

    ——————————————————————————————

    3.அல்லா அல்ஹம்து லில்லா

    அல்லா அல்ஹம்து லில்லா எல்லா புகழும் அல்லா

    உனக்கே சொந்தம் ஆகுமே அல்லா உனக்கே சொந்தம் ஆகுமே உனக்கே சொந்தம் ஆகுமே அல்லா உனக்கே சொந்தம் ஆகுமே…

    யா…ரஹுமானே யா…ரஹீமே யா…ரஹுமானே யா…ரஹீமே அருளைப் பொழிய வேண்டும் உலகில் அமைதி நிலவ வேண்டும் அருளைப் பொழிய வேண்டும் உலகில் அமைதி நிலவ வேண்டும் அல்லா அல்ஹம்து லில்லா எல்லா புகழும் அல்லா உனக்கே சொந்தம் ஆகுமே அல்லா உனக்கே சொந்தம் ஆகுமே…

    வையகம் எங்கும் அமைதி இல்லை தீய வன்முறையால் மக்கள் படும் தொல்லை (இசை) வையகம் எங்கும் அமைதி இல்லை தீய வன்முறையால் மக்கள் படும் தொல்லை நியாயம் தருமம் வர வேண்டும் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் வல்லவனே மிக நல்லவனே வாழ்வின் நன்னெறி காப்பாய் இறையோனே வல்லவனே மிக நல்லவனே வாழ்வின் நன்னெறி காப்பாய் இறையோனே அல்லா அல்ஹம்து லில்லா எல்லா புகழும் அல்லா உனக்கே சொந்தம் ஆகுமே அல்லா உனக்கே சொந்தம் ஆகுமே…

    நெருப்பினை பூங்கா வனமாக்கி நபி இபுறாஹீம் உயிர் காத்தவனே (இசை) நெருப்பினை பூங்கா வனமாக்கி நபி இபுறாஹீம் உயிர் காத்தவனே சிறப்புடன் நைல் நதி பிளந்திடவே நபி மூசா நலம் பெறச் செய்தவனே ரஹ்மத்தாய் நபியை தந்தவனே புவி அமைதிக்கு அருள்வாய் மறையோனே ரஹ்மத்தாய் நபியை தந்தவனே புவி அமைதிக்கு அருள்வாய் மறையோனே அல்லா அல்ஹம்து லில்லா எல்லா புகழும் அல்லா உனக்கே சொந்தம் ஆகுமே அல்லா உனக்கே சொந்தம் ஆகுமே…

    தூதர் நபியை பகைவர்கள் பின் தொடர்ந்ததும் தௌர் என்னும் குகையினிலே (இசை) தூதர் நபியை பகைவர்கள் பின் தொடர்ந்ததும் தௌர் என்னும் குகையினிலே ஊதினால்ப் பறக்கும் சிலந்தி வலைக் காவல் உதவினாய் உனக்கே ஈடும் இல்லை காத்தமுன் நபியைக் காத்தவனே அவர் கௌமையும் காப்பாய் கனிவுடனே காத்தமுன் நபியைக் காத்தவனே அவர் கௌமையும் காப்பாய் கனிவுடனே அல்லா அல்ஹம்து லில்லா எல்லா புகழும் அல்லா அல்லா அல்ஹம்து லில்லா எல்லா புகழும் அல்லா உனக்கே சொந்தம் ஆகுமே அல்லா உனக்கே சொந்தம் ஆகுமே உனக்கே சொந்தம் ஆகுமே அல்லா உனக்கே சொந்தம் ஆகுமே…

    ——————————————————————————————–
    4.ஆதி அருள் கனிந்திலங்கி

    ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக
    ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக
    நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குர்ரானாம்

    ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக
    நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குர்ரானாம்

    மெய்யுணர்வின் நல்லடியார் மேதினியில் வாழ்வர்க்கே
    ஐய்யமற வழி காட்டும் ஆண்டவனின் திருமறையாம்

    மக்கா நகர் அருகிருக்கும் மலைக் குகையாம் ஹீராவில்
    தக்க நபி மனம் குளிர தழைத்துயர்ந்த திருமறையாம்
    ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக
    நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குர்ரானாம்

    வான் கமழும் ரமலானாம் வளம் கொழிக்கும் திங்களிலே
    தீன் கமழ வந்துற்ற திகழொளியின் திருமறையாம்
    ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக
    நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குறுஆனாம்

    கதி அளிக்கும் லைலத்துல் கதிர் இரவில் இறை அளித்த
    நிதி அனைத்தும் கொண்டிலங்கும் நிகரில்லா திருமறையாம்
    ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக
    நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குறுஆனாம்...
    ——————————————————————————————–
    5.ஞனத்தின் திறவுகோல் 

    ஞனத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா.. நபி நாயகம் அல்லவா..

    ஞனத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா.. நபி நாயகம் அல்லவா..
    கானத்தில் நான் அதை கொஞ்சம் இன்றி சொல்லவா
    ஞனத்தின் திறவுகோல்..

    பள்ளி சென்று படிக்கவில்லை பாடம் ஏதும் கேட்கவில்லை(2)
    சொல்லிதரும் தகுதி இந்த துனியாவில் எவர்க்குமில்லை (2)
    அல்லாஹ்வே ஆசியுடன் அனைத்துமே ஆச்சரியம்
    சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளே
    ஞனத்தின் திறவுகோல்..

    வானம் அதை பார்த்திருந்தார் வல்லல் நபி சிந்தித்தார்(2)
    வான் மழை கடல் அலையை கண்டிரையை புகழ்ந்திட்டார்(2)
    இறைவன் சொல்லி தந்தான் சாந்த நபி எழுதி கொண்டார்
    சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளே
    ஞனத்தின் திறவுகோல்..

    கலிமா தொழுகை நோன்பு ஜக்காத்து ஹஜ்ஜுடனே(2)
    பலுது ஏதுமில்லாத பண்பான வாழ்க்கை முறை(2)
    பகுப்புகள் நடந்தனறே வாஞ்சை நபி தொடர்ந்தனறே
    சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளே
    ஞனத்தின் திறவுகோல்..

    பொருளியல் அரசியலில் புதுமை விஞ்கானமதில்(2)
    அருளியல் இல்லறத்தில் ஆன்மிக வழிமுறையில்(2)
    எத்துரையும் கற்றிருந்தார் ஏகன் அருள் பெற்றூயர்ந்தார்
    சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளே
    ஞனத்தின் திறவுகோல்..

    பண்பான நபிபெருமான் பல்கலைகழகமன்றோ(2)
    அன்பான மாணவராம் அவர்வழி உம்மத்தன்றோ(2)
    தேர்வினிலே வென்றிடுவோம் தீன்வழியில் நின்றிடுவோம்
    சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளே
    ஞனத்தின் திறவுகோல்..

    ஞனத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா.. நபி நாயகம் அல்லவா..
    ரசூல் நாயகம் அல்லவா..
    கானத்தில் நான் அதை கொஞ்சம் இன்றி சொல்லவா
    ஞனத்தின் திறவுகோல்.
    ——————————————————————————————–
    6.கன்னியரே அன்னையரே

    கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..

    கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..

    நம் கன்மனியாம் பாத்திமாவின் சரிதம் கேளுங்கள்.

    மாதவ தூதர் முஹமது நபியின் மகளாக வந்து பிறந்தார்

    போதில்லாத முழுமதியெனவே குலகொடியாக வளர்ந்தார்

    தந்தையின் சொல்லை சிந்தையில் ஏந்தி சங்கை வளர்மங்கையானரே..

    கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..(2)

    அன்னை கதிஜா நன்னைய பண்பை அகமதில் தாங்கி சிறந்தார்

    கன்னில் கருனை கையில் தானம் கல்பில் இறைவேதம் சுமந்தார்

    செல்வத்தை மறுத்து வறுமையை ஏற்று சீமாட்டியாகவெ வாழ்ந்தாரே..

    கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..(2)

    வானவர் வாழ்த்த யாவரும் போற்ற வீரர் அலியை மணந்தார்

    தீன் குல பெண்கள் துறைவை ஒழிக்க சிறப்புடன் இல்லறம் புகுந்தார்

    கணவர் அலியை கன்னுக்குள் வைத்து கணிவாய் பணிவிடை செய்தாரெ..

    கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..(2)

    சொர்க்கத்தின் நிழழாய் கணவரை மதித்து சோபன வாழ்வில் மிதந்தார்

    அருமை மைந்தர்கள் ஹசன் ஹுசைனின் அன்பு தாயகி மகிழ்ந்தார்

    புவன தூதர் தந்தை முஹம்மதை பொக்கிசமாகவே மதித்தாரே...

    கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..(2)

    அராபாத் வெளியில் இறைவன் தூதை அண்ணல் நபி முடித்தார்கள்

    இறைவன் அழைப்பை ஏற்றே நபிகள் இம்மை வாழ்வை விடுத்தார்கள்

    தந்தையை இழந்த செல்வி பாத்திமா தனலில் குழுவாய் துடித்தார்

    கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..(2)

    எம்பெருமானார் இதயமாகவே இலங்கிய மாதர் திலகம்

    தம்முடன் மெலிந்து கன்னொலி மங்கி சருஹென மாறிபோனார்

    விந்தைகள் சூலும் இப்புவிமீது விரைந்தே கழிந்தன மாதங்கள்

    கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..(2)

    இம்மையின் வாழ்வு முடிவதை அன்று இதயத்தினலே உணர்ந்தார்

    தம்முடன் குளித்து கஃபன் உடை தரித்து கணவரின் மார்பில் சரிந்தார்

    கண்ணீர் முத்துகள் கன்னத்தில் உருள கணவரை கணிவுடன் பார்த்தாரே..

    கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..(2)

    வல்லோன் நல்கிய அர்சின் உயிரை விடைகொடுத்து அனுப்புங்கள் என்றார்

    பிள்ளை செலவங்கள் ஹசன் ஹுசயினை பிடித்தவர் கையில் கொடுத்தார்

    அல்ஹம்ந்துலில்லாஹ் என்றே கூறி அகிலத்தின் வாழ்வை முடித்தாரே..அகிலத்தின் வாழ்வை முடித்தாரே

    இன்னா நிலாஹி வைன இலைஹி ராஜிவூன்

    இன்னா நிலாஹி வைன இலைஹி ராஜிவூன்

    இன்னா நிலாஹி வைன இலைஹி ராஜிவூன்

    ——————————————————————————————–

    7.அல்லாவை நாம் தொழுதால்…

    அல்லாவை நாம் தொழுதால்...சுகம் எல்லாமே ஓடி வரும்
    அந்த வல்லோனை நினைத்திருந்தால்...
     நல்ல வாழ்க்கையும் தேடி வரும்...

    அல்லாவை நாம் தொழுதால் சுகம் எல்லாமே ஓடி வரும்
    வல்லோனை நினைத்திருந்தால் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
    நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
    அல்லாவை நாம் தொழுதால்... 

    பள்ளிகள் பல இருந்தும் பாங்கோசை கேட்ட பின்பும்
    பள்ளிகள் பல இருந்தும் பாங்கோசை கேட்ட பின்பும்
    பள்ளி செல்ல மனம் இல்லையோ படைத்தவன் நினைவில்லையோ
    பள்ளி செல்ல மனம் இல்லையோ படைத்தவன் நினைவில்லையோ

    அல்லாவை நாம் தொழுவோம்... 

    வழி காட்ட மறை இருந்தும் வள்ளல் நபி சொல் இருந்தும்
    வழி காட்ட மறை இருந்தும் வள்ளல் நபி சொல் இருந்தும்
     விழி இருந்தும் பார்பதில்லையோ செவி இருந்தும் கேட்பதில்லையோ
    விழி இருந்தும் பார்பதில்லையோ செவி இருந்தும் கேட்பதில்லையோ

     அல்லாவை நாம் தொழுவோம்... 

     இறையோனின் ஆணைகளை இதயத்தில் ஏற்றிடுவோம்
    இறையோனின் ஆணைகளை இதயத்தில் ஏற்றிடுவோம்
    இறைத் தூதர் போதனையை இகம் எங்கும் பரப்பிடுவோம்
    இறைத் தூதர் போதனையை இகம் எங்கும் பரப்பிடுவோம்

    அல்லாவை நாம் தொழுதால் சுகம் எல்லாமே ஓடி வரும்
    வல்லோனை நினைத்திருந்தால் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
     நல்ல வாழ்க்கையும் தேடி வரும் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
     நல்ல வாழ்க்கையும் தேடி வரும் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
    ——————————————————————————————–
    8.ஐந்து கடமைகளில் எத்தனை

    ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள்
    அத்தனையும் சொர்கத்தின்
    சங்கை மிகு முத்திரைகள் 
    ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள்
    அத்தனையும் சொர்கத்தின்
    சங்கை மிகு முத்திரைகள்
    தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
    தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்

    வித்தகன் அல்லாவின் உத்தம தூதர் நபி இத்தரையோர்க் குரைத்த போதம்
    வித்தகன் அல்லாவின் உத்தம தூதர் நபி இத்தரையோர்க் குரைத்த போதம்
    சத்திய இஸ்லாத்தின் முத்தான கொள்கையின் சொத்தாக கிடைத்திட்ட வேதம்
    சத்திய இஸ்லாத்தின் முத்தான கொள்கையின்
    சொத்தாக கிடைத்திட்ட வேதம்
    தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
    தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்

    கலிமா தொழுகையுடன் கவின் மிகு நோன்பிருந்து
    கனிவுடன் ஜக்காத்தைக் கொடுத்து
    கலிமா தொழுகையுடன் கவின் மிகு நோன்பிருந்து
    கனிவுடன் ஜக்காத்தைக் கொடுத்து
    நலமுடன் உடலும் பொருளும் இருந்தால் ஹஜ்ஜை முடிக்கணும் அடுத்து
     நலமுடன் உடலும் பொருளும் இருந்தால் ஹஜ்ஜை முடிக்கணும் அடுத்து

    தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
    தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்

    இறைவன் ஒருவன் என்ற இனிய கொள்கையை
    மறையாய் கொண்டது இஸ்லாம்
    இறைவன் ஒருவன் என்ற இனிய கொள்கையை
     மறையாய் கொண்டது இஸ்லாம்
    முறையாய் மனிதர்களை ஓர் குலமாக்கிட நெறியாய் திகழ்வது இஸ்லாம்
    முறையாய் மனிதர்களை ஓர் குலமாக்கிட நெறியாய் திகழ்வது இஸ்லாம்

    தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
    தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
    உள்ளத்தில் ஒளி ஊட்டி உணர்வில் அருள் கூட்டி
    கண்ணியம் காத்திடும் மார்கம்
    உள்ளத்தில் ஒளி ஊட்டி உணர்வில் அருள் கூட்டி
    கண்ணியம் காத்திடும் மார்கம்
    மன்னர் முஹம்மதை ஜன்னத்தில் காண்பதற்க்கு
     புண்ணிய வழி சொல்லும் மார்கம்
    மன்னர் முஹம்மதை ஜன்னத்தில் காண்பதற்க்கு
     புண்ணிய வழி சொல்லும் மார்கம்

    தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
    தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்

    ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள்
    அத்தனையும் சொர்கத்தின்
    சங்கை மிகு முத்திரைகள்
    ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள்
    அத்தனையும் சொர்கத்தின்
    சங்கை மிகு முத்திரைகள்
    தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
    தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்

    ——————————————————————————————–

    9.உலகம் இறைவனின் சந்தை மடம்

    உலகம் இறைவனின் சந்தை மடம்
    இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்
    உலகம் இறைவனின் சந்தை மடம்
    இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்
    இதுவல்ல நமக்கு சொந்த இடம்
    இதுவல்ல நமக்கு சொந்த இடம்
    அங்கே இருக்குது வேறு உரிய இடம்
    உரிய இடம்...

    கருவூரில் இருந்து புறப்படுவான் கொஞ்சம்
    களைப்பாற இங்கே தங்கிடுவான்
    உறவோடு உரிமையும் கொண்டாடுவான் அவன்
    ஒருவருக்கும் சொல்லாமல் ஓடிடுவான்

    இருப்பவன் இங்கேயே நிலைப்பதில்லை யாரும்
    இதை விட்டுப் போனவன் திரும்பவில்லை
    மறுப்பவன்  இதனை யாரும் இல்லை
    மனதில் ஆசைகள் மட்டும் குறையவில்லை

    பிறந்ததும் பாங்குண்டு தொழுகை இல்லை அவன்
    இறந்ததும் தொழுகைக்கு பாங்கு இல்லை
     புரிந்தவன் ஆணவம் கொள்வதில்லை இதை
    புரியாதவன் அறிவு தெளிவதில்லை

    தொடரும் கதை ஒரு நாள் முடிந்து விடும் அந்த
    தூயோனின் தீர்ப்பு அதைக் காட்டி விடும்
    நடை போட்ட முன்னோர்கள் சென்ற இடம் நீ
    நினைத்தாலே சிந்தனைகள் மாறி விடும்    

    உலகம் இறைவனின் சந்தை மடம்
    இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்
    உலகம் இறைவனின் சந்தை மடம்
    ——————————————————————————————–
    10.ஃபாத்திமா வாழ்ந்த முறை

    ஃபாத்திமா வாழ்ந்த முறை உனக்கு தெரியுமா?

    ஃபாத்திமா வாழ்ந்த முறை உனக்கு தெரியுமா?
    அந்த பாதையிலே வந்த பெண்ணே நீ சொல்லம்மா.

    உத்தம திருநபியின் மகளலல்லவா
    நமது உண்மை சீலர் அலியாரின் மனைவியல்லவா
    சத்தியம் காத்து நின்ற இதயம் அல்லவா
    நல்ல செல்வங்கள் ஹஸன் ஹூஸைன் அன்னையல்லவா
    அருமை அன்னையல்லவா.

    கணவரின் சொல்வணங்கி நடந்தவரன்றோ
    பெரும் கண்ணியத்தின் இருப்பிடமாய் திகழ்ந்தவரன்றோ
    குணமுடன் எளிய வாழ்க்கை வாழ்ந்தவரன்றோ
    நல்ல குடும்பந்தன்னில் குலவிளக்காய் இருந்தவரன்றோ
    இருந்தவரன்றோ

    இன்னும் தயக்கமென்ன எண்ணிப் பாரம்மா இந்த
    இக வாழ்க்கை நிலையல்ல உணர்ந்து கொள்ளலமா உண்மை
    தீன் வழியை மறந்ததேனம்மா நல்ல உத்தமியாம் பாத்திமா போல் வாழ்ந்து காட்டம்மா வாழ்ந்து காட்டம்மா
    ——————————————————————————————

    11.தீனோரே நியாயமா மாறலாமா

    தீனோரே நியாயமா மாறலாமா
    தூதர் நபி போதனையை மீறலாமா
    உள்ளம் சோறலாமா 

    காணல் நீராகும் புவி வாழ்வு இங்கே
    அது கரை சேரும் ஒரு நாளில் அங்கே
    தீனை உணராமலே திரும்பி பாராமலே
    இந்த தரை மீது தடுமாறி தேயலாமா

    வாசல் வழியோரம் கையேந்தி நின்று
    கெஞ்சும் எளியோரின் துயர் கோலம் கண்டு
    நெஞ்சம் இறங்காமலே கொஞ்சம் வழங்காமலே
    நாவு கூசாமல் நிலை மாறி ஏசலாமா

    வட்டி தொழிலாலே கிடைக்கின்ற லாபம்
    ஏழை விழிநீரில் எரிகின்ற தீபம்
    என்று அறியாமலே நன்கு புரியாமலே
    ஏக இறையோனின் நெறியிழந்து வாழலாமா
    திருமறையின் அருள்

    திருமறையின் அருள் மொழியில் விளைந்திருப்பது என்ன? அறிவு.
    இறை தூதர் நபி பொன் மொழியில் பொதிந்திருப்பது என்ன? அன்பு.
    அறிவில் உருவாகி அன்பில் நிறைவதென்ன? ஞானம்
    அந்த ஞானத்தை வழங்கிடும் மூலப் பொருள் என்ன? மௌனம் மௌனம்.

    உருவமற்ற இறைவன் வாழும் இடம் எதுவோ? உள்ளம்.
    அந்த உள்ளத்தினில் சுடர் போல் விளங்குவது எதுவோ? உண்மை
    உண்மையினை ஈன்ற அன்னையவள் யாரோ? பொறுமை
    அந்த பொறுமை நபிகள் நாதர் போதித்தது என்ன? கடமை 5 கடமை

    ஏக இறையோனை ஏற்றுக் கொள்வதென்ன? கலிமா
    அந்த கலிமா பொருள் உணர்ந்து கடைப்பிடிப்பதென்ன? தொழுகை
    தொழுகையினை மேலும் தூய்மை செய்வதென்ன? நோன்பு
    நோன்பிருந்த பின்பு மாண்பளிப்பதென்ன? ஜகாத்து
    அந்த ஈகை வழியில் செல்லும் இறுதிக் கடன் என்ன? ஹஜ்ஜூ புனித ஹஜ்ஜூ
    ——————————————————————————————
    12.ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழை

    ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழை பாலகன்

    உபவாச நன்மை சொல்லுறேன்
    கேட்பீரே மாந்தரே
    உயர் நோன்பு மாத பெருமையே
    இதுவாகும் மாந்தரே

    ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழைப் பாலகன்
    ஓயாது எண்ணினான் மனதில் நோன்பையே நிதம்
    பெரும் ஆனந்தம் கொண்டான் ரமழான் மாதம் வந்ததும்
    தன் தாயை கட்டி தழுவிக் கொண்டு கெஞ்சினான் சனம்
    மறவாது சஹரு நேரமதில் எழுப்ப வேண்டுமாய்
    மன்றாடினானே நோன்பு நோற்க வேண்டும் என்றவன்

    மாதா மதிக்க வில்லை அருமை மைந்தன் சொன்னதை
    மறு நாளின் காலை எழுந்து மனம் பதறி வருந்தினான்
    ஆதாரமின்றி வருந்துவதை கண்ட தாயவள்
    அன்போடனைத்து ஆறுதலாய் சாற்றினாள் இதை
    போதாத வயதில் நோன்புனக்கு கடமையல்லவே
    பொறு இன்னும் கொஞ்சம் காலம் வரை என்று கூறினாள்

    வல்லோன் உரைத்த திருமறையாம் குர்ஆன் என்பதை
    வையம் சிறக்க நமக்களித்த மாதம் அல்லவோ
    சொல்வார்கள் நோன்பு நோற்பவர்க்கு சொர்க்கம் மீதிலே
    சுகமுண்டு என்ற போதனையை நீ அறியாயோ
    கல்லோ உன் நெஞ்சு கூறும் தாயே கருணையில்லையா
    கண்ணாலே எந்தன் ஆண்டவனை காண வேண்டுமே

    அந்நாள் இரவு முழுதும் அவன் தூங்க வில்லையே
    ஆசை அவனின் கண்களிலே ஆட்சி செய்ததே
    ஏண்ணம் போல் சஹரு நேரமது வந்த போதிலே
    எழுந்தோடி நோன்பு வைத்து மனம் புரிப்பெய்தவே
    ஆனாலும் அன்னை தந்தை கூடி அதட்டினார்களே
    ஆகாது என்று சாதனையால் வம்பு பேசினான்

    திருவான அஸரு என்னும் தொழுகை நேரம் நெருங்கவே
    தண்ணீரின் தாகம் அதிகமாகி நாவரண்டதால்
    பாரிதாபமான நிலையில் பையன் மூச்சு திணறியே
    பாரிவோடு தாயின் மடியில் சாய்ந்து மூர்ச்சையாகினான்
    பிரியம் மிகுந்த செல்வன் உயிர் பிரிந்து சென்றதால்
    போனாயே என்று கூவி அழுது புலம்பி வாடினாள்

    இனிமை நிறைந்த பாங்கின் ஓசை செவியில் கேட்கவே
    இறையோனை தொழுது வேண்டினார்கள் ஒன்று கூடியே
    தனிமையில் அன்னை ஆண்டவன் பால் கைகளேந்தியே
    தகுமோ இறைவா என்று துஆ கேட்டு புலம்பினாள்
    இனி யாது செய்வேன் என்று அன்னை மனது நோகவே
    இதயம் உடைந்து வேதனையால் இன்பம் நீங்கினாள்

    தந்தை அருகில் சோகமதாய் தவிக்கும் போதிலே
    தலைவாசலிலோர் சாதுமகான் வந்துமே நின்றார்
    எந்தைகளே நான் நோன்புடையோன் ஏழை ஆதலால்
    ஏதேனும் உணவு தந்துதவ இயலுமோ என்றார்
    சிந்தை இரங்கி வீட்டிலன்று சமைத்திருந்ததை
    சந்தோஷமாக தந்த போது சாது வினவினார்.

    கவலை மிகுந்த முகத்துடனே காணப்படுவதேன்
    கடவுள் கருணை உங்கள் மீதுண்டாகுக வென்றார்
    சவமாகினானே எங்கள் ஒரே செல்வ பாலகன்
    சாகா வரமே தருக உம்மால் ஆகுமோ வென்றார்
    தேவா சிறுவன் நோன்பிருந்து உயிரை நீத்ததால்
    தெய்வீக சக்தி உண்டெனில் உயிர் வாழ செய்குவீர்

    ஆயாசமாக வீனில் யாரும் வருந்திட வேண்டாம்
    அடியேனுக்கந்த பையனை நீர் காட்டுவீரென்றார்
    வாயாற வாழ்த்தி வாருமென்று உள்ளே அழைத்தார்
    வந்தார் உடனே சாது  பையன் பக்தியைக்  கண்டார்
    நீயே எழுவாய் என்று சாது கூறினாரதே
    நிமிஷத்திலே எழுந்து சிறுவன் இறையை வணங்கினான்

    ஆனந்த காட்சி இதனை கண்ட அன்னை தந்தையும்
    அன்போடு சாதை தழுவிக் கொண்டு இறையை போற்றினார்
    தீனோர்களே ரமழான் மாதம் மேன்மையானதே
    துன்பங்கள் தீரும் இறைவனுக்கே நன்றி நவிலுவீர்
    என்றும் பெறுவார் நோன்பிருந்தார் இறைவன் ஆசியை
    எனக்கூறி மறைந்தாரே சாது உலக மாந்தரே

    உலக மாந்தரே உலக மாந்தரே
    —————————————————————————————--

    13.மௌத்தையே நீ மறந்து…

    வானகம் வையகம் யாவும் மறைந்து விடும்

    ஆனதினால் மானிடனே ஆண்டனவனை நீ  தொழுவாய்

    மௌத்தையே நீ மறந்து இங்கு வாழலாகுமா

    மாறிடும் வாழ்வினில் மூழ்குதல் நியாயமா

    மன்னாதி மன்னரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை.

    மகத்தான நெறியில் வாழ்ந்த மனிதரெல்லாம் நிலைத்ததில்லை

    பொன்னான செல்வரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை

    புகழோடு வாழ்ந்திருந்த பூமான்கள் நிலைத்ததில்லை.

    பூதலத்தின் இந்த நிலை புரிந்திடாமல் பேசுகிறாய்.

    ஆல்லாஹ்வின் அருட்சுடராம் அண்ணல் தாஹா நபி எங்கே

    ஆஞ்சாத வீரம் கொண்ட ஆண்மை அலியார் எங்கே

    ஏல்லோரும் போற்றுகின்ற அன்னை ஃபாதிமா எங்கே

    இணையில்லா தியாகிகளாம் இமாம் ஹஸன் ஹூஸைன் எங்கே

    இந்த நிலை அறிந்திடாமல் எத்தனை நாள் நீ இருப்பாய்;

    நிச்சயம் மரணம் வரும் நீ ஒரு நாள் இறந்திடுவாய்

    நேசரெல்லாம் அழுத பின்னே நீ சந்தூக்கில் ஏறிடுவாய்

    அத்தான கப்ருஸ்தானில் நீ அடங்கி மண்ணாவாய்

    அறுதியில் உனை எழுப்பும் இறுதி கியாமத் நாளும் வரும்

    ஆந்நாளை உணர்ந்திடாமல் ஆனவத்தால் பிதற்றுகிறாய்

    நன்மை தீமை செயல்கள் மீஜானில் நிறுக்கப்படும்

    நன்மை தட்டு கனத்து விட்டால் நல்ல சுவர்க்கம் கிடைத்து விடும்

    தின்மை எடை கூடி விட்டால் தீய நரகம் வீழ்ந்திடுவாய்

    தீங்கான இந்த நிலை தோன்றிடாமல் தவிர்த்திடுவாய்

    திருமறை நபி வழியில் தினமும் சென்று வாழ்ந்திடுவாய்.


    ——————————————————————————————–

    14.ஒருநாள் மதீனா நகர் தனிலே…

    ஒருநாள் மதீனா நகர் தனிலே
    ஓங்கும் மஸ்ஜிது நபவியிலே (2)

    பெருமான் நபிகள் பகர்ந்தார்கள் (2)

    பண்புடன் தோழர்கள் மத்தியிலே

    உதய நிலவின் குளிராக

    உலகில் தோன்றிய உம்மி நபி

    நீதி மறையின் திரு உருவாய்

    நிதமும் வாழ்ந்த தூதர் சொன்னார்

    இறுதி நாள் நெருங்கி வருகிறது

    இறைவன் அழைப்பும் தெரிகிறது

    கருணை இறைவன் சொல் கேட்டு

    கடமையை செய்ததில் குறையுள்ளதோ

    யாருக்கும் தவறுகள் செய்தேனோ

    எவருக்கும் துன்பம் தந்தேனோ (2)

    கூறுங்கள் அன்பு தோழர்களே

    குறைகள் இருந்தால் கூறுங்கள்

    எப்போதேனும் சிறு பிழைகள்

    என் வாழ்வில் ஏதும் செய்தேனோ

    தப்பாது இங்கே சொல்லிடுவீர்

    தயங்காமல் அதனை ஏற்றிடுவேன்

    அது கேட்ட தோழர்கள் நெஞ்சங்கள்

    அதிர்ந்தது அங்கமெல்லாம் நடுங்கியே

    நீதி தவறாத நாயகமே

    தாங்கள் நன்மையின்றி தீமை செய்ததில்லை

    அப்போது ஒருவர் எழுந்து நின்றார்

    அவர் தான் உகாஷா எனும் தோழர்

    ஒப்பில்லாத இறை தூதே

    ஓர் குறை உமக்கு உண்டு என்றார்

    சொன்னதும் ஸஹாபா பெருமக்கள்

    சினத்தால் துடித்து எழுந்தார்கள்

    அண்ணல் பெருமான் அமைதியுடன்

    ஆத்திரம் வேண்டாம் அமர்க என்றார்

    என்ன குறைகள்; இருந்தாலும்;;

    இயம்புக அதனை நீக்கிடலாம்

    திண்ணமாய் அல்லாஹ் அறிந்திடுவான்

    தீமைகளின்றி காத்திடுவான்.

    உத்தம நபியே இரஸூலே

    ஒட்டகை மேல் தாங்கள் இருக்கையிலே

    சித்த மகிழ்வோடு நான் பிடித்து

    சீராய் மணலில் நடக்கையிலே

    சாட்டையை சுழற்றி ஒட்டகையை

    சட்டென தாங்கள் அடித்தீர்கள்

    ஒட்டி நடந்த என் உடம்பில்

    ஓரடி விழுந்தது அப்போது

    அதற்கு பதிலாய் தங்களை நான்

    அடித்திட அனுமதி வேண்டுகிறேன்

    எதிலும்; நீதி தவறாத

    இரஸூல் நபியதை ஏற்றார்கள்

    உண்மை உரைத்தீர் என் தோழரே

    உமது உள்ளம் சாந்தி பெற

    என்னை அடியும் என்றார்கள்

    இசைவாய் அங்கே நின்றார்கள்.

    என்னை அடித்த சாட்டை இங்கே

    இல்லே தங்களின் வீட்டில் உண்டு

    எண்ணம் நிறைவேற வேண்டுமதை

    ஏந்தலே எடுத்து வர சொல்லுங்கள்

    இனிய பிலாலே ஏகிடுவீர்

    எடுத்து வாரும் சாட்டை தனை

    கண்ணீரோடு பிலால் விரைந்தார்

    கருணை நபியின் இல்லத்துக்கே

    அங்கே அன்னை ஃபாதிமாவும்

    ஆருயிர் மக்கள் ஹஸன் ஹூஸைனும்

    பாங்காய் மூவரும் வீட்;டினிலே

    பண்பின் உரைவிடமாய் திகழ்ந்தார்

    பாச மிகுந்த அன்பர் பிலால்

    பாரிவுடன் ஃபாதிமா எதிர் நின்று

    நேசம் தவழ்ந்திடும் சபைதனிலே

    நடந்ததை நயமுடன் எடுத்துரைத்தார்

    செய்தியை செவியில் கேட்டவுடன்

    சிந்தையில் வேதனை பொங்கியது

    தூய என் தந்தை உடல் நலமில்லை

    தண்டனை எப்படி தாங்கிடுவார்

    ஏன்றே கூறி சாட்டை தனை

    ஏடுத்து பிலாலிடம் தரும் போது

    நன்றே சொல்லும் உகாஷாவிடம்

    நானே அடியை ஏற்றிடுவேன்.

    அருமை குழந்தைகள் ஹஸன் ஹூஸைனும்

    அழுது கண்ணீர் வடித்தார்கள்

    பெருமை நிறைந்த பாட்டனாருக்கு

    பதிலாய் எங்களை அடிக்கட்டுமே

    துயரம் மேலிட சாட்டைதனை

    துரிதமுடன் பிலால் எடுத்து சென்றார்

    பயமில்லாது உகாஷாவிடம்

    பெருமான் நபிகள் கொடுத்தார்கள்

    சாட்டையை கையில் வாங்கியதும்

    சாந்த நபியிடம் அவர் சொன்னார்

    சட்டையில்லாது நான் இருந்தேன்

    செம்மலே தாங்கள் அடிக்கயிலே

    கேட்டதும் ஹாத்தமுன் நபியவர்கள்

    பாpவுடன் சட்டையை நீக்கியதும்

    சாட்டையை தூக்கி எறிந்து விட்டு

    தாவியனைத்தார் ஆவலுடன்

    நுபுவத்தொளிரும் நபி முதகில்

    நினைத்தது போல முத்தமிட்டார்

    உணர்ச்சி உள்ளம் குளிர்ந்திடவே

    உவகையில் மீண்டும் முத்தமிட்டார்

    சுற்றிலும் நின்ற ஸஹாபாக்கள்

    சோபனம் கூறி வாழ்த்தினரே

    மட்டில்லாத மகிழ்ச்சியிலே

    மஸ்ஜிதுந்நபவி திளைத்திடுமே

    ஸல்லல்லாஹூ அலா முஹம்மது

    ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்

    ——————————————————————————————-

    15.இறைவனிடம் கையேந்துங்கள்…

    இறைவனிடம் கையேந்துங்கள்

    அவன் இல்லையென்று சொல்வதில்லை

    பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் அவன்

    பொக்கிஷத்தை மூடுவதில்லை.

    இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன்

    ஈடு இணையில்லாது கருணை யுள்ளவன்

    இன்னல் பட்டு எழும் குரலை கேட்கின்றவன்

    எண்ணங்களை இதயங்களை பார்க்கின்றவன்

    ஆசையுடன் கேட்பவர்க்கு அள்ளி தருபவன்

    அல்லல் துன்பம் துயரங்களை கிள்ளி எறிபவன்

    பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன்

    பாவங்களை பார்வையினால் மாய்க்கின்றவன்

    அல்லல் படும் மாந்தர்களே அயராதீர்கள்

    அல்லாஹ்வின் பேரருளை நம்பி நில்லுங்கள்

    அவனிடத்தில் குறை அனைத்தும் சொல்லி காட்டுங்கள்

    அன்பு நோக்க தருகவென்று அழுது கேளுங்கள்

    தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்

    தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்

    வாடும் இதயம் மலர்வதற்கு வழி வகுப்பவன்

    வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன்

    அலை முழங்கும் கடல் படைத்து அழகு பார்ப்பவன்

    அலையின் மீதும் கடலின் மீதும் ஆட்சி செய்பவன்

    தலைவணங்கி கேட்பவர்க்கு தந்து மகிழ்பவன்

    தரணி எங்கும் நிலைத்து நிற்கும் மகா வல்லவன்



செவ்வாய், அக்டோபர் 04, 2022

குழந்தைகளின் மனம் புண்படாமல் இருக்க,

*குழந்தைகளின் மனம் புண்படாமல் எவ்வாறு அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவது..?* 💚❤️

குழந்தை வளர்ப்பிலேயே மிகவும் கடினமான காரியம் நம் குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவது தான். அதிலும் குழந்தைகள் எப்போதும் ஆர்வமுடன் அனைத்து விஷயங்களிலும் துருதுருவென செயல்பட விரும்புவார்கள். எனக்கு இந்த விளையாட்டு விளையாட வேண்டும், இந்த பொருள் வேண்டும், நான் இங்கே செல்ல போகிறேன் என்பது போன்ற பல கோரிக்கைகளை வைத்துக் கொண்டே இருப்பார்கள்.

அவற்றை எல்லாம் ஆராய்ந்து பார்த்து அதில் சிலவற்றிற்கு முடியாது என்று நேரடியாக சொல்லும்போது அவர்கள் மனம் கண்டிப்பாக புண்படும். நாம் என்ன செய்தாலும் நம்மை நம் அம்மா அப்பா தடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று உங்கள் மீது ஒரு வித கோபம் உண்டாகக்கூடும்.

முடியாது என்பதை மென்மையாக எப்படி கூறலாம்:

உங்கள் குழந்தை உங்களிடம் ஏதேனும் கோரிக்கை அல்லது இது செய்தே ஆக வேண்டும் என்று அடம் பிடித்து கூறும்போது அவற்றை சில மென்மையான வார்த்தைகளின் மூலம் அவர்கள் சமாதானமாகும் எடுத்துக் கூற முடியும். உதாரணத்திற்கு உங்களிடம் உங்கள் குழந்தை எதாவது ஒரு கோரிக்கை வைத்து இதை செய்தே ஆக வேண்டும் என்று கூறும் போது

“கண்டிப்பாக செய்யலாம் ஆனால் இப்போது அதற்கான நேரம் சரியில்லை”

“இதை செய்யலாம் ஆனால் இப்போது வேண்டாம்”

“நன்றாக இருக்கிறது, கண்டிப்பாக ஒருநாள் இதை முயற்சி செய்யலாம்”

“நீ சொல்வதும் நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் அதற்கு பதிலாக நான் சொல்வதையும் பரிசீலித்து பாரேன்”

“உனக்காக என்னிடம் ஒரு திட்டம் உள்ளது அதை நீ கேட்க விரும்புகிறாயா”

“உன்னுடைய திட்டம் சிறந்ததாக இருக்கிறது, கண்டிப்பாக நேரம் வரும்போது நாம் இதை செய்து முடிப்போம்”

என்பது போன்ற வார்த்தை பிரயோகங்களை உபயோகப்படுத்தலாம்

அவர்களிடம் சொல்லக்கூடாதவை என்ன?

குழந்தைகள் ஒரு கோரிக்கை வைக்கும்போது நேரடியாக முகத்தில் அடித்தார் போல் இல்லை என்று சொல்லக்கூடாது.

உதாரணத்திற்கு

“இல்லை நீ இதை செய்யக்கூடாது”

“என்ன தைரியம் இருந்தால் இதை செய்வாய்”

“நான் செத்த பிறகு இதை செய்து கொள்”

“நம் குடும்பப் பெயரை கெடுத்து விடாதே”

“அவள் நல்ல பெண் அல்ல அவளோடு நட்பாக இருக்காதே”

“நான் பேசும்போது குறுக்கே பேசாதே”

என்பது போன்ற வார்த்தைகளை அறவே தவிர்க்க வேண்டும்.

கடினமான வார்த்தைகளை விட மென்மையாக மறுப்பது நல்லது:

குழந்தைகளை எப்போதும் கவனமாக கையாள வேண்டும். ஒரு நல்ல விஷயத்தைப் பற்றியும் கெட்ட விஷயத்தை பற்றியும் குழந்தைகளுக்கு கற்பிக்கும் போது மென்மையான முறையில் அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் கற்பித்தால் மட்டுமே அவர்கள் அதனை முழுமையாக ஏற்றுக் கொள்வார்கள். உங்கள் வேகத்திற்கு ஏற்ப குழந்தைகள் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

சில விஷயங்களை செய்து முடிப்பதற்கு குழந்தைகளுக்கு போதுமான நேரம் கொடுங்கள். மேலும் குழந்தைகளால் அனைத்து விஷயங்களையும் புரிந்து கொள்ள இயலாது. எனவே அவர்கள் அதை புரிந்து கொண்டு செயல்படுத்த சிறிது காலம் பிடிக்கலாம். ஆனால் நீங்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை என தேவையற்ற வார்த்தைகளை கொண்டு அவர்களை திட்டி தீர்க்காதீர்கள்.

உங்கள் வார்த்தைகளின் அதிர்வுகளை புரிந்து கொண்டு பேசுங்கள்:

முடியாது அல்லது அவர்களை கண்டிக்கும் வகையான வார்த்தைகளை மிக மிகக் குறைந்த அளவில்தான் பயன்படுத்த வேண்டும். நீங்கள் எப்போதும் கேட்டுக் கொண்டே இருந்தாலும் அல்லது அவர்கள் என்ன கூறினாலும் இல்லை முடியாது என்று மறுப்புக் கூறிக் கொண்டே இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் அந்த வார்த்தைகளின் மீது அவர்களுக்கு பிடிப்பு குறைந்து விடும். நாம் என்ன சொன்னாலும் திட்டத்தான் போகிறார்கள் என்ன கோரிக்கை வைத்தாலும் முடியாது என்று தான் சொல்லப் போகிறார்கள் என்று அசட்டு தைரியத்தில் அவர்களே உங்களிடம் சொல்லாமல் சில விஷயங்களை செய்து கொள்வார்கள்.

எனவே சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் அவர்களை கண்டித்து மறுப்பு சொல்லாமல் மிக ஆபத்தான செயல்கள் அல்லது விரும்பத் தகாத செயல்களை செய்யும் போது அவர்களை கண்டிக்கும் உச்சகட்ட நிலையில் மட்டுமே இந்த வார்த்தைகளை உபயோகப்படுத்துங்கள்.

பெற்றோரது ஒழுக்கமும் மிக முக்கியம்:

குழந்தைகள் பல பழக்க வழக்கங்களை தங்கள் பெற்றோரிடமிருந்து தான் கற்றுக் கொள்கிறார்கள். உங்களது நடை உடை பாவனை மற்றும் நீங்கள் எவ்வாறு மற்றவரிடம் நடந்து கொள்கிறீர்கள், உங்களது வார்த்தை பிரயோகங்கள் உங்களது செயல்பாடுகள் என அனைத்தையும் அவர்கள் கவனித்துக் கொண்டு அதன்படியே நடக்க முற்படுவார்கள். எனவே உங்களது ஒழுக்கத்தை நீங்கள் சரியாக கடைபிடிக்க வேண்டும்.

அதுபோல உங்கள் குழந்தைகளுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் விதிக்கும் போது அவற்றை முதலில் நீங்கள் பின்பற்றுகிறீர்களா என்று பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு அதிகமாக மொபைல் போன் உபயோகிக்க கூடாது என்று உங்கள் குழந்தைகளுக்கு கட்டுப்பாடு விதித்து விட்டு எப்போது பார்த்தாலும் போனும் கையுமாகவே நீங்கள் தெரிந்து கொண்டிருந்தால் குழந்தைக்கு அது உங்கள் மீது கோபத்தையும் மரியாதை குறைவையும் தான் ஏற்படுத்தும்.

பொறுமையே பெருமை:

குழந்தைக்கும் பெற்றோருக்கும் ஆன உறவு என்பது தலைமுறைகள் தாண்டிய இடைவெளியில் உள்ளது. எனவே உங்களது வாழ்க்கை மற்றும் பழக்கம் பழக்கங்களுக்கும் அவர்களது மாடர்ன் வாழ்க்கைக்கும்மிகபெரிய வேறுபாடுகள் இருக்கலாம். இந்த இடைவெளியால் பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான இடைவெளி பெருமளவில் அதிகரிக்கிறது. எனவே குழந்தைகளை பொறுமையாக கையாள வேண்டியது அவசியம் சில நேரங்களில் நீங்கள் கூறும் கருத்துக்களை விட அவர்கள் சொல்லும் கருத்துக்கள் சிறந்ததாக இருக்கலாம். அவற்றை பொறுமையோடு கேட்டு இருவரின் கருத்துக்களையும் தூக்கி சீர்பார்த்து சிறந்ததை தேர்வு செய்யலாம். ஒருவேளை அவரது கருத்து தவறாக இருப்பின், அது எந்த வகையில் தவறு அதனை எவ்வாறு சரி செய்யலாம் என்பது போன்ற திட்டங்களையும் பொறுமையாக அவருக்கு எடுத்துக் கூறலாம்..

பிரபல்யமான பதிவுகள்